- Messages
- 79
- Reaction score
- 61
- Points
- 18
மல்லிச்சரம் - 11
மாதவி வழி சொல்லச் சொல்ல வண்டி ஓட்டிய சத்யன். அவள் கடைசியாக திரும்பச் சொன்ன சந்தில் லேசாக விழி விரித்தான். " இந்தச் சந்திலா உன் வீடு ?" சுற்றும் முற்றும் உள்ள சின்ன சின்ன வீடுகளை பார்த்தான்.
"ஆமாம் ஏன் கேட்கிறீர்கள்?"
ஏதோ யோசித்தவன் " ம் .....ஒன்றும் இல்லை " என்று கூறி விட்டான். அவள் கூறிய கேட்டை ஒட்டி ரோட்டில் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினான் சத்யன்.
"பரவாயில்லை சார். அதான் வீடு வரை கொண்டு வந்து விட்டீர்களே, அதுவே போதும் தாங்க்ஸ் சார். நான் கிளம்பறேன் அவனை உள்ளே வர வேண்டாம் என்று சொல்லாமல் சொன்னாள்.
ஆனால் அவள் கூறியதை அவன் காதில் வாங்கவே இல்லை . கார் சாவியை பாக்கெட்டில் வைத்தபடி கேட்டைத் திறந்து அவளுக்கு வழி காட்டினான்.
பேந்த பேந்த விழித்தபடி முன்னே நடந்து சென்றாள்.
பல போர்ஷன்கள் உள்ள கட்டிடம் .அதில் கடைசியாய் உள்ள கதவை லேசாக தட்டி விட்டு காத்திருந்தாள்.கதவைத் திறந்தவளை உற்று நோக்கினான் சத்யன்.ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி தான்.ஆனால் அதிக முதிர்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது. வெற்று நெற்றியும் சாயம் போன காட்டன் புடவையும் அள்ளி முடிந்த கொண்டையுமாக நின்றாள். குங்குமம் இல்லாமல் போனாலும் அந்த அமைதியான முகம் கை எடுத்து கும்பிடத் தூண்டும் விதமாகவே இருந்தது.
மகளை அந்த நேரத்தில் எதிர்பார்க்காததாலோ என்னவோ அவள் முகத்தில் பதற்றம் அப்பட்டமாக தெரிந்தது.
" என்ன ஆயிற்று மாதவி.இந்த வேளையில் வந்து நிற்கிறாய் உடம்புக்கு ஏதேனும்... காலையில் நன்றாகத் தானே இருந்தாய்" மகளை ஏற இறங்க பார்த்து வாக்கியங்கள் துண்டு துண்டாக வந்தது.
"நீங்கள் பயப்படும் படி ஒன்றுமில்லை அம்மா " என்ற சத்யனின் குரல் கேட்டு திரும்பியவள், அப்போது தான் அவனை முழுதாகப் பார்த்தாள்.
"நீங்கள் ... !" என்று இழுத்தாள் கமலம்.
ஏதோ கூற வந்த மாதவியை விழிகளால் தடுத்து விட்டு அவனே தொடர்ந்தான்.
" உள்ளே சென்று பேசுவோம் அம்மா. உங்கள் மகளின் அடிபட்ட கால்கள் வலிக்குமே "
"காலில் அடியா?மதும்மா என்னடா ஆச்சு. சரி உள்ளே வா பார்ப்போம் " பதட்டமும் குழப்பமுமாக உள்ளே அவளை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றாள்.
" நீங்களும் உள்ளே வாங்க சார்" சத்யனைப் பார்த்து கூறினாள் கமலம்.,
ஏனோ மாதவிக்குத் தான் இது சுத்தமாக பிடிக்கவில்லை . முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
அம்மாவாம் அம்மா இதே அம்மாவைப் பற்றி அவளிடமே எப்படியெல்லாம் கூறி இருக்கிறான். முன் ஒன்றும் புறம் ஒன்றுமாக பேச்சை மாற்ற இந்தப் பணக்காரர்கள் தனி கோர்ஸ் படித்திருப்பார்கள் போல் இருக்கும் இருக்கும் கோயம்புத்தூருக்கு போகும் முன் சென்னை வந்த பின் என்று இவளிடமே நடித்தவன் தானேஅவன். அந்தப் பயிற்சியில் கோல்டு மெடல் வாங்கி இருப்பான் போல. சட்டென வலி தாங்க முடியாமல் "ஆ" என்று கத்தியபடி நினைவிற்கு வந்தாள். அம்மா அவளது காலை தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள்
"ரொம்ப அடியாமா ?"
"அதெல்லாம் ஒன்றுமில்லைஅம்மா லேசான சுளுக்கு ஒரு நாள் ஓய்வெடுத்தால் சரியாகி விடும்"என்றவள். சத்யனை பார்த்தாள் அவள் பார்வையைத் தொடர்ந்த கமலம்.
"அ .. ஐய்யோ சார் உங்களை மறந்து விட்டேன். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள். காப்பியா அல்லது லெமன் ஜுசா?"
"முதலில் என்னை சார் என்று அழைப்பதை நிறுத்தினால் நலம். உங்களை விடவும் ரொம்ப சின்ன வயசு தான் எனக்கு .என்னை சத்யன் என்றே அழையுங்கள்."
" ஐய்யோ அது எப்படி அழைக்க முடியும். வேண்டுமானால் தம்பி என்று அழைக்க வா"
லேசாக சிரித்தவன் " உங்கள் விருப்பம்".
"சரி சொல்லுங்க தம்பி காப்பியா, ஜூசா ?"
"விட மாட்டீங்களே சரி அதுவும் உங்கள் விருப்பம் தான் ".
கமலம் சமையல் கட்டை நோக்கி நடந்தாள். மாதவியைப் பார்த்த சத்யனுக்கு சிரிப்பு தான். வந்தது. முகத்தை கடுகடுவென வைத்திருந்தாள். இவளுடன் பேசுவது வீண் விவாதமாக முடியும் என்றுணர்ந்தவன் வீட்டைச்சுற்றி தன் கண்களை பதித்தான்.
சின்ன வீடு தான் என்றாலும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வந்தது. வீட்டில் சுண்ணாம்பு மட்டும் அடித்து பல வருடங்கள் இருக்கும் என்று யூகித்தான் சத்யன். மற்றபடி குறை சொல்ல எதுவும் இல்லை.பழைய திரைச்சீலைகள் என்றாலும் தேய்த்து நேர்த்தியாகத்தான் இருந்தது. அந்த ஹாலை ஒட்டி ஒரு கதவு மூடப்பட்டிருந்தது. அது தான் படுக்கை அறை போலும் என்று நினைத்தான். ஷோகேஸில் சில படங்கள் வரிசை படுத்தப்பட்டிருந்தன . மாதவி சிறு வயதில் பரிசு வாங்கிய போது எடுத்த சில படங்கள் அவளின் ஜாடையிலேயே ஒரு பையன். தம்பியாக இருக்கும். அவனின் சில படங்கள் அப்புறம்.. ஆ..ங்.. இந்தப்படம் ..... அவர்களே தான் ... அவர்களே தான் மனம் ஒரு வினாடிக்குள் எங்கெங்கோ சென்று விட்டது. இந்த மனதிற்கு மட்டும் தான் கண் இமைக்கும் நேரத்தில் உலகையே சுற்றி வரும் ஆற்றல் இருக்கிறது. இதற்கு பாஸ்போர்ட், விசா, கஸ்டம்ஸ், இமிக்ரேஷன் என்று எதுவும் வேண்டியது இல்லை ஏன் மணி எக்சேஞ் கூட வேண்டியது இல்லை. அதன் விருப்பத்திற்கு ஊரைச் சுற்றும் நட்ட நடுநிசியானாலும் சரி சுட்டெரிக்கும் வெயிலானாலும் சரி அதை கட்டுப்படுத்த முடியாமல் தான் உலகில் பாதிப் பிரச்சனைகள் கிளம்புகின்றன.
"தம்பி ஜூஸ் " என்ற கமலத்தின் குரல் அவனை நினைவுக்கு கொணர்ந்தது . தன் தேவையில்லாத எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஜூஸை கையில் எடுத்தான்.
"எங்கே மது விழுந்தாய் "மகளின் அருகில் அமர்ந்து விசாரித்தாள்.
"ஆபீஸ் படிக்கட்டில் அம்மா"
"கவனம் எங்கோ இருக்க நடந்தால் அப்படித்தான் மது"
"அம்மா !"
" ஏன் தம்பி ஆபீசில் அதிக வேலையோ?கடந்த ஒரு மாதமாக நானும் கவனிக்கிறேன் சரியாக சாப்பிடுவதில்லை தூங்குவதில்லை தன் தம்பியோடு சண்டை கூட போடுவதில்லை. அமைதியின் மறுஉறுவாகி விட்டாள் "
"அம்மா" என்று அடிக்குரலில் சீரிய மாதவியை பொருட்படுத்தவே இல்லை கமலம்.
“எந்நேரமும் ஏதோ யோசனை. இரவில் பேய்க்குக் காவல் இருப்பது போல் கொட்ட கொட்டென்று விழித்துக் கொண்டிருக்கிறாள். நேற்று தோசைக் கல்லை அடுப்பில் வை மது என்றால் பால்பாத்திரத்தை வைத்து விட்டு நிற்கிறாள். கேட்டால் நான் பாலை தான் அடுப்பில் ஏற்றச் சொன்னேன் என்று வாதம் வேறு "
"அம்மா ..போதும் """" என்று உறக்கவே கத்தி விட்டாள் மாதவி.
இப்போது இடை புகுந்தான் சத்யன்
" ஆமாம் அம்மா எங்கள் ஆபிஸ்ல ஒரு புதுவேலை அதற்கு அடி மட்டத்திலிருந்து பலதும் யோசிக்க வேண்டும். நானும் ஒரு மாத காலமாக இப்படித்தான் இருக்கிறேன். என் பி.ஏ. பாருங்கள் அது தான் அவள் பங்கிற்கு மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்கிறாள். அவ்வளவே எல்லாம் இந்தப் புது புராஜெக்ட் ஒருமுடிவுக்கு வந்தால் சரியாகி விடும். எனக்கு லேட் ஆகிறது அம்மா நான் கிளம்புகிறேன். ஆ ....ங் மாதவி இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொள். நன்றாக ரெஸ்ட் எடுத்து விட்டு வந்தால் போதும் வரட்டுமா ?" இரு கைகளையும் கூப்பி கமலத்திடம் விடைபெற்றுக் கிளம்பினான் சத்யன்.
அலுவலகம் வந்த சத்யனுக்கு வேலை ஓடவில்லை .ஏன் மாதவி இப்படி ஒரு வாடகை வீட்டில் இருக்கவேண்டும்? அவன் கேள்விப்பட்டது உண்மை என்றால், அவள் பொழுதுபோக்கிற்காக மட்டுமே வேலை செய்கிறாள் என்றே நினைத்தான்.. ஒருவேளை எல்லா சொத்தையும் அந்த அம்மாள் விற்று வீண் செலவு செய்துவிட்டாளோ, ச்சே.. இருக்காது?அவர்களைப் பார்த்தால் சாந்தத்தின் மறு உருவாய் தெய்வீகக் களையாய் மனத்திற்கு நிம்மதி தரும் முகமாய் அல்லவா இருக்கிறது.இவர்களையா அப்படி விமர்சித்தார்கள் அல்லது என் காதில் தான் பெரிதாக கோளாறு இருக்கிறதா.கடவுளே நான் என்ன செய்வேன்.
போதுமான விளக்கங்கள் இல்லாமல் என் வாழ்வைப் பற்றி என்னால் ஒரு படி கூட ஏற முடியவில்லை. இதில் ஏன் இத்தனை குழப்பம் பேசாமல் மாதவியிடம் நான் கேள்விப்பட்ட அனைத்தையும் கூறிவிட்டு அவள் தரப்பு நியாயத்தை கேட்கலாமா ? ம் ....அவள் எப்படி நம்புவாள் நேராக கோவைக்கே கூட்டிப் போய் நேரிலேயே எல்லாவற்றையும் நிருபித்து விட்டால் ?என்னுடன் கோவை வரை தனியாக வருவாளா? இப்படி ஏகப்பட்ட குழப்பத்தில் வெந்து போனான் அப்போது தான் அதற்கு வடிகாலாக வந்தாள் சோனா.அவள் கைகளில் அடுக்கடுக்காய் பத்திரிக்கைகள்.
"குட் மார்னிங் சார்...."
குட்மார்னிங் சோனா என்ன விஷேசமா ..." கைகளில் இருந்த பத்திரிக்கையைப் பார்த்தான்.
“ஆமாம் சார்" எனக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது. அடுத்த மாதம் மூன்றாம் தேதி திருமணம்.முதல் பத்திரிகை உங்களுக்குத் தான், கண்டிப்பாக வரணும்"
" ஓ ..... கண்டிப்பா "அவள் நீட்டிய பத்திரிக்கையை வாங்கி பிரித்து படிக்கலானான் .
" ஓ... மாப்பிள்ளை ஐடியில் இருக்காரா ... கல்யாணம் கோவை பக்கம் ?"
"ஆமாம் சார் எங்கள் ஆச்சி அங்கே உள்ள பூர்வீக வீட்டில் தான் செய்யணும் என்று ஒரே பிடிவாதம். அதான் வேற வழியில்லாமல் அங்கு வைத்தோம். தூரம் என்று எண்ணி வராமல் இருந்து விடாதீர்கள் சார்"
"நோ... நோ ....கண்டிப்பாக வருவேன் சோனா. எனிவே ஆல் த பெஸ்ட்," என்று அவளை வழியனுப்பினான் .
இந்தத் திருமணத்திற்கு நிச்சயம் மாதவி வருவாள்.அப்போது அவளிடம் எப்படியாவது பேசி அவளை இன்பம் முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்த கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு ஒரு சுபம் போட வேண்டும். கற்பனையில் மிதந்தவன் " என் இனிய பாயசமே " மனதுக்குள் அவளை ரகசியமாய்கொஞ்சினான் .
அதே சமயம் மாதவியின் மனம் உலைக்களம் போல் வெந்து கொண்டிருந்தது. சத்யனின் மனதில் என்ன தான் இருக்கிறது. முதலில் என்னை துரத்தி வந்து மையல் கொண்டவன் பிறகு பாராமுகமாகி விட்டான். அதற்கு கேட்கவே கூசுகிற காரணத்தை வேறு கூறினான். இதோ இன்று அதீத அக்கரையுடன் கவனித்துக் கொண்டான். அம்மாவை அவன் பார்த்த பார்வையில் மதிப்பு தான் தெரிந்தது. வேறு எந்த உதாசீனமும் இல்லை . ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாகவே இருக்கிறது. நாயகனில் வருவது போல் இவன் நல்லவனா? கெட்டவனா ?என்றே தெரியவில்லை .
அம்மாவிடம் கேட்டு தெளிவடையலாம் என்று பார்த்தால் " கழுவும் மீனில் நழுவும் மீன் " போல் நழுவுகிறார்கள். எதுவும் முடிவாக கணிக்க முடியவில்லை . அதனால் சத்யனிடம் அடித்தும் பேசவும்முடியவில்லை .கடவுளே எனக்கு ஏன் இந்தச் சோதனை. மனதைவிட்டு போ போ என்றால் அவன் வந்து சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டான். அடிக்கடி அவன் தாஜிக்கு அழைத்ததை நினைவுப் படுத்திக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. அறிவு விருப்பத்திற்கு குதியாட்டம் போடுகிறது. பிறகு ஒரு நாள் உடைந்து சிதறி உதிரம். போகும் போது தான் அதன் வலி தெரியும். ஆனால் அவன் விடுப்பு எடுத்துக் கொள்ளச் சொன்ன இந்த இரண்டு நாட்கள் முடியவே மாட்டேன் என்கிறதே .
இது தான் அறிவியலில் நான் படித்த ரிலேடிவிட்டி தியரியோ ?அதை எத்தனை அழகாக எடுத்துக்காட்டி இருப்பார். ஒரு அழகான பெண்ணுடன் ஒரு ஆண் ஒரு மணி நேரம் கழித்தால் அது ஒரு வினாடி போல் இருக்கும் .ஆனால் அதுவே ஒரு நெருப்பின் மேல் அமர்ந்து இருந்தால் அதே ஒரு மணி நேரம் பல மணி நேரமாகத் தோன்றும் ஆக அவளது நிலையும் அது தானோ! சத்யனை பார்க்காத இந்த இரண்டு நாட்கள் பல யுகங்களாக அல்லவா தோன்றுகிறது. மனம் இன்னும் இன்னும் என்று என்னென்னவோ நினைத்து சட்டென்று தன் எண்ண ஓட்டத்தின் விபரீதத்தை உணர்ந்து தவித்துப் போன மாதவி இப்படிப்பட்ட எண்ணங்களுக்கு தீனி இட்டுக் கொண்டே இருந்தால் அவன் மீண்டும் தாஜுக்குக் கூப்பிட்டால் இவள் மறுக்க மாட்டாமல் போனாலும் போகலாம். இப்படி நினைக்கையில் அவள் முகம் வெளிறியது. சட்டென தன் நினைவுகள அழித்து கந்தசஷ்டி கவசம் பாடத் தொடங்கி விட்டாள்