Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

Anitha Sundar

Active member
Messages
116
Reaction score
64
Points
28
அத்தியாயம் - 6

அதிகாலையில் எழுந்து குளித்து சேனாவின் வீட்டிற்கு வந்த போது, அவன் இன்னும் வந்திருக்க வில்லை. அங்கு இருந்த மியூசிக் சிஸ்டத்தில் தேவகி பாடலைப் போட, பெண்ணவள் ஆடிக் கொண்டு இருந்தாள். ஏனோ, அவள் ஆடும் போது சில இடங்களில் கைகளை அசைப்பதில் தவறு என்று பட, தேவகி,

தனது சேலை முந்தானையை மடித்து இடுப்பில் சொருகியவர், ஒவ்வொரு வரிக்கும் முகபாவனைகளை எப்படி காண்பிப்பது என்று சொல்லிக் கொடுக்க, இருவரும் சேர்ந்து ஆடினர்.

அந்த நேரம் வந்த ஸ்ரீதர்சேனா, இருவரும் ஆடுவதை பார்த்து, தனது செல்போனில் அவர்களை அறியாமல் படம் பிடித்துக் கொண்டிருந்தான்.

எதேச்சையாக திரும்பிய தியாழினி, அவனைக் கண்டதும் கரண்ட் ஷாக் அடித்த மாதிரி அப்படியே நிற்க, நளினமாய் ஆடிக் கொண்டிருந்தவள் சட்டென்று மந்திர சக்திக்கு உட்பட்டது போல் நிற்பதைக் கண்டவர் திரும்பிப் பார்க்க, அங்கே தன் மகன் சேனா.

தேவகி அவளிடம், “நம்ம சேனாதானே. நேற்றெல்லாம் நீ அவனுடன் சேர்ந்து ஆடத்தானே செய்தாய். இப்ப என்னாசு? ஏன் இப்படி நிற்கிற?” என்று கேட்ட போது தான், நேற்றைக்கும் இன்றைக்கும் உள்ள வித்தியாசத்தை இருவரும் உணர்ந்தனர்.

அவனும் எதுவும் நடவாதது போல, “ஹாய்! குட் மார்னிங் தியாழினி. பிராக்டிஸ் எல்லாம் முடிஞ்சதா?”

தலையாட்டியவள், “நான் வீட்டில் போய் கிளம்பி வருகிறேன்.” என்று சென்று விட்டாள்.

“என்ன ஆச்சு இந்தப் பொண்ணுக்கு, இவ்வளவு நேரம் நல்லாத்தானே இருந்தா?” என்று சொல்லிவிட்டு அவர் சமையலறைக்குள் நுழைய,

ஆடவன் ‘தான் சிறு பெண்ணின் மனதில் நஞ்சை விதைக்கக் கூடாது. இதை சரி செய்யணும்.’ என்று நினைத்துக் கொண்டே குளியலறை புகுந்தான்.

தனது அம்மாவிடம் பரத நாட்டியத்திற்கு தேவையான ஆடை எல்லாம் அவளுக்கு கொடுங்க என்றதும், கிளம்பி வந்தவளிடம் தேவகி கொடுக்க வாங்கிக் கொண்டாள்.

வாகனத்துக்குள் ஏறியதும் காரை ஓட்டிக்கொண்டே சேனா அவள் புறம் திரும்பி, “என்ன ஆச்சு? ஏதாவது ப்ராப்ளமா?”

“ஏதும் இல்லையே? ஏன் கேட்கிறீங்க?”

“காலையில் ஆடிக் கொண்டிருந்தவள் என்னைப் பார்த்ததும் சட்டென்று நின்னுட்டியே...! அதான் கேட்டேன்.” என்று, எதுவும் இல்லாதது போல் அவன் கேட்க,

‘ஹோ...! அப்போ நமக்குத்தான் எதுவோ தோன்றி இருக்கும் போல. அவருக்கு எதுவும் இல்லை’ என்றதும், முகத்தை மாற்றிக் கொண்டு, “அதெல்லாம் ஒன்னும் இல்லை.” என்று தட்டுத் தடுமாறி பொய் சொன்னாள்.

காலையில் 10 மணிக்கு ப்ரோகிராம் என்றதும், அனைவரும் மேக்கப் பண்ணிக் கொண்டிருந்தனர். பரதநாட்டியத்திற்கு என்று ஒரு ஆசிரியரை நியமிக்க, அவர் தியாழினியைத் தயார் செய்தார்.

அங்கு வந்த சேனா, கிளம்பி நின்ற தியாழினியைப் பார்த்ததும், ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டான். ஏற்கனவே கதை பேசும் கண்கள் கொண்டவள். இன்று மை எல்லாம் இட்டபோது, அந்தக் கண்களுக்குள் தான் சிறை படுவதைப் போல் உணர்ந்தான்.

வந்தவன் அவளிடம், “நீ தான் முதல் நடனம். ஆடிட்டோரியத்தில் நிறைய பேர் இருப்பாங்க. நல்லபடியா ஆடி முடிக்கனும்.” என்று அவன் சொல்லவும், தலையை தலையை ஆட்டியவள், அவன் பின்னால் வந்தாள்.

ஆடிட்டோரியத்திற்கு வந்தவள், அங்கே ஒரு பெண் வந்தவர்களை வரவேற்று பேசிக் கொண்டிருக்கும் போது, எதேச்சையாக திரைச்சீலை காற்றில் ஆடும் போது திரும்பிப் பார்த்தவளுக்கு, அங்கே இருந்த கூட்டத்தைப் பார்த்ததும் நெஞ்சுவலி வராத குறை தான்.

இதுநாள் வரை 100 பேரைப் பார்த்தவள், அங்கே 3000 பேருக்குமேல் ஒரு சேரக் கூடி இருப்பதைக் கண்டு, ‘இந்தக் கல்லூரியில் இத்தனை பேர் படிக்கிறார்களா?’ என பயந்து போனவள்,

சேனாவிடம் வந்து “சார், எனக்கு பயமா இருக்கு. என்னால் ஆட முடியாது.” என்றவளின் கை கால் எல்லாம் நடுக்கம். முகத்தில் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள்.

விட்டால் மயங்கி விடுவாள் என்பதை உணர்ந்தவன், அவளின் அருகில் நெருங்கி நின்று கைகளைப் பிடித்தான்.

முதல் நடனம் அவளோடது. முதல் மேடையும் அவளுக்கு இது. கண்டிப்பாக பயம் இருக்கும் என்பதை உணர்ந்தவன், “நான் இருக்கிறேன். பயப்படாதே...!”

“நீங்க இங்கே இருப்பீங்க. நான் தானே அங்க போய் ஆடணும். தனியாய்ப் போய் ஆடுவதற்கு எனக்கு பயமாய் இருக்கு. நான் ஆட மாட்டேன்.” என்று கண் கலங்கவும்,

“அழாதே தியா! அழுதால் கண்ணில் இருக்கும் மை எல்லாம் அழிந்து, பார்க்க அசிங்கமாக இருக்கும்.” என்று தனது பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் கர்ச்சீப்பை எடுத்து துடைத்து விட்டான்.

அந்த நேரம் கல்லூரியின் தலைவர்கள் அனைவரும் வந்து விட்டார்கள். சிறப்பு விருந்தினர்களும் வந்து விட்டார்கள் என்று சொன்னதும், இதற்கு மேல் விட்டால் இவள் அழுது அடம் பிடித்து வரமாட்டாள் என்பதால் அந்த அறையிலேயே ஆடையை மாற்றிக்கொண்டு வந்தவன்,

“நானும் உன்னோடு வருகிறேன்.” என்றான்.

அதுவரை நடுங்கிய விரல்கள் நின்றது. பெண்ணவள் முகத்தில் தெளிவு. இதோ முதல் நடனமாய் பரத நாட்டியம் என்றதும்,

ஸ்ரீதர்சேனா வந்து நின்றதும், கரகோசம் அரங்கமே அதிரச் செய்தது. அவன் அங்கே போய் நின்றதும், தியாவை வா என்றதும், பெண்ணவள் வந்து நின்றாள்.

தத்தத்தோம் தரிகிடதோம் தளாங்குதோம்.

தகதிமிதோம் தரிகிட தரிகிட

தரிகிட தரிகிட தோம்

தத்தத்தரிகிட தரிகிட தரிகிட

தரிகிட தோம் தத்தத்.


இருவரும் தங்கள் கால்களை ஒருசேர அசைத்து, விரல்களை ஒருசேர ஆட்டும் போதும், ஜதிக்கு ஏற்றவாறு கால்களை தட்டும் போதும், இருவரைத் தவிர அரங்கமே வாய் பிளந்து கைகளைத் தட்டி உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்கள்.

நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி – கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்


நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி – கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்


நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி – கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்

ஆஆஆஆ......ஆஆஆஆஆ...


நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி – கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன் ( 2 )


பொன்னையே நிகர்த்த மேனி

மின்னையே நிகர்த்த சாயல்

பொன்னையே நிகர்த்த மேனி

மின்னையே நிகர்த்த சாயல்

பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா

பின்னையே நித்ய கன்னியே


மாறனம்புகள் என் மீது வாரி வாரி வீச -நீ

மாறனம்புகள் என் மீது வாரி வாரி வீச -நீ

கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா

யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம்

எனக்குன் தோற்றம் மேவுமே இங்கு யாவுமே

கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா


நின்னையே ரதியென்று

நினைக்கிறேனடி – கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்..


ஆடி முடித்ததும், பள்ளியின் தலைவர்களில் ஒருவரான வாமனன் மற்றும் சிறப்பு விருந்தினராக சினிமாவின் கதாநாயகன் புகழேந்தியும், இருவரும் ஒருசேர மேடைக்கு வந்து இருவரையும் கைகுலுக்கி வாழ்த்தினர்.

வாமனன், “வேலை வேலை என்று சோர்ந்து போயிருந்த என் மூளைக்கும், கண்களுக்கும் உங்கள் நடனம் விருந்தாகி குளிர் வித்தது. இரண்டு பேரும் ஆடும் போது ராதையும் கிருஷ்ணனும் ஆடுவது போல் இருந்தது.”

அப்படிச் சொல்லும் போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

புகழேந்தி மைக்கை வாங்கி, “பரதத்தில் ஆண்மையும், உக்கிரமும், வரமும் கொண்டு அங்கங்களை அசைத்து, பாட்டின் பொருளுக்கேற்றபடி ஆடுவது தாண்டவமாகும். பிரத்யங்கம் உபாங்கம் அனைத்தையும் நளினமாக ரசபாவனையுடன் அபிநயித்து ஆடுவது லாஸ்ய நடனமாகும்.

பரதத்தில் தாண்டவமென்பது ஆண்மை, லாஸ்யம் என்பது பெண்மை. இரண்டும் சேர்வது, சிவனும் பார்வதியும் சேர்ந்து சிவபார்வதி நடனமான அர்த்தநாரீஸ்வர நடனம். அது போல் இருந்தது உங்கள் நடனம். அப்படியே அந்த பார்வதியும் சிவனும் என் கண்முன்னே வந்து ஆடுவது போல் இருந்தது.”

இருவரும் நன்றியைத் தெரிவித்து விட்டு, வெளியே வந்தனர்.

ஏனோ இந்த வார்த்தையைக் கேட்க முடியாத மகிமா, எழுந்து வெளியே வந்துவிட்டாள். பெண்ணவளின் கண்கள் கலங்கியது. தன் அக்கா எழுந்து செல்வதை பார்த்த மதுராவும் எழுந்து வந்தாள். வெளியே வந்து தனியாய் அழுபவளின் முதுகில் கை வைத்து தட்டிக் கொடுத்து,

“அழாதேக்கா. யாரோ ரெண்டு பேர் எதையோ சொல்லும்போது அதற்கெல்லாம் நீ கலங்கலாமா?”

“அவர் மனசில் இப்போ எந்த எண்ணமும் இல்லைடி. இவர்கள் இந்த மாதிரி எதையாவது பேசி, மனதில் எதையாவது விதைத்து விட்டால் என் நிலைமை என்னாவது?”

“அதற்குத்தான் நான் இருக்கேனே, அவளை அவரிடம் நெருங்க விட மாட்டேன், பயப்படாதே...!” என்று தைரியம் சொல்லி அழைத்து வந்தாள்.

இருவரும் வெளியே வரும் போது, அங்கே இருந்த போட்டோகிராஃபர், “உங்க ரெண்டு பேரையும் கலை நயத்தோடு புகைப்படம் எடுத்து, அலுவலக அறையில் மாட்டனும் என்று சொல்லியிருக்காங்க.” என்று சொல்ல.

அவனும் தலையாட்ட, பயந்து நின்றவளைப் பார்த்து, “இது வருடா வருடம் இங்கு நடப்பது தான்.”

சேனா நிற்க, அவனின் சரிபாதியாய் தியாழினி நிற்க, அர்த்தநாரீஸ்வரர் போல் இருவரும் நிற்கவும், கேமராமேன், “தியா அவரைப் பாருங்கள். சார் நீங்களும்.” என்றதும்,

இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, கேமராவின் கண்கள் பதிவாக்கிக் கொண்டது போல், இருவரின் மனமும் விழி வழியே கூடுவிட்டு கூடு பாய்ந்தது.

……..

இங்கே கர்நாடகத்தில் தனது பாடலுக்கு ஆடி முடிந்த மிதுனா, “நாளை இரவு பிளைட் டிக்கெட் புக் பண்ணி விடு, ரிஷி.” என்று தனது மேனேஜருக்கு உத்தரவிட்டு, ஹோட்டலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தவளிடம்,

“மேடம், நம்ம அடுத்த ப்ரோக்ராம்.”

“ஸ்ரீமூகாம்பிகை கோவிலுக்கு” என்றதும்,

ரிஷி அவள் வருவதற்குள் ஒரு கார் புக் பண்ணி விட்டு காத்திருக்கும் போது,

படத்தின் தயாரிப்பாளர் ஷைலேந்திர கெளடா செக்புக் கொடுத்து விட்டு, “என்ன ரிஷி, மிதுனாவின் அடுத்த ப்ரோக்ராம் கோவிலா?”

அவனோ, 'உங்களுக்கு எப்படி?’ என்பது போல் பார்த்தான்.

தயாரிப்பாளரோ, “நான் பார்த்து வளர்ந்த பொண்ணு மிதுனா! எப்போதும் கோயில் குளம், இப்படித்தான் சுத்திக்கிட்டு இருக்கும். அதனால தான் கேட்டேன்.”

ரிஷி புன்னகையாய் “மேடம், உங்க பேரைச் சொன்னதும் கால்சீட் கொடுப்பதன் ரகசியம் இதுதானா...!”

“ஐம்பது வயதில் அவளை பல முறை என்னுடன் சேர்த்து கிசுகிசு வரும். ஆனால், எங்கள் இருவருக்கு உள்ளும் நல்ல புரிதல் மட்டுமே...!”

“உங்கள் இருவருக்கும் உள்ள நட்பின் ரகசியம், நானும் அறிந்து கொள்ளலாமா...?”

“அதுவா, அவள் பெரிய நடிகையும், நடன மங்கையுமாக இருந்த போது ஒரு பெரிய விபத்து நடந்தது. விபத்தா...? கொலை செய்ய முயற்சி செய்தார்களா... என்று தெரியாது. அது அவளுக்கு மட்டும் தான் தெரியும். கேட்டாலும் வாய் திறக்கமாட்டாள். அந்த வழியாக வந்த போது, நான் இவளை மருத்துவ மனையில் சேர்த்து, ஒரு சின்ன உதவி தான் செஞ்சேன்.

அதற்கப்புறம், நான் அவளை மறந்தே போய் விட்டேன். சினிமாவில் நான் தயாரிக்கும் படம் அத்தனையும் வெற்றி. அதில் பல நண்பர்கள் அட்டையைப் போல் ஒட்டியே இருந்தார்கள். நான் தான் அவர்களின் உலகம் என்றும் சொல்வார்கள். திடீரென்று என் தயாரிப்பில் வெளிவந்த படமெல்லாம் தோல்வி.

ஒரு கட்டத்தில், என் படமெல்லாம் தோல்வியாகி நான் கடனாளியாய் நின்றேன். வீட்டை விற்கும் நிலையில் இருக்கும் போது, சைலேந்திரா கெளடா முடிந்து விட்டார் என்று பத்திரிக்கையில் எழுதி விட்டார்கள்.

என் அத்தியாயம் அன்றோடு முடிந்தது என்று, நானே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். அப்போதுதான் மிதுனா விடம் இருந்து ஒரு போன் கால். ஒரு இயக்குனருக்கு ஒரு படம் எடுக்கனும். அதுக்கு ஒரு தயாரிப்பாளர் வேண்டும்.

நானோ நக்கலாய் சிரித்து, என் நிலைமை உனக்குத் தெரியாதா...? என்று கேட்க,

சிங்கம் எப்போதும் தலை நிமிர்ந்து தான் இருக்கணும். நீங்க தான் அந்தப்படத்தை தயாரிக்கனும் என்று பட்ஜெட் போட்ட மொத்த பணத்தையும் வட்டி இல்லாமலும், எந்தப் பேப்பரில் கையெழுத்து வாங்காமலும் கொடுத்து உதவியவள். அத்தோடு படத்தின் விளம்பரத்திற்காக ஒரு பாடலுக்கு நடனமாடிக் கொடுத்தாள். அந்த படம் பயங்கரமான வெற்றி பெற்றது.

என் வாழ்க்கையையே எனக்குத் திருப்பிக் கொடுத்தவள். சொல்லப் போனால் சாமின்னு கூடச் சொல்லலாம்.

படம் வெற்றி பெற்ற பின், நானும் என் மனைவியும் போய் அவளை சந்தித்து பணம் கொடுத்தோம். அப்போது தான் மிதுனாவிடம் என் மனைவி கேட்டா, என் கணவரைச் சுற்றி இருந்தவர்கள் அத்தனை பேரும் கைவிட்ட போது, நீ மட்டும் எதுக்கு அவருக்கு ஹெல்ப் பண்ணின? என்று

எப்பவோ சாக வேண்டியவள். இந்த நிமிடம் உயிரோட இருக்குறது உங்க கணவரால் தான். இறந்து போக வேண்டிய என்னைக் காப்பாற்றியதால் தானே, நான் இன்று இவ்வளவு பணம் வைத்திருக்கிறேன். அதுதான் மிதுனா! என் மனைவிக்கு அவள் சாமி.

அன்றிலிருந்து இன்றுவரை, என் படத்தில் எல்லாம் ஒரு பாடல் அவளுக்காய் வைத்திருப்பேன். படத்தில் தொடர்ந்து ஆடுவதால், ஊர் உலகம் தவறாய்ச் சொல்லும். ஆனால், சினிமா நடிகை என்பதையும் தாண்டி, அவளுக்குள் ஒரு மனம் இருக்கும். அந்த மனம் அனைவரையும் நேசிக்கும். அனைவருக்கும் உதவி செய்யும்.

ஒருமுறை நீ அவளுக்கு சின்ன உதவி செய்தால், அவள் சாகும் வரை உனக்கு உதவி செய்துகொண்டே இருப்பாள். அதுதான் அவள். அதேபோல்தான் துரோகமும். அப்படியே விட்டு விட்டுப் போய் விடுவாள். எப்படி எப்படியோ வாழ வேண்டியவள். அயோக்கியனின் மேல் அன்பு வைத்து, வாழ்க்கையை தொலைத்து விட்டாள்.” என்று புலம்பிவிட்டு, அவர் சென்றுவிட்டார்.


ரிஷியும் சிரித்துக் கொண்டான். காரணம், ‘தனக்கும் அவள் சாமி தானே!’ நண்பர்கள் அனைவருமே இவளுக்குப் போய் மேனேஜராக இருக்கயே என்று கிண்டல் செய்தாலும், ஏனோ அவன் மனம் அதை அப்படி ஒரு நாளும் நினைத்ததில்லை.

‘மும்பை வீதியில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தெருவில் மயங்கி விழுந்த போது, அவ்வழியே வந்தவள் சாப்பாடு கொடுத்து, தன் வீட்டில் இடமும் கொடுத்து, இன்று தனக்கு குடும்பம் குட்டி என்று வாழ வைப்பவள். ஊராரின் பார்வையில் அவள் யாரோ? தனக்கு அவள் கடவுள்தான்!’ என்று நினைத்தவன், அவளுக்காகக் காத்து நின்றான்.

மிதுனா சற்று நேரத்தில் ஒரு சுடிதாரில் கிளம்பி வந்தாள். சிறிது நேரத்திற்கு முன் அணிந்த ஆடைக்கும், இப்போது இருக்கும் ஆடைக்கும் அவ்வளவு வித்தியாசம். கோவிலுக்கு வந்ததும், தனது துப்பட்டாவால் மப்ளர் போல் கழுத்தோடு சுற்றி, கண்கள் மட்டும் தெரியும்படி வந்தாள்.

ஸ்ரீமூகாம்பிகை கோவிலுக்குள் பெண்ணவள் தன் கால் வைக்கும் போது, அப்படியே தனது தாய் வீட்டிற்குள் நுழைந்தது போல், மனம் உருகி நின்றாள்.

ரிஷியோ, கோவிலை ஆச்சர்யமாகப் பார்த்தான். ‘நாம் இருப்பது கர்நாடகாவில். ஆனால், கோவில் அப்படியே கேரள கோவில்களின் அமைப்புகளையும், பாணியையும் ஒத்திருக்கின்றதே’ என்று.

ரிஷி, “விளக்கு வாங்கிட்டு வா!” என்று சொல்லிவிட்டு, மிதுனா முன்னே செல்ல.

ஆண்கள், கோவிலின் உள்ளே கருவறை அருகில் சட்டை அணிந்து செல்லக்கூடாது என்ற மரபு கடை பிடிக்கப்பட்டு வருவதால், தன் சட்டையைக் கழட்டி விட்டு வந்தான்.

எல்லா கோவில்களைப் போல, முதலில் கண்ணில் தென்பட்ட கொடிக் கம்பத்தை வேண்டிவிட்டு, அதனை ஒட்டியே அம்பாளின் கர்ப்பக்கிரகம். மனதார வேண்டினாள். கையெடுத்து கும்பிடும் போது, அவள் விழிகளில் இருந்து நீர் கீழே விழுவதைப் பார்த்தவன், ‘யாருமில்லா பெண்ணவளுக்கு அப்படி என்ன வேதனை? வேண்டுதல் இவ்வளவு பலமாய் இருக்கே...? யாருக்காய் வேண்டுகிறார்?” என்று பார்த்தான்.

அடுத்து, ஒரே கல்லினால் ஆன அழகிய விளக்குத் தூணின் அருகே சென்றாள். அதில் பல விளக்குகள் எரிய, பெண்ணவளும் ரிஷி வாங்கி வந்த விளக்கை தன் கையால் ஏற்றிவிட்டு, கருவறையின் எதிரில் பணிவுடன் அமர்ந்த நிலையில், அம்மனின் சிம்ம வாகனம் இருக்கவும், அதை மனதார வேண்டிவிட்டு, கருவறையின் இருபுறமும் இருக்கும் தியான மண்டபத்தின் ஒருபுறம் ரிஷியும், மறுபுறம் மிதுனாவும் ஏறினார்கள். ஏற்கனவே பல பக்தர்கள் அங்கு அமர்ந்து தியானம் செய்ய, பெண்ணவளும் அமர்ந்தாள். ஒரு அரை மணி நேரத்திற்கு மேல் அமர்ந்தவளின் மனதில், ஏதோ ஒரு சாந்தம் நிலவவும் பின் எழுந்தாள்.

பின் முன் வாயிலைக் கடந்து மீண்டும் வெளிப் பிரகாரம் சுற்றி, சரஸ்வதி மண்டபத்திற்கு வந்தாள்.

மண்டபத்தில் ஓவியர் ரவி வர்மாவின் சித்திரங்களைப் பார்த்துக் கொண்டே வந்தாள். ரிஷி அருகில் வந்து, “மேடம், கிளம்பலாமா...? மணி ஏழு ஆச்சு.”

“ஏழு மணியா... சூப்பர்...! சரியான நேரத்திற்குத் தான் வந்திருக்கிறோம். இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருக்கலாம், ரிஷி. இங்கு டான்ஸ் ப்ரோக்ராம் நடக்கும். அதைப் பார்த்து விட்டுப் போகலாம். இந்த மண்டபத்தில் ஏதோ ஒரு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் யாராவது, தங்களது கலா நிகழ்ச்சியை தினமும் இரவு ஏழு மணி அளவில் நடத்துவாங்க.”

சொன்னது போல் சரியான நேரத்தில், அங்கே ஆண் பெண் சேர்ந்து பரத நாட்டியம் ஆடிக் கொண்டிருக்க, பெண்ணவள் மெய்மறந்து கவனித்துக் கொண்டிருந்தாள். 'ஊரில் உள்ளோர் அனைவரும் இவளின் நடனத்திற்குக் காத்திருக்க, இவளோ பரதநாட்டியத்தை மெய் மறந்து ரசிக்கிறாளே’ என்று பார்த்தான்.

வெளியே வந்ததும், மிகவும் புன்னகையோடு வந்தவளை கண்ட ரிஷி, “மேடத்திற்கு பரதம் ரொம்பப் பிடிக்குமோ...!”

“பரதம், என் உயிர் ரிஷி. இன்னும் கொஞ்ச நேரம் நின்றிருந்தாள் கூட, நானும் போய் ஆடிவிட்டு வந்திருப்பேன். அந்த அளவுக்குப் பிடிக்கும்.”

'பரதம் ஆடும் கால்கள் தான், இன்று குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறதா?’ என்று நினைத்தவன் அந்தக் கேள்வியைக் கேட்காமல், மனதுக்குள் போட்டு பூட்டிக் கொண்டான்.

வெளியே வந்ததும் “ரிஷி, நான் இன்னொரு முறை கோயிலை வலம் வந்து விடுகிறேன். நீ போய் காரில் வெயிட் பண்ணு.”

பெண்ணவள் சுற்றிக் கொண்டிருக்கும் போது தான், வந்த நேரத்தை விட, இப்போது கூட்டம் வெகுவாய் குறைந்து இருக்கவும், முகத்தை மறைக்கும் தனது துப்பட்டாவைக் கழட்டி விட்டு நடந்து வந்து கொண்டிருக்கும் போது தான், அந்தக் காட்சி அவள் கண்ணில் பட்டது.

ஒரு பெண் அம்பாளின் முன் நின்று, “எனக்கு ஏன் வாரிசு கொடுக்கவில்லை. நான் அப்படி என்ன துரோகம் உனக்குச் செய்தேன்?” என்று கேட்டு வேண்டிக் கொண்டிருந்தாள்.

தனக்குப் பரிட்சயப்பட்ட குரல் போல் இருக்கவும், பெண்ணவள் மெல்ல அருகே சென்று பார்க்க, ‘இவளா...?’

“எந்த முகத்தை வைத்துக்கொண்டு நீயெல்லாம் கடவுளிடம் வேண்டுகிறாய்?” என்றதும் நிமிர்ந்து பார்த்தவள் எழுந்து,

“ஏய்! யார் நீ?”

“என்னைத் தெரியலையா! நான்தான் வித்யா பாரதி! இன்னும் தெரியலையா...?”

பெண்ணவள் அப்படியே நின்றுவிட்டாள்.

“என்ன வானதி மேடம், அப்படியே சிலை போல நிக்கிறீங்க...! என்னடா, சாகடித்தவள் எப்படி டா நம்ம கண்ணு முன்னாடி உயிரோட வந்து சிலை போல் நின்றிருக்கிறாள் என்றா?”

“ஏய் பொய் சொல்லாதே...! காசு பணம் வாங்க என்னை மிரட்டுறயா...?”

“ஹா...ஹா...! நல்ல ஜோக். பணமா...? எவ்வளவு வேண்டும் மேடம்? நான் தர்றேன் உங்களுக்கு?

ரெண்டு பேரை சாகடிக்க அன்று திட்டம் போட்டிங்க. உங்க ஆசைப் படி, என் வயிற்றில் உண்டான் குழந்தை செத்திடுச்சு. நான் எப்படியோ பொழைச்சுட்டேன். என் குழந்தையைக் கொன்னுட்டு, இப்ப வந்து கடவுளிடம் நான் என்ன தப்பு பண்ணேன். வாரிசே கொடுக்கலைன்னு கேட்கிறீங்க?

அன்னிக்கு, என்னை என்ன சொல்லி அடித்து வெளியே துரத்துனீங்க? ஞாபகம் இருக்கா...?”

“என்ன சொன்னேன்?” என்று திமிராய் கேட்க

“நான் ரெண்டாம் தாரமா ...?"

“என் புருஷனைத் தான் மேடம், நீங்க ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? அந்த ஆளு எனக்கு தான் முதலில் தாலி கட்டினான்.”

வானதி அப்படியே சிலை போல் நிற்கவும்,

“மேடம், ஷாக்கா இருக்கா? நான் சொல்வதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், போய் உங்க அருமை புருஷனிடம் கேளுங்கள். அப்புறம் கடைசியா நான் உங்களை தேடி வந்தப்போ, என் வயிற்றில் மூன்று மாசக் குழந்தை.

அது தெரிந்ததும், அன்பாய் வீட்டுக்கு கூட்டிட்டு போயி, ஆசையாய் சோற்றைப் போட்டு பாசத்தோடு அந்த சோற்றில் விசம் கலந்து, நான் உன் அக்கான்னு சொல்லி உரிமையாய் உங்களின் வாகனத்தில் அன்போடு ஏற்றிய பின், அந்த வண்டியில் பிரேக் வயரைப் பிடுங்கிவிட்டு, அதை முகத்தில் காட்டாமல், ஆசையாய் வழியனுப்பி டாட்டா காட்டியவர் தானே, நீங்கள்!

ஞாபகம் இருக்கா மேடம்...?

கடவுள்னு ஒருத்தர் இருந்தா, செஞ்ச தப்புக்கு தண்டனை கிடைக்கும்!” என்று சொல்லிவிட்டு, பெண்ணவள் வெளியே வந்து விட்டாள்.

வானதி அப்படியே கண்ணீர் மல்க, கோபுரத் தூணில் சாய்ந்து அமர்ந்தார்.

தன் மகள் வெகுநேரம் ஆகியும் வராததால், அவளைத் தேடி வந்த ஸ்ரீனிவாசன், அங்கு தூணில் சாய்ந்து அழுது கொண்டிருப்பவளின் அருகே வந்து,

“என்னாச்சுடா?”

“செஞ்ச பாவம் துரத்துதுப்பா!” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தாள்.

“வானதி, என்ன சொல்ற?” என்று அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கேட்க,

“வித்யா பாரதி தான் என் கணவரின் முதல் மனைவி. ஆனால், நீங்க என்கிட்ட பொய் சொல்லிட்டீங்க. மாசமாய் இருந்த பொண்ணு வயிற்றில் குழந்தை இருந்திருக்கு. நீங்க விஷம் வச்சிட்டீங்க. பற்றாக் குறைக்கு, அவ காரை ஆக்சிடெண்ட் பண்ணி, அவ செத்துப் போயிட்டான்னு சொல்லி, என்னை நம்ப வச்சிட்டீங்க.

அவ என் வாழ்க்கையை பறிக்கலப்பா! நீங்கதான் அவ வாழ்க்கையைப் பறிச்சிட்டீங்க. அந்தப் பாவம் தான், என்னைத் துரத்துகிறது.” என்று சொல்லிவிட்டு முன்னே சென்று விட்டாள்.

சீனிவாசன் தன் நரைத்த மீசையை தடவிக் கொண்டே, “வித்யா பாரதி! நான் உன்னை விடமாட்டேன். என் மகளின் சந்தோஷத்தைத் தவிர, இந்த உலகத்தில் எனக்கு வேறு இல்லை. விரைவில் காத்திரு. மேலோகம் செல்ல…!” என்று மீசையை நீவிக் கொண்டார்.

சுடும்...

வாசித்து விட்டு கீழே உள்ள லிங்கில் கமெண்ட்ஸ் போடுங்கள்

nice
 

Ananya deva

New member
Messages
22
Reaction score
1
Points
3
Paavam ka thiya amma 🙄apo ipodhaiku rendu big villain rendu kutty villian.ah🤔 actually midhu appa seems like a gud boi dha so no problem. Apro yaru pa kannan radhai 😁🙈 ena tambi pusukunu stage eritta 😵orey duet ah😁😁 ellarum duet ku western, salsa nu aaduvanga neenga Tamil nattu kararuuuu nu prove panreengalo 😂 nadathungo nadathungo 💙 nallarndhuchu
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Paavam ka thiya amma 🙄apo ipodhaiku rendu big villain rendu kutty villian.ah🤔 actually midhu appa seems like a gud boi dha so no problem. Apro yaru pa kannan radhai 😁🙈 ena tambi pusukunu stage eritta 😵orey duet ah😁😁 ellarum duet ku western, salsa nu aaduvanga neenga Tamil nattu kararuuuu nu prove panreengalo 😂 nadathungo nadathungo 💙 nallarndhuchu
அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி .நான் இன்னும் தியாவின் அம்மாவை உங்களுக்கு காட்டவே இல்லையே அப்புறம் அப்பாவும் என்று எப்படி சொல்கிறீர்கள் .

நீங்கள் கடும் விமர்சனத்திற்கு மனம் நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
அருமையான பதிவு.இருவரின் நடனம் மெய் சிலிர்க்க வைத்து விட்டாது. அவ்வளவு அருமை.மிதுனா இல்லையா திவ்யா பாரதி சூப்பர் பெயர் யாருடை தொழிலை வைத்து அவரை ஏசி பேசக் கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் எத்தனை பேர் வாழ்வில் நன்மை செய்யுது உள்ளாள்.இங்கும் இவருக்கு ஒரு வில்லன் அருமையான கதை நகர்வு சிஸ்டர்😍😍😍
மிக்க மிக்க நன்றி சகி .ஆம் ஒருவரின் தொழிலை வைத்து அவர்கள் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று எடை போடக்கூடாது உங்களின் அன்புக்கும் விமர்சனத்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள்
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Yean esa ka edhuku indha magi pulla thangachi avaluku mela iruku 🙄 aalaium mandaium paaru Ava akka kaga varalam dabara manda inga paaru Sridhar enga thiya papa ku dha pathuka 😏 unga akka va chi pae solliru 😠 indha appavi ishu elam pesuthu parungale ln 😍😍 akka oru doubt u indha ishu and senior oda cousins rendu perum orey aala 🤔
Aprm modhal ball.ae sixer a Sridhar sir 🔥🔥🔥 patty chithi mama nu moonu wicket a correct panniachu inum ponnum ponnoda amma cum dha ballia 😁😁 nadathunga
அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சகி அனைத்தும் பாசம்தான் .அக்காவிற்கு தங்கை வருவது. மகனுக்காக அம்மா வருவது .இதெல்லாம் ஒரு வகைக் காதல் தான் அது எதில் முடியும் எப்படி நடத்துகிறோம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதே மனித மனங்களின் காதல் செய்யும் பாடம் அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி .
 

Ananya deva

New member
Messages
22
Reaction score
1
Points
3
அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி .நான் இன்னும் தியாவின் அம்மாவை உங்களுக்கு காட்டவே இல்லையே அப்புறம் அப்பாவும் என்று எப்படி சொல்கிறீர்கள் .

நீங்கள் கடும் விமர்சனத்திற்கு மனம் நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
Oru guess dha
 

Ananya deva

New member
Messages
22
Reaction score
1
Points
3
அத்தியாயம் - 7


இங்கு மருத்துவமனையில் படுத்திருந்த சிவராஜின் செல்ஃபோன் விடாது ஒலிக்க, எடுத்து காதில் வைக்கவும், தனது அக்கா விதுபாரதி.

“என்னாச்சுடா? ரெண்டு நாளாய் உனக்குக் கூப்பிடுறேன். நீ ஃபோன் எடுக்கவே இல்லை.”

“அக்கா, நான் பைக்கில் இருந்து கீழே விழுந்து விட்டேன். சின்ன ஆக்சிடன்ட். நீ சொன்னால் பயந்திடுவ. அதான் உனக்குப் பேசலை. இப்ப நான் நல்லா இருக்கேன்.”

‘விபத்தா...?’ தன் தம்பிக்கு என்றதும் பயந்தவர், சிறிது நேரம் திட்டிவிட்டு, இன்னும் ரெண்டு நாளில் நான் இந்தியா வந்து விடுவேன் என்று சொல்லி விட்டு, அழைப்பைத் துண்டித்தார்.

மீண்டும் தன் அக்காவிற்கு அழைத்து, “நீ ஏன் அவ்வளவு தூரம் வரணும்? நான் நல்லா இருக்கேன்.”

“நீ என்ன சமாதானப் படுத்தினாலும், உன்னை பார்க்காமல், என்னால் இங்கு ஒரு வேலையிலும் ஈடுபட முடியாது. நான் வந்து பார்த்துட்டு வர்றேன்.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

……..

மிதுனா மும்பை வந்ததும் ரிஷிகேஷ், “மேடம் நம்ம டேட் கொடுத்த படத்தின் இயக்குனருக்கு உடல்நிலை சரியில்லாததால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப் பட்டிருக்கு.”

“ஹோ! அப்போ இந்தவாரம் முழுதும் ஃப்ரி தானா?”

“அது நம்ம வீரேந்தர்ஜீ எடுக்கும் புதுப்படத்தில், கேரளாவில் காட்டுக்குள் வில்லனோடு ஒரு நடனம் கேட்டாங்களே…”

“ஓகே! அப்ப புக் பண்ணிடு.”

“மேடம்…” என்று இழுக்க...

“என்ன ஆச்சு ரிஷி? ஏதும் ப்ராப்ளமா?”

“பாடலுக்கான சூட்டிங் கேரளாவிலும், கொஞ்சம் தமிழ் நாட்டிலும் நடக்குமாம்.”

“தமிழ்நாடா…!” என்று யோசித்தவள்,

“ஓகே! பரவாயில்லை. கால்சீட் கொடுத்து விடு.” என்று சொல்லி விட்டு,

“எப்போ கிளம்பனும்?”

“நாளைக்கு மாலை ஃப்ளைட்டில், மேடம்?”

…………………

இங்கே சென்னையில், கல்லூரிக்குத் தயாராகி வந்த தியாழினியின் முகம் எல்லாம் பளிச்சென்று இருந்தது.

அவளின் முகத்தில் இருந்த பூரிப்பைக் கண்ட சேனா,

“என்ன மேடம், ரொம்ப குஷியா இருக்கீங்க...?”

“நாளைக்கு என் அம்மா வர்றாங்க.”

“வாவ் சூப்பர்.”

“அம்மா பார்த்து ரெண்டு வருஷமாச்சு. நாளைக்கு தான் பார்க்கப் போறேன். அதான் ஹேப்பி.”

அன்றும் அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி இறக்கி விடவும், நடந்து சென்றவள் போகும் வழியில் ஐஸ்வர்யாவைப் பார்த்ததும், அவளுடன் ஏறிக் கொண்டாள்.

இரண்டு பேரும் போகும் போது இடைவெளியில் கைநீட்டி மறித்து நின்ற ஆத்விக்கைக் கண்ட தியாழினி, கோபத்துடன் இறங்கி நின்றாள்.

அவனோ தனது செல்போனை அவள் முன் நீட்டி, நடனமாடிய புகைப்படத்தைக் காட்டி, “யாரைக் கேட்டு நீ டான்ஸ் ஆடுன?”

அவன் கேள்வியில் புரியாதவளாய், “யாரைக் கேட்கணும்?”

“என்னைக் கேட்கணும்!”

“நீங்க யாரு? நான் ஏன் உங்களைக் கேட்கணும்?” என்றதும்,

அவனோ கோபமாய், “தியா...! ஸ்கூலில் எல்லாம் நான் சொல்றது தானே நீ கேட்ப…”

“நான் எப்பவுமே, என் வீட்டில் சொல்றதை மட்டும் தான் கேட்பேன். பள்ளியில், என்னிடம் மோசமாய் வம்பிழுக்கும் பசங்களை, என் பக்கம் நெருங்க விடாமல் பார்த்துக்கிட்டதால், உங்களின் மேல எனக்கு ஒரு மரியாதை உண்டு. அவ்வளவுதான்! உங்களுக்கும் எனக்கும் இருக்கும் ரிலேஷன்.”

“தியா, நான் உன்னை லவ் பண்றேன்.”

“இந்த உலகத்தில், ஒரு பையனுக்கு ஒரு பொண்ணு கிட்ட லவ்வ தவிர்த்து பேசுறதுக்கு, வேற ஒண்ணுமே இல்லையா...? ஏற்கனவே, நீங்க என் மாமாவை அடித்து ஆக்சிடெண்ட் பண்ணியதால் கோபம் இருந்தது. இப்போ…”

“அதற்குத்தான், என் டாடி பணத்தை மொத்தமாய் செட்டில் பண்ணிட்டாரே...!”

“அப்போ, எங்க மாமா ஒரு மாசம் அனுபவிக்கும் வலியை நீங்க வாங்கிப்பீங்களா...? விபத்தை நடத்தி விட்டு, ஒரு சாரி கூட கேட்காமல், பணம் கொடுத்தேன் என்று அசால்ட்டாய் சொல்றீங்க...?

இப்போ, உங்களைப் பார்க்கும் போது, வெறுப்பே வந்து விட்டது. இனிமேல் சீனியர் என்று சொல்லிக் கொண்டு என்னிடம் பேச வேண்டாம்.” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.

இரண்டு பேரும் பேசிக் கொள்வதை கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதர் சேனா, தன் முன்னே பட்டாசு போல் பொறிந்து செல்லும் பெண்ணான தியாழினியைப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றான்.

மிகவும் கோபமாய் வந்த தியாழினியை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் அவளுடன் வந்த ஐஸ்வர்யா, ‘இவளை எப்படி சமாதானப்படுத்துவது’ என்று யோசித்துக் கொண்டே வந்தாள்.

அந்த நேரம், சேனா யாரோ ஒரு பெண்ணிடம் பேசவும், இருவரும் அப்படியே நின்று விட்டனர்.

சேனா தன் வகுப்பின் முன் நின்று கொண்டு இருக்கும் போது, இரண்டாம் வருடம் படிக்கும் மாணவி தனக்கு பிறந்தநாளென்று வந்து, அவன் முன் விலை உயர்ந்த சாக்லேட்டை நீட்டினாள்.

“எனக்கு எதுக்கு இவ்ளோ பெருசு? சின்னது கொடும்மா” என்றதும்,

அவளும் “சார், நீங்க எனக்கு ஸ்பெஷல். கூடப் பிறக்காத அண்ணன் மாதிரி. இது உங்களுக்காக” என்று சொல்லிக் கொடுக்க, ஆடவன் வாழ்த்தவும், நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

அந்த சாக்லேட்டைப் பார்த்ததும், ஐஸ்வர்யாவின் நாக்கில் எச்சில் ஊறியது.

“தியாகுட்டி, என் செல்லமே...! நீ போய் சார்கிட்ட அந்த சாக்லேட்டைக் கேளு, உடனே தந்திடுவார்.”

அவள் முறைக்கவும், ஐஸ்வர்யா, அப்போதுதான் கவனித்தாள். சேனாவும் தியாவும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்திருப்பதை. வேகமாய், “சேனா சார்” என்றதும் திரும்பியவன்,

இருவரையும் பார்த்து “என்ன?”

குட் மார்னிங்.

“ஹ்ம். குட்மார்னிங் ஐஸ்வர்யா!”

“சார், தியா உங்ககிட்ட ஏதோ கேட்கணுமாம்.” என்றதும்,

“என்னது நானா?” தலையை மறுத்து ஆட்டியவள் அவளை ஒரு இடி இடித்து விட்டு, “சார், நான் எதுவும் கேட்கலை.”

அவனோ சுவாரஸ்யமாய், “ஏன் தியாவுக்கு வாய் இல்லையா...?”

“அது இருக்கு ஒன்ற முழத்திற்கு…” என்று ஐஸ்வர்யா கையை நீட்டிச் சொல்லவும், சேனா சத்தமாய்ச் சிரித்தான்.

அவன் சிரிக்கும் போது, பெண்ணவள் அப்படியே நின்றாள். அவன் சிரிப்பு அவளை அவன் பக்கம் ஈர்க்க, அவள் விழிகள் நகர மறுத்து, அவனைப் பருக ஆரம்பித்தது.

அலை அலையாய் கேசம், அடிக்கும் காற்றில் அலைபாய, ஆடவன் இடக்கையால் அதை சரிசெய்யும் போது, தன் மனமோ அவன் புறம் சாயத் தொடங்கியதை உணர்ந்தாள். அப்போது தான், அவனை உற்றுப் பார்த்தாள்.

இடது கையில் கருப்பு வார் அணிந்த கைக்கடிகாரம். அகண்ட பெரிய கண்கள். அடர்ந்த புருவங்கள், அழகான நெற்றி, அதில் திருநீறு, கூர் மூக்கு, அடர்ந்த மீசை. அழுத்தமான உதடு. அப்பப்பா..! ஆளை மயக்கும் சிரிப்பு. வெள்ளை சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்ட். கொஞ்சம் கொஞ்சமாய் அவனை தலை முதல் கால்வரைப் பார்த்தாள்.

அவளின் பார்வை ஆடவனை அசைக்க, சற்று நேரம் நின்றாலும் மனம் தடுமாறி விடும் என்று பயந்தவன், அவள் முன் விரல் நீட்டி சொடக்குப் போடும் போதுதான், தன் நிலைக்கு வந்தாள்.

அவனோ புருவம் உயர்த்தி, “தியா மேடம், என்னாச்சு?” என்றதும்,

பெண்ணவளின் முகமெல்லாம் குப்பென வியர்த்துவிட்டது. மனதில் மறைத்தாலும், தன் கண் பார்க்காததைப் பார்ப்பது போல் பார்த்து காட்டிகொடுத்து விட்டதே... தன்னைத்தானே திட்டிக்கொண்டு, “நோ சார்!”

ஐஸ்வர்யா “ஹேய்! இதுக்கு முன்னாடி நீ சாரைப் பார்த்ததே இல்லையா...? இப்படிப் பார்க்கிற?”

“ஐயோ! இவ வேற நேரங்கெட்ட நேரத்தில் மானத்தை வாங்குகிறாளே!” என்று அவளின் காலில் மிதிக்க,

“ஆ ஆ, ஏண்டி மிதிச்ச?”

“ஒண்னுமில்லை. வாடி போலாம்!”

இருவரும் திரும்பவும்,

சேனா, “எதுக்கு என்னை கூப்பிட்டீங்க...?”

ஐஸ்வர்யா, “சாரி சார். இவளால் நான் வந்த விஷயத்தையே மறந்து விட்டேனே! நீங்க ரெண்டு பேரும் ஒரே நிறத்தில் ஆடை உடுத்தி இருக்கிறீர்கள். சேம் சேம் ஸ்வீட். அதுக்கு நீங்க ஸ்வீட் கொடுக்கனும்.”

“அதை சம்பந்தப்பட்டவள் தானே கேட்கணும். நீ கேட்கிற?”

‘ஐயோ ஐஸ், ஒத்த சாக்லேட்டுக்கு எவ்வளவு பொய் எல்லாம் சொல்ல வேண்டியது இருக்கு.’ என்று நினைத்தவள், “சார், அவள் தான் என்னை கேட்கச் சொன்னாள்?”

பெண்ணவளோ “நான் இல்லை சார்.” என்று விழியால் மறுக்க, சேனா தன் கையிலிருக்கும் சாக்லெட்டை எடுத்து தியாவின் முன்னால் நீட்டினான்.

தியா தயங்க, “வாங்குடி!” என்று ஐஸ்வர்யா இரண்டு இடி இடிக்கவும், பெண்ணவள் தயங்கி தயங்கி, கையை நீட்டி வாங்கிவிட்டு, “தேங்க்ஸ் சார்!” என்று சொல்லி இருவரும் நகர்ந்தனர்.

இங்கு நடக்கும் கூத்தை பின்னாலிருந்து பார்த்த மகிமாவிற்கு, ஏதோ போலாகி விட்டது.

திரும்பிய சேனா, அங்கே கனல் பார்வை பார்க்கும் மகிமாவைப் பார்த்து, எதுவும் நடக்காதது போல உள்ளே செல்ல,

அவளோ அவனை இடைமறித்து, “இங்க என்ன நடக்குது? ஒரு ஸ்டாப் ஸ்டுடென்ட் கிட்ட இப்படித்தான் பிகேவ் பண்ணுவாங்களா...?”

“அதையே தான் மேடம், நானும் உங்களிடம் கேட்கிறேன்? ஒரு ஸ்டாப் எப்படி பிஹேவ் பண்ணனுமென்று உங்களுக்குத் தெரியாதா...?” என்று சொல்லி விட்டு அவன் சென்று விட்டான்!

தியாழினி மற்றும் ஐஸ்வர்யாவின் மேல் கொலை வெறி வந்தது. ‘தனது முதல் வகுப்பு இன்று அவர்களுக்குத் தானே. வச்சுக்கிறேன்.’ என்று தனது புக்ஸை எடுத்துக்கொண்டு வேகவேகமாய் வந்தாள்.

உள்ளே வந்ததும் அனைவரும், “குட் மார்னிங் மேடம்.” என்றதும், குட்மார்னிங் என்று சொல்லும்போது அவளின் கோபமான முகம் அனைவரையும் பய முறுத்தியது.

மதுராவோ ‘என்னாச்சு அக்காவுக்கு?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

ஐஸ்வர்யா தியாவின் காதில், “மேடம், ரொம்ப சூடா இருக்காங்கடி. சிக்குறவங்களை அப்பளம் மாதிரி பொரித்தெடுக்கப் போறாங்க!” என்றாள்!

வழக்கம் போல வருகைப் பதிவை எடுத்துவிட்டு வகுப்பு எடுக்கும் போது, அடிக்கொரு முறை ஐஸ்வர்யா மற்றும் தியாழினியை கவனித்துக் கொண்டே வந்தாள்.

மகிமா போர்டில் எதையோ எழுதிக் கொண்டு இருக்கும் போது, ஐஸ்வரியா,

“நம்ம ரெண்டு பேரும் இன்னைக்கு ரொம்ப அழகா வந்திருக்குமோ...?”

“ஏண்டி அப்படி கேட்கிற...?”

“இல்லை, இந்தம்மா வந்தப்போ இருந்து நம்ம ரெண்டு பேரையுமே மாற்றி மாற்றிப் பார்க்குது! அதான்...!”

அதைக் கவனித்த மகிமா, தன் கையிலிருக்கும் சாக்பீஸில் துண்டை ஐஸ்வர்யாவின் முகத்தில் விட்டு எரிந்து, “ஸ்டுபிட், உனக்கு கிளாஸ் கவனிக்க விருப்பம் இல்லைனா, நீ எல்லாம் எதுக்கு காலேஜுக்கு வர்ற? ரெண்டு பேரும் கோ அவுட்?”

ஏனோ அந்தச் செயலில், ஐஸ்வர்யாவிற்கு மனமெல்லாம் ஒரு மாதிரி ஆனது. அத்தனை பேர் முன்னாடி, முகத்தில் சாக்பீஸ் போட்டுத் திட்டவும், கண்கலங்கியவள் எழுந்து நிற்கும் போது, அருகே வந்த மகிமா, அப்போதுதான் கவனித்தாள் ஐஸ்வர்யாவின் மேஜை மீது இருந்த சாக்லேட்.

அது தனக்கானது. தன்னிடமிருந்து பறித்துக் கொண்டது போல், வேகமாய் அதை எடுக்கப் போனாள்.

தியா பட்டென்று அதை எடுத்து கையில் வைக்க, மகிமா அவளிடம், “இந்த சாக்லேட், உங்களுக்கு அவ்ளோ முக்கியமானதோ...? கொடுத்தவங்க அதை விட முக்கியமானவங்களோ?” என்று நக்கலாய் கேட்டு முறைத்துப் பார்த்தாள். பின் வெடுக்கென்று தியாழினியின் கையிலிருந்து அதைப் பிடுங்கினாள்.

ஏனோ அதுவரை திட்டியது கூட மனதில் இல்லை. அதை பிடுங்கும் போது தியாவிற்கு மனதில் ஒரு வலி உண்டானது. முதல் முறையாக அவன் கொடுத்த இனிப்பு அது.

அவளின் முகம் சுருங்குவதை ரசித்த மகிமா, “ரெண்டு பேரும் வெளியே போங்க!” என்று சொல்லவும், அவர்கள் முன்னே நடக்க பின்னால் வந்தவள், தன் கையில் இருக்கும் சாக்லெட்டை எடுத்துக் கொண்டு போய், வெளியே இருந்த குப்பைத் தொட்டியில் வீசினாள்.

மீண்டும் வந்த மகிமா இருவரையும் பார்த்து, “இங்கே பாருங்க! காலேஜுக்குப் வந்தோமா...! படிச்சோமான்னு இருக்கணும். அதை விட்டுட்டு, புரபசர் கிட்ட போயி சேம் பின்ச் அடிச்சு விளையாடக் கூடாது!” என்று திட்டிவிட்டு உள்ளே சென்றபின் தான், இருவருக்கும் இந்த மேடம் எதற்காக கோபப்படுகிறார்கள் என்று புரிந்தது.

தியாழினி கோபமாய் ஐஸ்வர்யாவை முறைத்து, “தேவையாடி நமக்கு? எதுக்கு இந்த சாக்லேட் வாங்கணும்...?”

அவளோ “அந்த மேடத்துக்கு பொறாமைடி! சார் கிட்ட நம்ம பேசுறது...! நீ மட்டும் சாரின் பக்கத்து வீட்டுப் பொண்ணு. அப்பப்ப பேசிப்பீங்க. ஒண்ணாய்த் தான் கார்ல வருவீங்க என்ற விஷயம் மட்டும் இந்த அம்மாவுக்கு தெரிஞ்சுச்சு, உன்னை பஸ்பமாக்கிடும்.”

தியாழினி பாவமாய், “ஆத்தி, நமக்கு எதுக்கு வம்பு? இனிமேல் சேனா சாரிடம் பேச வேண்டாம்டி. மார்க் குறைச்சுட்டா...?”

“ஏய் லூசு! இன்டர்னல்ல தான், இவங்க குறைக்க முடியும். செமெஸ்டர்ல இவங்க ஒண்ணும் பண்ண முடியாது.”

“ப்ராக்டிக்கலில் கை வச்சுட்டா என்ன பண்றது...?” என்று கேட்கும் போது, தன்னை யாரோ பார்ப்பது போல் இருக்கவும், திரும்பிப் பார்க்க அங்கே சேனா...!

அது மகிமாவின் வகுப்பு, அதில் நாம் தலையிட முடியாது என்பதால் அவன் சென்று விட்டான். அந்த வகுப்பு முடிந்து மகிமா வெளியே கிளம்பியதும், ஐஸ்வர்யா சோகமாய் உள்ளே சென்றாள். தியாழினி அக்கம் பக்கம் நோட்டம் விட்டுவிட்டு, யாரும் இல்லை என்றபின் வேகமாய் போய் குப்பைத் தொட்டிக்குள் கை விட்டு எட்டி அந்த சாக்லேட்டை எடுக்கும் போது,

“குப்பைத் தொட்டியில் என்ன பண்ற?” என்ற சேனாவின் குரல் கேட்டு நிமிர்ந்தவள், சட்டென்று தன் கையிலிருக்கும் சாக்லெட்டை மறைத்து, தன் பின்னால் வைத்துக் கொண்டாள்.

“என்னத்தை மறைக்கிற, தியா.” என்ற போது கூட, அவள் வாய் திறவாமல் இருக்க, அவன் எட்டிப் பார்க்க, அங்கு அவள் கைகளில் தான் கொடுத்த சாக்லேட்.

ஒரு நிமிடம், அவன் மனதிற்குள் சாரல் அடித்தது. பின், “இதற்காகத்தான் நீங்க ரெண்டு பேரும் வெளியே நின்று இருந்தீங்களா?”

அவளோ மௌனம் காக்கவும், தன் கூட நின்றவளைக் காணோமே என்று வெளியே வந்த ஐஸ்வர்யா, அங்கு சேனா சார் நிற்கவும் வேகமாய் வந்தாள்.

வந்தவள் அவளிடம், “இனிமேல் நம்ம சேனா சாரிடம் பேசக்கூடாது. பேசினால் அந்த மேடம் மார்க் குறைச்சிடுவாங்கன்னு சொன்ன. இப்ப நீ மட்டும் பேசற. இது போங்கு!” என்றாள்.

தியா, “உன்னை வச்சுக்கிட்டு ஒரு ஆணியும் புடுங்க முடியாதுடி. லூசாடி நீ...! கொஞ்சம் அமைதியா இரு.”

அவன் தியாவை முறைத்து, “இனி நீங்க ரெண்டு பேரும் என்கிட்ட பேச மாட்டீங்க. ஆல்ரைட். ஓகே. அவங்க உங்க கிட்ட அப்படி நடந்ததற்கு, நான் மன்னிப்பு கேட்கிறேன்.”

“சார், நீங்க எதுக்கு?” என்ற தியாவைப் பார்த்து,

“என்னால் தானே, நீங்க ரெண்டு பேரும் ஒன்னவர் வெளியே நின்னீங்க. அதுக்கு தான்.” என்று சொல்லி விட்டு அவன் சென்றுவிட்டான்.

அவன் கோபமாய் போவதாய் பெண்ணவள் உணர்ந்தாள். அவன் கோபம் தன்னைத் தாக்க, ஐஸ்வர்யா வேகமாய் அவளின் கையில் இருக்கும் சாக்லேட்டை பிடுங்கி, கவரைப் பிய்த்து சாக்லேட்டைப் பாதியைப் பிய்த்து சாப்பிட்டு விட்டு, மீதியை அவள் வாயில் வைத்துவிட, அவன் கொடுத்ததால் துப்பவும் மனமில்லாமல் விழுங்கவும் மனமில்லாமல் சுவைத்தாள். அவள் கவரை குப்பையில் போடப் போக, அவள் கையிலிருந்து பிடுங்கி, அதைப் பத்திரப்படுத்தி தனது புத்தகத்தில் வைத்தாள்.

இருவரும் உள்ளே சென்று அவர்கள் இருப்பிடத்தில் அமரும் போதுதான், தியாவின் இதழின் ஓரத்திலிருந்த சாக்லேட்டைப் பார்த்தான்.

‘ஏன் இப்படி பார்க்கிறார்?’ என்று நினைத்தவள், பாடத்தில் கவனம் செலுத்தினாள்.

வகுப்பு முடிந்து போகும் போது, “சாக்லேட் வாயின் ஓரமாக ஒட்டி இருக்கு. துடைச்சுக்கோ!” என்று சொல்லி விட்டுப் போனான்.

அதில், ஒரு கோபம் மறைந்து இருந்ததை பெண்ணவள் உணர்ந்தாள்.

மாலையில் வழக்கம் போல ஐஸ்வர்யாவை வீட்டில் விடச் சொல்லி, வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

………………..

விது பாரதி, அமெரிக்காவிலிருந்து மும்பை வந்து விட்டாள். மும்பை விமான நிலையம் மிகவும் பரபரப்பாய் இருந்தது. தன் தாய்மொழி தவிர, பல மொழிகள் அங்கே காதில் விழுந்தது. ஏனோ, அந்தத் தாய் மொழியை காதில் கேட்க, மனம் எல்லாம் பரபரத்தது. தான் வந்த நேரத்திற்கு, மாலை 5 மணியளவில், மும்பையில் இருந்து கோயம்புத்தூருக்குத்தான் பிளைட் இருந்தது என்பதால், டிக்கெட் வாங்கியவர் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்குப் போய்க் கொள்ளலாமென்று நினைத்தவர், விமானதிற்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

…………

அந்த நேரம், மிதுனா மும்பை விமான நிலையத்திற்குள் வந்து ரிஷியிடம், “அனைத்தும் செக் பண்ணியாச்சா?” என்று கேட்டதும்,

“ஆச்சு மேடம்.”

“ஓகே.”

“மேடம், ஃப்ளைட் வர ஒரு டென் மினிட்ஸ் ஆகும்.” என்றதும், தலையாட்டி விட்டு தனது செல்ஃபோனை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள்.

சரியாய் 10 நிமிடம் கழித்து, தங்களுக்கான ஃப்ளைட் வரவும் உள்ளே சென்று, மிதுனா ரிஷியுடன் தனக்கான இருக்கையில் அமரும் போது, “எக்ஸ்க்யூஸ் மீ” என்று சத்தம் கேட்டு நிமிர்ந்தபோது,

விமான பணிப்பெண் “மேடம், ஒரு லேடிக்கு அவங்க பக்கத்தில் ஜென்ஸ் இருப்பதால், வேற சீட் மாறனுமென்று சொல்றாங்க. உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், இங்கே மாற்றிக் கொள்ளலாமா...?”

அவள் ரிஷியைப் பார்க்க, அவன் “தாரளமாய்” என்றான்.

மிதுனா தலையாட்டி விட்டு, ஜன்னல் பக்கம் பார்வையைச் செலுத்தினாள்.

பணிப்பெண் “மேடம் நீங்க அந்த இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம்.” என்றதும், நன்றியை தெரிவித்து விட்டு, அவள் கைகாட்டிய இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

விது பாரதி தனது இருக்கையில் அமர்ந்து பெல்ட் எல்லாம் மாட்டிவிட்டு, பின் ஜன்னல் பக்கம் திரும்பி இருந்தவளிடம் நன்றி சொல்வதற்காக, “எக்ஸ்கியூஸ் மீ, ரொம்ப தேங்க்ஸ்.” என்ற போது திரும்பினாள்.

இருவரின் கண்களும் ஒரு சேரக் கலங்கியது. 17 வருடம் கழித்துப் பார்க்கும் உடன்பிறப்புகள். இருவருக்கும் பேச்சு வரவில்லை. அழுகை தான் வந்தது.

“மிதுனா” என்ற வித்யா பாரதி,

தனது தங்கையைப் பார்த்து “நல்லா இருக்கியா...?”

கண் கலங்கியவள், "நம்ம 17 வருஷத்துக்கு முன்னாடி, என்ன சத்தியம் பண்ணினோம்?"

வழியும் கண்ணீரை அடக்கிக் கொண்டு, "இனிமேல் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று!"

“அப்படி சொல்லித்தானே விட்டுட்டு போன அக்கா. அப்புறம் ஏன் இப்ப பேசுற? அதேபோல் இரு.” என்று சொல்லியவள், தலையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

தான் சொன்ன வார்த்தைதான். அன்று தனக்கு வலிக்காத வார்த்தை. இன்று அவள் வாயில், அதேமாதிரி திருப்பிக் கேட்கும் போது, மனம் அப்படி வலித்தது.

“நான் அப்படி சொன்னா, நீ என்னை விட்டுட்டு போயிடுவியாடி...?”

“உங்களை மாதிரி தனியாய் இருந்தால் எதையும் யோசிக்க வேண்டாம், அக்கா.

குடும்பம்னு வரும் போது எல்லாம் யோசிக்கணும் இல்லையா...? என் பொண்ணுக்கு 17 வயசு. அவள் படிச்சு முடிச்சதும், அவளுக்கு நாளைக்கு கல்யாணம் எல்லாம் பண்ணனும்...?”

“பொண்ணா...?”

“நீ தான் அந்தக் கொடுமைக்கார புருஷன் வேணாமுன்னு சொல்லிட்டயே...!”

முகம் சுருங்கியவர், “புருஷன் வேண்டாமுன்னு சொன்னேன். வயிற்றில் வளரும் குழந்தையை வேண்டாமுன்னு சொல்ல முடியல.”

“போதும் அக்கா. வேற எதுவும் பேசவேண்டாம்.”

“சரி, இதுக்கு மட்டும் பதில் சொல்லு. அப்புறம் பேச மாட்டேன். அம்மா, விசித்ரா, வினோ, சிவா எல்லாம் எப்படி இருக்காங்க...? வினோ குட்டிக்கு கல்யாணம் ஆயிடுச்சா...?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க. அப்புறம் நீ ஒன்னு தெரிஞ்சுக்கோ. அன்று நீ போனதும், அம்மா ரொம்ப அழுதாங்க. நீ செத்துப் போயிட்டதா சொல்லச் சொன்ன. நானும் சொல்லிட்டேன். ஆனாலும் அம்மாவிற்கு நீ உயிரோடு இருக்கிறது தெரியும். உன்னால நம் வீட்டில் யாரும் டீவியே பார்ப்பதில்லை.”

“அக்கா, நம்ம வாழ்க்கை தான் சீரழிஞ்சு போச்சு. என் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும். நீ எடுத்த தொழிலால், என் வாழ்க்கை நாசமாய் போச்சு. இன்னொருத்தி சொல்லாமல் கூட, எங்கேயோ ஓடி போய் விட்டாள். அதுவும் உன்னால் தான். தங்கச்சி வாழ்க்கையும் கிட்டத்தட்ட மோசம்தான். கடைசியில் எங்களுக்காக என் தம்பி கல்யாணமே பண்ணவில்லை. எங்களின் ஒட்டு மொத்த சந்தோஷமும் என் பொண்ணு நல்லா வாழ்வதில் தான் இருக்கு. தயவு செய்து சொந்தம் கொண்டாடிக் கொண்டு எங்களைத் தேடி சென்னைக்கு வராதே! ப்ளீஸ்...! அது நீ எங்களுக்கு செய்யும் பெரும் உதவி.” என்று சொல்லி விட்டு, வேறு பக்கம் சாய்ந்து கொண்டாள்.

‘வித்யா அக்கா! வித்யா அக்கா! என்று ஆயிரம் முறை சொல்பவள், உறங்கும் போதும் கூட, தன் பக்கத்தில் படுத்துத் தான் உறங்குவேன் என்று அடம் பிடிப்பவள். எனக்கு ஒரு சின்ன அடிபட்டாலும், கண் கலங்கி நிற்பவள். இன்று, நீ வேண்டாம் இன்று ஒரு நொடிப் பொழுதில் சொல்லி விட்டாளே...!’

தன்னையும் மீறி வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

வாழ்க்கையில் தன் தலையெழுத்தை எழுதும்போது மட்டும், கடவுள் மிகவும் கோபமாய் இருந்திருப்பார் போலும்...!


சுடும்...!

கீழே இருக்கும் லிங்கில் உங்கள் விமர்சனங்களை பதிவிடுங்கள் .

.
Paavam evanga 🙄😞😞 everyone has feelings la indha thiya amma ipdi solliruka kudathu avanga akka paavam dhana 😞 enna venumam sir ku andha pacha pullaiga kovam padraru adhuku enna terium 😜neenga dha gunama aduthu sollanum sir 😬😬 oru chocky kaga embuttu kastam pada vendi iruku 😂🥰🥰🥰🥰💙 super ka . Apro na indha reeva pei comments a miss panran
 
Top Bottom