அத்தியாயம் - 16
நாட்கள் நகர்ந்தது. மெல்ல மெல்ல தன்யன் மலர்மதியின் இருதயத்தில் இடம் பிடித்துவிட்டான். இருப்பினும் அதனை வெளிப்படுத்த இருவருமே தயங்கினர். இப்படிப்பட்ட வேளையில்தான் மலர்மதிக்கு வீணாவின் அழைப்பு வந்தது.
“நீ என்னை எப்படி நினைத்தாலும், நான் உன்னை என் தோழியாகத்தான் நினைக்கிறேன். உன் மகிழ்ச்சி எனக்கு முக்கியம். அதனால் இன்று மாலை ஏழு மணிக்கு லீமெரிடியனில் டேபிள் நம்பர்ஃபோருக்கு வந்துவிடு.” என்றாள் வீணா.
என்னவாக இருக்கும் என்கின்ற, எந்த ஒரு யூகமும் இல்லாமல்தான் மலர்மதி வேண்டா வெறுப்பாக லீமெரீடியனுக்கு சென்றது. ஆனால் அவள் அங்கு கண்ட காட்சி அவளை உருக்குலைய வைத்தது.
டேபிள் நம்பர் ஃபோரில் வீணா வருகிறாளா என்று வாயிலை பார்த்த வண்ணம் அமர்ந்தாள் மலர்மதி. பேரர் வந்ததும் லெமன் ஜுசுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு வீணாவிற்காக காத்திருந்தாள். ஓர் பதினைந்து நிமிட காத்திருப்பிற்குப் பின், கண்ணாடிக் கதவினை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த வீணாவை பார்த்ததும் எழ நினைத்த மலர்மதியால் எழ முடியவில்லை. காரணம் வீணாவின் இடையைப் பற்றியபடி சிரித்த முகத்துடன் உள்ளே நுழைந்த தன்யன்.
தன்யனா! வீணாவுடனா! என்ற அதிர்ச்சி தாக்க அவர்களை வெரித்தபடி அமர்ந்திருந்தாள். அவர்கள் தன் டேபிளின் அருகே வருவது புரிந்து, சட்டென செருப்பை சரி செய்யும் பாவனையில், டேபிளின் கீழே குனிந்து கொண்டாள். நல்லவேளையாய் இவளை தன்யன் பார்க்கவில்லை என்று நிம்மதி பெருமூச்சு வந்தது.
உடனேயே யாரோ பாராங்கல்லால் இருதயத்தை அழுத்துவது போன்ற வலி பிறந்தது. தன்யனும் வீணாவும் மலர்மதி அமர்ந்திருந்த டேபிளுக்கு பின் இருந்த டேபிளில் அமர்ந்தனர். டேபிள் நம்பர் த்ரீ. தன்யனின் முதுகுக்குப் பின் மலர்மதி இருந்ததால் அவன் கவனத்திலும் கண்களிலும் அவள் பதியவில்லை. ஆனால் அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சம்மட்டியால் ஓங்கி இருதயத்தில் அடிப்பது போல் தெள்ளத் தெளிவாகக் கேட்டது.
“என்ன தனா, திடுமென என்னை அழைத்ததன் காரணம் என்ன?”கொஞ்சும் குரலில் குழைந்து வினவினாள் வீணா.
“என்ன அவசரம் வீணா இதோ.. பேரர் வந்துவிட்டார். சாப்பிட என்ன சொல்லட்டும்.” என்று கேட்டு இருவருக்கும் ஒரு ரெட் வைன் ஆர்டர் செய்தான். உதடுகளில் ரெட் வைனை சுவைத்துக் கொண்டே தன்யன் பேசலானான்.
“நான் ஒன்று சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டாயே வீணா.’’
“நீங்கள் இப்படி கேட்பதுதான் பிடிக்கவில்லை தனா, உரிமையாய் கேளுங்கள்.” என்றாள் குழைவாய்.
“உன்னை என் தம்பி மதுவோடு பார்த்தால், என் ரத்தம் கொதிக்கிறது தெரியுமா?” கோபத்தில் கண்கள் சிவந்தன தன்யனுக்கு.
“ஏ....ஏன் தனா?’’ என்றாள் சற்று மிரண்ட விழிகளுடன்.
சட்டென அவளது கையை பற்றியவன், “உ...உ....உன்னை என்னால் எப்படி விட்டுக் கொடுக்க முடியும். முதன் முதலில் நீ என் பி.ஏ.வாகத் தானே இருந்தாய்.
அப்போதே உன் மேல் எனக்கு தனி பிரியம் உண்டு. பிறகு மதுவின் பி.ஏ.வாக மாறியதும் நீயும் மாறிவிட்டாய். ஏன்... ஏன்... என்னை உனக்கு பிடிக்கவில்லையா?” பற்றிய அவளது கரத்தை எடுத்து அவன் இருதயத்தில் வைத்துக் கொண்டான்.
வீணா இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தொலைபேசியில் தன்யன் அழைக்கும் பொழுது, ஏதோ சற்றுக் குழையாவாய் அழைப்பது போல் தான் தோன்றியது. டார்லிங் என்கின்ற அழைப்பு வேறு, சரி பணக்காரப் பிள்ளையாயிற்றே, பெண் சுகம் தேடுகிறான் என்றுதான் வீணா நினைத்தாள்.
அதுமட்டுமல்லாமல் முதன் முதலில் அவள் வேலை பார்த்தது தன்னியனிடம்தான். அப்பொழுதே அவன் மீதும், அவன் கம்பீரத்தின் மீதும் வீணாவிற்கு ஓர் ஈடுபாடு இருந்தது உண்மைதான். அவ்வப்பொழுது அதனை அவள் வெளிப்படுத்த, அவள் மதுசூதனனின் கம்பெனிக்கு மாற்றப்பட்டாள்.
இருப்பினும் தன்யனின் ஆண்மை நிறைந்த தேகத்தை, ஆட்கொள்ளும் ஆவல் அவளுள் கனன்று கொண்டேதான் இருந்ததன. இப்பொழுது மலர்மதி தன்யனின் விழி பரிமாற்றத்தை காண்கையில் அதனை எப்படியாவது உடைக்க வேண்டுமென்று நினைத்துத்தான் மலர்மதியை இங்கே அவள் அழைத்ததே. எப்படியாவது தன்யனுடன் நெருக்கமாக இருப்பது போல் காண்பித்துவிட்டாள். மானஸ்த்தியான மலர்மதி இனி ஒருக்காலும் தன்யனின் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டாள். அதுதானே அவளுக்கு வேண்டும். இந்த அனாதை நாயை ஓட... ஓட விரட்ட வேண்டும் என்றுதான் நினைத்தாள்.
ஆனால் இப்போதோ! தன்யன் அவளை விரும்புவதாக கூறுகிறான். சிறிதும் நம்ப முடியாத விஷயம். அப்படியானால் மது...!!! சில வினாடி சிந்தித்தாள், ஆனால் அதிகம் சிந்திக்க தேவையிறாமல்,
“பிடிக்கும் தனா! நிச்சயம் பிடிக்கும்! ரொம்பவும் பிடிக்கும்!” தன் மற்றொரு கரத்தையும் அவன் இருதயத்தில் வைத்து அழுத்தினாள்.
மலர்மதியின் இருதயத்திலிருந்து குருதி வழிந்தது. “நீ கூறுவது உண்மையானால் நிரூபித்துக்காட்டு” என்றான் தன்யன்.
“எப்படி நிரூபிக்க வேண்டும் தனா!” கிறங்கினாள் வீணா.
“நீ உன் ஹாஸ்டலை காலி செய்து கொண்டு மஹாபலிபுரத்தில் இருக்கும் என் கெஸ்ட் ஹவுசிற்கு வந்துவிடு.”
“ஏ...ஏன்... புரியவில்லையே தனா!”
“நான் உன்னை காதலிக்கிறேன். ஆனால்... என் வீட்டில் நிச்சயம் நம் காதலை ஏற்க மாட்டார்கள். என்னால் நீ இல்லாமல் இருக்கவும் முடியாது. உலகத்திற்காக, என் தாய் தந்தைக்காக, அவர்கள் வளர்த்த சொத்து கைதவறி போகாமலருக்க, ஏதோ ஒரு முட்டாளைப் பிடித்து திருமணம் என்று செய்து கொள்கிறேன். மற்றபடி நான் உன்னவன்தான் எப்பொழுதும். வாரக்கடைசியில் நாம் இருவர் மட்டும் ஹெஸ்ட் ஹவுசில் யோசித்துப் பார்.” என்றான்.
“அதாவது சின்ன...!’’ முடிக்க முடியாமல் தவித்தாள் வீணா. பெண்ணல்லவா அவளாலும் அதனை தாங்க முடியவில்லைதான். ஆனால் தன்யன் விடவில்லை.
“மதுவை திருமணம் செய்து கொண்டு என்ன செய்வாய். இப்போதே அவனது தொழிலை நான் தான் பார்க்கிறேன். நீ அவனை மணம் செய்து கொண்டால், நீ எனக்கு கிடைக்கவில்லையே என்கின்ற எரிச்சலில் நான் நிச்சயமாய் அவன் தொழிலைப் பார்க்க மாட்டேன். பிறகு அவனது தொழில் வீழ்வதில் சிறிதும் ஐயமில்லை. பிறகு இருவரும் தெருவிற்கு வரவேண்டியதுதான். உனக்கு அப்படியொரு நிலை வரவேண்டுமா வீணா. ஐயோ நினைக்கும் பொழுதே எனக்கு வலிக்கிறதே.” வலி அவன் குரலில் எதிரொலித்தது.
தன் காதுகள் ஏன் கேட்கும் சக்தியை இன்னமும் இழக்கவில்லை என்று ஆச்சர்யப்பட்டாள் மலர்மதி. அவள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவர்களின் பேச்சு காதில் விழத்தான் செய்தது. எழுந்து ஓடிவிடலாம் என்றாலும் தன்யன் நிச்சயம் பார்த்து விடுவான். பிறகு இதனை பொய் என சித்தரிக்க வேறு கதை கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நல்ல நடிகன் தன்யன் என்பது இப்போதுதானே தெரிகிறது. கண்களில் நீர் யாருக்காகவும் பயப்படாமல் வெளியேறிக் கொண்டிருந்தது.
“ஆங்... தனா... எனக்கு புரிகிறது. இருப்பினும் நாம் திருமணம் செய்து கொள்ளலாமே!’’
“என்னதான் இத்தனை நாள் எங்கள் கம்பெனியில் குப்பைக் கொட்டினாயோ! அதிக பங்குகள், எங்கள் அப்பாமார்கள் பெயரில்தான் இருக்கிறது, மிக மிக சொற்பமே எங்களிடம். என் அப்பா, அவரது பங்குகளை விற்றுவிட்டால் பிறகு நான் எம்.டி. என்கின்ற கிரீடத்தை இறக்கி வைக்க வேண்டியதுதான். செல்வ செழிப்பான இந்த வாழ்வையும் தான்.”
“உங்கள் அப்பாவிற்குத்தான் உடல் சரியில்லையே சீக்கிரமே கண் மூடிவிடுவார். பிறகு எல்லாம் உங்களது தானே அதுவரை காத்திருக்கலாமே!’’
அடிப்பாவி... அப்பாவியான அங்கிளும் ஆண்டியும் உன்னை என்னடி செய்தார்கள். அவர்களை சாகச் சொல்கிறோயே, நீ நன்றாக இருப்பாயா? உள்ளுக்குள் கதறினாள் மலர்மதி. இருப்பினும் தன்யனின் பதிலுக்காக செவிகள் கூர்மையுற்றன.
சில நொடி அமைதி காத்தவன் “உனக்கு புரியவில்லை வீணா, அப்பா என்னுடைய திருமணத்திற்கு அவசரப்படுகிறார்கள். அவர்கள் விருப்பத்திற்கு திருமணம் முடித்தால் தான், அவர் பெயரில் இருக்கும் பங்குகளை எனக்கு எழுதி வைப்பார். அதனால்தான் கூறுகிறேன்.’’சிறு அமைதிக்குப் பின் வீணா பேசலானாள்.
“அப்படியானால்... நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள். பிறகு பங்குகள் உங்கள் கைகளுக்கு வந்த பிறகு அவளை விவாகரத்து செய்துவிட்டு என்னை மணந்து கொள்ளுங்கள், எப்படி என் ஐடியா.” கிராதகி, ஒரு பெண்ணின் வாழ்வை அழிக்க ஏற்பாடு செய்து விட்டு, எப்படி கொக்கரிக்கிறாள்.
“சரி... அப்படி ஒரு சாத்தியக்கூறு இருந்தால் நிச்சயம் செய்யலாம். பிறகு நடக்கப் போவதை அப்புறம் பார்ப்போம். இப்போது நான்... உன்... மேல்... இனியும் மறைக்க விரும்பவில்லை. மேலே இரண்டாவது மாடியில் ரூம் போட்டிருக்கிறேன். வருகிறாயா டார்லிங்?’‘ என்றான் போதை ஏறிய விழிகளுடன், வார்த்தைகள் குளரலாய் குழைவாய்.
“நிச்சயம் டார்லிங்.” என்று கைத்தாங்கலாய் அவனை அணைத்து லிப்டிற்கு அழைத்துச் சென்றாள்.
அவர்களின் முதுகை வெறித்த மலர்மதிக்கு அதற்கு மேல் அங்கு நிற்கவும் பிடிக்கவில்லை. வயிற்றிற்குள்ளிருந்து ஏதோ ஒன்று குடைவது போல் இருந்தது. மெல்ல மெல்ல மேலெழுந்து குமட்டலாய் மாறியது. வேகமாகச் சென்று வாந்தியெடுத்தாள்.
அங்கேயே சில நிமிடங்கள் நின்று கண்ணீர் வடித்தாள். கைப்பையில் இருந்த செல்போன் அலரவும்தான் நடப்பிற்கு வந்தாள். அழைத்தது வீணாதான். இன்னமும் இவளுக்கு என்னதான் வேண்டும் என்ற எரிச்சலுடன் எடுத்து காதுக்கு கொடுத்தாள்.
“ஏய், மலர் எங்கடி இருக்க.”
“கீ...கீ... கீழே வாஷ் ரூமில்.”
“இதோ, ஒரே நிமிஷம் வரேன்.’’
“ஏ...ஏ... ஏன்.” அவள் கேட்குமுன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இவள் ஏன் இப்பொழுது இங்கு வருகிறாள். இவள் அங்கே தன்யனுடனல்லவா இருக்க வேண்டும் என்று நேரம் பார்த்தவள் அயர்ந்து போனாள். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாகவா அழுதிருக்கிறாள். அதுவும் அந்த பெண் பித்தனை நினைத்து, அவளை நினைத்து அவளுக்கே எரிச்சல் வந்தது. ஆனால் என்ன செய்ய, அவளுக்குத்தான் இன்று கோள்களும், கிரகங்களும் எதிராய் இருக்கின்றனவே. எல்லாம் என் தலையெழுத்து. அதற்குள் வீணா வந்துவிட்டாள், வேகமாக வந்ததால் அவளுக்கு மூச்சு வாங்கியது.
வேகமாய் வந்ததால்தானா, தரிகெட்டு ஓடிய தன் மனதை அடக்க பெரும்பாடுபட்டாள் மலர்மதி. என்ன முயன்றும் வீணாவின் மேனியை, அளவெடுக்கும் தன் கண்களை, அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
கலைந்திருந்த கேசம், கண்களின் மஸ்காராவும் ஐ லைனரும் கலைந்திருந்தது. உதட்டுச் சாயம் ஆங்காங்கே காணாமல் போயிருந்தது.
இதழ்களில் என்ன ரத்தக்கட்டு, ஒரு வேளை... யோசிக்கையிலேயே இருதயம் வெடித்துவிடும் போல் கனத்தது. நல்லவேளையாய் வீணாவின் கவனம் கண்ணாடியில் இருந்தது.
“ச்சு... இந்த தனா சுத்த மோசம், என்னதான் ஆசை இருந்தாலும் இப்படியா கடிப்பது.” என்று உதட்டு காயத்தை கண்ணாடியில் ஆராய்ந்து கொண்டு இருந்தாள். அத்தோடு நிறுத்தாமல்,
“மலர் எனக்கு ஒரு உதவி செய்வாயா, இதோ சுடிதாரின் பின்னால் இருக்கும் இந்த ஜிப்பை போட்டு விடுகிறாயா.” என்று முதுகு புறத்தை காண்பித்தாள்.
“ஏன் அவிழ்த்தவருக்கு போடுவதற்கு நேரமில்லையா?” என்றாள் விரக்தியாய்.
“ஏதோ அவசர வேலையாம் சென்று விட்டார், வந்து... உனக்கு... அவர்... மீது...” முடிக்க முடியாமல் நிறுத்துவது போல் திணறினாள்.
“நீ நினைப்பது போல் எதுவுமில்லை வீணா.” உணர்ச்சி துடைத்த குரலில்.
“அடடா, உனக்கு அவர் மீது, ஏதோ என்று தோன்றியதால்தான் உன்னை இங்கு அழைத்தேன். உன் வாழ்விற்கு உதவுவதாய் நினைத்து, உன் நேரத்தை வீணடித்துவிட்டேனே, சாரிப்பா.” என்றாள் பவ்வியமாய், மலர்மதியினுள் கரைந்து கொண்டு இருக்கும் கண்ணீரைப் பற்றி தெரிந்தவளாய்.
“நடந்த எல்லாவற்றையும் கேட்டாய் தானே, நான் நினைத்தது போல் ஒரு வாழ்க்கை எனக்கு கிடைத்துவிட்டது. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.’’ இவளாவது நன்றாக இருக்கட்டும் என்று நினைத்தவள்,
“வாழ்த்துக்கள் வீணா, நான் கிளம்புகிறேன் வேலை இருக்கிறது, பாய்.” என்று விடைபெற்று வேகமாக வெளியேறினாள். வெற்றிப் புன்னகையுடன் நின்றாள் வீணா.