Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ரிஷியின் 'உயிரோடு கலந்தவள்'

Rishi 24

Member
Vannangal Writer
Team
Messages
54
Reaction score
33
Points
18
அத்தியாயம் 12 ❤️

தன்னை முயன்று கட்டுப்படுத்திக்கொண்டு அவன் கலங்குவது தாங்காமல் முன்னே அடியெடுத்து வைக்கவும் கயல் தண்ணீர் க்ளாஸை நீட்டவும் சரியாக இருந்தது.

தண்ணீரை குடித்து விட்டு நிமிர க்ளாஸை கையில் வாங்கிய ஆரவ் அஷ்வியிடம் நீட்ட அவளோ அவனைப்பார்த்து முழிக்க....மீண்டும் நெற்றி சுருக்கி அவளைப்பார்த்தவன் "என்னாச்சி...இவளுக்கு...நல்லாத்தானே இருந்தா...அண்ணாவ பார்த்த உடனே தான் இவளுக்கு என்னமோ ஆச்சி.. ஒரு மார்கமாத்தான் அலஞ்சிக்கிட்ருக்கா... அப்பறமாதான் இவள பாக்கனும்" என நினைத்தவன் எதுவும் பேசாமல் கயலிடம் கொடுத்துவிட்டு தன் அண்ணன் புறம் பார்வையை திருப்பினான்.

அதற்குள் ரிஷி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நடந்ததனைத்தையும் ஆரவ்விடம் ஒன்றுவிடாமல் கூறி முடித்து அவன் பதிலை எதிர்பாக்க ஆரவ்வின் முகம் உணர்ச்சிகளை துடைத்திருந்தது.

அன்றொரு நாள் "யாரு..நீ..என் தம்பியா? " என்று ரிஷி கேட்ட கேள்விக்கு இன்று பதில் தெரிந்ததில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் வலிக்க...கேட்டே விட்டான் தன் நெஞ்சை அரிக்கும் கேள்வியை...

"ஆக...நீங்க... இவ்வளவு நாளா அந்த துரோகியோட தம்பியாத்தான் என்ன பாத்திருக்கீங்கல்லண்ணா?"
சாட்டையடியாய் வந்து விழுந்த அவன் கேள்வியில் வாயடைத்துப்போனது ரிஷிகுமார் தேவமாருதனுக்கு....

அவனிடம் அதற்கான பதில் இல்லை..... எப்போதுமே அப்படி நினைக்கவில்லையாயினும் அன்று நினைத்தானே!!
அப்படி நினைத்ததால் தானே அப்படியொரு கேள்வி கேட்க நேர்ந்தது. அவன் எதுவும் பேச முடியாமல் ஆரவ்வை தவிப்புடன் பார்க்க

"பட்...நா இது வர அப்படி கனவுல கூட நெனச்சி பாத்ததில்ல அண்ணா....." அண்ணாவுக்கு அழுத்தம் குடுக்க அஷ்வினி விழுக்கென நிமிரவும் அவன் மேலும் தொடர்ந்தான்

"நா உங்க தம்பி இல்லன்னு...நீங்க நெனச்சது கூட ஒன்னுமே இல்லண்ணா.......ப...ப..பட்...அந்த துரோகியோட தம்பியா.. இ...இருக்க மாட்டேன்னு ஒரு தடவ கூட உங்களுக்கு தோனவே இல்..இல்லயாண்ணா?" என கேட்டவனுக்கு தொண்டை அடைத்து பேச்சு திக்க... அவன் கூற்றை அவசரமாக மறுக்க எண்ணியவனாய்

"ஆரு...நா சொல்ல வர்ரத...கொஞ்.." எனப்போனவனுக்கு கசந்த புன்னகையை பரிசளித்தவன்

"வேணாண்ணா...இதுக்கு மேல சத்தியமா மு...முடியலணா.....என்ன மன்னிச்சிரு...எ..எனக்கு... என்னமோ பன்னுதுணா... வலிக்குதுணா..." அதற்கு மேல் பேச முடியாமல் கண்ணீர் உடைப்பெடுக்க எழுந்து சென்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தனர் மூவரும்.......

அவன் சென்று கதவை அடைத்துக்கொள்ள.... அவசரமாக தன்னவன் பின்னால் கயலும் சென்றுவிட தனித்து விடப்பட்டனர் இருவரும்....

ரிஷி தலையை பிடித்துக் கொண்டு கீழே குனிய தன் பயத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவன் அருகே சென்று அவனின் தலையில் கைவைக்க அவள் இடுப்பை சுற்றிப் பிடித்தவன் அவளை அணைத்துக்கொண்டே கதற... அவன் ஈரத்தை தன்னில் உணர்ந்தவளின் கண்களிலிருந்தும் சிதறியது கண்ணீர் துளிகள்.....

அவன் தலையை வருடிக்கொடுத்தவள்
"தே...தேவ்....கண்ட்ரோல் யுவர் செல்ஃப்... ப்ளீஸ்.... அழாதீங்க தேவ்.... நீங்க கஷ்டப்படுறத என்னால பாக்க முடில...."

"முடியலயே அஷு...அவனுக்கு வலிச்சா எனக்கும் வலிக்கிதேடி....நா என்ன பண்ணட்டும்?" சிறு பிள்ளையாய் முகம் உயர்த்தி கேட்டவனைப் பார்த்து

"ஆருவுக்கு புரிய வெக்கலாம் தேவ்...ப்ளீஸ் நீங்க முதல்ல உணர்ச்சிவசப்படாம இருங்க..."

"அ...அப்போ என்கிட்ட அவன் பேசிருவானில்ல அஷு?" இதற்கு அவள் எப்படி பதில் கூறுவது.... அவன் கண்களில் அவள் கண்ட அந்நியத்தன்மையை கண்ட பிறகு என்னவென்று அவளும் உறுதியளிப்பது???

"சொல்லு அஷு...பேசுவானில்லடி...?"

"அ...அது...அது...பேசுவான் தேவ்.. நீங்க ஸ்ட்ரைன் பன்னிக்காதிங்க" மறுபடி அவன் எதுவும் பேசாமல் அமைதியாகிவிட அவன் தலையை தடவிக்கொடுத்துக்கொண்டே இருக்க... அவனும் எதிர்ப்பு காட்டாமல் அவள் வயிற்றிலேயே முகம் புதைத்துக் கொண்டான்.

***

கட்டிலில் தொப்பென விழுந்தவனுக்கு மனது ரணமாய் வலிக்க...கண்களிலிருந்து அருவியாய் இறங்கியது கண்ணீர்....
அவனைத்தொடர்ந்து வந்த கயல் அவன் தலை பக்கம் அமர்ந்து அவன் தலையை தன் மடி மீது வைக்கவும் அவன் கண்ணீரை உணர்ந்தவள்

"ப்ச்..ஆரு...என்னடா இது சின்ன பசங்க மாதிரி அழுதுகிட்டு....இந்த கண்ணீர் வேஸ்ட் ஆரு....மாமா தெரிஞ்சு தப்பு பண்ணலயே...அவன் சொன்னத நம்பினதாலதானே அப்பிடி நெனச்சிருக்காங்க.... இல்லன்னா...அவங்க நெனச்சிருப்பாங்களாடா...நீயே சொல்லு பாக்கலாம்?" சூழ்நிலையை சகஜமாக்க முயன்றவளிடம்

"அ...அவருக்கு......ஒரு நாள் கூட நா அவரோட த...தம்பியா இ...இருக்க மாட்டேன்னு...தோ...தோனவே இல்லல்ல அம்மு....ரொம்ப வலிக்குதுடி......" என்றவன் எழுந்து உள்ளறைக்கு செல்ல இவளோ செய்வதறியாது நின்றிருந்தாள்.

காலை....

சூரிய கதிர் வெளிச்சத்தில் கண் விழித்த ரிஷி தான் தலையணையல்லாது வேறு எதிலோ தலை வைத்திருப்பதை உணர்ந்து வாரிசுருட்டிக்கொண்டெழ அங்கே அவன் கண்டது புன்னகை முகம் மாறாது சிறு குழந்தை போல் உறங்கிக்கொண்டிருக்கும் தன் மனையாளைத்தான்....

அவள் சோபாவில் அமர்ந்தவாக்கிலேயே உறங்கியிருக்க... தான் தான் அவள் மடியில் படுத்திருந்திருப்பதை யூகித்துக்கொண்டவனுக்கு....." நான் எப்படி இவள் மடியில்?" என்பதுவே புரியாத புதிராகிப்போனது.

மூலையை கசக்கிப்பிழிந்து யோசித்தவனுக்கு நேற்று நடந்ததனைத்தும் படமாக விரிய.... முகம் அடுத்த நொடி வேதனையில் கசங்கிய அதே நேரம்.... யாரிடம் உணர்வுகளை அடக்கி வைத்தாலும் இவளிடம் மட்டும் அது நடக்கவே நடக்கப்போவதில்லை என்பதனையும் தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டான் அந்த ஆறடி ஆண்மகன்.

தாலி செய்யும் மாயாஜாலமோ அல்லது மனைவி என்கிற உரிமையோ ஏதோ ஒன்று இவளின்பால் சாயத்தூண்டுகிறது என்பதுவே உண்மை என்பதனை புரிந்து கொண்டவன் சலேரெனத்திரும்பி அவளைப்பார்க்க அவளோ இன்னும் அதே குழந்தைத்தனமான முகத்துடன் தூங்கிக் கொண்டுதானிருந்தாள்.

அவளையே பார்த்திருந்தவனுக்கு இவளா நேற்று ஆபீஸில் அப்படி பேசினாள் என்ற சந்தேகம் எழவும் கூடவே தான் அப்படி நடந்து கொண்டிராவிட்டால் இவள் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்திருக்குமா எனவும் தோன்றியதில் தன் மீது தப்பை வைத்துக்கொண்டு இவளிடம் கோபப்பட்டு விட்டோமே என நினைத்தவன் அவளில் சிறு அசைவு தெரியவும் அவசரமாக எழுந்து மாடியேறி சென்றுவிட்டான் அவள் முகம் பார்க்கத்தயங்கி....

கண்விழித்துப் பார்த்தவள் உடனே தேடியது ரிஷியைத்தான்.... பின்னே நேற்று இரவு அவன் வாயிலிருந்து வந்த வார்த்தைகளின் தாக்கம் அப்படி...
அமர்ந்தவாக்கிலேயே இருந்தவளுக்கு நேற்றிரவு நடந்தது விரிந்தது.

அவளை சுற்றி வளைத்திருந்தவன் திடுமென நிமிர்ந்து
"அ....அஷு....உ...உன்...மடியில படுத்துக்கட்டுமா?" என கேட்டவனை பார்த்து அதிர்ந்து போனவளாய் எதுவுமே சொல்லத்தோன்றாமல் தலையை மட்டும் ஆமோதிப்பாய் அசைத்து விட்டு சோபாவில் அமர அவனும் படுத்துக் கொண்டான்.

அவன் தலைமுடியை கோதியவாறே ஏதோ யோசனையில் இருந்தவளை அவன் முனகல் சத்தம் நினைவுக்கழைக்க.... அவசரமாக அவனைப் பார்க்க அவனோ

"யேன் ராக்கி இப்பிடி பண்ண? என்ன விட உன்னத்தானேடா நம்பி இருந்தேன்....நட்புக்கு துரோகம் செஞ்ச நீ அப்பிடியே போகாம எதுக்குடா என் மொத்த வாழ்கைலயும் விளையாடி இருக்க? உன்னால... உன் துரொகத்தால என்னால எந்தப் பொண்ணையுமே நம்ப முடியாம பண்ணிட்டியே அனு... யேன்டி பொய்யாகிப்போன? ராக்கி....என் சொந்த தம்பியையே என்கிட்ட நெருங்க விடாம பண்ணிட்டல்லடா.... உன்ன கொல்லாம விட மாட்டேன்டா... மாட்டேன்..." என்னென்வோ சுயநினைவின்றி மாறி மாறி பிதற்றிக்கொண்டிருக்க அப்போதுதான் அவளுக்கு அவன் சுயநினைவின்றியே தன்னிடம் மடியில் படுத்துக்கொள்ள கேட்டிருப்பதும் புரிந்தது.

இப்போது காதலிக்கவில்லையாயினும் சுயநினைவின்றி அவள் பெயரை உச்சரிக்கும் அளவுக்கா அவள் பதிந்து போயிருக்கிறாள் என நினைக்க நினைக்க மனம் வலித்தது மறுபுறம்....

எல்லாம் தெரிந்திருந்தும் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் எட்டிப்பார்க்க அவசரமாக அதை வாய் பொத்தி அடக்கிக்கொண்டாள்.

கயலின் அக்கா என்றழைப்பில் நிதர்சனத்திற்கு வந்தவள் திரும்பிப் பார்க்க அவள் பதற்றமாக இருப்பதை கண்டவளுக்கு அந்த பதற்றம் தொற்றிக்கொள்ள

"எ...என்னாச்சு க...கயல்....எதுக்குடி பதட்டமா இருக்க?" என்றாள் அவளும் பதற்றமாகவே....

"அ...அ...அஷ்வி..அஷ்வி...ஆ...ஆருவகாணோம்டி..." எனவும் தூக்கிவாரிப் போட்டது பேதைக்கு...

"என்னடி சொல்ற...நல்லா தேடிப்பாத்தியா.....?"

"ந...நா..நா தேடிப்பாத்துட்டேன் அஷ்வி...ப..ப...பயமா இருக்குடி..." என அழவும் தன் பயத்தை மறைத்தவள்

"ஹே...ரிலாக்ஸ் கயல்....அவன் எங்காவது அவசர வேலயா போயிருப்பான்டி...பயப்படாத..."

"இல்ல... இல்ல.... அஷ்வி...எவ்வளோ அவசரமா இருந்தாலும்.... இருந்தாலும்....சொ....சொ... சொல்லிட்டுத்தான் போவான்... மொ...மொபைல் வேற சுவிட்ச் ஆஃப்னு வருது....எனக்கு ரொம்ப பயமா இருக்கு அஷ்வி..."

"நீ...இரு...நா....நா...போய் தேடிட்டு வர்ரேன்..." என்றவள் அவசரமாக வெளியேற அவளின் "மாமாட்ட சொல்லிட்டு போ அஷ்வி..." என்ற குரல் காற்றோடு கரைந்து போனது.

அப்போதுதான் கீழிறங்கி வந்த ரிஷி இவள் கத்துவது கேட்டு" யாருகிட்ட என்கிட்ட சொல்லிட்டு போன்னு கத்துறா?" என யோசித்தவாறே அருகில் வர அரவம் உணர்ந்து திரும்பிப் பார்த்தவள் ரிஷியை கண்டு கண்களில் நீர் கோர்க்க

"ம்...மாமா...ஆரு...ஆ..ஆருவ காணோம்..... மாமா...."எனவும் "வாட்..." என அதிர்ந்து பின் ஆக்ரோஷமாக அவளை உலுக்கி

"எ...என்ன...? நீ...நீ..." வார்த்தை வராமல் தடுமாற

"உண்மதான் மாமா....அஷ்வி... அதுக்காக தான் வெளிய போ...போ...போனா..."

"ஒஹ்...ஷிட்..இடியட்...உன் அக்காக்கு மூளன்னு ஒன்னு இருக்கா இல்லயா..." என கத்தியவன் தன் போனை எடுத்து அவளுக்கழைக்க அது அவன் நின்றிருந்த இடத்திற்கு அருகிலேயே கேட்கவும்....

"ஷிட்....ஷிட்...ஷிட்..."என்றவன் தலையை அழுத்தக்கோதி தன்னை கட்டுப்படித்திக்கொண்டு

"நீ...பத்திரமா இரு கயல்...நா..நா போய் ரெண்டு பேரயும் தேடுறேன்..." என்றவன் விருட்டென வெளியேற தன்னை நிலைப்படுத்த முடியாமல் சோபாவில் அமர்ந்து விட்டாள் கயல்விழி.

***

"ஆரு....எங்கடா போய்த்தொலஞ்ச.... ச்சே அவசரத்துல ஃபோன வேற விட்டுட்டு வந்துட்டேன்.... யேன்டா இப்பிடி பண்ற? லூசு...லூசு... கொஞ்சம் கூட யோசிக்கிற தன்மையே இல்லாத நீயெல்லாம் எப்பிடித்தான் சி.பி.ஐ ல வேல பாக்குறியோ...." என வாய்விட்டே புலம்பியவள் தன் ஸ்கூட்டியை ஓட்டியவாறே அங்குமிங்கும் கண்களால் அவன் தென்படுகிறானா என அலசிக்கொண்டே சென்று கொண்டிருந்தாள்.

***

தன் காரிலுள்ள புளூடூத்தை ஆன் பண்ணியவன் மீண்டும் மீண்டும் ஆரவ்விற்கு அழைக்க அது அனைத்து வைக்கப்பட்டிருக்கும் தகவலே கிடைக்கவும் எரிச்சலில் காரை அதிவேகமாக செலுத்திக்கொண்டிருந்தான்.

"இடியட்....இவ வேற எங்க போய்த்தொலஞ்சான்னு தெரியலயே.... இவளத் தேடுறதா... இல்ல.... அவனத் தேடுறதா..." கண்களை அலைய விட்வாறே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவனுக்கு மின்னலென வந்து போனது கடற்கரை.....

அதற்கு காரணமும் இல்லாமலில்லை... ஆரவ் தனிமையை தேடி நாடிச்செல்லும் ஒரே இடம்....
அவனைப் போலவே......
அந்த ஒற்றுமை இப்போதுதான் அவனுக்கு புரிய... அந்த பதற்ற;கோப நிலையிலும் அவணுக்கு அழகாக புன்னகை விரிந்தது.
((டேய்...டேய்...அங்க உன் பொண்டாட்டி, உன் தம்பி என்ன ஆனாங்கன்னு போய் பாருடா...அத விட்டுட்டு இழிச்சிக்கிட்டு இருக்க... இது ஒனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல..))

அவளும் தன் ஸ்கூட்டியை கடற்கரைக்குத்தான் செலுத்திக் கொண்டிருந்தாள்.
((ஆஹா ஆஹா...பொண்டாட்டிக்கும் புருஷனுக்கும் என்னே ஒரு ஒற்றுமை...!!!))

***

கடலலையை முறைத்தவாறே ச்சே...ச்சே..ஆரு முறைக்க மாட்டான்ல....

கடலலையை பார்த்தவாறே மனலில் அமர்ந்திருந்தான் ஆரவ். மனது மரண வலியை சத்தமில்லாமல் அனுபவித்துக்கொண்டிருக்க... அதன் பிரதிபலிப்பு கண்களில் நீர் வழிந்து கொண்டே இருந்தது.

அவனுக்கு ரிஷி சொன்னதை ஜீரனித்துக்கொள்ளவே முடியவில்லை.... இதற்கு உண்மையை மறைத்து அதை சொல்லாமலேயே விட்டிருக்கலாமே... இத்தனை வலி இருந்திருக்காதே!!!
ரிஷி முகத்தை திருப்பினாலே கண்ணீர் விடுபவன் இன்று அவன் முகத்தை பார்க்கவே பிடிக்காமல் தனிமையில் அமர்ந்திருப்பதை எங்கு போய் சொல்வது???

முதலில் வந்து சேர்ந்தது அஷ்வினியே...தன் பார்வையை ஆரவ்வை தேடி அலச விட... அவன்தூரத்திலே ஒரு படகுக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பது தெரிய....அவனருகில் சென்றவள் ஹப்பாடா என அவனை இடித்தவாறே அமரவும் யாரென திரும்பிப் பார்த்தவன் அவளை முறைத்துவிட்டு தள்ளி அமர்ந்தான்.
அதில் அவனை மேலும் சீண்டிப்பார்க்க எண்ணி மணலை அள்ளியெடுத்து அவன் முடியில் அருவி போல் கொட்ட திடுக்கிட்டவன் அவசரமாக அவள் கையை தட்டிவிட்டு அவனும் அவளுக்கு அபிஷேகம் செய்து விட்டு எழுந்து நிற்க.... அவன் மனநிலையை மாற்றிவிட்ட சந்தோஷத்தில் தானும் எழுந்தவள் அவனை தன் புறம் திருப்பி

"டேய்...இப்போ என்ன நடந்து போச்சுன்னு இங்க வந்து உக்காந்திருக்க?நாங்க எவ்வளோ பதறிப்போய்டோம் தெரியுமா...கயல் பாவம்டா..ரொம்ப பயந்துட்டா...."என்றவளை புரியாது பார்க்க

"பின்னே...சொல்லாமகொல்லாம வீட்லருந்து வந்து....மொபைலும் சுவிட்ச் ஆப்னா நாங்களும் என்னதான் நினக்கிறது?"

"ப்ச்..."

"என்னடா....?"

"ரொம்ப ஹேர்ட்டிங்கா இருக்குடி"

"....."

"அவரு இத என்கிட்ட சொல்லாமலே இருந்திருக்கலாமேடி.... எதுக்கு அஷ்வி சொன்னாரு?"

"ஆரு...."

"...."

"ப்ச்....ஆரு...."

"......"

"ஏன்னுதான் கேளேன்டா......"

"நீ என்ன சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது அஷ்வினி..." திட்டவட்டமாக கூறிவிட்டவனை இயலாமையுடன் பார்த்தவள் இவனை விட்டுப்பிடிப்போம் என எண்ணியவாறு

"சரி...சரி...அதுக்குன்னு என் பெயர நீட்டி முழக்காத..." என பொய்யாய் கோபம் கொண்டு மறுபக்கம் திரும்பியவளை புன்சிரிப்புடன் பார்க்க "ஹப்பா...ஒரு வழியா சிரிச்சிட்டான்" என நினைத்து

"மொதல்ல வீட்டுக்கு போ... போயி உன் பொண்டாட்டிய சமாதானப்படுத்துற வழியப்பாரு... எப்போ பாரு உறிஞ்சிக்கிட்டேதான்...." சலிப்புடன் சொன்னாலும் அதிலுள்ள அக்கறையை உணராதவனா நண்பன்??

"அப்போ நீ வர்ல?"

"நீ போ..ஆரு...நா கொஞ்ச நேரம் கழிச்சி வரேன்" என்றவளை அவன் கண்கள் துளைக்க

"நாம அப்பறமா பேசலாம்டா....நீ போ நா வர்ரேன்"

"ம்ஹூம்...அப்படியெல்லாம் உன்ன தனியா விட முடியாது...நீயும் வா..."

"ஆரு...ப்ளீஸ்டா...கொஞ்ச நேரம்தான்...ப்ளீஸ்.." என கண்களை சுருக்கி கெஞ்சவும் மனமே இல்லாமல் சரி என்று சென்று விட்டான்.

காரை லாவகமாக ஓட்டியவாறே கடற்கரையை அடைந்தவனுக்கு சுத்தமாக அஷ்வினியின் ஞாபகம் பின்னுக்கு செல்லப்பட்டு ஆரவ் மட்டுமே ஞாபக அடுக்குகளில் நிறைந்திருந்தான்.

கயல் அவனுக்கழைத்து ஆரவ் வந்ததையும் அஷ்வினி அங்கேயே இருப்பதாகவும் கூறி வைத்துவிட... ஆரவ்வின் முகத்திருப்பலில் மனது சுணங்கினாலும் அதுவும் அவனுக்கு சுவாரஷ்யத்தையே கொடுத்தது தான் விந்தை....
ஆக...மொத்தத்தில் பழைய ரிஷியாக மாறிக்கொண்டிருப்பது உண்மை...அதுவும் ஆரவ்விடம் மட்டும்.....
அஷ்வினியிடம் தேவ் தான்......

***

ஆரவ் சென்றவுடன் மணலில் அமர்ந்தவளுக்கு பல எண்ண ஊர்வலம்....

ரிஷி சுயநினைவின்றி உலற்றியது ஒரு புறம் மனதை பாரமாக்க...மறுபுறம் ஆரவ் "வருண்" என "விஷ்வாவை" காட்டியது வேறு அவளுக்கு உச்சகட்ட அதிர்ச்சியாக இருந்தது.

அஜய்யை போலவே தோற்ற வேறுபாடின்றி விஷ்வாவை கண்ட நாள் முதல் அவனிடம் எத்தனையோ ஜென்மத் தொடர்பு போல் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு அவளுக்குள்....
இதை எதனையுமே வெளியில் காட்டாவிடினும் மனதில் ஒரு பிரளயமே உலன்று கொண்டிருந்தது.

அதையும் ஓரத்தில் வைத்து விட்டு பிறகு பார்க்கலாம் என வைத்தாலும் அவள் மனம் போகும் போக்கைத்தான் அவளால் இன்றுவரை புரிந்து கொள்ளவே முடியவில்லை....

அவனை கண்ட நாளிலிருந்து இன்றுவரை நினைத்தவளுக்கு ஒன்றே ஒன்றுதான் சத்தியமாய் புரிந்தது. அது.....அவன் எவ்வளவுதான் அவன் கோபம் காட்டி அவளும் அவனிடம் கோபப்பட்டாலும் மறு நொடி எப்போதும் போல் பேசத் தூண்டுகிறது மனது....

ஏதேதோ யோசனைகளில் உழன்று கொண்டிருந்தவளை ஒரு தாயின் ஓலமே திடுக்கிட்டு திரும்பச் செய்தது.
சட்டென சத்தம் வந்த திசை பக்கம் பார்வையை திருப்பியவள் அங்கே ஒரு தாய் தலையில் அடித்துக்கொண்டு அழுவதை பார்த்தவள் பதறி எழுந்து சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டியவள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே தென்படாதது கண்டு புருவ முடிச்சுடனே அவசரமாக அந்த தாயை நெருங்கி

"அம்மா....என்னாச்சு... எதுக்கு இப்பிடி " என கேட்டவளை பற்றுக்கோளாக நினைத்த அந்த தாய் மனது சற்றும் தாமதியாமல் தூரத்தில் கை காட்ட அந்த திசையை பார்த்தவள் அதிர்ந்தது ஒரு நொடி தான்... அடுத்த நிமிடம் அந்த ஆழ்கடலுக்குள் குதித்திருந்தாள் அவர் குழந்தையை காப்பாற்ற....

அவள் அந்தத் தாயிடம் ஏதோ பேசக்குனிந்த போதுதான் அவளை கண்டு அவளிடம் நெருங்க ஒரு காலடியை எடுத்து வைத்த ரிஷி அவள் அடுத்து செய்த காரியத்தில் ஸ்தம்பித்து நின்றுவிட்டான் மூளை மரத்துப் போனவனாய்......

அதற்குள் அஷ்வினி அக்குழந்தையை காப்பாற்றி அந்த தாயிடம் ஒப்படைத்தவள் அவர் கால் முடியாமல் இருப்பதை பார்த்து நடந்ததை யூகித்துக் கொண்டு திரும்ப திடுமென வந்த பெரிய அலையொன்று அவளை தன்னுள் வாரி சுரிட்டிக்கொண்டு உள்ளே இழுத்துச்செல்ல... ஏற்கனவே அதிக தண்ணீரை குடித்திருந்தவள் மறுபடி நடந்த திடீர் தாக்குதலில் அதிர்ச்சியில் நீருக்குள்ளே மூர்ச்சையானாள்.

அவளை உள்ளே இழுத்துக்கொண்ட அலையில் சட்டென குதித்த ரிஷி அவள் மூர்ச்சையாகி சாயவும் அவளை இழுத்து பிடிக்க... அடுத்து வந்த அலையில் இருவருமே கரையோரமாய் அடித்து வரப்பட்டு வந்து விழுந்தனர்.

அவளை தன் கை வளைவுக்குள் வைத்திருந்தவன் உடனே சுதாரித்து எழுந்து அவள் கண்ணத்தை பதட்டமாக தட்டத் துவங்கினான்.

"ஏய்......எந்திரிடி.....இடியட்....அ...அஷு....அஷு....எந்திரிடி....ப்ளீஸ்...." என தட்டியவன் அவள் நெஞ்சின் மீது தலை வைத்துப்பார்க்க... அது சீராக இயங்கிக் கொண்டிருந்ததில் சற்றே ஆசுவாசமடைந்தவனாக அவள் வாய் மீது வாய் வைத்து ஊத.... சற்று இருமலுடனேயே நீரை கக்கியவாறே கண்விழித்தாள் தேவ்வின் அஷு....

அவன் கண்களை கண்டவள் அதில் தெரிந்த நிம்மதியில் புன்னகைத்தவாறே மீண்டும் மயங்கிப்போக உண்மையிலயே பயந்து போனான் ரிஷி.

"அ....அஷு...என்னாச்சு... எந்திரிமா...எ...எந்திரி..." கண்ணத்தை தட்ட அவளிடம் எந்தவொரு அசைவுமில்லாது போக அவளை தூக்கிக்கொண்டு காருக்குள் கொண்டுபோய் கிடத்தியவன் புயலென எடுத்தான் வைத்திய சாலையை நோக்கி....
அவளை கொண்டுபோய் அதில் அனுமதித்தவனுக்கு மனம் எரிமலையாய் கனன்று கொண்டிருந்தது அவள் செயலை நினைத்து....

வைத்தியர் வந்து சாதாரன அதிர்ச்சி மயக்கம் தான் என கூறிச்சென்றிருக்க அவன் இன்னும் கண்விழிக்கவில்லையாதலால் எதுவும் சொல்லாமல் வெளியில் நின்றிருந்தான்.

சிறிது நேரத்தில் ஒரு நர்ஸ் வந்து கண்விழித்து விட்டாளென்பதை சொல்லிச் செல்ல கதவை திறந்து கொண்டு புயலென உள்ளே நுழைந்தவன் அவள் சுதாரிக்கும் முன் விட்டான் பளாரென ஒரு அறை...
அவனைப்பார்த்து கண்களில் நீர் கோர்க்க ஏறிட்டு பார்பத்தவளை

"அறிவிருக்காடி உனக்கு?இவ பெரிய நீச்சல் வீராங்கனை.... கொழந்தய காப்பாத்த அப்பிடியே பாஞ்சிட்டா....ச்சே...அறிவுன்னு கொஞ்சமாச்சும் மண்டைல இருக்கா இல்லயாடி?இது பத்தாதுன்னு காலைல எதபத்தியும் கவலப்படாம வந்திருக்க? ஒன்னுகெடக்க ஒன்னு ஆகிப்போச்சின்னா அப்பறம் நா....." என ஏதோ கூற வந்தவன் அப்படியே நிறுத்திவிட்டு தலையை அழுத்தக் கோதி தன்னை சமன்படுத்திக்கொண்டான்.

அவள் எதுவுமே பேசவேயில்லை... அமைதியாகவே அனைத்தையும் ஏற்றுக்கொண்டாள்.இருவருடைய உடையுமே ஈரமாயிருப்பதை உணர்ந்தவன் அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றான்.

வீட்டுக்குள் வந்ததும் வராததுமாக எல்லாவற்றையும் கூறி ஆரவ்வை காய்ச்சி எடுக்க அவளை முறைத்த ஆரவ் எதுவும் வாய் திறந்து பேசினானில்லை.... ஒரு பெருமூச்சுடன் அவனைக் கடந்து ரூமிற்குள் சென்றவன் பாத்ரூமிற்குள் நுழைந்து கொள்ள அவனைத்தொடர்நது ரூமிற்குள் நுழைந்தவள் நேரே பால்கனியில் போய் நின்றாள் அவன் வரும் வரை....

ஏனோ காரனமின்றி கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.ஆறுதலாக பேசக்கூட யாருமில்லாமல் தனித்துவிடப்பட்ட உணர்வு.....

கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டவள் அவனை ஏறிட்டும் பார்க்காமல் குளியலறையில் புகுந்து கொள்ள... அவளை நெற்றி சுறுக்கியவாறே பார்த்திருந்தவன் பின் தோலை குழுக்கிவிட்டு லேப்டாப்புடன் அமர்ந்துவிட்டான்.

கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தவள் கொஞ்சம் தள்ளாடவும் அவளையே பார்த்திருந்தவன் ஒரே எட்டில் அவளை நெருங்கி அவள் தோலை வளைத்து பிடிக்க அவன் கைகளிலேயே தோய்ந்து விழுந்தவளின் உடல் நெருப்பென கொதித்தது காய்ச்சலினால்.......

தொடரும்..........

25-04-2021.
 

Rishi 24

Member
Vannangal Writer
Team
Messages
54
Reaction score
33
Points
18
அத்தியாயம் 13 ❤️

தன் கைகளில் தோய்ந்து விழுந்தவளின் உடல் சூட்டை உணர்ந்தவன் சட்டென அவளை பூ போல் தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் கிடத்திவிட்டு வைத்தியருக்கு கால் பண்ணுவதற்காக எழுந்தவனை தடை செய்தது அவன் மனையாளின் தன் ஷர்ட் காலரில் இறுக்கப்பற்றியிருந்த கை....

அதனை குனிந்து பார்த்துவிட்டு மீண்டும் அவளைப் பார்த்தவனின் உதட்டில் புன்னகை அரும்பியது அவள் செய்கையில்......

அவள் கையை மெதுவாக எடுத்துவிட்டு நிமிர்ந்தவன் அவளை விட்டகன்று சென்று வைத்தியரை அழைத்தான் கடமை தவறாது....
மீண்டும் அவளருகில் சென்று அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தவனுக்கு இருந்த மனநிலை மாறி மீண்டும் சினம் துளிர்க்க அவளை முறைத்துவிட்டு பால்கனிக்கு போக திரும்ப வைத்தியருடன் படபடப்புடன் உள்ளே நுழைந்தனர் ஆரவ்வும் கயலும்.......

அவர்களின் வருகை உணர்ந்து அசையாது நின்றுவிட்டாலும் அவன் முகம் இறுகியிருந்ததை வைத்து அவன் கோபத்தில் இருக்கிறானென்பதை உணர்ந்து கொண்ட ஆரவ் சரியானதும் அவள் நிலைமை என்ன என்பதனை உணர்ந்து தன் உயிர் தோழியை பாவமாகப் பார்த்தான்.

அதற்குள் வைத்தியர் பரிசோதித்துவிட்டு மருந்தையும் எழுதித் தரவும் அதனை கையிலெடுத்தவன் வைத்தியருடன் பேசியவாறே வெளியேறிய அடுத்த நொடி ஆரவ்வை அர்ச்சனை செய்ய தொடங்கினாள் கயல்விழி

"உனக்கு கொஞ்சமாச்சும் அக்கறயோ பாசமோ இருந்தா இப்பிடி இவள அங்கேயே விட்டுட்டு வந்திருப்பியா ஆரு...... இப்போ பாரு....எப்பிடி படுத்திருக்கான்னு?"

"நா என்னடி பண்ணேன்?"

"நீ என்ன பண்ணியா?இவள கையோடயே உன் கூட கூட்டிட்டு வந்திருந்தேன்னா மாமாட கோவத்துக்கு ஆளாகி இருக்கவும் அவஷியமில்ல... இப்பிடி காச்சல்ல படுத்திருக்கவும் அவஷ்ஷியம் இல்ல..... எல்லாம் உன்னால வந்தது.....சொல்லாமகொள்ளாம நீ வீட்ட விட்டு போனதுக்கு இவ தண்டன அனுபவிச்சிட்ருக்கா..." என தன் மீதுதான் மொத்த தவறுமே என்பது போல் பேசியவளை பார்த்து அவன் கோபமும் எல்லையை கடக்க

"தட்ஸ் இனஃப் கயல்விழி....நா எங்க போறன்னாலும் உங்கிட்ட பர்மிஷன் கேட்டுட்டிருக்க வேண்டிய அவஷ்யம் எனக்கில்ல.... அண்ட் நா வெளிலயோ வேற எங்கயோ பொனாலும் கவலப்பட வேண்டிய அவஷ்யம் உங்களுக்கும் இல்ல.... என்ன கானோம்னு தேடி வர சொல்லி இவளுக்கும் அவங்களுக்கும் நானா சொன்னேன்"

கயல் அவனை ஏசும் போது இலேசாக விழித்திருந்தவளுக்கு ஆரவ் பேசியது வருத்தத்தை கொடுத்த அதேவேளை டாக்டரை அனுப்பி வைத்துவிட்டு அப்போது தான் உள்ளே நுழைந்த ரிஷியின் காதுகளிலும் தேளிவாகவே விழுந்து வருந்தச் செய்தது.

கயலை சொல்லவே வேண்டாம்.... அவன் அவள் பெயரை வேறுவிதமாக அழைத்தது மட்டுமல்லாமல் அவளை வேற்று மனுஷி போல் பேசிய போதே தெரிந்த அவன் கோபத்தில் கண்களிலிருந்து மலுக்கென கண்ணீர் எட்டிப்பார்க்க கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக்கொண்டு எழுந்து வாயிலை நோக்கி சென்றவள் ரிஷியை கண்டு அப்படியே நிற்க அவளிடம் ஏதோ பேசப் போனவனும் ரிஷியை கண்டு தலை குனிய அவனருகில் வந்து அவன் தோல் மேல் கைவைத்து

"என் பேரு கூட சொல்ல முடியாதளவு என்ன தூரமாக்கி வெச்சிருக்கியாடா?"
அவன் கேட்ட அந்த ஒரே ஒரு கேள்வியிலேயே சட்டென நிமிர்ந்தவன் எதுவும் பேசாமல் வெளியேறிவிட....
அப்பொழுதுதான் அவன் கவனம் அஷ்வினியின் பக்கம் திரும்ப அவன் பார்ப்பதை உணர்ந்தவள் போல் மறுபக்கம் முகத்தை திருப்ப நெற்றி சுருக்கி பார்த்தவன் தன் வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியவாறு யோசனையுடனே அவளை நெருங்கினான்.
அவனும் தான் கண் விழித்ததிலிருந்து அவளை பார்த்துக் கொண்டிருக்கிறானே!! படபட பட்டாசு போல் வாய் ஓயாமல் பேசுபவள் இன்று அமைதியே உருவாக இருப்பதையும் ; அவன் முகத்தை ஏறிட்டுக் கூட பார்க்காததையும்.....

அவளை நெருங்கி அருகிலிருந்த ஸ்டூலை அவன் பக்கத்தில் போட்டு அமர இப்போது அவள் அவனைப் பார்க்காது மறுபுறம் திரும்பிக்கொள்ளவும் தன்னை உதாசீனப்படுத்துவதாகவே அதை நினைத்தவன் "அஷ்வினி " என்றான் அழுத்தமாக....

அவன் அழுத்தத்திலேயே அவன் கோபம் தூண்டப்பட்டுக்கொண்டிருப்பது புரிந்தாலும் உனக்கு நானும் சலைத்தவளல்ல என்பது போல் அவளும் அவன் பக்கம் திரும்பவே இல்லை....

காய்ச்சலில் இருப்பவளை ஏற்கனவே அறைந்தது குற்ற உணர்ச்சியாய் இருந்தாலும் அவள் முகத்திருப்பலில் கோபம் கொண்டவனாய் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவன்

"வெல்....அப்போ நீ என்ன பாக்க மாட்ட... அப்படித்தானே அ...ஷ்...வி....னி..." தன் பெயரை ஒவ்வொரு சொற்களாய் அழுத்திச் சொன்னவனின் வார்த்தைகளில் பயத்தில் அவள் முதுகுத்தண்டு சில்லிட்டுப் போனது.இருந்தும் அசைந்தாளில்லை பாவை.....

தன்னிரு கைகளையும் முழங்காலில் ஊன்றி எழுந்தவன் தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவளை தீர்க்கமாக ஒரு முறை பார்த்தவன் அடுத்து சொன்ன வார்த்தைகளில் சலேரென திரும்பினாள் அவன் புறம்....

"நீ கேட்ட மாறியே டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணிட்டேன் அஷ்வினி..." என்றவனை அடிபட்ட பார்வை பார்க்க அதற்காகவே காத்திருந்தவன் போல்

"இனி நீ என்ன பாத்தாலும் பாக்கலன்னாலும் ஐ....டோன்ட்...கேர்..." இத்துடன் எனது பேச்சு முடிந்தது என்பது போல் நகரப்போனவனை தடுத்து நிறுத்தியது அவள் கேள்வி

" எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் என்ன வெளிய அனுப்புறதுல உங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா...தே...?" என்று வார்த்தையை விழுங்கியவள்

"நீங்களே இவ்வளவு சந்தோஷமா சொல்லும் போது அதயே ஏன் நா சந்தோஷமா எடுத்துக்க கூடாது?" என்றவளை திரும்பி முறைத்தவன்

" நா ஒன்னும் உன்ன வெளிய போன்னு சொல்லல... நீயா கற்பன பண்ணி பேசுறதுக்கெல்லாம் என்னால பொறுப்பாக முடியாது"

"நா கற்பன பண்ணி பேசுறேனா?பேச்ச ஆரம்பிச்சது நீங்க...?"

"நா இல்லன்னு சொல்லல்லயே" என தோலை குழுக்கியவனை கண்டு ஆத்திரத்தில் பல்லை கடித்தவள்

"நா ஒன்னும் கற்பன பண்ணி பேசல மிஸ்டர்.தேவமாறுதன்... நீங்க சொன்னதத்தான் திருப்பி கேட்டேன்?"

"நா அப்பிடி எதுவும் சொன்னதா எனக்கு ஞாபகம் இல்ல...மிஸ்.அஷ்வினி"

"இல்ல...நீங்க சொன்னீங்க?"

"நா டிவோர்ஸ் பத்திதான் பேசிட்டிருந்ததா ஞாபகம்"

"அதயேத்தான் நானும் பேசிட்டிருக்கேன்"

"இல்லயே...மிஸ்.அஷ்வினி நீங்க நா ஏதோ கழுத்த புடிச்சி வெளிய தள்ளினாமாறில்ல பேசிட்டிருந்தீங்க?"

"ஓஹ்....சாருக்கு அப்பிடி வேற ஐடியா இருந்துதோ?"

"இதுவரைக்கும் இல்ல...."

"அப்போ இனிமே வரலாம்னு சொல்றீங்களா?"மூக்கு விடைக்க கேட்டவளை பார்த்து சிரிப்பு வந்தாலும்

"நா அப்பிடி சொல்லலன்னு உனக்கே தெரியும்னு நெனக்கிறேன்"

"ப்ச்...." என முகத்தை திருப்பிக் கொள்ளவும்

"தோ பார் அஷ்வினி...டிவோர்ஸ் கேட்டது நீதான்....நா ஒன்ன அதுக்கு ஃபோர்ஸ் பண்ணி கேக்க வெச்ச மாறி பேசிட்டிருக்க?" அவளிடம் பதிலில்லாமல் போகவும் அவளை சங்கடப்படுத்த விரும்பாமல் வெளியேறிவிட தன்னைக்குறித்த யோசனையில் ஆழ்ந்தாள் அஷ்வினி ரிக்ஷிதா.....

.....................

கயல் பின்னாலே சென்ற ஆரவ் அவள் ரூமிற்குள் நுழையவும் தானும் நுழைந்தவன் அவள் கையை பற்ற வெடுக்கென தட்டிவிட்டவள் அவனை திருப்பியும் பாராது பாத்ரூமிற்குள் நுழைந்து கொள்ள தன்னைத்தானே திட்டியவாறு அவள் வருகைக்காக காத்திருந்தான் ஆரவ்.

கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தவளின் முகமே அவள் அழுதிருப்பதை பறைசாற்ற அவள் அருகே வரவும் அவள் அவசரமாக பால்கனிக்கு சென்றுவிட்டாள்.அவள் பின்னாலேயே சென்று திரும்பி நின்றிருந்தவளை தன் புறம் திருப்பி அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன்

"ஐ ஆம் சாரி அம்மு....." என்றான் இறைஞ்சும் குரலில்....அவன் பேசியதிலேயே அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிய தன் கட்டை விரலால் துடைத்தவாறே

"ப்ச்....அழாதடி.....நா அப்பிடி பேசினது தப்புதான்...ஐ ஆம் ரியலி சாரி....நீ என்மேலதான் எல்லா தப்புமேங்குற மாறி பேசவும் சட்டுனு கோபம் வந்துடுச்சி அம்மு...சாரிடி ப்ளீஸ்..."

"உ....உன்னப்பத்தி...ஐ...ஐ... மீன் உங்களப்பத்தி நீங்க எதுக்கு என்கிட்ட சொல்லிட்டிருக்கீங்க ஆரவ்...உங்களுக்காக கவலப்பட வேணாம்னு நீங்கதானே இப்போ சொன்னீங்க...." என்றவள் அவன் கையை உதறிவிட்டு மறுபக்கம் திரும்ப அவளை திடீரென இழுத்து சுவற்றில் சாற்றியவன் அவள் அதரங்களை கவ்விக்கொண்டான்.

...............

அவன் ரூமை விட்டு வெளியேற அவனையே பார்த்திருந்தவளுக்கு சற்றுமுன் நடந்தது ஞாபகம் வர இதயத்தில் பற்பல யோசனைகள் அலைமோதத் துவங்கின.

அவள் தான் அவனிடம் டிவோர்ஸ் கேட்டாள்.... அதை மறுப்பதற்கில்லைதானெனினும்.....அவன் கூறிய போது உள்ளுக்குள் எழுந்த வலியை வார்த்தைகளால் வடித்துவிட முடியாதென்பதுவே உண்மை.....

ஏன் இந்த வலி?அவன் விலகல் தனக்கு ஏன் இவ்வளவு வலியை கொடுக்கிறது என்பதை யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு எங்கே தெரியப் போகிறது அது அவன் மேல் காதல் வந்திருப்பதற்கான வலியென்றும்......அவனை யாருக்கும் விட்டுத்தர மாட்டேன் என்பதற்கான வலியென்றும்.......

அவளுடன் பேசிவிட்டு வெளியே சென்றவன் தான் அதன் பிறகு அவனை அவள் காணவே இல்லை.....
அவனை மட்டுமா காணவில்லை....மற்ற இருவரையும் தான்....

ஏதேதோ எண்ணவோட்டங்களில் உழன்று கொண்டிருந்தவள் தன்னையுமறியாமல் உறங்கிவிட்டிருக்க.... சாப்பாடு தட்டோடு உள்ளே நுழைந்த கயல்விழி அவளை கண்டு புன்னகைத்தவாறே அருகில் வந்தமர்ந்து அவளையே கொஞ்ச நேரம் பார்தாள்.

அவளுக்கு அஷ்வினியிடம் பிடித்ததே அவள் தூங்கும் அழகுதானே!!
சிறுகுழந்தைப் போல் உடலை குறிக்கிக் கொண்டு நிர்மலமான முகத்துடன் தூங்கிக் கொண்டிருந்தவளை பார்த்தவளுக்கு சிரிப்புத்தான் வந்தது. "தூங்கும் போது மட்டும் தான் வாய மூடுவா போல..." என நினைத்துக் கொண்டவள் அவளை மெதுவாக தட்டி எழுப்பினாள்.

"ம்...ஊஹூம்...." என சினுங்கியவாறே மறுபடி தூக்கத்தை தொடர பக்கென சிரித்தவள் மீண்டும் அவளை தட்டியெழுப்ப மெதுவாக கண்களை திறந்து பார்த்தவள் கயல் அருகிலிருக்கவும் எழுந்தமர்ந்தாள்.

அதற்குள் கயல் சாப்பாட்டை கையிலெடுத்து வாயருகே கொண்டுவர கண்கள் கலங்கிவிட்டது அஷ்வினிக்கு......

கயலுக்கு தெரியாது அதை இமை சிமிட்டி அடக்கினாலும் இவ்வளவு நேரம் தன்னவளையே ரசித்துப் பார்த்திருந்த ஆரவ்வின் கண்கள் தன் உயிர் நண்பியின் கண்களை தப்பாமல் படம் பிடித்தது.

"இந்த அஷ்விக்கு என்னாச்சு... ரொம்ப பலவீனமா ஆகிட்டா.... எதுக்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு கண்ணீர் விட்டகிடுருக்கா... இவகிட்ட பேசியே ஆகனும்" என நினைத்தவன் அவர்களை தொந்தரவு செய்யாமல் அப்படியே நின்றான்.

கயல் சாப்பாட்டை ஊட்டியவாறே வளவளத்துக் கொண்டிருக்க அதை அமைதியே உருவாய் கேட்டுக் கொண்டிருந்தவளை தன் வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியவாறே நெற்றி சுருக்கி பார்த்திருந்தான் ஆரவ்விற்கு பின்னால் அப்போதுதான் வந்து நின்ற ரிஷி......

கயலை இடைமறித்த அஷ்வினி
"எனக்கு போதும் கயல்.....இதுக்கு மேல முடியாது..." என்றவள் கொஞ்சம் இடைவெளி விட்டு தயங்கித்தயங்கி

"க...கயு.....நா...அ... அம்மா வீட்டுக்கு போ..... போட்டுமா...? எ...எனக்கு அவங்கள ப...பாக்கனும்..." என்றவளுக்கு எவ்வளவு முயன்றும் கண்ணீரை அடக்க முடியாமல் போக..... அதை பதறித்துடைத்த கயல் சந்தேகத்துடனேயே

"அக்கா...உனக்கும் மாமாக்கும் இடையில ஏதாவது பிரச்சினயா?" என்றவளை மறுத்து அவசரமாக

"அப்பிடியெல்லாம் எதுவுமில்ல.... கயல்...."

"மாமா உங்கிட்ட அன்பா இருந்தார்னா உனக்கெதுக்கு அம்மா ஞாபகம் வரனும்?" என்றவளின் கேள்வியில் மூவருமே அதிர்ந்து போயினர். "உண்மைதானோ?!" என்ற சந்தேகம் வருவதை தடுக்க முடியவில்லை மூவருக்கும்.....

இப்போது அஷ்வினி என்ன பதிலளிக்கப்போகிறாள் என்பது போல் அவள் முகத்தை பார்க்க அவளோ சாமர்த்தியமாய்

"அம்மாவ பாக்கணும்னு நா கேட்டதுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல கயல்.... காச்சல்னாலதான் அம்மாவ பாக்கனும்னு போல இருக்கு" என்றவளை அப்போதும் சந்தேகத்துடனேயே பார்த்து வைக்க.... அவள் பார்வையை சந்திக்காமல் வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.

ஆரவ் அவளருகில் வந்து
"அஷ்வி.... இப்போ ஒனக்கென்ன அம்மாவ பாக்கனும் அவ்வளோதானே.... அண்ணாகிட்ட சொல்லிட்டு கெளம்பு பாத்துட்டு வந்துரலாம்...."

"பாத்துட்டு வர முடியாது..." எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னவளை பார்த்து அதிர்ந்து

"என்ன சொல்ற அஷ்வி...." என்றனர் கயலும் ஆரவ்வும் கோரசாக....
வெளியில் நின்றிருந்த ரிஷிக்கோ கோபம் எல்லையை கடக்க கை முஷ்டியை இருக்க பொத்தி அடக்கியவன் எதுவும் பேசாமல் நிற்க

"அ...அது..... இன்னக்கி வர்ல...கொ... கொஞ்ச நாள் இ...இருந்துட்டு வ...வர்றேன்னு சொல்ல வந்தேன்" என்றாள் திக்கித் தினறி...அவளை முறைத்த ஆரவ்

"அப்பிடீன்னா முடியாது" என்றான் காட்டமாக

"இ.....இல்லயில்ல....வந்துடலாம்" என பதிலளித்தவளை முறைத்துக் கொண்டே உள்ளே நுழைந்த ரிஷி கையிலிருந்த மருந்து பையை கயலிடம் நீட்டியவன் விருட்டேன தன் ஆபீஸ் அறைக்குள் நுழைந்துவிட்டான்.

"அண்ணாகிட்ட பர்மிஷன் கேட்டுட்டு கால் பண்ணு" என்றுவிட்டு வெளியேறவும் மீண்டும் உள்ளே வந்த ரிஷியை பார்த்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டே

"நா அம்மா வீட்டுக்கு போகனும்"

"சோ?"

"பர்மிஷன்..."

"குடுக்கலன்னா?" என்றவனை அதிர்ந்து பார்க்க

"ஏன் என்கிட்ட கேட்டுட்டா போக முடிவெடுத்த? இல்லேல்ல... அப்போ பர்மிஷன் மட்டும் என்கிட்ட எதுக்கு கேக்குற?"

"...."

"ஓ.....ஓ.....ஒரு வேல கேக்க வேண்டிய கட்டாயமோ?" என இகழ்ச்சியாய் கேட்டவனை பார்த்து அதற்கு மேல் முடியாமல் சாயந்து கண்களை மூடிக்கொள்ள ஏற்கனவே கோபத்தில் இருந்தவனுக்கு ஆத்திரம் கண்ணை மறைக்க அவளின் பிடரியில் கையை நுழைத்து ஆக்ரோஷமாய் தன்னை நோக்கி இழுத்தவனை தடை செய்தது ஆரவ்வின் சீற்றக்குரல்.....
அவனை அங்கு எதிர்பார்க்காத ரிஷி அவளை உதறித்தள்ளிவிட்டு எழ அவன் உதறியதில் அவள் தலை பின்னால் முதுகுக்கு வைத்திருந்த தலையனையில் மோதி நின்றது.

தன் அண்ணனின் செய்கையில் கொதித்தெழுந்த ஆரவ்

"அண்ணா....உனக்கென்ன பைத்தியம் முத்திப் போச்சா..... ஏற்கனவே காச்சல்ல இருக்கிறவ கிட்ட உன் வீரத்த காட்டிட்ருக்க?அவ உன் மனைவியே ஆனாலும் அவ ஒரு பொண்ணுங்குறத மறந்துறாத.... பொண்ணுங்கள மதிக்கனும்னு எனக்கு சொல்லித் தந்த நீயே இப்பிடி பண்ணிட்டு இருக்கேங்குறத தான் என்னால நம்ப முடில..." கோபமாய் ஆரம்பித்து மனத்தாங்கலாய் முடித்தவன் அஷ்வினியிடம்

"கெளம்பு..." என்றான் சீற்றம் குறையாமல்.....அவன் அன்பில் கண்ணீருடனேயே திக்கித்திக்கி

"இ...இ...இல்ல ஆரு...நா..நா...வர்ல..." என்றவளை சடாரென்று திரும்பிப் பார்த்தான் ரிஷி.... அவளை முறைத்தவிட்டு எதுவும் பேசாமல் ரூமை விட்டு வெளியேறப் போனவனை கை பிடித்து நிறுத்திய ரிஷி

"இவள அவங்க வீட்ல விட்டுட்டு வா " என்றுமட்டும் கூறியவன் அவர்களுக்கு முன்னேயே வெளியேறி விட்டான்.

அவன் போவதையே கண்களில் நீர் வழிய பார்த்திருந்தவள் ஆரவ்வை ஏறிட அவனோ நீயே முடிவு செய்து கொள் என்பது போல் சுவற்றை வெறித்துக்கொண்டு நின்றிருந்தான்.

அவன் கை பிடித்து " ஆரு..." என வலி நிறைந்த குரலில் அழைத்தவளை அடுத்தநொடி தன் தோல் மீது சாய்திருந்தான்.எதுவுமே பேசாமல் கண்ணீர் விடுபவளின் தலையை ஆதரவாக தடவியவாறே

"அஷ்வி.... என்னதான்டி ஆச்சு ஒனக்கு? இப்போல்லாம் நீ முன்ன மாதிரி இல்ல.... என்னடா?" கனிவாக கேட்டவனை பார்த்து அவன் நட்பில் பூரித்துப் போனாள் பெண்.

"தெரியல ஆரு....ரொம்ப லோன்லியா ஃபீல் பன்றேன்டா...."

"நாங்க எல்லாம் உங்கூடதானேடி இருக்கோம்" என்றான் ஆதங்கமாய்....

"நீ கூட இருந்தாலும் அவர் பேசலனா கூட வலிக்கிதேடா...."

"அவர் நைட் பேசினத நானும் கேட்டேன் அஷ்வி..." என்றவனை அதிர்ந்து பார்க்க

"தூக்கமில்லாம கார்டன் போவோம்னு கீழ வரும் போது கேட்டேன்"

"நீயே சொல்லு ஆரு...அவர் பேசினத நா எப்பிடி எடுத்துக்குறது?"

"அண்ணா இவ்வளோ நாளா எல்லாத்தயும் மறந்துட்டாருன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன் அஷ்வி.... அவர் எதயுமே மறக்கல... இதுல நேத்து தெரிய வந்த என்ன பத்தின உண்மைல இன்னும் ஒடஞ்சி போய்தான் உன்கிட்ட அப்பிடி பேசியிருக்காரே தவிற அவர் மனசுல அனன்யா இருக்காவோன்னு நீ சந்தேகிக்கிறது தப்பு...." என்றான் தன் அண்ணனின் நிலை உணர்ந்து....

"அப்பிடி இல்லன்னா எதுக்கு அவரு டிவோர்ஸ் பத்தி பேசனும்?"

"நீ என்ன பன்ன?" என்றான் சிறிதும் அலட்டிக்கொல்லாமல்

"அ...அது...அது......"

"அவர வெறுப்பேத்துறா மாறி ஏதாவது பண்ணியா?" என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.....அவன் கேட்பதில் அதிசயித்து விழி விரிக்க

"இட்ஸ் வெரி சிம்பிள் அஷ்வி... அண்ணா உங்கிட்ட போட்டு வாங்கியிருக்காரு

"புரியிர மாறி சொல்லித்தொலடா"

"அவருக்கு அப்போ நீ பாத்தே ஆகனுங்குற கட்டாயம்.... சோ, டிவோர்ஸ் பத்தி வேனும்னே பேசியிருக்காரு.... நீ திரும்பினா மாறியும் ஆச்சு...உனக்கதுல விருப்பம் இல்லன்னு தெரிஞ்சா மாறியும் ஆச்சு..."

"ஃப்ராடு..." என முணுமுணுக்க

"இது ஃப்ராடுத்தனம் இல்லடி....தட் இஸ் பிஸ்னஸ் தந்திரம்...." என விட்டுக் கொடுக்காது பேசியவனை பார்த்து

"நீ சி.பி.ஐ ஆபிஸரா இருக்குறதுல தப்பே இல்லடா...." என கிசுகிசுக்க.... இரு கண்களையும் சிமிட்டியவன்
எழுந்து மாத்திரையையும் தண்ணீரையும் எடுத்து அவளிடம் நீட்டி " குடி...." எனவும் மறுக்காது வாங்கிக் குடித்தவள்

"ஆரு....ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே?"

"ஒனக்கில்லாத உரிமயாடி....கேளு...."

"அது.... நீதான் அவரப் பத்தி தெளிவா புரிஞ்சி வெச்சிருக்கியே.... அப்பறம் தேவ் கிட்ட எதுக்குடா பேசாம இருக்க... பாவமா இல்லயாடா? " என்றவளின் கேள்வியில் அவளையே பார்த்துக் கொண்டு பதிலளிக்காமல் இருக்க

"பேசுடா.... ரொம்ப சந்தோஷமா அந்த செய்திய சொல்லியிருப்பாரு.... உன்கிட்ட இந்த மாறி ரியாக்ஷன அக்ஸப்ட் பண்ணாம துடிச்சு பொய்ட்டாருடா.... ப்ளீஸ் பேசுடா....."

"பாக்கலாம்...."என்றவன் அவளை படுக்க வைத்து போர்த்திவிட்டு வெளியேறி விட்டான்.

காலை.......

இராமநாதன் இல்லம்......

கஷ்டப்பட்டு கண்களை திறந்த அஜய்யின் கண்களுக்கு விருந்தாய் அமைந்தது அப்பொழுதான் குளித்து விட்டு தன் ஈரக்கூந்தலை உலர்த்தியவாறே யோசனைவயப்பட்டிருந்த தன் மனையாளின் தோற்றம்.

சத்தம் காட்டாமல் எழுந்து மெல்ல அடியெடுத்து நடந்தவன் அவளை பின்னாலிருந்து அணைக்க திடீர் தொடுகையில் அவள் உடல் பயத்தில் தூக்கிப் போட்டதை உணர்ந்தவன் மேலும் இறுக்கியணைக்க தன் கணவன்தான் என தெரிந்ததும் அவள் உடல் சிலிர்த்து அடங்கியது.

அவள் கூந்தலை விலக்கி அவள் தோல்வளைவில் முகம் புதைக்கவும்

"எ...எ...என்ன..பன்றீங்க.. அஜய்...விடுங்க...யாராவது வந்துட போறாங்க..." என்றாள் அவனிடமிருந்து விடுபட திமிறியவாறே..... அவள் எதிர்ப்பை அடக்கியவன் அவள் காதுக்கருகில்

"யாரு வந்தா என்ன பேபி....என் பொண்டாட்டி நா கொஞ்சுறேன்... அவங்களுக்கு என்ன?" என்றதில் நாணம் எட்டிப் பார்த்தாலும்....தன் பலத்தையெல்லாம் திரட்டி அவனை விலக்கியவள் ஓரே ஓட்டமாக ஓடிப்போனாள் சமயலறைக்கு..

அவளையே புன்னகையுடன் பார்த்தவன் பாத்ரூமில் நுழைந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு கீழே இறங்கி வந்து சாப்பாட்டு மேசையில் அமர்ந்தான். ஏதோ யோசனையிலேயே பரிமாறிக்கொண்டிருந்த அண்ணையை கண்டதும் தன் மனையாளும் ஏதோ யோசனைவயப்பட்டிருந்ததை நினைவு கூர்ந்து

"மா....." என்க அது அவருக்கு கேக்காமல் போகவும் அவரை உலுக்கி " அம்மா...." எனவும் சட்டென திரும்பியவர்

"என்னடா.... ?" என கேட்க

"என்னம்மா யோசிச்சிட்டு இருக்க?"

"ப்ச்...ஒன்னுமில்லடா....."

"ஒன்னுமில்லாமதான் நா பேசுறது கூட கேக்காம இருந்தியா?"

"அது ஒன்னுமில்லடா நீ சாப்புடு...." என நகரப்போனவரிடம்

"நீ இப்போ சொல்லலன்னா பாதியில எந்திரிச்சு போயிருவேன் பாத்துக்க...." எனவும் அவசரமாக

"இல்லடா...நம்ம அஷ்விக்கும் கயலுக்கும் கல்யாணமாச்சு... மறுவீடு கூப்புட்டதுக்கு கூட ஆரவ் மாப்ள மட்டும் தான் வந்தாரு....அந்த தம்பி ஏதோ வேலன்னு வர்ல...."

"அன்னக்கி நானும் இல்ல..... அதுதான் எப்பயோ முடிஞ்சிரிச்சேமா... அதுக்கிப்போ என்ன?"

"அது இல்லடா..... நம்ம குல தெய்வ கோயிலுக்கு போய் கும்புடனும்டா.... அன்னக்கி அஷ்விய அப்பிடி அமைதியா பாத்ததுல இருந்து விருப்பமில்லாம எங்களுக்காக சந்தோஷமா இருக்குறா மாறி நடிக்கிறாளோன்னு மனசு கெடந்து அடிச்சிக்கிதுடா..." எனவும் அவனுக்கும் இந்த சந்தேகம் இருந்ததால் அமைதியாகிவிட

"ஏன்டா அமைதியாகிட்ட......அந்த தம்பி ஒத்துகாதோன்னு நீயும் இப்போ யோசிக்க ஆரம்பிச்சிட்டியா?"

"ப்ச்....இல்லமா...."

"அப்பறம் ஏன்டா?"

"அவங்க ரெண்டு பேரயும் இதுவர நா பாத்ததில்லமா...அத தான் யோசிக்கிறேன்"

"என்னடா ஒலர்ற?"

"உண்மதாம்மா....அன்னக்கி பொண்ணுபாக்க வந்திருந்தப்போ நா மில்லுக்கு போயிருந்தேன்.... கல்யாணத்தன்னக்கி என் ஃப்ரண்டுக்கு ஆக்ஸிடண்ட்னு திடீர்னு பொய்ட்டேன்..... அதுக்கப்பறம் ஆரவ் மறுவீட்டு சாப்பாட்டுக்கு வந்திருந்தப்போ வெளியூர்ல நம்ம அப்பாட வேல விஷயமா பொய்ட்டேன்..... அன்னக்கி அஷ்விய அவரு அழச்சிட்டுபோக வந்தன்னு சொன்னீல....... அவ்வளவு நேரம் இருந்துட்டு அப்போதான் வெளிய போனேன்.... ஏன் இப்படியெல்லாம் நடந்திச்சுன்னுதான் யோசிக்கிறேன்மா..." என நீண்ட விளக்கம் சொன்னவனை பார்த்து

"ஆமாடா....நீ சொல்றதும் உண்மதான்..."

"அதனால.... குல தெய்வ கோயிலுக்கு போக நானே போயி பாத்து பேசிட்டு வந்துர்ரேன்.... கவலய விடு..." என சிரித்தவனை ஆசை தீர பார்த்தவரின் உள்ளம் திடுமென கவலையை தத்தெடுத்தது. அவரையே பார்த்திருந்தவன்

"இன்னும் என்னமா?" எனவும்

"ஒ..ஒன்னுமில்லடா..." என சமாளித்துவிட்டு சமையலறை சென்றவரை யோசனையுடன் தொடர்ந்தது அவன் பார்வை.....

***

"அம்மா....காபி..." என்றவாறு செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்த தன் தந்தையின் மடியில் வந்து தலைவைத்து படுத்தவாறே தான் விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள் ரித்திகா......
அவளை புன்னகையுடன் பார்த்தவர் அவள் கூந்தலை கோதிவிட அதற்குள் காபியுடன் நுழைந்த அவள் அம்மா " - வள்ளி - "

"ஒனக்கு எத்துன தடவ சொல்லியிருக்கேன் இப்பிடி நடு வீட்ல படுக்காதன்னு.... அடுத்த வீட்டுக்கு வாழப்போறவ கொஞ்சம் கூட அடங்கலன்னா எப்பிடி?" என கடிந்து கொள்ள அவள் அப்பா மாணிக்கம்

"விடு வள்ளி.....இங்க இருக்க வரதானே இப்படியெல்லாம் பண்ணப்போறா" என பரிந்து கொண்டு வர

"அவள சொல்லி குத்தமில்ல... உங்கள சொல்லனும்" என்றவர் சாப்பாட்டு மேசையில் ரசித்து ருசித்து காபி அருந்தியவாறே இங்கே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தன் இளைய மகள் "யாழினி " ஐ ஒரு பார்வை பார்த்துவிட்டே சமயலறையினுள் நுழைந்தார்.

தூக்க கலக்கத்தில் எழுந்தமர்ந்து காபியை அருந்தியவள் காலேஜ் செல்ல நேரமாவதை உணர்ந்து அவசரமாக தன்னறைக்கு ஓடினாள்.
அவளைத்தொடர்ந்து அவளுக்கு ஒரு வருடம் இளையவளான யாழினியும் மாடிக்கு செல்ல அவர்களை பார்த்திருத்தவர் மீண்டும் செய்தித்தாளில் கண்களை பதித்தார்.

***

மருந்தின் வீரியத்தில் காலை சற்று தாமதமாக எழுந்த அஷ்வினிக்கு காய்ச்சல் விடுபட்டதில் சற்று அசதியாக இருக்க... எழுந்து குளித்துவிட்டு கோர்ட்டுக்கு செல்ல ஆயத்தமாகி வந்தவள் அப்பொழுதுதான் கவனித்தாள் அவன் இல்லாததை....

நேற்று ஆரவ்விடம் பேசிவிட்டு சென்றவன் ராத்திரியும் வீட்டுக்கு வந்திருக்காததை அப்போதுதான் புரிந்து கொண்டவள் தன் மொபைலை எடுத்து அவனுக்கழைக்க..... ரிங் போய் கொண்டிருந்ததே தவிற அவன் எடுக்கும் வழியைக்காணாததால்

"ப்ச்....இந்த கமாண்டருக்கு இதே வேலயா போச்சு.... அவனும் எடுக்க மாட்டான்... நாமலா எடுத்தாலும் தூக்கமாட்டான்..... போடா நானும் உன்கிட்ட பேசுறதா இல்ல" வீம்பாய் நினைத்தவள் ஆரவ்வும் கயலும் மறுக்க மறுக்க கோர்ட்டுக்கு சென்றுவிட்டாள் இன்று விஷ்வாவை சந்தித்தே ஆக வேண்டும் என்ற தீர்மானத்தில்......

பார்கிங்கில் தன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு இறங்க விஷ்வா காரிலிருந்து இறங்கி அவள் புறம் நடந்து அருகில் வந்து

"ஹாய் ரிக்ஷி....எப்பிடி இருக்க? பாத்து ரொம்ப நாள் ஆச்சு.....ஏன் வர்ல? உடம்புக்கு முடியலயா?" என கேட்டுக்கொண்டே இருக்க அவள் அதையெல்லாம் விட்டுவிட்டு

"உங்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு சார்....?" என திடுமென கேட்டக அவள் கேள்வியில் அதிர்ச்சியில் உறைந்து போனான்
" வருண் விஷ்வா "

தொடரும்........

-2604-2021.
 

Rishi 24

Member
Vannangal Writer
Team
Messages
54
Reaction score
33
Points
18
அத்தியாயம் 14 ❤️

"உங்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு சார்.....?" எனும் கேள்வியில் அதிர்ச்சியில் உறைந்து போன விஷ்வா அவளை பார்த்தவாறே நிற்க அதை அசட்டை செய்தவள் மீண்டும்

"நா இங்க ஜாய்ன் பண்ண முன்னாடியே உங்களுக்கு என்ன தெரியும்.....அப்படித்தானே?"

"....."

"தெரிஞ்சுதான் என்ன நீங்க உங்க அஸிஸ்டனா கேட்டுகிட்டீங்கல்ல....?"

"....."

"நா யாருன்னு தெரிஞ்சும்......ஏன் நா நீங்க அஜய் மாதிரி இருக்கீங்கன்னு சொல்லியும் அப்போ கூட என்ன தெரியாத மாறியே காட்டியிருக்கீங்க.....?"

"......"

"பதில் பேசுங்க வருண் சார்..... எதுக்கு அமைதியா இருக்கீங்க? ஓ...ஓ....இவளுக்கு உண்ம தெரிஞ்சி அத உங்க அம்மாகிட்ட... ச்சே...ச்சே என் அம்மாகிட்ட சொல்லிருவனோன்னு பயந்து வேற எங்கயாவது போகப்போறீங்களா?" அவள் பேசிக் கொண்டே போகவும் வாயடைத்துப் போனவன் தொண்டையை செறுமிக் கொண்டே

"ஐ....ரிக்ஷி....அ...அது..." எனப்போனவனை கைகளை உயர்த்தி தடுத்தவள் அவனை விடுத்து விடுவிடுவென உள்ளே சென்று விட வேறு வழியில்லாமல் அவள் பின்னே ஓடினான் அவள் அண்ணன்..... அஜய்யின் உடன்பிறந்த இரட்டை சகோதரன் "வருண் விஷ்வா "

அவன் பேசப்பேச காதே கேட்காதவள் போல் சென்று அபியுடைய கேபினுக்குள் நுழைந்து விட வேறு வழியின்றி தானும் நுழைந்தான்.

திடுமென உள்ளே நுழைந்த தோழியைக் கண்ட அபிநயா புன்னகையுடன் எழ அவள் பின்னேயே உள்ளே நுழைந்த விஷ்வாவை கண்டவள் திடுக்கிட்டு புருவம் சுருக்கியவாறே அஷ்வினியை பார்க்க அவளோ கைகளை கட்டிக்கொண்டு சுவரையே வெறித்தவாறு நின்றிருந்தாள்.அவள் அருகே மூச்சிறைக்க வந்து நின்றவன்

" ரிக்ஷி நா சொல்ல வர்ரத ஒரு நிமிஷம் கேளுமா.... தப்புதான்... இல்லங்கல்ல.... ஐ ஆம் ரியலி சாரி ஃபார் தட்... ப்ளீஸ்...வா நாம நம்ம கேபினுக்கு போய் பேசலாம்..." என்றவனின் பார்வை அபியை தொட்டு மீள பொங்கிவிட்டாள் அவள்

"ஹெலோ....இங்க யாரும் நீங்க பேசுறத கேக்க தவம் கேடக்கல...😡 அஷ்வி....ப்ளீஸ்..." என வாசலை காட்ட இருவரையும் முறைத்துவிட்டு வெளியேறி விட அபியை ஒரு முறை திரும்பிப் பார்த்தவன் தானும் வெளியேறினான்.

விஷ்வாவின் கேபின்......

தனக்கு முன் இருக்கையில் தன்னை கண்களாலேயே எரித்துவிடுபவள் போல் அமர்ந்திருந்தவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் விஷ்வா.

"ரிக்ஷி.... ப்ளீஸ்டி... ஐ ஆம் ரியலி சாரி.... மத்த பசங்கள மாறி நா காணாம போகல.... நானாகத்தான் கோச்சிகிட்டு வீட்ட விட்டு வந்தேன்.... அதனால தான் உன் கிட்ட சொல்ல சின்ன தயக்கம்..... புரிஞ்சிக்கோடி"

"......"

"பேசுடி...."

"எத பேச சொல்றீங்க வருண் சார்.......?"

"ப்ச்...சார்னு சொல்லாத ரிக்ஷி... நீ சொல்ற ஒவ்வொரு தடவயும் எவ்வளோ கவலப்படிருக்கேன் தெரியுமா?"

"எனக்கு இந்த விஷயம் தெரிஞ்சப்போ நா எவ்வளோ ஹேர்டிங் ஆனேன்னு உங்களுக்கு தெரியுமா?" என்றவளுக்கு சட்டென கண்ணீர் வடிய பதறியெழுந்து அவளருகே வந்தவன் அவள் கண்ணீரை துடைத்துவிட அதை தட்டிவிட்டவள்

"ஒண்ணும் வேணாம் போடா....." என முகத்தை திருப்பிக் கொள்ள அவள் செய்கையில் சிரித்தவனை திரும்பி முறைத்தவள்

"பண்ணுறதயும் பண்ணிட்டு என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு?" என்றவாறே அவனை மொத்தியெடுக்க புன்னகையுடனே அதனை வாங்கிக் கொண்டிருந்தான் விஷ்வா......

அடித்து ஓய்ந்தவள் இருக்கையிலிருந்து எழுந்து
"சரி கெளம்புங்க சார் வீட்டுக்கு...." என்றதில் அதிர்ந்தாலும்

"இன்னும் என்னடி சார் மோருன்னுகிட்ருக்க....?"

"அது தான் உங்களுக்கான தண்டனை வருண் சார்....." என்றவள் முன்னே நடக்க அவன் தன்னுடன் வராது அங்கேயே நிற்கவும் திரும்பி

"இன்னும் என்ன?"

"அது வந்து ரிக்ஷி..... நா.... வர்ல...." என்றவனை முறைத்துவிட்டு எதுவும் பேசாமல் நடக்கப் போக அவளை எட்டிப்பிடித்தவன்

"ப்ளீஸ் ரிக்ஷி....அ.." என ஏதோ கூறப்போனவனின் கையை உதறிவிட்டு திரும்ப அப்போதுதான் உள்ளே நுழைந்த அஜய்யில் மோதி நின்றாள்.
அவள் விழுந்து விடாதிருக்க அவளின் தோல் பற்றி நிறுத்தியவன்

"பாத்து வர மாட்டியா அஷ்வி?" எனவும்

"நீ எங்கடா இங்க வந்திருக்க?"

"ஒன்ன பாத்துட்டு மாறன் சார் கிட்டயும் பேசிட்டு போலாம்னுதான் வந்தேன்" என்றவன் அப்பொழுதான் நிமிர்ந்து வருணைக் கண்டவன் சிலையாய் சமைந்து போனான்.

விஷ்வாவுக்கும் அதே நிலைதானாதலால் அஜய் பேசியது அவன் காதுகளுக்கு எட்டவே இல்லை..... அப்படியே கேட்டிருந்தாலும் " மாறன் " என்ற பெயரில் குழம்பித் தான் போயிருப்பான்.

இருவரையும் மாறி மாறி பார்த்த அஷ்வினி பக்கென சிரித்துவிட அவள் சிரிப்பில் இரு ஆண்களும் தன்னிலையடைந்து அவளை திரும்பிப் பார்க்க

" மிஸ்டர்.வருண் அஜய்..... மீட் மய் சீனியர் லாயர் மிஸ்டர்.வருண் விஷ்வா...." என்றவள் விஷ்வாவை வேண்டுமென்றே அறிமுகம் செய்யவும் அவளை முறைத்த அஜய் வேண்டுமென்றே

"ஓ....இவன் தான்....ஐ மீன் இவருதான் உன் சீனியர் லாயரா?" என்று ஏற்ற இறக்கத்துடன் கூறியவன்

"ஹாய் சார்..." என கையை நீட்ட அதை தட்டிவிட்டவன் அவனை தாவி அணைத்தான்.
நீண்ட நாட்களுக்குப் பிறகான அவனது அணைப்பில் அஜய்யிற்கே கண்கள் கலங்கி விட அஷ்வினிக்கோ கொட்டியே விட்டது.
அவனை விடுவித்து

"எப்பிடிடா இருக்க....?" எனவும் அவனை மேலும் முறைத்த அஜய் கோபம் குறையாமல் அஷ்வினியிடம்

"அஷ்வி....உன் சீனியர் இப்பிடித்தான் முன்ன பின்ன தெரியாதவங்கள பொசுக்குனு கட்டி புடிப்பாரா?" எனவும் சிரித்த வருண்

"ஆமான்னு சொல்லு ரிக்ஷி....." என்றான் அவனும் வேண்டுமென்று....

"அது யாரு சார் ரிக்ஷி?"

" என் அரும தங்கச்சி.... "

"ஏன் அஷ்வி.....இங்க உன்னயும் என்னயும் தவிற வேற யாராவது உன் கண்ணுக்கு தெரீறாங்க...?"

"இல்லயே அஜய்...." என அவளும் அவனுடன் சேர்ந்து கொள்ள வருண்

"யேன்டா டேய்....." எனவும் அஜய்க்கு திடிரென எங்கிருந்து தான் அவ்வளவு கொபம் வந்ததோ.... வருணுக்கு விட்டான் ஒரு அறை......

அஷ்வினி அதிர்ந்து அஜய்யை பார்த்து " அண்ணா...." என்க விஷ்வாவோ எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டான்.

***

தன் மொபைலில் இருந்த அஷ்வினியின் புகைப்படத்தை வெறித்தவாறு அமர்ந்திருந்தான் ரிஷி.......

அவன் காதில் " மாமா உன்கிட்ட அன்பா இருந்தார்னா உனக்கு எதுக்கு அம்மா ஞாபகம் வரனும்?" என கயல் கேட்ட கேள்வியே மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.

அவனால் எதிலுமே சரியாக ஈடுபடக் கூட முடியவில்லை அவளின் நேற்றைய தோற்றம் கண்களில் அலைமோதவும்........

நேற்று அவள் அம்மா வீட்டுக்கு போகிறேன் என சொன்னதும் வந்ததே ஒரு கோபம்..... அந்த கோபத்தில்தான் அவளிடம் அப்படி நடந்து கொண்டதும்......

" என்ன விட்டு போய்டுவியாடி...." ஆழ்மனதின் ஓசை அவனுக்கு கேட்காமல் போனது தான் விதி செய்த சதியோ!!!!!

ஆழப் பெருமூச்சொன்றை இழுத்து விட்டவன் கதிரிடம் சில வேலைகளை முடிக்க சொல்லிவிட்டு தானும் வேலைக்குள் மூழ்கிப் போனான்.

***

வருண் அஜய்யிடம் " அஜய்....ஐ ஆம்...." என ஏதோ கூறப்போக அவனை தடுத்து

"எதுவா இருந்தாலும் வீட்டுக்கு வந்து பேசிக்கோ....." என்றவன் முன்னே நடக்க அவனை சட்டென தடுத்து நிறுத்தியது வருணின் வார்த்தைகள்....

"இல்ல அஜய் நா வர்ல...." என்றவனை சடாரென திரும்பிப் பார்த்து முறைத்தனர் இருவரும்.....உடனே அஷ்வி

"வா அஜய் நாம போலாம்....பட் சார் இனிமே நா இந்த கோர்ட் வாசலக் கூட எட்டிப் பாக்கமாட்டேன்..." என்றவளை அதிர்ந்து பார்த்தவன்

"ரிக்ஷி...ப்ளீஸ்டி....."

"எங்க கூட இப்போ வரப்போறீயா இல்லயா வருண்?" என காட்மாக கேட்ட அஜய்யிடம்

"பட்....." என இலுக்க

"ஆமாவா இல்லயா...?"

"வரேன்....." என்றவன் வேறு வழியின்றி இணைந்து நடந்தான்.

இராமநாதபுரம்.......

வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் "இப்போதானே கெளம்பி போனான்......அதுக்குள்ள திரும்பிட்டான்......ஒரு வேல அந்த தம்பி முடியாதுன்னு சொல்லிட்டாரோ" என நினைத்த விஜயலக்ஷ்மி பின்னால் ஸ்கூட்டர் ஓசையும் சேர்ந்து கேட்க " அஷ்வாவும் வந்திருக்காளா....?" என சந்தேகித்தவாறே ஹாலுக்கு வர அஜய்யுடன் இணைந்து நடந்து வந்த வருணை கண்டதும் கையிலிருந்த கரண்டி நழுவி கீழே விழ அதிர்ச்சியானவர் மயங்கி சரியு முன் அவரை தாங்கி பிடித்தான் வருண்......

தன் மடியில் இன்னும் மயக்கம் தெளியாமலேயே படுத்திருக்கும் அன்னையை கண்டதும் கண்கள் குளமாக அவரையே குற்ற உணர்ச்சியுடன் பார்த்திருந்த வருணை முறைத்துக் கொண்டு இராமநாதன் உட்பட சுற்றி நின்றிருந்தனர் அனைவரும்........

அனைவரையும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தவன் மறுபடியும் குனிந்து கொள்ள மெதுவாக கண்களை திறந்தார் விஜயலக்ஷ்மி....

தான் தன் மகன் மடியில் படுத்திருப்பது கண்டு அமைதியாய் கண்ணீர் விட்டவருக்கு நேற்று நடந்த அஷ்வியுடனான உரையாடல் கண் முன் விரிந்தது.

( ஆரவ்வை அனுப்பிவிட்டு கடற்கரையில் யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்த அஷ்வினி தன் தாய்க்கு அழைப்பு விடுத்தாள்.

"அஷ்வா....எப்பிடிம்மா இருக்க?காலைல கால் பண்ணியிருக்க.... ஒன்னும் பிரச்சின இல்லல்லடா..."

"இல்லமா....ஒரு பிரச்சினயுமில்ல.... நா நல்லா இருக்கேன்....நீங்க எப்பிடிமா இருக்கீங்க? அப்பா... அண்ணா.... அண்ணி..எல்லாம் எப்பிடி இருக்காங்க?"

"இருக்காங்கடா.....கயல் சந்தோஷமா இருக்காளா?"

"இருக்காமா....ஆ....அம்மா உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயத்த பத்தி கேக்கனும்.... மறைக்காம பதில் சொல்லுவேன்னு சத்தியம் பண்ணு..."

"இந்த சத்தியம் வாங்கி சாதிக்கிற பழக்கத்த இன்னும் விடலயா நீ?"

"விஜி....ஐ ஆம் சீரியஸ்...."

"சரிடா....கேளு...."

"அஜய்க்கு தம்பி....அண்ணா யாராவது இருக்காங்களா?"

"இல்ல அஷ்வா தங்கச்சிங்க ரெண்டு பேரு மட்டும்தான்...."

"விளையாடாத விஜி..... அஜய் டுவின்னா இல்லயா....?" என்றவளது கேள்வியில் அதிர்ச்சியானவர்

"எ....என்ன... அஷ்வா....?"

"......"

"அ....அஷ்வா.....ஒ....ஒனக்கு?"

"என்ன நடந்துது....?" எனவும் அழுத விஜயலக்ஷ்மி

"ஆமாடா....அஜய்யோட பிறந்தவன் ஒருத்தன் இருந்தான்..... ஆனா....இப்போ...." என மீண்டும் அழ

"இப்போவும் இருக்காருமா....."

"எ.....எ...என்ன...சொல்ற அஷ்வா....?" என்றார் அதிர்ந்த குரலில்......

"ஆமா விஜி...." என்றவள் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாது கூற

"அப்போ என் புள்ள உயிரோடதான் இருக்கானா?"

"ம்....ஆமா....பட் என்ன தெரிஞ்சிருந்தும் தெரியாத மாறி நடிச்சிட்டு இருக்காருமா...." என்றாள் வலி நிறைந்த குரலில்

"அஷ்வா....அவன சும்மா விடக்கூடாது...."

"ஆமா விஜி....அவன என்ன பன்றேன்னு மட்டும் பாரு....சரி....எப்பிடி வீட்ட விட்டு போனாரு...."

"அவன் ரொம்ப புடிவாதக்காரன்மா.... அடங்கி போறது புடிக்கவே புடிக்காது... அப்பாவோட கண்டிப்ப அவன் ரொம்ப தொந்தரவா எடுத்துகிட்டான்..... அவரு அவன கட்டுப்படுத்தி வெக்கனும்னு ட்ரய் பண்றாருன்னு கற்பன பன்னிகிட்டு நானும் அஜய்யும் கெஞ்சியும் பொருட்படுத்தாம கோச்சிகிட்டு வீட்ட விட்டு பொய்ட்டான்...." என்றவர் அவன் நினைவில் அழ அவரை ஒருவாறு சமாதானப்படுத்தி முடிந்தவள் காலை கட் பன்னி ஆரவ்வின் மொபைலை தன்னுடன் வைத்துக்கொண்டாள்.)

எல்லாவற்றையும் நினைத்து முடித்தவர் அஷ்வியை பார்க்க அவளோ கண்களாலேயே ஆறுதல் கூற அவனை விட்டு எழுந்து அவரும் தன் பங்கிற்கு விட்டார் ஒரு அறை.....

இதை அஷ்வி ஏற்கனவே எதிர்பார்த்தது தானெனினும் தலை கவிழ்ந்து இருப்பவனை பார்க்க பாவமாகத்தான் இருந்தது.

இவ்வளவுவற்றிற்கும் இராமநாதன் ஒரு வார்த்தை உதிர்க்கவில்லை..... இறுகிப் போய் இருந்தவரிடம் எழுந்து வந்தவன்

"அப்பா.....ஐ ஆம் சாரிப்பா.... உங்கள புரிஞ்சிக்காம....ஏதோ...." என நிறுத்திவிட்டு அவரை ஏறிட எதுவும் பேசாமல் ரூமிற்குள் செல்ல அவரையே பார்த்தவன் அவரை விடுத்து அம்மாவின் கீழ் மண்டியிட்டு அவர் கையை தன் கண்ணத்தில் வைத்தவன்

"நீயாவது என்கிட்ட பேசுவியாமா? " என இறைஞ்சும் குரலில் கேட்டவனை பார்த்து அதற்கு மேல் அவரால் கொபத்தை இழுத்துப்பிடிக்க முடியாமல் அவன் தலையை தடவி

"பேசுறேன் கண்ணா....நீ கவலப்படாத....." எனவும் அவர் அழைப்பில் கண்கள் கலங்க மடியில் படுத்துக்கொண்டவனுக்கு தொலைத்த நிம்மதி கிடைத்துவிட்ட சந்தோஷம்......
திடீரென அஷ்வி

"விஜி....திஸ் இஸ் டூ மச்...."

"என்னடி?"

"பின்ன...நா ஒரு கொழந்த இங்க அழுதுகிட்டு இருக்கேன்....உங்க எரும மாட்டு பையன மட்டும் மடியில சாச்சது மட்டுமில்லாம கண்ணா கண்ணான்னு பாசத்த பொழியிறீங்க?"

"யாரு....நீ...கொழந்த...." என்றான் அஜய் முந்திக் கொண்டு....

"நீ இருடா...." என அவனை அடக்க விஜயலக்ஷ்மி

"அஷ்வா என்ன இது அண்ணனுக்கு மரியாத இல்லாம?" என கண்டிக்கவும்

"அப்பிடி நல்லா சொல்லுமா இந்த அருந்தவாலுக்கு..."

"யாருடா அருந்தவாலு....நீதான்டா லூசு...."

"அஜய்....அஷ்வா..."

"மா....இவன எல்லாம் என்னால மரியாதயா கூப்பிட முடியாது... வேனும்னா இந்தா இவர.... வருண் சார்னு மரியாதயா கூப்புட்றேன் " என்றாள் பெருந்தன்மையாய்.....
அவளது கூற்றில் வெடுக்கென எழுந்த வருண் கும்பிட்டவாறே

"அம்மா...தாயே...நீ எனக்கு மரியாதயே தர வேணாம்மா.....நீ வாடா போடான்னே கூப்டுக்கோ...."

"விஜி....பாரு உம்மவன....நானும் போனா போகுதுன்னு மரியாதயா கூப்புட்றேன்னு சொல்லிட்டிருக்கேன்.... அப்பிடி கூப்புடாதன்னு கும்புடு போட்றான் உம்மவன்....." என்றவள் பேச்சில் அனைவரும் சிரிக்க தானும் சேர்ந்து புன்னகைத்தவளை ஆதூரமாய் பார்த்தான் அண்ணன் அஜய்.

அஷ்வினியின் அலப்பறையில் வீடே சந்தோஷக் கடலில் மூழ்கியிருக்க அவளை வீட்டுக்கு செல்லுமாறு யாரும் வற்புறுத்தாதது வசதியாய் போக ரிஷியின் நினைப்பை மறந்தவள் அன்று அங்கேயே தங்கி விட்டாள்.
 

Rishi 24

Member
Vannangal Writer
Team
Messages
54
Reaction score
33
Points
18
காலை......

மொபைலின் சிணுங்கல் சத்தத்தில் கண் விழித்த அஷ்வினி அதில் ஆரவ்வின் பெயர் ஒலிரவும்தான் நடந்தது ஒன்றையுமே அவர்கள் மூவரிடமும் பகிராதது ஞாபகம் வர நாக்கை கடித்து தலையில் தட்டிக் கொண்டவள் உற்சாகமாகவே அடண்ட் செய்து காதில் வைத்து

"சொல்டா..." எனவும்

"வீட்டுக்கு வா....பேசனும்"

"என்னடா.....?"

"வான்னு சொன்னேன்"

"சரி கோவப்படாத...பட் நா சொல்ற குட் நியூஸ கேளு...."

"சொல்லு....?"

"உன் போலிஸ் அதிகாரிங்க கிட்ட பேசுறா மாறி பேசுனா நா சொல்லமாட்டேன்..."

"ப்ச்.....சொல்லு அஷ்வினி...." எனவும் அவன் அழைப்பிலேயே ஏதோ தவறு நடந்திருப்பதை கணித்தவள் அதை பிறகு கேட்கலாம் என நினைத்து

"வருண் அண்ணா கெடச்சிட்டாங்கடா..."

"வாட்....எ...எ..என்ன சொல்ற அஷ்வி...."

"ஆமாடா....." என தொடங்கியவள் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒப்பிக்கவும்

"நிஜமாவாடி...?"

"ஆமான்டா"

"எனக்கு எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா.... அண்ணாக்கு இரு நா இப்போவே சொல்றேன்....." என படபடக்க அவசரமாக மறுத்து

"அவசரப்படாத ஆரு......நேர்லயே சர்ப்ரைஸ் குடுக்கலாம்.." எனவும் அதை ஆமோதித்து

"சரிடி.....நா கயல் கிட்ட சொல்லிர்றேன்....பய்..."

"ம்....பய்டா...." என்றவள் எழுந்து குழியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

ரிஷியின் வீடு....

அவளிடம் பேசி முடித்து திரும்ப கயல் காபியுடன் உள்ளே நுழைந்தாள்.
அவனிடம் வந்து அதை நீட்டவும் அதையெடுத்து மேசைமேல் வைத்துவிட்டு அவளை தூக்கி சுற்றினான்.

எதிர்பாரா நிகழ்வில் அதிர்ந்த பெண்ணவளது தேகம் நடுங்க கண்களை மூடிக் கொண்டு அவன்
டீ-ஷர்ட் காலரை இறுக்கிப் பிடிக்கவும் அவள் பயம் அறிந்து மெதுவாக அவளை இறக்க அவள் இன்னும் கண் மூடி இருக்கவும் அவள் கண்ணத்தை தட்டி "கயல்" என்றான் மென்மையாய்....

அதில் சுய உணர்வு பெற்றவள் அவனை முறைத்துவிட்டு விலக எத்தனிக்க அவள் இடையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவனில் மோதி நிற்க

"ஐ...ஆம்...சாரிடி..அப்பிடி பேசினது தப்புதான்... அதுக்காக இன்னுமா தண்டன அம்மு...." என்றான் ஏக்கமாய்

"......"

"ஹூம்...சரி அத விடு...ரொம்ப சந்தோஷமான குட் நியூஸ் சொல்லப்போறேன்...." என்றவனை புரியாது பார்க்க

"உன் அண்ணன் கிடச்சிட்டாரு...." எனவும் "அஜய் அண்ணா வீட்ல தானே இருக்குறாரு....இவன் எதுக்கு லாசு மாறி ஒலர்றான்" என யோசனையில் மூழ்கிப்போக அவளிடம் எந்த ரியாக்ஷனையும் காணாது

"லூசு....அஜய் அண்ணா இல்லடி....வருண்" எனவும்

"வருணா....?"

"ம்...ஆமா...."

"பட் எவரோ கிடச்சதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?" என்றவளவளது கேள்வியில் அதிர்ந்தவனுக்கு அப்போதுதான் அவளுக்கு ரிஷியின் கடந்த காலமே தெரியாது இதில் வருணை எப்படி தெரியும் என யூகித்தவன்

"வருண் உன் அண்ணன் அம்மு.... அஜய் அண்ணனோட ப்ரதர்..."

"என்னடா ஒலர்ற?"

"அம்மு.... ஒனக்கு மொதல்ல இருந்து சொன்னாத்தான் புரியும்...இப்பிடி வா...." என்றவன் அவள் கை பிடித்து அழைத்து சென்று கட்டிலில் அமர வைத்தவன் ரிஷியின் கடந்த காலம் தொடங்கி நேற்று நடந்தது வரை விளக்க ஆச்சரியத்தின் எல்லை கடந்தவள் அப்படியே ஸ்தம்பித்து அமர்ந்திருந்தாள்.

((வருண் வீட்டை விட்டு செல்லும் போது அஷ்வினி ஒரு வயது குழந்தை..... விஜயலக்ஷ்மி கர்ப்பமாக இருந்தார்.))

அசையாது இருப்பவளை உலுக்கிய ஆரவ்
"என்னாச்சு அம்மு.....?" என கேட்டது தான் தாமதம் அவள் கண்களிலிருந்து பொலபொலவென கண்ணீர் வழிய அதனை துடைத்தவன்

"அம்மு....எதுக்குடா இப்போ அழற? அதான் சரியாகிருச்சுல்ல...." என்றவனது மார்பில் தன்னையறியாமல் தலைவைத்தவள்

"மாமா...ரொம்ப பாவமில்ல ஆரு.... எவ்வளவு வேதனப்பட்டிருப்பாங்க..... " என்றவள் திடீரென

"இந்த வருண் அண்ணாக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல ஆரு..... மாமாவ பக்கத்துல இருந்து பாத்துக்காம என்னத்த ப்ரண்ஷிப்போ...." என்றவளது வெகுளித்தனத்தை ரசித்தவன் அவள் மனநிலையை மாற்றும் பொருட்டு

"என்ன அம்மு....இன்னக்கி காலேஜ் போக ஐடியா இருக்கா இல்லயா....?" எனவும் அவன் எதை சொல்கிறான் என யூகித்தவள் சட்டென விலகப் போக அதனை ஏற்கனவே எதிர்பார்த்தவன் அவள் விலகும் முன்னரே இறுக்கி அணைத்திருக்க

"விடுடா..விடு...."என திமிரவும்

"ஒன்ன எப்பவுமே என்னால விட முடியாது அம்மு.... ஐ லவ் யூ டி.....நா சாகும் வர உன்...." என ஏதோ சொல்லப்போனவனை தன் கரம் கொண்டு தடுத்து வேண்டாம் என தலையசைக்க அவள் கையை எடுத்துவிட்டு அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட அவள் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்.அதை பார்த்து புன்னகைத்தவன்
" அம்மு..." என கிறக்கமாக அழைக்க அதில் திடுக்கிட்டு விழித்தவள் அவனை ஒரே தள்ளாக தள்ளி விட்டு சென்றுவிட..... அவளையே ரசனையுடன் பார்த்திருந்தவனுக்கு அப்பொழுதான் சட்டென அஷ்வினிக்கு அழைத்ததற்கான காரணம் ஞாபகம் வர அவளுக்காக காத்திருக்க தொடங்கினான்.

இராமநாதபுரம்.......

குளித்து முடித்து வெளியே செல்வது போல் தயாராகி வந்தவளை ஏற்கனவே கோர்ட்டுக்கு செல்வதற்கு தயாராகி நின்றிருந்த வருண்

"என்ன ரிக்ஷி....எங்க கிளம்பிட்ட..... ஆபீஸ் வர்ல?"

"இல்ல வருண் சார்.....இன்னக்கி நா லீவு...."

"ரிக்ஷி...சார்னு சொல்லாதடி..தள்ளி போறா மாறி ஃபீல் ஆகுது..."

"இதுக்கான பதில நா ஏற்கனவே சொன்னதா ஞாபகம் வருண் சார்...."

"ப்ச்....ரிக்ஷி..."

"கூப்டீங்களா வருண் சார்?"

"எங்க போற?"

"என் புருஷன் வீட்டுக்கு"

"விளயாடாம சொல்லு ரிக்ஷி?" என்றவனது பேச்சில் தனக்கு கல்யாணம் ஆனது கூட தெரியாமல் இருப்பது புரிய

"என்ன பத்திதான் தெரியாது கயலையாவது தெரியுமா சார்?"

"கயலா...அது யாரு ரிக்ஷி?" எனவும் கோபத்தில் "அம்மா...." என கத்த

"இப்போ எதுக்குடி அம்மாவ கூப்புட்ற?" என கேட்டுக் கொ‌ண்டிரு‌க்கு‌ம் போது அங்கு வந்த விஜயலக்ஷ்மி

"எதுக்குடி கத்துற?" எனவும்

"இதோ நிக்கிறாரே உன் சீமந்த புத்திரன் அவரு கிட்டயே கேளு..." எனவும் அவனிடம் திரும்பி

"என்னடா?"

"அம்மா..நா எதுவும் பண்ணலமா... இவதான் ஏதோ புருஷன் வீடு.... கயல் அப்பிடீன்னெல்லாம் ஒலறிகிட்ருக்கா...." என அப்பாவியாய் சொன்னவனை பார்த்து கண் கலங்க

"எதுக்குமா நீ கண் கலங்குற?" எனவும்

"சொந்த தங்கச்சிக்கு கல்யாணமானது தெரியல... கயல்னு இன்னொரு தங்கச்சி இருக்கான்னும் தெரியல..... உன்ன நெனச்சி கண் கலங்காம விழா வெச்சி கொண்டானும்குறியா" என்றவாறே விஜியின் அருகில் வந்து நின்றான் அஜய்....

அவன் கேட்ட கேள்வியில் குற்ற உணர்ச்சி தலைதூக்க "சாரி...." என்றவனின் தலையை தடவி

"விடுப்பா....கயல்விழி உன் கடைசி தங்கச்சி.... நீ போனதுக்கப்பறம் தான் பொறந்தா..."

"எங்கமா அவ?"

"அவ புருஷன் வீட்ல இருக்காடா...." எனவும் அதிர்ந்து

"அவளுக்குமா....?" எனவும்

"ஆமாடா....இன்னக்கி வருவா...பாரு..."

"ம்..சரிம்மா...பட் அவ புருஷன் பேரு?" என்றவனை இடைவெட்டிய அஷ்வினி

"அத வரும் போது பாத்துக்கோங்க வருண் சார்" என்றவள் எதுவும் சொல்ல வேண்டாம் என்று சைகை காட்டியவாறே வெளியேறிவிட்டாள்.

"ஆஹா....ஏதோ ப்ளான் பண்ணிட்டா...." என நினைத்தவன் வருணை முறைத்துவிட்டு சாப்பிட அமர அவனுடனேயே ஒட்டி அமர்ந்தான் அவனை சமாதானப்படுத்தும் முயற்சியாய்......
அவனை பார்த்து

"தள்ளி உக்காருங்க லாயர் சார்....."

"முடியாது போடா..." என்றவன் இன்னும் நெருங்கி அமர

"ப்ச்..." என்று முகத்தை திருப்பிக் கொண்ட அஜய்யின் செயலில் முகம் வாட

"ஐ ஆம் சாரி அஜய்... சாரிடா... அன்னக்கி தெரியாத்தனமா பண்ணிட்டேன்.... சாரிடா.... பேசு ப்ளீஸ்...."எனவும்

"அன்னக்கி நானும் அம்மாவும் எவ்வளவு கெஞ்சனோம்....அம்மாவ விடு நா...." என்றவனது குரல் கம்ம அவனை தாவி அணைத்தான் வருண்.

***

தன் ஸ்கூட்டரை வெளியில் பார்க் பண்ணிவிட்டு உள்ளே நுழைந்த அஷ்வினி அங்கே சோபாவில் தனக்காக காத்துக் கொண்டிருக்கும் ஆரவ்வை பார்த்து புன்னகைத்தவாறே முன்னால் அமர்ந்து அவன் முகத்தை பார்க்க அது கோபத்தை தத்தெடுத்திருக்கவும் "எதுக்கு இப்போ வர சொன்னான்...ஆமா நம்ம கமாண்டர் எங்க ஆளயே காணுமே" என யோசித்தவள் சுற்றுமுற்றும் கண்களால் துலாவ அவளை கூர்மையாக பார்த்தபடி

"அண்ணா வீட்ல இல்ல அஷ்வினி...." என அழுத்தமாக சொன்னவனை சடாரென திரும்பிப் பார்க்கவும்

"அண்ணாவ பத்தி கொஞ்சம் கூட ஞாபகமே இல்லல்ல அஷ்வினி" என்க

"இவன் எதுக்கு வார்த்தக்கி வார்த்த அஷ்வினி அஷ்வினின்னுகிட்டு இருக்கான்.... ரொம்ப கோவமா இருக்கான் போலயே....சமாளி அஷ்வி...." என நினைத்தவள் அவனை பார்த்து இளிக்க....வந்ததே கோபம் அவனுக்கு.....
எழுந்து அடிக்க கையோங்கியவன் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு அமர்ந்து விட..
அதில் அதிர்ந்து அவனைப்பார்க்க அவனோ
"முந்தாநாள் வீட்ட விட்டு போனவரு.... இன்னும் வீட்டுக்கு வந்து சேரல... நீ கொஞ்சம் கூட அக்கறையே இல்லாம நிம்மதியா தூங்கி எந்திரிச்சிட்டு வர.... என்னடி இதெல்லாம்?" என உறும அவன் சொன்னதில் இதயம் வேகமாக துடிக்க

"எ...எ...என்னடா...சொல்ற?"

"இப்போ வந்து கேளு"

"ஆ...ஆரு...ப்ளீஸ்..."

"ஆபிஸ்லதான் இருக்காராம்.... கதிர்தான் கால் பண்ணி சொன்னாரு..... யாரயும் பாக்க கூட விடலயாம்...." என்றவன் அவளைப்பார்க்க அவள் ஸ்கூட்டரை நோக்கி நடந்து சென்றுகொண்டிருக்க

"அஷ்வி...." என கத்தி அழைக்க நின்று என்ன என்பது போல் திரும்பியவளிடம்

"ரொம்ப கோவத்துல இருப்பாங்க....பாத்து " என அக்கறையாக கூற

"என்ன அடிக்க கை ஓங்கின இல்ல... இரு வந்து வெச்சிக்கிறேன்...." என்றவள் வெளியேறிவிட அவள் தோரனையில் உள்ளுக்குள் குளிரெடுத்தது ஆரவ்விற்கு.....

ஆர்.கே இன்டஸ்ட்ரீஸ்......

கதிர் சொல்ல சொல்ல கேட்காமல் கதவை தடாரென திறந்து கொண்டு உள்ளே நுழைந்த அஷ்வினி அங்கு அவனை காணாது குழம்பி நின்றாள்.

சுற்றுமுற்றும் கண்களால் அலசியவளுக்கு ஓரத்திலிலிருந்த ஒரு அறையிலிருந்து அனத்தல் சத்தம் வரவும் நெஞ்சு படபடக்க அதனை நோக்கி ஓடியவள் அந்த கதவை திறந்து உள்ளே சென்று பார்க்க அங்கே அவள் கண்ட காட்சியில் அவளின் இதயம் நின்று துடித்தது ஒரு கணம்.....

அவன் அங்கிருந்த விலையுயர்ந்த கட்டிலில் காலை குறுக்கியவாறு நடுங்கிக் கொண்டிருந்தான். அவனருகில் ஓடிச் சென்று அவன் நெற்றியை தொட்டுப் பார்க்க அது அனலாய் கொதிக்கவும் அவளுக்கு வந்த நேரம் அல்லது அதற்கு முன்னே காய்ச்சல் இருந்து அதை அவன் கவனிக்காமல் விட்டிருக்க வேண்டும் என சரியாய் யூகித்தவளுக்கு அவனை அந்த நிலைமையில் பார்க்க கண்கள் கலங்கியது.

இருந்தும் நிலமையின் விபரீதம் உணர்ந்து ஆரவ்விற்கு அழைத்து விஷயத்தை சுருக்கமாக விளக்கியவள் வைத்தியரை அழைத்து வருமாறு கூறி வைத்து விட்டு அவனை பார்க்க அவனோ அறைமயக்கத்தில் கண்களை கடினப்பட்டு திறந்திருந்தான்.

அவன் முழித்தது கண்டு " தே...தேவ்...ஐ ஆம் சாரி..." என அவள் பேசி முடிக்கும் முன் மயங்கிவிட பதறிப்போனாள் அவள் மனையாள்....

நீரை எடுத்து வந்து முகம் துடைத்துவிடுவோம் என எழுந்தவள் அவன் கை தன் விரலை இறுக்கிப் பிடித்திருப்பது கண்டு அப்படியே கீழே அமர்ந்துவிட்டாள்.

கொஞ்ச நேரத்தில் ஆரவ்வும் வைத்தியருடன் வர அவனை பரிசோதித்தவர்

"ஸ்ட்ரெஸ் அதிகமானதால வந்திருக்கு... அவர் ஏதயோ உள்ளுக்குள்ள வெச்சி மறுகிகிட்டு இருந்திருக்காரு..." எனவும் ஆரவ் அஷ்வினியையும் அஷ்வினி ஆரவ்வையும் சலேரென திரும்பிப் பார்த்து உறுத்து விழித்தனர்.

வைத்தியர் போகும் வரை பொறுத்திருந்தவன் அஷ்வினியிடம் காயத் தொடங்கினான்

"எல்லாம் உன்னால வந்தது அஷ்வினி....நீ அம்மா வீட்டுக்கு போறன்னு சொன்னதுமில்லாம கயல் அந்த மாறி கேள்வி கேட்டதும் அவருக்கு குற்ற உணர்ச்சியா இருந்திருக்கும்.....அதை யோசிச்சிருப்பாரு"

"நீயும் ஒரு காரணம்தான் ஆரவ்.... ஆர்வமா பேச வந்த அவர்கிட்ட மூனாவது மனுஷன் மாறி ட்ரீட் பன்னீல்ல... அத நெனச்சிதான் குற்ற உணர்வா இருந்திருக்கனும்" என்றாள் பதிலுக்கு....

இருவரும் முறைத்துக் கொண்டு திரும்பி எதிரும் புதிருமாய் நின்று கொள்ள ஆரவ்விற்கு கமிஷ்னரிடமிருந்து கால் வர இருந்த கோபத்தில் அவளிடம் சொல்லாமலேயே சென்றுவிட
"ரொம்பத்தான் பண்ணுற போடா..." என தானும் முறுக்கிக் கொண்டு ரிஷியின் முகத்திற்கு சூடு குறைய அங்கிருந்த வெள்ளை துனியால் துடைத்துவிட்டாள்.

மருந்தின் உதவியில் மெதுவாக கண்களை திறந்தவன் அருகில் அஷ்வினி அவன் கை மீது தலை சாய்த்து படுத்திருப்பது கண்டு ஒன்றும் புரியாமல் நெற்றியை சுருக்கி அவளிடமிருந்து கையை உறுவப்போனவனின் அசைவில் இலேசாக தலை சாய்த்திருந்தவள் அவசரமாக அண்ணார்ந்து பார்க்க அவள் கண்கள் கலங்கி இருக்கவும் ஏற்கனவே அசதியில் இருந்தவனுக்கு அது எரிச்சலை கிளப்ப

"ப்ச்....இப்போ எதுக்கு கண் கலங்கி கிட்டு இருக்க?" என்றான் வெடுக்கென.... அவன் உதாசீனம் வலித்தாலும் அவள் மீதுதான் தவறு என்பதால்

"இப்போ பரவால்லயா தேவ்....?" என்று அவள் கையை அவன் நெற்றியிடம் கொண்டு போக அதை தட்டிவிட்டவன்

"உன் அக்கறய நா நம்ப போறதில்ல... முதல்ல போ இங்கயிருந்து" அவன் சீற தலையை முடியாது என ஆட்டியவள்

"இல்ல...நா போக மாட்டேன் எங்கயும்"

"இப்போ இப்பிடி சொல்றவ எதுக்குடி நேத்து அம்மா வீட்டுக்கு போகனும்ன?" கயலை அப்படி கேட்க வைத்துவிட்டாளே என்ற கோபம் அவனுக்கு....

"நீங்க என் பக்கத்துல இல்லாம போகவும் எனக்கு சட்டுனு அம்மா ஞாபகம் வந்துடிச்சி" என்றவளது பதிலில் கோபம் கொஞ்சம் மட்டுப்பட

"அப்போ எதுக்கு என்ன பாக்காம திரும்பியிருந்த?"

"அ...அ...அது..."

"சொல்லுடி..."

"நீ...நீ..நீங்க ராத்திரி..." என தொடங்கப்போக கதவு தட்டும் சத்தம் கேட்க அவள் பேச்சு தடைபட இருவரும் ஒரு சேர திரும்பிப் பார்க்க அங்கே நின்றிருந்த நபரை பார்த்து ரிஷிக்கு கோபத்தில் கண்கள் சிவக்க... அஷ்வினியோ அதிர்ச்சியாய் திரும்பி ரிஷியை பார்த்தாள்!!!

தொடரும்..........

27-04-2021.
 

Rishi 24

Member
Vannangal Writer
Team
Messages
54
Reaction score
33
Points
18
அத்தியாயம் 15 ❤️

வெற்றிவேல் யுனிவர்சிட்டி.......

வகுப்பில் அமர்ந்திருந்த கயல்விழிக்கு வருணை பார்க்கும் வரை இருப்புக் கொள்ளவில்லை ஆரவ் சொன்ன செய்தியில்.....
எவ்வளவு வாதாடியும் இன்று காலேஜ் போயே ஆக வேண்டுமென்று அனுப்பி வைத்துவிட்டான் ஆரவ்...
இன்று முக்கியமான அஸைமண்ட் சப்மிட் பண்ண வேண்டியிருந்ததால் அவளும் அடம் பிடிக்காமல் கிளம்பி வந்து விட்டாள்.
அருகில் அமர்ந்திருந்த ரித்துவை சோகமாக திரும்பிப் பார்க்க அவளோ வேறு ஏதோ யோசனையில் இவளை கண்டகொள்ளவே இல்லை....
அன்று இரண்டு கேங்கையும் சஸ்பெண்ட் செய்ததிலிருந்து இப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறாள்.கேட்டதற்கு கூட எதுவும் சொல்லாமல் திரும்பவும் விட்டுப்பிடிப்போம் என இவளும் விட்டு விட்டாள்.இன்று கேட்டே ஆக வேண்டும் என தீர்மானித்தவள் அவள் தோல் தொட்டு

"ரித்து...." என அழைக்க அவளிடம் பதிலில்லாமல் போகவும்

"ரித்திகா...." என அவளை உலுக்கி கத்த திடுக்கிட்டு திரும்பி முறைத்தவள்

"எதுக்குடி இப்பிடி கத்துற?"

"நா ஒழுங்கா கூப்டப்பவே என்னன்னு கேட்டிருந்தீன்னா....நா எதுக்குடி கத்த போறேன்"

"ஹி...ஹி....கூப்டியா செல்லம்.... எனக்கு கேக்கவே இல்லயே....."

"கேக்காது கேக்காது...அது எப்பிடி கேக்கும்"

"சாரிடி செல்லம்....சரி எதுக்கு கூப்ட?"

"சொல்லமுடியாது போடி..."

"என் செல்லம்ல....சாரிடி" என காதை பிடிக்கவும்

"சரி சரி கால்ல விழுந்துடாத...."

"என்கிட்ட மாட்டாமயா போயிருவ.... சரி என்னன்னு சொல்லு"

"ம்...அத நீதான் சொல்லனும்"

"புரியிறா மாறி பேசவே மாட்டியா நீ?"

"ப்ச்...எதுக்கு எப்போ பாரு ஏதோ யோசிச்சிகிட்டே இருக்க?"

"யாரு...நா..?"

"நடிக்காத ரித்து..... சொல்ல புடிக்கலன்னா வேணாம்"

"ஹே....அப்பிடி இல்ல கயு...."

"....."

"அது..." என்றவளை முறைக்க

"கோவப்படாதடி...." என்றவள் நடந்த அனைத்தையும் ஒன்று விடாது தன் தோழியிடம் கூறியவள் கண் கலங்க கீழே குனிந்து கொள்ளவும் அவளை தன் புறம் திருப்பி கண்ணீரை துடைத்து விட்டவள்

"ரித்து...."

"....."

"என்ன பாருடி...."

"......"

"ஆரு என்கிட்ட சித்தார்த் அண்ணாவ பத்தி சொல்லி இருக்காங்கடி... அவங்களுக்கு லவ்னாலே புடிக்காதாம்.... யாருகிட்டயும் அதிகமா பேச மாட்டாங்களாம்.... அப்படி இருக்குறவங்க உன்ன சீண்டியிருக்காங்கன்னா நீ அவங்கள ஏதோ ஒரு வகைல பாதிச்சிருக்கேன்னுதானே அர்த்தம்?"

"பட்...எம்மேல லவ் வரவே வராதுன்னு சொன்னாருடி... அதுதான் என்னால தாங்கிக்க முடில...."

"அது சும்மா சொல்லியிருப்பாங்கடி"

"இல்ல கயு..."

"ப்ச்...சொன்னா கேக்கனும்டி"

"இப்போ என்னதான் பண்ணனும்குற?"

"அவங்கள சும்மா விட்டா அவங்க விலகி தான் போவாங்க....நீ என்ன பன்றன்னா.... அவங்கள எப்பவும் டிஸ்டர்ப் பண்ணிட்டே இரு"

"அப்போ என்ன லவ் பண்ணுவாங்கல்ல கயு....?" எதிர்பார்பாய் கேட்டவளிடம் ஆமோதிப்பாக தலையசைத்தாள் கயல்விழி.

ஆர்.கே இன்டஸ்ட்ரீஸ்.....

கதவு தட்டும் சத்தத்தில் இருவரும் ஒருசேர திரும்பிப் பார்க்க அங்கே முகம் முழுதும் இரத்தக் கரையுடன் இளைத்தவாறு நின்றிறுந்தாள் அனன்யா.

அவளைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அஷ்வினி அவளையுமறியாமல் தேவ்வின் கைகளை இறுக்க பற்ற அவள் அதிர்ச்சியறிந்து அவளை திரும்பி பார்த்தவன் அவள் கைகளை அழுத்த.... அவன் கொடுத்த அழுத்தத்தில் அவனை பார்த்து விட்டு மீண்டும் அனன்யாவை ஏறிட அவளோ இரு கைகளையும் சேர்த்து கும்பிட்டு

"ரி....ரிஷி....ப்ளீஸ்...எ...என்ன காப்பாத்து...." என்றவள் மயங்கி விழப்போக அஷ்வினி ஓடிச் சென்று அவளைப்பிடிக்க தன் கையை உதறியதில் ஏற்கனவே கோபத்திலிருந்தவன் அவள் அனன்யாவை தாங்கிப் பிடிக்கவும்
" அஷ்வினி" என கத்த அவன் கத்தியதில் உடல் துக்கிவாரிப் போட சடாரென திரும்பியவளிடம்

"என்ன பண்ணிட்டிருக்க நீ?அவ யாருன்னு தெரியுதா இல்லயா?"

"பட் தேவ்....உயிருக்கு போராடிட்டு இருக்கறவங்க கிட்ட மனசாட்சி இல்லாம என்னால நடந்துக்க முடியாது.... அது எதிரியா இருந்தாலும்....."

"அவ எதிரி இல்லடி துரோகி"

"தேவ் ப்ளீஸ்.....என்ன தடுக்கனும்னு நெனக்காதீங்க.." என்றவள் அவன் மேலும் பேசும் முன் கயலுக்கு அழைத்து

"கயல்....நீயும் ஆரவ்வும் உடனே ஆபீஸ் வந்துடுங்க.... நா ஹாஸ்பிடல் போறேன்....என்கிட்ட இப்போ எதுவும் கேக்காத... நா வந்து பேசறேன்..." என்று அவளே பேசிவிட்டு கட் பண்ணவள் அவனிடம்

"தேவ்...இப்போ அவங்க ரெண்டு பேரும் வந்துடுவாங்க... அதுக்குள்ள நா ஹாஸ்பிடல் பொய்ட்டு வந்தட்றேன்...."

"......"

"கதிர் அண்ணா கூட போறேன்" என்றவள் கதிரின் உதவியுடன் அவளை கூட்டிக் கொண்டு சென்றுவிட்டாள்.

அவள் செல்வதையே பார்த்திருந்தவனுக்கு நெஞ்சில் ஒரே ஒரு கேள்வியே மோதிக்கொண்டிருந்தது.
"உனக்கு என்ன விட அவதான் முக்கியமா பொய்ட்டால்ல அஷு....?"

***

ஹாஸ்பிடல்......

அது ஒரு தனியார் மருத்துவமனை என்பதால் எந்த விதமான விசாரணைகளுமின்றி உள்ளே அனுதிக்கப்பட்டாள் அனன்யா...

வயிற்றில் கத்தி குத்தியிருந்ததில் அதிகமான இரத்தம் வெளியேறியிருக்க அஷ்வினி பதறியபடியே வர அவள் பதற்றம் கதிரையும் தொற்றிக் கொள்ள அவசரமாகவே வண்டியை செலுத்தியிருந்தான்.

.......

ஆபீஸ்......

ஆரவ் வேலையை முடித்துவிட்டு வெளியில் வரவும்தான் கயல் கால் பண்ணி கூறியது.... அவளை தனியாக வர சொன்னவன் தன் அண்ணனுக்கு தான் என்னவோ ஏதோவென்று பயந்து வந்திறங்கவும் கயலும் ரித்திக்காவுடன் காலேஜிலிருந்தே வந்திறங்கவும் சரியாக இருக்க மூவரும் சற்று பதற்றத்துடனேயே உள்ளே நுழைந்தனர்.

அங்கு ரிஷி மட்டுமே தனித்திருக்க வெகுவாய் குழம்பிய ஆரவ் "இவ அண்ணாவ விட்டுட்டு எங்க போய்த்தொலஞ்சா..... அண்ணா எதுக்கு இவ்வளோ கொபமா இருக்காங்க...... என்னத்த பண்ணித் தொலச்சாளோ...." என நினைத்தவன் எதுவும் பேசாமல் நின்று கொள்ள கயல்

"மா....மாமா...அஷ்வி எங்க.... நீங்க மட்டும் இருக்கீங்க? எதுக்கு ஹாஸ்பிடல் போனா?" எனவும் எதுவும் பேசாமல் அவளை முறைத்த முறைப்பில் கயல் வாயை கப்பென மூடிக்கொள்ள ரித்திக்காவொ பயந்து கயலின் கையை இறுக்கப் பற்றிக் கொண்டாள்.

அவள் ரிஷியை இதுவரை பார்த்ததேயில்லை......
டிவி , மகஸின்களில் மட்டுமே அவனை கண்டிருந்தவள் இன்று கண்கள் சிவக்க பெட்டில் படுத்திருப்பவனின் தோற்றத்தில் பயந்தே போனாள்.

ஆரவ்விற்கு யாரிடம் கேட்பதென்றே புரியவில்லை... ஹாஸ்பிடல் போயிருக்கிறாள் என கயல் சொன்னது அப்போதுதான் ஞாபகம் வர படபடப்பாகவே இருந்தது.

எங்கே என்று இவனிடம் கேட்கவும் முடியாது.... அவளிடம் கேட்கவும் முடியாது எனும் நிலையில் கதிர் ஞாபகம் வரவும் " ஒரு நிமிஷம் " என்றுவிட்டு வெளியில் வந்தவன் கதிருக்கு அழைத்தான்.

"சார்....சொல்லுங்க சார்..."

"எங்க இருக்கீங்க கதிர்?"

"சார் மேடத்தோட ஹாஸ்பிடல் வந்திருக்கேன்"

"ஓஹ்....நீங்களுமா..?அஷ்வினி எங்க?"

"மேடத்துகிட்ட குடுக்கட்டுமா சார்?"

"இல்ல... இல்ல வேணாம்...எதுக்கு ஷாஸ்பிடல் போயிருக்கீங்க?"

"அது சார் ஒரு பொண்ணுக்கு வயித்துல கத்தி குத்தியிருக்காங்க...."

"வாட்....எப்பிடி நடந்துது?பட் அது எப்பிடி அஷ்விக்கு தெரியும்?"

"அந்த பொண்ணு நா சொல்ல சொல்ல கேக்காம அதுபாட்டுக்கு கதவ தொறந்துகிட்டு போயிடுச்சி சார்....பேசிட்டிருக்கும் போதே திடீர்னு மயங்கிடுச்சு... மேடம் தான் பதறிட்டாங்க... பட் மாறன் சார் ரொம்ப கோபமா மேடத்துக்கு திட்னாரு..."

"அவ பேரு ஏதாவது?"

"அது....ஆ...அனன்யான்னுதான் மேடம் சொல்லிட்டிருந்தாங்க சார்...."

"வாட்...டேமிட்.... அனன்யா.... அவ எப்பிடி?"

"தெ...தெ...தெரியல சார்..."

"இப்போ எங்க அவ?"

"ஐ.சி.யு ல அட்மிட் ஆக்கியிருக்கு சார்"

"ஓகே கதிர்...."என்றவன் கோபத்தை கட்டுப்படுத்த தலையை அலுத்தக் கோதிக் கொண்டான்.

"இடியட் என்ன காரியம் பண்ணி வெச்சிருக்கா.....பட்....அந்த அனன்யா எப்பிடி...?" அவனுடைய சி.பி.ஐ மூளை அவசரமாக யோசிக்க தொடங்க அதை தடை செய்வது போல் உள்ளிருந்து கேட்டது கயலின் பதற்றமான குரல்....

"மாமா...என்ன பன்றீங்க?" என மறுபடியும் அவள் கேட்கவும் அவசரமாக உள்ளே நுழைந்தவன் அங்கே ரிஷி எல்லா பொருட்களையும் விசிறி அடித்துக் கொண்டிருப்பதை பார்த்து

"அண்ணா என்ன பண்றீங்க? உங்க உடல் பலவீனமா இருக்கு... ரிலாக்ஸ்ணா..." என்றவாறே அவனை தடுக்கப்போக ஏதோ உடைக்க கையிலெடுத்தவன் அப்படியே அதை போட்டு விட்டு " இடியட் " என்று மெத்தையில் குத்த அவனருகில் வந்த ஆரவ்

"அண்ணா ப்ளீஸ்... ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க.... அவ மறுபடி எதுக்கு வந்திருக்கான்னு பாக்கலாம்.... அதுக்கப்பறம் அஷ்வினி கிட்ட பேசலாம்... ரிலாக்ஸ்....." எனவும் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொள்ள

"இவருக்கு மட்டும் காய்ச்சல் இல்லாம இருந்துது இன்னக்கி கன்பார்மா ஒரு கொல விழுந்திருக்கும்...." என நினைத்தவன் ஒரு பெருமூச்சுடன் எழுந்து நின்று யோசிக்கத் தொடங்கினான்.

***

ஹாஸ்பிடல்......

முகத்தை மூடியபடி அமர்ந்திருந்த அஷ்வினி கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவசரமாக எழுந்து அவரருகே சென்று

"டாக்டர்.....என்னாச்சி பொழச்சிகிட்டாங்கல்ல....?"

"கிரிடிகல் ஸ்டேஜ தாண்டிட்டாங்க.... பட் இன்னும் சுயநினைவு இல்லாமதான் இருக்காங்க... ஒன் அவர் கழிச்சிதான் சொல்ல முடியும்...." என்றவர் சென்றுவிட

"இன்னும் ஒன் அவரா..?தேவ் ரொம்ப கோபத்துல இருப்பாரே...." என நினைத்தவள் தொப்பென அமர்ந்து விட்டாள். அவளையே பார்த்திருந்த கதிர் அருகில் வந்து

"மேடம்...ஆரவ் சார் கால் பண்ணாரு...ரொம்ப கோவப்பட்டாரு"

"மேடம்னு சொல்லாதீங்கண்ணா... ஏற்கனவே எதிர்பாத்தது தான் விடுங்க..."

"பட்...."

"எண்ணண்னா பன்றது... இன்னும் ஒன் அவர் ஆகுமாமே....தேவ்வ நெனச்சாதான் பயமா இருக்கு"
என்றவளை பார்த்து "கோவத்துக்கு இலக்கணமா இருக்குறவருக்கு இப்பிடி ஒரு பொண்டாட்டியா..." என நினைத்தவன் அமைதியாக இருந்துவிட்டான்.

அவள் கண் விழித்து விட்டதாக தாதி ஒருவர் வந்து சொல்ல டாக்டர் அனுமதிக்கவும் உள்ளே சென்று

"அனன்யா... ஐ ஆம் மிஸிஸ்.அஷ்வினி தேவமாறுதன்.... என்ன அடையாளம் தெரியும்னு நெனக்கிறேன்... உங்களுக்கு உதவி பண்ணது மனிதாபிமான அடிப்படைலதான்... உங்க அட்ரஸ் சொன்னீங்கன்னா நானே விட்டுடுவேன்..." என்றவள் அனன்யாவை பார்க்க அவளோ மௌனமாக கண்ணீர் வடிக்கவும்

"ஐ...ஐ...ஐ ஆம் சாரி அனன்யா..."

"பரவல்லங்க... செஞ்ச தப்புக்கு தண்டனையா நினச்சிக்குறேன்... தேங்ஸ்....நீங்க போங்க...."

"பட் எப்பிடி போவீங்க?"

"எனக்குன்னு யாரும் இல்லங்க...நா சமாளிச்சிக்குறேன்..."

"வாட்...என்ன சொல்றீங்க?"அவள் அமைதியை பார்த்து கொஞ்ச நேரம் யோசித்தவள்

"உங்களுக்கு உடம்பு சரியாகும்வர எங்க வீட்ல தங்கிகோங்களேன்?"

"இல்லங்க வேணாம்...ரிஷி ஏற்கனவே உங்க மேல கோபத்துல இருப்பான்.... என்னால பிரச்சினை வேணாம்.."

"தேவ்வ நா சமாளிச்சிகுறேன் அனன்யா.... நீங்க என்கூடதான் தங்குறீங்க" என்றவள் அவளை டிஸ்சார்ஜ் செய்து வீட்டில் ஒரு அறையில் விட்டுவிட்டு நேரே ஆபீஸுக்கு சென்றாள்.

ஆபீஸ்......

ரித்துவும் கயலும் உள் அறையில் இருக்க ஆரவ் கேபினில் நின்று கொண்டு அதன் நீள அகலத்தை அளந்து கொண்டிருந்தான்

என்ன யோசித்தும் அனன்யா எப்படி திடீரென்று ரிஷியை தேடி வந்திருப்பாள் என்பதை யூகிக்க கூட முடியவில்லை அவனால்.....

திடீரென கதவு திறக்க சட்டென திரும்பியவன் அங்கே அஷ்வினி நுழையவும் கோபத்துடன் அவளருகில் சென்று

"அஷ்வினி " எனவும் அவனை பார்த்து பயந்தாலும் கையை கட்டிக் கொண்டு அவனை பார்த்து

"நீ என்ன கேக்க வரன்னு எனக்கு தெரியும் ஆரவ்.... நா மனிதாபிமான அடிப்படைல தான் உதவி செஞ்சேன்.... செய்வேன்...." என்றவளை புருவம் சுருக்கி பார்த்து

"செய்வேன்னா.....?"

"நம்ம வீட்லதான் குணமாகும் வர தங்க போறா?"

"யூ... ஸ்டுப்பிட்... யார கேட்டு முடிவெடுத்த?அண்ணாக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?"

"அத பாத்துக்கலாம் மிஸ்டர்.ஆரவ்.... இப்போ வழி விடுங்க...." என்றவள் அவன் பதிலை எதிர்பாராது உள்ளே நுழைய அவசரமாக எழுந்த கயல் அருகில் வந்து பேசப்போக

"நா உன்கிட்ட அப்பறம் பேசுறேன் கயல்...." எனவும்

"சரி அஷ்வி...."என்றவாறே வெளியேறி விட அறையை சுற்றுமுற்றும் அலசியவள் என்ன நடந்திருக்கும் என யூகிக்கவும் பயத்தில் மனது திக்திக்கென அடித்துக் கொண்டது.

தன் கையை மடித்து கண்களுக்கு மறைவாக வைத்து படுத்திருந்தவன் அஷ்வினி வந்தது தெரிந்தும் அசைந்தானில்லை....

அவன் பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்தவள் அவன் தன்னை கண்டுகொள்ளாதது தெரிந்தும் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.பேசினால் கோபப்படுவான் என தெரிந்திருந்தாலும் சொல்ல வேண்டிய கட்டாயத்தில்

"தேவ்...."என கையை பிடிக்க அவளை தள்ளிவிட்டு சடாரென எழுந்தமர்ந்து அவளை கண்கள் சிவக்க பார்த்தவன்

"பேசாத....மீறி பேசின கொண்ணுருவேன்"

"தேவ்...நா சொல்றத கொ...."

"கெட்டவுட்..."

"தே...."

"ஐ செட் கெட் அவுட்...இடியட்"

"முடியாது...."

"முடியாதூ......அப்போ நா போறேன்" என எழுந்தவன் தடுமாறி விழப்போக அவசரமாக எழுந்து அவனை பிடித்தவளை சுவற்றில் சாய்த்து கழுத்தை பிடித்து இறுக்க அவன் பிடியில் வலித்தாலும் கண்களை இறுக்க மூடி கட்டுப்படுத்த அதுவும் முடியாமல் போகவும் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

அதை கண்டு என்ன நினைத்தானோ கையை எடுத்தவன் "ச்சேஹ்...." என்றுவிட்டு உடல் ஒத்துழைக்காமல் போக கட்டிலில் அமர்ந்துவிட்டான்.

அவன் விட்டவுடன் இறுமியவாறே இருந்தவள் அவன் அமரவும் அவன் காலை பிடித்துக் கொண்டு

"ஐ...ஆம் சாரி தேவ்....ப்ளீஸ்...அவ உயிருக்கு போராடிட்டு இருந்தா.... என் கண் முன்னால ஒரு உயிர் துடிக்கும் போது என்னால எப்பிடி தாங்க முடியும் சொல்லுங்க... அவ செத்திருந்தான்னா கடவுள் என்ன மன்னிச்சே இருக்க மாட்டாரு.....அவ எப்பிடி பட்டவளாவும் இருந்திருக்கலாம்.. பட் இப்போ அவ திருந்திட்டான்னு தோனுது....ப்ளீஸ் தேவ்.."

"....."

"தேவ்....அவ குணமாகும் வர நம்ம வீட்லதான் தங்க போறா...." என்றவளது பேச்சில் அவளை கூர்ந்து பார்த்தானே ஒழிய ஒரு வார்த்தை பெசவில்லை....

"தேவ்.....ஏதாவது பேசுங்க ப்ளீஸ்...."

"......."

"தேவ்...." என்றவள் அவன் நெற்றியை தொடப்போக மறுபக்கம் திரும்பிவிட்டான்.மனம் வலித்தாலும் வந்த கண்ணீரை உள்ளிழுத்தவள் எழுந்து ஆரவ் வாங்கி வைத்திருந்த சாப்பாட்டை எடுத்து வந்து வாயருகே கொண்டு செல்ல சாப்பாட்டுடன் அவள் கையை தட்டிவிட அதில் கீழே விழுந்து சிதறியது.
இதை உன்னிடம் நான் எதிர்பார்தேன் என்பது போல் பார்த்தவள் மீண்டும் இன்னொரு கவளத்தை நீட்ட
"ப்ச்...." என்றவன் அதையும் தட்டிவிட்டான்.
ஒரு பெருமூச்சுடன்

"தேவ்....என் மேலுள்ள கோவத்த எதுக்கு சாப்பாட்டுல காட்றீங்க....? ம்...சாப்புடுங்க" என்றவள் மறுபடி நீட்ட அவள் கையிலுள்ள தட்டை பறித்து விசிறி அடிக்க அது அறை முழுவதும் தெரித்து விழுந்தது.

அவள் எதுவும் பேசவுமில்லை...... அதிர்ச்சியாகவுமில்லை.... நிதானமாக நடந்து சென்று அவன் மாத்திரையை எடுத்தவள் தண்ணீர் க்ளாஸுடன் அவனிடம் வந்து

"என் கையால நா தர்றது தானே புடிக்கல.... பக்கத்துல வெச்சாலும் குடிக்க போறதில்ல....சோ...." என்றவள் வெளியில் சென்று அனைவரையும் அழைத்தவள் ஆரவ்விடம் திணித்து விட்டு ஓரமாக நின்று விட்டாள்.

உள்ளே வந்தவர்கள் அதிர்ந்து இருவரையும் மாறி மாறி பார்த்திருக்க அஷ்வினி ஆரவ்விடம் மாத்திரையை திணிக்கவும் அவளை முறைத்துவிட்டு வேறு வழியில்லாமல் ரிஷியிடம் நீட்ட அனைவர் முன்னிலையிலும் ஏதும் செய்ய இயலாமல் அவளை பார்த்துக் கொண்டே குடித்தான்.

விதி வலியது........
............
வீடு வந்து சேரும் வரை எவரும் எதுவும் பேசவில்லை..... அனைவருக்கும் மௌனமே மொழியாகிப் போக ரித்துவை அவள் வீட்டில் இறக்கி விட்டு வீடு வந்து சேர்ந்தனர்.

வந்ததும் வராததுமாக யாரையும் கண்டு கொள்ளாமல் அனன்யாவுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைய ரிஷிக்கு வந்ததே கோபம்....
அனைவரும் இருந்தபடியால் எதுவும் செய்யமுடியவில்லையாயினும் அவன் கண்கள் சிவந்திருப்பதிலிருந்தே அவன் கோபம் புரிந்தது ஆரவ்விற்கு....

அவனிற்குமே எரிச்சலாகத்தான் இருந்தது அஷ்வினியின் செய்கை... ஏன்தான் இப்பிடி நடந்துக்குறாளோ என சலித்துக் கொண்டவன் ரிஷியை கைத்தாங்கலாக கொண்டு போய் ரூமில் விட்டு வந்தான்.

அனன்யாவின் அறை.....

வலியில் முகத்தை சுழித்துக் கொண்டு படுத்திருப்பவளை கைகட்டி நின்று ஒரு கணம் பார்த்திருந்தாள்.

அவளுக்குமே அவள் செய்கை பிடிக்கவில்லை தான்.... இருந்தும் என்னதான் செய்வது?
மனம் முழுவதும் அனன்யாவின் மேல் வெறுப்பு இருந்தாலும் இப்போது அதை காட்டும் நேரமல்லவே!
உயிருக்கு போராடிக்கொண்டிரும் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கிறாள் அவ்வளவே..... மற்றபடி அவள் திருந்தியிருந்தாலும் திருந்தப்போவதில்லை என்றாலும் அதை பற்றி அவளுக்கு கவலையில்லை....

இதை யாவற்றையும் புரிந்து கொள்ளாமல் அவள் மீது கோபம் காட்டினால் அவளும் என்னதான் செய்வது???

அனன்யா இந்த வீட்டிலிருந்து போகும் வரை அவளிடம் யாரும் பேசப்போவதில்லை என்பதுவும் அவளுக்கு தெரிந்துதான் இருந்தது. இருந்தும் அவளாய்த்தான் பேசுகிறாள்....

இப்போது ரிஷியிடம் நிற்காமல் வந்ததற்கு காரணம் அவன் உதாசீனம்தான்.... அவள் ஏதாவது செய்யப்போக அவன் கோபம் இன்னுமே கூடுமே ஒழிய குறையப் போவதில்லை என்பது அவளுக்கு தெரியாதா என்ன?!!.....

((ஆனால் அவளுக்கு தெரியாத ஒன்று...அவள் அருகில் வந்தால் கோபப்படுபவன் தான் அவள் இல்லாமல் போகவும் கோபப்படுவான் என்பது.....))

வீடு வந்து சேரவே மாலையாகியிருந்தது....
ஒரு பெருமூச்சுடன் அறையை விட்டு வெளியே வந்தவள் நேரே சமையலறை சென்று காபியை போட்டு எடுத்துக்கொண்டு மாடியேறினாள்.

இரண்டு கப்புகளை கயலிடம் கொடுத்தவள் மற்றையதை எடுத்துக் கொண்டு தன் அறை நோக்கி சென்றாள்.

ரிஷி பெட்டில் அமர்ந்தவாறு கண்களை மூடி சாய்ந்திருக்கவும் அவனருகே சென்று "தேவ்..." எனவும் கண்களை திறந்து அவளையும் காபி கப்பையும் ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் திரும்பவும் கண்களை மூடிக் கொள்ள அவளுக்குத்தான் தொண்டை அடைத்தது.

இதற்காகத்தானே விலகி இருக்கிறாள்.... தன் விதியை நொந்தவள் அவனருகில் இருந்த மேசையில் கப்பை வைத்துவிட்டு பால்கனிக்கு சென்று நின்றுகொண்டாள்.

அவன் அமைதியில் மனது வலிக்க கண்களிலிருந்து அருவியாய் இறங்கிக் கொண்டே இருந்தது கண்ணீர்.....

அருகில் அரவமில்லாமல் போக கண்களை திறந்தவன் அவள் பால்கனியில் நிற்பது கண்டு புருவ முடிச்சுடன் நெற்றி சுருங்க பார்த்துவிட்டு தன் வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

அழுது கொண்டிருந்தவளையும் யோசனையில் ஆழ்ந்திருந்தவனையும் நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது அஷ்வினியின் மொபைலின் சிணுங்கல்.....

இருவரும் ஒரு சேர திரும்பிப் பார்க்க அது ஒருமுறை அதிர்ந்து அடங்கி மறுபடியும் அழைக்க மறுபக்கம் திரும்பி கண்களை துடைக்க அதை கண்டுகொண்டான் ரிஷி....

அவசரமாக வந்து அதை எடுத்து காதில் வைத்தவளையே தொடர்ந்தது அவன் ஆராய்ச்சிப் பார்வை......

"சொல்லு அண்ணா" அவள் அழைப்பிலேயே ஏதோ நடந்திருக்க வேண்டும் என யூகித்து விட்டான் போலும்

"என்ன ப்ராப்ளம் ரிக்ஷி?" என்றான் அஜய்..... அவன் ரிக்ஷி என எப்போது அழைப்பான் என்று அவளுக்கா தெரியாது.....

"ஒன்னுமில்ல அஜய் " என்றாள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு

"ஒன்னுமில்லன்னா எதுக்கு அழுதிருக்க? உண்மய மறெக்க ட்ரய் பண்ணாத"

"இல்லடா....எனக்கு ஒன்னுமில்ல...."

"சரி.....இன்னக்கி கயல்கூட வருவல்ல?" என்றதும்தான் அவளுக்கு வருண் நிணைவே வந்தது.....

எவ்வளவு ஆசையாக வந்தாள் தன் கணவனிடம் விஷயத்தை பகிர..... எல்லாம் கனவாய் போனதோ!!!
அழுகை முட்டிக் கொண்டு வந்தது....ஃபோனை கையிலிருந்து எடுத்து வாய் பொத்தி கேவலை அடக்கியவள்

"இல்ல அஜய்.....கயல்... ஆரவ் அப்பறம் தேவ் மூனு பேரும் வருவாங்க.... எனக்கு கொஞ்சம் முக்கியமான வேல இருக்கு"

"நீயும் கட்டாயம் வர...."

"முடியாது அஜய்...." அவன் ஃபோனை வைத்திருந்தான். அதை ட்ரஸ்ஸிங் டேபிளில் வைத்தவள் ரிஷியிடம் வந்து நின்று தலை குனிந்தவாறே

"இன்னக்கி....அ... அம்மா வீட்டுக்கு பொய்ட்டு வரீங்களா?" அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் அமைதியாகவே இருக்க அவள் மேலும் தொடர்ந்தாள்.

"இந்த நிலமைல போறது கஷ்டம்னு எனக்கு தெரியும்....பட் ப்ளீஸ்...." என்றவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

இருவர் கண்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதோ!!!! அவளின் கண்கள் இறைஞ்சுதலாய்... அவனதோ குற்றம் சாட்டுவதாய்...

அவன் வெடுக்கென தன் பார்வையை வேறு புறம் திருப்பிக்கொள்ளவும் கதவு தட்டப்படவும் நேரம் சரியாக இருந்தது.திரும்பி பார்த்தவள் அங்கே கயல் நின்றிருக்கவும்

"வா...கயல்...எதாவது வேணுமா?" என கேட்டவாறே அவளிடம் செல்ல

"இல்ல அஷ்வி....அம்மா கால் பண்ணாங்க... அதான்...."

"ஓஹ்....நா வர்ல... தேவ்வ கூட்டிட்டு போறியா?" எனவும் அவளை அங்கிருந்தே முறைத்தவன் கயலிடம்

"நீங்க போய்ட்டு வாங்க கயல்...நா வர்ல" எனவும் அஷ்வி கயலிடம் வருணுக்காக பார்வையால் கெஞ்ச அதை புரிந்து கொண்டவளாய்

"மாமா ப்ளீஸ்.... முக்கியமான விஷயத்துக்காகதான் அம்மா கூப்டிருக்காங்க.... ப்ளீஸ் மாமா...."எனவும் அஷ்வி முறைத்தாளே ஒரு முறைப்பு.....

"இவ எதுக்கு நம்மல மொறக்கிறா... சரியாத்தானே பர்ஃபோமன்ஸ் குடுக்குறோம்...பத்தாது போல" என யோசித்தவள்

"ப்ளீஸ்...மாமா...ப்ளீஸ்.."

"இல்ல கயல்...நீங்க போ..."

"முடியாதுன்னு சொல்லாதீங்க மாமா... அக்காவும் வர்ல...நீங்களும் வர்லன்னா எப்பிடி?"

"உன் அக்காவ கூட்டிட்டு போக வேண்டியது தானே?"

"அவக்கு வேலன்னு சொல்றா"

"அப்படியென்ன நெட்டி முறிக்கிற வேல?" சற்று கடுப்புடனே கேட்டான்

"அத உங்க பொண்டாட்டிகிட்டயே கேக்க வேண்டியது"
எனவும் அவன் மௌனமாகிவிட அஷ்வினியின் உதட்டில் கீற்றாக புன்னகை அரும்பியது.

"மாமா....ப்ளீஸ்...." எனவும்

"உன் அக்காவயும் வர சொல்லு கயல்..." என்றான் எங்கோ பார்த்தபடி...அதில் சட்டென அவன் புறம் திரும்பியவள் அவனுக்கு கோபம் வரும் என தெரிந்தும்

"நா அனன்யா கூட இருக்கனும்" என்றாள். அவளை கண்கள் சிவக்க பார்த்து முறைத்தவன் கயலிடம்

"நீ போ கயல் நா குளிச்சிட்டு வந்தட்றேன்..." உடம்பிலுள்ள சூடு சற்று மட்டுப்பட்டு தெம்பாக இருக்கவும் சரி என்றான்.

"தேங்ஸ் மாமா...."என்றவள் சிட்டாய் பறந்து விட வாசலிலேயே நின்றுவிட்டாள்.பின்னே அவனிடம் யாரு வாங்கி கட்டிக் கொள்வது...

மெதுவாக எழுந்து குளியலறை சென்று கதவடைக்கவும் தான் அவளுக்கு மூச்சே வந்தது. அவனுக்கு துணியை எடுத்து வைத்தவள் அனன்யாவை பார்க்கச் சென்றாள்.

அனைவரும் ஹாலுக்கு வந்திருப்பது கண்டு தானும் வெளியே வந்தவள் அவளை இரு ஆண்களும் முறைத்துக்கொண்டு நிற்பதை கண்டு கொள்ளாமல் கயலிடம் மட்டும் விடை பெற்றாள்.

அவர்கள் மூவரும் வெளியேறிய அடுத்த நிமிடம் அனன்யாவின் அறையிலிருந்து " அம்மா..." என சத்தம் வரவும் அங்கு ஓடியவள் அறையில் அவள் அமர்த்திவிட்டு போன கமலம் அம்மா கீழே இரத்த வெள்ளத்தில் கிடக்க அவருக்கு முன் கையில் கத்தியுடன் குரூரமாய் நின்றிருந்த அனன்யாவை பார்த்து உறைந்து போனாள் அஷ்வினி....

தொடரும்.........

28-04-2021.
 

Rishi 24

Member
Vannangal Writer
Team
Messages
54
Reaction score
33
Points
18
அத்தியாயம் 16 ❤️

"அம்மா...." கத்தியவாறே ஓடிப்போய் அவரை உலுக்க அவரோ அதற்குள் உயிரை விட்டிருந்தார்.
ஆக்ரோஷமாய் எழுந்தவள் அவளுக்கு அறையப் போகுமுன் அந்த கத்தி அவள் வயிற்றுக்குள் இறங்கியிருந்தது.

அஷ்வினி கீழே சரியவும் கத்தி கத்தி சிரித்த அனன்யா தன் வயிற்றுக்கு போட்டிருந்த கட்டை அவிழ்கவும் அதிலிருந்து சிவப்பு நிறத்தில் திரவம் மாறி ஒன்று வெளியேற அதையும் பிய்த்து எடுக்கவும் தான் தெரிந்தது நேற்று கூட இதிலிருந்து தான் ஒழுகியிருக்கிதென்று....

அவள் அதிர்ச்சியை பார்த்து கத்தி கத்தி சிரித்தவள்
"என்ன அஷ்வினி.... எதுக்கு இப்போ என்ன ஷாக்கா பாத்துட்டு இருக்க? ஓ...நேத்து நா நடிச்சத நம்பிட்டியா... ச்சு...ச்சு...ச்சு... பாவம் நீ.... எல்லோரையும் எதிர்த்துட்டு என்ன கூட்டி வந்து ஏமாந்துட்டல்ல?ஹூம்... என்ன செய்றது உன் கேரக்டர் அப்பிடி.... இப்போ பாரு....சோ சேட்..." பேசிக் கொண்டிருக்கும் போதே அவளுக்கு கண்கள் சொறுக ஆரம்பித்துவிட்டது. அதை அறியாதவளோ இன்னும் பேசினாள்.

நார்மலாக பேசிக் கொண்டிருந்தவள் திடீரென கண்கள் பழிவெறியில் பளபளக்க

"உன் புருஷன் என் அப்பாவயும் என் அக்ஷுவயும் கொல்லுவான்... அத நான் கைகட்டி வேடிக்க பாக்கனுமா?சும்மா ஆப்படிச்சா வலிக்காதுல... அதான் அவன் இடத்துக்கே வந்து அவன் பொண்டாட்டியவே போட்டு நா யாருன்னு ஒரு சின்ன டெமோ காட்டினேன் செல்லம் வர்ட்டா.." என்றவள் அவளை தாண்டிப்போய் கதவை திறக்க அதுவோ வெளியால் லாக் பண்ணப்பட்டிருந்தது.

***

கார் கேட்டை தாண்டி கொஞ்ச தூரம் சென்றிருக்கும்... ஏனோ மூவரின் மனதும் படபடவென அடித்துக்கொள்ள ரிஷி

"ஆரு.... நாம திரும்பி வீட்டுக்கு போயிரலாம்டா.... நாம நெனக்கிற அளவுக்கு அஷ்வினி அங்க தனியா இருக்குறது பாதுகாப்..." என சொல்லிக் கொண்டிருக்கும் போது ரிஷியின் போன் ஹை டெஸிபலில் கத்த துவங்கியது.

அதை அவன் எடுக்கு முன் கட்டாகி அடுத்தது ஆரவ்வினது சிணுங்க கலவரமான ரிஷி

"சாமிண்ணாவான்னு பாரு ஆரு..." என சொல்லாமுடிக்க அதுவும் கட்டாகி கயலது போன் சிணுங்க அதை எடுத்தவள்

"சாமி அண்ணாதான் மாமா...." என்றவள் அடண்ட் செய்து காதில் வைக்க பரபரப்பாக ஒலித்தது அவர் குரல்

"அம்மா...அம்மா...நம்ம அஷ்வினி பாப்பாவ அந்த பொண்ணு கத்தி.." எனும்போதே அவரின் கெட்ட காலமோ இவர்களின் கெட்ட காலமோ அவரின் போன் பேலன்ஸ் இல்லாமல் கட்டாகிவிட இவளுக்கு அதே நேரத்தில் டவர் கிடைக்காமல் போக "ஹலோ..ஹலோ...." என்றவள்

"மா...மாமா....ஆ...ஆரு... அஷ்விய அந்த பொண்ணு கத்தின்னு என்னமோ சொல்றாரு.. எனக்கு பயமா இருக்கு" என்றவளது கூற்றில் ரிஷிக்கு இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. அடுத்த நிமிடம் கார் ஆரவ்வின் கைகளில் சீறிப்பாய பதினைந்து நிமிடங்களில் வீட்டின் முன் கார் க்ரீச்சிட்டு நின்றது.

காரை நிறுத்து முன்னே பாய்ந்து இறங்கிய ரிஷி புயல் போல் வீட்டுக்குள் நுழைய அதற்குள் ஹாலுக்கு வந்திருந்த சாமி

"தம்பி.... பாப்பா அந்த ரூம்ல....அந்தப் பொண்..." அடுத்ததை கேட்கவெல்லாம் அவன் அங்கு இல்லை....

பூட்டியிருந்ததை திறக்க கூட அவகாசமில்லாதவன் போல் உடைத்துக் கொண்டு போனவனின் இதயம் தாறுமாறாக துடிக்க "அஷூ......"என கத்திக் கொண்டே அவளை மடியில் ஏந்தியவன்

"ஏ....ஏ...ஏய்...அஷு...அஷு...ஒன்னில்ல... ஒ...ஒன்னில்ல... நாம நாம ஹாஸ்பிடல் போலாம்டா... இங்க....பாரு....உ....உன் தே...தேவ்டி... அ...அஷு எந்திரிடி..." என்றவனின் பேச்சுக்குரல் அவள் ஆழ்மனதை தட்டியெழுப்ப

"தே..தேவ்..சாரி..ந..." என்றவளின் தலை மறுபக்கம் சாய ரிஷி "நோ....." என கத்தவும்தான் அதிர்ச்சியில் வாசலில் நின்றிருந்தவர்கள் நிகழ்காலத்திற்கு வந்தனர்.

"அக்கா..."என கத்திய கயல் அவளருகில் செல்லப்போக அவளை எட்டிப்பிடித்து நிறுத்திய ஆரவ் வெளியே அஷ்வியை கொண்டு வருவதற்காக கயலோடு சேர்ந்து வெளியேறியவன் அவளை அங்கே நிறுத்திவிட்டு அவசரமாக சென்று காரை ஸ்டார்ட செய்ய கயல் முன்னால் ஏறிக்கொள்ள அஷ்வியுடன் ரிஷி பின்னால் ஏறவும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் பிரபல தனியார் மருத்துவமனையில் நின்றது ஆரவ்வின் கைங்காரியத்தில்....

அவள் ஐ.சி.யு வில் அட்மிட் பண்ணப்பட தன் சக்தியெல்லாம் வடிந்தாற் போல் தொப்பென சோஃபாவில் அமர்ந்த ரிஷியை அவசரமாக பிடித்தான் ஆரவ்.

"அண்ணா... கண்ட்ரோல் யுவர் செல்ஃப்...அவளுக்கு ஒன்னும் ஆகாது...." என்றவனின் குரலுக்கு சுவற்றில் சாய்ந்து எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தவனின் பார்வை ஒருசொட்டுக் கூட அசையவில்லை....

அவனின் கையை அழுத்திக் கொடுத்தவன் எழுந்து சுவரில் சாய்ந்து அழுதுகொண்டிருக்கும் தன்னவளின் பக்கம் சென்று அவள் தோல் தொட்டு

"அம்மு...." என்றதுதான் தாமதம் அவனை கட்டிப் பிடித்து கதறிவிட்டாள்.அவள் தலையை மெதுவாக வருடிக் கொடுத்தவன்

"அம்மு....அழாதடா....அஷ்விக்கு ஒன்னும் ஆகாது.."

"ஆ...ஆரு..அக்...அக்கா..."

"ஓன் அக்காதான்டா....அவளப்பத்தி ஒனக்கு தெரியாதா... நம்மல விட்டு எங்கயும் போக மாட்டா..."

"இ...இ...இல்ல ஆரு...ர...ரத்தோம்..."

"ஷ்....அம்மு மனச போட்டு கொலப்பிக்க கூடாது... அவளுக்கு எதுவும் ஆகாது....நீ வேண்ணாபாரு..." என பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் ஃபோன் அலற அதை எடுத்து பார்த்தவன் அதில் " அத்தை " என ஒலிரவும் கைகள் நடுங்க அடண்ட் செய்து காதில் வைக்க

"மாப்ள... ஏன் இவ்வளவு நேரம்....பிரச்சின ஒன்னுமில்லயே..."

"இ....இல்ல அத்தை...அஷ்விக்கு...."

"அஷ்வாக்கு என்னாச்சி?" கலவரமாய் ஒலித்தது அவர் குரல்

"சின்ன ஆக்ஸிடண்ட்...." அவ்வளவுதான் சொன்னான் மறுபக்கம் சத்தத்தையே காணாமல் போக

"அத்த... அத்த...." என்றவனின் குரலுக்கு பதிலளித்தது அஜய்யின் குரல்

"அஷ்விக்கு என்னாச்சு?"

"அது...அது...சின்ன ஆக்ஸிடண்ட்...."

"வாட்..எந்த ஹாஸ்பிடல்?"

"விமல் ஹாஸ்பிடல்...." என்றவனின் கால் கட்டாகியிருந்தது.

குடும்பத்தினர் அனைவரும் அங்கு கூடியிருந்தனர். கோர்ட்டிலிருந்து நேரே அங்கு கொஞ்சம் லேட்டாகி வந்தவன் முதலில் கண்டது அஜய்யிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்த ஆரவ்வைத்தான்.

நடந்து கொண்டிருந்தவன் சட்டென ப்ரேக் பிடித்தார் நின்றுவிட்டான்.அவனுக்கு எதுவுமே புரியவில்லை....

தன் தாயை கட்டியணைத்துக் கொண்டு ஒரு சின்ன பெண் வேறு அழுது கொண்டிருக்க அவர் அவளின் தலையை வருடி ஆறுதல் படித்தியவாறே அவரும் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்.

இன்று காலையில் நடந்த அஷ்வியுடனான பேச்சுவார்த்தை ஞாபகத்தில் அலைமோத சட்டென அவள் தான் கயல் என யூகித்தவன் ஆரவ் கயலுடைய கணவனாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்தவனுக்கு மனதில் அத்தனை நிம்மதி!!!

ஆனால்....ஆர்.கே??? என மனதில் நினைத்தவனது சந்தோஷம் நொடியில் வாடிப்போனது...

((விஜயலக்ஷ்மியும் கயலும் ரிஷியை மறைத்து நின்றுகொண்டிருந்ததால் அவன் ரிஷியை காண வாய்ப்பு இல்லாமல் போயிற்று))

எதேச்சையாக திரும்பிய ஆரவ்வின் கண்களில் வருண் பட அவன் வாய் தானாக முணுமுணுத்தது அவன் பெயரை.....

"வருண் அண்ணா..." என்றவனின் குரலில் ரிஷியை அலசிக்கொண்டிருந்தவன் சடாரென அவன் புறம் திரும்ப அவனை வாரி அணைத்துக்கொண்டவனை தானும் அனைத்தான் வருண்.

அந்த இறுகிய அணைப்பில் எத்தனை எத்தனையோ செய்திகள் அடங்கி இருந்தனவோ!!!

சட்டென விலகியவன்
"ஆர்.கே..?" என கேள்வியாய் நிறுத்த ஆரவ்வின் கண்கள் போன திசையை கண்டு இதயம் அதிர வேக எட்டுக்களால் அந்த இடத்தை நெருங்கியவன் தலையை கையால் தாங்கிப் பிடித்து அமர்ந்திருந்தவனை கண்ட மாத்திரத்தில் "ஆர்.கே.." என்றவாறு கைகள் நடுங்க தோல் தொட இவ்வளவு நேரம் வேறு எங்கோ உலகத்தில் இருந்தவன் சலேரென நிமிர்ந்து பார்தான் குரல் வந்த திசையை!!!

அஷ்வியின் குடும்பத்தினர் வந்த விஷயமே தெரியாது அவனுக்கு...... அவன் மனம் முழுவதும் இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த தன் மனையாளின் பிம்பமே!!!!

வருணுக்கும் உள்ளே அஷ்வினி இருப்பது தெரியாது.... அவன் கோர்டிலிருந்தே வந்திருக்க அவனுக்கு விஷயம் தெரிவிக்கப்படவில்லை.....
ஹாஸ்பிடல் பெயர் மட்டுமே கூறப்பட்டிருக்க பதற்றத்துடன் வந்து சேர்ந்தான்.

இங்கு வந்து பார்த்தால் ஆரவ் நின்று கொண்டிருக்க அதிர்ச்சியில் அப்போதுதான் சுற்றுமுற்றும் பார்த்தான். கயலை கண்டு ஆரவ்வை யூகித்தவனுக்கு அஷ்வி ரிஷியின் மனைவியாய் இருப்பாளென அவனுக்கு எங்கே தெரியப் போகிறது...

தன் தோல் தொட்ட நபரை கண்டு அதிர்ச்சியில் வேகமாக எழுந்த ரிஷி ஷாக்கடித்தவன் போல் வருணை பார்க்க.... வருணின் கண்களிலும் அப்பட்டமாய் அதிர்ச்சி தெரிந்தது.

அதிர்ச்சியிலிருந்து விலகிய வருண் கண்கள் கலங்க " மச்சி..." என அழைத்தவன் ரிஷியை இறுக்க அணைத்தான்.

எத்தனை வருடங்களாகிவிட்டது அவனை பார்த்து... குற்ற உணர்ச்சியில் தவித்துப் போயிருந்த இருவருக்குமே ஆறுதலாக இருந்தது அந்த அணைப்பு......
ரிஷிக்கு அவனை நம்ப மறுத்தது என்றால்... அவணுக்கு தெரிந்தும் தன் நண்பனை தனியே விட்டுப்போனது குற்றவுணர்வாக இருந்தது.

டாக்டர் மாஸ்கை கழட்டியபடியே வெளியே வர தன் நண்பனை விட்டு விலகி அவசரமாக அவரிடம் செல்லவும் மீண்டும் குழப்ப ரேகை படர்ந்தது வருண் முகத்தில்.... அதை கண்டு கொண்ட விஜயலக்ஷ்மி

"இந்த தம்பிதான் நம்ம அஷ்வாவ கட்டியிருக்குறவரு..." எனவும்

"வாட்..."என உச்சகட்ட அதிர்ச்சியில் கத்த அவனை புரியாமல் பார்த்தவரிடம்

"அ...அப்போ... ரிக்ஷி தான் உள்ள இருக்காளா?" குரல் நடுங்கியது அவனுக்கு...
அருகில் நெருங்கிய ஆரவ் " ஆமாம் " என்பதுபோல் தலையை அசைக்க இப்போது நிலை தடுமாறி அமர்வது அவன் முறையாயிற்று...

அதற்குள் டாக்டரை நெருங்கிய ரிஷி
"எ....எ..என் அஷுக்கு ஒன்னில்லல்ல டாக்டர்?" எனவும்

"இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது மிஸ்டர். மாறன்.... கத்தி ஆழமா குத்தியிருக்குறதும் இல்லாம ப்ளட்டும் அதிகமா லாஸ்ஸாகியிருக்கு.... இன்னும் அவங்க சுய நினைவுக்கு கூட வராம இருக்காங்க...." என்றவரின் பேச்சில் மொத்தமாக இடிந்து தரையில் அமர்ந்தான் தி க்ரேட் பிஸ்னஸ் மேன் ரிஷிகுமார் தேவமாருதன்...

ரிஷி இடிந்து போய் தரையில் அமர அவனை பிடிக்கப் போன ஆரவ்வின் காலரை கோபமாக பிடித்து அஜய்

"என்கிட்ட என் அஷ்விக்கு சின்ன ஆக்ஸிடென்ட்னு தானேடா சொன்ன... இப்போ டாக்டர் என்னமோ கத்தி குத்துன்னு எல்லாம் சொல்றாரு... மரியாதயா உண்மய சொல்லு..இல்ல..." அவனை உலுக்க அதற்குள் அவனிடம் வந்த கயல் " அண்ணா அவர விடு" என்றவாறே ஆரவ்வை பிரித்தெடுத்து விட்டு அவனிடம் திரும்பி

"ஆரு மேலயோ மாமா மேலயோ எந்த தப்பும் கிடயாது அண்ணா... அஷ்வி மேலதான் தப்பு..இதுக்கு மேல எதுவும் கெக்காத ப்ளீஸ்..." எனவும் வேறு வழியில்லாமல் அமைதியாகி விட்டான்.

அதற்குள் ரிஷியை சேரில் அமர வைத்துவிட்டு எழுந்து வெளியே சென்றுவிட தன்னை கடிந்து கொண்ட விஜயலக்ஷ்மியை முறைத்து விட்டு ஈஷ்வரியின் அருகில் போய் நின்றான் அஜய்.

கோஞ்ச நேரம் கழித்து உள்ளே நுழைய்போன டாக்டரிடம் திடீரென வந்து நின்ற ரிஷி

"மிஸ்டர்.அர்ஜுன் எனக்கு அஷுவ பாக்கனும்" என்றான் ஏதோ முடிவெடுத்தவனாய்.....

அதை மறுக்க வாய் திறந்தவர் அவன் கண்களில் கண்ட உறுதியில் ஏதோ புரிந்து கொண்டவராக ஆமோதிப்பாய் தலையசைத்து அடுத்த அறிவுரை கூறும் முன் அவன் உள்ளே சென்றிருந்தான்.

அவன் அதிரடியில் ஸ்தம்பித்தாலும் அவனை நினைத்து அவருதடுகளில் மர்மப் புன்னகை ஒன்று தோன்றாமல் இல்லை.....

உள்ளே நுழைந்தவன் அவளருகில் சென்று அமர்ந்து அவள் கைகளை தன் கைகளுக்குள் பொத்திப் பிடித்தவன் அவளையே இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் மீது அளவுகடந்த கோபம் இருந்த அதே நேரம் நெஞ்சின் ஓரம் வலி ஏற்படுவதை உணர்ந்துதான் இருந்தான்.

அந்த வலிக்கான காரணம் காதல் என்பதைத்தான் அவள் இரத்த வெள்ளத்தில் இருந்து அவன் நெஞ்சு அவளுக்காக துடித்த போதே கண்டு விட்டானே!!!

ஆம்.... அவன் அவளை காதலிக்கிறான்.
எப்போது காதல் வந்ததென்று கேட்டால் அதற்கு விடை அவனுக்கு தெரியாதுதான்.....
ஆனால் இப்போது இந்த நொடி அவள் உயிருடன் வேண்டும் அவனுக்கு... அது மட்டுமே மனது ஜபம் போல் உச்சரித்துக் கொண்டிருந்தது.

மெல்ல எழுந்து அவள் நெற்றியில் தன் உதட்டை ஒற்றி எடுத்தவன்

"அஷு....." என்றான் உள்ளத்தை உருக்கும் குரலில்...

அக்குரலில் தூக்கிக் கிடந்த அவள் ஆழ்மனம் விழித்துக் கொண்டதுவோ!!!

"அஷு.... திரும்ப என்கிட்ட வந்துடுடி ப்ளீஸ்.... எனக்கு நீ வேனும்டி.... இனிமே நீயா என்ன விட்டு விலகி போகனும்னு நெனச்சா கூட நா அதுக்கு அனுமதிக்க மாட்டேன்... டு யூ நோ ஒய் பேபி? பிகாஸ் யூ ஆர் மைன்..... எனக்கு சொந்தமானவள்டி நீ.... அப்பறம் எப்பிடி உன்ன என்ன விட்டு போக அனுமதிப்பேன் சொல்லு?" என்றவனின் கண்களில் இருந்து இரு சொட்டு நீர் துளிகள் அவள் கையை தீண்ட கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவு அடைந்து கொண்டிருந்தாள் அவள்....

"எப்பவும் பட்டாசு மாறி பேசிகிட்டே இருப்பியே அஷு.... இப்போ எதுக்குடி அமைதியா இருக்க... உனக்கு ஒன்னு தெரியுமாடி? நீ பேசாம அமைதியா இருந்தா எனக்கு புடிக்காது.... எஸ் ஐ நோ நீ பேசினா எரிஞ்சு விழுவேன்....பட் நீ பேசாம இருக்குறப்போ எனக்கு இங்க என்னமோ பண்ணும்டி....." என்றவன் ஆள்காட்டி விரலால் தன் இதயத்தை சுட்டிக் காட்டினான்.

" அஷு...எந்திரிடி..... நா சொல்லியும் கேக்காம அவள அனுமதிச்சல்ல... ஏன்டி எப்போவும் என்மேல ஒனக்கு நம்பிக்கையோ அக்கறையோ இல்லல்லடி?" என்றவனின் கை திடீரென அழுத்தப்பட நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் அத்தனை மகிழ்ச்சி!!

பின்னே அவன் மனையாள் கண்விழித்து அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவளை அணைத்து யமுத்தமிடத் துடித்த இதயத்தை அடக்கி முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு அவளை பார்க்க அவளோ இன்னும் அவனையே தான் பார்த்துக் கொண்டிதாள்.

அவனின் காய்ந்து போன கண்ணீர் கோடுகள் அவன் அழுதிருக்கிறான் என்பதை பறைசாற்றனாலும் அவன் முகமோ அதற்கு மாறாக கோபத்தை தத்தெடுத்திருப்பதை தான் குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் குழப்ப விழிகளை கண்டு கொண்டவன் வேகமாக எழுந்து வெளியே செல்ல எத்தனிக்க அவன் கைகளை கெட்டியாக பிடித்து கொண்டவள் கண்ணீருடன் அவனை ஏறிட அவளை திரும்பிப் பார்த்தவன் அவள் கண்ணீரை கண்டு துடித்துப் போனாலும் வெளியில் விறைப்பாகவே நின்றான்.

"சாரி... தே...வ்" அந்த வார்த்தைகளை கூட அவளால் சொல்ல முடியாமல் வலித்தது போலும்.வேதனையில் முகம் சுருங்க

"வீட்டுக்கு போய் பேசிக்கலாம் அஷ்வினி.... நீ ஸ்ட்ரைன் பன்னிக்காத.... நா டாக்டர வர சொல்றேன்" என்றவன் அவள் கைகளை விலக்கி விட்டு சென்றுவிட விழவா வேண்டாமா என எட்டிப் பார்த்திருந்த கண்ணீர் மலுக்கென கண்ணத்தை தொட்டது.

((இதுங்கள எப்போ சேத்து வெச்சு நாம எப்போ கதய முடிக்கிறது.... ஷ்ஷப்பா..முடில🥱))

அதன் பிறகு நடந்ததெல்லாம் ஜெட் வேகம் தான்....

இன்றுடன் வீடு வந்து இரண்டு நாள் ஆகியிருந்தது. அவனை அன்று கண்டது தான் அதன் பிறகு அவனை காணவே இல்லை...
வேண்டுமென்றே தான் தவிர்த்திருந்தான்.

அவனிடம் அனுமதி வாங்கிய விஜயலக்ஷ்மி அவளை தங்கள் வீட்டுக்கே அழைத்து வந்துவிட அவனோடு பேசுவது என்ன பார்ப்பதே அரிதாகிப் போனது.

வருணுக்கும் விஷயம் தெரிவிக்கப்பட்டு அவனும் அவள் முகத்தை பார்க்காமல் கோபம் காட்டிக் கொண்டிருந்தான்.

அஜய்க்கு விஷயம் தெரிந்தாலும் அஷ்வியுடன் பேசினான். அவனுக்குத்தான் அவள் முகம் கசங்குவதே பிடிக்காதே!! முதலில் கோபமாக பேச அவள் அழவும் அதற்கு மேல் அவனுக்கு கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை....

ஆரவ்வை சொல்லவே வேண்டாம்...ஏதோ தெரியாத மூன்றாவது நபரை பார்ப்பது போல் பார்த்து வைத்தான்.

வீட்டினருக்கு அந்த விஷயத்தை சொல்லாது ஏதேதோ சொல்லி சமாளித்து வைத்திருந்தனர் ஆண்களணைவரும்......

கயலும் அடம்பிடித்து அம்மா வீட்டுக்கே வந்திருந்தாள்.

ரிஷியின் வீடு.....

தன் லேப்டாப் முன் அமர்ந்து ஏதோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆரவ்.புருவ மத்தியில் முடிச்சு விழ கண்களை இறுக்க மூடிக்கொண்டவன் அன்று நடந்ததை அலசத் தொடங்கினான்.

அவனுக்கு அனன்யாவை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போனதால் அஷ்வினி வந்து அவள் வீட்டில் தங்கப் போவதாக கூறிச் சென்றதுமே உடனே வீட்டில் ஒருவருக்கு அழைத்து அவள் ரூமில் மினி கேமராவை அங்கு மேசைக்கு மேலிருந்த பென் ஹால்டரில் பொருத்திவைத்துு விட்டான். கதவு அடைபட்டதும் ஷாக்காகி நின்றவள் அடுத்த நிமிடம் வீட்டு ஜன்னலை உடைத்து பாய்ந்திருந்தாள். அதைத்தான் அவன் இவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்ததும்.

அவளுக்கு எதிரான ஆதாரம் கைகளில் இருந்தாலும் அவனுக்கு குழப்பமாக இருந்தது ஒரு விடயம் தான்.

இதுவரை இந்த வீட்டுக்கே வந்திராதவளுக்கு பின் பக்க வழி தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை....
அப்படியிருக்க அவளுக்கு யாரோ இந்த வீட்டிலிருந்து உதவியிருக்கிறார்கள். உதவியவர் யார் என்பதே இப்போதைய அவனுடைய சந்தேகம்.

அந்த வீடியோவை திரும்ப திரும்ப ஓடவிட்டுப் பார்த்தவனுக்கு குழப்பம் அதிகரித்தே ஒழிய சந்தேகம் தீர வழியைக் தான் காணோம்.

அதில் அஷ்வினியிடம் அனன்யா கொலையை பற்றி பேசிய விஷயம் அவனுக்கு ஏற்கனவே தெரிந்தது தான்....
அதற்காகத்தானே இப்படி ஒன்று நடக்கும் என்று எதிர்பார்த்துத் தானே அவன் ரிஷிக்கு காவலுக்காய் அதே காலேஜில் படித்துக் கொண்டிருக்கிறான்.

கொலை தாக்குதல் ரிஷிக்கு வருமென்று பார்த்தால் அஷ்வினியை அல்லவா அது தாக்கியிருக்கிறது.

இது ஆரவ் கொஞ்சமும் எதிர்பார்க்காதது!!!
நல்ல வேளையாக அவள் உண்மையை கூறும் போது அஷ்வினி மயங்கியிருந்தாள். இல்லாவிட்டால் இன்று நடந்திருப்பதே வேறு என நினைத்தவன்
" ஷிட்.." என்றவாறே முடியை அழுத்தக்கோதிக் கொண்டு சித்தார்த்திற்கு கால் பண்ணி காதில் வைத்தவாறே பால்கனிக்கு சென்றான். அவன் காலை அவனும் எதிர்பார்த்திருந்திருப்பான் போலும் உடனே அடண்ட் பண்ணியிருந்தான்.

"சித்து...ஏதாவது க்ளூ கெடச்சிருக்கா?"

"ஆரு....நானும் பாத்தேன்டா...எனக்கு சாமிண்ணா மேலதான் சந்தேகமா இருக்கு..."

"என்னடா சொல்ற?"

"ஆமாண்டா....நீ சொன்னத வெச்சு பாக்கும் போது அன்னக்கி வேலக்காரங்க யாருமே வீட்ல இல்ல.... சாமி அண்ணன் லீவுல வீட்டுக்கு போயிருந்திருக்காரு.... ரைட்?"

"ம்...ஆமா.. பட்?"

"அவருக்கு அங்க வெச்சு தான் இவளால மிரட்டலோ இல்லண்ணா பணமோ.. ஏதோ ஒன்னால மிரட்டப்பட்டோ ஆசகாட்டியோ இருந்திருக்கனும்"

"அப்பிடியே வெச்சிகிட்டாலும் அவர் எதுக்குடா கால் பண்ணியிருக்கனும்?"

"விஸ்வாசம் மச்சான்.... நீங்க சோறு போட்ட இரத்தம் ஒடம்புல ஓடுதுல்ல?"

"டேய் தெளிவா பேசுடா...ஒரு மண்ணாங்கட்டியும் வெளங்கித்தொலக்கல"

"... "

"டேய் சிரிக்காத....
கடுப்பாகுது..."

"ஓகே... ஓகே.. மச்சி கூல்... இப்போ சொல்றேன் கேளு..."

"சரி...சொல்லித்தொல"

"எல்லோரும் வீட்டுக்கு போயிருக்க அவர் மட்டும் எப்பிடி வந்தாரு?"

"அதான்டா எனக்கும் குழப்புது"

"அப்பிடி வந்தவரு அனன்யா வந்திருக்குறதே தெரியாம எப்பிடி கதவ லாக் பண்ணுவாரு?"

"அப்போ அனன்யாவ ஏக்கனவே சாமிண்ணாக்கு தெரியும்குறியா?"

"எஸ் அஃப்கோர்ஸ் ஆரு..... லீவுல ஊருக்கு போயிருந்தவரு திடீர்னு எப்பிடி வந்து அதுவும் நீங்க கெளம்பின ஒடனே வந்திருப்பாரு..."

"பட் எதுக்குடா லாக் பண்ணனும்?"

"இவ்வளவு செஞ்சவருக்கு குற்ற உணர்ச்சியா இருந்திருக்கலாம்... அதுவும் அஷ்விய பார்த்த உடனே..."

"பட் வொய் மச்சி?"

"டேய் கேள்விக்கி பொறந்தவனே... என்ன கொஞ்சம் பேச விடுடா"

"ஹி..ஹி..நீ சொல்லு மச்சி"

"அஷ்விக்கு புடிச்ச வேலையாள் யாரு?"

"சாமிண்ணாதான்டா..வொய்?"

"மறுபடியும் கேள்வியா?"

"சரி...சரி சொல்லு"

"அனன்யாக்கு உதவி செஞ்சவருக்கு அஷ்விய பாத்த ஒடனே மனசு கேக்காம வெளியாள லாக் மண்ணியிருப்பாரு"

"இருக்கலாம்டா....இந்த வாலு (அஷ்வி) ஏதாவது அவருக்கிட்ட ஒலறியிருப்பா... நா அவகிட்ட கேக்குறேன்டா..."

"யாரு... நீ... அவகிட்ட?"

"ஆமா"

"இதுவர ஒரு வார்த்த பேசாம மூஞ்ச திருப்பிகிட்டு இருக்குற நீ?"

"அ...அது...அது..."

"டேய்..டேய்.. நடிக்காதடா"

"ரொம்ப ஓவரா பண்றா மச்சி" அவன் குற்றப்பத்திரிகை வாசிக்க அதில் சிரித்த சித்தார்த்

"அவளைப் பத்தி தான் ஒனக்கே தெரியுமேடா... கோச்சிகிட்டு இருந்தாலும் மனசளவுல கவலப்பட்டுட்டு தான் இருப்பா"

"......."

"டேய்...போய் பேசுடா... பாவம்... அண்ணா வேற பேசியிருக்க மாட்டாரு "

"ஆமாண்டா... அவ உள்ள இருக்கும்போது எவ்வளவு உடஞ்சி போய் தெரிஞ்சாரு தெரியுமா? எவ்வளவு துடிச்சாரு... இப்போ எதுவுமே நடக்காத மாறி அவள பாக்ககூட செய்யாம வீட்ல இருக்காருடா"

"அது உரிமக் கோபம் மச்சி... கொஞ்சம் கொளுத்தி போட்டோம்னா பத்திக்கும்"

"ம்... ஆமாண்டா... அத்த குல தெய்வ கோயிலுக்கு போகனும்னு சொன்னாங்க பாக்கலாம்...அது இருக்கட்டும் நீ எப்போ கல்யாணம் பண்றதா ஐடியா?"

"டீட்..." எனும் சப்தத்தில் ஃபோன் கட்டாகியிருப்பதை உணர்ந்தவன்

"படுபாவி வெச்சிட்டான்...பிடி குடுக்க மாட்டேங்குறானே" என நினைத்தவன் தன்னவளுக்கு அழைப்பு விடுத்தான்.

***

பால்கனியில் சாய்வு நாற்காலியில் கையிரண்டையும் தலைக்கு கொடுத்தவாறே கண் மூடி அமர்ந்திருந்தான் ரிஷி.

மனம் முழுதும் அனன்யாவின் செய்கையில் எரிமலை போல் வெடித்துக் கொண்டிருக்க முகம் ஏதோ சாதித்தவனாய் சாந்தமாய் இருந்தது!!!

ஆம்... அனன்யா அவனின் கஸ்டடியில் தான் இருக்கிறாள்.லவ் வந்தது தெரியாத போதே அஷ்வினிக்காக துடித்தவன் இப்போது மட்டும் விட்டுவிடுவானா என்ன?

மெதுவாக கண்களை திறந்தவன் தூரத்தில் தெரிந்த நிலாவை பார்த்தான். அதில் கூட தன் மனையாளின் பிம்பம் தெரிவது போலவே இருந்ததுவோ!!

தனக்குள் சிரித்துக் கொண்டவன் அவளைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்து போக அவன் யோசனையை தடை செய்வது போல் சினுங்கியது அவன் மொபைல்...

"ப்ச்..."என எரிச்சலில் எடுத்தவன் அதில் " மை சண்டக்கோழி " என ஒலிரவும் எரிச்சலில் இருந்தவனின் முகம் சூரியனாய் ஜொலித்தது.
அழைத்தது அவன் மனைவியாயிற்றே!!!

இது தினமும் நடப்பதுதான்... அடித்து ஓயும் வரை கால் பண்ணிக் கொண்டே இருப்பவள் அதுவும் எடுக்கப்படாவிட்டால் சாரி கேட்டு மேசேஜ் பண்ணிக் கொண்டே இருப்பாள்.

"என்ன தவிக்க விட்டல்ல...இப்போ நல்லா அனுபவி" என நினைத்துக் கொள்பவன் மறந்தும் எடுக்கவே மாட்டான்.

காலை.....

ஆரவ் ஏற்கனவே சென்றிருக்க கிரீச்சிட்டு வந்து நின்றது ரிஷியின் பிலக் ரால்ஸ் ராயல்ஸ் கார்....

கதவை திறந்து கொண்டு இறங்கி உள்ளே செல்ல அடியெடுத்து வைத்தவனின் கால் தடைப்பட்டு நின்றது அங்கு கண்ட காட்சியில்......

தொடரும்........

29-04-2021.
 

Rishi 24

Member
Vannangal Writer
Team
Messages
54
Reaction score
33
Points
18
அத்தியாயம் 17 ❤️



தன் காரிலிருந்து ஸ்டைலாக இறங்கி உள்ளே நுழையப் போனவன் அங்கே வீட்டின் முன் கார்டனில் ஒய்யாரமாக அமர்ந்து யாரோ ஒருவனுடன் சிரித்து பேசிக் கொண்டுடிருத்த தன் மனையாளை பார்த்தவனின் கால்கள் உள்ளே செல்ல மறுத்து கண்கள் சிவந்து போனது பொறாமை கோபத்தில்.....



"நான் வந்தது கூட தெரியாமல் அப்படியென்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது" என நினைத்தவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது.



அவளை முறைத்து விட்டு கோபமாக உள்ளே நுழையப் போனவனை எதேச்சையாக வாசல் பக்கம் கண்களை சுழல விட்டவள் அப்போது தான் கண்டு கொண்டாள் போலும்!!!



முகம் முழுதும் சந்தோஷத்துடன் "தேவ்..." என முணுமுணுத்ததில் தானும் வாசல் பக்கம் கண்களை திருப்பினான் விஜயலக்ஷ்மியின் அண்ணன் மகன் "அர்விந்த்"



அஷ்வியின் புரம் கண்களை திருப்பி

"யாரு அஷ்வி இந்த ஹேண்சம்?"



"தேவ்டா....என் புருஷன்"



"ஓஹ்....இவர்தான் அந்த லக்கி பாயா?"



"ம்...ம்....இரு வந்துட்றேன்" என எழுவதற்குள் அவன் வீட்டு வாசல் படியை நெருங்கியிருக்க இவள் "தேவ்..." என கத்தியழைக்கவும் சட்டென நின்றாலும் அவளை திரும்பிப் பார்க்கவில்லை.....



கொஞ்ச தூரம் நடந்து வந்தவளுக்க அதற்கு மேல் முடியாமல் போக



"தேவ்...என்னால இதுக்கு மேல முடியல..கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்...." என்றவள் இவன் அவளை தூக்க எண்ணி அவள் புரம் திரும்ப அவளோ அர்விந்திடம்



"அர்வி....என்ன கொஞ்சம் தூக்குறியாடா?" எனவும் ரிஷிக்கு காதில் புகை வராத குறை தான்....



"சரி அஷ்வி...இரு வர்றேன்" என்றவன் ரிஷி பார்த்த பார்வையில் தயங்கி



"அ...அது...அது...அஷ்விம்மா நீ ஏன் உன் புருஷன் கிட்டயே தூக்க சொல்லக் கூடாது?"



"அவர் அங்க இருக்காருடா...நீதானே பக்கத்துல இருக்க..."



"பட்...எனக்கு சின்ன வேல இருக்கு அஷ்வி"



"ஒரு வேலயுமே இல்ல...நான் ஃப்ரீனு இப்போதானேடா என்கிட்ட சொன்ன?"



"அது அப்போ...இது இப்போ" என வசனம் பேசியவன் அவள் திரும்பவும் ஏதோ கேட்க வாயெடுக்கு முன் சென்று விட அஷ்வினி திரும்பி ரிஷியை பார்க்க அவனோ கைகளிரண்டையும் பேண்ட் பாக்கெட்டுக்குள் விட்டபடி அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.



"இந்த கமாண்டர் எதுக்கிப்போ நம்மல முறைக்கிறான்" என நினைத்தவள்



"தேவ்...வந்து...நா.." என கூறிக் கொண்டிருக்கும் போதே அவளை தன் கைகளில் ஏந்தியவனை பயத்தில் கண்கள் மூடி அவன் கழுத்தில் தன் கரங்களை மாலையாக கோர்த்து அவன் நெஞ்சில் ஒன்றவும் அவளை பார்த்து தன் கீழுதட்டை கடித்து வந்த சிரிப்பை அடக்கியவாறே உள்ளே நுழைந்தான்.



நடந்த யாவற்றையும் அடக்கப்பட்ட சிரிப்புடன் மேலே பால்கனியில் நின்றவாறு பார்த்துக்கொண்டிருந்த ஆரவ் தானும் கீழிறங்கி வந்தான்.



ரிஷி ஹாலுக்குள் நுழைய அங்கே கயல் காலேஜ் போகாமல் கால் ஆட்டியபடி டீ.வி பார்த்துக்கொண்டிருக்க இவன் நுழையவும் அவசரமாக எழுந்தவள் "வாங்க மாமா..." எனவும் தான் திடுக்கிட்டு விழித்தாள் அஷ்வினி.



அதற்கிடையில் சத்தம் கேட்டு விஜயலக்ஷ்மியும் ஈஷ்வரியும் ஹாலுக்கு வர ஆரவ்வும் அவர்களை பார்த்தவாறே வந்து நின்றான்.



எல்லோரும் வரவும் சங்கடப்பட்ட அஷ்வி இறங்க முற்பட... எங்கே அவளுக்கு அசைக்க கூட முடியாமல் போனது.



"வாங்க மாப்பிள்ள..." என வரவேற்ற விஜயலக்ஷ்மியிடம்



"அத்த என்ன பேரு சொல்லியே கூப்புடுங்க.." எனவும் அவன் பணிவான பேச்சில் மகிழ்ந்தவர்



"இருக்கட்டும் மாப்பிள்ள... அஷ்வாவோட ரூம் மேல இருக்கு" என காட்டியவரை நன்றியுடன் பார்த்தவன் மேலேறிச் சென்றான்.



பெண்களிருவரும் உள்ளே சென்றதும் அவர்களையே வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்த கயல்



"ஆரு....."



"......."



"டேய்...ஆரவ்"



"என்ன அம்மு?"



"நம்ம மாமாவாடா இது....அம்மாகிட்ட அவ்வளவு தன்மயா பேச வேற செய்யறாரு..."



"அதான்டி நானும் ஷாக்கடிச்ச மாறி பாத்துட்ருக்கேன்"



"டேய்....என்னடா நடக்குது.. டாம் அண்ட் ஜெர்ரி ரெண்டும் எப்போடா ஒன்னு சேந்தாங்க?"



"அது தெரிஞ்சா நா எதுக்குடி ஷாக்காகப் போறேன்?"



"நீ சொல்றதும் சரிதாண்டா...ஆரு இப்பிடியும் இருக்குமோ?"



"எப்பிடி?"



"இல்ல....அஷ்விக்கு கத்தி குத்துபட்டதுல நடக்க முடியாம மாமா பாவமேன்னு தூக்கிட்டு வந்திருப்பாரோ?"



"பாவமேன்னு தூக்கிட்டு வர்லடி.... பொறாமைல தூக்கிட்டு வந்தாரு"



"புரியிறா மாறி பேசவே மாட்டியாடா நீ?" என்றவளிடம் வெளியே நடந்ததை சொல்ல



"ஓஹ்ஹோ...அப்பிடி போகுதோ கத? அப்போ நாம இன்னும் கொஞ்சம் பத்தி விட வேண்டியதுதான்"



"சித்துவும் அதத்தான்டி சொன்னான்"



"யாரு நம்ம சித்தார்த் அண்ணனா?"



"ம்...ஆமா..."



"என்ன சொன்னாரு?"



"கொஞ்சம் கொளுத்தி போட்டோம்னா பத்திக்கும்னு சொன்னான்"



"சொந்த காதலிய புரிஞ்சிக்க முடில... ஆனா ஊருல உள்ள எல்லாரையும் சேத்து வெக்க ஐடியா குடுக்க தெரிது...." என முணுமுணுக்க



"சத்தமா பேசுடி" என்றான்.



"அப்போ அர்வி அத்தான வெச்சே சேத்துரலாம்னு சொன்னேன்"



"ஏய்...அவனுக்கு அத்தான் பொத்தான்ன அறஞ்சிறுவேன் பாத்துக்கோ"



"இதேதுடா வம்பா போச்சி...அத்தான அத்தான்னு தானே கூப்பிட முடியும்?"



"அதெல்லாம் எனக்கு தெரியாது... என்ன தவிற வேறு யாருக்கும் நீ அப்பிடி கூப்புட கூடாது சொல்லிட்டேன்"

என முகத்தை தூக்கி வைக்கவும் அவன் பாவனையில் அவளுக்கு சிரிப்புத்தான் வந்தது.



"அவங்களுக்கு கொளுத்தினாதான் பத்தும்... உனக்கு கொளுத்தாமயே பத்துதேடா "



"ஒன்ன...." என காதை பிடிக்க



"ஆஹ்....வலிக்குது விடுடா..."



"இனிமே சொல்லுவ?"



"சத்தியமா சொல்லமாட்டேன் விடுடா தடியா..."



"அடிங்..ஒனக்கு என்ன பாத்தா தடியன் மாறி தெரியுதாடி?"



"ச்சே...ச்சே...இல்லங்க ஆரவ் சார்.. ஒங்களப்போய் அப்பிடி சொல்லுவாங்களா?"



"அடங்குறாளா பாரு..." என்றவன் தலையில் கொட்டி விட்டே விட்டான்.காதை தேய்த்து விட்டுக் கொண்டவள்



"ஆரு...நீ சொல்ற லாஜிக் படி பாத்தா நா மாமான்னு ரிஷிய கூப்புடறது அஷ்விக்கு புடிக்கல போலடா"



"அண்ணனயே பேரு சொல்லி கூப்புட்றியா?"



"அத விட்டுட்டு விஷயத்துக்கு வாடா"



"ஓகே ஓகே..கண்டினியூ பண்ணு"



"நா சொல்லி முடிச்சிட்டேன்டா எரும "



"கூல் செல்லம்....திரும்ப சொல்லு"



"முடியாது போடா"



"ப்ளீஸ்டி" என கெஞ்சவும் அன்று அனன்யா வீட்டுக்கு வந்த போது தான் கூப்பிடச் சென்று அவனை அப்படி அழைத்ததற்காய் முறைத்ததை சொன்னாள்.



"ஆக... அஷ்விக்கும் லவ் இருக்குங்குறியா?"



"ஆஃப் கோர்ஸ் ஆரு...."



"என்னடி பண்ணலாம்?"



"நீயே சொல்லு"



"மொதல்ல ரிஷிய வெளில கொண்டு வரலாம் அப்பறமா.. உன் அக்காக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம்"



"மாமாவ எப்பிடிடா?"



"அதான் அர்விந்த் இருக்கான்ல... பயபுள்ள லண்டன்லயிருந்து வந்து எங்க கிட்ட சிக்கியிருக்கான்"



"அடப்பாவிகளா... நடு ஹால்ல வெச்சி புருஷனும் பொண்டாட்டியும் எனக்கு அடி வாங்கி தர ஐடியா பண்றீங்களேடா... இது உங்களுக்கே நியாயமா இருக்காடா?" வராத கண்ணீரை துடைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் அர்விந்த்.



அவனை பார்த்து இருவரும் சமாளிப்பாய் சிரிக்க



"அந்த ஹேண்ஸம் கையால எனக்கு அடி கண்பார்ம்...அப்படித்தானே?"



"என்ன அர்வி நீ.... அஷ்விக்காக அடி கூட வாங்கிக்க மாட்டியா?" என பாவமாக கேட்ட கயலிடம்



"அவரு முறைச்ச முறைப்புக்கே உள்ளுக்குள இன்னும் உதறுது.... இதுல அடி வேறயா?"



"ப்ளீஸ் அர்விந்த்..." ஆரவ்வும் தன் பங்கிற்கு கெஞ்ச வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ள வேண்டியதாய் போயிற்று அவனுக்கு.....



***



தன்னை மெதுவாக பெட்டில் சாய்த்து படுக்கவைத்த தன்னவனையே இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அஷ்வினி.



அவள் பார்ப்பது தெரிந்தாலும் வேண்டுமென்றே வெளியேறப்போனவனின் கையை பிடித்தவள்



"தேவ்..." எனவும் அதற்கு பதிளலிக்காது அமைதியாகவே நின்றான்.



"தேவ்...." "...." "தே....வ்" "..."



"மிஸ்டர். ரிஷிகுமார் தேவமாருதன்" என்றவளை



'அப்போ இவளுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு...இருந்தும்...'என நினைத்தவன் சலேரென திரும்பிப் பார்க்க அதற்காகவே காத்திருந்தவள் போல்



"சாரி..." எனவும் அவனுக்கு சற்று முன் இருந்த மனநிலை மாறி அங்கே கோபம் குடியேற வெடுக்கென அவள் கையை தட்டி விடவும் அவளுக்கு முகம் சோர்ந்து போனது.

"தே...தேவ்....சாரி... தெரியாம பண்ணிட்டேன்.."

"நீ தெரியாம பண்ணியா?அவள நம்பாதன்னு அவ்வளவு சொல்லியும்... நீ என்ன மதிக்காம போனல்ல?"



"....."



"அது கூட விடு...என் கடந்த காலம் பத்தி தெரிஞ்சும் என்ன உதறிட்டு அவகிட்ட போயிருக்க?"



"இல்ல தேவ்....நா உங்கள உதறிட்டு போக நெனக்கல்ல....அவ உயிருக்கு....."



"நீ என்கிட்ட எதுவும் விளக்கம் தர தேவயில்ல.... உன் இஷ்டம் போலவே இருந்துக்க... நா எதுவும் சொல்ல போறதில்ல" என்றவனின் முன் வந்து நின்றவள்



"என் இஷ்டம் போல அப்போ நா செத்து போயிட்..." என சொல்லி முடிக்கவில்லை அடுத்த நிமிடம் அறைந்த அறைய கை ஓங்கியவன்



"என்னடி சொன்ன? இடியட்" திட்டிக் கொண்டே அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.



((அடித்த கை தான் அணைக்கும் போலும்!!!))



அவனது இறுகிய அணைப்பில் இருந்தவாறே அவள் கதற அவள் கண்ணீர் அவன் ஷர்ட்டையும் தாண்டி அவனது நெஞ்சை நனைக்க அவளை இன்னும் தன்னுள் ஆழமாய் புதைத்துக் கொண்டான்.



அந்த அணைப்பு அவளுக்கும் தேவயாகவே இருக்க விசும்பலினூடே



"நா பண்ணினது த.. தப்புதான்... அ.... அதுக்காக என்ன பாக்க கூட மாட்டேன்னா... எ...எனக்கு கஷ்டமா இருக்காதா? வருண் அண்ணா ஆரு எல்லாம் பேசாதப்போ மனசு கஷ்டமா இருக்கு தான்... பட்...நீங்க பேசாம இருக்குறப்போ செத்துடலாம் போல இருக்கு தே...தேவ்"



"ப்ச் மறுபடி மறுபடி எதுக்குடி சாவ பத்தி பேசிட்ருக்க?"



"இப்போ கூட கோவப்பட்றீங்க?"



"பின்ன நீ செஞ்சு வெச்ச வேலக்கு உன்ன கொஞ்சுவாங்க பாரு?"



"அதான் சாரி கேக்குறேன்ல?"



"சாரி கேட்டா ஆச்சா?"



"அப்போ என்னதான் பண்ணனும்?" அவன் அணைப்பிலிருந்து திமிறி விடுபட்டவள் அவனை பார்த்து கேட்க



"......"



"சொல்லுங்க தேவ்?"

அவளுக்கும் வேறு எப்படித்தான் கேட்பது என சத்தியமாய் புரியவே இல்லை...



"....."



"நா வேணும்னா தோப்புக்கரணம் போடட்டுமா?" என கேட்டவளை பார்த்து சிரிப்பு வந்தாலும் ஏதோ ஞாபகம் வந்தவனாய்



"அன்னக்கி எதுக்குடி அம்மா வீட்டுக்கு போகனும்ன?" என்றான் பிடிவாதக் குழந்தையாய்...



"அது...அது...அது எதுக்கிப்போ.... என்ன மன்னிப்பீங்களா மாட்டீங்களா?"



"முடியாது....நீ அத சொல்ற வர இப்பிடியே கெஞ்சிகிட்டு இரு...." என்றவன் விருட்டென்று வெளியேறிவிட அவள் ஓய்ந்து போய் அமர்ந்து விட்டாள்.



கட்டிலில் தொப்பென ஓய்ந்து போய் அமர்ந்தவளுக்கு வயிற்றில் சுளீரென வலியெடுக்கு "அம்மா.."என சுவாதீனமாய் முனக திரும்பவும் உள்ளே நுழைந்தவனின் லேஸர் கண்கள் அதை படம்பிடித்து அவளை கோபத்துடன் முறைத்தது.



அவனை கண்டவள் முகத்தை சாதாரணமாக மாற்ற அவளை பார்த்தவாறே அழுத்தமான காலடிகளுடன் அவன் முன்னே வர அவளோ பயத்தில் படக்கென எழுந்து நின்றுகொண்டாள்.



"வலிக்குதுல்ல....சொன்னா கேட்டுக்கனும்" என்றவனின் வார்த்தைகளில் அவளும் பொங்கி விட்டாள்



"சும்மா சும்மா அதையே சொல்லிட்டிருக்காதீங்க அதான் மன்னிப்பு கேக்குறேன்ல இருந்தும் இப்பிடியே நடந்துகிட்டா என்ன அர்த்தம்?"



"மன்னிக்கலன்னு அர்த்தம்"



"ப்ச்....ஏன் தேவ் இப்பிடி பண்றீங்க?"



"நீ இப்பிடி இருக்கும்போது நா அப்பிடி இருக்குறதுல என்ன தப்பு?"



"ஒரு தப்புமே இல்லங்க சார்..... எல்லா தப்புமே என்மேல தான் போதுமா?"



"நா ஒனக்கு சார் ஆ?"



"நீங்கதானே பேரு சொல்லி கூப்புட்ற வேல வெச்சுக்காதன்னு சொன்னீங்க?"



"ஆமா சொன்னேன் அதுக்கென்ன இப்போ?"



"அதனாலதான் சார்னு கூப்டேன்"



"அப்பிடி கூப்புடாத"



"நீங்க தானே சொன்னீங்க?"



"ஆமா... இத மட்டும் காதுல வாங்கிக்க ...நா சொன்னத செய்ய கூடாதுன்னு தான் நேர்த்தி கடன் வெச்சிருக்கியே" என்றவனின் குத்தல் பேச்சில் அவள் அமைதியாகிவிட



"ப்ச்..." என அவன் அலுத்துக் கொள்ளவும் விழியுயர்த்தி பார்த்தவள்



"சாரி தேவ்.. ஐ ஆம் ரியலி சாரி" என்றாள் இறைஞ்சும் குரலில்...

அதற்கெல்லாம் அசருபவனா அவன்?அவளை தீர்க்கமாக பார்த்தபடி



"நா வர்றேன்" என்று மட்டும் சொல்லிவிட்டு நகரப்போனவனின் தடுத்தது அவள் கேள்வி



"எங்க போறீங்க?"



"வீட்டுக்கு"



"இதுவும் வீடுதான்"



"நா இல்லன்னு சொல்லலியே?"



"அப்பறம் எதுக்கு போறீங்க?"



"ஏன் அதையும் உன் கிட்ட கேட்டுட்டு தான் செய்யனும்னு ஏதாவது சட்டம் இருக்கா?"



"நா அப்பிடி சொல்லல"



"பின்ன?"



"படுத்தாதீங்க தேவ்.."



"இப்போ மட்டும் பேரு வருது"



"அது அப்பிடித்தான்... அத விடுங்க... எதுக்கிப்போ கெளம்ப போறீங்க?"



"இதுக்கு நா ஏற்கனவே பதில் சொல்லிட்டதா ஞாபகம்"



"அப்போ நா கேக்க கூடாதுங்குறீங்களா?"



"அது உன் இஷ்டம்"



"முடிவா என்னதான் சொல்ல வர்றீங்க?"



"நா வருண பாக்கத்தான் வந்தேன்.... அவனில்லன்னா போகாம என்ன பன்றது?"



"அப்போ...ப்ரண்டு வீடுன்னு வந்திருக்கீங்க?"



"யெஸ்..."



"என்ன பாக்க தோனவே இல்ல?"



"....."



"ப்ரண்டுக்காக வந்தவரு எதுக்காக என்ன தூக்குனீங்க?"



"நா தூக்காம அந்த வீணாப்போனவனா தூக்குவான்?"



"அர்விய ஒழுங்கா கூப்புடுங்க"



"முடியாதுடி"



"ஏன் முடியாது? அவர் என் அத்தான்"



"அதுக்கு நா என்ன பன்றது?"



"பொண்டாட்டி சொந்தங்கள மதிக்க கத்துக்கோங்க"



"நா எதுக்கு மதிக்கனும்?"அவன் கேட்ட கேள்வி அவளை வாள் கொண்டு அறுத்தது.



'நா எதுக்கு மதிக்கனும்னா என்ன அர்த்தம்?என்ன நீங்க பொண்டாட்டியா நெனக்கலன்னுதானே அர்த்தம் தேவ்?' என நினைத்தவளுக்கு மனது ரணமாய் வலிக்க அமைதியாகி விட்டாள்.



அவள் அமைதிதான் அவனுக்கு பிடிக்காதே!!!ஏதோ ஒரு வேகத்தில் கேட்டுவிட்டான்தான்... ஆனால் அதற்கு அவள் எப்படி அர்த்தம் எடுத்து அமைதியாய் இருக்கிறாளென்பது அவனுக்கா தெரியாது...



"அஷு..."



"....."



"பேசமாட்டியா?"



"....."



"ஐ...ஐ...ஐ..ஐ அம் சாரிடி"



"....."



"நா கோபத்துலதான் சொன்னேன்டி"



"....."



"எனக்கு உன்கிட்ட கோபப்பட கூட உரிம இல்லயா?"



"என்ன உரிமைங்க?" என்றவளின் கேள்வியில் அதிர்ந்து அவளை பார்த்து



"சாரிடி"



"நீங்க ப்ரண்ட பாக்க வந்திருக்கீங்க... அவரோட தங்கச்சி எனக்கு உரிம இல்லதான்"



"ஏய்...நீ அவனோட தங்கச்சி இல்ல என்னோட பொண்டாட்டி அண்டர்ஸ்டான்ட்?"



"....."



"ப்ச்...அதான் சாரி கேக்குறேன்லடி?"



"நீங்க கேட்டா நா உடனே மன்னிக்கனுமா?"



"......"



"நா கேட்டா நீங்க மன்னிக்காம நீ என் பொண்டாட்டியே இல்லங்குற மாறி பேசுவீங்க.... ஆனா நீங்க கேட்டா நா உடனே மன்னிச்சிடனும் அப்படித்தானே?"



"எதுக்கும் எதுக்கும் முடிச்சு போட்ற?"



"ஏன் கேட்டதுல என்ன தப்பு?"



"தப்புதான்... நீ பண்ணது வெற நா பண்ணது வேற?"



"ஆமாமா.... வேறதான்.."



"ப்ச்..."



"...."



"மன்னிக்க முடியுமா முடியாதா?"



"....."



"பேசுடி" என்றவனை ஏறிட்டுப் பார்த்தவளின் கண்கள் கலங்கியிருந்ததை கண்டவன் உள்ளுக்குள் துடித்துப் போனான்.



அவள் கண்ணீரை துடைத்து ஆறுதலாய் நெஞ்சில் சாய்க்க பரபரத்த கைகளை வெகு சிரமப்பட்டு அடக்கியவன் இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொள்ள அவளோ அவனை திரும்பியும் பாராது குளியலறைக்குள் புகுந்து கொள்ள தோளை குலுக்கி விட்டு தானும் கீழிறங்கி சென்றான்.



***



சாப்பாட்டு மேசையில் அனைவரும் அமர்ந்திருக்க விஜயலக்ஷ்மி அவர்களை எப்படி அழைப்பதென்று தெரியாமல் கைகளை பிசைந்துகொண்டு நின்றிருக்க அவரை சங்கடப்படுத்தாமல் கீழிறங்கி வந்த ரிஷியை கண்டதும் தான் அவருக்கு ஆசுவாசப் பெருமூச்சே வந்தது.



படிகளில் வேகமாக இறங்கிக் கொண்டிருந்தவனை "தம்பி..." என அழைக்க அதற்குள் அவரை நெருங்கியிருந்தவன்



"என்ன அத்தை?"என்றான் பணிவாய்



"வந்து சாப்புடுங்க"



"இல்ல அத்தை... எனக்கு ஆபீஸ்ல இருந்து அர்ஜன்ட்டா வர சொல்லி கால் வந்திருக்கு....இன்னொரு நாள் கண்டிப்பா சாப்புட்றேன்"

என்றவன் அவன் பதிலுக்கு கூட காத்திராமல் சென்றுவிட இவரும் ஒரு பெருமூச்சுடன் வந்து பரிமாரத் துவங்கினார்.



இது எதையுமே கவனிக்காமல் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தஆரவ்வின் கால்களை கயல் ஓங்கி மிதிக்க "ஆ...அம்மா..." என கத்தவும் அனைவரும் அவனை விசித்திரமாக பார்க்க அவர்களிடம்

"ஹி...ஹி... ஒன்னுமில்ல சும்மா..." என சமாளித்தவன் கயலை கடுப்புடன் முறைத்து விட்டு அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்



"என்னடி?"பல்லை கடித்தான்.



"மாமா சாப்புடாம பொய்ட்டாங்க...நீ என்னடான்னா இந்த காட்டு காட்டிட்ருக்க?"



"என்னது...அண்ணா பொய்ட்டாங்களா?எதுக்குடி என்கிட்ட முன்னாடியே சொல்லல?" என்றவனை முறைக்க



"சரி சரி கொவப்படாத செல்லம்... கோவமா போனாங்களா என்ன?"



"தெரியலடா....அஷ்வியும் இன்னும் கீழ வர்ல"



"மறுபடியும் போர் கொடி தூக்கிரிச்சுங்களோ?"



"இருக்கலாம் ஆரு... இப்போ என்ன பண்றது?"



"இரு அம்மு அஷ்வி வரட்டும்.... என்னன்னு பாத்துடுவோம்" என கூறிக் கொண்டிருக்கும் போதே அவள் கீழிறங்கி வரும் அரவம் கேட்க பின்னால் திரும்பிப் பார்த்தான் ஆரவ்.



சிவந்திருந்த விழிகள் அவள் அழுதிருப்பதை பறைசாற்ற அவளை ஊன்றிப் பார்த்தான்.



இன்னும் கண்கள் கலங்கியே இருக்க பெயருக்காய் உதடுகளில் புன்னகையை தவழவிட்டிருப்பது தெரிந்தது.



அங்கிருந்த அனைவரும் அவளை பார்க்க அவளோ அவனை கண்களால் துலாவினாள்.



ஊஹூம்....எங்குமே இல்லை...

போய்விட்டானா?திரும்பவும் கண்ணத்தை தொட இருந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு



"மா...அவரு எங்க?"எனவும் அவளை ஆராய்ச்சியாய் பார்த்தவர்



"தம்பி கெளம்பி பொய்ட்டாருடா...நீ வந்து சாப்புடு"



"எனக்கு பசியில்லமா..." என திரும்ப...ஈஷ்வரி



"காலைலயிருந்து நீ எதுவுமே சாப்பிடலயே அஷ்வி...அது எப்படி பசிக்காம போகும்?"



"....."



"வா வந்து சாப்பிடு"



"எனக்கு வேண்டாம் அண்ணி" அவள் போய்விட தாய் மனது மகளின் வாழ்க்கையை நினைத்து பரிதவித்து.



***



காண்ப்ரன்ஸ் ஹாலில் ப்ராஜக்டர் முன் தன் இருக்கையில் அமர்ந்து தன்முன் விளக்கிக் கொண்டிருப்பவனில் கண்கள் இருந்தாலும் மனம் என்னவோ தன் மனையாளிலேயே உழன்று கொண்டிருந்தது.



கை தட்டும் சத்தத்தில் தன் சிந்தை கலைந்தவன் தானும் சேர்ந்துகொண்டு கை தட்டிவிட்டு டீலிங் பேசி முடித்துவிட்டு கைச்சாத்திட்டுவிட்டு நிமிர அங்கே கதவை திறந்து கொண்டு ரவிச்சந்திரன் உள்ளே நுழையவும் அவசரமாக எழுந்தவன் அவருடன் கை குழுக்கிவிட்டு ஸ்னேகமாக புன்னகைத்தான்.



அவர் ரகுநாத்தின் நண்பர் மற்றும் உறவினர். அவனுடைய பிஸ்னஸ் வேல்டில் எல்லோருமே ரகுநாத்திற்கு தெரிந்தவர்கள் தான்... பலர் நட்பு பாராட்டினாலும் அவருக்கு விரோதியாய் செயற்பட்டவர்கள் இவனுக்கும் விரோதியாய்த்தான் இருந்தனர்.



அதை எப்போதுமே அவன் பொருட்படுத்தியதே இல்லை... எப்போதுமே இறுக்கத்துடன் இருப்பவனிடம் அவர்களும் அதிகமாய் பேச மாட்டார்கள்.



"வாங்க அங்கிள்...உங்காருங்க" அவருக்கு இருக்கையை காட்டிவிட்டு தானும் அமர்ந்தான்‌.



"நல்லா இருக்கியா தேவா?"



"இருக்குறேன் அங்கிள்...நீங்க?வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா?"



"இருக்காங்க தேவா...வர்ற புதன்கிழமை என் பொண்ணுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணியிருக்கேன்... அவஷியம் ஆரவ் கூட வந்துருப்பா"



"ஓஹ் கங்க்ராட்ஸ் அங்கிள்"



"அப்பறம்... நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கிறதா இருக்க?" எனும் கேள்வியில் அதிர்ந்து போனவனுக்கு அப்போதுதான் அது மண்டையில் உறைத்தது.



திருமணம் இராமநாதபுரத்தில் நடந்ததால் யாருக்கும் அவன் திருமணமும் ஆரவ்வின் திருமணமும் அறிவிக்கப்படவில்லை..



திருமணம் முடிந்து ரிசப்ஷன் இங்கே வைத்துக் கொள்ளலாமென கடமைக்காக வாக்களித்தவனுக்கு நடந்த களேபரத்தில் அது மறந்தே போய்விட்டது.



அதுவும் அன்று இருந்த மனநிலையில் அதை சொல்லி தப்பித்து விட்டான்....ஆனால் இன்று???



சட்டென தன்னை சுதாரித்து



"எனக்கு திருமணமாகிடிச்சு அங்கிள்"



"வாட்?"



"ஆமா அங்கிள்...ஆருவுக்கும் தான்"



"என்னப்பா சொல்ற?"



"இராமநாதபுரத்துல நடந்ததால யாருக்கும் தெரியல"



"பட்..."



"ஐ நோ அங்கிள்..... ரிசப்ஷனுக்கு ஏற்பாடு பண்ணனும்"



"சரி தேவா...அப்போ உன் பொண்டாட்டியயும் கூட்டிட்டு வந்துடு" என்றவர் விடை பெற்றுச் சென்றுவிட சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தவன் கோர்ட்டை கையில் எடுத்துக் கொண்டு மீண்டும் தன் காரை இராமநாதபுரத்துக்கே செலுத்தினான்.



தொடரும்.......



30-04-2021.
 

Rishi 24

Member
Vannangal Writer
Team
Messages
54
Reaction score
33
Points
18
அத்தியாயம் 18 ❤️

இடையில் ரிசப்ஷனுக்கு தேவையான வேலைகளை பார்த்து முடித்துவிட்டு வர தாமதாகி இருந்தது காளைக்கு...

கலைந்த முடியுடன் ஷர்ட் கை முழங்கை வரை ஏறியிருக்க கோர்ட்டை முதுகுக்கு பின்னால் வைத்து இடது ஆள்காட்டி விரலால் பிடித்தபடி டயர்டாக நுழைந்தவனை கண்ட விஜயலக்ஷ்மிக்கு அவன் மேல் கனிவு பிறக்க அவசரமாக வாசலுக்கு வந்தவர்

"வாங்க தம்பி.."எனவும் தான் ஹாலில் பேசிக் கொண்டிருந்த ஆரவ் , அஜய் , இராமநாதன் மற்றும் வருண் என அனைவருமே திரும்பிப் பார்த்தனர்.

வருணும் எழுந்து அவனருகில் வந்து

"வா மச்சி...ரொம்ப டயர்டா தெரியுறயேடா?" என விசாரிக்கவும்

"அதெல்லாம் ஒன்னுமில்லடா... கொஞ்சம் வொர்க் இருந்தது அதான்..." என்றவனிடம் விஜயலக்ஷ்மி

"சரிப்பா வந்து சாப்பிடு..." எனவும்

"நா ப்ரெஷ்ஷாகிட்டு வந்துட்றேன் அத்த..." என்றவன் படியில் கால் வைத்துவிட்டு பின்பு ஞாபகம் வந்தவனாய்

"அஷு சாப்புட்டாளா அத்த?" எனவும் சாப்பாட்டு தட்டுடன் கீழிறங்கி வந்து கொண்டிருந்த கயல்விழி

"இல்ல மாமா... அஷ்வி நீங்க போனதுலயிருந்து சாப்புடாம பிடிவாதம் பிடிச்சிட்டுருக்கா... இப்போ கூட பாருங்க வேணாம்னு என்ன அனுப்பிட்டா" என்று தட்டை காட்ட வலக்கை நடுவிரலால் தன் புருவத்தை நீவியவன் விஜியிடம்

"நீங்க ரெண்டு பேருக்கும் எடுத்து வைங்க அத்தை...நா அவக்கூட வர்றேன்..." என்றவன் வருணிடம் தலையசைத்து விட்டு மேலேறிச் செல்ல ஆரவ்வை பார்த்து கண்ணை சிமிட்டிய கயல் கட்டை விரலை உயர்த்திக் காட்டிவிட்டு சமையலறைக்குள் சென்று மறைந்தாள்.

***

கால்கள் இரண்டையும் கட்டிக் கொண்டு முழங்காலில் முகம் புதைத்து அமர்ந்திருந்தவளின் தோற்றம் மனதை அசைக்க எதுவும் பேசாமல் சென்று ப்ரஷப் ஆகிவிட்டு வந்தவன் அவள் தோல் தொட அம்மா என நினைத்து

"நான்தான் எனக்கு பசிக்கலன்னு சொல்றேனில்ல விஜி.... வேணாம்னா விடேன்" என எரிச்சலாக கூற

"அஷு..." எனவும் விலுக்கென தலையுயர்த்தி பார்த்தவளின் கண்கள் அவனைக் கண்டு ஆச்சரியத்தில் விரிந்து பின் வெடுக்கென அவன் கையை தட்டிவிட்டு எழுந்து வெளியேறப்போக அவள் கையை எட்டிப் பிடித்து நிறுத்தினான் கணவன்.

"எதுக்கு சாப்பிடல அஷு?"

"....."

"என்மேல இருக்குற கோபத்த எதுக்கு சாப்பாட்டுல காட்டிக்கிட்டு இருக்க?" என்றவளுக்கு அன்றைய நாள் ஞாபகம் வர அவனை திரும்பி பார்த்தாள்.

அவனுக்கும் அதுதான் ஞாபகம் வந்தது போலும்!!! இளம் முறுவலொன்றை உதிர்த்தவன் அவளை தன் பக்கம் இழுக்க அவன் மேல் வந்து மோதியவளை வளைத்து

"இப்போ நீயா வரியா?இல்ல...நானா தூக்கிட்டு போகட்டுமா?" எனவும் அதற்கு பதிலளிக்காமல்

"எனக்கு பசிக்கல...நீங்க போய் சாப்பிடுங்க" என்றவள் அவன் நெஞ்சில் கைவைத்து தள்ள ஏற்கனவே டயர்டாக இருந்தவனுக்கு அது எரிச்சல் மூட்ட

"இப்போ எதுக்கு சும்மா ஸீன் க்ரியேட் பண்ணிட்டிருக்க?" என்றான் வெடுக்கென...அதில் விடுபட போராடிக் கொண்டிருந்தவள் ஸ்தம்பித்து அவனை பார்க்க அவளை விட்டவன்

"வா வந்து சாப்புடு..."என்றவாறே முன்னே நடக்கவும் அவள் அசையாது அங்கேயே நின்றாள்.

அவளை திரும்பிப் பார்த்தவன்

"இப்போ நீ சாப்புடலன்னா நா மறுபடி வீட்டுக்கு போய்டுவேன்" எனவும் ரோஷமாய் அவனை இடித்துக் கொண்டே முன்னே நடக்க சிரித்துக் கொண்டே அவளை பின் தொடர்ந்தான் ரிஷி.

அஷ்வினிக்கு கோபத்தை நீண்ட நேரம் இழுத்துப் பிடிக்க தெரியாது.

இவளின் அக்குணம்தான் அவனுக்கு சாதகமாய் அமைந்ததுவோ!!!

அவன் வந்து சேரும் முன்னரே அவள் வந்து அமர கயல் மனத்திற்குள் "பார்டா... நாங்க கூப்டா பசியில்ல...புருஷன் கூப்டா மட்டும் வந்துருமோ?" என மானசீகமாய் சிரித்துக்கொண்டாள்.

ரிஷியும் வந்தமர இருவருக்கும் சாப்பாடு பரிமாறிய விஜயலக்ஷ்மி அவர்களுக்கு தனிமை குடுத்து ஒதுங்கிக் கொண்டார்.

அஷ்வினி சாப்பாட்டை கைகளால் அளந்து கொண்டிருக்க

"நா ஊட்டணும்னு எதிர்பார்த்துதான் சாப்பிடாம இருக்கியா?" என சீண்டவும் அவனை முறைத்தவள்

"உங்களுக்காக இங்க யாரும் ஏங்கிட்டு கெடக்கல" எனவும்

"ஈஸ்ஸிட்?" என போலியாய் ஆச்சரியப்பட்டவனை பார்த்து தலையை குனிந்து கொள்ள

"எனக்காக அப்போ நீ ஏங்கல?"

"இல்ல..மிஸ்டர். ரிஷிகுமார் தேவமாருதன்"

"ப்ருவ் பண்ணு"

"வாட்?"

"அதான் எனக்காக ஏங்கலன்னியே அத ப்ரூவ் பண்ணு"

"நா எதுக்கு ப்ரூவ் பண்ணனும்?"

"அப்போ எனக்காக ஏங்கியிருக்கேன்னு நா எடுத்துக்குவேன்"

"நோ...இல்ல...உங்களுக்காக நா ஏங்கவே இல்ல"

"இல்ல நீ ஏங்கியிருக்க"

"இல்ல"

"ஆமா"

"இல்ல"

"ஆமா"

"ப்ச்...இல்ல"

"ஓகே..இல்ல"

"ஆமா" என்றவளுக்கு அவன் சிரிப்பு சத்தத்தில் தான் சொன்னது நினைவு வர

"இல்....ல நீங்க சீட் பண்றீங்க" என சினுங்கவும் அதை ரசித்தவன்

"நீயா தான் ஆமான்ன....இப்போ என் மேல பழி போடாத"

"முடியாது முடியாது" என அவள் தலையாட்ட அவள் ஆட்டலுக்கு இசைந்தவாறு அவள் கூந்தலும் நர்த்தனமாட கட் முடி முன்னால் வந்து விழவும் அதை ஒதுக்கியவாறே அவனை பார்க்க அவனும் இவளையேதான் பார்த்துக் கொண்டிருக்கவும் கண்ணங்கள் வெட்கத்தில் நாணத்தை பூசிக் கொள்ள தலை குனிந்து விட்டாள்.

"க்கும்....நாங்க பார்க்கலப்பா..." எனும் கயலின் குரலில் தன்னுணர்வடைந்தவன் தலையை உலுக்கி தன்னை சமன் செய்து கொண்டு அவசரமாக சாப்பிட்டு எழுந்து விட்டான்.
அவனுடனேயே அவளும் எழுந்து கொள்ள கைகழுவி விட்டு திரும்பியவனிடம் அவள் துடைக்க துண்டை நீட்ட அவளை தவிர்த்தவன் வேறு எங்கோ பார்த்தபடி துடைத்துவிட்டு அவளிடம் நீட்டியவன் மாடியேறப்போக அவனை தடுத்தார் இராமநாதன்.

"மாப்பிள்ள உங்க கூட கொஞ்சம் பேசணும்" எனவும் சரி என்றவாறு தலையசைத்து விட்டு ஹாலுக்கு வர இராமநாதன்

"விஜயா......எல்லோரையும் கூப்புடு" என்றவரின் கட்டளைக்கு இணங்க அனைவரும் வந்து சேர

"உக்காருங்க மாப்பிள்ள..."என்றவர் அவன் அமர்ந்ததும் நேராக விடயத்திற்கு வந்தார்.

"கல்லாயணமாகி மறுவீட்டுக்கு கூப்டும் ஏதோ வேலைன்னு வரமுடியாதுன்னு சொல்லிட்டீங்க... ஆனா... குடும்பத்துல என்னென்னமோ நடந்துட்டு இருக்கு... குல தெய்வ கோயிலுக்கு போயிட்டு வந்தோம்னா மனசு சஞ்சலம் நீங்கும்னு நெனக்கிறோம்... நீங்க என்ன சொல்றீங்க மாப்பிள்ளை?

"அது...நா வர்.."என ஏதோ சொல்ல வாயெடுக்க தலைகுனிந்திருந்த அஷ்வினி விலுக்கென நிமிர்ந்து பார்க்க அவளை கண்டுகொண்டவன்

"ஐ...மீன் நா வர்றேன் மிஸ்டர்.இராமன்" என்றவனின் பதிலில் பார்த்தாளே ஒரு பார்வை.... அது எதற்கென்று புரிந்து கொண்டவன்

"அ..அது.. மா..மாமா.. எ....எப்போ போறதா முடிவு பண்ணியிருக்கீங்க?" எனவும் இவ்வளவு நேரம் இருவரையுமே பார்த்துக் கொண்டிருந்த கயலுக்கு "அட...மாமா.......மொத்தமாவே விழுந்துட்டாறா?கண்ணாலேயே கண்ட்ரோல் பண்றா..." என நினைக்காமல் இருக்க முடியவில்லை...

வருணுக்கும் ஆரவ்விற்கும் அதை விட ஆச்சரியம்....
"ஆர்.கேக்கு வார்த்தை தந்தியடிக்குதா?" என நெஞ்சில் கைவைக்காத குறையாய் ஒருவர் முகத்தை ஒருவர் ஒரு சேர திரும்பிப் பார்த்துக் கொள்ள இதை யாவையுமே மனது உணர்ந்தாலும் அமைதியாகவே இருந்தான்.

பின்னே அவனே பாடுபட்டு அவளை வழிக்கு கொண்டு வந்திருக்கிறான்.
எதிர்த்து சண்டை போட்டாலாவது பரவாயில்லை...
பொசுக்கென்று கண்ணீர் விடுபவளை வைத்து கொண்டு அவனும் எவ்வளவு தான் கோபத்தை இழுத்துப் பிடிப்பது...

"நாளைக்கு காலைல போறதா ஏற்பாடு மாப்பிள்ள....." இராமநாதன் பதிலளிக்க குனிந்து வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியவன் பின் நிமிர்ந்து

"சாயந்தரம் வந்துடுவோம்ல?"

"இல்ல மாப்பிள்ள...ரெண்டு நாள் தங்கிட்டுத்தான் வர்றதா முடிவு.... வேலயிருந்தா நீங்க..." என்றவரை இடைமறித்து

"இல்ல...இல்ல..இட்ஸ்..இட்ஸ் ஓகே...மிஸ்ட்... ஐ மீன் மாமா"

"சரி மாப்பிள்ள" என எழப்போக

"மாமா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றதும் கேள்வியாய் அமர

"அது.... ரிசப்ஷன் வெக்கலாம்னு சொன்னது.... இடையில ஏதேதோ வேலைல முடியாம போச்சு... நீங்களும் இத பத்தி பேசாததுனால எனக்கும் மறந்துடிச்சி... அதுமட்டுமில்லாம இங்க கல்யாணம் நடந்ததுனால மதுரைல யாருக்கும் இது பத்தி அறிவிக்கல்ல... அதான் ரெண்டு பேருக்கும் சேத்தே ரிசப்ஷன் வெக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்" அவன் சொல்லி முடிக்க அங்கே பலத்த மௌனம் நிலவியது.

கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தவர்
"சரி மாப்பிள்ள.... வெச்சிடலாம்.... ஆனா எப்போ?"

"அடுத்த வீக்ல வெக்கலாம்" என்றான் எல்லாவற்றையும் தீர்மானித்து விட்டவனாய்....
அவர் மீண்டும் யோசனையில் ஆழ

"செலவு நா பாத்துக்குறேன் மிஸ்ட்.... ஐ மீன் மாமா... நீங்க மத்த ஏற்பாட்ட பாருங்க" எவ்வளவு முயன்றும் அந்த அழைப்பு மட்டும் அவனுக்கு இயல்பாய் வந்து தொலைக்கவே இல்லை...

அனைவரும் கலைந்து செல்ல தானும் எழுந்தவன் அப்போதுதான் அங்கே ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த தன் மனையாளை கண்டவன் அவளிடம் சென்று

"அஷு..." எனவும் அவளிடம் பதிலற்றுப்போக மீண்டும்

"அஷு...." என்றான்... ஊஹூம்....அவள் அங்கேயே இல்லை...அவள் தோலை பிடித்து உலுக்கி

"அஷ்வினி...." எனவும் திடுக்கிட்டு திரும்பியவள்

"என்ன தேவ்?"

"ம்..நொன்ன தேவ்...நான் கூப்டுடே இருக்கேன்...என்னன்னு கூட கேக்காம அப்பிடி என்ன யோசன உனக்கு?"
"அதுவா...என் ப்ரண்ட்ஸ் உங்கள பாக்கனும்னு சொன்னாங்க... அதான் எப்பிடி கூப்புட்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்..." எனவும் அவளை புருவம் சுருக்கி பார்த்தவன் பின் தோலை குழுக்கிவிட்டு சென்றுவிட்டான்.

காலை......

இராமநாதன் , விஜயலக்ஷ்மி , வருண் ஒரு காரிலும்.... அஜய் மற்றும் ஈஷ்வரி அஜய்யின் பைக்கிலும் கயலும் ஆரவ்வும் தங்கள் காரிலும் ரிஷி மற்றும் அஷ்வினி அவர்கள் காரிலும் அர்விந்த் அவனுடைய பைக்கிலும் போவதாய் முடிவெடுத்திருக்க அஷ்வினி பண்ணிக் கொண்டிருந்த ரகளையில் விஜயலக்ஷ்மி கையை பிசைந்து கொண்டிருக்க ரிஷி அவளை கண்களாலேயே எரித்து விடுபவன் போல் நின்றிருந்தான்.

"விஜி....ப்ளீஸ்..... என்னால அவ்வளவு தூரம் கார்ல ட்ராவல் பண்ண ஒத்துக்காதுன்னுதான் உனக்கே தெரியுமே? இவ்வளவு நாள் அர்வி அத்தான் கூடத்தான் பைக்ல போவேன்... இன்னக்கி மட்டும் என்ன வந்தது?ப்ளீஸ் விஜி..." என மறுபடி கெஞ்ச அர்விந்த் மனதிற்குள்

"ஆஹா நம்மல அடி வாங்க வெக்காம ஓய மாட்டா போலயே" என நினைக்க விஜயலக்ஷ்மி

"அஷ்வா....அது கல்யாணத்துக்கு முன்னாடி..." என்றுவிட்டு பாவமாய் ரிஷியை பார்க்க அவனோ இவள் இதற்கு என்ன சொல்லப் போகிறாள் என்பது போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"விஜி ப்ளீஸ்...என்னால முடியாது அப்பறம் வாந்தி வரும்... உனக்கே தெரியும்ல?நா பைக்ல தான் வருவேன்" என்றாள் பிடிவாதமாய்....

தடார் என்ற சத்தத்தில் மூவரும் திரும்பிப் பார்க்க ரிஷி கோபமாக காரை உறும விட்டுக் கொண்டிருந்தான்.
கோபமாக திரும்பிய விஜயலக்ஷ்மி

"அஷ்வினி....இப்போ தம்பி கூட கார்ல போகல்ல....அப்பறம் நா மனுஷியாவே இருக்க மாட்டேன்" எனவும் இதுவரை கண்டிராத தாயின் கோப முகத்தில் பயந்து காரிலேயே ஏறிக் கொண்டாள் பெண்.

"அம்மு"

"ம்.."

"அம்மு..."

"என்ன ஆரு...?"

"சும்மாதான்டி... கூப்டனும்னு தோனிச்சி கூப்டேன்"

"மாமா பாவம்லடா?"

"ஏன்?"

"அவரு கடந்த காலத்தை நீ சொன்னதுலயிருந்து எனக்கு அவர பாக்கும் போது பாவமா இருக்கும்டா"

"அவரப் பாத்து பரிதாபப்படுறது அவருக்கு புடிக்காது அம்மு.."

"ஓஹ்..."

"அது இருக்கட்டும்.... நீ வருண் அண்ணா கூட பேசி நா பார்த்ததே இல்லயே... கோவமா இருக்கியா என்ன?"

"அதெல்லாம் ஒன்னில்லடா.... அஷ்வியோட டென்ஷன்ல அவரோட பேசல..... அப்பறம் அவரு வேலைக்கு பொய்ட்டாரு...நா காலேஜ்.... அதுவுமில்லாம அவரு நா பொறந்தப்போ இல்லேல்ல...அதான் இயல்பா பேச வர மாட்டேங்குதுடா..."

"நீ சொல்றதும் சரிதான்...அப்பறம்?"

"அப்பறம்னா?"

"நம்மல பத்தி பேசலாமேடி.....இப்பிடி மனசு விட்டுப் பேசி எவ்வளவு நாளாச்சு தெரியுமா?"

"ஆமா...ஆரு.....உண்மதான்...." என்றவள் ஏதேதோ பேச அவர்கள் தங்கள் உலகுக்குள் முழ்கிப் போனார்கள்.

***

ரிஷியின் முகம் பாறை போல் இறுகி இருக்க அவனிடம் பேசவே பயந்தவள் அவனை அடிக்கடி திரும்பிப் பார்த்து கொண்டே வர அவனோ கருமமே கண்ணாக காற்றை கிழித்துக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தான்.

கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தவளுக்கு அதற்கு மேல் முடியாமல்

"கொஞ்சம் மெதுவா போங்க தேவ்...ப்ளீஸ்" என்றவளின் பேச்சில் கார் இருந்ததை விட இன்னும் வேகமெடுக்க அவன் தோலை இறுக்கப் பற்றிக்கொண்டு கண்களை மூடிக் கொள்ளவும் தான் திரும்பி அவளை பார்த்து விட்டு வேகத்தை குறைத்தான்.

பிடித்த கை பிடித்தபடியே இருக்க மெதுவாக கண்களை திறந்தவள்

"எனக்கு வாந்தி வருது.." எனவும் திடீரென ப்ரேக் போட்டு நிறுத்திய அடுத்த நிமிடம் கதவை திறந்து கொண்டு வெளியேறியவள் குடல் வெளியே வந்து விடுமளவு எல்லாவற்றையும் கொட்ட அவசரமாக காரை ஓட்டிய தன் மடத்தனத்தை எண்ணி தலையிலடித்துக் கொண்டவன் வாட்டர் பாட்டிலோடு அவளருகில் போய் நின்றான்.

ஆசுவாசமாய் நிமிர்ந்தவள் அவன் நீட்டிய தண்ணீரை வாங்க குடித்துவிட்டு மறுபடியும் அவனிடமே நீட்ட அதை கையிலெடுத்தவன் அவளுக்காக கார் கதவை திறந்து விட அவனை ஒரு நிமிடம் நின்று பார்த்தவள் எதுவும் பேசாமல் ஏறிக் கொள்ள கதவை மூடிவிட்டு தானும் ஏறி ஸ்டார்ட் செய்தான்.
சீட்டில் கண் மூடி சாய்ந்திருந்தவள் கண்களை திறவாமலே

"தேவ் எனக்கு ட்ரஸ் சேஞ்ச் பண்ணனும்" எனவும் அவளை திரும்பிப் பார்த்தவன்

"ட்ரஸ் கொண்டு வந்திருக்கியா இல்லண்ணா கடைலதான் வாங்கனுமா?" என்க

"விஜி கிட்ட தான் என் ட்ரஸ் எல்லாம்"

"சரி...நா பாக்குறேன்" என்றவன் கொஞ்ச தூரம் சென்று ஒரு பெரிய துணிக்கடை முன் நிறுத்திவிட்டு அவளை பார்க்க அவளோ அசதியில் உறங்கியிருந்தாள்.

அவள் தலையை தடவி
"என்னடா பண்ணுது...ரொம்ப கஷ்டமா இருக்கா?" என கனிவாக கேட்கவும்

"இல்ல தேவ்... ஆமா எதுக்கு நின்னிருக்கோம்...அதுக்குள்ளாகவா வந்து சேந்துட்டோம்?"

"இல்ல அஷு ட்ரஸ் வாங்கனும்னு சொன்னியே... அதான்"

"ஓஹ்..."என்றுவிட்டு அமைதியாகி விட

"என்னாச்சு வேற கடை பாக்கலாமா?"

"...."

"அஷு.... என்னாச்சு?"

"அ..அது..நீங்களே போய் வாங்கிட்டு வர்றீங்களா?" என தயங்க

"இதுக்கு ஏன் இவ்வளோ தயங்கற?"

"இல்ல... வந்து.."

"இரு நானே வாங்கிட்டு வர்றேன்..." என்றவாறே காரை ஓரமாக பார்க் பண்ணிவிட்டு இறங்கியவன் வேளியாலேயே லாக் பண்ணியவாறு கடைக்குள் நுழைவதை இரு ஜோடி கண்கள் வன்மத்துடன் படம் பிடித்துக் கொண்டன.

சில மணி நேரங்களில் திரும்பி வந்தவன் தன் மனையாளிடம் அவன் கொண்டு வந்த ட்ரஸ்ஸை நீட்டி

"இங்க உள்ள போய் மாத்திக்கிறியா... இல்லைன்னா வேற இடம் பாக்கலாமா அஷு?" எனவும்

"இ..இல்ல தேவ் நா இங்கேயே மாத்திட்டு வந்துட்றேன்"என்றவள் அவனிடமிருந்து அதை எடுத்துக் கொண்டு மீண்டும் உள்ளே சென்றாள்.

இதையும் அந்த கேமிரா அழகாக உள்வாங்கிக் கொண்டது.

அஷ்வினி தன் வேலையை முடித்துக்கொண்டு வந்து ஏறிக்கொள்ளவும் மீண்டும் கார் பயணப்பட துவங்கியது.

கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவள்

"சாரி...."எனவும் யோசனையாய் அவளைப் பார்த்து

"எதுக்கு?"என்க

"உங்களுக்கு என்னால எவ்வளவு சிரமம்"

"ஆமாமா..."என்றான் அடக்கப்பட்ட கோபத்தில்... அவன் குரல் மாற்றத்தை உணர்ந்து பட்டென கண்களை திறந்து அவனை திரும்பிப் பார்க்க அவனோ அவளை தவிர்த்து சாலையில் கண்களை பதித்திருந்தான்.

"இல்ல...வந்து..நா.."

"ஷட் அப் அஷ்வினி" என அவன் உறும அவன் அழைப்பிலேயே அவன் கோபத்தை புரிந்து கொண்டவள் கண்கள் கலங்க அமைதியாய் இன்னும் தள்ளி அமர்ந்தாள்.

தன்னை கஷ்டப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தவன் அப்போதுதான் அவள் மாற்றத்தை கவனித்தான்.

திறந்தாள் விழுந்துவிடுபவள் போல் கதவை ஒட்டி அம்ரந்திருப்பதை...

"ஷிட்..."என தலை முடியை கோதிக்கொண்டவன் காரை ஓரமாக நிறுத்துவிட்டு அவள் புறம் திரும்பி

"அஷ்வினி...." என்றவாறே அவள் தோல் தொட அவன் கையை வேகமாக தட்டிவிட்டாள்.

அவள் கோபத்தில் சிரித்தவன் அவள் இரு பக்கமும் பிடித்து தன் பக்கமாக திருப்பி

"அஷ்வினி..." என்க

"...."

"என்னப் பாரு"

"...."

"நீயா கற்பன பண்ணி எனக்கு சிரமம்னு சொன்னா எனக்கு கோபம் வராதா?"

"அ... அதுக்காக?" என விசும்பவும் அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன்

"ஓகே ஓகே...நா இனிமே கோபப்பட மாட்டேன்"

((அடப்போடா.....உன்ன நாங்க நம்புறதா இல்ல...என்ன நண்பா நா சொல்றது?))

அவனிடமிருந்து விடுபட திமிரி
"ஒன்னும் வேணாம் போடா" என்றவள் அவனை தள்ளிவிட்டு தள்ளி அமரவும் சிரித்துக் கொண்டே காரை எடுத்தான்.
 

Rishi 24

Member
Vannangal Writer
Team
Messages
54
Reaction score
33
Points
18
"ஆரு....டேய்....
பசிக்குதுடா..."

"கொஞ்சம் இரு அம்மு....நல்லா ஹோட்டலா பாக்கலாம்"

"இப்போ நிறுத்தினியே ஹோட்டல்.... அதுக்கு என்ன குறைன்னு வண்டிய எடுத்த?"

"ஹொட்டலா அது.... இடம் சுத்தமா இல்ல அம்மு..அதனால் தான் வேணாம்னு நெனச்சேன்"

"நமக்கு சாப்பாடு தான்டா முக்கியம்"

"அம்மு...அடம் பிடிக்காதமா... எனக்கென்ன உன்ன பட்டினி போடனும்னு வேண்டுதலா?"

"ப்ச்....சரி"

"அத கொஞ்சம் சிரிச்சுட்டு சொன்னாதான் என்னவாம்?"

"ஈ...ஈ..ஈ.....போதுமா?"

"போதாதுன்னா மறுபடி சிரிப்பியா?"

"கடுப்ப கெளப்பாத"

"கோபப்படாம இறங்கு செல்லம்...." எனவும் தான் சுற்றி முற்றி பார்த்தவள் அவனை முறைத்து விட்டு இறக்கவும் தானும் இறங்கி உள்ளே சென்றான்.

அங்கே ஏற்கனவே அனைவரும் வந்திருக்க அவளுக்கும் குஷியாகிப் போனது.ஆரவ்வை தொட்டு

"ஆரு...அங்க பாரு எல்லோரும் இங்க தான் இருக்காங்கடா....."

"சரி நீ போ நா ஆர்டர் பண்ணிட்டு வந்துட்றேன்....."எனவும் அவள் "சரி" என்றுவிட்டு வருணிடம் போய் அமர இவனும் ஆர்டர் சொல்லிவிட்டு வந்தமர்ந்தான்.

"அம்மா அஷ்வியும் தேவாவும் இன்னுமா வர்ல?" என்ற அஜய்யிடம் வருண்

"இப்போதான் பேசினான்டா.... ரிக்ஷிக்கு வாந்தின்னு அவன படுத்தியெடுக்குறா போல.... நீங்க சாப்பிடுங்க நாங்க மெதுவா வரோம்னு சொல்லிட்டான்"

"இதுக்காக தான் காலைல அப்பிடி அடம் புடிச்சாளா அத்த? " எனும் ஈஸ்வரியின் கேள்விக்கு ஆரவ்வும் கயலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு

"என்னது.... அஷ்வி கார்ல அண்ணா கூட போக மாட்டேன்னு அடம் புடிச்சாளா?"

"அதுக்கு மாமா என்ன பண்ணாங்க?" என இருவரும் மாறி மாறி கேள்வி கேட்க அர்விந்த்
நடந்ததை கூற ஆரவ் சிரிப்பை அடக்க படாத பாடு பட்டுக் கொண்டிருக்க கயல் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

"அர்வி...நல்ல வேல நீ மாமாட தர்ம அடியில இருந்து தப்பிச்சடா..." என்றுவிட்டு மறுபடி சிரிக்க அவள் எதற்காக அப்படி சொல்கிறாள் என்பதை புரிந்து கொண்ட அனைவர் முகத்திலும் புன்னகை அரும்பியது.

***

"அஷு...இப்போ என்ன பண்ணிட்டேன்னு அமைதியா இருக்க?"

"ம்...வேண்டுதல்"

"என்ன வேண்டுதல்?"

"உங்க கூட பேச கூடாதுன்னு"

"எதுக்காக?"

"ஆசை"

"ஈஸ்ஸிட்?"

"ஆ...மா"

"உனக்கு பசிக்கல?"

"....."

"மௌனம் சம்மதத்திற்கு அறிகுறின்னு சொல்லாம சொல்றியா?"

"எனக்கு பசியில்ல"

"எனக்கு ரொம்ப பசிக்குது...நீ வேணும்னா எனக்கு கம்பனி தர்றியா?" என்றவனை முறைக்க

"கூல் பேபி...இறங்கு"

"நா ஒன்னும் பேபி‌ இல்ல..." ரோஷமாய் முகத்தை திருப்ப

"பட் நீ பண்றது எல்லாம் அப்பிடித்தான் இருக்கு"

"...."

"அஷு ஏற்கனவே லெட் ஆவிடிச்சி.... அவங்க எல்லாம் ஆல்ரெடி நெருங்கிட்டாங்க...நாம தான் லேட்"

"நானா உங்க கூட வரன்னு சொன்னேன்?"

"ஓ... அப்போ அந்த வீணாப்போனவன் கூட வர்றது தான் உனக்கு புடிச்சிருக்கு"

"அர்விய ஒழுங்கா கூப்புடுங்க" அவளும் பதிலுக்கு எகிற அவன் கதவை திறந்து கொண்டு இறங்கி சென்று விட சட்டமாய் கைகளை கட்டிக்கொண்டு காருக்குள்ளேயே அமர்ந்து அர்ச்சனை பண்ணத் தொடங்கிவிட்டாள்.

"கமாண்டர்...இவன் கோபப்பட மாட்டானாமா.....சொல்லி ஒன் அவர் கூட ஆகல.... அதுக்குள்ள எங்க இருந்து தான் வருமோ தெரியல... டெர்ரர் ஆபீஸர்....இவன்லாம் பிஸ்னஸ் பண்ணலன்னு யாரு அழுதா?பேசாம மிலிட்டரில சேத்து விட்டுடனும்.... எப்போ பாரு மூஞ்ச உர்ருன்னு வெச்சிகிட்டு..... இந்த வருண் அண்ணாவும் ஆருவும் எப்பிடித்தான் சமாளிக்கிறாங்களோ? ச்சே..ச்சே.. அவங்க கிட்ட எல்லாம் இந்த கமாண்டர் கோபப்பட மாட்டான்.... அதுக்குதான் அவன் பொண்டாட்டி நா இருக்கேனே... அப்பறம் எப்பிடி அவங்க கிட்ட கோபப்படுவான்... கயல் கிட்ட கூட சமாதனமாத்தான் பேசுறான் நமக்கிட்ட மட்டும் தான் டெர்ரர் மூஞ்சி... கமாண்டர்...." அவனை ஒருமையில் அழைத்து திட்டிக் கொண்டிருந்தவள் "இறங்கு அஷ்வினி" எனும் அவனின் அழுத்தமான அழைப்பில் தூக்கி வாரிப்போட நிமிர்ந்து பார்க்க அவனோ அவள் பக்கமாக அவளையை கூர்ந்து பார்த்தபடி கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான்.

"இவன்...ச்சி.. இவரு எப்போ வந்தாரு?சும்மாவே ஆடுவான்... இப்போ சலங்கை வேற கட்டிவிட்டுருக்கியே அஷ்வி..... என்ன பண்ணுவான் அடிப்பானோ... ச்சே ச்சே அடிக்க மாட்டான்... அப்போ அன்னக்கி மாறி மூஞ்ச கிட்ட கொண்டு வருவானோ?அதுக்கு அடியே மேல்.... அவன் கிட்ட வந்தா மட்டும் நமக்கு ஏன்தான் படபடன்னு வருதோ... போதாக்குறைக்கு வாய் வேற வார்த்தை வராம போக்கு காட்டும்... இப்போ என்ன பன்றது பேசாம கால்ல விழுந்துடலாமா....
அஷ்வி உனக்கு அறிவில்லன்னு கமாண்டர் சொல்றது சரிதான் போல... பப்ளிக்ல கால்ல விழுந்தா உன் இமேஜ் என்ன ஆகும்?" அவளுக்கும் மனசாட்சிக்கும் உள்ளுக்குள் பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்க இவனோ மீண்டும்

"அஷ்வினி இப்போ இறங்க போறியா இல்லையா?" எனவும் திடுக்கிட்டு திரும்பியவள் அவசரமாக இறங்க

"வா..." என்று உறுமியபடியே அவன் முன்னால் செல்லவும் அவனுக்கு வாயை வளைத்து பழிப்பு காட்டிவிட்டு அவனை தொடர்ந்தாள்.

அதுவரை அவனுக்கு மனதுக்குள் மீண்டும் அர்ச்சித்தபடியே வந்தவள் யாரோ ஒருவரின் வரவேற்பு குரலில் தான் தன்னிலிருந்து மீண்டு யாரென்று பார்க்க அங்கே ஹோட்டல் மேனேஜரே இவனை வாயெல்லாம் பல்லாக வரவேற்றுக் கொண்டிருப்பது புரிய சட்டென விழியுயர்த்தி ஹோட்டல் பெயர் பலகையை பார்த்தவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.

_"சத்யா"_ அது ஒரு பிரம்மாண்டமான செவன் ஸ்டார் ஹோட்டல்... அதைப்பற்றி அவளும் கேள்விப் பட்டிருக்கிறாள்.ஏன் நண்பிகளுடன் இங்கே வருவதற்கு கனவு கூட கண்டிருக்கிருக்கிறாள். இப்போது என்னடாவென்றால் அந்த ஹோட்டல் மேனேஜரே இவனை வாசலுக்கு வந்து வரவேற்றுக் கொண்டிருக்கிறார்.
அவ்வளவு பெரிய ஆளா நம்மாளு.... என நினைத்தவள் அப்போதுதான் சுற்றும்முற்றும் கண்களை சுழல விட்டாள்.

ஆங்காங்கே என்ன எல்லா இடத்திலுமே இவன் போஸ்டர்கள் தான் தொங்கிக் கொண்டிருந்தது.

ஆளை மயக்கும் வசீகர சிரிப்புடன் ஆண்மையின் இலக்கணமாய் நின்று கொண்டு இருந்தவனையும் மேனேஜரிடம் படு ஸ்டைலாக இடது கையால் முடியை கோதியவாறு பேசிக் கொண்டு இருப்பவனையும் அவளைப் போலவே ஆச்சரியத்துடன் பலர் பார்த்துக்கொண்டு இருப்பதை கண்டவளுக்கு " இவன் என் கணவன் " எனும் பெருமிதம் பொங்கி வழிந்த அதேநேரம் அவன் உயரத்தில் சுணங்கியது மனது!!!

மிரண்டு போய் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருப்பவளை திரும்பிப் பார்த்தவனுக்கு சிரிப்புத் தான் வந்தது.

இவ்வளவு நேரம் தன்னை அர்ச்சித்துக் கொண்டிருந்தவள் இப்போது தன்னை பார்த்தே மிரண்டு கொண்டிருக்கிறாள்.

அவனுக்கு அவளிடம் பிடித்ததே அது தானே!!!எதையும் எதிர்ப்பார்க்காமல் கொடுக்கும் தன்னலமில்லா அன்பு...

தன்னை யாரென்று தெரியாதவர் இல்லையென்ற நிலையிலிருந்தவனை பெயர் அறியும் முன்னே தாளியில் கை வைக்கப் போனதற்காக அறைந்தவளாயிற்றே அவன் மனையாள்!!!

மீண்டும் அவளிடமே வந்தவன்

"இங்கேயே நிக்கிறதா உத்தேசமா பேபி?" என்றவனின் குரலில் அவனை திரும்பிப் பார்த்தவளுக்கு இன்னுமின்னும் ஆச்சரியம் கூடிக் கொண்டே போனது.

எவ்வளவு பெரிய இடத்திலிருப்பவன்.... என்னை மணந்தது மட்டுமல்லாமல் எந்த பந்தாவுமே காட்டாமல் எனக்காக மீண்டும் வந்திருக்கிறானே!!!
நினைக்க நினைக்க மனதிற்க்குள் புல்லரித்துப் போனது....

அவள் மனநிலையை படித்தவன் போல் அவளை தோலோடு அணைத்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான்.

அவனுக்கு எதிரே அமர்ந்து கொண்டவளுக்கு எதுவும் பேசத் தோன்றவே இல்லை....

ஏனோ மனது அலைபாய்ந்து கொண்டே இருக்க காரியமே கண்ணாக குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அவனுக்கு அதை பார்க்க கூட நேரம் கிட்டவில்லை போலும்...ஒருவர் மாற்றி ஒருவர் வந்து அவனிடம் பேசிக்கொண்டே இருந்தனர்....

அதில் இளைஞர்கள் தொடக்கம் பெரிய பெரிய பிரமுகர்கள் வரை அடக்கம்.....

அதற்கெல்லாம் அவளுக்கு ஒன்றுமே நடக்கவில்லை...அடுத்து வந்ததே ஒரு பெண்கள் பட்டாளம்!!!!

அனேகமாக கல்லூரி மாணவிகளாகத்தான் இருக்க வேண்டும்...

அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் அவர்களின் கூச்சலில் தான் தலையை நிமிர்த்திப் பார்த்தாள்.

அவர்களும் இவனை கண்டுதான் கூச்சலிட்டனர் என்பது அவர்கள் நெருங்கி வந்து அவனிடம் ஆட்டோக்ராஃப் கேட்கும் போதுதான் தெரிந்தது.

திரும்பி அவன் முகத்தை ஆராய்ந்தாள்.அதில் எரிச்சல் மண்டிக்கிடந்ததே தவிர துளி சுவாரஷ்யம் இல்லை...

அவர்கள் கெஞ்சுவதை பார்க்க பார்க்க எரிச்சலாகத்தான் இருந்தது அவளுக்கு!!

அதில் ஒருத்தி அவன் மடியில் விழுந்து விடுபவள் போல் உரசிக்கொண்டு நின்றிருந்ததை பார்க்க பற்றிக்கொண்டு வந்தது....

இவள்தான் வேண்டுமென்ற உரசுகிறாளென்றாள் இவனுக்கு எங்கே போனது புத்தி?கோபமாய் நினைத்தவள் அவனை முறைக்க எதேச்சையாக அவள் புறம் திரும்பியவன் அவள் கண்களில் கண்ட கோபத்தில் அவள் இதயத்தில் புகைந்து கொண்டிருக்கும் பொறாமையில் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

அவர்கள் மீண்டும் செல்ஃபி என கெஞ்ச துவங்கவும் சாப்பாட்டை வைத்துவிட்டு எழுந்தே விட்டாள்.

அவர்களை விலக்கிக் கொண்டு அவளிடம் வரும் முன் அவள் காரில் போய் அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு சாப்பாட்டுடன் காரில் ஏறியவன் அவளை பார்த்துக்கொண்டே காரை கிளப்ப அவளும் எதுவும் பேசாமல் அமைதியாகவே வந்தாள்.

***

இவர்கள் இருவரையும் தவிர மற்றவர்கள் மாலையே போய் சேர்ந்திருக்க இவர்கள் வந்து சேர இரவாகிவிட்டது.

பேச்சற்ற மௌனங்கள் கூட சில நேரங்களில் அழகுதான் போலும்!!!

அவளையும் அறியாமல் அவன் தோலில் தலை சாய்த்து அவன் கைகளையே கட்டிக் கொண்டு குழந்தை போல் உறங்குபவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு....

இடையில் வாந்தி என நான்கு முறை அவனை படுத்தி எடுத்துவிட்டுத்தான் உறங்கினாள்.

வாந்தி எடுத்தாளாவது பரவாயில்லை....ஒவ்வொரு தடவையும் ட்ரஸ் மாற்ற வேண்டும் என கூறும் போது தான் அவனுக்கு என்னடாவென்று இருந்தது.

சத்தியமாக அவன் ஒரு பயணத்தை இவ்வளவு தாமதமாக கடத்தியதே இல்லை....

ஆனால் இன்று அது கூட அவனுக்கு சுகமாகவே தெரிந்தது தான் விந்தை!!!

காரை நிறுத்திவிட்டு அவளை கையில் ஏந்தியவாறு அந்த பழைய கால வீட்டுக்குள் நுழைந்தவன் தானும் உடை மாற்றி வந்து அவளருகே படுத்துக் கொண்டான்.

காலை....

அவன் நெஞ்சில் சுகமாய் அவள் தலை சாய்த்து படுத்திருக்க அவனோ அவளை தனக்குள் அணைத்தபடி படுத்திருந்தான்.

முதலில் கண் விழித்தது ரிஷி தான்.....

தனக்கு ஏதோ பாரமாக தெரிய கண்களை திறந்து பார்த்தவன் இனிமையாக அதிர்ந்து போனான்.

அவன் கை வளைவுக்குள் அவன் மனையாள்!!! அதுவும் அவன் நெஞ்சின் மீதே தலை சாய்த்துப் படுத்திருந்தாள்.

தூக்கத்தில் அவள் தன்னிடம் நகர்ந்து வந்திருக்க வேண்டும் என யூகித்தவன் அவளையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளிடம் இலேசாக அசைவு தெரிய அவசரமாக கண்களை மூடி தூங்குவது போல் பாசாங்கு செய்யவும் தான் அவள் கண்களை திறந்தாள்.

அவனின் சீரான மூச்சுக் காற்றின் மூலம் அவள் அவன் நெஞ்சில் தலை வைத்துப் படுத்திருப்பது மண்டையில் உறைக்க உள்ளம் திடுக்கிட முகம் நிமிர்த்திப் பார்த்தவளுக்கு அவன் முகம் வெகு அருகில் தெரியவும் மூச்சடைத்துப் போனது.

கைகளை மெதுவாய் அவன் முகத்திற்கு கொண்டு போனவள் அவன் மீசையின் ஓரத்தை விரல்களால் சுருட்டி விட அவன் வேண்டுமென்றே தலையை அசைக்கவும் அவன் எழுந்துவிட்டான் என நினைத்து கையை அவசரமாக விலக்கிக் கொண்டவள் அவனிடம் மீண்டும் அசைவில்லாது போக மறுபடியும் கையை மீசையின் அருகே கொண்டு போக அவன் கை சட்டென அதை தடை செய்வது போல் பிடிக்கவும் விதிர்வதிர்த்துப் போனாள் அஷ்வினி....

அதற்குள் அவன் அவன் அவளை சாய்த்து அவள் கைகளிரண்டையும் சிறை செய்தவனாய் அவளை கீழே வைத்து இவன் மேலே படுத்திருந்தான்.

அவனை விழி விரித்து பயத்துடன் அவள் பார்த்திருக்க அவனோ அவளை சீண்டும் விதமாக

"என் மீச என்ன அவ்வளவு அழகாவா இருக்கு?"ஒற்றை புருவம் உயர்த்தி அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு மூச்சடைத்தது.

"அ....அ..அது...வ...வ.. வந்து...நீங்க...இல்ல...நா..."

"நீ..."

"வ...வந்து...ஐ...ஐ..மீன்.."

"ம்...சொல்லு...நீ.." அவன் இன்னும் குனிய கண்களை இறுக்க மூடிக் கொள்ளவும் அடுத்த நிமிடம் அவள் செவ்வதரங்கள் அவனின் முறட்டு அதரங்களுக்குள் அடங்கியிருந்தது.

தான் செய்து கொண்டிருந்த மடத்தனம் அப்போதுதான் அவனுக்கு எச்சரிக்கை மணி அடிக்க அவளை விட்டு அவசரமாக எழுந்தவன் அவள் கண்கள் திறக்கும் முன்னே குளியலறைக்குள் சென்று விட்டான்.

அவன் குளித்து முடித்து வெளியே வரும்போது அவள் பிரம்மை பிடித்தவள் போல் கட்டிலில் எழுந்தமர்ந்திருத்தாள்.

இவனோ எதுவுமே நடக்காதது போல்

"அஷு..... எதுக்காக இப்படி உக்காந்திருக்க...கோயிலுக்கு போகனுமில்ல கிளம்பு..." எனவும் அவளை நிமிர்ந்து பார்த்தவள் குழம்பிப் போனாள்.

ஏற்கனவே அது கனவா இல்லையா என மண்டையை பிய்த்துக் கொள்ளாத குறையாக குழம்பியிருந்தவள் அவனின் இயல்பான பேச்சில் இன்னும் குழம்பிப் போனாள்.

"தே..தேவ் நீ.. நீங்க இப்போ என்ன..."

"உன்ன... உன்ன என்ன பன்னேன் நான்?"

"அது..அது...ஒன்னுமில்லயே....."
என்றவள் தப்பித்தோம் பிழைத்தோம் என குளியலறைக்குள் புகுந்து கொள்ள அவள் நிலையை பார்த்து வாய் விட்டு சிரித்தான் ரிஷி...

***

சிகப்பு நிற பாவாடைக்கு வெள்ளை நிற தாவணி அணிந்து கொலுசு சத்தம் சலசலக்க மாடியிலிருந்து இறங்கி வந்தவளை பார்த்தவன் இமை மூட மறந்து அப்படியே நின்றுவிட்டான்.

இவ்வளவு நாள் வைட் சாரி மற்றும் சுடிதாரிலேயே அவளை கண்டிருந்தவனுக்கு அவளின் இன்றைய அபார அழகு அவனை அடித்து வீழ்த்தியது உண்மையிலும் உண்மை!!!

விஜியின் முன் வந்து நின்றவள்

"விஜி எப்பிடி இருக்கேன்?" என தலை சாய்த்து கேட்க அவளை திருஷ்டி கழித்தவர்

"ரொம்ப அழகா இருக்கடா.... இவ்வளவு வருஷமா நான் இங்க வர்றப்போ எல்லாம் போட சொன்னா போட மாட்ட இன்னக்கி மட்டும் என்னாச்சு?" அவள் குட்டை அவர் வெளிப்படுத்த ரிஷியின் கண்கள் அவளை ஆவலாய் வருடியது.

"மாமா நாங்க எல்லோரும் இங்க தான் இருக்கோம்"என கயல் கத்த தன்னிலையை இழுத்துப் பிடித்தவன் சமாளிப்பாய் சிரித்து விட்டு வெளியேற அவளை திரும்பி முறைத்தாள் அஷ்வினி!!!!

***

வருணுடன் பேசியபடியே அவன் மேலே ஏறிக்கொண்டிருக்க அவளோ அர்விந்துடன் கலகலப்பாய் சிரித்த படி அவனுக்கு சற்று இடைவெளி விட்டு பின்னால் வந்து கொண்டிருந்தாள்.

((அவன் திரும்பி பாத்தான்...மவனே நீ செத்தடா அர்வி!!!))

கொஞ்ச தூரம் நடந்தவள் அப்படியே அமர்ந்து விட
"ஏய் எந்திரிடி... இன்னும் எவ்வளவு நடக்க இருக்கு" அர்விந்தும் அவளுடன் தேங்கிவிட்டு கடுப்புடன் சொல்ல

"முடியாது அர்வி...கால் வலிக்குதுடா....எப்போவும் போல இன்னக்கும் நீயே தூக்குடா" என்றவளுக்கு நேற்று ஹோட்டலில் நடந்தது நினைவு வர அவனை பழிவாங்க நினைத்தவள்

"வேணாம் வேணாம்... தேவ் கிட்ட தூக்க சொல்லுடா" எனவும் அவளை பார்த்து அவன் முழிக்க சட்டென எழுந்தவள்

"ஓய்....வருண் சார்...." என கத்த "இவ ஒருத்தி...சார் சான்று படுத்துறா மச்சான்" என ரிஷியிடம் சொல்லியவாறே திரும்ப சிரித்துவிட்டு தானும் திரும்பினான் ரிஷி....

"வருண் சார்..."

"என்னடி?"

"உங்க ஃப்ரெண்டு கிட்ட என்ன தூக்கிட்டு போக சொல்லுங்க சார்... எனக்கு கால் வலிக்குது"

"ஏன் அத நீயே சொல்ல வேண்டியது?"

"சொல்ல முடியுமா முடியாதா?" என்றவளை முறைத்து விட்டு ரிஷியிடம்

"மச்சி போடா... இல்லைன்னா இந்த சாரு போட்றத நிறுத்தவே மாட்டா" என அவன் கெஞ்ச வாய்விட்டு சிரித்தவன் அவளை நோக்கி செல்லவும் திடீரென எங்கிருந்தோ அவனை நோக்கி வந்த தோட்டாவை அர்விந்த் கண்டு "அண்ணா...." என கத்திக் கொண்டே அவனை பிடித்து தள்ள அந்த தோட்டா அங்கிருந்த கல்லில் பட்டு சிதறவும் சரியாக இருந்தது.

தொடரும்.....

01-05-2021.
 

Rishi 24

Member
Vannangal Writer
Team
Messages
54
Reaction score
33
Points
18
அத்தியாயம் 19 ❤️

கோயிலுக்கு படியேறிக் கொண்டிருந்த அனைவருமே அதிர்ந்து பயத்தில் கூச்சலிட்டுக் கொண்டு அங்குமிங்கும் ஓட தன் தலையை பிடித்தவாறெ குனிந்திருந்த அர்விந்திடம்

"அர்விந்த் நீ நம்ம குடும்பத்த கூட்டிட்டு மேல போ... அவங்கள பாத்துக்கோ... நா இதோ வந்தட்றேன்...."

"சரி அண்ணா" என்றவன் நிமிர தானும் நிமிர்ந்த ரிஷி போக எத்தனிக்க அவனை போக விடாமல் தடை செய்து பிடித்திருந்தது ஒரு கை....

அர்விந்த் என நினைத்தவன் எரிச்சலுடன் திரும்ப அங்கே அவள் மனையாள் நின்றிருப்பதை பார்த்து அதிர்ந்தவன் "ஓஹ்...ஷிட்....இவள எப்பிடி மறந்தேன்" என நினைத்தவன் ஏற்கனவே தாமதமாகிவிட்டது உணர்ந்து கையை உதற அதை கெட்டியாக பிடித்திருந்தவள்

"இ.. இல்ல தேவ் நீங்க போக கூடாது... எனக்கு பயமா இருக்கு தேவ்... ப்ளீஸ் போகாதீங்க...." என கெஞ்ச

"அஷ்வினி சிச்சுவேஷன புரிஞ்சிக்க ட்ரை பன்னு..... விடு கையை" என்றவனது கையை இன்னும் இறுக்கியவள்

"மு... முடியாது... நா விட மாட்டேன்"

"அஷ்வினி.... லேட் ஆவிடிச்சி... விடுடா ப்ளீஸ்"

"முடியாது முடியாது"என அவள் மீண்டும் அடம் பிடிக்கவும் கோபத்தில் பல்லை கடித்தவன்

"சொன்னது கேக்க மாட்ட" என்றவாறே அவளது கையை உதறி விட்டு

"போ..."என உறும

"இல்ல நா போக மாட்டேன்..."

"போடின்னு சொல்லிட்டே இருக்கேன்..."என்றவன் கோபத்தில் அவளை அறைந்து விட்டு ஒரே பாய்ச்சலில் தன் எதிராளியை தேடிப் போனான்.

***

இரவு.....

ரிஷியை தவிர குடும்பத்தினர் அனைவருமே செய்வதறியாது ஹாலில் டென்ஷனாக அமர்ந்திருக்க அஷ்வினி வாசலிலேயே தவிப்பாய் நின்று கொண்டிருந்தாள்.

ரிஷியின் கட்டளைப்படி அவர்கள் பூஜையை முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்துவிட ஆனால் அவர்கள் இருவரும் தான் இன்னும் வீடு வந்து சேர்ந்த பாடில்லை....

வருணும் ஆன மட்டும் முயற்சி செய்து பார்த்துவிட்டான்.
மொபைல் சுவிட்ச் ஆஃபென மட்டுமே தகவல் வந்து கொண்டிருந்தது.

ஏழு மணியளவில் ரிஷியை தேடிப்போன ஆரவ்வும் அஜய்யும் கூட திரும்பி வந்துவிட அஷ்வினிக்குத்தான் மனது திக் திக் என்று அடித்துக் கொண்டது.

இரவு 10 மணி.....

அவளை எவ்வளவு சமாதானப்படுத்தியும் அது முடியாமல் போக தானும் அவளுடனேயே வாசலில் நின்றுகொண்டான் ஆரவ்.

கார் வந்து நிற்கும் சத்தத்தில் பரிதவிப்புடன் வெளியே பார்த்திருந்தவள் அவன் வாசலில் கால் வைத்த அடுத்த நொடி தன்னவனை தாவி அணைத்திருந்தாள்.

எதிர்பாரா அணைப்பில் கொஞ்சம் தடுமாறியவன் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு அவளை இறுக்க அணைத்தான்.

அவள் தேம்பி அழவும் அவள் முடியை கோதியவன்

"ஷ்.... அழக்கூடாது டா... அதான் நான் வந்துட்டேன்ல?" சமாதானப்படுத்த முயன்றான்.

"நா...நா...ரொ... ரொம்ப பயந்துட்டேன் தே..தேவ்"

"அஷு..." என்றவாறே அவளை விலக்கப் போக அவளோ அவனை இன்னும் ஒன்ற

"அஷு.... வீட்டுக்குள்ள போலாம்டா.... பாரு எல்லோரும் வாசல்ல நம்மலயே பாத்துட்டு நிக்கிறாங்க" அவளிடம் பதிலற்றுப் போக அவள் மனநிலையை உணர்ந்து அவளை தன் கை வளைவுக்குள்ளேயே வைத்தவாறு உள்ளே சென்றான்.

"அண்ணா என்னாச்சு யாரு அவங்க?"

"மாப்பிள்ளை உங்களுக்கு ஒன்னுமில்லல்ல?"

"மச்சான் எதுக்கு இவ்வளோ லேட்?"

"தேவா அடியேதும் படலியே?" ஆளாளுக்கு ஒரு கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க பொதுவாக

"இல்ல எனக்கு ஒன்னில்ல...ஐ அம் ஆல் ரைட்... பிஸ்னஸ் எதிரிங்க தான்... கொல்ல முயற்சி பண்ணியிருக்காங்க...." என அவன் பேசிக் கொண்டே போக பயத்தில் அவனை இன்னும் இறுக்கினாள் பாவை....

அவள் தோலுக்கு தன் கைகளால் அழுத்தம் கொடுத்து ஆறுதல் படுத்தியவன்

"ஐ அம் சாரி... எனக்காக காக்க வெச்சிட்டேன்..." எனவும் அதை மறுத்த வருண்

"என்னடா பேசுற...காக்க வெச்சிட்டேன் அது இதுன்னு...நீயும் எங்க குடும்பத்துல ஒருத்தன் தாங்குறத மறந்துறாத"

"அது இல்லடா நா..."

"தம்பி எங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்ல... நீங்க போங்க...." என அவனை அனைவரையும் அனுப்பி வைத்தவர்

"அஷ்வா தான் உங்கள நினச்சு ரொம்ப பயந்துட்டா.... "

"நீங்க போய் தூங்குங்க அத்த.... நா பாத்துக்குறேன்"

"தம்பி சாப்பாடு...?"

"இல்ல எனக்கு வேண்டாம்...அஷு சாப்புட்டாளா அத்த?"

"இல்ல தம்பி உங்கள பாத்தா தான் சாப்புடுவேன்னா...."

"இட்ஸ் ஓகே நா பாத்துக்குறேன்... நீங்க போங்க..." என்றவன் அவளை கூட்டிச் சென்று அவள் மறுக்க மறுக்க பாலை அருந்த வைத்துவிட்டு தன் அணைப்பிலேயே தங்கள் அறைக்கு சென்றான்.

***

"எனக்கென்னவோ அண்ணா எதையோ மறைக்கிறாங்கன்னு தோனுது அம்மு...." கயலின் மடியில் படுத்தவாறே வினவினான் ஆரவ்.

"ஏன் ஆரு?"

"இல்லடி... இவ்வளவு நாளா பிஸ்னஸ் பண்றாங்க.... அப்போல்லாம் இல்லாத இந்த திடீர் எதிரி எங்கிருந்து முளச்சான்?"

"உனக்கு தெரியாம இருந்திருக்கலாமேடா..."

"நோ வே அம்மு....அண்ணாவோட சின்ன மூவ் கூட எனக்கு அத்துப்படி..."

"....."

"நா பேசாம விட்டதுக்கு அப்பறம் தான் ஏதோ நடந்திருக்கு...."

"அதான் இப்போ பேசுறியே ஆரு....?"

"இல்ல அம்மு... அவங்க கூட சந்தர்ப்ப வசத்தால தான் பேசியிருக்கேனே தவிர முன்ன மாதிரி சகஜமா பேசுறதில்ல..."

"மாமா கூடவும் பேசுறதில்ல.... அஷ்வி கூடவும் பேசுறதில்ல.... இப்போல்லாம் நீ ரொம்ப முறிக்கிக்குற ஆரு...."

"தப்பு பண்ணா தண்டன குடுத்துத் தான் ஆகனும் அம்மு"

"பட் பேசாம இருக்குறதால பிரச்சின தீராது ஆரு... மாமாவும் அஷ்வியும் வேனும்னே அப்படி பண்ணலன்னு உனக்கே தெரியும்... பின்ன எதுக்கு பேசாம இருக்கனும்?"

"....."

"திரும்ப ஒரு தடவ யோசி ஆரு.... மாமா என்ன சொல்ல வர்றாங்கன்னு கேளு"

"சரிங்க மேடம்...."குறும்பாய் அவளிடம் கண் சிமிட்டியவன் அவளை வளைத்து அவளிதழுக்குள் தன் இதழை பொருத்தினான்.

.........

ப்ரஷப்பாகிவிட்டு வந்தவனை தவிப்புடன் பார்த்திருந்தவளை இழுத்து தனக்குள் வைத்துக் கொண்டவன்

"ஒரு பொண்ண காணும் அஷு" என்றான் அதிரடியாக....

"வாட்?"

"நா அவக்கிட்ட அசந்து போனதே அவ தைரியத்துலதான்..." வேறு ஒரு பொண்ணை பற்றி பேசவும் இருந்த மனநிலை மாறி அங்கே கோபம் குடியேற

"நீங்க எதுக்கு அவக்கிட்ட அசந்து போனீங்க?"

"அவ தைரியத்துல தாம்மா.." என்றான் வேண்டுமென்றே....

"ப்ச் நா அதுவா கேட்டேன்?"

"பின்ன?"

"நீங்க எதுக்கு அவள பாத்தீங்க?" என்றவளது கேள்விக்கு பதில் சொல்லாமல்

"கலகலன்னு இருப்பா..."

"நா என்ன கேட்டேன் நீங்க என்ன சொல்றீங்க?"

"தாலியில கை வைக்கப் போனதுக்கு எனக்கே அறஞ்சான்னா பாத்துக்கோயேன்"

"நீங்க எதுக்கு அவ தாலியில கை வெக்கப்..." என்றவளுக்கு அப்போதுதான் அவன் தன்னை சொல்கிறான் என புரிய

"தேவ்..." என சிணுங்கிக் கொண்டே அவன் நெஞ்சில் குத்த அதை சுகமாய் தாங்கிக் கொண்டவன்

"அவள இப்போ காணும் அஷு... அவளுக்கு பதிலா கொபமா பேசினா கூட அழுது வடியுற பொண்ண தான் இப்போ பாக்க முடிது" என்றுவிட்டு அவள் தலையை தடவி

"காலைல அறஞ்சது ரொம்ப வலிச்சுதாடா...?"என மென்மையாய் கேட்டவனிடம் மறுப்பாய் தலையசைத்தவள்

"இல்ல தேவ்.... எனக்கு நீங்க அடிச்சது கூட உணராம தான் பயந்து போய் இருந்தேன்" என்றவளின் நெற்றியில் முத்தமிட்டவன் அவளை படுக்க வைத்து விட்டு நிமிரவும் அவன் கைகளை பிடித்தவள்

"என்கிட்டயே படுங்க தேவ்... பயமா இருக்கு" என கெஞ்ச அங்கே சோஃபாவும் இல்லாததால் நேற்று போலவே மறுபக்கம் வந்து படுத்துக் கொண்டான்.

***

அமெரிக்கா....

மெக்சிகோ நகரம்....

"டாட்.... எவ்வளவு கஷ்டப்பட்டு குறி வெச்சது எப்பிடி டாட் மிஸ் ஆச்சு....?" கோபமாய் ஒருவன் கத்திக் கொண்டிக்க அவனுக்கு முன்னே அவன் ஜாடையிலேயே ஒருவர் கோட் சூட்டுடன் காலுக்கு மேல் கால் போட்டு தோரணையாய் அமர்ந்திருந்தார்.

"டாட் அவன் சாதாரண ஆள் இல்ல.... எப்பிடியும் நம்மாள பிடிச்சிருப்பான்..... அவ எனக்கு வேணும் டாட்... அதுக்கு அவன் சாகனும்...." கண்களில் காம வெறி மின்ன அவன் சொன்ன விதம் அவனுக்கு முன் அமர்ந்திருந்தவரையே ஒரு நிமிடம் ஆட்டம் காண வைத்தது.

காலை.....

முன்னைய நாள் போலவே தன் நெஞ்சில் தலை சாய்த்து அவள் படுத்திருந்தாலும் ஏனோ அவனால் அதில் கலந்து சந்தோஷப்பட முடியவில்லை....

ஏதேதோ எண்ணங்கள் தோன்றி மனது அவனை அலைக்கழிக்க அதற்கு மேல் முடியாதவனாய் அவளை தன்னிடமிருந்து தள்ளிவிட்டு எழ முயற்சிக்க அவளோ அவன் மனநிலை அறியாது அவனின் டீ-ஷர்ட்டை இறுக்கமாக பற்றிப் பிடித்திருந்தாள்.

ஒரு நொடி அவளையும் அவள் செய்கையையும் நினைத்து உதட்டில் கீற்றாக புன்னகை அரும்பினாலும் வந்த வேகத்திலேயே அது சென்றுவிட அவள் கையை பிரித்தெடுத்தவன் எழுந்து குளியலறை சென்றுவிட்டான்.

அவன் குளித்து முடித்து வெளியே வரும் போது கூட அவள் தூங்கிக் கொண்டிருக்க அவளை எழுப்பாது ரெடியாகி கீழே இறங்கி வந்தான்.

இராமநாதனை தவிர மற்ற ஆண்கள் அனைவரும் ஜாகின் சென்றிருக்க ஹாலுக்கு வந்தவன் இராமநாதனிடம் சென்று

"மிஸ்டர் ராமன்.... எனக்கு அர்ஜன்ட் வொர்க் இருக்கு நா கிளம்புறேன்" என்றவனை கண்டு எழுந்தவர்

"இன்னக்கி மட்டும் இருந்துட்டு நாளைக்கி போகலாமே மாப்பிள்ள..." எனவும் அதை மறுத்தவன்

"இல்ல மிஸ்டர்.ராமன் நா இன்னக்கே போயாகனும்" என்றவன் அவர் ஏதோ சொல்ல வந்ததை கூட காதில் வாங்காது காரிலேறி சென்று விட்டான்.

.........

அவன் சென்று கொஞ்ச நேரம் கழித்து எழுந்தவள் கண்களை மூடிக் கொண்டே கைகளால் அவனை துலாவ அவனில்லாது போகவும் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள்.

அவன் கீழே இருப்பானென தன்னைத்தானே சமாதானம் பண்ணிக் கொண்டவள் அவசரமாக எழுந்து குளித்து முடித்து வெளியே வந்தாள்.

இப்பொழுதெல்லாம் ஏனோ அவன் அருகாமையை அதிகம் தேடியது அவள் மனது.

அவனை பார்க்காமல் பேசாமல் நேரம் கூட நகர்வேனா என அழுச்சாட்டியம் செய்தது.

அவள் கீழே இறங்கி வரவும் ஜாகிங் போன நாள்வரும் உள்ளே நுழையவும் சரியாக இருக்க அவர்கள் கூடவும் அவன் செல்லாது எங்கே சென்றிருப்பான் என நினைத்தவள் அவர்களை பார்த்து சிரித்து விட்டு தன் தாயை தேடிச் சென்றாள்.

"விஜி....தேவ் எங்க?"

"அதென்னடி புருஷன பேரு சொல்லி கூப்புட்ற பழக்கம்?"

"காலைலயே ஆரம்பிக்காதமா.... அவரு எங்கன்னு சொல்லு ப்ளீஸ்..."

"எனக்கு தெரியாது அஷ்வா...."என்ற பதிலில் குழம்பியவள்

"அண்ணி... நீங்களாவது பாத்தீங்களா?" என தவிப்புடன் கேட்க அவளை பார்த்து சிரித்த ஈஷ்வரி

"நா கீழ வரும்போது மாமா கிட்ட பேசிட்டிருக்குறத பாத்தேன்... அப்பறம் பாக்கல அஷ்வி....ஏன் உன்கிட்ட சொல்லிட்டு போகல்லயா?" என்றவருக்கு உதட்டை பிதுக்கி இல்லை என தலையாட்டியவள் தன் தந்தையை தேடிச் சென்றாள்.

"ப்பா..."

"என்னம்மா?"

"தேவ் எங்க?"

"ஏதோ அவசரம்னு அப்போவே கெளம்பி பொய்ட்டான்மா..."

"எ...எங்கப்பா?"

"ஊருக்குத் தான்... ஏன் உங்கிட்ட சொல்லாம பொய்ட்டாரா?"

"அதெல்லாம் இல்லப்பா... நா தூங்கிட்டு இருந்தேன்ல... டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நெனச்சிருக்கலாம்" என மலுப்பியவளுக்கு கண்கள் கலங்கி விட்டது.

நேற்று நன்றாகத்தானே பேசினாரு...என்னாச்சி? என யோசித்தவள் அங்கு நிற்கப் பிடிக்காமல் மேலேறிச் சென்றாள்.

***

வழக்கத்திற்கு மாற்றமாக காரை நிதானமாக செலுத்திக் கொண்டிருந்தான் ரிஷி.

மனது கடலலையை போல் ஆர்ப்பாட்டமாக ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தது.

அவனால் ஒரு நிலையில் இருக்க முடியாமல் போக சாலையோரமாக காரை நிறுத்தியவன் கண்களை மூடி இருக்கையில் சாய அவன் மறக்க நினைத்த நினைவலைகள் அவன் அனுமதி இன்றியே அவனையும் அதற்குள் இழுத்துக் கொண்டது.

(ஆரவ்வை தேடி அஷ்வினி போக அவர்களிருவரையும் தேடி இவன் போன அன்று......

ஆரவ்வின் நினைவில் கடற்கரைக்கு காரை திருப்பியவனை மறித்தவாறு வந்து நின்றது வைட் கலர் பி.எம்.டப்பள்யூ காரொன்று!!!

எரிச்சலில் பல்லை கடித்தவன் மறுபுறமாக வெட்டப் போக அதனையும் மறைத்தவாறு வந்து நின்றது இன்னொரு கார்....

தவறுதலாக வந்திருக்குமென நினைத்து திருப்பப் போனவன் இன்னொரு கார் வந்து நிற்கவும் புருவம் சுருக்கி பார்த்து விட்டு தன் வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியபடி நிமிர்ந்தவன் என்னதான் செய்கிறானென பார்த்து விடலாம் என நினைத்து விட்டு கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டான்.

முதலில் மறைத்தவனுக்கு அது கடுப்பை கிளப்பியிருக்க வேண்டும்.....

கதவை திறக்க வந்த தன் அடியாளை எட்டி உதைத்து விட்டு தானே இறங்கி நின்றவன் ரிஷியை பேசுமாறு ஒருவனிடம் தலையசைக்க அவன் வந்து ரிஷியின் கார் கண்ணாடியை தட்டினான்.

அவனை அலட்சியமாய் திரும்பிப் பார்த்தவன் வேண்டுமென்று சோம்பல் முறித்து விட்டு சீட்டில் சாய வந்தவன் திரும்பிச் சென்று நடந்ததை அவனிடம் கூற அவனுக்கு ஒரு அறை விட்டவன்

"இடியட்.... அவன் என்ன பண்ணான்னு உனக்கு ரிப்போர்ட் பண்ண சொன்னேனா.... போ...போயி அவன இழுத்துட்டு வா...." என கத்த அதில் நடுங்கிப் போனவன் மறுபடியும் வந்து கார் கண்ணாடியை தட்ட இம்முறையும் அவனை அதே அலட்சியப் பார்வை பார்த்தவன் சாய்ந்தவாறே கண்களை மூடிக் கொள்ள அவன் மறுபடியும் அவனிடம் சென்று நடந்ததை சொல்ல கோபத்தின் எல்லை கடந்தவன் அவனை அடித்து உதைத்து விட்டு இன்னும் இருவருக்கு கண்களை காட்ட அவனை கடுப்பேற்றியது போதும் என்று நினைத்தானோ என்னவோ அவர்கள் வருமுன்னே கதவை திறந்து கொண்டு இறங்கியவன் காதை குடைந்து விட்டு

"நானும் நல்லவனா இருக்கனும்னுதான்டா நெனக்கிறேன்.... ஆனா விட மாட்டானுங்களே" என அலுத்துக் கொள்ள அதில் தலைவர் போல் இருந்தவன்

"தோ பாரு மாறன்..... உனக்கும் எனக்கும் போட்டி பிஸ்னஸ்குள்ளதான்.... நீ தேவயில்லாம என் பர்ஸனல் லய்ஃப்குள்ள மூக்க நொலச்சிக்கிட்டு இருக்க... ஒழுங்கா தள்ளிப் போய்டு...." என மிரட்டவும் வாய் விட்டு சிரித்த ரிஷி

"டேய் பிஸ்னஸ்ல நீ பிரச்சின பண்ணாலே உன்ன நா கண்டுக்குறதில்ல... இதுல உன் பர்ஸனல் லய்ஃப்குள்ள நா எப்பிடி வருவேன் சொல்லு?"

"ஏய் நடிக்காதடா..... அஷ்வினி என்ன லவ் பண்றது தெரிஞ்சி தானே அவள உன் கம்பனிக்கு வர வெச்சிருக்க...." என கோபமாக கத்தவும் ஒரு நிமிடம் இடுங்கியது ரிஷியின் கூர் விழிகள்.......

பின்பு அது பொய்யோ என நினைக்கும் வகையில் சாதரணமாக மாற

"என்ன மாறன்.... உன்ன எனக்கு தெரியாதுன்னு நினச்சிட்டு இருக்கியா மரியாதயா என் அஷ்வினிய விட்டுடு"

" என்னது உன் அஷ்வினியா.... குட் ஜோக் மிஸ்டர்.ராம்.... அப்பறமா சிரிச்சுக்கலாம்..."

"ஏய்...."

"எஹ்...அடங்குடா.... இன்னொரு தடவ என் அஷ்வினின்னு உன் வாயால வந்துது அப்பறம் உடம்புல உயிர் இருக்காது"

"வேணாம் மாறா..... அவ எனக்கு சொந்தமானவ நீ குறுக்க வராத..."

"என் பொண்டாட்டி எப்பிடிடா உனக்கு சொந்தமாவா..... லாஜிக்கா யோசிக்கவே மாட்டியா நீ?"

"வாட்...." என்றவனுக்கு இந்த விடயம் புதிது.... அவன் இதை எதிர்பார்க்காதது அவன் தோற்றமே காட்டிக் கொடுக்க அவனை அலட்சியப் படுத்திவிட்டு காரை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான்....

அப்போது அவன் இருந்த மனநிலையில் அதை ஆராயவெல்லாம் அவனுக்கு நேரமே இல்லை....

அதை அவன் பெரிது படுத்தவும் இல்லை நேற்று வரை....

நேற்று நடந்த கொலை முயற்சி அஷ்வினிக்கானதென அவன் நினைத்திருக்க அது தனக்கானதென தெரிந்ததில் வெகுவாக குழம்பிப் போனான்.

தொழில்முறையில் பகை வருவதும் அவர்கள் குடும்பத்தை குறி வைப்பதும் வழமையாக நடப்பது தானென்பதால் தான் தன்னை பழமிழக்க வைக்க வேண்டுமென்று அஷ்வினியை குறிவைத்திருக்க வேண்டுமென கணித்தவனின் கணிப்பு முதல் முறையாக தோற்றுப் போனது!!!

தன்னை குறி வைத்து சுட்டவனை சாகும் வரை அடித்து உதைத்துக் கூட கேட்டு விட்டான்.... ஊஹூம் அவனிடமிருந்து சில புகைப்படங்கள் மட்டுமே கிடைத்தனவே தவிர அவன் வாயை திறந்தானில்லை....

அப்புகைப்படங்கள் தான் ஓர் இரவில் அவன் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது!!!

அவை அனைத்தும் அஷ்வினியினதும் ராமினதும் நிச்சயதார்த்த புகைப்படங்கள்.....

அதை வைத்து அவளை சந்தேகப்படுவது முட்டாள்தனமென்று மூளை அடித்துக் கூறி சத்தியம் செய்தாலும் காதல் கொண்ட மனதுக்குத் தான் அது புரியவே இல்லை.....

அவள் தன்னை ஏமாற்றி விட மாட்டாளென முழு நம்பிக்கை இருந்தாலும் ஏற்கனவே காதலால் துரோகம் இழைக்கப்பட்டவனுக்கு அது அவளை விட்டு தள்ளி இருக்க தூண்டியது.

அதனால்தான் அவளிடம் சொல்லாமலே கிளம்பி வந்து விட்டான்.

***

தன் ஃபோனை எடுத்து அவனுக்கு அழைக்க அது ரிங் போய் கொண்டிருந்ததே தவிர எடுக்கப்படும் வழியைத் தான் காணோம்.

தன்னை வேண்டுமென்றே தவிர்க்கிறானென இதயம் கணக்க கண்ணீர் மடை திறந்த வெள்ளம் போல் வழிந்து கொண்டே இருந்தது.

"நான் என்ன தப்பு செய்தேன்" எவ்வளவு முயன்றும் அவளால் அதற்கான விடையை கண்டு பிடிக்கவே இயலாமல் போயிற்று!!!

மீண்டும் மீண்டும் முயற்சிக்கவும் அது ஏற்கப்பட

"தேவ்...."

"சொல்லு அஷ்வினி?"

"எதுக்காக என்ன விட்டு போனீங்க?" அவள் விசும்ப அதில் தடுமாறியவன்

"ஆபீஸ்ல அர்ஜன்ட் மீட்டிங்..." பட்டுக் கத்தரித்தார் போன்றிருந்த அவன் பேச்சில் அவளுக்கு இன்னும் அழுகை கூட பட்டென வைத்து விடவும் ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவனுக்கு அது உதாசீனமாய் பட இவ்வளவு நேரம் நிதானத்தில் இருந்தவனின் நிதானம் காற்றில் பறந்தது.

அவளை காயப்படுத்தக் கூடாதென நினைத்தவன் கோபம் தலைக்கேற திரும்பவும் வீடு நோக்கி வண்டியை செலுத்தினான் அவளை காயப்படுத்தி விடும் நோக்கில்....

அவன் கூறப் போகும் அந்த சொற்களே அவர்கள் பிரிவுக்கான அடித்தளமாய் அமையப் போகிறதென்பதை அப்போது அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை!!!!

தொடரும்......

04-05-2021.
 
Top Bottom