Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
அழகான அன்பர்களுக்கு வணக்கம்,

உங்களுள் ஒருவளாக வாசகியாக இருந்த நான் எழுத்தாளராக மாறி இருக்கேன் எதுக்கும்மா உனக்கு இந்த தேவையில்லாத வேளையினு நீங்க நினைக்கிறது எனக்கு தெரியுது என்னங்க பண்ண 2019 ஒண்ணத்தையும் கிழிக்கல 2020. லயாவது ஏதாவது கிழிக்கலாம்னு உள்ளுக்குள்ள ஓரே நச்சரிப்பு அதான் இந்த முடிவு என்னையும் ஓர் எழுத்தாளரா அங்கிகாரம் கொடுப்பீங்கனு நம்புறேன்

நன்றி நித்திமா எனக்கு ஓர் இடம் கொடுத்ததுக்கு

புது வருடமே வருக

நிம்மதியை தருக

மகிழ்ச்சியில் திளைக்க

வாழ்வுதனில் சிறக்க

வளத்தினை கொடுக்க

என்று அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறி என் முதல் முயற்சியாக சகாப்தத்தில் என் எழுத்து பணியில் முதல் அடி எடுத்து வைக்கிறேன் . விரைவில் அத்தியாயம் பிரண்ட்ஸ்

உங்களுள் ஒருவள் ஹனிகீதன்
 
மந்திரம் :1

பனி மூட்டத்தின் மத்தியில் இராட்சஷ கோபுரங்களின் இடையில் மாணிக்க கற்களாகவும், பவளக் கற்களாகவும் அலங்கரிக்கப்பட்ட கதவு வாயிலில் அசுரன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

அவன் தன் நீண்ட கடாயுதம் கொண்டு வருபவரை தடுத்து நிறுத்தி அவர்களிடம் ஏதோ கேட்டு எழுதிக் கொண்டிருந்தான் .


வரிசை நீண்டு பலர் உள்ளேயும், வெளியேயும் சென்று கொண்டிருக்க இறுதியில் நின்று கொண்டிருந்தான் அவன்.

அவன் அசுரன் அருகில் சென்றதும் அசுரன் அவனிடம் பேசினான்.

"வாரும் வேந்தளே! தீரரே! எமலோகத்திற்கு உம்மை வரவேற்கிறோம் "என்று அசுரன் கூற முழித்தான் காளை அவன் .


“என்னது எமலோகமா என்ன இவ்வளவு கேவலமா இருக்கு”.

You see mr.அசுரன் நீங்க ஏதோ ஆள் மாற்றி கூட்டிட்டு வந்துட்டீங்கனு நினைக்கிறேன்.

இப்ப என்ன உங்களுக்கு ஒரு ஆள் தான வேணும் என் நண்பன் இருக்கான் எனக்காக எதையும் செய்வான் Afterall உயிர் தான அதை தர மாட்டானா So me Going he coming வரட்டா Mr.அசுரன் என்று கூறிவிட்டு ஓட்டத்திற்கு அவன் தயாராக அப்போது ஓர் அசரீரி ஒலித்தது.


“வேந்தளே!தீரரே! வந்துவிட்டீரா! உம்மை காண பல ஜென்மங்கள் கடந்தும் காத்திருக்க்றேன் நான் "என்று கூறிய படி ஒரு கை நீண்டு அவனை பிடிக்க வர அலறிக் கொண்டே ஓடினான் தீரன்.

அதுவும் துரத்தி அவனை பிடித்து விட அதன் கைகளிலிருந்து தப்பிக்க அதன் கையை தீரன் பிடித்து முறுக்க “ அம்மா “என்ற கூச்சலில் கண் விழித்தான் தீரன்.


“அம்மா !அம்மா! என்ற சத்தம் ரூமில் எதிரொலிக்க தீரன் சுற்றி முற்றி பார்த்துவிட்டு பேசினான்.

"என்னடா இது சத்தம் மட்டும் வருது ஆளக் காணோம்" என்று தீரன் மேலே பார்த்தபடி பேச

“டேய் எரும கீழ பாருடா “ என்று அவன் நண்பன் லிங்கேஷ் கத்த சட்டென்று கீழே பார்த்தான் தீரன்.

அங்கு கட்டிலின் அடியில் தன் கைகளை பிடித்தபடி லிங்கேஷ் கத்திக் கொண்டிருந்தான்.

லிங்கேஷைப் பார்த்ததும் தீரன் சிரித்தான்

“டேய் மச்சி அங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க என்று தீரன் கேட்க

“ஹம்ம்ம் வரவு செலவு கணக்கு பார்க்கிறேன் என்று லிங்கேஷ் கூற

” மச்சி light போட்டு பார்டா அப்புறம் கண்ணு கேட்டு போய்ரும் "என்று தீரன் கூற

"நாயே தள்ளிவிட்டுட்டு ஏகத்தாளமா செய்ற அய்யோ என் கை" என்று கைகளை பிடித்துக் கொண்டே லிங்கேஷ் தீரனைப் பார்த்து கத்தினான் .

தீரன் தன் காதுகளை தேய்த்து விட்டுக் கொண்டே லிங்கேஷிடம் பேசினான்

“கத்தாத மச்சான் காது வலிக்குது ஏதோ கனவுல Confuse ஆகி இப்படி பண்ணிட்டேன் சாரிடா மச்சி" என்று தீரன் சொல்ல

லிங்கேஷ் கத்தினான்செய்றத செஞ்சிட்டு சாரி வேறயா அப்படி என்னடா கனவு கண்ட என்று லிங்கேஷ் கேட்க கனவினை சொன்னான் தீரன்.

தீரன் கனவினை கேட்ட லிங்கேஷ் தீீரனை முறைத்தான்

“ஏன்டா அங்கேயும் என்னை கோர்த்து விட்ற, நல்லா வச்சி செய்றடா என்னை !"என்று லிங்கேஷ் புலம்பிக் கொண்டே மேலே தொடர்ந்தான்.

“ நீ வர வர சரியில்ல மச்சி ! நீயா பேசுற, கத்துற" என்று லிங்கேஷ் கூற

“விட்றா! விட்றா " ஏதோ கனவு அதுக்குப்போய் என்று கூறிய தீரன் முகம் சீரியசாகியது.

“மச்சான் என்னை யாரோ கூப்பிடுறாங்கடா அடிக்கடி ஒரு வாய்ஸ் என் கூட பேசுதுடா" என்று லிங்கேஷிடம் கூற

, “ஆமா உன் செத்துப் போன ஆயா கூப்பிடுது போய் சாவு நானாவது நிம்மதியா இருப்பேன்" என்று லிங்கேஷ் கடுப்புடன் கூற

“ஏய் ரொம்ப பேசுற நீ" என்று தீரன் கத்த லிங்கேஷ் தொடர்ந்தான்.

“ஆமா மச்சி கூப்பிடற வாய்ஸ் ஸ்வீட்டா இருக்குமா, பார்க்கிற மாதிரி இருக்குமா,பொண்ணு தான என்னை கோர்த்துவிடேன் .

உன் கிட்ட போய்இதையெல்லாம்

சொல்லிட்டு இருக்கேன் பாரு நான். நீ கோர்த்து விட மாட்ட பிரிச்சு வேனா விடுவ" என்று அலுத்துக் கொண்டான் லிங்கேஷ்


ஏன்டா ரொம்ப அலுத்துக்குற என்று தீரன் கூற லிங்கேஷ் தொடர்ந்தான்.

“மிலிட்டரி ஆபிசர் மாதிரி வெறப்பா போற உன் கூட சேர்ந்தா எவ என்னை திரும்பி பார்பா"

ஹம்ம்ம் எனக்கு இந்த ஜென்மத்தில் ஒரு தடவ கூட திருமணம் நடக்காது என்று ஏக்க பெருமூச்சு விட்டபடி லிங்கேஷ் கூற

" போதும் நிறுத்துறியா உன் பாட்ட போய் ஆபிஸிற்கு கிளம்பும் வழியப் பாரு" என்று தீரன் கூற

"ஆமா! ஆமா! கிளம்பனும் அப்புறம் திரும்பவும் கனவு கண்டு உன் கிட்ட அடி வாங்க நான் என்ன மடையனா "என்று கூறிக் கொண்டே பாத்ரூமில் புகுந்து கொண்டான் லிங்கேஷ் .

டேய் கொன்றுவேன்டா என்று தீரன் கத்த

இவர்கள் இங்கு கத்திக் கொண்டிருக்கட்டும் நாம போய் இவங்க அறிமுகப்படலத்தை பார்க்கலாம்.

தீரன் மற்றும் லிங்கேஷ் சென்னையில் புகழ்பெற்ற ஒரு I T கம்பெனியில் 6 லகர எண்ணில் சம்பாதித்து வருகின்றனர் .

தீரன் காந்தர்வன் - மீனாட்சி தம்பதியரின் தவபுதல்வன் .

படித்து முடித்துவிட்டு கிராமத்தில் சுற்றித் திரிந்தவனை காந்தர்வன் சென்னையில் உள்ள தன் நண்பன் குணசேகரன் கம்பெனியில் வேளைக்கு சேர்த்தார்.

இவனுக்கு ஒரு தங்கை குழலினி . பாசப்பிணைப்பில் வல்லவர்களான இவர்கள் கைகளில் தான் அதிகம் பேசியுள்ளனர்.


லிங்கேஷ் தீரனின் நண்பன் இப்பதைக்கு அவ்வளவுதான் இவனைப் பற்றி கூற முடியும்.

ஏன்னா சார்வாள் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லைங்க.

என்ன நடக்குது இங்க! ஆண்டவா இவங்க அடிக்கிற கூத்து இருக்கே அப்பப்பா பாத்ரூமில் இருந்து வெளிவந்த லிங்கேஷ் தீரனைக் கண்டு Tension ஆனான்.

"டேய் மச்சி என்னடா பன்ற மூஞ்சில கீரிம்அ அப்பி வச்சிருக்க ஏதோ சுவர்க்கு வெள்ளையடிக்கிற. மாதிரி , எதற்கு இந்த ஆர்ப்பாட்டம்" என்று லிங்கேஷ் நக்கலடிக்க தீரன் கடுப்பானான்.

"ஏய் என்னடா Overa பேசிட்டு இருக்க Comedian நீயே இவ்வளவு Makeup போடும்போது ஹீரோடா நான்" .

இதுகூட பண்ணலேனா எப்படிடா ?அதுமட்டும் இல்லைடா ஹீரோயின் Entry வேற இருக்காம் Next Scene la அதுக்குத்தான் இந்த பில்டப் என்று தீரன் கூற,

"காக்காக்கு என்ன தான் கலர் அடிச்சாலும் அது கொக்காக முடியாது So சீக்கிரம் கிளம்பி வெளிய வா உனக்காக Wait பண்றேன்" என்று கூறிவிட்டு சிட்டாக பறந்து விட்டான் லிங்கேஷ்.

"டேய் நாயே !உன்னை!" என்று கத்திய தீரன் சற்று நேரத்தில் கிளம்பி வெளியே வந்து கதவினை சாற்ற முயல அசரீரி ஒலித்தது.


“தீரா விரைந்து வா! உன் தேடலுக்கான வேளை தொடங்கிவிட்டது. தாமதிக்காதே! “ என்று அது கூற தீரன் சுற்றி சுற்றி பார்த்தான்யாரும்தென்படவில்லை அதனைக் கண்டு தீரன் திகைத்தான்.


ஆட்டிவிக்கிறான் ஈசன் அவன்அத னை ஊன் கண் கொண்டு பார்க்க முற்படுகிறான் பேதையவன் .எல்லாம் அவன் செயல்.

ஓம் நமச்சிவாய
வியூகம் தொடரும்
 
மந்திரம் 2

தீரன் , லிங்கேஷ் ஆபிஸிற்கு உள்ளே வந்ததும் பியூன் வேகமாக இவர்களை நோக்கி வந்தான்.

"சார் சார் இன்னைக்குமா லேட்! அம்மா வந்துட்டாங்க !"என்று பதட்டத்தோடு அவன் கூற தீரன் அதை கண்டு கொள்ளாமல் தன் கேபினை நோக்கி செல்ல லிங்கேஷ் பதறினான்.

"டேய் தீரா அப்பவே சொன்னேன் கேட்டீயா? பாரு இப்ப நல்லா மாட்டிகிட்டோம் பூலான் தேவி வந்துட்டா ,என்ன சொல்லப்போறாளோ?" என்று லிங்கேஷ் கூறியபடியே தீரன் பின் சென்றான்.

"மச்சி இன்னைக்கு10 மணிக்குள்ள ஆபிஸ் வந்தாச்சு அவ முன்னாடி வந்து உட்கார்ந்துட்டா அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது என்று தீரன் கத்திக் கொண்டே கூற லிங்கேஷ் அலறினான்.

"டேய் சவுண்ட குறை டா அவ காதுல கேட்க போகுது" என்று லிங்கேஷ் கூற

"அவ காதுல கேட்டா எனக்கு என்ன ? அவளுக்கு கேட்கணும் தான்டா கத்தி பேசுறேன் , ராங்கி என்ன செய்றானு நானும் பார்க்கிறேன் "என்று கூறிய தீரா பின்னால் திரும்பி பார்த்த படி மேலே தொடர்ந்தான் .

அப்புறம் மச்சான் காளையில் கிளம்பும் போது பூலான் தேவினு யாரையோ சொன்னியே, யார்டா அது ? என்று தீரன் கேட்க லிங்கேஷ் அவனை புரியாமல் பார்த்தபடியே கூறினான் . நம்ம மேடத்த தான் சொன்னேன். எதுக்குடா ? இப்ப அதை கேட்குற என்று லிங்கேஷ் கேட்க

தீரன் திரும்பிப் பார்த்தபடியே “ மச்சான் வாங்குறத வாங்கிட்டு சீக்கிரம் வாடா” என்று கூறி விட்டு செல்ல

" என்னாச்சு இவனுக்கு ! எதுக்கு இப்படி பேசிட்டு போகுது இந்த பயபுள்ள !ஏதோ சரியில்லையே ! "என்று நினைத்த வண்ணம் திரும்பிய லிங்கேஷ் எதிரில் இவர்களால் அர்ச்சனை செய்யப்பட்ட கனிஷ்கா காளி ரூபத்தில் நின்று கொண்டிருந்தாள். அவளை கண்டதும் லிங்கேஷ் அரண்டு பயத்தில் அவன் தந்தியடித்தபடியே தொடர்ந்தான்.

மேம் அது வந்து என்று லிங்கேஷ் ஏதோ சொல்ல வர,

“ you idiot வந்தது லேட் இதுல அரட்டை வேறயா எங்க அவன் என்று கூறியபடியே தீரனிடம் சென்றாள் கனிஷ்கா. இவ நம்ம ஹீரோகிட்ட போறதுக்குள்ள இவளை பத்தி பார்த்துட்டு வந்துரலாம்

கனிஷ்கா :

குணசேகரன் – லட்சுமி தம்பதியரின் ஒரே மகள். அவளின் தாய் அவளின் சிறு வயதில் இறந்துவிட தந்தையினால் தனியாக வளர்க்கப்பட்டாள் . தனியாக வளர்ந்ததால் ஆளுமையோடு , கோபம், திமிர் ,கர்வம் போன்றவை அதிகம் இருக்கும் இவளிடம் . கர்வம், அறிவு , தன்னம்பிக்கை மூன்றின் மொத்த உருவமானவள் கனிஷ்கா.

(இனி லிங்கேஷ் – லிங் எனவும் , கனிஷ்கா – கனி எனவும் சுருக்கமாக அழைக்கப்படுவர் வேற ஒண்ணும் இல்லை மக்காஸ் type பண்ண முடியல )

கனி தீரனை நோக்கி செல்ல லிங் பின் தொடர்ந்தான்.

தீரா தன் கேபினில் அமர அவன் எதிரில் நின்றாள் கனி .

“டைம் என்னாச்சு மேன்” என்று கனி கேட்க

“ஹம்ம்ம் நேத்து இந்நேரம்” என்று இடக்காக பதில் சொன்னான் தீரன்.

You idiot ஆபிஸ் க்கு லேட்டா வந்துட்டு திமிரா வேற பதில் சொல்றியா?

ஆபிஸ் க்கு வர நேரமா மேன் இது ? என்று கனி கேட்க

“ஏன் 10 மணி நல்ல நேரம் தான. நான் என்ன பொண்ணா பார்க்க வந்துருக்கேன் நேரம் பார்த்து வரதுக்கு . வேளை பார்த்துட்டு இருக்கேன் disturb பண்ணாம போறியா” என்று தீரன் பதில் சொல்ல

"Just Shut up man! இங்க நான் எம் . டி யா இல்ல நீ எம் .டி யா திமிரா பதில் சொல்ற என்று அவள் தீரனை கேட்க அவன் அவளை கண்டு கொள்ளவே இல்லை.

நான் உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் பதில் சொல்லு மேன் " .

"ம்ச்ச் நீ தான் எம். டி !நானா எம் டி னு சொன்னேன்.அதான் லேட் ஆகிருச்சுல்ல விடேன் .சும்மா நொய்யு நொய்யுனு மனுசனை வேளை செய்ய விடாம torture பண்ணிகிட்டு" என்று தீரன் கடுப்புடன் கூற

கனிக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது.

என்ன திமிரா ? என்னை எதுத்தா பேசுற இனி உன்னை வேளையில் வச்சுக்க முடியாது என் ருமிற்கு வந்து உன் resignation letter வாங்கிக்கோ மேன் என்று கோபமாக அவள் கூற ,

என்னை வேளையில் சேர்த்தது குணசேகரன் சார்.அவர் வந்து சொல்லட்டும் நான் கிளம்புறேன் . நான் ஒண்ணும் உன் புருசன் இல்லை நீ கூப்பிட்டவுடன் உன் பின்னாடி வரதுக்கு . பைக் ஒட்டிட்டு வந்தது களைப்பா இருக்கு அதனால எனக்கு பதில் என் செல்லம் வரும்.

போடா லிங் மேம் கிட்ட வாங்குறத வாங்கிட்டு வந்து சேரு என்று தீரன் சொல்ல கனி லிங்கை முறைத்தாள் . லிங் இவர்களிடம் மாட்டிக்கொண்டு விழித்தான். அவளை சமாதனப் படுத்தும் நோக்கில் லிங் பேசினான்.

மேம் நான் வேணா உங்க ருமிற்க்கு வரவா என்று அவன் கேட்க

“You Just shut up and get last man” என்று கோபத்தில் கத்திவிட்டு அவள் செல்ல லிங் தீரனிடம் வந்தான் .

ஏன் மச்சான் இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு கத்திட்டு போறா உனக்கு பதில் நான் வந்து லெட்டரை வாங்கிறேன்னு தானடா சொன்னேன் அதுக்கு எதுக்கு கத்திட்டு போறா .

இவ என்ன ஒண்ணு shutup னு சொல்றா இல்லை get last னு சொல்றா .வேற வார்த்தை இவளுக்கு தெரியாதோ என்று அதி முக்கியமான சந்தேகத்தை லிங் தீரனிடம் கேட்டான்.

மச்சி நீ இவ்வளவு தெளிவா அப்ப நீ சொல்லலடா அவ ருமிற்கு நீ வரென்னு சொன்னா தீட்டாம கொஞ்சுவாங்களா என்று தீரன் விவரிக்க லிங் பதறினான். அய்யோ சொதப்பிட்டேனா.

அய்யோ கடவுளே இவங்க ரெண்டு பேர்க்கு நடுவுல மாட்டிக்கிட்டு நான் முழிக்கிறேன்.என்னை காப்பாத்து ஆண்டவா என்று கடவுளுக்கு அவசரமாக ஒரு கோரிக்கை வைத்தான் லிங்.

கோபமாக ரூமிற்குள் சென்ற கனி மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள். “ராஸ்கல் என்ன பேச்சு பேசுறான் , எல்லாம் அப்பா கொடுக்கிற இடம், அவர் வரட்டும் இவனை ஒரு வழி பண்றேன்” என்று கனி தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

ஏன் தீரனுக்கு குணசேகரன் சார் இவ்வளவு support பண்றார் ?ஏன் பையன் இவ்வளவு துள்ளுறான் ? வாங்க பார்க்கலாம்.

குணசேகரன் – காந்தர்வன் சிறு வயது தோழர்கள் . குணசேகரன் சென்னையில் வந்து தொழில் தொடங்கியதில் இருந்து அவரின் வளர்ச்சிக்கு , அவரின் இந்த செல்வ நிலைக்கு காந்தர்வன் பங்கு மிகவும் பெரிது. ஆகையால் குணசேகரன் அவரின் மீது பெரும் மதிப்பு வைத்துள்ளார். தன் மகனை சென்னைக்கு அனுப்பி வைத்து தீரனை பார்த்துக்கொள்ளுமாறு காந்தர்வன் கேட்டுக் கொண்டதன்படி குணசேகரன் அவனை வேளைக்கு அமர்த்தியுள்ளார்.

குணசேகரனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை தன் மகனை எந்த காரணம் கொண்டும் கிராமத்திற்கு அனுப்பக்கூடாது எனவும் , கவனமாக பார்த்துக் கொள்ளுமாறும் காந்தர்வன் அவரிடம் கேட்டுக் கொண்டது மட்டும் ஏன் என்று அவர்க்கு புரியவில்லை ஆயினும் தன் நண்பன் காரணமின்றி எதுவும் செய்ய மாட்டான் என்று கருதி இன்று வரை அவர் சொல்லியபடி தீரனை பார்த்து வருகிறார் குணசேகரன்.

காலத்தின் கணக்குதனை மனிதன் மாற்ற முயல்கிறான்.
விதியை மனிதனின் மதி வெல்லுமா ?
இருள் தன் சதியை தொடருமா ?
பதில் பின் வரும் அத்தியாயத்தில் .......


வியூகம் தொடரும்
 
மந்திரம்: 3

பச்சை பசேல் என புல்வெளியும் அருகே வயல் வரப்புமாக , பசுமையாக, செழிப்போடு காட்சியளிக்கும் தேனி மாவட்டத்தின் ஒரு அங்கமான வடுகப்பட்டி கிராமம்

வானம் கருமை நிறம் பூசிக் கொண்டும், நிலவு தன் முகத்தை மேகப் போர்வைக்குள் பாதி மறைத்துக் கொண்டும் அழகோவியமாக காட்சியளிக்கும் பனி சூழ்ந்த,பொழுது புலராத அந்த அதிகாலை மார்கழி பொழுது!

குளிரின் குளுமையை பொருட்படுத்தாமல் காதுகளில் பஞ்சினை அடைத்துக் கொண்டு பெண்கள் வீட்டின் வாசலை வண்ண கோலங்களால் அழகாக்கிக் கொண்டிருந்தனர்.

வீடுகள் ஒவ்வொன்றும் கோலங்களால் ஜொலிக்க அந்த தெரு கடைசியில் உள்ள அந்த பிரம்மாண்ட வீட்டின் வாசல் மட்டும் கேட்பாரின்றி கிடந்தது.

வீட்டின் உள்ளே மெத்தையில் சுகமான துயிலில் முடங்கியிருந்தாள் காந்தர்வன் – மீனாட்சி தம்பதியரின் தவபுதல்வி, தீரனின் தங்கை குழலினி .

“ குழல் ! குழல் ! அம்மா குழல் எழுந்திரிமா ! “ என்று மீனாட்சியம்மா எழுப்ப சுகமாக தூங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

‘இவள இப்படிலாம் எழுப்பினா சரிப்பட மாட்டா உன்னை ‘

“அடியெ எழுந்துருடி மணி 5 ஆகிடுச்சு பொம்பள பிள்ளைக்கு என்ன தூக்கம் வேண்டிகிடக்கு " என்று கத்திக் கொண்டே குழலை அடித்து எழுப்பிக் கொண்டிருந்தாள் மீனாட்சி.

“அம்மா பிளிஸ் ! கொஞ்ச நேரம்மா! நைட் படுக்க லேட்டாகிடுச்சு ! கொஞ்ச நேரம் தூங்கிக்குறேன் மா” என்று கூறியபடியே தூங்க முயன்றாள் குழல்.

“மீனு விடுமா !அவதான் நைட் லேட்டா படுத்தேன்னு சொல்றால , விடு அவ தூங்கட்டும் தொந்தரவு பண்ணாதமா , அவ என்ன உன் பிள்ளை மாதிரியா சூரியன் உதித்து பல மணி நேரம் கழிச்சு எழும்ப” என்று மகளுக்கு பரிந்து பேசினார் காந்தர்வன்.

“இப்ப எதுக்கு என் பிள்ளையை இழுக்குறீங்க” என்று மீனாட்சி கடுப்புடன் கூற

“அது என்னடி உன் பிள்ளை ! நான் இல்லாம அவன் வந்துட்டானோ ! நீ மட்டும் தான் பெத்த மாதிரி பேசுற !” - காந்தர்வன்

“ஆமா நான் மட்டும் தான் பெத்தேன் . வாந்தி எடுத்து , தூக்கம் கெட்டு போய் , பிரசவ வலி தாங்கி நான் தான் பெத்தேன் . நீங்க என்னமோ பெத்த மாதிரி பேசிக்குறிங்க” – மீனாட்சி

“ ஹேய் அவனை பேசினவுடனே வந்துடுவியே வாரி சுருட்டிக்கிட்டு வக்காலத்து வாங்க. அவன் ஒரு முட்டாபய! ஏதோ நான் பார்த்து படிக்க வச்சு வேலைக்கு சேர்த்துவிடலேனா அவன் என்ன ஆவானோ “ – காந்தர்வன்




“சும்மா அவனை தீட்டிட்டு இருக்காதீங்க .நீங்க வேணா பாருங்க அவன் வருங்காலத்தில் சரித்திரம் படைக்கப் போறான் !அத நீங்க கண் குளிர பார்க்கத்தான போறிங்க” – மீனாட்சி

“ ஆமா சார் அப்டியே கிழிச்சுடுவாரு போடி அங்குட்டு அவன் சரித்திரம் படைக்கிறானோ இல்லையோ ! தரித்திரம் ஆகாம இருந்தா சரி “– காந்தர்வன்.

இவர்கள் இங்கு ஏட்டிக்கு போட்டி பேசிக் கொண்டிருக்க குழல் தான் விட்ட வேலையை தொடர்ந்தாள். அது தாங்க தூங்குற வேலைய

இவர்கள் சண்டையில் முதலில் சுதாரித்தது மீனாட்சிதான். அவர் திரும்பிப் பார்க்க குழல் தூங்கிக் கொண்டிருந்தாள். தன் பேச்சை நிறுத்திவிட்டு குழலிடம் சென்றார்.

“ஏய் எழுந்துருடி !” - மீனாட்சி

“ அம்மா இன்னைக்கு ஒரு நாள் தூங்கவிடேன் “ – குழல்

“ ஊரே பனிக்காத்த பொருட்படுத்தாம கோலம் போட்டுட்டு இருக்கு , உனக்கு என்ன தூக்கம் வேண்டிகிடக்கு ! எந்துருச்சு போய் கோலம் போடுடி ! நம் வீடு மட்டும் வெறிச்சோடி போய் இருக்கு என்று மீனாட்சி சலித்துக் கொள்ள

“ ம்ச் கத்தாதமா ! சரி நான் கோலம் போடுறேன் அதுக்கு முன்னாடி எனக்கு காபி வேணும்” என்று கொட்டாவி விட்டபடி சோம்பல் முறித்தாள் குழல்.

“அதலாம் முடியாது , போடி ! போய் பல் விளக்கிட்டு வா காபி தரேன் “என்று தன் பிடியில் உறுதியாக இருந்தார் மீனாட்சி

“ அம்மா பல் விளக்கிட்டு காபி குடிக்குறதுல என்ன கிக் இருக்குமா ! நீ இப்ப காபி தரப் போறியா இல்லையா ? “ – குழல் எகிற

“கிக் வேணுமா கிக்கு காலால வேணா தரேன் ஒரு kick , காபி தர மாட்டேன்டி !என்னடி செய்வ? “ என்று கோபத்தோடு அவர் கேட்க

“நீ தரலனா போ நான் போய் போட்டு குடிச்சுக்கிறேன் “ – குழல்

“ பொம்பள பிள்ளைக்கு இவ்வளவு வீம்பு இருக்கக் கூடாதுடி! போய் நான் சொன்னத செய் “- மீனாட்சி

“ அட போமா !” - குழல்

“ இப்டி எதுத்து பேசி, பிடிவாதம் பிடிக்காதடி ! போற வீட்டுல அடி வாங்குவ “ – மீனாட்சி

“ நான் எதுக்கு அடி வாங்கப் போறேன்மா. உனக்கு என் அப்பா கிடைச்ச மாதிரி எனக்கு ஒரு

கேணப் பையன் கிடைக்காமலா போயிடுவான் . நீ எனக்கு செய்ற வேலையெல்லாம் அவன்

எனக்கு செய்வான்மா’’ என்று கூறிவிட்டு சிட்டாகப் பறந்துவிட்டாள் அவள்.

‘’அடிக்கழுதை ! அப்பாவயா கேணப்பயன்னு சொல்ற உன்னை ! என்ன சொல்லிட்டு போறா பார்த்தீங்களா ? “ என்று காந்தர்வனிடம் முறையிட்டார் மீனாட்சி

“ விடு மீனு அவ உண்மையத்தான சொல்லிட்டு போறா . இன்னும் கொஞ்சம் நல்ல பொண்ணா பார்த்திருக்கலாம் நான் , ம்ம் ஏமாந்துட்டேன்” என்று கூறி காந்தர்வன் பெருமூச்சுவிட

“என்ன சொன்னீங்க இப்ப ? “என்று சொல்லி இடுப்பில் கை வைத்தபடி தன்னை முறைக்கும் மனைவியை பார்த்த காந்தர்வன்

“ சும்மாமா ! ஒரு பேச்சுக்கு சொன்னேன்மா . உனக்கு நிகர் நீதான் ! “என்று புகழ் ஆரம் சூட்ட தொடங்கிவிட்டார் அவர்.

ஆயினும் வீம்பாக இருந்தார் மீனாட்சி

“ தண்ணி கொண்டு வாமா ! நாக்கு வரண்டு போச்சு “ – காந்தர்வன்

“ இதுக்கு மட்டும் நான் வேணும் “ என்று நொடித்துக் கொண்டே காபி போட சென்றார் அவர்.

அவர் பின்னோடு சென்ற காந்தர்வன்

“மீனும்மா என் மேல் கோபமா ? “ என்று காந்தர்வன் கெஞ்ச

“பேசாதீங்க ! அவ தான் சின்ன பிள்ளை மாதிரி பேசினா நீங்களும் அவ கூட ஜோடி சேர்ந்துட்டு என்னை பேசுறீங்க “ என்று மீனாட்சி வருத்தப்பட

“ அப்டியில்லம்மா ! பெண் பிள்ளைங்க இங்க தான்மா நினைச்சத பேசிட்டு , செஞ்சிட்டு சந்தோசமா சுற்றி திரியுங்க அதுகளுக்குனு ஒரு கல்யாணம் நடந்ததுனா பொறுப்பா மாறிடுவாங்க . இங்கேயாவது அவ அவளா இருக்கட்டுமே” என்று அவர் கூற மீனு மொனமாக அதை ஆமோதித்தார்.

அவரே தொடர்ந்தார்.

“மீனு குழலுக்கு படிப்பு முடியப் போகுது அவளுக்கு வரன் பார்க்கலாம்னு நினைக்கிறேன், நீ என்ன சொல்ற “ - காந்தர்வன்

“ என்னங்க இது ? அதுக்குள்ள கல்யாணமா ! அவளுக்கு இன்னும் பொறுப்பு வரல இன்னும் 1 வருசம் போகட்டும். என் மகன தான் தூரமாஅனுப்பிட்டீங்க இவளாவது கொஞ்ச நாள் என் கூட இருக்கட்டுமே ! “ – மீனாட்சி

“நீ புரிஞ்சு தான் பேசுறியா ! ஜோசியர் என்ன சொன்னார்? குழலுக்கு சீக்கிரம் திருமணம் முடிச்சு வெளியூர் அனுப்பனும் இங்க வச்சிருக்கக் கூடாதுனு சொன்னார்ல மறந்துட்டீயா?” – காந்தர்வன்.

“ அதில்லைங்க ஜோசியம்லா ஒரு அளவு தாங்க நம்பணும் எல்லாத்தையும்மா நம்பிட்டு இருக்கிறது “ – மீனாட்சி

அப்டியில்லைமா சிவன் கோவிலுக்கு போயிட்டு வெளி வரும் போது அகோரி ஒருவர் என் கிட்ட வந்து பேசினார்.


“ இருள் சுழ்ந்து வந்து உயிர் தனை காவு வாங்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது! உன்னை காத்துக் கொள்வாயாக ! பிறந்த மக்கள் இருவரையும் வேறு இடம் அனுப்புவாயாக! "
என்று சொல்லிட்டு போயிட்டார் . அதான் யோசனையா இருக்கு என்று காந்தர்வன் சொல்ல

“ என்னங்க சொல்றிங்க ? ஏன் ? என் கிட்ட இத பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல ?”பதறினார் மீனாட்சி

“ நீ இப்படி பயப்படுவேன்தான்மா சொல்லல . நீ பயப்படும்படி ஒண்ணும் நடக்காது நமது குல தெய்வம் நம்மளை காக்கும்மா “ என்று அவரை சமாதனப்படுத்தினார் காந்தர்வன்.

“ பெத்தது இரண்டு ஆனா பக்கத்துல வச்சு பார்த்துக்க முடியல , நீங்க என்ன , வெளியில போயிருவீங்க! நான் தான வீட்டுக்குள்ள தனியா இருக்கேன், அதான் நினைப்பு எல்லாம் பிள்ளைங்களயே சுற்றி வருது” என்று கூறியபடி தன் கலங்கிய கண்களை சேலை தலைப்பில் துடைத்துக் கொண்டே மேலே பேசினார் மீனாட்சி

“ தீரனை ஒரு எட்டு பார்த்துட்டு வந்துரலாமாங்க ? – மீனாட்சி

“ இல்லைமா நாம போனா பின்னாடியே வால பிடிச்சுட்டு வந்துருவான் அந்த பய . அங்க இருந்தா தான் பய உருப்படியா இருப்பான். கொஞ்ச நாள் பொறுத்துக்கோமா நானேஅவனை கூட்டிட்டு வரேன்” – காந்தர்வன்

கணவன் கூறிய நியாயத்தில் “ சரிங்க !” என்று ஏற்றுக் கொண்டார் மீனாட்சி

“ஏன்மா! நான் போய் அந்த அகோரிய பார்த்து இதுக்கு ஏதும் பரிகாரம் இருக்கானு கேட்டுட்டு வரவா” – காந்தர்வன்.

“ சரிங்க அப்படியே செய்ங்க ! எப்படியோ என் பிள்ளைகள் நல்லா இருந்தா சரி தாங்க “ என்று கூறிவிட்டு மீனாட்சி உள்ளே சென்றுவிட

காந்தர்வன் அகோரியை பார்க்க கிளம்பி வீட்டின் வாசல்படி தாண்டி அவர் வெளியே வர , அவரை நோக்கி மேகத்தின் மத்தியில் இருந்து ஒரு கை வந்து அவரை பிடிக்க முயல, வாசல்படி முன் நின்று இருந்தது ஒரு கருப்பு உருவம் . அதன் கண்களில் இருந்து வந்த வெளிச்சத்தின் தீட்சணம் தாங்காமல் கை தானாக மறைந்தது.

கை மறைந்ததும் அந்த கருப்பு உருவம் கல்லாக மாறி வாசல்படியில் படிகளாக மாறியது.


“ காவல் நிற்கும் தெய்வம் அனைத்து இடர்களுக்கும் துணை நிற்குமா ? தீமை அவற்றை வெற்றி கொள்ளுமா ! “
விடை விரைவில் ....

வியூகம் தொடரும்...
 
மந்திரம் : 4

வடுகப்பட்டி கிராமத்திற்கு அருகில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற தனியார் கல்லூரியில் தன் இறுதியாண்டு படிப்பை படித்துக் கொண்டிருந்தாள் குழல் . குழல் அவள் தோழி ரூபாவோடு பஸ்சில் கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள்

ரூபா , குழல் இருவரும் சிறு வயது தோழியர்கள் .ஒன்றாக பள்ளியில் படித்து இப்போது கல்லூரியிலும் ஒன்றாக சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அன்றும் கல்லூரிக்குச் செல்ல பேருந்து நிற்கும் இடத்திற்கு குழல் முன்னால் நடந்து சென்று கொண்டிருக்க , ரூபா பின்னால் அவள் பெயரை கத்திக் கொண்டே வந்தாள்.

“ குழல் ! குழல் ! அடியே நில்லுடி ! கூப்பிட்டுட்டே இருக்கேன் நீ கண்டுக்காம போனா என்ன அர்த்தம் ? “ என்று மூச்சு வாங்க குழல் முன் நின்று ரூபா கேட்க

“ ஹம்ம் நிற்க விருப்பம் இல்லைனு அர்த்தம்” என்று சொல்லிவிட்டு குழல் திரும்பி நடக்க

“ ஏன்டி ? “ – ரூபா

“ உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன் குழல்னு கூப்பிடாதேன்னு. .அப்டி கூப்பிட்டா நிக்க மாட்டேன்டி .” – குழல்

“ இது என்னடி வம்பா போச்சு குழல் தான உன் பெயர் . அப்டி கூப்பிடாம எப்டி கூப்பிடுறது ? “ – ரூபா

“ அப்டி கூப்பிடாதனு சொன்னா விடேன். சும்மா கேள்வி கேட்டுட்டு .இந்த பெயரை கேட்டாலே பத்திக்கிட்டு வருது “ – குழல்

“ ஏன்டி பேர்ல என்ன இருக்கு ? அழகான தமிழ் பெயர் தான “ – ரூபா

“ ஹம்ம் தமிழ் பெயரா ! உனக்கு நல்லா மாடர்னா பெயர் வச்சுருக்காங்கல நீ ஏன் சொல்லமாட்ட! . எனக்கு அப்டியா?” – குழல்

“ உங்க ஊர்ல ரூபா மாடர்ன் பெயராக்கும், சரிதான் ! “ - ரூபா

“ என் பெயர் பக்கத்துல உன் பெயர் மாடர்ன் தான்டி “- குழல்

“ அட ஆத்தா பெயர்க்கு ஒரு பிரசங்கமே பண்ணிட்டடி. இனி உன்னை குழல்னு கூப்பிடாம சண்டிராணினு கூப்பிடுறேன். சரிதானமா ? ” – ரூபா

“ ஏய் கொன்றுவேன்டி “ – குழல்

“ என்னம்மா அப்டியும் கூப்பிட விட மாட்ற இப்டியும் கூப்பிட விட மாட்ற ! சரி அதவிடு பரிட்சைக்கு படிச்சுட்டியா ? “ – ரூபா

“ம்ம் படிச்சிட்டேன், நீ?”- குழல்

“ நீ படிச்சுட்டேல நீ படிச்சா நான் படிச்ச மாதிரிமா “ –ரூபா

“ அடிப்பாவி! ஒழுங்கா படிச்சா என்னடி? எத்தனை நாள் தான் பிட் அடிச்சு , என்னை பார்த்து எழுதி பாஸ் ஆவ ? – குழல்

“ நான் படிக்கமாட்டேனா சொல்றேன்டி அதான் எனக்கு வரமாட்டிங்குதுல” – ரூபா

“ நீ திருந்தவே மாட்ட ! எக்கேடும் கெட்டுப் போ !” என்று திட்டிவிட்டு குழல் முன்னால் நடக்க ரூபா திரும்பிப் பார்த்தபடியே வந்தாள்.

அவள் பார்ப்பதை உணர்ந்த குழல் “ என்னடி திரும்பிப் பார்த்துக்கிட்டே வர “என்று ரூபாவிடம் கேட்க

“ இல்லை உன் ஆள் வரானானு பார்க்குறேன்” – ரூபா

“ ஏய் செருப்பு பிஞ்சுடும்டி உன் ஆள்னு சொன்னேனா ! அந்த நாய பத்தி பேசாத ! அந்த நாய் இப்ப எவ பின்னாடி சுத்திட்டு திரியுதோ ! “ – குழல்

ரூபா சிரித்துக் கொண்டே “ எங்கேயும் திரியல உன் பின்னாடி தான் திரியுது . “ அங்கே பார் என்று ரூபா கை காட்ட திரும்பிப் பார்த்தாள் குழல்.

அங்கு தூரத்தில் ஒரு இளைஞன் இவர்களை தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.அவனை பார்த்ததும்

“ இவனை! இன்னைக்கு ஒரு வழி பண்ணல , நான் குழல் இல்லடி “ என்று கூறி கொண்டே கோபத்தோடு அவனை நோக்கி சொன்றாள் குழல்.

‘ போச்சு செத்தடா நீ’ ரூபா மனதில் நினைத்துக் கொண்டாள்.

அவள் தன்னை நோக்கி கோபத்தோடு வருவதைப் பார்த்தவன் ஓட்டத்திற்கு தயாராக குழல் கத்தினாள்.

“ நில்லுடா பரதேசி ! என்கிட்ட வந்து தைரியமாக பேச துப்பில்லை உனக்கு என்ன காதல் வேண்டிக்கிடக்கு “ என்று அவள் கத்த

இவள் கத்தலில் பயந்து போன அவன்

“ அம்மா தாயே பார்க்க அழகா இருக்கேனு பின்னாடி வந்தேன். ஆனா வாய திறந்தா ரவுடியால இருக்க ,போடி! நீயும்! உன் மூஞ்சியும் ! உன் பின்னாடி சுத்தினதுக்கு வேறவ பின்னால் சுத்தினா இந்நேரம் அவளை கரெக்ட் பண்ணியிருப்பேன்.”

“ போடி ! ராட்சஸி ! என்று கத்திவிட்டு அவன் பறந்துவிட

“ ஏய் டியா ? நில்லுடா நான் உனக்கு ராட்சஸியா ? இனி பின்னாடி வந்த கொன்றுவேன்டா ! “ என்று குழல் கத்திக் கொண்டிருக்க ,

“ ஏய் விடுடி! அவன் ஓடிட்டான் . ஏன்டி உனக்கு இவ்வளவு கோபம் வருது , அதிரடியா இருக்கடி நீ ! கொஞ்சம் உன் கோபத்தை குறை என்று அக்கரையில் ரூபா சொல்ல அதுவே அவளுக்கு கோபத்தை அதிகரிக்க செய்தது “

“ எவடி இவ பொறுமை , அமைதினு பாடம் நடத்திட்டு இருக்குறா ! பையன் பின்னாடி வந்தா பயந்திட்டு பேசாம போகணுமா! அதெல்லாம் முடியாது , நாம அமைதியா போற நாளதான் அவனுங்க இப்டி நம்ம பின்னாடி சுத்திட்டு திரியுறாங்க” என்று அவளிடம் கத்திக் கொண்டே சென்றவளை தொலைவில் இருந்த மரத்தில் அமர்ந்து இருந்த கிளி ரசித்து சிரித்தது.


“ அல்லிராணி ஜென்மம் பல கடந்தாலும் உன் திமிர் அடங்கவில்லையடி.!
உன்னை அடக்க காளை அவன் வந்து கொண்டிருக்கிறானடி தோழியே “
என்று கிளி சொல்லிச் சிரித்தது.

************************************************************

வடுகப்பட்டி கிராமத்தில் புழுதி பறக்க வந்து நின்றது அந்த போலிஸ் வாகனம் . வண்டி நின்றவுடன் அதிலிருந்து கம்பீரமாக, ஆறடி உயரத்தில் , இளமை துடிப்போடு நெஞ்சில் திண்மையோடு , மீசையை முறுக்கியபடி ஆணின் முழு இலக்கணமாக வந்து இறங்கினான் தேவ இனியன் .


“வஞ்சிக்கொடி காத்திருக்க
வஞ்சிக்கொடி தலைவன் இதோ எதிரில்
சொற்போர் புரிந்து
விழிப்போர் நடத்தி
கரங்களில் மாலை சேர்ப்பது எப்போது? “




வியூகம் தொடரும்
 

New Threads

Top Bottom