- Messages
- 271
- Reaction score
- 67
- Points
- 93
நன்றிங்க சிஸ்அசத்தலான ஆரம்பம்.. ருத்ர ஏன் இப்படி.. ஏன்..ஏன் என்ற கேள்வி மட்டுமே இப்போது மனதிற்குள் ஓடிக் கொண்டு இருக்கிறது.
நன்றிங்க சிஸ்அசத்தலான ஆரம்பம்.. ருத்ர ஏன் இப்படி.. ஏன்..ஏன் என்ற கேள்வி மட்டுமே இப்போது மனதிற்குள் ஓடிக் கொண்டு இருக்கிறது.
போக போக புரியும் சிஸ்Adeeiiiiiiii.... enna da nadakuthu inga... manda kayuthu...
ஆமாம் ஆமாம் சிஸ்...Deii... 2 pere unagu over idhula 3 vathu onna.. enga poi mudiumo therila..
Ruthra... kuda poranthavanukum villana irukane...7.வல்லினம்
மயங்கிக்கிடந்த விஷ்வாவினைக் கண்டு புன்சிரிப்பொன்றை உதிர்த்தவனுக்கோ, பழைய ஞாபகங்கள் எட்டிப் பார்த்தது. சரியாக இருபத்தி ஒன்பது வருடங்களுக்கு முன்பே, இருவருக்குமான போட்டி ஆரம்பித்துவிட்டது.
ஆதிமந்திரை மற்றும் கரிகாலன் இருவருக்குமே திருமணமாகி ஐந்து வருடம் கழித்தும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்க, கரிகாலனின் தம்பியான இந்திரனுக்கும், வைஜெயந்திக்கும் திருமணமாகி ஒரேவருடத்தில் குழந்தை உருவாகியிருந்தது.
கரிகாலனின் தாயார் நித்திலவள்ளிக்கோ, அச்செய்தி ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் மூத்தமகனது வாரிசை பார்க்க இயலாது போய்விட்டதே என்ற கவலை அப்பட்டமாக இருந்தது. அந்த வருத்தம் நாளடைவில் தன் மூத்த மருமகளின் மீது கோபமாக திரும்ப, எண்ணற்ற பேச்சுக்களை வாங்கத் தொடங்கினார்.
பெரிய வீட்டுப் பெண், இதுவரை அவரை யாரும் அதட்டிக் கூட பேசியது இல்லை. இந்நிலையில் தற்போது, மகாலட்சுமியாய் போற்றி வரவேற்ற மாமியாரே, பிள்ளை பெத்தெடுக்க வழியில்லை என்று குத்திக்காட்ட ஆரம்பித்ததும் மிகுந்த மனவேதனைக் கொண்டார் ஆதிமந்திரை.
நாளடைவில் தலைசுற்றல், வாந்தி என அவருக்கு ஏற்பட, பித்தம் என்று வீட்டினர் அனைவரும் நினைக்க, அவரின் கருவில் ஏற்கனவே உருவாகி வளர்ந்துக் கொண்டிருந்தான் ருத்ரஜித். விசயம் தெரிந்ததும் வீட்டில் உள்ள அனைவரும் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.
மாதங்கள் விரைந்தோட, இருமருமகள்களுக்கும் பிரசவவலி ஒரே நேரத்தில் வந்தது. முதலில் விஷ்வா பிறப்பான் என்று தான் அனைவரும் நினைத்திருக்க, அதற்கு மாறாக ருத்ரஜித் பிறக்க, விஷ்வஜித்தின் அண்ணனாக மாறிப்போனான் ருத்ரஜித்.
இருவருக்கும் ஒன்றுபோலவே ருத்ரஜித் மற்றும் விஷ்வஜித் என்று பெயர் வைத்து மகிழ்ந்தனர். ஆனால் ஒன்று அவர்களது சிறு வயது பருவம் பாகுபாடுகள் நிறைந்து காணப்பட்டது.
ஐந்து வயது இருக்கும் போது ருத்ரஜித், விஷ்வஜித்திடம், "அஜ்ஜூ, வா நம்ம கண்ணாமூச்சி விளையாடலாம்." என்று அழைத்துக் கொண்டு சென்றான்.
விஷ்வஜித்தின் கண்களை கட்டிவிட்டவன், தன்னைத் தொடுமாறு உரைக்க, விஷ்வாவோ தட்டித்தடுமாறி அவனை பிடித்துவிட்டான்.
"ஹே ருத் நீ அவுட்டு.... அவுட்டு." என்றான் துள்ளிக்குதித்துக்கொண்டே.
"ஏய் அண்ணானு கூப்பிடு. பேரை சொல்லி கூப்பிடாத." என்றான் அப்போதே ஒற்றை விரலை ஆட்டியபடி.
"நம்ம ஒரே நாள்ல தான பிறந்தோம். போடா உன்னை அண்ணா கூப்பிட மாட்டேன்." என்று கொக்காணி காமித்தான் விஷ்வா.
"ஓ அப்படியா. இருடா உன்னை கவனிச்சுக்குறேன்." என்று முணுமுணுத்தவனோ, தன் கண்களை கட்டிக்கொண்டு அவனை பிடிப்பதற்காக சென்றவன் வேண்டுமென்றே அங்கிருந்த குழியில் விழுந்துவிட, விஷ்வாவோ பயந்தே விட்டான்.
"அம்மா... அப்பா ருத்ரா விழுந்துட்டான்." என்று தேம்பி தேம்பி அழுதான்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அவ்விடம் வந்தனர் இந்திரனும் வைஜெயந்தியும்.
இந்திரனோ, குழியில் விழுந்த ருத்ரஜித்தைக் கண்டு பதறி அடித்து ஓடி சென்று அவனை தூக்கினார். ருத்ரஜித்தின் தலையில் வேறு ரத்தம் வர, வைஜெயந்தியோ துடித்தே விட்டார் .
"அய்யோ என்னங்க பையனுக்கு ரத்தமா கொட்டுதே. அக்கா கேட்டாங்கனா என்னனு சொல்லுவேன். ஏங்க டாக்டரை கூப்பிடுங்க. " என்று கண்ணீரை விட, அடுத்தநொடியே மருத்துவரை அழைத்திருந்தார் இந்திரன்.
மருத்துவர், அவனது காயத்திற்கு மருந்திட்டு போக, மயக்கத்திலிருந்த எழுந்த ருத்ரஜித், தனது சித்தப்பாவை தாவிக் கட்டிக்கொண்டான்.
"ரொம்ப வலிக்குது சித்து." என்று தேம்பியவன் அழ, அவனை சாமாதனப்படுத்த முயன்றார் இந்திரன்.
"எப்படி ருத்ரா விழுந்த? குழி பக்கத்துல ஏன் என்னோட தங்கம் போனீங்க?" என்று வைஜெயந்தியும் அவனது தலையை வருடிக்கொண்டு கேட்க,
"சித்திமா. நான் போல.. அதுவந்து" என்று அழுதவனின் விழிகள் விஷ்வஜித்தை பார்த்தது.
"என்னாச்சு ருத்ரா?" என்று விஷ்வாவை ஒருமுறை பார்த்துக்கொண்டே வைஜெயந்தி மீண்டும் கேட்டார்.
"சித்திமா. தம்பி தான் என்னை தள்ளிவிட்டான். அவனை அண்ணானு கூப்பிட சொல்லி சொன்னதுக்கு." என்றான் தலைகுனிந்துக் கொண்டே.
விஷ்வாவோ, "இல்லைம்மா.. அவன் பொய் சொல்றான். நான் பண்ணலை." என்றான் உதட்டை பிதுக்கியபடி.
"எங்க முன்னாடியே ருத்ராவை அவன்னு சொல்ற? நீ பண்ணாலும் பண்ணியிருப்படா. இந்த வயசுலயே என்ன புத்தி உனக்கு?" என்று தன் மகனது முதுகில் நான்கு அடிவைக்க, வலியில் துடித்துப் போனான் விஷ்வா.
"என்னங்க வேண்டாமுங்க சின்னபையன்." என்று வைஜெயந்தி தடுத்தும் அவர் அடிக்க வர,
"நிறுத்துங்க தம்பி." என்று தடுத்து நிறுத்தியிருந்தார் ஆதிமந்திரை.
கோவிலுக்கு சென்றவர் அப்போதுதான் வீட்டிற்கு வர, சிறு பிள்ளையை போட்டு அடிக்கும் இந்திரனின் செயலில் கோபம் கொண்டவர், விஷ்வஜித்தை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.
"பெரியம்மா" என்று அழும் மழலையின் முதுகை வாஞ்சையோடு வருடிவிட்டவரோ, அதன்பின் இந்திரனை திட்டிவிட்டு, தன் மகனுக்கும் அறிவுரை சொன்னார்.
"என்ன ருத்ரா, இது என்ன கோலி மூட்டுற பழக்கம். இது ரொம்ப தப்பு. அவனை நீதான் பத்திரமா பார்த்துக்கணும். நீங்க இரண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்கக்கூடாது." என்று இருவரிடமும் கூறியவர் அங்கிருந்து செல்ல, விஷ்வாவைக் கண்டு சிரித்தான் ருத்ரஜித். விஷ்வஜித்துக்கோ அவனது கெட்ட எண்ணம் அன்றே புரிந்துவிட, அவனோடு விளையாடுவதையே நிறுத்தியிருந்தான்.
அதன் பின் வருடங்களோட, பத்தாம் வகுப்பில் , பன்னிரண்டாம் வகுப்பில் அனைத்திலும் முதல் மாணவன் ருத்ரஜித். விஷ்வஜித்தோ ஓரளவு படிக்க, ருத்ரஜித்தோடு அவனை ஒப்பிட்டு குற்றம் சுமத்தினான் இந்திரன். அதுவே நாளடைவில் ருத்ராவின மீது விஷ்வஜித்திற்கு வெறுப்பை உண்டாக்கியது.
ருத்ரஜித்தை தலைமேல் சுமந்துக் கொண்டு பாசத்தை காட்டும் தன் பெற்றோரை விட்டும், வீட்டைவிட்டும் தனது கல்லூரிபடிப்பிற்காக வெளியூர் சென்ற விஷ்வா, படிப்பு முடிந்த பிறகும்கூட வீட்டிற்கு வருவதை தவிர்த்திருந்தான்.
எப்போது வந்தாலும் தந்தையின் வசைப்பாடு கேட்டு கேட்டு சலித்தே போய்விட்டான் அவன். அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் பெரியம்மா ஆதிமந்திரை மட்டுமே. ஏனோ அவர் மட்டுமே அவனை சரியாக புரிந்துக்கொண்டு அவனது தேவைகளை கவனித்தார்.
ஆனாலும் விதி அவரது வாழ்விலும் விளையாடிவிட, மொத்தகுடும்பமும் துயரத்திலிருந்தது. அதன்பின்னர் அந்த வீட்டிற்கு வருவதை முற்றிலும் தவிர்த்து விட்டான் அவன். மயங்கிக்கிடந்த விஷ்வஜித்தினை கண்டு கடந்தகால நினைவுகளை நினைத்தவனுக்கு இன்றும் சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது.
"இப்போகூட என் வழியில குறுக்க வந்து பல்பு வாங்குறியேடா அஜ்ஜூ." என்று அவனை செல்லமாக வீட்டில் அழைக்கும் பெயரைக் கொண்டு கூறினான்.
மூன்று மணி நேர பயண முடிவில் அவன் வீட்டை அடைந்திருக்க, அருகே கிடக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்தவன் விஷ்வஜித்தின் முகத்தின் மீதே ஊற்றியிருந்தான். மொத்த தண்ணீரும் முகத்தில் பட்ட நொடி, தன் கண்களை சுருக்கியபடி எழுந்த விஷ்வாவோ, ருத்ராவைக் கண்டு சற்று அதிர்ச்சி அடைந்தான்.
அந்த அதிர்ச்சியோடு அவனது முகமும் சேர்ந்து கோபத்தில் சிவக்க, அவனை அனல் பார்வை பார்த்தான்.
"இது எல்லாம் உன் வேலையாடா ருத்ரா?" என்றான் கோபத்தோடு.
"அண்ணன்கிற மரியாதை கொஞ்சமாவது இருக்கா உனக்கு?"
"அது எப்போதும் உன் மேல எனக்கு வராதுடா. ஒருநிமிசம் எனக்கு முன்னாடி பொறந்துட்டனு திமிருல தான ஆடுற." என்றவனது முகமோ கடுமையை தத்தெடுத்திருந்தது.
"ஹாஹா. அந்த ஒரு நிமிசம் உனக்கு முன்னாடி பிறந்தவன் தான் உன்னை காப்பாற்றியிருக்கேன். எதுக்குடா இந்த வேண்டாத பொழப்பு உனக்கு. ராஜா மாதிரி இருக்க வேண்டியவன், ரிப்போர்ட்டரா எதுக்கு நீ கஷ்டப்படனும்? இதுல உன்னை கடத்த நாலு ரவுடிங்க வேற."
"எனக்கு நான் நியாயமா இருக்கேன். அந்த திருப்தி போதும். என் விசயத்துல நீ தலையிடாத"
"பார்ரா. சின்ன திருத்தம் நீதான் என் விசயத்துல மூக்கை நுழைக்குற? பட் இருந்தாலும் இதுகூட நல்லாருக்குடா. மகாபாரதத்துலயே அண்ணன் தம்பிங்களுக்குள்ள தான சண்டை வரும்."
"இதிகாசம் பேசுற அளவுக்கு வளர்ந்துட்டியே. பரவாயில்லை கெட்டது பண்ண துரியோதனின் நிலை கடைசியில என்ன ஆச்சுனு தெரியும்ல?"
"ஹாஹா. நான் துரியோதனனாகவே இருந்துட்டு போறேன். அதுல எனக்கு எந்த கவலையும் இல்லை. அப்புறம் இது ருத்ரஜித்தோட ராஜ்ஜியம். இங்க நான் மனசு வைக்காமல் எதுவும் நடக்காது." என்றான் ஆளுமையாக.
"அதையும் பார்க்கலாம்டா." என்று கூறிய விஷ்வா, காரின் கதவை திறந்து வெளியேற, செல்லும் அவனைக் கண்டு இதழ் வளைத்து சிரித்தான் ருத்ரஜித்.
'பெரிய அர்ஜூனன் இவரு. அர்ஜூனனுக்கு கூட நாலு மனைவியாமே. ஆனால் துரியோதனுக்கு ஒரே மனைவி தான். கெட்டவனை கெட்டவனா பார்க்காமல் அவனுக்குள்ள இருக்க நல்லதையும் தான் கொஞ்சம் பாருங்கடா.' என்று மனதிற்குள் நினைத்தபடி காரிலிருந்து இறங்கினான் ருத்ரஜித்.
இறங்கிய விஷ்வா, தான் எங்கு இருக்கிறோம் என்பதைக் கண்டு தன் தலையில் அடித்துக்கொண்டவன், "ச்சே" என்று கூறவும், வீட்டிலிருந்து அவனின் அன்னை வைஜெயந்தி வெளியே வரவும் சரியாகியிருக்க, மகனைக் கண்ட சந்தோசத்தில் வரவேற்றார் வைஜெயந்தி.
"அஜ்ஜூ வாடா. இப்போதான் அம்மா நினைப்பு வருதா உனக்கு? ஆனந்தகண்ணீர் ஊற்றெடுக்க, தன் மகனை அணைத்துக் கொண்டார்.
"சாரிம்மா." என்று கூறியவன் மேற்கொண்டு எதையும் பேசவில்லை. அவனது கண்களோ, காரிலிருந்து இறங்கிய ருத்ரஜித்தை முறைத்துப் பார்த்தது.
"சித்திமா இந்த ஆரத்தி தட்டு ரெடியா வெச்சுக்க சொன்னேன்னே. எங்க காணோம்?" என்று ருத்ரஜித் நினைவூட்ட,
"ரெடியா இருக்குடா ருத்ரா. நீ எனக்கு கொடுத்த வாக்கை காப்பாத்திட்ட. என் பையனை திரும்பவும் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துட்ட ருத்ரா." என்று தன்வயிற்றில் பிறக்காத மகனது கன்னத்தை ஆதுரவாக பற்றிக் கொண்டார்.
விஸ்வஜித்தின் விழிகள் ருத்ரஜித்தை கேள்வியாக பார்க்க, 'எல்லாம் என் செயல்.' என்று கண்களாலே பதிலுரைத்தான் ஆடவன்.
அதன்பின் வைஜெயந்தி ஆரத்தி எடுத்தபடி, தன் மகனை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க,
"நில்லு" என்ற இந்திரனின் குரல் அவனை உள்ளே செல்லவிடாமல் தடுத்தது.
"எங்கடா வந்த? இப்போ மட்டும் ஏன் வந்த? இப்போதான் எங்களை கண்ணுக்கு தெரிஞ்சுதா?" என்று கோபத்தோடு கத்தியதில், விஷ்வஜித்தோ, 'இதுக்கு எல்லாம் காரணம் நீதான்டா.' என்பது போல் ருத்ரஜித்தை முறைத்தான்.
"சொல்லுடா... இப்போ தான் நாங்க தெரியுறோமா?" என்று கத்தினார்.
"சித்து விடுங்க." என்று ருத்ரஜித் அவரை சாமாதானம் செய்ய முயற்சித்தான்.
"இல்லை ருத்ரா. இப்ப மட்டும் இவன் எதுக்கு வரணும். இவன் பொறுப்பா வளரணும்னு தான ஆசைப்பட்டேன். அப்பாவா கண்டிக்கக்கூட எனக்கு உரிமை இல்லையா?" என்று துக்கம் அவரது தொண்டையை அடைத்தது.
தன் தந்தையை சமாதானம் செய்ய அவன் எதுக்கு செல்ல வேண்டும்? என்று நினைத்த விஷ்வஜித், அவனது கைகளை நாசுக்காக நகர்த்திவிட்டு தன் தந்தையின் கரத்தை பற்றியவன், "சாரிப்பா. இந்த முறை என்னை நம்புங்க. இனி யாருக்காவும் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன்." என்று ஓரக்கண்ணால் ருத்ரஜித்தை பார்த்தபடிக் கூறினான்.
"போதும்பா. ஒவ்வொரு முறையும் உன்னை நம்பி ஏமாந்தது போதும். ருத்ராக்கு சப்போர்டா நம்ம நிர்வாகத்தை வழிநடத்துவனு நம்புனேன். ஆனால் நீ படிப்பு முடிஞ்சதும், எங்கயோ போயிட்ட." என்றார் விரக்தியாக.
"இந்த ஒரு முறை என்னை நம்புங்கப்பா. நான் கோபத்துல சில விசயங்களை யோசிக்காமல் பண்ணிட்டேன் தான். ஆனால் இப்போ உங்க நம்பிக்கையை காப்பாற்றுவேன்."
"நிஜமாவாடா. இல்லை இவன்கிடக்குறானு போயிடுவியா?"
"சத்தியமாப்பா." என்று அவரின் கண்களைப் பார்த்து அவன் கூறியநொடி. ஏழு வருட மகனை பிரிந்து வாழ்ந்த இந்திரனின் மனம் சற்று இழகி போயிருக்க, அவனை வாரி அணைத்துக் கொண்டார்.
தந்தையின் உண்மையான பாசத்தை காலதாமதமாக புரிந்துக் கொண்டாலும் அவரின் அன்புக்காக ஏங்கிய இதயத்துக்கு ஆறுதலாக இருந்தது அவரது அணைப்பு. வைஜெயந்தி கண்களில் ஆனந்த கண்ணீரே நிரம்பியது.
"அஜ்ஜூ ரொம்ப சந்தோசமா இருக்குடா. சித்து இன்னொரு சர்பிரைஸ் இருக்கே அது சொல்லுங்க?" என்றான் ருத்ரஜித் ஆவலோடு.
இவனது ஆர்வமே எதோ சரியில்லை என்பதை விஷ்வாவிற்கு உணர்த்த, தன் தந்தையை கேள்வியாக பார்த்தான்.
"அதை மறந்துட்டேன் பாரு. நம்ம ஆதிமந்திரா காஸ்மாட்டிக்ஸ் அண்டு ஹெர்பெல் பேக்டரியோட சி.இ.ஓ நீதான்டா. ருத்ரஜித் எப்போவோ அந்த கம்பெனி ஷேர்ஸ் உன் நேம்ல மாத்திட்டான். நீதான் அதை நிர்வகிக்கப்போற. அப்புறம் வோர்ல்ட் லெவல்ல நடக்குற கான்ப்ரென்ஸ்க்கு நீதான் போகப் போற." என்று பெருமிதம் பொங்க கூறினார்.
ஆதிமந்திரா குரூப் ஆஃப் கம்பெனியில் ஒரு அங்கம் தான் காஸ்மாடிக்ஸ். இதை தவிர்த்து ஹெல்த் டிரிங்ஸ், இயற்கை உரம், இரும்பு எஃகு தொழிற்சாலை என பல்வேறுபட்ட நிறுவனங்களைக் கொண்ட குழுமம்தான் ஆதிமந்திரா குரூப் ஆஃப் கம்பெனிஸ்.
அதில் உள்ள மிகப்பெரிய நிறுவனமான காஸ்மாடிக்ஸை தன்னிடம் இந்நேரத்தில் இவன் ஒப்படைக்கிறான் என்றால் அதன்பின்னே மறைந்திருந்த சூழ்ச்சி அவனை வெகுவாக இடித்தது.
அவனாக தந்திருந்தால் நிச்சயம் மறுத்திருப்பான், ஆனால் தந்தையின் மூலம் அவன் கொடுத்ததை மறுத்தால், மேலும் தன்னை அவர் வெறுக்க நேரிடும். தன் தமயனின் சூழ்ச்சிகளை வெளி உலகிற்கு நிரூபிக்க, தான் அவ்வீட்டில் இருந்தாக வேண்டும் என்ற நிலை அவனை யோசிக்க வைத்தது.
ருத்ரஜித்தோ ஆணவம் கலந்தப் பார்வை பார்த்தான். "உனக்கு வேற ஆஃப்சனே இல்லை சி.இ.ஓ." என்று அவனை அணைத்தபடி காதில் உரைத்தான்.
பதிலுக்கு மெல்லிய புன்னகையை உதிர்த்தவன், "இதையே எனக்கு சாதகமா மாத்திக் காட்டுறேன்." என்றான் அவனது காதுக்குள்.
"பார்க்கலாம்." என்று கூறிக்கொண்டே ருத்ரஜித் அவனிடமிருந்துப் பிரிய, விஷ்வஜித்தோ, "சரிங்கப்பா. நான் இந்த பொறுப்பை ஏத்துக்குறேன்." என்றான் புன்னகையோடு.
அவனது சொல்லில் இந்திரன் கொண்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. "ஜெயந்தி ஸ்வீட் கொண்டுவாமா." என்று புன்னகையோடு சொன்னவர், அடுத்தநொடியே தன் மகனிடம் திரும்பி, "விஷ்வா. வீட்டுக்கு வந்ததும் வராததுமா நாளைக்கே உன்னை கான்ஃபெரன்ஸ்க்கு சிக்காக்கோ அனுப்பப் போறேன்டா. ஒண்ணும் பிரச்சினை இல்லை. உன்னோட வைகையையும் அழைச்சுட்டு போ. முப்பது நாள் நடக்கயிருக்க இந்த கான்ஃபெரன்ஸ் கண்டிப்பா உனக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும்." என்று சத்தமின்றி குண்டை தூக்கிப் போட, அதை எதிர்பாராதவனோ அதிர்ந்து போய் ருத்ரனை பார்த்தான்.
'இது எல்லாம் உன் வேலை தானா?' என்பது போல் பார்த்தது அவனின் கண்கள்.
'அதுநானே...' என்று கண்களை சிமிட்டினான் ருத்ரஜித்.
"ஓகே சித்து. அவன் ஃபிரஸ் ஆகட்டும்." என்று விஷ்வஜித்தை கையோடு அழைத்துக்கொண்டு சென்றான் ருத்ரஜித்.
"எப்படிடா நம்ம பிளான்?" என்றவனோ விஷ்வாவின் தோள் மேல் கைப்போட்டபடி கூற,
"சகிக்கலை. எதுக்கு என்னை அவசரமா இந்தியால இருந்து துரத்தி விட பார்க்குற?" என்றவனோ ருத்ரஜித்தின் கைகளை தட்டி விட்டான்.
"ச்சேச்சே உனக்கு ட்ரைனிங் கொடுக்கத்தான். அதுமட்டுமில்ல இனி நீ லியா லியானு நான் கட்டிக்கப் போற பொண்ணு பின்னாடி சுத்தக்கூடாது இல்லையா?" என்றவன் கூறியநொடி விஷ்வாவின் முகத்தில் சிறு அதிர்ச்சி எட்டிப் பார்த்தது.
"ஹாஹா ஷாக்கை குறை. என்னை சுத்தி மட்டுமில்ல, என்ன சுத்தி இருக்கவங்களுக்கு நடக்குறதுகூட எனக்கு தெரியும். தம்பிங்குறதுனால இதோட விடுறேன்." என்று உறுத்து விழித்தவன் அவனது அறையிலிருந்து செல்ல,
"ச்சே" என்று அந்த அறையிலிருந்த தலையணையை விஷ்வஜித் தூக்கி எறிய, அவனது அறையைக்கடந்து சென்ற சாலா மீதே விழுந்தது.
தன் மேல் விழுந்த தலையணையைக் கண்டு பதறியவள் கத்த, விஷ்வாவோ அவளை முறைத்தப்படி, "எதுக்கு கத்துற?" என்றான் கர்ஜனையாக.
"ஒன்னுமில்லை." என்றவளோ அவனை திரும்பி பார்த்துக்கொண்டே அங்கிருந்து சென்றாள்.
அதன்பின் நாட்கள் மெல்ல உருண்டோட, பிரகல்யாவின் வாழ்க்கையையே புரட்டிப்போடவிருந்த ருத்ரஜித் மற்றும் பிரகல்யாவின் திருமணநாளும் வந்தது....
மென்மையானவளின் காதல்
கனவை, கானல் நீராய்
மாற்றவிருக்கும் தருணம்
இதுவோ....!
நம்பியவன் வதைக்க போகும்
நொடிதணில் மீட்பவன்
பறந்துபோக,
காரிகையின் நிலைதான்
என்னவோ....!
வேய்ந்தனனின் ஆட்டம் தொடரும்....
Aada pavi8.வல்லினம்
ருத்ரஜித் வெட்ஸ் பிரகல்யா என்னும் பிரம்மாண்டமான பூக்கள் கொண்டு செய்த பெயர் பலகை திருமண மண்டபத்தின் முன் அழகாய் காட்சியளிக்க, வரவேற்பறையில் நின்றபடி அனைவரையும் பன்னீர் தெளித்து வரவேற்றனர் சத்யராஜ் மற்றும் சரஸ்வதி தம்பதியினர். தன் செல்ல மகளது திருமணவிழா என்பதால் இருவரது முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி. திருமணத்திற்கான ஒவ்வொரு ஏற்பாட்டையும் உடனிருந்து கவனித்தே செய்திருந்தார் சத்யராஜ்.
சற்று நேரத்தில் நிச்சயதார்த்தமும், மறுநாள் திருமணமும் நடக்கவிருந்ததால் மண்டபமே பரபரப்பாக காட்சியளித்தது. மாப்பிள்ளையை வரவேற்பதற்காக பெண்வீட்டார் அனைவரும் ஆவலோடு காத்திருக்க, மேளதாளம் முழங்க, உற்றார் உறவினர்கள் புடைசூழ
காரிலிருந்து மண்டபத்திற்கு வந்திறங்கினான் ருத்ரஜித்.
என்றும் அவனது கன்னங்களில் உறவாடிக் கொண்டிருந்த அடர்ந்த தாடியினை நீக்கியவன், தனது அக்மார்க் புன்னகையை உதிர்க்க, அவன் அணிந்திருந்த அடர் மெரூன் நிற செர்வாணியும், அதன்மேல் சட்டையாக சந்தனநிற கோட்டும் அவனை மேலும் வசீகரித்துக் காட்டியது. அவனோடு வைஜெயந்தியும் இந்திரனும் பெற்றோர் ஸ்தானத்தில் வந்து இறங்க, மேளதாளம் முழங்க பெண்வீட்டார் அவர்களை வரவேற்றனர்.
ஏற்கனவே தயார் நிலையிலிருக்கும், ஆரத்தி தட்டினை கையில் ஏந்திக் கொண்டு முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன், அவள் அக்கா எடுத்துக்கொடுத்த ராமர்பச்சை நிற வேலைப்பாடுகள் மிக்க தாவணியில், ருத்ரஜித்தின் முன்புவந்து நின்றாள் அபூர்வா.
குறைந்த ஒப்பணை அலங்காரத்தில் தேவதைப்போல மிளிர்ந்தவளை ரசித்த ருத்ரஜித்தின் கண்கள், பெண்ணவளின் இதழ்கடையோரம் விழும் சிறுகுழியினை விட்டு அகலாமல் இருக்க, அந்தநொடி தன் எண்ணத்தை நினைத்து அவன்மீதே அவனுக்கு கோபம் துளிர்த்தது. அக்கோபத்தை தனக்கு தடையாக மாறிப்போன பிரகல்யாவின் மீது திசைத் திருப்பியவனது முகம் நொடியில் கடுமையைத் தத்தெடுத்திருந்தது.
"வாங்க மாமா." என்று புன்னகை மாறாது அழைத்த அபூர்வாவின் மென்மையான குரலில், தீயில் உருகும் வெண்பனிபோல் ஆடவனின் கோபமுகமும் நொடியில் கரைந்துருகிப் போனது.
அபூர்வாவோ, அவனைக் கண்டு புன்னகை மாறாது ஆரத்தி தட்டை வலயிடமாக பின் இடவலமாக மூன்று முறை சுற்றியவள், "மாமா ஃபல்கா எதாவது தட்டுல போடுங்க." என்றாள் ஆர்வமாக. பதிலுக்கு அழுத்தமாக புன்னகைத்தவனோ, தனது வாலெட்டை தேட, அதுவோ, அவனது காருக்குள் இருந்தது.
அபூர்வாவோ அவனின் முகமாற்றத்தை புரிந்தவளாக "கூகுள் பேவோ, இல்லை போன்பேவோ எது பண்ணாலும் டபுள் ஓகே மாமா." என்று கண் சிமிட்டிக் கொண்டே கூறியதில் அங்கிருந்த அனைவருமே புன்னகைத்தனர்.
வைஜெயந்தியோ இந்திரனை பார்த்து, "ஏங்க ருத்ரா கையில பணம் கொடுங்க." என்றார். இந்திரனும் பணத்தை எடுக்கப்போக, அவரிடம் திரும்பிய ருத்ரஜித்தோ மறுப்பாய் வேண்டாமென்று தலையசைத்தான்.
நொடியில் தனது சுண்டு விரலில் மாட்டியிருந்த அவனது மிகமுக்கியமான மோதிரம் ஒன்றை உருவி எடுத்தவனோ, ஆரத்தி தட்டில் போடாது பெண்ணவளின் கைகளை பற்றி, உள்ளங்கையில் வைக்க, அபூர்வாவோ அவனது அதிரடி செயலில் விழிகளை விரித்தவள் அதை ஏற்பதா? வேண்டாமா? என்று குழம்பிப்போய் பார்த்தாள்.
அங்கிருந்த மற்ற உறவுகள், மாப்பிள்ளையின் தாராள மனசை புகழ்ந்து பேச, வைஜெயந்தியும் இந்திரனுமே ஒருநிமிடம் திகைத்துப்போய் பார்த்தனர். அவர்களுக்கு தெரியும் அல்லவா? அந்த மோதிரத்தை இதுவரை அவன் கழற்றியதே இல்லை என்று.
ருத்ரஜித்தோ எதை பற்றியும் கவலைக் கொள்ளாமல், "விலைமதிப்பில்லா இந்த மோதிரத்தை பத்திரமா வெச்சுக்கோ." என்றான் புன்னகை மாறாமல்.
அடுத்த நிமிடமே தன் தந்தையை திரும்பியவள் பார்க்க, அவரும் அன்பாக கொடுத்ததை பெற்றுக் கொள்ளும்படி தலையை அசைத்ததும்தான் மோதிரத்தை தனது விரலில் போட்டுக் கொண்டாள் அபூர்வா.
' இங்க நான் வந்ததுக்கான சரியான அர்த்தம் உன் கைவிரல்கள்ல தெரியுது அபூ பேபி.' என்று நினைத்தவனோ அம்மகிழ்ச்சி மாறாது மண்டபத்திற்குள் தன் காலடியை மிக அழுத்தமாய் பதித்திருந்தான்.
பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வீற்றிருக்கப்பட்ட பிரத்யேக இருக்கையை நோக்கி அவன் நடந்து செல்ல, அவன்முன் மலர்தூவியபடி நடனகுழுவை சேர்ந்தவர்கள் நடனம்புரிந்துக் கொண்டே அவனை வரவேற்க, கண்கள் கர்வம் பொங்க நடந்தவன், தனக்கே உரிய தோரணையில் மிடுக்காய், அங்கிருந்த அலங்கரிக்கப்பட்ட மணமக்களுக்கான பிரத்யேக இருக்கையின் மீதே அமர்ந்துக் கொண்டான்.
அதேசமயம் மணமகளது அறையில், கண்ணாடி முன்பு அமர்ந்திருந்தாள் பிரகல்யா. கழுத்திலிருக்கும் குந்தன் நகைகளை சரியாக பொருத்திக் கொண்டிருக்க,
"பாப்பா." என்று அழைத்துக்கொண்டே பிரகல்யாவின் அறைக்கு வந்தார் ரமேஷ்.
"ரமேஷ் அண்ணா வாங்க." என்று புன்னகையோடு அவள் பேச, ராணிப்போல் அலங்கரிக்கப்பட்ட தனது டாக்டர் அம்மாவினை பூரிப்புடன் பார்த்தது அவரின் கண்கள்.
"மாப்பிள்ளை ரொம்ப அழகா இருக்காரு பாப்பா. நீங்க இரண்டு பேருமே ரொம்ப சந்தோஷமா இருக்கணும்." என்று மனதாரக் கூறிக்கொண்டே தனது மகளை அவள் முன் அழைத்து வந்தவரோ,
"குட்டிமா அக்காக்கு மோதிரம் போட்டு விடுடா." என்று உரைக்க,
"இது எல்லாம் எதுக்கு ரமேஷ் அண்ணா." என்றாள் பிரகல்யா மறுப்பாக.
"நீயும் என் பொண்ணு தான் பாப்பா. அன்பா கொடுக்குறதை மறுக்காமல் வாங்கிக்கோ பாப்பா." என்று புன்னகையோடு அவர் கூறியதும் மறுக்க இயலாது பெற்றுக் கொண்டவள், தனது பிரேஸ்லெட்டைக் கழற்றி சிறுமியின் கைகளில் போட்டுவிட்டாள்.
"என்ன பாப்பா இது எல்லாம்?" என்றவர் பதற, "அன்பா கொடுக்குறதை மறுக்க கூடாது ரமேஷ் அண்ணா." என்று அவர் வாயை அடைத்த பிரகல்யாவை பெருமிதம் பொங்க பார்த்தார் ரமேஷ்.
பின் மணப்பெண்ணை அழைத்து செல்வதற்காக அவளது தோழிகள் வர, ரமேஷிடம் விடைபெற்றவள், மஞ்சள் மற்றும் இளம் ரோஜா வர்ண லெகாங்காவில் தோழியர் புடைசூழ மேடையை நோக்கி முகம் மலர்ந்தபடி நடந்துச் சென்றாள்.
அவளையே அழுத்தமாய் ருத்ரஜித் பார்க்க, தன்னவனின் பார்வையில் நாணத்தினால் சிவந்தவளோ, அவனைக் கண்டு மெலிதாக புன்னகைக்க, அவனும் பதிலுக்கு புன்னகைத்தான்.
அந்த புன்னகைக்கு பின்னே மறைந்திருக்கும் ராட்சசனை அவள் உணாரது போனது தான் அவளின் பிழையோ? பல்வேறு ஆசைகளை சுமந்தபடி அவனது அருகே வந்து நின்றவள் அங்கிருந்த உறவினர்களைப் பார்த்து, மரியாதை நிமித்தமாக இளநகையோடு வணக்கம் புரிந்தாள்.
'எவ்ளோ சிரிக்கணுமோ சிரிடி. இன்னும் கொஞ்ச நேரத்தில நீயே நினைச்சாலும் உன்னால சிரிக்க முடியாது.' என்று ஏளனமாய் பெண்ணவளைப் பார்த்தது ஆணவனின் கண்கள்.
அதன்பின்னர் நிச்சயதார்த்த தட்டுக்களை இருவீட்டினரும் மாற்றிக்கொள்ள, பிரகல்யாவை புடவை மாற்றுவதற்காக அறைநோக்கி அழைத்துச் சென்றாள் அபூர்வா.
****
நான்கு சுவற்றிற்குள்ளே வீற்றிருந்த விஷ்வஜித்தின் மனம் ஒரு நிலையிலேயே இல்லை. இன்று காலையிலியே சிகாகோவிலிருந்து வைகைசெல்வனை அழைத்துக் கொண்டு இந்தியா வந்திருந்தவனுக்கு அடுத்தடுத்து வேலைகள் நிறையவே இருந்தது.
அந்த வேலையின் முதல்கட்டமாக தனது கைபேசியை உயிர்பித்தபடி தீவிரமான விசயத்தை பேசத் தொடங்கியிருந்தான்.
"கல்யாண பொண்ணை இன்னைக்கு நைட்டே தூக்கிடுங்க. ஆனால் சின்ன கீறல்கூட அவ மேல விழக்கூடாது." என்று கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தவனின் மனமோ எப்பாடுப்பட்டாவது பிரகல்யாவை மீட்க வேண்டும் என்றே நினைத்தது.
"சரிங்க சார். பெரிய இடத்து கல்யாணம் வேற, ரிஸ்க் அதிகம். பேமெண்ட் பார்த்து பண்ணுங்க." என்றான் மறுமுனையில் இருந்தவன்.
"நீ காரியத்தை சரியா பண்ணு. நீ கேட்டதை விடவும் அதிகமா கொடுக்குறேன்." என்றவனோ அவனது திட்டத்தைக் கூறியபடி போனை அணைக்க, விஷ்வாவினை உணவுண்ண அழைப்பதற்காக வந்த வைகைசெல்வனோ அனைத்தையும் கேட்டுவிட்டான்.
"அஜ்ஜூ அண்ணா. யாரை கடத்த போறீங்க? இதுக்காகத்தான் அவசரமா நம்ம இந்தியா வந்தோமா?" என்றான் அதிர்ச்சியாக.
"டேய் இது வேற விசயம்டா. என் பிரெண்டோட லவ்வரோட கல்யாணம். பொண்ணை தூக்கிட்டு நாளைக்கு என் பிரண்டுக்கு கல்யாண பண்ணி வைக்கப்போறோம்."
"ஓ... ஓகே. ஆனால் ஏன் நம்ம இந்தியா வந்த விசயத்தை பாஸ்கிட்ட சொல்லலை." என்றவனின் மனதிலோ அந்த உறுத்தல் இருந்துக்கொண்டே இருந்தது.
"என் விசயத்துல ருத்ரா தலையிடுறதை நான் விரும்பலை. நீ போய் தூங்குடா. நாளைக்கு நம்ம ருத்ராவோட கல்யாணத்துக்கு போகணும்." என்று ஒருவாறு சமாளித்தவன், வைகையை அனுப்பியிருந்தான்.
"லியா உன்னை காப்பாற்ற எனக்கு வேற வழி தெரியலை. என்னால நீ கஷ்டப்படுறதை பார்க்க முடியாது. உன்னை ருத்ராகிட்டயிருந்து நான் மீட்கணும்." என்றவனின் மனதில் முழுவதுமாக நிரம்பியிருந்தாள் பிரகல்யா.
ஆனால் அவன் அறியாதது ஒன்றுமில்லை. அவ்வளவு எளிதாக அவளை விட்டுவிடுவானா ருத்ரஜித்? விஷ்வஜித் இங்கு வேறு ஒரு திட்டம் தீட்ட, அங்கு ருத்ரஜித்தோ அவனுக்கு முன்பே தனது திட்டத்தை செயல்படுத்தக் காத்திருந்தான்.
***
மண்டபத்தில் ஐயர் பத்திரிக்கை வாசிக்க, நிச்சயதார்த்த புடவையை மாற்றிக்கொண்டு பிரகல்யாவும், பெண்வீட்டு சார்பாக எடுத்துக்கொடுத்த பட்டு வேஸ்டி சட்டையை அணிந்துக் கொண்டு ருத்ரஜித்தும் எதிரெதிரே அமர்ந்துக் கொண்டனர்.
அதன்பின்னர் மணமகளுக்கு நலங்கு வைக்கும் சம்பிரதாயம் நடந்தது. சந்தனத்தை குழைத்து பெண்ணவளின் கன்னங்களில் தடவியிருக்க, அழகோவியம் போல் மிளிர்ந்தாள் பாவையவள். அபூர்வாவும் தன் பங்கிற்கு தன் அக்காவின் கன்னங்களில் சந்தனத்தை கொண்டு நிரப்பியிருந்தாள்.
அதன்பின்னர் பிரகல்யாவும் ருத்ரஜித்தும் மோதிரத்தை மாற்றிக் கொள்வதற்காக எழுந்து நின்றனர். ருத்ரஜித்தின் கைகள் பிரகல்யாவின் கைகளை பற்றியிருந்த அபூர்வாவின் கைகளை உரசிக்கொண்டே, பிரகல்யாவின் கையில் மோதிரத்தை மாட்டியிருக்க, அவனது கண்களோ அபூர்வாவின் விரலில் இருந்த தன் மோதிரத்தை கண்டு புன்னகைத்துக் கொண்டது.
பிரகல்யாவும் புன்னகையோடு ருத்ரஜித்தின் விரல்களில் மோதிரத்தை மாட்டிவிட்டவளோ அவனை முழுவதுமாக நம்பினாள்.
அபூர்வாவோ, "பார்ரா.. என்னக்கா ஒரே சைட்டிங் தான் போல." என்று கண்சிமிட்டியபடி இருவருக்குமே "கன்கிராட்ஸ் அக்கா மாமா." என்று புன்னகை முகம் மாறாது கூறியவள் கனவிலும் அறியவில்லை, இந்த மகிழ்ச்சியான நிலை நாளை இருக்காது என்பதை.
பின் உறவுகள் அனைவரும் இருவரையும் வாழ்த்தி விடைபெற, இரவு உணவினை உண்டுவிட்டு அனைவரும் அவரவர் அறை நோக்கி உறங்குவதற்காக சென்றனர். விடிந்தால் கல்யாணம் என்பதால், படுத்த உடனே அனைவரும் அயர்ந்து தூங்கத் தொடங்கியிருந்தனர்.
மணப்பெண்ணின் அறையில் அமர்ந்திருந்த பிரகல்யாவோ, அங்கிருந்த கண்ணாடியின் முன் அமர்ந்துக்கொண்டே தனது ஒவ்வொரு நகைகளையும் கழற்றி வைத்துக் கொண்டிருக்க, அவ்விடம் வந்தாள் அபூர்வா.
"அடடா... என் கண்ணே பட்டிடும் போலயே. பிரக்ஸ் அசத்துற?" என்றுக் கூறிக்கொண்டே வந்த அபூர்வாவோ தன் தமக்கை பிரகல்யாவின் தோள்பட்டையை தன் இருகைகளால் வளைத்து பிடித்துக் கொண்டபடி சிரித்தாள்.
அபூர்வா சொன்னதை போல் பச்சை நிற பட்டில் தேவதைப் போல் ஜொலித்திருந்தாள் பிரகல்யா. மூக்கில் இருக்கும் வைரமூக்குத்தி மேலும் அவள் முகத்திற்கு அழகு சேர்க்க, அவளது கன்னத்தில் பூசப்பட்டிருந்த சந்தனம் மேலும் அழகாய் காட்டியது. தன் தங்கையின் கூற்றில் இதழ்பிரித்து வெட்கத்தில் சிரித்தாள் பிரகல்யா.
"தூங்க போற நேரத்துல தான் அக்கா கண்ணுக்கு தெரியிறேனா உனக்கு?"
"அக்கா நீயே பார்த்தியே. ஸ்சப்பா எத்தனை வேலை. டாடியும் மம்மியும் என்னை ஒரு வழி பண்ணிட்டாங்க. மணப்பெண்ணா இருந்தால் எவ்வளவு ஜாலியா இருக்கலாம். ஒரு வேலையும் செய்ய வேண்டியது இல்லை."என்ற அபூர்வாவோ ஏக்கப் பெருமூச்சொன்றை விடுத்தாள்.
என்னடி... பெருமூச்சு எல்லாம் பலமா இருக்கு?"
"அதுவா அக்கா... என் கல்யாணத்தை பத்தி நினைச்சு பார்த்தேன். அதான் எப்போ வரும்னு, இப்போ ரொம்ப ஏக்கமா இருக்கு." என்றவளைக் கண்டு இளநகை புரிந்தவள்,
"அதுக்கு இன்னும் குறைஞ்சது இரண்டு வருசமாவது ஆகும். இன்னும் காலேஜ் கூட முடிக்கலை, அதுகுள்ள கல்யாணத்தை பத்தி பேசுறியா நீ?"
"ப்ச்... அது இல்லைகா. உனக்கு நார்மல் அரெஞ்சுடு மேரேஜ்கா. ஆனால் எனக்கு அப்படி கிடையாது. சும்மா ஆன்ட்டி ஹீரோ ஸ்டையில்ல மேரெஜ் நடக்கணும்." என்று கண்களை விரித்தவள், தனது முப்பத்திரண்டு பல்லையும் காட்ட, அவளை புரியாத பார்வை பார்த்தாள் அவளின் தமக்கை.
"என்னாச்சு அபூமா. கதைகள் வேற. நிஜம் வேற." என்ற பிரகல்யாவின் பார்வையில் தன் தங்கையைப் பற்றிய கவலை அப்பட்டமாக தெரிந்தது.
"போ அக்கா. நார்மலா கல்யாணம் நடக்குறதுல என்ன த்ரில் இருக்கும். கிட்நாப் பண்ணி தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுனாதானே வேற லெவல்ல த்ரில் இருக்கும்." என்று உற்சாகமாக கூறும் தன் தங்கையின் தலையிலேயே செல்லமாக கொட்டினாள்.
"போடி போய் தூங்குற வழியைப் பாரு. நாளைக்கு சீக்கிரம் எந்திரிக்கணும்" என்று அதட்டியவள், பின் நாளை நடக்கவிருக்கும் திருமணத்தை எண்ணிப் பார்த்தாள். நினைக்கும் போதே முகம் சிவந்தது, அது வெட்கத்தாலா? இல்லை தன் கணவனாக வருபவனை நினைக்கும் போதே தோன்றிய கர்வத்தாலா? என்றவள் அறியவில்லை.
அன்று இரவு அனைவரும் உறங்கும் நடுநிசி வேளையில் பிரகல்யாவின் கைபேசி சிணுங்க, அதிலிருந்த குறுஞ்செய்தியை கண்டு அதிர்ச்சி! பயம்! வெட்கம்! என்று பல்வேறுப்பட்ட உணர்ச்சிகள் அவள் முகத்தில் ஒரு சேரத்தோன்ற புன்னகைத்துக் கொண்டாள் பிரகல்யா.
இதுவரை ருத்ரஜித் பிரகல்யா இருவருமே மனம்விட்டு தனியாக பேசியதில்லை. திருமண பேச்சு நடந்த பிறகும் கூட அவனாக அழைத்து அவளிடம் போனில் பேசவும் இல்லை. இவளுக்கும் அவனிடம் பேச நேரம் இல்லாமல் கிளினிக்கே கதியென்று இருந்தாள். தற்போது தனியாக பேச ஆசையாக இருப்பதாக குறுஞ்செய்தியை அனுப்பியிருப்பவனை நினைக்கும்போதே பிரகல்யாவிற்கு சிரிப்புதான் வந்தது.
"சரியான கேடி இவரு. எல்லாரு முன்னாடியும் நம்மகிட்ட பேச அவ்வளவு வெட்கப்படுறாரு. இப்போ பாரு தனியா பேசணும்னு கூப்பிடுறாரு." என்றவள் தனது வெட்கத்தை மறைக்க வெகுவாக முயற்சித்தவள் தோற்றுப்போக,
கட்டிலிலிருந்து சத்தமின்றி எழுந்தாள்.
அவ்விடம் உறங்கிக் கொண்டிருந்த அபூர்வாவைப் பார்த்து லேசாக புன்னகைத்து, 'இப்போ மட்டும் உங்க மாமாவை நான் பார்க்கப் போறது தெரிஞ்சா கலாய்ச்சு தள்ளிடுவ நீ. சோ சமத்தா தூங்கு அபூமா.' என்று தங்கையிடம் மானசீகமாக கூறியவள் சத்தமின்றி மண்டபத்தின் பின்புறம் நோக்கி சென்றிருந்தாள்.
ஆள்நடமாட்டம் அற்ற அவ்விடத்தில் நின்றவளின் தேகத்தில் சில்லென்ற குளிர் காற்று மோத, தனது சேலை முந்தானைக் கொண்டு தனது உடலை மறைத்தவளின் கண்களோ சுற்றும் முற்றும் தன்னவனையே தேடியது.
"என்னதான் தேடுறியா?" என்றவனின் அழைப்பில் உடலில் ஒருவித சிலிர்ப்பு தோன்ற, பட்டென்று அவனை நோக்கி திரும்பியவள் இமைமூடாமல் பார்த்தாள்.
மெல்ல அவளின் அருகே அடியெடுத்து வைத்த ருத்ரஜித்தோ அழுத்தமான பார்வை பார்த்தான். அவனது இதழ்களிலே முறுவல் பூத்திருந்தது. அந்த முறுவலைக் கண்டு தானும் சிரித்தவள் அறியவில்லை அந்த முறுவலின் பின் ஒளிந்திருக்கும் ரகசியத்தை.
அவளின் அருகே நெருங்கியவன் பெண்ணவளின் கண்களையே ஆழமாக பார்க்க, படபடத்த நெஞ்சினை கட்டுப்படுத்த இயலாமல் தவித்தாள் பிரகல்யா.
"பயப்படுறியா?" என்றவனின் கேள்வியில் "இல்லை" என்று மறுப்பாக தலையாட்டியவளோ வெட்கத்தோடு அவனை ஏறிட்டாள்.
"பரவாயில்லையே. இந்த நேரத்துலையும் நான் கூப்பிட்டனு இவ்வளவு தூரம் வந்திருக்க?"
"இதுவரை தனியா நம்ம பேசுனது இல்லை. நீங்க இவ்ளோ ஆர்வமா கூப்பிடும்போது வராமல் எப்படி இருக்க முடியும்?" என்றாள் புன்முறுவலோடு.
"ரொம்ப அழகா சிரிக்குற?" என்றவன் கூறவும் அவள் முகம் வெட்கத்தில் மலர, அதேசமயம் பின்னிருந்து அவளது மூக்கை மயக்கமருந்து நிரம்பிய கைக்குட்டைக் கொண்டு அடைத்திருந்தது முகமூடி அணிந்த ஒருவனின் கை.
இவை அனைத்தும் அவள் சுதாரிக்கும் முன்பே நடந்துவிட, அதிர்ந்தவள் அவனிடமிருந்து திமிறிபடி, "ஏன்?" என்பது போல் தன் முன் நின்ற ருத்ரஜித்தை வலி நிறைந்த பார்வை பார்க்க, தன் கண்களின் அழுத்தத்தைக் கூட்டியிருந்தவன்,
"பயப்படுடி..." என்று ஆக்ரோசமான குரலில் கத்த, மயக்கமருந்து செலுத்தியிருந்த அந்த முகமூடி அணிந்தவனின் கைகளின் மீதே மயங்கி சரிந்தது பிரகல்யா மட்டும் அல்ல. அவளது திருமண கனவுகளும் தான். அவனை முழுதாக நம்பிய பெண்ணவளின் நம்பிக்கையும் தான்.
மயங்கியவளை காரில் ஏற்றச் சொல்லி தன் பார்வையாலே கட்டளையிட்ட ருத்ரஜித்தின் கண்களில் பழிவெறி மின்ன அவ்விடம் விட்டு நீங்கியவன் மீண்டும் மண்டபத்திற்குள்ளே சென்றிருந்தான்.
பிரகல்யா வெட்ஸ் ருத்ரஜித் என்னும் பெயர்பலகையோ அர்த்தமற்றுபோக, காற்றில் வேகமாக அசைந்தாடிக் கொண்டிருந்தது.
விரலோடு விரல் கோர்த்து
உன்னோடு வலம்வர நினைத்த
என் நேசத்தை,
சில்லுசில்லாய் சிதறச்செய்துவிட்டு,
கருணையேயின்றி என் காதலை வதம் செய்து விட்டாயே
சிதறியது காதல் மட்டுமல்ல
உன் மீது நான் கொண்ட - என்
நம்பிக்கையும் தான்......
வேய்ந்தனனின் பிடியில் பிரகல்யா.......
Pavam... 2 pengalum..9. வல்லினம்
மண்டபத்தை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தான் விஷ்வஜித். அவனது குழப்பமும், கடுமையும் தத்தெடுத்திருந்த முகத்தை கண்ட வைகைக்கும் ஏதோ ஒன்று சரியில்லை என்பது மட்டும் உறுதியாகத் தோன்ற, என்னவென்று தெரியாமல் போனதால் குழப்பத்துடனே மகிழுந்தில் அமர்ந்திருந்தான் வைகைச்செல்வன்.
விஷ்வாவிற்கோ குழப்பம் மட்டுமே மிஞ்சியது. அவன் ஹோட்டலிலிருந்து கிளம்பும் முன் அவன் அனுப்பிய ஆட்களை தொடர்பு கொண்டவன், நிலைமையை பற்றி விசாரிக்க அவர்கள் சொன்ன தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான் விஷ்வா.
கடத்தவந்த திருமணப் பெண்ணை காணவில்லை என்று அவர்கள் கூறியதுதான், அவனது அதிர்ச்சியின் முதல் காரணம். விசயம் அறிந்ததுமே காரை கிளப்பிக்கொண்டு செல்வதற்கு தயாராக, வைகை அவனைக் கண்டுக் கொண்டான். வேறு வழியின்றி அவனையும் தன்னோடு அழைத்தபடி மண்டபத்திற்கு சென்று கொண்டிருக்கிறான் விஷ்வஜித்.
'லியா..' என்று அவன் மனதிற்குள் கண்ணீர் வடித்ததை அவன் மட்டுமே அறிவான். அடுத்த அரை மணி நேரத்தில் மண்டபத்தை அடைந்தனர் இருவரும். காரினைவிட்டு இறங்கியதும் அவன் ஓட்டமும் நடையுமாக மண்டபத்திற்குள் சென்றான்.
"இவரு ஏன் இவ்ளோ வேகமா போறாரு. இன்னும் கல்யாணம் நடக்க ஒரு மணி நேரத்துக்கு மேல இருக்கே?" என்று யோசித்த வைகை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை பிரகல்யா கடத்தபட்ட விசயத்தினை.
மண்டபத்திலிருந்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி என்பது துளியளவு கூட இல்லை. நாதஸ்வர வாத்தியங்களின் இசைகள் கேட்க வேண்டிய அவ்விடத்தில் சொந்தங்களின் புரணிகள் பரவியபடி இருந்தது. மணமக்கள் வீற்றிருக்க வேண்டிய மேடை கலையிழந்து வெறிச்சோடி இருக்க, பிரகல்யாவின் பெற்றோர் கலங்கிப் போய் நின்றனர்.
"பார்த்து பார்த்து பண்ணது எல்லாமே வீணா போய்டுச்சே. இப்படி சபைக்கு முன்னாடி எங்க பையன் அசிங்கப்பட்டு நிக்குறானே." என்று தலையில் அடிக்காத குறையாக வைஜெயந்தி அழுதே கரைந்தார்.
"உங்க பொண்ணுக்கு விருப்பம் இல்லைனு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் கூட, இப்படி ஒரு சூழ்நிலையில வந்து நிற்க வேண்டிய அவசியமே இல்லையே? என்னங்க பதில் சொல்லப் போறீங்க?" என்று ஆதங்கமும் கோபமும் கலந்தபடி மிக நியாயமாகக் கேட்டார் இந்திரன்.
சற்று நேரம் முன்பு வரை தன் மகளுக்காக வாதாடிய சத்யராஜ், சொல்ல வார்த்தைகளற்று கூனி குறுகிப் போய் நின்றார். அவரது நிலைக்கு காரணம் கல்யாண அறையிலிருந்து கிடைக்கப்பட்ட பிரகல்யாவின் கடிதம். 'தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை. எனது கனவுகளை நினைவாக்க உங்களை விட்டுபிரிகிறேன். என்னை மன்னிச்சிடுங்க டாடி, மம்மி.' என்று கைப்பட எழுதி வைத்த கடிதமும் அவளது கையெழுத்தும் அவரை நம்ப செய்திருந்தது.
இருந்தும் தன் மகள் அவ்வாறு செய்பவள் அல்லவே என்று உள்ளுக்குள் தோன்றிக் கொண்டே இருக்க, கண்கள் கலங்கிப்போய் நின்றிருந்தார் மனிதர்.
"எங்க பொண்ணு விருப்பம் இல்லாமல் நாங்க இந்த கல்யாணத்தை பண்ணலைங்க. நிச்சயம் எங்க பொண்ணு அப்படி பண்ணிருக்க மாட்டாங்க. இப்போகூட யாருக்காவது ட்ரீட்மெண்ட் கொடுக்க போயிருப்பாங்க. இதோ வந்திடுவா." என்று பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டே பேசினார் சரஸ்வதி.
"அக்கா அப்படி பண்ண மாட்டா. என் அக்காவை தப்பா பேசாதீங்க." என்று இதழ்களை மடித்து தேம்பி அழும் அபூர்வாவை பார்க்கும் போதே பாவமாக இருந்தது அங்கிருந்த அனைவருக்கும்.
இங்கு அவரவர் தரப்புக் கூற்றுக்களை பகிர, நடப்பது அனைத்திற்கும் காரணமானவனோ, உணர்ச்சிகள் துடைத்த நிலையில் இறுகிய முகத்துடன் காணப்பட்டான். வந்த உறவுகள் அனைவரும் அவனுக்காக இரக்கப்பட, உள்ளே வந்த விஷ்வஜித்தோ சிலைபோல் நின்றான் என்றால், வைகையோ பேரதிர்ச்சி பொங்க நின்றான்.
'நேற்று இவன்தானே பெண்ணை கடத்துவது என்று பேசிக்கொண்டிருந்தான்.' என்ற எண்ணம் விஷ்வஜித்தின் மீது தோன்ற, சந்தேகத்துடன் அருகில் நின்ற விஷ்வாவைப் பார்த்தான் வைகைசெல்வன்.
அவன் தன்னை பார்ப்பதை உணர்ந்து பதில் பார்வை பார்த்தான் விஷ்வா.
"அஜ்ஜூ அண்ணா... நீங்களா?" என்றவன் சந்தேகப்பட்டு கேட்டதும் அவனது கைகளை பற்றி தனியாக வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றிருந்தான் விஷ்வா.
"டேய் ஏன்டா. நீயே என்னை மாட்டி விட்டிடுவ போலயே. டேய் நிஜமா இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லைடா." என்று சுற்றி தன்னை யாரேனும் பார்க்கிறார்களா? என்று கண்களை நாலாபுறமும் சுழலவிட்டபடி கூறினான்.
"உங்களை நம்பலாமா? ஏன்னா நீங்க தானே நேற்று பொண்ணை கடத்துறதா பேசுனீங்க?" என்று கூறுபவனது வாயை பொத்தியவன்,
"டேய் சத்தமா பேசி என்னை கோர்த்து விட்ராதடா. எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என் டவுட்டே ருத்ரா மேலதான் இருக்கு. லியா அப்படி பண்ற பொண்ணு கிடையாதுடா." என்று உண்மையாக கவலைப்பட்டது அவன் மனம்.
அவனது கண்களில் தெரியும் உண்மையைக் கண்ட வைகைக்கு 'இவன் இல்லையோ' என்ற எண்ணம் மேலோங்க, "நம்புறேன் அஜ்ஜூ அண்ணா. ஆனால் பாஸ் எதுக்கு அவரு வாழ்க்கையே கெடுக்கணும்?" என்றவனது பார்வை மேடையின் அருகே நின்ற ருத்ரஜித்தின் மீது படிந்தது.
"அதுதான்டா எனக்கும் யோசனையா இருக்கு. உங்கிட்ட எதாவது ருத்ரா சொல்லியிருக்கானா? இல்லை அவனோட போக்குல எதாவது மாற்றம் இருக்கா?"
"அஜ்ஜூ அண்ணா. அவரு அப்படி எதுவும் சொல்லலையே. அவரு அக்கா, தங்கச்சி இரண்டு பேரையும் சைட் அடிச்சுட்டு தானே இருந்தாரு." என்று வைகை சொன்னதும் தான் தாமதம், விஷ்வாவின் மூளையில் பொறித்தட்ட,
"அப்போ." என்றவன் கண்களை தீவிரமாக்கியதும், "அப்போ பாஸ், தங்கச்சியை கல்யாணம் பண்ண பிளான் பண்றாரோ?" என்று வைகையும் கேட்க,
"எக்ஸாக்ட்லி வைகை. அடுத்து இவ்ளோ ஏற்பாடு பண்ணியாச்சு, பேசாமல் சின்ன பொண்ணை கல்யாணம் பண்ணி வைங்கனு எவனாவது சொல்லுவான். அப்புறம் குடும்ப மானத்தை காப்பாற்றுவதற்காக அந்த பொண்ணை கட்டிக்க சொல்லி அவங்க அப்பா, அம்மா கேட்பாங்க. அந்த பொண்ணு அழுதுட்டே வந்து மணமேடையில உட்காரும். ருத்ரா தாலிகட்டுவான். இதுதான் நடக்கும் நீ வேணா பாரு" என்று விஷ்வஜித் சொல்லி முடிக்க, கேட்ட வைகைக்கோ பக்கென்று ஆனது.
"அப்போ அப்படி மட்டும் நடந்தால் கண்டிப்பா பிரகல்யா மிஸ் ஆனதுல பாஸ்க்கு எதோ லிங்க் இருக்குனு அர்த்தம். வாங்க அஜ்ஜூ அண்ணா என்ன நடக்குதுனு பார்ப்போம்." என்று வைகை கூறியதும், விஷ்வாவும் நடப்பதை காண்பதற்காக பதட்டம் சிறிதும் குறையாமல், மணமேடையை நோக்கி சென்றான்.
அவர்கள் பேசிவிட்டு வருவதற்குள் அதே பேச்சுக்களும் அழுகைகளும் தொடர்ந்த வண்ணமே இருந்தது.
திருமணத்தை பார்க்க வந்த ரமேஷ் கூட பிரகல்யாவிற்காக பேசிக் கொண்டிருந்தார். கடைசியில் அனைவரின் வாதமும் வீணாகிப் போனதுதான் மிச்சம்.
அதுவரை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி இருந்த பெரியவர்கள், மணமேடையை நோக்கி எழுந்து வந்தனர். "முடிஞ்ச விசயத்தை பேசி ஒண்ணும் பண்றதுக்கு இல்லை. சட்டு புட்டுன்னு ஆகுற வேலை என்னவோ அத பாருங்க." என்றவர் யோசனை சொல்ல, வைகையோ விஷ்வாவை திரும்பி ஒருமுறை பார்த்தான்.
விஷ்வாவும் கண்களாலே 'வேடிக்கை மட்டும் பாரு' என்று கண்ணசைக்க, அவனும் பதிலுக்கு தலையசைத்தவன் அங்கு நின்றிருந்த ருத்ரஜித்தை ஒருமுறை பார்த்தான்.
முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாது, அவமானமும் வருத்தமும் போட்டிப்போட இறுகிய முகத்துடன் நிற்பவனைக் கண்டு, 'இவரை பார்த்தால் உண்மையா வருத்தப்படுற மாதிரி தான இருக்கு. இவரை நம்பலாமா? வேண்டாமா? நம்புற அளவுக்கு இவரு ஒண்ணும் நல்லவர் இல்லையே? சரி என்ன நடக்குதுனு பார்ப்போம்.' என்று எண்ணியவன் நடப்பதை கவனிக்கத் தொடங்கியிருந்தான்.
"அதான்னே. நடந்தது நடந்து போச்சு. எப்பா சத்யா. உம்பொண்ணு செஞ்ச தப்பை நீதான்யா சரி பண்ணனும்." என்று மற்றொரு பெரியவரும் பேச,
"இவ்ளோ நேரம் இவனுங்க எல்லாம் எங்க இருந்தாங்கனே தெரியலையே. பிரச்சினை வந்ததும் பஞ்சாயத்து பண்ண, சரியா ஆஜர் ஆயிடுறாங்க." என்று விஷ்வாவின் காதோரம் முணுமுணுத்தான் வைகை.
"கொஞ்சம் அமைதியா இருடா." என்று விஷ்வா சீறவும் தான் அமைதியானான் வைகை.
"என் பொண்ணு சார்பா நான் எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்குறேன். ஆனால் என் பொண்ணு நிச்சயம் வருவாங்க, அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு." என்று கலங்கியபடிக் கூறினார் சத்யராஜ்.
"வரது வராதது வேற விசயம்பா. இத்தனை ஏற்பாடு பண்ணி, கல்யாணம் நடக்காமல் போனால், அது மாப்பிள்ளைக்கு தானே அசிங்கம். எங்கு வீட்டு பையன் ஏன் அசிங்கப்பட்டு நிற்கணும். இதுக்கு முடிவு சொல்லுங்க?" என்று மாப்பிள்ளை வீட்டார் சார்பாக பெரியவர் ஒருவர் கேட்க, "அதான்னே" என்று கேள்வி எழுப்பத் தொடங்கியிருந்தனர் அங்கிருந்த அனைவரும்.
"அதுக்குனு ஓடிப்போன பொண்ணு தேடி கூப்பிட்டா வர முடியும்?" என்று கூட்டத்தின் நடுவே ஒரு பேச்சு வர, அந்த பேச்சில் கூனிக் குறுகிப்போய் காதுகளை அடைத்துக் கொண்டபடி தூணில் சரிந்து நின்றார் சத்யராஜ்.
"என்னங்க?" என்று சரஸ்வதியும் அழ, "டாடி." என்று தன் தந்தையின் கைகளை பற்றிக்கொண்டபடி அபூர்வாவும் வெடித்து அழுதாள்.
மனதை கல்லாக்கியபடி நிமிர்ந்த மனிதர், "நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க. அதையும் செய்யுறேன்." என்றார் வெறுமையான குரலில்.
"முதல் பொண்ணு பண்ண தப்பை, இரண்டாவது பொண்ணை கட்டிக்கொடுத்து சரிபண்ணுங்க. இது தான் நியாயமும் கூட." என்று சபையிலிருந்து அறுபது வயது மதிக்க தக்க மனிதர் ஒருவர் மீசையை முறுக்கியபடி, சட்டை மடிப்பு கலையாதவாறு வெட்டு ஒன்று துண்டு இரண்டாய் கூறினார்.
வைகையோ தன்னருகே இருந்த விஷ்வை அதிர்ச்சியுடன் ஏறிட்டான். அவன் சொல்வது போலவே நடக்கின்றதே என்று அவன் மனம் நினைக்க, உணர்ச்சி துடைத்த முகத்துடன் நின்றிருந்தான் விஷ்வா.
அங்கிருந்த அனைவரும் அதையே ஆமோதிக்க, வைஜெயந்தியும் இந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரின் மனதிற்கும் அதுவே சரியெனப்பட்டது. ருத்ரஜித்திற்கு ஆயிரம் பெண்கள் கூட வரிசைக்கட்டிக் கொண்டு நிற்பார்கள். ஆனால் பொதுவெளியில் அவமானப்பட்டது பட்டதுதானே. இதற்கு மேல் வேறு திருமணத்திற்கு அவன் சம்மதிக்க மாட்டான். ஆதிமந்திரைக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் இருக்க அதுவே சரியென பட்டது இருவருக்கும்.
அதைக்கேட்ட அபூர்வா தான் அதிர்ந்துப் போனாள். தனது அன்னை தந்தையின் முகம் பார்க்க, அவர்களது கலங்கிய முகம் அவளது மனதை பிசைய, சத்யராஜ் சரஸ்வதி இருவருமே தன் மகளை கண்கள் கலங்கிப் போய் பார்த்தனர் என்பதைவிட கண்களாலே இறைஞ்சினர்.
"உங்க விருப்பம்." என்று தலையசைத்தவளுக்கோ மனதே இல்லை. ஒருபுறம் பிரகல்யாவை பற்றிய கவலை அவளை வாட்டியெடுக்க, மறுபுறம் தன் தமைக்கையின் கணவராக நினைத்த ஒருவரை திருமணம் புரிவதை நினைக்கும்போதே ரணமாக வலித்தது.
அதுவரை பிடித்து வைத்த கல் போல் நின்றிருந்த ருத்ரஜித்தோ, "கொஞ்சம் நிறுத்துறீங்களா? ஒரு பொண்ணு இல்லைனா, இன்னொரு பொண்ணா? எப்படி உங்களால இப்படிலாம் யோசிக்க முடியுது?" என்று கோபத்தோடு அங்கிருந்த மணமகன் அறை நோக்கி சென்றிருந்தான் ருத்ரஜித்.
"ருத்ரா..." என்று அழுத வண்ணம் வைஜெயந்தியும் உடன் செல்ல, இந்திரனோ, "அவனை சம்மதிக்க வைக்க வேண்டியது எங்க பொறுப்பு. பொண்ணை தயாரா அழைச்சிட்டு வாங்க." என்று கூறிவிட்டு அவர்கள் பின்னே சென்றார்.
"அஜ்ஜூ அண்ணா இங்க என்ன தான் நடக்குது? ஆனால் பாஸ் சம்மதிக்கலையே?" என்று வைகை குழப்பத்தோடு கேட்க, வெற்றுப் புன்னகையை பரிசளித்தான் விஷ்வா.
"இது எல்லாம் அவனோட டிராமா. நீ வேணா பாரு, பட்டு வேஸ்டி சட்டையோட, மாலையும் கழுத்துமா மேடைக்கு வர தான் போறான்." என்று ருத்ரஜித்தை முற்றும் முழுதும் அறிந்தவனாகக் கூறினான்.
இங்கு அபூர்வாவை அழைத்துச்சென்ற சரஸ்வதியோ, அழுகைப் பொங்க தன் மகளை தயாராக்கத் தொடங்கினார்.
"ம்மா... எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்மா. அக்கா வந்திடுவாம்மா. இல்லை அக்கா எதாவது பிரச்சனையில இருப்பாளோ?" என்று உதடுகள் துடிக்கக் கேட்டாள்.
மணமகள் அறையின் கதவினை அடித்து சாத்திய சரஸ்வதியோ, "இன்னுமா நீ நம்புற? பூர்வா உன்னை இந்த இக்கட்டான நிலையில நிறுத்துறது எங்களுக்கு மட்டும் சந்தோசமா? அப்பாவை நினைச்சு பாருடி" என்று கூறிக்கொண்டே அவள் அணிந்திருந்த தாவணியை கழற்றியவர், பிரகல்யாவிற்காக வாங்கப்பட்ட ரவிக்கை மற்றும் பாவடையை அவளது கைகளில் திணித்தார்.
"போட்டுவா." என்றவருக்கு அதற்கு மேல் நாவே எழவில்லை. கட்டிலில் பொத்தென்று அமர்ந்தபடி மனதிற்குள்ளே கண்ணீர் வடித்தது தாயின் உள்ளம்.
தனது தாயின் வேதனையைக் கண்டு மணமுடைந்தவளோ, கண்களில் கண்ணீர் கசிந்திட, இயந்திரத்தனமாக பாவடையும், ரவிக்கையும் அணிந்தபடி வந்தாள்.
அவளை விரக்தியாய் பார்த்த சரஸ்வதியோ, பட்டுப்புடவையை மடிப்பெடுத்துக் கட்டிவிட்டார். புடவைக்கூட கட்டத் தெரியாத தனது இளைய மகளை வலுக்கட்டாயமாக கல்யாண வாழ்க்கைக்குள் திணிக்க போகிறோமே? என்று அழுகை பொங்கி வந்தது. இருந்தும் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவர், பெண்ணவளுக்கு புடவையை கட்டிவிட்டார்.
'ஏன் அக்கா? நீ எங்க போன?' என்று தனது பெரிய கண்களில் திரண்டு வந்த கண்ணீரை அடக்க இயலாது தவித்த அபூர்வாவோ உதடுகள் துடிக்க அழுதாள்.
அவள் அழுகைக்கு காரணமானவளோ, இருட்டு அறை ஒன்றில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிக்கிடந்தாள். சுற்றிலும் இருட்டு மட்டுமே. அபூர்வாவின் அழைப்பு இவள் செவியைத் தீண்டியதோ என்னவோ மயக்கம் தெளிந்தவள், மிக கடினப்பட்டே தன் கண்களை திறந்தாள். இருட்டில் அவ்விடம் பயங்கரமாக காட்சியளிக்க, காணும் இடம் யாவும் இருள் சூழ்ந்திருப்பதைக் கண்டவள் "அம்மா..." என்று உரக்க கத்தினாள்.
நல்லவன் என்று நம்பியவன் தன்னை கடத்தி வந்தது, நேற்று இரவு நடந்தது என அனைத்தும் படம் போல் பெண்ணவளின் முன் திரையாய் தோன்ற, தனது காதல் கனவுகள் ஒவ்வொன்றும் பிழையாய் மாறிவிட்டதே. ஏன்? எதற்கு? என்று விடைதெரியாத கேள்விகளில் குமுறியவள் "நோ.. " என்று கதறத் தொடங்கினாள்.
"என்னை ஏன் ஏமாத்துனீங்க ருத்ரஜித்? நான் எங்க இருக்கேன்?" என்று அவளது இதழ்கள் துடித்தது.
இருட்டு என்றாலே பயம் கொள்ளும் பெண்ணவளுக்கு முகம் எல்லாம் வியர்த்தது.
மூச்சு வேறு வாங்கியது. கட்டப்பட்ட கையும் காலும் நடுக்கம் எடுக்க, "யாராவது இருக்கீங்களா? ரொம்ப பயமா இருக்கு." என்று கத்தியவளது மேனி மீதே பல்லி ஒன்று விழ, அது விழுந்த அதிர்ச்சியில் கத்தியவள், "அம்மா." என்று அலறியபடி உருண்டவளுக்கு, பயத்தில் மேலும் உடல் தூக்கிவாரிப் போட்டது.
விழிகளில் திரண்ட கண்ணீரோடு கேவியபடி அழுதவளின் சத்தம் கூட வெளியே கேட்கவில்லை. அழுகையில் கரைந்தவளின் சத்தம் கூட மானிடர் யாரையும் தீண்டாத வகையில் சுற்றிலும் அடர்ந்தகாடு சூழ்ந்திருக்க, தனித்த அவ்வீட்டில் பெண்ணை சிறையெடுத்திருந்தான் ருத்ரஜித்.
இங்கு மண்டபத்திலோ, பிரகல்யாவின் கழுத்தை அலங்கரிக்க வேண்டிய நகைகள் அபூர்வாவின் கழுத்தில் மாட்டப்பட, கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தையே வெறித்துப் பார்த்தாள் இளையவள்.
அதே சமயம் ருத்ரஜித்தை சமாதானம் செய்தபடி மணமேடைக்கு அழைத்து வந்தனர் வைஜெயந்தியும், இந்திரனும். அதைக்கண்ட வைகை கவலையோடு விஷ்வாவைக் காண, விரக்தியில் முறுவலித்தான் விஷ்வஜித்.
அவன் மணமேடைக்கு வந்த அடுத்த ஐந்தாவது நிமிடம் சரஸ்வதி, அபூர்வாவை அழைத்துக்கொண்டு வர, அவளோ தலையைக் கவிழ்ந்தவள், இயந்திரத்தனமாக நடந்து வந்தாள்.
ஒரே நாளில் தன் மொத்த புன்னகையும் தொலைந்து விடும் என்று கனவிலும் அவள் நினைக்கவில்லை. அந்த நிமிடம் கூட தன் அக்கா வந்துவிடமாட்டாளா? என்று ஏங்கியது பெண்ணவளின் மனம்.
ருத்ரஜித்தோ தனக்கு எதிரே இருந்த அக்னிக்குண்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தான். அவனது அருகே அபூர்வாவை சரஸ்வதி அமரவைக்க, தலையை நிமிர்ந்தவள் தன் அன்னையையும் தந்தையையும் வலியுடன் ஏறிட்டாள்.
மூத்த மகளது செயலில் வேதனைப் பொங்க நின்றவர்களுக்கு, அந்த நொடி வேறு வழி தெரியவில்லை. இளையவளை கண்டு மனதிற்குள் அழுதனர். படிப்புக் கூட இன்னும் முடியவில்லை. ருத்ரஜித்தை விட பத்து வயது இளையவள் வேறு. எண்ணற்ற எண்ணங்கள் பெற்றோருக்கு தோன்றாமல் இல்லை. இருந்தும் மறுக்க இயலாத நிலையில் தவித்தனர் இருவரும்.
தனது அருகே அமர்ந்திருந்த அபூர்வாவை ஏறெடுத்தும் கூட பார்க்கவில்லை ருத்ரஜித். வைஜெயந்தி சொன்ன ஒரே காரணத்திற்காக மேடையில் அமர்ந்திருப்பது போல அனைவரும் நம்பும்படி அமர்ந்திருந்த ருத்ரஜித்தோ தனக்கு நேரெதிராக இருந்த விஷ்வஜித்தை தான் பார்த்தான்.
'என்னடா?' என்பது போல் அவன் கண்கள் அவனிடம் பேச, 'நினைச்சத நடத்தி முடிக்க பார்க்குறியோ?' என்று தீவிரமாக பார்த்தது விஷ்வாவின் கண்கள்.
'நான் நினைக்குறது மட்டும் தான் நடக்கும்.' என்று இகழ்ச்சியுடன் வளைந்தது ஆணவனின் இதழ்கள். 'எவ்வளவு தூரம் போறனு நானும் பார்க்குறேன்.' என்று முறைத்தான் விஷ்வா. இருவரது பார்வை பரிமாற்றத்தை பார்த்தபடி நின்றிருந்த வைகை யாருக்கோ வந்த விருந்து போல் வேடிக்கை மட்டுமே பார்த்தான்.
உண்மை தான் சிஸ்Pavam... 2 pengalum..
Ivna purinchikave mudila... orthikita love solla vaika padupaduran.. innroti kita verpai katti pathu kakiran...16. வல்லினம்
எதிர்பாராத முத்தம் எத்தனை தித்திக்குமோ? எதிர்பாராத அடி அத்தனை வலியைக் கொடுக்கும்.
விழிநீர் திரள மிரண்டு போய் ருத்ரஜித்தைப் பார்த்தாள் அபூர்வா.
அவள் இதுவரை இப்படிப்பட்ட ருத்ரஜித்தைக் கண்டதில்லையே?
அவளுக்கு எத்தனை வலியிருந்ததோ, அதை விட வலியில் துடித்தது என்னவோ ருத்ரஜித்தின் இதயம்தான். ஏனோ எத்தனையோ பேரை அடித்த மற்றும் அழித்த கைகளாக இருந்தாலும், அபூர்வாவை அடித்ததும் அவனுக்கே அவன் மீது கோபமாக வந்தது.
"பேபி... ஐ அம் ரியலி சாரி. கோபத்துல பண்ணிட்டேன் பேபி ரொம்ப வலிக்குதா?" அவனது குரலில் சிறு நடுக்கம் தோன்ற பரிதவிப்புடன் கூறியவன், அவளது கன்னத்தை இருக்கைகளால் பற்ற வர, இரண்டு எட்டுக்கள் பின்னோக்கி எடுத்து வைத்தாள் அபூர்வா.
திரண்டு வந்த கண்ணீர் தரையில் சொட்டு சொட்டாக விழ, உதடுகள் துடிக்க, மிரட்சியுடன் அவள் பார்த்த அந்த பார்வை, ருத்ரஜித்தையே ஒரு நிமிடம் ஆட்டம் காண வைத்தது.
"மா... மா." என்று உதடுகளை பிதுக்கியவள், "எ...என்னை அடிச்சுட்டீங்கல்ல மாமா?" என்றாள் தேம்பியபடி.
"ஐ அம் சாரி பேபி. நீ புரியாமா பேசுறதுல டென்ஷன் ஆகிட்டேன். ஐ அம் ரியலி சாரி." என்றவன் அவளை நெருங்க, தன் கைகளை உயர்த்தி வரவேண்டாம் என்றாள்.
"என்னடா இவ, அக்காக்கு பார்த்த மாப்பிள்ளைகிட்ட காதல்னு பேசுறானு, என்னை சீப்பா நினைச்சுட்டீங்களா மாமா." என்றவளுக்கு உடலே நடுங்கியது. அவள் மனமோ அப்படி மட்டும் நினைத்துவிடக் கூடாது என்று துடித்தது.
"அப்படி எல்லாம் இல்லை அபூ." என்றான் பரிதவிப்போடு.
"மாமா அப்படி மட்டும் நீங்க நினைச்சிடாதீங்க. சத்தியமா சொல்றேன் உங்களை முதன்முதலா பார்த்தப்போ அந்த மாதிரியான எண்ணம் எனக்கு வந்தது இல்லை. அன்னைக்கு நம்ம கல்யாணம் மட்டும் நடந்திருந்தால் உங்களை பிடிச்சுருக்குமானு கேட்டால், என்கிட்ட பதில் இல்லை மாமா. ஆனால் எனக்காக பேசுன ஒவ்வொரு வார்த்தைகளிலுமே, நீங்க என் மனசுல நின்னுட்டீங்க. ஆனால் அப்போகூட உங்க மேல மதிப்பு தான் இருந்துச்சே தவிர, காதல் இல்லை. ஆனால் அன்னைக்கு நைட் அக்காவோட கம்ப்யூட்டர்ல பார்த்த போட்டோஸ் தான் அக்காக்கு உங்க மேல காதல் இல்லைனு புரிய வெச்சுது." என்றவள் கூறிய தகவலில் அதிர்ச்சியுடன் ஏறிட்டான் ருத்ரஜித்.
திருமணம் நின்ற அன்று வீட்டிற்கு வந்ததுமே தன் அக்காவின் கணினி முதற்கொண்டு அறையிலிருந்த அனைத்தையும் தேடிப் பார்த்தாள் அபூர்வா. அக்காவை பற்றிய தகவலை தெரிந்துக் கொள்வதற்காக கணினியை அவள் பார்க்க, அப்போது கிடைத்தது தான் சில புகைப்படங்கள். அதில் தெரிந்த பிரகல்யாவின் புன்னகையும் அவளோடு நெருக்கமாக நின்று புன்னகைத்த ஆணவனின் புகைப்படமுமே அவளின் காதலன் என்று பறைச்சாற்றி இருந்தது.
"என்ன சொல்ற அபூ. என்ன போட்டோ? இத பத்தி எங்கிட்ட சொல்லவே இல்லையே?" கூர்மையாக விசாரித்தான் ருத்ரஜித்.
"அது அக்கா லவ் பண்றவரோட சேர்ந்து எடுத்த போட்டோ போல. இந்த விசயம் நான் வீட்டுல சொல்லலை. அக்கா பேரு கெட்டுப் போக நான் விரும்பலை. அப்போதான் எனக்கு விசயமே புரிஞ்சுது. அக்கா அவங்ககூட தான் போயிருக்காங்கனு."
"ஓகே ரிலாக்ஸ் அபூ. நான் உன்னை தப்பா நினைக்கலை."
"இல்லை மாமா. என்னை பேச விடுங்க. அந்த நிமிசம் உங்களுக்காக மனசு கஷ்டப்பட்டுச்சே தவிர காதல் வரலை. அடுத்த நாள் மோதிரம் உங்ககிட்ட கொடுக்க வந்தேன். நீங்க துடிக்குறத பார்த்து என் மனசு துடிச்சுது. உங்க வலி எனக்கு வலிச்சுது மாமா. அப்போ தான் நான் உங்களை காதலிக்குறதை உணர்ந்தேன். உங்க வலிக்கு மருந்தா நான் இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அப்போயிருந்து இப்போவரை உங்களை ரொம்ப நேசிக்குறேன்." என்று இதழ் பிதுக்கியவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தாள்.
"அபூ... நீ படிக்குற பொண்ணு. கடைசி செமஸ்டர் இந்த நேரத்துல காதல் அவசியமா சொல்லு? நீ வாழ்க்கையில சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு பேபி."
"ஏன் மாமா. கல்யாணத்துக்கு அப்புறம் சாதிக்க முடியாதா? இன்னும் நாலு மாசத்துல படிப்பு முடிஞ்சிடும் மாமா." என்று பரிதவிப்போடு கூறினாள். அப்போதாவது அவன் ஏற்றுக் கொள்ள மாட்டானா? என்ற ஆதங்கம் அவளது மனதில் இழையோடியது.
"அபூர்வா... இப்போ உனக்கு அந்த பக்குவமில்லை. எது நல்லது கெட்டதுனு யோசிக்குற நிலைமையில கூட நீ இல்லை."
"மாமா. என்னை குழந்தை மாதிரி ட்ரீட் பண்றீங்க. அதுனால தான் உங்களுக்கு அப்படி தோணுது. இப்படி என்னை குழந்தையா பார்க்குறவரு, தனக்கு ஒரு துரோகம் செஞ்சும் அந்த குடும்பத்து மேல நீங்க காட்டுற அக்கறை, இது எல்லாம் யாருக்கு தான் பிடிக்காது சொல்லுங்க. நானா உங்ககிட்ட பேசுனாலும் நீங்க காமிச்ச அந்த ஒதுக்கம், வரைமுறை மீறாமல் பேசுன விதம். சுயநலமில்லாத உங்க அன்பு இது எல்லாமே கடைசி வரைக்கும் எனக்கு வேணும். அந்த ஒதுக்கம் உரிமையாக மாறனும்னு நினைக்குறது தப்பா?"
"அபூர்வா உனக்கு புரிய மாட்டிங்குது. இப்போ உனக்கு நல்லவனா தெரியுற நானே, நாளைக்கு கெட்டவனா தெரியலாம். அப்போ என்னைவிட்டு நீயே போயிடுவ."
"நிச்சயம் மாட்டேன் மாமா. எனக்காக துடிக்குற உங்க கண்கள்ல இருக்க பாசம் எனக்கே எனக்கு மட்டுமே வேணும். அப்படி நினைக்கும் போது நான் எப்படி உங்களைவிட்டு போவேன்." கடைசிவரை உறுதியாக கூறினாள் அபூர்வா.
அந்த நொடி அவள் கண்ணில் தெரிந்த உறுதித்தன்மை அவனை நெகிழ வைத்தது. 'இதுதான் எனக்கு வேணும் பேபி.' என்று மனதார நினைத்தவனுக்கோ அவளை அணைத்துக் கொள்ளக் கைகள் துடித்தது. இருந்தும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன், முகத்தில் சற்று கடுமையைக் கூட்டியிருந்தான்.
"முடிவா என்ன தான் சொல்ற அபூ"
"எனக்கு நீங்க வேணும் மாமா. அக்காவை கண்டுபிடிச்சதும், உங்களுக்கும் எனக்கும் கல்யாணம்."
"அப்போ என் முடிவையும் தெரிஞ்சுக்கோ. அப்படி ஒரு விசயம் நடக்காது." என்றவன் அவளது கைகளை பற்றியபடி அறையிலிருந்து அழைத்துச் சென்றான்.
"கிளம்பு அபூ டைம் ஆகுது." என்றவன் வாயிற்கதவில் அவளை நிறுத்தியிருக்க, தன்னவனையே வலி நிறைந்தப் பார்வைப் பார்த்தவள் பாதி தூரம் சென்று பின் "மாமா" என்றவனை அழைத்தாள்.
"என்ன?" என்பது போல் அவன் திரும்பிப் பார்க்க, ஓடிவந்தவள் அவன் மீதே தாவியபடி இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
ஏனோ அவன் அடித்தும் கூட அவளுக்கு அழுகை வந்ததே தவிர அவன் மேல் கோபம் வரவில்லை. அந்த சிறு அணைப்பில் தனக்கான ஆறுதலைத் தேடியவளுக்கு கண்ணீர் கூட காற்றில் கரைந்துப் போனது.
பெண்ணவளின் திடீர் தாக்குதலில் தடுமாறியவன் சிலைப்போல நிற்க, பெண்ணவளோ அதைப் பயன்படுத்தி ஆணவனின் கன்னத்தில் முத்தமிட்டபடி அவனை பிரிய மனமின்றி, பிரிந்தவள் ஒரே ஓட்டமாக ஓட, அவனோ அவளை முறைத்தான்.
"மாமா சீக்கிரமே குட் நீயூஸ் சொல்லுங்க. ஐ அம் வெயிட்டிங்." என்றவள் மின்தூக்கியில் ஏறி, கீழ்தளத்தை நோக்கி இறங்கியிருக்க, அவளது அந்த சிறுபிள்ளைத் தனமான செயலை நினைத்துப் புன்னகைத்தான் ருத்ரஜித்.
அபூர்வாவின் அணைப்பும், முத்தமும் அவனது மனதை ஊடுருவிச் சென்றது. முதல் முறையாக அவளைப் பார்த்தது தொடங்கி, பின்னிருந்து அவளை அணைத்ததிலிருந்து, தனது மோதிரத்தை அவளுக்கு கொடுத்தது வரை அனைத்தையும் நினைத்தவனுக்கு உதட்டோரம் முறுவல் படர்ந்தது.
***
காரிருள் வானம் சூழ்ந்திருக்க, சிறு பூச்சிகளின் சத்தமும், தவளையின் சத்தமும் அவ்விடம் முழுவதிலும் ஆக்கிரமித்திருந்தது.
மெத்தையினோரம் கூனிக்குறுகிப் படுத்திருந்தாள் பிரகல்யா. அந்த சின்ன பூச்சிகளின் சப்தம் கூட இல்லையென்றால் வெறும் நிசப்தம் மட்டுமே அறையில் இருந்திருக்கும்.
இந்த ஆறு மாதக் காலம் அவள் அனுபவித்த வலிகள் ஏராளம். தனிமையில் ஒற்றைப் பெண்ணாக, அதுவும் இந்த பழைய காட்டு வீட்டில் வசிப்பது ஒன்றும் சாதாரண காரியம் அல்லவே!
ஆறுமாதக்காலமும் நரகமென கழிந்தது பிரகல்யாவிற்கு. தப்பிக்க அவள் முயற்சித்தால் தானே, அத்தனை சூழலிலும் அவள் அவ்விடம் இருக்க ஒரே காரணம் அபூர்வா. வாரத்தில் ஒருமுறை அவள் பேசிய அலைபேசியின் ஒலிப்பதிவு மட்டும் அவளை உயிருடன் வைக்கக் காரணம்.
வாரத்தில் கிடைக்கும் அத்தியவசியப் பொருட்களில், அவளுக்குத் தேவையான உணவினை சமைத்து உண்ணுகிறாள். மாதந்திர நாட்களில் அவள் படும் துன்பம் அவஸ்தையானது. கல்லுக்குள் ஈரம் என்பது போல், அவளுக்கு தேவையான நாப்கின்களை அவன் வாங்கித் தருவதால், தனது வலியினை பொறுத்துக்கொண்டு அமைதியாக இருந்தாள்.
மருத்துவருக்கே இந்நிலையா என்னும் வகையில் அவளது தோற்றம் முழுவதுமாக மாறியிருந்தது. கண்களை சுற்றி கருவளையம் வந்து, உடல் மெலிந்து அவன் கொடுத்த நான்கு துணிகளையே மாற்றி மாற்றி துவைத்து எடுத்து உடுத்தியிருந்தாள் பிரகல்யா.
இத்தனை வலியைக் காட்டிலும் அவளுக்கு பெரிய வலியாக தெரிந்தது ஒன்று மட்டும் தான். அவன் எதற்காக இவை எல்லாம் செய்கிறான்? என்று புரியாமல் தவிப்பது தான் அவள் பெற்ற பெரும் வலியே.
படுத்திருந்த பிரகல்யாவிற்கு வயிறு வலித்தது. அடுத்த வாரம் வரவிருக்க வேண்டிய மாதந்திர வலி தற்போதே ஏற்பட்டிருக்க, பெண்ணவளுக்கோ பக்கென்றானது.
"ம்மா.." என்று வயிற்றை தன் இருக்கரம் கொண்டு பற்றிக்கொண்டாள் பெண். இடுப்பு, வயிறு என இருபுறமும் வலி ஒரு சேரத் தோன்ற, அவளால் தான் என்ன செய்ய இயலும்? தன்னிலையை எண்ணி கண்ணீர்விடுவதா? இல்லை கோபத்தில் அங்கிருக்கும் பொருட்களை எடுத்து உடைப்பதா?
புரியாமல் தவித்தாள்! வலியில் துடித்தாள்.
"ம்மா... ம்மா..." என்று பிதற்றியவளுக்கு இம்முறை வலி தாங்கவே இயலவில்லை. மெல்ல எழுந்து மேசையிலிருக்கும் நெகிழிப்பையினுள் துலாவினாள். போன மாதமே நாப்கின்கள் தீர்ந்திருந்ததால், அவளுக்கோ மனமே விட்டுப் போனது.
இயலாமையில் கண்ணீர் வடித்தவள், உதட்டை கடித்து வலியினைப் பொறுத்துக் கொண்டாள். அந்நேரம் பார்த்து வெளியே பெய்துக் கொண்டிருந்த அடைமழையின் காரணமாக, அவ்விடத்தின் மின்சாரம் தடைப்பட்டு போயிருக்க, அய்யோ என்றானது பிரகல்யாவிற்கு.
இன்று இரவு உணவு செய்யக்கூட அவளிடம் தெம்பில்லை. அவளது குருதியின் ஈரம் மெல்ல உடையை நனைக்க, அவளுக்கே தர்மசங்கடமான சூழல் நிலுவியது. தான் அணிந்திருந்த சேலையின் முந்தானையை கிழிக்க முயற்சித்தும், அது கிழிவேனா என்று திடமாக இருக்க, மெல்ல எழுந்தவள் சமயலறையை நோக்கிச் சென்றாள்.
அங்குள்ள கத்தியை உதவிக்கு பயன்படுத்த நினைத்தவள், பலமுறை தற்கொலைக்கு அதை உபயோகித்து விடலாமா? என்றெல்லாம் நினைத்திருக்கிறாள். தவறு செய்யாமல் தான் ஏன் சாக வேண்டும்? என்றவளின் வைராக்கியம் அம்முடிவினை எடுக்க விடாது செய்திருந்தது.
மெல்ல மெல்ல நடந்தவளுக்கு இருளில் ஒன்றுமே தெரியவில்லை. மிக கடினப்பட்டே நடந்தவள், ஒவ்வொரு படிக்கட்டாக பார்த்து பார்த்து நடந்தாள். கடைசி ஐந்து படிகட்டுகளிருந்த நிலையில் அவள் கால் வைக்க, பெண்ணவளின் கால்கள் இடறியதில் உருண்டபடி கீழே விழுந்தாள் பெண்.
"அம்மா...." என்றவளின் சத்தம் அவ்விடத்தை நிரப்பியிருக்க, சரியாக கதவினைத் திறந்துக் கொண்டு வந்தவனோ தனது கைபேசியின் ஒளியினை ஒளிரச்செய்தபடி பார்க்க, வலியில் துடித்தபடி விழுந்துக் கிடந்தாள் பிரகல்யா.
உடனே அவளை நோக்கி சென்றவன், கைபேசியை தனது சட்டைப்பையில் வைத்தபடி அவளைத் தன் இருக்கைகளிலும் ஏந்திக்கொள்ள, டார்ச்சின் வெளிச்சம் பிரகல்யாவின் கண்களை கூச செய்தது.
உடனே கண்களை மூடிக்கொண்டவள், முகத்தினை திருப்பிக்கொண்டாள். வயிற்று வலி ஒருபுறம் என்றால் விழுந்த வலி வேறு அவளை படுத்தியெடுக்க, சத்தமின்றி அழுதாள் பிரகல்யா.
அவன்முன் சத்தமிட்டு அழுது, தான் வலிமையற்றவள் என்று காட்டிக்கொள்ள அவள் விரும்பவில்லை.
அவளை தூக்கிக்கொண்டு மேல சென்றவனுக்கு கையில் பிசுபிசுவென ஓட்டியது பெண்ணவளின் செங்குருதி. அதை உணர்ந்தவனுக்கு ஒருநொடியில் முகம் மாறிவிட, அவன் முகமாற்றத்தை அந்த இருள் மறைத்திருந்தது.
அவளின் கன்னத்தில் இருதுளி திரவம் வந்து விழ, அவனின் வியர்வை என்று நினைத்தவள் அறியவில்லை அது அவனின் கண்ணீர் துளிகள் என்று.
அவளைப் பொறுத்தவரை ருத்ரஜித் ஒரு அரக்கன் ஆகிற்றே? அவனுக்கு ஏன் தன் மீது எப்படி இரக்கம் சுரக்கும் என்று எண்ணிக்கொண்டது பெண்ணவளின் மனம்.
மெல்ல அவளை மெத்தையின் மீது அமரவைத்தவன், ஐந்து நிமிடம் அமைதியாகவே நின்றான்.
அவனது சட்டைபையிலிருந்த கைபேசியின் வெளிச்சம் வேறு அவளது கண்களை கூச, முகத்தை சுருக்கினாள் பிரகல்யா.
அவனோ டார்ச்சினை அணைத்தவன், "ஆர் யூ ஓகே." என்று கேட்க, தான் கேட்பது சரிதானா? என்று யோசித்தவள்,
"ஐ அம் நாட் ஓகே. ஐ அம் இன் ட்ரபிள். ரொம்ப ரொம்ப வலிக்குது." என்று அவ்விடமே அதிரும் வண்ணம் கத்தினாள் பிரகல்யா.
"சோ வாட்? வலிக்கட்டும்?" என்றவனின் நொடிப் பொழுதில் தோன்றிய குரலின் மாற்றத்தில், 'நீ என்னைக்குமே திருந்த மாட்டடா?' என்பது போல ஏறிட்டாள் பிரகல்யா.
அவன் நிற்கும் இடம் அவள் அறியாவிட்டாலும், அவன் குரல் வந்த திசையை பார்த்தவள், "இந்த இருள் தான் நீ ருத்ரஜித். இந்த இருள்ள மாட்டிகிட்டு சிக்கி தவிக்குறேன்." என்று உதட்டை மடித்து அழுதவள், "என் நிலைமை எந்த பொண்ணுக்குமே வரக்கூடாது." என்றாள் வேதனையாக.
"நீ தான் உன் வேதனைக்கு காரணம். பீரியட்ஸ் டைம்னா முன்னாடியே சொல்றதுக்கு உனக்கு என்ன வந்துச்சு?" அதட்டினான் ருத்ரஜித்.
"நீ எப்படி என் லைஃப்ல சொல்லாமல் வந்தியோ? அதுவும் அப்படி தான் வந்துச்சு. என் வலி என்கிட்டயே இருக்கட்டும்." என்றாள் அழுத்தமாக.
அதற்கு மேல் அவன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவனது காலடி சத்தம் மட்டுமே கேட்டது. எங்கோ செல்கிறான் என்பது மட்டும் புரிய அமைதியாக அமர்ந்திருந்தாள் பிரகல்யா. சரியாக பத்து நிமிடம் கழித்து மேல வந்தவனோ, தான் வாங்கி வந்த உணவினை கட்டிலின் மீது வைத்தான். பின் அவளுக்கு தேவையான பொருட்களையும் கொடுத்தவன், "இதுல அடுத்த இரண்டு மாசத்துக்கு தேவையான பொருட்கள் இருக்கு. அப்புறம் உன் நல்ல நேரம் உனக்காக சாப்பாடு கொண்டு வந்திருக்கேன். சாப்பிடு." என்றான் தன்மையாக.
அவளோ பதில் பேசாமல் சிலைப்போல அமர்ந்திருக்க, அவளது மெல்லிய விசும்பல் சத்தம் அவனது செவியைத் தீண்டியநொடி அவளின் அருகே சென்றவன், தன் கைகளால் அவளைத் துலாவியபடி பெண்ணவளின் முகத்தினைப் பற்றிக் கொண்டான்.
கண்ணில் வழியும் கண்ணீர் அவனது கைகளை நனைத்தநொடி, அதிர்ந்தவன், அவளது முகத்தை தன் இருக்கைகளாலும் தாங்கிக் கொண்டான்.
"என்னால முடியலை. ரொம்ப வலிக்குது. வயிறு வலி தாங்க முடியலை." என்று தேம்பி அழுதவள் அவன் மீதே சாய்ந்துக் கொள்ள, ஏனோ அவளை விலக்கிவிட அவனுக்கு மனம் வரவில்லை. இரும்பு போல அமர்ந்திருந்தானே தவிர பதில் ஒன்றும் அவன் பேசவில்லை.
அவள் அழும் வரை அமைதியாக இருந்தவன், அவள் அழுது முடித்ததை உணர்ந்ததும் பட்டென்று தன்னிடமிருந்து அவளை விலக்கியிருந்தான்.
அடுத்த நிமிடமே அவளுக்காக கொண்டு வந்த உணவினை எடுத்தவன், அவளை தன்னோடு அழைத்துச் சென்றபடி, நிலவொளி தெரியும் இடத்தில் அமர வைத்தான்.
அந்த சிறிய நிலாவின் வெளிச்சத்தில் பிரகல்யா அமர்ந்திருக்க, உணவினை பிரித்தவனோ, இருளில் அமர்ந்தபடியே அவளுக்கு ஊட்டி விட்டான்.
எப்போதும் வெறுப்பை உமிழ்பவனின் என்றைக்காவது காட்டும் இந்த அக்கறை பெரிதும் அவளை வியப்பில் ஆழ்த்தும். வலியில் அதைப்பற்றி எல்லாம் யோசிக்கும் நிலையிலேயே அவள் இல்லை. பிடிக்காவிட்டாலும் உணவினை உண்டாள்.
ஏனோ எதிரியாக இருந்தாலும், ஆறு மாதம் கிடைக்காத அக்கறையை அவளால் மறுக்க இயலவில்லை. பின் அவளிடம் தண்ணீரை நீட்டியவன், அவள் தண்ணீர் அருந்துவதை பார்த்துவிட்டே அங்கிருந்து நகர, அவனது கைகளைப் பற்றி நிறுத்தினாள் பிரகல்யா.
"எனக்கு ரெஸ்ட் ரூம் போகணும். இருட்டா இருக்கு?" என்றவள் கவலையோடு கூறினாள்.
பதில் எதுவும் பேசாதவன், அவளது கைகளை உதறிவிட்டு அங்கிருந்து சென்றிருக்க, தன் வலியை உதட்டோரம் மறைத்து பொறுத்துக் கொண்டாள் பிரகல்யா.
அவன் சென்ற அரை மணி நேரத்தில் மின்சாரம் வந்திருக்க, அவன் கொடுத்து விட்டு சென்ற நாப்கினை எடுத்தவள், விரைந்து கழிப்பறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
அவ்வீட்டை விட்டு வெளியேறியிருந்த ருத்ரஜித் நேராக வந்தது என்னவோ வீட்டிற்கு தான். மிக கோபமாக காட்சியளித்தவன், தனது பாக்சிங் கிளவுஸ் எடுத்து மாற்றி மாற்றிக் குத்திக் கொண்டிருந்தான்.
அவனால் சற்று முன்பு நடந்தவற்றை ஜீரணிக்கவே இயலவில்லை. அவனது மொத்தக் கோபத்தையும் பாக்சிங்கில் காட்டிக் கொண்டிருக்க, அவனது அறையைக் கடந்து சென்ற விஷ்வஜித்தோ அதைக் கண்டுக் கொண்டான்.
பிரகல்யாவைத் தேடுகின்ற அவன் பயணம் முடியாமலிருந்தாலும், ருத்ரஜித்தின் மீது அவனுக்கு இருக்கும் சந்தேகம் இருந்துக் கொண்டேயிருக்க, சாத்தப்படாத அறைக்குள் நுழைந்தவன், "பார்த்துடா ருத் கை உடைஞ்சிட போகுது." என்றான் நக்கலாக.
அவனைக் கண்டு முறைத்தவனோ, அவனது சட்டையை நொடியில் பற்றிக்கொள்ள, அவனை சலிக்காதப் பார்வைப் பார்த்தான் விஷ்வஜித்.
"என் விசயத்துல நீ ரொம்ப மூக்க நுழைக்குற அஜ்ஜூ." என்றான் கர்ஜனையோடு.
"நான் என்ன பண்ணேன் ருத்? நீ தான் எங்கிட்ட நிறைய விசயங்களை மறைக்குற? அது மட்டும் கண்டுபிடிச்சுட்டனா அப்போ உனக்கு இருக்குடா?" என்றவன் ருத்ரஜித்தை பதில் பார்வைப் பார்க்க, அங்கு இருவரது சண்டையை மறைந்திருந்து வேடிக்கைப் பார்த்தது ஒரு ஜோடிக் கண்கள்.
பெண்ணே நீ சிந்தும்
ஒவ்வொருத் துளிக்
கண்ணீரும்
என்னை கரையச் செய்கின்றதடி.....
இது காதலா? இல்லை சாபமா?
வேய்ந்தனனின் ஆட்டம் தொடரும்...
ரொம்ப நன்றிமா.... என்னால தூக்கம் கெட்டு படிச்சிருக்கீங்க.... சாரி சொல்லவா சந்தோசப்படவா தெரியலை ரொம்ப ரொம்ப நன்றிடாமா..... உங்க கதைக்கும் வாழ்த்துக்கள்.... உங்கள் கதையின் பெயரும் சொல்லிட்டு போனால் நல்லாயிருக்கும் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக படிக்குறேன்நைட் பத்து மணிக்கு ஆரம்பிச்சு முடிக்க 2.30 மணிக்கும் மோலாகிவிட்டது. தூக்கம் கோவிந்தா கோவிந்தா. அழகான எழுத்து நடை. கதையில் திருப்பங்கள் அருமை. உங்களுடைய கதையைப படித்த பிறகு நான் எல்லாம் என்ன எழுதிருக்கேனு எனக்கே தெரியல. அவ்வளவு அற்புதமாக இருந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா.