Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Tamil Novels Poonjittu -7

அத்தியாயம் 7

மேற்கு தொடர்ச்சி மலையின் குளுமையான அழகு பார்க்க பார்க்க திகட்டவில்லை அனைவருக்கும். அந்த காட்டேஜை சுற்றிலும் பச்சை பசேலென மலைத்தொடர்கள் அவற்றை தழுவியபடி தவழும் மேகங்கள்‌. மூடுபனிகள் மறைத்த பைன் மரக் காடுகள். பச்சை படுக்கை விரித்தது போன்ற தேயிலைத் தோட்டங்கள். காட்டேஜை உட்புறம் அழகாய் வளர்க்கப்பட்டு பராமறிக்கபட்ட தோட்டங்கள். அதில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் என அத்தனையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது நிரஞ்சனுக்கு. வெளிநாட்டில் வசித்தவன் என்றாலும் நம் மண்ணிற்கே உண்டான அழகில் மெய் மறந்து நின்றிருந்தான்.


மற்றவர்கள் சுற்றிலும் பார்த்துவிட்டு அவர்களது பொருட்களை வைக்கவென உள்ளே செல்ல, நிரஞ்சன் மட்டும் இலக்கற்று வெண்மேகங்களுக்கும் அப்பால் தெரிந்த மேற்கு தொடர்ச்சி மலையின் மலைமுகட்டை பார்த்துக் கொண்டிருந்தான். ஏதேதோ நினைவுகள் அவனை சுழற்றியடித்துக் கொண்டிருக்க


"அங்கே என்ன தெரிகிறது..." என்று வடிவேலு பாணியில் சிட்டுவின் குரல் அவனை களைத்தது. அவளை ஏறெடுத்தும் பாராமல் காட்டேஜினுள் சென்றான்.


"ஓய் ஹல்க்.." என்ற அவள் குரல் அவனுக்கு கேட்டதாய் கூட தெரியவில்லை.

"என்ன எப்ப பாரு இஞ்சி தின்ன மாதிரியே இருக்கான். சரியில்லையே..." என்று தனக்கு தானே பேசிக் கொண்டவள் "எப்படியும் ஒரு வாரம் நானும் அவன் கூட தானே சுத்த போறேன் ஒரு கை பாத்துடலாம்.._ என்ற படியே காட்டேஜினுள் ஓடினாள்.

அடுத்த அரை மணியில் அனைவரும் தயாராகும் படி நிரஞ்சன் கூறியிருக்க எல்லோரும் புறப்பட்டு கொண்டிருந்தனர்.

இருபது நிமிடத்தில் தயாராகி வெளியே வந்தாள் பூஞ்சிட்டு. ப்ளூ ஆங்கிள் ஜீன்ஸ், வைலட் ஹூடி தோளில் ஒரு சின்ன பேக் கால்களில் க்ரே ஷூ அணிந்து இரண்டு புறமும் சிறு கற்றையாய் முடியெடுத்து கிளிப்புக்குள் அடக்கி கண்களுக்கு லைனர் போட்டிருந்தாள். நெற்றியில் நெளியாய் அதே ஐ லைனரில் வரைந்திருந்தாள்.

"ஹேய் எப்படி பா இவ்வளோ சீக்கிரமா ரெடியாகுற.." என்ற தீப்தி "சொன்ன டைம்க்கு போகலேன்னா இந்த நிரஞ்சனை சமாளிக்க முடியாது.." என்றவள் என்ன உடுப்பது என்பதையே தீர்மானிக்க முடியாமல் தேடிக்கொண்டிருந்தாள்.

"இப்படி தேடினா நீ நாளைக்கு தான் கெளம்புவ அந்த இஞ்சி வந்து உன்னை சூப் வெக்கறது உறுதி. இந்தா இதை போடு.." என பேசியபடியே ஒரு ஹுடியும் ஜீனயும் எடுத்து நீட்டினாள்

"ஹய் தேங்க்ஸ் ப்ரோ.." என்றபடியே அவள் உடையை மாற்றப்போக இவள் அறையேவிட்டு வெளியேறினாள்.


அழகான மலைமுகடுகளையும் முகத்தில் மோதிச் செல்லும் பனிகாற்றையும் ரசித்தவாறே அங்குள்ள பூக்களை படமெடுத்தாள். பூக்களோடு பூக்களாய் தரையில் அமர்ந்தவாறு சில செல்ஃபி களை க்ளிக்கினாள். அந்த ரெசார்ட் காட்டேஜின் ஒரு புறம் சறுக்கு மரம், ஊஞ்சல் என்றிருக்க "ஹய்.." என்று உற்சாகத்தோடு ஓடி சென்றவள் சறுக்கி விளையாட ஆரம்பித்தாள்

அங்கே ரூமில் பாண்டி நிரஞ்சனிடம் சரியான மண்டகப்படி வாங்கிக்கொண்டிருந்தான். "அந்த குட்டி கொரங்க அந்த வண்டில கொண்டு போய் தள்ளு. சும்மா ஸ்பீக்கரை முழுங்கின மாதிரி எப்ப பாரு கைய மைய.. கைய முயன்னு பேசிக்கிட்டே இருக்கா.. இரி டேட்டிங் பெல்லோ. கொஞ்சம் கூட அடுத்தவங்க என்ன யோசிப்பாங்கன்னு இங்கிதம் இல்லாம நடந்துக்கிறா.. இந்த ட்ரிப் ஒழுங்கா போகணும்னா அவளை அந்த வண்டில தள்ளு... வேணும்னா நீயும் அவள் கூடவே போ. எனக்கு ஒரு அப்ஜெக்ஷனும் இல்ல.." என்றான் முகத்தை கடுகடுப்பாய் வைத்தபடி.

"டேய் அவ கேரக்டர் அப்படித்தான்டா. ரொம்ப சுட்டியான பொண்ணு. ஜாலியா இருப்பா. அவ மனசுக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்வா.. மத்தபடி யாரையும் காயப்படுத்தனும்னு நினைக்க மாட்டாடா.. பாரேன் இன்னைக்கு ஒரு நாள் அவ கூட சுத்தி பாரு உனக்கே அவளை பிடிக்கும்.." என்று நிறுத்த

"எனக்கு ஏன்டா அவளை புடிக்கனும். ஒரு மண்ணும் தேவையில்லை எவளையும் எனக்கு பிடிக்கும்னு அவசியமில்லை. அவ உன்னோட ப்ரெண்ட் அதோட நிறுத்திக்கோ வேற எதையும் ட்ரை பண்ணாத..." என்று தன் கோப முகத்தை நிரஞ்சன் காட்ட

"ஏய் நான் என்ன சொல்றேன் நீ என்ன சொல்ற.. சரி டென்ஷன் ஆகாத ஜாலியா ட்ரிப் வந்திருக்கோம். இதுல எதுக்கு டென்ஷன் ஆயிட்டு இருக்க.. சரி வா கிளம்பு போவோம்.." என்று அவனை சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்தான். அதற்குள் மற்றவர்களும் அவரவர் அறையை விட்டு வெளியே வர

"நிரஞ்சா என்ன பிளான் ஃபர்ஸ்ட் எங்க போறோம்..? இன்னைக்கு எங்க போக போறோன்னு ஐடியா இருக்கா..? என்றாவாறே வெளியே வர அங்கே சறுக்கு மரத்தில் "ஹேஏஏஏ.." என்று கத்திய படி சருக்கிக் கொண்டிருந்தாள் பூஞ்சிட்டு.


ஒரு கணம் அவளைக் கண்டு மலைத்து நின்றார்கள். "ஹேய் மச்சான் வாங்கடா..." என்று அவள் அழைக்க


"எதே மச்சானா..." என்று செல்வா ஜெர்க் ஆக

"நீயெல்லாம் என்னடா ஐடில வேலை செய்யுற.. மச்சான், மச்சி, ப்ரோ எல்லாம் இப்ப கேஷூவல் வேர்ட்ஸ் தானே..? என்றவாறே மறுபடியும் சறுக்கி வந்தாள். அவளை பார்த்து நின்றவர்களை

"போனா வராது பொழுது போனா கிடைக்காது.. ஹே வாங்கே.. வாங்கே.. வாங்கே .." என்று அவள் கூவ
அடுத்த கனம் தங்கள் வயதை மறந்து அவளோடு குழந்தையாய் அனைவரும் விளையாட ஆரம்பித்தனர்.

இதெயெல்லாம் தனது பாக்கெட்டில் கை வைத்தபடி பார்த்திருந்தவன் "போ நீ மட்டும் ஏன் நிக்கற நீயும் போய் ஆடு போ.." என்றான் நிரஞ்சன்.


பாண்டிக்கும் ஆசை தான். "நீயும் வாடா.." என்று நண்பனை அழைக்க அவன் முறைத்ததிலேயே அவனுக்கு புரிந்து போயிற்று. கும்பலோடு பாண்டியும் ஐக்கியமாக

"என்னடா உன்னோட கங்காரு உன்னை இறக்கி விட்ருச்சா.." என்று பூஞ்சிட்டு கேட்க

கூட்டத்தில் சிரிப்பு சத்தம் அலைமோதியது.

"அடியே அவன் காதுக்கு கேட்டுச்சு.. அவ்ளோதான்..." பாண்டி உரும


"ஆமா இவுரு பெரிய சீவலப்பேரி பாண்டி.. அறுவாளோட தா திரியுறாரு.. அப்படியே வீசிட்டுத்தா வேற வேலை. போடா டேய் போடா.. அவனொரு இவன், நீ ஒரு அவன். வந்துட்டான் வரிஞ்சிட்டு.._ என சகட்டு மேனிக்கு அர்ச்சித்தாள் நிரஞ்சனை.

ஊஞ்சலிலும் சறுக்கு மரத்திலும் விளையாடியவர்களை அடுத்து சீசாவுக்கு பூஞ்சிட்டு அலைக்க

ரீயாஸ் ஓடிச்சென்று அமர அவன் பாரத்தை எதிர்பாராதவள் அந்தரத்தில் பறந்து கீழே விழுந்து "ஐய்யோ.." என கத்த பதறிப் போனான் ரியாஸ்.

"அச்சச்சோ.." என்றவரே மற்றவர்களும் ஓடி வந்து அவளை தூக்க... கீழே விழுந்து புரண்டு சிரித்துக் கொண்டிருந்தாள் அவள்


"ஏன்டா எருமை சொல்லிட்டு ஏற மாட்டியாடா..? என்ன தீனிடா தின்பீங்க நீங்க எல்லாம்..? இவ்வளவு வெயிட்டா இருக்க..! என்று சிரித்துக் கொண்டே கேட்க பயந்து பதறி இருந்த ரியாசுக்கு அப்பொழுதுதான் மூச்சு விட முடிந்தது. ஏனெனில் அவள் விழுந்தது அப்படி. இதுவே வேறு ஒருவர் என்றால் என்ன ஆகி இருக்கும் என்று யோசித்தவன்

"ஏ.. பூஞ்சிட்டு சாரிமா.. நிஜமா நான் வேணும்னு செய்யல ஜாலியா விளையாட வந்தேன் இப்படி ஆகும்னு நினைக்கல..." என்று வருத்தப்பட அவள் எழுந்து கை கால்களை உதறி கொண்டு

"டேய் உப்பு மூட்ட... வா விளையாடலாம் உன்னோட வயலின் சவுண்ட கொஞ்ச நேரம் ஆப் பண்ணு.." என்றபடி திரும்ப சீசாவில் ஏறினாள்.

பாண்டி அங்கிருந்தபடியே "சிட்டு ஒன்னும் ஆகல இல்ல.." என்று கேட்க

"அதெல்லாம் ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல.. நீ பராக்கு பாக்காம ஒழுங்கா விளையாடு.. ஆமா காலையில டிபன் எங்க இங்கே வா இல்ல வெளியே போகணுமா..? எனக்கு பசிக்குது .." என்று கத்தினாள்.

விசித்திரமாய் அவளை பார்த்தபடி சீசாவில் வந்து அமர்ந்த ரியாஸ் அவர்கள் கூறியதை கேட்டு சிரித்து விட "ஏன்டா சிரிக்கிற உனக்கு எல்லாம் பசிக்காதா. உனக்கு சேர்த்து தானே நான் கேட்கிறேன்.." என்றபடியே அவனோடு சீசாவில் மல்லுக்கு நின்று கொண்டிருந்தாள். ரியாசின் கனத்திற்கு மேலே போனவள் கீழே வரவே முடியாமல் "டேய் அழகா என்ன வந்து இந்த உப்பு முட்டை கிட்ட இருந்து காப்பாத்துடா.. என்னா கனம் கனக்குறான். டேய் பம்பரகட்ட வாடா.."கத்தி கூப்பாடு போட அந்தரத்தில் அமர்ந்து கை காலை உதறி கீழே வர அவள் செய்த முயற்சிகளை பார்த்து அனைவரும் சிரித்துக் கொண்டிருக்க அந்த இடத்தின் அமளி துமளியை கண்டு எல்லோரும் வேடிக்கை பார்க்கலையினர். ரிசார்டின் உள்ளே காலை உணவுக்காய் பார்க்க சென்றிருந்தவன் வெளியே வர அவனை பார்த்ததும் சத்தம் ஒரு வாறு அடங்கிப் போயிற்று.


சத்தம் நின்று போனதும் நிரஞ்சன் வந்ததை உணர்ந்து சீசாவை மெல்ல சமனுக்கு கொண்டு வர அந்த நொடியை பயன்படுத்தியவள் பட்டென சீசாவில் கீழே இருந்த ரியாசை மேலே தூக்கிருந்தாள்.


"மாட்டுனியா மாட்டுனிடியா.... யாருகிட்ட ங்கொய்யால.. பூஞ்சிட்டுடா.." என்று சிட்டு டைலாகை அவிழ்த்து விட மீண்டும் அங்கே சிரிப்பொலி பரவியது.

"காய்ஸ் பிரேக் பாஸ்ட் இங்கே முடிச்சுட்டு கிளம்பிடலாம். எல்லாரும் வாங்க.." என்றபடி நிரஞ்சன் உள்ளே சென்றான்.


ரியாஸ் சீசாவை சமனுக்கு கொண்டு வந்து "சரி சரி போதும் வா சாப்பிடலாம் பசிக்குதுன்னல்ல.." என்று சிட்டுவையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

அங்கே பஃபே சிஸ்டத்தில் உணவுகள் வைக்கப்பட்டிருக்க அவரவர் அவரவருக்கு தேவையானதை தட்டு நிரப்பிக் கொண்டு அங்கிருந்த பெரிய மேஜையின் முன்னே அமர்ந்தனர்.

சிட்டுவிற்கு ஒரு தட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு ரியாஸ் தானும் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு உணவுகளை எடுக்க அவளும் அவளுக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு வர பாண்டி அவளை இடைமறித்தான்.

"சிட்டு நான் ஒன்னு சொன்னா கோச்சிக்க மாட்டியே.." என்றான்

"என்னடா.." என்றாள் இலகுவாய் அவள்

"இல்ல நிரஞ்சன் கொஞ்சம் இன்ட்ரோவர்ட் நீ பாட்டுக்கு ஏதாவது சொல்லி கலாய்ச்சு விடுற அவன் கோவப்படுறான். அவனுக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை அவன் போக்கில் அவன் ஃப்ரீயா இருக்கணும் அதுக்காக தான் இந்த டிரிப்பே பிளான் பண்ணோம். நீ பண்ற கூத்தால அவன் எதுவும் டிஸ்டர்ப் ஆக கூடாது நீ பொண்ணுங்க இருக்க வண்டியில ஏறிக்கோ சரியா.." என்றான்.

அவனை அமைதியாய் ஏறிட்டு பார்த்தவள். "ட்ரிப்புக்கு வரது ஜாலியா இருக்கத்தான்
இங்க வந்து இஞ்சி தின்ன மாதிரி இருக்குறதுக்கு எதுக்குடா ட்ர்ப் ப்ளான் பண்றீங்க..? ஆமா அந்த காங்காருக்கு என்ன லவ் பெய்லியரா... எப்ப பாரு முறைச்சிட்டே திரியுறான்.." என்றவள் "அவன் கிட்ட போய் சொல்லு அவனுக்காக எல்லாம் நான் என்ன மாத்திக்க முடியாது. வேணும்னா அவன் அந்த வண்டிக்கு போக சொல்லு.." என்றாள் மிகச் சாதாரணமாக

"ஏய் அது அவன் வண்டி டி..என்ற பாண்டியிடம்

"இருந்துட்டு போகட்டும். அவனை என்ன கையபுடிச்சா இழுத்தேன். நான் பாட்டுக்கு உக்கார்ந்துட்டு வர்றேன். அப்படி என்னை பார்த்து பயமாயிருந்தா அவனை வேணா போகச் சொல்லு.." என்று கூற உணவை தன் ப்ளேட்டில் நிரப்பிக்கொண்டு வந்த நிரஞ்சனுக்கு அவள் கூறியது தெளிவாய் கேட்டது.

அவர்களை கடந்து அவன் சென்று மேசையில் அமர்ந்து உண்ண ஆரம்பிக்க அவனை கண்ட பாண்டிக்கு தான் உதறியது. "ரைட்றா எப்பவுமே நம்மளை பீதிலயே வெச்சிருக்கனும்னு ரெண்டு பேரும் முடிவு பண்ணிருக்காங்க போல. அழகா உன் நிலைமை இப்படியா ஆகனும் என்றபடியே வந்து தொல.." என்று அவளையும் இழுத்துக்கொண்டு வந்து அமர்ந்தவன் "வாயமூடிட்டு சாப்டு.." என்றான்.

"வாயமூடிட்டு எப்ட்றா சாப்டறது. உன்னோட கங்காரு மாதிரியா. " என்று அவனை காட்ட


"ஆத்தீ.." என்று நிரஞ்சனை நோக்க அவன் வாயை மூடியபடி உண்டு மென்று கொண்டிருக்க அதை கவனித்தவர்கள் சிரித்துவிட 'இவ நம்மளை கோர்த்தூடறதுலயே இருக்கா பாரு பக்கி..' என்று எண்ணிய பாண்டி

"ஒழுங்கா சாப்டு.." என்று உருமினான்.

"சகவாச தோஷம் போல.._ எ
ன்றபடி அவள் தன் உணவில் கவனமானாள்.

நிரஞ்சனுக்கு தான் முள் மேல் இருப்பது போல் உறுத்தியது.


வருவாள்...
 

New Threads

Top Bottom