Thank you so much sisStory semmaya irukku sis romba ethirparpodu padicha story.realy nice all the best sis
Thank you so much ka... No epilogue kaSuper ending da…
Epilogue ellam illaiya????
Thank you so muchNice ending
வாவ் கா... ரொம்ப நன்றிங்க கா நிறைவான விமர்சனம்... நான் ரசித்து படிச்ச விமர்சனம் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு#hanzwriteup
யம்மா anti hero எழுத சொன்னா... ரெண்டு chocolate boys பத்தி எழுதி இருக்க நீ????
அதுல ஒரு disclaimer வேற...
Anti hero என்ற பெயரிலே ரெண்டு அறியா பிள்ளைங்க வாழ்க்கைல கபடி விளையாடி இருக்க.. நீ தான் அப்போ anti director...
jokes apart...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா...
காதல் மோதலோடு மட்டுமில்லாமல் சில பல திருப்பங்களோடும் நகர்த்தி இருக்கிற... Good move
கடைசிவரை எங்க மண்டைய காய விட்டு இடைல ஒரு intermission போட்டு vim போட்டு விளக்குன பார்த்தியா.... சூப்பர்..
ஒரு கணம் எனக்கு மெர்சல் படத்தோட interval scene பார்த்த feel ஆகிட்டு...
அதுக்கு ஒரு hats off
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச character விஷ்வா and அபூர்வா...
அவனோட காதலுக்காக எவ்ளோ பெரிய கிணத்தை எல்லாம் தாண்டி இருக்கான்
நக்ஷத்திரா கிட்ட காட்டுற பாசமாகட்டும், லியாகிட்ட காட்டுற காதலாகட்டும், ருதுகிட்ட காட்டுற வம்பு கலந்த தோழமையாகட்டும் எல்லாத்துலயும் score பண்ணுறான்..
ருத்ரஜித்... இவனை எந்த category ல சேர்க்குறதுனே தெரியல... ஆரம்பத்துல ரொம்ப குழம்பி போய்ட்டேன்... என்னடா இவன் அக்காவை பெண் பார்க்க வந்துட்டு தங்கச்சிக்கு route விட்றான்.. அப்புறம் தங்கச்சிக்கு பச்சை கொடி காட்டிட்டு இங்க அக்காவை கையில் மிதக்கும் கனவா நீ னு தூக்கிட்டு போறான்னு...
அப்புறம் அவனோட காதல் ராணி யாருனு தெரிஞ்சி தெளிஞ்சதுக்கு அப்புறம் தான் அவன் மேல ஒரு பிடிப்பு வந்துது... என்ன இருந்தாலும் கடைசி வரை பிரக்ஸ் கிட்ட சாரி கேட்காம நேக்கா நழுவி அபூவை சமாதானம் பண்ணிட்டான் கேடி பய..
ஆனால் இந்த அண்ணன் தம்பிக்கு இடையே மாட்டிட்டு விழி பிதுங்கி நின்னது நம்ம வைகை...
பாவம் மனுஷன் அவனுங்க போடுற சம்பளத்துக்காக இவன் ரெண்டு பேருகிட்டயும் அடி இடியெல்லாம் வாங்கி இருக்கான்..
பிரகல்யா இவள் ஒரு சூழ்நிலை கைதி தான்... கூடா நட்பு கேடாய் முடியும் மாதிரி... ஒரு அப்பாவி உயிர் துடிதுடித்து சாக காரணமான ஆகிட்டு..
அபூர்வா ஒரு குழந்தை குமரி தான்..
அக்காவுக்காக கணவனை பிரிந்து செல்வதும் பின்பு அவனை நினைத்தே மருகுவதும் இவளோட மென்மையான மனசை எடுத்து காட்டுது..
நிண்டு சண்டை கூட போட தெரியாத அப்பாவி... ஆதிரையோடு பேசும் scene இல் நான் பக்குனு சிரிச்சிட்டேன்...
ஆதிரையோட அவதாரம் எல்லாம் செம்ம தூள்
கரிகாலனை எனக்கு பிடிக்கவே இல்லை...
நக்ஷத்ராவுக்கு நடந்ததெல்லாம் ரொம்ப கொடூரம்...
அந்த scene எல்லாம் படிக்க ரொம்ப கஷ்டமா இருந்துது...
மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்..
லவ் யூ லாட்ஸ் அக்கா அழகு விமர்சனம்..... ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க நான் ரொம்ப ஹாப்பி#வேய்ந்தனனின்_வல்லினம்
கதையின் நாயகர்கள்
ருத்ரஜித்,விஸ்வஜித் இருவரும் வெறும் இரண்டு நிமிட வித்தியாசத்தில் பிறந்தவர்கள் ஆனால் இரட்டையர் அல்ல அதனாலேயோ என்னவோ இருவரும் இரு துருவங்கள்.... அர்ஜுன் கர்ணன் ஆக தோன்றியவர்கள் திடீரென்று இருவரும் ராமன் லக்ஷ்மணன் ஆக மாறியது என்ன மாயமோ...
கதையின் நாயகிகள்
பிரகல்யா, அபூர்வா லியா மருத்துவர் , மிக அன்பானவள், அடுத்தவர்களின் நலத்திற்கு முக்கியத்துவம் தருபவள் அது மருத்துவர் என்பதற்காக இல்லை, அது அவளுடைய குணம், அனைத்திலும் துணிந்து போராடும் பெண்.. அவளின் இளகிய மனதாலே நண்பர்கள் என்று பழகிய கயவர்களின் னாள் பல இன்னல்களில் மாட்டிக்கொண்டு, பல வலிகளை தாங்க வேண்டியதாயிற்று... அவள் தங்கையை தன் சேயாக அரவணைத்த தாலோ என்னவோ வளர்ந்த குழந்தையாகவே இருக்கின்றாள்... அபூ மிக மென்மையானவள், கதைகளில் வரும் ஆன்ட்டி ஹீரோ போன்று ஒருவன் தன்னை மணமுடிக்க வரவேண்டும் என்று எண்ணியவள் அறியவில்லை தன் அக்கா இடத்தில் தான் இருப்போம் என்று ( அதுவும் தன் அக்கா படும் துன்பத்தை அறியாமல் )..
நட்சத்திரா எனக்கு மிகவும் பிடித்த பெண்.. இவள் வரும் இடங்களிலெல்லாம், என்னையும் அறியாமல் மனதுக்குள் அப்படி ஒரு இதமான உணர்வு அழகாக துள்ளி மான் போன்று இருந்த பெண்ணை கயவர்கள் வதைத்தது ஏனோ
வைகை ஒரு அப்பாவி ஜீவன், ருத்ரஜித்தின் PA. அண்ணனும் தம்பியும் இவனை படுத்தும் பாடு அப்பப்பா..இவன் சிறு வயதில் செய்த தவறிலிருந்து காப்பாற்றி அடைக்கலம் கொடுத்து அவனின் வாழ்க்கை சிறப்பான முறையில் அமைத்துக் கொடுத்த பெருமை அனைத்தும் அவன் அண்ணனை சேரும் ( அந்த அண்ணா யாராயிருக்கும் )...
ஆதி மந்திரை ருத்ரஜித் அம்மா, இவங்களைப் பத்தி சொல்ல வார்த்தையே இல்ல, இவங்க உடைய, ஆளுமை, அழகு, கம்பீரம் அனைத்திலும் சிறந்த பெண்மணி..காலா என்கின்ற துரோகினால், வந்த வைராக்கியம் மெய்சிலிர்க்க வைக்கிறது.. காலாக்கு கொடுத்த தண்டனை சரியே.....
( அருமையான கதைப்போக்கு பல இடங்களில் பல திருப்பங்கள் வைத்து மண்டையை காயவிட்டு,படுத்தி எடுத்துவிட்டார் ரைட்டர் ஜி )
கதையின் போக்கு, எழுத்துநடை அனைத்தும் மிக மிக அற்புதமாக இருந்தது... போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் திவி