அத்தியாயம் - 14
மறுநாள் மாலை தன்யன் கோவையில் தன் தாய் தந்தையரோடு இருந்தான். சற்று நேரம் அவர்களோடு உற்சாகமாய் உரையாடிவிட்டு, இரவு உணவை முடித்துக் கொண்டு உறங்கச் சென்றான்.
இது என்ன மாயம் என்று பானுமதிக்கு ஒரே ஆச்சர்யக் களிப்பு. உடல் சோர்ந்திருந்த சோமசுந்தரின் முகமும் ஏதோ பல்பு போட்டது போல் பிரகாசமாக இருந்தது. உடனே சென்னைக்கு தொலைபேசியில் செய்தி பரவியது.
“இது என்ன அண்ணா மாயம். நீங்கள் ஏதேனும் கண்டித்தீர்களா.” என்ற பானுமதியின் கேள்விக்கு உரக்கச் சிரித்தார் வாஞ்சிநாதன்.
“உன் மகனை மாற்றியது நானல்ல, தனாவிற்கு திருமண ஆசை வந்து விட்டது.”
“அப்படி என்றால் அவன்...?”
“இன்னமும் எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. பொருத்திருந்து பார்ப்போம்.”
“அண்ணா... அவன் பாட்டில் நம் மதுவைப் போல்...” பானுவின் குரலில் திகில் இருந்தது.
‘‘ச்சே... ச்சே... நம் தனா தேர்ந்தெடுப்பது சோடை போகுமா...? அந்தக் கவலையே உனக்கு வேண்டாம். சீக்கிரமா திருமணச் சாப்பாடு போட உன் உடம்பைத் தேற்றிக் கொள், மாப்பிள்ளையையும் தான். பிறகு வருகிறவர்களை, கவனிக்க முடியவில்லை என்று குறைபடக் கூடாது.” என்றவர், ஒரு வெற்றிப் புன்னகையோடு தொலைபேசியை கீழே வைத்தார்.
சோமசுந்தரத்திற்கு ஒரு முறை ஹார்ட் அட்டாக் வந்திருந்தது. அதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி, அதிக நெரிச்சலில்லாத, நல்ல தட்ப வெப்ப நிலை உள்ள கோவையில் தனக்கிருந்த ஒரு ஹெஸ்ட் ஹவுசில் குடிபெயர்ந்தார். கணவனை பார்த்துக் கொள்ள, பானுமதியும் அங்கே புலம் பெயர நேர்ந்தார் அவர்களது செல்ல மகள் கனிக்கு் திருமணம் முடிந்து அவள் யூ.எஸ்.ஏ.வில் குடி புகுந்தாள். தனா பெரும்பாலும் சென்னையில்தான் இருப்பது. முடிந்தவரை அலுவலகத்தில், தூக்கத்திற்கு மட்டும் வீட்டில் என்று. எப்போதேனும் அர்ஜுன், ஸ்ரீகாந்த் வீட்டிற்கும் அவர்களது பெற்றோர் நச்சரிப்புத் தாங்காமல் செல்வதுண்டு. மற்றபடி அவனுக்குத் தெரிந்ததெல்லாம் தொழில்... தொழில்... தொழில்தான். இப்பொழுது கொஞ்ச நாளாகத்தான் ஏதோ ஒன்று அவனுள் கரைந்து கொண்டிருந்தது.
சோமுவால் அதிக பிரயாணம் செய்ய முடியாது என்பது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால் அவர்கள் இந்தப் பிறந்த நாள் விழாவுக்கு வர முடியாதது குறித்து அங்கு சர்ச்சைகள் ஏதும் எழவில்லை. ஆறு மாதத்திற்கு ஒரு முறை டூர் போகிறோம் என்று பெயர் பண்ணி மூன்று குடும்பங்களும் கோவையில் கூடுவது வழக்கம். தனாவும் அவர்களும் வருவதுதான் வழக்கம். இப்போது தங்கள் மகன் அவர்களைப் பார்க்கவென்று தனித்து வந்திருந்தது ஏதோ அவர்களுள் இருந்த தனிமைத் துயரை டெட்டால் போட்டு துடைத்தெரிந்தது. மகனுக்குப் பிடித்தமானதாக செய்து, அவனை உண்ண வைத்து, பிரியா விடை கொடுத்து அனுப்பினார்கள்.
************
இந்த இடைவேளையில், மலர்மதியும் தன் விடுதிக்குச் சென்று தன் பொருட்களை எடுத்துக் கொண்டு, கணக்குகளை முடித்துக் கொண்டு, வீணாவிடம் விடைபெற்று, வாஞ்சிநாதன் வீட்டு மகளாக, தன்னை முழுதாக மாற்றிக் கொண்டாள்.
வீணாவிற்கோ மனதில் தீ கனன்று எரிந்தது. எங்கிருந்து வந்தாளோ இந்த மலர்மதி, பெயரைப் பார் மலர்மதி என்று, அவளைப் பார்த்தாலே முள்ளைப் பார்ப்பது போல்தான் தோன்றுகிறது. இதில் மலர் எங்கிருந்து வந்தது. மதி...அது அறவே இல்லை.தன்யன் அவளை காதலோடு பார்ப்பதைக் கூட பார்க்காத மதியீனம். ஆனால் அது எனக்குத் தப்பவில்லை.
இந்தஅனாதைக்கு தனா கேட்கிறதா, என்னால் ஒருக்காலும் ஒப்ப முடியாது. நான் வாழப் போகிற குடும்பத்தில், எனக்கு மூத்தவளாக இந்த அனாதையா, நிச்சயம் இது நடக்கக் கூடாது.
நடக்க விட மாட்டேன். ஆனால் இந்தக் கிழம் வாஞ்சிநாதனுக்கு என்னவாயிற்று. காலம் போகிற காலத்தில் தேவையா இந்த தத்தெடுப்பு. இதனால் தனாவிற்கு மாமன் மகளாக வேறு ஆகிறாளே! என்று உள்ளே எழுந்த கொதிப்பு மெல்ல மெல்ல எரிமலையாய் உருவாகிக் கொண்டிருந்தது. அது வெடித்துச் சிதறும் வாய்ப்பு மிக விரைவாகவே கிடைத்தது.