Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

Migan unnudayadhu Yenna love 😈 ava mela yevvalavu nambikai 😈 gift items vachi avala thappa ninachiya 😈 neeran migan room ku poyi antha gift items ellam parthu athey pol gift items vangi irrukan...ippo neeran sucide drama panran...nice intresting ud sis ❤️
Thank you so much dear❤️
 

உயிர் துடிப்பாய் நீ!

அத்தியாயம் 28

வாழ்க்கையில் நாம் கொஞ்சம் கூட எதார்பாரதது தான் பெரும்பாலும் நடக்கும்.


காலச் சூழ்நிலைகள் எப்படிவேண்டுமானும் மாறும்..

அப்படித் தான் இன்று மிகனுக்கும், திகழொளிக்கும் சூழ்நிலைகள் பெரிய துன்பத்தையும், மாற்றத்தையும் கொடுத்தது.


மிகன் ருத்ர தாண்டவம் ஆடிச் சென்ற பின் திகழொளியின் பெற்றவர்கள் அவளிடம் பேசுவதையே அறவே நிறுத்திவிட்டார்கள்.


அதுவும் அவள் மீது வைத்திருந்த நம்பிக்கை சில்லு, சில்லாக உடைந்து போனதை அவர்களால் சிறிதும் தாங்க முடியவில்லை..


பெற்றவர்களின் காதுபடவே அக்கம் பக்கத்து வீட்டினரும் திகழொளியைப் பேசினார்கள்..


"இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியவில்லை.. எந்த புத்திற்குள் எந்த பாம்பு இருக்குதுன்னு யாருக்கு தெரியும்.. ஒண்ணுமே தெரியாத மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு இந்த திகழொளி என்ன வேலை செய்திருக்கா பாரு .."என்று சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி பேசி தீர்த்தனர்..



பெற்றவர்கள் வெளியில் தலைகாட்ட முடியாதபடி பேச்சுக்கள் நாளுக்கு நாள் கூடியது..



ஒவ்வொருவரிடமும் சென்று விளக்கம் கொடுக்கவா முடியும். அதுவும் ஆயிரம் தான் இருந்தாலும் அவர்கள் பேசுவது அவர்களின் மகளை..


இதை எல்லாம் கேட்டு மகள் ஏதாவது தவறான முடிவு எடுத்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்தனர்.


ஏற்கனவே நொந்து போய் இருந்தவர்களுக்கு
அக்கம் பக்கத்தினர் கேலிப்பார்வையையும், பேச்சையும் எதிர் கொள்ள முடியாமல் தங்கள் சொந்த வீட்டை ஒரே வாரத்தில் காலி செய்துவிட்டு வேறு ஏரியாவிற்கு வாடகை வீட்டிற்கு குடி போனார்கள்.


தன் சொந்த உழைப்பில் பலநாள் கனவாக ஆசை ஆசையாக கட்டிய வீட்டை மகளுக்காக சில மாதங்களில் வந்த விலைக்கு விற்றார் அறவாணன்.


திகழொளியோ நடைபிணமாக இருந்தாள்..உயிராக நேசித்தவனும் நம்பவில்லை..பெற்றவர்களும் நம்பவில்லை..இதை விட வேதனை என்ன இருக்கும்..


தனக்குள்ளேயே அழுது ,அழுது உருகினாள்.அமுதன் மட்டும் இல்லை என்றால் அவள் என்ன ஆகி இருப்பாளோ..?


அமுதன் மட்டுமே அவளை நம்பினான்! அவளுக்கு ஆறுதலாக இருந்தான். அவளை பழைய படி தேற்றப் போராடினான்.


திகழொளியோ, மிகனை வெறுக்கவும் முடியாமல் , மறக்கவும் முடியாமல் தவியாய் தவித்தாள்.அவள் மனதுடனேயே போராடினாள்.


காதல் கொண்ட மனது அப்போதும் அவனின் செயல்களுக்கு காரணம் தேடியது.அவன் பக்கம் நியாயத்தை தேடியது. அவளே அப்போது தான் மிகனை தான் எவ்வளவு விரும்பி இருக்கிறோம் என்று உணர்ந்து கொண்டாள்.


திகழொளி தன் நிலமையை நினைத்து அனுதினமும் நொந்து கொண்டாள்..

தன் தமக்கையின் நிலையை காணச் சகிக்காமல் அமுதன் , "அக்கா ப்ளீஸ் இப்படி மனசுக்குள்ளேயே போட்டு அழுத்தி உன் உடம்பைக் கெடுத்துக்காதே..உன் நேசத்திற்கு ஒரு துளி கூட பொருத்தமில்லாத ஆளுக்காக நீ ‌ஏன் உன்னை இப்படி வருத்திக் கொள்கிறாய்.." என்று கடிந்து கொண்டான்.


"அம்மு என்னால் முடியலையே ! நான் செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறேன்..அப்பா, அம்மாவும் எங்கூட பேசறது இல்லை..அவங்க நம்பிக்கையை நான் உடைத்துட்டேன்னு குற்ற உணர்வு என்னை கொள்ளாமல் கொள்ளுதுடா.." என்று கூறியபடி தம்பியின் தோள்களில் சாய்ந்து கதறியவளிடம்..


"அக்கா யார் நம்பினாளும் ! நம்பாட்டீயும்! நான் நம்பறேன்..என் அக்கா பத்தரை மாத்து தங்கம்.அவளால் கனவில் கூட அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்க முடியாது.. நான் இருக்கேன் உனக்கு.." என்று தமக்கைக்கு பெரியவனாக அவன் ஆறுதல் சொன்னான்..


அறவாணனால், மகளை மன்னிக்கவே முடியவில்லை ! எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், மகள் இப்படி ஒரு அவப்பெயரை சம்பாதித்து விட்டாளே..? என்று அனுதினமும் நினைத்து நினைத்து தன் உடல்நிலையையும் கெடுத்துக் கொண்டார்.


மனைவியின் சொல்லைக் கேட்டு அவசர அவசரமாக மகளுக்கு திருமணத்திற்கு வரன் பார்த்தார்.


பெண்ணின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்று பெற்றவராய் யோசித்து வரன் பார்க்க ஆரம்பித்தார்கள்..


ஆனால், திகழொளி அதற்கு சம்மதிக்கவே இல்லை..தாய் தந்தையின் எதிர்பார்ப்பை சமாளித்தபடி "அப்பா சத்தியமா என்னால் அவரைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது.." என்று திருமணத்தை மறுத்தாள்..


பொன்னியோ, மகள் சொன்னதைக் கேட்டு கோபத்தில் கண்முன் தெரியாமல் அடித்துக் கூட பார்த்தார்.. ஆனால், அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டு அவள் நிலையில் உறுதியாக இருந்தாள்.



"ம்மா அவர் எப்படியோ ..? ஆனால், நான் அவரை உண்மையாகத் தான் நேசித்தேன். என்னால் அவரைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்துக்க முடியாது. என்றாவது அவர் என்னைப் புரிந்து கொள்வார்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!எனக்கு தெரியும் அவரும் என்னை உண்மையாகத் தான் நேசித்தார் ! ஆனால், சூழ்நிலை அவரை இன்று என்னை இப்படி பேச வைத்துவிட்டது ! என் நேசம் உண்மையா இருந்தால்? அவர் என்னை ஒரு நாள் புரிந்து கொண்டு வருவார்.. !அதுவரை நான் அவருக்காக காத்திருப்பேன்.." என்று அதே பிடியில் நின்ற மகள் மீது பெற்றவர்களுக்கு வெறுப்பு தான் மிஞ்சியது.



அமுதனோ, தமக்கையிடம் " அக்கா உனக்கு என்ன பைத்தியமா? அந்த ஆளை இன்னுமா நம்புறே..உன் காதலுக்கு ஒரு சதவீதம் கூட பொருத்தம் இல்லாதவர்.அவருக்காக உன் வாழ்க்கையை கெடுத்துப்பீயா.."என்று கோபமாக கேட்டவனிடம்..


"அம்மு இப்பவும் நான் சொல்றேன்.நான் அவரை உண்மையா உயிரா நேசித்தேன்.அவர் மனசரிந்து அப்படி என்னைப் பேசவில்லை..சூழ்நிலை அப்படி பேச வைத்திருக்கிறது..அந்த நீரன் என்ன சொன்னானோ..?"


"நீரன் என்ன சொன்னாலும் அந்த ஆளுக்கு உன் மீது கொஞ்சமாவது நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்.. காதலில் அடிப்படை நம்பிக்கை தான்.அதுவே இல்லை என்றால் எப்படி..?"


"அம்மு நான் சொல்வது உனக்கு புரியுமான்னு தெரியலே? அளவு கடந்த நம்பிக்கை அவர் என் மீது வைத்ததால் தான் நான் இப்படி செய்துட்டேனே என்ற கோபம் அவரை ஆத்திரப்பட வைத்து இருக்கிறது.நான் துரோகம் செய்துட்டேன்னு தவறாக நினைத்து விட்டார்ன்னு நினைக்கிறேன் .."என்று அப்போதும் சரியாக அவன் மனநிலையை ஊகித்தாள்.



"நீ என்ன சொன்னாலும், என்னால் ஏற்றுக் கொள்ள முடியலைக்கா.."


" அம்மு நாம் கோவமாக இருக்கும் போது அவர்கள் நமக்கு செய்த நல்லதை நினைத்துப் பார்..அப்போது தான் நான் சொல்வது புரியும்..ஒரு தப்புக்காக அவங்களே தப்புன்னு சொல்வது முட்டாள்தனம்..அவங்க இடத்தில் இருந்து நினைத்துப் பார்.."


"சரி நீ சொல்றபடி இருந்தால் கூட.. அவரும் அப்படி உன் நிலைமையை நினைத்து பார்த்திருக்கலாம் தானே..தீர விசாரிக்காமல் அவரே நீ தப்பானவன்னு முடிவு செய்துட்டாரே..".

"எல்லாருக்கும் அந்த பக்குவம் இருக்காது அம்மு.."


"ஓ..அப்போ உனக்கு மட்டும் அந்த பக்குவம் எப்படி வந்துச்சு.."


"தெரியலே..அவரோட பழகிய இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட நான் அவரிடம் தப்பைக் கண்டதே இல்லை..என்னிடம் பார்வையில் கூட எத்தனை கன்னியமாக நடந்து கொள்வார் தெரியுமா..! அதுமட்டுமா ? என் மீது காட்டும் அக்கறையில் நான் அவர் என் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பை உணர்ந்திருக்கேன் டா.."


"அக்கா காதலுக்கு கண்ணு இல்லைன்னு இதை தான் சொல்லுவாங்க போல்.."என்றான் கடுப்பாக..

"அம்மு உனக்கு புரியலை..அவர் செய்த இந்த ஒரு தப்புக்காக ! அதுவும் அவரையும் அறியாமல் செய்த தப்புக்காக என்னால் எப்படி அவரை வெறுத்து ஒதுக்க முடியும்..அப்படி வெறுத்தால் நான் உண்மையாக நேசிக்கவில்லைன்னு ஆகாதா..? என் மனமே என்னைக் கொள்ளும்.. அவர் நினைப்பது போல் நான் துரோகம் செய்ததாக தான் தோன்றும்.."


"நிஜமாலுமே எனக்கு ஒண்ணும் புரியலே.. உனக்கு கொஞ்சமாவது சுயமரியாதை இருக்கா கா? உன்னை இந்தளவு அசிங்கப்படுத்திய ஆளுக்காக இவ்வளுவு யோசிக்கிறாய்..எனக்கே உன்னைப் பார்த்தால் கோவம் கோவமாக வருது.."


"அம்மு என்னைக்கு அவர் என் மனசுக்குள்ளே வந்தாரோ ! அப்போதே நான் அவரை என் கணவனாக நினைத்துக் கொண்டேன்..தப்பு செய்வது மனித இயல்பு அதையே நினைத்துக் கொண்டிருந்தால் எப்படி வாழ முடியும்..?"


"அம்மா அப்பாவை விட அந்த ஆளு உனக்கு பெரிசா போயிட்டாரா..? சொல்லுக்கா..அவன் இப்படி உன்னை அசிங்கப்படுத்திய பின் கூட அந்த ஆளுக்காக இப்படி சப்போர்ட் போடறீயே..? அதை தான் என்னால் தாங்க முடியலே.."


"அம்மு என்னால் அவர் மீது கோபப்பட முடியலை டா நான் என்ன செய்யட்டும். அம்மா அப்பாவும் என்னை ஒரு நாள் புரிந்து கொள்வாங்க..காலம் தான் எல்லாத்துக்கும் மருந்து..என்றவளிடம்..


"எனக்கு நீ சொல்ல வருவது ஒரு மண்ணும் புரியலே என்று கடுகடுத்தவனிடம்.."


"நாம் உயிராக ஒருவரை நேசித்தால்..எந்த சூழ்நிலையிலும் அவர்களை வெறுக்க முடியாது டா..என்னாலும் அவரை மறக்க முடியலை..இந்த பாலப் போன மனசு அவருக்காக தானே யோசிக்குது..நீயாவது என்னைப் புரிந்து கொள்ள அம்மு .." என்று அதுவரை தெளிவாய் பேசியவள் அதன் பிறகு தாங்க முடியாமல் தம்பியின் தோள்களில் சாய்ந்து கதறி அழுது தீர்த்தாள்.


மிகன் ஒரு நாள் தன்னை புரிந்து கொண்டு வருவான் என்று காத்திருந்தாள். நாள்கள் வருடங்களாக ஓடியது .ஆனால் அவன் வரவே இல்லை..


திகழொளியோ, தனக்குள்ளேயே மிகனுக்காவும் தனக்காவும் போராடி போராடி ஓய்ந்து போனாள்.


அறவாணணுக்கு மகளை நினைத்து.. நினைத்து, கவலைப்பட்டு அவரும் நோயை இழுத்துக் கொண்டார்..அவருக்கும் பக்கவாதம் வந்துவிட்டது.


தன் தந்தையின் உடல்நிலை தன்னால் தான் கெட்டது என்று திகழொளி அதை நினைத்தும் குற்றவுணர்வு கொண்டாள்..அது அவளின் உடல்நிலை, மனநிலை இரண்டையும் பாதித்தது.. அமுதனும் ,கமலியும் தான் அவளைத் தேற்ற அரும்பாடு பட்டனர்..


திகழொளி அங்கே நடைபிணமாக வாழ்ந்தால் என்றால் இங்கே மிகன் அதைவிட மோசமாக இருந்தான்.


நீரனின் சூழ்ச்சி தெரியாமல் அவன் விரித்த வலையில் சிக்கிக் கொண்டான்.

நீரன் என்று தன் தாய்யுடன் மாமா வீட்டிற்கு வந்தானோ? அன்றே மிகன் மீது அளவு கடந்த பொறாமை அவன் மனசுக்குள் குடி புகுந்தது.

அவனுடன் என்ன நெருக்கமாக பழகினாலும்..அவனை தன் பெற்றவர்களும் , தன் மாமாவும் தாங்குவதும், தன்னைவிட அவனை கவனிப்பதும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

தன்னைவிட தன் பெற்றவர்களுக்கும் மிகனை தான் அதிகம் பிடிக்கிறது ! என்ற எண்ணம் அவன் மனதில் ஆழமாக பதிந்தது.


மிகன் தன்னிடம் கூடப்பிறந்த தம்பியாக பழகினாலும்! நீரனுக்கு மிகன் மீது இருந்த பொறாமையால் அவ்வாறு பழக முடியவில்லை..


மிகன் அளவுக்கு நீரனுக்கு சரியாக படிப்பும் வரவில்லை.. அதுவும் பருவ வயது வரும்போது அவனின் பொறாமை இன்னும் கூடியது..

மிகன் தன்னைவிட அழகாக இருப்பது அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..அதுவும் அவனுடன் வெளியில் சென்றால் பெண்கள் எல்லாம் தன்னைவிட அவனைத் தான் விரும்பி பார்க்கிறார்கள் என்று அவனுக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மை அதிகரித்தது..


இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவனை மிருகமாக்கியது..மிகன் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவனால் பொறுக்க முடியாது..


இந்த நிலையில் இருவரும் வேறு வேறு கல்லூரி சேர்ந்து பயில சென்ற போது தான் நீரன் முழுதாக மாறினான்.


கல்லூரியில் தவறான நண்பர்கள் கூட நட்பு வைத்தான். மது, போதை என்று அத்தனை கெட்ட பழக்கத்தையும் கற்றுக் கொண்டான்.


மிகனை விட்டு மனதளவிலும், உடலளவிலும் விலகினான்.ஆனால், தன் படிப்பு உண்டு! தான் உண்டு! என்று இருந்த மிகனால் அவனை உணர்ந்து கொள்ள இயலவில்லை..


இதற்கிடையில் மிகன் புது வீட்டிற்கு வந்ததும்..அங்கே திகழொளியை கண்டதும், அவள் மீது வயதுக்கே உரிய ஈர்ப்பு ஏற்பட்டு அது காதலாக மாறியதும்.அவன் உலகமே வேறாக மாறிப்போனது.


மிகனும் நீரனை அதன் பிறகு அதிகம் கண்டுகொள்ளவில்லை..ஓரே வீட்டில் ! ஓரே அறையில் இருந்தாலும் கூட , நம் இயல்புக்கு ஒத்துவரவில்லை என்றால் விலகல் தானாகவே வந்து விடும்..


அதுபோல் தான் நீரனும், மிகனும் ஒரே அறையில் இருந்தாலும் கொஞ்சம் விலகியே இருந்தனர்.

நீரனுக்குத் தான் மிகன் மீது வெறுப்பும் பொறாமையும்..ஆனால் மிகன் விலகி இருந்தாலும், நீரனை எப்போதும் தன் உடன்பிறவா சகோதரனாகவே பார்த்தான்.


அவனை ஒரு நாளும் மிகன் பிரித்து பார்த்ததே இல்லை..அவன் மீது பாசமும் அப்படியே தான் இருந்தது.


இதற்கிடையே தான் மிகனின் காதல் நீரனுக்கு தெரியவந்தது.அவனால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..அவனுள் பொறாமை தீ பத்தி எரிந்தது.


அதுவும் திகழொளி ஒரு நாள் கூட தன்னை ஏறெடுத்துப் பார்க்காதவள் மிகனை கண்டாள் மட்டும் அவள் கண்களிலும் ,முகத்திலும் தெரிந்த மகிழ்ச்சி நீரனை வெறி கொள்ளச் செய்தது.

நீரன் பலமுறை திகழொளியிடம் பேச முயற்சி செய்து இருக்கான்.ஆனால், அவளோ இவனைக் கண்டாலே பேய்யைக் கண்டதைப் போல் ஓடுவாள்..

மிகன் சாளரத்தின் வழி அவளைப் பார்ப்பதும்..அவளும் அவர்கள் வீட்டு வராண்டாவில் அமர்ந்து கொண்டு தங்கள் அறை சாளரத்தை அடிக்கடி பார்ப்பதையும் நீரன் பலமுறை கண்டு இருக்கிறான்.


தன்னை கண்டால் அலறி அடித்து ஓடுபவள், மிகனைக் கண்டால் மட்டும் உருகுகிறாள் என்று நினைத்தவனுக்கு இவர்களை எப்படியாவது பிரித்தே தீர வேண்டும் என்ற வெறி கொண்டான்..

அதற்கு வசதியாக மிகனும் திகழொளியும் எழுதிக் கொண்ட கடிதங்கள் சிலது அவனுக்கு கிடைத்தது.

அதை வைத்து அவர்களின் மனதை படித்தவன் அவர்களுக்கு எதிராக திட்டம் தீட்டினான்.

திகழொளி கல்லூரிக்கு அவர்களுக்கு தெரியாமல் அடிக்கடிச் சென்றவன், அங்கே இவனுக்கு ஏற்ற மாதிரி கெட்ட பழக்கங்கள் இருக்கும் பசங்களை நண்பன் ஆக்கிக் கொண்டான்.


திகழொளியும் மிகனும் கல்லூரியில் சந்தித்து பேசுவது பரிசுப் பொருட்களை பறிமாறிக் கொண்டது எல்லா
மே அவனுக்கு அவர்கள் மூலம் தெரியவந்தது.


அதை வைத்து நீரன் ஒரு திட்டம் தீட்டினான்.அதில் திகழொளியும் மிகனும் பகடைக்காயாக சிக்கினார்கள்..

தொடரும்..
Hi friends,
உயிர் துடிப்பாய் நீ ! அடுத்த அத்தியாயம் 28 போட்டு விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..அடுத்த யூடி புதன்கிழமை..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்




 
Kuda irrukura neerana pathi Theriyala.... Appuram yeppadi thigala purijikuva😏ivangala pirika thaan intha sucide dramava🤔 thigal maturity level👍nice intresting ud sis ❤️
 
Kuda irrukura neerana pathi Theriyala.... Appuram yeppadi thigala purijikuva😏ivangala pirika thaan intha sucide dramava🤔 thigal maturity level👍nice intresting ud sis ❤️
Thank you dear 😘 😘
 
உயிர் துடிப்பாய் நீ !


அத்தியாயம் 29


உண்மை என்றாவது ஒரு நாள் வெற்றி கொள்ளும் என்ற நம்பிக்கையில் தான் பலருடை வாழ்க்கை சென்று கொண்டு இருக்கிறது.


அது போல் தான் திகழொளியும் இன்று வரை நம்பிக் கொண்டு இருக்கிறாள்..


நீரனின் உண்மை முகம் மினுக்கும் சரி திகழொளிக்கும் சரி அன்று வரை தெரியவே இல்லை..


கூடவே வளர்ந்த மிகனுக்கே தெரியாத பொழுது திகழொளிக்கு மட்டும் எப்படித் தெரியும்..


சிறுவயதில் இருந்தே மிகன் மீது நீரனுக்கு இருந்த பொறாமை வாலிப வயதில் இன்னும் அதிகமாகிவிட்டது.மிகன் தான் அதை கடைசிவரை அறியவில்லை..



தன்னை சிறிதும் கண்டுகொள்ளாத திகழொளி மிகனை மட்டும் விரும்புவது நீரனால் தாங்க முடியவில்லை..அது அவனுடைய தன்மானத்தை பாதித்தது.



நீரன் அவர்களை பிரிக்க தன்னால் என்ன.. என்ன? செய்ய முடியுமோ !அதை செய்வதற்கான அத்தனை திட்டமும் தீட்டினான்.



திகழொளியின் கல்லூரி மாணவர்கள் மூலம் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தான்.



திகழொளியும் மிகனும் எழுதிக் கொண்ட கடிதத்தையும், பரிசுப் பொருட்களையும் மிகனுக்கு தெரியாமல் பார்த்தவன் அதே போல் இன்னொரு பரிசுப் பொருட்களை தேடி வாங்கி வைத்தான்.



அப்படி பரிசுப் பொருட்கள் வாங்கி வைப்பது அவனுக்கு கடினமாக தெரியவில்லை.. ஏனென்றால் மிகனும் திகழொளியும் பரிசுப் பொருட்கள் வாங்குகிற கடையை அறிந்து கொண்டு அவனும் அங்கேயே அதே போல் வாங்கினான்.



மிகனை நம்ப வைப்பதற்காக இத்தனை நாள் அவன் அறியாமல் குடித்து வந்த நீரன்..இப்போது அவனுக்கு நன்கு தெரியும் படி குடித்தான்.


நீரனுக்கு மிகனைப் பற்றி நன்கு தெரியும் எப்படியும் என்ன? ஏது ?என்று விசாரிப்பான் என்று தெரிந்தே அப்படி செய்தான்.



நீரன் நினைத்தது போலவே மிகன்‌ பதறிப்போய் "ஏன்டா இப்படி குடிக்கிறாய்..?எப்போது இந்த பழக்கத்தை பழகினாய்.." என்று பதறிப் போய் கேட்டான்.



நீரனோ.."மிகா என்னால் தாங்க முடியலை.அவளை நான் எப்படி எல்லாம் லவ் பண்ணுனேன் தெரியுமா? ஆனால், என்னுடன் உயிராக பழகிவிட்டு இப்போ வந்து அவளை மறந்துடச் சொல்றா ..என்னால் அவளை மறக்க முடியாது அதுதான் அந்த நினைவிலிருந்து தப்பித்துக் கொள்ள குடிக்கிறேன்.."



"என்னடா சொல்றே நீ லவ் பண்ணுனீயா..? யாரைடா லவ் செய்தே?

யார் அந்த பொண்ணு சொல்லு நான் பேசுறேன்.."என்று கோவமாக கேட்டவனிடம்..



"உன்னால் ஒன்னும் செய்ய முடியாது..அது உனக்கு தெரியவே வேண்டாம்..நீயாவது நல்லா இருடா.."



"நீரா நீ இப்ப சொல்லப் போறீயா இல்லையா ? யாருடா அது? சொல்லுடா.."



"நான் சொன்னா நீ தாங்க மாட்டே ..வேண்டாம் விடு.."


"நீரா புதிர் போடாமல் சொல்லுடா.."


"நான் சொன்னால் நீ நம்பவும் மாட்டே.."


"நீரா என் பொறுமையை சோதிக்காதே! யாருன்னு முதல்லே சொல்லு! "



"அதை நான் எப்படி சொல்லுவேன்..? சொன்னால் நீ உடைந்து போய்டுவே.."



"நீரா எதுக்கு சஸ்பென்ஸ் வைக்கிறே ப்ளீஸ் முதல்லே நீ சொல்லு ..!"



"இல்லே மிகா நீ தாங்க மாட்டே.." என்றான்.வேண்டுமென்றே மிகனின் ஆர்வத்தை தூண்டினான்.



மிகனோ , "நீரா இதற்கு மேல் நீ சுத்தி வளைச்சுப் பேசுனா எனக்கு பைத்தியமே பிடிச்சுடும்.எதுவாக இருந்தாலும் பரவாயில்லை சொல்லுடா .."என்றான்.



"மிகா இது உனக்கு பேரதிர்ச்சியா தான் இருக்கும். ஆனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை..நீ வற்புறுத்தி கேட்பதால் சொல்றேன்.."


"முதலில் சொல்லடா ..!"


"மிகா நான் உயிருக்கு உயிராக நேசித்தது எதிர்வீட்டு திகழொளி டா.."


"என்னடா சொல்றே..?"


"ஆமாம் டா ! அவளும் என்னை விரும்பினாள்.என்கூட வெளியில் எல்லாம் வந்து இருக்கா..நிறைய கிஃப்ட் எல்லாம் வாங்கி கொடுத்து இருக்கா.."என்று அவன் கூறும் போதே..



மிகன் தலையை பிடித்துக் கொண்டு அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.



நீரனோ, அவனது அதிர்ச்சியை உள்வாங்கிய படி.."மிகா இந்த விஷயம் உன்னை எவ்வளவு பாதிக்கும் என்று எனக்கு தெரியும். அதனால் தான் உங்கிட்ட சொல்லமாட்டேன்னு சொன்னேன்.."என்றான் அப்பாவியாக..



மிகனோ, இடியே தலையில் விழுந்ததைப் போல் அமர்ந்திருந்தான்.அவன் மனமோ துடியாய் துடித்துக் கொண்டு இருந்தது.



நீரனோ ,அதைக் கண்டு மனதிற்குள் மகிழ்ந்த படி "மிகா நீயும் அவளும் இப்போது லவ் பண்றீங்க்னனு எனக்கு தெரியும் .."என்னவனை மிகன் திகைப்புடன் பார்த்தான்.



நீரனோ , அவன் பார்வையை தாங்கியபடி "திகழொளி தான் சொன்னாள்..

உன்னை விட மிகன் நல்லா படித்து இருக்கான்..நல்ல வேலையில் இருக்கான்.. அதனால் நான் அவரை விரும்புகிறேன் .நீங்க என்னை மறந்துவிடுங்கன்னு சொன்னாள்.என்னால் அதை தாங்க முடியலை டா.."என்று பொய்யுரைத்தவனிடம்..



"நீரா நீ

..நீ..சொல்வது உண்மையா ..? என்று வார்த்தைகள் தடுமாற கேட்டான்..


"சத்தியமாய் உண்மை டா.நான் ஏன் பொய் சொல்லவேண்டும்..வேணா நீ நம்புலைன்னா இதோ அவள் எனக்கு கொடுத்த கிஃப்ட் எல்லாம் பாரு.." என்று தன் அலமாரியில் வைத்திருந்த பொருட்கள் நிறைந்த பையை மிகன் முன் தலைகீழாக கொட்டினான்.



மிகனோ அதைப்பார்த்துதம் அப்படியே உறைந்து போனான். தனக்கு வாங்கி


கொடுத்த கிஃப்ட் போலேவே அத்தனையும் இருந்தது.


தான் பத்தரை மாத்து தங்கம் என்று எண்ணியவள் இவ்வளவு கேவலமாக இருந்து இருக்கிறாளா? என்று எண்ணியவன் அவள் தன்னை இத்தனை நாளாக எப்படி ஏமாற்றி இருக்கிறாள் என்று நினைத்து குனிக் கூறுகி போனான்.




நீரனோ மிகனின் நிலையைக் கண்டு மனதிற்குள் மகிழ்ந்தான். தான் நினைத்தது நடந்து விட்டது என்று ஆனந்தம் கொண்டான்.



மிகனோ, அதிர்ச்சியிலும் மனதின் வலியிலும் இறுகிப் போனான். தன் நிலமையை வெளியில் சொல்லவும் முடியாமல் மனதிற்குள் துடித்தான்.




ஆனால் நீரன் அப்பொழுது கூட திருப்த்தி அடையாமல் திகழொளியின் கல்லூரியில் பயிலும் தன் நண்பர்களை அலைபேசியில் அழைத்து மிகனிடம் பேச வைத்தான்.



அவர்களும் நீரன் சொல்லிக் கொடுத்த மாதிரி அச்சு பிசகாமல் அப்படியே திகழொளியைப் பற்றி தப்பும் தவறுமாக ஒப்புவித்தார்கள்.



திகழொளி நீரனை கல்லூரிக்கு வரச்சொல்லி கடிதம் எழுதி தன் தம்பியிடம் கொடுத்து விடுவாள். நீரனும் கல்லூரிக்கு அடிக்கடி வருவான்.திகழொளியும் கல்லூரிக்கு வருவது போல் அவளின் தந்தையுடன் வருவாள்.தந்தை சென்ற சிறிது நேரத்தில் கல்லூரி வகுப்புகளை கட் செய்துவிட்டு நீரனுடன் வெளியில் சுத்தப் போவாள் என்று பொய்யுரைத்தனர்.



மிகனோ அதை எல்லாம் கேட்டு திகழொளியா இப்பிடி செய்து இருக்கிறாள்? என்று இடிந்து போனான்.அவனால் நம்பவும் முடியவில்லை ..நம்பாமல் இருக்கவும் முடியவில்லை..




பொய் சரியாக சொல்லும் போது உண்மை அங்கே மறைந்து காணாமல் போனது.



நீரனோ மிகனிடம் "மிகா இது எல்லாம் ஏன் உன்னிடம் சொல்கிறேன் என்றால் நீயும் என்னைப்ப போல் ஏமாந்து போகக்கூடாது டா..இந்த வலி உனக்கு வேண்டாம் டா..எனக்கு செத்து போய்ட்டலாம் போல் இருக்கு .."என்று பொய் அழுகை அழுதான்.



மிகனோ, நீரனின் சொல்வதைக் கேட்டு சுக்கு நூறாக உடைந்து போனான்.தாங்க முடியாத மனவலியால் துடித்தான்.



நீரனின் நடிப்பை முழுதாக நம்பிய மிகன் அங்கே இருக்க முடியாமல் அடுத்த நாளே வேலை விஷயமாக வெளியூர் போறேன் என்று வீட்டாரிடம் சொல்லிவிட்டு ஒரு வாரம் யாரும் இல்லாத தனிமையை தேடிச் சென்றான்.




எங்கே அங்கேயே இருந்தால் திகழொளியை பார்க்க வேண்டி வருமோ? அப்படி பார்த்தால் தனக்கு அவள் மீது இருக்கும் கோபத்தில் ஏதாவது செய்து விடுவோமோ ?என்று பயந்தான்.


இது எதுவும் தெரியாமல் திகழொளியோ மிகனைக் காணாமல் தவித்துப் போனாள்.


இப்படி பத்து நாட்களுக்கு மேல் சென்ற பின் வெளியூரில் இருந்த மிகனை ஒரு நாள் அலைபேசியில் நீரன் அழைத்தான்.



"மிகா உடனே வீட்டிற்கு வா உன்னிடம் பேசி ஆகவேண்டும்.." என்று நீரன் மிகனை பதற்றமாக அழைத்தான்.



மிகனும் மறுக்க முடியாமல் உடனே கிளம்பி தங்கள் வீட்டிற்கு வந்தான்.


பத்து நாள் கழித்து ஓய்ந்து போய் வீடு வந்த மிகனிடம் "மிகா உன்னிடம் ஒரு விஷயம் சொல்லனும்! அதற்குத் தான் உன்னை அவசரமா வரச் சொன்னேன்.."என்றவன்..



என்னவென்று கேட்ட மிகனிடம் "மிகா என்னால் அவளை மறக்க முடியவில்லை..! இப்படி நரக வாழ்க்கை நான் வாழ்வதை விட செத்தே போய்டலாம் டா.. நீ அம்மா ,அப்பாவை பார்த்துக்கோ ! நான் இனி வாழ விரும்பலே.." என்று சொல்லியபடியே முன்னரே தயாராக மேஜை மீது எடுத்து வைத்திருந்த விஷமருந்தை எடுத்து மிகன் கண் முன்னே குடித்து விட்டான்.



மிகனோ, அதை பார்த்து அதிர்ந்து போய் அவன் அருகில் ஓடி அந்த பாட்டிலைப் பிடுங்க முயற்சி செய்தான்.



ஆனால், நீரனோ பாட்டில் மருந்தை முழுவதுமாக காலி செய்திருந்தான்.




மிகனோ "நீரா என்னடா இப்படி அவசரப்பட்டுட்டே..! அய்யோ! நான் என்ன செய்வேன் ?வாடா சீக்கிரம் டாக்டர் கிட்ட போலாம்.." என்று கெஞ்சினான்.




நீரனோ ,அவன் துடிப்பதை பார்த்து அந்த நிலமையிலும் ரசித்தபடியே "மிகா நான் வரலே..நான் சாகத்தான் வேண்டும். அப்போது தான் மனசுலே இருக்கிற இந்த வலி தீரும்.. நீயாவது திகழொளியை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமாக இருடா.."என்றான் அப்போதும் வஞ்சத்துடன்..



மிகனோ, அச்சோ! என்னடா இப்படி எல்லாம் பேசறே. முதல்லே நீ வா டாக்டர்கிட்ட போலாம்.." என்று அவசரமாக தன் இருசக்கர வாகனத்தில் அவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தான்.




வீட்டில் கூட யாரிடமும் சொல்லவில்லை அவனை மருத்துவமனையில் சேர்த்தபின் தான் வீட்டினருக்கே சொன்னான்.



பெற்றவர்களும், உலகமாறனும் அடித்து பிடித்து மருத்துவ மனைக்கு ஓடிவந்தனர்..



நீரன் வீரியம் குறைவான விஷத்தை தான் குடித்து இருந்தான். அவனுக்கு தெரியும் எப்படியும் மிகன் தன்னை காப்பாற்றி விடுவான்‌ என்று..அதனால் தான் திட்டமிட்ட வீரியம் குறைந்த மருந்தை அவன் முன் குடித்தான்.



ஆனால், நீரன்நினைத்தபடி நடக்கவில்லை ..மருந்து வீரீயம் குறைந்திருந்தாலும் அவன் போதைப் பழக்கம் மதுப்பழக்கத்தால் உடல்நிலையை கெடுத்து வைத்திருந்தான்.அதனால் மருத்துவமனைக்கு போவதற்குள் விஷம் அவன் குருதியில் விரைவாக கலந்து விட்டது..



அதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வைத்தியம் பார்த்தார்கள்.


மிகனோ, எந்த நிலையில் இருந்தான் என்றே விவரிக்க முடியாத நிலையில் இருந்தான்.



குடும்பத்தினர் அனைவரும் அவனிடம் "என்னாச்சு ? நீரன் ஏன் இப்படி செய்தான்?" என்று கேட்டுத் துளைத்தார்கள்.



மிகன் என்னவென்று சொல்வான்.அவனே கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்தான்.


நீரன் சொன்னதைப்பற்றி யாரிடமும் கூறவும் அவனுக்கு விருப்பமில்லை..



எனக்கும் எதுவும் தெரியாது என்று அப்போது சொல்லி சமாளித்தவன் ,மதியம் வரை மருத்துவமனையில் இருந்தான்.


அதற்கு மேல் பொறுக்க முடியாமல், திகழொளியை கொன்று போடும் ஆத்திரத்துடன் அவள் வீட்டிற்குச் சென்றான்.


அவனால் அவளை மன்னிக்கவே முடியவில்லை..எப்படி நீரனையும் தன்னையும் ஏமாற்ற அவளுக்கு மனசு வந்தது என்று அவன் மனம் துடியாய் துடித்தது.




நீரன் உயிரை விடுமளவு துணிந்து இருக்கிறான் என்றால் இவள் தான் அவனை காதலித்து நம்பவைத்து ஏமாற்றி இருப்பாள் என்ற ஆத்திரம் அவள் மீது கட்டுக்கடங்காமல் வந்தது.‌



எதையும் தீரவிசாரிக்காமல் அவனே ஒரு முடிவுக்கு வந்தவன், அவளுக்கு தண்டனை கொடுக்கவும் தயாராகி விட்டான்.




நீரன் சொன்ன போது கூட அவனுக்கு வலி தான்‌ இருந்தது..ஆனால், இன்று அவளை கொன்று விடும் அளவு ஆத்திரம் வந்தது.



பொய்யானவனை நம்பி சூழ்நிலை கைதியாக மாறிப் போனான் மிகன்..




அதே கோபத்துடன் திகழொளி வீட்டில் ருத்ர தாண்டவம் ஆடி விட்டு தன் வீட்டிற்கு வந்தவன் மனதிற்குள் அழுது கரைந்தான்.



வீட்டுப் பெரியவர்கள் மருத்துவமனையில் இருந்ததால் இங்கே நடந்தது எதுவுமே அவர்களுக்கு அப்போது தெரியாமல் போனது.


அவர்களுக்கு தெரியும் போது எல்லாமே கை மீறிப் போய் இருந்தது.


தொடரும்..


Hi friends,
உயிர் துடிப்பாய் நீ!
அடுத்த அத்தியாயம் 29 போட்டுவிட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..அடுத்த யூடி சனிக்கிழமை..
நன்றி
அன்புடன்‌
இனிதா மோகன்
 
Last edited:

New Threads

Top Bottom