Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Tamil Novels Poonjittu- 6

அத்தியாயம் -6


ரசனைக்கு ஆண் பெண் பேதமில்லை. வயதில்லை. எதையும் யாரும் எந்த வயதிலும் ரசிக்கலாம். பூஞ்சிட்டுவின் ரசனைகள் எல்லாம் பார்பவர்கள் கண்களுக்கு வித்தியாசமாய் தெரியும். பூக்களை பறிக்காமல் ரசிப்பாள். ஆசையாய் இருந்தால் ஒன்றே ஒன்றை அதன் காம்புக்கு வலிக்காமல் கிள்ளி தலையில் வைத்துக் கொள்வாள். வாடினால் கூட தூக்கி எறிய மனம் வராது புத்தகத்தின் நடுவில் வைத்து பாதுகாப்பாள். பள்ளி நாட்களில் எல்லாம் எங்கே நாய்க்குட்டி பூனைக்குட்டி கண்டாலும் தூக்கி வந்துவிடுவாள். அவள் வீட்டை சுற்றி பத்து பதினைந்து நாய்கள் எப்போதுமிருக்கும்.


பூனைக்குட்டிகளை பையில் போட்டு கொண்டு வந்து பள்ளியில் விநயோகிப்பாள் ஆளுக்கு ஒன்னு என்பாள். எங்கம்மா திட்டும் என்று யாராவது சொன்னால் எங்கம்மாவும் தான்டா திட்டுச்சு இப்ப பாரு அதுதான் கொஞ்சிட்டு கெடக்கு என்று சமாதனாமாக்குவாள்.


எருமை மேல் ஏறி சவாரி செய்வாள். புத்தகத்தை கையில் ஏந்தியபடி மாட்டின் மீது இவள் அமர்ந்திருப்பதை பார்த்து கொல்லென்று சிரிக்கும் விடலைகளை மாட்டை விரட்டியே ஓட விடுவாள்.


பட்டம் பூச்சிகளை ஈர்க்கும் பூக்களையும் தேன்களையும் கொண்ட செடிகளை பார்த்து பார்த்து தன் வீட்டைச் சுற்றி வளர்ப்பாள். அந்தப் பூக்களையும் தேன்களையும் சுற்றி வரும் பட்டாம் பூச்சிகளை கண்டு மெய் மறந்து நிற்பாள். ஊர் குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு காடு மலையென திரிவாள்.


ஊர் மந்தையில் தாயம் விளையாடும் பெரிசுகளோடு கதைபேசி அவளும் விளையாடுவாள்.


பாம்படம் போட்ட கிழவிகளிடம் கதை சொல்ல கேட்டு மல்லுக்கு நிற்பாள். வீட்டில் செய்த திண்பண்டங்களை கொண்டு வந்து அவர்களோடு சேர்ந்து தின்பாள்.


பனைமரமேறி கள்ளை திருடிக் குடிப்பாள். ஒரு மரத்தில் திருடினால் தெரிந்து போகும் என்று மடியில் கட்டி வந்த நெத்திலி கருவாடோடு அடுத்த மரத்தில் ஏறுவாள்.

லேசான கிறக்கத்தோடு ஊரை சுற்றி விட்டு கிறக்கம் மறைந்ததும் வீடு வந்து சேர்வாள்.


மொத்தத்தில் அந்த கிராமத்தின் செல்ல பிள்ளையும் அவள், சேட்டை பிள்ளையும் அவள்தான். ஒரு வழியாய் கல்லூரி முடித்து கேம்பஸ்ஸிலேயே செலக்ட் ஆகிவிட அடம்பிடித்து சென்னை வந்து சேர்ந்தாள்.


"நேத்து ராத்திரி..

தூக்கம் போச்சுடி.. நேத்து ராத்திரி யம்மா.. தூக்கம் போச்சுடி யம்மா.. என்ற பாடலோடு அவளும் பாவங்களோடு பாட நிரஞ்சன் அவஸ்தையாய் பாண்டியை நோக்க ரியாஸும் அருணும் வாயை பொத்திக்கொண்டு சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருந்தனர். "என்ஜாய் பண்றா நிரஞ்சா இதுக்கெல்லாம் முறைப்பாங்க.." என்று பாண்டி துணிந்துவிட


"ஒழுங்கா இவளை பின்னாடி தள்ளிட்டு நீ முன்னாடி வந்து சேர இல்ல உன்ன கொன்றுவேன்.." என்று பல்லை கடித்தான்.


"நோ.. நோ.. இந்த ட்ரிப் முடிகிற வரைக்கும் இதான் என் சீட்டு. நான் எல்லாம் பின்னாடி போக மாட்டேன்.." என்று அடமாய் அமர்ந்திருந்தாள். ஏழு எட்டு பாட்டுகள் முடிந்திருக்க ஒரு குறட்டை ஒலி 'யார்ரா அது..' என்று அனைவரும் ஒருவரை ஒருவர் பார்க்க அது சிட்டுவின் குறட்டை.


"இவதான் விடிய விடிய தூங்காம வர்றவளா இந்த குட்டி பிசாசு தூக்கி பின்னாடி போடுடா பாண்டி.." என்றான் நிரஞ்சன். சிரிப்பு தாளவில்லை பாண்டிக்கு.


"இருடா இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் ஆகட்டும் தூக்கம் கலைந்து எந்திரிச்சா சாமி ஆடிடுவா ஒரு பத்து நிமிஷம் பொறுத்து வண்டியை ஓரங்கட்டு.." என்று கூற அதேபோல் பத்து நிமிடம் கழித்து தன் வாகனத்தை ஓரம் கட்டி நிறுத்தினான் நிரஞ்சன்.


உறங்கிக் கொண்டிருந்தவளை அலேக்காய் தூக்கி பின் இருக்கைக்கு கொண்டு வந்தான். அங்கு அவளுக்கு இசைவாய் சீட்டை சாய்த்து குஷன் தலையணையை ரியாஸ் எடுத்து வைக்க அதில் அவளை கிடத்தினான் பாண்டி.


முன்னேற்பாடாய் அவர்கள் கொண்டு வந்திருந்த போர்வையில் ஒன்றையும் எடுத்த அவளுக்கு போர்த்தி விட்டவன் "பாத்துக்கோங்கடா.." என்றபடியே முன்னிருக்கைக்கு சென்றான்.


"ஏன் நீ என்ன வெளிநாடா போற..? முன்னாடி சீட்லதானே இருக்க போற.. அப்புறம் என்ன போடா.. ரொம்ப தான்.." என்ற ரியாஸூம் கொஞ்ச நேரத்தில் உறங்கி போனான்.


பாண்டியும், நிரஞ்சனும் மாற்றி மாற்றி வாகனத்தை செலுத்த வாகனம் சீறிப்பாய்ந்தது.


காலை ஏழு மணிக்கெல்லாம் கொடைக்கானலை எட்டி இருந்தது அவர்கள் வாகனம். இடையே அருணும், ரியாஸூம் மாற்றி செல்வாவின் வாகனத்தை இயக்க சிநேகிதிகள் அனைவரும் உறங்கியபடியே பத்திரமாய் கொடைக்கானலை நெருங்கிக் கொண்டிருந்தனர்.


"பாண்டி ஒரு டீ சாப்டு போவோம் டா.." என்ற நிரஞ்சனின் குரலுக்கு வாகனம் ஒரு கடையை ஒட்டி நின்றது.


பின்னே வந்த ரியாஸூம் நிறுத்த

வாகனம் நின்றதும் எல்லோரும் தானாய் உறக்கம் களைந்து எழ சிட்டு மட்டும் இன்னும் இருக்க போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தாள்.


கையை உயர்த்தி சோம்பலை முறித்தவரே "என்னடா சரியான கும்பகர்ணி போல.. வண்டி நின்னு விடிஞ்சது கூட தெரியாம இன்னும் தூங்குறா.." என்றான் செல்வா.


"இடியே விழுந்தாலும் அவ எந்திரிக்க மாட்டாடா, எட்டரை மணி ஸ்கூலுக்கு எட்டு மணிக்கு எந்திரிச்சு காக்கா குளியல் போட்டு பத்து நிமிஷத்துல கிளம்பி ஸ்கூல் ஓடுவா. இன்னும் மேடம் எழுந்திருக்க ஒரு மணிநேரம் ஆகும்..." என்றபடி கடையை நோக்கி நடந்தான்.


காரை விட்டு கீழே இறங்கியவன் கதவை பலமாய் சாத்த பொத்தென்று சத்தம் கேட்டது. பாண்டி முன்னே போயிருக்க நிரஞ்சனும் அருணும் இறங்கி நின்றிருந்தனர். சத்தத்தை கேட்டு அவர்கள் பின்னே பார்க்க சீட்டில் இருந்து கீழே விழுந்திருந்தாள் பூஞ்சிட்டு. விழுந்தது கூட தெரியாது அவள் உறக்கத்தைத் தொடர சிரித்து விட்டான் நிரஞ்சன்.



அருணும் அதை கண்டு சத்தமாய் சிரித்தாலும் நிரஞ்சனை அதிசயமாய் பார்த்தான்.


"என்ன பிறவிடா இவ.." என்றபடியே "நல்லா லாக் பண்ணிட்டு வா லூசு எங்கயாவது எழுந்து ஓடிட போகுது.." என்றுவிட்டு முன்னே செல்லும் நிரஞ்சனை பார்த்தபடியே அந்த வாகனத்தின் கதவுகளை பாதுகாப்பாய் மூடிவிட்டு அவர்களை தொடர்ந்தான் அருண்.


பெண்கள் மூவரும் தங்கள் உடைகளை திருத்திக் கொண்டு கூந்தலை தூக்கி கிளிப்பை போட்டுக்கொண்டு டீக்கடைக்கு வந்தவர்கள் "எங்கடா பூஞ்சிட்ட காணோம்.." என்று கேட்க


"அவ இன்னும் எழுந்திருக்கல சீட்ல இருந்து கீழே விழுந்தது கூட தெரியாம இன்னும் தூங்குற.." என்று சிரித்தபடி கூறினான் அருண்.


"என்ன விழுந்துட்டாளா.." என்று பாண்டி பதற


"அவ விழுந்தா ஒன்னும் ஆகிடாது சரியா.. நீ ஒழுங்கா டீ ய குடி.." என்று நிரஞ்சன் பாண்டியை முறைத்தான்


"நம்ம நிரஞ்சனையே சிரிக்க வச்சுட்டாடா உன்னோட பூஞ்சிட்டு.." என்ற அருணை


"அந்த லூசு பார்த்தா யாரு தான் சிரிக்க மாட்டாங்க.. சீட்ல இருந்து கீழே விழுந்து கூட தூங்குறானா... நிஜம்மாவே இவளை எங்கடா புடிச்ச..? இன்னும் ஏழு நாள் இவளோட எப்படி இந்த ட்ரிப் வரப்போறேனோ.." என்றபடி டீக்கான காசை கொடுத்துவிட்டு கிளம்ப நண்பர்கள் குழு ஒருவரை ஒருவர் மௌனமாய் பார்த்து சிரித்துக் கொண்டது.


வாகனத்தை நிரஞ்சன் ஓட்டுவதற்காய் ஓட்டுநர் இருக்கையில் அமர பாண்டி கீழே விழுந்து கிடந்தவளை எழுப்பி சீட்டில் படுக்க வைக்க போக


"அவ அப்படியே கெடக்கட்டும் ஒழுங்கு மரியாதையா முன்னாடி வந்து உட்காரு. அவளுக்கு ஒன்னும் ஆகிடாது..." என்று அவனை அதட்டினான்.


அவளை திரும்பிப் பார்த்தபடியே அவன் தன் இருகை வந்த அமர வாகனம் கொடைக்கானல் சாலையில் மிதந்தது.


அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்கள் ஏற்கனவே புக் செய்து வைத்திருந்த ரிசார்டை வந்தடைந்தனர்.


வாகனத்தை அங்கிருந்த பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு நிரஞ்சன் கீழே இறங்க அவன் நிறுத்திய வேகத்தில் முன்னிருக்கையில் இடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்திருந்தாள் பூஞ்சிட்டு.


இறங்கியவுடன் இவளை பார்க்க வென பாண்டியும் அந்த கதவை திறந்து இருக்க மலங்க மலங்க விழித்தபடி அமர்ந்திருந்தவளை பார்த்து சிரிப்பு பொறுத்துக் கொண்டு வந்தது பாண்டிக்கு.


ஒரு வழியாய் அவள் நடப்புக்கு வர "நான் இங்கே எப்படிடா வந்தேன்..? நான் அந்த சீட்டில் தான் உட்காருவேன்னு சொல்லிட்டு தானே உட்கார்ந்தேன். என்னை யார்ரா இங்க கொண்டு இப்படி போட்டா..? அதுவும் ஏண்டா இப்படி கீழ போட்டு வச்சிருக்கீங்க..? என்றாள் அப்பாவியாய்.


"உன்னை யார் கீழே போட்டா.. நீயே தான் உருண்டு கீழே விழுந்த.. அது கூட தெரியாம தூங்கிட்டு கிடக்குற.." என்று ரியாஸ் சிரிக்க



"முன்னாடி தானே உட்கார்ந்திருந்தேன். அப்படியே தாவி வந்து இங்கு உருண்டு விழுந்தேனா..? கதை விடுவதற்கும் ஒரு அளவில்லையாடா..? என்றாள் ரியாஸ் நோக்கி


"என்னடா இவ சகட்டு மேனிக்கு எல்லாரையும் வாடா போடாங்கறா.." என்று செல்வா பாண்டியை கேட்க


"அவங்க அப்பனையே அப்படித்தான் கூப்பிடுவா..." என்றான் பாண்டி.


"எதே..." என்று எல்லோரும் அதிர்ச்சி ஆக


"ஷாக்க கொறைங்கடா.." என்றபடி "நீ எழுந்து வா.." என்று சிட்டுவிடம் கூறியவரே லக்கேஜ்களை இறக்கி கொண்டிருந்தான்.



சோம்பல் முறித்த வாரே போர்வை இழுத்துப் போர்த்திக் கொண்டு கீழே இறங்கியவளே பார்த்து எல்லோரும் கொல் என்று சிரிக்க என்ன என்று நிரஞ்சன் திரும்பி பார்த்தான்.


இரவில் அவளை கண்டபோது அவள் முடிகளை சுருட்டி கிளிப் போட்டிருந்ததாலும் இருந்ததாலும் குளித்துவிட்டு வந்த போது ஈரத் தலையுடன் இருந்ததாலும் அவளின் கூந்தல் அவ்வளவாய் யாருமே கவனிக்கவில்லை. அடர்ந்த சுருண்ட கூந்தல் அவள் தோள் தாண்டி கலைந்து புசு புசுவென இருக்க அவள் உருவத்திற்கு அவள் கூந்தலுக்கும் பார்த்தவுடன் இவர்கள் சிரிக்க


அவள் கூந்தலை கண்ட அலென்னாவும் சரண்யாவும் "ஹேய் வாவ் செம்ம கர்லி ஹேர் சிட்டு.._ உனக்கு என்று கூறினர்


"அட போங்கப்பா இதை சிக்கெடுக்கறதுகுள்ள நான் படுற பாடு எனக்கு தானே தெரியும்.." என்றபடியே தன் கூந்தலை அள்ளி முடிந்து கிள்ளிப்பிள்குள் அடக்கினாள்.


நிரஞ்சன் அவன் ட்ராலிபேக்கோடு ரிசார்ட்னுல் செல்ல அவனை தொடர்ந்தனர் அனைவரும். அங்கு அவர்களுக்காய் ஒதுக்கப்பட்டிருந்த தனி காட்டேஜை காட்ட அவரவர் தங்கள் உடமைகளோடு அங்க சென்றனர்.



"ஹேய் குணா கேவ் கண்டிப்பா போகனும்பா..." என தீப்தி கூற


"ம்க்கூம் மஞ்சுமல்பாஸ்ன்னு நெனப்பு... அதுவும் இவனை கூட வெச்சிட்டு.." என நிரஞ்சனை காட்டி சிட்டு கூறினாள்


"யேய் சுபாஷ் மாதிரி உள்ள விழுந்துட்டா என்னையெல்லாம் காப்பாத்துவீங்களாடா ..? என பாண்டி கேட்டான்.


"கண்டிப்பா இவனால காப்பாத்த முடியாது.." என்று பாண்டியின் காதோடு ரகசியம் பேசினாள் அவள்.


"ஏன்...‌? அதெல்லாம் அவன் காப்பாத்துவான்.." என்றான் அவளை முறைத்தபடி


"ம்க்கூம் அவன் இறக்குற அகலத்துக்கு இறங்கும் போதே பாறைக்கு நடுவ மாட்டிக்குவான். அப்புறம் எங்கே அவன் உன்னை காப்பாத்தறது. அவனை காப்பாத்த அப்புறம் ஒரு ஜேசிபி வந்து பாறைய உடைச்சு அவனை தூக்கனும். அதுவரை நீ உசிரோட இருப்ப..? என்றாள் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு.


அவள் கூறிய தொணியில் பாண்டி வாய்விட்டு சிரித்துவிட எப்போது வந்தானோ நிரஞ்சன் பற்களை நறநறத்தபடி அருகே நின்றிருந்தான்.


'அய்யோ ஆத்தீ இவன் எப்ப வந்தான்னு தெர்லயே..' என்று பாண்டி சிரிப்பை அடக்க முயல சிட்டு மேலும் தொடர்ந்தாள்.


"இங்க பாரு நீ கவலையே படாதே நீ உள்ள விழுந்தா நான் வந்து உன்னை காப்பாத்தறேன். ஈசியா நான் உள்ள நுழைஞ்சு வந்துடுவேன் தெரியுமா.." என்றாள் மிடுக்காக



"ஆமாடா எலியெல்லாம் எந்த பொந்துக்குள்ள வேணாலும் ஈசியா நுழைஞ்சு வந்துடும். அதிலும் எலிகுஞ்சு வராதா என்ன..? என்ன அதால உன்னை தூக்கிட்டு வரமுடியுமான்னு தான் டவுட்டே...? என்றான் நிரஞ்சன் பல்லைக் கடித்தபடி.



'ஓஓ... இந்த ஹல்க் பய இங்க தான் இருக்கானா...? என்று எண்ணியவாறே... "மேல நீ சும்மா தானே வேடிக்கை பார்ப்ப... கயிறை நீ இழு ஈசியா மேல வந்திருவோம். அதிலும் பத்து பேர்லா தேவையில்லை நீ ஒத்த ஆளு போதும்.." என்றபடியே கண்ணடித்தவள் "என்னடா அழகா ரைட் தானே..? என்றாள் பாண்டியை நோக்கி.



"அது சரி... இந்த டிரிப் முடியறதுக்குள்ள இன்னும் என்னென்ன பாக்கனுமோ. யப்பா பாண்டி அய்யா என்னைய காப்பாத்தய்யா.." என்று வேண்டியபடியே நிரஞ்சனை நோக்கினான். அங்கே அவனை பார்வையால் எரித்துக் கொண்டிருந்தான் அவன் நண்பன்.



வருவாள்..
 

New Threads

Top Bottom