Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Tamil Novels Poonjittu -10

அத்தியாயம் -10

கொடைக்கானல் இருள் மங்கத்தொடங்கியதும் குளிருக்கு இதமாய் அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட்டில் கேம்ப் பயர்க்கு ஆயத்தம் செய்ய தொடங்கினர்.

"ஏன்டா உப்பு மூட்ட கேம்ப் ஃபயர் எல்லாம் போடறீங்க சரக்கெல்லாம் இல்லையா டா..." என்றாள் சிட்டு.

"எதே.. சரக்கா.. நிரஞ்சனுக்கு தெரிஞ்சது அவ்ளோதான்.." என்ற பாண்டியிடம்

"வேணா அவனுக்கும் ஒரு கட்டிங் குடுக்கலாம் டா.." என்றாள் சிட்டு.

"என்னடா லோக்கல் குடிகாரி மாதிரி பேசறா.." என்ற செல்வத்தை


[adsense][/adsense]

"அதென்ன டா குடிக்கறதுல லோக்கலு.. பாரீனு... குடி ஈஸ் ஆல்வேஸ் குடி.." என்றவளை

"இந்த பீஸை மேனுபாக்சர் பண்ணவங்களை காட்றா பாண்டி.. கால தொட்டு கும்புடனும்.." என்று ரியாஸ் கலாய்த்தான்.

"ஹேய் நீ குடிப்பியா.." என்றான் சிட்டுவிடம் அருண்.

"குடிப்பியாவா அவ மரத்துல ஏறி கள்ளு திருடி குடிக்கிற கேஸூ.. சரக்கெல்லாம் அடிச்சதில்ல.. மூடிய மோந்து பார்த்தாலே மட்டையாகிடுவா.. நீ வேறடா.."என்று பாண்டி கூறினான்.

"அதையும் அடிச்சு பாத்துடனும்டா மாமே.." செல்வாவின் தோளில் கைபோட்ட வாறே கூறினாள் அவள்.

"ரைட்றா.. சனி ரயிலேறி நம்ம கூட ட்ரிப் வந்திருக்கு.." என்று அருண் கூற

"உனக்கெதுக்கு இந்த வீபரீத ஆசை.." என்ற ரியாஸிடம்

"களவும் கற்று மறன்னு நம்ம வாசகி வூட்டுக்கார் சொல்லிருக்காருல்ல அதான்.." என்று அசட்டையாய் கூறினாள்.

"என்ன.." என்று மற்றவர்கள் "ஙே" என்று விழிக்க

"திருவள்ளுவரத்தான் இந்த எரும அப்படி சொல்லுது.." என்று பாண்டி விளக்கம் தர கொல்லென்று அத்தனை பேரும் சிரித்தனர்.


தூரத்தே இருந்து நிரஞ்சன் முறைப்பது தெரிந்தது. "ஏன்டா பாண்டி நம்ம நரச்சிம்மனுவுக்கு சொந்தக்காரனாடா உன் கங்காரு.."

இப்பபொழுது அவனுக்கே அது யாரென்று தெரியாமல் விழிக்க

ரியாஸ் அவுட்டு சிரிப்பு சிரித்து "டேய் நரசிம்ம ராவ் டா.." என்று விழுந்து விழுந்து சிரிக்க, தலையிலடித்து கொண்டான் பாண்டி.


"இங்க பாரு அங்கயும் தான் மூனு பொம்பள புள்ளைங்க வருது. எவ்ளோ அடக்க ஒடுக்கமா வருதுங்க.. உன்னாட்டமா.." என்று பாண்டி அவளை கடிந்து கொண்டான்.

"அடக்க ஒடுக்கமாவா அப்படீன்னா.." என்று எதிர் கேள்வி கேட்டாள் சிட்டு.

"ம்க்கூம்.. உங்கிட்ட போய் சொன்னேன் பாரு.. என் புத்திய.." என்று பாண்டி பல்லை கடிக்க கீழே குனிந்து தன் காலி மாட்டியிருந்த ஷூவை கழட்டி அவன் கையில் திணித்தாள்.


அவ்வளவு தான் மொத்த கூட்டமும் வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க அந்த ஷீவை பிடிங்கியவன் அவளை துரத்த ஆரம்பித்தான்.

சிறிது தூரம் போக்கு காட்டியவள் பிடிபட்டுவிடுவோம் என்று அறிந்ததும் நிரஞ்சனின் பின்னே சென்று நின்று விட பாண்டியின் ஓட்டம் நின்றது.

இப்ப வா பாக்கலாம் என்ற ரீதீயில் அவன் பின்னே இருந்து இவள் சைகை செய்ய இவளை என்று கையில் இருந்த ஷூவால் தன் தலையில் அடித்துக்கொண்டான்.


[adsense][/adsense]

நடக்கும் அமளிதுமளிகளை கண்டுகொள்ளாது தூரத்து வானத்தையும் அந்த இருளிலும் ரம்மியாமான அழகோடு இருக்கும் அந்த இடத்தையும் ரசித்துக்கொண்டிருந்தவன் பாண்டியின் செயலில் என்னவென சட்டென திரும்ப அவன் திரும்புவதை சற்றும் எதிர் பார்த்திராத சிட்டு நிலை தடுமாறி பின்னேருந்த செடியைத் தாண்டி கீழே உருண்டாள்.


என்ன நடந்தது என்று ஊகிக்கும் முன்னே "ஏய்ய்.." என்ற சத்தத்தோடு அங்கிருந்த செடிகளுக்கு இடையில் இருந்த பள்ளத்தில் சடசடவென சத்தத்தோடு அவள் கீழே விழுந்திருந்தாள்.

நிரஞ்சன் பதறிப்போனான். "ஹேய் யார்டா.." என்று கூட்டத்தை ஒரு நொடி பார்த்தவன் "அய்யோ..." என பதறி ஓடி வந்த பாண்டியை "ஏய் ரிசார்ட்ல ஆளை சீக்கிரமா கூப்பிடு சீக்கிரமா.." என்று அவனை துரிதப்படுத்த கேம்ப்பயருக்காக தயார்படுத்திக் கொண்டிருந்த ஆள் வேகமாக டார்ச்சோடு ஓடிவந்தான்.


"எலேய் தொரராசே... பெரிய டார்ச் எடுத்துட்டு ஓடியாடா பள்ளத்துல ஆள் விழுந்துடுச்சு.." என்று சப்தமாய் கூச்சலிட அதற்குள் பாண்டி ரிசார்ட்டின் வரவேற்ப்பறைக்கு ஓடியிருந்தான். விசயத்தை கேள்விபட்டு பெரிய டார்ச்சுகளோடு ஆட்கள் விரைந்தனர்.

நிரஞ்சன் பதறிப்போய் அங்கே இறங்க முடியுமா என்று பார்த்துக்கொண்டிருக்க
வந்தவர்கள் "கவலைபடாதீங்க சார் இது ஒரு இருபது முப்பது அடி பள்ளம் தான்.. கீழே தேயிலை தோட்டம் தான். உசிருக்கு ஆபத்து இருக்காது. என்ன விழுந்த இடத்துல ஏதாவது கல்லிருந்து காயமாகிருந்தா தான் உண்டு. ஆனா எவ்ளோ சீக்கிரமா எடுக்கனுமோ எடுத்திடனும். இல்ல அட்டை உடம்புல இருக்க ரத்தம் பூராத்தையும் உறிஞ்சுடும். ஏய் ஜீப்பை எடுங்கப்பா.. வேணுங்கறதை எடுத்துக்கோங்க.." என்று விரைய மொத்த ரிசார்ட்டும் பரபரப்பானது.


"எதே இருபது முப்பதடியா அதுலயே அவ கைகால் உடையாம இருக்கனுமே.." என்று பதறிவர்களுக்கு
பெரிய பள்ளத்தாக்கு இல்லை என்பது சற்றே ஆறுதலாய் இருந்தது.

அவள் உயிருக்கு ஆபத்திருக்காது என்ற செய்தி நண்பர்களுக்கு நிம்மதி அளித்தாலும் அவளுக்கு ஏதும் ஆகியிருக்க கூடாதென்ற கவலை அவர்களை அப்பியிருந்தது.

ஒரு வழியாய் அவளை மீட்கும் வரை நண்பர்களுக்கு பயம் போகவேயில்லை. தன்னால் தானே என்று பாண்டியும், நிரஞ்சனும் ஒன்று போல் எண்ணி பதட்டத்தோடும் அவளுக்கு ஏதும் நேர்ந்துவிடக்கூடாதென்றும் எண்ணியபடி இருந்தனர்.


விழுந்த அதிர்ச்சியில் மயங்கியிருந்தவளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்ல . கை கால்களில் லேசான சிராய்ப்பு காயங்களோடு தப்பியிருந்தாளும் இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் அவளை பதம் பார்க்க தொடங்கியிருந்தது. மருத்துவமனை கொண்டு செல்லும் முன்பே கவனமாய் அவளை ஆராய்ந்த நிரஞ்சன் "ஏய்ய் அவ மேல அட்டை இருக்கு.. சீக்கிரம்.." என ரிசார்ட்டில் இருந்து வந்தவர்களிடம் கூற அவர்களை பையிலேயே வைத்திருந்த உப்பையும் மூக்குபொடியுமாய் ஆளுக்கொன்றை எடுத்து அதை அப்புறப்படுத்த தொடங்கினர். அட்டை எடுத்த இடத்தில் எல்லாம் இரத்தம் வழிய தொடங்க அதே உப்பை வைத்து தேய்த்து விட்டனர்.


"தம்பி துணில ஏது அட்டை ஒட்டிருக்கலாம் லேடிஸ் யாரையாவது பக்கத்து ஆஸ்பிடலுக்கு வர சொல்லுங்க.." என்றபடியே அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பாண்டி கண்கள் கலங்க நின்றிருந்தான். நிரஞ்சனோ நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தான்.

சில நிமிடங்களிலேயே நண்பர்கள் கூட்டம் வந்திருக்க உள்ளே வந்தவர்களிடம் "கேர்ள்ஸ் அவ மேல அட்டைபூச்சிகள் ஏறிடுச்சு. அவ டிரஸ்ல ஏறிருக்க வாய்ப்பிருக்கு யாராவது போய் முதல்ல அதை செக் பண்ணுங்க.." என்றான் நிரஞ்சன் வெகு பதட்டமாய்

"அட்டையா.." என்று சரண்யாவும் தீப்தியும் பின்னடய

"நான் போறேன்.."என்று மருத்துவரின் அறைக்குள் நுழைந்தாள் அலென்னா.

"அருண் நீ இவங்களை கூட்டு போய் அவ டிரஸ் அப்புறம் ஒரு ஜெர்கின் எல்லாம் எடுத்துட்டு வா.." என்று கூற சரண்யாவும் அருணும் திரும்பவும் ரிசார்ட் சென்றனர்.

நிரஞ்சன் பயந்தது போலவே அவள் அணிந்திருந்த ஸ்வெட்டரை தான்டி உடைகளுக்குள்ளும் அந்த ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள் சில ஏறிதான் இருந்தது. அலென்னாவின் உதவியோடு அதை எல்லாம் மருத்துவர் அகற்றினார். சட்டென உடைகளுக்கு உள்ளும் ஊடுருவி விடும் என்பதால் இன்னும் ஏதேனும் இருக்க கூடும் என்று மற்ற உடைகளையும் கலைந்து பார்க்கும் படி மருத்துவர் கூற அதற்குள்ளாகவே அவள் நடுங்க தொடங்கியிருந்தாள்.

"நிரஞ்சன் யாராவது ஜெர்கின் குடுங்க இவ ரொம்ப நடுங்குறா.." என்று அழைக்க


கண்கலங்க நின்றிருந்த பாண்டியை ரியாஸ் சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்தாருந்தான்.

நிலை கொள்ளாது தவித்துக்கொண்டிருந்த நிரஞ்சன் தன்னுடைய ஜெர்கினை கழற்றியபடி உள்ள துழைந்தான். மழையில் நனைந்த கோழிக்குஞ்சாய் கண்விழிக்காமல் உடல் வெடவெடக்க குறுகி கிடந்த சிட்டுவை கண்டு நிரஞ்சனின் மனம் பதறிப்போனது. கெர்கினை அலென்னாவிடம் கொடுத்தவாறே

"டாக்டர் அவளுக்கு ஒன்னுமில்லையே.." என்று பதட்டத்தோடு வினவ

"நத்திங் மேன். அதிர்ச்சில மயங்கிருக்காங்க. லேசான சிராய்ப்பு காயம் தான். நல்லவேளை ப்ராக்சர் ஏதுமில்லை. ஆனா அட்டைகள் நிறைய ஏறிடுச்சு. முடிஞ்ச அளவு இருக்கிற டிரஸ்ஸையும் ரிமூவ் பண்ணி செக் பண்ணிடறது பெட்டர்.." என்று கூறவும் அதிர்ந்து போனான் நிரஞ்சன்.

"டோன்ட் ஒர்ரி அவங்க ப்ரெண்ட் இருக்காங்கல்ல வேற யாரும் லேடிஸ் இருக்காங்களா..? எங்க ஸ்டாப் ஏழு மணிக்கெல்லாம் கெளம்பிடுவாங்க நீங்க கொஞ்சம் பாருங்க.. அதுக்குள்ள நான் இந்த பேஷன்டை பார்த்துட்டு வர்றேன்.." என்றபடி அங்கிருந்த அலமாரியில் இருந்து கம்பளிகளை இரண்டை அவர் எடுத்து கொடுத்துவிட்டு காய்ச்சலோடு வந்த நோயாளியை கவனிக்கவென அடுத்த அறைக்குள் நுழைந்தார்.

அங்கிருந்த தீப்தியை "ப்ளீஸ் தீப்தி போ.." என அழைத்து உள்ளே அனுப்பி வைத்தான்.

அலென்னாவும் தீப்தியும் அவள் உடைகளை களைந்து பரிசோதிக்க அவள் முதுகு புறம் நான்கைந்து அட்டைகள் ஒட்டியிருந்தது. தீப்திக்கு அதை பார்க்கவுமே அங்கிருந்து குமட்டியபடியே வயிற்றைப் பிடித்தபடி அறுவறுப்போடு வெளியே ஓடினாள்.


"நிரஞ்சா ப்ளீஸ் இங்க வா.. என்று அலென்னா கத்தவும் நிரஞ்சன் உள்ளே நுழைந்தான். அங்கே மேல் சட்டையை அவிழ்த்து சுவற்றின் புறமாய் திருப்பி கம்பளியால் முன் புறம் மூடியவாறு நடுங்கிக்கொண்டிருந்தவளை பிடித்துக் கொண்டிருந்தாள் அலென்னா சிட்டுவின் முதுகில் இருந்த அட்டைகளை கண்டவன் அங்கிருந்த ஸ்ப்ரிட்டை அதன் மீது ஸ்ரே செய்தவன் அருகே இருந்த இடுக்கியால் லாவகமாய் அதை எடுத்தான்.

"கால்ல எல்லாம் பார்த்தியா வேற எங்காவது இருக்கா என்று கேட்க

"ப்ளீஸ் இன்னும் இருக்கா பாரு.. இவளை பிடிச்சிட்டு பார்க்க முடியல.. இல்ல இவளை நீ பிடிச்சுக் கோ நான் பார்க்கிறேன் என்று அலென்னா கூறவும்


"நான் எப்படி..? என்று நிரஞ்சன் தயங்க

"ஏய் இப்ப இதெல்லாம் பார்த்தா அவ உயிருக்கு ஆபத்தாய்டபோவுது.." என்றதும் அவனுக்கு வேறு எதுவும் யோசிக்க தோன்றவில்லை.

" நான் பிடிச்சிக்கறேன் நீ பாரு.." என்று அவள் கழுத்து வரை போர்த்தியிருந்த கம்பளியோடு சேர்த்து சேர்த்து ஒருபுறமும் அவள் இடுப்புபகுதியில் ஒரு புறமுமாய் பிடித்துக்கொண்டான்.

குளிர் தாங்காமல் கழுத்தடியில் இருந்த அவன் கரங்களை இறுகப்பற்றிக்கொண்டு முனகினாள் சிட்டு.

[adsense][/adsense]


"ஹே.. அலென்னா இவ பாடி ரொம்ப சில்லுன்னு இருக்கு.." என்று பதட்டப்பட

"அப்படியே தேய்த்து விடு நிரஞ்சா.. இங்க பாரு இங்க ரெண்டு அட்டை ஏறியிருக்கு.." என்று அவள் தொடைபகுதியில் இருந்த அட்டையை அவள் எடுத்துக் கொண்டிருந்தாள்.

"ஓ.. காட்.. ப்ளீஸ் என்னை மன்னிச்சிக்கோ.." என்றபடியே கண்கள் கலங்க அவள் கைகளை சூடு பறக்க தேய்த்து விட்டான். அவள் கழுத்தடி அவள் முடிகற்றைகளில் ஏதும் இருக்கிறதாவேன பார்த்தான். ஏதுமில்லை என்று தெரியவே அவளுக்கு நன்றாய் போர்த்தி விட்டு

"அலென்னா எதுக்கும் இன்னொரு முறை பாரு.." என்றபடியே மருத்துவரை அழைக்கச் சென்றான். அவர் மீண்டும் வந்து அட்டை எடுத்த இடத்தில் மருந்திட்டு செல்ல

"நல்லா பார்த்துட்டயா ஒன்னும் இல்லையே..? என்று நிரஞ்சன் கேட்க
மீண்டும் அவளை ஆராய்ந்துவிட்டு ஏதுமில்லை.. என்று திருப்தியாய் அவளை முழுவதுமாய் போய்த்தியவள்

"இல்லடா எல்லாம் பார்த்துட்டேன். என்று அலென்னா திரும்ப, தன் டீசர்டை கழற்றி திரும்பியவாறே நீட்டிக்கொண்டிருந்தவனை ஆச்சர்யமாய் பார்த்தவள் அதை வாங்கி அவளுக்கு அணிவித்துவிட்டாள்.

"அந்த ஜெர்கினையும் போட்டு விடு அலென்னா.." என்றான் நிரஞ்சன்.

அவனுடைய ஜெர்கினையும் அணிவித்து போர்த்தி விட்டாள் அலென்னா

கண்ணீரோடு வெளியே சென்ற பாண்டியை செல்வாவும் ரியாசஸும் சமாதானம் செய்து கொண்டிருக்க வயிற்றைப் பிடித்துக் கொண்டு வாந்தி எடுத்தபடி ஓடி வந்த தீப்தியை பார்த்து செல்வா அவளிடம் விசாரிக்க இவளுக்கு என்னவோ ஏதோவென்று பாண்டியும் ரியாசும் உள்ளே வந்தனர்.

அவசரமாய் நிரஞ்சன் மருத்துவரை அழைத்ததை கவனித்துவிட்டு விசயம் தெரியாமல் அங்கிருந்த நாற்காலியில் தொப்பென அமர்ந்தான் பாண்டி.

என்ன நடக்கிறதென்று அவனுக்கு விளங்கவேயில்லை. ஏதோ அவளுக்கு நேர்ந்துவிட்டதென்றே அஞ்சினான். மருத்துவர் அவளை கவனித்த பின் பனியனோடு வெளியே வந்த நிரஞ்சனிடம்

"அவளுக்கு..." என்று நா தழுதழுக்க கேட்ட பாண்டியிடம் ஒரு பெருமூச்சை விட்டவாறே அருகில் அமர்ந்தவன் அவன் கைகளைப் பற்றிக்கொண்டு

"அவளுக்கு ஒன்னுமில்ல பயப்படாதே..." என்றான் நிரஞ்சன்.

உயிர் வந்தது போல் சுவற்றில் தலைசாய்த்து நிமிர்ந்து அமர்ந்து பெருமூச்சு விட்டான் பாண்டி.

"ஹப்பா..." என்று நிரஞ்சனின் அருகே இருந்த இருக்கையில் ரியாஸூம் அமர்ந்தான்.

"கொஞ்ச நேரத்துல எல்லாரையும் என்ன பாடு படுத்திட்டா... ஸ்ப்பாஆஆஆ இவளுக்கு ஏதாவது ஆகிருந்தா என்ன ஆகறது.." என்று ரியாஸ் கூற


[adsense][/adsense]


"என்னால நெனச்சு கூட பார்க்க முடியாது. அவ சேட்டை செய்வா தான், ஆனா அவ ஒரு பச்சகுழந்தை மாதிரிடா.. யாருக்கும் எந்த கெடுதலும் மனசால கூட நினைக்கத் தெரியாது. விளையாட்டு தனமும், துடுக்கும் இருக்குமே ஒழிய யாருக்கும் துன்பம் செய்யமாட்டா... ஹய்யோ அவளுக்கு ஒன்னுன்னா வள்ளி அத்தைக்கு என்ன பதில் சொல்வேன்.." என்று கண் கலங்கினான்.

இறுகி போய் அமர்ந்திருந்தான் நிரஞ்சன். அவனுக்கு பிடித்தமில்லாத விசயங்களில் ஒதுங்கி போவானே அன்றி யாரையும் காயப்படுத்த எண்ண மாட்டான். இன்று அவனால் பூஞ்சிட்டுவிற்கு நேர்ந்த விபத்தில் அவன் மனம் மிகவும் துன்பப்பட்டிருந்தது.

நல்லவேளையாக அது தேயிலை தோட்டமாயிருக்கவே இ
த்தோடு தப்பித்தாள் பெரிய பள்ளத்தாக்காய் இருந்திருந்தால் அவள் உயிருக்கு உத்திரவாதமில்லையே நினைக்கும் போதே உள்ளம் நடுங்கியது நிரஞ்சனுக்கு.


வருவாள்....
 

New Threads

Top Bottom