Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வேரின் தாகம்...

Megala Appadurai

Saha Writer
Team
Messages
66
Reaction score
66
Points
18
வேரின் தாகம்
அத்தியாயம் - 1



அதிகாலையிலேயே அவளுக்கு விழிப்பு வந்துவிட்டது. இரவு உறங்கினால் அல்லவா விழிப்பதற்கு. எப்பொழுது இந்த நெடிய இரவு தொலையுமென காத்திருந்தவளுக்கு பட்சிகளின் குரல் விடியலின் துவக்கமாய் எப்பொழுது கேட்குமென காத்திருந்தாள். இயற்கை அலாரமாய் பறவைகளின் குரல் ஒலிக்கத் துவங்கியதுமே இவளிடம் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.


இன்று அவன் வருகிறான். தன்னைக் காண அவன் வருகிறான். அவளின் ஒவ்வொரு செல்களுக்குள்ளும் உற்சாகம் பீறிடுவதை அவளால் உணர முடிந்தது. மளமளவென சமையல் வேலைகளை முடித்துவிட்டு, குளித்து முடித்து அங்கங்கே சின்னசின்னதாய் ரோஜாப்பூக்கள் எம்ராய்டரி செய்யப்பட்ட தனக்குப் பிடித்த மயில் வண்ண சாட்டின்சில்க் புடவையை தேர்ந்தெடுத்து அணிந்தாள். மாநிறமான தன் நிறத்துக்கு இது பொறுத்தமாவென மீண்டும் நிலைகண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள்.


ஈரமாயிருந்த கூந்தலை வாரி இருபுறமும் சிறிது முடிகற்றைகளை மட்டும் ஒரு சிறிய கிளிப்பில் அடக்கிவிட்டு கூந்தலை படர விட்டாள். ஓர் சிறிய பொட்டை எடுத்து ஒட்டியவள். அதன் மேல் ஓர் சிறிய சந்தனக்கீற்றை இட்டுக் கொண்டு நிமிர்ந்தாள் கயல்‌.


அவன் இன்னும் ஏதும் சொல்லவில்லை. எங்கே சந்திப்பதென்று நகத்தைக் கடித்தவாறே அமர்ந்திருந்தவளை தொலைப்பேசி இசைத்து அசைத்தது‌. சட்டென உயிர் கொடுத்து அலைபேசியை காதுக்கு கொடுக்க அவன் குரல் அமுதமாய் இசைத்து.

“என்ன கெளம்பிட்டயா..”

“ம்ம்ம்ம்...”

“நான் சரியா பத்து மணிக்கு பஸ்ஸ்டாண்ட் வந்துடுவேன். நீ வந்துடு சரியா..?”

“பஸ்ஸ்டாண்டாஆஆ...” இவள் ஆச்சர்யமாய் கேட்க

“ஆமா.. பஸ் பஸ்ஸாண்ட் தானே வரும்.” என்றான் வளவன்.

“நீங்க பஸ்லயா வர்றீங்க...” என்றாள் மீண்டும் ஆச்சர்யமாய்.

“ம் ஆமா.. ஏன் வரக்கூடாதா.‌. நேர்ல பேசிக்கிலாம் வா..” என்று அதற்கு மேல் அவளை பேசவிடாமல் அலைபேசியை வைத்துவிட, அலைபேசியிலேயே நேரத்தை பார்த்தவள் நேரம் 9:45 காட்டியது. பரபரப்பாய் கிளம்பினாள்‌.


தன் ஹேண்ட்பேகில், பர்ஸ், கார்ட் எல்லாம் சரியாக இருக்கிறதாவென சரிபார்த்தவள் பணம் குறைந்திருப்பதை கண்டாள். மொத்தமே ஐநூறு ரூபாய் மட்டும் இருக்க இதை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி என யோசித்துக்கொண்டு நிற்க நேரமில்லை.


வழக்கம் போல அப்பாவிடம் சொல்லிக் கொண்டு வந்து தன் ஸ்கூட்டியை உயிர்பித்தவளை மேலே இருந்து ஓர் அதிகாரக்குரல் தடுத்தது.


“என்னடீ... என்ன எங்கயோ கெளம்பிட்ட மாதிரி இருக்கு...” என்றது அவளது அண்ணி கோமதி.

“பர்சேஸ்க்கு அண்ணி.”‌ என்றவள் அருகில் இருந்த அண்ணனின் சைகையை கண்டு தன் ஹேண்ட்பேகிலிருந்த டிராவலிங் கூலர்ஸ்ஸை அணிந்தபடியே “வர்றேண்ணா..” என்று தன் ஸகூட்டியை முறுக்கி சாலையில் கலந்தாள். இதற்கு நிச்சயம் மாலை மண்டகப்படி இருக்குமென்பதை அவள் அறிவாள். ஆனால் இப்பொழுது கயலுக்கு அது முக்கியமாய் படவில்லை.


சரியாக பத்துமணிக்கு பேருந்துநிலையத்தை அடைந்தவள் கண்கள் அவனைத் தேடத்துவங்கியது. 'எங்கே நிற்பதென்று கேட்காமல் போனோமே...' என்றெண்ணியவாறே தன் அலைபேசியை எடுத்து அவன் எண்ணுக்கு அழைக்க, அழைப்புகள் எடுக்கப்படவில்லை.

படபடப்போடு மீண்டும் முயற்சிக்க நீண்ட நிமிடங்களுக்கு பிறகு எடுக்கபட்டது.

“வந்துட்டயா....”

“ம்.. நீங்க எங்கே இருக்கீங்க..”

“நீ எங்க இருக்க..”

“பஸ் உள்ள என்டர் ஆகுற இடத்துக்கு பக்கத்தில் இருக்குக்ற பர்ஸ்ட் ரேக்ல..”என்றபடியே கண்கள் அவனைத் தேடியது.

“அங்கேயே இரு வர்றேன்..” என்று அவன் கைபேசியை அணைத்துவிட்டான்.

‘எங்கே இருக்கிறான் இவன். தன்னை பார்த்துவிட்டானா... ஆனால் எங்கே என் கண்களுக்கு தென்படவில்லையே..' நகத்தைக் கடித்தபடி அவள் கண்கள் அலைபாய

“என்னத்த அங்க தேடிட்டு இருக்க..” என்று அவள் தோள்களை தட்டியது அவன் கரங்கள்.

சட்டென விதிர்த்து திரும்பிவளுக்கு படபடப்பும், பரபரப்புமாய் வியர்த்து கொட்டியது.

“ஹாய்...” என்று அவன் கைகளை நீட்ட தன்னிச்சையாய் அவள் கரம் அவன் கரத்தைப் பற்றியது. அவளது வலது கரத்தினைப் தன் வலது கரம் கொண்டு பற்றியவன், தன் மற்றொரு கரத்தினைக்கொண்டு அவளது கையை தன் இரு உள்ளங்கைக்குள் கொண்டு வந்தான்.

"என்ன பத்துரூவா கண்ணாடியா..." என்று கேட்டபின் தான் இத்தனை நேரம் கண்ணாடியைக் கூட கழற்றாமலே அவனைத் தேடியது அவளுக்குள் உறைத்தது.

சட்டென அவன் கேட்டது விளங்க " இது பிராண்டட் கூலர்ஸ்தான்.." என்றவளுக்கு அவனது நமட்டுச் சிரிப்பு தெளிவாய் உணர்த்தியது அவனது கிண்டலை.

"சரி போவோமா..." என்றவனிடம் எங்கேயென கேட்கத் தோன்றவில்லை அவளுக்கு. அவள் ஸ்கூட்டியை கிளப்ப அவன் பின்னால் ஏறிக்கொண்டான்.


அவன் கூறிய சாலையில் தன்னியல்பாய் வண்டியை இயக்கினாலும் அவளது மனமும், உடலும் அவன் மூச்சுக்காற்றை அவளது நுரையீரலுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தது.


சிறிது தூரம் எந்த பேச்சுமின்றி செல்ல

"என்ன ஒன்னும் பேசாம வர்ற.."

"ம்... ஏதாவது சாப்டறீங்களா எங்கயாவது ஹோட்டல்ல நிறுத்தவா..." என்றாள் கயல்.


"நான் சாப்பிட்டு தான் வந்தேன்... நீ சாப்பிடலையா... நீ சாப்பிடலேன்னா போகலாம்.." என்றவனிடம்

"இல்ல நானும் சாப்பிட்டேன்.. " என்றாள்.

'எப்படியும் இரண்டு மணிநேர பிரயாண தூரம் அவன் ஊர். வழியில் எதுவும் சாப்பிட்டு இருக்கமாட்டான்..' என எண்ணியபடியே வழிநெடுகிலும் தேடியபடியே வந்தாள்.

"இங்க எங்களோட தோட்டம் ஒன்னு இருக்கு. அங்கே தான் போறோம்..."என்ற வளவனின் வார்த்தைகள் அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

"இங்க உங்களுக்கு தோட்டமா...?"

"ஏன் இருக்க கூடாதா..?"

"அப்படி இல்ல உங்க ஊர்லேர்ந்து இவ்வளவு தள்ளி தோட்டமான்னு கேட்டேன்."


"இது அப்பா இருக்கும் போது வாங்கி போட்டது. அவர் நினைவா எங்கிட்ட இதான் இருக்கு. அதான் தூரமா இருந்தாலும் இருக்கட்டும்னு குத்தகைக்கு விட்டுட்டு அடிக்கடி வந்து பார்த்துட்டு போவேன்." என்றவன் குரல் தழுதழுத்ததோ என தோன்றியது கயலுக்கு‌. ஊரின் பரபரப்பான சனநெருக்கடியைத் தாண்டி ஒரு பழச்சாறு கடையைக் கண்டவள்,

"ஃப்ரெஷ் ஜூஸ் குடிக்கலாமா என்றபடியே தனது ஸ்கூட்டியை ஓரங்கட்டினாள். அவன் இறங்கிக்கொள்ள அவள் ஸ்டான்ட் இட்டு நிறுத்திவிட்டு அணிந்திருந்த கண்ணாடியைக் கழட்டியவாறே தன் ஹாண்ட்பேகை எடுத்துக்கொண்டு அவனை நோக்கி "வாங்க..." என கூற

"அழகா இருக்க...." என்றான்.

அவள் முகம் குங்குமமாய் சிவக்கத் தடுமாறினாள்.

"சரிவா..." என்றபடியே அவன் கடைக்குள் நுழைந்தான். ணஅவனைத் தொடர்ந்தாள் கயல்.

"என்ன ஜூஸ்.." குடிக்கிற என்று அவன் சாதாரணமாய் கேட்க

"எதுவா இருந்தாலும்..." என்றபடியே இவள் தடுமாறிக் கொண்டிருந்தாள்.

"ப்ரோ என்ன இருக்கு" என்று கேட்டு, "ரெண்டு ஆரஞ்ச்ஜூஸ்..." என்று அவன் ஆர்டர் கொடுக்க, இவளோ அவனை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.


"என்ன தேறுவேணா..." என்றபடியே மெலிதாய் சிரிக்க அவன் கன்னக்குழிக்குள் இவள் கரைந்தே போனாள்.


ஆர்டர் செய்த ஆரஞ்சு பழச்சாறு வந்துவிட குடித்தபடியே "இங்கே எங்க இருக்கு உங்க தோட்டம் ஏற்கனவே பதினைஞ்சு கிலோமீட்டர் வந்தாச்சே..." என்று அவள் அவளது படபடப்பை சரி செய்ய முயல, அதை அதிகமாக்கும் விதமாய் சகஜமாய் பதில் கூறியபடியே அவளது பாதி குடித்த பழச்சாறு டம்ளரை அவன் எடுத்துக் குடிக்க, இவளுக்கோ என்னவென்று இனம் புரியாத ஓர் உணர்வு சூழ்ந்தது.

'என்ன' என்னும் விதமாய் அவன் புருவமுயர்த்தி சிரிக்க, ஒன்றுமில்லையென்பதாய் மறுப்பாய் தலையசைத்தாவாறே அவன் மீதம் வைத்திருந்த டம்ளரை கைகள் நடுங்க பற்றினாள்.

அவளை பார்வையால் பருகிய படியே அவன் பழச்சாறை பருகி முடிக்க, அவன் விழிகளின் வீச்சை தாங்க முடியாமல் இமைத் தாழ்த்தியவாறு அவள் பருக முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.


அவளின் மன உணர்வுகள் அத்தனையும் அவளுக்கு புதுவித இன்ப அவஸ்த்தையாய் இருந்தது. இதுவரை அவள் கண்டிராத உணர்வுகளை அவளுக்குள் உணரத் தொடங்கியிருந்தாள். சுற்றிலும் ஏதோ ஆராய்பவள் போல் அவள் வெளியே வேடிக்கையாய் திரும்ப ஆளில்லாத அந்த கடையில் இவர்களுக்கு பழச்சாற்றைக் கொடுத்துவிட்டு கடைக்காரர் கைபேசில் பேசியபடி கடையில் இருந்து வாசலுக்கு சென்று பேச அவளது கன்னத்தை ஆதுரமாய் தாங்கியது வளவனின் கரம்.


அவளது கன்னத்தில் அவனது உள்ளங்கை பட்டதும் அவள் முகம் முழுக்க செந்நிரத்தைப் பூசிக் கொள்ள, உள்ளமும் உடலும் சில்லிட்டுப் போனது அவளுக்கு. மெல்ல அவர் நிமிர்ந்து நோக்க அவனின் இதழ் உதிர்க்காத வார்த்தைகள் அனைத்தையும் அவன் விழிகள் அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது இனி என்றும் உன்னவனாய் நானிருப்பேன் என... எத்தனை நேரம் நீடித்ததோ சில நொடியா மணிக்கணக்கா என நீண்ட தருணத்தில்

தன்னிச்சையாய் அவன் கன்னத்தை தாங்கியிருந்த கரத்தினை பற்றியவள் கண்ணில் நீர் துளிர்க்க அவனது உள்ளங்கையில் தன் இதழால் முத்திரைப் பதித்து அவனிடத்தில் தன் பெருங்காதலை அறிவித்து அவன் கரத்தினில் கன்னத்தை சாய்த்து அவனிடத்தில் சரணடைந்தாள்.

இது பொதுவிடம் என அவன் கண்களால் உணர்த்த விழி நீரை விழுங்கிய படி அவள் நாணத்தில் சிவந்து அவன் கரத்தினை விலக்க முயல, விரல்களால் வருடியபடியே அவன் விலக்கினான்.


அவன் எழுந்து பழச்சாற்றிற்கான பணத்தை கொடுக்கும் நேரத்தில் இவள் தன்னை நிலைக்கு கொண்டு வந்து வெட்கப் புன்னகையுடன் மீதமிருந்த பழச்சாற்றினை ரசித்து அருந்தி முடித்து எழுந்தாள். அதன் ருசி அவள் உள்ளம் முழுமைக்குமாய் இனித்துக் கிடந்தது.


அவனுடனான இந்த பயணம் அவள் வாழ்நாளுக்குமாய் மறக்கவியலாததாய் அவன் மாற்றப் போகிறான் என்பதை அவள் உணரத் தொடங்கினாள்.


மீண்டும் கிளம்ப "நீங்க ஓட்டறீங்களா" என அவனிடத்தில் அவள் சாவியை நீட்டினாள்.

"இல்ல நீயே ஓட்டு நா ஜாலியா பின்னாடி உக்கார்ந்து வர்றேன். இதுவும் நல்லாத்தான் இருக்கு.." என குறும்பாய் கூறிப் புன்னகைத்தான்.

அவன் கூறிய வார்த்தைகளுக்கான அர்த்தம் அங்கிருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே தெரிந்து போனது அவளுக்கு.


வழியெங்கும் பசுமை விரிய, அவள் மனம் முழுக்க மகிழ்ச்சியோடு அவன் தன்னுடன் இருக்கிறான் என்பதை எண்ணியபடியே அவள் வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தாள்.


அவனோ காற்றில் அலைந்த அவள் கூந்தலை ரசித்தபடி அதனை முகர்ந்து அதன் வாசனையில் கிறங்கி
அவளின் இடைப் பற்றி அவள் தோள்களில் அவன் நாடியைப் பதிக்க விதிர்விதிர்த்து போய் தடுமாறிப் போனாள் கயல்.


"ஏய்..... பார்த்து... எங்கயாவது கொண்டு போய் விட்றாத..." என்றபடியே விலகினான் அவன்.

சட்டென அவன் இடைப்பற்றியதும் அவள் அதிர்ச்சியில் பிடி விலக அவன் விலகியதும் சட்டென நிதானித்து ஓரமாய் நிறுத்தி மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டாள். நல்லவேளையாய் நகரம் தாண்டி வந்துவிட்டதால் சாலையில் தூரத்தில் வரும் ஓர் வாகனம் தவிற வேறு எதுவும் இல்லை.


"ஏய் என்னாச்சு சாரி.. இனி தொடல தள்ளி உட்கார்ந்துக்கறேன் வண்டிய எடு..." என்ற அவனது குரலில் தான் அவள் தன் வாகனத்தை நிறுத்தியதையே உணர்ந்தாள்.


ஒன்றும் பேசாமல் அவள் மீண்டும் வாகனத்தை இயக்க அவனோ பதுவிசாய் அவளின் கூந்தலை ரசித்தபடியே "எனக்கு பிடிச்ச மாதிரியே இருக்க அதான் என்னோடவன்ற உரிமை தானா வந்துடுச்சு தப்பா..?" என்றான் சற்றே மட்டுபட்ட குரலில்.

என்னவென்று உரைப்பாள் அவள். அவளின் அத்தனை அணுவிலும் அதிவேகமாய் அவன் நுழைந்து தன்னிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறான் என்பதை.


துளிர்க்கும்...
 

Artpearl

New member
Messages
2
Reaction score
2
Points
3
வாவ் செம ஸ்டார்ட் இப்போதான் first டைம் பாக்குறாங்களோ
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
கயல்,வளவன் உரையாடல் செம க்யூட் மா..கயலோட அண்ணி திமிர் பிடிச்ச கேஸா இருக்கும்போல..அழகான ஆரம்பம் சிஸ்
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
66
Reaction score
66
Points
18
வேரின் தாகம்...

அத்தியாயம் - 2

வளவன் அவன் தாய், தந்தைக்கு மூன்றாம் மகன். உடன் இரண்டு சகோதரர்கள், நான்கு சகோதரிகள் என பெரிய குடும்பம். தந்தை அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராய் இருந்தவர். ஆம் இருந்தவர் - இப்போது அவரில்லை. வளவன் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போதே அவரின் காலம் முடிந்து விட்டது.

பள்ளிக் காலங்களில் மாணவர்களுக்கே உரிய விளையாட்டுத்தனத்தில் விளையாட்டும், கும்மாளமுமாய் இருந்தவனுக்கு, அவன் தந்தை இல்லை என்பதையே ஏற்க இயலவில்லை.

அதன் பிறகான அவனது காலங்கள், படித்தால் மட்டுமே எதிர்காலம் என்பதை அவனுக்குத் தெரிய வைத்தது. சிவில் இஞ்சினியரிங் பட்டம் பெற்றவன் தலையில் குடும்ப பாரம். மிக நேர்மையான ஆசிரியர் குடும்பம். தேவைக்கு அதிகமாய் எந்த சேமிப்பும் இல்லாமலிருக்க, மூத்தோர் இருவரும் அவரவர் குடும்பமென இருந்து விட, ஒற்றை ஆண்மகனாய்த் தன்னுடன் பிறந்த பெண்பிள்ளைகளுக்காய் உழைப்பதற்கெனவே வெளிநாட்டில் வேலைக்கு சென்றான்.‌

படிப்படியாய் மூவரைக் கரை சேர்த்து முடித்து நிமிர்ந்து பார்க்கையில் முப்பதைக் கடந்திருந்தான். அவனைப் பற்றி எதையும் யோசித்துக்கூட பார்க்க முடியாத ஒன்பது வருட வெளிநாட்டு வாழ்க்கை இப்பொழுதெல்லாம் சற்றே சலிக்கத் தொடங்கியிருந்தது. கடைசித் தங்கை படித்து முடித்து தனக்கென ஒரு வேலையையும் தேடிக்கொண்டு அண்ணனின் பாரத்தைச் சற்றே குறைத்திருந்தாள்.

அதே சமயம் தாயார் உடல்நிலை சற்றே மட்டுப்படத் தொடங்க தாயகம் திரும்பினான் வளவன். தாயின் வயதான காலத்தில் அவரைத் தனியே விட மனம் இல்லை அவனுக்கு.

வெளிநாட்டில் அவன் பொறியாளராகப் பணியாற்றி இருந்தாலும் அவன் பணிபுரிந்தது சாலைப் பொறியாளராகவே...

கட்டுமானத்துறையில் உள்ளூரில் கட்டிடத்துறையில் தனியே தடம் பதிக்கும் முன் பிரபலமான கட்டுமான நிறுவனத்தில் அவனுக்கு அனுபவத்துடன் கூடிய பயிற்சி தேவைப்பட்டது. ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்தில் பணியில் சேர்ந்தான் வளவன்.

கடந்த ஓராண்டில் அவனின் தொழில் கற்கும் ஆர்வமும், அக்கறையும் அவனின் வேலைகளில் வெளிப்பட, தற்பொழுது அவனின் பொறுப்பில் ஓர் கட்டிடத்தை விட்டிருந்தது அவனது நிறுவனம்.

முதன்முதலில் கயலை அவன் சந்தித்தது அன்றுதான். அவன் பொறுப்பில் கட்டிக்கொண்டிருக்கும் கட்டிடத்திற்கு அன்று வந்த கட்டுமானப் பொருட்களைப் பார்வையிட அவன் வரும் நேரத்திற்கு சற்று முன்னதாகவே வந்திருக்க... கைகளைப் பிசைந்தபடி நின்றிருந்தாள் அவள்.

பைக்கில் அவன் வந்திறங்கியதைக் கூட காணாது, வேலை நடக்கும் கட்டிடத்தின் உள்ளே நோக்கி "அண்ணா.." என அவள் எழுப்பிய குரல் அருகில் இருந்த அவனுக்கே மெதுவாய்த்தான் கேட்டது.

"என்ன வேணும்..?" என்ற அவனது குரல் கேட்டுத் திரும்பியவளின் கண்களில் சற்றே மிரட்சி.

"இல்ல, மேஸ்திரி அண்ணாவைப் பார்க்கணும்.." என்றாள்.

"நான் தான் இங்க இஞ்சினியர்.. என்ன விசயம் சொல்லுங்க..?"

"அது... அது வந்து..." அவள் தலை குனிந்தபடி தவித்தாள்.

'யார் இவள்..' என்று யோசித்தவாறே... "என்ன விசயம் சொல்லுங்க.." என்றான் வளவன்.

சற்றே நிமிர்ந்தவள் "எதிர்ல இருக்கற பொட்டிக் என்னோடது.." என்றாள்.

"சரி.." என்றபடியே எதிரே நோக்கியவனுக்கு விஷயம் விளங்கியது. அவளது கடை வாசலை அடைத்தவாறு செங்கற்கள் அடுக்கப்பட்டு அருகேயும் வழி இல்லாதவாறு மணல் கொட்டப்பட்டிருந்தது.

அதற்குள் அவளது குரல் மீண்டும் ஒலித்தது‌. "கடை திறக்கனும்..." என தயக்கத்தோடு கூற

"சிரமத்திற்கு மன்னிச்சிக்கோங்க. அரைமணி நேரத்தில உங்களுக்கு க்ளியர் செய்து குடுத்துடுறேன்." என்றவாறே, "மணிண்ணா..." என உள்நோக்கி குரல் கொடுத்தான்.

அவனின் சத்ததில் மேலேயிருந்து "தோ வர்றேன் தம்பி.." என்ற குரலோடு அடுத்த சில நிமிடங்களில் மேஸ்திரி இறங்கி வந்தார்.

"என்ன மணிண்ணா? பொருட்களை இறக்குறப்போ யாருக்கும் இடைஞ்சல் இல்லாம நம்ம இடத்துல இறக்க வேண்டியது தானே? பாருங்க, அவங்க கடை திறக்க முடியாத அளவுக்கு செங்கலை அடுக்கிட்டு போய்ட்டாங்க. இப்போ இரண்டு வேலைதானே..? அதோட, அவங்களுக்கும் தொந்தரவு இல்லையா..?" என்றவன்

"நம்ம ஆட்களை வரச் சொல்லுங்க.. அரை மணி நேரத்துல அந்த இடத்தை க்ளியர் பண்ணி குடுங்க.. அவங்க வேலை செய்யும் இடம் கொஞ்சம் சுத்தப்படுத்திக் குடுங்க, சீக்கிரம்.." என உசுப்ப, அடுத்த அரைமணி நேரத்தில் படபடவென வேலை நடந்து முடிந்தது. அதுவரை அங்கேயே நின்றவனுக்கு அவளின் தோற்றம் அப்போதுதான் கருத்தில் பதிந்தது.

வெண்மையிலும் சேர்த்து இல்லாமல் லாவண்டரிலும் சேர்த்து இல்லாமல் வெளுப்பான நிறத்தில் காட்டன் புடவை. அதே நிறத்தில் இரவிக்கை‌. இறுக பின்னிய கூந்தல். காதில் இருக்கிறதா என்றே தெரியாத அளவிற்கு ஒரு சிறிய தோடு. கழுத்தில் சங்கிலி. தாலியாக இருக்குமோ...? காலை நோக்கினான். மெட்டியில்லை. திருமணம் ஆகாதவளா...? வளையல்கள் அணையாத கைகள். திலகமில்லா நெற்றி. வெறுமையான கண்கள். சற்றே பூசினாற் போன்ற உடல்வாகு. எந்தவித அலங்காரமும் இல்லாமல் துடைத்த விளக்காய் அவள் தோற்றம்.

அவள் கடை திறந்து உள்ளே சென்றுவிட அவனும் அவனது வேலையைப் பார்க்க ஆரம்பித்திருந்தான். ஆனாலும் அவன் பார்வை அனிச்சையாய் எதிர்திசை நோக்கியது. 'சின்னதா மெரூன் கலர்ல பொட்டு வெச்சா இவளுக்கு அழகா இருக்கும்ல..?" என்று மனம் கூறியது.

'டேய்... அவ யாருன்னே தெரியாது. அவ எப்படி இருந்தா உனக்கென்ன..?' என மனசாட்சி கேள்வி கேட்க 'அடேய் வளவா உனக்கென்னாச்சு..?' என்றபடியே வேலையை தொடர்ந்தான்.

சிறிது நேரத்தில் மீண்டும் அவள் என்ன செய்கிறாள் என எதிர்புறம் பார்வை செல்லுவதை அவனால் தடுக்க இயலவில்லை.

அவளோ இதை எதுவும் அறியாது‌. கருமமே கண்ணாய் தையல் எந்திரத்தோடு எந்திரமாய் இயங்கிக் கொண்டிருந்தாள். மேலும் உள்ளே இன்னும் இரண்டு பெண்கள் வேலை செய்வது தெரிந்தது.

"விழிஸ் பொட்டிக்" என்ற பெயரில் பெண்களுக்கான உடைகளைத் தைக்கிறாள் போல என்றவாறே அவன் அவளின் இடத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

வேலை முடிந்து அவன் கிளம்பும் வரை அவனது கண்கள் அவ்வப்போது அவளையே பார்த்துக் கொண்டிருந்தன. அன்று மேலும் சில கட்டுமானப் பொருட்கள் வர வேண்டி இருக்க மேஸ்திரி மணியும், இவனும் மட்டும் காத்திருந்து, பொருட்களை உரிய இடத்தில் இறக்கி முடித்து கிளம்பிய போது ஒன்பது மணி.

அதுவரையிலும் கூட அவள் தொடந்து வேலை செய்து கொண்டிருப்பதைக் கண்டவன் சற்றே நின்றான். சற்று தள்ளி ஒரு மளிகைக்கடையும், இவளின் கடையும் தவிர அனைத்தும் அடைக்கப்பட்டிருக்க, இவள் மட்டும் தனியே தைத்துக் கொண்டிருந்தாள்.

"சரி தம்பி நான் கெளம்புறேன்.." என்ற மேஸ்திரியை அனுப்பிவிட்டு அவளின் விழிஸ் பொட்டிக்கை நெருங்கினான்.

"ஹலோ..." என்றவனின் குரல் அவளைக் கலைத்தது.

நெற்றியைச் சுருக்கியவள் "சொல்லுங்க.." என்றாள்.

ஏழு மணிக்கெல்லாம் உள்ளே வேலை செய்த இரண்டு பெண்களும் கிளம்பியதைக் கண்டிருந்தான்.

"நேரமாச்சு கிளமபலையா... என்றான்.

நிமிர்ந்து கடிகாரத்தைக் கண்டவள் அச்சோ மணி ஒன்பதா? என தனக்குள்ளே அதிர்வது தெரிந்தது.

முன்பின் தெரியாத ஓர் அந்நிய ஆண் தன்னோடு பேசுகிறான் என்ற எண்ணத்தோடு சற்றே தயக்கத்துடன், "கிளம்பனும் சார்.. கொஞ்சம் வேலை இருந்தது.." என்றபடியே தையல் இயந்திரங்களை அணைத்துவிட்டு எழுந்து தன் கைப்பை மற்றும் கைப்பேசியை எடுத்துக் கொண்டு கடையைப் பூட்டிவிட்டுக் கிளம்பினாள்.

"சரிங்க.. நீங்க தனியா இருக்கீங்களேன்னு தான் கேட்டேன். தப்பா எடுக்கலேன்னா ஒன்னு கேட்கவா..?" என அவன் கேள்வியால் அவளை நிறுத்தினான்.

அவள் விழிக்க, அவனே தொடர்ந்தான். "மணி ஒன்பது ஆச்சு.. தனியாக போறீங்க.. நீங்க எங்கே போகணும்னு சொன்னா அங்க ட்ராப் பண்ணிடுவேன்.."

சட்டெனப் பின்னடைந்தாள் அவள், "இல்ல பக்கத்துலதான்.. நான் பஸ்ல போயிடுவேன்..." என்று கூறிவிட்டு, பதிலை எதிர்பார்க்காமல் நடக்கத் தொடங்கியிருந்தாள்.

"ஹலோ மிஸ்.. எதிர் எதிர்ல இருக்கோம் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒரு உதவி அவ்வளவுதான்.. நீங்க நினைக்கிற மாதிரி நான் தப்பான ஆள் இல்லைங்க... இந்த ஏரியாவுல கடைசி பஸ் ஒன்பது மணிக்கு.. நீங்க போறதுக்குள்ள அதுவும் போய்விடும்" என்றான்.

சட்டென நின்றாள் அவள். தன் கையில் உள்ள கைபேசியை பார்க்க, அதில் நேரம் ஒன்பது பத்து என்று காட்டியது. சற்றே அவள் முகம் வெளிறியதோ என்று தோன்றியது அவனுக்கு. அவள் முகத்தில் பயமும், கவலையும் ஒருசேர தெரிந்தது.

"சொன்னா கேளுங்க.. இந்த நேரத்துல இங்க ஆட்டோ கூட கிடைக்காது.. நான் உங்களை வீட்ல டிராப் பண்ணிட்டு போறேன்." என்றான் கனிவாக,

ஆனால் அவளுக்கோ அவன் கூறிய எதுவும் காதில் விழாதவளாக விறுவிறுவென நடக்கத் தொடங்கினாள்.

"என்ன இவ? நம்மைப் பார்த்தா வில்லன் போலவா இருக்கு..?" என்று பைக்கின் கண்ணாடி வழியே பார்த்தவன், "அப்படி ஒன்னும் தெரியலயேடா வளவா" என்று நினைத்தபடியே சற்று பின்தங்கி தன்னுடைய பைக்கைத் தள்ளிக் கொண்டு சென்றான்.

அவளுக்கோ, தன் பின்னால் தனக்காய் ஒருவன் வருகிறான் என்ற நினைவே இல்லாமல் முந்தானை நுனியைக் கையில் சுற்றியபடியே, ஒரு வித பதட்டத்தோடு சென்று கொண்டிருந்தாள்.

'லேட்டாகிடுச்சு.. எப்படி தனியா போறதுன்னு பயப்படுறாளா..? இல்ல வீட்ல திட்டு வாங்கனுமேன்னு இவ்வளவு பதட்டமா இருக்காளா..?' அவன் யோசித்துக் கொண்டே அவளைத் தொடர, அவளோ தெருமுனையில் இருந்த ஆட்டோவை அழைத்துக் கிளம்பியிருந்தாள்.

அப்பொழுதும் அவள் அந்த நேரத்தில் தனியே செல்கிறாளே? என்ற பதட்டம் அவனுள்.. சட்டென தன் பைக்கை உயிர்ப்பித்து, அந்த ஆட்டோவைத் தொடர்ந்தான். அவள் வீடு சென்று சேரும் வரை தொடர்ந்தவன், அவள் வீட்டினுள் சென்றதும்தான் ஒரு வழியாய் அவனது மனம் நிம்மதியுற்றது.

ஏதோ ஒரு பெண்ணிற்காய் என் மனம் ஏன் இவ்வளவு சஞ்சலப்படுகிறது? இயல்பாகவே தன்னுள் இருக்கும் இரக்க சுபாவமா..? அப்படி எனில், அவள் ஆட்டோவில் ஏறியதுமே கிளம்பி இருக்கலாமே..? அவள் பத்திரமாக வீடு போய் சேர்ந்தாளா என்பது வரை பார்க்கத் தோன்றியிருக்காது. என்னவாயிற்று எனக்கு? வளவனின் மனம் தனக்குத்தானே கேள்வியை எழுப்பியது. தலையை சிலுப்பிக் கொண்டு தன் மனதின் கேள்விகளைத் தற்காலிகமாய் ஒத்தி வைத்து விட்டு கிளம்பிச் சென்றான் வளவன்.

ஆனால் கயல்விழியோ, இது எதுவுமே அறியாது, தன் அண்ணியின் திராவக வார்த்தைகளைக் கேட்டு ஒடுங்கிப்போய் நின்று கொண்டிருந்தாள்.

தொடரும்.....
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
66
Reaction score
66
Points
18
வேரின் தாகம் 3

வளவனுக்கு ஏனோ கயல்விழியை அடிக்கடி பார்க்க வேண்டுமென்று உந்துதலில் தன்னியல்பாய் அவளைப் பார்ப்பதும், ரசிப்பதுமாய் ஒரு வாரம் ஓடியது.

அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தவனுக்கு, அவளிடம் பேசிப் பழகும் வாய்ப்பும், சந்தர்ப்பமும் கிடைத்தது. சந்தர்ப்பம் கிடைத்ததா? இல்லை அவனாக உருவாக்கிக் கொண்டானா? என்பது அவனுக்கே வெளிச்சம். அவன் தங்கை தாமரைக்கு நல்லதொரு வரன் அமைய, பெண் பார்க்கும் படலத்திற்கு அவன் தங்கைக்கு உடைகள் தைக்கவென அவளை நாடிச் சென்றான்.

பெரும்பாலும் எல்லாம் பேசி உறுதியாகிவிட்ட நிலையில் சிறிய அளவில் என்றாலும் மோதிரம் மாற்றிக் கொள்ளலாம் என மாப்பிள்ளை வீட்டார் கூறி இருந்ததால் நான்கே நாட்களில் உடைகள் தைக்க வேண்டுமே? என்று அவன் தங்கை கவலை கொள்ள, அவனுக்கு உடனே கயல் தான் நினைவுக்கு வந்தாள்.

தங்கைக்குத் தேவையான உடைகளை எடுத்தவன், அவளையும் அழைத்துக் கொண்டு நேரே விழிஸ் பொட்டிக்கிற்கு வந்தான். கயலின் டிசைன்களும், வேலைப்பாடுகளும் தாமரைக்கு மிகவும் பிடித்து விடவே, நிச்சயதார்த்தம் அன்று உடுத்த வேண்டிய இரண்டு புடவைகளுக்குத் தேவையான டிசைன்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துவிட்டு, நிச்சய தினத்தன்று தன் சகோதரிகள் ஒரே மாதிரி அணிய விரும்பும் புடவைக்கும் பிளவுசுகளையும் தைக்க முடியுமா? என விசாரித்துக் கொண்டாள் தாமரை.

வேலை அதிகம் இருந்தாலும், புதிய வாடிக்கையாளரை இழக்க விரும்பாத கயல், தைத்துக் கொடுப்பதாய்க் கூற தாமரைக்கும் நிம்மதியாய் போயிற்று. கயலின் அணுகுமுறையும், அவளின் வேலைகளில் உள்ள நளினமும், அழகும், நேர்த்தியும் தாமரைக்கு மிகவும் பிடித்துப் போனது.

தங்கையை அழைத்து வந்து விட்டவன், அதன்பின் எதிலும் தலையிடாமல் ஒதுங்கி நின்று, அவளைத் தன் கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தான். இன்றும் மிகவும் அருகினில் அவளைப் பார்த்தவனுக்கு, அவள் மீதான அலைப்புறுதல் மேலும் கூடியது.

இவள் மீது ஏன் எனக்கு ஆர்வம்..
நான் இவளைக் காதலிக்கிறேனா..? இதுதான் காதலா..? என்றெல்லாம் கூட யோசிக்கத் தோன்றவில்லை வளவனுக்கு. அவள் தன்னோடு தன் கண்முன் இருந்தாலே போதும் என்று விரும்பினான். இதுதான் காதல் என்றால், இருந்துவிட்டுப் போகட்டுமே? என எண்ணினான்.

அவளிடம் தனக்குத் தேவையான விஷயங்களைக் கூறி விட்டுக் கிளம்பிய தாமரை, "அண்ணனோட நம்பரை நோட் பண்ணிக்கோங்க.. முடிஞ்சதும் அண்ணாவுக்கு இன்பார்ம் பண்ணுங்க.. வந்து வாங்கிக்குவாங்க.. அக்காவோட உடைகளை நாளைக்குக் கொடுத்து விடறேங்க.." என்று கூறி விட்டு கிளம்பியபோதுதான் கயல் அவனை நோக்கினாள்.

சிநேகமாய்ப் புன்னகைத்தவாறே, தன் விசிட்டிங் கார்டை எடுத்து அவன் நீட்ட, அதை பெற்றுக்கொண்டு அவள் மெலிதாய்ப் புன்னகைத்த போது அவனுக்கு ஏனோ ஒரு கோடி மின்னல்கள் ஒருங்கே தாக்கியது போன்றதொரு பரவசம்‌.. சிரிக்கும் போது விழும் லேசான கன்னக்குழி அவளுக்கு இன்னும் அழகை கூட்டுகிறதோ..?" என எண்ணியவாறே விடை பெற்று தங்கையுடன் வெளியேறினான்.

அடுத்த நாள் வரை, அவளின் அந்த மெலிதான சிரித்த முகமே அவன் கண் முன் நிழலாடியது நிச்சயதார்த்த வேலைகள் செய்வதை முடித்துக்கொண்டு இவன் மதியத்திற்கு மேல் கட்டிடத்திற்குச் சென்று கொண்டிருக்கும்போதுதான் முதல் முறையாய் அவளிடம் இருந்து அழைப்பு வந்தது. ப்ளூடூத் ஹெட்செட் போட்டிருந்ததால் வந்த அழைப்பு யாருடையது என்பதை அறியாது அழைப்பை ஏற்றவனுக்கு, வீணையின் நாதமாய் அவளது குரல் ஒலித்தது.

"வணக்கம்! நான் விழிஸ் பொட்டிக்கிலிருந்து கயல் பேசுறேன்.. வளவன் சார் தானே?" என்ற அவளின் குரலுக்கு அவன் இதயம் தாளம் தப்பியது.

"ஆமாங்க.. சொல்லுங்க.."

"உங்க சிஸ்டரோட ப்ளவ்ஸ் ரெடியாயிடுச்சு.. வந்தா வாங்கிக்கலாம் சார்.." என்றாள் அவள்.

" அதுக்குள்ள ரெடியா... நான் ஒரு மணி நேரத்துல வந்து வாங்கிக்கறேன்.." என்று பதிலளிக்க "சரிங்க" என்றபடியே அவள் அழைப்பைத் துண்டித்தாள்.

மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும் இளம்பருவ ஆண் அல்ல அவன்.. ஆனால், அவனுள் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு அவனை இம்சித்தது.

ஏற்கனவே அவனது மற்ற சகோதரிகள் தங்களது உடைகளையும், அளவு உடுப்புகளையும் கொடுத்துவிட்டு இருக்க, அதோடு கயலின் முன் நின்றான் வளவன்.

உதடு பிரியாமல் ஒரு புன்முறுவலுடன் "வாங்க சார்" என்றபடி தாமரையின் உடைகளை எடுத்து மேஜை மீது வைத்தாள்.

"அதுக்குள்ள தைச்சிட்டீங்களே..?" என்று ஆச்சரியப்பட்டான் அவன்.

"பெரும்பாலும் எதுவும் ஆல்டர் இருக்காது.. இருந்தாலும் நிச்சயதார்த்த பிளவுஸ்.. போட்டுப் பார்த்தால்தான், ஏதாவது ஆல்டர் இருந்தாலும் விசேஷத்திற்கு முன் சரி செய்ய முடியும்.. அதனால்தான் கொஞ்சம் நேரமாகவே வந்து முடிச்சிட்டேன் சார்.." என்றாள்.

"சூப்பர்ங்க.. இதுல என்னோட மற்ற மூன்று சிஸ்டர்ஸோட புடவைகள் இருக்கு.. நீங்க தாமரையோட நம்பருக்கு இதற்குத் தகுந்த டிசைன்ஸ் அனுப்பிவிடுங்க.. அவங்க செலக்ட் செய்து உடனே அனுப்பி விடுவாங்க.. இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு.. அதற்குள் முடிக்க முடியுமா..?" என நிஜமான அக்கறையுடனே வினவினான்.

"முடிச்சிடலாம் சார்.." என்றபடியே அவன் கொண்டு வந்த உடைகளைச் சரிபார்த்து, குறித்து எடுத்து வைத்தாள் கயல்.

தைத்த ஆடைக்கான பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு "சரிங்க.. இது இங்கேயே இருக்கட்டுமா..? வேலை முடிச்சிட்டு போகும்போது, வந்து வாங்கிக் கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பினான்.

"பரவாயில்லை சார்.. நீங்க வரும்போது எடுத்துக்கோங்க.." என்றவளிடம்

"என் பெயர் வளவன் நீங்க அப்படியே கூப்பிடலாம்.." என்றவனை நோக்கி ஆச்சர்யப் பார்வையை வீசியவள் எதுவும் கூறாமல் அமைதியானாள். அவளின் இந்த அமைதியான சுபாவத்தினாலேயே அவனுள் ஆழப்பதிந்து போனாள்.

மற்ற சகோதரிகளின் உடைகளையும் அவள் முன்னரே முடித்துக் கொடுத்து விட, அதன் வேலைப்பாடுகளும், நேர்த்தியும் வளவனின் சகோதரிகளுக்கு திருப்திகரமாகவே, திருமணத்திற்கான உடைகள் அத்தனையும் அவளிடமே தருவதாகவும், அதற்கு தயாராக இருக்கும்படியும் போனில் கூறினார்கள். வளவன் நிச்சயத்திற்கு அவளை அழைக்க, அவளோ நாசூக்காய் அதை மறுத்து விட்டது அவனுக்கு சற்று வருத்தமே.

நல்ல விதமாய் நிச்சயம் நடைபெற்ற அந்த மாதமே, திருமண தேதியும் முடிவாக, கயலுக்கும், வளவனுக்குமான சந்திப்புகள் தொடர்ந்தன. தாமரையின் திருமண உடைகள் முதல் அவன் குடும்பத்து பெண்களின் மொத்த ஆடைகளையும் தைக்கும் பொறுப்பு கயலுக்கு வந்தது. அவ்வப்போது அவன் வருவதும், போவதுமாய் சற்றே அவனிடம் சகஜமாகி இருந்தாள் கயல்.

சார் என்னும் தலைப்பில் இருந்து வளவன் சார் என்னும் அளவிற்காய் முன்னேறி இருந்தாள்.

அப்பொழுதுதான் அவன் அதைக் கேட்டான்: "அழகாயிருக்க இந்த நெற்றியில் சின்னதா ஒரு பொட்டு வெச்சா இன்னும் அழகா இருக்குமே..?" என்று கூற, மீண்டும் நத்தையாய் கூட்டுக்குள் ஒடுங்கிப் போனாள் அவள்.

அதன் பின்னான ஒரிரு வாரங்களில் , அவன் வந்தாலும் கடையில் உள்ள பெண்மணியை விட்டு, அவனுக்குத் தேவையானதை எடுத்துக் கொடுத்து, வாங்கி வைக்க..

'என்ன சொல்லி விட்டேன் என்று இவள் என்னிடமிருந்து இப்படி விலகுகிறாள்..?' என அவள் மீது கோபப்பட்டான் வளவன்.

திருமண வேலைகள் தலைக்கு மேல் இருக்க, பெரும்பாலும் அவன் இங்கு வருவது குறைந்து போகவே, சில நாட்களில் தன் போக்கில் அவன் வருகிறானாவென வாசலை பார்ப்பது அவளுக்கே ஓரிரு நாட்கள் கழித்தே புரிந்தது.

பழகிய சில நாட்களிலேயே சின்ன சின்ன விஷயங்களில் எல்லாம் அவளை ஆச்சரியப்படுத்தத் தொடங்கியிருந்தான் வளவன். அவனை அறியாமலேயே, அவன் செய்வதைப் பார்த்து வியந்திருக்கிறாள். முதல் நாளிலேயே வளவனின் அக்கறை அவளுள் ஓர் இதத்தை ஏற்படுத்தி இருந்தது ஆனால், அவள் அதை முழுதாய் அன்று உணரவில்லை.

பின்னே வந்த சில நாட்களில் சகோதரிகளின் மீதான அவனது பாசமும், பரிவும், அக்கறையும் அவர்களுக்காய் தையற்கடை வரை வந்து ஒரு ஆண் தைத்து போவானா? என அவளை வியக்க வைத்தது. இது பெரிய விசயம் இல்லைதான்.. ஆனால் அவளைப் பொறுத்தவரை அது மிகப்பெரிய விடயமே.. ஏனெனில், அவள் சந்தித்த ஆண்கள் அப்படி.

அவளுக்கும் ஒரு சகோதரன் இருக்கிறான். அவனுக்கு அவள் மீது பாசம் உண்டு தான், இல்லை என்று மறுப்பதற்கில்லை. ஆனால், அவன் அதை வெளிக்காட்டும் விதம் வேறாக இருக்கும். வெளிப்படையாக எதுவுமே பகிர்ந்து கொண்டது கிடையாது. சிரித்துப் பேசி, அரட்டை அடித்து, விளையாடிக் கொண்டதோ அவள் நினைவு தெரிந்து இல்லை எனலாம்.

அது அவர்களின் பெற்றோர் வளர்ப்பாய் இருக்கலாம். பெண்பிள்ளைகள் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும். ஆண் பிள்ளை வெளியில் சென்று வந்தாலும் அது கேள்வி இல்லை. ஆனால் வீட்டுப் பெண் வெளியில் செல்வதும், வாயிலில் நின்று தோழிகளுடன் அரட்டை அடிப்பது கூட பெரும் குற்றம் எனக் கூறி வளர்க்கப்பட்டவள் அவள். பருவமெய்தியபின் வெளியில் விளையாடக்கூட அனுமதிக்கப்பட வில்லை கயல். பெண் பிள்ளைகளுக்கென சமூகம் விதித்திருக்கும் அத்தனை கட்டுப்பாடுகளும் மிகக்கடுமையாய்க் கடைபிடிக்கப்பட்டது கயல்விழியின் வீட்டில்.

அவளது சகோதரன் விளையாடி விட்டு வரும்போது, இவள் பள்ளி பாடங்களை முடித்துவிட்டு, அன்னைக்கு உதவி செய்து கொண்டிருப்பாள். அது பற்றி எல்லாம் அவனும் கவலைப்பட்டதில்லை; இவளும் கேட்டுக் கொண்டதில்லை. உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் கூட இவள் ஒருத்தி வீட்டில் இருக்கிறாள் என்றே தெரியாது. அறைக்குள்ளேயே இருந்து விடுவாள். அதுவே அவ்வீட்டின் எழுதப்படாத விதியாக இருந்தது. அவளது தாயின் மறைவுக்குப் பின்னரும் அவ்வாறுதான். பள்ளி இறுதி ஆண்டு.. படிப்பு போதும் என்று தந்தை கூறிவிட அதை எதிர்த்து, தான் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கூட அவள் வெளிப்படுத்த முடியாத நிலையே இருந்தது.

தையல் வகுப்பிற்குக் கூட, அவளின் உறவுப்பெண்கள் தனக்கும், தன் பிள்ளைகளுக்கும் ஆடைகள் தைத்தது போடுவதைக் கண்டே, திருமணத்திற்குப் பின் அவளுக்கும், அவள் பிள்ளைகளுக்கும் உதவும் என்றே தையல் பழக அனுமதித்தார் கயலின் தந்தை. இன்று, அவளின் ஒரே வடிகால் அன்று கற்ற தையல் தொழிலாய் மட்டுமே இருந்தது.

இன்றும், அண்ணன் அவளோடு உரையாடும் வார்த்தைகளை எண்ணி விடலாம் என்று இருக்கும். அதனாலேயே வளவன் தன் சகோதரிக்கு உடைகளைத் தேர்ந்தெடுத்து, அதை அவர்களோடு வந்து, அவ்வளவு பொறுமையாய் நின்று, அவர்கள் கேட்கும் டிசைன்களுக்கு பணம் கணக்கு பாராது கொடுப்பது முதல், அதை வாங்கிக் கொண்டு போய் சேர்ப்பது வரை எல்லாமே கயலுக்கு வியப்பே..!

ஆண்களும் அவளது கடைக்கு வருவார்கள் தான்.. ஆனால், அவர்களின் மனைவியோ, தாயோ கொடுத்த உடைகளை ஒரு பேச்சும் இன்றி, கொடுத்துவிட்டு கடனே என்று வாங்கி செல்பவர்கள் தான் பெரும்பாலும்.

அவர்களேனும் அவனுடைய சகோதரிகள். அவள் யாரோ ஒரு மூன்றாம் நபர் தானே? ஆனாலும், அறிமுகமான ஆரம்ப நாட்களில் அவள் தாமதித்துச் செல்லும் தினங்களில் எல்லாம், அவனும் தாமதித்தே செல்வதைக் கண்டு இருக்கிறாள். அவள் அறியாமல் வீடு வரை அவன் பின்வருவதை சில நாட்கள் கழித்து அறிந்தாள். பெரும்பாலான ஆண்களின் பார்வைகளை அவள் கண்டிருக்கிறாள். அவற்றில் நிச்சயம் ஓர் கள்ளத்தனம் ஒளிந்திருக்கும். ஆனால் வளவனிடம் அவள் அதைக் காணாததே அவன் மேல் ஒரு மதிப்பு உண்டானது.

அக்கறையாய் "சாப்டீங்களா.." எனக் கேட்பதும், மாலையில் "வர்ற வழியில் பார்த்தேன்.. சாப்பிட நல்லாருக்கும்.. எல்லோருக்கும் வாங்கிட்டு வந்தேங்க.." என்று அவளின் பதிலை எதிர்பாராமல், ஏதாவது தின்பண்டங்களைக் கொடுத்துவிட்டுப் போய் விடுவான்.

கன்னக்குழி சிரிப்புடன், "என்னங்க? இன்னைக்கு கேரியரைத் தூக்கவே முடியல, போல? என அவளது சிறிய டிபன் பாக்ஸைக் கிண்டல் செய்தபடி உள்ளே வருபவன், 'பாவங்க இந்தப் பிள்ளையார்' என்பான்.

என்னவென்று புரியாமல் இவள் விழிக்கையில், நீங்க வைக்கிற பூவோட எடை தாங்காம அவருக்கு கழுத்து வலியே வந்து விடும் போல' என்று அவளின் சிறிய பிள்ளையார் சிலைக்கு அடுக்கடுக்காய்க் கட்டிய செவ்வந்தி மாலையைக் காட்டிச் சிரிப்பான்.

அவள் இடத்தில் வேலை செய்யும் பெண்கள் சிரித்தவாறே வேலையை தொடர்வார்கள். அவன் வந்து விட்டுச் சென்ற பல மணி நேரம் வரை அந்த இடத்தில் ஒரு மெலிதான மகிழ்ச்சி நிழலாடியபடியே இருப்பதாய்த் தோன்றும் கயல்விழிக்கு.

இதுவெல்லாம் அவன் அவளை பொட்டு வைத்தால் என்ன என்று கேட்கும் வரை மட்டும்தான்.. பழகிய சில நாட்களில் ஓர் அந்நிய ஆடவன் தன்னை உற்று நோக்கி, தனக்கு எது அழகாய் இருக்கும்? என்று கூறும் அளவிற்கு நாம் இடம் கொடுத்து விட்டோமோ என்று இயல்பிலேயே அவள் வளர்ந்த முறை அவளை யோசிக்க வைத்தது. இனி இப்படி ஒரு செய்கைக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்று உறுதி கொள்ளவும் வைத்து, அடுத்தடுத்து வந்த தினங்களில் தன்னிடம் பணிபுரியும் பெண்கள் மூலமே அவனை அணுகினாள்.

அவள் நினைத்தது போலவே அவன் வரவு அரிதாகி, இரவு வேலை முடிந்து செல்லும் பொழுது அவள் பின்னால் வருகிறானா என தன் இயல்பாய் நோக்கி, அவன் வரவில்லை எனும் பொழுது அவளால் மகிழ முடிய வில்லை.

வேலை செய்யும் பொழுதுகளில் நிழலாடும்பொழுதெல்லாம் அவனாக இருப்பானோ எனத் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை. திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு, அவன் பத்திரிக்கையோடு வந்து நின்றபோது, ஏனோ உள்ளூர ஓர் இதம் பரவுவதை அவள் உணர்ந்தாள்.

தைத்த உடைகளை வாங்கிக்கொண்டு, அவன் வெறுமனே வாய் வார்த்தையாய் அவளை அழைத்து விட்டுச் சென்றிருக்கலாம். ஆனால், அவனோ உறவினர், நண்பர்களை அழைப்பது போல் அவளுக்கு திருமண அழைப்பிதழை நீட்டி, கட்டாயம் வரவேண்டும்.. என்று அழைப்பு விடுத்தான். அதுவும் அவன் சகோதரிகளுக்கும் தொடர்பு கொண்டு அவளிடமே கொடுக்க, அவர்களும், அவளை உரிமையாய் அழைத்தது கயல்விழிக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தியது. மௌனமாய் அழைப்பிதழைப் பெற்று, அவளது உற்ற துணையாக இருக்கும் பிள்ளையாருக்கு முன் வைத்து, வழக்கம் போல் மெலிதாய் முறுவலித்து, அவனை அனுப்பினாள்.

அவன் சென்ற பின், நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது அவளுக்கு.. என்னவென்று உரைப்பாள் அவள்? திருமணத்திற்கு அவள் எப்படி செல்வாள்? அங்கே, அவள் எப்படி செல்ல முடியும்? அவளுக்கும் ஆசைதான்.. தலை நிறைய மல்லிகை சூடி, நெற்றி நிறைய குங்குமம் வைத்து, சுப காரியங்களுக்கு எல்லாம் செல்ல வேண்டுமென்று..‌ ஆனால் அவளுக்கான விதி அப்படி அனுமதிக்க வில்லையே..? பொங்கிப் பெருகிய கண்ணீரை அடக்க அவள் பெரும் பாடுபட வேண்டியிருந்தது.
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
66
Reaction score
66
Points
18
அத்தியாயம் 4

தாமரையின் திருமணத்திற்கு செல்ல கயலுக்கும் ஆசைதான்.. அங்கே சென்றால் அவனையும் காணலாம் என்ற எண்ணமும் தலை தூக்கியது. என்ன ஆயிற்று எனக்கு ..?ஏன் இவ்வாறெல்லாம் யோசிக்கிறேன்..? அவனை ஏன் காணவேண்டும்..? ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகள் போதாதா? இன்னுமா? என்று ஒருபுறம் தோன்றி அவளை முடக்கிப் போட, திருமணத்திற்கு இரண்டு நாள் என்ற நிலையில் அதை உடைக்கும் விதமாக வந்தது வளவனின் அலைபேசி அழைப்பு.

அவனின் எண்ணைக் கண்ட மாத்திரத்திலேயே, அவளுக்குள் ஒரு பதட்டம் தொற்றிக்கொண்டது. எல்லா உடைகளும் சரியாக இருப்பதாகத்தானே சொன்னார்கள்? என்னவாயிருக்கும்? என்ற யோசனையுடனே அழைப்பை எடுத்தவளுக்கு,

"கயல்.." என்ற அவனின் குரல் அவளை ஏதோ செய்தது.

*சொல்லுங்க சார்.." என்றாள்.

"நாளைக்கு எத்தனை மணிக்கு வரீங்க..?" என கேட்கத்தான் கூப்பிட்டேன் என்றான் அவன்.

அவனுக்கு என்ன பதில் கூறுவது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவளின் அமைதியை உணர்ந்தவன், "ஏன் கயல் எங்க வீட்டு விசேஷத்திற்கு எல்லாம் வர மாட்டீங்களா...?

"அப்படி எல்லாம் இல்லைங்க.." என்றவள் தன் நிலையை அவனுக்கு எப்படி உணர்த்துவது என்று விளங்காமல்,

"பொதுவாகவே நான் எந்த விசேஷத்திற்கும் போறது இல்லைங்க.." எனும்போது அவளின் உள்ளம் குமுறத் தொடங்கியது.

"எனக்காக வரக்கூடாதா கயல்..?" என்றவனின் எனக்காக என்ற வார்த்தையின் அழுத்தம் உணர்ந்து அந்த வார்த்தைக்கு மறுமொழி கூற இயலாமல் தவித்தாள் அவள்.

"கயல்.." என்று மீண்டும் அழுத்தமாய் அவன் அழைக்க

"ம்..." என்றாள் அவள்

"நீங்க கட்டாயம் வரணும்.. நான் உங்களை எதிர்பார்த்துட்டு இருப்பேன்.."

"வந்து.." என அவள் இழுக்க

"ப்ளீஸ்மா.." என்ற அவனின் குரல் அவளை அசைத்தது. சில வினாடி அமைதிக்குப் பின்,

"இரவு வர முடியாது முகூர்த்தத்திற்கு வேணா வர முயற்சிக்கிறேன்.." என்றாள்.

"தேங்க்ஸ்.." என்றவன் "கட்டாயம் வரணும் எதிர்பார்த்துட்டே இருப்பேன்.." என்றான்.

"ம்ம்..." என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்.

"என்ன இது? அவன் கேட்டவுடன் வருகிறேன் என்று கூறி விட்டேனே..?" என்று அயர்ந்து போய் அமர்ந்தாள். வீட்டில் என்னவென்று கூறுவாள்? தந்தையைக் கூட வேலை இருக்கிறது.. சீக்கிரமாய்க் கடைக்குப் போக வேண்டும் என்று சொல்லி சமாளிக்கலாம்.. ஆனால் அண்ணி..? எப்படி சமாளிப்பேன்..?

அப்படியானால், நான் திருமணத்திற்குச் செல்லத் தயாராகி விட்டேனா? எப்படி..? நான் எப்படி..? ஒரு மங்கல காரியம் நடக்கும் இடத்தில் நானா..? இதை எப்படி மறந்து போனேன் நான்..? அவளை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது.

"என்ன ஆச்சு கயல்.." என்று கேட்டாள் அவளிடம் பணி புரியும் கலைவாணி.

"பழசையே நினைச்சுட்டு இருக்கியா..? உனக்குக் கிடைத்த விடுதலையா நெனச்சு, மறக்க வேண்டிய விஷயத்தை இன்னும் நெனச்சு, அழுதுட்டு இருக்கியே..்என்ன பொண்ணு நீ..? முதல்ல கண்ணைத் தொடச்சுட்டு எழுந்து வா.." என உரிமையாய்க் கோபித்தாள்.

கயல்விழியின் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்தான் கலைவாணி. சிறுவயது முதலே கயலை அறிந்தவர். அவள் வாழ்வின் இன்ப, துன்பங்கள் அத்தனையையும் அருகில் இருந்து பார்த்தவர். அவள் மேல் உண்மையான அக்கறை உள்ள பெண்மணி. பிள்ளைகள், படிப்பு என தன் குடியிருப்பை மாற்றிச் சென்றிருந்தாலும், கயல்விழி விழிஸ் ஆரம்பித்ததும் முதலில் அழைத்து வந்தது கலைவாணியைத்தான். கலைவாணி மூலமாய் அவள் வீட்டு அருகே வசிக்கும் தேவியும் வர, கயலுக்கு அந்த தையலகத்தை நடத்துவதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை.

அப்படிப்பட்டவர் கேட்டதும் உடைந்து போனாள் கயல்.

"அக்கா.." என அவள் உடைந்து அழவும், தைத்துக் கொண்டிருந்தவர் எழுந்து வந்து அவளைத் தேற்றினார்.

"என்ன ஆச்சு கயல்? ஏன் இப்படி அழற..? உன் துன்பம் எல்லாம் விலகிடுச்சு, இப்பத்தான் தைரியமா நடமாட ஆரம்பித்திருக்கேன்னு நான் சந்தோஷப்பட்டேன். இப்போ எதுக்கு இந்த அழுகை? முதல்ல கண்ணத் துடை.." என்று அவளை சமாதானப்படுத்தினார்.

ஆனால் கயலால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கலைவாணியின் இடையைக் கட்டிக்கொண்டு அழ, கலைவாணி அவளைச் சமாதானப்படுத்த முடியாமல் தவித்தாள்.

தேவி நிலைமை உணர்ந்து, தண்ணீரை எடுத்துத் தர, அதை கயலிடம் கொடுத்து, அருந்த வைத்தார் கலைவாணி. தண்ணீர் அருந்தி, சில நிமிடங்கள் கழித்து, அவள் சற்றே ஆசுவாசம் அடைந்த பின்னர் "என்ன ஆச்சு கயல்..?" என்றார் கனிவுடன்.

தன்னை சமனப்படுத்திக் கொண்டவள் "அவர்... அதான் வளவன் சார்.." என நிறுத்த,

"ஆமா அவருக்கு என்ன.." என்ற கலைவாணியிடம் "அவர் தங்கை திருமணத்திற்கு கட்டாயம் வரணும்னு சொன்னாருக்கா.."

"சரி அதுக்கு ஏன் அழற..? கல்யாணத்துக்கு தானே கூப்பிட்டாரு அந்த தம்பி..? இதுல அழ என்ன இருக்கு..? அதான் அன்னைக்கே பத்திரிக்கையை வச்சாரு, அதுக்காக இப்ப அழற..?" என்றாள்.

"இப்போ போன் செய்தார் அக்கா.. நீங்க கட்டாயம் வரணும், நான் எதிர்பார்த்திட்டு இருப்பேன் என்று சொன்னார். ஆனால் நான் எப்படிக்கா...? எனும்போது மீண்டும் கயலின் கண்கள் குளமாகியது.

"கயல் நீ இன்னும் எந்த காலத்துல இருக்க..? என் வீட்டுக்காரர் இறந்து பதினைந்து வருஷம் ஆகுது. அவரு இருந்தால்தான் நான் வெளியே விசேஷத்திற்கு போகணும்னா, நான் எங்கேயும் போகமுடியாது. அந்த தம்பி நல்ல புள்ளையா இருக்கு. நம்மளையும் மதிச்சு கூப்பிட்டு இருக்கு. கோயிலுக்கு போயிட்டு, அப்படியே வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு கிளம்பி வா.. நீயும், நானும் போயிட்டு வரலாம்.." என்று முடித்தாள் கலைவாணி.

"அக்கா.." என இழுத்தவளை,

"இதோ பாரு நீ எதுக்கு யோசிக்கிறன்னு எனக்கு தெரியும். அது ஒண்ணும் உன் சொந்தக்காரங்க கல்யாணம் இல்லை. அந்த தம்பி அவ்வளவு தூரம் கூப்பிடுது. பக்கத்துல தானே இருக்கு..? கூப்பிட்டு, போகலைன்னா மரியாதையா இருக்காது... வா போய்ட்டு வருவோம்.. என்ன தேவி? நீயும் வாயேன், போய்ட்டு வருவோம் என தேவியையும் அழைக்க.

"இல்ல கலை.. அன்னைக்கு சொந்தக்காரங்க கல்யாணம் ரெண்டு இருக்கு. அதை முடிச்சிட்டு நான் கடைக்கு வரணும்" என்றாள் தேவி.

"வாணிக்கா... அண்ணி.." என மீண்டும் தயங்கினாள் கயல்.

"உங்க அண்ணி கிடக்கிறா.... நீ வா.. நாம போறோம், அவ்வளவுதான். இதுக்கு மேல அழுதுட்டு இருந்த, அவ்வளவுதான் சொல்லிட்டேன்.." என்று முடித்துவிட்டு போய் தன் பணியைத் தொடரலானாள் கலைவாணி.

அடுத்த இரண்டாவது நாளில் ஒரு வழியாய் வீட்டினரைச் சமாளித்துக் கிளம்பி விட்டாள் கயல். போகிற வழியில், கலைவாணியைக் கூட்டிக்கொண்டு, அவள் ஸ்கூட்டியிலேயே கிளம்பினார்கள். பல வருடங்கள் கழித்து ஒரு திருமணத்தில் பங்கேற்கப் போகிறாள். காலைக் காற்று முகத்தில் வீச, அதை ஆழ்ந்து சுவாசித்து, மனதைச் சமனப்படுத்த முயன்றாள்‌. ஓர் இனம் புரியாத தடுமாற்றத்துடனேயே மண்டப வாசலை அடைந்தாள்.

கலைவாணியின் பின்னே ஒருவித முயற்சியுடன் வரும் கயலைக் கண்டுவிட்ட வளவனுக்கு, கண்களில் தானாய் பிரகாசம் கூடிவிட எதிர்கொண்டு அவர்களை வரவேற்றான் வளவன். "வாங்க! வாங்க! என்னடா, திடீர்னு மண்டபமே பிரகாசமா ஜொலிக்குதுன்னு பார்த்தா நீங்க வந்து இருக்கீங்க" எனக் கூற அவன் வார்த்தைகளில் அவள் முகத்தில் சிரிப்புப் பூக்களை பூக்கச் செய்தது.

வாங்க சிஸ்டர்.. எங்க, இன்னொரு சிஸ்டர்? அவங்க வரலையா? என கேட்டவாறே கலைவாணியை வரவேற்கவும் அவன் தவறவில்லை.

அடர் நீல நிற காட்டன் புடவையில், தளர்வாய் பின்னலிட்டு, காலை வேளையில் பளிச்சென துடைத்து வைத்த குத்துவிளக்காய் இருந்தவளைக் கண்டு, மனம் குதூகலமாய் இருந்தது. அவள் வந்ததே பெரிய மகிழ்வாய் இருக்க, அவர்களை வரவேற்றுச் சென்று வரவேற்பில் நின்றிருந்த தன் சகோதரிகளிடம் கயலையும், கலைவாணியையும் அறிமுகப்படுத்தினான். அவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, அவள் கைப்பற்றி வரவேற்றனர். 'வாங்க' என அவர்களை மணப்பெண் அறையில் இருந்த தாயிடம் அழைத்துச் சென்று

"அம்மா இதுதான் கயல்விழி.." என அறிமுகப்படுத்த

"வாம்மா.." என அன்போடு வரவேற்றார் அந்த அன்னை.

"ரொம்ப சந்தோஷம்மா நீ வந்தது.. இவனும், தாமரையும் நீ வருவியா? மாட்டியோ? என்று புலம்பிட்டே இருந்தாங்க.. இப்பதான் என் மகன் முகம் பளிச்சுன்னு இருக்கு, பாரு என சிரிக்க

'அம்மா, சும்மா இரும்மா' என தாயை அடக்கி விட்டு அவன் புன்னகைக்க, அவளுக்குத்தான் சங்கடமாக இருந்தது.

அவள் கை பற்றி பேசியபடியே இருந்த வளவனின் அன்னை "இரும்மா.." என்றபடியே தாமரையிடம் நகர்ந்தவர், மீண்டும் கயலிடம் வந்து நின்று, அவள் நெற்றியில் ஒரு ஸ்டிக்கர் பொட்டை வைத்து விட்டு "இப்போ எவ்வளவு அழகா லட்சணமா இருக்கு...?" என்றபடியே அவள் முகத்தைப் பற்றி நெற்றி முறித்தார்.

அவரின் செய்கையில் கயல் அதிர்ந்து நிற்க, வளவனுக்கோ மகிழ்ச்சி பொங்கியது.

தன்னைச் சமாளிக்க இயலாமல், கயல் தடுமாற்றத்தில் கலைவாணியின் கையைப் பிடித்துக் கொள்ள, அவளின் நடுக்கத்தை அப்பட்டமாய் உணர்ந்தாள் கலைவாணி.
ஆதரவாய் அவள் கரத்தை தட்டிக் கொடுத்தவர், மனதுக்குள் நிறைவாய் உணர்ந்தாள். இறைவா! இனியாவது இந்த பெண்ணிற்கு நல்லதாய் விடியட்டுமே என்ற வேண்டுதல் அவருக்கு..

கண்கள் குளம் கட்ட, அடக்க மாட்டாமல் அவள் தடுமாற, அவளின் உணர்வுகளை, அவளது முகம் அப்பட்டமாய் காட்ட, அதை கண்ட வளவனுக்கோ 'என்னவாயிற்று இவளுக்கு..?' என்று எண்ணும் முன் அவனின் தாயின் குரல் வந்தது, "என்னம்மா? என்ன ஆச்சு?"
அந்த சமயம், பெண்ணைக் கூட்டி வரச் சொன்னாங்க என உறவுப் பெண்கள் உள்ளே வர, பார்லர் பெண்ணோ, 'ஒரு அஞ்சு நிமிடம் ஆகுங்க' என்று சொல்ல, வந்தவர்கள் சென்று விட்டனர்.

"வளவா, நீ முன்னே போடா.. மணவறையில் வேண்டியதைப் பார்" என வளவனை அவன் தாய் செந்திலகம் அனுப்பி வைத்தார்.

"அம்மா கயல், தாமரையை மணவறை கூட்டிட்டுப் போம்மா" என்று அவரிடம் பொறுப்பை செந்திலகம் ஒப்படைக்க, அவள் மேலும் அதிர்ந்து போய் கலைவாணியை நோக்கினாள். அவருக்குமே, என்ன செய்வது என்றே தோன்றவில்லை.

கயலில் அதிர்ந்த தோற்றத்தை கண்டவர், "என்னம்மா.. என்ன ஆச்சு? அவளுக்கு முறையா அழைச்சிட்டு போக சொந்தம் என்று யாரும் இப்போ இங்க இல்லம்மா.. அக்கா அங்க மூணு பேரும் வரவேற்புல இருக்காங்க.. இவளோட அண்ணி யாரோ மூன்றாவது வீட்டு கல்யாணத்தில் உட்கார்ந்திருக்கிற மாதிரி இருக்காங்க... நீ உறவில்லாமல் போனா என்ன? ஒரு தோழியா அவள அழைச்சிட்டு போ.." என்றார்.

உதடு நடுங்க, பல்லைக் கடித்து, கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டவள், அவளையும் மீறி கண்ணில் இருந்து ஒரு மழைத்துளி விழ பதறிப் போனார் செந்திலகம்.

"என்னம்மா கயல்?" என்று பதறியவரிடம், உடல் நடுங்க, உள்ளம் குமுற, நா தழுதழுக்க, "நான் ஒரு விதவைம்மா" கூறிவிட்டு தலை குனிந்து நின்றாள் கயல்.



தொடரும்....
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
66
Reaction score
66
Points
18
அத்தியாயம் 5

கயல்விழியால் இன்னும் நம்பவே முடியவில்லை. மனம் முழுக்க மகிழ்ச்சியால் நிரம்பிக் கிடந்தது. இரண்டு நாட்களாய் கலைவாணியிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள்.

"அவங்களுக்குப் புரியும் கயல்.. ஏன்னா, அவங்களும் நம்மைப் போலத்தான். கணவனைப் பறிகொடுத்துவிட்டு அஞ்சு பிள்ளைகளை வளர்த்தவங்க தானே? அந்த கஷ்டம் அவங்களுக்குத் தெரியாதா என்ன..? இப்போ, இந்தக்காலத்திலேயே இப்படின்னா, அவங்களோட காலத்துல அவங்க எத்தனை துன்பத்தை அனுபவித்திருப்பாங்க? யோசிச்சுப் பாரு.. ஒரு பொண்ணோட கஷ்டம் ஒரு பொண்ணுக்குத்தான் புரியும். அதுவும் அந்தக் கஷ்டத்தை அனுபவிக்கிற பொண்ணுக்கு நல்லாவே புரியும். அதனால்தான், தாமரைய நீதான் மேடைக்கு கூட்டிட்டுப் போகணும்னு அவங்க உன்னைக் கட்டாயப்படுத்தி அனுப்பினாங்க‌.. நீ மனசார வாழ்த்தினா என் பொண்ணு ஆயுசுக்கும் நல்லா இருப்பான்னு அவங்க சொன்னதும் அப்படித்தான்.." என பெருமிதமாய் நினைவு கூர்ந்தார் கலைவாணி.

மனதுக்குள் ஆயிரம் வன்மத்தை வெச்சுக்கிட்டு முகத்தில் புன்னகையோடு ஒருவரை நாம வெறுமனே வாழ்த்தும்போது அந்த வாழ்த்து பலிக்குமா என்ன..? ஆனால், நாம் எங்கோ இருந்தாலும், ஒருவரை மனதார வாழ்த்தினால் அதை விட பெரிய வாழ்த்து எதுவுமே இருக்க முடியாது.

ஆம்.. அன்று வளவனின் தாய் தன் மகளை கயல்விழி மட்டுமே மேடைக்கு அழைத்து வர வேண்டும் என மிகவும் கண்டிப்பாய்க் கூறிவிட்டார். "உன்ன விட என் பொண்ண வாழ்த்துகிற தகுதி யாருக்கும் இல்லம்மா.. நீ மனசார வாழ்த்துனா என் பொண்ண ஆயுசுக்கும் நல்லா இருப்பா.." என்று கூறியதோடு நின்றுவிடாது தாமரையின் கை பற்றி அவள் கரங்களில் ஒப்படைத்தவர் "கூட்டிட்டு போ.." என்று அவளை மறு வார்த்தை பேச விடாமல் மணவறைக்கு அனுப்பினார். அத்தோடு நின்றுவிடவில்லை அவர்.. வளவனை அழைத்து திருமணம் முடியும் வரை கயலுடனேயே இருக்க வேண்டும்.. வேறு எங்கும் போக கூடாது என்றும் உத்தரவிட்டு விட்டார்.

அந்த தாயின் வார்த்தைகளைத் தட்ட முடியாமல் தாமரையை அழைத்துச்சென்று மணவறையில் நிறுத்தியவள், மணவறையை விட்டு இறங்க நினைக்க, அவள் நகர இயலாமல், அவள் அருகில் வந்து நின்று கொண்டான் வளவன். அவளை எங்கும் நகர விடாது, அவளுக்கு ஏதாவது ஒரு வேலையைக் கொடுத்து, அவளை அருகிலேயே இருத்திக் கொண்டான். மணப்பெண்ணின் கழுத்தில் மாங்கல்ய நாண் பூட்டி முடித்து, சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடியும் வரை அவளை நகர விடவில்லை வளவன்.

திருமணம் முடிந்து, விருந்துண்டு விட்டு, நன்றிப்பெருக்கோடு செந்திலகத்தின் காலில் விழுந்து வணங்கி விட்டு எழுந்தவளை, ஒரு நிமிஷம் இரும்மா என்றவர் தாம்பூலப்பையோடு, ஒரு புடவையும், மஞ்சள் குங்குமம் வைத்து ஆசீர்வதித்து அவளிடம் கொடுத்தார்.

"ம்மா.." என்று மீண்டும் குரல் உடைய தழுதழுத்தவளை "சந்தோசமா போயிட்டு வா.. இன்னொரு நாள் சாவகாசமா பேசுவோம்.." என்று வழியனுப்பி வைக்கும் முன் இன்னொன்றையும் கூறினார்.

"இன்றைக்கு உன் நெத்தியில வச்ச இந்த பொட்டு, இனி எப்பவும் இருக்கணும்மா.. பொண்ணுங்க புருஷன் கட்டிகிட்டதுக்கு அப்புறம் பொட்டு வைக்கிறது இல்லம்மா.. பிறந்ததிலிருந்தே பொட்டு வச்சு, பூ வச்சு, வளையல் போட்டு, வண்ண வண்ண உடை அணிந்து அழகு பார்க்கிறாங்க அவளைப் பெத்தவங்க... இடையில், அவளைக் கல்யாணம் செய்தவன் இறந்துட்டான்னா பொட்டு வைக்கக்கூடாது, பூ வைக்கக்கூடாது, கலர்கலரா புடவை கட்டக் கூடாது என அவளுக்குக் கட்டுப்பாடு விதிக்குது இந்த சமூகம். இதெல்லாம் நான் அன்னைக்கே பேசி இருக்கணும்.. என்னால பேச முடியல.. ஆனா இனியும் அப்படி இருக்கனும்னு தேவை இல்லையே..? இனி உன் நெத்தியில எப்பவும் இந்த பொட்டு இருக்கணும், சரியா..?" என அவளை உச்சி முகர்ந்து வழியனுப்பி வைத்தார்.

தன் தாய் இருந்திருந்தால் கூட இப்படி செய்திருப்பாரா என்பது கயலுக்கு சந்தேகமே. யாரென்றே தெரியாத ஒருத்தியை, அவள் விதவை என்று தெரிந்தும், தன் மகளை மணவறைக்கு அழைத்து சென்று மங்கள காரியம் முடியும் வரை அருகிலேயே நிற்க வைக்க, எந்த தாய்க்குத்தான் மனம் துணியும்..? ஆனால் இவர் செய்திருக்கிறாரே? என்று திருமணம் முடிந்து வந்த இரண்டு நாட்களும் அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள் கயல்.

வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் வரை அங்கிருக்கும் நிலைக்கண்ணாடியில் திலகமிட்ட தன் முகத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டாள். எத்தனை வருடங்கள் இருக்கும், தன் முகத்தை இப்படிப் பார்த்து? வீட்டில் இருக்கும் அண்ணி கூட இதுவரை கூறியதில்லையே..? உடன் பிறந்தவள் தானே? ஆனால், அவள் அண்ணனுக்குக் கூட ஏன் தோன்றாமல் போயிற்று..? தன்னைப் பெற்றவருக்குக் கூட இந்த எண்ணம் வரவில்லையே..? அப்படியே நினைத்திருந்தால் கூட கூறியிருப்பாரா என்பது சந்தேகமே.

பெண்ணின் திருமண வயது பதினெட்டு என்ற சட்டத்தை மதித்தோ என்னவோ, கயலின் தந்தை அவளின் பதினெட்டாவது வயது பூர்த்தியாகும் முன்னரே திருமணத்தை நிச்சயித்து விட்டார். சட்டப்படி அவளது வயது பூர்த்தி ஆனதும் திருமணத்தை நடத்தி முடித்தார். தகுந்த வயதில் திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. ஆனால் மணமகன் அவளுக்குத் தகுந்தவனா, நல்லவனா? என்பதைக் கவனிக்கத் தவறி விட்டார் அவர். வேலை இருக்கிறதா..? ஆள் தோற்றம் எப்படி இருக்கிறது? என்று மட்டுமே பார்த்தார். வேலை செய்கிறான் கடைசி வரை அவளைக் காப்பாற்றுவான்; ஆளும் தன் பெண்ணிற்கு ஏற்ற ஜோடி என சராசரி பெற்றோராய், பொது புத்தியுடன் யோசித்தாரே ஒழிய, அவன் நல்லவனா, தீய பழக்கங்கள் ஏதும் உண்டா..? அவன் குணநலன்கள் என்ன என மருந்துக்குக் கூட விசாரிக்காமல், திருமணத்தை நடத்தி தன் கடமையை முடித்தார்.

கயலை மணந்த சங்கருக்கு பெண் என்பவள் கணவனுக்கு சமைத்துப் போட்டு, வேண்டிய நேரத்தில் பணிவிடை செய்யவும், அழைக்கும் நேரத்தில் படுக்கை விரித்து, பிள்ளை பெற்றுக் கொடுக்கும் ஒரு இயந்திரமாக மட்டுமே எண்ணத் தெரிந்தவன். இரண்டே வருடங்களில் புத்தம்புது குறிஞ்சி மலராய் இருந்த கயலைச் சிதைத்து சின்னாபின்னமாக்கி இருந்தான். வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது அவள் பட்ட துன்பங்களை.. பகலில் பைத்தியக்காரனாகவும், இரவில் காமுகனாகவும் மாறி, மாறி அவளைச் சித்திரவதை செய்திருந்தான்.

ஏற்கனவே, இவனால் துன்பத்தில் இருந்த அவனின் குடும்பம், திருமணம் ஆனவுடன் அவனுக்கென்று ஒருத்தி வந்துவிட்டாள்; இனி அவள் பாடேன்று அவனைக் கை கழுவி விட, புகுந்த வீட்டின் ஆதரவுமின்றி, பிறந்த வீட்டிலும் கூற முடியாமல் தவித்து, மருகி கந்தலாகிப் போனாள் கயல்.

அடைகாத்து வளர்க்கப்பட்ட கூண்டுப் பறவை கயல். என்னதான் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து இருந்தாலும், அவள் வளர்க்கப்பட்ட விதமும், 'குடும்பம் என்றால் நாலும் இருக்கும், அனுசரித்து போ' என்ற தந்தையின் வார்த்தையும், இயல்பிலேயே சாதுவான பொண்ணான கயலுக்கு கணவனை எதிர்க்கத் துணிவில்லாமல், விதித்த விதி இதுதான் என்று கண்ணீரிலேயே தன் வாழ்க்கையைக் கரைக்கலானாள்.

உலகத்தில் உள்ள அத்தனை தீய பழக்கங்களும் அவனிடம் இருந்தது. விதியோ அல்லது கயலின் துன்பம் பார்த்து தெய்வம் விட்ட வழியோ, ஒருநாள் குடிபோதையில் வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகிப் போனான் அவன்.

இரண்டு வருட திருமண வாழ்வில், ஏழு மாத கர்ப்பத்துடன், விதவையாகிப் போனாள் கயல். கணவன் போய் விட்டானே என கண்ணீர் வரவில்லை அவளுக்கு. இருண்ட அறைக்குள், கம்பிச் சிறைகளுக்கு இடையே அடைத்து வைக்கப்பட்ட பறவையாய்த் தவித்து, குமுறி, குமைந்து, இரணத்தோடு இருந்தவளுக்கு திறந்து விடப்பட்ட சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து வரும் பறவையாய் நிம்மதிப் பெருமூச்சே வந்தது.

இனி, இவனுக்கு பயப்படத் தேவையில்லை. எந்த நேரத்தில் என்ன சொல்வானோ எதைக்கொண்டு அடிப்பானோ என அஞ்சத் தேவையில்லை. ரத்தவெறி பிடித்த மிருகமாய், அவன் குத்திக் கிழித்து, கடித்து, காயப்படுத்தி தன்னை பசியாறுகையில் அதை பொறுத்து, சகித்துப் போக வேண்டிய அவசியமில்லை. உண்ணும்போதும், உறங்கும்போதும் அடுத்து என்ன நேருமோ என்று அச்சப்பட்டு கொண்டு இனி வாழத் தேவை இல்லை. இந்த வாழ்க்கையே தேவையில்லை என்றுதான் அவளுக்கு தோன்றியது.

வயிற்றில் பிள்ளை மட்டும் இல்லையெனில் அவள் வேறு முடிவை நாடி இருப்பாள். தன் சின்னஞ்சிறு கைகளை அசைத்து தான் இருக்கிறேன் என்று உதைக்க தொடங்கியிருந்த தன் மகவை எண்ணி ஜீவித்திருந்தாள். வயிற்றில் கை வைத்து பார்த்து விட்டு, தன் சிசுவிற்காய் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தோடு உயிரை மட்டும் ஏந்தியபடி தகப்பன் வீடு வந்து சேர்ந்தாள்.

இடிந்து போனார் அந்த தகப்பன். தன் மகளின் வாழ்க்கையை எண்ணி கண்ணீர் விட்டார். தாமதிக்கப்படும் நீதியும் குற்றத்திற்கு சமமே. அப்படிப்பட்ட குற்றத்தைத்தான் அவள் தந்தையும், தமையனும் செய்திருந்தனர். இத்தனை நாட்களாய் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத தமையன் தன் தங்கையின் வாழ்க்கை இப்படி ஆகிப் போனதை எண்ணி வருந்தினான்.

திருமணம் என்ற ஒன்றே பெண்ணுக்கு பாதுகாப்பு என்று எண்ணியிருந்த அவளின் தந்தைக்கு, வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு தன் மகள் வீட்டோடு வந்த அன்றுதான் புரிந்தது திருமண பந்தம் மட்டும் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை என்பது. கயலின் எதிர்கால வாழ்க்கைக்காய்
தன் சொத்துக்களில் சரிபாதி தன் மகளுக்கு என்று அன்றே அவள் பெயரில் எழுதிவிட்டார் அவர்.

திருமணமாகிப் போய் விட்ட நாத்தனார், ஒரே மகன் சொத்துக்கள் முழுவதும் தன் கணவனுக்கே என்று இருந்த நிலைமையில், கணவனை இழந்து வந்த நாத்தனார் பாதி சொத்திற்கு பங்குக்கு வந்து விட்டாளே? என்ற ஆத்திரமும், கோபமுமாய் கயலின் அண்ணி வேணிக்கு அவள் மேல் வன்மமாய் மாறியது.

கயல் வந்த சில நாட்களிலேயே, அவள் தன் முகத்தை காட்டத் தொடங்க, அதுவரை அவள் பட்ட துன்பம் போதும் என்று உணர்ந்த தந்தை, மகனிடம் விசயத்தை உணர்த்தி, வீட்டின் மேல்பகுதியில் அவர்களைத் தனிக்குடித்தனம் வைத்தார்.

சிறு வயதிலிருந்தே தான் பார்த்து வளர்ந்த குழந்தை, இன்று இக்கதியில் வந்திருக்கிறதே என்று கலைவாணிக்கு மிகவும் வருத்தம். அண்டை வீட்டில் வசித்தவள் தாயாய்த் தாங்கினாள். பிரசவத்தின்போது உடனிருந்து கவனித்துக் கொண்டாள். செய்த தவறிற்கு எல்லாம் கைமாறு செய்வது போல் கயலையும், அவள் குழந்தையையும் தன் பொறுப்பு ஆக்கிக்கொண்டார் கயலின் தந்தை. பிறந்த பெண் குழந்தையை கீழே விடாமல் பத்திரமாய் பொத்திப் பொத்தி பாதுகாத்தார். தன் பெண்ணிற்கு கிடைக்காத, தான் தராத அத்தனை பாசங்களையும் கொட்டிக் கொடுத்து பேத்தியை வளர்க்க ஆரம்பித்தார்.

ஆனாலும், அவ்வப்போது அண்ணியின் சுடு சொற்களை அவள் தாங்கத்தான் வேண்டியிருந்தது. குழந்தை ஓரளவுக்கு வளர ஆரம்பித்து நடக்கத் தொடங்கிய பின் கலைவாணிதான் மீண்டும் அவளைத் தையல் தொழிலின் மீது கவனத்தைத் திருப்ப வைத்தார். 'நீ கத்துக்கிட்டது போதாது கயல்.. இன்னும் நல்லா கத்துக்கோ.. உனக்குன்னு ஒரு தொழில் வேணும்' என எடுத்துரைத்தார்.

ஏற்கனவே குற்ற உணர்வில் இருந்த கயலின் தந்தை அவளை பேஷன் டிசைனிங் படிப்பில் சேர்த்துவிட, அவளும் முனைப்பாய் கற்றுத் தேர்ந்தாள். என்னதான் அவள் கல்லூரி சென்று படித்து வந்தாலும் கூட அவளின் அண்ணி வேணியும், உறவு கூட்டங்களும், சமூகமும் அவளை விதவை எனும் சொல்‌ அம்பு கொண்டு தைக்கத்தான் செய்தனர்.

எத்தனை மெத்தப்படித்து சமூக மாற்றங்கள் நேர்ந்து இருப்பினும், சமூகத்தில் இன்னும் வக்கிர மனம் படைத்த மனிதர்கள் வாழத்தான் செய்கிறார்கள்.

நூறு பெரியார் அல்ல; ஆயிரம் பெரியார் மட்டுமல்ல; இன்னும் எவர் வந்தாலும் திருந்தாத, திருத்த முடியாத சமூகம் இது. ஆனாலும் சில பல நல்லுள்ளங்களினால் மட்டுமே இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

தொடரும்.....
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
66
Reaction score
66
Points
18
அத்தியாயம் - 6

வளவன், தாமரையின் திருமணத்திற்கு கயல் வரும் முன்னரே தன் வீட்டில் தன் நிலையை அறிவித்திருந்தான். தாமரை கயலை ஏற்கனவே பார்த்து இருந்தபடியால் தன் அண்ணனுக்கு ஏற்ற ஜோடிதான் என தன் சகோதரிகளிடம் கூறினாள். அவன் தாய் செந்திலகமோ, இத்தனை நாட்கள் திருமணப்பேச்சு எடுக்காத தன் மகன், தனக்கு ஒரு பெண்ணை பிடித்து இருப்பதாக கூறவே மகிழ்ச்சியோடு அவளுக்காய்க் காத்திருந்தார்.

திருமணத்தில் அவளைப் பார்த்ததுமே அனைவருக்கும் அவளைப் பிடித்துப் போனது ஆனால் செந்திலகம் சற்றும் எதிர்பாராதது, கயல் கணவனை இழந்த கைம்பெண் என்பது. அவர் தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்து வளவனை அழைத்துப் பேசினார்.

தான் விரும்பும் பெண் என அறிமுகப்படுத்தியதாலேயே தாமரையை மணவறைக்கு அழைத்து செல்லும் பொறுப்பை கயலுக்குத் தந்து, தன்னையும் உடனிருக்கச் செய்தார் என்று வளவன் எண்ணியிருந்தான். ஆனால் அது அப்படி அல்ல என்று செந்திலகம் அவனுக்கு கூறிய செய்தி உரைத்தது.

"வளவா! விஷயம் தெரியாம நீ அந்த பொண்ணு பார்த்து புடிச்சிருக்குன்னு சொன்னது எல்லாம் சரி. ஆனா இப்போ அவளோட நிலை உனக்குத் தெரியும். நல்லா அவளைப்பற்றி தெரிஞ்சுக்கிட்டு, யோசிச்சு முடிவெடு. இது விளையாட்டு இல்லை; வாழ்க்கை" என்றார் அவர்.

அவன் தாய் கூறிய செய்தி வளவனுக்கு அதிர்ச்சியே..! கயல் கைம்பெண்ணா..? இத்தனை சிறுவயதில் அவனால் அதை யோசித்துக் கூட பார்க்க இயலவில்லை. எத்தனை துயரங்களை அனுபவித்து இருப்பாள் அப்பெண்..? தன் தாயின் துன்பங்களைக் கண் கூடவே கண்டவன் தானே? அதுவும் தாங்கள் வளர்ந்து நிலையில் என்ற போதே தன் தாயின் துயரங்கள் அத்தனை கடினம் ஆயிற்றே? இந்த இளம் வயதில் இவள் இதை எப்படி தாங்கினாள்? என்று மனதினுள் மருகினான் வளவன். அவனின் அதிர்ச்சி கலந்த அமைதியில் செந்திலகம் மீண்டும் விழித்தார்.

"வளவா நீ எதைச் செய்தாலும் நன்றாக யோசித்து செய்" என மீண்டும் கூறினார்.

"ஏம்மா? அவ கணவனை இழந்தவளாயிருந்தா அவளை நான் திருமணம் செய்து கொள்ளக் கூடாதா..?"

'எனக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது அவளை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன் பாருங்கம்மா' என்று மட்டும்தான் வளவன் கூறியிருந்தான். ஆனால் இப்பொழுது திருமணம் செய்யக்கூடாதா என்று கேள்வி எழுப்புகிறான். இதிலிருந்தே, அவன் மனம் தெளிவாய்ப் புரிந்து போயிற்று அவருக்கு. தன் மகனை எண்ணி கர்வம் கொண்டார் செந்திலகம்.

"வளவா, உன்னை நெனச்சு எனக்கு பெருமையா இருக்குடா.. கூட பொறந்த சகோதரிகளை கரையேற்றினதும் இல்லாம, அந்த பொண்ணு விதவைன்னு தெரிஞ்சும் அவளக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ற, பாத்தியா? நான் வளர்த்த வளர்ப்பு வீண் போகலடா கண்ணா. அவ மேல பரிதாபப்பட்டோ இல்லை வாழ்க்கை கொடுக்கிறோம்னோ நெனச்சு நீ இந்த முடிவை எடுக்காதடா.. உண்மையிலேயே அவள் யாராக இருந்தாலும், எப்படி இருந்தாலும், அவளைத்தான் திருமணம் செய்து கொள்வேன்னு நீ உறுதியாக இருந்தால் மட்டும் இந்த முடிவை எடு. ஏற்கனவே உடைஞ்ச மனசு அது. மறுபடியும் அதை நீ உடைச்சிடக்கூடாது. அவ கிட்ட பேசு.. அவளுக்குப் பிடிச்சிருந்தா, அதுக்குப் பிறகு இரண்டு பேரும் சேர்ந்து தெளிவான ஒரு முடிவு எடுங்க.. உன் முடிவு எதுவாக இருந்தாலும் உனக்கு நான் ஆதரவாய் இருப்பேன்..." என்றவர்,

"அந்த பொண்ண நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா அதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு எதுவுமே இருக்க முடியாது வளவா..!" மனம் நெகிழ்ந்து போய் சொன்னார் செந்திலகம்.

"கணவனை இழந்த பொண்ணுக்கு ஆறுதல் சொல்றேன், வாழ்க்கை தருகிறேன்னு அவளை நன்றிக்கடன்பட்டு வாழ்க்கையை ஆரம்பிக்காம, உண்மையான அன்போடும், காதலோடும் மட்டுமே வாழ்க்கையை துவங்கினா அதைவிட மகிழ்ச்சி வேற எதுவும் இல்லை டா.." என்று முடித்தார்.

எத்தனை எளிதாய் கூறிவிட்டார் அம்மா..? யாருக்கும், யாரும் வாழ்க்கையைக் கொடுத்துவிட முடியாது. மகிழ்வும், அன்பும், காதலும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வது. நிச்சயமாய் என் மொத்த அன்பையும், காதலையும் அவளுக்காய் கொட்டிக் கொட்டி கொடுப்பேன் என உறுதியாய் முடிவெடுத்தான். தன் இந்த முடிவிற்காய் எவ்வளவு போராட வேண்டியிருக்கும் என்பதை அறியாமலே.

மறுவீடு அழைப்பு என திருமண வேலைகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு மீண்டும் அவன் பணிக்கு வர ஒரு வாரத்திற்கு மேல் ஆகியது. இந்த ஒரு வாரத்தில் வளவனுக்கு கயல் இல்லாமல் தான் இல்லை என்பதை முற்றிலுமாய் உணர்ந்தான். எங்கு காணினும் அவள் பிம்பமாய் இருக்க கண்டான். எப்போது அவளைக் காண்போம் என்று தவித்துப் போனான். அவளுக்கும் தன்னைப் போன்று ஆவல் இருக்குமா..? அவளைக் காயப்படுத்தாமல் தன் காதலை சொல்ல வேண்டும். முடியுமா தன்னால்..? அவள் தன்னை ஏற்பாளா? என்ற குழப்பங்கள் அவனை வாட்டின.

ஆனால், இந்த ஒரு வாரத்தில் கயலிடம் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. ஆனால், செந்திலகம் வைத்த திலகத்தை அவள் எடுக்கவில்லை.

அன்று அவளைக் கண்ட தந்தை
கண்கலங்கி ரொம்ப சந்தோஷம்மா.. உன்னோட இந்த மாற்றம் நீடிக்கணும்மா.. என்றது அவளுக்கு இன்னும் மகிழ்வை கொடுக்க, அன்று முதல் அவள் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதை வழக்கமாக்கிக் கொண்டாள்.

பத்தொன்பது வயதில் திருமணம் முடிந்து, இருபத்தோரு வயதில் விதவையான கயலின் மகள் ஜீவிதாவிற்கு இப்பொழுது ஏழு வயதாகிறது. இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். சுட்டியான குழந்தை. அம்மாவிடம் அழகா இருக்கேம்மா... லவ் யூ எனச் சொல்லி முத்தமிட்டு ஓடினாள்.

அவள் அம்மாவை விட தாத்தாவிடமே அதிகமாய் இருப்பாள். உண்ணுவதும், உறங்குவதும், பள்ளிக்குப் போவதும், வருவதும், எதற்கும் அவள் தாத்தாவே வேண்டும் அவளுக்கு. தன் மகளுக்குத் தராத பாசத்தையும் சேர்த்து, பேத்திக்குக் கொடுத்து வளர்த்தார் பிரகாசம்.

அவளின் புதிய மாற்றத்தைக் கண்ட வேணி ஒரு முகத்திருப்பலுடன் புருவமுயர்த்தி கேள்வியாய் அவளைப் பார்த்துவிட்டு சென்றாள். ஆனால் இந்த புதிய மாற்றமே கயலிற்குள் ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அன்று முதல் வளவனின் வரவிற்காய் அவள் காத்திருந்தாள். ஏனோ அவனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவளுள் பரவுவதை உணர்ந்தாள் அவள். அடிக்கடி தன்னை நிலைக்கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்.

அன்று அவள் கடை திறக்கும்போது ஒரு வாரம் கழித்து வளவனின் பைக்கைக் கண்டாள். கண்கள் அவனைத் தேடின. அவனைக் காணவில்லை. அவள் கடையைத் திறந்து உள்ளே செல்லும் வரை அவனைத் தேடினாள். சில நிமிடங்கள் வாயிலில் நின்று பார்க்க, அவன் தென்படவில்லை. இந்த பைக் அவனுடையது தானே..? பின் எங்கே சென்றான் எனும் யோசனையுடனே உள்ளே சென்று தன் வேலையைத் துவங்கினாள். தன் போக்கில் வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் அவள் விழிகள் என்னவோ அவனையே தேடிக் கொண்டிருந்தன.

அன்று கலைவாணியும், தேவியும் தாமதமாய் வருவதாய் ஏற்கனவே தெரிவித்திருந்தார்கள். இங்கோ, அவளுக்கு வேலையே ஓடவில்லை. விழிகள் எதிர்திசையையே பார்த்திருக்க, செய்ய வேண்டிய வேலைகளில் எதிலும் கவனம் செலுத்தாமல் நகத்தைக் கடித்தபடி நிலைகொள்ளாமல் அவள் அமர்ந்திருந்தாள்.

அவளின் பதட்டத்தை எதிர்புறத்தில் இருந்து கவனித்து தனக்குள் சிரித்தவன், அப்போ உனக்கும் என்னை பார்க்கனும்னு தோணிருக்கு... உன் மனசு என்னைத் தேடுதான்னு பார்க்கத்தானே இவ்வளவு நேரம் இங்கே உன் கண்ணுக்கு மறைவா இருக்கேன்..? இப்போ உன் மனசு புரிஞ்சது தங்கம். இதோ வர்றேன் என அவளை மேலும் காக்க வைக்காது வந்து சேர்ந்தான் வளவன்.

அவனையே தேடிக்கொண்டிருந்தவள், எதிர்ப்புறத்தில் இருந்து புன்னகைத்தபடி அவன் வருவதைக் கண்டதும் பரபரப்பானாள். சட்டென வேலை செய்வது போல் அவள் பாவனை செய்ய, அவனுக்குள் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டான்.

"என்னங்க கயல்? ரொம்ப வேலை போல... ஆள் உள்ள வர்றது கூடத் தெரியாம அவ்ளோ பிசியா வேலை செஞ்சுட்டு இருக்கீங்களா?" என்றான் புன்னகைத்தவாறே.

மனதில் பூத்த மகிழ்ச்சியை மறைக்கவும் இயலாமல், வெளிப்படுத்தவும் இயலாமல், 'இல்லைங்க இப்பதான் வந்தேன்' என்று உளறிக் கொட்டினாள்.

"நீங்க வந்து ஒரு மணி நேரம் ஆச்சுன்னு கேள்விப்பட்டேன். நீங்க இப்பதான் வந்தேன் என்று சொல்றீங்க?" என மேலும் அவளை வம்பிழுத்தான்.

அப்போ நான் வந்தது தெரிஞ்சிக்கிட்டுதான் கேள்வி கேட்கிறான் என அவள் உள்மனது சுணக்கம் கொண்டது.

சிரித்தபடியே கையிலிருந்த பையை அவளிடம் நீட்டி, அம்மா உங்களுக்கு பலகாரம் கொடுத்து விட்டார்கள் என்றான்.

அதை வாங்கிக் கொண்டவள் என்ன பேசுவதென்றே புரியாமல் உங்க தங்கை தாமரை நல்லா இருக்காங்களா? அம்மா எப்படி இருக்காங்க? அவன் வீட்டில் எல்லாரையும் நலம் விசாரித்தாள். எல்லாம் நல்லா இருக்காங்க.. அம்மா உங்களை ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு வரச் சொன்னாங்க.. எப்போ வர்றீங்க? என்றான் விளையாட்டாய்.

இவன் வீட்டிற்கு நான் எதற்கு? என்று உள்ளுக்குள் எண்ணியவாறு, 'நான் வீட்டுக்கா?' என்றாள்.

"ஏங்க அதிர்ச்சியாகறீங்க? நான் வீட்டுக்குத்தானே கூப்பிட்டேன்?"

இல்ல, அது வந்து.. நீங்க திடீர்னு கூப்பிடவும்...

அவளை உற்று நோக்கி, தன் ஆள்காட்டி விரலை தன் நெற்றிப் பொட்டில் வைத்து எடுத்து, ஆள்காட்டி விரலையும், பெரு விரலையும் சேர்த்து அழகாய் இருக்கு என சைகை செய்தான்.

பேச்சில்லாமல் சைகையால் அவன் குறிப்பிட்ட விதம் அவளுக்குள் வெட்கத்தை உண்டு செய்ய, செங்கொழுந்து ஆகிப் போனாள்.

அவளுக்கு இந்த உணர்வுகள் புதிது. இந்த அனுபவம் புதிது. அவளைப் பார்த்து அழகாய் இருக்கிறாய் என ஒரு ஆடவன் சொல்வதற்கு படும் இந்த வெட்கம் புதிது.

நேருக்கு நேராய் அவள் விழிகளை நோக்கி 'கயல்..' என அவன் அழைக்க,

வார்த்தைகள் தடுமாற "ம்.." என்ற ஒற்றைச் சொல்லை உதிர்த்தாள்.

"உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கயல்.. சுற்றி வளைத்துப் பேச நான் விரும்பல.. நீ என் கூடவே இருக்கணும்னு நினைக்கிறேன், வாழ்நாள் முழுமைக்கும்.. என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா? என்று நேருக்கு நேர் கேட்டான்.

அதிர்ந்து போனாள் கயல்.. அவனைக் கண்டதும் மகிழ்ந்தாள்தான்.. அவன் வரவை எதிர்பார்த்தாள்தான்.. அவனைக் காணவில்லையே என மனம் பரபரக்கத்தான் செய்தது.. ஆனால், திருமணம்..? என்னை மணம் செய்கிறானா? என் நிலை அறிவானா இவன்...? என் நிலை தெரிந்தும் என்னை மேல் ஈர்ப.பிருக்குமா..? இந்த சமூகம் ஏற்குமா...? என சில நிமிடங்களில் பல கேள்விகள் அவள் மனதைத் துளைத்தெடுத்தன.

அவள் முகத்தில் பலவித கலவையான உணர்வுகளைக் கண்டவன், கயல்.. உன்னைப் பற்றி அம்மா என்கிட்ட சொன்னாங்க.. பாஸ்ட் இஸ் பாஸ்ட்.. எனக்கு உன்னோட இறந்த காலம் தேவை இல்லை.. இப்போ நீ எப்படி இருக்கறியோ, அப்படியே வேணும். உன்னை உனக்காக மட்டுமே நான் விரும்புறேன். என்னை உனக்கு புடிச்சிருந்தா, உன் வீட்டில் வந்து முறையா பேசி திருமணம் செய்துக்கலாம். எனக்கு உன் சம்மதம் ரொம்ப முக்கியம். உன் மனசு வருத்தப்படற மாதிரி எப்பவும் நடந்துக்க மாட்டேன். உன்னை நான் மனசாரக் காதலிக்கிறேன். என்னை ஏற்றுக் கொள்வாயா கயல்? என அவள் கை பற்றினான்.

தொடரும்..
 
Top Bottom