Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

Ziya😍😍

Member
Messages
44
Reaction score
27
Points
18
Story arumaiya irku ees ka..sena super mam.indha madhu vera magima ku vakkalathu vaangitu avanga mariyadhaiye keduthukka pora...anbai pattaya paduthu vaanga mudiyadhu..aana avanga appasuper ponnungaluku thevaiyana vishaythai chinna vayadil irundhu solli paarkanum.illana ipdi thaan kashtapadanum....diya appa yaarunu oru guessing irku apram solren...ammavaiyum kandupidichuten ka..same time aen diya vtla tv illai nalladhu kettadhu veliulagam theriyama valarthu vatchurukangannum orunguessing irku ees ka..😜😜😜😜na solla maten..super story ees ka. Very intersting😍😍waiting for nxt ud
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Story arumaiya irku ees ka..sena super mam.indha madhu vera magima ku vakkalathu vaangitu avanga mariyadhaiye keduthukka pora...anbai pattaya paduthu vaanga mudiyadhu..aana avanga appasuper ponnungaluku thevaiyana vishaythai chinna vayadil irundhu solli paarkanum.illana ipdi thaan kashtapadanum....diya appa yaarunu oru guessing irku apram solren...ammavaiyum kandupidichuten ka..same time aen diya vtla tv illai nalladhu kettadhu veliulagam theriyama valarthu vatchurukangannum orunguessing irku ees ka..😜😜😜😜na solla maten..super story ees ka. Very intersting😍😍waiting for nxt ud
மிக்க மிக்க நன்றி சகி. யூ கம் சரியாக இருக்கலாம் .சரியாக இல்லாமலும் போகலாம் .அன்புக்கும் விமர்சனத்திற்கும் மனமார நன்றி சொல்கிறேன்.❤❤❤❤
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
மிகவும் அருமையான பதிவு ரொம்ப ரொம்ப அழகா interest ஆகா செல்கின்றது கதை. எப்படியோ சேனா தியா வை அடா வைத்து விட்டான்.இதில் அவள் வாழ்வில் என்ன பிரச்சினை கொண்டு வரப் போகிறதோ. அதில் இருந்து அவள் குடும்பம்,சேனா எப்படி தியாவை காப்பர்கள்.இந்த மதுரா வேற ரொம்ப ஓவர் ஆ தா போற😍😍😍😍
மிக்க மிக்க நன்றி சகோ உங்களின் அன்புக்கும் விமர்சனத்திற்கும் யார் யாரை காப்பாற்றுவார்கள் என்ன பிரச்சினை என்று வரும் வாரங்களில் படித்து தெரிந்து கொள்ளுங்கள் ❤❤❤❤
 

Saransasi

Member
Messages
32
Reaction score
7
Points
8
அருமையான பதிவு.இருவரின் நடனம் மெய் சிலிர்க்க வைத்து விட்டாது. அவ்வளவு அருமை.மிதுனா இல்லையா திவ்யா பாரதி சூப்பர் பெயர் யாருடை தொழிலை வைத்து அவரை ஏசி பேசக் கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் எத்தனை பேர் வாழ்வில் நன்மை செய்யுது உள்ளாள்.இங்கும் இவருக்கு ஒரு வில்லன் அருமையான கதை நகர்வு சிஸ்டர்😍😍😍
 

RashmiRashmi

New member
Messages
3
Reaction score
0
Points
1
வெப்பமாய் நீ! தட்பமாய் நான்!



வன்ணங்கள் 2021ல் வாய்ப்பு கொடுத்த நித்யா கார்த்திகன் அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாசகர்கள் அனைவருக்கும் ஈஸ்வரியின் அன்பான வணக்கங்கள்.🙏

காதலே வாழ்க்கையின் மூச்சு காற்று என்று நினைக்கும் ரகம் நான். காதல் இல்லையேல் என் எழுத்துக்கள் இல்லை.

எப்பவும் போல் முதல் மூன்று அத்தியாயம் அறிமுகம். பிறகு கதை தொடங்கும்.

எப்பவும் போல் காதலை கொண்டாடும் கதாப்பாத்திரங்களுடன் வந்திருக்கிறேன்.வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் .என்றென்றும் அன்புடன் ஈஸ்வரி .

இந்தலிங்கில் Comments podunga.



வெப்பமாய் நீ! தட்பமாய் நான்!

View attachment 7
அத்தியாயம் - 1

மும்பை மாநகரில் கொதிக்கும் வெயிலில்,

“மேடம், சூட்டிங் ரெடி!” என்றதும் கவர்ச்சி நடிகை மிதுனா தயாராகி வந்தார். சூட்டிங் நடக்கும் இடத்தைச் சுற்றி மிதுனா மிதுனா என்ற கோசம் வேறு. தனது 35 வயதிலும் அழகு குறையாமல், நாயகனோடு ஒரு பாடலுக்கு நடனம் ஆடிக் கொண்டிருந்தாள். பாடி ஆடும் போது, நாயகன் கூட ஒருமுறை மூச்சு வாங்கி நின்று விடுவார். அந்த மாதிரி இவளுக்கெல்லாம் மூச்சு வாங்காதோ என்று ஏக்கமாய் பலபேர் பார்த்திருக்கின்றனர்.

இந்தி சினிமாவில் கால் பதித்த நாளிலிருந்து இன்றுவரை மார்க்கெட் சரியாமல் நடிக்கும் ஒரே பெண்ணவள். வயது 35 என்று அடித்து சத்தியம் செய்தாலும், யாரும் நம்ப மாட்டார்கள். பார்க்க இருபத்தொரு வயது பெண் போல் நளினமாய் இருப்பவள். அவள் ஏதோ ஒரு படத்தில், ஒரு பாடலுக்கு ஆடியதில் அந்தப் படம் ஹிட்டானது. அன்றிலிருந்து செண்டிமெண்ட்டாக இந்தி சினிமாவில் எழுதப்படாத விதி போல், மிதுனா ஒரு பாடலுக்கு ஆடினால் அந்தப் படம் ஹிட் என்று முடிவே செய்யப்பட்டது. ஒரு நடிகை தான் நடிக்கும் ஒரு சினிமாவிற்கு வாங்கும் சம்பளத்தின் அளவை விட ஒரு பாடல் ஆடுவதற்கு கொடுக்கப் பட்டது.

மார்க்கெட் குறையாது, நடிகை என்ற பெயரும் கூட, மிதுனாவின் கண்களுக்கு மயங்காத ஆண்களே கிடையாது. இந்தி சினிமாவில் கவர்ச்சியால் நாயகர்களை மட்டுமல்ல, சினிமா பார்க்கும் அத்தனை ஆண்களையும் கட்டிப் போட்டிருக்கும் பெண் இவள். ஆண் மனம் விரும்பும் ஒரே நடிகை மிதுனா.

பாடல் காட்சி முடிந்து வெளியே வரும்பொழுது, தெலுங்கு சினிமாவில் ஒரு குத்துப் பாடலுக்கு டான்ஸ் ஆடச் சொல்லி அழைப்பு வந்திருப்பதாய் மேனேஜர் சொல்லவும், யாரோடு ஆடனும்? எந்த நடிகர் எல்லாம் கேட்டு, ஓகே என்ற பின்,

திடீரென்று ஏதோ நினைத்தவள், “தயாரிப்பாளர் யார்?” என்றாள்.

“வாமனன்…” என்றதும்,

“அந்தப் பாடலுக்கு ஆட முடியாது. அதை கேன்சல் செய்திடு.” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.

மேனேஜர் ரிஷி, “மேடம், பல கோடிகளில் சம்பளம். அப்புறம் ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள்?”

“பணத்திற்காக நடிக்கணும்னு நினைத்தால், இன்னிக்கு எல்லா தியேட்டரிலும் என் படம்தான் ஓடியிருக்கும். நான் சொன்னதை மட்டும் செய். கேன்சல் பண்ணிவிடு!”

காருக்குள் ஏறி அமர்ந்ததும், எதையும் கண்டு கலங்காத இதயம் கலங்கியது.

‘இந்தப் பெயர், ஏன் என்னை துரத்துகிறது...? வாழ்க்கையில் யாரை காணவே கூடாது என்று ஒதுங்கி ஒதுங்கி ஓடிக் கொண்டிருக்கிறேனோ, அவன். ஆனால், தன்னை விடாமல் துரத்தும் ஒரு உறவு. என் வாழ்க்கையையே நாசம் செய்தவன்.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்று நினைத்து ஒதுங்கினாலும் அவன் தன்னை துரத்தி வருகிறானே?’ என்று காரை விட்டு இறங்கி, கோபத்தோடு வீட்டிற்குள் வந்தாள்.

வீட்டில் பணியாற்றும் வேலையாட்கள், மேடம் என்று அழைத்த வார்த்தையைக் கூட காதில் வாங்காமல், தனது அறைக்குள் நுழைந்து கதவை ஓங்கிச் சாத்தி, வாயில்லாத அதன் மேல் தனது கோபத்தைக் காட்டினாள்.

பின், குளியலறை புகுந்தவள், மனதின் ஆத்திரம், தன் மேல் பூத்தூரலாய் பொழியும் குளிர் நீரில் குறைந்து விடுமென நினைத்து நின்றது தவறு என,

தண்ணீரோடு தனது கண்ணீரும் வழிந்தது. மறக்க மறக்க துரத்தும் பெயர் வாமனன். கண்ணீர் வற்றி கண்களில் எரிச்சல் வரும் வரை அழுது முடித்து, அப்படியே ஈரமான டவலுடன் வந்து, கட்டிலில் விழுந்தாள்.

தேற்றவோ, மனவலியை ஆற்றவோ ஆளில்லாத சினிமா உலகத்தில், தனது நெருக்கமான தோழியான தலையணையைக் கட்டிக் கொண்டு படுத்து இருந்தாள். ‘காணாமல் போன, எனது பெயரையும் இளமையையும் வாழ்க்கையையும் யார் மீட்டுத் தருவார்கள்...? தொலைந்தது தொலைந்ததுதானே...!’

……….

இங்கே சென்னையில் வெய்யோன் தன்னை மேற்கே மறைத்துக் கொள்ள, நிலவு மகள் சூடான சென்னையை குளிர்விக்க முயன்ற வேளையில், வாமனன் கால் மேல் கால் போட்டு அமர்ந்து, ‘நீயாவது என் சோகம் தீர்ப்பாயா வெண்ணிலவே!’ என்று வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

வாமனன், தென் மாவட்டங்களில் பெரிய சினிமா தயாரிப்பாளர். பல கல்லூரிகளுக்கு முதல்வர். தொட்டதெல்லாம் துலங்கும் தொழில் வளத்திற்குச் சொந்தக்காரர்.

வீட்டிற்குள் கலகலவென்று சிரிப்பொலியும், சந்தோசமும், வீடு நிறைய ஆட்களும் இருந்தனர். ‘யாருக்கும் தான் தேவையில்லை. தன் பணம்தான் தேவை.’ ஒருபுறம் மனைவியின் உடன் பிறந்த அனைவரும், மறுபுறம் தன் உடன் பிறந்த அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, ஏனோ அதில் கலந்து கொள்ள மனம் விரும்பாமல், நிலவிற்கு துணை நின்றிருந்தார்.

கோடிக்கணக்கில் பணம். ஆனால் அதைக் கொண்டாட வாரிசு இல்லை. இப்படி உறவுக்காரர்கள் சூழ்ந்து, அதை மிகவும் உற்சாகமாகச் செலவழித்துக் கொண்டிருந்தனர்.

தன் வாழ்க்கையில் வெறுமை சூழுமிடம் தன் வீடுதான். வீட்டிற்கு வரவே வெறுப்பு. தன் வீட்டின் கூடத்தில், தன் மனைவியானவள் தம்பி மகனுக்கு ஆசையாய் சோறூட்டிக் கொண்டு இருந்தாள். ‘இவ்வளவு பணத்தையும் சம்பாதிக்கும் என்னை கவனிக்க ஆளில்லையே என்று 53 வயதில் ஏக்கம், ஆசை. வயோதிகம் நெருங்க நெருங்க, சிறு குழந்தையைப் போல், யாராவது தன்னுடன் பேச மாட்டார்களா?’ என்று மனம் ஏங்கித் தவித்தது.

ஏக்கம் வரும் நாளெல்லாம், ‘தன் மனதை நிறைத்து, நிரப்பிக் கொண்டிருந்தவளிடம் இருந்து ஒரு மன்னிப்பு கிடைத்துவிடாதா என்று மனம் ஏங்கித் தவித்தது. அவளுக்கு செய்த குற்றங்கள் ஏராளம். பண்ணிய துரோகம் அப்படி…!’

அந்த நேரம் மேனேஜர் சாமிநாதன் வந்து, “சார், மிதுனா மேடம் பாடலுக்கு டான்ஸ் ஆட மாட்டேன்னு சொல்லிட்டாங்க.”

லட்சக்கணக்கானோர் தன்னிடம் வேலை செய்கிறார்கள். நாளொன்றுக்கு ஆயிரம் பேரை ஆட்டிப் படைக்கும் தன்னால், அவளை நெருங்கவே முடியவில்லை. ஒரே ஒரு மன்னிப்பு, அவளிடம் வேண்டி விட மனம் கிடந்து தவித்தது.

மேனேஜர் சாமிநாதன், “சார், அவள் எல்லாம் ஒரு ஆளா...? அவள் ஆடையும் அவள் முகமும்? அவளெல்லாம் உங்களின் கால் தூசுக்குக் கூட லாயக்கில்லை. அவளை நினைத்து நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்...?”

‘ஸ்டுப்பிட் நான்சென்ஸ். அவ இவன்னு எதுக்குப் பேசுற...?”

“சார்! அவள்…” என்று இழுக்க, வாமனனின் முறைப்பில், “அவங்க பலான நடிகை. பலரோட போனவங்க.”

“ஏய்! நீ பல பேரோட போனதைப் பார்த்தியா...? அவளைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? அந்த மாதிரி படத்தில் அவள் நடித்தது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால், அவள் மோசமானவள் கிடையாது. அவள் நெருப்பு. யாரைப் பற்றியும் தெரியாமல் தவறாய்ப் பேசாதே! ஓக்கே...!”

‘அவளைப் பற்றி பேசினால், இவருக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது’ என்று நினைத்த சாமிநாதன், அவ்விடத்தை விட்டு நகர்ந்த பின், வாமனனின் கண்ணில் இருந்து நீர் வடிந்தது.

‘இவனை மிரட்டி விட்டோம். ஆனால், அவளைப் பற்றி எல்லோரும் இப்படித்தானே நினைப்பார்கள். கொலை செய்யாமலே ஒருத்தரை குற்றவாளியாக்கியது போல், அவள் வாழ்க்கையையே நாசமாக்கி விட்டோமே...!’ என்ற ஏக்கத்தின் தாக்கத்தில் மனம் அலை பாய்ந்தது.

………

அதிகாலையில் சென்னையில் கதிரோன் தன்னிடமுள்ள ஆயிரம் விரல் கொண்டு ஒளிக்கற்றைகளை பூமியில் பரப்பி, இருளினை விரட்டி வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கும் வேளையில்…

“ஆத்வி எழுந்திடு! காலேஜுக்கு நேரமாச்சு!” என்று மூன்றாவது முறையாக அழைக்கும் தனது அம்மாவை, ஓரக்கண்ணில் விழித்துப் பார்த்து,

“குட் மார்னிங்மா!” என்று சொல்லியவனின் தலையைக் கோதிய இளவரசி அவனருகே வந்து அமர்ந்ததும், செல்லமாய் தாயின் மடியில் படுத்துக் கொண்டான்.

“கண்ணா எழுந்திரு. நேரமாச்சு!” என்றதும், எழுந்தவன் குளியலறை சென்றான்.

அவன் எழுந்து வந்ததும், பனியன், டவள், சட்டை என்று அவன் உடுத்தும் உள்ளாடை வரை எடுத்து நீட்டிக் கொண்டிருக்க அந்த நேரம் வேலையாள் ஒரு பெரிய டம்ளரில் பால் கொண்டு வந்து நீட்டினாள்.

அதை வாங்கிப் பருகிக் கொண்டே, “டாடி! எங்கம்மா?”

“அவர் என்னைக்குடா வீட்டில் இருந்திருக்கிறார்? இளங்கோவன்னு பெயரைப் பார்த்ததும், பேர்கூட ரெண்டு பேருக்கும் பொருத்தமா இருக்கு. வாழ்நாள் முழுவதும் ஒருத்தரோட ஒருத்தர் விட்டுப் பிரியாமல் ஒன்றிக் கொண்டே இருப்பார்களென, ஏதோ ஒரு ஜாதக்காரன் சொன்னான். அவன் மட்டும் கையில கிடைக்கட்டும். மண்டையை உடைச்சு மாவிளக்கு எடுக்கிறேன்.”

“ஏன்மா! டாடிக்கு என்ன குறைச்சல்?”

“டாடிக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. எனக்குத் தான் எல்லாம் குறைச்சல். என்னைக்காவது ஒரு நாள் வீட்டிலிருந்து, நம்ம தேவை என்னன்னு கேட்டிருக்கிறாரா? கல்யாணம் முடிஞ்ச நாளிலிருந்து தனியாவே இந்த வீட்டை சுத்திக்கிட்டு இருக்கேன். கட்சி மீட்டிங் பிரச்சாரம் என்று எந்நேரமும் பிஸியாகவே அல்லவா இருக்கார்.

பெரிய அரசியல்வாதி. தொண்டர்களுக்கு தலைவன். ஆனால், மனைவியும் மகனையும் விருந்தாளியைப் போல், எப்பவாவதுதான் பார்க்க வருகிறார். உன் அப்பாவை என்னென்று சொல்ல...?”

“அம்மா, அவர் ஒரு அரசியல்வாதி. அப்படித்தான் இருப்பார்.”

“அதுவும் சரிதான். நான், உன்னைப் பார்த்துக் கொள்வதில் தான் எனக்கு நிம்மதியே இருக்கு. ஆனால், அதுவும் கொஞ்ச நாளில் தொலைந்து போய்விடும்.”

“ஏன் மா அப்படி சொல்றீங்க…?”

“அவருக்கு அடுத்து நீ தான், அடுத்து நம்ம கட்சியில். அப்புறம் நீயும் வீட்டுக்கு வருவயோ...! இல்ல, உங்க அப்பாவைப் போல சுத்திக்கிட்டு இருக்கப் போறீயோ...! யாருக்குத் தெரியும்?”

அம்மாவின் கன்னத்தைப் பிடித்து செல்லமாக ஆட்டி, “அம்மா, உன் மருமகள் இங்கே இருந்தால், நான் வீட்டை விட்டுப் போகவே மாட்டேன்.”

“அது என்னடா, அம்மா இருந்தால் வீட்டுக்கு வரவே மாட்ட, பொண்டாட்டி இருந்தால் விட்டுவிட்டுப் போக மாட்டியா...? என் மருமகளிடம் உன் விருப்பத்தை சொல்லிட்டியா...? அவ உன்னிடம் பேசுறாளா...?”

“இப்பத்தான் நான் எதாவது கேட்டால், ‘ம், ஒக்கே சீனியர்’ என்று சொல்கிறாள். இந்த உலகத்தில் அவள் பேசும் இரண்டாவது ஆண்மகன் நான்தான்.

அவ ரொம்ப அமைதி. நான் என்ன சொன்னாலும் தலை ஆட்டுவாள். காலேஜ் கூட வேற எந்தக் காலேஜிலும் சேர்ந்திடுவாளோன்னு பயமிருந்துச்சு. நல்லவேளை, நான் படிக்கிற காலேஜில் ஜாயின் பண்னிட்டாம்மா. இன்னைக்கு வருவாள்...!”

“நல்லது. இன்னைக்கே உன் விருப்பத்தைச் சொல்லிடு கண்ணா.”

“இல்லம்மா வேண்டாம்! அவள் சின்ன பொண்ணு. கொஞ்ச நாள் ஆகட்டும்!”

“அது சரி, நம்ம அளவுக்கு அந்தப் பெண்ணின் வீட்டில் வசதி இருக்கா...?”

“நம்ம அளவுக்கா என்று தெரியாது? ஆனால், நான் படிக்கும் பள்ளியில் தான் படித்தாள். இப்ப, நான் படிக்கும் காலேஜில் தான் படிக்கப் போகிறாள்...! அப்போ, வசதியான குடும்பத்தை சார்ந்தவளாய்த்தான் இருப்பாம்மா.”

“ஆமாண்டா, அப்பாவுக்கு வசதியான பொண்ணாய் இருந்தால் தான் பொண்ணு கேட்பார். எனக்கு அவள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. உனக்குப் பிடித்து இருந்தால் மட்டும் போதும். ஒரு நாளைக்கு, அவளை நம் வீட்டுக்கு கூட்டிட்டு வாடா!”

“அவள், அப்படி எல்லாம் வரமாட்டாம்மா...! அவள் மாமாவின் கண்காணிப்பிலும், சித்தியின் மேற்பார்வையிலும் வளர்கிறாள். கொஞ்ச நாள் போகட்டும், அப்புறம் கூட்டிட்டு வர்றேன்.”

……………..

இங்கே இளவரசன், தனது நண்பனான மணிச்சந்திரன் வீட்டிற்கு வந்தார். இருவரும் தாங்கள் போகப்போகும் பிரச்சாரத்திற்கான இடத்தைப் பற்றி விவாதிக்கும் போது,

“மாமா, பால் எடுத்துக்கோங்க!” என்று வந்த பெண்ணைப் பார்த்து,

“அம்ரிதா, நல்லா இருக்கியாடா...?”

“நல்லா இருக்கேன், மாமா.”

“நல்லா இருக்கியா...? ஏன்மா, இப்படி ஒல்லியாய் இருக்க...?”

“மாமா, இது தான் சரியான வெயிட்!”

இளவரசனோ, “இல்லை இல்லை, ஆத்வி பக்கத்தில் நீ நிற்கும் போது, ரொம்ப ஒல்லியாக இருப்ப. என் மருமகளாய் உன்னை நான் என் வீட்டிற்கு கூட்டிட்டுப் போகும்போது, கொஞ்சம் சதைப் போட்டிருந்தால் தான் இருவருக்கும் பொருத்தம் நன்றாக இருக்கும்.”

அவள் வெட்கப்பட்டு உள்ளே எழுந்து போக, மகளின் முக மலர்ச்சியைக் கண்டு மணிசந்திரனும்,

“அதற்குள், அவள் சரியாகி விடுவாள், மச்சான்.”

யாருக்கு யார் என்று இறைவன் வகுத்து இருக்கிறான்? இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் வகுக்க, மனித மனமோ விடை தெரியா கேள்விக்கு, விடை தேடிக் கொண்டிருக்கிறது.

சுடும்...

Comments pls

Super இனிய தொடக்கம்.. 👌👌👌👌👍👍👍👍
 

RashmiRashmi

New member
Messages
3
Reaction score
0
Points
1
மிக்க நன்றி சகி. ஹீரோவின் பெயர் கூட எனக்கு பிடித்த கிருஷ்ணரின் பெயர்தான் அன்புக்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றி
Super super
 

RashmiRashmi

New member
Messages
3
Reaction score
0
Points
1
3,வெப்பமாய் நீ! தட்பமாய் நான்!

அத்தியாயம் - 3


அன்று சசி கல்லூரிக்கு தாமதமாய் வரவும், “ஏன்டி லேட்டு?”

“அதுவா, காலையில குளிச்சிட்டு வந்து நின்னப்போ, என் அக்கா அவளின் குழந்தையை கொஞ்ச நேரம் பார்த்துக்கச் சொன்னா. நானும் தூக்கி வச்சிருந்தேன். நான் தூக்கின நொடியிலிருந்து ஒரே கத்துடி. அழுது கத்தி படாதபாடு படுத்திடுச்சு.”

தியா, “அச்சோ, பாவம் குழந்தை. உன்னை யாருடீ மேக்கப் இல்லாமல் தூக்கச் சொன்னாங்க. பாவம், ஒரிஜினல் முகத்தை பார்த்ததும் பயந்து இருக்கும். அதான் கத்திடுச்சு.”

சசி, “ஹேய் நீயாடி பேசின?” என்று மண்டையில் கொட்ட, சேனா வகுப்பிற்குள் நுழைந்தான்.

வந்தவன் “ஹாய் ஸ்டூடெண்ட்ஸ்! முதல் வருடத்தில் பயிலும் மாணவர்களிடம் இருக்கும் திறமையை தெரிந்து கொள்வதற்காக, ஒவ்வொரு வருடமும் கல்ச்சுரல் ப்ரோக்ராமிற்கு ஏற்பாடு பண்ணுவோம்.

விருப்பம் இருக்கிறவங்க பெயர் கொடுங்க. வகுப்பில் அனைவரும் ஒவ்வொன்றிலும் கலந்து கொள்ள, தியாழினி மற்றும் ஐஸ்வர்யா எதிலும் விருப்பம் தெரிவிக்காமல் இருக்க,

சசி இருவரிடத்திலும், “நீங்கள் எதிலும் கலந்து கொள்ள வில்லையா?”

இருவருமே “விருப்பமில்லை!” என்று ஒரு சேரச் சொல்லிக் கொண்டு முகம் பார்த்தனர்.

சசி தலையில் கைவைத்து, “இதில் கூட, உங்க ரெண்டு பேருக்கும் ஒற்றுமைதான். சரி, நான் போய் கலந்து கொள்கிறேன்.” என்று சொல்லி அவள் நடனத்தில் பெயர் கொடுத்தாள்.

ஒருவன் எழுந்து, “சார், நான் கிரண். ஜோக் சொல்வேன். சொல்லவா?”

பக்கத்திலிருப்பவனோ, “சார்! அத்தனையும் மொக்கையும், அட்ட பழசும்.”

சேனா அவன் அருகே சென்று, “அந்தப் பழசை சொல்லக்கூட அவன் தைரியமாய் எழுந்து நிற்கிறான். நீ வரலையே...! யாரையும் மட்டம் தட்டக் கூடாது. ஓகே.”

அவனை தட்டிக்கொடுத்து, “கிரண், நீ சொல்லு.”

“டாக்டர் ஒருத்தனிடம் நீ தினமும் பச்சை முட்டை சாப்பிடனும் என்று சொல்ல, அதற்கு அவனோ, முடியாது டாக்டர் என்றான். ஏன் டா அப்படிச் சொல்ற? என்றவுடன் எங்க வீட்டுக் கோழி, வெள்ளை முட்டைதான் போடுமென்றானாம்.”

“நல்லாயிருக்கு கிரண். பழசாய் இருந்தாலும், நீங்கள் சொல்லும் விதம் நல்லாயிருக்கு.”

“சார், இன்னொன்னு சொல்லட்டுமா?”

“ஹ்ம்ம் சொல்லுங்கள்!”

“ஒருவன் சென்னைக்கு புதுசாய் வந்தவன், வீடு தேடுவதற்காய் புரோக்கரிடம் சென்று, இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா என்று கேட்க, அவரோ கிடைக்காது தம்பி. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்! தங்கம் விக்கிற விலையில் நீ வேற...! என்றான்.

சேவகன் இருவர்கள் பேசிக்கொண்டார்கள். அதில் ஒருவன், "நமது மன்னருக்கு மகாராணி மீது எப்படிச் சந்தேகம் வந்தது?"

மற்றொரு சேவகன் "குட்டி இளவரசரிடம் 'நீ (good)'குட்' பாயா.. (Bad)'பேட் 'பாயா?'னு கேட்க, 'சிப்பாய்'னு பதில் சொன்னாராம்!"

“ஒகே சூப்பர். கல்ச்சுரலுக்கு இன்னும் புதுசா, வித விதமாய் ட்ரை பண்னுங்க!”

மதியம் சாப்பிட்டு முடிந்ததும், இரண்டு மணிநேரம் ஒவ்வொரு வரும், தங்கள் பயிற்சிக்கு என்று நேரம் ஒதுக்கி, தங்களைத் தயார் செய்து கொண்டிருந்தனர்.

அந்த நேரம் உள்ளே நுழைந்த சேனா, “போட்டியில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் இப்போது வந்து என் முன் ட்ரையல் காட்டுங்க!” என்றதும்,

ஒவ்வொருவராய் செய்து காண்பிக்கும் போது, அதில் தென்பட்ட நிறை குறைகளை அவன் சரி செய்வதை பார்த்த அனைவருக்குமே ஆச்சரியம் தான். கோபமே இல்லாமல் எத்தனை முறை கேட்டாலும், அத்தனை முறையும் அவர்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொண்டிருந்தான்.

பின் “போட்டியில் கலந்து கொள்பவர்கள், மூன்று நாளைக்கு விடுமுறை எடுக்கக் கூடாது.” என்றான்.

ஏனோ, அவனின் செய்கை கண்டு, சசிரேகாவிற்கு அவனின் மேல் ஒரு எண்ணமும் ஈர்ப்பும் வந்தது.

அன்று, சசி, மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன என்ற பாடலுக்காக ஆடிக் கொண்டிருக்க,

தியாழினி “இது என்ன சாமிபாட்டு?”

ஐஸ்வர்யா, அவளையே பார்த்து, “என்ன சாமி பாட்டா? நீ சினிமா எல்லாம் பார்த்ததில்லையா...?”

“எங்க வீட்டில் நாங்க யாருமே டிவியே பார்க்க மாட்டோம். டிவியில் கண்டதையும் காட்டுவார்கள் என்பதால் என் பாட்டிக்கு பார்ப்பதே பிடிக்காது. பாட்டிக்கு பிடிக்காத எதையும், என் மாமா, சித்தி, அம்மா யாரும் பண்ண மாட்டாங்க. நானும் பண்ண மாட்டேன்.”

“எந்தக் காலத்திலடி இருக்க. டிவியே பார்க்காத நீ தகவல் தொழில் நுட்பம் படிக்கப் போறயா? சூப்பர். அப்போ, உன் பொழுதுபோக்கு தான் என்னடி?”

“பொழுதுபோக்கு, சாயந்திரம் பரதநாட்டியம். அது என் வீட்டிலே வந்து சொல்லிக் கொடுப்பாங்க. அப்புறம், நானும் சித்தி மாமா உட்கார்ந்து பேசுவோம். அதிகமாய் படிப்பேன். நைட்டு எல்லாரும் சேர்ந்து, ஒரு, ஒரு மணி நேரம் ஒவ்வொரு வேலையாய் செய்வோம். இதில் என் நேரம் போய்விடும்.”

“உனக்குத்தான் பரதநாட்டியம் தெரியுமே? அப்போ, நீ ஏன் பெயர் கொடுக்கலை. ஐயோ! அப்படியெல்லாம் எல்லோர் முன்னாடியும் நான் டான்ஸ் ஆடுறது, என் அம்மாவுக்கும் பாட்டிக்கும் சுத்தமாய் பிடிக்காது. பரதநாட்டியம் எனக்குப் பிடிக்கும். ஒருநாள் கோவிலுக்குப் போகும்போது மத்தவங்க ஆடுவதைப் பார்த்து, விருப்பப்பட்டு நான் அம்மா கிட்ட கேட்கவும், எனக்காக பல கண்டிஷன் போட்டு, என்னை சேர்த்து விட்டிருக்காங்க.”

“இந்தக் காலத்தில் இவ்வளவு கட்டுப்பாடாய் இருக்காங்களே. நீ எப்படித்தான் இருக்கியோ...?”

“எனக்கு அது பழகிருச்சு. ரொம்பவும் பிடிச்ச விஷயம் தான்.”

“உனக்கு, உன் அப்பா இல்லைன்னு பீலிங்கா இல்லையா...?”

“அப்பா எப்படி இருப்பார்ன்னு தெரியாதுடி. அம்மாவும் எப்பவாச்சும் தான் வருவாங்க. எனக்காகத்தான், என் அம்மா, மாமா, சித்தின்னு இத்தனைபேர் இருக்காங்களே. அதுவும் என் மாமா எனக்கு உயிர். எங்க மாமா என்னைப் பார்த்துக்கிறதுக்காக கல்யாணமே பண்ணிக்கல. சித்தப்பா பாரினில் இருக்காரு. அவருடன் சித்தியை கூப்பிட்டும் கூட, என்னை விட்டுட்டு போக மனசு இல்லாமல், இங்கதான் இருக்காங்க.

என் குடும்பம் தான் எனக்கு உசுரு. அவங்களுக்கு நான் தான் உசுரு. எங்க வாழ்க்கையில் கஷ்டம் கவலை வருத்தமே கிடையாது.” என்று புன்னகைத்தாள்.

அவள் சிரிப்பில், ஐஸ்வர்யாவும் தொலைந்து தான் போனாள்.

கல்லூரி தொடங்கி இன்றோடு நான்காவது நாள். அனைவரும் வகுப்பறையில் அமர்ந்திருக்க, இன்றும் நாளையும் வகுப்புகள் எதுவும் நடைபெறாது. அனைவரும் போட்டிக்குத் தயாராகுங்கள் என்ற தகவல் வந்தது .

ஸ்ரீதர் சேனா தனது பொறுப்பில் இருக்கும் கலைநிகழ்ச்சிகளில், ஒன்றில் கூட குறை வரக்கூடாது என்று ஒவ்வொருவரையும் தனித் தனியாக சீனியர் மாணவர்களை வைத்து கவனித்துக் கொண்டிருந்தான்.

பரத நாட்டியம் ஆடுபவள் சசி என்பதால், அவளது பெயர் சொல்லி அழைக்க, அவளோ விடுமுறை.

“ரிகர்சலுக்கு இன்னும் ரெண்டு நாள் தான் டைம் இருக்கு. இன்னிக்கு எதுக்கு லீவ் எடுத்தாள்?” என்று கோபம் அவனுள் எழுந்தது. அதை மறைத்துக் கொண்டு, “ஓகே நாளை பார்த்துக் கொள்ளலாம்.” என்று விட்டான்.

சிவசேனா கல்லூரி முடிந்து அன்று வீட்டிற்குள் நுழையும் பொழுதே, தனது அம்மாவின் கைமணம் வாசல் வரை வரவும், உள்ளே வந்தவன், “என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?”

“நீ வீட்டுக்கு வந்தாலே ஸ்பெஷல் தான், கண்ணா. போய் கை கால் அலம்பிட்டு வா!” என்றதும்,

அவன் போய் குளித்துவிட்டு வந்து அமர்ந்ததும், ஒரு தட்டில் உளுந்து வடையும், ஒரு கோப்பையில் காஃபியும் வைத்தார்.

காஃபியோடு வந்து வராண்டாவில் அமரும் போது, சலங்கைச் சத்தம் ஆடவன் மனதைத் துளைத்தது.

புது வீடு வாங்கி ஒரு வாரம் தான் ஆன் நிலையில், தன் தாயுடன் குடியேறி இருக்கிறவனுக்கு, மாலையில் கடந்த ஒரு வாரமாய் கேட்கும் சலங்கை சத்தம், ஆடவன் மனதிற்கு இதமாக இருந்தது.

அம்மா பரதநாட்டிய கலைஞர் என்பதால், அந்த சத்தம் மனதிற்கு இதமான சத்தம். வெளியே போய் எட்டிப் பார்த்தான். யாரும் இல்லை. சலங்கைகளின் சப்தம் அவன் மனதைத் தூண்ட, எட்டு வைத்து பால்கனி வழியே ஏறி, மேலே வந்து பார்க்கும்போது,

இடை வளைத்து, தாம் தீம், தக்க திமி, தக்க திமி, என்று விரல்களையும் கால்களையும் நளினமாய் ஆட்டி திரும்பும் போது, ‘இவளா…’ என்று பார்த்தான்.

வகுப்பறையில் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில், அதைத் தவிர்த்து வாய் திறவா மடந்தையவள். ‘இவ்வளவு அழகாய் ஆடுபவள், ஏன் பெயர் கொடுக்கவில்லை என்று நினைத்தவன், சரி நாளை கல்லூரிகள் பார்த்துக்கொள்ளலாம். திறமை இருந்தும், அதை ஏன் வெளிக்காட்டிக்கவில்லை’ என்று நினைத்தான்.

அவள் ஆடி முடித்து குருவிற்கு வணக்கம் சொல்லி உள்ளே சென்றுவிட, நடனத்தில் லயித்திருந்தவனின் கவனத்தை தனது பாக்கெட்டில் இருக்கும் கைபேசி விடாமல் ஒலித்துக் கலைத்தது. பெயர் பார்க்காமல் எடுத்து காதில் வைத்தான்.

“ஹலோ! சாருக்கு என் நினைப்பெல்லாம் வரவே இல்லையா...? என்கிட்ட சொல்லாமலே வீட்டுக்குப் போயிட்டீங்க?”

அந்தக் கேள்வியில் எரிச்சலுற்றவன், “தினமும் நான் உன்கிட்ட சொல்லிட்டு தான் கிளம்புறேனா...?”

“எனக்கு வேலை இருக்கு மகிமா. நான் கிளம்பிட்டேன்.” என்று முடித்தான்.

அவளோ “ஹலோ! கால் மஹி ஒன்லி. அப்புறம் எனக்கும் தான் வேலை இருக்கு. அதற்காக உங்களைப் பார்க்காமல் பேசாமல் இருக்கிறேனா என்ன?”

அன்பு என்ற பெயரில் கடந்த மூன்று வருடமாக தொல்லை செய்யும் இவளை என்ன செய்வது?

“எனக்கு வேலை இருக்கு. நான் அப்புறம் கூப்பிடுறேன்.” என்று அழைப்பைத் துண்டித்தான்.

மகிமா கோபமாய் தன் செல்போனைத் தூக்கி, மெத்தையில் போட்டாள்.

“அக்கா, என்ன இன்னிக்கும் அந்த வாத்தியார் உன்னை கண்டுக்காமல் போய் விட்டாரா?”

கண்கலங்கிய மஹியை சமாதானப்படுத்திய மதுரா, “அக்கா அழாதே! நம்மகிட்ட இருக்கிற பணத்திற்கு, நீ ஏன் அவர் படிக்கிற காலேஜில் போய் வேலை செஞ்சு, நம் ஸ்டேட்டசைக் கெடுத்துக்கிற? அதுவும் நம்ம காலேஜில் போய்!

மூணு வருஷமாய் லவ் பண்ற? ஏதாவது ஒரு இம்ப்ரூவ்மென்ட் இருக்கா...? இல்லையே...! அப்புறம் ஏன்? விட்டுத் தொலைய வேண்டியதுதானே!”

தேவகி தனது மகனிடம், “யாரு சேனா ஃபோனில்? இவ்வளவு டென்ஷனாய் பேசுற?”

“மகிமா தான்மா. பிடிக்கலைன்னு சொன்னாலும், டார்ச்சர் பண்றாம்மா...! எனக்குனு கல்லூரியில் நல்ல பேரு இருக்குமா. அதை இவள் கெடுத்து விடுவாளோன்னு கொஞ்சம் பயமா இருக்குமா! பிடிக்கலைன்னு, சட்டென்று வேலையை விடவும் முடியாதும்மா. இந்த சம்பளம் வேறு பக்கம் கிடைக்குமான்னு தெரியாது. நினைச்சாலும் விட முடியாது. வீடு வேற லோன் போட்டு வாங்கி இருக்கேன். கொசுவிற்கு பயந்து, யாராவது வீட்டைக் கொளுத்து வாங்கலா...?”

அந்த நேரம் வீட்டின் கதவு தட்டப்பட, போய் திறந்த தேவகி, அங்கே ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் நின்றிருக்க, “யார் நீங்கள்?”

“சேனாவின் வீடுதானே!” என்றதும்,

வெளியே வந்த சேனாதிபதி கைகூப்பி, “வாங்க!” என்று வரவேற்றான்.

தன் மகனுக்கு தெரிந்தவர் என்று தேவகி போய் காஃபி கொண்டு வந்து கொடுத்து உபசரித்தார். அதை ஏற்றுக் கொண்டவர் சிறிது நேர மௌனத்திற்குப் பின், தேவகியிடம் “நான் பாண்டியன். என் காலேஜில் தான் உங்க பையன் ஒர்க் பண்றார். என் மகளுக்கு உங்க பையனை பிடித்திருக்கிறது. மேற்கொண்டு பேசலாமா?” என்றார்.

தன் மகனுக்குப் பிடிக்காத ஒன்றை ஒருபோதும் செய்யாதவர், “இப்போதைக்கு அவனுக்கு கல்யாணம் பண்றதா இல்லை. சேனாவின் இருபத்தொன்பது வயதில்தான் திருமணம் செய்யணும்னு ஜாதகத்தில் இருக்கு.

இந்தவீடு லோனில் வாங்கியது. நாங்கள் மிடில் கிளாஸ். உங்கள் வசதிக்கும், எங்கள் வசதிக்கும் ஒத்துப்போகாது. நீங்கள் வேறு இடம் பார்த்துக் கொள்வதுதான், செல்வச் செழிப்பில் வாழ்ந்த உங்க மகளுக்கு நல்லது. நீங்கள் உங்கள் மகளின் விருப்பத்தை எல்லாம் நிறை வேற்றலாம். ஆனால், என் மகனால் அது முடியாதே...!”

“எனக்கு ரெண்டு பொண்ணுங்க. அவங்களின் எண்ணங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றுவதுதான் என் பொறுப்பு. என் பொண்ணு உங்க பையனுக்னுக்காகத்தான் படிச்சு முடிச்சுட்டு, என் காலேஜில் வேலை பார்க்கிறாள்.

நீங்க என்னைக்கு இருந்தாலும் சேனாவிற்கு ஒரு பொண்ணு பார்க்கப் போறீங்க. அது ஏன், என் மகளாக இருக்கக் கூடாது. கொஞ்சம் யோசியுங்கள்!” என்று சொல்லிவிட்டு, அவர் எழுந்து சென்றுவிட்டார்.

“என்னம்மா, மகளுக்கு மேல அப்பா இருக்கிறார். விலகிப் போனாலும் புரிந்து கொள்ளவே மாட்டேங்கிறாங்க.”

பெற்றவர், தனது மகளிடம் சென்று நடந்ததைச் சொல்லவும்,

அவளோ “அவருக்கு என்னதான் பிரச்சனை?”

“மகிமா, அவனுக்கு பிடிக்கலைன்னா விட்டுடலாம். நீ கொஞ்சம் யோசி! உன் விருப்பத்தை நிறைவேற்றத்தான் நான் பேசினேன். ஒருத்தனை வற்புறுத்தி திருமணம் செய்தால், வாழ்க்கை நல்லா இருக்காதுடா..! பெண் பிள்ளைக்கு காலாகாலத்தில் திருமணம் செய்வது பெற்றோரின் கடமை. உனக்கு மூணு மாசம் டைம். அதற்குள் உன் முடிவைச் சொல்லு!” என்று சொல்லிவிட்டார்.

சுடும் ...

Comment pls...

ரொம்ப நல்லா போகுது 👌👍👍
 
Top Bottom