Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Tamil Novels Poonjittu - 5

அத்தியாயம் 5


அன்பு தான் எத்தனை வலிமைமிக்கது. முகம் தெரியாத வேற்று மனிதனாய் இருந்தால் கூட ஒருவரின் அன்பான புன்னகை அவர்கள் முகத்திலும் சின்னதொரு புன்னகையை மலரச் செய்யும்.


சிட்டுவின் பேச்சும், சிரிப்பும் அந்த கடை மாஸ்டரிடம் அவள் பேசிய பாங்கும் அவரை மனசை தொட்டிருக்க வேண்டும். சிரித்த முகத்தோடு என்ன வேண்டுமென கேட்டு, கேட்டு செய்ய கடை முதலாளி போன்ற மனிதரிடம் "ப்பா கொழம்பெல்லாம் சூப்பரா இருக்கு. யார் செய்யறா..? நீங்களா..? இல்ல வீட்ல அம்மா செஞ்சு தர்றாங்களா..? என்று விகல்பமில்லாமல் கேட்க


"அம்மா தான் செய்யறாங்கம்மா..' என்று அவர் பேசிய தொணியிலேயே


"ப்போய் மதுரையா...? நாங்களும் மதுரைதே.." என்றவளை


"அதானே பார்த்தேன்..! புள்ள சுட்டியா இருக்கே நம்மூராத்தேன் இருக்கும்னு. எலே பாரு நம்மூரு பக்கந்தானாம்.." என்று மாஸ்டரிடம் கூற


"அதான்னே நானு யோசிச்சேன். இந்தூரு புள்ளைக யாரு இப்படி பேசுறா.." என்று அவளை நோக்கி "எந்தூரு தங்கச்சி.." என்று கேட்டார்.


நிரஞ்சன் "பாண்டி.."என்று சத்தமாய் அழைப்பது கேட்டது. "இருங்கண்ணே.." என்றவாறே


"ஓய் ஹல்க் நீ சாப்பிட வரலயா..‌? உனக்கு ஒரு கொத்து பரோட்டா சொல்லவா.." ண்ணேய் இன்னொரு கொத்து பரோட்டா போடுண்ணே.." என்றாள்.


"அடியே அவன் நம்மளை கொத்துபரோட்டா ஆக்கிடுவான் நீ சீக்கிரமா தின்னுட்டு வா.." என்றான் பாண்டி.


"ணேய் நீ போடுண்ணே அவங்கெடக்கான்.." என்றவள் "இந்தா நீ கொஞ்சம் சாப்டு பாக்கறயா..? என்று அலென்னாவுக்கு கொஞ்சம் பரோட்டாவை பிய்த்து ஆப்பாயிலில் தோய்த்து ஊட்ட அவளுக்கும் அந்த ருசி நன்றாய் இருப்பதாய் தோன்றியது. எல்லாரும் ஆளுக்கொரு ஆப்பாயில் பரோட்டா வாங்கி உண்ண இவள் கொத்து பரோட்டாவோடு நிரஞ்சனை நெருங்கினாள்.


ஜீப் பானட்டில் சாய்ந்து அலைபேசியை நோண்டிக்கொண்டிருந்தவனிடம் வந்தவள். "ஓய் இந்தா சாப்பிடு.." என்றாள்.



அவள் உணவு தட்டோடு அருகே நிற்பதை கண்டவன். "நான் கேட்கலயே.." என்றான்.


"கேட்காட்டி என்ன நாங்க எல்லாம் சாப்டோம்ல.. உனக்கு சாப்ட தோணலயா.." என்றாள்



"கண்ட நேரத்துல எல்லாம் நான் சாப்டறதில்ல.. எனக்கு வேண்டாம்." என்று மறுத்தபடி அவன் மீண்டும் அலைபேசியில் மூழ்க


"எந்த நேரமா இருந்தா என்ன நல்ல டேஸ்டான சோறு கெடச்சா சாப்டனும்.ஒரு வாய் சாப்டு பாரு. டேஸ்ட் சும்மா அள்ளுது.." என்றாள்.


சாப்பிடுவதில் மூழ்கியிருந்தவர்களில் செல்வா இவளை பார்த்துவிட "அடேய் பாண்டி அவ நிரஞ்சன்ட்ட போய்டாடா.." என்று அலறினான்.


தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தவன் சட்டென புரைஏற தட்டை அப்படியே வைத்துவிட்டு அவர்களை நோக்கி ஓடி வந்தான்.


"எப்படியும் காலையில வரை நீ வண்டி ஓட்டணும்ல்ல.. கொஞ்சமா சாப்பிடு மீதி நான் சாப்பிடுகிறேன்.. இந்தா அழகன் கூட வந்துட்டான் அவன் கொஞ்சம் நான் கொஞ்சம் சாப்பிடுகிறேன்.." என்றவள் "என்னடா அழகா.." என்றாள்


"இல்ல வேணாம்.." என தன் அலைபேசியிலேயே நிரஞ்சன் கவிழ்ந்திருக்க "சிட்டு நீ வா.." என்றபடியே அருகே வந்தான் பாண்டி.


"ஏன்டா உன் ப்ரெண்ட் தானே..? சாப்டானா பாக்க மாட்டியா..? நீ மட்டும் திங்க வந்துட்ட.." என்றபடியே "இந்தா நேரமாச்சு சாப்பிடு.." என அவன் கை பற்றி உணவு தட்டை அதில் திணித்தாள்.



'அவ்வளவுதான் இந்தா போச்சு..' என்று பாண்டி அதிர்ந்து நிற்க ஒன்றும் பேசாமல் நின்றிருந்த நிரஞ்சனை கண்டு ஆச்சர்யபட்டான்.


நிரஞ்சனுக்கு அவள் செய்கையெல்லாம் கோபத்தை வரவழைத்தாலும் அவள் கொடுத்த உணவை கீழே எறிய மனமில்லாமல் கோபத்தை கட்டுபடுத்தி நின்றிருந்தான்.


"ஏன்டா எப்ப பாரு உம்முன்னு உர்ராங்உட்டான் மாதிரியே இருக்கான். சாப்ட சொல்றா.. ஒரு நாளைக்கு சாப்ட்டா ஒன்னும் ஆகிடாது. சாப்பாட்டை வேஸ்ட் பண்ண கூடாது.." என்றபடியே அதில் இருந்து ஒரு வாய் கொத்து பரோட்டாவைஅள்ளி ருசித்தபடியே "ணேய் பில் எவ்வளவு இன்னைக்கு என்னோட ட்ரீட்ணே.." என்றாள் சத்தமாய்.



தட்டை கையில் வைத்தபடி பாண்டியை பார்த்தவன் "யார்ரா இவ எங்கடா புடிச்ச இவளை.." என்றான்.


"அவ என்னோட சைல்ட் வுட் ப்ரெண்ட்றா நீ சாப்டு.." என்றவனை


"இந்த ஒரு வாரத்துக்கு அவ வாய பெவிகுவிக் போட்டு ஒட்டி வை இல்ல... வழியில புடிச்சு தள்ளிவிட்டு நான் பாட்டுக்கு போய்ட்டே இருப்பேன்.." என்றபடியே உணவை எடுத்து ஒரு வாய் வைத்தான். சுடச் சுட இருந்த கொத்துபரோட்டாவின் சுவை அவனுக்கும் பிடித்து போக எதுவும் பேசாமல் இரண்டே நிமிடத்தில் தட்டை காலியாக்கிவிட்டு கை கழுவினான்.



"என்னடா இது அதிசயமா இருக்கு. இவ பேசின பேச்சுக்கு தட்டை தூக்கி அவ மூஞ்சில வீசிடுவான்னு பார்த்தா பயபுள்ள கம்முன்னு சாப்டு கை கழுவுது.." என்றான் ரியாஸ் மற்றவர்களிடம்.


"சாப்பாட்டுல அவன் எப்பவும் கோவத்தை காட்டமாட்டான்டா.. அதனால தப்பிச்சா எதுக்கும் இந்த ட்ரிப் முடியுற வரை உசிரை கைல புடிச்சிட்டு தான் வரனும் போல.." என்றான் அருண்.



"ஹேய் ஸீ இஸ் வெரி இன்னொசென்ட் அண்ட் ஸ்வீட் கேர்ள் டா..எவ்ளோ அன்பா பழகறா.. ச்சோ ச்வீட்.." என தீப்தி பரிந்து வர



"அவ ஸ்வீட் தான். ஆனா அவன் காரமாச்சே.. என்ன செய்யறது. நீங்கல்லாம் அந்த வண்டில வர்றீங்க இவ பேசற பேச்சுக்கு அவன் வண்டி போற ஸ்பீட் எங்களுக்கு தானே தெரியும். சரி சரி சீக்கிரம் வாங்க.." என்றபடியே எல்லோரும் கையை கழுவிவிட்டு காரை நோக்கி விரைய


அங்கே பில்லுக்கு பணத்தை கொடுத்துவிட்டு "வரண்ணே.." என்றபடி விடைபெற்றவளை "அடிக்கடி வா பாப்பா.." என்று வழியனுப்பினர் அந்த கடையினர்.


" நம்ம கடைதான்ணே இனிமே எங்க ஸ்பாட்டே.." என்றபடியே "ஹேய் கைஸ் ஒரு நிமிஷம் இருங்க.." என்றவள் எல்லோரையும் நிற்க வைக்க கை கழுவிவிட்டு நின்ற நிரஞ்சனிடம் "ஹேய் ஹல்க் இந்தா எல்லாரையும் சேர்த்து ஒரு செல்ஃபி எடு.." என்று அவள் மொபைலை அவனிடம் திணித்தாள்.



மற்றவர் ஒருவரை ஒருவர் பார்க்க "அண்ணே இங்க பாருங்க.." என்று கூற அவரவர் வேலையில் இருந்தபடியே அவளை நோக்கி சிரிக்க அவள் பெரு விரலையும் ஆட்காட்டி விரலையும் குவித்து இதயக்குறியாய் வைத்தபடி "ம் இப்ப எடு.." என்றாள்.


அவளை முறைத்தவாறே அவன் இரண்டு மூன்று க்ளிக் செய்துவிட்டு தர


"டேய் ஆத்தா கொத்து பரோட்டா குடுத்து மந்திரிச்சுட்டா போலடா.." என்று கலாய்த்தாள் சரண்யா.


"கம்முன்னு வா வேதாளம் முருங்கை மரம் ஏறும் முன் கெளம்பிடனும்.." என்றபடியே அவரவர் இடத்தை பிடிக்க முதல் ஆளாய் தாவி குதித்து தன் இடத்தில் அமர்ந்தவள் பூஞ்சிட்டு.


நடப்பதெல்லாம் கனவா நனவா என்று அவனருகில் வந்து பாண்டி நிற்க வந்து "தொல.." என்றபடியே நடந்த நிரஞ்சனை பின் தொடர்ந்தான் பாண்டி.



தன் வாகனத்தில் ஏறி அமர்ந்தவன் வண்டியை ஸ்டார்ட் செய்து சீறி பாய "ஹூஊஊ.... ஹேய்.." என உற்சாகமாய் கூச்லிட்டாள் பூஞ்சிட்டு. "நான் சீட் பெல்ட் போட்டுக்கறேன்பா இவன் ஓட்ற ஸ்பீட்க்கு தலைவர் மாதிரி கண்ணாடியை உடைச்சிட்டு போய் வெளியே தான் விழனும்.." என்றபடி சீட் பெல்ட்டை மாட்டினாள். அவன் தன் மொபைலிலை ஜீப்பின் ஆடியோ சிஸ்டத்தோடு கனெக்ட் செய்தான்.



மேனியாக் தாறுமாறாய் இசைக்க ஆரம்பிக்க வண்டி இறக்கை இல்லாமல் பறந்தது. பின் சீட்டில் மூவரும் உயிரை கையில் பிடித்து அமர்ந்திருக்க "இவன் போற வேகத்தில எனக்கு தின்னதெல்லாம் வெளியே வந்துடும் போல டா.." என்றான் ரியாஸ்


"கம்முனு மூடிட்டு உட்காரு.." என்று அவனை அதட்டினான் அருண்.


"வந்தால் உன் மேல தான் எடுப்பேன்.." என்றவனை


"ச்சைக் கருமம் புடிச்சவனே கம்முனு உக்காந்துட்டு வாடா.." என்று பாண்டி அதட்ட



"இப்படி பாஷை தெரியாத பாட்ட போடறதுக்கு பதிலாக நம்ம ஊரு குத்து பாட்டை போடு மேன் குஜாலா இருக்கும்.." என்ற சிட்டுவிடம்


"நீ கொஞ்சம் பேசாம வர்றியா.." என்றான் பாண்டி.



"பேசாம வந்தா அவன் எப்படி வண்டி ஓட்டுவான். நான் இப்ப செம ஜாலி மூடுல இருக்கேன் உனக்கே தெரியும்ல்ல இப்படி எல்லாம் வெளியே ஊர் சுத்த நான் எவ்வளவு ஆசைப்படுவேன். சூப்பர் டா அழகா உன்ன பாக்க வந்த அன்னைக்கே என்னை ட்ரிப்புக்கு கூட்டிட்டு வந்துட்ட ஐ லைக் யூ... என்ன இந்த ஹல்க் மட்டும் இந்த இஞ்சி மூஞ்ச மாத்திக்கிட்டா இன்னும் சூப்பரா இருக்கும்.." என்று ஒரே போடாய் போட


'ஐயோ ஆத்தி போட்டு கொடுக்கிறாளே..' என்று எண்ணியவாறு "இங்க பாரு சொல்லாம கொள்ளாம வந்துட்ட உன்னை கடைசி நேரத்துல என்ன பண்றதுன்னு தெரியாம கூட்டிட்டு வந்து இருக்கேன். இந்த ஒரு வாரம் கொஞ்சம் அமைதியா வா உனக்கு கோடி கும்பிடு.." என்றான்


"அமைதியாவா அப்படின்னா.." என்றாள் குறும்பாய்



"அதானே அவ கிட்ட போய் அமைதியை பத்தி பேசுற இதுக்கு நீ இந்த ஓடுற வண்டியில் இருந்து வெளியே குதிச்சிடலாம்.." என்றான் ரியாஸ்.


"டேய் பாட்டை மாத்த சொல்லுடா.. இந்த பாட்டெல்லாம் மனுஷன் கேப்பானா..? என்றவளை முறைத்தான் நிரஞ்சன்.


"ன்னா லுக்கு.." இன்று வடிவேலு பாணியில் இவள் கூற பின்னிருக்கையில் அருணுக்கும், ரியாசுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. பாண்டிக்கோ 'இவ தேரை இழுத்து தெருவுல விடாமல் விடமாட்ட போல..' என்று பயத்திலேயே அமர்ந்திருந்தான்.


"ஒழுங்கா பாட்டை மாத்து இல்லைனா நான் பாட்டுக்கு தூங்கிட்டு வருவேன் டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறவங்க தூங்காம வந்தாதான் வண்டி ஓட்டுறவங்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்கும்னு சொல்வாங்க அதுக்கு மேல உன் இஷ்டம் பா.." என்றவளை முறைத்தபடியே


"டேய் பாண்டி நீயே ஆடியோ கனெக்ட் பண்ணி ஏதாவது ஒன்னு போட்டு தொல.." என்றான் நிரஞ்சன்.


"நோ நோ நான் போடறேன் நான் போடறேன்.." என்று அவளது மொபைலில் ஆடியோ சிஸ்டத்தோடு கனெக்ட் செய்தாள்.


"அடியே மனம் நில்லான்னா நிக்காத டி கொடியே எனக்கண்டு நீ சொக்காதடி தாப்பால போறாம கேப்பாவை கேட்காம கூப்பாடு போடாதடி.." என அவள் ப்ளே லிஸ்ட் ஒலிக்க ஆரம்பிக்க


பின்னால் அமர்ந்திருந்த ரியாஸ், அருண் மட்டுமல்ல பாண்டிக்கும் சிரிப்பு அடக்க முடியவில்லை. அவன் ஓட விட்ட மானியாக்கிற்கும் இவளது பிளேலிஸ்ட் இருக்கும் இருந்த ஏழாம் பொருத்தத்தை கண்டு சிரிப்பு பீறிட வயிற்றைப் பிடித்துக் கொண்டு சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தான் ரியாஸ்.


"அவன் மட்டும் உன்ன பார்த்தா நீ செத்தடி.." என்று அருணும் கமுக்கமாய் சிரித்துக்கொண்டிருக்க, பாண்டி மட்டும் சிரிப்பை அடக்க முடியாமல் "ஏண்டி இதுதான் உன் ப்ளேஸ்ட்டா.." என்றான்



"கேளு.. கேளு.. இன்னும் வரம் கேளு.. கேட்டு என்ஜாய் பண்ணுடா.. எவ்வளவு எனர்ஜடிக்கா இருக்கும் பாரு.. நம்ம தலைவி சில்க் ஓட பாட்டு எல்லாமே சும்மா தாறுமாறு தக்காளி சோறா இருக்கும் தெரியுமா.." என்றாள்


"சில்க் தலைவியா.... ஆம்பளைங்க நாங்க சில்க்ஐ ரசிக்கிறோம் அதுல ஒரு நியாயம் இருக்கு. நீ பொம்பள புள்ள.. நீ சில்க்கை தலைவின்கிற..? என்று அருண் கேட்க


"ஏன் பொம்பள புள்ளைங்க இன்னொரு பொம்பளைய ரசிக்க கூடாதா என்ன..? தலைவியோட அந்த கண்ணும், அவங்க உதடும் அவங்களோட கொஞ்சி பேசற அழகும், அவங்களோட ஸ்டைலும், அவங்க கிளாமரும், வாவ்.. சொல்லிக்கிட்டே போகலாம். இதையெல்லாம் யாராவது ரசிக்காம இருப்பாங்களா..? என்று கேட்டு அனைவரையும் அதிர வைத்தாள்.



வருவாள்....
 

New Threads

Top Bottom