Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

ரிஷியின் 'உயிரோடு கலந்தவள்'

Rishi 24

Member
Vannangal Writer
Team
Messages
54
Reaction score
33
Points
18
அத்தியாயம் 07 ❤️

காலை.....

உயிரற்ற கொடி போல் படுத்திருப்பவளை பார்ப்பதற்கே கஷ்டமாகத் தான் இருந்தது அவனுக்கும்...
நடந்த அனைத்தையும் இவளிடம் சொல்லியிருக்க வேண்டும் என மனம் உணர்த்த குற்ற உணர்ச்சியில் தவித்துப் போனான் ரிஷி.
நடந்தது அனைத்தையும் தன் செல்வாக்கினால் அறிந்து கொண்டவன் அன்னயாவை எங்கு தேடியும் கிடைக்காமல் போப அவள் கிடைக்கவில்லை என்பது இன்னும் யோசிக்க வைத்தாலும் அஷ்வினியின் உடல் நிலை கருதி பேசாமல் இருந்தான்..... அதுவும் அவள் குணமாகும் வரை மட்டுமே....
அவளில் லேசாக அசைவு தெரியவும் அவசரமாக அவள் அருகில் வந்தவன் அவள் கையைப்பற்ற அவள் கண்களை திறந்து கொண்டாள்.

தன் கையை பிடித்து இருக்கும் அவன் கைகளையும் அவனையும் மாறி மாறி பார்த்து விட்டு கையை உறுவ முயல அவன் பிடி இன்னும் இருகியது.அவள் மனநிலையை புரிந்து கொண்டவனாக பேச வாய் எடுக்க முன் அவள்

" மிஸ்டர் தேவமாறுதன் எனக்கு டிவோர்ஸ் வேணும்...."
(அங்கே நேற்று தேவ் போய் இன்று தேவமாறுதன் இடம்பெற்றிருந்தது.)

என அதிரடியாய் கேட்டவளை பார்த்து அதிர்ந்ததில் எழுந்தே விட்டான்.... ஆனால் அவள் நேர் பார்வையில் எந்த மாற்றமுமில்லை...

தன்னை சுதாகரித்து தன் கைகளை கட்டிக் கொண்டு அவளை தீர்க்கமாக பார்த்தபடி

"இதுதான் உன் முடிவா?"

என்ற அவன் கேள்வியில் அவள்தான் உள்ளுக்குள் நொறுங்கிப் போனாள்.இருந்தும் விடாமல்

" ஆமா " என்று விட்டு அமைதியாகி விட அவன் எதுவுமே பேசாமல் வெளியேறி விட்டான்.
அவன் சென்றவுடன் அவள் கண்களில் இருந்து இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது.

அவன் முடியாது என்றாலும் திரும்பவும் கேட்டிருப்பாள் தான்....ஆனால் அவனும் இதை அவளிடமிருந்து எதிர்பார்த்தது போன்று " இதுதான் உன் முடிவா?" என்று கேட்டு விட்டு போனது அவன் இன்னும் அவளை காதலிப்பதாகவே தோன்றியது.

அவன் வாழ்க்கை தான் விலகிப் போனால் சந்தோஷமாக இருக்கும் என்று மட்டுமே யோசித்தவள் தான் ஏன் அவனுக்காக யோசிக்கிறோம் என்பதை நினைக்க மறந்தாள்.இப்படியே யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு அவன் ஏதோ சொல்ல வந்தது ஞாபகம் வரவும் அவசரமாக எழுந்தவள் உடம்பில் முன்னைய தெம்பின்றி விழப் போக அவளை தாங்கியிருந்தான் ஆரவ்.
அவனை முறைத்து விட்டு மீண்டும் அமர்ந்தவளை புரியாது பார்த்து

"இப்போ எதுக்கு மொறக்கிற?" என்றான் வெடுக்கென.... அவனை கண்டு கொள்ளாமல் அமைதியாக இருக்கவும்

"அண்ணா எதுக்கு இப்போ கோவமா போறாங்க அஷ்வி...?" என்ற கேள்விக்கும் பதிலற்றுப் போக கடுப்பாகி விட்டான்.

"நேத்து நைட் அப்படி என்ன தாண்டி நடந்துது?" என்று கத்தி விட அவளும்

"ஆஹ்..... உன் அருமை அண்ணனோட வப்பாட்டி என்ன கடத்திட்டு போனா" என அவள் கோபத்தில் வார்த்தையை விட அடுத்த நொடி இடியென வந்து வந்து விழுந்தது ரிஷியின் அறை...
ஆரவ்விற்கு கூட என்ன வார்த்தை சொல்லிவிட்டாள் என கைகள் நடுங்கியது கோபத்தில்....
ரிஷியின் நிலையோ அதைவிட மோசம்... கண்ணெல்லாம் சிவந்து போய் கோபத்தை அடக்கமுடியாமல் அருகிலிருந்த தண்ணீர் கிளாஸை எடுத்து பொத்த அவன் வெப்பம் தாங்காமல் அதுவும் அவனுடைய கைகளில் சிதறி கையை பதம் பார்த்து இரத்தம் பீறிட்ட நேரம்... அவன் அறைந்ததிலிருந்து அதிர்ச்சியில் உறைந்திருந்தவள் அவன் கைகளில் இரத்தத்தை கண்டதும்

" ஐய்யோ ரத்தோம்... " என்றவாரே வர

"ஏய்...." என்ற அவனின் புதிய கர்ச்சனையில் நடுங்கிப் போனாள். இவனிடமிருந்து இப்படி ஒரு ஆக்ரோஷத்தை அவள் இதுவரை பார்த்ததே இல்லை...அதற்குள் ஆரவ் " அண்ணா..." என்று ஏதோ கூற போக அவனையும் தடுத்தவன் அவளை பார்த்து

" உன்கிட்ட இருந்து நான் இப்படி ஒரு வார்த்தய எதிர்பார்க்கலடி... நீ புரிஞ்சுக்குவன்னு நம்பினது தான் நான் செஞ்ச தப்பு.... அந்த நம்பிக்கை உடைஞ்சு போச்சு... இனிமேல் வராது......இப்படி நீ சொல்லிரக் கூடாதுன்னு தான் ஒனக்கு நான் புரிய வைக்க வந்தேன். ஆனா.. நீ என் மேல நம்பிக்கை வைக்காமல் பேசிட்ட.... எனக்கு உன் மேல.... உனக்கு என் மேல...நம்பிக்கை இல்லாத இந்த உறவு தேவ இல்ல..."
அவன் கோபமாக பேசி முடிக்க ஆரவ் தான் அதிகமாக அதிர்ந்து போனான்.இவளோ அவன் வார்த்தைகளில் கோபம் கொண்டு

" உங்களுக்கு மட்டும் என் மேல நம்பிக்கை இருந்துதா? நம்பிக்கை இல்லாததுனால தானே எதுவுமே சொல்லாம மறைச்சீங்க... உங்களுக்கு மட்டும் ஒரு நியாயம்... எனக்கு ஒரு நியாயமா? உங்க மேல நம்பிக்க...." இன்னும் என்னவெல்லாம் பேசி இருப்பாளோ அவளை தடுத்து

" நான் உன்கிட்ட பேசிட்டிருக்க வர்ல..." என்று விட்டு நகர ஆரவ் கால் வந்து பெல்கனிக்கு செல்ல வாசல்வரை சென்றவனை

" மிஸ்டர் தேவமாறுதன் " என்று அவனை அழைக்க கோபமாக திரும்பி

"இன்னும் என்னதாண்டி பிரச்சின..?" என கேட்கவும் கஷ்டப்பட்டு எழ

"ஏய் பாத்து... " என்று கூறிக்கொண்டே ஒரே எட்டில் அவளை பிடிக்க அதனை தட்டி விட்டவள்

"நா ரெத்தோம்னு உங்க கிட்ட வரும்போது நீங்க தடுத்தீங்கல்ல.... அப்போ நான் விழுகிறப்போவும் நீங்க பிடிக்க தேவையில்ல..." என்று அவள் பிடிவாதமாக நகர போக அவளை தன் கைகளில் ஏந்தியவன்

"திமிரும் பிடிவாதமும்..." என முனுமுனுக்க திமிரி கொண்டிருந்தவள் அவன் சொன்னதை கேட்டு

" உங்களுக்கு மட்டும் என்னவாம்... என்ன விட காரம் அதிகம் தான்..." என்று கோபப்பட்டாள்.

" இப்போ விடப் போறீங்களா இல்லையா?"

"உனக்கு எங்க போகணும்னு சொல்லு நானே விட்றேன்"

"ஒன்னும் தேவயில்ல... நான் கேக்கனும்னா நீங்க கைக்கு முதல்ல ஃபர்ஸ்ட் எய்ட் பண்ண விடனும்..."

என்று கேட்டு முறைத்தவளை இறக்கி விட்டவன் கப்பேர்டிலிருந்த ஃபர்ஸ்ட் எய்ட் கிட்டை எடுத்து வந்து அவளிடம் நீட்ட அவளும் எதுவும் பேசாமல் கட்டுப்போட்டுவிட்டு நிமிரவும் வெடுக்கென கையை எடுத்துவிட்டு எழுந்தவன்

"எங்க போகணும்னு சொல்லு..." என்றான் அவனும் பிடிவாதமாய்... அவள் தயங்கி நிற்க அவளை கொண்டு போய் பாத்ரூமிற்கு அருகில் நிறுத்தி விட்டு வெளியே நின்று கொண்டான். அவள் உள்ளே போய் வெளியே வரவும் மறுபடியும் தூக்கி கொண்டு போய் பெட்டில் சாயவைத்து அவன் எழுந்து

" நீ சொன்ன வார்த்தைக்கான தண்டனையை நீ அனுபவிச்சு தான் ஆகணும்..." என இறுகிய முகத்துடன் வெளியேறியவனை பார்த்து "இவன் தான் இவ்வளவு நேரம் அமைதியாக பேசியவனா?" என நினைக்கத் தோன்றியது அவளுக்கு....

விஷ்வாவிடம் இருந்து இரண்டு முறை கால் வந்து அடங்கியிருக்க மூன்றாம் முறை அதை அட்டெண்ட் செய்து காதில் வைக்க மறுமுனை

"ரிக்ஷி எனி ப்ராப்ளம்?"

"இ...இ..இல்ல சார்... ஒரு ப்ராப்ளமும் இல்ல..."

"இன்னிக்கு கோர்ட்டுக்கு வரலல்ல... அதான் கேட்டேன்"

" கொஞ்சம் தலைவலி சார்...அதான் லீவு.... ஒய் சார் எனி இன்பர்மேஷன்?"

"நத்திங் ரிக்ஷி பய்(bye)" என்று அவன் பேசி முடிக்க இவளும் " பய் சார்.. " என கட் பண்ணிவிட்டு நிமிர அவள் முன் முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் ஆரவ்....அவளும் அவனை முறைத்துவிட்டு முகத்தை திருப்ப

"ரொம்ப நல்லாருக்கு அஷ்வி..." என்றவனை பார்த்து கைகளை கட்டிக்கொண்டு

" தேங்க்ஸ் ஆரவ்" என திமிராக சொன்னவளை பார்த்தவனுக்கு இவளுக்கு என்ன தான் ஆகிவிட்டது என்று இருந்தது.இருந்தும் விடாமல்

" ஏண்டி இப்படி மாறிட்ட.. அதுவும் ஒரே நைட்டுகுள்ள அப்படி என்னதான் நடந்துது... அண்ணாவை ஏண்டி கஷ்டப் படுத்திட்டிருக்க... அப்படி என்ன மன்னிக்க முடியாத தப்பு பண்ணிட்டாருன்னு டிவோர்ஸுக்கு அப்ளை பண்ண சொல்லி இருக்க?"

என அடுக்கடுக்காக கேள்வி கேட்டவனை பார்த்து "ஹேஹ்... " என இகழ்ச்சி சிரிப்பொன்றை சிரித்தவள்

" நான் உன் அண்ணாவை கஷ்டப் படுத்துற மாதிரி தான் உனக்கு தெரியும்... ஏன்னா அவர் தானே உனக்கு முக்கியம்..." என்றவளின் கண்கள் கலங்க அதனை சமாளித்து

"இட்ஸ் ஓகே மிஸ்டர்.ஆரவ் உங்களுக்கு யாருக்குமே புரியவே வேண்டாம்.... நான் மாறிட்டேன்னே வெச்சிகோங்க..... ஆஹ்..... அப்புறம் என்ன கேட்ட.... அப்படி என்ன மன்னிக்க முடியாத தப்பான்னு கேட்டல்ல...?"என கேட்டுவிட்டு தன் மொபைலை எடுத்து அந்த போட்டோவை காட்ட அதிர்ச்சியில் உறைந்தவன் மெல்ல மெல்ல நேற்று என்ன நடந்திருக்கும் என யூகிக்க ஆரம்பித்தான். அவன் யூகம் பொய்க்கவில்லை "அனன்யா...."என பல்லை கடித்து அவளிடம் மென்மையாக

"அஷ்வி....சாரிடி..... உன் மனசு எனக்கு புரியுது.... பட் நான் அவளை பத்தி சொன்னதுக்கப்புறம் உன் வாழ்க்கையில நீ அண்ணாவோட இருக்கணுமா வேணாமான்னு? யோசி....ப்ளீஸ்டி நா சொல்றத கேளு...." என்றவன் அனன்யாவை பற்றி கூறத் தொடங்கினான்.
அண்ணா முன்னெல்லாம் இப்படி இல்ல அஷ்வி.... ரொம்ப சாஃப்ட் நேச்சர்... அவங்களை சுத்தி எப்பவுமே ஒரு கூட்டமே இருக்கும் அவ்வளவு கலகலப்பானவங்க.... எல்லோருக்கும் புடிச்ச கெத்து சீனியர் அவர்தான் தெரியுமா? எங்க என்ன பிரச்சனன்னாளும் ப்ராபசஸர்ஸ் கிட்ட கூட போகாம அவர் கிட்ட தான் வந்து நிப்பாங்க.... ஸ்ட்ரைக் பண்றதுனா கூட அவர்தான் எல்லாமே......
அவர் வாழ்க்கையில் எந்த ஒரு கொறயும் இல்ல... ராஜா மாதிரி வாழ்ந்தாரு.... எங்க அப்பா பேரு "ரகுநாத் தேவமாருதன்" நாங்க சின்ன வயசா இருக்கும்போதே இறந்துட்டாரு...நிம்மதியா ஓடிட்டு இருந்த வாழ்க்கையில் திடீர்னு வந்து சேந்தா " அனன்யா "

பிளாஷ்பேக் ஸ்டார்ட்.....

அன்று இன்டர் காலேஜ் கல்ச்சுரல்ஸ் என்பதால் காலேஜ் முழுவதுமே பரபரப்பாக இயங்கிக்கொண்ருந்தது... எப்பொழுதுமே அரட்டையடித்துக் கொண்டிருக்கும் ரிஷி கூட அன்றைய நாள் "காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் லீடர்" என்ற வகையில் டென்ஷனாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தான். அவனுடைய நண்பர்கள் வருண், ரகு, ஹரிஷ், ஜெய் என பலர் இருந்தாலும் அவனுடைய உயிர் நண்பன் எப்போதும் " ராகேஷ் " தான்.....

ரிஷியை காணாமல் தேடிக் கொண்டிருந்த ராகேஷ் அப்போதுதான் பைக்கில் இருந்து இறங்கிய ஜெய்யிடம்

"டேய் ரிஷி எங்கடா?" என கேட்க இறங்கி தலையில் அடித்தவன் அழுவது போல்

" யேன்டா.....யேன்.... காலங்காத்தால வேற எவனுமே கெடக்கலன்னு என் கிட்ட வரியா?" எனவும்

" ஏன் மச்சான்?"

"படுபாவி.....இப்படி ஒன்னும் தெரியாத மாதிரி கேட்குறியேடா? இது ஒனக்கே பொறுக்குமா... நான் இப்போ தானேடா வந்தேன்.... எனக்கெங்கடா தெரியும் அந்த பேசிப்பேசியே கொள்றவனை பத்தி...." என்று அவன் கூறவும் சிரித்த ராகேஷ்

" சரி விடு.... இப்போ எதுக்கு அவன நெனச்சி கடுப்பாகுற?"

"பின்ன என்னடா பன்ன சொல்ற..... அவன் பண்ற டார்ச்சர் இருக்கே... கடவுளே!! " என்றவன் மீண்டும்

"அதுகூட பரவால்லடா.... பண்றதெல்லாம் பண்ணிட்டு அப்பாவி மாறி மூஞ்ச வேற வெச்சிகிட்டு "நான் அப்பாவி தானேன்னு?" கேப்பான் பாரு ஒரு கேள்வி.....ஷ்ஷப்பா.....அவன வெச்சிகிட்டு...." என்றவனின் பேச்சில் ராகேஷ் கத்தி கத்தி சிரிக்க இவ்வளவிற்கும் சொந்தமானவன் அங்கு ஆஜரானான்.

அவன் வழமையாக போடும் டிரஸ் போல் அல்லாமல் இன்று கல்சுரல்ஸ் என்பதால் ஃபார்மல் டிரஸ்ஸில் வந்திருப்பதைப் பார்த்த இருவருக்கும் ஹார்ட் அட்டாக் வராத குறை தான்.... ஏனெனில் அவன் தலையில் எப்போதும் சிம்புவின் குத்து படத்தில் வருவது போல் எப்போதும் ஒரு ஹெங்கி கட்டு இருக்கும்......கையிலும் கழுத்திலும் எப்பொழுது விழுவேன் என பார்த்துக் கொண்டிருக்கும் செயின் வேறு.... போடுவதெல்லாம் ஃபுல் ஸ்லீவ் டீ-ஷர்ட் தான் என்றாலும் அது முழங்கையை தாண்டி சென்றதே இல்லை.... எப்போதாவது போடும் ஒருநாள் ஷர்ட்டுக்கு அவன் பண்ணும் அலப்பறை இருக்கே.... ஹய்யோ....
ரவுடி போல் முழங்கை வரை மடித்து வைத்துவிட்டு அன்றைய நாள் பிரின்ஸிபாலிடம் வேலை வந்துவிட்டால் ஷர்ட்டை ஒழுங்காக போட்டு "அவன்தானாடா நீ " என அலற வைப்பான்.இப்படி இருப்பவன் இன்று மட்டும் ஆபீஷியல் ஃபார்மல் டிரஸ்ஸில் கோட் சூட் சகிதம் வந்து நிற்பது அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வராதா? முதலில் கலைந்த ஜெய்

"அய்யோ கடவுளே....! நான் என்ன பண்ணேன்னு என் உசுர எடுத்தது மட்டுமில்லாமல் இவனுங்களையும் சேத்து எமலோகத்துக்கு அனுப்பி வெச்சிருக்க...?" என புலம்பவும் அவன் கிண்டலை புரிந்து கொண்ட ராகேஷ் ரிஷியின் டிரெஸ்ஸையும் அவனையும் மாறி மாறி பார்க்க அதை புரிந்தவனாக புன்னகை பூத்த ரிஷி

"நீ பொண்ணுங்கள அங்க கூட சைட் அடிக்கிறது பொறுக்காம என்னையும் சேர்த்து அனுப்பிச்சாருடா" என்று கண்ணடிக்க தன் குட்டு வெளிப்பட்டு விட்டதில் வாயை கப்பென மூடி விட "என்கிட்ட ஏன் அந்த பேசிப்பேசியே கொல்றவன பத்தி கேட்குற?" என்று ஜெய் கேட்டது சரியென்றே தோன்றியது. தனக்கருகில் நின்றிருந்த ராகேஷிடம்

"டேய் ராக்கி.. ரகு வருண் எல்லாம் எங்கடா? இங்க இன்னும் எவ்வளவு வேல இருக்கு..." எனவும் ராகேஷ்

"ரகு....ஹரி... வருவானுங்க ஆனால் சார் எந்திரிக்கவே பங்ஷன் முடிஞ்சிடும்...."

என சொல்லிக் கொண்டிருக்கும் போதே பைக்கில் வந்து இறங்கினர் ரகுவும் ஹரியும்.... பைக்கில் இருந்து குதித்து இறங்கிய ரகு வேறு ஏதோ அதிசய பிறவியை பார்ப்பது போல் அவனை சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டும் ஏதோ யோசித்துக் கொண்டும் இருக்க.... அவனை நிறுத்திய ரிஷி

"என்ன ரகு அண்ணா.... என்னாச்சு?" என கேட்கவும் அவன் கேட்ட விதத்தில் இரண்டடி பின்னால் நகர்ந்து ராகேஷின் காதில்

" ராக்கி.... நம்ம ஆர்.கே தானா இது?" என குசுகுசுவென ஏதோ கேட்க.... அதே மாதிரியே ஹரியும் ஜெய்யின் காதில் கேட்கவும் ரிஷி

"என்னடா பிரச்சின உங்களுக்கு.... நான் தான் ரிஷிகுமார்.... உங்க ஆர்.கே தான் என்னமோ பேய பாக்குற மாதிரி பாக்குறீங்க?" எனக் கேட்கவும் அவன் கலக்கத்தை பொறுக்காத ராகேஷ்

" இவனுங்கள விடு மச்சான்.... இவனுங்களுக்கு கண்ணுல ஏதோ கோளாறாம்.... நீ வாடா..." என்று விட்டு கழுத்தில் கை போட்டவாறே செல்ல அவர்களை பார்த்து கபடமில்லாமல் சிரித்துக்கொண்டனர் மற்ற மூவரும்...
இதற்கிடையில் பியூன் வந்து "ஆர்.கே... தம்பி உங்கள பிரின்சிபால் வர சொல்றாரு..." என்று விட்டு சென்றுவிட இவனும் அவர் பின்னால் சென்ற நேரம் அவன் இதயம் ஏனோ தடதடவென அடித்து கொண்டது......

அதற்கான விடையாக இங்கு வாசலில் மாணவர்கள் வரத்தொடங்கி இருக்க பாவாடை தாவணியில் தன் கூந்தல் காற்றில் அசைந்தாட கையில் ஒரு புக்கை இறுக்க பிடித்துக் கொண்டு தன் நண்பிகளுடன் பேசிக்கொண்டே அழகு சிலையென நடந்து வந்து கொண்டிருந்தாள் "அனன்யா"

எல்லோர் பார்வையும் அவள் மீது விழுந்து எழ ஆனால் பார்க்கவேண்டியவனோ அங்கு பிரின்சிபாலிடம் சண்டையில் இருந்தான்.

பிரின்சிபல் அறை....

ரிஷி எல்லா நிகழ்ச்சிகளையும் சரிபார்த்து கொடுத்திருக்க கடைசிநேரத்தில் பாட்டு பாட வேண்டிய ஒருவன் மட்டும் இன்று வராமல் சொதப்பி விட்டிருந்தான். அதை காரணம் காட்டி பிரின்சிபால் ஏச ஆர்.கே டென்ஷன் ஆகிவிட்டான்.... அவரிடம் வேறு ஒருவரை ஏற்பாடு செய்வதாக ஒன் அவராக பாடுபட்டு சமாதானம் பண்ணி விட்டு வெளியே வர பங்க்ஷன் தொடங்கியிருந்தது. என்னதான் செய்யப் போகிறோமோ என யோசித்துக்கொண்டே வாசலில் காலை வைத்தவன் அந்த வசீகரக் குரலில் சிலையாகிப் போனான்.

கண்ணை மூடி...."அன்பே... அன்பே... என் கண்ணில் விழுந்தாய்..!" என்று அவள் பாடும் லாவகம் அவன் இதயத்தை அசைத்து போட்டது. அவள் எனக்கானவள் என மனம் அடித்துச் சொன்னாலும் எப்போதும்போல் உள்மனம் அன்றே அவனை தடுத்தது. இருந்தும் அவன் தான் அதை கண்டுகொள்ளவில்லை... அதுவே அவனுடைய பின்னால் வாழ்க்கையின் பெரிய தப்பாக மாறிப்போனது. அவளை பிடித்திருந்தது மட்டுமே அப்போது அவன் மூளைக்குள் ஓடியது... வழமையாக இவ்வாறு பெண்களை பார்ப்பவனில்லை அவன்... ஆனால் இன்று அவள் குரல் அவனை அடித்து வீழ்த்தி அவள் பால் கட்டி இழுத்தது.

அந்த வசீகர குரலுக்கு சொந்தமான அவள்... தனக்கும் சொந்தமாக வேண்டும் என்ற நினைப்பே அவனுக்கு தித்தித்தது....."ச்சே என்ன நினைப்பு இது.." என தன்னை மீட்டுக் கொண்டு தன் உயிர் நண்பனை தேட அவன் ஜெய்யுடன் கதைத்துக் கொண்டிருக்க அவன் கண்கள் மீண்டும் அவளை வருடியது.... அவளை காண அங்கு செல்ல எத்தனிக்க அதற்குள் இவனை பிரின்சிபால் பிடித்துக் கொண்டு பாராட்ட ஆரம்பித்துவிட்டார்.அவள் கீழே இறங்கி கூட்டத்தில் கலந்து விட இவன் கண்கள் தான் தேடித்தேடி சோர்வாகிப்போனது.... அவளை தேடித்தேடி அவன் கண்கள் கூட்டத்தில் அலைபாய அப்போதும் விடாமல் இருப்பவரைப் பார்த்து

"யோவ் மரியாதையா என்ன விடு... இல்ல..." என்று விட்டு இவன் கூட்டத்தில் அவளைத் தேட அவள்தான் மாயமாகி போயிருந்தாளே!

தேடித்தேடி கலைத்துப் போயிருந்தவனின் தோளில் கை வைத்து திருப்பிய ராகேஷ்

" இங்க என்னடா பண்ணிட்டிருக்க... அங்க எவ்வளவு நேரமா உன்ன பிரின்ஸிபால் தேடுறார் தெரியுமா? வா போலாம்..."என இழுக்க அவன் கையை உதறியவன்

"நான் வர்ல... நீ போய் அந்த புகழ வாங்கிக்கோ.."

என்றவனை அதிர்ச்சியாக பார்த்தான் ராகேஷ் ஏனென்றால் அவன் இதுவரை யாரையும் உதறித்தள்ளி பேசியதே இல்லை.... எவ்வளவுதான் கோபம் இருந்தாலும் யாருக்கும் பதில் சொல்லாமல் கூட இருக்கமாட்டான்... அப்படி இருப்பவன் இன்று அவனுக்கு மிகவும் பிடித்த மனிதரான ராமமூர்த்தி - பிரின்சிபால் ஆப் வெற்றிவேல் காலேஜ் - இடம் செல்ல தன்னை அனுப்புகிறான் என்றால் இவனுக்கு என்ன தான் ஆயிற்று என்று இருந்தது. தன்னை அதிர்ச்சியாக பார்த்திருக்கும் ராக்கியை பார்த்து தன்னை குறித்தே சங்கடமாகி போக

"சாரி ராக்கி..ரியலி சாரிடா......வா போலாம்..." என கையை பிடித்து முன்னே செல்ல எத்தனிக்க அவன் கேட்ட கேள்வியில் அதிர்ச்சியாகி நின்றான் ஆர்.கே.... அவனில் பதிலற்றுப்போக மறுபடியும்

"யாரையாவது லவ் பண்றியா?" என்றான் அவனை திருப்பியபடி...
ராக்கேஷ் இப்படி கேட்பான் என எதிர்பார்க்காத ரிஷி விழிக்க

"சொல்லுடா....கேக்குறேன்ல..." என்று உலுக்க

"அது...வந்து..இல்ல மச்சி... ஆமா...அது.... மச்சான் தெரியலடா..." என உலற்ற அவனை கூர்ந்து பார்த்த ராகேஷ் புன் சிரிப்புடன்

"அத சொல்றதுக்கு ஏன்டா இவ்வளோ தயக்கம்...?" என்றுவிட்டு அவனை அணைத்துக் கொண்டு விடுவித்தவன்

"மச்சி நீ லவ் பன்றடா... நீ லவ் பன்ற.." என்று அவனிடம் சொல்ல அவனோ குழப்பத்துடன்

"இல்ல ராக்கி.... நான் இப்போதான் அந்த பொண்ண பார்த்தே இருக்கேன்.... அவ குரல்ல தான் ஷாக் ஆனேனே தவிற அவள புடிக்குமான்னு கேட்டா எனக்கே தெரியலடா..." என்று அவனை அடக்க

" பார்த்தா தானேடா லவ் வரும்.... நீ லவ் பண்ற..." என பிடிவாதமாய் மறுத்தவனின் கண்களில் ஏதோ ஒன்று பொய்யாகத் தெரிந்தது முதன் முறையாக.....

தொடரும்.......

19-04-2021.
 
Rishi 24

Member
Vannangal Writer
Team
Messages
54
Reaction score
33
Points
18
அத்தியாயம் 08 ❤️

ராகேஷ் ரிஷிகுமாரின் பால்யவயது நண்பன்.ரகுநாத்தின் நண்பன் வெற்றிவேலின் ஒரே பையன்.... ரகுவும் வெற்றியும் நல்ல நண்பர்களாதலால் அந்த நட்புணர்வு அந்த இள வட்டங்களுக்குள்ளும் தொடர்ந்தது.
வெற்றிவேல் ஒரு ஆக்சிடெண்டில் கால் முறிந்து இறந்து விட அவரின் நினைவாக ரகுநாத் தான் வெற்றிவேல் கல்லூரிக்கு நண்பன் பெயரை வைத்தார்.
அவர் போய் சேர்ந்த சோகத்திலிருந்து ராகேஷை மீட்ட ரகுநாத் அவனை தன்னுடனேயே வைத்து பார்த்துக் கொண்டார்.அவர் இறந்த மறு மாதம் ரகுவின் உயிரை அதே ஆக்ஸிடெண்ட் காவு கொண்டு போக....ராக்கியே ரிஷியையும் ஆரவ்வையும் அந்த சோகத்திலிருந்து மீட்டான்.அதனாலோ என்னவோ ராகேஷை நண்பன் ஸ்தானத்திலிருந்து ஒரு படி மேல் வைத்திருந்தான் ரிஷி.

அப்படிப்பட்ட அன்பில் நனைந்து இருந்தவனின் கண்களில் முதன்முறையாக பொய் கலந்து இருக்கவும் உண்மையில் உள்ளம் திடுக்கிட்டான் ரிஷிகுமார். இருந்தும் அவன் மேல் சந்தேகம் கொள்ள மட்டும் அவன் மனம் நினைக்கவே இல்லை.... மனதில் ஒன்றை நினைத்து விட்டால் அது வேறூன்றி விடும் என அறிந்தவன் அதை விடக் கூடாது என எண்ணி

" நான் அந்த பொண்ண லவ் பண்ற விஷயத்தில் நீ ஏன் இவ்வளவு இன்ட்ரஸ்ட் எடுத்துக்குற ராக்கி?" பட்டென கேட்டவனை பார்த்து உள்ளுக்குள் பயந்தாலும் அவன் மனதை மாற்றும் மந்திரம் தெரிந்தவனாக

"நான் உன் பிரண்டுடா..... உன் வாழ்க்கையில ஒரு துணை வராதான்னு நா எத்தனை நாள் ஏங்கியிருக்கேன் தெரியுமா?"
ஏக்கம் போல் கெட்டவனை பார்க்க அந்த வெள்ளை மனதுக்கு " இவனுக்குத்தான் என்மேல் எத்தனை பாசம் " என்றே நினைக்கத் தோன்றியது. அவனை இழுத்து அணைத்து அவன் தோள் தொட்டு

"பட் இருந்தாலும் மச்சி..." என இலுக்க

"நீ வந்து ஷாக்காகி வாசல் கிட்ட நிக்கும்போதே உன் மனசுக்குள்ள அவ வந்துட்டான்னு எனக்கு தெரியும் மச்சி......நீ கட்டள இட்றதுக்கு முன்னாடியே நான் அந்த பணிய முடிச்சிட்டேன்"
அவன் கையில் அவள் மொபைல் நம்பரை திணிக்க அவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரியவும் சிரித்தவன்

" எங்க வீட்டுக்கு முன் வீடு "அக்ஷயா" தெரியும்ல....?" என்றவனை பார்த்து ரிஷி முழிக்க

"அதானே.... உனக்குத்தான் ஆருவ தவிர வேற யாருமே காலையில கண்ணுக்கு தெரீரதே இல்லையே.... சரி சரி குழப்பிக்காத....நானே சொல்றேன்...அந்த அக்ஷயாவோட சித்தி பொண்ணு தான் அனன்யா... அதான்டா உன் ஆளு பேரு... பிரின்சி உனக்கு கிழிக்கிறத கேட்டுட்டு வந்து அவதான் " அனன்யா நல்ல பாட்டு பாடுவாண்ணா " அப்பிடீன்னு சொன்னா.... அதான் எல்லாம் ஸ்மூத்தா முடிஞ்சிது..." என்று விளக்கம் சொல்பவனை புன்னகையுடன் பார்த்திருந்து விட்டு அவனுடனேயே பிரின்ஸிபல் ரூம் சென்றான்.

அவள் வேறு காலேஜிலிருந்து இனிமேல் இந்த காலேஜில் தான் படிக்க வருகிறாள் என கேட்டதிலிருந்து ரிஷிக்கு அன்றைய நாள் உறக்கம் தூரம் போனது. அவன் கையில் அவள் நம்பர் இருந்தாலும் அவளிடம் அறிமுகமாகிய பின்பு தான் பேச வேண்டும் என நினைத்திருந்தான்.

காலை....

தன் வழமையான ட்ரெஸ்ஸில் பைக்கில் அவளுக்காக காத்திருக்க அவள் மட்டும் வந்தபாடில்லை..... நண்பர்கள் கூட இவன் டிரஸை பார்த்து தலையில் அடித்துக் கொண்டனர்.கடைசியாக அவன் வேண்டுதலை நிறைவேற்றுவது போல் அவளும் வந்தாள் அக்ஷயாவுடன்.... வரும் நபர்களை கலாய்த்துக் கொண்டிருந்த மற்றொரு கும்பல் அனன்யாவை அழைக்க அதே நேரம் இவர்களும் அழைக்க ரிஷிக்காக பேசாமல் விட்டு விட்டனர்.

"ஹாய் ஆர்.கே அண்ணா..." உற்சாகமாக அக்ஷயா கூறவும் அவளுக்கு புன்னகையை பரிசளித்து விட்டு மீண்டும் அனன்யாவை அவன் கண்களில் நிரப்ப அதை எதிர்பார்த்தவன் போல ராகேஷ்

"அக்ஷயா இது...." என இழுக்க

"ஆ...இவளா..... இவ என் சித்தி பொண்ணு அனன்யா.... இனிமே இந்த காலேஜ்ல தான் படிக்கப் போறா..... அனன்யா இது ரிஷி அண்ணா....இது ராகேஷ்...இது ஹரிஷ் அண்ணா......இது வருண் அண்ணா இது ரகு அண்ணா......" என எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைக்க அனன்யாவின் பார்வையில் நனைந்திருந்த அவன் அவளின் பார்வை ராகேஷின் சூப்பர் எனும் கை அசைத்தது....அவள் கண்களும் அதை புரிந்தது என்பது போல் ஆமோதித்தது.... என இது எதனையும் அவன் கவனிக்கவே இல்லை.....

பிளாஷ்பேக் ஸ்டாப்....

ஏதோ வெளியில் கார் சத்தம் கேட்கவும் திடீரென நிறுத்தி விட்டு அவளை பார்க்க அவளோ

" நீ போ ஆரு....தேவ் வந்துட்டார்னு நினைக்கிறேன்.... நீ பேசினது அவருக்கு தெரிய வேண்டாம்...." எனவும் அவன் வெளியேற.....இவள் இரவு ஆடையை எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்.
அவள் திரும்பி வெளியே வர இவன் அவளை கண்டு கொள்ளாது உள்ளே நுழைந்து கொண்டான்.அவன் முதுகை வெறித்தவள் அமைதியாய் வந்து பெட்டில் சாய்ந்து அமர்ந்தாள்.

அவளுக்கு நிறைய யோசிக்க வேண்டி இருந்தது...." இப்போதைக்கு ஆரவ் சொன்னதை வைத்துப் பார்த்தால்...அனன்யா முதலிலேயே கரும் புள்ளியாக பதிய அப்படியென்றால் இன்று அவள் சொன்னது எல்லாம் பொய்யோ..அப்படியே இருந்தாலும் தேவ்வின் கண்களில் தெரிந்த காதல் பொய்யில்லையே...நாமதான் அவ சொன்னத லூசுத்தனமா நம்பி நம்ம கமாண்டர வாய்க்கு வந்தபடி பேசி கஷ்டப்படுத்திட்டோமோ" பலவாறாக யோசித்து குழம்பிக்கொண்டிருந்தவள் கதவு திறக்கும் சப்தத்தில் கலைந்து அவனை பார்க்க அவன் இவள் ஒருத்தி இருப்பதையே மறந்தவாறு லேப்டாப்பபுடன் சோஃபாவில் அமர்ந்துவிட்டான். அவன் அலட்சியத்தில் இவளுக்குத்தான் கண்கள் கரித்தது.
மன்னிப்பு கேட்க நினைத்தவள் பின் அவனும் தானே மறைத்தான் என வீம்புக்காய் விட்டு அவனை மனதிற்குள்ளேயே அர்ச்சனை பன்னத்தொடங்கினாள்

"கமாண்டர்...கமாண்டர் பேசறதெல்லாம் பேசிட்டு எப்பிடி உக்காரந்திருக்கான் பாரு....டெர்ரர் ஆபீசர்....இவன் பிஸ்னஸ் பன்னினதுக்கு பதிலா போலீஸ் வேலைல சேந்திருக்கலாம்..... பக்கி....பாக்குறானா பாரு..."மனதில் அவனை வருத்தெடுத்துக் கொண்டிருக்க அவன் திடீரென இருமத்துடங்கவும் "அய்யய்யோ நாம கொஞ்சமா தானே திட்டினோம்... இவன் எதுக்கு இப்பிடி இருமிக்கிட்ருக்கான்" வாய் விட்டே புலம்பி விட்டு அப்போதுதான் ஞாபகம் வந்தவளாக அவசரமாக இறங்கி தண்ணீரை எடுத்து நீட்ட முறைப்புடனே அதை வாங்கி குடித்தான்.
பின்னே இவள் புலம்பியதைத்தான் கேட்டு விட்டானே.....!

அவன் மறுபடி நீட்டவும் அதை எடுத்து வைத்து விட்டு திரும்ப அவளை இடிப்பது போல் நின்றிருந்தான் அவன்...அவன் முகத்தை வெகு அருகில் பார்தவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க அவனை மிரண்டு போய் பார்த்தாள். அவனோ அவள் பயத்தை கண்டும் காணாதவாறு

"ம்...சொல்லு.......என்ன சொல்லி திட்ன.....?" என கேட்கவும் அவள் பயந்து பின்னே நகர்ந்து சுவற்றில் மோதி நிற்க அவளை இரு புறமும் சிறை செய்தவன் மீண்டும்

"ம்....சொல்லு..." எனவும்

"அது...அது...வந்து..."

"அது வரும்போது வரட்டும்....நா கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு...."

"அது...தே...தே...தேவ்..வந்து... நா..நா..." அவள் தேவ் என்று சொன்னதில் சுவாரஷ்யமானவன்

"ம்...நீ..."என எடுத்துக்கொடுக்க அவளோ மனதில் " அய்யோ கடவுளே!இது என்ன சோதன? இவன்கிட்ட பதில் பேசும் போது மட்டும் வார்த்தயெல்லாம் தந்தியடிக்குது" என உள்ளுக்குள் புலம்பிவிட்டு

"நா...நா...எதுவுமே திட்டலயே...."

"அப்போ நீ திட்ல?"

"இ....இ...இல்லயே......"

"இல்ல......?" என அவன் முன்னே வரவும் பயத்தில் அவள் ஆமென்று தலையாட்டி விட

"அஃது....இப்போ சொல்லு...?"

"டெ...டெ....டெர்ரர் ஆபீஸர்னு...." என்று எச்சில் கூட்டி விழுங்க அவள் பயம் அவனுக்கு சுவாரஷ்யத்தை கூட்டியதோ

"நீ லாயருன்னு வெளிய சொல்லிறாத... காரி துப்புவாங்க...." என நக்கலடித்தவனை பார்த்து சிலிர்த்தெழுந்து விட்டாள் பெண்.

"என்னது....காரி துப்புவாங்களா... யூ...யூ..." என அவள் வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்க

"நான் நான் தான்..."

"போடா....டெர்ரர் ஆபீஸர்... கமாண்டர்" என்றவள் கோபமாய் சென்று படுத்துக்கொள்ள அவன்தான் அதிர்ந்து நின்றான்.

(இருவருக்கும் நேற்றைய நிகழ்வுகள் சுத்தமாக மறந்து போனதுதான் விந்தையிலும் விந்தை..... )
அவள் சொன்ன கூற்றில் அதிர்ந்துபோய் நின்றவன் கொஞ்ச நேரத்தில் தன்னிலையடைந்து அவளைப் பார்க்க அவளோ முகம் வரை இழுத்து போர்த்தி கொண்டு தூங்கி இருந்தாள். இல்லையில்லை....... தூங்வது போல் நடித்துக் கொண்டிருந்தாள்😉. இவன் ஒரு சிகரெட்டை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு போய் குடித்துக்கொண்டே நிலாவை வெறிக்க...

திரும்பவும் சிகரெட்டை வாயில் வைக்க முற்படும்போது அது வெளியே தோட்டத்துக்குள் தூரப் போய் விழுந்ததில் அதிர்ந்தவன் திரும்பிப்பார்க்க அங்கு அவன் மனையாளே அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.
அவள் சைகையில் இவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. மனமொத்த தம்பதிகளாய் இருந்திருந்திருந்தால் கோபம் வந்திருக்காதோ என்னவோ...

கோபத்தில் அவளை முறைக்க அவளும் அவனுக்கு சளைக்காத பார்வை பார்த்துக்கொண்டு

"உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லன்னு எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு.... உங்ககிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க எனக்கு உரிம இல்லதான்.... பட்...நமக்கு ரெண்டு பேருக்கும் டிவோர்ஸ்ஸுக்கு அப்ளை பண்ணியிருந்தாலும் கோர்ட் ஆடர் வரும் வர நான் தான் சட்டப்படி உங்க பொண்டாட்டி.... சோ நீங்க சிகரெட் பிடிக்காதீங்க.....அது எனக்கு பிடிக்கல....நமக்கு டிவோஸ் ஆகி நான் உங்கள விட்டு போனதுக்கப்புறம் நீங்க இப்ப லவ் பண்ற பொண்ணு கூட இருக்கும் போது என்ன வேணா செஞ்சுக்கோங்க...." என அவள் சொல்லி முடிக்க அவள் கண்ணங்கள் தீயாய் எரிந்தது. ஆம் அவன் அவளை அறைந்திருந்தான்.
அவளை பின்னிருந்த கண்ணாடியில் சாய்த்து இருகைகளாலும் சிறை செய்தவன்

"நா சொன்னேனா உனக்கு அவளை லவ் பண்றேன்னு..... நீயா ஒன்ன கற்பன பண்ணிட்டு பேசிட்டிருக்க... நீ மட்டும் தான் வலியை அனுபவிக்கிறியா.... நானும் அனுபவிச்சிட்டருக்கேன்டி..... ஒரு ரெண்டு வருஷம் இல்ல..... பத்து வருஷமா.... உனக்கென்ன... நல்லா வாய்கிழிய பேசிட்டு சாரி கேட்க வேண்டியது... பட் இதுவரைக்கும் நீ யோசிச்சிருக்கியா நீ பேசினதுக்கான பாரதூரத்த... அவ எனக்கு வப்பாட்டியா.....இல்ல உனக்கு சக்காளத்தியா..... யோசிடி... வலிக்குதுல்ல.....அப்படித்தானேடி எனக்கும் இருந்திருக்கும்... மறந்திருந்த வலியெல்லாம் நீ மறுபடி எனக்கு ஞாபகப் படுத்திட்டேங்குறது உனக்கு தெரியுமாடி......சொல்லு தெரியுமா.... வலிக்குதுடி.." கடைசி வார்த்தையில் அவன் குரல் கம்மியதில் அவள் மனது துடித்தது.
வேறு எதுவும் பேச முடியாமல் வெளியேற.... அவள் வெளியில் நின்று பார்த்தபோது அவன் காரை எடுத்துக்கொண்டு வெளியேறுவது தெரிந்தது...

அவனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவள் அமர்ந்த வாக்கிலேயே காலை கட்டிக் கொண்டு தூங்கி இருக்க...... பறவைகளின் கீச் கீச் எனும் ஒளியில் திடுக்கிட்டு விழித்தாள்.

தான் சொன்ன வார்த்தைகளின் பாரதூரம் இந்தளவு அவனை காயப்படுத்தி இருக்குமென்று எண்ணியிராதவள் அவன் புரிய வைத்து விட்டுப் போனதில் துடித்து போனாள். " வலிக்குதுடி... " என்னும் வார்த்தையை அவன் சொல்லும்போது அவன் கண்களில் தெரிந்த வலியே... அவன் எந்த அளவுக்கு கடந்த கால வாழ்க்கையினால் வலியை அனுபவித்திருப்பான் என்பதை சொல்லாமல் சொல்லியது.....
"இன்னிக்கு எப்பாடுபட்டாவது என்ன நடந்துதுன்னு ஆருகிட்ட கேட்கணும்" என்றவள் மணியை பார்க்க அது 5.30 என காட்டவும் அதிர்ந்து போனாள். தான் எவ்வளவு நேரம் பால்கனியில் நின்று இருக்கிறோம் என்பது நினைவு வந்த நேரம்... மாலை 3 மணி அளவில் வீட்டில் இருந்து சென்றவன் இன்னும் வீட்டிற்கு திரும்பவில்லை என்பது உரைக்க... மனது படபடத்தது. அவன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழையில்லைதானெனினும் ஏனோ பயமாக இருந்தது...
"மறந்திருந்த வலி எல்லாம் மறுபடி நா ஞாபகப்படுத்திட்டேன்னு வேற சொன்னாரே...ஹய்யோ.... " என்றவள் அவசரமாக உள்ளே சென்று தன் மொபைலை எடுத்து அவனுக்கு அழைத்தாள். அவன் அதை கட் செய்ய ஆத்திரமடைந்தவள் மறுபடி மறுபடி அழைக்க அவன் சுவிட்ச் ஆப் செய்து விட்டான்.போனை தூக்கி பெட்டில் போட்டு விட்டு தொப்பென்று அமர்ந்தவள்

"சாரி கேக்க கூப்டா இவ்வளவு பிடிவாதமா உங்களுக்கு....? என்ன செய்றேன் பாருங்க.... எப்பிடியும் ஆபீஸ் போய்த்தானே ஆகணும்...."
கொஞ்ச நேரம் அவனை திட்டி தீர்த்தவள் எழுந்து குளியலறை சென்றாள்.

அந்த இரவை காரிலேயே கழித்தவன் அவளிடமிருந்து மீண்டும் மீண்டும் அழைப்பு வரவும் அதை சுவிட்ச் ஆப் பண்ணி அருகில் இருந்த சீட்டில் தூக்கிப்போட்டுவிட்டு காரை கிளப்பிக் கொண்டு நேரே ஆபீசுக்கு சென்றான்.

ஆபிஸில் வழமையாக இரண்டு செட் துணி வைத்து இருப்பான். இன்றும் அதே போல் அது அழகாக அவனுக்காகவே மடித்து வைக்கப்பட்டிருக்க பிரஷ்ஷப்பாகிவிட்டு வந்தவன் அதை அணிந்து கொண்டு வெளியே வந்து தன் எம்.டி சேரில் கம்பீரமாக அமர்ந்து இடது கையை உயர்த்திப் பார்க்க அது ஏழு என காட்டவும் " கதிர்..." என அழைக்க அவன் முன் வந்து நின்றான் கதிரவன்.
அன்றைய மீட்டிங்களை அரேஞ்ச் பண்ண சொல்லி அவனை அனுப்பி வைத்து விட்டு சேரில் கொஞ்சம் சாய்ந்தமர...... மறுபடி நேற்றைய நிகழ்வுகள் வந்து போக அவள் மேல் கோபம் கோபமாக வந்தது.

அவனால் அவளை புரிந்து கொள்ளவே முடியவில்லை.....இதை தெரிந்துதான் பேசுகிறாளா என கோபம் கொண்டிருக்கும் போது சிறு பிள்ளை போல் வந்து மீண்டும் ஒட்டிக்கொள்கிறாள்.

தான் இவ்வளவு இறங்கிப் போகிறோம்... அதுவும் ஒரு பெண்ணிடம்...... தன்னை குறித்தே ஆச்சரியமாய் போனது அவனுக்கு....இப்படியே யோசித்துக் கொண்டிருந்தவன் நேற்று அவளுக்கு தான் அடித்தது ஞாபகம் வர

" உடம்பு வேற முடியாம இருந்தாளே....எதுக்கு கால் பண்ணியிருப்பா...." என தனக்குத்தானே கேட்டுக்கொண்டு போன் பண்ணி ஆருவை அழைக்க மறுமுனை

"சொல்ணா...." என்றது தூக்க கலக்கத்துடன்...

"இன்னுமே எந்திரிகலயா நீ?மணி ஏழு முப்பது தாண்டுது...."
"நீ தான் காலேஜ் பக்கமே வர வேணான்னுட்டியே... அப்பறமென்ன? "அதில் அமைதியானவன்
" சரி... அவ எங்க?"

"அவன்னா எவண்ணா....?"

"டேய்...."

"ஓ... நீ தாலி கட்டினியே அவங்களா...?" என்று வேண்டுமென்றே சீண்ட கோபமடைந்தவன்

" இப்போ சொல்லப் போறியா இல்லையா?"

"சரி....சரி கோவப்படாதணா... அண்ணி எங்கேயோ வெளியில் கெளம்பிட்டிருக்காங்கலாம்.... அப்படின்னு கயல் சொல்லிட்டு இருந்தா..."

"ஓஹ்...." என்றவன் அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல் காலை கட் ஆக்கி விட ...இவன் மறுபடி சுகமாக தூக்கத்தை தொடர்ந்தான்.போனை கட் பண்ணியவன்

" அவ எங்க போனா நமக்கென்ன... அவ கூட பேசினாலே வம்பு.... இனிமேல் பேசவே கூடாது..." என அவள் மீதுள்ள கோபத்தில் முடிவெடுக்க அவளோ ஆபீஸுக்கே வந்து ரகளை பண்ண ஆரம்பித்திருந்தாள்.

கதிர் வந்து எட்டு மணிக்கு மீட்டிங் இருப்பதாக அறிவித்து விட்டு போக அவசரமாக எழுந்து தன் கோர்ட்டைப் போட்டுக் கொண்டே மீட்டிங் ரூமிற்குள் நுழைய.... அனைவரும் எழுந்து குட் மார்னிங் சொல்லவும் அதை சிறு தலையசைப்புடன் ஏற்றுக்கொண்டு தன் இருக்கையில் அமர்ந்து அந்த டீலிங்கை பேச ஆரம்பித்தான்.
ஒரு அரை மணி நேரம் கடந்திருக்கும்...அவன் மொபைல் ஒலிக்கவும் "எஸ்கிவ்ஸ் மீ.." என்றுவிட்டு திரையை பார்க்க அதில் " ரிஷப்ஷனிஸ்ட். மிஸ்.சாருமதி " என ஒளிர முக்கியமான பிரச்சினை தவிர அழைக்க மாட்டாள் என அறிந்தவன் மறுபடி "எஸ்கியூஸ்..." கேட்டுவிட்டு அட்டெண்ட் செய்து

" சொல்லுங்க மிஸ் சாருமதி... எனி ப்ராப்ளம்?" என்றதுமே அவள் புலம்ப தொடங்கிவிட்டாள்.

"சார்.... இதுக்கு மேல முடில சார்....என்ன சொன்னாலும் எடக்கு மொடக்காவே பதில் சொல்லிட்டிருக்காங்க சார்.... உங்க வொய்ஃப் வேற சொல்றாங்க.... உங்களுக்கு கல்யாணம் ஆகலன்னு சொன்னதுக்கு... அப்போ நான் யாருன்னு? கேக்குறாங்க சார்...." என அவள் புலம்பவும்

"வாட்..." என்றவன் சேரில் இருந்து எழ அனைவரும் திடுக்கிட்டு

"மிஸ்டர் மாறன் எனி ப்ராப்ளம்?" என கேட்க

"நத்திங்.." என்றவன் சாருவிடம்

"இப்போ என்ன பண்றா..?" என கேட்க அவள் மறுபடி அலற பதற்றமானவன்

"என்ன பண்ணிட்டிருக்கான்னு சொல்லுங்க முதல்ல..."

" அவங்க குழந்தை மாதிரி பேப்பர் வெயிட்டை உருட்டி விளையாடிட்டு இருக்காங்க சார்..." என்றதும் அவள் பதிலில் தலையில் அடித்தவன்

"அவளை என் கேபினுக்கு அனுப்பி வைங்க..." என்று விட்டு " ஷிட்... " என்றவாரே அமர்ந்தவனை அதிசயமாக பார்த்தனர் அனைவருமே....

ஏனெனில் அனைவரிடத்திலும் தீர்க்கமாகவும் நிதானமாகவும் தன் முடிவை சொல்லி அலறவிடும் அவனையே ஒருத்தி டென்ஷனாக்கிக் கொண்டிருக்கிறாளே! பார்க்கும் பார்வையிலேயே எதிராளியை வீழ்த்துபவன் இன்று ஒருத்தியை புரிந்துகொள்ள முடியாமல் திண்டாடுவது தெரிந்தது. இவ்வளவு வருடமாக அவனுடன் டீலிங்கில் ஈடுபடும் அவர் அவனை புரிந்து கொண்டவராக

"மிஸ்டர் மாறன்... நாங்க வேணும்னா இன்னொரு நாளைக்கு வைச்சுக்கலாம்.." எனவும் அவரை தடுத்து நிறுத்தி

"இல்ல மிஸ்டர் ரவி... நத்திங் டு ஒர்ரி...நாம பேசலாம்...." என மறுபடி பேசத் தொடங்க
" எஸ்கிவ்ஸ் மீ... " என்றவாறே உள்ளே நுழைந்தாள் அவன் குரும்பு மனைவி அஷ்வினி... அவளைக் கண்டு கோபத்தில் எழப்போக அவளோ கூலாக

"எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது தேவ்.... அதான் நானே வந்துட்டேன்..." என தலை சாய்த்து சொன்னவ முறைத்துவிட்டு ஏதோ சொல்ல வாயெடுக்க

"ஓஹ்...நீங்க மீட்டிங்ல இருக்கிங்களா... சரி பரவால்ல..." என்றவள் அவர்களிடம் திரும்பி

" ஹாய் அங்கிள்ஸ்.... என்ன இவ்வளவு ஷாக்கா பாக்குறீங்க?ஓஹ்... நான் யாருன்னு பாக்குறீங்களா? நான் தான் மிஸ்டர் ரிஷிகுமார் தேவமாருதனோட...."
நிறுத்திவிட்டு தேவாவின் காதில் ரகசியமாக "தேவ்....வொய்ப்னு சொல்லட்டுமா வேண்டாமா... இல்ல ஏன் கேக்கறேன்னா.... நமக்குத்தான் டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணி இருக்கோமே" என கேட்டதில் மறுபடி முறைத்தவன் அவர்களிடம்

"இவ என்னோட ஒய்ப் மிஸிஸ்..அஷ்வினி தேவமாருதன்" அழுத்தமாகக் கூற அதை அவளையறியாமலே ரசித்து விட்டு

"ஓகே...நான் வெயிட் பண்றேன்... நீங்க முடிச்சிட்டு சீக்கிரம் வந்துடுங்க..." என்றவள் வெளியேறிவிட ஆளுக்காள் கேள்வி கேட்கத் துவங்கிவிட்டனர்.

"மிஸ்டர் மாறன்... உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"

"நைஸ்...பியூட்டிஃபுல்..."

"ரொம்ப வாலுத்தனம்... அவ காலுக்கு நீங்க டென்ஷன் ஆனதுல தப்பே இல்ல....."

"அழகா இருக்கா... சிம்பிளாவும் இருக்கா" என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் சொல்ல எதுவும் பேசாமல் அவர்களுடன் டீலிங்கை முடித்துவிட்டு தன் கேபினுக்குள் நுழைய....அவளோ அவனுடைய எம்.டி சேரில் சிறு பிள்ளை போல் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து இன்னும் கோபம் அதிகரித்தது.

இவளால் அவர்களுடைய மீட்டிங் நேரம் தள்ளிப்போக அடுத்த மீட்டிங் கேன்சலாகி 10 கோடி லாஸ் ஆகிகிவிட்டது.
'எல்லாம் இவளால் வந்தது' ஆத்திரத்தில் தன் கோட்டை கழற்றி எறிய அப்போதுதான் அவனை கவனித்தவள் எழுந்து அவன் அருகில் வர அவள் முழங்கையோடு பிடித்து இழுத்தவன் கோபமாக ஏதோ பேச வாய் எடுக்க
அவள் காதைப் பொத்திக் கொள்ளவும் அவனுக்குத்தான் எங்காவது சென்று முட்டிக்கு முட்டி கொள்ளலாம் போலிருந்தது.

அவன் இன்னும் பேசவில்லை என்பதை அறிந்தவள் மெதுவாக கையை எடுக்க பல்லை கடித்துக்கொண்டே

"என்ன வேணும் உனக்கு... எதுக்கு இங்க வந்து ரகளை பண்ணிட்டு இருக்க?" என்றான் முறைத்தவாறு...

"என் கால் வரவும் கட் பண்ணி சவிட்ச் ஆப் பண்ணி வெச்சீங்கல்ல... அதுக்குத்தான்...." மிடுக்காக கூறியவளை பார்த்து முறைக்க மட்டுமே முடிந்தது அவனால்....

"ஷிட்..." என்றுவிட்டு கையை உதறியவன் அருகிலிருந்த சோபாவில் அமர மறுபடி அவனிடம் வந்து நின்றாள்.

"எதுக்காக என் கால கட் பண்ணீங்க?" என கேட்க அவளை நிமிர்ந்து முறைத்து விட்டு கீழே குனிந்து விட்டான்.

"கேக்குறேன்ல.... சொல்லுங்க மிஸ்டர் தேவமாருதன்....." என அவனை பெயர் சொல்லி அழைத்து மேலும் கடுப்பேற்ற... ஏற்கனவே கோபத்திலிருந்தவன் வார்த்தையை விட்டான்.

" உன்னை எனக்கு புடிக்கல.... போதுமா? ஐ ஹேட் யூ....ஐ ஹேட் யூ எவர்..." என்று கத்த அவன் தந்த வார்த்தைகளுக்கு பதிலடி கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கில் அவனை விட அதிகமாக நெருப்பை அள்ளி வீசினாள் பாவை...

"புடிக்கல....ஹ்...நல்லா இருக்கு... அவ என்னடான்னா உங்களுக்கு பொண்டாட்டி அவங்கறா... இப்போ நீங்க என்ன புடிக்கலங்குறீங்க... ஓ...ஓ... அவ உயிரோட இருக்கான்னு தெரிஞ்சிருச்சுல்ல.... அதான் சாருக்கு கட்டின பொண்டாட்டியை புடிக்காம போயிருச்சு..." எனவும் தீச்சுட்டார் போல் எழுந்தவன் அவளுக்கு அடிக்க கூட தோன்றாமல் "கதீர்....." என ஆபீஸே அதிரும்படி கத்த அவளும் அவன் கோபத்தில் நடுங்கிப் போனாள்.
அவன் கோபம் தெரிந்த ஒன்றுதான் என்றாலும் இது போன்ற ஆர்.கே ஐ அவள் பார்த்ததேயில்லை.... அதுமட்டுமில்லாமல் அவன் கண்ணில் தெரிந்த வெறுப்பு தனக்கானது என்பதில் முற்றிலும் உடைந்து போனாள்.

"தன்னை வெறுத்து ஒதுக்கி விட்டு எங்கே தன்னை இனிமேல் பார்க்கவே மாட்டானோ" என பயந்தவள் "தே.. " என அழைக்கப் போக அவன் அழைத்ததில் நடுநடுங்கிப் போய் வந்து நின்ற கதிரிடம்

"மரியாதையா....இவளை இப்பவே இங்கே இருந்து கூட்டிட்டு போய்டு.... இல்லன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என கூற அவனின் குரலில் இருந்த கோபத்தில் மிரண்டுபோய் அஷ்வினியை பார்க்க அவளோ பயத்தில் உறைந்து நடுங்கிக் கொண்டே இருக்கவும் தனக்கிருந்த கோபத்தில் அவளை பார்க்க தவறியவன்

"நான் சொன்னது காதுல விழுந்துதா... இல்லையா?" என மறுபடி கத்தியதில் தன்னிலை அடைந்து கண்ணீருடன் வெளியேறினாள்.

அவள் சென்றவுடன் எல்லா மீட்டிங்களையும் கேன்சல் செய்துவிட்டு மேல் தளத்தில் இருக்கும் ஒரு பூட்டிய அறைக்கு சென்றான்.
கோபத்தை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் மட்டுமே அங்கு செல்வான். அங்கு சென்று கூட பல வருடங்களுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் கதவை திறக்கும் போது அவன் கைகள் ஏனோ நடுங்கின... அந்த தளத்தில் யாரும் வேலை செய்யவில்லை என்றாலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இந்த மாடிக்கு கதிர் மட்டுமே வந்து போவானே தவிர மறந்தும் கூட அவனுக்கு ஞாபகம் வராமல் பேச்சை மாற்றி விடுவான்.
அதனாலோ என்னவோ இந்த தளமே அவனுக்கு மறந்து விட்டிருந்தது. ஆனால் தொடர் நாட்களாக அஷ்வினியின் வார்த்தைகள் அவனை அஷ்வினி வருவதற்கு முன் இருந்த ஆர்.கே ஆகவே மாற்றி விட்டிருந்தது.

தன்னைத் திடப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைய அங்கே அழகே உருவான ஒரு 12 வயது சிறுமி கையில் பொம்மையுடன் சிரித்தபடி நின்றிருக்க... ஆனால் துரதிஷ்டவசமாக அவள் போட்டோவில் மாலை தொங்கிக் கொண்டிருந்தது.
தன்னை நிலைப்படுத்த முடியாமல்
"ஆரா...." என்றவாறு அவள் முன் மண்டியிட்டான் தி கிரேட் பிஸ்னஸ் மேக்னட் ரிஷிகுமார் தேவமாருதன்.

தொடரும்.........

20-04-2021
 
Rishi 24

Member
Vannangal Writer
Team
Messages
54
Reaction score
33
Points
18
அத்தியாயம் 09 ❤️

வீட்டிற்கு வந்தவளுக்கு இன்னும் படபடப்பு குறையாமல் இருக்கவும் கிச்சனுக்கு சென்று அருகில் இருந்த ரெஃப்ரிஜிரேட்டரை திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து இரண்டு மிடர் குடித்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஹாலுக்கு வந்து அமர்ந்தாள்.

இதுநாள் வரை அவளை பாதிக்காத கோபம் இன்று தன்னை வெறுத்து விடுவானோ என்ற பயத்தில் குழம்பி கத்தி அழ வேண்டும் போல் இருந்தது. ரூமிற்கு செல்லலாம் என எழுந்தவள் ஆரவ் படியிறங்கி வருவதை கண்டு அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டு

" ஆரு...என்னாச்சு? ஏதாவது உடம்புக்கு முடியலயா? ஏன் காலேஜ் போகாமல் இருக்க?" அவளது கேள்வியில்

"அதெல்லாம் ஒன்னும் இல்ல அஷ்வி... எங்க ரெண்டு கேங்கையும் சஸ்பெண்ட் பண்ணியிருக்காரு உன் அருமை புருஷன்" என்றான் படி இறங்கியவாறே...

சற்று விலகியிருந்த பயம் மீண்டும் வந்து ஒட்டிக்கொள்ள.... அவளுடைய வார்த்தைகளும் தடுக்கி வந்து விழுந்தது.

"எ... ஏன்?" என்று அவள் கூறிய விதத்தில் அவளிடம் பழகிய நாட்களில் இருந்து அவளிடம் கண்டிராத பயம் அவள் குரலில் இருக்கவும் அவசரமாக அவளிடம் நெருங்கி அவளது தோள்களைப் பற்றினான் நண்பன்.

" என்னாச்சுடி... எதுக்கு பயந்த மாதிரி இருக்க?"

"அ...அது...நத்திங் ஆரு...... எனக்கு ஒன்னில்ல..." மறுபடி திக்கி பேசியவளை பார்த்து ஏதோ சரியில்லை என நினைத்தவன் அவசரமாக எழுந்து சென்று தண்ணீரை எடுத்து குடிக்க வைத்து விட்டு

" என்னாச்சு....எங்கேயோ கிளம்பி போனியே...? அங்க ஏதாவது நடந்துதா?" என அவளை பார்த்து கேட்க அவள் சம்மந்தமே இல்லாமல்

"அவங்க வாழ்க்கைல அதுக்கப்புறம் என்ன நடந்துதுன்னு இன்னைக்கு எனக்கு தெரிஞ்சாகனும்" என்றவளின் உறுதியான பேச்சு யோசிக்க வைத்தாலும் அவள் நிலையை அறிய விரும்பி

" பட்...நான் கேட்ட கேள்விக்.." என்று தொடங்க அதை தடுத்து

"நான் அதுக்கப்புறம் என்ன நடந்துதுன்னு கேட்டேன்" என மறுபடி கூறவும் இதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என விட்டவன் தொடர்ந்தான்.

பிளாஷ்பேக் ஸ்டார்ட்...

ராகேஷின் சூப்பர் எனும் கை அசைவிற்கு அவளும் அதனை ஆமோதிப்பது போல் கண்களை மூடித் திறப்பதை ரிஷி கவனிக்கவில்லையாயினும் அதனை நான்கு ஜோடி கண்கள் கவனிக்க தவறவில்லையென்பதை ராகேஷ் அறியவில்லை...

ஒரு ஜோடி கண்கள் அந்த வழியால் வந்த ஆருவுடையது... மற்றையது வருணுடையது. ஆம் அமர்ந்திருந்தவர்களில் வருண் மட்டுமே அதனைக் கண்டு திடுக்கிட்டான். இருந்தாலும் ராகேஷின் மீதிருந்த நம்பிக்கையில் அதனை விட்டு விட்டான். ஆரு கூட தன் அண்ணனுக்கு நிகரான மற்றொரு அண்ணன் என்ற நினைப்பில் ராகேஷை பார்த்து சிரித்துவிட்டு அதை விட்டுவிட்டான்.

(( அதுவே மூவரினது இடைவெளிக்கு பின்னாளில் காரணமாயிற்று..... (ரிஷி,ஆரவ்,வருண்) ))

ஆரவ் ரிஷியின் ஸ்டுடென்ட் ஐடி கார்டை கொடுக்கவே காலேஜ்க்கு வந்திருந்தான். அவன் அப்போது ப்ளஸ்டூ படித்து கொண்டிருக்க ரிஷி காலேஜ் நான்காம் வருடம்.
இதனால்தான் அஷ்வினிக்கு ரிஷியின் கடந்த காலம் தெரியாமல் போயிற்று...

தன் மகனாய் நினைக்கும் தன் தம்பி வரவும் காதலை ஓரத்தில் வைத்து விட்டு அவனிடம் வந்து

"என்ன ஆரு.....என்னாச்சுடா? காலேஜுக்கு வந்திருக்க? என அக்கறையாக விசாரிக்கவும் அதில் ராகேஷ் நினைப்பை மறந்து

"இல்லடா.... ஐடிய நீ வீட்லயே விட்டுட்டு வந்துட்ட... அதான்...." என்றவன் அதை நீட்ட வாங்கிய ரிஷி அவன் காதில்

" ஸ்கூல் கட் பண்றது இது ஒரு சாக்கு ஒனக்கு "

"சத்தியமா இல்லடா வேணுன்னா நீயே பாரு... யூனிபார்ம்ல தான் வந்திருக்கேன்..." என்க அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு

" சரி சரி விடு.... ஒரு விஷயம் உங்கிட்ட சொல்லணும்"

"என்ன?"

"என் பின்னாடி மஞ்சள் கலர் தாவணில ஒரு பொண்ணு நிற்கிறால.... அவள பாத்துட்டு கெளம்பு... வீட்டுக்கு வந்து விஷயத்த சொல்றேன்.." என்றவுடன் கொஞ்சம் எட்டிப் பார்க்க அது அனன்யாவாக இருக்கவும் அவன் முகத்தில் குழப்ப ரேகைகள் படர்ந்தன. அதனை கண்ட ரிஷி குறும்புடன்

"பாத்துடா அது என் ஆளு...." என்றுவிட்டு புன்னகைக்க ரிஷியை மேலும் கீழும் பார்த்த ஆரவ்

"அடப்பாவி....அம்மாகிட்ட போய் உங்க மருமகன்னு காட்ற மாறி காட்ற... வெளங்கிடும்..." என தலையில் அடித்து விட்டு செல்ல அவனும் சிரித்து விட்டு தன் இடத்திற்கு வந்து அமர்ந்து அவளைத் தேட அவள் போய் விட்டதாக கூறவும் அவனும் தன் நண்பர்களுடன் வகுப்பிற்கு சென்று விட்டான்.

ஃப்ளாஷ்பேக் ஸ்டாப்...

கேட்டுக் கொண்டிருந்த அஷ்வினி திடீரென

" நீ இப்போல்லாம் அவர அண்ணன்னு மரியாதயா கூப்பிட்ற... அப்போ வாடா போடான்னு பேசியிருக்க" எனவும் முறைத்தவன்

" கதல்லடி சொல்லிட்டு இருக்கேன்... சும்மா நொய் நொய்ங்காம கேளு.... என்றவனை கண்டுகொள்ளாமல் மறுபடி

"அவரும் நாம கூப்பிடுற மாதிரி ஆருன்னு இப்போல்லாம் ஏன்டா கூப்பிட்றது இல்ல...?"என்ற கேள்வியில் அவன் முகம் வாடிப்போய்

" அதெல்லாம் அவர் காதலிக்க ஆரம்பிச்சு வெளிநாடு போற வரதான் அஷ்வி... அதுக்கப்புறம் எல்லாம் மாறிடுச்சி...." என்றவனின் குரலில் இருந்த வருத்தம் அவளையும் தொற்றிக்கொள்ள பெருமூச்சுடன்

" சரி சொல்லு...." என்றவுடன் மீண்டும் முறைத்தவன்

" திரும்ப இடைல கேள்வி கேட்டா சொல்லமாட்டேன் பாத்துக்க..." என்று மிரட்டவும் அவள் வாயை மூடி விட மீண்டும் தொடர்ந்தான்.

பிளாஷ்பேக் ஸ்டார்ட்......

அன்றைய இரவு நடந்த அனைத்தையும் ஆருவிடம் சொல்லி விட்ட நிம்மதியில் அவன் உறங்கி விட ஆரவ்விற்குத்தான் நெருடலாக இருந்தது. கொஞ்ச நேரம் தூங்கும் அவனையே பார்த்திருந்து விட்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டவன் தன் அறைக்குள் சென்று உறங்கினான்.

காலை.....

அவனுக்கு பிடித்தமான ப்லக் கலர் யமஹா பைக்கில் ஏறிய ரிஷி வழமைக்கு மாற்றமாக அவள் பேருந்து பேருந்துக்காக காத்து நிற்கும் சாலையில் செலுத்தினான்.
விதி இன்றைய நாள் சந்தோஷத்தில் கழி ராசா... என்று எழுதி விட்டதுபோல் தோழிகள் தவிர்த்து அவள் மட்டுமே நீல தாவணியில் இருக்க உற்சாகமாக அவள் அருகில் கொண்டு போய் பைக்கை நிறுத்தவும் அவள் தலை கவிழ்ந்து நின்றவாறே ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்றாள். அவள் பயத்தை கண்டு சிரித்தவன் " அனன்யா " என்று அழைக்க அவனை விழியுயர்த்தி படபடக்கும் விழிகளோடு பார்த்து விட்டு மறுபடி தலை குனிய அவள் கூர் விழிகளில் அவன்தான் சொக்கிப் போனான்.

"இவ எப்போ நம்மல பார்த்து.... நாமே எப்போ லவ்வ சொல்லி...ஹூம்..." என மனதில் பெருமூச்சு விட்டவன்

" இன்னைக்கு பஸ் இல்ல... இந்த பக்கம் மட்டும் இல்ல எந்த பக்கமும் பஸ் இல்ல... வா நான் ட்ராப் பண்றேன்.." என்று ஒருவாறு சொல்லி முடித்து அவளை பார்க்க அவளோ பயத்துடன் அவனை பார்க்கவும் "அனு..." என்றான் மென்மையாக...
அவன் மென்மை தந்த தைரியத்தில் பைக்கில் ஏறி அமர்ந்து அவள் தோளை பற்ற அவளுடைய உரிமையான செயலில் அவன் மீண்டும் கிறங்கிப் போனான்.

காலேஜுக்குள் ஜோடியாக நுழைந்ததை வாய்பிளந்து பார்த்தனர் அனைவரும்... ஏனெனில் ரிஷியை பற்றித் தான் அவர்களுக்குத் தெரியுமே! காதலர்களை எப்பாடுபட்டாவது சேர்த்து வைப்பானே தவிர காதலிக்கமாட்டான்.
அப்படிப் பட்டவன் இன்று ஒரு பெண்ணுடன் வந்தாள் அவர்களும் என்னதான் செய்வார்கள். அவளை வாசலில் இறக்கிவிட்டு அவளை பார்க்க அப்போதும் அவள் தலைகவிழ்ந்து நிற்கவும்

" ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல மாட்டியா..?" என்றான் அவள் குரல் கேட்கும் ஆவலில்.... அதனை கேட்டு மெலிதாக சிரித்தவள்

" தேங்க்ஸ் அண்.." எனப் போக அவனோ அவசரமாக கைகளை மேலே தூக்கி கும்பிட்டு

"அம்மா தாயே.... நீ தேங்க்ஸ் சொல்லலனாலும் பரவால்ல.... இந்த அண்ணன் மட்டும் சொல்லிராதமா..." என்று கண் சிமிட்டி சிரிக்கவும் அவன் சீண்டலில் புன்னகைத்தவாறே

"தேங்க்ஸ் ரி..ஷி" என்று கூற தன்னை இதுவரை ஆர்.கே என்றே அழைத்து கேட்டு இருந்தவன் அவள் அழைப்பில் மொத்தமாக வீழ்ந்தான்.

ஃப்ளாஷ்பேக் ஸ்டாப்....

ஆரவ்வை மறுபடி சுரண்டிய அஷ்வினியை கொலை வெறியுடன் பார்த்தான் ஆரவ்.

" இல்ல ஆரு... அந்த மினுக்கி அனன்யா இருக்கால.. (ஏனோ அவள் பெயர் கேட்டாலே கோபம் வந்தது..) அவ உண்மையிலேயே ரிஷின்னுதான் கூப்டாளா? என்று தன் சந்தேகத்தை கேட்க அவன்

" இப்போ இது ரொம்ப முக்கியம்..." என கேட்டதும் அவள் சமாளிப்பாக சிரிக்க...

"இப்போ சொல்லனுமா வேண்டாமா...?" என்ற கேள்வியில் திடுக்கிட்டவள் அவசரமாக

" சொல்லணும் தான் ஆரு......பட்...." என இழுக்க தலையில் அடித்தவன்

" ஆமா....ரிஷின்னுதான் கூப்புடுவா....இப்போ அதுக்கு என்னங்குற...?" என எகிறியவனிடம்

" ஆனா அவ தேவ்னு கூப்பிடதா தானே சொன்னா" என்று கூற அவளின் மனதை அவள் நன்றாக குழப்பிவிட்டிருப்பது புரியவும்

" ரிஷி...ஆர் ஆர்.கே..ன்னு தான் எல்லோரும் கூப்பிடுவாங்க அஷ்வி... இப்போ தான் தேவமாருதன்... அவ வேணும்னே உன்ன வெறுப்பேத்தி இருப்பா.." என நிதானமாக விளக்கியதன் பலனாக அவள் முகம் தெளிவடைந்திருந்தது. அதனை கண்டு நிம்மதி அடைந்தவன் திரும்பவும் கூற ஆரம்பித்தான் "இடையில் பேசக்கூடாது என்ற மிரட்டலோடு..."

ஃப்ளாஷ்பேக் ஸ்டார்ட்...

போகும் அவளையே பார்த்திருந்தவன் தனக்குத்தானே சிரித்து விட்டு வந்து பைக்கை நிறுத்தவும் இவ்வளவு நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்த நண்பர்கள் அவனை கலாய்க்க எதுவும் பேசாமல் சிரித்துக்கொண்டே இருந்தவனை பார்த்து ஜெய் வேண்டுமென்றே

"டேய் ராக்கி....நம்ம ஆர்.கே எங்கடா இன்னுமா காலேஜ் வர்ல?" என கேட்க ரிஷி காண்டாகி

" உனக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கிறத எதுக்குடா எல்லா செயல்லயும் காட்டுற...?" என வாயை அடைக்க அவன் வாய்பொத்தியதில் சிரித்த ரகு

"தேவயாடா உனக்கிது... தேவயா... ?" என கிண்டல் செய்யவும் அவனை முறைத்த ஜெய் திரும்பவும் ஏதோ பேசப் போக ரிஷி அவசரமாக

" மச்சான்... என்ன தெரியலையா நான் தாண்டா ரிஷி... உன் ஆர்.கே இப்போதுதான் காலேஜ் வந்தேன்.." எனவும் அவன் சீண்டலில் ஜெய்யும் சிரித்து விட அவன் தோளில் கை போட்டவாறே வகுப்புக்கு சென்றான்.

இடைவேளை.....

மரத்தின் அடியில் அமைதியாக படித்துக்கொண்டிருந்த அனன்யாவை சில சீனியர் மாணவர்கள் சூழ்ந்து கலாய்த்துக் கொண்டிருக்க அவள் கண்களில் நீர் திரள தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.
ராகேஷுடன் பேசியவாறே அந்த வழியால் வந்த ரிஷிக்கு கோபம் வர முஷ்டியை இருக்க பொத்த அவனை பார்த்த ராகேஷின் கண்களில் குரோதத்துடன் கூடிய ஒரு வெற்றிப் புன்னகை மின்னலென வந்துபோனதை ரிஷி காணவில்லை ஆயினும் அவனை அழைத்துக் கொண்டே அவனுக்கு எதிரே வந்த வருண் கண்டுகொண்டான்.

நொடிக்குள் போய்விட்ட அந்த பார்வை "ரிஷிக்கு இவனால் ஆபத்து..." என்பதை உணர்த்தினாலும் "இவன் ரிஷிக்கு என்ன செய்து விடுவான்... இவனின் உயிர் நண்பன் அவன்... நாமதான் தப்பா புரிஞ்சுகிட்டோமோ" எனும் எண்ணத்தில் அவனை தப்பாக நினைக்க மனம் வராது புன்னகையுடனே ராகேஷை நெருங்க அதற்குள் ரிஷி சீனியர்களை நெருங்கி அவர்களை திட்டி அனுப்பி விட்டு அவளிடம் நெருங்கி " அனு...." என அழைக்க இவ்வளவு நேரம் பயத்தில் இருந்தவள் அவன் அழைப்பில் " ரிஷி..." எனும் கேவளுடன் அவனை தாவி அணைத்துக்கொள்ள அவளை தானும் அணைத்து அவள் முடியை கோதிவிட அவள் அழுகை மேலும் கூடியது.
அவள் பயத்தில் அழுகிறாள் என நினைத்தவன் அவள் அழுகை அடங்கியதும் அவள் முகத்தை தாங்கி தன் கட்டை விரலால் அவள் கண்ணீரை துடைத்து விட்டு

"ஏய்...இப்போ எதுக்கு அழற...? அதான் நா வந்துட்டேன்ல...."

"ரி...ரிஷி.. "

"என்னடா... சொல்லு?" என்றான் கனிவாக... அதில் கொஞ்சம் சுதாரித்தவள்

"அவங்க என்ன படுக்...." என்று விட்டு மறுபடி அழ அவள் என்ன சொல்ல வருகிறாள் என புரிந்தவன் அவளை இறுக்கி அணைக்க அவளும் அதில் அடங்கி போனாள்.
ஆனால் அவன் கோபம் தான் அடங்காமல் தறிகெட்டு ஓடியது.
"என் அனுவிடமே அவன் எப்படி அப்படி கேட்கலாம்?" எனும் நினைப்பே அவன் கோபத்தை மேலும் கூட்டியது. அவனுக்குமே அவன் கோபம் புதிதுதான்.... இதுவரை கோபமே வந்திராததால் அவனுக்குமே அது அதிர்ச்சியாத்தான் தோன்றியது.

அப்போதுதான் தான் அவளை காதலிப்பதால் தான் இந்த கோபம் வருகிறது... என மண்டையில் உறைக்க...ராகேஷ் சொல்லும்போது தெளியாத மனது இப்போது தன் காதலை உணர்ந்து தெளிந்தது.
அவளை வகுப்பிற்கு அனுப்பிவிட்டு இவர்களிடம் வர ராகேஷுடன் வருணும் சேர்ந்து சிரிக்கவும் அவனுக்குத்தான் சங்கடமாகிப்போனது. அவர்களை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்தபடி இருக்க

இருவரும் கோரசாக " நாங்க பார்க்கல மச்சான்..." என கலாய்க்க.... ராகேஷின் இயல்பான பேச்சில் நடந்தவற்றை மறந்து சேர்ந்து கலாய்த்தான் வருண்.

அந்த நாள் தன் காதலை உணர்ந்த உற்சாகத்தில் அரட்டையில் கழிய....காலேஜ் முடியும் நேரம் இடியென வந்து விழுந்தது "அனன்யாவை காணவில்லை " எனும் செய்தி...

( இது யாவுமே ராகேஷின் பிளான் என கடவுளை தவிர வேறு யாரும் அறியவில்லை.....)
 
Rishi 24

Member
Vannangal Writer
Team
Messages
54
Reaction score
33
Points
18
வீட்டுக்குச் செல்ல பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தவனிடம் ராகேஷ்தான் வந்து சொன்னான் அனன்யா கடத்தப்பட்டதை.... அதனை கேட்ட மாத்திரத்தில் அவன் பட்ட அதிர்ச்சி ராகேஷை சந்தோஷத்திற்கு உள்ளாக்கியது. அவன் தோள் தொட்டு வருந்துவபன் போல்

"அவ வீட்டுக்கும் கேட்டாச்சிடா.... அங்கேயும் இல்ல..... மொபைல் வேற சுவிட்ச் ஆப்னு வருது..." என்றவனின் பேச்சில் அவனுக்கு பதறியது.

"இ....இ... இல்ல....அவளுக்கு ஒன்னும் இல்ல..." என தனக்கே சமாதானம் கூறி விட்டு ராகேஷிடம்

" நீ... நீ....இங்க எங்கேயாவது தேடு... ராக்கி.... நான் வெளியில போய் பார்த்துட்டு வரேன்..." என்றவன் புயலென வெளியேறினான். இதை ஏன் அவன் கூற வேண்டும் என்பதை யோசிக்கவெல்லாம் அவனுக்கு நேரமே இல்லை....
அவனை பதறியதை பார்த்த சந்தோஷத்தில் அவள் இருக்கும் வகுப்பான தங்கள் வகுப்புக்குச் சென்றான் ராகேஷ்.

அவளோ கால் மேல் கால் போட்டு ஒரு ஆப்பிளை சுவைத்துக் கொண்டு இருந்தாள்.
( நம்ம அனன்யாவா இதுன்னு ஷாக்காகுறது தெரியுது.... வாய மூடிக்கொங்க)

வகுப்புக்குள் நுழைந்தவன் அவளை இழுத்து சுவற்றில் சாய்த்து அவள் இதழை சிறை செய்ய அவளும் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக இருந்தாள். அவளை அனைத்து விடுவித்தவன்

"தேங்க்ஸ் டீ.....ரொம்ப தேங்க்ஸ்.... அவன் துடிக்கிறது பாக்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா.... ஐ லவ் யூ சோ மச்..." என்றவாறே அவளை தூக்கி சுற்றி இறக்கியவனின் பட்டனை திருகியவாறு

" அந்த சொத்து முழுதும் எப்போ ராக்கி நம்ம கைக்கு வரும்.... இந்த நாட்டிலேயே குப்பை கொட்டிக் கொட்டி போரடிக்குது ராக்கி.... நாம எப்போ அந்த பணத்த எடுத்துட்டு கிளம்புறது?" என்றவளிடம்

"கொஞ்சம் பொறுமையா இருடி.... இன்னக்கு உன்னை தேடி அலஞ்சவன் நாளைக்கு நிச்சயமா பயத்திலேயே லவ்வ சொல்லிடுவான். அவன் லவ் சொன்னதுக்கு அப்புறம் அவன் கிட்ட இருந்து ஸைன் மட்டும் வாங்கிடு.. மத்தத நான் பார்த்துகிறேன்" என்று கன்னத்தில் இதழ் பதித்து அவளை மறுபடி அணைத்தான்.

(( இவை யாவுமே அந்த வகுப்பின் மூலையில் பொருத்தியிருந்த கேமராவில் பதிந்து போனது. ஒவ்வொரு வகுப்பிற்கும் கேமரா இருப்பது ரகுநாத்தையும் ரிஷியையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. தன்னுடைய கல்லூரியின் வளர்ச்சிக்கு எந்த ஆசிரியர்கள் தடை என்பதை கண்டுபிடிக்க ரகுநாத் வைத்த திட்டம் அது..... அதற்கான கண்ட்ரோல் ரூம் சார்மேன் ரூமிற்கு பக்கத்தில் அண்டர் கிரவுண்டில் இருந்ததே தவிர வேறு யாரும் பார்த்தது இல்லை.... இறக்கும்போது தான் அதன் கீயை ரிஷியின் கைகளில் பொத்தினார். அவரின் வேண்டுதலுக்கேற்ப அவன் ஆருவிடம் கூட அதை மறைத்து விட்டான். அதேநேரம் மாதம் ஒரு முறை அதை யாருக்கும் தெரியாமல் செக் பண்ணுவான்.))

சுமார் இரண்டு மணி நேரமாக பைத்தியம் பிடித்தவன் போல் சுற்றிவிட்டு காலேஜுக்கு கலங்கிய கண்களுடன் நுழைந்தவன் ராகேஷுக்கு அழைக்க அவளை அணைத்தவாறே அட்டெண்ட் செய்து காதில் வைக்கவும்

"ம...மச்சி....இதுக்கு மேல முடியலடா... அவ எனக்கு வேணும் மச்சி... ப்ளீஸ் டா..." என அழுதுவிடுபவனைப் போல் பேசியவனை பார்த்து சந்தோஷத்தில் அவளுக்கு முத்தமிட்டவன்... பொய்யாக

" நீ முதல்ல நம்ம கிளாஸ் ரூம் வா...." என்று விட்டு கட் பண்ணி விட அங்கே விரைந்தான் ரிஷி.
ராகேஷ் வாசலில் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருக்க அவனிடம் விரைந்து வந்து அவன் கைகளை பற்றியவன்

"எ.....என்னாச்சு ராக்கி....." எனவும் எதுவும் பேசாது கண்களை திருப்ப அவன் பார்வை போகும் திசையைப் பார்த்து தானும் திருப்ப அங்கே அனன்யா தன் முகத்தை மூடி அழுது கொண்டிருப்பதைப் பார்த்து சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனவன் அவனை இழுத்து அணைத்து விடுவிக்க

"டேய்.....டேய்.... போதும்டா பார்த்து... அவ அழுதுகிட்டே இருக்கா... என்னன்னு கேட்டா சொல்ல மாட்றாடா... நீயே போய் உன் ஆளுகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ..." என சிறு சிரிப்புடன் அனுப்ப அவசரமாக உள்ளே சென்றவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
அவனுக்கு அவளிடம் என்ன நடந்தது என கேட்க துணிவு வரவில்லை.... அதை கேட்டு அவள் பயத்தை பார்க்க அவனால் சத்தியமாக முடியாது என்பதால் பிறகு பார்க்கலாம் என்று விட்டு விட்டான். அவன் செய்த இரண்டாவது மடத்தனமாக அதுவே ஆகிப்போனது.
அவளை அமரவைத்து ஆசிரியர் டேபிளில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிக்கக் கொடுத்ததும் தான் அவள் அழுகை சற்று மட்டுப்பட்டது.

அவள் கண்கள் மட்டுமே கலங்கி இருந்ததே தவிர அவளுக்கு கண்ணீரே வரவில்லை என்பதனையும் அவன் காணத் தவறியது அவன் துரதிஷ்டமே....
இந்த இரண்டு மணி நேரமும் அவன் தொலைத்த அவன் உயிர் திரும்ப வந்ததும் தனக்கு ஏற்பட்ட நிம்மதியில் தான் அவனின் காதலின் ஆழத்தை அவன் உணர்ந்திருந்தான். பார்த்து கொஞ்ச நாட்களே ஆனாலும் அவன் நெஞ்சமதில் அவள் நீக்கமற நிறைந்திருப்பதை இந்த பிரிவினை அவனுக்கு பொட்டில் அடித்தாற்போல் எடுத்துக் கூறுயதில் உண்மையில் அவன் திகைத்து தான் போனான்.
அதற்கு மேலும் அவளை வருந்த விடாது மீண்டும் ஒரு சமாதான போர் நடத்தி அவள் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்தான். நாளை காதல் சொல்ல போகும் சுகத்தில் நிம்மதியாக உறங்கினான் அவன்.... அவனுடைய கடைசி நிம்மதியான உறக்கம் அதுவாகத்தான் இருக்கப்போகிறதென்பதை யார் கூறுவது அவனுக்கு...

காலை......

காலையிலேயே குளித்து ப்ரஷ்ஷாகி விட்டு வந்தவன் அவளுக்கு பிடித்த ஊதா நிறத்தில் டி-ஷர்ட் அணிந்து கீழே வர அவனை எதிர்கொண்ட ஆரவ்

"என்ன ரிஷி தம்பி... என்னாச்சு? இன்னைக்கு தௌஸண் வாட் பல்பு போட்ட மாதிரி மூஞ்சி இவ்வளவு பிரகாசமா இருக்கு.... அதுவும் உனக்கு புடிக்காத ஊதா கலருல வேற ட்ரஸ் போட்டிருக்க?" என்று விட்டு மேலும் கீழும் பார்க்க அவனோ புன்னகைத்தவாறே

"அது ஒன்னுமில்ல ஆரு அண்ணா..... இன்னக்கி என் ஆளு கிட்ட ப்ரொபோஸ் பண்ண போறேன். அதுக்கு தான் அவளுக்கு புடிச்ச கலர் டிரஸ்..." எனவும் அவனுடைய அண்ணா என்னும் விழிப்பில் சிரித்தவன்

"ஆஹா......ஆஹா... என்ன தவம் செய்தேன் இந்த அண்ணன் எனும் விழிப்பை என் காதில் கேட்க..." என நாடக பாணியில் பேசியவனின் தலையில் குட்டிய ரிஷி

" கொழுப்பு கூடிப் போச்சுடா உனக்கு..." எனவும் ஆரவ் தலையை தடவிக் கொண்டே

"தேங்க்ஸ் பார் யூர் இன்பர்மேஷன் பிரதர்...."என்று விட்டு சிரிக்க " உன்ன...." என அடிக்க கையை ஓங்கவும் "எஸ்கேப்" என்றவாரே ஓடிவிட்டவனைப் பார்த்து சிரித்து விட்டு வெளியேறினான்.

அன்று சனிக்கிழமை விடுமுறை நாளாதலால் சற்று தாமதமாக எழுந்த அனன்யா ரிஷியிடமிருந்து அழைப்பு வரவும் கண்கள் மின்ன அட்டெண்ட் செய்து காதில் வைக்க அவன் குரலும் உற்சாகமாகவே வந்து விழுந்தது.

" குட் மார்னிங் அனு"

"ம்... குட் மார்னிங் ரிஷி... என்ன காலங்காத்தால" எனவும் இவ்வளவு நாள் ஓரிரு வார்த்தை மட்டுமே பேசி இருந்தவள் இன்று அதைவிட சற்று அதிகமாக பேசவும் குதூகலம் அடைந்து

"ஹே பியூட்டி.... உனக்கு பேச கூட தெரியுமா?நீ ஊமன்னுல்ல நெனச்சிட்டு இருந்தேன்..." என கிண்டலடிக்க அவள்

" ரிஷி..."என சினுங்க அதிலும் தன்னைத் தொலைத்தவன் அவளை காக்க வைக்காது

"இன்னைக்கு உன்ன மீட் பண்ணலாம்னு இருக்கேன்.... நம்ம காலேஜுக்கு முன்னுள்ள பார்க்குக்கு வா..." என அவள் பதிலை எதிர்பார்க்க இந்த கேள்வியை ஏற்கனவே எதிர்பார்த்ததுபோல் "ம்....." என்று மட்டும் கூறிவிட்டு கட் பண்ணியவள் எழுந்து குளியலறை சென்றாள்.
குளித்து முடித்து வந்தவுடன் நேராக ராகேஷுக்கும் விஷயத்தை கூற அவனும் தான் நினைத்தது நடந்து கொண்டிருக்கும் மகிழ்ச்சியில் தத்தளித்தான். அவனிடம் கூறிவிட்டு அவளும் எதேச்சையாக ஊதா நிற பாவாடை தாவணி அணிந்து கூந்தலை பிண்ணி சைடில் விட்டு கிளம்பினாள். அதே நேரம் தன் தம்பிக்கு அழைத்து அவனையும் அழைக்க அவனும் வேறு வழியின்றி அங்கே வந்தான்.

ஆரவ் அப்போது தான் காரில் வந்து இறங்க முற்பட அனன்யா ராகேஷ்ஷுடன் பைக்கில் வருவதை கண்டு அதிர்ந்து போனான். அப்படி இருந்தும் ராகேஷ் மீது சந்தேகப்பட்ட அவனால் இயலவில்லை.... ஏனெனில் அவன் மேல் உள்ள நம்பிக்கையை ராகேஷ் காப்பாற்றிய விதம் அப்படி...

அவளை இறக்கிய ராகேஷ் அவன் கன்னத்தை காட்ட அவளும் அவன் கன்னத்தில் இதழை அழுத்த பதித்துவிட்டு நிமிரவுமும் தான்.... அவ்வளவு நேரம் ஸ்டீரிங் கியரில் தலையை வைத்து இருந்த ஆரவ் நிமிர்ந்தான். அதனால் அந்த காட்சியை பார்க்க வாய்ப்பில்லாமல் போனது... பார்த்திருந்தால் இவ்வளவு வலியையும் துரோகத்தையும் அனுபவிக்க வாய்ப்பு இருந்திருக்காது ரிஷிக்கு....

அந்த பார்க் முழுவதும் அவளுக்குப் பிடித்த கலரில் அன்று அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தது. உள்ளே நுழைந்தவள் அவன் செல்வச் செழிப்பில் பிரமித்துப் போனாள்.... ராகேஷ் சொல்லக் கேட்டிருக்கிறாளே தவிர இந்த அளவு பணக்காரன் என அவள் அறிந்திருக்கவில்லை.... அவன் பார்வையில் அன்றைய பார்க் செலவு மட்டும் வேறும் தூசு என்றாலும்..... அவள் பார்வையில் அது லட்சத்தை தொடும்.பிரமித்துப் போய் நின்றிருந்தவளை அவள் மீது விழுந்த பூக்கள்தான் நினைவுக்கழைத்தது.
திடுக்கிட்டு நிமிர்ந்தவளின் முன்னால் நீண்ட தூரத்திற்கு ரெட் கார்பெட் விரித்து இருக்க.... அதில் கையில் பொக்கேயுடன் புன்னகை மாறாமல் கண்களில் காதல் வழிய நடந்து வந்து கொண்டிருந்தான் ரிஷி.அவள் அருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்து தன் கையில் இருந்த பொகேயை அவளிடம் நீட்டி

" லவ் யூ அனு..." எனவும் எனவும் வெட்கப்பட்டுக் கொண்டே இல்லையில்லை.... வெட்கப்படுவது போல் நடித்துக்கொண்டே அதை வாங்கிக்கொள்ள அதை அவள் சம்மதமாக எடுத்துக் கொண்டவன் அவளை தூக்கினான் சுற்றினான்.
அவளை சற்று நேரத்தில் விடுவித்து விட்டு அவள் கை பிடித்து அழைத்துச் சென்று சேரில் அமர வைத்துவிட்டு ஆரவ்விற்கு மறுபடி அழைத்து வரச் சொல்லி வைத்து விட்டான்....... அவன் ஏற்கனவே வந்திருப்பது தெரியாமல்.....

தன் கூடவே எப்போதும் இருக்கும் தன் தம்பி இதிலும் இருக்க வேண்டும் என்று அவன் நினைக்க.... காதலர்கள் காதலை பரிமாறிக் கொள்ளும் போது அங்கு இருப்பது நாகரீகம் அற்றது என நினைத்து தான் உள்ளே செல்ல தயங்கினான் ஆரவ்.
ஆனால் மறுபடி அவன் அழைக்கவும் போகாவிட்டால் மனசு கஷ்டப்படும் என அறிந்தவன் அவசரமாக உள்ளே நுழைந்தான். அதன்பிறகு அன்றைய நாள் மகிழ்ச்சியில் கழிய அது புகைப்படங்களாகவும் பதிவாகியது.அதில் ஒன்றுதான் அன்று அனன்யா அஷ்விக்கு காட்டியது......அதனாலேயே ரிஷியின் கண்களில் தெரிந்த காதல் பொய்யாக இருக்கவில்லை... ஆனால் அனன்யா....

பிளாஷ்பேக் ஸ்டாப்...

தன் பாட்டில் சொல்லிக் கொண்டிருந்த ஆரவ்வை "ஆரு...ஆரு.... "என அஷ்வி உழுக்க அவளைப் பார்த்து கடுப்பில்

" என்னடி என்னதான் பிரச்சினை உனக்கு?" எனக் கேட்கவும்

"ஒரு நிமிஷம் இருடா......" என்றுவிட்டு கண்ணாடி டேபிள்மேல் இருந்த தன் போனை எடுத்து அந்த போட்டோவை அவசரமாக தட்டி பார்த்தவள் அதிர்ந்து போனாள் தன் மடத்தனத்தை எண்ணி.....

உண்மையில் அதில் ரிஷியின் கண்களில் மட்டுமே காதல் தெரிய அனன்யாவின் கண்களில் துளி கூட காதல் இல்லை.... அவள் அவனிடம் அப்படியெல்லாம் பேசக் காரணம் இன்னும் அவளை அவன் விரும்பி கொண்டு... தான் தான் இடையில் வந்து விட்டதாகவே நினைத்திருந்தாள்.
மற்றபடி அவள் ப்ரக்னண்ட் என சொன்னதை காதில் வாங்கவே இல்லை.... ஆனால் ஏமாற்றியவளை எப்படி இன்னும் காதலிக்க முடியும்? தான் தப்பாக அவனை புரிந்து கொண்டுவிட்டது அப்போதுதான் அவளுக்கு நன்றாக புரிந்தது.

அவனை உடனே காண வேண்டும் போல் இருக்க ஆனால் அவன் மீதுள்ள பயம் மீண்டும் மனதை தாக்க எதுவுமே சொல்ல முடியாது கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் வடிந்தது.
அதனுடன் அவன் இன்று நடந்து கொண்ட விதம் வேறு தன்னை வெறுத்து ஒதுக்கி விடுவான் என நினைக்க வைக்க கைகளால் முகத்தை மூடிக்கொண்டு விசும்பினாள்.இதுநாள் வரை அவளிடம் கண்டிராத பயத்தை ஏற்கனவே கண்டவன் அதைக் கண்டு அதிர்ந்து இருக்க.... எதற்கும் கலங்காதவளின் கண்களிலிருந்து கண்ணீர் வரவும் மேலும் அதிர்ந்து பதறியவாறே

"அஷ்வி.... என்னாச்சுடி? எதுக்கு இப்போ அழற?" என கேட்க அவளோ

"தே...தேவ்... நான் எதோ தப்பு பண்ணிட்டேன்..." என்றாள் விசும்பலினூடே...அவள் சொல்வது புரியாவிட்டாலும் அவள் எதையோ நினைத்து கலங்குகிறாள் என நினைத்தவன்

" நீ எதுவும் தப்பு பண்ணல அஷ்வி...அழாதடா....அண்ணா வந்தா எனக்கு திட்டு வாங்குவாங்கடி"

" இல்ல..... இல்ல.... வரமாட்டார்" எனவும்

"அவன் எதுக்கு வராமல் இருக்க போறான் அஷ்வி.... அவனுக்கு யாரையும் பிடிக்கலனாலோ..... இல்ல.... வெறுத்துட்டாலோ அவங்கள கண்ணு முன்னாடி நிக்க வேண்டாம்னு சொல்லுவான் இல்லன்னா.... அவங்க கண்ணு முன்னாடி இவன் போக மாட்டான்.மத்தபடி வீட்டுக்கு வராம இருக்கிற பழக்கம் அவருக்கு சுத்தமா கெடயாது..." எனவும்

" என்னை அவர் வெறுத்துவிட்டாரோ" என்ற நினைப்பு மீண்டும் மீண்டும் வர அவள் அழுகை இன்னும் கூடியது. அவன் வெறுத்தால் எனக்கென்ன என்ற மனநிலையில் எப்போதும் இருப்பவள் இன்று அவன் வெறுத்து விட்டால் என்ன செய்வது என பயந்து அழுகிறாள்.இது காதலினால் வந்த விளைவு என்பது அந்த மனதிற்கு எப்போது புரியுமோ... அவள் அழுவதை பொறுக்காத அவளின் உயிர் நண்பன் அவளை சமாதானப் படுத்த தொடங்கினான்.

தொடரும்...........

22-04-2021.
 
Rishi 24

Member
Vannangal Writer
Team
Messages
54
Reaction score
33
Points
18
அத்தியாயம் 10 ❤️

((அவன் சமாதானப்படுத்தி வைக்கட்டும் வாங்க நாம தேவமாருதன் என்ன ஆனாருன்னு ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடலாம்))

ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ் மேல்தளம்...

அந்த போட்டோவில் இருக்கும் சிறுமியின் முன் மண்டியிட கண்கள் அவன் கட்டுப்பாட்டை மீறி கலங்க.... அதனை அத்தனை வலியிலும் அவன் கலங்குவதை சந்தோஷமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் அவள் போட்டோவுக்கு அருகில் இரு தூன்களுக்கு இடையில் கயிற்றால் கட்டி வைக்கப்பட்டிருந்த புதியவன்.

((கூடுதல் தகவலாக அவன் உடம்பு முழுக்க வயர்கள் சுற்றப்பட்டிருந்தது அவனுக்கு தினம் தோறும் கரண்ட் ஷாக் கொடுக்கப்படுகிறது என பறைசாற்றியது.))

அவன் சந்தோஷப்படுவது பொறுக்காமல் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவிட்டு ஆக்ரோஷமாக அவன் சட்டை காலரை பிடித்து உலுக்கி

" டேய்....ஏண்டா இப்படி பண்ண? அவ என்னடா பாவம் பண்ணா உனக்கு? எப்படி மனசு வந்தது அவளுக்கு அப்பிடி பண்ண....கொழந்தடா அவ..." என்றவனின் வார்த்தைகளில் வலி நிரம்பி இருந்தது.
அவன் கண்கள் கலங்கி சிவந்து இருந்ததே தவிர...அவன் கோபப்பட்டதற்கு மாற்றமாக அவனுடைய பிடியில் பலவீனம் இருந்தது. அதற்கு மேலும் முடியாமல் அவனுக்கு முன் இருந்த நாற்காலியில் தொப்பென அமர கட்டி வைக்கப்பட்டிருந்தவன் அவன் நிலையைப் பார்த்து கத்தி கத்தி சிரித்தான்.
அவன் சிரிப்பதை வெறித்தவன்... கண்களை இறுக்க மூடி திறந்து விட்டு ஒழுங்காக எழுந்து அமர்ந்தவனின் தோற்றமே முன் இருந்தவனுக்கு கிலியை ஏற்படுத்தியது.
காலுக்கு மேல் கால் போட்டு முழங்கையை முகத்தில் பதித்து மீண்டும் அவனை ஒரு பார்வை பார்க்க அந்த பார்வை தனக்கு ஷாக் கொடுக்க ஆரம்பிக்கப்படப் போகிறது என யோசித்தவன் நடுநடுங்கிப் போனான்.
அவன் பயப்படும் ஒரே ஆயுதம் அது என்பது ரிஷிக்கு நன்றாகவே தெரியும்... கரண்ட் வால்டை கம்மியாக வைத்து கொடுக்கப்படுவதால் கட்டப்பட்டு இருப்பவனுக்கு நினைவுகள் மறந்து போகாது.

அதிகமாக கொடுத்தால் அவன் பழையது யாவும் மறந்து விடுவது உறுதி என தெரிந்ததால் தான் இந்த ஏற்பாடு... அப்படி ஷாக் கொடுத்தும் அவன் இன்னும் திருந்தவே இல்லை என்பது தான் இங்கு வேடிக்கையே!
"கதி... " என அழைக்கப் போனவனை மிரண்டு தடுத்தான் அவன்.

"நான் சொல்லிடறேன் நான் சொல்லிடறேன்..." என கூறி விட்டு ரிஷியை பார்க்க.... ரிஷியின் முகத்தில் திமிரான புன்னகை ஒன்று வந்து அமர்ந்து கொண்டது. அவசரமாக வந்த கதிரிடம் " வேண்டாம்" என சைகை காட்ட கட்டப்பட்டிருந்தவனின் நிம்மதிப் பெருமூச்சு அப்போதுதான் வெளியில் வந்தது. கூடவே திமிரும் ஒட்டிக்கொள்ள அப்போதும் திருந்தாமல்

" ஆர்.கே நான் ஒன்னு சொல்லட்டுமா?" என கேட்டவனுக்கு அமைதியே பதிலாக கிடைத்தவுடன் ஒரு சிரிப்பை உதிர்த்தவன்

"நீ ஒரு வடிகட்டின முட்டாள்டா..." என்று விட்டு மறுபடி கத்தி சிரிக்கவும் அதற்கும் ரிஷி அமைதியாக இருந்ததை அதிசயமாக பார்த்தவன்

" நீ மாறிட்டேன்னு ஒத்துக்குறேன்.... நீ பட்ட வலி அப்பிடி... என்ன செய்றது....ஹம்..." என்று விட்டு பெருமூச்சு விடவும் பற்றிக்கொண்டு வந்தது ரிஷிக்கு.... இவனிடம் ஏகிறினால் வேலைக்காகாது என அறிந்து வாயை இறுக்க மூடிக்கொண்டு அமைதியாகவே இருந்தான். இதே வேறு யாராவதாக இருந்திருந்தால் இப்போது அவன் உயிர் போயிருப்பது உறுதி.....

அவன் அமைதியை தனக்கு சாதமாக சாதகமாக எடுத்துக்கொண்ட அந்த புதியவன்

" நீ எந்த அளவுக்கு முட்டாள்னு தெரியுமா? தன் சொந்த தம்பிய கூட அடயாளம் கண்டுக்க கூட வக்கில்லாத வடிகட்டின முட்டாள்டா நீ" என்றவனின் வார்த்தைகள் ரிஷியின் கன்னத்தில் அறைவது போல் வந்து விழ அவன் கூறிய செய்தியில் அதிர்ச்சியாக எழுந்து நிற்க அவன் செய்கையை பார்த்து சிரித்த புதியவன்

"ஆரவ் தேவமாருதன்.... வெற்றி வேலோட புள்ளயும் இல்ல.... அவன் ராக்கேஷோட தம்பியும் இல்லடா முட்டாள்....அது உன் சொந்த தம்பிடா......" என அவன் உண்மையை போட்டுடைக்க கண்கள் தெறித்து விழுமளவுக்கு அதிர்ச்சியை காட்டினான் ரிஷிகுமார் தேவமாருதன்.

((போதும் போதும் நீங்களும் ஷாக்ல இருந்து அஷ்வி கிட்ட கொஞ்சம் வாங்க... ஆரவ் சமாதானப்படுத்தி முடிஞ்ச கையோட கதை சொல்ல போறான் போல... நாமளும் கேக்கலாம் வாங்க..))

அவன் எப்படி எப்படியோ சமாதானப்படுத்தி முடிந்த கையோடு தண்ணி பாட்டிலையும் கையில் வைத்திருக்க அஷ்வி

" சாரி...ஆரு... நான் இனிமே டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.... நீ சொல்லுடா..." என தலைகுனிக்க "இன்னக்கி எப்பாடுபட்டாவது சொல்லி முடித்து விட வேண்டும்" என்ற நன்நோக்கில் மீண்டும் ஆரம்பித்தான்.

பிளாஷ்பேக் ஸ்டார்ட்.....

ரிஷி காதல் சொன்ன தினத்திலிருந்து அந்த செய்தி கல்லூரி முழுவதும் பரவியது....
"அனன்யா அண்ட் ஆர்.கே லவ்" என்று பரவியதால்..... ராகேஷ் உடனான அவளின் சந்திப்புகளுக்கு இடையூறு இல்லாமல் போயிற்று....
ரிஷிகுமார் மட்டுமல்லாமல் காலேஜில் ராகேஷுக்கு கூட "ஆர்.கே" என்றுதான் பெயர் பிரபலமாகி இருந்தது. அவனின் முழுப் பெயர் "ராகேஷ் கண்ணா" என்பதுவே அதற்கு முழுக்காரணம்.

ஆர்.கே என்றால் எந்த ஆர்.கே என கேட்பார்களே ஒழிய அதை அவர்கள் கேட்பதற்கு எந்த கஷ்டமும் படவில்லை..... ரிஷியுடன் அனன்யாவை கண்டால் "ஓ..இந்த ஆர்.கேயா?" என சிலர் நினைக்க... மற்றும் சிலர் ராகேஷுடன் இருப்பதைக் காணும் போது "இந்த ஆர்கே தான் போல" என நினைத்துவிட்டு நகர்ந்து விடுவர்.

மூவரின் காதலும் மிக அழகாக சென்று கொண்டிருக்க.... அவனுக்கு தெரியாமல் நடந்து கொண்டிருந்த அந்த துரோகம் முடிவுக்கு வந்த நாளும் நெருங்கியது.

அப்போது ரிஷி நான்காம் வருட கடைசியில் இருந்ததால் அனன்யாவை சந்திக்க நேரம் அரிதாகவே கிடைத்தது அவனுக்கு...
படித்து முடிக்கப் போகும் அவனுக்கு ரகுநாதி (ரகுநாத் தேவமாருதனி)ன் கம்பெனி பொறுப்பு மற்றும் கல்லூரி பொறுப்புகள் வந்து குமிய.... அதில் அவன் மாதமொரு முறை பார்க்கும் கணட்ரோல் ரூமையே மறந்திருந்தான்.
இதில் எக்ஸாம் வேறு மண்டையை அழுத்தியதில் சுற்றியிருந்ததை கவனிக்க மறந்து போனான்.
தந்தையின் கம்பனி பொறுப்பை அவன் பீ.ஏ ஷங்கரிடமே ஒப்படைத்தவன் தான் காலேஜ் முடித்து பொறுப்பேற்பதாக முடிவை கூறிவிட்ட அதே நேரம் காலேஜ் சேர்மன் பொறுப்பை காலேஜ் முடியும் வரை மூர்த்தியிடமே பார்க்க கூறியவனுக்கு அப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

இதற்கிடையில் வருண் வேறு ஏதோ முக்கியமான விஷயம் கூற வேண்டும் என சொல்லி இருக்க..... வருணிடம் பேசப் போகும் போதெல்லாம் ஏதாவது தடை வந்துவிடுவது வேறு அவனுக்கு உள்ளுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது.

வருண் ஒரு தடவை அனன்யாவும் ராகேஷும் முத்தமிடுவதைப் பார்த்து அதிர்ந்து போனான். ஏற்கனவே மனதில் இருந்த சந்தேகம் வலுப்பெற ஆரம்பிக்க.... அவனைத் தொடர்ந்து கண்காணித்து வந்ததில் ரிஷிக்கு அவன் செய்யும் துரோகம் தெரியவும் ராகேஷின் காய் நகர்த்திய திட்டத்தைப் பார்த்து வாயடைத்துப் போனான்.ஆனால் கடைசி வரை ஏன் என்ற கேள்விக்கான பதில் கிடைக்காமலே போனது.

ரிஷி நல்லவன்....யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காத அவன் மேல் என்னதான் பகை என்பதை யூகிக்க கூட முடியாமல் போனது வருணுக்கு..... ரிஷி போல் ஒரு நண்பன் கிடைத்ததில் வருணுக்கு எப்போதும் ஒரு பெருமை உண்டு.... அதிகம் வம்புக்கு போகாதவன் எனினும் தான் சார்ந்த யாருக்காவது ஒன்று என்றால் துடித்துப் போகும் அவனின் குணத்தின் மேல் எப்போதுமே அவனுக்கு என்று தனி மரியாதை வைத்திருந்தான்.

அப்படிப்பட்ட தன் நண்பனுக்கு துரோகம் இழைக்கப்படுவது அவனுக்கு உண்மையாகவே வலித்தது.... அதேநேரம் ராக்கேஷை பற்றி அவனிடம் பேசுவதையும் அவன் விரும்பமாட்டான்.... அவனைப் பற்றிப் பேசி தன்னை வெறுத்து விட்டால் என்ன செய்வது.... என யோசித்தவன் முடிவில் "என்னை வெறுத்தாலும் பரவால்ல... இது தெரியாம இருக்குறது ரொம்ப ஆபத்து " என முடிவெடுத்ததும் ஒரு பெருமூச்சுடன் ரிஷியை காணச் சென்றான்.

ஒரு மரத்தின் அடியில் தனிமையில் ஏதோ யோசித்தவாறு அமர்ந்திருந்த ரிஷியிடம் வந்து அமர்ந்தாள் அனன்யா. கையில் ஏதோ பேப்பர்ஸ் வைத்திருந்தாள் போலும்... அவனை இடித்துக் கொண்டே நெருங்கி அமர அவன் அவளை கவனிக்காமல் இருக்கவும் அவன் கண்ணத்தில் முத்தமிட சட்டெனத் திரும்பினான் ரிஷி. அங்கு அமர்ந்திருக்கும் அனன்யாவை பார்த்து கண்கள் மின்ன

"என்ன அனு... இன்னக்கு நீயா தேடி வந்திருக்க?" எனவும் அவளது கையில் இருந்த பேப்பர்ஸை நீட்டி

" சைன் பண்ணி கொடுங்க அப்புறம் என்ன சேப்ரைஸ்னு சொல்றேன்.." என்று கூறவும் அவளிடமிருந்து அதை வாங்கி படிக்க முற்பட அவளோ சாமர்த்தியமாக

" என்ன ரிஷி நீங்க....இத படிச்சன்னு சொன்னா அது எப்பிடி சப்ரைஸ் ஆகும்...." என்று சிணுங்க அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன்

"சரியான கேடிடி நீ...." என்றான் தன்னை அறியாமலே....அவன் சொல்லில் சற்று பயந்தாலும் வெளியில் சோகமாக முகத்தை வைக்க அதில் பதறி

"நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் அனுமா....." எனவும் அவள் முகம் உடனே மலர்ந்ததை பார்க்கவும் தான் பெருமூச்சு விட்டான்.

மறுபடி பேப்பர்ஸை கையில் வைத்து அவள் பேனாவை நீட்டவும் சிரித்துக்கொண்டே அதை வாங்கி கையெழுத்து இடப்போக "ஆர்.கே... வேணான்டா" என்று கத்தியவாறு அருகில் வந்து நின்ற வருணை பார்த்து பேனாவை ஓரமாக வைத்துவிட்டு நெற்றியை சுருக்கி எழ....அனன்யாவோ "இவனுக்கு எப்படி...?"என்று குழப்பத்தில் எழுந்தாள். அனன்யாவை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தவன் ரிஷியிடம் அவசரமாக

"ஆர்கே....நா உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்..." எனவும் குழப்பம் நீங்காமலே

" நீ வேண்டாம்னு சொல்றதுக்கும் தனியா பேசுறதுக்கும் என்னடா சம்பந்தம் வருண்...."

"நான் இப்போ பேசினதுக்கப்புறம் நீ என்ன வேணும்ன்னாலும் பண்ணு ப்ளீஸ்...."

"சரி நீ போ நா அனு கிட்ட பேசிட்டு வரேன்...."

"ப்ச்.... நெலம தெரியாம பேசாத ஆர்.கே... ப்ளீஸ்..." என கெஞ்சிக் கொண்டிருக்கும் நேரம் அனன்யா நைஸாக ராகேஷுக்கு கால் பண்ண அட்டென்ட் செய்தவன் போன் வழியேயை கேட்ட பேச்சுக்குரலில் ஏதோ விபரீதம் என உணர்ந்து அவசரமாக அங்கே வந்து சேர்ந்தான்.

"ஆர்.கே.... உன்கிட்ட நான் எல்லாம் சொல்றேன்டா.... ப்ளீஸ் என் கூட வா..."

"ஹேய்....வருண்.... நான் உன்கிட்ட பேசமாட்டேன்னு சொல்லல்லடா.... அனு ஏதோ பேச போறேன்னா கேட்டுட்டு வந்துடுறேன்டா.... ப்ளீஸ் புரிஞ்சுக்கோ....."

" என்ன முதல்ல நீ புரிஞ்சுக்கோ ஆர்.கே..." என சொல்லிக் கொண்டிருக்கும் போது தான் ராகேஷ் வந்து சேர்ந்தான். அனன்யாவிடம் என்னவென்று கண்களால் கேட்க அவள் வருணை காட்டவும் மெல்ல சென்று அவன் தோள் மீது கை வைத்து

"அவன் தான் அவன் ஆளுகிட்ட பேசிட்டு வரேன்னு சொல்றானுல்லடா...." என பேசி முடித்த அடுத்த நிமிடம் ராகேஷின் காலரை பிடித்த வருண்

"துரோகி நாயே... என்னடா சொன்ன.... அவன் ஆளா... அப்போ நீ முத்தம் கொடுக்கும்போது மட்டும் உன் ஆளா....அவக்...." என்று கேட்டு முடிக்கும் முன் அவனை இழுத்து கோபத்தில் அறைந்திருந்தான் ஆர்.கே....

வருண் அதிர்ச்சியாய் ரிஷியை பார்க்க அவனோ முதல் முறை வந்த அடக்க முடியா கோபத்தில் கண்கள் சிவக்க நின்றிருந்தான். அவன் காதில் வருண் கேட்ட கேள்விகளே நெருப்புத் துண்டுகளாய் மீண்டும் மீண்டும் ஒலிக்க..... இப்போது ஆக்ரோஷமாய் வருணின் காலரை ரிஷி பிடித்திருந்தான். அதிர்ச்சியிலிருந்து மீண்ட வருண்

"மச்சான்... நான் சொல்றத கேளுடா....இவனும் இவளும் உனக்கு துரோகம்...பண்ணிகிட்" என கூறக் கூற அவனை உலுக்கிய ரிஷி

"மறுபடி மறுபடி... அவனை அந்த வார்த்தை சொல்லாதடா.... அவனை போய் எப்பிடிடா......" என இயலாமையில் கேட்டவனை பார்த்து பாவமாக போனது வருணுக்கு....

அதற்குள் அவன் காலரை விட்டு விட்டு அவனே சரிசெய்து விட்டவாறே "சாரிடா..."என கண் கலங்கவும்... அவனுக்கும் கலங்கியது. இருந்தும் கட்டுப்படுத்தியவன்

" நான் சொல்றத கொஞ்சம் கேளு மச்சி...." என்று சொன்னவனை தடுத்து

"இதுக்கு மேலயும் ஏதாவது என்கிட்ட சொன்னா உன் முகத்துல முழிக்காம இறுக்குறதுக்கும் நான் தயங்க மாட்டேன்..." என எங்கோ பார்த்தபடி சொல்ல வருண்

"பரவால்ல... ஆர்.கே நீ என் முகத்த பாக்காம என்ன வெறுத்து ஒதுக்கினாலும் பரவால்லடா... நான் இதை மட்டும் சொல்லிட்டு போயிட்றேன்... அவன் லவ் பண்ற பொண்ண உன்னையும் லவ் பண்ண வெச்சி உனக்கவன் துரோகம் பண்ணிட்டிருக்கான்... இது உனக்கு தெரிய வரும்டா....கடவுள் கைவிடமாட்டார்ன நம்பிக்கைல நா போறேன்.... பட் அது தெரிய வரும் போது தற்கொலைக்கு முயற்சி பண்ணி உன் வாழ்க்கைய அளிச்சிக்காத மச்சி... பாய் டா..."என்றவன் சென்றுவிட ஆர்.கே தான் பேச்சிழந்து நின்றான்.

(( அன்று அவனை கண்டதற்கு இன்றுவரை ஆர்.கே காணவே இல்லை.... அன்று அவன் " பாய்டா " என சொன்னதன் அர்த்தம் அவன் நிரந்தரமாகவே எங்கோ போய் விட நினைத்து சொன்னதுதான் என்பது அப்போது புரியவில்லை....))

போகும் அவனை பார்த்திருந்த ரிஷியிடம்

"டேய் விடுடா.... அவன் ஏதோ குழப்பத்துல பேசியிருப்பான்.." எனவும் கண்கள் கலங்கி அவனை அனைத்து விடுவித்த ரிஷி

"சாரி மச்சி....ரியலி சாரிடா...அவன் சொன்னதுல தர்மசங்கடமாகி இருந்தா உண்மைல சாரி டா.... என்னை மன்னிச்சிடு..." எனவும் தான் இவன் எதனையுமே நம்பவில்லை என்பதில் அப்போதுதான் மூச்சே வந்தது அனன்யாவுக்கு....

அவனை தட்டிக் கொடுத்த ராகேஷ் அனன்யாவிடம் கண்களை கட்டி விட்டு சென்றுவிட அவனை அமரவைத்து அவன் தோளில் சாய்ந்தாள். அவளை நினைத்து பெருமிதம் கூட

"சாரி...அனு...ஐ அம் ரியலி சாரிமா....உன் மனசு கஷ்டப்பட்டிருக்கும்..." எனவும் அவள்

" அப்படியெல்லாம் எதுவும் இல்ல ரிஷி... நீங்க போய் என்கிட்ட சாரி கேக்காதீங்க....கஷ்டமா இருக்கு..." என்றவளின் பெருந்தன்மையில் கவரப்பட்டு அவள் கையை இருக்கப் பிடித்துக் கொண்டான்.அதன் பிறகு இருவருக்கும் மௌனமே மொழியாகிப் போக.... கொஞ்ச நேரம் அதை ரசித்து விட்டு எழுந்த ரிஷி " தனிமையில் இருக்க வேண்டும் " என கூறிவிட்டு கண்ட்ரோல் ரூமுக்கு நடந்தான்.... அனன்யாவும் " எல்லாம் இந்த சோடாபுட்டி வருணால வந்துது....ச்சே..." என அவனுக்கு ஏசி விட்டு அவளும் சென்றுவிட்டாள்.

ரிஷி தனிமையில் இருக்க நாடினால் அவன் சென்று அமரும் இடம் அந்த கண்ட்ரோல் ரூம் தான்... அது யாருக்கும் தெரியாததனால் அங்கே எந்த ஒரு தொந்தரவும் இருக்காது.
உள்ளே சென்று அங்கிருந்த ஒற்றை நாற்காலியில் கண்ணை மூடி அமர்ந்தவனுக்கு மீண்டும் மீண்டும் வருணின் வார்த்தைகள் இதயத்தை அலை மோதின. " என்னதான் நடந்துது இந்த வருணுக்கு... ஏன் இப்படி எல்லாம் பேசுறான்..." என நினைத்தவனுக்கு சலித்துப் போனது.அவன் கண்களில் பொய் தெரியாதது நினைவில் வர திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த ரிஷி

"வருணோட கண்கள்ல பொய் இல்லன்னா.... " என யோசித்தவன் கண்களை இறுக்க மூடி நினைவுகளை அலச ராக்கேஷின் கண்களில் தெரிந்த போய்யில் மனது திக்கென்றது....அவசரமாக கண்களை திறந்தவன்

"ச்சே...ச்சே... அப்பிடி ராக்கி பண்ண மாட்டான்....." என நினைத்தாலும் மனது மீண்டும் மீண்டும் அங்கேயே தங்கவும் வேறு எதிலாவது கவனம் செலுத்தினால் இந்த டென்ஷன் குறையும் என நினைத்து தான் ஐந்தாறு மாதங்களாக செக் பண்ணாமல் இருப்பது ஞாபகம் வரவும் கம்ப்யூட்டரை ஆன் செய்தான். அவன் அவள் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த தினத்திலிருந்து பார்க்கவில்லை என அறிந்ததும் அவளை நினைத்து இருந்த மனநிலை மாறி புன்னகைத்தவாறு
" அனு ஐ லவ் யூ டி... " என மனதிற்குள் கொஞ்சிக்கொண்டே ஒவ்வொரு புடேஜ்ஜாக செக் பண்ண ஆரம்பித்தவனின் கண்கள் ஒரு இடத்தில் நிலை குத்தி நின்றது.

அது... அன்று அனன்யா கடத்தப்பட்ட அன்றைய தேதியை குறித்து அவளிடம் அன்றே கேட்காததை எண்ணியவன் யார் என்ன நடந்து இருக்கும் என்று யோசித்தவாறே அதை தட்ட அதில் கண்ட காட்சியில் அதிர்ந்தான். அதில் ரிஷி வெளியே சென்றவுடன் ராகேஷ் சிரித்துவிட்டு யாரிடமோ போன் பேசி விட்டு தங்கள் வகுப்புக்குள் நடந்து போவது வரை பதிந்திருக்க... அடுத்ததை தட்ட அந்த வகுப்பில் அவனும் அவளும் நடந்து கொண்டது முதல் இவனிடம் ராகேஷ் பேசுவது வரை பதிவாகி இருந்தது.

"நோ.... " என கத்திக்கொண்டே சேரை தள்ளிவிட்டு எழுந்தவனின் உடலும் மனமும் கூசியது. அழுக்கிலேயே குளித்தவன் போல் உடம்பெல்லாம் கூசி பற்றி எரிய...தன் வாய்க்கு தானே அடித்துக்கொண்டான் தான் முத்தமிட்டது.... அவள் தந்தது அனைத்தையும் எண்ணி.....அதுவும் அடங்காமல் இருக்க அருகில் வைத்திருந்த கம்பியால் வெறிபிடித்தவன் போல் முன் இருந்த கம்ப்யூட்டர்கள் அனைத்தையும் அடித்து உடைத்து நொறுக்கிவிட்டு " டேய்....." என்று கத்திக்கொண்டே சீறிக் கொண்டு ஓடினான். வகுப்பில் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தவனை வந்த வேகத்தில் இழுத்தெடுத்து அடிக்கத் துவங்க.... நண்பர்கள் இருவரையும் பிடித்துக்கொள்ள அவன் செய்த செயலை நினைத்து அருவருப்பில் காரித்துப்பிய ரிஷி

"ச்சி.... உன் முகத்தப் பாக்கவே கூசுதுடா.... உன்னை எப்பிடி எல்லாமோ நினைச்சிருந்தேன்.... கடைசில....கடைசில..." என்னும் போது குரல் கம்மி கீழே தொப்பென விழ அப்போதுதான் ராக்கி கத்தி கத்தி சிரிக்க... நண்பர்கள் அதிர்ச்சியாக பார்த்தனர் அவன் புது அவதாரத்தை....ரிஷியும் கூடவே....

அமர்ந்திருந்தவனை யாரும் பிடித்திருக்காததனால் மறுபடியும் அவன் மீது பாய்ந்து அவனை சுவற்றில் சாய்த்து கழுத்தை இறுக்கி

" பொறுக்கி நாயே..... நீ எல்லாம் என்னடா மனுஷ ஜென்மம்?"

" நான் பொறுக்கி இல்ல... நீ தான் பொறுக்கி.... ரெண்டு பேர் காதலிக்க.... நீ நடுவுல... அப்போ யாரு பொறுக்கி?" என ஏளனமாக கேட்டவனின் வார்த்தைகளில் மனம் நொறுங்கி வெறுத்துப்போனது ரிஷிக்கு...... இருந்தும் காரணம் தெரிந்து கொள்ள தன்மானத்தை விட்டுக் கேட்டான்

" அப்படி என்னதான் பண்ணேன்டா உனக்கு நான்... ஏன்டா இவ்வளவு கீழ்த்தரமா..." பேச முடியாமல் தவிக்க

"எதுக்குனா கேக்குற.... சொத்துக்காக தான்..." என்றான் ரிஷியின் கைகளை எடுத்தவாறு.... அவன் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ந்த ரிஷி ஓய்ந்து போன குரலில்

" சொத்துக்காக....ஹே.... கேட்டா நானே மொத்தமா எழுதி தந்து இருப்பேனேடா..."

"கேட்டா மொத்தமா தந்திருப்ப....பட் வலி அனுபவிக்காம..."

"வலி..... வலிக்க வைக்க உனக்கு என் உணர்வுகளும் காதலும் தானாடா கிடைச்சிது" தான் ஆண்மகன் என்பதனையும் மீறி கதறி விட அவன் அழுவதைப் பார்த்து நண்பர்களும் கலங்கிவிட்டனர்.அவன் அழுவதை பார்த்து சந்தோஷப்பட்ட ராகேஷ்

"அழுடா.... நல்லா வலிக்க வலிக்க அழு.... சின்ன வயசுல இருந்தே உன்னை எனக்கு பிடிக்காது.... காரணம் பணம்.... நீயும் உன் அப்பாவும் பணத்தை வெச்சி என் உணர்வுகளோட விளையாடினப்போ எனக்கும் எவ்வளவு வலிக்கும் தெரியுமா...? அதனால அப்பவே முடிவு பண்ணேன் இந்த சொத்தை அடைஞ்சே தீரனும்னு.... அதன்படி உன்கூட நல்லவன் வேஷத்துல பழகினேன்.... நீ முட்டாள் என்ன நம்பின... அதுக்கு நான் என்ன பண்ண முடியும்.... என்மேல வெச்ச பாசத்துக்கும் நம்பிக்கைக்கும் நீ முழு சொத்தையும் நான் கேட்ட உடனே எழுதி தனது இருப்ப.... எனக்கு அப்படி நீ தர்ரதுல நிம்மதி சந்தோஷம் இருக்காது.... அதனாலதான் அனன்யாவ என் ஆயுதமாக எடுத்துக்கிட்டேன்.... நீ ஏமாந்துட்ட...... அவளை உயிருக்கு உயிரா காதலிச்ச.... அவ காதலிச்சா மாறி நடிச்சா... உயிருக்குயிராக நேசித்த பொருள் திடீர்னு போரப்போ அந்த வலி எப்படி இருக்கும்னு காட்டதான் நான் காதலிக்கிற பொண்ண உன்னையும் காதலிக்க வெச்சேன்... நீ வலிய அனுபவிக்கும் போது எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா...." என்று கேட்ட ராகேஷ் கத்தி கத்தி சிரிக்க அவன் சொன்ன காரணங்களை கேட்ட ரிஷி கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தான்.தன்னுடைய பாக்கெட்டில் இருந்த அனன்யா தந்த பேபர்ஸை எடுத்து ஒரு நிமிடம் வெறித்தவன் ஒரு பெருமூச்சுடன் அனைத்திலும் கையொப்பமிட்டு விட்டு அதை ராகேஷ் முகத்தில் விசிறி அடித்தவன் சென்றுவிட்டான்.

வீட்டுக்குள் நுழையும்போதே ஆரவ் சிரித்துக் கொண்டே

"என்னடா ரொம்ப நேரத்தோட வந்துட்ட.... கட் பண்ணிட்டியா" எனக்கு கண்ணடிக்கவும் ஆரவ் ராகேஷின் தம்பி என்ற நினைப்பில் அவனை முறைத்துவிட்டு ரூமிற்கு சென்று கதவை அறைந்து சாத்த ஆரவ்விற்கு கண்கள் கலங்கிவிட்டன.

அதன் பிறகு ஒரு மாதம் அவன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.... தனக்கு இழைக்கப்பட்ட துரோகம் தான் செய்த மடத்தனத்தால் உயிர் நண்பனை இழந்தது எல்லாமுமாக சேர்த்து அவன் குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகிப் போனான்.

அவனுடைய காதலை நினைத்து அவனே அவனை வெறுக்க.... குடிப்பழக்கம் ஆரம்பமானது. யாரிடமும் பேச பிடிக்காத தன்மையும்; எதற்கெடுத்தாலும் கோபப்படும் தன்மையும் அதனுடன் சேர்ந்து கொள்ள " ரிஷிகுமாராக" இருந்தவன் " தேவமாருதனாக " மாற ரிஷிகுமார் எனும் பெயர் சமூகத்திலிருந்து மறையத் தொடங்கியது.

இதில் அதிகம் தவித்து போனது ஆரவ்தான்...... ரிஷி அவனை பார்க்கக்கூட விடாததால் நொந்து போனான். கதவை தட்டினாலும் கோபப்படுவான் என்பதால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிய...ஒரு நாள் பொறுக்காது பின் வழியால் ஏறி ஜன்னலால் குதித்தவன் தன் அண்ணனின் நிலைமையை பார்த்து கட்டிப்பிடித்து கதறியே விட்டான்.

சுவற்றில் சாய்ந்து ஒரு காலை மடக்கியும் மறு காலை நீட்டியும் வைத்திருந்தவன் கைகளில் மதுபாட்டில் இருக்க.... தலைமுடி கத்தரிக்க படாமல் மீசையும் தாடியும் ஷேவ் செய்யபடாமல்.... ஏதோ பித்து பிடித்தவன் போல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான். அவனை கட்டிப்பிடித்து அழுத ஆரவ்வை தள்ளிவிட்டு கோபமாக

"போடா....இப்போ இங்க இருந்து போடா...." என கத்தவும்

" நான் உன் தம்பிடா... உன்ன விட்டு நான் எங்கேயும் போறதா இல்ல...." எனக் கூற அதைப் பார்த்து அதற்கும் கோபப்பட்டான்

" யாரு நீ.....?எனக்கு தம்பியா.....? மரியாத இல்லாம பேசின... கொன்னுடுவேன் ராஸ்கல்..."என்று மிரட்ட அதிர்ந்தாலும்

"சரிணா....சாரி... உனக்கு துரோகம் செஞ்சவனுங்களே சந்தோஷமா இருக்கும் போது.... நீ எதுக்கு இப்படி இருக்க?நம்ம கிட்ட இப்போ பணம் இல்லனா என்ன? படிப்பு இருக்குல்ல....அது போதும் நமக்கு....இந்த சொத்து வேணாம் ணா... நீ சம்பாரி....உன்னால முடியும்..." என்று விட்டு அவனை பார்க்க அவன் கண்களில் ஒரு மின்னல் வந்து போனது. அதை பார்த்து நிம்மதியுடன் எழுந்து

"இப்பிடியே இருக்காதண்ணா.... கஷ்டமா இருக்கு..." என்று விட்டு வெளியேற அவன் சொற்களும்... வருணின் " தற்கொலைக்கு முயற்சி பண்ணி உன் வாழ்க்கைய அழிச்சிக்காத மச்சி.... " என்ற அன்பான வார்த்தைகளும் மீண்டும் மீண்டும் காதில் ஒலிக்க.... பாட்டிலை தூக்கி வீசிவிட்டு எழுந்தவனின் முகம் தெளிவு பெற்றிருந்தது.

குளித்து முடித்து வெளியே வந்தவன் மொத்தமாக மாறியிருந்தான்... தலைமுடி சீராகக் கத்தரிக்கப்பட்டு மீசையும் தாடியும் அழகாக ஷேவ் செய்யப்பட்டு இருந்தது. கையிலும் கழுத்திலும் எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும் சைன் கூட காணாமல் போய் பார்மல் ட்ரஸ்ஸில் மாடியில் இருந்து இறங்கி வந்தவனின் அழகிலும் கம்பீரத்திலும் உள்ளம் பூரித்தான் ஆரவ்.

ஆனால்.....ஒன்று மட்டும் இல்லை..... அது எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் முகம் இப்போது பாறை போல் இறுக்கமாக இருந்தது. அது கூட அவளுக்கு அழகாகத்தான் இருந்தது.அவனிடம் வந்து

" நான் நாளைக்கு வெளிநாட்டுக்கு போறேன் ஆரவ்..." என்றதும் அதிர்ந்தாலும் அவனின் "ஆரவ் " எனும் அழைப்பில் தூரமாகி விட்டது போல் உணர்ந்தான். தன் மனதை அடக்கி புன்னகைத்தவாறு

"ஆல் த பெஸ்ட் அண்ணா..." என்றதை தலையசைப்புடன் ஏற்று வெளியேற.... அவனின் கலகலப்பான பேச்சு,சீண்டல் எல்லாம் இல்லாமல் போய் ஆரவ் என்ற அண்ணியத்தனமான வார்த்தை வரை அவன் வந்து விட்டதை நினைத்து தாங்க முடியாமல் அழுதான்.

அதன்பிறகு ரிஷி வெளிநாடு சென்றுவிட இருந்த விரிசல் இன்னும் அதிகமாகியது. ஏற்கனவே கயலிடம் இருந்து விலகியிருந்த ஆரவ் இன்னும் தூரமாகினான்.
அப்பாவின் சொத்துக்களில் மீதம் இருந்த அந்தக் கல்லூரியை மட்டும் பார்த்துக்கொண்டு ரிஷி தன் சம்பாத்தியத்தில் சொந்தமாக " ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ் " என்ற கம்பெனியை தொடங்கி அதில் ரகுநாத்தை விடவும் உயர்ந்து உலகளவில் பிரபலமானான் " மாறன் " எனும் பெயரில்....

(( ஆரவ் அண்ணா என்று எப்பொழுதும் அடுத்தவர்களிடம் சொல்லியதால் ரிஷி என்னும் பெயர் அஷ்வினிக்கு தெரியாமலே போயிற்று..))

(( இவர்களுக்கு தெரியாத ஒன்று... கொல்லப்பட்ட "அக்ஷயா " , "ராஜ்வீர்" மற்றும் "அடுத்தவர்" என்று மூன்று பேரும் இவனால் கொல்லப்பட்டவர்கள் என்பது....))

ஃபிளாஷ்பேக் பினிஷ்ட்

தொடரும்.........

23-04-2021.
 
SavithriR

New member
Messages
11
Reaction score
11
Points
3

I thought the murderer was other RK ( Rakesh ) 😁 interesting 👍🏽
 
Rishi 24

Member
Vannangal Writer
Team
Messages
54
Reaction score
33
Points
18
அத்தியாயம் 11 ❤️

தன் அண்ணனின் கடந்த காலத்தை கூறி முடித்த ஆரவ்வின் கண்களில் கண்ணீர் வழிய அஷ்வினியோ தன் முகத்தை மூடிக்கொண்டு மறுபடி அழுதாள்.... தன்னவன் அனுபவித்த வலிகளை நினைத்து.....கண்ணீரை துடைத்த ஆரவ் அவளை சமாதானப்படுத்த தெளிந்த அஷ்வி

" அப்போ வருண் அண்ணா எங்கடா போனாரு?"

"நானும் அண்ணாவும் வருண் அண்ணாவ தேடாத இடமில்ல அஷ்வி.... அவருக்கு அம்மாப்பா இல்ல... தனிய இருந்தவரு வீட்ட பூட்டிட்டு போயிட்டாரு... தன்னால் தான் எல்லாமும்னு அண்ணாக்கு குற்ற உணர்ச்சி அதிகமாயிருச்சு.... அவங்கள கண்டுபிடிச்சா அண்ணாவோட குற்ற உணர்ச்சி குறையும்னு நினைக்கிறேன்..." என்று கூறவும் எப்படியாவது வருணை கண்டுபிடித்துவிட வேண்டும் என சபதம் எடுத்தவள்

" அப்போ மத்தவங்க எல்லாம்...?"

"மத்தவங்கன்னா...?"

"அதான்டா... அந்த ரகு, ஜெய், ஹரி எல்லாம் எங்கடா?" எனவும் ராகேஷின் பெயரில் முகத்தை சுழித்தவன்

"அவங்க மூணு பேரும் அந்த துரோகியால தான் அண்ணாக்கு அறிமுகமானாங்க.... வருண் அண்ணா மட்டும்தான் ரிஷியோட பிரண்டு....அதனால அவனுங்க கூட.... சேந்து இருந்தும் சப்போர்ட் பண்ணல.... அதுல சந்தோஷமான விஷயம் என்னன்னா.... அந்த ஜெய் செத்துட்டான்.." எனவும் ஷாக்கான அஷ்வி

"ஜெய்யா....?"

"ம்...ஆமா அந்த ராஜ்வீர் இருக்கான்ல... அவன்தான் ஜெய்....அவனோட முழு பெயர் " ராஜ்வீர்ஜெய் "
ஆர்.வி கம்பனி அவனோடது இல்ல... எங்க அப்பாவோட சொத்துல அவனுக்கு கெடச்ச பாதி...." என்றவனின் கண்கள் மறுபடியும் கலங்கவும் அவசரமாக

"அப்போ அடுத்தவங்க எங்கடா....?" என பேச்சை மாற்றினாள்.

" அதெல்லாம் எனக்கு தெரியாது அஷ்வி... பட் நல்லாவே இருக்க மாட்டானுங்க..." என்று கண்களில் கோபம் கொப்பளிக்க கூறியவனை பார்த்து அவன் தேவ் மேல் வைத்திருக்கும் அக்கறையில் மனம் நெகிழ்ந்து

"அந்த மினிக்கி அனன்யாவோட சித்தி பொண்ணு அக்ஷயாவும்.... இப்போ இறந்து இருக்கிற அக்ஷயாவும் ஒன்னா.... இல்ல....?"

" எஸ் அஷ்வி... ரெண்டு பேரும் ஒண்ணு தான்.... அவளும் சேந்து அனன்யா கூட நடிச்சால்ல...நல்ல வேணும் அவளுக்கு...." என்று சிறுபிள்ளை போல் கூறியவனைப் பார்த்து புன்னகை வந்தாலும் ஏதோ புரிவது போலவும் இருந்தது அவளுக்கு....

"வருண் அண்ணாவோட போட்டோ இருந்தா காட்டு ஆரு... கண்டுபிடிக்க முயற்சி பண்றேன்" எனவும் சிரித்தவன் உள்ளே சென்று ஆல்பத்தை எடுத்து வந்து அதில் ரிஷியுடன் தோள் மேல் கை போட்டு கண்ணாடி அணிந்து சிரித்துக் கொண்டிருக்கும் வருணை காட்டவும்.... அவனைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தாள் அஷ்வினி...

***

ஆர்கே இன்டஸ்ட்ரீஸ் மேல்தளம்....

அந்த புதியவன் உண்மையை போட்டு உடைக்கவும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு அவனை உலுக்கினான் காளை...

" என்னடா உளர்ற?"

" நான் உளறல ஆர்.கே... நான் சொல்றது தான் நிஜம்... உன் அருமை தங்கச்சி இருக்கால்ல... ஆரா...அதான் "ஆராதனா தேவமாறுதன் " அவளோட டுவின் பிரதர் தான்... ஆரவ்...அவன் பிறந்து அடுத்த நிமிஷம் அவன வெற்றிவேல் சாமர்த்தியமா தூக்கிட்டான்.."

"டேய்... டேய்... நீ....நீ.... பொய் சொல்லலல்ல.. ஆ..ஆரு... ஆரு என் தம்பிதானே?" என உணர்ச்சிவசப்படவும் அந்த புதியவன்

" தம்பி மேல பாசம் பொங்கி வழியுது... ஆனால் பாவம்... பாசம் காட்ட தங்கச்சி தான் உயிரோட இல்ல..." என்று நக்கலடிக்க... அவனுக்கு பளார் என கன்னத்தில் ஒன்று விட்டவன் அவனை பிடித்து

" என்னடா சொன்ன? பொறுக்கி ராஸ்கல்.. பண்றதையும் பண்ணிட்டு... திமிரா உனக்கு?" என்று விட்டு மறுபடி அறைந்தான்.

அறைந்ததில் அந்த புதியவன் ரிஷியை முறைக்க.... அதில் கோபமடைந்த ரிஷி இன்னும் இருந்தால் அடித்தே கொன்று விடுவோம் என நினைத்து மறுபடி சென்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு சேரில் அமர்ந்து கொண்டான்.
ஆரவ்வின் கையைப் பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்க துடித்த மனதை அடக்கி... முகத்தை பாறை போல் வைத்தவாறு அவனிடம்

" அதுக்காக யேன்டா அவ மேல கைய வெச்சீங்க..?" என்றவனின் குரலில் வலியுடன் கலந்த சீற்றம் தெரிய...அதற்கு அந்த புதியவன்

"எல்லாம் சொத்துக்காக தான்.... ஏன்னா அப்போ ரகுநாத்துக்கு மூனு வாரிசு... வெற்றி வேலுக்கு ஒன்னு தான் இருந்தது... அது வேற தடயா இருக்க... ஆரவ்வ தூக்கிட்டு.... ஹப்பாடான்னு மூச்சு விட்றதுகுள்ள... ஆராவுக்குத்தான் முக்கால்வாசி சொத்துன்னு எழுதி வெச்சிட்டான் ரகுநாத்... என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப தான் அவள பலி தீத்துக்கலாம்னு ஐடியா வந்தது..." என்று சொல்ல ரிஷி கண்களை இறுக்க மூடித் திறந்தான்.அதைப் பார்த்த அந்த புதியவன் கண்களில் குரோதத்துடன்

"அவளை முடிச்சதுக்கப்புறம்... நீ மட்டும் சொத்துக்கு வாரிசா இருந்த அதையும் தக்க சமயம் பார்த்து கறந்தாச்சு..." என்றுவிட்டு

"ஆனா சும்மா சொல்லக் கூடாது ஆராதனா சின்ன பொண்ணுன்னாளும் ஆஹா..." என அவன் அசிங்கமாக பேசுவதை தாங்க முடியாமல் அவனுக்கு தானே சென்று ஷாக் சுவிட்சை போட்டு விட்டு ஆராவின் போட்டோ முன் நின்றவனுக்கு.... அடக்கி வைத்திருந்த துக்கம் வெடித்து சிதற கதறி அழுவும் ஆதைப் பார்த்த அதிர்ந்து விழித்தான் கதிரவன்.

(( அவன் பார்த்த ரிஷி இவனில்லையே..... ரிஷியை சிரித்துக்கூட கண்டிராதவனுக்கு அவன் அழுகை என்னமோ செய்தது மட்டும் உண்மை..... கெட்டவன்தான் என்றாலும் நேர்மையானவன்.))

ஆராதனா தேவ்வின் செல்ல தங்கை... துருதுருவென இருப்பாள்;ஆரவ்வை விட மெச்சூரிட்டியானவள் என்றே சில சமயங்களில் ரிஷிக்கு தோன்றும்... சின்ன வயதில் ராகேஷ் ஆரவ்வை தூக்கிக் கொண்டு வந்து "உன் தம்பியாவே இவன வளத்து தாடா..." என்றும்; இதை யாருக்கும் சொல்லக்கூடாது என்ற சத்தியத்தோடும் ஒப்படைக்கவும் ஆராதனாவுடன் அவனையும் சேர்த்து வளர்த்தான் தன் தம்பி என்று அறியாமலேயே.....

ஆராதனாவின் பன்னிரண்டாவது வயதில் சொத்துக்காக பயப்பட்டு காம வெறியர்கள் அவளை சீரழித்து கொன்று அடையாளம் தெரியாமல் இருக்க அவள் முகத்தில் ஆசிட்டை ஊற்றி விட்டு சென்று விட்டனர்.....

அன்று... அவள் பிறந்தநாள் நண்பிகள் வீட்டுக்கு சென்றவள் பிணமாகத்தான் வீடு வந்து சேர்ந்தாள்.

அவளின் மறைவுக்குப் பின்னால் ரிஷிக்கு ஆரவ்வே எல்லாமுமான உலகமாகிப்போனான். ராகேஷின் தம்பி என்பதையே மறந்து போய் இருக்க.... ராகேஷின் துரோகம் தான் மறுபடி அதை ஞாபகப்படுத்தியது.
அதிலிருந்து ஆரவ்விடம் நெருங்கி பழகா விட்டாலும் அக்கறையாய் பார்த்துக்கொள்ள ஒட்டு மொத்த அன்புமே அவனுக்கே என்றாகிப்போனது.

அன்று அவன் அப்படி சொன்னதற்கு காரணமே உண்மை தெரியாததால் தான்.... ஆனால் இன்று உண்மை தெரிந்த பின் ஆராவின் நினைவுகளில் மூழ்கி கண்ணீர் விடுகிறான்......

***

"அஷ்வி என்னாச்சு?" என தோல் தொடவும் அதிர்ச்சியில் இருந்து மீண்டவள் சமாளிப்பாய்

" ஒன்னும் இல்ல ஆரு... ஏற்கனவே நேரமாயிடுச்சு... உனக்கு பசிகும்ல நான் போய் ஏற்பாடு பண்றேன்..." என்று விட்டு எழுந்து சென்றுவிட

"ஆரு...இன்னைக்கு ஏன் காலேஜ் வர்ல? "என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தாள் கயல்விழி.

"ஆஹா.....கேக்குறாளே... என்ன இன்னிக்கு காச்சி எடுக்கப் போறா.." என மனதில் நினைத்தவன் சிரித்துக் கொண்டே

" அது ஒண்ணும் இல்ல அம்மு செல்லம்.... மாமாக்கு கொஞ்சம் தலைவலி அதனால தான் வர்ல... "

"ஓஹ்...."என அவனை முறைத்துக் கொண்டே அருகில் வந்து அவன் காதை பிடித்து

"இன்னக்கு மட்டும் தான் தலவலியா இல்ல.... ஒரு வாரத்துக்கு தலவலியா சார்..?" எனவும் திருதிருவென முழிக்க கையை எடுத்துவிட்டு மண்டையில் கொட்டி

"உனக்கு எத்தனை தடவ சொல்லியிருக்கேன் வம்புக்கு போகாதன்னு...ஏண்டா இப்படி பண்ற?" என்றவளின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க அதனைக் கண்டு பதறி அவள் தலையை தன் மார்பின் மீது சாய்த்தவன்

"டேய் அண்ணா... உன் பொண்டாட்டியையும் என் பொண்டாட்டியும் சேர்த்து சமாதானம் பண்ண வெச்சு கதறவுட்றல்ல...நீயும் ஒரு நாளக்கு அனுவிப்படா...."என மனதிற்குள் புலம்பி விட்டு அவளை சமாதானப் படுத்த தொடங்கினான்.

"அம்மு...நாங்களா வம்புக்கு போகலடி... அவங்கதான் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்தாங்க... அதனாலதான் இப்படி ஆகிப்போச்சு... அழாதடா ப்ளீஸ்...." எனவும் கொஞ்ச நேரம் விட்டு அழுகையை நிறுத்தி நிமிர்ந்து பார்க்க அங்கே எதிர் சோபாவில் தங்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள் அஷ்வினி....

அதில் சங்கடப்பட்டு விலக எத்தனித்தவளை கண்டவளுக்கு பழைய குறும்பு எட்டிப் பார்க்க வேண்டும் என்றே அவளை சீண்டும் விதமாக

"இல்ல பரவால்ல கயல்... நான் எதுவும் பாக்கல.... நீ கன்டினியூ பண்ணு..." என கண்ணடிக்க

" அக்கா..." என கயல் சினுங்க சினுங்க மறுபடி

"தோ பார்ரா.... பாசத்துல கூட உன் வாயால அக்கானு வராது... இப்போது மட்டும் வருது...." எனவும் முறைத்த கயல் அருகில் இருந்த குஷனை எடுத்து அஷ்விக்கு விசிறி அடிக்க அதை இலாவகமாக கேட்ச் பிடித்தவள் கயளுக்கு பழிப்பு காட்டிவிட்டு ஓட இருந்த கடுப்பில் அவளை துரத்திக் கொண்டு ஓடினாள் தங்கை...
இதை புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருந்த ஆரவ்வை போன் அழைக்க... அட்டெண்ட் செய்து காதில் வைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.
கயலின் கைக்கு பிடிபடாமல் வீட்டு பொருட்கள் அனைத்தையும் சுற்றி ஓடிய அஷ்வி அப்போது தான் உள்ளே நுழைந்த ரிஷியிடம் ஆரவ் என நினைத்து அவன் பின்னால் போய் நின்று கொண்டு கயலை எட்டிப் பார்க்க அவளோ பயத்தில் ஷாக் அடித்தவள் போல் நின்றிருக்கவும்

"ஏன் கயல் நிறுத்திட்ட.... ஆருக்கு இவ்வளவு பயமா நீ?" என சிரிக்க அப்போதுதான் போன் பேசி முடித்து விட்டு ஹாலுக்கு வந்த ஆரவ்

"வாண்ணா.... நேரத்தோட வந்துட்ட?" எனவும் தான் தன் முன்னால் இருப்பது தேவ் என்பது உறைக்க பயத்தில் வெலவெலத்துப் போய் இரண்டடி பின்னால் நகர்ந்தாள் பாவை...
தன் முன்னால் இருக்கும் ஆரவ்வை பார்த்ததும் கண்கள் கலங்க உணர்ச்சிவசப்பட்டு " ஆரு...." என தாவி அனைக்க... ஆரவ்வோ பல வருடங்களின் பின்னரான ஆரு எனும் அவனழைப்பில் அவனை கட்டிப் பிடித்து அழுதே விட்டான்.

பார்த்திருந்த கயலின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய...அஷ்வினி அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு திரும்பிக் கொண்டிருந்தாள். ஆரவ்வை தன்னிலிருந்து பிரித்த ரிஷி அவன் முகம் தாங்கி

"ஆ... ஆரு....ஆரு...... நீ.... நீ.... என்..த...த..... தம்பி தம்பி டா..." என்னும் கூற்றில் குழம்பிய ஆரவ்

"நான் உன் தம்பிதாண்ணா.... நான் உன் தம்பி தான்.... யாரு சொன்னது நான் உன் தம்பி இல்லன்னு..?"

"அ... அந்த துரோகி ரா.. ராக்கேஷ் தான்... நீ... நீ... என் தம்பி இல்.. இல்லன்னு... அவன்....அவன்... தம்பி தான் நீ... நீ...நீன்னு...நம்ம ஆராவோட டுவின் நீ..நீதான்..."
என்று ரிஷி திக்கித்திக்கி உணர்ச்சிவசப்பட்டு பேசி முடிக்க அவன் கண்களிலிருந்து கண்ணீர் உடைபட பதறித் துடித்த ஆரவ் அவன் சொன்ன செய்தியில் அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு அஷ்வினியை அருகில் வருமாறு சைகை காட்ட அவளுக்கோ திக்கென்றது.

அப்பொழுதுதான் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தவள் அருகில் கூப்பிடவும் மறுபடியும் நின்றிருந்த பயம் ஒட்டிக்கொள்ள... மனது வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
அவள் அசையாமல் நிற்கவும் அவளை பார்த்து நெற்றியை சுருக்கி கயலிடம் தண்ணீர் கொண்டு வருமாறு சைகை காட்டிவிட்டு திரும்பி தன் அண்ணனை பார்த்த பார்வையில் முதன் முறையாக அந்நியத்தனம் தெரிந்ததோ...!!
அத்தனை நடுக்கத்திலும் அதை கண்டு கொள்ளத் தவறவில்லை ரிஷியின் மனையாள்....
தொடரும்........

24-04-2021.
 
Top Bottom