அத்தியாயம் 8
நிரஞ்சன் தன் வாகனத்தை கொடைக்கானல் சாலைகளில் லாவகமாகச் செலுத்திக் கொண்டிருந்தான். ஒரு தேர்ந்த குதிரை வீரன் தன் குதிரையை விரட்டும் லாவகத்தில் அவன் வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தான். அப்படித்தான் அவளுக்கு தோன்றியது.
அந்த மலைகளின் வளைவான சாலைகளில் செலுத்தி அழகான ஒர் இடத்தை அடைந்தனர். கீழிறங்கி பார்வையிட தூரத்தே தெரிந்த பாறைகளை காட்டி "இது எந்த இடம் டா..." என்றாள் சிட்டு.
"இதுதான் பில்லர் ராக்.." என்றான் பாண்டி.
"மதுரைல பொறந்து கொடைக்கானல் வந்ததில்லயா நீ.." என்று செல்வா கேட்க
"ம்க்கூம்.. எங்கூரை விட்டா மதுரை மீனாட்சி அம்மன் கோயிலு.. அதை தாண்டி எங்கேயும் போனதில்ல. காலேஜ் ட்ரிப்புக்கு கூட விடல.. கெஞ்சி கூத்தாடி காலேஜ் ஐவி க்கு போனேன். எங்க வீணா போன காலேஜ்ல ஐவின்னு கூட்டிட்டு போய் சாகடிச்சு கூட்டிட்டு வந்தானுங்க.." என்றவள்.
"நல்லா சம்பாதிக்கனும் உலகமெல்லாம் சுத்தி பார்க்கனும். அதுதான் என்னோட வாழ்க்கை லட்சியமே.." என்றாள்.
"அடடா...! என்ன ஒரு லட்சியம்..! ஏன்டா பாண்டி உனக்கேதும் லட்சியம் இருக்கா..? என்று செல்வா சிரித்தபடி கேட்டான்.
"இந்த ட்ரிப் நல்லபடியா போகனும் இவளால நிரஞ்சன்கிட்ட நான் செருப்படி வாங்காம தப்பிக்கனும். இதுதான் இப்போதைக்கு என் லட்சியம்.." என்றவாறே "நான் அவன்கூட போறேன் இதை நீங்க தள்ளிட்டு வாங்க.." என்றபடி முன்னே சென்று நிரஞ்சனோடு சேர்ந்து கொண்டான்.
வழியில் பரந்து விரிந்த கோல்ஃப் மைதானங்களை பார்வையாலே பருகியபடி "பணமிருந்தா என்ன வேணா செய்யலாம் போலயே டா உப்பு மூட்ட.." என்று ரியாஸை பற்றிக்கொண்டு அவள் நடந்தவள்.
"சும்மாவா சொன்னாங்க பணம் பத்தும் செய்யும்னு, வாழ்றானுங்கல்ல.." என்றாள் சிட்டு.
"பைசன், கரடி எங்கேர்ந்து வேணாலும் இறங்கும் கவனமா வாங்க..." என்று நிரஞ்சன் எச்சரித்தான்.
"ஹேய் ஹேய் அதை ஒரு கரடியே சொல்லுது பாரேன்.." என ரியாஸின் காதோடு ரகசியம் பேசினாள்.
"நீ சும்மாவே இருக்க மாட்டியா எப்பபாரு அவனை நோண்டிக்கிட்டே இருக்க.." என ரியாஸ் கேட்க
"எனக்கு என்ன வேண்டுதலா உங்க எல்லாரையும் போல அவனும் சகஜமாக இருந்தால் நான் ஏன் இதெல்லாம் பண்ண போறேன். என்னமோ தெரியல அவனைப் பார்த்தாலே ஒரண்ட இழுக்கனும் போல தோணுது.." என்றாள் சிட்டு.
"அவனைப் பத்தி உனக்கு தெரியாது பொண்ணுன்னு எல்லாம் பாக்க மாட்டான்.." என்று ரியாஸ் அமைதியாக கூற
"நானும் பையன் எல்லாம் பார்க்க மாட்டேன்.." என்று இவளும் பதில் கூறினாள்.
"ஆத்தா தோங்கி தொலைஞ்சு இப்பதான் ட்ரிப் ப்ளான் பண்ணி வந்திருக்கோம் நீ எதையாவது பண்ணி லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு நைட்டுக்கு அவன் சென்னை வண்டி எடுத்துட்ட போறான் பார்த்து செய்யுமா பரதேவத.." என்று வேண்டுவது போல கூற நடந்து கொண்டிருந்தவள் சட்டென அவன் எதிரே சென்று நின்று கையை உயர்த்தி அவனை வாழ்த்துவது போல் செய்து "ததாஸ்து அப்படியே ஆகட்டும் மகனே.." என்று ஆசி வழங்கினாள்.
"நீ பாண்டிய மட்டும் இல்ல என்னையும் சேர்த்து அவன் கிட்ட கோர்த்தூட்ருவேன்னு நினைக்கிறேன். நீ முன்னாடி வா.." என அவள் கையை பற்றி தரத் தரவென்று இழுத்துக்கொண்டு முன்னே விரைந்தான் ரியாஸ்.
அவளோடு சேர்த்து மற்றவர்களையும் உற்சாகப்படுத்தி வாங்க வாங்க என்று முன்னேறினான்.
பில்லர் ராக் எனும் பிரமாண்ட தூண் பாறையின் காட்சி பிரம்மிப்பாய் இருந்து. இரண்டு வானலாவிய ராட்சத தூண்களை நிறுத்தியது போன்றொதொரு தோற்றம்.
"ஹப்பா எவ்ளோ பெரிசா இருக்கு.." என்று அதிசயமாய் பார்த்தவள் முன்னே ஓடினாள்.
இருமருங்கிலும் வரிசையாய் கடைகள்... இரும்பு பைப்புகள் கொண்டு சுற்றிலும் பாதுகாப்பு தடுப்புகள் எல்லோரும் ஒரே இடத்தில் நின்று வேடிக்கை பார்க்க
அந்த வானைமுட்டும் பெரிய ராட்சத பாறைகளை சுற்றிலும் பச்சை பசேலென மரங்களும், அடர்ந்த பள்ளத்தாக்கும், பாறைகளின் மேல் தவழ்ந்து ஓடும் மேக பந்துகளுமாய் பார்க்கவே ரம்மியமாய் இருந்தது. மெய் மறந்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
சுற்றிலும் பனி மேகங்கள் சூழ்ந்து பாறையை மறைத்து விளையாடிக் கொண்டிருந்தது. ஒரு சிறிய நீரோடை ஓடி அருவியாய் கொட்டிக்கொண்டிருக்க அந்த இடத்தை பூங்கா அமைத்திருந்தனர். சுற்றிலும் வண்ணமயமான பூக்கள் மனதை கொள்ளை கொண்டது.
"இந்த கொடைக்கானல் பில்லர் ராக் ஒரு அழகிய இயற்கை அதிசயம் மட்டுமில்லாமல் ஒரு சோகமான காதல் கதையையும் உண்டு.." என்றான் அருண்.
"அப்படியா என்ன அது.." என்று சரண்யா கேட்க
"அதுவா டேவிட் என்ற ஆங்கிலேயர் தனது மனைவி இரினுடன் கொடைக்கானலுக்கு வந்தாராம் அப்போ அவங்க இந்த பாறைகளில் விளையாடிக் கொண்டிருந்தபோது, இரின் அந்த பாறையிலிருந்து விழுந்து இறந்துவிட்டாராம். அவரது நினைவா டேவிட் அந்த பாறையின் மீது ஒரு வெள்ளை சிலுவையை வைத்தாராம்..."
"அந்த காதல் கதையோடு, இந்த பில்லர் ராக் ஒரு புனிதமான இடமாக மாறி இருக்கு. இங்கு வருபவர்கள் அந்த அழகிய காட்சியை பார்த்து சந்தோஷமா இருக்காங்க ஆனா அந்த சோகமான காதல் கதையை யாரும் நினைக்கிறதில்ல..." என்றான் அருண்.
"அதுவே சோகம்ங்கற சந்தோஷமா வந்து என்ஜாய் பண்ற இடத்துல சோகமான காதலை ஏன்டா நினைக்கனும் லூசே.." என்று அவனை தலையில் கொட்டினாள் சிட்டு.
"எரும ஏன்டி கொட்டின.." என்று அருண் அவளை துரத்த
"பின்ன ஜாலியா ட்ரிப் வந்தா காதல் கத்திரிக்கான்னு வயிலின் வாசிக்கற... பாரு எவ்ளோ அழகாருக்கு வாங்கடா போட்டோ எடுக்கலாம்.." என எல்லாரையும் பிடித்து இழுக்க அடுத்த அரைமணிநேரம் தனிதனியே செல்ஃபி எடுத்தும் எல்லோரும் சேர்ந்து படமெடுப்பதுமாய் கழிந்தது.
அங்கே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தத்ரூபமான யானை உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அவை சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்ததிழுத்தது. இவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன...? அதன் அருகில் நின்று அனைவரும் புகைப்படங்கள் எடுத்தனர். இரண்டு ஆண்யானைகளும் ஒரு பெண் யானையும் இருப்பது போன்ற சிலையை உருவாக்கி இருந்தனர்.
"ஆத்தீ ஆன..." என்று பீதியானாள் சிட்டு
"அடியே இது சிலை தான் வா.." என்று அவளை இழுத்துச் சென்றான் பாண்டி.
"பரவால்ல நா இங்கேர்ந்தே பார்த்துக்கறேன்.." என்று அவள் விலகி நிற்க
"ஏன்டா என்னாச்சு.." என்றபடி அருகே வந்தான் ரியாஸ்.
"இந்த குட்டி சாத்தானுக்கு யானைன்னா பயம்.." என்று பாண்டி சிரிக்க
"யானைன்னா மட்டும் தா பயம். வேற எதுக்கும் பயப்படமாட்டேன் போடா.." என்று அவள் வேறு திசை போக அங்க வந்த அருண் ரியாசை பார்த்து கண்சிமிட்ட இவனும் பதில் சமிக்ஞை செய்தவன் சிட்டுவின் இரண்டு புறமாய் சென்று அவளை அலேக்காக தூக்கிக்கொண்டு யானை அருகே செல்லும் போதே
"பாண்டி போட்டோ எட்றா என்று கூச்சலிட்டான் ரியாஸ்.
"அய்யோ ஆத்தீ வுடுங்கடா கொரங்குகளா.." என்று அவள் கைகால்களை உதற
விதவிதமாய் அதை கேமராவில் பதிய வைத்தான் பாண்டி. சரண்யா தன் பங்கிற்கு அதை வீடியோவாய் பதிவு செய்ய அந்த இடமே அமளிதுமளி ஆனது.
"தீப்தியோ டேய் ரியாஸ் விடு அவளை.. அவ தான் பயப்படறால்ல.." என்று சிட்டுவிற்கு பரிந்து வர, அலென்னாவும் அவளோடு சேர்ந்து கொண்டாள். இருவருமாய் சிட்டுவை நண்பர்களிடமிருந்து விடுவிக்க உண்மையிலேயே சிட்டுவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
"டேய் எப்படி நடுங்கறா பாருங்க... தடிமாடுகளா... சிட்டு அது வெறும் சிலை தான் ரிலாக்ஸ்.." என்று அவளை சமாதானம் செய்தார்கள்.
"ம்க்கூம் வாய்கிழிய பேசுற.. ஆனா யானை சிலைக்கு போய் பயப்புடுற.." என்று அவளை ஓட்ட கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி செல்வா அவளை சீண்டிக்கொண்டிருந்தான்.
இவர்களோடு எதிலும் ஒட்டாமல் இயற்கையின் அழகை அனுபவித்துக் கொண்டிருந்த நிரஞ்சன்
ஓகே கெளம்பலாமா...? அடுத்தடுத்து நிறைய இடங்கள் பார்க்கனும். போகலாமா..." என்று நிரஞ்சன் கேட்க
"ஓகே கெளம்பலாம்.." என்று எல்லாரும் ஒரே குரலில் பதில் கூற அங்கிருந்த வெளியே வந்தனர்.
வரிசையாய் கடைகளை பார்த்ததும் "ஹய் பொம்ம..." என்றபடி குதூகலமாய் ஒரு கடைக்குள் நுழைந்தாள் சிட்டு.
உடன் வந்த பாண்டியை முறைத்தவன் "நீ அவளை இழுத்துட்டு வந்து சேரு நாங்க முன்னே போறோம்.." என்றபடி நடந்தான்.
மற்ற பெண்களும் கடையை நோக்கி செல்லவதைப் பார்த்தவன்
"அது சரி தான் கெட்ட வானரம் கூட்டத்தையும் சேர்த்து கெடுத்துச்சாம்.." என்றபடியே தன் போக்கில் நடக்கலானான் நிரஞ்சன்.
பாண்டி சிட்டு நுழைந்த கடையை நோக்கி போக மற்றவர்கள் நிரஞ்சனோடு நடந்தனர்.
கடைக்குள் நுழைந்தவனுக்கு சிரிப்பு தாளவில்லை. சின்ன குழந்தையாய் ஐந்தாறு பொம்மைகளை எடுத்து கை கொள்ளாமல் வைத்துக் கொண்டு இன்னுமும் தேடிக்கொண்டிருந்தாள்.
மற்றவர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்தபடி ஆளுக்கொன்றாய் எடுத்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
பாண்டியை கண்டவள் "ஹேய் அழகா இங்க பார்த்தியா..! எத்தன பொம்ம இதெல்லாம் எனக்கு வேணும் வாங்கி தா.." என்று கேட்க
சிறுவயதிலிருந்தே பொம்மைகள் என்றால் அத்தனை பிரியும் பூஞ்சிட்டுவிற்கு. ஆனால் அதையெல்லாம் வாங்கி விளையாடும் அளவுக்கு அவர்களுக்கு வசதி இருந்ததில்லை. ஒவ்வொரு திருவிழாவிற்கும் ஏதாவது ஒரு பொம்மையை கேட்டு சிட்டு அடம்பிடிப்பதும், அதை வாங்கி கொடுக்க முடியாமல் ஒரு ஒற்றை பலூனை வாங்கி கொடுத்து அழும் பிள்ளையை சமாதானம் செய்து கூட்டி வருவதுமே சிட்வின் பெற்றோர்களது வாடிக்கையாய் இருந்தது. சிறிது வளர்ந்த பின்னும் "நான் பெருசாயி வேலைக்கு போய் நிறைய பொம்மை வாங்குவேன்.." என்று கைகளை அகல விரித்து காண்பித்து கூறுவாள்.
பாண்டி வேலைக்கு சேர்ந்த பின் ஊருக்கு போகும் போதெல்லாம் மறக்காமல் சிட்டுவிற்கு ஏதாவது ஒரு பொம்மை வாங்கி சென்று விடுவான். அவன் வாங்கிக் கொடுத்ததே அவளுக்கு முதல் பொம்மை. அவள் வேறு எதுவும் அவனிடம் கேட்டதே இல்லை. அவன் வாங்கி கொடுத்த அத்தனை பொம்மைகளையும் பொக்கிஷமாய் பார்த்து பார்த்து வைத்து விளையாடி கொண்டிருப்பாள். அக்கம் பக்கத்து பிள்ளைகளோடு விளையாடிவிட்டு பத்திரமாய் வீடு கொண்டு வந்து சேர்ப்பாள்.
ஒருமுறை பாண்டி வாங்கி கொடுத்த ஒரு பொம்மை தொலைந்து விட நாள்முழுக்க அழுது தீர்த்தாள். பாண்டி அதே மாதிரி நான் வேற வாங்கி தரேன். நல்ல புள்ளல்ல.." என்று சமாதானம் செய்து அவள் அழுகையை நிறுத்த வேண்டியதாய் இருந்தது. அன்று முதல் இன்னும் கண்ணும் கருத்துமாய் பொம்மைகளை பாதுகாக்கலானாள். 'வளர்ந்து வேலைக்கு செல்லும் வயதாகிவிட்டது, இன்னும் பொம்மையை தூக்கிக் கொண்டு இருக்கிறாளே..' என்று சிரித்தான் பாண்டி.
"ஏ லூசு இத்தனை பொம்மையும் இங்கேயே வாங்குவியா..? நம்ம ஒரு வாரம் ட்ரிப் பிளான் பண்ணி இருக்கோம், நிறைய இடம் பார்க்க போறோம். ஒவ்வொரு இடத்துலயும் ஒன்னொன்னு வாங்கலாம் சரியா.. எல்லாத்தையும் ஒரே இடத்தில வாங்கி தூக்கிட்டு திரிஞ்சிட்டு இருப்பியா..? இதுல உனக்கு ரொம்ப புடிச்ச ஏதாவது ஒன்னு மட்டும் எடுத்துக்கோ.." என்று கூற
"சரி.." என்று நல்ல பிள்ளையாய் ஒரு அழகான பென்குயின் பொம்மையை எடுத்துக் கொண்டாள்.
"ஹே க்யூட்டா இருக்கு சிட்டு. அண்ணா எனக்கும் இதே மாதிரி ஒன்னு.." என்று சரண்யாவும் கேட்க "எங்களுக்கும்.." என்று அலேனாவும் தீப்த்தியும் கோரசாய் கூற
"ஹை சூப்பரேய்... நாலு பேரும் ஒரே மாதிரி வாங்கிக்கலாம்.." என்று குதூகலமாய் "அண்ணா ஒரே மாதிரி நாலு குடுங்க.." என்று வாங்கிய பொம்மைக்கு பேரம் பேசலானாள் சிட்டு.
ஒரு வழியாய் அவர்களை இழுத்துக் கொண்டு விரைவாய் பாண்டி வந்து சேர்ந்தும் நிரஞ்சன் கோபப்பார்வை பார்க்க
"இவனொருத்தன் ஆன்னா ஊன்னா பாலையா மாதிரி கண்ணுல நெருப்பு பறக்கவுடுறான்.." என்றவாறே முன்னிருக்கையில் ஏறப்போனாள் சிட்டு.
அவள் டீ சர்ட் காலரை கொத்தோடு பிடித்து இழுத்து வந்து பின்னிருக்கையில் ஏற்றி கதவை அடைத்தான் பாண்டி.
"ஏன்டா எரும.." என்று அவள் எகிற
"உனக்கு பொம்ம வேணுமா.. வேணாமா..? என்று கேட்க
"வேணும்..." என்று சுருதி இறங்கிய குரலில் கூறியபடியே முகத்தை தொங்கப் போட்டாள்.
"அப்போ பேசாம பின்னாடி உக்கார்ந்து வா... இல்ல ஒன்னு கூட வாங்கி தரமாட்டேன்..."என்றான் பாண்டி.
"அய்ய.. ப்பே..." என்றபடி அவள் வாங்கிவந்த பென்குவின்ஐ "நீ வாடி செல்லம்.." என்று அதோடு கதை பேச ஆரம்பிக்க
அவளை பார்த்து ரியாஸூம் அருணும் சிரித்தனர்.
"என்னங்கடா சிரிக்கறீங்க.... சிரிச்சதுக்கு பைனா நீங்களும் ஆளுக்கொரு பொம்மை வாங்கி தரனும்.." என்று அமர்த்தலாய் சிட்டு கூற
'இது என்னடா ஜென்மம்..' என்பது போல் கண்ணாடி வழியே பார்த்து வைத்தான் நிரஞ்சன்.
வருவாள்...