முதல் முறையாக இவங்க கதையை படிக்க வாய்ப்பு கிடைத்தது இத்தனை நாட்கள் இந்த வைரத்தை தவறவிட்டுள்ளேன். ஆண்டி ஹீரோ சப்ஜெக்ட்லயே இது ரொம்ப ரொம்ப வித்தியாசமான கதைகளம்.
ரொம்ப ரொம்ப பிடிச்சது கதையில் வரும் கவிகள் எத்தனை முறை மறுபடியும் மறுபடியும் படித்தேன் என்று கணக்கு இல்லை. அதுபோல வார்த்தை கோர்வைகளும் அருமை. வார்த்தை தேர்வுகளும் அருமை. படிக்க படிக்க அவ்வளவு ஆர்வம் பிறக்கிறது.
கதையில் பிடித்த கேரக்டர்ஸ் மாயவன் சந்தனா. மாயவன் மாயங்கள் செய்து மயக்கினான் என்றால் சந்தனா சொல்ல தெரில ஆனால் ரொம்ப பிடிச்சிருந்தது.
மிடில் கிளாஸை சேர்ந்த இரு தோழிகள் சினிமா பைத்தியங்களாக, வேலை செய்த காசில் ஒரு தொகை எடுத்து சினிமா தியேட்டர் சென்று சினிமா பார்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் தாங்களே நடித்தால் என்ன என்று வீட்டை விட்டு கிளம்புகிறார்கள். அதன் பின்னான அவர்கள் வாழ்க்கை என்னானது அவர்கள் சந்தித்த துரோகங்கள் பற்றியும் அதை எப்படி கடந்து வந்தார்கள் என்றும் அழகான வார்த்தை தேர்வில் சொல்லியிருக்காங்க.
சாதாரண பெண்ணாக இருந்து கேரக்டர்காக தன்னை மாற்றம் செய்ய என்று தன்னையே இழந்து தன் சுய கேரக்டரையும் மறந்து புதுமையாக மாறுகிறாள் பெண்ணவள். அவள் தோழியே துரோக இழைக்க எவரையும் நம்ப முடியாத சூழலில் மயக்கும் மாயவனை சந்திக்கிறாள். அவனின் பேச்சு பிடிக்க போய் அவனிடம் பேசி தனக்கு உதவி செய்ய கோரி தன் தவறுகளை திருத்த முயற்சி செய்கிறாள் ஆனாலும் நிம்மதி இல்லை.
மாயவன் வரும் இடம் எல்லாம் தானாவே புன்னகை வந்து ஒட்டிக்கும் லவ்லி பாய் என்ன ஒரு கேரக்டர்யா. மாயவன் உதவி மூலம் தனக்கு துரோகம் செய்தவர்களை பங்கம் செய்வது சூப்பர். அதோட அந்த டயலாக் ஆஸம் மானம் என்பது பெண்களுக்கு உரித்தான சொத்தா என்ன ஏன் ஆண்களுக்கு மானம் கிடையாதா
ஆடை இல்லாமல் பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டல் விடும் ஆண்களுக்கு சரியான சாட்டையடியாக அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் இடம் பெற்றிருந்தன.
இறுதி அத்தியாயங்கள் இரண்டும் ரொம்ப உணர்வு பூர்வமானதா இருந்தது. வித்தியாசமான கதைகளத்துடன் வித்தியாசமான முடிவு அருமை. முடிவு எதிர்பாக்கவே இல்லை. முத்தம் தேகதேவையில் சேர்த்தி இல்லை.
சகாப்தம் தள போட்டி கதை வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்