அத்தியாயம் - 19
இரண்டு நாள் இடைவேளைக்குப் பிறகு.
காலையிலேயே வந்துவிட்டனர் அர்ஜுனும், ஸ்ரீகாந்தும் - வந்த வேகத்திலேயே,
“அண்ணனை பார்க்க முடியவில்லை மலர், இப்படி அவர் உடைந்து நாங்கள் இதுவரை பார்த்ததில்லை. முதன் முதலில் அன்று நம் கம்பெனி ஆண்டு விழாவில், அண்ணன் உன்னோடு ஆடினார் பார், அன்றே முடிவு செய்து விட்டோம். நீ தான் எங்கள் அண்ணி என்று. ஆனால் நடப்பது எல்லாம் தலைகீழாக இருக்கிறது.”
ஆதங்கத்தில் அங்கலாய்த்தான் அர்ஜுன். “பெண்களைப் பற்றி பேசினாலோ! ஏன் நாங்கள் காதலித்தாலோ கூட பிடிக்காமல் இருந்தவர் தான் எங்கள் அண்ணா! அவருள்ளும் காதல் நுழைந்து, அவரை அடியோடு மாற்றியப் பொழுது, நாங்கள் எத்தனை சந்தோஷப்பட்டோம் தெரியுமா. பெரியம்மா பெரியப்பாவும் கூட, என்னென்ன கனவுகள் கண்டார்கள் தெரியுமா, எல்லாம் வீண்.” ஸ்ரீகாந்த்.
“எப்பொழுதும் அவர் எங்கள் மூவரின் நலன் பற்றி தான் அதிகம் சிந்திப்பார். முதன் முதலாக தனக்கென்று அவர் ஆசைப்பட்டது உன்னைத்தான். நீ எத்தனை சூடாகப் பேசினாலும் உன்னையே சுற்றிச் சுற்றி வந்தார். இப்போது கூட உன்னிடம் அவரை முழுமையாக ஒப்படைக்க எண்ணித்தான் ஏதேதோ செய்து, வீணாவை மதுவின் வாழ்விலிருந்து விலக்கிவிட்டார்.
இப்போது மது தன் தவறை உணர்ந்து திருந்தி விட்டான். எங்களையும் கூப்பிட்டு பேசினார். எல்லாம் கை கூடி வரும் நேரத்தில், எல்லாற்றையும் சுக்கல், சுக்கலாக கிழித்து விட்டாயே!” அர்ஜுன்.
எங்கோ! ஏதோ உடைவது போல் உணர்ந்தாள் மலர்மதி. ஏதோ புரிவது போல், சிறிதாக மூளைக்குள் ஒரு பொறி தட்டியது. “வ...வந்து... மதுசூதனனை இங்கே வரவழைக்கிறீர்களா? இப்போதே! ப்ளீஸ்.”
கண்ணீருடன் அவர்களிடம் மன்றாடினாள். ஏதோ புரிவது போல் தோன்ற உடனே செல்லில் தொடர்பு கொண்டு அவனை அழைத்தனர்.
அவன் வந்ததும், “அன்று லீமெரீடியனில் நடந்தது என்ன மதுசூதனன். தயவு செய்து ஒளிவு மறைவில்லாமல் கூறிவிடுங்கள்.” என்றாள்
கெஞ்சலாக, முதலில் தயங்கியவன், மலர்மதியின் கண்ணீரைப் பார்த்து கூறலானான்.
“எனக்கு வீணாவின் மீது ஒருவகையான ஈர்ப்பு. அதனை காதல் என்று, முட்டாள் போல நம்பியிருந்தேன். அதுமட்டுமல்லாமல், பலமுறை அண்ணா என்னை இதுபோன்ற பெண்களிடமிருந்து காப்பாற்றி இருக்கிறார். அதேபோல் இப்போதும் என்னை எச்சரித்தார். ஆனால் நானோ! இது உண்மையான காதல், அது இதென்று பேத்தினேன். அதற்குள் நீங்கள் வேறு அவரது வாழ்வில் நுழைந்து விட்டீர்களா. அதனால் ஒரு நாள் அண்ணன் என்னை அழைத்து, இனி எனக்கென்று ஒரு வாழ்வை ஆரம்பிக்கப் போகிறேன். அதனால் உனக்கு இறுதியாக ஒரு எச்சரிக்கை தருகிறேன். வீணாவை நம்பாதே” என்றார். நான் சான்று கேட்டேன். அவள் கெட்டவள் என்பதற்கு சான்று. உடனே நாளை மாலை லீமெரீடியனில் டேபிள் நம்பர் டூவில் உட்கார்ந்திரு என்றார். பிறகு வீணாவை அழைத்துக் கொண்டு வந்தவர். ஒருவாறு அவளுக்கு பண ஆசையை தூண்டிவிட்டார். உடனே அவள்... அண்ணனுக்கு... அண்ணனுக்கு.” முடிக்க முடியாமல் அவனது உதடுகள் துடித்தன.
“தேவையில்லை மதுசூதனன் நான்காம் நம்பர் டேபிளில் இருந்தது நான்தான். மேலே இரண்டாவது மாடியில் என்ன நடந்தது.”
“அவர்கள் இருவரும் வருவதற்கு முன்பே, என்னை அந்த அறைக்குப் போகச் சொல்லி, குறுஞ்செய்தி அனுப்பி விட்டார் அண்ணா. நானும் அங்கே சென்று விட்டேன்.”
“ரூமினுள் நுழைந்ததும், வீணா என்னை பார்த்து மிரண்டு விட்டாள். நான் அவளை சரமாறியாக பொழிந்து விட்டு, அண்ணனோடு வீடு திரும்பிவிட்டேன். உதட்டை அழுந்த கடித்துக் கொண்டு, அதில் இரத்தம் கசிய நின்ற வீணாவைத் தான் நான் கடைசியாகப் பார்த்தது. அதன் பிறகு அவள் இருக்கும் திசைப் பக்கம் கூட செல்வதில்லை. மூன்று மாத சம்பளத்தை, அவளது வங்கிக் கணக்கில் சேர்த்துவிட்டு, அனுபவ கடிதத்தை அவளது ஹாஸ்டலுக்கு அனுப்பி விட்டேன். அன்று லீமெரீடியனில் நடந்தது ஒரு நாடகம் மலர், அண்ணன் நல்லவர்.” எல்லாம் புரிந்து விட்டது, சூரியனை மறைத்த மேகம் அகன்று விட்டது. அன்று உதட்டின் காயம் வந்த காரணம் வேறு, ஆனால் வீணா கூறிய காரணம் வேறு. சம்பாதிக்க ஆரம்பித்ததிலிருந்தே வீணாவிற்கு மலர்மதியின் மீது வெறுப்புத்தானே. அவளை துன்புறுத்தவே வீணா இப்படி செய்திருக்க வேண்டும். என் மனதில் தனா இருப்பது தெரிந்து தான் காய் நகர்த்தியிருக்கிறாள். அவளது எண்ணம் ஈடேறவில்லை என்பதால், என் வாழ்வையும் அழிக்கத்துணிந்து விட்டாள். அவள் செய்யக் கூடியவள்தான் என்கின்ற உறுதி தோன்ற...
“த...தனா... தனா இப்போது... எங்கே?” என்றாள் இதழ்கள் துடிக்க.
“அண்ணா இரண்டு நாட்களாக வேலைக்கு வரவில்லை. அவரது வீட்டிலேயே அடைந்திருக்கிறார். வாருங்கள் நாங்கள் அழைத்துச் செல்கிறோம்.” என்று சாவியுடன் மதுசூதனன் முன்னே செல்ல, எல்லோரும் பின்தொடர்ந்தனர்.

Last edited by a moderator: