மாறாத நேசம் !
அத்தியாயம் 12
கொல்லைப்புறக் கொடியில் கிடந்த துண்டை எடுக்க வந்த கனியமுதன் சீர்மதியன் பேசியதைக் கேட்டு அதிர்ந்து நின்றான்.அவன் அப்போது தான் வந்தான்.அதனால் இருவருக்குள்ளும் நடந்த வாக்கு வாதம் அவனுக்கு சரியாகத் தெரியவில்லை.
ஆனால், கடைசியாக சீர்மதியன் பேசியது தான் காதில் விழுந்தது. திருமணமாகி ஒரு நாள் கூட முடியவில்லை! அதற்குள் என்ன வார்த்தை பேசுகிறான்.என்ன தான் கோவம் இருந்தாலும் இப்படியா பேசுவது?
அந்தப் பெண் பாவம்! ஏற்கனவே ஏகப்பட்ட குழப்பத்தில் நடந்த கல்யாணத்தை இவன் இன்றே குழி தோண்டி புதைத்து விடுவான் போலே..என்று எண்ணியவன் .
இவர்கள் சண்டை பெரியவர்கள் காதுக்கு போவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து சத்தமில்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்றான்.
தண்மதி எத்தனை நேரம் அசையாமல் அப்படியே நின்றாளோ! அவள் உணரவில்லை.
பொன்மணி அவளைத் தேடிவந்து கற்சிலையாக நின்றவளைப் பற்றி அழைத்த பின் தான் நடப்புக்கு வந்தாள்.
தண்மதியின் முகத்தில் அழுதற்கான கண்ணீர் தடயங்களை கண்டு பதறிய பொன்மணி "என்னடம்மா ஏன் அழுது இருக்கிறே?என்னாச்சு? யாராவது உன்னை ஏதாவது சொன்னாங்ளா?"என்று கேட்டவரிடம்.
தன் மனக்கவலையை விழுங்கிக் கொண்டு "வீட்டு ஞாபகம்.." என்று மொட்டையாக பதிலுரைத்தாள்.
புது இடம் அதனால் கண்டிப்பாக வீட்டு ஞாபகம் வந்து இருக்கும். என்று பொன்மணியும் நினைத்து, மருமகளை சாமதானப்படுத்தி காலை உணவு உண்ண அழைத்துச் சென்றார்.
சீர்மதியன் பல விதமான உணர்ச்சி போராட்டத்துடன் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.அவளின் வார்த்தைகள் அவனை உயிரோடு கொன்றது.
எப்ப பார்த்தாலும் தன்னை மாட்டுக்காரன் என்று கேவலமாக பேசுவதை அவனால் பொறுக்கவே முடியவில்லை..மாடு என்றால் என்ன அவ்வளவு கேவலமா..?
தன் ரத்தத்தை பாலாக தரும் அந்த வாய் இல்லா உயிரை மதிக்காவிட்டாலும் இழிவாக பேசாமல் இருக்கலாமே!
தன் தொழிலை இவளே மதிக்க வில்லை என்றால், மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள். எந்த தொழிலும் கேவலம் இல்லை என்று இவளுக்கு எப்போது புரியும்.
நான் நிறம் இல்லாவிட்டால் என்ன ? என் மனம் அழகாக இருப்பது அவளுக்கு புரியாதா? நிறமா சோறு போடும். இருவரில் ஒருவர் நிறமா இருந்தால் போதாதா? என்று குழந்தையைப் போல் பலதை நினைத்து குழம்பிய படியே வண்டியை பண்ணையில் நிறுத்தினான்.
தண்மதிக்கு சாப்பிட உணவை பரிமாறிய பொன்மணி மனசு கேட்காமல், "பாரும்மா உன் புருஷனை இத்தனை செய்து வைத்திருக்கேன். சாப்பாடு வேண்டாம்ன்னு சொல்லிட்டு வண்டியை எடுத்துட்டு கிளம்பிட்டான். அப்படி என்ன அவசர வேலை சாப்பிடாமல் கூட போக .." என்று காயப்படுத்தியவளிடமே குறை கூறிக் கொண்டு இருந்தார்.
தண்மதிக்கு அவன் சாப்பிடாமல் சென்றது மனதை உறுத்தியது. ஆனாலும், அவன் கூறிய வார்த்தைகள் அவள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதன் பிறகு அவளாலும் சாப்பிட முடியவில்லை.
பொன்மணியிடம் சாப்பிட்டேன் என்று பெயர் பண்ணிவிட்டு தலைவலிக்குது கொஞ்ச நேரம் படுத்திருக்கிறேன் என்று கூறிவிட்டு தங்கள் அறைக்கு வந்துப் படுத்துக் கொண்டாள்.
மனமோ அவன் பேசிய வார்த்தைகளையே அசை போட்டது. 'நான் இனி என்ன செய்வது..? அவனுடன் சேர்ந்து வாழ முடியுமா..?அவன் போ! என்று சர்வசாதாரணமாக சொல்கிறானே.! இவனுக்கு திருமணம் என்றால் விளையாட்டா ?' என்று எண்ணி.. எண்ணி .. தனக்குள்ளேயே மருகினாள்.அப்போதும் அவள் பேசியது தவறு என்று அவள் உணரவில்லை.
சீர்மதியன் இரவு வரை வீட்டிற்கு வரவில்லை. அவனுடன் பேச வேண்டும் என்று கனியமுதன் காத்திருந்தான்.
பொன்மணி மகனை காணாமல் புலம்பி தீர்த்தார்.. "இந்த பையனுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா..?இத்தனை நாள் தான் தனியாள். எப்ப வேண்டுமானாலும் வந்து போனான்.ஆனால், இப்போது அப்படியா ?இவனுக்காக ஒருத்தி காத்திருப்பது தெரியவில்லையா?இவனை என்ன தான் செய்ய..?" என்று தவித்தார்.
கோவழகன் தான் மனைவியை சமாதானப்படுத்தினார். "மணி அவனைப் பற்றி தெரியாதா?அவனுக்கு ஏதாவது அவசர வேலை இருந்து இருக்கும் .இல்லை என்றால் இப்படி நடந்து கொள்வானா?நீ கொஞ்சம் புலம்பாமல் இரு.." என்றார்.
சீர்மதியன் இரவு பதினோரு மணிக்குத் தான் வந்தான். சாப்பிடச் சொன்ன தாய்யிடம் வெளியில் சாப்பிட்டு விட்டேன் என்று கூறிவிட்டு தங்கள் அறைக்கு வந்தான்.
மனைவி தூங்குவதை ஓர்ககண்ணால் பார்த்தபடி மனதிற்குள் 'எவன் எப்படி போனால் என்ன ?மகாராணியாட்டா தூக்கம் பாரு..'என்று கருவிக் கொண்டே உடையை மாற்றிவிட்டு பாய்யை எடுத்து போட்டு படுத்தான்.
காலையிலும் தண்மதி எழுவதற்குள் எழுந்து பண்ணைக்கும் சென்று விட்டான்.
பொன்மணி தான் "இன்னைக்கு மறுவீட்டுக்கு அழைக்க அண்ணன் அண்ணி வராங்க..இவன் இப்படி பண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டால் என்ன செய்வது..போன் பண்ணுனாலும் எடுப்பதில்லை.."என்று புலம்பி தவித்தவரிடம்,
கனியமுதன் "அத்தை நான் போய் பார்த்து கூட்டிட்டு வரேன் நீங்க கவலைப்படாதீங்க.." என்று மாமியாரை சமாதானப்படுத்தி விட்டு மச்சுனனை அழைக்க பண்ணைக்குச் சென்றான்.
கோவழகன் மகனின் நடவடிக்கைகளைக் கண்டு கொஞ்சம் குழம்பித் தான் போனார். மனைவியிடம் காட்டிக் கொள்ளவில்லை. ஏற்கனவே புலம்புவரிடம் தன் கவலையை சொன்னால், இன்னும் புலம்பி தவிப்பாளே என்று பொறுமை காத்தார்.
ஆனால், ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது.அது மகனுக்கும் ,மருமகளுக்கும் இடையில் ஏதோ சரியில்லை என்பது நன்றாக புரிந்தது.
இதை எப்படி சீர் செய்வது! திருமணமாகி இரண்டு நாள் தான் ஆகி இருக்கிறது..போகப் போக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் சீக்கிரம் சரியாகி விடும் தான்.
ஆனால் ,தானாக சரியாகட்டும் என்று விடவும் முடியாதே! முதல் கோணல் முற்றிலும் கோணல் போல் ஆகிவிடக்கூடாதே..! என்று பலதையும் யோசித்துக் கொண்டே இருந்தார்.
கனியமுதன் நடந்தே ஒரு வழியாக பண்ணை வந்து சேர்ந்தான். அங்கே சீர்மதியன் கணக்கு வழக்கு பார்க்கும் அறையில் மேஜை மீது தலையை வைத்து படுத்து இருந்தான்.
கனியமுதன் அவன் அருகில் சென்று ," சீரா .."என்றதும் தூக்கிவாரிப் போட நிமிர்ந்தவனின் முகமும் கண்களும் சோர்ந்து போய் இருந்தது.
தன் மாமனை கண்டதும் வலுக்கட்டாயமாக சிரிப்பை வரவழைத்துக் கொண்டு, " வாங்க மாமா..என்ன விசயம் பண்ணை வரை வந்து இருக்கீங்க..போன் பண்ணி இருந்தா நானே வந்து இருப்பேனே .."என்றவனிடம்,
"எத்தனை தடவை போன் பண்ணுவது ..உன் போன் எங்கே..?" என்ற பின் தான் தன் அலைபேசியை தேடி எடுத்துப் பார்த்தான். அது சத்தம் குறைவில் வைக்கபட்டு இருந்தது.
அதனால் தான் அழைப்பு கேட்கவில்லை.
முந்திய நாள் இருந்த மனநிலையில் யாருடனும் பேசும் மனநிலை தனக்கு இல்லை என்று சத்தத்தை குறைத்து வைத்தவன் அதை மறந்தே போனான்.
பல தவறிய அழைப்புகள் இருந்தது.அதில் தொழில் முறை அழைப்புகளும் அடக்கம்.
தன் தலையில் அடித்துக் கொண்டே சத்தத்தை அதிகரித்து வைத்து விட்டு மாமானை கேள்வியாகப் பார்த்தான்.
கனியமுதன் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே "சரி கிளம்பு மறுவீடு அழைக்க உன் மாமனார் வீட்டிலிருந்து வருகிறார்கள்.." என்றான்.
" இல்லை மாமா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் அப்புறம் வரேன்.."என்ற சீர்மதியனிடம்,
"என்ன வேலை ! இப்படி முகத்தை கவிழ்த்துக் கொண்டு படுத்திருக்கிற வேலையா?"
"மாமா?"
"சீரா உனக்கு நான் அதிகம் சொல்ல வேண்டியது இல்லே.. ஒரே நாளில் எல்லாம் சரியாகி விடாது. காலம் எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை பெற்றது .."என்று ஆறுதலாக பேசினான்.
சீர்மதியனோ வெற்று புன்னகை ஒன்றை சிந்தியபடி அமைதியாக இருந்தான்.
"சீரா இனி நடப்பது நமக்கு பிடிச்ச மாதிரி மாற்றிக் கொள்வது நம் கையில் தான் ! எல்லாருக்கும் நினைச்ச வாழ்க்கை அமைந்து விடாது. கிடைத்த வாழ்க்கையை நமக்கு பிடிச்ச மாதிரி மாற்றிக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.."என்று பொறுமையாக பேசினான்.
மறந்தும் கூட முன்றைய நாள் அவர்கள் சண்டையை தான் பார்த்ததையும், அவன் கூறிய வார்த்தைகளை தான் கேட்டதாகவும் காட்டிக் கொள்ளவில்லை.
சீர்மதியனும் அதற்கு மேல் தன் மாமனை காக்க வைக்காமல் கனியமுதனுடன் வீட்டிற்கு புறப்பட்டான்.
தண்மதி, தன்தாய்வீட்டு ஆட்களைக் காண ஆசையுடன் காத்து இருந்தாள்.அவர்கள் வந்ததும் முகம் கொள்ளலாச் சிரிப்புடன் ஓடிப் போய் தான் தாயையும் பாட்டியைமும் அணைத்துக் கொண்டாள்.
கோவழகன் பொன்மணியும் இன்முகத்துடன் வரவேற்றனர்.
அருமைநாயகத்தை தவிர அனைவரும் வந்து இருந்தனர்.
தூயமுல்லை வந்தவர்களை வரவேற்று குடிப்பதற்கு காபி கொடுத்தாள்.
தண்மதி தன்தாயுடனே அமர்ந்து கொண்டாள்.குழந்தையை வைத்துக் கொண்டு தூயமுல்லையே குடிப்பதற்கு காபி கலந்து எடுத்து வருவதை கண்ட தூயநாச்சி, தன் பேத்தி தண்மதியைக் கடிந்து கொண்டார்.
"தணு என்ன இது! இங்க வந்து உட்கார்ந்துட்டு இருக்கே..? போய் முல்லைக்கு உதவு!அவள் குழந்தையை வைத்துக் கொண்டு செய்கிறாள் பாரு.." என்று அனுப்பி வைத்தார்.
தண்மதியும் பாட்டி இடம் பேச்சு வாங்க பயந்து கொண்டு தூயமுல்லையிடம் , "கொடுங்க நான் தரேன்.." என்று வந்த இரண்டு நாளில் முதல் முதலாக பேசினாள்.
முல்லையோ , "இந்தா இவனைப் பிடி நான் கொடுத்துக்கிறேன்.." என்று தன் மகனை தம்பி மனைவியிடம் கொடுத்தாள்.
தண்மதி வேறு வழியில்லாமல் குழந்தையை பெற்றுக் கொண்டவள், அதன் அழகில் மயங்கிப் போய் குழந்தையுடன் ஒன்றிப்போனாள்.
சீர்மதியனுக்கு வீட்டுக்கு வரப்பிடிக்கவில்லை தான் ஆனால் தன் மாமா பேச்சை தட்டவும் முடியாமல் வேறு வழி இல்லாமல் வீட்டிற்கு வந்தவனின் கண்களில் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த தண்மதி தான் பட்டாள்.
தீப்பிழம்பாய் கொந்தளித்தவனின் மனம் அந்த காட்சியை கண்டதும் ,பனிப் பாறையாக உருகியது.வருங்காலத்தில் தங்கள் குழந்தையையும் இப்படித் தானே கொஞ்சுவாள் என்று எண்ணி மகிழ்ந்தது.
அதே மகிழ்ச்சியுடன் தன் மாமனார் வீட்டாரை வரவேற்று விட்டு மரியாதை நிமித்தமாக அவர்களுடன் அமர்ந்து கொண்டான்.
கனியமுதனும் வந்தவர்களை உபசரித்து விட்டு தன் மகள் ஏழிசையுடன் அமர்ந்து கொண்டான்.
சிறிது நேரம் பெரியவர்கள் பேசிக் கொண்டு இருந்தனர்.முறைவழுதி மட்டும் யாரிடமும் ஒட்டாமல் தனியாக அமர்ந்திருந்தான்.
தண்மதி தான் தன் அண்ணனின் சங்கடத்தை புரிந்து கொண்டு அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.
தங்கை அருகில் வந்து அமர்ந்ததும் மலர்ந்த முகத்துடன் நலம் விசாரித்தவன், மறந்தும் கூட சீர்மதியனைப் பற்றி பேசவில்லை.
அவன் மனம் ஏனோ தாங்கள் அவனிடம் தோற்று விட்டோம் என்ற கழிவிரக்கத்தில் நொந்தது.
சீர்மதியனை தன் தங்கை கணவனாக வழுதியால் எண்ணவே முடியவில்லை. தன்னிடம் போட்ட சாவலில் அவன் ஜெயித்து விட்டானே என்று மனம் குமறியது.
முறை வழுதியின் மனம் குதிரைக்கு லாடம் கட்டியது போல், ஒன்றையே பிடித்து தொங்கிக் கொண்டிருந்ததே தவிர.. இரு குடும்பமும் பகை மறந்து இந்த திருமணத்தால் பழைய படி இணைந்ததை பற்றி எண்ணவே இல்லை.
மறுவீட்டு விருந்து தாயரானதும் செம்பியன் குடும்பம் சாப்பிட அமர்ந்தனர்.அவர்களுடன் தண்மதியையும் சீர்மதியனையும் உணவு உண்ணுமாரு பெரியவர்கள் பணித்தார்கள்.
நல்ல நேரம் முடிவதற்குள் மணமக்களை அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டுமென்று அவசரப்படுத்தினார்கள்.
சீர்மதியனும் வழி இல்லாமல் தண்மதியுடன் அமர்ந்து உணவை உண்டான்.
உணவு உண்டு முடித்தவுடன் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பும் நேரம் வந்ததும் ,யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சீர்மதியன் "நீங்கள் தண்மதியை மட்டும் கூட்டிட்டு போங்கள்.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு .."என்று அனைவர் தலையிலும் சொல்லாமல் கொள்ளாமல் இடியை இறக்கினான்.
நேசம் தொடரும்..