Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

Messages
79
Reaction score
61
Points
18
மல்லிச்சரம் - 11



மாதவி வழி சொல்லச் சொல்ல வண்டி ஓட்டிய சத்யன். அவள் கடைசியாக திரும்பச் சொன்ன சந்தில் லேசாக விழி விரித்தான். " இந்தச் சந்திலா உன் வீடு ?" சுற்றும் முற்றும் உள்ள சின்ன சின்ன வீடுகளை பார்த்தான்.



"ஆமாம் ஏன் கேட்கிறீர்கள்?"



ஏதோ யோசித்தவன் " ம் .....ஒன்றும் இல்லை " என்று கூறி விட்டான். அவள் கூறிய கேட்டை ஒட்டி ரோட்டில் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினான் சத்யன்.



"பரவாயில்லை சார். அதான் வீடு வரை கொண்டு வந்து விட்டீர்களே, அதுவே போதும் தாங்க்ஸ் சார். நான் கிளம்பறேன் அவனை உள்ளே வர வேண்டாம் என்று சொல்லாமல் சொன்னாள்.



ஆனால் அவள் கூறியதை அவன் காதில் வாங்கவே இல்லை . கார் சாவியை பாக்கெட்டில் வைத்தபடி கேட்டைத் திறந்து அவளுக்கு வழி காட்டினான்.



பேந்த பேந்த விழித்தபடி முன்னே நடந்து சென்றாள்.



பல போர்ஷன்கள் உள்ள கட்டிடம் .அதில் கடைசியாய் உள்ள கதவை லேசாக தட்டி விட்டு காத்திருந்தாள்.கதவைத் திறந்தவளை உற்று நோக்கினான் சத்யன்.ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி தான்.ஆனால் அதிக முதிர்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது. வெற்று நெற்றியும் சாயம் போன காட்டன் புடவையும் அள்ளி முடிந்த கொண்டையுமாக நின்றாள். குங்குமம் இல்லாமல் போனாலும் அந்த அமைதியான முகம் கை எடுத்து கும்பிடத் தூண்டும் விதமாகவே இருந்தது.



மகளை அந்த நேரத்தில் எதிர்பார்க்காததாலோ என்னவோ அவள் முகத்தில் பதற்றம் அப்பட்டமாக தெரிந்தது.



" என்ன ஆயிற்று மாதவி.இந்த வேளையில் வந்து நிற்கிறாய் உடம்புக்கு ஏதேனும்... காலையில் நன்றாகத் தானே இருந்தாய்" மகளை ஏற இறங்க பார்த்து வாக்கியங்கள் துண்டு துண்டாக வந்தது.



"நீங்கள் பயப்படும் படி ஒன்றுமில்லை அம்மா " என்ற சத்யனின் குரல் கேட்டு திரும்பியவள், அப்போது தான் அவனை முழுதாகப் பார்த்தாள்.



"நீங்கள் ... !" என்று இழுத்தாள் கமலம்.



ஏதோ கூற வந்த மாதவியை விழிகளால் தடுத்து விட்டு அவனே தொடர்ந்தான்.



" உள்ளே சென்று பேசுவோம் அம்மா. உங்கள் மகளின் அடிபட்ட கால்கள் வலிக்குமே "



"காலில் அடியா?மதும்மா என்னடா ஆச்சு. சரி உள்ளே வா பார்ப்போம் " பதட்டமும் குழப்பமுமாக உள்ளே அவளை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றாள்.



" நீங்களும் உள்ளே வாங்க சார்" சத்யனைப் பார்த்து கூறினாள் கமலம்.,



ஏனோ மாதவிக்குத் தான் இது சுத்தமாக பிடிக்கவில்லை . முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.



அம்மாவாம் அம்மா இதே அம்மாவைப் பற்றி அவளிடமே எப்படியெல்லாம் கூறி இருக்கிறான். முன் ஒன்றும் புறம் ஒன்றுமாக பேச்சை மாற்ற இந்தப் பணக்காரர்கள் தனி கோர்ஸ் படித்திருப்பார்கள் போல் இருக்கும் இருக்கும் கோயம்புத்தூருக்கு போகும் முன் சென்னை வந்த பின் என்று இவளிடமே நடித்தவன் தானேஅவன். அந்தப் பயிற்சியில் கோல்டு மெடல் வாங்கி இருப்பான் போல. சட்டென வலி தாங்க முடியாமல் "ஆ" என்று கத்தியபடி நினைவிற்கு வந்தாள். அம்மா அவளது காலை தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள்

"ரொம்ப அடியாமா ?"

"அதெல்லாம் ஒன்றுமில்லைஅம்மா லேசான சுளுக்கு ஒரு நாள் ஓய்வெடுத்தால் சரியாகி விடும்"என்றவள். சத்யனை பார்த்தாள் அவள் பார்வையைத் தொடர்ந்த கமலம்.

"அ .. ஐய்யோ சார் உங்களை மறந்து விட்டேன். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள். காப்பியா அல்லது லெமன் ஜுசா?"

"முதலில் என்னை சார் என்று அழைப்பதை நிறுத்தினால் நலம். உங்களை விடவும் ரொம்ப சின்ன வயசு தான் எனக்கு .என்னை சத்யன் என்றே அழையுங்கள்."



" ஐய்யோ அது எப்படி அழைக்க முடியும். வேண்டுமானால் தம்பி என்று அழைக்க வா"



லேசாக சிரித்தவன் " உங்கள் விருப்பம்".



"சரி சொல்லுங்க தம்பி காப்பியா, ஜூசா ?"



"விட மாட்டீங்களே சரி அதுவும் உங்கள் விருப்பம் தான் ".



கமலம் சமையல் கட்டை நோக்கி நடந்தாள். மாதவியைப் பார்த்த சத்யனுக்கு சிரிப்பு தான். வந்தது. முகத்தை கடுகடுவென வைத்திருந்தாள். இவளுடன் பேசுவது வீண் விவாதமாக முடியும் என்றுணர்ந்தவன் வீட்டைச்சுற்றி தன் கண்களை பதித்தான்.



சின்ன வீடு தான் என்றாலும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வந்தது. வீட்டில் சுண்ணாம்பு மட்டும் அடித்து பல வருடங்கள் இருக்கும் என்று யூகித்தான் சத்யன். மற்றபடி குறை சொல்ல எதுவும் இல்லை.பழைய திரைச்சீலைகள் என்றாலும் தேய்த்து நேர்த்தியாகத்தான் இருந்தது. அந்த ஹாலை ஒட்டி ஒரு கதவு மூடப்பட்டிருந்தது. அது தான் படுக்கை அறை போலும் என்று நினைத்தான். ஷோகேஸில் சில படங்கள் வரிசை படுத்தப்பட்டிருந்தன . மாதவி சிறு வயதில் பரிசு வாங்கிய போது எடுத்த சில படங்கள் அவளின் ஜாடையிலேயே ஒரு பையன். தம்பியாக இருக்கும். அவனின் சில படங்கள் அப்புறம்.. ஆ..ங்.. இந்தப்படம் ..... அவர்களே தான் ... அவர்களே தான் மனம் ஒரு வினாடிக்குள் எங்கெங்கோ சென்று விட்டது. இந்த மனதிற்கு மட்டும் தான் கண் இமைக்கும் நேரத்தில் உலகையே சுற்றி வரும் ஆற்றல் இருக்கிறது. இதற்கு பாஸ்போர்ட், விசா, கஸ்டம்ஸ், இமிக்ரேஷன் என்று எதுவும் வேண்டியது இல்லை ஏன் மணி எக்சேஞ் கூட வேண்டியது இல்லை. அதன் விருப்பத்திற்கு ஊரைச் சுற்றும் நட்ட நடுநிசியானாலும் சரி சுட்டெரிக்கும் வெயிலானாலும் சரி அதை கட்டுப்படுத்த முடியாமல் தான் உலகில் பாதிப் பிரச்சனைகள் கிளம்புகின்றன.

"தம்பி ஜூஸ் " என்ற கமலத்தின் குரல் அவனை நினைவுக்கு கொணர்ந்தது . தன் தேவையில்லாத எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஜூஸை கையில் எடுத்தான்.



"எங்கே மது விழுந்தாய் "மகளின் அருகில் அமர்ந்து விசாரித்தாள்.



"ஆபீஸ் படிக்கட்டில் அம்மா"



"கவனம் எங்கோ இருக்க நடந்தால் அப்படித்தான் மது"



"அம்மா !"



" ஏன் தம்பி ஆபீசில் அதிக வேலையோ?கடந்த ஒரு மாதமாக நானும் கவனிக்கிறேன் சரியாக சாப்பிடுவதில்லை தூங்குவதில்லை தன் தம்பியோடு சண்டை கூட போடுவதில்லை. அமைதியின் மறுஉறுவாகி விட்டாள் "



"அம்மா" என்று அடிக்குரலில் சீரிய மாதவியை பொருட்படுத்தவே இல்லை கமலம்.



“எந்நேரமும் ஏதோ யோசனை. இரவில் பேய்க்குக் காவல் இருப்பது போல் கொட்ட கொட்டென்று விழித்துக் கொண்டிருக்கிறாள். நேற்று தோசைக் கல்லை அடுப்பில் வை மது என்றால் பால்பாத்திரத்தை வைத்து விட்டு நிற்கிறாள். கேட்டால் நான் பாலை தான் அடுப்பில் ஏற்றச் சொன்னேன் என்று வாதம் வேறு "



"அம்மா ..போதும் """" என்று உறக்கவே கத்தி விட்டாள் மாதவி.



இப்போது இடை புகுந்தான் சத்யன்



" ஆமாம் அம்மா எங்கள் ஆபிஸ்ல ஒரு புதுவேலை அதற்கு அடி மட்டத்திலிருந்து பலதும் யோசிக்க வேண்டும். நானும் ஒரு மாத காலமாக இப்படித்தான் இருக்கிறேன். என் பி.ஏ. பாருங்கள் அது தான் அவள் பங்கிற்கு மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்கிறாள். அவ்வளவே எல்லாம் இந்தப் புது புராஜெக்ட் ஒருமுடிவுக்கு வந்தால் சரியாகி விடும். எனக்கு லேட் ஆகிறது அம்மா நான் கிளம்புகிறேன். ஆ ....ங் மாதவி இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொள். நன்றாக ரெஸ்ட் எடுத்து விட்டு வந்தால் போதும் வரட்டுமா ?" இரு கைகளையும் கூப்பி கமலத்திடம் விடைபெற்றுக் கிளம்பினான் சத்யன்.



அலுவலகம் வந்த சத்யனுக்கு வேலை ஓடவில்லை .ஏன் மாதவி இப்படி ஒரு வாடகை வீட்டில் இருக்கவேண்டும்? அவன் கேள்விப்பட்டது உண்மை என்றால், அவள் பொழுதுபோக்கிற்காக மட்டுமே வேலை செய்கிறாள் என்றே நினைத்தான்.. ஒருவேளை எல்லா சொத்தையும் அந்த அம்மாள் விற்று வீண் செலவு செய்துவிட்டாளோ, ச்சே.. இருக்காது?அவர்களைப் பார்த்தால் சாந்தத்தின் மறு உருவாய் தெய்வீகக் களையாய் மனத்திற்கு நிம்மதி தரும் முகமாய் அல்லவா இருக்கிறது.இவர்களையா அப்படி விமர்சித்தார்கள் அல்லது என் காதில் தான் பெரிதாக கோளாறு இருக்கிறதா.கடவுளே நான் என்ன செய்வேன்.



போதுமான விளக்கங்கள் இல்லாமல் என் வாழ்வைப் பற்றி என்னால் ஒரு படி கூட ஏற முடியவில்லை. இதில் ஏன் இத்தனை குழப்பம் பேசாமல் மாதவியிடம் நான் கேள்விப்பட்ட அனைத்தையும் கூறிவிட்டு அவள் தரப்பு நியாயத்தை கேட்கலாமா ? ம் ....அவள் எப்படி நம்புவாள் நேராக கோவைக்கே கூட்டிப் போய் நேரிலேயே எல்லாவற்றையும் நிருபித்து விட்டால் ?என்னுடன் கோவை வரை தனியாக வருவாளா? இப்படி ஏகப்பட்ட குழப்பத்தில் வெந்து போனான் அப்போது தான் அதற்கு வடிகாலாக வந்தாள் சோனா.அவள் கைகளில் அடுக்கடுக்காய் பத்திரிக்கைகள்.



"குட் மார்னிங் சார்...."

குட்மார்னிங் சோனா என்ன விஷேசமா ..." கைகளில் இருந்த பத்திரிக்கையைப் பார்த்தான்.



“ஆமாம் சார்" எனக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது. அடுத்த மாதம் மூன்றாம் தேதி திருமணம்.முதல் பத்திரிகை உங்களுக்குத் தான், கண்டிப்பாக வரணும்"



" ஓ ..... கண்டிப்பா "அவள் நீட்டிய பத்திரிக்கையை வாங்கி பிரித்து படிக்கலானான் .



" ஓ... மாப்பிள்ளை ஐடியில் இருக்காரா ... கல்யாணம் கோவை பக்கம் ?"



"ஆமாம் சார் எங்கள் ஆச்சி அங்கே உள்ள பூர்வீக வீட்டில் தான் செய்யணும் என்று ஒரே பிடிவாதம். அதான் வேற வழியில்லாமல் அங்கு வைத்தோம். தூரம் என்று எண்ணி வராமல் இருந்து விடாதீர்கள் சார்"

"நோ... நோ ....கண்டிப்பாக வருவேன் சோனா. எனிவே ஆல் த பெஸ்ட்," என்று அவளை வழியனுப்பினான் .



இந்தத் திருமணத்திற்கு நிச்சயம் மாதவி வருவாள்.அப்போது அவளிடம் எப்படியாவது பேசி அவளை இன்பம் முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்த கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு ஒரு சுபம் போட வேண்டும். கற்பனையில் மிதந்தவன் " என் இனிய பாயசமே " மனதுக்குள் அவளை ரகசியமாய்கொஞ்சினான் .



அதே சமயம் மாதவியின் மனம் உலைக்களம் போல் வெந்து கொண்டிருந்தது. சத்யனின் மனதில் என்ன தான் இருக்கிறது. முதலில் என்னை துரத்தி வந்து மையல் கொண்டவன் பிறகு பாராமுகமாகி விட்டான். அதற்கு கேட்கவே கூசுகிற காரணத்தை வேறு கூறினான். இதோ இன்று அதீத அக்கரையுடன் கவனித்துக் கொண்டான். அம்மாவை அவன் பார்த்த பார்வையில் மதிப்பு தான் தெரிந்தது. வேறு எந்த உதாசீனமும் இல்லை . ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாகவே இருக்கிறது. நாயகனில் வருவது போல் இவன் நல்லவனா? கெட்டவனா ?என்றே தெரியவில்லை .



அம்மாவிடம் கேட்டு தெளிவடையலாம் என்று பார்த்தால் " கழுவும் மீனில் நழுவும் மீன் " போல் நழுவுகிறார்கள். எதுவும் முடிவாக கணிக்க முடியவில்லை . அதனால் சத்யனிடம் அடித்தும் பேசவும்முடியவில்லை .கடவுளே எனக்கு ஏன் இந்தச் சோதனை. மனதைவிட்டு போ போ என்றால் அவன் வந்து சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டான். அடிக்கடி அவன் தாஜிக்கு அழைத்ததை நினைவுப் படுத்திக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. அறிவு விருப்பத்திற்கு குதியாட்டம் போடுகிறது. பிறகு ஒரு நாள் உடைந்து சிதறி உதிரம். போகும் போது தான் அதன் வலி தெரியும். ஆனால் அவன் விடுப்பு எடுத்துக் கொள்ளச் சொன்ன இந்த இரண்டு நாட்கள் முடியவே மாட்டேன் என்கிறதே .



இது தான் அறிவியலில் நான் படித்த ரிலேடிவிட்டி தியரியோ ?அதை எத்தனை அழகாக எடுத்துக்காட்டி இருப்பார். ஒரு அழகான பெண்ணுடன் ஒரு ஆண் ஒரு மணி நேரம் கழித்தால் அது ஒரு வினாடி போல் இருக்கும் .ஆனால் அதுவே ஒரு நெருப்பின் மேல் அமர்ந்து இருந்தால் அதே ஒரு மணி நேரம் பல மணி நேரமாகத் தோன்றும் ஆக அவளது நிலையும் அது தானோ! சத்யனை பார்க்காத இந்த இரண்டு நாட்கள் பல யுகங்களாக அல்லவா தோன்றுகிறது. மனம் இன்னும் இன்னும் என்று என்னென்னவோ நினைத்து சட்டென்று தன் எண்ண ஓட்டத்தின் விபரீதத்தை உணர்ந்து தவித்துப் போன மாதவி இப்படிப்பட்ட எண்ணங்களுக்கு தீனி இட்டுக் கொண்டே இருந்தால் அவன் மீண்டும் தாஜுக்குக் கூப்பிட்டால் இவள் மறுக்க மாட்டாமல் போனாலும் போகலாம். இப்படி நினைக்கையில் அவள் முகம் வெளிறியது. சட்டென தன் நினைவுகள அழித்து கந்தசஷ்டி கவசம் பாடத் தொடங்கி விட்டாள்​
 
Messages
79
Reaction score
61
Points
18
மல்லிச்சரம் - 12

"குட் மார்னிங் சார்" என்ற மாதவியின் குரலுக்கு ஏதோ ஒரு கோப்பில் மூழ்கி இருந்த சத்யன் சடார் என்று நிமிர்ந்தான். அவன் கண்களில் ஒரு மின்னல் அப்பட்டமாய் தெரிந்தது. அவனை சமனப்படுத்திக் கொள்ள சில வினாடிகள் ஆகியது.



" குட் - - - - - - குட்.. மார்னிங் மாதவி ....ஹவ் ஸ் யுவர் பெயின் நவ்" ஒருவாறு உளறிக் கொட்டி குசலம் விசாரித்தான்



" ம் .... பெட்டர் சார்"



" ஓ ....ஓகே ....யூமே .... புரோசீட் .. -"



" அவள் இடத்தை சுட்டிக் காட்டினான்.



"தேங்க்யூ சார்" அவள் இடத்துக்கு விரைந்தாள் மாதவி.



இரண்டு நாட்களின் வேலை அப்படியே தான் இருக்கப் போகிறது. இன்று சற்று தாமதப்படுத்தி இருந்து அந்த வேலையை முடிக்க வேண்டும் என்று நினைத்த மாதவிக்கு அளவில்லா ஆச்சர்யம் அவள் வேலை 'அப்டுடேட்' என்ற அளவுக்கு முடித்து வைக்கப்பட்டிருந்தது.



இதில் சந்தேகப்பட இடமில்லாமல் சத்யன் தான் அதைச் செய்தான் என்பது மாதவிக்கு நிச்சயம் தெரியும். இதற்கு நன்றி தெரிவிக்க விரும்பி அவன் முன்னே சென்று நின்றாள்.







கேள்வியாக அவளை நோக்கிய சத்யனிடம் ,



"தேங்க்யூ சார் என் வேலைகளை நீங்கள் முடித்ததற்கு .ஆனால் நானே வந்து செய்திருப்பேனே சார். நீங்கள் ஏன் அதிக வேலை பார்க்க வேண்டும்" சற்றே சினம் தெரிந்தது அவள் குரலில் .



"வொய் நாட் மாதவி, எனித்திங் ஃபார் யூ" என்றவனின் கண்களில் காதல் தெரிந்தது.




தச் ... - முட்டாள் மாதவி. இது காதல் அல்ல காமம் .எத்தனை முறை குட்டு பட்டாலும் உன் முட்டாள் இதயத்துக்கு விளங்கவில்லை .அடுத்து லாட்ஜில் ரூம் போடத்தான் விரும்புவான்.இது நல்லதற்கே அல்ல.சீக்கிரம் பதிலடி கொடு



" மன்னித்து விடுங்கள் சார். எனக்காக நீங்கள் எதையும் செய்யவேண்டாம் என்பது என் பணிவான வேண்டுகோள். இதுவே முதலும் கடைசியுமாய் இருக்கட்டும்"



ஒருவாறு கரார் குரலில் பேசி முடித்துவிட்டு அவனை ஏறிட்டு கூட பார்க்காமல் தன் இடத்திற்குச் சென்றாள்.



இப்படி நாட்கள் நகர்ந்த வேளையில் தான் சோனாவின் திருமணம் வந்தது. மூன்று நாட்களுக்கான விடுப்பு கடிதத்தோடு சத்யனை ஏறிட்டாள் மாதவி கடிதத்தை படித்து முடித்ததும்.அதைஃபைலில் வைத்தவன் சம்பந்தமே இல்லாமல் "ஏதேனும் பயமா மாதவி" என்று கேட்டான்.







" எ...என்ன... பயம்.... எனக்கு என்ன பயம் ?" புரியாதது போல் விழி விரித்தாள்.



" வேறு என்ன? என்னிடம் தான் பயம். நீ சோனாவின் திருமணத்திற்கு வரவில்லையா?".



" பயம் என்று எதுவும் இல்லை சார் .அதே முகூர்த்தத்தில் மிகவும் நெருக்கமான உறவுக்காரரின் திருமணமும் வந்து விட்டது. அதனால் வேறு வழியில்லை சோனா என் தோழி தானே புரிந்து கொள்வாள். அதோடு திருமணம் முடித்து இங்கே தானே இருவரும் குடிபெயர்கிறார்கள். அதனால் நான் நேரிலேயே பார்த்துக் கொள்வேன் " முடித்து விட்டது போல் அவனை பார்த்தாள்.



" ஓ...... ஓகே ....நீ போகலாம்" நாற்காலியப் பின் தள்ளி எழுந்தான்



அவசரமாய் " பயம் என்று ஏதோ.... " இழுத்தாள்.



"ம் .... பயம் தான் அப்பட்டமாய் இந்த அழகிய கண்களில் தெரிகிறதே மாதவி" அவள் கண்களுக்குள் ஊடுருவினான்.



கண்களின் வழியாக அவள் இதயத்தை அறிய முயற்சிக்கும் ஒரு தீர்க்கமான பார்வை சில வினாடிகளே, சுதாரித்துக் கொண்டான் சத்யன்.



" ஒத்துக் கொள்வது சற்று கடினம்தான் மாதவி .உண்மைக்கு எப்போதும் இந்த இடுக்கண் உண்டு தான்.ம் ....ஹூம் .வேறு என்ன சொல்ல. நேரம் ஆகிவிட்டது நான் போர்ட் மீட்டிங்கிற்கு செல்ல வேண்டும்" வேக நடையுடன் வெளியேறினான்.





அவனது பார்வை மாதவியின் இதயத்தை படம் பிடித்து விட்டது போலும், அவன் கூறியது உண்மை தான் மாதவிக்கு பயம் தான். சோனாவின் திருமணத்திற்கு செல்வதாகக் கூறி விடுப்பு எடுத்தால் இவனும் பின்னோடு வந்து அவள் உணர்வுகளோடு விளையாடுவானே என்ற பயம் .அவள் அங்கு செல்லப் போவது இல்லை என்று தெரிந்தால் எழுபத்தி ஐந்து சதவிகிதம் அவன் வராமல் இருந்து விடுவான். அப்படியே வந்தாலும் சில மணி நேரம் தான் இருப்பான். அந்த சில மணி நேரங்கள் அவன் கண்களில் படாமல் மறைந்து கொள்ள வேண்டும் அவ்வளவே. இவற்றை மனதில் கொண்டு தான் அவள் இல்லாத உறவுக்காரரின் திருமணத்தைப் பற்றி கூறியது. ஆனால் அவன் அவளைக் கண்டு கொண்டான். சோனாவின் திருமணத்திற்கு போகாமல் இருந்து விட்டால் அது நட்பை அலட்சியப் படுத்தியதாக ஆகிவிடும். ஆக மொத்தம் எங்கு திரும்பினாலும் பிரச்சினை தான் .இரண்டிலும் மாட்டாமல் தப்பிப்பது என்றால் கடவுள் மனம் வைத்தால் தான் உண்டு .​
 
Messages
79
Reaction score
61
Points
18
மல்லிச்சரம் -13

கோவையின் தட்பவெட்ப நிலை சென்னையைப் போல் இல்லாமல் மாறுபட்டிருந்தது. இந்தச் சூழல் எல்லாம் புண்பட்ட மாதவியின் இதயத்தை ஆற்றுவதற்கு முயற்சித்தன அடடா கடந்த இரண்டு மாதமாக என்னென்ன வகையான இடையூறுகள், பிரச்சனைகள், எல்லாவற்றையும் மறந்து நிம்மதியாக மூன்று நாள் இங்கே போக்க வேண்டும்.



எல்லாவற்றையும் மறக்க முடியுமா?சத்யனை !!!



தச்...என்ன சிந்தனை இது மனித மனம் குரங்கு என்பது நூறு சதவிகிதம் உண்மையே அதை கூறியவருக்கு உண்மையில் ஏற்ற பரிசு கொடுக்க வேண்டும் ,



மனம் பலவாறு சிந்திக்க கண்கள் அங்கே இருந்த இயற்கைக் காட்சிகளை ரசித்தன .ஒரு வழியாக அந்த ஆட்டோ ஒரு பெரிய மச்சு வீட்டின் முன் நின்றது. அந்த வீடே விழாக் கோலம் கொண்டிருந்தது. ஆகவே விசாரிக்க தேவையின்றி, ஆட்டோவிற்கு பணம் கொடுத்து விட்டு தன் உடமைகளுடன் அந்தப் பெரிய கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் மாதவி'



மெல்லிய நாதஸ்வர இசை அங்கே காற்றில் கலந்து அவள் செவிகளை நிறைந்தது. வாசலில் விளையாடிய சிறார்களின் மகிழ்ச்சி வீட்டின் அலங்காரம் எல்லாம் சேர்ந்து மாதவியை உற்சாகப்படுத்தியது. மனதை அறித்த பல விஷயங்களை தூர ஓதுக்கி புத்துணர்ச்சி அவளை ஆட்கொண்டது.



மாதவிக்கு அதிக சிரமம் இல்லாமல் வாசல் திண்ணையிலேயே அமர்ந்திருந்தாள் சோனா. மாதவியைப் பார்த்ததும் ஓடிக் சென்று அணைத்துக் கொண்டாள்.



"ரொம்ப தேங்க்ஸ் மாதவி. ஒரு நாள் முன்னமே கல்யாணத்திற்கு வந்ததற்கு. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு"



ச்சு ..... இது என்ன எனக்குப் போய் தேங்க்ஸ் எல்லாம் என்னோட அன்பு சோனாவுக்காக இது கூட செய்யவில்லை என்றால் எப்படி. அது சரி உன் ஆளு எங்க மேடம்.



சோனாவின் முகம் குங்குமமாய் சிவந்ததை ஆசையாக ரசித்தாள்.



" எல்லாம் நாளை மாலை தான் வருவார்கள். மாப்பிள்ளை அழைப்பு , ரிசப்ஷன்' ஒரே பிசியாகி விடுவார்.அதற்கு முன்னால் நான் அவரை சந்திக்க முடிந்தால் நிச்சயம் உன்னை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அதற்கு முன் மிகவும் முக்கியமான ஒருவரை அறிமுகப்படுத்துகிறேன் "வாசல் திண்ணையில் அமர்ந்து பூ கட்டிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை எழுப்பி " இது என் தோழி புவனா இதுவும் என் தோழி தான் மாதவி"



இருவரும் சிறு புன்னகையுடன் முகமன் தெரிவித்துக் கொண்டனர். முதல் பார்வையிலேயே புவனாவுக்கும், மாதவிக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்துப் போய்விட்டது.



"புவனா நீங்கள் தான் எனக்கு உங்கள் ஊரைச் சுற்றிக் காட்ட வேண்டும். ஏனென்றால் என்ன தான் வேலை வெட்டி இல்லாவிட்டாலும் சோனாவுக்கு கனவுகள் காண நிறைய நேரம் தேவைப்படும். அவளது அந்தச் சொர்க்கத்தை அழித்து நான் ஏன் கெட்ட பெயர் வாங்க வேண்டும்" சோனாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி குறும்பு சிரிப்புடன் புவனாவைப் பார்த்தாள்.



"அதற்கு என்ன அக்கா ஊரைச் சுற்ற கசக்குமா என்ன. நிச்சயமாய், ஆனால் கனவு மட்டும் தான் காண வேண்டும் என்று இல்லை. முடிந்தளவு இந்த இரண்டு நாட்கள் நன்றாகத் தூங்கி விடு சோனா. பிறகு தூங்க நேரம் இருக்குமோ என்னவோ மாமா வைத்தான் கேட்க வேண்டும்" என்று கூறி கிண்கிணியாய் சிரித்தான் புவனா.



" இருவருக்கும் என்னை பயங்கரமாய் கலாய்த்து விட்டதாய் எண்ணமா, போங்கடி இதற்கெல்லாம் வேறு ஆளைப் பார்" முகத்தில் செம்மை படர்வதை வலுக்கட்டாயமாக மறைத்தபடி பேசினாள் சோனா.



அடடா, இவளுக்கு பாடம் எடுக்க வேண்டும் போல் இருக்கிறதே.புது மணப்பெண் என்றால் அச்சம்,நாணம், பருப்பு என்றெல்லாம் இருக்க வேண்டும்?" கண் சிமிட்டி சிரித்தாள் புவனா.



"துவரம்பருப்பா பாசி பருப்பா ?"வேடிக்கையாய்க் கேட்டாள் சோனா தொடர்ந்து " பயிற்புக்கும் பருப்புக்கும் வேறுபாடு தெரியாத. நீ எனக்கு பாடம் எடுப்பதா. கடவுளே நான் குடும்பப் பாடத்தில் முட்டை தான் வாங்குவேன் போல் " அப்பாவியாய் விழி விரித்தாள்.



" அதனால் என்ன சோனா அந்த முட்டைகளை இருவரும் முதலிரவின் போது பொரித்து சாப்பிட்டு விடுங்கள்" தன் பங்கிற்கு காலை வாரினாள் மாதவி.



“ எப்படி எம்.டியின் தலையில் பாயசத்தை ஊற்றி சாப்பிட வைக்கலாம் என்றாயே அப்படியா?"



நன்றாக பதிலடி கொடுத்த சந்தோஷம் சோனாவிற்கு .



இதைக்கேட்டு மாதவியின் கன்னம் சிவக்கும் என்று எதிர்பார்த்தவள் அவளின் முகம் போன போக்கை பார்த்து கலவரமானாள்



"ஆஹா இது என்ன புதுக்கதை ,தெரிந்து கொள்ளாவிட்டால் என் தலை வெடித்து விடுமே “



“மாதவியைப் பார்த்தவுடன் தோன்றிய நட்புணர்வு அவளுக்கு நெடுநாள் பேசிப் பழகிய நெருங்கியத் தோழி போலவே இருந்ததால் தான் ஒரு புது தோழி என்பதையும் மறந்து உரிமையுடன் கேட்டு விட்டாள் புவனா.



கேட்டவள் மற்ற இருவரின் முகங்களில் தெரிந்த உணர்ச்சியைப் பார்த்து சட்டென்று இறுக்கமானாள்



"நீங்கள் பேசுங்கள்.'நான் வீடு வரைச் சென்று வருகிறேன் " என்று எழுந்தவளை கையைப் பிடித்து அமர்த்தினாள் மாதவி.



" நீ நினைப்பது போல் இது பெரிய ரகசியம் ஒன்றுமில்லை புவனா. " என்று உணர்ச்சியற்ற குரல் வந்தது மாதவியிடமிருந்து.



"ஏய் என்னடி நடந்தது.முதலில் நான் சத்யன் சாரை தவறாக நினைத்தேன் தான். ஆனால் இப்போது அவரைப் பற்றி நல்ல அபிப்ராயம் தான் இருக்கிறது. நீ அவரை நிச்சயம் நம்பலாம்" கவலையில்லை அதை சரி செய்ய முயன்றாள் சோனா.



"ம் ....ச்.. இது தேவையில்லாத கதை சோனா. நாம் இருவரும் சேர்ந்து எத்தனைப் பேரை சைட் அடித்திருக்கிறோம். அது போலத்தான் சத்யனும் .வயதின் கிளர்ச்சி அவ்வளவே இதில் நீ பெரிதாக எடுத்துக்கொள்ள ஒன்றும் இல்லை "பிசிரற்ற வார்த்தைகளில் தான் தெளிவாகவே பேசி விட்ட சந்தோஷம் மாதவிக்கு .



" பொய் " குற்றம் சாட்டினாள் சோனா



"எது பொய்?"



" உன் உதடுகள் கூறுகிறதே அது பொய். உன் கண்கள் வேறு பல உண்மைகளைப் பேசுகின்றன. ஆனால் அதை ஒத்துக்கொள்ள உனக்கு முடியவில்லை சரிதானா "







உதடுகளை அழுந்தக் கடித்துத் தன் கண்ணீரை கட்டுப்படுத்தினாள் மாதவி



" ப்ளீஸ் சோனா பல விஷயங்களை மறக்கவே நான் உன் திருமணத்திற்கு முந்தைய நாளே வந்திருக்கிறேன் .அதை எல்லாம் மறுபடியும் நினைக்க வைக்காதே. இது என் வேண்டுகோள்" குரலில் மன்றாடலுன் கூறினாள் மாதவி.



அந்தக்குரல் சோனாவை அசைத்தது.



"சரி, சரி. இப்படி திண்ணையிலே உட்கார்ந்து கதை பேசிக்கொண்டே இருந்தால் மற்ற வேலைகளை யார் பார்ப்பது வா. உன்னை உன் ரூமில் விட்டுவிடுகிறேன். நீ குளித்து உடை மாற்றிக் கொண்டு வா அதற்குள் சிற்றுண்டி தயாராக இருக்கும் " என்று எழுந்து கொண்டாள் சோனா.



இதில் தான் தலையிட்டு பேச எதுவும் இல்லாததால் நடப்பதை ஒரு பார்வையாளரைப் போல பார்த்துக் கொண்டிருந்த புவனாவும் உடனே எழுந்து கொண்டு மாதவியின் பெட்டியையும் தூக்கிக் கொண்டாள் இருவரையும் ஒரு தெளிவற்ற மனதுடன் பின் தொடர்ந்தாள் மாதவி.​
 
Messages
79
Reaction score
61
Points
18
மல்லிச்சரம் - 14

புவனா வேகமாக வந்து கொண்டிருந்தாள்.அவளை எதிர்கொண்ட மாதவியிடம் "அக்கா உங்களின் கம்பெனி பஸ் வந்து விட்டது.வாருங்கள். சென்று அவர்களை உபசரிக்கலாம் எனக்கானால் யாரையும் தெரியாது" என்றவள் மாதவியின் முகம் போன போக்கைப் பார்த்து பேச்சை நிறுத்தினாள்.



" என்னக்கா?"



"ம்... ஒன்றுமில்லை இப்போது நான் வேலையாக இருக்கிறேன் நீ போ சென்று அழைத்து வா ..." என்றவள் பதிலுக்குக் காத்திராமல் முன்னே சென்று சற்று தயங்கி நின்று திரும்பினாள்.







இன்னும் அங்கேயே நின்ற புவனாவிடம் ,



" ஆங் ... எனக்காக ஒரு உதவி புவனா எங்கள் கம்பெனி ஆட்கள் யாரிடமாவது எம்.டி.வருவாரா என்று மட்டும் கேட்டு என்னிடம் வந்து சொல். நான் சமையல் கூடத்தில் இருக்கிறேன்" சற்று நிறுத்தி "அப்புறம் நான் இங்கிருப்பதை அதிகம் யாரிடமும் கூற வேண்டாம். இது என் வேண்டுகோள் " முடிக்கும் போது குரல் கம்மி இருந்தது. ஏனோ புவனாவிற்கு மறுக்க தோன்றவில்லை .ஏன் என்று கேட்கவும் தோன்றவில்லை .



இரண்டு நாள் ஒன்றாக ஊரைச் சுற்றி கேலி' கிண்டல் பேசி மாதவியின் கேள்விகளுக்குத் தனக்குத் தெரிந்த பதில்களைக் கூறி இப்படி இருவரும் மனதால் மிகவும் நெருங்கி விட்டனர். அந்த உரிமையில் தானே மாதவி கேட்கிறாள்.அதைச் செய்து விட்டால் போகிறது.அன்றும் சோனா எம்.டி. பற்றி பேசியது நினைவு வர அவர்களுக்குள் ஆயிரம் இருக்கும் நாம் அதில் மூக்கை நுழைக்கக் கூடாது.. என்ற முடிவுடன் சம்மதமாய் தலையசைத்து நகர்ந்தாள் புவனா.



படபடக்கும் இதயத்துடன் சமையல் வேலையை மேற்பார்வை பார்ப்பது போல் பாவனை செய்தாள்.உண்மையில் எந்த அடுப்பில் என்ன வேகிறது என்று யாரேனும் கேட்டால் அவளுக்கு பதில் தெரியாது. அவன் வர வேண்டும். அவனை பார்க்க வேண்டும் என்று ஒரு மனமும், அவனை பார்க்கவே கூடாது என்று இன்னொரு மனமும் போட்டி போட்டுக் கொண்டு சண்டையிட்டது. ஏதோ சிந்தனையில் அங்கு போடப்பட்டிருந்த உரலில் அமர்ந்து கொண்டிருந்தாள்.



புவனாவின் தொடுகையினால் தான் உணர்வு பெற்றாள்

" என்ன அப்படி ஒரு சிந்தனை முதலில் எழுந்திரியுங்கள் .உரலில் உட்கார்ந்தால் உரல் தேய்வது போல் நம் உடம்பும் தேய்ந்து விடுமாம். இப்படிச் சொல்லி என் பாட்டி என்னை திட்டிக்கொண்டே இருக்கும் " லேசாக சிரித்தபடி கூறினாள்.



"ஓ...."அவசரமாய் எழுந்தவள் ஏகோ ஒரு எதிர்ப்பார்ப்புடன் புவனாவை நோக்கினாள்.அதைப் புரிந்து கொண்டவளாக



" உங்கள் எம்.டி .வந்தேவிட்டார். அதிக விசாரணைக்கு இடம் கொடுக்காமல் பஸ் வந்ததும் ஒரு பத்து நிமிட இடைவேளியில் அவரும் இணைந்து விட்டார். எல்லோரையும் நான் தான் கவனித்துக் கொண்டிருந்தேனா . உங்கள் எம்.டிக்கு தனியரை ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு அவரை அழைத்துச் செல்லும் போது அவர் என்ன கேட்டார் தெரியுமா?" கேள்வியோடு நிறுத்தினாள்.



இதயத்தின் லப்டப் ஒலி புவனாவிற்கு கேட்டுவிடுமோ என்ற பயத்துடன் கட்டுப்படுத்த முயன்றவாறு



"எ.... என்ன கேட்டார் " பிசிறலாய் வந்தது வார்த்தைகள்



"முதலில் என் பெயரை கேட்டவர். பின்பு புவனா திருமணத்தில் கலந்து கொள்ள மாதவி வந்தார்களே! அவர்கள் எங்கே, நான் அவரை பார்க்க வேண்டும் என்று கேட்டார்"



"ஐய்யோ...அதற்கு நீ என்ன சொன்னாய், உண்மையை சொல்லி விட்டாயா? தொலைந்தேன் " .புவனாவை தொடரவிடாமல் படபடத்தாள்



" இருங்கள் அக்கா அது எப்படி நான் சொல்லுவேன்.அப்படி நீங்கள் வற்புறுத்தி கூறிய பிறகு நான் சொல்லுவேனா .எனக்குக் தெரியாது சார். மாதவி என்ற பெயரில் எனக்குத் தெரிந்து சோனாவின் தோழியர் யாரும் வரவில்லை என்று சொல்லி விட்டேன்.திருப்தி தானா" செல்லமாக அவள் கன்னங்களை வருடி சிரித்தாள்.



சட்டென நிம்மதியும், கவலையும் அந்த அழகிய முகத்தில் சேர்ந்தே தெரிந்தது.



" சரி அக்கா, எனக்கு நிறைய வேலை இருக்கிறது, நான் கிளம்புகிறேன். ரிசப்ஷன் ஆரம்பமாகப் போகிறது" என்று விடைபெற்ற புவனாவிடம் ,



"மிக்க நன்றி புவனா. இங்கே ஒரே கூட்டமாக இருக்கிறது அதனால் நான் கொல்லையில் சிறிது நேரம் நடந்து விட்டு வருகிறேன் இங்கு எல்லாம் நீ பார்த்துக் கொள்கிறாயா , சோனா கேட்டால் வேறு வேலையில் இருக்கிறேன் என்று கூறி விடு."



" என்னது கொல்லையிலா?' இப்போது நேரம் இரவு ஏழுமணி அக்கா. ஆறு மணிக்கு மேல் கொல்லையில் சுற்றக் கூடாது.. அதுவும் வயதுப் பெண்கள் போகவே கூடாது காத்து கருப்பு அடித்து விடும். இது இங்கே எல்லோருக்கும் தெரியும். வேண்டாம் அக்கா கெஞ்சலாய் ஒலித்தது புவனாவின் குரல் -



வார்த்தைகளால் இதயத்தைக் கொல்லும் பேய்களை பார்க்கும்போது இந்தப் பேய்கள் ஒன்றும் பயங்கரமாகத் தோன்றாது புவனா !உதடுவரை வந்த வாக்கியத்தை விழுங்கினாள் .லேசான சிரிப்பை வரவழைத்தது



"பேயாவது, பிசாசாவது ஒரு கை பார்க்கலாம். நீ போய் வேலையை கவனி புவனா. எனக்கு ஒன்றும் ஆகாது" வற்புறுத்தி புவனாவை அனுப்பி வைத்தாள்.



சிறிது நேரம் கொல்லையில் உலவிய மாதவியின் கால்கள் வலிக்கத் தொடங்கியதும் அங்கே இருந்த கல்லின் மீது அமர்ந்து கொண்டாள். கால் வலி லேசாக பிட்டுப்பட்டாலும் மனதின் வலி அப்படியே இருந்தது.அவன் கூறியதும் உண்மை தானே.அவனுக்கு பயந்து தானே இப்படி ஓடி ஒளிகிறேன்.இதை கண்டுபிடித்தது போல் என் மனதையும் கண்டு பிடித்திருப்பானோ ம் .... ஹம் அது என்ன கம்ப சூத்திரமா? அன்று அவன் அணைப்பில் நெகிழ்ந்து கிடந்தேன்.அப்போதே தெரிந்திருக்கும். என்னை பலகீனப்படுத்தி அவன் ஆசைக்கு பணிய வைக்கவே முயற்சிக்கிறான். அவனின் அருகாமையில் நான் என்னையே இழப்பது நிச்சயம்.அதற்காக இப்படி எத்தனை நாள் தான் ஓடி ஒளிவது .வேலைக்கு எழுதிப் போட்ட கம்பெனிகளிடமிருந்து இன்னும் எந்தத் தகவலும் இல்லை. இந்த ரகுராமன் காண்ட்ராக்ட் வேறு இன்னும் ஒரு மாதம் கூடுதலாக இழுக்கும் போல் இருக்கிறது



இப்படி எங்கு கால் வைத்தாலும் அந்த வழி அடைத்தே இருக்கிறது. எப்படிச் சுற்றி எப்படி வந்தாலும் முடிவில் சத்யனே வந்து நிற்கிறான். எல்லாம் தலைவிதி அவன் மேல் அளவு கடந்து அன்பும் காதலும் வைத்திருக்கிறேன். அதே பேல் அவனும் நல்லவனாக ஒழுக்கமானவனாக இருந்திருக்கலாமே ஏன் இப்படி ? பணம் என்ற போதை தலை வரை ஏறி இருப்பதாலா அல்லது எம்.டி என்ற பதவி மயக்கம் தந்த திமிரா? எது எப்படியோ என் வாழ்கை தொலைந்து விட்டது ம் ....... ஹம் ... இப்படி பல நினைவுகளில் நேரம் போனதே தெரியவில்லை .



" அக்கா நீங்கள் இங்கேயே தான் இருக்கிறீர்களா?"மூச்சிரைக்க ஓடி வந்தாள் புவனா கையில் ஒரு சிறிய டார்ச் லைட் வெளிச்சம் மாதவியின் மேல்பட அவளை நோக்கி விரைந்து கொண்டிருந்தாள் புவனா.



நினைவுகளிலிருந்து திருக்கிட்டவள் . சூழ்நிலையை உணர்ந்து,



"ஹேய் புவனா பாத்து மெதுவா விழுப்போகிறாய் " என்ற படி எழுந்து நின்றாள்.



"ம் . . . . . ஏன் சொல்ல மாட்டீர்கள். தலைதெறிக்க ஓடி வருகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் பேய் பயம் இல்லாமல் இருக்கலாம். எனக்கு அதிகம் உண்டு.இப்போது நேரம் என்ன தெரியுமா?" படபடப்பாய் பேசினாள் "என்ன ஒரு ஒன்பது மணி இருக்குமா?" அலட்சியமாய் கேட்டாள் மாதவி. "ம் . - - - கிழிக்கும் மணி இப்போது பதினொன்று இன்னும் ஒரு மணி நேரம் இருந்தால் நாம் பேய்களுடன் பேசி விட்டே போகலாம் என்ன சொல்லுகிறீர்கள் ?"என்றவளின் பேச்சில் பயமும் எரிச்சலும் ஒன்றாக இருந்தது.



" பதினொன்றா ?" ஆச்சர்யப்பட்டவள் உடனே



"சரி ,சரி ரொம்பதான் எரிச்சல் படாதே புவனா ஏதோ யோசனையில் நேரம் போனதே தெரியவில்லை . டார்ச்சை இப்படிக் கொடு நான் அடிக்கிறேன் போகலாம்" முன்னால் நடக்க ஆரம்பித்தாள் மாதவி



" எளிதாக கூறி விட்டீர்கள் ஒரு பக்கம் சோனா உயிரை வாங்குகிறாள். மாதவி எங்கே, மாதவி எங்கே என்று இன்னொரு புறம் உங்கள் அழகிய எம்.டி. இருவருக்கும் மத்தியில் அகப்பட்டு மண்டை காய்ந்து விட்டது எனக்கு .இத்தனை நேரம் ஆகியும் நீங்கள் வராமல் இருக்கவே பயம் வந்து விட்டது. அது தான் என் பேய் பயத்தையும் விட்டு உங்களைத் தேடி வந்தேன். பார்த்து இது ஒற்றையடிப் பாதை ஒருவர் பின் ஒருவர் தான் செல்ல வேண்டும்" என்றவள் மாதவியின் பின் தொடர்ந்தே நடக்கலானாள்.





" யாரிடமும் நான் இங்கு இருப்பதை நீ கூறவில்லையே" சந்தேகமாய் கேட்டாள் மாதவி



" அட்டா உங்கள் சந்தேகத்துக்கு ஒரு அளவே இல்லையா நான் யாரிடமும் கூறவில்லை " என்றாள் எரிச்சலைக் காட்டி .



"ம்.... சரி, சரி கோபப்படாதே. நாம் வேறு பேசுவோம். இந்தக் கொல்லையில் சவுக்க மரக்கன்றுகள் தான் எப்போதும் நடுவீர்களா?" பேச்சை திசை திருப்ப முயன்றாள் மாதவி. அது நல்ல பயனையும் கொடுத்தது.



"ம் ... ஆமாம், இந்தக் கன்றுகளை நட்டுவிட்டால் அதிக நீர் பாய்ச்சல் தேவையில்லை, ஐந்து வருடத்தில் பெரிதாகி விடும். பிறகு வெட்டி விற்று விடுவோம்" என்று முடித்தவளின் வாயை யாரோ பின்னாலிருந்து பொத்தி அவசரமாக பின்னோக்கி இழுத்தனர்.



திணறி விடுபட நினைத்தவளின் காதோரம்" நான் தான் சத்யன் அமைதியாய் இரு" என்ற குரல் கிசுகிசுப்பாய் கேட்ட பிறகே அவள் திமிறல் அடங்கியது .உடனே அவளை விடுவித்தவன் .

\

" மன்னித்து விடு சகோதரி. வேறுவழி தெரியவில்லை கவனமாகக் கேள். இந்தா டார்ச் லைட் இதைக் கொண்டு நீயும் உனக்குத் துணையாய் இதோ உன் தோழி சரளாவை கூட்டிக் கொண்டு இந்த ஒற்றையடிப் பாதையில் சென்று வீட்டை அடையுங்கள் மாதவியை நான் அழைத்து வருகிறேன் " என்று நிறுத்தினான்.



" அதெப்படி சார் மாதவிக்கு உங்களை !!.." என்று இழுத்தவளை இடைமறித்த சரளா.



"சார் ஏதோ முக்கியமாக பேச வேண்டுமாம். சோனாவிடம் அனுமதி கேட்டுவிட்டார் .சோனா தான் என்னை அனுப்பினாள் .நீ வேண்டுமானால் சோனாவிடம் கேள். அதோடு அவர்களுக்குள் சின்ன ஊடலாம்.நாம் நந்திகளாய் எதற்கு? வா போகலாம்" அவள் கைப்பற்றி அவன் காட்டிய பாதையில் அழைத்துச் சென்றாள்.



சரளா - புவனா, சோனா இருவருக்கும் தெரிந்த பெண் தான்.புவனா, சோனா போல் நெருக்கம் இல்லை என்றாலும் தோழிகளே , அதனால் சரளாவின் பேச்சில் தப்பு இருக்காது என்று நம்பியவள் வேறு எதுவும் பேசாமல் சரளாவுடன் விரைந்தாள்.



புவனா தன்னுடன் வருவதாக நினைத்து பேசிக்கொண்டே நடந்தாள் மாதவி. -



“ சவுக்கு மரங்கள் அதிகம் வைத்தால் நிலத்தடி நீர் குறைந்துவிடுமாம். அதே போல் தான் தைல மரங்களும். அவைகளின் வேர்கள் அதிக ஆழத்திற்கு செல்லுமாம். நிலத்தில் உள்ள நீர்வளம் குறைந்துவிடும். அதனால் பழையபடி நெல், கடலை, எள் , கம்பு முதலியவை போடுவதில் அதிக சிரமம் இருக்கும். இதெல்லாம் இங்கு இருப்பவர்களுக்கு தெரியுமா புவனா?" என்று கேட்டுக்கொண்டே திரும்ப நினைத்தவளின் காலை பக்கவாட்டு புதரிலிருந்து எதுவோ ஒன்று கீரிச்சிட்டுக்கொண்டே உரசிக்கொண்டு விரைந்தது.



அவ்வளவுதான் மாதவியின் தைரியம் காற்றில் கரைந்தது. அதுவரை அடக்கி வைத்திருந்த பேய் பயம் அவளை சூழ்ந்து கொண்டது. கண்களை மூடியவள் பின்னால் வந்து கொண்டிருந்த புவனாவை ஓடிச்சென்று கட்டிக் கொண்டாள். இதயம் ஏறுமாறாய் துடித்தது. பயத்தில் உடல் சில்லிட்டு விட்டது. சில நொடிகள் பதட்டத்தின் பிறகு சூழ்நிலை உணர்ந்தவள். அப்பொழுது தான் தன் முதுகை தடவிக் கொண்டிருந்த கைகள் நிச்சயம் புவனாவுடைய பூகரங்கள் இல்லை என்பதை உணர்ந்தாள். முரடான கைகளுக்குள் தான் இருப்பதை அறிந்து அவசரமாக விடுபட முயன்றாள் .



“எலிக்கு பயப்படுகிறவர்கள் இந்நேரத்தில் கொல்லைக்கு வருவானேன்" அவள் காதினுள் கிசுகிசுப்பாய் சத்யனின் குரல்.



இதற்குள் அவனது அணைப்பிலிருந்து விடுபட்டுவிட்டாள் மாதவி. அவனும் அதிகமாய் அவளை துன்புறுத்தாமல் விடுவித்துவிட்டான்.



சத்யனின் குரல் கேட்டதும், ஒரு வகை நிம்மதியே உண்டானது மாதவிக்கும் வேறு யாரோ ரெளடியிடம்தான் இந்த நேரத்தில் மாட்டிக் கொண்டோமோ? ம்...வேறு என்ன, தெரியாத கடவுளுக்கு தெரிந்த சாத்தான் எவ்வளவோ மேல்தான் இருப்பினும் போயும் போயும் இவன் அணைப்பில் இருந்தோமே. இதற்கும் அவனது கொடுக்கு நாக்கு வேசியின் மகள் என்று வேறு தூற்றுமே..கடவுளே இவன் எப்படி இங்கே? புவனா எங்கே? அவளுக்கு ஆபத்தா? இப்படி பலவாறு சிந்தித்தவள்,



சத்யனை தாண்டி சென்ற விழிகள் புவனாவை தேடின உதடுகளோ,



"சார்....சார் புவனா என்று...தெரியாமல் ....தயவு செய்து மன்னித்துவிடுங்கள். தெரிந்து எதுவும் செய்யவில்லை" பட்டும்படாமலும் கூறினாள். அவளின் பார்வைக்கு அர்த்தம் தெரிந்தது.



"புவனாவை அவள் தோழியுடன் பத்திரமாக அனுப்பி விட்டேன். நீ கவலைப்பட வேண்டாம். அத்தோடு இத்தனை முறை வருந்தும் அளவிற்கு, நீ தவறு எதுவும் செய்யவில்லை மாதவி, இது உன் இயல்புதானே அதுதான் எனக்கு வேண்டும்" என்றவனது குரல் இறுதியில் இறுகியது.

உதட்டைக் கடித்து தன் மனநிலையை சமனப்படுத்தினாள். இவன் வேண்டுமென்றே வம்பிழுக்க வந்திருக்கிறான். ஜாக்கிரதை மாதவி அறிவு எச்சரித்தது . உடனே இரண்டடி பின் வைத்தாள்.



“ இது என்ன புது பயம் மாதவி. என்னைக் கண்டு மட்டும் ஏன் ஓடுகிறாய். நீ எவ்வளது எதிர்பார்த்தாலும் நான் தரத்தயார்" அவளருகில் நெருங்கி விட்டான் சத்யன்.



"ச்....சே..மூடுங்கள் வாயை , நான் தான் அப்படியில்லை என்று பலமுறை கூறிவிட்டேன். ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்". கதறலாய் வந்தது வார்த்தைகள்.



"தாயைப் போல் பிள்ளை என்ற மொழி பொய்க்குமா?" கிண்டலாய் கேட்டான்.



"என் என் தாய் அப்படி இல்லை என்று அடித்துக் கூறினால் ",



" எப்படி கூறுவாய், அதற்கு ஆதாரம்?"



சில வினாடி தயங்கியவள்



“என் மனமே, என் கண்களே ஆதாரம்" என்றாள் துடுக்காக,



"அது போதாது"



"ஆதாரம், ஆதாரம் ......முதலில் உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? என் தாய் மேல் அபாண்டமாக பழி சுமத்தினீர்களே. அதற்கு என்ன ஆதாரம். முதலில் அதைக் காட்டுங்கள். பிறகு என் ஆதாரத்தை நான் காட்டுகிறேன்" ஆத்திரமாய் கத்தியவள் அவனுக்கு முதுகுகாட்டி எங்கோ வெறித்தாள்.



அந்த நடுநிசி இரவின் தனிமையில் இரவு வண்டுகளின் சத்தத்தை தவிர வேறு சத்தம் எதுவும் சில வினாடிகள் இல்லை. நிசப்தம் மட்டுமே.



ஒரு பெருமூச்சுடன் சத்யன் பேசினான்.



ஆதாரம் காட்டி விட்டால்"



"காட்டுங்கள் பிறகு பார்க்கலாம்?" திரும்பாமலே பதில் வந்தது.



"வா என்னுடன்" என்றவன் அவள் சம்மதத்திற்கு காத்திராமல் அவர் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தான்.



"விடுங்கள் என்னை விடுங்கள்" அலறியவள் அவன் பின் செல்லாமல் முரண்டு பிடிக்கவும் அவள் கையை விட்டுவிட்டு கோபமாக அவள் தாடையைப் பற்றி நிமிர்த்தினான்.



"ஆதாரம் வேண்டும் என்று கேட்டாயேவா என்னுடன் காட்டுகிறேன்"



"உங்களை எப்படி நம்புவது?"



"விருப்பமில்லாத பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்யும் கொடும் மனம் படைத்தவன் நான் அல்ல"







" இந்த வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை".



"எங்கே என் கண்ணைப் பார்த்து சொல்"



குரலில் அதிகப்படி சினம் தெரிந்தது.



அவன் கண்களை சந்திக்கும் தைரியம் இல்லாமல் வேறுபுறம் பார்த்தாள்.



அவள் தாடையை இவன் புறம் திருப்பி அவள் கண்களுள் ஊடுருவி "என்னைப் பார் என்றேன். உன்னை எதுவும் செய்யமாட்டேன். நான் கூறியது உண்மை என்று உனக்கு காண்பிக்க. என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அதை காட்டத்தான் உன்னை அழைக்கிறேன். நீ வந்தால் அன்றி இந்தக் குழப்பம் தீராது.வேறு கேவலமான எண்ணம் இல்லை. இது என்னை பெற்ற அன்னையின் மீது சத்தியம். இப்பொழுதாவது நம்பி என்னுடன் வா" என்றவன் அவள் பதிலுக்கு காத்திராமல் வேகநடையைப் போட்டான்.அந்த ஆதாரத்தை தெரிந்துகொள்ளும் ஆவலில் சத்யனை பின் தொடர்ந்தாள் மாதவி.​
 
Messages
79
Reaction score
61
Points
18
மல்லிச்சரம்-15

"இன்பம்" முதியோர் இல்லத்தின் முன் நின்றது சத்யனின் கார். கார் நின்றதை உணர்ந்த மாதவி வெளியே எட்டிப் பார்த்தாள். லேசான புருவ முடிச்சுக்களுடன் சத்யனை ஏறிட்டாள்.



"இறங்கு மாதவி. நாம் வரவேண்டிய இடம் வந்தாயிற்று" என்ற படி தன் பக்க கதவைத் திறந்து இறங்கினான் சத்யன். வேறு வழியின்றி மாதவியும் இறங்கினாள்.




ஒரு வினாடி அவளை ஏற இறங்க பார்த்த சத்யன் திரும்பவும் காருக்குள் சென்று ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்தான். அதை மாதவியிடம் நீட்டியவன், லேசாக முகம் கழுவிக்கொள் மாதவி " என்றான் மறுக்க முடியாத அழுத்தத்துடன்.



அவனை எதிர்த்துப் பேசும் மனநிலையில் மாதவி இருக்கவில்லை.



நிரூபித்துக்காட்டு என்று கேட்டவுடனே இங்கே அழைத்து வருகிறான் என்றால் நிச்சயம் அவனிடம் அசைக்க முடியாத ஆதாரம் இருப்பது தானே நிஜம். அதனை எப்படி எதிர்கொள்வது என்று மனதில் பல குழப்பங்கள் புடைசூழ இயந்திரமாய் முகம் கழுவினாள். அதற்குள் அவள் முகம் துடைக்க காரிலிருந்து டிஷ்யூ பேப்பரை எடுத்து நீட்டினான் சத்யன். அதையும் இயந்திரமாய் வாங்கி துடைத்துக்கொண்டாள். கார் கண்ணாடியைப் பார்த்து தலைவாரிக் கொண்டிருந்த சத்யன் அது முடிந்ததும் இவளிடம் அந்தச் சீப்பை நீட்டினான். நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் வேறு வழியின்றி வாங்கி கலைந்திருந்த தன் முடியை சீர் செய்துகொண்டாள். இதற்குள் அவனும் முகம் கழுவிக் கொண்டு தயாராகி விட்டான்.



"வா போகலாம்" என்றபடி அவன் முன்னே நடந்தான்.



குழப்ப மனநிலையோடு அவனைப் பின் தொடர்ந்தாள் மாதவி.



அவர்கள் சென்ற தார்ச்சாலையின் இருபுறமும் அழகாக வடிவமைக்கப்பட்ட செடிகளும் அதைத் தாண்டி புல்வெளியும் அதில் ஆங்காங்கே சிமெண்ட் பெஞ்சும் போடப்பட்டிருந்தன. காலை வேளை என்பதால் ஆங்காங்கே பெரியவர்கள் அமர்ந்து பேப்பர் படிப்பதும், சிலர் வாக்கிங் செல்வதும் சிலர் பழங்கதை பேசுவதுமாக காணப்பட்டார்கள்.



அவர்களைப் பார்த்த மாதவிக்கு ஏதோ மனதிற்குள் பிசைந்தது.இத்தனை பேரின் பிள்ளைகளுமா இரக்கமற்றவர்கள். சிறு வயதிலிருந்து அவர்களை பேணி வளர்த்து ஆளாக்கி நல்ல முறையில் வாழ்க்கை அமைத்துத் தந்தவர்களுக்கு இது தான் கதியா? தங்களது கடைசி ஆசைகளை இவர்கள் யார் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். வாழ்ந்து முடிக்கையில் யார் இவர்களுக்கு துணை, தாங்கிப் பிடிக்கும் பிள்ளைகளின் கரத்திற்காக இவர்களது மனம் ஏங்காதா?




தனக்கு முன் சென்ற சத்யன் ஒரு சிறிய குடிலின் முன் நின்று விட சிந்தனை கலைய தன் சொந்தப் பிரச்சனைக்கு வந்தாள் மாதவி. குடிலின் முன்பு தன் சூவை கழற்றியபடி மாதவியைப் பார்த்தவன்.



"மாதவி ஒரு நிமிஷம்" என அருகில் வந்து" உள்ளே முதியவர்கள் இருப்பதால் உன் முக உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொள். இப்படி சோகமாக இருந்தால் அவர்கள் ஏதாவது தவறாக எண்ணக் கூடும். அப்புறம் அங்கு நான் என்ன பேசினாலும் செய்தாலும் உன் பேச்சும் உன் செயலும் என்னை ஒட்டியதாகவே இருக்க வேண்டும். சரிதானா" என்று தன் கம்பீரக் குரலில் கேட்கவும், அதனை மறுக்க மாதவிக்கு தைரியம் இருக்கவில்லை.



ஒருக்களித்து சாத்தப்பட்டிருந்த கதவை லேசாகத் தட்டினான் சத்யன்



." யாரு" என்று உள்ளே இருந்து குரல் வரவும் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான் சத்யன்,



"அடடே சத்யன் தம்பியா? வாப்பா வா"



அவசரமாக சோபாவிலிருந்து எழுந்து அவனை வரவேற்றார். அந்த எண்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க பெரியவர்.

"காயும்மா.....வந்து பாரு யார் வந்திருக்கார்" என்று உள்நோக்கி குரல் கொடுத்தவர். அப்போதுதான் உள்ளே நுழைந்த மாதவியை கவனித்தார்.



அப்பொழுது மாதவியும் அவரை நிமிர்ந்து பார்க்க உறைந்தே போய் விட்டாள். அவரே தான் வயதாகி விட்டதே தவிர இது அவரே தான். நிச்சயம் இது நம் வீட்டில் போட்டோவில் பார்த்த தாத்தா தான். மாதவிக்கு மூச்சே நின்றுவிட்டது. இது அவளின் தந்தை வழி தாத்தா தான் இவர் ஏன் இங்கே" ஆதி அந்தம் இல்லாத ஏதேதோ குழப்பங்களும், உணர்ச்சிகளும் அவளை வலுவிழக்கச் செய்துகொண்டிருந்தன.



சத்யனின் புறம் லேசாக சாய்ந்து "அந்தப் பெண் யாரு தம்பி?" என்று கேட்டு குறும்பாக அவனை பார்த்தார் பரசுராமன்.



மாதவியை திரும்பிப் பார்த்தவன் அவளின் குழப்பம் அப்பிய முகத்தைப் பார்த்து,



"உள்ளே வா மாதவி ஏன் அங்கேயே நிற்கிறாய், இவர் தான் நான் சொன்ன பரசுராமன் தாத்தா." என்று பேசிக் கொண்டே அவள் அருகில் சென்று இறுகியிருந்த அவளது தோளில் கைபோட்டு அவளை அரவணைத்தது போல் பரசுராமன் அருகே அழைத்து வந்தான்..அவளின் உடல் நடுக்கத்தை அவனால் நன்றாகவே உணர முடிந்தது.அவளை ஆசுவாசப்படுத்த எண்ணி அவனது தோளை பற்றியிருந்த கையால் அவளை தட்டிக் கொடுத்தான். அவனின் செயல் அவளை இயல்பாய் இருக்குமாறு வலியுறுத்தியதை உணர்ந்து தன் முக உணர்ச்சியை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டு இயல்பாக புன்னகைக்க முயன்று தோற்றுதான் போனாள் மாதவி.



ஆனால் நல்லவேளையாக இதை பரசுராமன் கவனிக்கவில்லை, கூப்பிட்டதும் அவர் மனைவி வராதது பற்றி யோசித்திருப்பார் போலும், அவர் கண்கள் உள் அறை நோக்கிக் கூர்மையாயின. " என்ன செய்கிறாள் காயத்ரி " என்று தனக்குள் பேசிக் கொண்டு நீங்கள் இருவரும் இங்கே அமருங்கள்.நான் சென்று காயத்ரியை கூட்டி வருகிறேன் " என்றவர். அவர்களுக்கு சோபாவை காட்டி விட்டு உள்ளே சென்றார்.



இப்பொழுதும் மாதவியை அரவணைத்திருந்த அவனது கைகள் விலகவில்லை. அவர் உள்ளே சென்றுவிட்டார் என்று உறுதியான பிறகே மாதவியிடம் பேசலானாள்.



"என்னவாயிற்று மாதவி, நான் தான் உன் உணர்ச்சிகளை காட்டாதே என்று எச்சரித்தேனே" அவன் குரலில் கண்டிப்பு கூடியிருந்தது.



"என் ...என் ....தாத்தா .....சத்யன் .....அவர் இங்கு " உடல் ஒடுக்கம் அதிகமாக சோபாவில் சட்டென சரிந்தாள். அவள் அருகிலேயே அமர்ந்தவன்.



"ரிலாக்ஸ் மாதவி. -- ரிலாக்ஸ் உன் உணர்ச்சிகளை தயவுசெய்து கட்டுப்படுத்திக்கொள். இல்லையானால் வந்த காரியமே கெட்டுவிடும். நான் உன் அருகிலேயே இருக்கிறேன்" என்றவன் அவளின் வலது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான்.



அவனின் இந்தச் செய்கை பல கேள்விகளை குழப்பங்களை எழுப்பினாலும் அது அவளுக்கே அப்போது நிச்சயமாய் தேவைப்பட்டது. அவனது அருகாமையில் தன் கவலை குறைந்ததாகவே எண்ணினாள். கண்களை மூடி தன் மனதை சமனப்படுத்திக்கொண்டாள். அவனும் அவள் கைகளை விட்டான் இல்லை.அவள் மனம் சமநிலை அடையவும் பரசுராமன் காயத்திரியை அழைத்து வரவும் சரியாக இருந்தது.​
 
Messages
79
Reaction score
61
Points
18
மல்லிச்சரம் - 16

"குளித்துக் கொண்டிருந்தாள் சத்யன் அதுதான் தாமதம்" விளக்க முயன்றார் பரசுராமன்.



"அடடா, பாட்டியை குளிக்கக் கூட விடுவதில்லையாக்கும், என்ன பாட்டி அவர் அழைத்தார் என்பதற்காக பாதி குளியலிலேயே வந்துவிட்டீர்கள் போல நெற்றியை சுட்டிக்காட்டி கூறி நகைத்தான்.


" உனக்கு தெரியாதாப்பா. நீ வந்தால் இவர் ஆளே தலைகீழாக மாறி விடுவார்"


"இல்லையே தலை மேலே கால் கீழே தான் இருக்கிறது" என்று கூறி மீண்டும் நகைத்தான்.

" உனக்கு வாய் கொழுப்பு அதிகம் தான்.அதெல்லாம் இருக்கட்டும். இந்தப் பெண் யார்? இதற்கு முன் நீ அழைத்து வந்ததே இல்லையே" என்ற காயத்திரிக்கு பார்வையில் கூர்மை கூடியது. குறும்பு மின்ன இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.



"உங்களுக்கு சொல்லாமலா அதை சொல்லத்தானே இவளை அழைத்து வந்தேன்" என்றவன் எழுந்து நின்றான்.



மனதில் ரயிலே ஓடத் தொடங்கிவிட்டது. மாதவிக்கு.நான் தான்இவர்களின் பேத்தி என்று தெரிந்தால் என்னென்ன விதமான கேள்விகள் வருமோ? அதை எதிர்கொள்ளும் துணிவு என்னிடம் இருக்கிறதா? அப்படி பதில் கூறும் அளவுக்கு முன்கதை எதுவும் எனக்கு சரிவர தெரியாதே. தெரிந்ததெல்லாம் ஒன்று விட்ட சித்தப்பாவின் பாதுகாப்பில் தாத்தா பாட்டி இருக்கிறார்கள் என்பது மட்டும் தான்.அந்த விவரம் உண்மையா? உண்மையாக இருந்தால் அந்தச் சித்தப்பா எங்கே? இவர்கள் ஏன் இங்கே? யோசிக்க யோசிக்க விடை தெரியாத கேள்விகள் விஸ்வரூபம் எடுத்தன. மனதில் பல குழப்பங்கள் இருந்தாலும் சத்யன் எழுந்து நின்றதும் அனிச்சை செயலாக அவளும் எழுந்து நின்றாள்.



அடுத்து அவன் கூறியதைக் கேட்ட மாதவிக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. காரணம், "இவள் தான் என் வருங்கால மனைவி மாதவி " என்ற அவனின் அறிமுகம் தான்.




"எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கள்" என்று இவர்களின் காலைத் தொட குனிந்தவன். ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்த மாதவியின் கையைப் பிடித்து தன்னுடன் சேர்த்து இழுத்துக்கொண்டு குனிந்து ஆசி பெற்றான்.



."நீண்ட காலம் சந்தோஷமாக ஒன்றாய் வாழவேண்டும் என்று மனமாற வாழ்த்தினார்கள், பரசுராமன் காயத்ரி தம்பதியினர்.



"எத்தனை இனிப்பான சேதி கூறி இருக்கிறார் தம்பி இரு பால் பாயசம் செய்து தருகிறேன்" என்று சிட்டாக பறந்தார் காயத்ரி.



"அவளுக்கு நான் இல்லாவிட்டால் சரிப்படாது, நீங்கள் பேசிக் கொண்டிருங்கள் நான் வருகிறேன்" என்ற படி சமையல் கட்டினுள் மறைந்தார்.



அவர் கண் மறைந்ததும்,



“என்ன நாடகம் இதெல்லாம் சகிக்கவில்லை. முகத்தில் அருவருப்பை அதிகமாக காட்டினாள் மாதவி



"ஏன்? நான் அழகாகத்தானே இருக்கிறேன்.எனக்கு என்ன குறை? ஒரு நாடகத்தில் கூட எனக்கு துணைவியாய் நடிக்க மாட்டாயா?" விடாமல் சீண்டினான்.



"அழகுக்கு என்ன குறை. அது முகத்தில் அதிகமாகவே தான் இருக்கிறது. உண்மை அழகு மனதில் வேண்டுமே. அப்படி என்றால் என்னவென்று கூட பாவம் உங்களுக்கு தெரியாது." குரலில் அதிக கரிசனத்தைக் காட்டியபடி குத்தினாள்..



"சரி, நம் பட்டிமன்றத்தை பிறகு வைத்துக்கொள்வோம். இப்போது நான் என் கூற்றை உனக்கு நிரூபிக்க வே இங்கு அழைத்து வந்தேன். அதற்கு இந்த நடிப்பும் மிக முக்கியம் என்று வைத்துக்கொள். இவர்கள் இருவரும் இங்கு எப்படி என்று தானே அப்போது கேட்டாய்?"




"தன் பிள்ளையால் கைவிடப்பட்டவர்கள் , தானே இங்கே சேர்ந்து கொண்டனர். இங்கே பணம் செலுத்த இவர்களுக்கு ஆட்கள் இல்லை என்பதால் இங்கே அவர்கள் வேலைக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள். காயத்ரி பாட்டி இங்கு சமையல் மேற்பார்வையாளர். பரசுராமன் தாத்தா நூலகத்து நிர்வாகி.இருவரும் ஏழரைக்கெல்லாம் தலைமை கட்டிடத்திற்குப் போக வேண்டும். இதற்காக அவர்கள் சம்பளம் வாங்குவதில்லை.மாறாக இங்கேயே இந்தத் தனிக்குடியில் வசித்து வருகிறார்கள். இங்கே வேலை பார்ப்பவர்களின் குவார்ட்டர்ஸ் போன்றதுதான் இது " என்று சுருக்கமாக அவனுக்குத் தெரிந்ததை கூறி முடித்தான்.



இதை கேட்ட மாதவிக்கு மனம் வலித்தது.அவளும் தனக்குத் தெரிந்ததை சத்யனிடம் பகிர்ந்துகொண்டாள்.



"சித்தப்பா வா .....? அப்படி உறவினர்கள் யாரும் இருப்பது போல் அவர்கள் கூறவில்லையே மாதவி. அப்படி இருந்தால் அவர்கள் ஏன் இங்கே இருக்கிறார்கள் " அவனுக்கும் குழப்பம்.



" அதுதான் சத்யன் எனக்கும் புரியவில்லை, முரண்பாடாக ஏதோ இடிக்கிறது"



" இதில் இன்னொரு பெரியவருத்தத்திற்குரிய வேடிக்கை என்ன தெரியுமா மாதவி. உன் அப்பா இறந்தது இன்று வரை இவர்களுக்குத் தெரியாது"



சில நிமிடம் ஒன்றும் ஓடவில்லை மாதவிக்கு மகன் இவ்வுலகில் இல்லை என்பது கூட இவர்களுக்கு தெரியாதா என்ன கொடுமை கடவுளே. எங்கே பிழை நடந்தது எல்லாம் எனக்கு விவரம் தெரியும் முன்பே நடந்து முடிந்துவிட்டதே. இப்போது கண்ணைக் கட்டிகாட்டில் விட்டது போல் அல்லவா இருக்கிறது. என்ன செய்வேன் ஒருவாறு தன் மனதில் தோன்றியதை கேட்டாள் மாதவி.



"இவர்களை உங்களுக்கு எப்படி தெரியும்?"



"இங்கே தான் நம் கிளை அலுவலகம் ஒன்று இருக்கிறது? அது முழுக்க என் பொறுப்பில் தானே உனக்குத் தெரியாதா? வேலை முடிந்ததும் சில நாட்கள் இங்கு வருவேன். இங்கு இருப்போரிடம் பேசிவிட்டுப் போவது என் வழக்கம். இவர்களின் தேவையும் இதுதானே. இங்கு இருக்கும் எல்லோரையும் எனக்குத் தெரியும் அப்படி ஒருநாள் பேசி முடித்து விட்டு வீடு திரும்புகையில் என் முகத்தில் ஒரு காகிதம் காற்றால் கொண்டுவந்து வீசப்பட்டது. அது என்ன என்று பார்த்த போது எனக்கு ஒரே ஆச்சரியம். உன் பர்சில் அன்று நான் பார்த்த உன் அப்பாவின் புகைப்படம் அது. நான் அதை உற்றுப் பார்த்து ஊர்ஜிதம் செய்து கொண்டிருக்கையில் காயத்ரி பாட்டி மூச்சிரைக்க ஓடி வந்தார்



"அப்ப்பா!! நீ பிடித்துவிட்டாயா, எங்கே வெகுதூரம் பறந்து விட்டதோ என்று பார்த்தேன்" என்றார் நிம்மதி மிகுதியாய்.




அப்போது அந்தப் போட்டோவை அவர்களிடம் கொடுத்துவிட்டு "யார் பாட்டி இவர், எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறதே?" என்று கதை கட்டினேன். அவ்வளவு தான் , காயத்ரி பாட்டி அழுதே விட்டார்."



"இவனை பார்த்தாயா இவன் என் பிள்ளை போலீஸ்காரன் சென்னையில் தான் வேலை செய்கிறான். இனி ஒரு முறை பார்ப்பாயா? பார்த்தால் எங்களைப் பற்றி கூறுவாயா?" என்று பேசிக்கொண்டே போனார். அப்போது தான் எனக்கு தெரியும் உன் தந்தை இறந்தது கூட அவர்களுக்குத் தெரியாது என்று. அப்புறம் .....ம்.....அவர்கள் கூறியதுதான் என்னால் இன்று வரை தாங்க முடியவில்லை. அதைக் கேளாமலே இருந்திருந்தால் இந்நேரம் என் வாழ்க்கை வேறு மாதிரியாய் இருந்திருக்கும். விதி... யாரை விட்டது ....." விரக்தியோடு முடித்தான்.



"அப்படி அவர்கள் என்ன தான் சொன்னார்கள் சத்யன் "இமை படபடக்க அடக்க முடியாத ஆர்வத்துடன் கேட்ட மாதவியை ஏறிட்டவன்



“இதை நீ அவர்கள் வாயிலேயே கேட்டுக்கொள் மாதவி. இல்லையென்றால் நான் தான் ஏதோ திரித்து சொல்லிவிட்டேன் என்று எண்ணுவாய்? என்றவன் எங்கோ வெறித்துப் பார்த்தான்.



அதற்குள் இரண்டு கப்பில் பால் பாயசத்துடன் வந்தார் காயத்ரி பாட்டி மறுக்க மனமின்றி இருவரும் பெற்றுக்கொண்டனர்.



"பால் பாயசம் என்றால் இவருக்கு ரொம்பவும் பிடிக்கும். விட்டால் பாத்திரத்தை சபீனா இல்லாமலே கழுவிவிடுவார்" என்று பரசுராமனை சுட்டிக்காட்டினாள் பாட்டி.



"நல்லது விடுங்கள் பாட்டி. இந்த வயதான காலத்தில் நிறைய பாத்திரங்கள் துலக்குவதும் உங்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும்" என்றான் சத்யன் குறும்பாக.

"அது சரி பிறகு இந்தப் பாத்திரத்தில் சமைத்தால் அது விஷ சமையல் ஆகாதா" என்றார் விடாமல் பாட்டி



" பரவாயில்லை, இத்தனை நாள் ருசியற்ற சமையலை சாப்பிட்டு விட்டேன். இப்போது என்ன விஷ சமையல் தானே அதையும் ஒரு பிடி பிடித்து விட்டால் போகிறது" என்று தன் பங்கிற்கு குரல் கொடுத்தார் தாத்தா.



"ம்....ம்..அப்படி ருசியற்ற சாப்பாட்டை சாப்பிட்டு தான் இந்த ஒன்பது மாத கர்பம் வந்ததோ?" பரசுராமனின் தொப்பையைத் தொட்டுக் காட்டினாள் காயத்ரி.



இதைக்கேட்டு மாதவியும் சிரித்து விட்டாள்.



அசடு வழிய "அது உடற்பயிற்சியை நிறுத்தியதால் வந்ததொப்பை அம்மா" என்று ஒருவாறு உரையாடலை முடித்து வைத்தார்.



"பாயாசம் என்றால் என் மாதவிக்கும் பிடிக்கும் பாட்டி" என்று கூறி காதலியைப் பார்த்து கண் சிமிட்டினான்.



பழைய சம்பவங்கள் நினைவுக்கு வந்தது. அதன் விளைவாக சிறு புன்னகை அரும்பியது. கூடவே அவன் என் மாதவி என்று கூறிக் கேட்கவும், தானாகவே கன்னம் சூடேறிச் சிவந்தது.அவன் கண்களை சந்திக்க முடியாமல் தரையைப் பார்த்தாள்.



"ம் வந்த விஷயத்தை மறந்தே போனேன் பாட்டி ஒன்று மாதவியை உங்களுக்கு அறிமுகம் செய்ய நினைத்தேன்.அதைச் செய்துவிட்டேன். இன்னொன்று மாதவியின் தந்தையும் போலீஸ் தான். அதனால் உங்கள் மகனைப் பற்றி இவளிடம் கேட்டேன். விவரமாக செய்திகள் வேண்டும் என்றாள் அதனால் தான் அழைத்து வந்தேன். உங்கள் மகனைப் பற்றி இவளிடம் எல்லாம் சொல்லுங்கள்."



இதைக்கேட்டதும் காயத்ரியின் கண்கள் மிளிர்ந்தது. "மெய்தானா மாதவி. உன் தந்தையும் போலீஸா? என் மகனின் போட்டோ எடுத்து வருகிறேன் இரு " என்று உள்ளே ஓடினாள். தன் வயதை மீறிய சந்தோஷத் துள்ளலுடன்



நீ கேட்க வேண்டியதை கேட்டு விடு மாதவி. நான் பூங்காவில் காத்திருக்கிறேன் என்று எழுந்தவனது கால்கள் முன்னேறவில்லை. காரணம் அவன் கைகளை மாதவி இறுக பற்றியிருந்தாள்.



" இங்கேயே இருங்கள் சத்யா. பிளீஸ் " கண்களில் கெஞ்சலோடு கூடிய கலக்கம் பல விவரம் கூற அவனும் மறுப்பு கூறாமல் அவள் அருகிலேயே அமர்ந்தான்.

காயத்ரி அம்மாள் பேசுவதை கேட்கக் கேட்க சகலமும் நடுங்கியது மாதவிக்கு அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுப்போனாள்.



முதலில்" இவன் தான் அம்மா என் மகன்" என்று காயத்ரிகாட்டிய படத்தில் சர்வ நிச்சயமாய் தன் தந்தைதான் என்று உறுதி செய்துகொண்டாள். மனம் படபடக்க காத்திருந்தாள்.



கண்கள் கலங்கிவிட்டது காயத்ரிக்கு. ஆதரவாய் அவர் தோள்பற்றினார் பரசுராமர். பையனை சிரமங்களுக்கிடையே பேணி வளர்த்து அவன் விருப்பப்பட்ட போலீஸ் துறையிலேயே சேர்வதற்கு முழு ஆதரவு கொடுத்தோம். எல்லாம் நன்றாகவே சென்றது. ஒருநாள் ஏதோ ஹோட்டலில் ரெய்ட் சென்றவன் அங்கே தவறான பெண்களை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தான். அது எல்லா பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக வந்தது. அவனைப் பெற்ற நாங்கள் மிகவும் பெருமைப்பட்டோம், எல்லாம் அந்த ராட் ஸ சி அவனை மயக்கும்வரை தான். திடீர் என்று ஒரு நாள் ஒரு பெண்ணை மணந்து கொண்டுவந்து எங்கள் முன் நிற்கிறான்.அந்தப் பெண் அன்று அந்த ஹோட்டலில் கைதானவர்களில் ஒருத்தி. நான் எப்படி துடித்திருப்பேன் என்று எண்ணிப்பார் மாதவி. ஊரே காறித்துப்பியது. என் மகனின் மனைவி வேசியா? நினைக்கவே அருவருப்பாக இருந்தது. என்னுடன் அவர்களை சேர்க்கவேயில்லை. வீட்டுக்குள் விடாமல் துரத்திவிட்டேன் " என்று கூறியவர் மேலே பேச முடியாமல் அழுதுவிட்டார்.



உள்ளுக்குள் பொங்கிய கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு "அ....அ...அவர் தப்பான பெண்ணை மணந்தார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா பாட்டி "நடுங்கும் குரலில் வினவினாள் மாதவி.



"ஆதாரத்திற்கு என்ன குறை வந்தது. இந்தப் பத்திரிக்கை செய்தியை பார். என் மகனின் வீரதீர செயல் என்று எண்ணி அன்று ஆசையோடு கத்தரித்து பத்திரப்படுத்தினேன். அதுவே இன்று சாட்சியாய் ! எல்லாம் நேரம்" புலம்பியபடி நெற்றியில் அடித்துக் கொண்டவர் அந்தப் புகைப்பதத்துடன் கத்தரிக்கப்பட்டிருந்த பழைய காகிதத்தை மாதவியின் கையில் திணித்தார்.



தன் அம்மாவை அந்தப் படத்தில் யாரம் அடையாளம் காட்டாமலே தெரிந்துகொண்டாள் மாதவி இளம் வயது. பயந்த விழிகள் மலங்க மலங்க விழிப்பது போல். இருந்தது தாயாரின் புகைப்படம். கீழே இருந்த செய்தி தான் மாதவிக்கு படிக்க சகிக்கவில்லை..



நேற்று இரவு ரெய்டுக்குச் சென்ற போலீஸ் அதிகாரி ஏழு விலைமாதுகளை கையும் களவுமாகப் பிடித்து கோர்ட்டில் ஒப்படைத்தார்.அவரின் வீரச் செயலை பாராட்டி அவருக்கு தக்க பரிசை தமிழக அரசு வழங்கியது என்று இன்னும் எதேதோ எறும்பு ஊர்வதுபோல எழுத்துக்கள் எதுவும் சரியாக தெரியவில்லை. மாதவிக்கு கண்கள் கலங்கி விட்டது.



"ம்ச்...........மாதவி எழுத்துக்களை உற்று படித்தால் உனக்கு கண்ணீர் வரும் என்று தெரியாதா. இது பழைய காகிதம் வேறு. எழுத்து பாதி அழிந்தே இருக்கிறது. என்னிடம் கொடுத்தால் நான் படிக்க மாட்டேனா? கொடு இப்படி. காகிதத்தை வாங்கியவன் தன் கைக்குட்டையை அவளிடம் நீட்டி "கண்களை துடைத்துக் கொள்" என்று உத்தரவிட்டாள்.அவள் அதை செய்யமாட்டாள் என்று உணர்ந்ததாலோ என்னவோ தானே அவள் கண்களை அழுந்தத் துடைத்தான்.



கண் அசைவில் அழாதே என்று கண்டித்தான்.” அதன்... அதன் பிறகு என்ன செய்தீர்கள் பாட்டி அப்போதோ அதற்கு பிறகோ நீங்கள் அவரை தேடவே இல்லையா?” தன் விசாரணையை ஆரம்பித்தான் சத்யன்.அவனுக்கும் சில விவரங்கள் தெரிய வேண்டியது இருந்தது.



“ஓர் ஆண்டுக்கு பிறகு ஒரு நாள் என்’ அக்கா மகன்(சுதாகர்) எங்கள் வீட்டிற்கு வந்தான். சென்னையில் என் மகனை பார்த்ததாக கூறினான்.. அவர்களின் இருப்பிடம் தெரியும் என்றும் அறிவித்தான்.உள்ளே அவனைப் பார்க்கும் ஆவல் அதிகரித்தாலும் எங்கள் ஈகோ எங்களை விடவில்லை.”

“சரி நம்மால் தானே அவனை பார்க்க முடியவில்லை.அவனுக்கு உரிமையான சொத்தை அவனுக்கு அளிக்க வேண்டும் என்றே எண்ணினோம்.அதனால் ஊரிலிருந்த எங்கள் வீடு,நிலபுலன்கள் எல்லாம் அவன் பேருக்கே மாற்றி எழுதி அதற்குரிய பத்திரங்கள் என் அக்கா மகன் சுதாகரிடம் கொடுத்து அனுப்பினோம்.இதை பார்த்து விட்டாவது எங்கள் மகன் எங்களைப் பார்க்க வருவான் என்று நம்பினோம்”

“ஆனால் அவன் வரவேயில்லை. மாறாக எல்லா சொத்துக்களுக்கும் சேர்த்து ஒரு பெருந்தொகையை சுதாகரிடம் பெற்றுக்கொண்டு அந்த சொத்துக்களை சுதாகரின் பெயருக்கே மாற்றி எழுதிவிட்டான்.எல்லாம் அந்த பணப்பேய் சொல்லிக் கொடுத்துத் தான் இவன் செய்திருப்பான். பணத்துக்காக எது வேண்டுமானாலும் செய்யும் ஜாதிதானே அவள்.போயும் போயும் அவளைப் போய் நினைக்கவே மனம் கூசுகிறது”. என்று படபடத்தார் காயத்ரி. கேட்டுக் கொண்டிருந்த மாதவி விம்மி அழத் தொடங்கினாள்.

இதை சற்றும் எதிர்பாராத சத்யன் சில மணித்துளிகள் திகைத்தான். உடனே மாதவியை தன் தோளோடு சாய்த்துக் கொண்டு “ச்சு என்ன மாதவி இப்படி நிரம்பவும் இளகிய மனசு கொண்டவளாக இருக்கிறாயே அவர்கள் மகன் அப்படி செய்ததற்கு நீ என்ன செய்வாய்” என்றபடி அவள் கூந்தலை ஆதரவை வருடினான்.

மாதவி அழுததும் முதலில் குழப்பமுற்ற பெரியவர்கள் சத்யனின் விளக்கம் கேட்டு குழப்பம் தெளிந்தார்கள்.

“உன் மனது மிகவும் மென்மையானது போலும்.இதோ இந்த காயத்ரியும் அப்படித்தான். சினிமாவில் யாருக்கேனும் துன்பம் என்றாலும் கண்கள் கலங்கிவிடுவாள். நீ ஒன்றும் மனதை அலட்டிக் கொள்ளாதே அம்மா. இந்த விவரங்களை உன் அப்பாவிடம் கூறு அவரால் ஏதேனும் செய்ய முடிகிறதா என்று பார்ப்போம் என்று முடித்தார் பரசுராமன்.

கலங்கிய கண்களுடனேயே பெரியவர்களிடம் விடை பெற்று காரினுள் ஏறினாள் மாதவி.

“ஏதேனும் விவரம் கிடைத்தால் சொல்லு தம்பி” என்றவர்களின் ஏக்கக் குரலை ஏற்று விடைபெற்றான் சத்யன்.

கார் அவர்களின் கண்ணிலிருந்து மறைந்ததும், கால்களை மடித்து ஓவென கதறி அழத் தொடங்கினாள் மாதவி.

அழுது தீர்க்கட்டும். இத்தனை நேரம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தவே அதிக பாடுபட்டுவிட்டாள் அழுதால் மனபாரம் குறையும் என்று நினைத்த சத்யனும் காரை நிறுத்தாமல் ஓட்டினான். அரைமணி நேரமாகியும் அவளின் அழுகை நின்றபாடில்லை. எனவே காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு, அவள் தாடையைப் பிடித்து நிமர்த்தினான். உதடுகள் துடிக்க மூடப்பட்ட விழிகளிலிருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது. நெஞ்சுக் கூட்டின் பதட்டம் அதிக மூச்சுகளாய் வெளியாகியது. என்ன நினைத்தானோ அவளை மார்போடு அணைத்துக் கொண்டான்.

மாதவியும் விடுபட முயலவில்லை. அழுகை மட்டும் படிப்படியாக குறையத் தொடங்கியது. அவளின் விம்மல் சத்தம் மட்டுபடவும் அவளை தன்னிடமிருந்து பிரித்து அவன் முகத்தை தன் கைக்குட்டையால் அழுந்தத் துடைத்தான்.இன்னமும் அவள் விழிகள் மூடியே தான் இருந்தது. மென்மையாக நெற்றியில் முத்தமிட்டான். அவளின் உதடுகள் துடிக்கவும் மறுபடியும் தன்னோடு அணைத்துக் கொண்டான்.

“நான் வேசியின் மகளாகத்தான் இருக்கிறேன் சத்யன் இன்னமும் வேசியாக மாறிவிடவில்லை” நெருப்பு கற்கள் போன்ற வார்த்தையை மென்மையான குரலிலேயே கக்கினாள்.

சட்டேன்று அவளை தூக்கி நிறுத்தி,

“ச்.. என்ன உளறல் இது மாதவி” உண்மையில் அவன் குரலில் அதிக சினம் இருந்தது.

“நான் தவறாக எதுவும் சொல்லவில்லையே சத்யன். நான் என்றைக்காவது அந்தத் தொழிலில் இறங்கினால் என் முதல் வாடிக்கையாளர் நீங்கள்தான்” என்றவள் சிறு இடைவெளிவிட்டு” அதுதானே உங்களுக்கும் வேண்டும்” என்றாள் ஒரு விரக்தியான புன்னகையை படரவிட்டு,

“மாதவி ப்ளீஸ் இப்போது நீ மிகவும் உடைந்திருக்கிறாய் எதுவும் பேசவேண்டாம்..நீ வீட்டிற்கு சென்று உன் அம்மாவிடம் விசாரித்து பார். அவர்களது கூற்றையும் கேட்டு விட்டு பிறகு முடிவு செய்வோம். இப்போது வா சோனாவிடம் தலையைக் காட்டிவிட்டு சென்னை புறப்படுவோம் .உன்னைக் காணாமல் தவித்திருப்பாள்.நம் கலீக் சங்கரிடம் சோனாவிடம் கூறுமாறு போனில் விவரத்தை கூறிவிட்டேன். இருப்பினும் நேரில் பார்த்தால்தான் சோனாவிற்கு நிம்மதி”என்றவன் மேலே எதுவும் பேசாமல் திருமண மண்டபத்தை நோக்கிக் காரை விரைவாகச் செலுத்தினான்.

மன்னித்துவிடுங்கள் அக்கா, உங்களை கொல்லையில் தனியே விட்டு வந்தது தவறுதான் ஆனால் இவர் உங்களிடம் மிக முக்கியமாக ஏதோ பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு முன்னும் உங்களைப் பற்றியே விசாரித்துக் கொண்டிருந்தார். மண்டபத்தில் நீங்கள் அவரை பயமாய், ஆர்வமாய் கவலையாய் அடிக்கடி மறைந்திருந்து பார்த்தீர்களா,அதுதான் உங்களுக்குள் ஏதோ என்று நானே நினைத்துக் கொண்டேன். இருப்பினும் சோனா அக்காவிடமும் கூறிவிட்டேன். சோனாவும் இது அவர்களின் சொந்தப் பிரச்சனை நீ ஒன்றும் பெரிய தவறு செய்யவில்லை என்றே கூறினாள்.இருப்பினும் எனக்கு தான் மனம் ஆறவில்லை என்றபடி கோபமா அக்கா?”

“ ம்.. இல்லை இல்லை கோபம் எதுவும் இல்லை.நான் இப்போ சென்னை கிளம்புகிறேன், புவனா நீ எனக்கு தோழியாய் கிடைத்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நிச்சயம் தொடர்பிலேயே இருக்கலாம் கிளம்பட்டுமா?என்று புவனாவிடம் விடைபெற்று மற்ற எல்லோரிடமும் கூறிக் கொண்டு காரில் ஏறி சென்னையை நோக்கி புறப்பட்டாள்.

வீட்டு வாசிலில் மாதவியை இறக்கிவிட்ட சத்யன்.”உணர்ச்சி வேகத்தில் அம்மாவிடம் எதுவும் பேச வேண்டாம் மாதவி.அப்படி பேசுவது சரியான பதிலைத் தராது.உன் மனம் சமனப்பட்டதும் சூழ்நிலைக்கேற்ப மெதுவாக விசாரித்துப் பார். இதன் விளக்கம் உனக்கு எவ்வளவு முக்கியமோ அதே போல்தான் எனக்கும்” என்றவனது பேச்சை ஏதோ நினைப்பில் உள் வாங்கிக் கொண்டவள். பதில் ஏதும் பேசாமல் வீட்டினுள் நுழைந்தாள்.

சமையலறையில் அரவம் கேட்க,அம்மா அங்கேதான் இருக்க வேண்டும் என்று நினைத்தவள் நேரே படுக்கையறைக்குச் சென்று கதவை தாழிட்டாள். மனம் பலமாக கனத்தது.ஒருமுறை கத்தி அழவேண்டும் போல தோன்றியது. அப்போதும் இந்தப் பாரம் குறையுமோ,அவன் வேலையை முடித்துவிட்டான் இப்போது பந்து இவள் கையில், ஆமாம் என்று சாட்சிகளோடு அவன் நிருபித்துவிட்டான்.இல்லை என்று நான் எப்படி நிருபிப்பேன் எப்படி கேட்பேன்.எனக்கு வந்த இந்த நிலை வேறு எந்தவொரு மகளுக்கும் வரவே கூடாது கடவுளே மனம் தன் பங்கை சரிவரச்செய்து அறிவை மேலும் மேலும் மழுங்கடித்தது.இனி யோசிக்க ஒன்றுமில்லை என்ற நிலைக்கே வந்துவிட்டாள் மாதவி எங்கோ வெறித்தபடி எந்த சிந்தனையும் இல்லாமல் எத்தனை நேரம் அமர்திருந்தாளோ பலமாக கதவு தட்டபடும் ஓசை கேட்டு திடுக்கிட்டு விழித்தாள்.

கதவைத் திறந்தவள் கமலத்தை பார்த்ததும் சற்று திணறித்தான் போனாள். இவர்களா இவர்களா அப்படி ஒரு மோசமான இடத்திலிருந்தது. தன் கண்ணையே நம்ப முடியவில்லை, அந்த புகைப்படம் நினவு வருகையில் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

அவள் முகத்தை ஊன்றி பார்த்த கமலம்”என்ன மதுமா, எப்போது வந்தாய், நேரே இங்கே வந்துவிட்டாய்? மிகவும் களைப்பாக இருக்கிறதா? கேள்வியும் பதிலும் அவரே கூறிக்.கொண்டார்

தலையை மட்டும் லேசாக அசைத்து ஆமோதித்தாள் மாதவி.

“சரிடா செல்லம் வெந்நீர் வைத்து குளித்துவிட்டு சாப்பிட பிறகு ஒரு குட்டி தூக்கம் போட்டால் எல்லாம் சரியாகிவிடும்.இப்போது டீ ஏதாவது போடட்டுமோ?” பேசிக்கொண்டே போனார் கமலம்.

“வேண்டாம்... நான் ரெஸ்ட் எடுக்கணும்.நானே வந்து சாப்பிட்டுக் கொள்கிறேன் எனக்காக காத்திருக்க வேண்டாம்

வேறு எதுவும் பேச மனமின்றி கதவை அடைக்க முனைந்தாள்.

“ம்... கொஞ்சம் இரு மதும்மா உனக்கு ஒரு லெட்டர் வந்தது விரைந்தவர் ஒரு வெள்ளை உரையுடன் வந்தார்.அதை பெற்றுக் கொண்டு கதவை தாளிட்டாள்.

அனுப்புனரின் விலாசம் பார்த்தவளால் அந்த நிலையிலும் சந்தோஷப்படாமல் இருக்க முடியவில்லை.காரணம் அது அவள் வேலைக்கான நேர்காணல் உத்தரவு. சத்யனின் வேண்டாத பேச்சுகளில் மனம் உடைந்து செய்தித்தாளில் உள்ள அத்தனை வேலைக்கும் விண்ணப்பத்திருந்தாள் பலன் இப்போதுதான்கிடைத்திருக்கிறது அப்பாடா அந்த மூச்சுமுட்டும் சிறையில் இருந்து தப்பிக்க ஒரு வழி கிடைத்துவிட்டது.

ஒரு கதவை அடைத்தால் கடவுள் மறுகதவைத் திறப்பார் என்று கூறுவது எத்தனை உண்மை. இந்த வேலை கிடைத்துவிட்டால் யாரிடமும் எதையும் நிருபிக்கத் தேவையில்லை.ஒரு வேளை அம்மா அந்த மாதிரி இடத்திலிருந்தாலும் அது திருமணத்திற்கு முன் தானே திருமணத்திற்குப் பின் அப்படியில்லையே..கணவனுக்கு துளியும் துரோகம் செய்யாமால் தானே இருக்கிறார். அதற்கு நானே சாட்சி.. ஏதோ ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அம்மா அங்கே மாட்டிகொண்டு இருந்த்திருக்கலாம். அப்பாவால் அதிலிருந்து விடுதலை கிடைத்திருக்கும். அந்த தொழிலிலேயே பிடித்தம் இருந்தால் திருமணத்தைப் பற்றி நினைத்திருப்பாரா.இல்லைதானே அம்மாவிற்கு மறுவாழ்வு கொடுத்திருப்பார் அப்பா அதை ஏன் தோண்டித் துருவ வேண்டும். இந்த வேலை கிடைத்துவிட்டால் நிம்மதியாய் அந்தத் தேள் கொடுக்கிலிருந்து தப்பிக்கலாம். நிம்மதியாய் ம்ஹும்.. அது முடியாதுதான். ஆனால் தப்பிக்கலாம் அல்லவா இவ்வாறு யோசித்தவளுக்கு சற்று தெம்பு வந்தது போல் இருந்தது. நேர்காணலுக்கான தேதியை பார்த்தாள் அட நாளையே தான். நிரம்பவும் நல்லதாயிற்று. பயணக் களைப்பு என்று ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டால் சந்தேகமே வராது இப்படி நினைத்தவள் நிம்மதியாய் உறங்கிக் கூட போனாள்.​
 
Messages
79
Reaction score
61
Points
18
மல்லிச்சரம்-17

மாதவியைப் பற்றிய சிந்தனையிலிருந்து விடுபடமுடியவில்லை சத்யனால் நான் மாதவியை அதிகம் சங்கடப்படுத்திவிட்டேன் என்ன தான் இருந்தாலும் தாஜில் ரூம் போட வா என்று கேட்டது அதிகப்படித்தான்.அது அவள் மனதில் எத்தனை ஆழமாக இறங்கியிருக்கிறது என்பதற்கு அவள் பதில்களே சாட்சி. கொட்டிய வார்த்தைகளை அள்ளுவது கடினம்தான். உண்மை விவரத்தை அறிவதற்காக நான் கையாண்ட வழிமுறை தவறாகவே இருக்கலாம். ஆனால் என் மனம் அது எதிர்பார்ப்பது ஒன்று தான்.



மாதவியின் உள்ளத்தில் ஓர் இடம் இணையாக துணையாக வாழ்வின் முழுமைக்கும் முடியுமா? மாதவியிடம் எந்தத் தவறும் இல்லைதான்.அவள் தாய் செய்த தவறுக்கு அவள் எப்படி பொறுப்பேற்க முடியும். ஆனால் அப்பாவிடம் எப்படி இதெல்லாம் கூறுவது.மாதவியை மணக்க விருப்பமென்றால் அப்பா ஆட்சேபிக்க மாட்டார்.ஆனால் மாதவியின் பூர்விகம் கண்டிப்பாக கிளறப்படும்.முக்கியமாய் தாய், தந்தை வழி எனவே மாட்டிக் கொள்வது உறுதி. மறைத்து மணப்பதற்கு வழியில்லை. பிறகு இந்தப் பிரச்சனையை எப்படி கையாள்வது? எது எப்படியோ, மனைவி என்று ஒருத்தி வந்தால் அது மாதவியாகத்தான் இருக்கும். இல்லை திருமணமே வேண்டாம். உறுதியாக நினைத்தவனின் மனதில் கண்களில் கண்ணீருடன் மாதவி துடிக்கும் உதடுகளால்" நான் இன்னும் வேசியின் மகளாகத்தான் இருக்கிறேன் சத்யன்.வேசியாகிவிடவில்லை" இப்போதும் கேட்டுக்கொண்டிருந்தது அதிலும்" முதல் வாடிக்கையாளர்"



இதைவிடவும் அதிகமாக என் மனதை புண்ணாக்க முடியாதுதான். எப்படிப்பட்ட வார்த்தைகள் அதைக் கூற அவள் மனம் எப்படி வாடியிருக்கவேண்டும். அவளின் கவலைகளை எல்லாம் தீர்த்து என் தோளோடு சேர்த்து ஆறுதல் அளிக்கப் போகிறேன். யோசனையில் வெகுதூரம் சென்றவனை ஒரு தொடுகை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது.



அவன் தோளைப் பற்றியது தயாநிதிதான். அவசரமாக எழுந்த சத்யன் இத்தனை நேர மனப்போராட்டத்தில் தன் கண்களிலிருந்து வடிந்த நீரை துடைக்க மறந்து விட்டான். சில வினாடி அவனை உற்றுப் பார்த்த தயாநிதி அவன் கண்ணீரைத் தானே துடைத்துவிட்டார். அப்போதுதான் அவனுக்கே உரைத்தது. எதுவும் பேச இயலாமல் தலை கவிழ்ந்தான்.



"உட்கார் சத்யன் சில விஷயங்கள் பேச வேண்டும்" என்றவர் அவன் எதிரில் தானும் அமர்ந்தார். உட்கார்ந்தவனின் தலை நிமிரவேயில்லை. சில நிமிட மெளனத்திற்குப் பிறகு தயாரிதி பேசினார்.



" உன் அந்தரங்கத்தில் தலையிடுவது அநாவசியம் என்று தான் இத்தனை நாள் கண்டும் காணாமலும் இருந்தேன். ஆனால் உன் முகவாட்டம், இரவில் பட்டினி, சிரிக்காத முகம், எதையோ சிந்திக்கும் கண்கள், இப்படி உன் உடல்நிலை கெடுவதால் தான். இப்போது பேசுகிறேன். சொல் எது உன் மனதை வாட்டுகிறது ?" கேள்வியோடு அவனைப் பார்த்தார்.



"அப்பா...." வார்த்தைகள் வர மறுத்தன.



"சரி. உனக்கும் மாதவிக்கும் இடையே என்ன பிரச்சனை?"



கேட்டவரை அதிர்ச்சியாய் பாத்தான் சத்யன். இந்த நேரடிக் கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை தான். சில நொடி பேச்சே வரவில்லை. கண்டு கொண்டார். என் உள்ளம் திறந்த புத்தகம் போல் ஆகிவிட்டது. அகத்தின் அழகு என்பார்களே. இது என் விஷயத்தில் உண்மையாகி விட்டதா? எப்படி கண்டுபிடித்தார். இதைத்தான் வயதின் அனுபவம் என்று கூறுவார்களோ? அவன் உள்ளத்தைப் படித்தது போல் அவரே தொடர்ந்தார்.



" உன் வயதைக் கடந்துதான் நானும் வந்தேன். மனதை திறந்து சொல். என்ன பிரச்சனை? என்னால் என்ன செய்ய முடியுமோ செய்கிறேன்" அவனை ஊக்குவிப்பது போல் அவன் தோளைப்பற்றினார்.



"மாதவி " என்றதைத் தவிர வேறு வார்த்தை வரவில்லை.



"ம் . . . . . . . சொல் மாதவியை நீ நேசிக்கிறாய்.அவளை மணக்க விரும்புகிறாய். அந்தஸ்து பாராமல் நான் ஒப்ப வேண்டும். இது தானே உன் கவலை. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறாய் சரிதானே?"



அவர் பேசிய விதத்தில் லேசான நம்பிக்கை தோன்றி



" அதுவும் ஒரு காரணம்" என்று பேச முயன்றான் சத்யன்.



" பின்னே வேறு காரணம் என்ன? மாதவி சம்மதிக்கவில்லையா? பணக்காரர்கள் என்று ஒதுக்குகிறாளா? நான் பேசட்டுமா? அவளுக்கு உன் மேல் அன்பு இல்லை என்று சொல்லி விட முடியாது. உன்னைப் பற்றி பேசினாலே அவள் முகத்தில் வெளிச்சம் பாயும். மாதவியை நம் வீட்டு மருமகளாக்க எந்த ஆட்சேபமும் இல்லை. சந்தோஷமா? அவன் முகத்தை நிமிர்த்தி முறுவலித்தார்.



அவன் பதில் பேசாமல் இருக்கவும் புருவத்தைச் சுருக்கியவர்

“என்ன சத்யா “என்று கேட்டார்

“ அப்பா இதில் இன்னும் சிக்கல்கள் இருக்கிறது அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என்றுதான் புரியவில்லை”

குழம்பியவனை ஊக்குவித்தார் “எதுவானாலும் சொல் சத்யா நான் இருக்கிறேன் “

“இதே வார்த்தை நான் கூறுவதை கேட்ட பிறகு வந்தால் என்னை விட பாக்கியம் செய்தவன் வேறு யாரும் இல்லை “என்ற பீடிகையோடு சுருக்கமாக நிலவரத்தை விளக்கினான்

கேட்டுக் கொண்டிருந்தவரின் முகத்தில் எந்த உணர்ச்சியும் தென்படவில்லை

சிறு மௌன இடைவேளைக்குப் பிறகு தயாநிதி பேசினார்

“சேற்றில் முளைத்ததால் செந்தாமரையின் நிறமோ, மணமோ ,குணமோ மாறிவிடுமா என்ன ? உன் காதலி செந்தாமரை போன்றவள் .அத்தோடு இன்னும் எதுவும் முடிவாகவில்லை . இதற்கு முழு தீர்வு மாதவியின் அம்மாவின் வாக்குமூலம் கேட்பதுதான் .ஆனால் எப்படி இருந்தாலும் திருந்தி வாழ்பவர்களை அதிகம் சோதிக்கக் கூடாது . நல்லவர்கள் தப்பு வழி போகலாம், தப்பு வழியில் இருந்து மீண்டவர்கள் நிச்சயம் திரும்பவும் தப்பு வழி செல்ல மாட்டார்கள் “ என்று உறுதியாய் பேசியவரை பார்க்கையில் உள்ளம் குளிர்ந்து நா தழுதழுத்தது சத்யனுக்கு

“அப்பா “

“இதை உணர்வுபூர்வமாக சொல்கிறேன் உன் தந்தையை பற்றி உனக்குத் தெரியாத விவரங்களை தெரியப்படுத்தும் நேரம் வந்துவிட்டது .என் இளமைக் காலத்தில் பணம் என்ற போதை தலைக்கேறி நான் செய்யாத தவறுகளே கிடையாது, என்னை போலவே வயதின் கோளாரில் நீயும் அப்படி எதிலும் சிக்கிக் கொண்டு அந்த சின்னப்பெண் மாதவியையும் சிக்க வைத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஏதேதோ பேசி உன்னை கோவை அனுப்பிவைத்ததேன். இதே போல் தான் என் தந்தையும் என் அட்டூழியம் அதிகமாக, பயந்து கட்டாயப்படுத்தி உன் தாயை மணமுடித்து வைத்தார் .என் அகக் கண்களை திறந்தவள் அவள்தான் ,என் தவறுகளை பொறுத்து முடிந்த வரை அமைதியாகவே அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் மெல்ல மெல்ல எனக்கே தெரியாமல் என்னை அவள் பக்கமாக இழுத்து விட்டாள் .

உன்னையும் பொறுப்பாக வளர்த்து பணத்தின் வீரியம் உன் மூளைக்கு எட்டாது நெறிப்படி வளர்த்த பெருமை எல்லாம் அவளுக்கு போய் சேரும் . அதனால் தவறுகளை உணர்ந்து திருந்த நினைப்பவர்களை நாம் வரவேற்க வேண்டும் .இப்போதும் சொல்கிறேன் மாதவியை நீ தாராளமாக மணந்து கொள்ளலாம் .என் முழு ஆதரவு உனக்கு உண்டு “என்றவரை பெருமை பொங்க நன்றியுரைக்கும் பார்வையோடு பார்த்தவன் சட்டென அவரை இறுக அணைத்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினான்.​
 
Messages
79
Reaction score
61
Points
18
மல்லிச்சரம்-18

தொலைபேசி ஓயாமல் அடித்துக்கொண்டே இருந்தது .வெகு நேரம் கழித்து தான் அதனை உணர்ந்து எடுத்தாள் மாதவி .மனதில் லேசான படபடப்புடன் காதுக்கு கொடுத்தாள், காரணம் அழைப்பு சத்யனிடமிருந்து



“ஹலோ “ நடுங்கும் குரலில் வினவினாள் மாதவி.



“ ஹாய் மாதவி”



“......”



“ம்....நாளைக்கு ஏதோ நேர்காணல் இருக்கிறது தானே. உனக்கு விடுப்பு வேண்டுமா?"



தலை சுற்றியது மாதவிக்கு இவனுக்கு எப்படி?



"என்ன வாயடச்சு போயிட்டே."



" . . . . . . . "

"எனக்கு எப்படி தெரியும்னா ? உன்னை நேர்காணல் செய்யப் போகும் கம்பனியின் எம்.டி உன்னுடைய காண்டாக்ட் பத்தி விசாரிக்க, உன் தற்போதைய முதலாளியான என்னை ஃபோனில் அழைத்தார்கள்."



"........."



"ம் .......கூப்பிட்டவன் என் தோழன் தான். கல்லூரித் தோழன். உன்னை இப்போது கம்பெனியலிருந்து அனுப்பப் போவதில்லை. உன்னால் சில வேலைகள் இருக்கிறது என்றதும் அவன் வேறு எதுவும் கேட்கவில்லை. அதனால் எங்கே போனாலும் நீ என் வழிக்குத்தான் வர வேண்டும் வேறு வழியே இல்லை உனக்கு, பாவம் நீ" குறும்பாய் சிரித்துவிட்டு தொடர்பை துண்டித்தான்.



செல்பேசியை காதிலிருந்து எடுக்கக் கூட தோன்றவில்லை மாதவிக்கு,



அடைத்துவிட்டான் கடவுள் காட்டிய ஒரு வழியையும் அடைத்து விட்டான். அவன் வழிக்கு வர வேண்டுமாமே. தினம் தினம் அவன் பேசும் சொற்களைக் கேட்டு இதயம் துடிக்க வேண்டுமா?அல்லதுஅவனுடன்......அவனுடன் ......உதட்டைக் கடித்தாள் மாதவி .கண்கள் சிவந்தன.அப்போது காபியுடன் உள்ளே வந்த கமலம் பதறி அவள் அருகே ஓடி வந்தார்.

"என்னம்மா மாதவி. என்னவாயிற்று. முகமெல்லாம் வியர்த்திருக்கிறது. ஐயோ உதட்டைக் கடிக்காதே ரத்தம் கசிகிறது பார். யார் பேசுவது இப்படி கொடு" என்று பேசியை பிடுங்கியவள் கடைசியாக வந்த தகவல் சத்யனுடையது என்று தெரிய

"என்னம்மா வேலையில் ஏதேனும் தவறு செய்து விட்டாயா எம்.டி கண்டித்தாரா?" இல்லை வேலையிருந்து உன்னை எடுத்துவிட்டார்களா? எதையாவது சொல்லேன். இங்கே நான் துடிக்கிறேன் தெரியவில்லையா?" பதற்றமும், எரிச்சலும் சேர்ந்தே வந்தது கமலத்திடம்,



அவ்வளவுதான் மாதவிக்கு சினம் தலைக்கேறியது.

"துடிக்கிறீர்களா.....ம்.....இரண்டு மாதங்களாக நான் எப்படித் துடிக்கிறேன் என்று தெரியுமா கேட்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் நரகம் அது நரகம்.....அந்த சத்யன் ...."மறுபடியும் உதட்டை அழுந்தக்கடித்தாள் மாதவி.

"ஐய்யோ, என்ன பேசுகிறாய் மாதவி. ஒன்றும் புரியவில்லை. அந்த எம்.டி .உன்னிடம் தப்பாக ஏதாவது சொல்லேன்" கெஞ்சலோடு கண்ணீரும் வந்துவிட்டது கமலத்திற்கு,



அவன் நடந்துகொண்ட விதத்தைக் கூற உதடுகள் துடிக்கத் தான் செய்தன. ஆனால் ஏனோ மனம் ஒப்பவில்லை. உதடு வரை வந்த வார்த்தைகளை விழுங்கினாள்.



“வேறு என்னதான்டி நடந்தது. சொல்லித் தொலையேன்" கோபத்தின் உச்சிக்கேசென்றுவிட்டாள் கமலம்.



சில வினாடி தாயை வெறித்தவள்.



"நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்.என்னை வேசியின் மகள் என்று கூறி விட்டார்கள் போதுமா" கூறியவள் துக்கம் தாளாமல் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு விசும்பினாள்.



கமலம் பேசவும் மறந்து மாதவியின் முகத்தில் படிந்த கண்களை அகற்றவே இல்லை நீண்ட நேர அமைதிக்குப் பின்.



"யார் என்ன சொன்னாலும் நம்புவதற்கு நீ குழந்தையில்லையே மாதவி "இதைசொல்லும் போது அவள் குரலில் அதிக பற்று இல்லை.



“குழந்தை .....ம்...குழந்தை இல்லை தான் அதனால் தான் கோவை சென்று என்தாத்தா பாட்டியை ஒரு முதியோர் இல்லத்தில் பார்த்து ஆதாரங்களோடு ச்சே....அந்தக் கண்டராவி ஆதாரத்தை பார்க்க நான் என்ன பாவம் செய்தேனோ?



"தாத்தா...பாட்டியா?"



" அதுதான் வீட்டில் புகைப்படத்தில் மட்டும் காட்டுவீர்களே எங்கே என்று கேட்டால் சித்தப்பாவோடு வெளிநாட்டில் என்றுதானே சொல்வீர்கள். அத்தனையும் பொய். வடிகட்டின பொய்" ஆத்திரமாகத் தொடங்கியவள் அழுகையில் முடித்தாள்.



தொடர்ந்து மெளனம் நிலவியது. ஏதோ ஓர் முடிவுக்கு வந்தவர் போல கமலம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மாதவியை நெருங்கி அவள் முகவாய்த் தொட்டு நிமிர்த்தினார்.



"நீ அவர்களைப் பார்த்தாயா?"



"...ம்......"



"உடனே நான் அவர்களைப் பார்க்க வேண்டும் என்னை அங்கே கூட்டிப்போ "



" "



"ஆமாம். சில விஷயங்கள் எனக்கு குழப்பம் தருகிறது. அத்தோடு நானும் இந்தச் சந்தர்பத்தை எதிர்பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்".



"என்னம்மா விஷயம்?"



"அவர்களிடம் சொல்லும் போது கேட்டுக்கொள்.வா புறப்படலாம்" திடமாய். பேசினார்.



"அது எனக்கே சரியாகத் தெரியாது. சத்யன் தான் அழைத்துச் சென்றார்" அவஸ்த்தையாய் நெளிந்தாள் .



"அப்போது அவரிடம் முகவரி வாங்கு"



"அது ----"



"ஓ... அவரிடம் தான் உனக்கு ஒத்துவரவில்லையே. சரி போன் போட்டுக்கொடுநான் பேசுகிறேன்"



"தயக்கமாய் சத்யனின் செல்லுக்கு தொடர்பு கொண்டாள்.



"ஹலோ, நான் மாதவியின் அம்மா பேசுகிறேன். அங்கே சத்யன் சாரா?"



உடனே துணுக்குற்றவன்" நான் தான் சொல்லுங்கள் அம்மா"



"அது..."



"எதுவானாலும் தயங்காமல் கூறுங்கள்"



"இன்பம் முதியோர் இல்லத்து விலாசம் வேண்டும்"



"விலாசமா?" சட்டென யோசித்தவன் அங்கே என்ன நடந்தது என்பதை யூகித்து விட்டான்.



"விலாசம் எதற்கு அம்மா. நானே அழைத்துச் செல்கிறேன்".



"உங்களுக்கு ஏன் வீண் சிரமம், விலாசம் மட்டும் கொடுங்கள்"



"எனக்கும் " என்று ஏதோ ஆரம்பித்தவன் அதைக் கூறாமல் விலாசம் கொடுத்தான்



" ரொம்ப நன்றி சார் வச்சுடறேன்",​
 
Messages
79
Reaction score
61
Points
18
மல்லிச்சரம்-19

இன்பம் முதியோர் இல்லத்தின் வாசலில் மாதவியையும் கமலத்தையும் எதிர்கொண்டு வரவேற்றவன் சத்யன் தான்" நீங்கள்......" நினைத்ததை கூற முடியாமல் நாவரண்டது.

"ம்" --- நீங்கள் விலாசம் கேட்டவுடனே புறப்பட்டு வந்து விட்டேன். தாத்தாவும் பாட்டியும் உங்கள் மேல் இருக்கும் கோபத்தில் நீங்கள் கூறுவதை கேட்க மாட்டேன் என்று விட்டால் அதனால் தான்.நான் இருந்தால் அவர்களை சமாதானப்படுத்த முடியும்.



"அதுவும் சரிதான் சார் எப்படியும் நீங்கள் தானே என் மகளின் மனதை புண்படுத்தியவர். அதன் விளக்கம் உங்களுக்குத் தெரிவதில் தவறில்லை தான் வாருங்கள் நான் அவர்களைப் பார்க்க வேண்டும்".



நேரே பரசுராமன் குடிலுக்கு அழைத்துப் போகாமல் சிற்றுண்டியை உண்ண வைத்தே அழைத்துச் சென்றான். ஏனோ அந்த உணவும் அவர்களுக்கு தேவைப்பட்டது போலத்தான் இருந்தது. அதிகம் அடம்பிடிக்காமல் வேகமாக முடித்துவிட்டு எழுந்தனர்.



குடிலின் வாசலில் சுற்றுத் தயங்கி நின்ற கமலத்திடம் "இரண்டு நிமிடம் அம்மா, நான் உள்ளே சென்று அவர்களிடம் பேசி விட்டு உங்களை அழைக்கிறேன். தேவையில்லாத கூச்சலை இது தவிர்க்கும் என்று நம்புகிறேன்" கூறியவன்" என்னுடன் வா மாதவி "உரிமையாய் அவள் கரம்பிடித்து உள்ளே சென்றான்.



இருவரையும் சற்றும் எதிர்பாராத பரசுராமன் தம்பதிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

"வாம்மா மாதவி உன்னை நினைத்துக்கொண்டே தான் இருந்தேன். "ஏனோ தெரியவில்லை. உன்னை அன்று அனுப்பவே மனம் வரவில்லை. அடுத்து உன்னை உங்கள் திருமணத்தில் தான் பார்ப்போம் என்று நினைத்தால் இரண்டே நாளில் வந்து இன்ப அதிர்ச்சி தருகிறீர்களே. சொல்லுங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்"



| பேசிக்கொண்டே சென்ற காயதிரியை தோள் பற்றி நிறுத்தினார் பரசுராமன் "முதலில் அவர்கள் உட்காரட்டும்" என்று எதிர் இருக்கையைக் காட்டினார்.



"தாத்தா பாட்டி முதலில் நீங்கள் உட்காருங்கள் உங்களிடம் பேசவேண்டும். நீங்கள் மாதவியிடம் கூறியதை ஏற்று ஒருவரை அழைத்து வந்திருக்கிறோம். உங்கள் உணர்வுகளை முடிந்தவரை கட்டுப்படுத்த வேண்டுகிறேன்.அவர் கூறுவதை கேட்ட பின்பு மற்றதைப் பேசலாம்" என்றவன் மாதவிக்கு விழிகளால் உத்தரவிட்டான்.



விசைக்கு கட்டுப்பட்டவள் போல அவளும் எழுந்து வெளியே சென்று கமலத்தை உள்ளே அழைத்து வந்தாள்.

குனிந்த தலையாக வந்த கமலத்தைப் பார்த்ததும் இருவரும் ஷாக் கடித்தாற்போல் எழுந்து கொண்டனர். இருவரையும் கை பிடித்து அமர வைத்தான் சத்யன். பேசாதீர்கள் என்ற கெஞ்சல் அவன் கண்களில்,

மனதில் எரிமலை குமிழ் ,கைகளைப் பிசைந்தபடி இருப்பு கொள்ளாமல் தவித்தார் காயதிரி. கமலத்தின் தோள்களைச் சுற்றியிருந்த மாதவியின் கை அவரது தோளை தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தின.



கண்களில் நீர்த்தேக்கம் மறைந்து விட" நான் .....என்னை ..."பேசமுடியாமல் தடுமாறினார் கமலம்.

"பயப்பட வேண்டாம் அம்மா. உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். தைரியமாகப் பேசுங்கள் .... "தெம்பேற்றினான் சத்யன்.

எதிர்பாராத நேரத்தில் சட்டென கமலம் பரசுராமன், காயதிரியின் கால்களில் விழுந்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

"மன்னித்துவிடுங்கள்.என்னை மன்னித்து விடுங்கள். எல்லாம் என்னால் தான் உங்கள் நிம்மதியான வாழ்வைக கலைத்த பாவி நான். என்னை உங்கள் கையாலேயே கொன்றுவிடுங்கள். அப்போது தான் எனக்கு நிம்மதி" மேலே பேசமுடியாமல் கதறி அழுதார் கமலம்.

ஏனோ காயதிரியால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரு பெண் என்ற இளகும் மனதாக இருக்கலாம்.

"முதலில் எழுந்திரி அம்மா, என் மகன் எங்கே?"

இன்னும் கதறி அழுத கமலம் "ஐய்யோ! அவர் போய் விட்டாரே நான் என்ன செய்வேன். எப்படி உங்களிடம் இதற்கு மன்னிப்பு கேட்பேன். மகன் இறந்ததைக்கூட தெரிவிக்க முடியாத நிலையில் இருந்து விட்டேனே. பாவி நான் பாவி நான்." தலையில் அடித்துக் கொண்டு கதறினாள்

என்ன?" பரசுராமன் அதிர்ச்சியை வார்த்தையால் வெளிப்படுத்தி விட, காயத்ரியோ மயங்கியே விழுத்து விட்டார்

உடனே செயல்பட்டது சத்யன்தான் அவரை அப்படியே ஏந்திக்கொண்டு போய் படுக்கையில் கிடத்தினான். அதற்குள் தண்ணீருடன் ஓடிவந்தாள் மாதவி நீரைத் தெளித்து காயத்ரியை நினைவுக்கு கொண்டு வந்தான். எழுந்தவர் ஓவென அழ ஆரம்பித்தார், அழட்டும் என்று அனைவரும் காத்திருந்தனர். ஓரளவு அழுகையின் சீற்றம் குறைந்ததும்.

"எ....எ - - - - - எப்படி என் மகன் - - - எப்படி ....."பேச முடியாமல் திணறினார். அப்போது கமலம் பேச ஆரம்பித்தார். அவர் பேசி முடிக்கும் வரை யாரும் குறுக்கிடாமல் கேட்டார்கள். கண்களை ஒரு முறை மூடித் திறந்தவர் ஒரு நீண்ட மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு பேசினார்.

"என் பூர்வீகம் எது என்று எனக்குத் தெரியாது. என் தாய், தந்தை உட்பட என் நினைவு தெரிந்த நாளிலிருந்தே ஒரு அனாதையாகத்தான் இந்தச் சமூகத்துக்கு அடையாளம் காட்டப்பட்டேன். திருச்சியில் நேசம் காப்பகத்தில் தான் நான் வளர்ந்து படித்து பட்டமும் பெற்றேன்.என் பதினெட்டு வயது முடிந்ததும் என் சொந்தக்கால்களில் நிற்கும் நேரமாக முடிவெடுத்து என்னை வேலை தேடிக் கொள்ள சொன்னது என் காப்பகம்.நானும் நிறைய இடம் ஏறி இறங்கினேன். வேலை தான் கிடைக்கவில்லை. அப்படி நான் விரக்தியில் இருந்த நேரம் தான்.தேவராஜ் என்பவன் என்னை அணுகினான். ஒரு வெளிநாட்டு நிறுவனம் வேலைக்கு ஆள் எடுப்பதாகவும் அதை எப்படியாவது எனக்கு வாங்கித் தருவதாகவும் கூறினான்.நானும் அவனை நம்பி என் காப்பகத்தின் எல்லா முறைகளையும் முடித்துக்கொண்டு கிளம்பினேன்.

அவன் என்னை அழைத்துக்கொண்டு ஒரு இரண்டு மாடிகட்டிட வீட்டில் நுழைந்தான்

" அலுவலகம் என்றீர்களே?" சந்தேகமாய் அந்த வீட்டை பார்த்தேன். "வேலை நிச்சயம் அப்புறம் நீ ஸ் ......சு .வைங்ன்னு வெளிநாட்டிற்கு பறந்து விடலாம் வா" என்றவன் வேறு எதுவும் பேசாது அந்தப் பெரிய கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான். வேறு வழியின்றி மிரட்சியான பார்வையோடு அவனை தொடர்ந்தேன். வீட்டு வாசலில் இருந்த இடம் கார்களால் நிரம்பி இருந்தது. வீட்டினுள் சென்ற உடன் நாசியை துளைத்தது மல்லிகை ஸ்பிரே, அப்போதாவது விழித்துக் கொண்டு இருக்க வேண்டும் நான். என் விதியினை யாரால் மாற்ற முடியும்.

எம்டியிடம் பேச வேண்டும் என்றவன் ஒரு ஐம்பது வயது அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தான்.அவர்கள் பேச்சு எனக்கு சரிவர கேட்கவில்லை. பிறகு ஒரு வேலைக்காரி என்னிடம் வந்தாள். "வாங்கம்மா எம்டி இரண்டாவது மாடியில் இருக்கார்" அவர் முன்னே செல்ல அவளை பின் தொடர்ந்தேன்.அந்த இரண்டாவது மாடி கடைசி அறையில் என்னை அனுப்பியவள் வெளியே தாழிட்டுவிட்டாள்

அப்போது தான் எனக்கு சகலமும் நடுங்கியது. மூளையில் அலாரம் அடித்தது. கதறி அழுதேன் தப்பிக்க வழி தேடினேன் எனக்கு தோல்விதான் மிஞ்சியது. அடுத்த நாள் காலை தான் கதவு திறக்கப்பட்டது. சோறு தண்ணீர் இல்லாமல் வாடி வதங்கி இருந்த என்னை அந்த ஐம்பது வயது பெண்மணி தூக்கி நிறுத்தினாள். நீ பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம். இங்கு வரும் வாடிக்கையாளரை திருப்தி படுத்து போதும் இப்போது பசியின் கொடுமை உனக்கு விளங்கி இருக்கும். அதனால் உனக்கு வேறு வழி இல்லை" நான் மெளனமாய் நின்றேன் கடைசியில் சிவப்பு விளக்கு பகுதிதான் என் விதியா? மனம் ஓவென அலறியது. இது சரிபடாது டேய் வாங்கடா இன்னும் ரெண்டு நாள் பட்டினி கிடந்தால் வழிக்கு வருவாள். ரூம் பூட்டப்பட்டது. மூன்று நாள் ஓடியது குத்துயிரும் குலையுயிருமாய் கிடந்தேன். அப்போதுதான் போலீஸ் ரைடு வந்தது.

அன்று தான் நான் அவரை முதலில் பார்த்தேன். அந்த வீடே அமளி துமளிப்பட்டது. நான் மட்டும் எந்த ஒரு கவலையும் இல்லாமல் இயந்திரமாய் செயல்பட்டேன்.எங்கள் எல்லோரையும் வீட்டு வாசலில் நிற்க வைத்து ஒரு போட்டோ எடுத்தார்கள். பிறகு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள்.

மூன்று நாள் சாப்பிடாமல் இருந்ததாலோ என்னவோ ஸ்டேஷன் வாசலிலேயே மயக்கமடைந்தேன். விழித்த போது ஒரு அரசு மருத்துவமனையில் இருந்தேன்.

"கான்சியஸ் வந்து விட்டது. இவரிடம் வாக்குமூலம் வாங்க வேண்டும் வா சீக்கிரம்" என்ற படி என் அருகில் அமர்ந்திருந்த அவரை விழியெடுக்காமல் பார்த்தேன். கான்ஸ்டபிள் அருகில் வருவதற்குள் நான் என்ன நினைத்தேனோ தெரியவில்லை. அவர் காலில் விழுந்து கதறினேன். அவர் கால்கலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். வேறு பற்றுதல் இல்லை என்று உணர்ந்தேன்.

"என்னம்மா இது எழுந்திரி. --- முதல்ல" அவர் கத்தியதை காதில் வாங்கவேயில்லை.

"அம்மா, முதலில் எழுந்திரி. என்ன விஷயம் சொல் நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன்" தூக்கி நிறுத்தி படுக்கையில் அமர வைத்தார்.

என்னை .....என்னை அனுப்பி விடாதீர்கள். மறுபடியும் அங்கே அனுப்பி விடாதீர்கள்.என் விருப்பமில்லாமல் ஒருவன் என்னை இங்கே விட்டுச் சென்றுவிட்டான். நான் அது போன்ற பெண்ணில்லை. தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்.” கதறியபடி வந்த வார்த்தைகளைக் கேட்டு கடுப்படைந்தார் அவர்.

“என்னம்மா, பிடிப்பட்டதும் உங்க இனத்தவர் சொல்லும் வழக்கமான கதைதானே இதுவும், வேறு ஏதாவது சொல்” எரிச்சலாய் பேசினார்.

“ஐய்யோ இல்லைங்கசார்,வேண்டுமானால் நான் வளர்ந்த அனாதை இல்லத்தில் கேளுங்கள். அது தேவையில்லை என்றால் என்னை மருத்தவ பரிசோதனை செய்து பாருங்கள். அதில் எல்லாம் தெரியும்” மறுபடியும் காலில் விழுந்து மன்றாடினேன்.

“அட என்னம்மா... உன்னோட ஒரே ரோதனையாப் போச்சு.பொசுக்கு பொசுக்குன்னு காலை பிடிச்சிக்கிட்டு எழுந்திரி நான் விசாரிக்கிறேன். உண் ஆசிரமத்து முகவரி கொடு.:என்றவுடன் எனக்கு உயிர் வந்தது.

பிறகு ஒருநாள் அவர் சொன்னார். என் அழுகை அவர் மனதை ஏதோ செய்ததாம். அதனால்தான் விசாரிக்க தொடங்கினாராம். மாலை அவர் வந்ததும் ஆவலாக அவரை எதிர்கொண்டேன். உண் ஆசிரமத்தில் அதிகமாக எதுவும் கூற மறுக்கிறார்கள்.போன வாரம் வரை நீ அங்கே தான் இருந்தாயாம்.வேலை கிடைத்து வெளியேறிவிட்டாய் என்றவர்கள் அதை எழுதித்தர மறுத்துவிட்டார்கள்.அவர்கள் ஆசிரமத்தின் பெயர் கெட்டுவிடுமாம்

வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள்.மனிதாபிமான அடிப்படையில் நானும் விட்டுவிட்டேன்.பாவம் இதனால் அவர்களுக்கு ஸ்பொன்சர்களும் அடிபடும் தானே.

“நீங்கள் என்னை நம்புகீறிர்களா சார். எனக்கு அது போதும் ஏனோ நிம்மதியாய் உணர்ந்தேன்.

“சட்டத்திற்கு வாய் வார்த்தை போதாதே அம்மா. அடுத்த வழி மருத்தவ பரிசோதனைதான். அதற்கு ஒத்துழைப்பாயா? தயக்கமாய் விசாரித்தார்.

அதனால் என்ன சார்.மடியில் கனம் இருந்தால்தானே பயம். எனக்கு இல்லை நான் தயார்தான் என்றவுடன் பரிசோதனை செய்தார்கள். அதிலும் எனக்கு சாதகமான சான்று கிடைக்கவே.கோர்ட்டில் கேஸ் போட்டு பேப்பரில் மன்னிப்பு கோறும்படி செய்து எல்லாம் அவர்தான் செய்தார்.இன்னும் மலைப்பாக இருக்கிறது. அந்த நரகத்தில் இருந்து எப்படி வந்தேனோ? பெருமூச்சொன்றை வெளியிட்டவர் தொடர்ந்தார்.

எல்லாம் முடிந்து கையெழுத்துப் போட்டு வெளிவரும் போது மனம் கல்லாய் கனத்தது. இனி என்ன செய்ய எங்கு தங்குவது உணவுக்கும் உறைவிடத்துக்கும் வழி. இப்படி பலதை யோசித்து, ஸ்டேஷன் வாசலில் மலங்க மலங்க விழித்த என்னை ஒரு மகளிர் விடுதியில் சேர்த்து முன்பணம் கட்டி ஸுரிட்டி கையெழுத்து போட்டு ஒரு வேலையும் தேடிக் கொடுத்து புது வாழ்வை அமைத்துக் கொடுத்தவர் அவர்தான்.

என் தாயை நான் பார்த்ததில்லை. அவரைத்தான் தாயாக என் மனதில் பாவித்து தினமும் பூஜித்து வந்தேன். அதன்பிறகு அவ்வப்போது வந்து என் நலம் விசாரிப்பார். அப்போதெலாம் சில மணி நேரம் பேசுவோம்.இப்படி வாழ்க்கை நகர்கையில் திடும் என ஒரு நாள் :எனக்கு உன்னை பிடித்திருக்கிறது கமலம். நாம் வாழ்வில் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீ யோசித்துச் சொல்” என்று சொல்லிவிட்டு சென்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. மீண்டும் மீண்டும் யோசித்தேன் எப்படி யோசித்தாலும் அவருக்கு ஏற்றவள் நான் இல்லை என்று மட்டும் என் உள்மனம் உறுதியாக கூறியது. அதனால் அடுத்த முறை அவர் என்னை சந்தித்தபோது முடியாது என தீர்மானமாக கூறிவிட்டேன். அவரும் எவ்வளவோ எடுத்துக் கூறினார்.நான் காதில் வாங்கவே இல்லை.அதற்கு பிறகு அவருடன் பேசுவதை நிறுத்தினேன்.அவரை வெளிப்படையாக நிராகரித்தேன். ஆனால் இரவின் தனிமையில் என் தலையணை நனையாத நாளே இல்லை. நானும் ஒரு பெண் தானே. எப்படிபட்டவர் என்னை மனம் செய்ய விரும்புகிறார் அதற்கு தகுதியற்றவளாக நிற்கும் என் விதியை நினைத்து நொந்து கொள்வேன்.இரவில் என் தலையணைக்கு மட்டுமே தெரியும் என் மனதில் அவரைத் தவிர வேறு யாருமில்லை என்று இப்படியாக ஒருவருடம் ஓடிவிட்டது.

அதுவரை நான் கேட்டுக் கொண்டிருந்ததற்கு இணங்க அவர் என்னை பார்க்கவில்லை. தீடீர் என ஒரு நாள் நான் வேலை விட்டு வரும் வழியில் எனக்காக காத்திருந்து என்னை எதிர் கொண்டார். அவரைப் பார்த்த நான் ஸ்தம்பித்து நின்றுவிட்டேன்.காரணம் பாதியாக இளைத்துவிட்டார். அவருக்கே உரிய கம்பீரத் தோற்றம் தொலைந்து விட்டிருந்தது.கண்களில் இருந்த ஒளி இருண்டுவிட்டது.முகம் சவரம் செய்யாமல் ஏதோ மிகவும் வயதானவர் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது.

“என்னவாயிற்று உங்களுக்கு உடம்பு முடியலையா,என்ன செய்யுது?” பதறித்துடிதேன், நான்.

“ம்ச்.... கொஞ்சம் கொஞ்சமாய் என்னைக் கொல்கிறாய் நீ..”

“உனக்குள் நேசம் இருக்கிறது. இல்லையேல் என்னைப் பார்த்தும் இப்படி பதறித் துடித்திருக்க மாட்டாய்.ஆனால் அதை ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறாய்..இந்தச் சமுதாயத்தை எண்ணி நீ ஒதுங்குகிறாய். அதுவா உண் வயதான காலத்தில் உனக்கு துணை செய்யும்.நான் இருப்பேன் அல்லது நம் குழந்தைகள் நமக்கென்று ஓர் குடும்பம். ஒரு நாள் பேப்பரில் வந்துவிட்டால் அல்லாம் போயிற்றா உன்னை முழுதாக நான் நம்புகிறேன் வேறு என்ன வேண்டும் உனக்கு.

“....”

“மௌனம், இதைத் தவிர வேறு என்ன தெரியும் உனக்கு”

கண்ணீரைத் தவிர என்னால் எதுவும் பேச முடியவில்லை அப்போதுதான் அவர் வாயில் அப்படிபட்ட வார்த்தைகள் வந்து என் உறுதியைக் குலைத்தன.

“ச்சே ... பேசாமல் செத்துவிடலாம் போல் இருக்கிறது” அவர் கூறி முடிக்குமுன் அவர் வாயை கைகளால் மூடினேன்.

அவரது கலங்கிய விழிகளை சந்தித்த நான் என் உறுதியை தொலைத்தேன் அவர் மார்பில் புதைந்து கதறி அழுதேன். சுற்றுப்புறத்தை மறந்தேன். எத்தனை நேரம் அப்படியே இருந்தோமோ கடவுளுக்கே வெளிச்சம்.

நான் எவ்வளவோ சொல்லியும் திருமணம் முடிந்த பிறகு தான் வீட்டிற்கு தெரியபடுத்தனும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். என் அப்பா,அம்மா அந்தக்காலத்து மனிதர்கள் அவர்கள்காதல் திருமணத்தை ஆதரிப்பதே கடினம். அதோடு பேப்பரில் வந்த நியூசை கத்தரித்து பத்திரப்படுத்தி வைத்திருகிறார்கள். அதனால் நாம் முதலில் திருமணம் செய்து கொள்வோம்.. எந்த காரணத்திற்காகவும் மறுபடியும் உன்னை இழக்க நான் தயாரில்லை கமலம். என் கைகளை பிடித்துக் கொண்டு நா தழுதழுக்கப் பேசியவரை எதிர்த்துப் பேசும் துணிவு எனக்கு இருக்கவில்லை. அதோடு இந்த திருமணம் தடைப்படக் கூடாது என்று என் மனதில் ஓரத்தில் இருந்த ஆசையும்தான்.

அவரின் நண்பர்கள் சூழ எங்கள் திருமணம் முடிந்த கையோடு அவர் வீட்டுக்கு சென்றோம். நான் எதிர்பார்த்தது போல்தான் அவர்க எங்களை ஏற்கவில்லை. வீட்டினுள் சேர்க்கவும் இல்லை. அவர்கள் கோபம் தணிந்தபின் வந்து சேர்ந்து கொள்வோம் என்று சமாதானம் செய்து என்னை அழைத்துக் கொண்டு வந்தார்.

நண்பர்கள் உதவியுடன் ஒரு வீட்டைப் பார்த்து குடிபுகுந்தோம். மிகவும் சந்தோசமாக வாழ்க்கை ஓடியது.. இருப்பினும் ஓரத்தில் அவ்வப்போது மாமா அத்தையின் நினைவு வந்து கொண்டேதான் இருக்கும். அவருக்கும் அப்படித்தான்.ஆனால் காட்டிக்கொள்ளமாட்டார்.

அப்போதுதான் எங்கள் மகள் பிறந்து ஆறுமாதம் ஆகயிருந்தது. அவரின் பெரியப்பா என்று சொல்லிக் கொண்டு சுதாகர் என்ற பெயரில் ஒருவர் எங்கள் வீடு தேடி வந்தார்.

இதற்குள் பொறுமை காக்க முடியாமல் காயத்ரி பேசினார். அவனை நாங்கள் தான் அனுப்பி வைத்தோம். என் மகன் எங்களை மறந்தாலும், தாய் தந்தை என்ற கடமை கருதி அவனிடம் எங்களது சொத்துக்களை ஒப்படைக்க.”

“ஊ... ஆனால் அவர் கூறியது முற்றிலும் வேறாகவே இருந்தது. முதலில் எங்கள் நலனை எல்லாம் விசாரித்தவர் பிறகு விஷயத்திற்கு வந்தார். உங்கள் அப்பாவின் தொழிற்சாலையை விற்க விரும்புகிறார் அதை வாங்க நான் அணுகினேன். அவரோ உங்கள் கையெழுத்து இல்லாமல் சட்டப்படி விற்க முடியாது என்பதால் என்னை அனுப்பினார். காரணம் அவருக்கு உங்களை பார்க்கவே பிடிக்கவில்லையாம். அதனால் பேசாமல் தொழிற்சாலையை இழுத்து மூடிவிட்டு இருக்க போவதாக கூறுகிறார். ஒரு பெரிய தொழிற்சாலை மூடப்படுவது எனக்கு சங்கடமாக இருக்கிறது .அதனால் நானே பொறுப்பேற்று வந்தேன். பத்தாயிரம் தொழிலாளிகளின் வயற்றில் அடிப்பதா? கூடாதுதானே...”

இப்படி பேசவும் அவர் உருகிவிட்டார். :இல்லை இல்லை அவர்களை வாட விடக்கூடாது. நான் வேண்டுமானால் என் பெற்றோர் சொத்தை விற்பதில் ஆட்சேபனைஇல்லை என்று பத்திரம் எழுதித் தருகிறேன். என் அப்பா அம்மாவின் விருப்பமே எனக்கு முக்கியம் அவர்களின் முதுமைக் கவலைதான் எனக்கு. மகன் என்ற முறையில் என் கடமையை செய்ய தவறிவிட்டேன்.

அதைப் பற்றி கவலைபடாதே அண்ணா சித்தப்பா சித்தியை நான் நல்லபடியாகப் பார்த்துக் கொள்கிறேன். தொழிற்சாலையை எனக்கு விற்று பணத்தை பாங்கில் போட்டு அவர்களது நிரந்தர வருவாய்க்கு வழிசெய்கிறேன்.

“அடப்பாவி பச்சை பொய்” வியப்பிலும் கோபத்திலும் முகம் சிவந்தார் பரசுராமன். முந்தானையில் முகம் பொதிந்து அழுது கொண்டிருந்தார் காயத்ரி.

“ம்... அதுதான் நீங்கள் இங்கு வாழும் வாழ்க்கையிலேயே தெரிகிறதே சொல்லுங்கள் அவர் அந்தப் பத்திரத்தை உங்களிடம் தரவில்லையா” ஆதங்கத்தோடு கேட்டார் கமலம்.

“பத்திரமா எங்களிடம் அல்லவா அவன் வாங்கிச் சென்றான்.”

“என்ன?” சத்யன் வாய் பிளந்தான்.

“ஆமாம் சத்யன். என் மகனுக்கு குழந்தை பிறந்த சேதி கேட்டு நாங்கள் மகிழ்ந்தோம். என்னதான் இருந்தாலும் பெற்ற வயிராயிற்றே. ஏனோ நாங்களே நேரில் போய் பார்க்க தன்மானம் இடித்தது. அதனால் முதல் தூதுவனாய் சுதாகரை அனுப்பினோம்.அவன் சென்று வந்தால் பின்னோடு மகன் வருவான் என்ற நம்பிக்கை. ஆனால் அது பொய்த்தது. வந்தவன் இடிப்போன்ற விஷயத்தை கொண்டு வந்தான். மகன் எங்கள் மீது கோவமாக இருப்பதாகவும் சொத்தில் பங்கு கேட்பதாகவும் இப்படி இட்டுக்கட்டிஇன்னும் எத்தனையோ பிறகு இருவரும் ஆழ்ந்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம். எங்கள் மகனே இல்லாத போது இந்தச் சொத்து எதற்காக என்று நினைத்து மொத்தம் அவனுக்கே என்று எழுதிக் கொடுத்து விட்டோம். அதை எடுத்துக் கொண்டு சுதாகர் வரவில்லையா? கேட்கும் பிதே குரல் நடுங்கியது.

மறுப்பாய் தலையசைத்தார் கமலம்.

“படுபாவி.”

:அப்போ அந்தத் தொழிற்சாலை இப்போது என்னவாயிற்று” தன் சந்தேகத்தைக் கேட்டான் சத்யன்.

“ அந்தக் கொடுமையை ஏன் தம்பி கேக்கற. அந்த படுபாவி எங்களிடம் வந்து அண்ணனுக்கு உங்கள் தொழிற்சாலையை கட்டிகாக்க முடியாதாம். மேலும் இந்த ஊரில் இருந்தால் உங்களை சந்திக்க நேருமாம். அதனால் பத்து கோடிக்கு விற்றுவிடு,வேலை மாற்றல் வாங்கிக்கொண்டு செல்லப் போகிறாராம். இப்படி நாங்கள் நம்பும்படி நிறைய திரித்துச் சொன்னானே. அந்த அயோக்கினை” அரற்றினார் பரசுராமன்.

“அதன்பிறகு ஒரு வருடம் வரையும் இந்த முதியோர் இல்லத்தில் வந்து எங்கள் நலன் விசாரித்துக் கொண்டுதான் இருந்தான்.பிறகு ஆளையே காணோம்.”

“அவர் சொன்னதும் உண்மைதான். என்றாவது ஒரு நாள் பெற்றவர்கள் ஏற்பார்கள் என்று ஆனால் நம்பித்தான் நாங்கள் அதே ஊரில் இருந்தோம்.ஆனால் சுதாகர் வந்து போன பிறகு அந்த நம்பிக்கை குலைந்துவிட அவர் மாற்றல் வாங்கிக் கொண்டார். பிறகு சென்னை வாசம்தான். அடுத்து மகன் பிறந்தான்,பழையகதை மறந்து சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தோம்.

“ஒரு நாள்..” வியர்த்து விட்டது கமலத்திற்கு.உள்ளிருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் மாதவி.மறுக்க மாட்டாமல் அதை வாங்கிப் பருகியவர் மீண்டும் தொடர்ந்தார்.

“நன்றாகத்தான் பேசி சிரித்துக் கொண்டிருந்தார். குழந்தைகளுக்கு கதை சொல்லி உறங்க வைத்து அவரும் தூங்கினார்.கா.. காலையில் எழவேவில்லை, தூக்கத்திலேயே...” அதற்கு மேல் பேச முடியாமல் வாய் பொத்தி அழுதார்.

“:ஐய்யோ” கதறினார் காயத்ரி.

மாதவி தொடர்ந்தாள்.

“அப்பாவை அப்படி பார்த்ததும் அம்மா மயக்கும் போட்டு விழுந்து விட்டார்கள். பிறகு கண் விழித்தது மூன்றாம் நாள்தான். கடைசியில் அவரின் இறுதி யாத்திரைக்கு கூட அம்மா இல்லை. அக்கம்,பக்கம் அப்பாவின் நண்பர்கள் இப்படி எல்லோரும் அறியாக் குழந்தைகளாக விழித்த எங்களுக்கு உதவி செய்து இறுதி ஊர்வலத்தை நடத்தி முடித்தனர். எனக்கும் அவர்களுக்கும் உங்கள் முகவரி தெரியாததால் தெரிவிக்க முடியவில்லை.அம்மாவும் சொல்லும் நிலையில் இல்லை.”

“ மாதவி, நீயா என் பேத்தி, கண்ணே” அவளைக் கட்டிக் கொண்டு அழுதார் காயத்ரி.

அழுகை மெல்ல குறையவும் “அதன் பிறகாவது எங்களுக்கு தெரியப்படுத்தி இருக்கலாமே?” பரசுராமன் கேட்டார்.

“மகனின் முகத்தை கூடகடைசியில் பார்க்க விடாமல் செய்த பாவிநான் எல்லாம் முடிந்த பிறகு உங்களுக்கு தெரிவிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.. எங்கோ மூலையில் மகன் சந்தோஷமாக வாழ்கிறான் என்ற நிம்மதிதான் உங்கள் வயதான காலத்தில் உங்களுக்கு தேவை என்று உணர்ந்துதான் தெரிவிக்கவில்லை. அதன்பிறகு உங்களை நினைக்க கூட, ஏன் என்னைப் பற்றி நினைக்கவும் எனக்கு அவகாசம் இல்லை.

கிடைத்த வேலைகளை செய்து இருவரையும் படிக்கவைத்தேன்.எல்லாம் நேர்வழியில் தான்.சில சமயம் உங்கள் நினைவு வரும்.நீங்கள் சுதாகரின் ஆதரவில் நலமாக இருப்பீர்கள் என்று மனதை தேற்றிக் கொள்வேன். இதோ என் மருத்துவச் சான்றும் அந்த மன்னிப்பு செய்தியும் தயவு செய்து என்னை நம்புங்கள், நான் தப்பானவள் இல்லை. எனக்கும் என் குழந்தைகளுக்கும் உங்களின் ஆதரவு வேண்டும். குடும்பத்தில் பெரியவர்கள் இலையென்றால் எப்படியெல்லாம் துன்பம் வரும் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்தவள் நான். அப்படிப்பட்ட நல்லவரை எனக்காக தந்தவங்களுக்கு வாழ்நாள் முழுவதும் செருப்பாய் தேயவும் நான்தயார். என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.” என்று கதரியவளின் கையில் இருந்த காகிதங்களை அப்புறப்படுத்திவிட்டு அவரை ஆரத் தழுவிக் கொண்டாள் காயத்ரி.

“நாங்களும் தனிமைத் துயரை அனுபவித்து விட்டோம் அம்மா. மகன் எங்கு இருக்கிறான் என்று கூட தெரியாமல் பரிதவித்துவிட்டோம். எங்களுக்கு குடும்பம் பேரக் குழந்தைகள் என்று இருக்க ஆசை இல்லாமலா இருக்கும்” கண்களை துடைத்துக் கொண்டார் பரசுராமன்.

“ம்... எல்லாம் நல்லபடியாக முடிந்தது. தாத்தா பாட்டி இந்த இல்லத்தில் உங்கள் முறைமைகளை முடித்துவிட்டு சீக்கிரம் கிளம்புங்கள் நம் வீட்டுக்கு செல்வோம்”ஆசையாய் தாத்தாவின் தோளில் சாய்ந்தாள் மாதவி.

“சரிடா கண்ணு” செல்லமாய் அவள் கன்னத்தை தட்டினார் பரசுராமன்..

எல்லாம் இன்னும் முடியவில்லை மாதவி.சுதாகரை அப்படியே விடுவதா?” சத்யன் சீறினான்.

“ஐய்யோ தம்பி அவனிடம் எதற்கு வம்பு” அதிர்ந்தார் காயத்ரி.

“:நான் பெரிதாக மதிக்கும் சொத்தே என் மாமா அத்தைதான் தம்பி.வேறு எந்தச் சொத்தும் எனக்குத் தேவையில்லை” நெகிழ்ந்தார் கமலம்.

“அது உங்கள் பெருந்தன்மை அம்மா.ஆனால் நியாயம் என்று ஒன்று உண்டுதானே. அதன் வழி நாம் செல்வோம். க்க்,எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் “ என்றவனுக்கு அனைவரும் ஆதரவு கொடுத்தனர்.​
 
Messages
79
Reaction score
61
Points
18
மல்லிச்சரம்-20(நிறைவு பகுதி)
தன் வீட்டுக்கு வந்திருப்பவர்களைப் பார்த்ததும் உள்ளுக்குள் உதறல் எடுத்துவிட்டது சுதாகருக்கு. இருப்பினும் அதைக் காட்டாமல் அவர்களை வரவேற்றான்.அவன் அழைப்புத் தேவையில்லை என்பது போல் உள்ளே நுழைந்தவர்கள். சரமாரியாக அவனை திட்டித் தீர்த்தனர்.காயத்ரியும் கமலமும் மாறி மாறி வசைபாடியதும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தான் சுதாகர்.
"அட சும்மா நிறுத்துங்கம்மா என்ன விட்டா ஓவரா கத்தரீங்க. இது என் வீடு. இப்ப என்னாங்கறீங்க?" ஆமாம் நான் தான் அண்ணன் எழுதிக் கொடுத்த பத்திரத்தில் அவர் கையெழுத்து போட்ட பிறகு, "அதனால் என்ன சொத்துக்களை என் தம்பி சுதாகருக்கே விற்று விடுகிறேன்" என்று சேர்த்துக்கொண்டேன். சட்டம் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. அத்தனை ஆதாரங்களும் பக்காவாக என்னிடம் உள்ளது. போங்கள் முதலில் இங்கிருந்து உங்கள் கத்தல் ஒரு அணுவையும் அசைக்க முடியாது" என்று கம்பீரமாகப் பேசினான்.
"ம்...அதை நீங்கள் சொல்லக் கூடாது மிஸ்டர் சுதாகர். என் வேலையை மிகவும் எளிதாக்கியதற்கு நன்றி. என் பெயர் சக்திவேல், சத்யனின் நண்பன். என்னை மப்டியில் பார்ப்பதால் உங்களுக்கு அடையாளம் தெரியாமல் உளறிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதுவும் நல்லதுதான். நீங்கள் பேசியதை பதிவு செய்து விட்டேன் .யூ ஆர் அண்டர் அரெஸ்ட்" பாக்கெட்டில் இருந்த விலங்கை எடுத்துக் கொண்டு சுதாகரிடம் முன்னேறினார் சக்திவேல்.
வாயடைத்து விழிபிதுங்கி அவன் நிற்பது பாவமாகத்தான் இருந்தது. பின்னே தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்" என்று சும்மாவா சொன்னார்கள்.
சட்டப்படி கேஸெல்லாம் முடிந்து பூர்வீக சொத்துக்கள் அனைத்தும் மாதவியின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது எல்லாம் நன்றாகவே முடிந்தது. அவர்கள் வாழ்வில் நடந்த துன்பமெல்லாம் விலகியதால் கோவையில் உள்ள அவர்கள் பூர்வீக வீட்டில் பெரிய பூஜைக்கு ஏற்பாடு செய்தார்கள்.பரசுராமன் தம்பதிகள் அதற்கு சத்யனின் குடும்பத்தை நேரில் சென்று அழைத்துவிட்டு வந்தார்கள்.
வானத்து பிரை நிலாவை ஆவலாகப் பார்த்துக்கொண்டு நின்றாள் மாதவி. எல்லாம் கனவாகவே இருந்தது. இது நிஜம் தானா வாய்க்கும் வயிற்றுக்கும் கூட பத்தாமல் இருந்த நிலை போய் சொந்த வீடு, தொழிற்சாலை இப்படி எல்லாம் கிடைத்துவிட்டது. அதற்கெல்லாம் மேலாக தாத்தா பாட்டி என்ற உன்னதமான உறவு கிடைத்திருக்கிறது. அதில்லாமல் எத்தனை நாள் அழுதிருக்கிறேன். சக தோழிகள் பாட்டி கதை சொன்னதை சொன்னால் அன்று ஒரு அழுகை, இப்படி ஏங்கித் தவித்தவளுக்கு இப்போது இருக்கிறது. நிறைவு . . . . . . இது உண்மைதானா...? இல்லையே ஏதோ ஓரத்தில் வலியாய் ரத்தக் கசிவாய் சத்யனின் நினைவு. இதெல்லாம் அவனால் தான் கிடைத்தது. ஆனால் அதற்கு நன்றி கூறலாமே தவிர......வேறு ....ம்ஹப் அந்த நினைப்பே வேண்டாம். எல்லாம் இப்போது தான் சரியாகியிருக்கிறது. தயநிதி சார் தன் அந்தஸ்தை விட்டு ஒரு பூஜைக்காக இவ்வளவு தூரம் மனைவியுடன் வந்ததில் நிஜமாகவே சந்தோஷம் தான் தம்பியைப் பற்றி இனி கவலையில்லை அவன் படித்து முடித்ததும் இந்தத் தொழிற்சாலையை அவன் பார்த்துக் கொள்வான்.அதுவரை தயாநிதி உதவி செய்வதாக கூறுகிறார்.அவரின் வழிநடத்தலில் மணி தலையெடுக்கும் வரை இந்தத் தொழிற்சாலையை நிர்வகித்து விட்டால் போதும் .பிறகு ....?பிறகு என்ன? எதுவுமே தான் இல்லையே. அம்மாவின் கண்களில்தான் எத்தனை சந்தோஷம்.மாமா அத்தை என்று உருகுகிறார். அவர்கள் மட்டும் குறைவா என்ன கமலம்மா கமலம்மா என்று ஒரே அன்பு மழைதான்.அந்தக் கடவுளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும் ஏய் நிலாவே நீ கடவுளிடம் என் நன்றியை சொல்லி விடுவாயா . மானசீகமாக நிலாவுடன் பேசிக்கொண்டிருந்தவள் காலடி சப்தம் கேட்டு திரும்பினாள். சில நொடி உறைந்தவள் மறுபடியும் நிலவை வெறிக்க ஆரம்பித்தாள்.
இவன் ஏன் இங்கே வந்தான். கூடத்தில் இவனது பார்வையை தாங்க முடியாமல் தானே தனிமையில் இங்கே இருக்கிறேன். இங்கும் வந்துவிட்டான்.அவனுக்கு முதுகுகாட்டி நின்றாள்.
சில நிமிடம் எதுவும் பேசாமல் அவனும் நின்றான் பிறகு மெளனத்தைக் கலைத்தான்.
"மாதவி "
"......."
"உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்"
"......."
"என் மேல் கோவமா?"
"......"
கோபம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்! ம் ......ஹம். எல்லாம் நன்றாகவே முடிந்தது.இந்தா உன் அம்மா என்னிடம் கொடுத்து அனுப்பினார்கள்"
"பிரித்துப் பார் -------"
வேறு வழியில்லாமல் இயந்திரமாய்ப் பிரித்தவள் அதில் பல ஆண்மகன்களின் புகைப்படத்தைப் பார்க்கவும் துணுக்குற்றாள்.
"என்ன இதெல்லாம்!! "
உன் அம்மா உனக்கு திருமணம் செய்ய விரும்பி தரகரிடம் இருந்து வந்த போட்டோக்கள்."
"வாட் நான்ஸென்ஸ்"
"ஏன் இதில் தப்பென்ன.உனக்கு அதற்கான வயது வந்துவிட்டது தானே. இல்லை உன் மனதில்..... யாரும் "
உண்மையை கண்டு விடுவானோ என்ற எரிச்சலில் "அதை உங்களிடம் கூற வேண்டும் என்று எதுவும் இல்லை.அம்மாவிடம் பேசிக்கொள்கிறேன். உங்கள் வேலை முடிந்துவிட்டது. அவனை அனுப்பவும் வழி தேடினாள்.
"என்ன அவசரம் மாதவி இப்படி உட்கார் உன்னிடம் பேசவேண்டும்" உரிமையாய் அவள் கைபற்றி அமர வைத்தான்
கைகளை அவசரமாய் உருவிக் கொண்டு அமர்ந்தாள்.
என்ன சீக்கிரம் சொல்லுங்கள்" அவன் கண்களை பார்க்க முடியாமல் வானத்தை வெறித்தாள்
" இதை உன்னிடம் முன்பே சொல்லி இருக்கணும். தவறு செய்துவிட்டேன். ஆனால் இப்போதும் சொல்லாமல் விட்டால் பிறகு சொல்லவே முடியாது என்பது மட்டும் உறுதி. உன்னை நான் வார்த்தைகளால் மிகவும் புண்படுத்தியிருக்கிறேன். அப்போதெல்லாம் உனக்கு எவ்வளவு வலித்ததோ, அதை விட அதிகம் எனக்கு வலித்தது. உடல் சுகவீனத்துக்கும் கசப்பு மருந்து என்று நினைத்து அமைதியடைவேன். உன் கலங்கிய விழிகள் என் தூக்கத்தை கலைத்தன. "
"ஏன், நான் அழுதால் உங்களுக்கென்ன.? அழ வேண்டுமென்று வார்த்தைகளால் குத்திக் கிழித்தீர்கள். யாருக்கு சுகவீனமாக இருந்தால் உங்களுக்கென்ன, நான் உங்களிடம் மருந்து கேட்டேனா?"
"ம்.......இல்லை தான் உன் அழுகை .....உயிர்க்கொல்லி அது இங்கே கவனி மாதவி. முதன்முதலில் நாம் சந்தித்தபோதே என் மனம் உன் புறம் சாயத்தொடங்கியது? மனதில் உன்னை பல முறை பாயசம் என்றழைத்து எனக்கு நானே சிரித்திருக்கிறேன்.அதன் பிறகு எப்போது பாயாசத்தைப் பார்த்தாலும் உன் நினைவு வராமல் இருந்ததில்லை. மனதின் முழுமையும் நீ இருந்தாய். அதனால் தான் அப்பாவின் உடல்நிலையை சாக்கிட்டு நான் அலுவலகம் வந்தேன். எழுபத்தைந்து சதவீதம் காரணம் நீதான்"
"ம் - - - - - - இந்தக் கதையை கேட்க நான் ஒன்றும் காதில் பூ வைக்கவில்லை"
ஏன் மாதவி என்னை நம்பவில்லையா நீ" தழைவாக கேட்டான்
நம்புவதற்கென்ன விரும்பியவர் தான் தாஜுக்கு அழைத்தீர்களாக்கும் "வெடுக்கென கேட்டு விட்டாள்.
"....."
"என்ன பதில் இல்லையா?"
"அது...வந்து ------ உனக்கு விளங்குகிறதா இல்லையா என்று புரியவில்லை மாதவி நேற்று வரை வாடகை வீட்டில் இருந்த நீ, சொந்த வீட்டிற்கு வந்ததும் தொழிற்சாலை கிடைத்தற்கும் மூலகாரணம் என் பேச்சுதானே!"
"ஹீம் - - - - - - - பணம் ...... யாருக்கு வேண்டும் இந்த பணம். மனம் ...என் மனம் வலிக்கிறது சத்யன்----- இதோ இங்கே உயிர் போகும் வலி உங்களுக்குப் புரியாது" நெஞ்சில் கைவைத்து அழுதாள்.
"மாதவி ப்ஸீஸ்"
"....."
தவறு தான் நான் பேசியது தவறு தான் "
" அதை இப்போது சொல்லி ஒரு பயனும் இல்லை சத்யன். இப்போது நான் குற்றவாளி இல்லை. என் அம்மா தக்க ஆதாரத்துடன் என்னை விடுவித்து விட்டார்கள் “
ஏன் பயன் இல்லை"
"என்னை எனக்காக விரும்புவவர் தான் வேண்டும் சத்யன் என் பூர்வீகத்தை அல்ல"
புரிந்து தான் பேசுகிறாயா மாதவி, திருமணம் என்பது நம் கலாச்சாரத்தில் இரு குடும்பங்களின் இணைப்பு தானே"
"அது சரிதான். அப்போ நான் உண்மையாகவே வேசியின் மகளாகவே இருந்தேன் என்று வையுங்கள். அப்போது உங்களின் முடிவு என்னவோ? தாஜில் ஒரு ஏசி ரூம்தானே?" சுட்டெரிக்கும் பார்வை ஒன்றை வீசினாள்.
"அய்யோ, மாதவி கொல்லாதே" உடல் கூசியது சத்யனுக்கு
" இங்கே பாருங்கள் சத்யன் என்னை எனக்காக நேசிக்கும் துணைதான் வேண்டும். நீங்கள் என்னை நேசிக்கவில்லையே என் குடும்ப பின்புலத்தைத்தானே பார்த்தீர்கள்"
இல்லை நீ கூறுவது பொய். நான் உண்மையைத் தெரிந்து கொள்ள முயன்றது என் தந்தையிடம் அதை எப்படிச் சொன்னால் அவர் ஏற்கும்படி இருக்கும் என்று தான். ஆனால் .......இது எல்லாம் இதுவெல்லாம் நாம் இருவரும் பரசுராமன் தம்பதியை சந்தித்து முடித்து வரும் வரை தான். அப்போது என் தோளில் சாய்ந்து அழுதாய் பார்.....நினைக்கையில் இப்போதும் உடல் நடுங்குகிறது. உன் வார்த்தைகள் நெஞ்சை ரணமாக்கியது. " இன்னும் நான் வேசியாகவில்லை" எப்படி உன்னால் பேச முடிந்தது. துடிதுடித்துவிட்டேன்.அன்றிரவே என் தந்தையிடம் பேசி நம் திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட்டேன். வேண்டுமானால் அவரிடம் கேட்டுப்பார் உன்னை உனக்காகவே விரும்புகிறேன் மாதவி. தயவு செய்து என்னை புரிந்து கொள்"
சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது. மாதவியே அந்த மெளனத்தை கலைத்தாள்.
இல்லை சத்யன். நமக்குள் சரிவராது. இத்தனை நடந்த பிறகு உள்ளம் ஒட்டவில்லை. விட்டு விடுங்கள்"
"என்ன பைத்தியக்காரத்தனம்?பித்து பிடித்துவிட்டதா உனக்கு ?" அவள் தோளைப் பிடித்து உலுக்கினான்.
இறுக மூடிய கண்களிலிருந்து நீர் கசிந்தது.
மாதவி நான் சொல்வதை கொஞ்சம் கேட்கமாட்டாயா?" கெஞ்சலாக வந்தது குரல்,
"எதை சொல்லப் போகிறீர்கள்? இந்த ஆறு மாத காலமாக என் மனம்பட்ட பாட்டிற்கு நீங்கள் சொல்வது எதுவும் பதிலாகாது"
"மாதவி....."
"ஐய்யோ நீங்கள் இப்படி கூப்பிடும்போதெல்லாம் என் பெயர்க்காரணம் பற்றி நீங்கள் கூறிய விளக்கம் தான் காதுகளில் ஒலிக்கிறது. இரு செவிகளையும் கைகளால் அழுந்த பற்றிக்கொண்டாள்
"சரி மாதவி என்று விளிக்காமல் ஏதேனும் செல்லப் பெயர் சூட்டிக் கொள்வோம். நான் விரும்பி கூப்பிடும் பாயசம் உனக்கு ஒகே தானே" சூழ்நிலையை சகஜமாக்க நகைச்சுவையைச் சேர்த்தான்.
இதனால் நிலைமை சகஜமாவதற்கு பதிலாக மோசமாகிவிட்டது.
"என் மனதின் வலி உங்களுக்கு கிண்டலாக இருக்கிறதோ? வேண்டாம் இந்த வலி என் மனதின் வேதனையின் பொருள் உங்களுக்கு சிறிதளவு புரியவும் வாய்ப்பில்லை. உங்களுக்குப் புரியவில்லையே என்கின்ற வலி என்னை மேலும் கொல்கிறது" காதுகளை மூடி இருந்தவள் இப்போது கண்களை இறுக்கமாக மூடி தன் வலியையும் துக்கத்தையும் விழுங்கினாள்.
அவளை சில வினாடி உற்றுப் பார்த்தவன் அவளை நெருங்கினான் காதுகளை மூடியிருந்த அவனது கைகளை விலக்கினான்.அவளோ கண்களை திறக்கவேயில்லை.
“உன் வலியின் பொருள் தெரியவில்லை தான். ஆனால் அதைப் போக்கும் மருந்து தெரியும்" என்று அவள் காதினுள் கிசுக்கப்பாய் கூறியவன்.அவளை நெஞ்சோடு சேர்த்து அனைத்துக் கொண்டான்.
பல வினாடிகள் நீடித்திருந்த அந்த அணைப்பில் மாதவி பலதும் புரிந்துகொண்டாள்.அவளின் வலிக்கு காரணமானவனே மருந்தாகவும் இருக்கிறான்.அவன் இல்லாமல் அவள் இல்லை. இந்த ஆறுதல், நிம்மதி எல்லாம் இவன் ஒருவனால் தான் தர முடியும். வேறு ஒருவனை அவனிடத்தில் வைத்துப் பார்க்கவும் மனம் கூசியது.
சுய உணர்விற்கு வந்தவன் சத்யனே.
"என்ன கண்மணி மருந்து வேலை செய்ததா" அணைப்பை விடாமலே அவன் குறும்பு பேச்சில் முகம் சிவந்தள் பதில் கூறும் சக்தியின்றி அமைதி காத்தாள்
"ஐய்யோ அதிக டோஸ் ஒன்றும் கொடுத்து விடவில்லையே" என்று பதறுவது போல பாவனை செய்து அவளின் தோள் பற்றி விலக்கி நிறுத்தினான்
இதழோரம் வெட்கச்சிரிப்புடன் செம்மையாக நிற்கும் மாதவியை பார்க்கப் பார்க்க மனம் எங்கோ சென்றது.
சட்டென்று அவளை விட்டு இரண்டடி பின்னோக்கி வைத்தான்.
புரியாமல் தலை உயர்த்தி சத்யனை ஏறிட்டாள்
"ரொம்ப கஷ்டம் மாதவி இப்படி அழகே உருவாய் உன்னைப் பார்க்கும் போது எனக்கு ஏதோ செய்கிறது. இதற்கு மேல் தொடுகை நீடித்தால் எல்லைமீறி விடுவேனோ என்று பயம் வந்துவிட்டது. பிறகு என் அம்மா என்னை சிரமப்பட்டு மெருகேற்றியது வீணாய்ப் போய்விடும். உன்னை அணைக்கும் பொழுதெல்லாம் தோன்றுவது தான் இருப்பினும் அப்போது இல்லாத ஒரு வெறுப்பை நானே மனதில் உருவாக்கிக் கொண்டு கட்டுப்படுத்திக் கொண்டேன்.
ஆனால் இப்போதோ தடையேதும் இல்லையே என் மூளையின் பேச்சை உடம்பு கேட்க மாட்டேன் என்கிறது. அதனால் நான் இரண்டடி பின்னே நிற்பதே நலம்" நீளமாக பேசி முடித்தான் சத்யன்.
ஆச்சர்யக் கடலில் மூழ்கினால் மாதவி
இத்தனை கட்டுப்பாடானவரா சத்யன்? அவரையும் தான் என்னவெல்லாம் தவறாக எண்ணி விட்டாள். ஏதேதோ நினைத்து மனம் குமுறி அழுதாளே. பேருந்தில் அவர்களின் முதல் அணைப்பில் அவன் கண்களில் அவள் கண்ட காதல் பொய்க்கவில்லைதான். இந்த நினைப்பே மனதை குளிர்வித்தது.
மாதவியின் மனதை அவள் கண்களின் வழி படித்த சத்யன்.
"என்ன கண்மணி, நீ என்னைப் பற்றி நினைத்ததெல்லாம் தவறு என்று உணர்ந்து விட்டாய்தானே. அதேபோல தான் நானும் உன்னைப் பற்றி தவறாக நினைத்ததை தவறென்று அறிந்துகொண்டேன்.
“எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு “
என்று வள்ளுவர் ஒன்றும் பொழுது போகாமல் எழுதி வைக்கவில்லை உண்மையை அறிந்தால் தான் உன்னுடனான என் வாழ்வு இனிக்கும் என்று நினைத்தேன் அதனால் தான் உன்னிடம் கூட கடுமையாக நடக்கும் சூழ்நிலை உருவானது உன்னை என்றெல்லாம் காயப்படுத்துகிறேனோ அன்றெல்லாம் நானும் தவிப்பேன்.
ஆனால் அன்று உன் தாத்தா பாட்டியை பார்த்து விட்டு திரும்பும் போது நீ என் தோளில் சாய்ந்து அழுதாய் பார். அதைத்தொடர்ந்து உன் தீ போன்ற வார்த்தைகள் உன் உயிரையே எடுத்து விட்டன. அப்பொழுதே முடிவு செய்துவிட்டேன். உன் குலம் எப்படிப்பட்டதாக இருப்பினும் கவலையில்லை. நான் உன் மீது வைத்த காதல் உண்மை. அதனால் உன்னை எந்தச் சூழலிலும் இழந்து விட கூடாது என்று. அன்றே என் தந்தையிடமும் என் மனம்திறந்து பேசிவிட்டேன்.அவரின் சம்மதமும் கிடைத்துவிட்டது. அப்பா, அம்மாவிடம் பேசிவிட்டார்.
இன்று இருவரும் இத்தனை தூரம் வந்ததும் நம் திருமணம் பற்றி உன் அம்மாவிடம் பேசவே ,நான் தான் உன் கண்கள் என்றோ சொன்ன வார்த்தையை இன்று உன் வாய்வழி கேட்டு விட்டு தான் உன் அம்மாவிடம் பேச அனுமதி கொடுப்பேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டேன். இப்பொழுது சொல். நான் என் பெற்றோரை உன் தாயிடம் பேசச் சொல்ல வா வேண்டாமா?"
அவன் பேசப் பேச அவள் மனம் அவன் காலடியில் சுருண்டுவிட்டது. எத்தனை யோசித்திருக்கிறான். எனக்காக தன் தந்தையிடம் பேசி அனுமதி பெற்றிருக்கிறான்.
" இப்படி நேசிப்பு என்று உளறுபவர் தான் அன்று மனதில் அத்தனை காதலை வைத்துக் நான் காத்திருந்த போது அதைத் தவறாக உபயோகிக்க விரும்பினீர்களோ?"
"யார் நானா? உன் மனைதத் தொட்டுசொல் மாதவி. என் அணைப்பில் உன்னை பெண்டாளும் தன்மை என்றேனும் இருந்ததா?"
இல்லை தான் எப்போதும் அவன் அணைப்பு ஒரு பூவை அணைப்பது போல மென்மையாகத்தான் இருக்கும். ஆஹா அதுவல்லவோ சொர்க்கம். ஆனால் முகம் அமைதி நிலவியது அங்கே.
"ம், சொல் மாதவி நான் நினைத்திருந்தால் உன்னை விரும்புகிறேன் என்று கூறி ஏதேதோ செய்திருக்கலாம். என் எண்ணம் அதுவல்ல.. என் முகத்தை அப்படி இறுக்கமாக வைத்துக்கொள்ள எவ்வளவு சிரமப்பட்டேன் என்று எனக்கு தான் தெரியும். அதுவும் உன் துடிக்கும் இதழ்களை பார்க்கையில் நரகம் அது. என் சுய விளக்கம் போதுமா அல்லது இன்னும் ஏதேனும் சந்தேகமா, இப்போதே கேட்டு விடு"
"இங்கே பார் மாதவி இன்னும் உன் மனதில் உள்ள ஐயம் போகவில்லை என்று புரிகிறது. உன்னை அடைவது மட்டும்தான் என் குறிக்கோள் என்றால் நாம் இருவரும் தனித்திருந்த தருணம் நிறையவே இருந்தது. அதோடு என் பலத்தை உபயோகப்படுத்தியிருந்தால்....
ஆனால் எனக்குத் தேவை உன் இதயத்தில் ஓர் இடம் மட்டுமே கொடுப்பாயா?" முகத்தில் கெஞ்சும் பாவனையை பார்த்த மாதவிக்கு அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை.அவன் நெஞ்சில் புதைந்தாள்.
குறும்பாக சிரித்த சத்யன் அவளின் தலைநிமிர்த்தி கண்களுள் ஊடுருவினான் "இந்தச் செயல்முறை விளக்கங்களிலெல்லாம் நான் சம்மதம் என்று ஏற்றுக் கொள்ள மாட்டேன். வாய்மொழி வார்த்தையே வேண்டும்" பிடிவாதம் பிடித்தான்.
சிவந்த செவ்விதழ்களைத் திறந்த மாதவி,
"திருமதி மாதவி சத்யன் ஆவதை என் ஜென்ம பாக்கியமாக கருதுகிறேன்" கூறியவள் தலைகவிழ்ந்தாள்.
அவளின் வார்த்தைகள்.அவனை சந்தோஷத்தில் திளைக்கச் செய்தது.
" இப்படி பட்ட வார்த்தையை கூறிய உன் இதழ்களுக்கு நல்லதோர் அன்பளிப்பை கொடுக்காவிட்டால் அவை எனக்கு சாபம் கொடுக்கவும் வாய்ப்புண்டு. அதற்கு ஆளாகாமல் இருக்கவே..."என்றவன் அவளின் சிவந்த இதழ்களில் இதழ் பதித்தான். சில வினாடிகளில் அவளை விடுவித்தவன்.
"உனக்காக ஒரு பரிசுகொண்டு வந்திருக்கிறேன் மாதவி "
"என்ன?"
பாக்கெட்டிலிருந்து ஒரு மல்லிகை சரத்தை எடுத்தான்.
" என்ன இது ?"
"மல்லிகை. இது கூடவா தெரியாது.? எல்லாம் ஒரு முன்பதிவுதான் "
"என்ன?" புரியாமல் விழித்தாள்.
"யாரோ பூ செண்டிமென்ட் என்று உளறியதாக ஞாபகம்"
முகம் குங்குமமாய் சிவந்தது மாதவிக்கு நினைவில் வைத்திருக்கிறான்.
"கையில் கொடுக்க வா, இல்லை. -----"அவள் கூந்தலை ஏக்கமாய் பார்த்தான்
கண்கள் மின்ன அவசரமாய் அவனுக்கு முதுகு காட்டி அனுமதித்தாள். அவள் கூந்தலில் அந்த மல்லிச்சரம் சிரித்தது.
இனி அவர்கள் வாழ்வில் மலர் மாலை, மலர் கட்டில், மலர் தொட்டில் என்று ஒரே மலர் மழைதான்
அன்புடன்​
 

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom