"இண்டியாஸ் எங் வாய்ஸ்" - மிகப் பிரபலமான இந்திய தேசிய தொலைகாட்சி ஒன்று பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திக் கொண்டிருக்கும் ஒரு டேலண்ட் ஷோ... இதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் இளைஞர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய குரல் வளத்தை பாடல்களின் மூலம் நிரூபித்து பரிசுகளையும் வானளாவிய புகழையும் வாரிச் செல்வது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் அள்ளிக் கொடுக்கும் பணத்தில் பிரம்மாண்டமாய் உருவாகும் இந்த நிகழ்ச்சி, காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை எங்கும் பிரபலம்.
2013-ம் ஆண்டுக்கான நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டு, முதற்கட்ட தேர்வே சில நூறு பார்வையாளர்களுடன் பிரம்மாண்டமாய் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு போட்டியாளருக்கும் அடையாள எண்ணை பேட்சாக ஒட்டி ஸ்டேஜுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
பிரபன் சிங் - ஆளுமையான குரலுக்கு சொந்தக்காரன். ஷர்மிலி - தித்திக்கும் தேன் குரலுக்கு சொந்தக்காரி. இந்த இருபெரும் வடநாட்டுப் பாடகர்களுக்கு மத்தியில், தன்னுடைய வசீகரக் குரலால் மிகக் குறுகிய காலத்தில் உலகத்தின் பார்வையை தன் பக்கம் திரும்பிய, கார்த்திக் வேணுகோபால் என்னும் தென்னிந்திய இளம் பாடகரும் நடுவராக அமர்ந்திருந்தான்.
ஸ்டேஜில் வந்து நிற்கும் ஒவ்வொரு போட்டியாளரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அவர்களுடைய பாட்டை கேட்டு, அவர்களை தேர்வு செய்தும் நிராகரித்தும் தங்களுடைய வேலையை சரியாக செய்துக் கொண்டிருந்தார்கள் நடுவர்கள்.
அடுத்ததாக... ஒரு பெண் மேடையேறினாள். தலையை பாய் கட் அடித்திருந்தாள். ஜீன்ஸ் பேண்டும் டி-ஷர்ட்டுக்கு மேல் லைட் ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். பார்க்க மொழுமொழுவென்று மெழுகு பொம்மை போல் அழகாக இருந்தாள். அவள் மைக்கை பிடித்திருந்த விதமே அவளுடைய நம்பிக்கையை பறைசாற்றியது.
"ஹாய் எங் லேடி... டெல் மீ... வாட்ஸ் யுவர் நேம்?" - 'வணக்கம் இளம் பெண்ணே... சொல்லுங்க... உங்க பேர் என்ன?' - பிரபன் சிங்.
"ஹாய்... மை நேம் இஸ் ஸ்ருதி... ஐம் ஃபிரம் பஞ்சாப்..."
"ஓகே... என்ன பண்ணறீங்க?"
"ஐம் எ மெடிக்கல் ஸ்டூடன்ட்..."
"வெரி குட்... என்ன பட்டுப் பாடப் போறீங்க இன்னைக்கு?"
"எ தமிழ் சாங்..."
"கோ ஆன்... ஆல் தி பெஸ்ட்..." - வாழ்த்தினான் பிரபன்.
ஸ்ருதி தயாரானாள்... மியூஸிக் ஆரம்பமானது... சரியான பிட்சில் பாடலைத் துவங்கினாள்...
"தில்ருபா... தில்ருபா... காதல் நிலவே தில்ருபா...
தில்ருபா... தில்ருபா... காதல் உறவே தில்ருபா..."
நல்ல எனர்ஜிட்டிக்கான பாடல்... முடிந்த அளவுக்கு உற்சாகமாக... முழு எனர்ஜியோடு பாடினாள். யார் என்ன ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை பற்றியெல்லாம் அவளுக்கு கவலை இல்லை. அவள் எதையும் கவனிக்கவில்லை... அவளுடைய முழு கவனமும் அவளுடைய குரலில் மட்டும்தான் இருந்தது... பாடல்... குத்தாட்டம்... குதூகலம்... எனர்ஜி... ஆடியன்ஸ் என்ஜாய்மென்ட்... இவைகள் மட்டுமே அவளுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்தன. தன்னை ஒரு ராக் ஸ்டாராக உருவகப்படுத்திக் கொண்டு, படு உற்சாகமாக பாடி முடித்துவிட்டு நடுவர்களை பார்த்தாள். ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை.
'வாட்ஸ் ராங்!' - தனக்குள் கேட்டுக் கொண்டு பார்வைக்காளர்கள் பக்கம் பார்வையை திருப்பினாள். அவள் விரும்பும்படியான எதிரொலிப்பு அங்கேயும் இல்லை... மீண்டும் அவளுடைய பார்வை நடுவர்கள் பக்கம் திரும்பியது.
முதலில் வாய் திறந்தது கார்த்திக் தான்... "வொர்ஸ்ட் சாங் ஐ எவர் ஹியர்ட்..." - 'நா கேட்டதுலேயே மிக மோசமான பாடல்...' - ஸ்ருதியின் கண்கள் விரிந்தன.
"யு ஜஸ்ட் டெல் மீ ஒன்திங்... இப்போ நீங்க என்ன பண்ணுனீங்க? பாடினேன்னு மட்டும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்... இட் வாஸ் ஆவ்ஃபுல்... ஆர்க்கஸ்டரா ஒருபக்கம் போயிட்டு இருக்கு... நீங்க ஒரு பக்கம் கத்திக்கிட்டு இருக்கீங்க... ப்ளீஸ் டோன்ட் கில் மியூசிக்..." - இசையின் மீது அவனுக்கிருந்த அதீத காதல் கடுமையான வார்த்தைகளாய் வந்து விழுந்தன.
ஸ்ருதி திகைப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய சீரற்ற சுவாசமும் துடிக்கும் உதடுகளும் கேமிராவில் க்ளோசப்பில் பதிவாகிக் கொண்டிருந்தன. கார்த்திக்கின் கோபம் சற்று மட்டுப்பட்டது.
"எனக்கு புரியுது.... உங்களுக்கு மியூசிக் மேல இன்ட்ரெஸ்ட் இருக்கு. பட் இது உங்களுக்கான ப்ரஃபஷன் இல்ல..." - "நா எந்த பிரபஷனை சூஸ் பண்ணனும்னு நீங்க எனக்கு சொல்ல தேவையில்லை மிஸ்டர் கார்த்திக் வேணுகோபால்" - அவன் முடிப்பதற்குள் குரல் நடுங்க, முகம் சிவக்க, நாசியை விடைத்துக் கொண்டு படபடவென்று பொரிந்தாள் ஸ்ருதி.
மொத்த ஆடிட்டோரியமும் அதிர்ச்சியில் உறைந்து போனது. "ஓ... மை... காட்!!!" - பிரபன் வாயைப் பிளந்தான்.
"ஹௌ டேர் ஷி!!!" - ஷர்மிலியின் விழிகள் தெறித்து விழுவது போல் விரிந்தன.
கார்த்திக் புருவம் உயர்த்தி, அலட்சியமாக உதட்டை சுழித்தான். அவனுடைய ரியாக்ஷன் அவளை இன்னும் கடுப்பாக்கியது.
"சில வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி ஒரு ஸ்டேஜ்ல... முதல் தடவ நீங்க ஆடிஷனுக்கு வந்து நின்னப்போ எப்படி பாடுனீங்கன்னு நியாபகம் இருக்கா உங்களுக்கு?" - விழிகளை உருட்டியபடி மூச்சுவிடாமல் பேசினாள்.
மிகவும் பலவீனமான வாதம்... அவனுடைய பாடலை இவள் பாடலுடன்... இல்லையில்லை... கத்தலுடன் ஒப்பிடுகிறாள்! ஆனாலும் அவளுடைய துணிச்சல் அவனை மிரள வைத்தது. வெளியேற துடிக்கும் புன்னகையை மறைத்துக்கொண்டு, "பெட்டர் தென் யு..." என்றான் இலகுவாக.
அவள் அவ்வளவு தூரம் டென்ஷனாகி கத்திக் கொண்டிருக்கிறாள். அவனோ ஒரே வார்த்தையில் இலகுவாக அவளுடைய பிபியை எகிற செய்தான்.
அவளும் விடவில்லை... "ஓ யா... யு ஆல்வேஸ் திங்க் யு ஆர் பெட்டர்..." - 'ஓ ஆமாம்... நீங்க எப்பவுமே உங்களைத்தான் பெட்டரா நினைப்பீங்க...' - என்று நக்கலாகக் கூறிவிட்டு உதட்டை சுழித்தாள். கூட்டம் சலசலத்து. அனைவரும் ஸ்ருதியை வேற்று கிரக வாசி போல் பார்த்தார்கள்.
"ஸ்ருதி.... ஸ்ருதி... லிசன் டு மீ... யு காண்ட் டாக் டு அஸ் லைக் திஸ்" - இடையில் புகுந்து அறிவுரை கூறினாள் ஷர்மிலி.
"யு கைஸ் காண்ட் டாக் டு மீ லைக் திஸ்" - அதே அறிவுரையை அவளுக்கு திருப்பிக் கொடுத்தாள் ஸ்ருதி.
"நீதான் இங்க வந்து எங்க முன்னாடி பாடணும்னு முடிவு பண்ணின... சோ எங்களோட கமெண்ட்ஸையும் நீ அக்செப்ட் பண்ணித்தான் ஆகணும்" - கார்த்திக் கண்டித்தான்.
"ஓ ரியலி...! அப்போ நாம ஒன்னு பண்ணலாம்... நீங்க இங்க வந்து பாடுங்க. நா அங்க வந்து உட்கார்ந்து உங்களை ஜட்ஜ் பண்ணறேன். அண்ட் ஐ ப்ராமிஸ் யு... நீங்க என்னை கமெண்ட் பண்ணினதை விட மோசமா நா உங்களை கமெண்ட் பண்ணுவேன்" - சவால்விட்டுவிட்டு அடுத்த தாக்குதலுக்கு தயாராக நின்றாள்.
"ஓ காட்!" - சிரித்தான் பிரபன் சிங். அவளுடைய பேச்சு எக்குத்தப்பாக இருந்தாலும் அவளுடைய ரியாக்ஷன்ஸ் கியூட்டாக இருந்ததாலோ என்னவோ அவள் மீது அவனுக்கு கோபம் வரவில்லை.
கார்த்திக்கிற்க்கோ அவளை இன்னும் வம்பிழுத்து கதறவிட வேண்டும் போலிருந்தது.
"நீ பாடணும்... நா ஜட்ஜ் பண்ணனும்... அதுதான் இங்க பேட்டன்... ஆம் ஐ கிளீயர்?" - வலுக்கட்டாயமாக சிரிப்பது போல் பாவனை செய்து அவளை வெறுப்பேற்றினான்.
"நீங்க பாடுங்க... நா ஜட்ஜ் பண்ணறேன்... பேட்டனை கொஞ்சம் மாத்தலாம்... டூ யு ஹியர் மீ?" - அவன் எப்படி சொன்னானோ அதே தொனியில் சொல்லிவிட்டு அவனைப் போலவே உதட்டை இழுத்து பிடித்து வலுக்கட்டாயமாக சிறிதட்டுவிட்டு உடனே முறைத்தாள். பதிலுக்கு பதில் திருப்பிக் கொடுத்துவிடும் வேகம் அவளிடம் இருந்தது.
"ஸ்ருதி... நீ ஒரு விஷயத்தை அக்செப்ட் பண்ணிதான் ஆகணும்... நீ பாடினது நிச்சயமா நல்லா இல்ல..." - பிரபன்.
"இருக்கலாம்... ஆனா அதுக்காக நீங்க யாரும் என்கிட்ட ரூடா பேசணும்ங்கற அவசியம் இல்ல..."
"எஸ்... ஐ அக்ரி... வி காண்ட் பி சோ ரூட்... வி... ஆர்... சாரி... ஆல்ரைட்?" - சிறு பெண்தானே என்கிற கரிசனத்துடன் சமாதானமாக கூறினான் பிரபன். அவனுக்கு அவளை மிகவும் பிடித்திருந்தது.
பிரபனுடைய சமாதான பேச்சிற்கு ஸ்ருதி ரியாக்ட் செய்வதற்குள் இடைப்புகுந்தான் கார்த்திக்.
"உன் பாட்டைவிட பேச்சு பெட்டரா இருக்கு... ஆனா அதை கேட்டுட்டு இருக்க எங்களுக்கு நேரம் இல்ல..." என்று கூறிவிட்டு சிகப்பு பஸரை அழுத்தினான்.
மீண்டும் ஒரு போர் துவங்கப் போகிறது என்கிற எண்ணத்துடன், "நாட் அகைன்..." என்று ஷர்மிலி கூறினாள். அதே நொடி, கார்த்திக்கைப் பார்த்து நுனிநாக்கை துருத்தி பழிப்புக் காட்டினாள் ஸ்ருதி. நொடிக் கூட தாமதிக்காமல் அவளை அப்படியே இமிட்டேட் செய்தான் கார்த்திக். முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு பேக் ஸ்டேஜிற்கு திரும்பினாள் ஸ்ருதி.
ஸ்ருதி ஆடிஷனை முடித்துவிட்டு வந்த பிறகு, கரைபுரண்டோடும் உற்சாகத்துடன் துள்ளிக் குதித்துக் கொண்டு ஸ்டேஜிற்கு ஓடினாள் அடுத்த போட்டியாளர்.
மேடைக்கு சென்றவள் போட்டியாளர்கள் நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல், கெக்க-புக்கவென சிரித்துக் கொண்டு குடுகுடுவென்று கார்த்திக்கிடம் ஓடினாள்.
"ஓ... கார்த்திக்!!! ஐ லைக் யு சோ மச்... எனக்கு உன்னோட குரல் பிடிக்கும்... உன்னோட கண்ணு பிடிக்கும்... உன்னோட சிரிப்பு பிடிக்கும்... உன்னோட பேச்சு பிடிக்கும்... ஆஹா... கார்த்திக்...!!! யு ஆர் ஹியர்...!!! என் முன்னாடி...! ஐ காண்ட் பிலீவ் திஸ்... ஓ மை காட்! ஐ லவ் யு... லவ் யு சோ மச் கார்த்திக்..." - அவள் செய்த ஆர்ப்பாட்டத்தில், நடுவர் இருக்கையில் அமர்ந்திருந்த மூவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
"ஓ கார்த்திக்!!! எவ்வளவு இனிமையான சிரிப்பு உனக்கு! நீ சிரிச்சா என்னால மூச்சே விட முடியாது!" என்று கூறிக் கொண்டே அவளும் கலகலத்து சிரித்தாள்.
அவளுடைய வெகுளித்தனமான பேச்சும் செய்கையும் அவர்களை வெகுவாய் கவர்ந்தது... அதை ரசித்து சிரித்தார்கள். அதே நேரம் அவன் மீது அவளுக்கு அதீத அன்பிருக்கிறது என்பதையும் உணர்ந்தார்கள்.
பேக் ஸ்டேஜில் தன்னுடைய பொருட்களை சேகரித்து பையில் அடுக்கிக் கொண்டிருந்த ஸ்ருதி, திரையில் அந்த பெண் அடித்த லூட்டியைப் பார்த்துவிட்டு கடுப்பானாள். செய்து கொண்டிருந்த வேலையை அம்போவென்று விட்டுவிட்டு திரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"நா உனக்காக ஒரு கிபிட் கொண்டு வந்திருக்கேன்" - அந்த பெண் ஒரு டைரியை எடுத்து கார்த்திக்கிடம் கொடுத்தாள்.
அதில் நிறைய கவிதைகள் எழுதப்பட்டிருந்தன. அவனுடைய பல போட்டோக்கள் கத்தரித்து ஒட்டப்பட்டிருந்தன. பக்கங்களை புரட்டி அனைத்தையும் ஒருவித எஸ்க்ஸைட்மெண்ட்டுடன் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.
"நானே எழுதினேன்... எல்லாமே உனக்கு தான்..." - கபடமில்லாமல் சிரித்தாள்.
"வாவ்... ஐ லைக் இட்..." - சந்தோஷப்பட்டான் கார்த்திக்.
உடனே அவன் கையிலிருந்து அந்த டைரியை பிடுங்கி, "நானும் பார்க்கறேன்... ஷோ மீ மேன்" என்று ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் பார்த்தான் பிரபன்.
கலர் கலராக கவிதைகள் எழுதப்பட்டிருந்தன. பலவித ஜிகினா காகிதங்களை வெட்டி ஒட்டி கவிதையையும் அவனுடைய புகைப்படத்தையும் அலங்கரித்திருந்தாள். அதை பார்க்கப் பார்க்க அவனுக்கு இன்னும் சிரிப்பு வந்தது. சிரித்துக் கொண்டே, "உனக்காக நா ஒரு கவியதையை படிச்சு காமிக்கிறேன்" என்று கூறிவிட்டு ஒரு கவிதையை வாசித்தான்.
"உன்னை நினைத்தால்
என் முகத்தில் புன்னகை...
டிவியில் உன்னை பார்த்தால்
என் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி...
உன்னைப் பற்றி பேசினால்
என் உடம்பெல்லாம் சிலிர்ப்பு...
நீ அருகில் இருந்தால்
உன்மேல் விழுகிறேன் காதலில்!" - ஒவ்வொரு வரியையும் பிரபன் படிக்கப் படிக்க, சிரித்துத் தள்ளிவிட்டான் கார்த்திக்.
அவன் மட்டுமல்ல ஷர்மிலியும் சிரிப்பில் மண்டையை உடைத்துக் கொண்டாள். அவளோடு இனைந்து அந்த பெண்ணும் கூட சிரித்தாள். அந்த புத்தகத்தில் இருந்த அனைத்து கவிதைகளும் இந்த தொனியில் தான் இருந்தன.
சற்று நேரம் அவளுடைய அப்பாவித்தனத்தை ரசித்துவிட்டு அவள் என்ன பாடப் போகிறாள் என்று கேட்டார்கள்.
காதல் ரசம் சொட்டும் ஒரு பாடலை கூறிவிட்டு, அதை கார்த்திக்கிற்காக பாட வேண்டும் என்றும் கூறினாள். மற்ற இருவரும் நடுவர் இருக்கையிலிருந்து எழுந்துவிட்டார்கள்.
"இந்த பாட்டு உனக்கான பாட்டு... நாங்க தொந்தரவு பண்ண விரும்பல... என்ஜாய்" என்று சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்துவிட்டார்கள்.
"ஓ... நோ... ஸ்டே மேன்... ஷர்மிலி..." - அவன் தடுத்துப் பார்த்தான்... ஆனால் அவர்கள் கேட்கவில்லை. "என்ஜாய்... என்ஜாய்..." என்று கிண்டலடித்துக் கொண்டே தள்ளி நின்று அந்த பெண்ணின் பாடலை ரசித்தார்கள்.
அவள் அவனுக்காகவே பாடினாள். ஆரம்பத்தில் சற்று சங்கடத்துடன் அமர்ந்திருந்த கார்த்திக் பிறகு இயல்பாகி அவளுடைய பாடலை கவனித்தான்.
சுமாராக பாடினாள். முடிவெடுக்கும் நேரத்தில், "ஹேய்... வாங்கப்பா..." என்று மற்ற இருவரையும் அழைத்தான்.
"நோ... நோ... அந்த பாட்டு உனக்கானது... நீதான் முடிவெடுக்கணும். உன்னோட உரிமையை நாங்க பறிக்க விரும்பல" என்று கூறிவிட்டு இருவரும் டீ குடித்தபடி ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
கார்த்திக் சற்று நேரம் யோசித்தான். அவளுடைய பாடல் சுமாராகத்தான் இருந்தது... ஆனால்?
"வாட்ஸ் யுவர் டிசிஷன் மேன்?" - ஷர்மிலி.
"கண்டிப்பா எஸ் தான்... ஷி இஸ் கோயிங் டு தி நெஸ்ட் லெவல்...." என்று கூறியபடி பச்சை பஸரை அழுத்தினான்.
"ஓ..." வென்று கூச்சலிட்டபடி சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள் அந்த பெண். ஓடிவந்து அவனை கட்டிக் கொண்டாள். கார்த்திக் அவளை கனிவாக நடத்தினான்.
"நீ உன்னோட இதயத்திலிருந்து பாடின... என்னால உன்னை நிராகரிக்க முடியல... நெஸ்ட் ரௌண்டுகு இன்னும் நல்லா தாயாராயிட்டு வா..." என்று வாழ்த்தி அனுப்பினான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ருதியின் உள்ளம் பொங்கிப் பொங்கி அடங்கியது... கார்த்திக்கின் மீதும் அந்த பெண்ணின் மீதும் ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. அவனை எதுவும் செய்ய முடியாது... ஆனால் இவளை...!!!
அவசரஅவசரமாக பையில் வைக்க வேண்டிய பொருட்களையெல்லாம் வைத்து ஜிப்பை மூடினாள். சந்தோஷமாக ஸ்டேஜிலிருந்து இறங்கி பேக் ஸ்டேஜிற்கு வந்தாள் அந்த பெண். அதற்காகவே காத்திருந்த ஸ்ருதி, அவளுக்கு அருகில் சென்று கையிலிருந்த பையை முதுகில் மாட்டுவது போல் வேகமாக தூக்கி விசிறி, செம்மையாக அவளுக்கு ஒரு அடி கொடுத்தாள்.
'ஐயோ அம்மா...' என்று அவள் அலறி கொண்டு கீழே விழுந்த போது இவளுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. இதே போல் அவனுக்கும் ஒன்று கொடுத்தால் நன்றாக இருக்கும்... அந்த காட்சியை கற்பனையில் கண்டு மகிழ்ந்தபடி அங்கிருந்து கிளம்பினாள்.
🎼🎼🎼🎼🎼
"இண்டியாஸ் எங் வாய்ஸ்" நிகழ்ச்சியில் ஸ்ருதி பங்கேற்ற பகுதி ஒளிபரப்பப்பட்ட அன்று, கார்த்திக் மற்றும் ஸ்ருதியின் வாக்குவாதம் வெகு பரபரப்பை உண்டாக்கியது. இறுதியில் இருவரும் ஒருவருக்கொருவர் பழிப்புக் காட்டிக்கொண்டது வெகுவாய் அனைவரையும் ஈர்த்தது. ஓவர் நைட்டில் ஒபாமா ஆவது என்பார்களே... அது போல ஒரே நாளில் ஃபேமஸானாள் ஸ்ருதி.
நெட்டீசன்கள் மீம்ஸ் போட்டுத் தள்ளினார்கள். அவளுடைய குரல் டப்ஸ்மாஷ் செய்பவர்களுக்கு புது விருந்தானது. ஒரே இரவில் ஓர் ஆர்மி உருவாகி அவளை தலைவியாக்கியது. அவளுடைய பழிப்புக்காட்டிய முகம்... அவளுடைய பேச்சு... அவளுடைய கியூட்டான ரியாக்ஷன் அனைத்தையும் கொண்டாடினார்கள்...
இன்னொரு பக்கம் கார்த்திக்கை கொண்டாடுகிறவர்கள் ஸ்ருதியை வெறுத்தார்கள். அட்டேன்ஷன் ஸீக்கர்... பப்லிசிட்டி பைத்தியம் என்று தூற்றினார்கள். அவள் பாடிய சுமாரான பாடலை கர்ணகொடூரமாக சித்தரித்து காமிடி வீடியோ செய்து உலவவிட்டார்கள்.
மொத்தத்தில் சில காலம் வரை ஸ்ருதியும் கார்த்திக்கும் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாப்பிக்காக இருந்தார்கள்.
ஸ்ருதிக்கு சிறு வயதிலிருந்தே திட்டு வாங்குவது பிடிக்காது. அதனால்தான் அன்று கார்த்திக்கின் அதிகப்படியான பேச்சை சகித்துக்கொள்ள முடியாமல் எதிர்த்துப் பேசிவிட்டாள். அந்த பேச்சு தன்னை இத்தனை தூரத்திற்கு துரத்திக் கொண்டு வரும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
உணர்ச்சிவசப்பட்டு இரு தனி நபர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தை ஒரு கன்டென்டாக்கி டெலிகாஸ்ட் செய்து, இப்படி பலருடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் அவளை ஆளாக்கிவிட்டது அந்த சேனல். இதற்காகவே அந்த நிகழ்ச்சியின் டைரக்டரை நேரில் பார்த்து கிழிக்க வேண்டும் என்று ஆவேசம் வந்தது அவளுக்கு. ஆனால் அதையும் ஒரு கன்டென்டாக்கி டெலிகாஸ்ட் செய்துவிட்டார்கள் என்றால் என்ன செய்வது என்கிற பயத்தில் அமைதியாக இருந்தாள்.
ஆனால் சமூக வலைத்தளங்களை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை. எதிர்மறை கருத்துக்கள் அவளை பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியது. எனவே அவளுடைய அனைத்து அக்கவுட்ஸையும் கிளோஸ் செய்துவிட்டு பழையபடி வாழ்க்கையை தொடர்ந்தாள்.
2014-ம் ஆண்டுக்கான நிகழ்ச்சி துவங்கியது. முதற்கட்ட தேர்வில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து கலந்து கொண்டார்கள். இறுதியாக ஒரு பெண் வந்தாள். அவளை பார்த்ததுமே ஷர்மிலியின் புருவம் சுருங்கியது.
"சொல்லும்மா... உன் பேரு என்ன?" - பிரபன் கேட்டான்.
சட்டென்று நினைவு வந்தவளாக, "ஹேய்... ஐ நோ யு..." என்று சத்தமிட்டாள் ஷர்மிலி.
கார்த்திக்கிற்கு அவளை அடையாளம் தெரியவில்லை.
"யாரு?" என்று கேட்டான்.
"உனக்கு தெரியலையா!" - ஆச்சரியமாகக் கேட்டாள் ஷர்மிலி.
"நோ..."
"நீ கண்டுபிடிச்சிட்டியா?" - பிரபனிடம் கேட்டாள்.
அவனும் சற்றுநேரம் யோசித்துவிட்டு, "பார்த்த மாதிரி இருக்கு... சரியா நியாபகம் வரல" என்றான்.
"ஓ காட்! எப்படி மறந்தீங்க!" என்று அவள் ஆச்சரியப்படுப் போதே, 2013 ம் ஆண்டு எடுத்த வீடியோ ஸ்டேஜில் இருந்த திரையில் ஒளிபரப்பப்பட்டது.
"நா எந்த பிரபஷனை சூஸ் பண்ணனும்னு நீங்க எனக்கு சொல்ல தேவையில்லை மிஸ்டர் கார்த்திக் வேணுகோபால்" - முதல் டயலாக்.
வீடியோ ஒளிபரப்பப்பட்ட கணமே கூட்டத்தில் சலசலப்பும் கைதட்டல் ஒலியும் எழுந்தது. அவர்களுக்கும் புரிந்துவிட்டது என்பது தெரிந்தது.
"சில வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி ஒரு ஸ்டேஜ்ல முதல் தடவ நீங்க ஆடிஷனுக்கு வந்து நின்னப்போ எப்படி பாடுனீங்கன்னு நியாபகம் இருக்கா உங்களுக்கு?" - இரண்டாவது டயலாக்...
"ஓ காட்!!!" - கார்த்திக் வாய்விட்டு சிரித்தான்.
"ஸ்ருதி!!!" - அவளை குறிப்பிட்டு கத்தினான் பிரபன்.
அந்த வீடியோ திரையில் முடியும் வரை அனைவருமே அதை ரசித்து பார்த்தார்கள். வீடியோ முடிந்ததுமே, "கார்த்திக்... நீ எப்படி மறந்த... நீதானே முக்கியமான ஆள்... உங்க ரெண்டுபேரோட ஆர்கியுமென்ட்ஸும் தானே பயங்கரமா ட்ரோல் ஆச்சு" என்று உற்சாகக் குரலில் கேட்டுவிட்டு சத்தமாக சிரித்தாள் ஷர்மிலி.
"எஸ்... பட் ஷி புட் ஆன் வெயிட்... அண்ட்... முடி கூட லங்கா வளர்ந்துடிச்சு... ஷி லூக்ஸ் டோட்டலி டிஃப்ரெண்ட்" - நம்பமுடியாத ஆச்சரியத்துடன் கூறினான். அவளிடம் நிறைய மாற்றம் இருந்தது என்பதும் உண்மைதான்.
"சோ ஸ்ருதி... ஹௌ ஆர் யு?" - பிரபன்
"குட்..."
"என்ன பாட்டு பாட போறீங்க?"
"தி சேம் சாங்... லாஸ்ட் இயர் பாடினது..."
நடுவர்கள் மட்டுமல்ல... பார்வையாளர்களும் கூட ஆச்சரியக் கூச்சலிட்டார்கள்.
அனைவருக்குமே அவள் எப்படிப் பாடப் போகிறாள் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது. மியூசிக் துவங்கியது. இந்த முறை நிதானமாக அதிகப்படியான கூச்சல் இல்லாமல் நன்றாகவே பாடினாள்.
"நல்ல முன்னேற்றம்... குட்..." - பிரபன் பாராட்டினான். ஷர்மிலிக்கும் அவளுடைய பாடல் பிடித்திருந்தது. அவளும் கட்டைவிரலை உயர்த்தினாள். இருவருமே அவளை அடுத்த ரௌண்டிற்கு தேர்வு செய்தார்கள்.
கார்த்திக் தலையை குறுக்காக அசைத்தான். "ஐம் நாட் கன்வென்ஸ்ட்" என்றான்.
"ஆர் யு ஸூர்?" - பிரபன்.
"நிச்சயமா... மை ரிசல்ட் இஸ்..." என்று சிகப்பு பசரை அழுத்தினான்.