9.
கிளம்பிய பனிரெண்டு மணிநேரத்திற்குள்ளாகவே நிரஞ்சனுக்கு மூச்சு முட்டியது போலிருந்தது. இவளோடு எப்படி இன்னும் ஏழு நாட்கள் சமாளிப்பதென்றே புரியாமல் எதேச்சையாக அவளை பார்க்க
"இங்க என்ன லுக்கு ரோட்ட பாத்து வண்டிய ஓட்டு.." என்று கூறினாள் அவள்.
அலட்சியமாய் முகத்தை திருப்பிக் கொண்டான் நிரஞ்சன். என்ன ஒன்று பாண்டியின் பாடு தான் திண்டாட்டமாய் போயிற்று சிரிக்கவும் முடியாமல், சிரிப்பை அடக்கவும் முடியாமல் வெளியே பார்வையை திருப்பி சமாளிக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தான்.
"அப்படியே ஓங்கி ஒன்னு விட்டேன்னு வை.. அதள பாதாளத்துல விழுவ.. ஒழுங்கா உட்கார்ந்துட்டு வா.." என்று அவனை மிரட்டினான் நிரஞ்சன்.
"ஏன்டா இந்த சுதந்திர இந்தியாவில் சிரிக்க கூட உரிமை இல்லையா..."என்று பாண்டி கேட்க
"சிரிச்ச உன் உசுருக்கு உத்தரவாதம் இல்ல அப்புறம் உன் இஷ்டம்.." என வார்த்தைகளை கடித்து துப்பினான்.
"டேய் அழகா பேசாம அந்த கடையில மங்கி மாஸ்க்கு, கோமாளி மாஸ்க்ன்னு நல்ல டிசைன் டிசைனா நிறைய மாஸ்க் இருந்துச்சில்ல.. அதுல ஒன்னு வாங்கி போட்டுக்கோ.. நீ சிரிச்சா கூட வெளிய தெரியாது. இந்த உர்ராங் வுட்டான் கிட்ட இருந்து நீயும் தப்பிச்சிடலாம்.." என்று அவள் சிரிக்க வாகனம் வேகம் கூடியது.
"அய்யோ ஆத்தி ... சிட்டு நீ பேசாம வா... நிரஞ்சா மெதுவா போ.." என்று நண்பனை அதட்டினான்.
"அப்போ பேசாம வாங்க.." என்று அதட்டினான் நிரஞ்சன்.
"சரியான இஞ்சிடா உங்க ப்ரெண்டு.." என்று ரியாஸின் காதை கடித்தாள் சிட்டு.
"சும்மா இரு அப்பறம் வழியிலேயே இறக்கி விட்ருவான்.." என எச்சரித்தான் அருண்.
"இவன் செஞ்சாலும் செய்வான்டா..." என்று தணிந்த குரலில் அவளும் ரகசியம் பேசினாள்.
கமுக்கமாய் பின்னிருக்கையில் மூவரும் சிரித்துக்கொள்ள ஸ்டீரியோ ஒலிக்க ஆரம்பித்தது.
அடுத்து அவர்கள் கொடைக்கானல் ஏரியை வந்தடைந்தனர்.
இறங்கியதும் மக்காச்சோளகதிர்களை பார்த்து "ஹேய் யாருக்கு வேணும்பா.." என்று செல்வா கேட்க ஆளுக்கொன்றாய் வாங்கி கொறித்துக்கொண்டே நடந்தனர். பனிப்பொழிவு அதிகமாயிருந்தது. உடலை ஊடுருவிச் செல்லும் அளவிற்கு குளிரடிக்க
சிட்டு குளிரில் நடுங்கத் தொடங்கினாள்.
"என்ன தந்தியடிக்கிற.." என்று கிண்டல் செய்தபடியே ஸ்வெட்டர், ஜெர்கின் எதாவது கொண்டு வந்தியா என்றான் ரியாஸ்.
"வந்ததும் கொடைக்கானல் வருவோம்னு நான் என்ன கனவாடா கண்டேன். அதெல்லாம் ஒன்னும் இல்ல.." என்றாள்.
"சரி வா வாங்கலாம்.." என்றவன் "பாண்டி இங்க பாரு இவ குளிர்ல நடுங்கறா.. ஸ்வெட்டர் ஏதாவது வாங்கி போட்டு கூட்டு வர்றேன்... ஹேய் வேற யாரும் ஏதாவது உங்களுக்கு வாங்கனும்னா வாங்க வாங்கிக்கலாம். வீட்டுக்கு வாங்கறதா இருந்தா கிளம்பும் போது வாங்கலாம்..." என்று மற்றவர்களையும் கேட்க
எல்லாருமே முன்னேற்படாய் வந்திருந்ததால் சிட்டுவை மட்டும் அழைத்துக்கொண்டு ஒரு கடைக்குள் புகுந்தவன் அவளுக்கு பொருத்தமான அளவில் ஸ்வெட்டர் தலைகுல்லாயாயை வாங்கி அணிய செய்துவிட்டு ஒரு ஜெர்கினையும் வாங்க
"அதான் இது வாங்கியாச்சே இன்னும் எதுக்கு.." என்றவளிடம்
"மழை வந்தா இது நனைஞ்சிடும் எப்படியும் இது உனக்கு தேவைபடும். நல்ல குவாலிட்டியாவும் இருக்கு வாங்கிக்க.." என்று வாங்கி கொடுத்தான்.
"சம்பளம் வாங்கினதும் இந்த காசை திருப்பி தந்துடுவேன். இல்ல பாண்டிட்ட வாங்கி தந்துடுவேன் சரியா.." என்று அவள் கராராய் கூறினாள்.
"பாண்டி வாங்கி குடுத்தா திருப்பி தருவியா..? நீ "
"அவனுக்கு ஏன் நான் திருப்பி தர போறேன்.."
"அப்போ எனக்கு மட்டும் ஏன் தர்ற... பாண்டி வேற நான் வேற இல்ல ஒழுங்கா வா..." என்றபடி பணத்தை கொடுத்துவிட்டு அவளையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.
"இந்தாரு நான் வேணா.. வேணான்னு சொல்றேன், நீ தான் பாண்டியும் நானும் ஒன்னுன்னு சொல்ற அப்புறம் பேச்ச மாத்தக்கூடாது சரியா.." என்று கூறியவளிடம்
"நான் பேச்சை மாத்த மாட்டேன் வா.." என்றபடியே எல்லாரும் இருக்குமிடம் வர அனைவரும் ஜெர்கின் ஸ்வெட்டர் சகிதம் தயாராயிருந்தனர்.
அவளை பார்த்ததும் சிரித்த பாண்டி "ஏ சிட்டு வேற கலரே உனக்கு கிடைக்கலையா.." என்று கேட்க
இரண்டு சைட் பாக்கெட்டிலும் கையை விட்டபடி "ஏன் இதுக்கென்ன ரோஜாப்பூ பிங்க் கலர்.. இதுக்கென்ன அழகாருக்கே.." என்றாள்.
"தூரத்துல இருந்தா கூட பளிச்சின்னு தெரிவ எங்கேயும் தொலைஞ்சிட்டா கூட ஈசியா கண்டுபிடிச்சிலாம்.." என்றான் அருண்.
குரலை செருமிக்கொண்டு "கெளம்பலாமா..." என்று நிரஞ்சன் கேட்க
"போ போ உன் கங்காரு கூப்டுது.." என்று பாண்டியின் காதை கடித்தவள் பெண்கள் கூட்டத்தோடு ஐக்கியமாகிவிட்டாள் சிட்டு.
அந்த நட்சத்திர ஏரியின் அழகு அனைவருக்கும் பிடித்து போனது. எண்ணற்ற சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளோடு படகில் மிதந்தபடி இருந்தனர்.
படகு சவாரி, குதிரை சவாரி என்று இரண்டு மணிநேரத்திற்கு மேல் மகிழ்ச்சியாய் பொழுதை கழித்தனர். மதிய உணவை முடித்துக்கொண்டு அடுத்து பார்க்க வேண்டிய இடத்திற்கு கிளம்பினர்.
அன்று முழுவதும் இளசுகளுக்கே உரிய குதூகலமும், கும்மாளமுமாய் பொழுது கழிந்தது. கொடைக்கானல் மலைச்சரிவுகளின் அழகும், பனிப்பொழிவும் பச்சை பசேல் என்ற தேயிலைத் தோட்டங்களும், வானைத் தொட்டு உயர்ந்து நிற்கும் மரங்களும் பார்க்க, பார்க்க தெவவிட்டவேயில்லை. மாலை வரை இயற்கையின் எழிலோடு எழிலாக நண்பர்கள் கூட்டம் உற்சாகத்தோடு சுற்றினர். ஐந்து மணி ஆகும்போதே பனிப்பொழிவு அதிகமாக ஆரம்பிக்க எல்லோரும் அறைக்கு திரும்புவதாக முடிவு செய்து கிளம்பினர்.
செல்லும் வழியில் "இங்க டீ நல்லாருக்கும் குடிச்சிட்டு போலாம்.." என்று நிரஞ்சன் வாகனத்தை நிறுத்தினான். பின்னே வந்த செல்வாவும் தனது வாகனத்தை ஓரம் கட்டினான். குளிருக்கு கொடைக்கானலின் தேநீர் இதமாயிருந்தது.
"நாமெல்லாம் குடிக்கிற டீ நல்லாவே இருக்கிறது இல்லையே அதெப்படி இது போல மலைப்பகுதிகளில் கிடைக்கிற டீ மட்டும் இவ்ளோ டேஸ்டா இருக்கு.." என்று அலென்னா கேட்க
"நாம குடிக்கிறது எல்லாம் முதல்ல டீயே கிடையாது. அதெல்லாம் டஸ்ட் டீ.. நல்ல முதல் தரமான தேயிலை எல்லாம் வெளிநாடுகளுக்கு போயிடும். கடைசியில் இருக்கிற தூள்கள் தான் நமக்கு டீதூளா வருது. அதுவும் நீங்கல்லா டீ போட்டு மனுசன் குடிக்க முடியுமா..." என்றான் ரியாஸ்.
"அதெல்லாம் நாங்க நல்லா தான் டீ போடுவோம். டீ தூள் சரியில்ல அதுக்கு நாங்க என்ன செய்யறது.."என்று அலென்னாவுக்கு ஆதரவாய் பேசினாள் சரண்யா.
"ஆடத் தெரியாதவன் தெருக்கோணல்னு சொன்னானாம் அப்படி இருக்குது நீங்க சொல்றது.." என்று அருண் அவர்களை பார்த்து கேலி செய்ய
"இங்க இருக்கிற நாலு பொண்ணுகள்ல யாருக்காவது ஒழுங்கா சமைக்க தெரியுமா சொல்லுங்க.." என்று செல்வா கேள்வி எழுப்ப
"அது என்ன சமைக்கிறதுன்னா பொண்ணுங்க டிபார்ட்மெண்ட் தானா..? ஏன் ஆம்பளைங்க சமைச்சா ஆகாதா..? என்று மல்லுக்கு வந்தாள் சிட்டு.
"ஏம்மா பெரிய, பெரிய ஹோட்டலில் இருந்து ரெஸ்டாரண்ட்ல இருந்து எல்லாத்துலயும் ஆம்பள தானே சமைக்கிறான். எந்த பொம்பள வந்து அங்க சமைக்கிறாங்க..? என்ற அருணுக்கு
"அது வேலை, அது ஒரு தொழிலா செய்யும் போது சம்பளம் தர்றாங்க.. அதனால செய்யறீங்க.. ஏன் எத்தனையோ ஹோட்டல்ல லேடிஸ் செஃப்பா இருக்கிறது இல்லையா..? எத்தனை கல்யாணம் மண்டபங்கள்ல பெண்கள் சமைக்கிறாங்க..? எத்தனை வெளிநாட்டு ஹோட்டல்களில் பெரிய பெரிய ரெஸ்டாரன்ட்ல பெண்கள் குக்கா இருக்காங்க.. எத்தனை பெண்கள் வீட்டில் இருந்து க்ளவுட் கிட்சன் பிசினஸ் பண்றாங்க.. நான் கேட்கிறது அது இல்லை பொண்ணுங்கன்னா சமையல் கத்துக்கணும். சமைக்கிறதுக்கு தான் பொண்ணுங்கன்னு பேசுறீங்களே.. அந்த மெண்டாலிட்டிய சொன்னேன்..." என்றாள்.
"என்னதான் படிச்சு சமூகம் வளர்ந்தாலும் இன்னும் பொம்பளைங்க வீட்டு வேலை செய்யவும், சமைச்சு போடவும், புருசன்காரனுக்கு பணிவிடை செய்யவும் கல்யாணம் செய்து புள்ள குட்டி பெத்து போடவும் மட்டும் தான்னு நெனப்பு. அதைவிட நம்மள பெத்தவங்களே நம்மள கல்யாணத்துக்காக தான் தயார் பண்றாங்க.. நாளைக்கு கட்டிட்டு போற இடத்துல இதெல்லாம் தெரியலன்னா என்னைதான் குறை சொல்லுவாங்க அப்படின்னு சொல்லியே கல்யாணத்துக்கு தயாராக்கறது..." என்று தன் பங்கிற்கு பொறிந்தாள் தீப்தி.
"அது என்ன ஆண் பெண் பாகுபாடு..! பொண்ணுங்கன்னா வீட்டு வேலை செய்யணும் பசங்கன்னா வெளிய வேலை செய்யணும்னு, அந்த காலத்துல பெண்கள் வீட்டை பார்த்துக்கிட்டாங்க ஆண்கள் வேலைக்கு போனாங்க அதனால அது சரி ஆனா இப்போ ஆண்களுக்கு சமமா பெண்களும் வேலைக்கு போறாங்கல்ல.. அப்போ ஆணும், பெண்ணும் சேர்ந்துதானே வேலை செய்யணும்.." என்றாள் சிட்டு.
"ஆம்பள பசங்க இதை செய்யக்கூடாது, ஆம்பள பையன் விளக்கமாறு தொடக்கூடாது, ஆம்பள பையன் பாத்திரம் விளக்க கூடாது, அது என்ன பொட்ட புள்ள வேலையை நீ செய்யற அப்படின்னு நம்ம வீட்டு ஆளுங்களே பேசுறாங்க. ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் சமம்தான். அந்த ஆணுக்கும் எல்லா வேலையும் சொல்லி தரணும்னு யாரும் யோசிக்கிறதில்லை.." என்றாள் சரண்யா.
"அப்படி வளர்த்தா இந்த லூசுங்கெல்லாம் ஏன் இப்படி பேச போகுது நாளைக்கு இவங்களுக்கு எல்லாம் வரப்போற பொண்டாட்டி எல்லாம் ரொம்ப பாவம். டேய் இங்க பாருங்கடா நீங்க எல்லாம் ஒழுங்கா சமைக்க, வீடு கூட்ட, துடைக்கன்னு எல்லா வேலையும் கத்துக்கோங்க அப்பதான் நாளைக்கு உங்களுக்கு வர்ற பொண்டாட்டிங்க நல்லபடியா இருக்க முடியும் சரியா..? இல்ல மவனே செத்ததீங்க நீங்கல்லாம் என்று அனைவரையும் சேர்த்தே மிரட்டினாள் சிட்டு.
"ஆத்தா பரதேவதைகளா.. உங்களுக்கெல்லாம் ஒரு கும்பிடு தெரியாத்தனமா சொல்லிட்டோம்.." என்று அருண் கும்பிட்டு போட
"ம்க்கூம் ஏற்கனவே எங்க பிளாட்டில் கக்கூசு கழுவுறது முதற்கொண்டு எல்லா வேலையும் நாங்கதான் செய்யறோம். நிரஞ்சன் சூப்பரா பிரியாணி செய்வான். அவன் காரகுழம்பு வெச்சா ஊரே மணக்கும். வீட்டை சுத்தமா வெச்சிக்க அவனை விட்டா ஆளே கிடையாது தெரியுமா...! என்று பாண்டி கூற
"ச்சைங் சக்..." என்று ஜால்ரா தட்டுவது போல் செய்கை செய்தவள் "ஆக இஞ்சிதான் எல்லாம் செய்யும் நீ அதுக்கு ஒத்து ஊத்திட்டு சும்மா ஒக்காந்து இருப்பியா நீ, ஒரு வேலையும் செய்ய மாட்டியா..? அது எப்படிடா கொஞ்சம் கூட கூச்சம் நாச்சமே இல்லாம அவன் செய்யறதை சொல்ற... நீ என்ன தான் செய்வ.." என்றாள் பாண்டியை பார்த்து.
"ஏன் அவன் செஞ்சு வெச்சா நல்லா சாப்டுவேன். நான் பாத்திரம் விளக்கறேன்னு தான் சொல்வேன் ஆனா இவன்தான் விடமாட்டான்.." என்று நிரஞ்சனை குற்றம் சாட்டினான்.
"எதுக்கு குழம்பு சட்டில இருக்க குழம்பு கூட போகாம நீ கழுவி வெப்ப அடுத்த நாள் காஞ்சு கெடக்கும் அதை நான் இன்னொரு தடவை கழுவனும் அதுக்கு நானே செஞ்சுடுவேன்.." என்று நண்பனின் பேச்சுக்கு பதில் கொடுத்தான் நிரஞ்சன்.
"அது சரி ஓங்கி ஒன்னு மண்டைலயே போட்டு, நல்லா கழுவுடா வெண்ணைன்னு கழுவ வெக்கறதை விட்டுட்டு.. நீ கழுவுனா அவன் அப்படி தான் இருப்பான். இந்த அம்மாங்க செய்யுற தப்பை தான் நீயும் செய்யுற.." என்று நிரஞ்சினிடம் கூறியவள்.
"ஏன்டா கக்கா போனாலாவது ஒழுங்கா கழுவுவியா இல்ல.. அதுவும் அரைகுறை தானா... காலைலேர்ந்து ஒரு ஸ்மெல் வேற வருது நீதானா அது.." என்று கேட்க கூட்டம் வெடித்து சிரித்தது.
'ச்சைக் இவ என்ன இப்படி பேசுறா..' என்று எண்ணியவாறே நிரஞ்சன் முகம் சுழிக்க அதை கண்டவள்,
"ஏன் இப்ப என்ன நான் தப்பா சொல்லிட்டேன். நீங்கல்லா கக்கா போகமாட்டீங்களா... என்னடா இது ஏதோ கெட்டவார்த்தை பேசின மாதிரி பாக்குற.. டேய் அழகா நீ வளர்த்த வளர்ப்பு சரியில்ல..." என்று சிட்டு கூறியதும்
"எதே.." என்றான் பாண்டி.
"சரி சரி அதான் நான் வந்துட்டேன்ல உங்க ரெண்டு பேரையும் நான் சரி பண்றேன். மூனு பேரும் ஷேர் பண்ணி வேலை செய்யலாம்.." என்று கூற
அதிர்ந்து நோக்கினான் நிரஞ்சன். அவள் கூறுவதன் பொருள் விளங்கியும், விளங்காமலும் பாண்டியை நோக்க அவன் ஏற்கனவே டீக்கு பணம் கொடுக்கும் சாக்கில் அங்கிருந்து ஓடியிருந்தான்.
"ன்னா... முழிக்கிற இனிமே நான் பாண்டியோட தான் லிவிங்ஸ்டன்னே.. அவன் உன்னோட தானே இருக்கான் அப்போ உன்னையும் சேர்த்து நான்தானே பாத்துக்கணும்..." என்று ஒரு குண்டை தூக்கி போட்டுவிட்டு போய் வண்டியில் ஏறினாள்.
வருவா