அத்தியாயம் - 1
விண்...விண்... என்று தெரித்த நெற்றிப் பொட்டை அழுத்திக் கொண்டு கண்களை மூடியபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள் மலர்மதி. மனம் சிறிதும் சமனப்பட மறுத்தது.
“போயும்... போயும் இவனை... இவனை... ச்சீ... அதற்கு மேல் நினைப்பது கூட அருவறுப்பாய் இருக்கிறது”
உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கிவிட்டது போல் முழங்கால்களை மடித்து கைகளை சுற்றி முகத்தை கால்களுக்குள் அழுந்தப்புதைத்துக் கொண்டாள்.
எத்தனையோ பழமொழிகள்; நாய் வாலை நிமிர்த்த முடியாது. நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அதன் புத்தி.... இப்படி நினைக்கையிலேயே மனம் வலித்தது. அவனை நாயோடு ஒப்பிடவும் அவளால் முடியவில்லை. ஆனால் உண்மையில் அப்படித்தானே ஆகிவிட்டது.
ஒரு முறையல்ல இருமுறையல்ல இத்துடன் மூன்றாம் முறையாய் தன் கண்களாலேயே பார்த்த பின்பும் அவனுக்காக வக்காலத்து வாங்கும் மனதை என்னவென்று ஏசுவது... அத்தனை அன்பு. இதில் அன்போடு ஏன் நிறுத்துவது. காதல்! அதுதானே உண்மை. தன்னிடமே அதை மறைத்து என்ன பயன்.
அவளிடம் மட்டுமா, அவனிடமும் தான் மறைத்துவிட்டாள். அது எத்தனைப் பெரிய பிசகு... என்ன பெரிய பிசகு. அப்படி கூறியிருந்தால்தான் அவன் மனம் அவளை ஏற்றுக் கொள்ளும் என்று என்ன நிச்சயம். அவன் மனது, அவளை நிமிர்ந்து கூட பார்க்காத பொழுது....
“இது வெறும் ஒருதலை ராகம்” இப்படி எண்ணுகையிலேயே அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. அழுவது பொதுவாக மலர்மதிக்கு பிடிப்பதில்லை. அவள் அழுத காலம் முடிந்துவிட்டதாகவும், இனி அவள் எதற்கும் அழமாட்டாள் என்று, ஆறு வருடத்திற்கு முன்பே சபதம் செய்தவளாயிற்றே. ஆனால் அப்போது இந்தக் காதல் கீதல் என்று கண்ட கருமமும் வந்து தொலைக்கும் என்று அவள் என்ன கனவா கண்டாள்? ஆ....ஆனால் வந்து விட்டதே! அதுவும் கொஞ்சம் கொஞ்சமாய் அவள் சேர்த்து வைத்திருந்த திடத்தையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஒட்டு மொத்தமாக சேர்த்து வழித்துக் கொண்டல்லவா போய்விட்டது.
ஆ... ஆங்... போயே விட்டதுதான். இனி அவனை நினைத்தாலே அதற்குப் பெயர் அசிங்கம். அத்தகைய அசிங்கத்தைச் செய்ய அவள் ஒன்றும் அத்தனை தரங்கெட்டுப் போய்விடவில்லை.
முதலில்... இந்த உலகத்தை விட்டே சென்றுவிடத்தான் அவள் மனம் துடித்தது. ஆனால் தற்கொலை ஒரு கோழைத்தனம், கடவுள் கொடுத்த வாழ்வு. அவரைத் தவிர அதனை விடுவித்துக் கொள்ள யாருக்கும் அதிகாரமில்லை என்பது அவளது கூற்று. நினைவுகள் ஆறு வருடங்கள் பின்நோக்கிச் சென்றன.
தாய், தந்தை உடன் பிறந்த தங்கை, தம்பி, தாத்தா, பாட்டி என்று மொத்த குடும்பத்தையும் விபத்தில் பறிகொடுத்து விட்டு அனாதையாக நின்றபோது ஆற்றுவார், தேற்றுவாரின்றி அழுது கரைந்து, சாவின் மடியில் சென்று விட்டவளை தூரத்து பெரியப்பா ஒருவர் அரவணைத்து அவளை பெண்கள் விடுதியில் சேர்த்து விட்டு, மாதா மாதம் கல்லூரிக்கும், விடுதிக்கும், அவளது செலவிற்கும், அவளது தாய், தந்தையின் பி.எஃப் கிராஜிவிட்டி, இன்சூரன்ஸ், அவர்களின் சிறு நிலம் என்று அத்தனையும் பணமாக்கி, நல்லதோர் வங்கியில் போட்டு, அவளிடம் செக் புக், கிரெடிட் கார்ட் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, சிறு வருத்தத்துடன் பலமுறை அவளை பாவமாக, திரும்பித் திரும்பிப்பார்த்துக் கொண்டே சென்ற காட்சி. இன்னமும் அவளது கண்களை விட்டு அகலவே இல்லை.
பாவம் அவரும் என்னதான் செய்வார். அவருக்கும் இரண்டு பெண்கள் திருமண வயதில் வீட்டில் இருக்கையில், இவளை எப்படி அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியும். இந்த காலத்தில் இருப்பதை பிடுங்கும் உறவினர் மத்தியில். நல்லவராக ஒருவர் அமைந்தாறே என்று அவள் ஆறுதல் பட்டுக் கொள்ளும்படிதான் ஆயிற்று.