அத்தியாயம் - 5
அன்று அலுவலகத்தில் நுழைந்த பொழுதே, வாஞ்சிநாதன் மலர்மதியிடம் ஓர் அழைப்பிதழை நீட்டினார். ஆண்டுதோறும் அலுவலகத்தில் நடைபெறும் ஆண்டு விழா அழைப்பிதழ்தான். அவள் வேலைக்குச் சேர்ந்து இதுதான் முதல் ஆண்டு விழா. அதனால் அவளது ஆர்வத்தை அடக்கமாட்டாமல் வாஞ்சிநாதனிடம் அது பற்றி கேள்வி எழுப்பினாள்.
“ஆம் மதிம்மா... நமது முப்பது கிளைகளின் அத்தனை தொழிலாளர்களும் மேல் அதிகாரிகளும் என்று ஒருவர் விடாமல் கலந்த கொள்வார்கள். முதன் முதலில் மூன்று நண்பர்கள். ஒன்று சேர்ந்து ஆரம்பித்த கம்பெனிம்மா. அது சீனிவாசன். நீலகண்டன், வாசன் என்ற மூன்று ஆத்மார்த்த நண்பர்கள் மூன்று தலைமுறைக்கு முன் ஆரம்பித்தது. அவர்களின் முதல் எழுத்துக்களை சேர்த்த சீநீவா ஸ்டீல் என்று பெயரிட்டனர். இப்போது மூன்றாம் தலைமுறையான இளவல்கள் சேர்ந்து நடத்துகிறார்கள். அர்ஜுன், ஸ்ரீகாந், மதுசூதன், தன்யன்” என்றவர், சிறு இடைவேளை எடுத்தார்.
இந்தப் பெயர்களை அவளும் அவ்வப்பொழுது, எழுத்து வடிவிலும், ஸ்பைல்கள் வடிவிலும், கணக்கு குறிப்பிலும் பார்த்திருக்கிறாள்தான்.
“அப்படியானால், இவர்கள் நால்வர்தான் நமக்கு முதலாளிகளா சார்.” என்ற கேள்வியை வேறு கேட்டாள்.
“ஆம், அப்படித்தான்.”
“ஆனால், நான் இவர்களில் ஒருவரைக் கூட பார்த்ததில்லையே! சார்" என்றவளை, சிறு கேலிச் சிரிப்போடு பார்த்தார் வாஞ்சிநாதன்.
“இது கம்ப்யூட்டர் உலகம் மதிம்மா. எல்லாபம் ஈமெயிலிலும், ஸ்கைப்பிலுமாக முதலாளிகள் நேரில் வரத்தேவையிருப்பது மிகமிக குறைவுதான். நீங்கள் எல்லோரும் முடிக்கும் வேலைகளை, நான் தினமும் தவறாமல் ஈமெயில் செய்துவிடுவேன். ஏதேனும் சந்தேகமென்றால் தொலைபேசியிலேயே கேட்டுவிடுவார்கள். அவரவர் கிளைகளை எல்லோரும் சாப்பிட நேரமில்லாமல் சுற்றி சுற்றி பார்த்துக் கொள்கிறார்கள். ஆ.... ஆனால்... என்று ஏதோ கூற ஆரம்பித்தவர் உடனே நிறுத்திக் கொண்டார்.
அவர் விடுத்ததை துருவித் துருவி கேட்ட அவளது உள்ளம் இடமளிக்கவில்லை. சொல்லக்கூடியதென்றால், சார், சொல்லியிருப்பார்தானே. அது அவளுக்குத் தேவையில்லை என்று அவர் முடிவெடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும். இப்படி இவள் சிந்திக்கையிலேயே அவர் வேறு பேசினார்.
“இந்த நால்வரையும் நானே, இந்த ஆண்டு விழா சமயத்தில்தான் சேர்த்து வைத்து பார்ப்பதே. எல்லோரும் அத்தனை பிசி... நீயும் தான் பார்க்கப் போகிறாயே.” என்று முடித்தவர் தன் அன்றாட வேலைகளில் ஈடுபட்டார்.
அவர் என்ன சொல்ல வந்திருப்பார்? என்று சில வினாடி, பலவிதமாய் யூகித்தவள், இறுதியில் நமக்கென்ன வந்தது, என்பது போல விட வேண்டியதாய் தான் அமைந்தது.
இவர்களது தலைமைக் கணக்கு அலுவலகம் சென்னையின் நடுத்தரமான இடத்தில் இருந்தது. ஆனால் கம்பெனியின் தொழிற்சாலைகள் எல்லாம் நகரத்தை விட்டு ஒதுங்கினாற்போலத்தான் அமைக்கப்பட்டிருந்தன. அங்கேதான் இளவல்கள் அதிகம் வலைவருவது. இங்கே தலைமை அலுவலகத்தில் அவர்களது தகப்பனார்களை அவ்வப்போது பார்க்கலாம் அவ்வளவே. ஆண்டு விழா நாளும் வந்தது. அன்று தான் முதன் முதலில் அவனை அவள் பார்த்தது.