Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உன் உயிரென நான் இருப்பேன் - 12

“ விக்கி ப்ரோ.. இந்த டிரஸ் எனக்கு நல்லா இருக்கா” என ஒவ்வொரு ஆடையாக அணிவதும் களைவதுமாக நின்ற ஆரவ்வை பார்த்து சிரித்த வண்ணம் இவனது கருத்தை தெரிவித்துக் கொண்டிருந்தான் விக்ரம். இருந்தும் அவனது அலப்பறை தாங்க முடியாமல்,



“டேய்
ஆரவ் முடியலைடா... நிச்சயதார்த்தம் உனக்கில்லை உங்க அண்ணனுக்கு தான்.. நீ என்னடானா மாப்பிள்ளை மாதிரி ரெடியாகிட்டு இருக்க.” என்று அலுத்துக் கொள்ள,



“ப்ரோ
இது மை ப்ரோ நிச்சயதார்த்தம் நானும் பார்க்க சூப்பரா இருக்கனும்ல.. அண்ணியை பர்ஸ்ட் டைம் பார்க்க போறேன்.. அன்ட் அங்கே அண்ணியோட சொந்தக்கார பொண்ணுங்க இருப்பாங்க அதுல யாரையாவது கரெக்ட் பண்ணலாம்னு பார்த்தா விட மாட்டேங்குறீங்களே..” என்றவன் கண்ணாடி முன் நின்று தலையை சீவியபடி தன் உடலை சுற்றி வளைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.



“ஆரவ்வ்வு.. அங்கே
எந்த பொண்ணும் வராது ஏன்னா இது இனியா ஃபேமிலியும் நம்ம ஃபேமிலியும் மட்டும் தான் இருப்போம்..ரொம்ப அலட்டிக்காம வாடா” என அவனை இழுத்துக் கொண்டே போனான். அங்கே அபிநவ்வும் தயாராக இருக்க விக்ரமின் குடும்பமும் வந்திருந்தது.



அபிநவ்விற்கு
தாய் தந்தை யாரும் இல்லாத காரணத்தினால் விக்ரமின் பெற்றோர்களையே தன் பெற்றோராக கருதுகிறான். விக்ரமின் அன்னை ஜெயவாணிக்கு அபிநவ்வின் மேல் எப்போதும் தனிப் பாசம் உண்டு. அபிநவ் அங்கே போனால் போதும் திருமணம் செய்து கொள்ளுமாறு பெரியதோர் விரிவுரையே செய்யத் துவங்கி விடுவார். இந்த நிச்சயதார்த்தம் அவர்களின் தலைமையில் நடக்க வேண்டும் என ஆசை கொண்டவன் அவர்களையும் அழைத்திருந்தான்.



“அக்கா
அபிநவ் சார் வீட்டு கார் வருது..” என்று இனியாவின் அறையை பார்த்து ஏறக்குறைய கத்தும் குரலில் கூறிய வருண் தந்தை ஈஸ்வரனையும் இழுத்துக் கொண்டு படபடப்புடன் வாசலை நோக்கி விரைந்தான். ஈஸ்வரனுக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு ஈடுபாடு இல்லை தான் ஆனாலும் லலிதாவும் வருணும் கேட்டுக் கொண்டதிற்கிணங்க சாதாரணமாக இருந்தார்.



அதை
உள்ளிருந்து கேட்டுக் கொண்டே தன்னறையில் டிரஸ்ஸிங் டேபிள் முன்னமர்ந்து பட்டுப்புடவை கட்டி ஆயத்தமாகிக் கொண்டிருந்த இனியாவுக்கோ வயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்த அந்த கணம் அவளுள்ளே லேசாக படபடப்பு மிக தன்னைத் தானே கண்ணாடியில் பதற்றத்துடன் தன் ஒப்பனைகள் ஒழுங்காய் இருக்கிறதா? என தன் கன்னங்கள் இரண்டையும் வலப்புறமும் இடப்புறமும் திருப்பி சரி பார்த்துக் கொண்டாள்.



அன்று
அவள் அபிநவ்விடம் கூறிய மறுநாளே இனியாவின் அன்னை லலிதாவை சந்திக்க வந்து விட்டான்.



“ஆன்ட்டி
நான் உங்க பொண்ணை லவ் பண்றேன்.. அவளும் தான்.. உங்க மகளை உங்களை விட நான் நல்லா பார்த்துப்பேன்னு நம்பிக்கை இருக்கு.. எங்க காதல் மேல முழு நம்பிக்கை இருக்கு அவளை கண்கலங்காம பார்த்துப்பேன். உங்களுக்கும் அந்த நம்பிக்கை என் மேல இருந்தா இனியா கால் குணமானதும் நிச்சயத்தை வச்சிக்கலாம்..” என்று அபிநவ் கேட்ட விதமும் அவன் கண்களில் தெரிந்த உறுதியும் நம்பிக்கையுமே அவனது காதலின் ஆழத்தை சொன்னது.



அவரும்
தன் மகள் ஆசைக்கு குறுக்கீடாக நிற்க விருப்பம் இருக்கவில்லை. அவருக்கும் காதலை பற்றியும் இணைய முடியாமல் போனால் அது தரும் மரண வலியை பற்றியும் நன்கு தெரியும்.



எப்போது
அபிநவ் “ உங்க மகளை உங்களை விட நல்லா பார்த்துப்பேன். எங்க காதல் மேல முழு நம்பிக்கை இருக்கு ”என்று கூறினாரோ அதற்கு பிறகும் மௌனம் சாதிக்க மனமற்று,



“என்
பொண்ணு சந்தோசம் தான் என் சந்தோசமும்.. எனக்கு ஓகே.” என்று கண்கள் உணர்ச்சி வசப்பட்டிருந்தாலும் மென்மையாக கூறிய தாயை கட்டியணைத்துக் கொண்டாள்.



அதன்
பிறகு அவள் கால் குணமாகி அவள் சாதாரணமாக நடமாட துவங்கிய பின்னர் அடுத்த ஞாயிற்றுக் கிழமை நிச்சயதார்த்தம் என்று கூறியதும் தான் லலிதாவுக்கும் வருணுக்கும் கையும் ஓடவில்லை காலும் ஓட வில்லை. இவர்கள் இருவரின் வற்புறுத்தலின் காரணமாக ஈஸ்வரனும் இந்த வேலைகளில் கலந்து கொண்டார். ஆனால் அவருக்கும் மனதில் ஏதோ ஓர் மூலையில் மகிழ்ச்சி இருந்தது. காரணம் அவருக்கே புரியவில்லை.



இருந்தது
குறுகிய கால இடைவெளியே ஆயினும் தன்னால் இயன்றவரை சிறப்பாகவே செய்தார். சமூகத்தில் பெரிய அந்தஸ்துள்ள குடும்பம் பெரும் வர்த்தகரும் பணக்காரரும் கூட. அவர் தங்கள் மகளை விரும்பி மணப்பதை எண்ணி உள்ளே பெருமை மிகுந்தாலும் அவர்கள் அளவுக்கு தங்களால் செய்ய முடியுமா? என்ன இருந்தாலும் பெண்ணை பெற்றவளாயிற்றே.



அதனால்
விளைந்த சிறிய தாழ்வு மனப்பான்மையும் தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டு, மகளின் சந்தோசத்திற்காக ஆவண செய்திருந்தார்.



அபிநவ்
எளிமையாக அவர்கள் குடும்பமும் தங்கள் குடும்பமும் மட்டுமென நிச்சயதார்த்தத்தை மிக எளிமையாக நடத்தி விடலாம் என்று கூறி விட, மாப்பிளையின் கோரிக்கையை மறுக்க முடியாமல் எளிமையாகவே ஏற்பாடுகள் அனைத்தையும் செய்திருந்தார்.



தெருமுனையில்
காரை தரித்து விட்டு அவன், விக்ரம், அவனது பெற்றோர் மற்றும் ஆரவ் என்று அவர்கள் மட்டும் முகம் நிறைய புன்னகையுடனும் கை நிறைய தட்டு பழத்துடனும் புடவையுடனும் வர வாசலை தாண்டி வந்து இரு கரம் கூப்பி மகிழ்ச்சியுடன் “ வணக்கம் வாங்க.. வாங்க..” என்றவாறு ஈஸ்வரனும் வருணும் உள்ளே வரவேற்றனர்.



அபிநவ்வை
முதன் முறையாக மிக அருகில் கண்ட ஈஸ்வரனுக்கு ஏனோ அவருக்கு ரொம்ப பிடித்துப் போயிற்று. அதைத் தொடர்ந்து வந்த லலிதாவும் அவர்களை வரவேற்க வருண் அபிநவ்வையே பார்த்துக் கொண்டிருந்தான்.



சினிமாக்களில்
வரும் மாப்பிள்ளை போல் பட்டு வேஷ்டியும் சட்டையும் அணிந்து வரக்கூடும் என்ற எதிர்பார்த்திருந்தவனின் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்கும் முகமாக நீல நிற சர்ட்டும் டெனிமும் அணிந்து ரொம்பவே கேஷுவலாக ஸ்மார்ட்டாக வந்திருந்தவனை காண்கையில் தன் அக்காவின் தெரிவு மிகப் பிரமாதம் என்றே அவனுள் எண்ணம் மிகுந்தது.



உள்ளே
வந்த விக்ரமின் தந்தை குருமூர்த்தியும் தங்களை வரவேற்ற இனியாவின் தாய் தந்தையை நோக்கி இரு கரம் கூப்பி “வணக்கம் சம்பந்தி” என்று கூறியமையால் விழிகள் பளபளக்க சந்தோசமாக வரவேற்று அமர வைத்தார் லலிதா.



வந்தவர்கள்
அந்த குட்டி ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்தனர். என்ன தான் இனியாவின் அவர்களின் வீட்டுடன் ஒப்பபிட்டுப் பார்க்க முடியா வண்ணம் சின்னதாக இருந்தாலும் அங்கிருந்தவர்களின் கண்களும் சரி மனங்களும் சரி அலட்சிய பாவனையை காட்டவில்லை.



“என்ன
சம்பந்தி அப்படி பார்க்குறீங்க விக்ரம் ஆர்த்தியை போல அபிநவ்வும் ஆரவ்வும் எங்களோட சொந்த பிள்ளைகள் மாதிரி தான்.” என்று குருமூர்த்தி கூற அதை ஆமோதிக்கும் முகமாக ஜெயவாணியும்,

“ ஆமா.. அபி
எங்க ரெண்டு பேரையும் அம்மா அப்பானு தான் கூப்பிடுவான்.. இந்த ஆரவ் இருக்கானே அவன் என்னை மம்மினு தான் சொல்லுவான்.” என்று இருவரையும் பார்த்து புன்னகைத்தவர் தொடர்ந்து,



“என்
பொண்ணு ஆர்த்தி மட்டும் தான் இல்லை. மாப்பிள்ளை கூட சிங்கப்பூர்ல இருக்கா. அவளுக்கு தான் அபிநவ் கல்யாணம் பண்ணி பார்க்கனும்னு ரொம்ப ஆசை. ஆனால் கல்யாணத்துக்கு எப்படியும் வர்றேன்னு சொல்லி இருக்கா..”என்று தன் குடும்பம் பற்றிய பேச்சை பேசிக் கொண்டே போக லலிதாவுக்கும் வருணுக்கும் சகஜமாக உரையாடும் இவர்களை ரொம்பவும் பிடித்துப் போனது. ஈஸ்வரனுக்கும் தான்.



எல்லோரையும்
விட அபிநவ் தான் அன்று கொஞ்சம் சந்தோசப் படபடப்பில் இருந்தான்.இன்று அவனுடைய நிச்சயதார்த்தம். இத்தனை நாள் தன்னவளுக்காக காத்திருந்தவனின் காதலுக்கு கிடைக்கப் போகும் முதல் பரிசு அவனுடைய நிச்சயதார்த்தம். அவள் எனக்கே எனக்கு மட்டும் சொந்தமாகப் போகிறாள் என்ற எண்ணம் மேலோங்க அவனுடைய கண்கள் தன்னவளை தேடின.



அவளைக்
காண அவன் மனம் தவியாய் தவித்துக் கொண்டிருந்தது. அந்த சோபாவில் அமர்ந்திருந்தவன் கையால் நாடியை தடவிய வண்ணம் தலையை உயர்த்தி ஹாலோடு இருக்கும் அறைக்கதவினுள் கண்கள் அலை பாய அவளை தேடினான்.



அண்ணன்
தலையை உயர்த்தி அறையின் கதவை தாண்டி தேடுவதை கண்ட பக்கத்தில் அமர்ந்திருந்த ஆரவ் தன் உள்ளங்கையால் உதடுகளை துடைப்பது போல் வாயருகே கொண்டு வந்து இடப்புறம் சாய்ந்து அவன் காதருகே “அண்ண்ணா.. கண்ட்ரோல் ..” என்று பற்களை கடித்த வண்ணம் மெல்லிய குரலில் கூற மெல்லத் திரும்பி தம்பியை பார்த்தான். பிறர் கூறும் அளவுக்கா அவள் வருகைக்காக ஏங்குகிறோம் என்று தோன்ற குரலை செருகிய வண்ணம் சாதாரணமாக அமர்வது போல் சாய்ந்து விறைப்பாய் அமர்ந்து கொண்டான் அபிநவ்.



அவள்
ஏன் தான் வந்த பின்பும் தன்னை காண வரவில்லை. தன் முன்னே வர அவளுக்கு அத்தனை வெட்கமா? என அவ் ஆண்மகனின் உள்ளம் ஆதவனை காண நாடும் தாமரை போல ஆவலுடன் காத்துக் கிடந்தது. ஒரு நொடியும் யுகமாய் கடக்க, “எங்கே அத்தை இனியா” என்று கேட்டு விடலாமா என்று கூட ஒரு கட்டத்தில் தோன்றியது.



அவனுக்கு
எதிரே அமர்ந்திருந்த ஜெயவாணி அபிநவ்வின் காத்திருப்பை கண்டு கொண்டவர், இனியாவின் அன்னை லலிதாவை நோக்கி,



“எங்கே
என் மருமகள் சம்பந்திமா..” என்று கேட்க அபிநவ் அவரை நன்றியுணர்வுடன் நோக்கினான்.



“அவ
ரெடியாகிட்டு இருக்காமா.. இதோ இப்போ வருவா” என்றவர் அறைப் பக்கம் “திரும்பி நிராஷாமா இனியாவை அழைச்சிட்டு வா மா” என்று குரல் கொடுக்க இனியாவுக்காக காத்திருக்கும் அபிநவ் போல அங்கே இன்னொரு ஜீவனும் தன் காதலி மதிமுகம் பார்க்க ஆவலாக இருந்தான். ஆமாம் அது விக்ரமே தான்.



அவளை
ஆயத்தப்படுத்தி இரு தோள்களையும் பற்றிய வண்ணம் ஹாலை நோக்கி கூட்டி வர, அன்னப் பதுமை போல நடந்து வந்தாள் அவள். தன்னவனின் முன்னிலையில் கிட்டத்தட்ட மணக்கோலத்தில் செல்வதை எண்ணுகையில் பெண்களுள் பொதுவாக தோன்றும் நாணம் அவளிடம் குடியேறியது.



மெல்ல
தலையை குனித்த வண்ணம் ஹாலுக்கு வந்தவளுக்கு அபிநவ்வை நிமிர்ந்து பார்க்கவே கூச்சமாக இருந்தது. ஆனால் அபிநவ்வோ அந்த பொன் வண்ண ஜரிகையிட்ட பட்டில் அழகுப் பதுமை போல வந்து நின்றவளைக் கண்டு தன் சுற்றம் மறந்தான். அவன் கண்களின் விழித்திரைக்குள் அவள் மட்டுமே விழ காதல் பித்தனாய் மாறிப் போனான் அபிநவ்.



சட்டென
தலையை உயர்த்தி சில வினாடிகளுக்கும் குறைவாக வெட்டும் மின்னல் போல பார்த்த அந்த பார்வையில் என்னென்னவோ தோன்ற அவளைக் கண்டு அவன் நெஞ்சம் அலைபாயத் தொடங்கியது. அவனது நண்பன் விக்ரம் அவனது வழிதலைக் கண்டு தன் முழங்கையால் ஓர் குத்து விட நிஜ உலகுக்கு வந்தான் அபிநவ்.



அங்கிருந்த
ஜெயவாணிக்கு அவளைப் பார்த்ததும் பிடித்து விட அருகில் அமர்த்திக் கொண்டார். ஆரவ்வுக்கும் தன் அண்ணியை ரொம்ப பிடித்துப் போனது. அண்ணன் காதருகே குனிந்தவன், “அண்ணா நீ என்னை அண்ணிக்கு இன்ட்ரடியூஸ் பண்ணவே இல்லையே. பண்ணுண்ணா..” மெல்லத் தணிந்த குரலில் அவனிடம் முறையிட, ரொம்ப முக்கியம் என்று எண்ணியவன்,



“இனியா
ஹீ இஸ் மை பிரதர் ஆரவ்.. லண்டன்ல எம்.பி.பி.எஸ் முடிச்சு இன்டர்ன்ஷி பண்ணிட்டு இருக்கான்.” என்று அவனை அறிமுகம் செய்து வைக்க அவள் இவனை பார்த்து சிநேகமாய் புன்னகைக்க ஆரவ்வும் புன்னகைத்தான்.



அதன்
பிறகு நடந்ததெல்லாமே ஓர் கனவில் நடந்தது போல் தோன்றிற்று அவளுக்கு. அவள் விரல்களை பற்றி போட்டு விட அதே சமயம் அவன் விரல்களை தொட்டு மோதிரம் அணிவித்த பின் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க அவனை போலவே அவளும் முகம் பிரகாசித்து நின்றாள்.



“இன்னும்
ஒரு மாசத்துல கல்யாணத்தை வச்சிக்கலாம் ஆன்.. அத்தை..” என்று அபிநவ் கூற,



“சரிப்பா.. பொண்ணுக்கு
என்னென்ன செய்யனும்னு சொன்னீங்கன்னா..” என்று முறையாக செய்ய வேண்டிய தாய் வீட்டு சீர் பற்றி ஈஸ்வர் மற்றும் லலிதா இருவரும் கேட்க, அவசரமாக இடையிட்டு தடுத்த அபிநவ்,



“அத்தை..என்
இனியாவை மட்டும் கட்டிக் கொடுத்தா எனக்கு போதும்.. என்னோட இனியாவுக்கு எல்லாமே என்னால செய்ய முடியும். அன்ட் அவளுக்கு நான் தான் எல்லாமே செய்வேன் நீங்க இதை பத்தி யோசிக்கவே வேண்டாம்” என்று அவன் கூறிய விதத்தில் லலிதா மற்றும் வருணின் கண்கள் தங்களையும் மீறி குளமாகின. ஏன் ஈஸ்வரனையும் கூட ஒரு கணம் அசைத்துப் பார்த்தது.



“அன்ட்
என் இனியா மூலமா எனக்கும் என் தம்பி ஆரவ்வுக்கும் ஒரு குடும்பம் கிடைச்சிருக்கு அதுவே போதும்..” என அவன் கூற அங்கிருந்த அனைவருமே அவனை வியந்து நோக்கினர். ஆரவ்வுக்கும் கண்கள் கலங்கித் தான் போனது.
 
Last edited:

New Threads

Top Bottom