- Messages
- 113
- Reaction score
- 54
- Points
- 28
வியூகம் - 5
அன்று ஏனோ படம் பார்க்கும் மனநிலையில் விஷ்ணு இருக்கவில்லை. ஒரு வித இறுக்கம் அவன் மனதை சூழ்ந்திருந்தது. காரணம்
அன்று செய்தித்தாளில் வந்த கட்டுரை ‘இன்றிலிருந்து சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன்பு -ஓர் பழங்குடி இன மக்கள் பசிபிக் கடலின் ஓர் தீவிலிருந்து அகற்றப்பட்னர் ,அவர்களது ஊரை விட்டு வெளியே துரத்தியடிக்கப் பட்டனர். வளமான நிலத்தையும் காடுகளையும் சூறையாடிக் கொண்டு அவர்களை ஒரு பாலைவன தீவில் தள்ளி விட்டது வேறு யாரும் இல்லை அவர்களது அரசாங்கம் தான். இவர்களது இனம் கொத்து கொத்தாக வரட்சியிலும் உணவு பற்றாக்குறையாலும் செத்து மடிந்தன. எங்கே அவர்களது இனமே அழிந்து விடுமோ என்று அஞ்சிய ஓர் பெரியவர் தன்னுடன் சிலரை கூட்டிக்கொண்டு ஓர் படகில் பயணித்து வேறு ஓர் ஊரில் கரை சேர்ந்தனர்.அங்கே இவர்களது அடையாளத்தை மறைத்து வாழ்க்கையை தொடர உதவியிருக்கிறார் .இப்போதும் இந்த இன மக்கள் மொத்தம் இருநூறு தான். ஒன்றாக இருக்க முடியாமல் உலகில் பல்வேறு இடங்களில் சிதறி கிடக்கிறார்கள் இந்த இனமக்கள்’ என்று பரிதாபமாக முடிந்திருந்தது அந்த கட்டுரை. அந்த கட்டுரையின் எழுத்துக்கள் இப்போதும் அவனது கண்களுக்கு முன் நின்றது.உலகம் முழுவதும் அநீதி விரிந்து கிடக்கிறது .உடல் இறுகிய நிலையில் இருக்க,சுவாசம் ஏனோ சீராக இல்லை .
இந்த தாக்கத்திலிருந்து வெளிவர அவனது மனம் போராடியது. அவன் எடுத்து கொண்டிருக்கும் வேலைக்கு கவனம் முக்கியம்.அவனது மனநிலையை மாற்ற அந்த திரையரங்கை நோட்டமிட்டான் .எப்பொழுதும் போல் ஒரு முறை அந்த அரங்கை சுற்றி வந்தது அவனது பார்வை.
முந்தைய படம் போல் இல்லாமல் இந்த படத்திற்கு சன்னமான கூட்டம் இருந்தது. படம் இன்று தான் ரிலீஸ் ஆனால் வியாழக்கிழமை என்பதாலும் இந்த திரையரங்கு பிரபலமாகாதது என்பதாலும் ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை அதே நேரம் காலியாகவும் இல்லை. இளைஞர் கூட்டம் தான் அதிகமாக இருந்தது. கல்லூரி மாணவர்களை நம்பித்தான் ஒவ்வொரு பிரொடியூசரும் படம் எடுக்கிறார்கள் போலும். ஓர் பெருமூச்சுடன் திரும்புகையில் எதிர் சீட்டில் அவனது பார்வை படிந்தது
தனியாக அமர்ந்திருந்த அந்தப் பெண்னை பார்க்கையில் ஏதோ முரணாக தெரிந்தது .ஆண்கள் தனியாக படம் பார்ப்பதை பார்த்திருக்கிறான். ஒரு பெண் தனியாக படத்திற்கு வந்து அவன் பார்த்ததில்லை . இதுவே அந்த பெண்ணிடம் தனி கவனம் செலுத்த அவனை உந்தியது . அவள் குனிந்த தலை நிமிராமல் இருந்தாள், காரணம் கையினில் மொபைல். கொஞ்சம் நிமிர்ந்த நம் நாட்டு பெண்களின் தலையை மீண்டும் கவிழ வைத்து விட்டதே இந்த போன். இப்படி மனதில் சிந்தனை எழ இன்னமும் அவளை கூர்ந்து நோக்கினான். அவளது கையில் விலையுயர்ந்த 'பேட்" இருந்தது அதில் எழுத பென்சில் போன்ற ஓர் குச்சியிருந்தது.
அதில் அவள் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தாள். விஷ்ணுவின் ஆர்வம் அதிகரித்தது, சீட்டின் நுனியில் அமர்ந்து அவளை கவனிக்காதது போல் கவனித்தான். அதற்குள் விளக்குகள் அணைக்கப்பட்டன. திரையில் சென்சார் சர்ட்டிபிக்கேட் மிளிர்ந்தது.
அவனது கவனத்தை படத்தில் நிலைநிறுத்த முயற்சித்தான். அதில் ஓரளவு வெற்றியும் கண்டான்.ஆனால் விஷ்ணுவின் நூறு சதவிகிதம் கவனம் என்று சொல்லிவிட முடியாது. எதிரிலிருந்தவளால் அவனது கவனம் சிதறியது காரணம் அவனைப் போலவே அவளும் படத்தை பார்த்து பார்த்து ஏதோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள் .அவள் என்ன எழுதுகிறாள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவனுள் எழுந்தது..
படம் மிக மிக சுமாராகத்தான் இருந்தது. ஆனால் உள்ளே இலைமறை காய்மறையாக பல குறிப்புகள் இருந்தன. அந்த படத்தின் சாராம்சம் இதுதான் ஓர் உயிர் கொல்லி நோய் , அதிவேகமாக பரவுகிறது, அதனை தடுக்கத் துடிக்கும் ஹீரோ பல முயற்சிகளை எடுக்கிறான் , அதற்குள் இடைவேளை வந்துவிட்டது. விளக்குகள் மிளிர்ந்தன
ஏனோ அவளது முகத்தை பார்க்கும் ஆவல் அவனுள் எழுந்தது அவன் நினைப்பதற்கும் அவள் எழுவதற்கும் சரியாக இருந்தது அவளது கைப்பையை எடுக்க திரும்பியவளின் விழி வட்டத்திற்குள் விஷ்ணு பட்டு விட்டான். விஷ்ணு என்று சொல்வதை விட அவன் தொடையில் இருந்த டைரியும் கையிலிருந்த பேனாவும் அவளின் கவனத்தை ஈர்த்தது. அவனது முகத்தை சில வினாடி உற்றுப் பார்த்தாள் , தன்னுள் ஏதோ தீவிரமாக சிந்தித்தாள்
அவனை உற்று பார்ப்பதும் தீவிரமாக அவள் சிந்திப்பதும் புகைப்படம் எடுத்தது போல் அவளது பளிங்கு முகத்தில் தெரிந்து விட்டது. அவளது அழகான முக மாற்றம் அவனது இதழோரம் இள நகையை வரவழைத்தது. மீண்டும் அவள் அவனை உற்று பார்க்க விஷ்ணுவே உதவிக்கரம் நீட்டினான்." எனி பிராப்ளம்?" புருவம் உயர்த்தி அவளது தாமரை கண்களை ஊடுருவினான். பெரிதாக தயக்கமெல்லாம் காட்டாமல் "நீங்க யூடியூபரா ?" என்றவளது முக உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.