Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Tamil Novels Poonjittu - 4

அத்தியாயம் 4


எதிர்பாராத ஒரு சிலரின் சந்திப்புகள் தான் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் முற்றிலும் விநோதமான ஒரு சந்திப்பு தான் அங்கே நிகழ்ந்திருந்தது.



தன் மேல் மோதி நின்றவளை ஏதோ குழந்தை விளையாடுகிறதென கீழே விழுந்து விடுமோ என்று அனிச்சையாய் அவன் பிடித்து நிறுத்த. யாரடா அது குறுக்கே வந்தது என்ற பாணியில் "யார்ரா அது குறுக்க..." என்று அவள் கூற அவன் பிடி தளர்த்தினான்.


தன் முன்னே நின்ற ஆடவனை ஏறிட்டு பார்த்தவள்


'என்ன இவன் இத்தனை உயரமாயிருக்கான். இவனை பார்க்கனும்னா நேருக்கு நேரா பார்க்கனும்னா ஏணி வெச்சு ஏறிதான் பார்த்து தா பேசனும் போலயே .. இவன் நின்னா இவனுக்கு பின்னாடி என்ன இருக்குன்னு கூட நமக்கு தெரியலையே அவ்வளவு அகலமாருக்கான் என்று எண்ணியபடியே அண்ணாந்து அவனை அவள் பார்த்திருக்க அது குழந்தையல்ல என்பதை உணர்ந்தவன் "என்ன.." என்பதயாய் யோசனையோடு புருவமுயற்தினான்.


'ஒன்றுமில்லை..' என்பதாய் அவள் தலையசைத்ததை அவன் நம்பவில்லை. இல்லையே என்னும் ரீதியில் இவளை பார்த்தவன் 'யாரிந்த வானரம்'என்று எண்ணிவாறே லக்கேஜை எடுத்துக்கொள்ள அவனுக்கு பின்னேயே வந்த நண்பர்கள் கூட்டமும் இவர்கள் சந்திப்பை கண்டு விழி பிதுங்கி நின்றது.


'இவனை இதுக்கு முன்னாடி எங்கயோ பார்த்திருக்கிறோமே எங்க எங்க என்று நெற்றியை தட்டி யோசித்தாள் அவள். அதற்குள் நண்பர்கள் பட்டாளம் வந்துவிடவே அவர்களோடு அவன் அளவலாவ இவளுக்கு இன்னும் மண்டைக்குள் நண்டு குடைந்தது.


எங்க.... எங்கயோ என்று நெற்றி பொட்டை தட்டியபடி யோசித்தவளுக்கு சட்டென பிடிபட்டு போனது. 'ஹாங் அவனேதான்...' என்றபடி கண்டுபிடித்துவிட்டேன் என்பது கணக்காய் கைவிரல் சொடுக்கி ஆட்காட்டி விரலை அவன் முன் நீட்டி "ஹல்க்.." என்றாள் கூக்குரலாய்.


மொத்த நண்பர்கள் கூட்டமும் இவளை திரும்பி பார்க்க... அவனும் ஒன்றும் புரியாமல் இவளை என்னவோவென்று விநோதமாய் பார்த்து வைத்தான்.



'அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அய்யோ மொத்த கூட்டமும் நம்மளை பாக்குதே இப்ப எப்படி சமாளிக்கறது..' என்று விநாடிக்குள் யோசித்தவள்


"ஹக்..."என்றபடியே முகம் சுளித்து காலை பிடித்துக் கொண்டு எதிலோ இடித்து கொண்டவள் போல் ஒற்றைகாலை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு ஒற்றை காலில் தடுமாறிபடி சமாளிக்க.. அவள் நடிப்பை உண்மையென்று எண்ணியவர்கள்


"அச்சோ என்னாச்சு.." என்றபடி அவளின் உதவிக்கென சிலர் அவள் கை பற்ற என்னவோ ஏதோவென பதறிவர்கள் அவள் காலை பார்த்தவாறே


"பார்த்து வரமாட்டியா எங்க இடிச்ச.."என்றபடி விசாரித்தனர்.


அவனும் என்னவோ என அவளை பார்த்திக்க அவள் கண்களில் குறும்பு மின்ன "ஹல்க்.." என்று வாயசைவில் அவனை நோக்கி கூறினாள்.


'என்ன சொல்றா இவ.. நம்மை தான் சொல்றாளா இல்ல வேற யாரையுமா..' என அவன் பின்னே திரும்பி பார்த்தான்.


அதற்குள் "இல்ல டக்குன்னு கால் ஸ்லிப் ஆகிடுச்சு பளீர்னு வலி இப்ப ஒகே.." என்று சமாளித்தவள் சரி.. சரி.. போகலாம் ஒன்னுல்ல.. ஐம் ஓகே.." என்றபடியே அவன் அருகே வந்தாள்.


"ஹேய் கைஸ் கெளம்பலாம் இந்த டிரிப்ப ஜாலியா என்ஜாய் பண்றோம்.. ஃபன் பண்றோம்.." என்று கூப்பாடு போட அப்போது தான் நிரஞ்சனுக்கு உறைத்தது பாண்டி சொன்னது இவளைத் தானென்று.


ஹூ ஹூ என்று கூட்டத்தில் ஒரே ஆரவாரம். அவரவர் லக்கேஜோட விலக


'இவ என்ன லூசா..' என்று நினைத்தவாறே ஏதோ ஒரு அர்ப்ப ஜந்துவை பார்ப்பது போல் அவளை பார்த்துவிட்டு அவன் விலக அவள் என்ன சொன்னாள் என்று யோசித்தவாறே மனம் குழம்பியது.



அதை கண்டவள் நமட்டு சிரிப்போடே என்ன "சொன்னேன்னு தெரியனுமா.." என்று அவனை அண்ணாந்து பார்த்து கேட்டாள்


தேவையில்லை என்பது போல் அசட்டையாய் நகர்ந்தான்.


இவளை கடந்து போனவனை "ஓய் ஹல்க்.." என்றாள்.


"என்ன...? என்று அவன் பார்வையாலேயே கேட்க


"ஹல்க் மாதிரி இருக்கே டா முண்டம்.‌‌ ஆளுதான் இவ்வளோ உயரம் வளர்ந்திருக்க டியூப்லைட்டு இது கூட தெர்ல.." என்று தலையடித்துக்கொண்டு அவள் ஓடினாள்.


"எதே ஹல்க் ஆ..." அப்பொழுது தான் அவனுக்கு விளங்கியது. ஆழாக்கு மாதிரி இருந்துட்டு என்னா பேச்சு என்னா நடிப்பு.‌.. சரியான ஃபோர் டொன்டியா யா இருப்பா போல..' என்று எண்ணியவனுக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. _பார்த்த பத்து நிமிசத்துல ஹல்க்குங்கறா இவளோட எப்படி இந்த வாரம் முழுக்க டூர் சுத்தறது..' என்று யோசித்தவாறே அவன் வாகனத்தை நோக்கி வந்தான். எல்லோருக்கும் முன்னால் ஓடியவள்


அவன் கறுப்பு நிற தார் ஜீப்பில் ஜம்பமாய் முன்னிருக்கையில் சென்று அமர்ந்து "யார்துடாப்பா இந்த வண்டி இனி இந்த டூர் முடியற வரை இதான் என் சீட் எவனாச்சும் இடத்தை கேட்டீங்க உங்க எல்லாரையும் அங்கேயே விட்டு வந்துடுவேன் ஜாக்கிரதை.." என்றாள் சப்தமாக.


பின்னயே லக்கேஜை தூக்கிக்கொண்டு வந்து பாண்டி "அய்யோ ஆத்தீ." என்றபடி பரிதாபமாக நிற்க அவனை பார்த்து பல்லை நறநறவென கடித்தபடி தன் வாகனத்தை நோக்கி சென்றான் நிரஞ்சன்.


"அய்யோ இந்த டூர் முடியறதுக்குள்ள இந்த குட்டிச்சாத்தான் இவன்கிட்டேர்ந்து எனக்கு டைவர்ஸ் வாங்கி குடுத்துடுவா போல இருக்கே.." என்று முனகியவாறே


"நிரஞ்சா.." என்றபடியே அவனை தொடர்ந்தான் பாண்டி.


எப்படியாவது பேசி அவளை வேறு காரில் ஏற்றலாம் என்று நினைத்து அவள் அருகில் வந்தவனை


"டேய் அழகா... ஆள் யாரு செம்ம ஹாண்ட்ஸம்மா இருக்கான்.." என்று அடுத்த குண்டை வீசினாள் அவள்


"அய்யோ இவ இங்கேயே டிரிப்ப முடிச்சூட்ருவா போல இருக்கே.." என்று பதைபதைக்க


"சிட்டு..." என்று அவளை அழைக்கயிலேயே


"ஹய் டாம் அண்ட் ஜெர்ரி..." என்று அவள் உற்சாகமாய் துள்ளி குதித்தாள். அந்த காரின் டேஸ் போர்டில் தலையணையில் சாய்ந்து கண்ணை முடிக்கொண்டிருக்கும் டாமும் டாமின் வயிற்றில் கண்ணயர்நது கிடக்கும் ஜெர்யும் வீற்றிருந்தது.



சட்டென வெளியே திரும்பிவள் அவன் டீசர்டை பிடித்து இழுத்து குனிய வைத்து


"நீ என்ன செய்வியோ தெரியாது.. ட்ரிப் முடியும் போது இந்த டாமும் ஜெர்ரியும் என் ஹாண்ட்பாக்ல இருக்கனும் அது உன் பொறுப்பு.." என்றாள் ரகசியமாய்


"போச்சுடா..." என்று இரு கைகளையும் தலையில் வைத்துக் கொண்டு அவன் நிமிர எதிர்ல் பல்லை நெறித்தபடி டிரைவர் இருக்கையில் ஏறி அமர்ந்தான் நிரஞ்சன்.



எப்படியாவது இவட்ட பேசி வேற கார்க்கு அனுப்பிடனும் என்ற முடிவோடு பின்னைருக்கையில் ஏறி ஏற்கனவே இடம் பிடித்திருந்த அருண் ரியாஸோடு ஐக்கியமானான்.



"ஹேய் ஹல்க் உன் வண்டியா இது... செம்மயா இருக்கு மேன் உன்னை மாதிரியே..." என்றபடியே அவள் உற்சாகமாய் கூற



'என்னாது ஹல்க்கா.. ரைட்றா இந்த டிரிப்போட உன் வாழ்க்கைக்கு இந்த சைத்தான் எண்ட் கார்ட் போட போறாடா அழகரே...' என்று தலைக்கு கைவைத்து அமர்ந்திருக்க சற்று நேரத்தில் வாகனம் கிளம்பிய வேகத்திலேயே அழகருக்கு புரிந்து போனது நிரஞ்சனின் கோபம்.



"அட்றா அட்றா அட்றா.." என்று கையை வாயில் குவித்து அவள் விசிலை பறக்கவிட நிரஞ்சன் விநோதமாய் அவளை பார்த்துவிட்டு கண்ணாடி வழியே பின்னே அழகரை பார்த்தான்.



"டேய் பாண்டி நீ சிக்குனடி.." என்று ரியாஸ் சிரிக்க



"இவ இந்த டிரிப்போட நம்ம ஃப்ரெண்ட்ஸிப்ப முடிச்சு விடாம இருந்தா சரிடா.." என்றான் அருண்.


"சூப்பரா வண்டி ஓட்ற மேன். உம்பேரென்ன.." என்று நிரஞ்சனிடம் வினவ


அவன் அவளை முறைத்தான்.


"நான் உன் பேரு தானே கேட்டேன். என்னவோ உன் சொத்தையே கேட்ட மாதிரி முறைக்கிற.. கூலா வா மேன்.." என்றாள்.


"சரி.. சரி.. ஹல்க்ங்கற பேரே உனக்கு நல்லாருக்கு நான் அப்படியே கூப்டுக்கறேன். ஹேய் கைஸ் உங்க பெயரென்ன.." என்றாள் பின்னால் திரும்பி


"நான் ரியாஸ்.." என்று ரியாஸ் தன்னை அறிமுகம் செய்து கொள்ள


*நான் அருண்.." என்றான் அருண்.


"உங்களுக்கெல்லாம் அப்புறமா பேர் வெக்கறேன்.." என்றபடியே "டேய் பம்பரகட்ட எனக்கு ரொம்ப பசிக்குது டா.." என்றாள் பாவமாக


"எதே பம்பரகட்டயா.." என்று ரியாஸூம் அருணும் சிரிக்க


'இவளென்ன எல்லாருக்கும் பட்ட பேர் வெக்கறா...' என்று அவளை விநோதமாய் பார்த்து வைத்தான் நிரஞ்சன்.



"அதென்ன டா பம்பரகட்ட.." என்று ரியாஸ் சிரிக்க



"அதுவா சின்னதுல இவனுக்கு பம்பரமே விட தெரியாது. விளையாடும் போது இவன் பம்பரைத்த அடிச்சு எல்லாரும் உடைச்சிடுவாங்க, என் பம்பரகட்டர்னு அழுதுட்டே போவான்.. அதையே பேரா வெச்சுட்டேன்.." என்றாள் சிரித்தபடி


"இவ கிட்ட ஜாக்கிரதையா இருக்கனும் டா நமக்கென்ன பேரு வெக்க போறாளோ.." என்று ரியாஸ் அருணின் காதை கடித்தான்.


"டேய் அழகா பசிக்குது டா.." என்றாள் அவள் பாவமாய்.


கிளம்பி பத்து இருபது நிமிடங்கள் கூட ஆகாமல் பசிக்கிறது என்று கூறுபவளுக்காய் வண்டியை நிறுத்தவதா வேண்டாமா என்று யோசிதாதவாறே நிரஞ்சன் வண்டியை செலுத்திக் கொண்டிருக்க தூர தெரிந்த கையேந்தி பவனை காட்டி


"நிறுத்து.. நிறுத்து.. நிறுத்து.. ஹோல்டான்.." என்று அவன் தோள் பற்றி அவள் உலுக்கி எடுக்க தானாய் ஓரம் கட்டி நிறுத்தினான் நிரஞ்சன்.



வண்டி நின்றவுடன் துள்ளி குதித்து இறங்கி ஓடியவள் டங் டங் டங் என்று தோசை கல்லை கரண்டியால் தட்டி ஓசை எழுப்பிக் கொண்டிருந்த மாஸ்டரிடம் "அண்ணா எனக்கு ஒரு சூப்பரான கொத்து பரோட்டா.." என்றாள்.


அவள் ஓடிய வேகத்தையும் அவள் கூறிய தினுசயும் பார்த்துவிட்டு எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட நிரஞ்சன் மட்டும் பாண்டியை முறைத்துக் கொண்டிருந்தான்.


"நீ தானடா நிறுத்துன என்னை முறைக்கிற.." என்றான் பாண்டி


தன் கை கடிகாரத்தை பார்த்துக் கொண்டே "கிளம்பி முப்பது நிமிஷம் தான் ஆச்சு அதுக்குள்ள நிறுத்தியாச்சு.." என்று வார்த்தைகளை நிரஞ்சன் கடித்து துப்ப இவர்கள் வண்டி நின்று விட்டதை கண்டு மற்றொரு வாகனத்தில் வந்த செல்வாவும் தங்களது வாகனத்தை நிறுத்தினான்.


தன் வாகனத்தை விட்டு இறங்காமலேயே நிரஞ்சன் அமர்ந்திருக்க அவளோ அங்கே தோசைக்கல்லில் வந்த இசையை ரம்மியமாய் ரசித்தவாறே அந்த மாஸ்டரிடம் கதை பேசிக்கொண்டிருந்தாள்.


'எங்கடா புடிச்ச இவளை..' என்கிற ரீதியில் அவனருகே வந்த பாண்டியை நோக்க அவனோ


"காலைல டிரைன் ஏறிருப்பாடா.. வந்ததும் நம்மகூட வந்துட்டா பசி தாங்கமாட்டாடா.." என்றான் அவளுக்கு பரிவாய்.


"பேசாம போ... அவளை சீக்கிரமா சாப்பிட சொல்லி கூட்டு வா.." நிரஞ்சன் என்று கூறியதும் தப்பித்தோம்டா சாமி என்று அவளை நோக்கி ஓடினான்.


ஏற்கனவே அத்தனை பேரும் அவளிடம் சென்றிருக்க "ஹே வா மச்சி.. அண்ணன் கொத்துபரோட்டா போடற ஸ்டைலே சூப்பரா இருக்கு. ஆளுக்கு ஒன்னு சொல்வோமா.." என்று கேட்க ஏற்கனவே உணவை முடித்திருந்தாலும் அவர்களுக்கும் நா ஊறியது.



"ஏ ஒன்னு வாங்கி ஷேர் பண்ணிப்போமா.." என்று பெண்கள் குழு தீர்மானிக்க


"அண்ணா ரெண்டு கொத்து ரெண்டு கலக்கி.." என்றுவிட்டு "டேய் உனக்கு.." என்று பாண்டியையும் செல்வாவையும் கேட்டான் ரியாஸ்.


"ஏன்டா திங்காமயா வந்த.." என்று பாண்டி கேட்க


"ஏன் இன்னொரு தடவை தின்னா என்ன.." என்றான் செல்வா.


"டேய் அவன் ஏற்கனவே முறைக்கிறான்டா.." என்று பாண்டி புலம்ப


"அவன் எப்படா முறைக்காம இருந்தான்.." என்றபடியே "அங்க பாரு அவ திங்கறதை ஸ்டைலைப் பாரு இதை பார்த்துட்டு திங்காம சும்மா இருக்க முடியுமா.."என ரியாஸ் கேட்க


அவளை மற்றவர் நோக்க அங்கே சுடச் சுட கொத்து பரோட்டாவை ஐந்து விரல்களாலும் எடுத்து வாயில் வைத்து சுவைத்து ஒவ்வொரு விரலாய் வாயில் வைத்து சப்பி கொண்டே "ண்ணேய்.. செம்ம டேஸ்ட்ணே.... எங்கூர்லயும் ஒரு ஊல மூக்கன் போடுவான். சாணி மாதிரி இருக்கும். அல்டிமேட் டேஸ்ட்ணே.." என்றபடியே ஒவ்வொரு வாயாக ரசித்து உள்ளே தள்ளிக் கொண்டே "அப்படியே ஒரு ஆப்பாயில் ணே.." என்றாள்.


மற்றவர்களும் அவர்களுக்கான உணவு வர உண்டு கொண்டிருக்க வந்த ஆப்பாயிலுக்கு ஒரு பரோட்டாவை வாங்கி அதை பிய்த்து அதில் தோய்த்து உண்பவளை விசித்திரமாய் கண்டனர் இவர்கள்.


வாய் நிறைய பரோட்டோவை அடக்கியபடி "என்ன.." என்று கேட்க


ஒன்றுமில்லை என்பதாய் இவர்கள் தலையசைக்க


"செம்ம யா இருக்கும் சாப்டு பாரு.." என்று கொஞ்சம் பரோட்டாவை பிய்த்து ஆப்பாயிலில் தோய்த்து அவளை அதிசயமாய் பார்த்துக்கொண்டிருந்த ரியாஸ் வாயில் வைத்தாள்.
 

New Threads

Top Bottom