அத்தியாயம் - 31
இரண்டு நாட்கள் என்ன..? ஒரு மாதம் முயன்றும் ஜீவனால் ஒரு மின்விசிறியை வாங்க முடியவில்லை. பணம் இருந்தால் தானே பொருள் வாங்க முடியும்...? வேலை பார்த்தால் தானே பணம் ஈட்ட முடியும்...? வெட்டி கௌரவத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் குழப்பத்துடனும்... சஞ்சலத்துடனும் ஒரு மாதத்தை கழித்துவிட்டான்.
அடுத்த மாதம் துவங்கியதும் வீட்டுக்காரன் வாடகைக்கு வந்து நின்றான். பவித்ரா வாடகையோடு சேர்த்து கரண்ட் பில்லிற்கும் தன்னிடம் இருந்த பணத்தை துடைத்து எடுத்துக் கொடுத்தாள்.
மறுநாளிலிருந்து மெல்ல மெல்ல வீட்டில் சேமித்து வைத்திருந்த சமையல் பொருட்கள் கரைந்துவிட ஒரு வாரத்தில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அன்று அவன் வெளியே சென்றுவிட்டு வந்து "சாப்பாடு எடுத்து வை..." என்றான்.
"சமைக்கல.."
"ஏன்...?"
"அரிசி, பருப்பு எதுவும் இல்ல..."
அவன் சிறிது நேரம் ஏதும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான். பிறகு "சரி... கொஞ்சம் இரு இதோ வர்றேன்..." என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான். திரும்ப வரும் பொழுது கையில் பார்சலுடன் வந்தான்.
"இந்தா... இதை சாப்பிடு... இதுல ஆயிரம் ரூபாய் இருக்கு தேவையான சாமான் வாங்கிக்கோ..."
"ஏது இது...?" மெல்லியக் குரலில் கேட்டாள்.
"பிரக்காஷோட பணம் இல்ல..." அவளை கூர்மையாகப் பார்த்தபடி சொன்னான்.
"நீங்க சாப்பிட்டிங்களா...?"
"இல்ல... ரெண்டு பேருக்கும் வாங்கிட்டு வந்திருக்கேன்."
"சரி சாப்பிடுங்க..." என்று அவனுக்கு எடுத்து வைத்தாள்.
"நீயும் சாப்பிடு..."
"நீங்க முதல்ல சாப்பிடுங்க..." என்று அவனுக்கு முதலில் எடுத்துவைத்து சாப்பிட சொன்னாள்.
அவன் மறுப்பு ஏதும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்தான். "டைம் ஆச்சு பாரு... நீயும் சாப்பிட்டுவிடு..."
"எனக்கு வேண்டாம்..."
"ஏன்...?"
"ஒரு ரூபாயா இருந்தாலும் நீங்க சம்பாதிச்சு கொடுங்க. அந்த காசுல நான் சந்தோஷமா விஷத்தைக் கூட வாங்கி சாப்பிடறேன். ஆனா அடுத்தவன் காசுல வாங்கின எதுவும் எனக்கு வேண்டாம்"
"ஏய்... கடன்தாண்டி வாங்கியிருக்கேன். திருப்பி கொடுத்துடலாம்" சிறு எரிச்சலுடன் சொன்னான்.
"எப்படி கொடுப்பிங்க..?"
"சம்பாதிச்சுத்தான்"
"அதை இப்பவே செஞ்சா என்ன...?
"நல்ல வேலையா கிடைக்க வேண்டாமா? மளிகைக் கடைல பொட்டலம் போடுறதுக்கும்... ஹோட்டல்ல டேபிள் துடைக்கிரதுக்கும் நான் போக முடியுமா...?"
"போனா என்ன தப்பு...? இப்படி அடுத்தவன்கிட்ட கையேந்துரதுக்கு அது எவ்வளவோ மேல்..." அவள் அழுத்தமாகச் சொன்னாள்.
அவனுக்கு சுவற்றில் முட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதே சமையம் அவளைத் திட்ட சரியான வார்த்தையும் கிடைக்கவில்லை. இயலாமையில் பல்லைக் கடித்தான்.
"என்னதான்டி சொல்ற?"
"இனி நீங்க எப்ப வேலைக்கு போய் சம்பாதிக்கரிங்களோ அப்பதான் என்னோட அடுத்த வேளை சாப்பாடு... இல்லன்னா பட்டினியா இருந்தே சாக வேண்டியதுதான்..."
பவித்ரா சொன்னதை செய்தாள். "அப்படி என்ன உனக்குப் பிடிவாதம்...? செத்தா சாகுடி..." என்று அவன் உதாசினமாக பேசிவிட்டு சென்ற பிறகும் மனம்தளராமல் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தாள்.
ஒரு நாள்... இரண்டு நாள்... மூன்றாவது நாள் காலை படுக்கையிலிருந்து எழ முடியவில்லை. தண்ணீரை மட்டுமே குடித்துக் கொண்டிருந்தவள் சோர்ந்து விட்டாள்.
அவளை கண்டும் காணாமல் சென்றுவந்து கொண்டிருந்தாலும் உள்ளே உறுத்திக் கொண்டுதான் இருந்தது. இரண்டாவது நாளும் அவளுடைய போராட்டம் தொடர்ந்ததை அடுத்து அவனுக்குள் பயம் வந்தது. மூன்றாவது நாள் அவளுடைய உடல்நிலை மோசமடைந்ததும் அவனுடைய பயம் அதிகமானது. "சொன்னா கேளு பவித்ரா... வீணா பிடிவாதம் பிடிக்காத..." என்று சொல்லிப் பார்த்தான். அவள் விட்டுக் கொடுக்கவில்லை.
மூன்றாவது நாள் மாலையே சுயநினைவை இழந்து மயங்கிவிட்டாள். இவனுக்கு சர்வமும் ஒடுங்கிவிட்டது. அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தான். இவளுக்கு ஏதாவது என்றால் நாம் ஏன் இவ்வளவு பதறுகிறோம் என்று அவன் யோசிக்கவே இல்லை. யோசித்தாலும் புரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்... நினைவு திரும்பியதும் மீண்டும் போராடினாள். ட்ரிப்சை கழட்டிவிட்டாள். செவிலியப் பெண்கள் கொடுக்கும் தண்ணீர் ஆகாரத்தை எடுத்துக்கொள்ள மறுத்தாள்.
"ஏண்டி என் உயிரை எடுக்கற? என்னை அசிங்கப் படுத்தரதுல உனக்கு என்ன அவளவு சந்தோஷம்...?" அவன் ஆற்றாமையில் வெடித்தான்.
"வேலைக்கு போறதுல்ல என்ன அசிங்கம்...?" மெல்லியக் குரலில் கேட்டாள்.
"சொன்னா புரிஞ்சுக்கோ பவித்ரா... எனக்கு வெளியே எங்கேயும் வேலைக்கு போய் பழக்கம் இல்ல... அதோட எனக்கு என்ன வேலை தெரியும்... ரொம்ப கீழ் மட்ட வேலைக்கெல்லாம் போனா பாக்கறவன் அசிங்கமா பேசமாட்டானா...? கொஞ்ச நாள் போகட்டும். என்ன செய்றதுன்னு யோசிப்போம்... இப்போ நீ டாக்டர் சொல்றதை கேளு.." தன்மையாக எடுத்துச் சொன்னான்.
"உங்களுக்கு டிரைவிங் தெரியும்ல்ல...?"
"அதுக்கு...? டிரைவரா போகச் சொல்றியா...?" அவன் கவலையுடன் கேட்டான். கூடப் பிறந்தவன் இன்ஜினியர்... அவன் டிரைவரா...? அவனுக்கு உள்ளே வலித்தது.
அவனைப் பார்த்தால் பாவமாகத்தான் இருந்தது. ஆனால் கசப்பான மருந்தைக் கொடுத்தால்தான் நோய் குணமாகும். வேறு வழியில்லை... "போனா என்னங்க தப்பு...? ஆரம்பத்துல தான் ஒரு மாதிரி இருக்கும். அப்புறம் போகப்போக பழகிடும்" ஆதரவாக சொன்னாள்.
"பிச்சை எடுக்கணும்ன்னு நினைக்கிறவனுக்குக் கூடத்தான் போகப்போக பழகிடும்..." நறுக்கென்று சொன்னான்.
நல்வழியைக் காட்டினால் எப்படி நோகடிக்கிறான்...! அவள் பதில் பேசவில்லை.
"என்ன பதிலையே காணும்?"
"வேலைக்கு போறதும் பிச்சை எடுக்கறதும் ஒண்ணா...?" அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டாள். அவனும் அவள் பார்வையை சளைக்காமல் எதிர் கொண்டு நிறுத்தி நிதானமாக,
"அது என்ன வேலைங்கறத பொருத்தது... கையில திருவோடு ஏந்தின வாழ்ந்து கெட்டவனுக்கும் எனக்கும் இப்போ பெரிய வித்தியாசம் எதுவும் இல்ல... ஆனா அதுக்காக நீ ஒண்ணும் பயப்படாதம்மா... அவமானப் பட்டாலும் உன்னை காப்பாத்த வேண்டிய கடமை எனக்கு இருக்கே... செய்றேன்..." என்று சொல்லிவிட்டு மருத்துவமனையிலிருந்து வேகமாக வெளியேறினான்.
பவித்ராவிற்கு அவனுடைய பேச்சின் சாராம்சம் முழுமையாக புரிய சில நொடிகள் ஆனது. என்ன சொல்லிவிட்டு போகிறான்...! வேலைக்குப் போக சம்மதித்துவிட்டானா...! மூன்று நாட்களாக நடந்த அவளுடைய பட்டினி போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டதா...! 'கடவுளே...! கோடி ரொம்ப ரொம்ப நன்றிப்பா...' அவள் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது கையில் பழச்சாறு நிறைந்த கோப்பையுடன் செவிலியப் பெண் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்து,
"இந்தாம்மா இதைக் குடி..." என்றாள்.
ஜீவன் சொல்லித்தான் இந்த பெண் வந்திருக்கிறாள்... அவனுக்கு விருப்பம் இல்லாத வேலையை செய்தாக வேண்டும் என்கிற நெருக்கடிக்கு அவனை ஆளாக்கி காரியம் சாதித்தவள் அவள். அந்த கோபத்தோடுதான் அவன் இங்கிருந்து வெளியேறினான். அப்படி இருந்தும் அவளுடைய நலன் கருதி பழச்சாறுக்கு ஏற்பாடு செய்திருக்கிறான். 'இவனுக்கா நம் மீது வெறுப்பு...! இவனுக்கா நம்மை பிடிக்கவில்லை...! இல்லை... அவன் மனம் மாறியிருக்கிறது...' நெகிழ்ச்சியில் அவள் கண்கள் கலங்கினாலும் புன்னகையில் முகம் மலர்ந்தது.
ஜீவன் கால் டாக்ஸி டிரைவராக சேர்ந்துவிட்டான். கடுமையான வேலை என்றாலும்... மாதம் பதினைந்தாயிரம் சம்பளம்... தினமும் பேட்டா வேறு தனி... சம்பாதிப்பதில் இருக்கும் சுகம் என்ன என்பதை அவன் அறிந்துக் கொண்டான். தன்னுடைய சொந்த உழைப்பில் கிடைத்த ஒற்றை ரூபாயை செலவு செய்யும் பொழுது உண்டாகும் மகிழ்ச்சியை ருசிப் பார்த்துவிட்டான். தன் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து மனைவியிடம் கொடுக்கும் பொழுது ஏற்படும் கர்வத்தை அனுபவிக்கக் கற்றுக் கொண்டான். அடுத்தவனிடம் வேலை செய்வது அவமானம் என்று எண்ணியிருந்த மூடத்தனத்தை ஏறக்கட்டிவிட்டவன் இரவில் குடிக்கும் பழக்கத்தை மட்டும் தொடர்ந்துக் கொண்டிருந்தான்.