அத்தியாயம் - 15
நாட்கள் மெல்ல நகர்ந்தன. மலர்மதி வாஞ்சிநாதன் வீட்டில் ஒன்றிப் போனாள். தன்யனின் அக்கவுண்ட்ஸ் சம்பந்தமாக அவனை அவ்வப்பொழுது சந்திக்க வேண்டி வந்தது. முன்பானால் வாஞ்சிநாதனே பேச்சுவார்த்தை நடத்தி அதன் சாராம்சத்தை மட்டும் இவளிடம் கூறி ஆவனச் செய்யச் சொல்லுவார். ஆனால் சமீப காலமாக தன் வயதை காரணம் காட்டி, அவர் அந்த வேலையை மலர்மதியிடம் ஒப்படைத்தார். இதனால் மற்ற சீனியர் அக்கௌண்டன்டிற்கு எரிச்சல் வருமோ என்று அஞ்சியவளுக்கு அவர்களிடமிருந்து நன்றி தான் கிட்டியது. பேச்சு வார்த்தை ஆரம்பித்தால் சில சமயம் இரவு எட்டு, எட்டரை கூட ஆகும். பிறகு எங்கள் குழந்தையையும், வீட்டையும் கவனிப்பதெப்படி. நீயே இதை செய்யம்மா, என்று ஒரு மனதாகக் கூறி பின்னடைந்தார்கள்.
அவர்களைப் பார்க்கவும் மலர்மதிக்கு பாவமாகவே இருந்தது. இந்த சந்திப்புகளில் மலர்மதி நிறையத் தெரிந்து கொண்டாள். தன்யனின் கைவசம் உள்ள கம்பெனிகளின் புள்ளி விவரத்தைத் தன் விரல் நுனியில் வைத்திருந்தான். அங்கே வேலை புரியும் கடைநிலை ஊழியனின் பெயரைக் கூட தன் மூளைக்குள் பதிய வைத்திருந்தான். அதுவே மலர்மதிக்கு ஆச்சர்யத்தைத் தூண்டியது என்றால்,மதுசூதனின் கைவசம் இருந்த கம்பெனிகளின் விவரமும் இவனிடமேதான் இருந்தது. அவன் பெயருக்குத்தான் மீட்டிங்கில் அமர்ந்திருப்பான். கையில் செல்பேசியோடு தான் விளையாடுவான். அவ்வப்பொழுது தன்யன்கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் ஏதோ வாய் திறந்து உலருவான்.
ஏனோ அவன் மீது மலர்மதிக்கு அளவில்லா கோபம் வந்தது. தன்யனின் மீதும் தான். இவள் இவ்வளவு உதவுவதால் தானே, அவன் ஏனோ தானோவென்று அமர்ந்திருக்கிறான். முதலில் இது பற்றி தனா சாரிடம் பேச வேண்டும் என்று குறித்துக் கொண்டாள்.
அர்ஜுன், ஸ்ரீகாந்த் கைவசமிருக்கும் கம்பெனிகளின் பேச்சு வார்த்தை படு சுவாரஸ்யமாக இருக்கும். இருவருக்குள்ளும் அடித்துக் கொள்வார்கள். ஆனால் விபரங்கள் துல்லியமாய் இருக்கும். இடையில் அவர்கள் ஏதேனும் தவறிழைத்தாலும் அதனை தன்யன் திருத்திக் கொடுத்தான். அவர்களும் ஆர்வமோடு கற்றனர். அதிலிருந்தே அர்ஜுனும் ஸ்ரீகாந்தும் மலர்மதியின் தோழர்களாயினர். வேலைத் தவிர வேறு பேச்சுக்களும் அவர்களுக்குப் பரிமாறப்பட்டது.
“இந்த சுடிதார் மிக அருமை.” என்பான் ஸ்ரீகாந்த்.
“இதை விடவும் புடவைதான் உனக்கு அழகு மலர்.” என்பான் அர்ஜுன்.
“ஆமாம்... ஆமாம் இப்பொழுது இங்கு என்ன அழகிப் போட்டியா நடக்கிறது.” என்று பேச்சை எளிதாக திசைத் திருப்புவாள் மலர்மதி.
சில ஞாயிறுகளில், வாஞ்சிநாதன் வீட்டில் இவர்கள் கூடி விட்டால், எல்லோரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிக்கு வீடே அதிரும்.
இப்படித்தான் ஒரு முறை மதிய உணவு முடிந்து வாஞ்சிநாதனும், கோமதியும் ஓய்வெடுக்க சென்றுவிட இளசுகள் கூட்டம் ஹாலில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
அரட்டை யென்றால் அதில் ஈடுபட்டவர்கள் அர்ஜுன், ஸ்ரீகாந்த் மற்றும் மலர்மதிதான். தன்யன் லேப் டாப்பிற்குள் புகுந்து முத்தெடுத்துக் கொண்டிருந்தான். மதுசூதனன் தன் செல்பேசிக்குள் உலகை மறந்து கொண்டிருந்தான், மதுசூதனன் நிமிர்ந்து பார்கக்க்கூட வழியில்லாமல் போயிற்று. ஆனால் தன்யனால் அப்படி முடியவில்லை. அவ்வப் பொழுது மலர்மதியின் சிரிப்பொலியால் கவனம் கலைந்து, அவளை மையலோடு பார்த்தான். அவள் பேசும் பொழுது, அவளது கூந்தலசைவையும், தொங்கட்டானின் அசைவையும் பார்த்து தன்னுள் கரைந்து போனான். அவளது செவ்விதழ்கள் மலர்ந்து உள்ளிருக்கும் அரிசிப்பல் தெரியும் பொழுது, அவன் அவனாக இருக்க மிகவும் சிரமப்பட்டுப் போனான். ஆனால் இது எதுவும் மலர்மதியின் கவனத்தில்தான் விழுந்தபாடில்லை. சட்டென அந்த யோசனை அவனுள் உதயமானது.
“நான் காஃப்பி தயாரிக்கப் போகிறேன். வேறு யாருக்கெல்லாம் காஃபி வேண்டும்.” என்று லேப் டாப்பை ஷட்டவுன் பண்ணிக் கொண்டு எழுந்தான் தன்யன்.
“எனக்கும்... எனக்கும்.” ஸ்ரீகாந்த் அர்ஜுன்.
ஏன் மதுசூதனனும் தன் செல்பேசியிலிருந்து தலை நிமிர்த்தி, “எனக்கும்.” என்றான்.
“அப்படியானால் நான் தயாரிக்கிறேன்.” என்று எழுந்த மலர்மதியை, ஸ்ரீகாந்த் தடுத்தான்.
“வேண்டாம் மலர், எங்கள் அண்ணா தயாரித்த காஃபியை நீங்கள் குடித்ததில்லையே, மிக...மிக... அற்புதமாய் இருக்கும்.” காரியத்தை கெடுத்து விடுவான் போலிருக்கிறதே என்று அப்பாவியாய் தன்யன் பார்க்க, உதவிக்கு வந்தான் அர்ஜுன்.
“அது சரிதான் ஸ்ரீ, ஆனால் எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்று அண்ணாவிற்கு எப்படித் தெரியும். அதனால் அவருக்கு உதவுங்கள் மலர், அப்படியே எங்களுக்கும்.” புரியாமல்,
“உங்களுக்கா?” என்றாள் மலர்மதி.
“ஆம், அண்ணா பாட்டிற்கு சர்க்கரைக்குப் பதில் உப்பைக் கொட்டி விட்டால், அதனை குடிக்கும் நாங்கள் என்ன கதிக்கு ஆளாவோம். அப்படி ஏற்படாமல் உதவி செய்யுங்கள்.” என்று ஏற்றி இறக்கி, ஏதேதோ கூறி இருவரையும் சமையலறைப் பக்கம் நகர்த்தி விட்டு, ஸ்ரீகாந்தும், அர்ஜுனும் இருவருக்குள் கண்ணடித்துச் சிரித்துக் கொண்டனர்.
பிரிஜ்ஜிலிருந்து பால் பாக்கெட்டை எடுத்து தன்யனிடம் கொடுத்தாள். அதனை கத்தரிக்க கத்திரிக்கோல், பால் காய்ச்சும் பாத்திரம் என்றெல்லாம் அவனுக்கு எடுத்துக் கொடுத்தாள். இந்தத் தனிமை இனி கிடைக்க வாய்ப்பில்லை. தன் மனத்தில் இருப்பதை மலரிடம் கூற வேண்டும் என்று தனக்குள்ளேயே உரு போட்டு, ஒருவாரு அவன் மனதை திறக்க எத்தனிக்கையில்,
“நான் உங்களிடம் ஒன்று பேச வேண்டும்.’‘ என்றாள் மலர்.
“....?!”
அதற்காக வெகுநாள் காத்திருந்தேன். இப்போது தான் இந்தத் தனிமை கிடைத்தது பேசட்டுமா?”
“!!!.....!!!....”
இது என்ன கொடுமை, நான் பேச நினைத்ததை மலர் பேசுகிறாளே... சரி, யார் பேசினால்தான் என்ன என்று அனுமதி அளித்தான்.
“தாராளமா பேசலாம் மலர்.”
“வந்... வ....வ...வந்து...”
“என்னிடம் என்ன தயக்கம் மலர். எதுவானாலும் தைரியமாகச் சொல்." ஊக்குவித்தான்.
“மதுசூதனன் சாரிடம் நீங்கள், சற்று கண்டிப்பாக இருப்பது, நல்லது என்று தோன்றுகிறது சார்.”
“!!!....!!!.....”
“ம்... மது... மதுவா.”
“ஆமாம் சார், அவரது தொழிலையும் சேர்த்து நீங்களே பார்த்துக் கொண்டால், அவருக்கு எப்போது பொறுப்பு வரும்... எந்நேரமும் செல்பேசியிலும், உலகை மறக்கடிக்குமளவு மதுவும் என்று, அவர் சுற்றுவது நீங்கள் இருக்கும் தைரியத்தில்தானே!”
“.....”
தான் பேச நினைத்தது என்ன? இவள் பேசுவது என்ன, என்று சற்று ஏமாற்றம் மனதினுள் எழுந்தாலும், அவளது கேள்விக்குப் பதிலளிக்கலானான்.
“நீ, நினைப்பது சரிதான் மலர். ஆனால்...” ஏதோ கூற முயன்றவனால் முடியவில்லை.
“சாரி சார், இதனை கேட்கும் உரிமை எனக்கு இல்லைதான். இருப்பினும் கண்ணெதிரில் ஒருவர் தடம் புரள்வதை, என்னால் பார்க்க முடியவில்லை. அதனால்தான், ஏதோ ஒரு ஆர்வத்தில்.... மன்னித்து விடுங்கள்.”
“ச்சே... ச்சே... உனக்கு உரிமை இல்லை என்று இங்கு யாரும் நினைத்ததில்லை. ஆனால் அது ஒரு பெருங்கதை. அதைக் கூறினால் உனக்கு போர்டிக்கலாம். ஆனால் உன்னுடைய இந்த அக்கறைக்கு, என்னால் ஒரு வாக்குறுதியை மட்டும் இப்போது கொடுக்க முடியும். கூடிய விரைவில் மதுவை அவனது தவறுகளை உணர வைத்து, கவனத்தைத் தொழில் புறம் சாய்க்கிறேன் சரிதானா.” என்றவனை திருப்தியோடுப் பார்த்து ஸ்னேகமாய் புன்னகைத்தாள்.
இந்த சிரிப்பிற்கு உலகத்தையே எழுதி வைக்கலாம் என்று தான் அவனுக்குத் தோன்றியது. அதனாலேயே மதுவை நல்வழி படுத்தும் எண்ணத்தை தன்னுள் தீவிரமாக்கிக் கொண்டான்.
உண்மையிலேயே தன்யனின் காஃபி ருசியாக இருந்தது. ருசித்துக் குடித்தாள் மலர்மதி. “சூப்பர் சார். நல்ல காஃபி சர்க்கரை, டிக்காஷன் எல்லாம் அளவாக, ரொம்ப நல்லா இருக்கு. உங்கள் சரிபாதி ரொம்பவும் கொடுத்து வைத்தவர்தான் போங்கள்.” என்றாள் பாராட்டும் விதமாக.
இந்த உலகினை தன்யன் மறக்க, இந்த வரிகள் போதுமானதாக இருந்தது.
ஸ்ரீகாந்த், அர்ஜுனுக்கோ இருப்பு கொள்ளவில்லை. “இன்றைக்கு இவர்கள் பிரிவதற்குள், அந்த சரிபாதி மலர்தான் என்று இருவருக்குமே புரிய வைக்கிறேன், பார்.’‘ என்று சவால் விடுத்தான் அர்ஜுன்.
“எப்படிடா” ஸ்ரீகாந்த்.
“பொறுத்திருந்து பார்” அர்ஜுன்.
காலி காஃபி கப்புகளை சேகரித்துக் கொண்டிருந்தாள் மலர்மதி. தன்யனின் கப்பை எடுக்க அவள் குனிந்த நேரம், கால்களுக்கு கீழ் பூமி, நழுவியது போல் தோன்ற, “ஆ....” என்ற அலறலுடன் கண்களை இருக்கமாக மூடிக் கொண்டாள். தரையில் விழுந்து மண்டை உடைவது நிச்சயம் என்று நினைத்து அஞ்சியவள், இன்னமும் கீழே விழாததை உணர்ந்து லேசாக விழி விரித்தாள். ஒரு மலர் செண்டைப் போல் தன்யன் அவளை தன் இரு வலிய கரங்களால் தாங்கியிருந்தான்.
அவனது இடக்கரம் கனகச்சிதமாக, அவளது இடுப்பை பற்றியிருந்தது. இருவரின் கண்களும் ஒன்றோடு ஒன்று, ஏதோ தீவிரமாய் பேசிக் கொண்டன. சுற்றுப்புறம் புரிந்து, கூச்சம் மேலிட, சட்டென விலகி எழுந்தாள் மலர். கன்னங்கள் செம்மையுற, வேகமாக சமையலறையினுள் ஓடி மறைந்தாள்.
தினப்பத்திரிகை ஒன்றை எடுத்து படிப்பது போல் பாவனை செய்து கொண்டு, மனத்திற்கு விசிலடித்துக் கொண்டான் தன்யன்.
“எப்படி!” என்று காலரை தூக்கி விட்டான் அர்ஜுன்.
“ஏன்டா கார்பெட்டை இழுத்த.” ஸ்ரீகாந்த் கோபமாக கிசுகிசுத்தான்.
“அப்படி இழுக்கலைன்னா, இப்படி ஒரு ரொமாண்டிக் சீன் கிரியேட்டாகி இருக்குமா.” அர்ஜுன்.
“மலர் கீழே விழுந்திருந்தால், வேற சீன் கிரியேட்டாகி இருக்கும்” ஸ்ரீகாந்த்.
“நம்ம கால்குலேஷன் நிச்சயம் மிஸ்ஸாகாது புரோ.” அர்ஜுன்.
“என்னதான் இருந்தாலும் குட் மூவ் புரோ.” பாராட்டினான் ஸ்ரீகாந்த்.
“தாங்க்யூ... தாங்க்யூ...தாங்க்யூ...” அர்ஜுன்.
இவை எல்லாவற்றையும் வீட்டு வாயிற்படி ஏறி உள்ளே நுழைந்து கொண்டிருந்த வீணாவின் கண்களில் செந்தனலாய் விழுந்தன. ‘இந்தளவு வந்துடுச்சா?’ கூடாது, ‘இதை நிச்சயம் ஒட்ட வெட்டி விடணும்.‘ மனதினுள் நினைத்தவள் முகத்தில் போலி புன்னகையை பூசிக் கொண்டு, “மலர்... மலர்.” என்று அழைத்தவண்ணம் நுழைந்தாள் வீணா.
தன் பெயரை யார் கூப்பிடுவது என்று சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள் மலர்மதி.
‘இது ஏன் இங்கே வந்து தொலைத்தது’ என்பது போல் பார்த்தனர், அர்ஜுன், ஸ்ரீகாந்த், தன்யன். மதுசூதனன் கண்களில் ஆர்வம்.
வீணாவா தன்னைப் பார்க்க வந்திருக்கிறாள்? நம்பவும் முடியவில்லை மலர்மதியால். இருப்பினும் வீட்டிற்கு வந்த விருந்தினரை உபசரிக்கும் பாணியில், “வா... வீணா, எப்படி இருக்க?” என்று விசாரித்த வண்ணம் வீணாவை நெருங்கினாள்.
“நீ இல்லாமல் என்னால் அந்த ஹாஸ்டல் ரூமில் இருக்கவே முடியலை. எந்நேரமும் உன் நினைவுதான். அதுவும் ஞாயிறு வந்துவிட்டால், அங்கே இருக்கவே பிடிக்கவில்லை. அதுதான் உன்னைப் பார்த்துவிட்டு வரலாம் என்று வந்தேன், இங்கானால் உனக்கு, என் நினைவு துளியும் இருக்காது போல் தோன்றுகிறதே.” என்று முகம் வாட கூறினாள்.
“ச்சே... ச்சே... அப்படியெல்லாம் இல்லை வீணா. நானும் உன்னை, அவ்வப்பொழுது நினைப்பதுண்டு, இப்படி உட்கார், என்ன சாப்பிடுகிறாய்?”
“எதுவும் வேண்டாம் மலர்...” என்றவள், அப்போதுதான் மதுசூதனனை பார்ப்பது போல், “மது சார், நீங்களா, வணக்கம் சார்.” என்று அதிகப்படியாக குழைந்தாள். எதேச்சையாய் உட்காருவது போல் மதுசூதனன் அருகிலேயே அமர்ந்து கொண்டாள்.
வீணாவிற்கு தண்ணீர் கொண்டு வர திரும்பிய மலர்மதிக்கு அந்தக் கண்கள் மீண்டும் தோன்றின. குரோதம் கக்கும் கண்கள், அன்று விளக்கொளியில் அவள் பார்த்த கண்கள். அவளால் சிறிது கூட நம்ப முடியாத தன்யனின் கண்களா? ஒரு நிமிடம் உலகம் நின்று மீண்டும் சுழன்றது. தன்யனா அந்தக் கண்களுக்கு உரியவர். ஆனால் இந்தப் பார்வை ஏன்? வீணாவும் மதுவும் பழகுவது ஒரு வேளை தன்யனுக்குப் பிடிக்கவில்லையோ? மதுவிற்கு வீணாவை பிடித்திருக்கிறதே, இதில் கருத்து சொல்ல இவர் யார். உள் மனதில் ஓர் அலாரம் அடித்தது. ‘வீணாவின் நடவடிக்கைகள் உனக்கே பிடிப்பதில்லை. தங்கள் குடும்பத்தில் அவள் இணையப் போகும் வாய்ப்பிருக்கும் பட்சத்தில் தன்யனின் குரோதப் பார்வையில் தவறென்ன?’ என்று கேட்டது உள்மனம்.
ஆம்... இந்தக் குடும்பத்தில் வீணா பொருந்துவது கடினம்தான். ஆனால் இது மதுவிற்கு புரிய வேண்டுமே! ஒருவேளை திருமணத்திற்குப் பிறகு வீணாவை திருத்தி விடலாம் என்றும் நினைத்திருக்கலாம். இது என்ன தேவையில்லாத குழப்பம். அண்ணன் தம்பிகளுக்குள் எப்படியும் போகட்டும். நமக்கென்ன? என்று அந்த நினைவை பின் தள்ளினாள் மலர்மதி. கூடிய விரைவில் தான் சந்திக்கப் போகும் பேரிடியை அறிந்திராமல்.