அத்தியாயம் - 12
வாசல் நிறைந்த ரங்கோலியை வேறு வேறு கோணங்களில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர் ஃபோட்டோ கிராப்பர். தன் மனதாலேயே படம்பிடித்துவிட்டான் தன்யன். அதனை போட்டது மலர்மதியாயிற்றே. விழாவுக்கு வருவோர் அனைவரும் இந்த கோலத்தைப் பற்றிப் பேசுவது சர்வ நிச்சயம். கோலம் போட்ட கைகளுக்கு முத்தமிட துடித்த உதடுகளை அடக்கப் பெரும்பாடுபட்டான் தன்யன். தன் இருபத்தி ஒன்பது வயதிற்கு எத்தனைப் பெண்களை பார்த்திருப்பான். அதுவும், வீணாவைப் போல, எத்தனை மேனா மினுக்கிகள்... வேண்டுமென்றே இழைகின்ற ரகம்... ஆனால்... மலர்மதியின் பாராமுகம் அவனை என்னவோ செய்தது உண்மைதான். என்னவோ என்ன, ஒரு வாலிபனுக்கு இளம் பெண்ணைப் பார்த்தால் என்ன தோன்றுமோ அதுதான்.
வாஞ்சிநாதனின் பிறந்த நாள் விழா மிக விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. ஏழு கிலோ கேக் வெட்டப்பட்டது. பஃபே முறையில் எல்லோருக்கும் உணவு வழங்கப்பட்டது. உணவு முடிந்து எல்லோரும், நடன நிகழ்ச்சி ஆரம்பமாக காத்திருந்த தருவாயில் வாஞ்சிநாதன் மைக்கைப் பிடித்துப் பேசலானார்.
“என் அன்பு நண்பர்களே, இன்று இங்கே வருகை புரிந்த, இந்த நாளை சிறப்பு செய்ததற்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று ஒரு முக்கிய செய்தியை அறிவிக்கப் போகிறேன். இத்தனை நாள், எனக்காக இவளும், இவளுக்காக நானும் என்று வாழ்நாளைப் பகிர்ந்து கொண்டோம். வாழ்க்கை இனிமையாகத்தான் இருந்தது. இருப்பினும், ஒரு சிறு குறை... நெருடல்... வருத்தம், இப்படி பெயர் வைக்க முடியாத ஏதோ ஒன்று எங்களைக் குடைந்து கொண்டே இருக்கிறது. அதனால் இந்த வயதில், இருவரும் ஒரு மனதாக, ஒரு முடிவெடுத்திருக்கிறோம். எங்களுக்காக ஒருவர் வேண்டுமென்று தீர்மானித்திருக்கிறோம். எங்களுக்கு மகளாக...”
ஒரு நிமிடம் நிறுத்தினார் வாஞ்சிநாதன். எல்லோரது முகங்களும் கேள்வியோடும், ஆச்சர்யத்தோடும் அவரை நோக்கின.
“ஆம், எங்களுக்கு மகளாக மலர்மதியை சுவீகரிக்க விரும்புகிறோம். மலர்மதியின் விருப்பத்துடன்... மலர்மதி, இங்கே வாம்மா.” என்ற வாஞ்சிநாதன் அன்புடன் அழைத்தார்.
அவரது அறிவிப்பினை கேட்டதுமே, கண்கள் கலங்க, உடல் நடுங்க, நிற்க முடியாமல் நின்றிருந்தாள் மலர்மதி.
வாஞ்சிநாதனின் அழைப்பை ஏற்று நடக்க முயன்றவளால் முடியவில்லை. அவளது உணர்வுகளை புரிந்து கொண்ட கோமதியம்மாள் மேடையிலிருந்து இறங்கி வந்து, அவளது தோள் பற்றி மெல்ல முன்னேறி நடக்க வைத்தார். அவரது பற்றுதலில்தான் அவள் நடந்து மேடைக்கு வந்ததே... எல்லோரும் கைதட்ட வாஞ்சிநாதன் - கோமதி இருவருக்கும் நடுவில் நின்ற மலர்மதி, மானசீகமாக தன் உண்மையான தாய், தந்தைக்கு நன்றியுரைத்தாள். இப்படிப்பட்ட அற்புதமான மறு வாழ்வை அவளுக்காக ஏற்படுத்திக் கொடுத்ததற்கு, எல்லோரும் தங்கள மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
“அட்றா சக்க, இதுவல்லவா டுவிஸ்ட்.” என்று ஸ்ரீகாந்த்தின் தோள்களை இடித்தான் அர்ஜுன்.
“தன்யா அண்ணாவின் மாமன் மகள் மலர்மதி, அடடா, கேட்கவே, ஆனந்தமாக இருக்கிறதே. அண்ணாவின் முக உணர்வுகளை பார்க்கலாம் என்றால், இங்கே ஆடுவதற்கு ஏதுவாய் மெல்லிய விளக்கொளி அல்லவா இருக்கிறது.” என்று சந்தோஷமாய் ஆரம்பித்து வருத்தமாய் முடித்தான் ஸ்ரீகாந்த்.
“பார்க்க முடியாவிட்டால் என்ன, கற்பனை செய்து கொள்வோம். தனா அண்ணாவின் விழிகள் மலர் அண்ணியின் வதனத்தை விழுங்கும் ஆவலோடு விரிவதாகவும், உதடுகளில் ஓர் இளம் புன்னகை அதனிடையே லேசாகத் தெரிந்த வெண் பற்கள், கைக்கு எட்டிய இந்தப் பழம், வாய்க்கு எப்போது கிடைக்கும் என்கின்ற ஏக்கம், சுற்றுப்புறம் மறந்து, அண்ணி மட்டுமே உலகம் என்கின்ற மோன நிலை.”
அதைப் புரிந்து கொண்ட அண்ணியின் முகம் ரத்தமென சிவந்து வெட்கப் புண்ணகை வீச...”
“கட் கட்...” - அர்ஜுனின கற்பனைக் குதிரையை கட் அடித்து நிற்க வைத்தான் ஸ்ரீகாந்த்.
“என்னடா உன் பிரச்சனை.” எரிச்சலைக் காட்டினான் அர்ஜுன்.
“அடித்தளமே ஆட்டம் காண்பது போல் கதை போகலாமா” ஸ்ரீகாந்த்.
“என்ன?” அர்ஜுன்.
“முன் பாதி சரிதான். அண்ணனுக்கு நீ சொன்ன மாதிரி உணர்வுகளெல்லாம் தோன்றாவிட்டாலும் சிலது நிச்சயம் தோன்றியிருக்கும். ஆனால் பின் பாதி... என்னவென்று நான் சொல்கிறேன்.” என்றான் ஸ்ரீகாந்த்.
சொல்லு பார்ப்போம் என்பது போல அமைதி காத்தான் அர்ஜுன். ஸ்ரீகாந்த் தொடர்ந்தான்.
“அப்படி மையலோடு பார்க்கும் அண்ணாவை, கொன்று விடுவேனாக்கும். என்கின்ற முகபாவனையோடு தான் அண்ணி எதிர்கொள்வார்கள்.” என்று முடித்தவன், அப்படி ஒரு பார்வை பரிமாற்றத்தை கற்பனையில் கண்டு சத்தமாக சிரிக்கத் தொடங்கி விட்டான் ஸ்ரீகாந்த். அவனுடன் அர்ஜுனும் இணைந்து கொணடான், சிரித்து முடித்ததும்,
“சரி, மது, அண்ணா எங்கே?” அர்ஜுன்.
“அவரது பெயருக்கு பொருத்தமான வேலையில் இருப்பார்.’’ ஸ்ரீகாந்த் கூறவும், மீண்டும் சிரிப்பலை எழுந்தது. அவர்களின் யூகம் சரியே என்பது போல் தன்யனின் ஆனந்த புன்னகை வீசிய பார்வை மலர்மதியின் மேல் படத்தான் செய்தது. ஆனால் அந்தப் பார்வைக்கு எந்த எதிர் வினையும் இல்லாமல் போயிற்று. ஒருவேளை மலர்மதியின் கலங்கிய கண்கள் அவனது பார்வையை மறைத்திருக்குமோ என்று யூகித்துக் கொண்டான் தன்யன்.
***********
விழா முடிந்து ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டிருந்தனர். விழாவுக்கு வந்தவர்களுக்காக பரிசுப் பொருட்கள் அடங்கிய பைகளை எடுத்துக் கொண்டு, முன் வாயிலை அடைந்தவளுக்கு சத்தமான இரு குரல்கள் தெளிவற்றுக் கேட்டது. அது எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்தவளுக்கு முன் வாயிலுக்கு ஒட்டினாற் போல் அமைந்த தோட்டத்திலிருந்து என்பது புரிந்தது... அங்கே அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய தடுப்புகளற்ற ஜன்னலிலிருந்து தான் அந்தச் சத்தம் வந்தது. யாராக இருக்கும் என்று சிந்தித்தவள்... வாயிலில் நின்றிருந்த ஸ்ரீகாந்த் அர்ஜுனிடம் பரிசுப் பைகளை ஒப்படைத்து விட்டு ஜன்னலின் அருகில் நெருங்கினாள்.
அருகில் செல்லச் செல்ல அந்தப் பெண்ணின் கிசுகிசுப்பான குரல் அவளுக்கு பரிச்சயமாகப்பட்டது. அவளது பேச்சு எதிர் இருப்பது யாராக இருக்கும் யூகிக்க வைத்தது.
“என்ன மது இது... நீங்கள், நான் ஆசையாய் உங்களை நெருங்கி வந்தால், இப்படி விலகிப் போவதா?” குழைவாய் பேசியது வீணாவேதான். “இது என் குடும்ப விழா வீணா. இங்கே நாம் இப்படி உராய்வதை, என் அம்மா, அப்பா பார்த்துவிட்டால் எல்லாம் முடிந்தது" கண்டிப்பான குரல் மதுசூதனனுடையது.
“பார்த்தால் பார்க்கட்டுமே டார்லிங். நம் விஷயம் அவர்களுக்கு இப்படியேனும், தெரிந்துவிட்டு போகட்டுமே. நமக்கு சாதகமான ஏதேனும் நடந்தால் நல்லதுதானே!”
“உஷ். வாயை மூடு, எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். அவனது திருமணம் முடியாமல் நம் விஷயம் தெரிவது சரியில்லை.”
“தனா சொந்த அண்ணன் இல்லையே, பின் எதற்கு இந்த கெடுபிடி.”
“கோபத்தைக் கிளறாதே. அவர் என் அண்ணன்தான். நீ எங்கள் உறவின் மேன்மைப் பற்றி உனக்கு என்ன தெரியும்.” அவன் குரலில் எரிச்சல் அதிகமாக.
“அச்சச்சோ... என்ன மது, இப்படி கோபம் வரலாமா...? என் அவசரத்தின் காரணம் உங்கள் மீது எனக்கிருக்கும் அளவிலா காதல் என்று தெரியவில்லையா உங்களுக்கு.” அவனது முகத்தில் தன் ஆள்காட்டி விரலால் கோலமிட்டாள்.
“சரி, சரி இப்போது நீ உன் விடுதிக்குப் கிளம்பு. நாளை மாலை எப்போதும் சந்திக்கும் இடத்தில் சந்திக்கலாம்.” என்று முடித்தான் மதுசூதனன். வேறு பேச வழியில்லாமல் வீணாவும் வாயிற்புறமாக வெளியேறத் தொடங்கினாள்.
கதை இப்படிப் போகிறதோ! என்று உள்ளூர சிறுசிரிப்புடன் ஜன்னலை விட்டு அகலுகையில், அங்கே ஒரு நிழல் வரி வடிவம் தெரிந்தது. வெளிப்புறத்தில் ஆங்காங்கே எறிந்த விளக்கின் ஒளியால் அந்த கண்களில் தெரிந்த குரோதத்தை மலர்மதியில் காண முடிந்தது. அந்த பார்வை வீணாவை துரத்தியதுதான் ஏன் என்று புரியவில்லை. அது யாராக இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் வாயிற்புறமாக தோட்டத்தினுள் நுழைய எத்தனித்தவளை தன்யன் எதிர் கொண்டான்.
“என்ன மலர்மதி, வந்தவர்களுக்கு இந்த வீட்டுப் பெண்ணான நீ பரிசுப் பொருள் கொடுத்தால் தானே பாந்தமாக இருக்கும். அதனை விடுத்து, எங்கே இத்தனை அவசரமாக செல்கிறாய்.” அவன் குரலுக்கு நின்று விட்டாலும், மலர்மதியின் மனதிற்குள், ஒருவேளை இவன் தான் அங்கே நின்றிருப்பானோ! என்று சந்தேகம் எழ, உடனே அவனது கண்களை ஊடுறுவினாள்.
அந்தக் குரோதம் இந்தக் கண்களில் இல்லை. மாறாக ஒரு குளுமை, ஒரு இனிமை, ஒரு...கா... யோசனையை சட்டென கத்தரித்து, அவன் கூறிய வேளையில் ஈடுபடலானாள்.
ச்சே... இவர் அந்த கண்களுக்குரியவராய் இருக்க மாட்டார்தான். அப்படியானால் அது யாராக இருக்கும்? மதுசூதனன் வீணா காதலைப் பிடிக்காதவர்கள் யாரோ இந்தக் குடும்பத்தில் இருக்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயம். பாவம் வீணா... தன் அழகால் நிச்சயம் ஒரு பணக்காரனை கவிழ்த்து, ஏகபோக வாழ்வு வாழலாம் என்று கனவு காண்கிறாள். அது அத்தனை எளிதல்ல என்பது அந்தக் கண்களிலிருந்தே சர்வ நிச்சயமாய் தெரிகிறது... என்று நினைத்தவள். பரிசளிக்கும் உபசாரத்தில் மூழ்கினாள்.