அத்தியாயம் - 5
"குட் மார்னிங் சார்..."
"மார்னிங்... ரிப்போர்ட் ரெடி பண்ணிட்டிங்களா?"
"எஸ் சார்..." என்று சொல்லி கையில் வைத்திருந்த ஃபைலை மேஜை மீது வைத்து ஜெயச்சந்திரன் பக்கம் தள்ளினார் அறிவழகன்."
அதை கையில் எடுத்துக்கொண்டு மறுகையால் அவரை உட்காரும் படி சைகை செய்தான்.
அந்த ஃபைல் அவர்கள் சந்தேகப்படும் மூன்று ஆட்களை பற்றிய விபரங்களை கொண்டிருந்தது.
பெயர் : செல்வம்
வேலை : பொது இடங்களில் சுண்டல் கடலை விற்பது.
சொந்த ஊர் : மன்னார்குடி
பெயர் : குமார்
வேலை : மெக்கானிக்
சொந்த ஊர் : மன்னார்குடி
பெயர் : முத்து
வேலை : தனியார் பள்ளி ஆசிரியர்
சொந்த ஊர் : மன்னார்குடி
மற்றும் சில விபரங்களும் சொல்லப்பட்டிருந்தன.
முதலில் அவர்களின் சந்தேக பார்வையில் முத்து இல்லை. ஆனால் குமாரும் முத்துவும் ஒன்றாக தங்கியிருக்கிறார்கள். செல்வம், குமாருடனும் முத்துவுடனும் அடிக்கடி சந்தேகப்படும் படியாக சுற்றுப்புறத்தை நோட்டம் விட்டுக்கொண்டே பேசுகிறான். அதனால் இவர்கள் மூவரும் தற்போது காவலர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்கள். அதை அறியாத அந்த மூவரும் எப்போதும் போல் சுதந்திரமாக செயல் பட்டார்கள்.
அந்த விபரங்களை படித்த ஜெயச்சந்திரன் அறிவழகனுக்கு சில குறிப்புகள் கொடுத்து அவரை அனுப்பினான்.
____________________________________________________________
"கெட்டிமேளம் கெட்டிமேளம் " என்று ஐயர் குரல் கொடுக்க... தவிலும் நாதஸ்வரமும் முழங்க, பெற்றவர்களும் பெரியவர்களும் ஆசீர்வதிக்க, சுபயோக சுப தினத்தில் ஜெயச்சந்திரன் சாருமதியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை கட்டினான் .
அவளுகு எதையோ சாதித்துவிட்ட திருப்த்தி. "கடைசியில் இந்த வாழ்க்கை எனக்கு அமைந்தே விட்டதே.... " சந்தோஷ மிகுதியில் அவளுக்கு கண்களின் ஓரம் கண்ணீர் துளிர்த்தது. அதை யாரும் அறியாமல் தட்டிவிட்டுவிட்டு சகஜமாக இருக்க முயன்றாள்.
அவனை ஓரக்கண்னால் பார்த்தாள். ஆறடி உயரமும் அதற்கேற்ற வலுவான உடலும், ஆண்மையின் கம்பீரமும் அவளை வசீகரிக்கத்தான் செய்தது. இப்போது அவளுக்கு 'காக்க காக்க' சூரியாவின் தோற்றம் ரசிக்கவில்லை. அவள் தன் கணவனை பார்த்து 'இவனல்லவோ ஆணழகன்' என்று நினைத்து பூரித்தாள்.
அந்த பூரிப்பு புன்னகையாக உதட்டில் உறைந்திருக்க, வெட்கத்தில் முகம் சிவக்க, ஒருவித பயமும் படபடப்பும் நெஞ்சை ஆட்க்கொள்ள அடி மேல் அடி எடுத்து வைத்து அவனுடைய அறைக்குள் நுழைந்தாள். அங்கு அவள் கண்ட காட்சி அவளை ஆச்சர்யப்படுத்தியது.
பூவால் அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் இரண்டு மூன்று காகிதங்களை பரப்பிவைத்து கைபேசியில் யாருக்கோ எதையோ விளக்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இன்று காலையில் கல்யாணம் செய்த மாப்பிள்ளையின் மகிழ்ச்சியையோ பூரிப்பையோ காணவில்லை. வெகு தீவிரமாக இருந்தது அவன் முகம்.
இவள் உள்ளே வந்ததை பார்த்தவன் ஒரு தலையசைப்பில் அவளை வரவேற்றுவிட்டு அந்த காகிதங்களை எடுத்துக்கொண்டு அறையோடு ஒட்டியிருந்த பால்கனிக்குள் நுழைந்து கொண்டான்.
அவனுக்காக காத்திருந்து காத்திருந்து வெறுத்துப்போன சாருமதிக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் 'அதிகாரிகளுக்கு இந்த மாதிரி சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும்' என்று மனதை தேற்றிக்கொண்டு அமர்ந்திருதவள், அமர்ந்த நிலையிலேயே உறங்கியும் விட்டாள்.
வெகுநேரம் கழித்து உள்ளே வந்தவன் அமர்ந்த நிலையிலேயே உறங்கிக் கொண்டிருக்கும் தேவதையின் பால் முகத்தில் மயங்கி சிறிது நேரம் அவளையே ரசித்துப் பார்த்தான். பின் கையில் இருந்த காகிதத்தை பத்திரப்படுத்த மேஜை இழுப்பறையை திறந்தான். அந்த சத்தத்தில் கண்விழித்த சாரு அவன் உள்ளே இருப்பதை பார்த்து தன்னை அறியாமல் எழுந்து நின்றாள்.
"என்ன ஆச்சு... தூங்கிட்டியா....?" அவன் மென்மையாக சிரித்தபடி கேட்டான். அவள் வெட்கத்துடன் "இ.. இல்லை..." என்று சமாளித்தாள்.
அவன் மீண்டும் அமைதியாக புன்னகைத்துக்கொண்டே விளக்கை அணைத்தான். அவளையும் தான்....
சாருமதிக்கு தன் மனநிலை என்னவென்று அவளுக்கே புரியவில்லை. சந்தோஷமா... வருத்தமா... ஏமாற்றமா... என்னவென்று புரியவில்லை. ஆனால் நேற்று இருந்த உற்ச்சாகம் நிச்சயமாக குறைந்துவிட்டது.
பெற்றவர்கள் பார்த்து முடித்துவைத்த திருமணமேயானாலும், ஒருவருக்கொருவர் எண்ணங்களையும் ஆசாபாசங்களையும் சிறிதும் பகிர்ந்து கொள்ளாமல், அவன் இப்படி சட்டென அவளுடன் கலந்துவிட்டானே...!
அவள் குளித்து முடித்து புது மணப் பெண்ணுக்கே உரிய கூடுதல் அழகோடு கிழே இறங்கிவந்தாள். தோட்டத்தில் அவன் செய்தித்தாள் பார்த்துக் கொண்டிருப்பது அவள் கண்ணில் பட்டது. அவன் முன் போக கூச்சம் தடுக்க சமயலறையில் தஞ்சம் புகுந்து சமையல்காரருக்கு உதவினாள்.
அவனாக அவளை அழைத்து பேசுவான் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் குளித்து 'டிப்டாப்பாக' காக்கி உடையில் உணவு மேஜைக்கு வந்துவிட்டான்.
அவள் அவனுக்கு உணவு பரிமாற தயக்கத்தோடு வந்து நின்றாள். நேற்று இரவுக்கு பின் இப்போதுதான் அவன் முகம் பார்க்கிறாள். வெட்கத்தில் முகம் சிவந்து தலை குனிந்தாள்.
அவனோ நேற்று நடந்ததன் பாதிப்பு சிறிதும் இல்லாதவனாக "ஏன் நிக்குற..? உக்கார் ரெண்டு பேருமே சாப்பிடலாம்..." என்றான்.
"இல்லை நீங்க சாப்பிடுங்க... நான் அப்புறம் சாப்பிட்டுக் கொள்கிறேன்..." என்று சொல்லிக்கொண்டே அவனுக்கு தட்டில் இட்லியை எடுத்துவைத்தாள்
"இதெல்லாம் நானே பார்த்துக்குவேன்... நீ ஏன் சிரமப்படுற...?" அவன் எதார்த்தமாக கேட்டான்.
"இல்லை நானே செய்றேன்...."
அன்றிலிருந்து அவனுக்கு அவள் தான் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து செய்தாள். எந்த நேரத்தில் அவனுக்கு எது தேவைப்படும் என்று தெரிந்து அவன் கையில் கொண்டுவந்து கொடுப்பாள். ஆரம்பத்தில் அவன் தடுத்தாலும் போகப் போக விட்டுவிட்டான். அவனுக்கே தெரியாமல் அந்த சுகத்துக்கு அவன் பழகிக் கொண்டிருந்தான். இதில் ஒன்றில் மட்டும் தான் அவன் மாறியிருந்தான். மற்றபடி எல்லாமே பழையபடிதான் நடந்துக் கொண்டிருந்தது.
காலையில் அவள் எழுந்திருக்கும் முன்பே எழுந்து உடற்ப்பயிர்ச்சிக்காக வெளியே சென்றுவிடுவான். சரியாக ஆறு முப்பதுக்கு வீட்டிற்கு வருவான். 'யோகா' செய்வான். செய்தித்தாள் பார்ப்பான். அலுவலகத்திற்கு தயாராவான். சாப்பிடுவான். 'டாடா' சொல்லிவிட்டு சென்றுவிடுவான்.
மீண்டும் மாலை அல்லது இரவு வருவான்... ரிலாக்ஸ் செய்வான். நேரத்தை பொறுத்து 'நியூஸ்' பார்ப்பான். உணவு எடுத்துக் கொள்வான். அலுவலக வேலை எதுவும் இருந்தால் நேரம் பார்க்காமல் கண்விழித்து எதையாவது படித்துக்கொண்டும் குறிப்பெடுத்துக் கொண்டும் இருப்பான். இல்லையென்றால் மனைவியுடன் கூடி மகிழ்வான்.
ஆனால் அது அவளுக்கு மகிழ்ச்சிக்குரிய சம்பவமாக இருந்ததா என்பதை கேட்கவும் மாட்டான் சிந்திக்கவும் மாட்டான்.
இந்த ஒருவார மணவாழ்க்கையில் சாருமதிக்கு எந்த இன்பமும் அடைந்துவிட்டதாக தோன்றவில்லை. தன் கணவன் தன்னிடம் அன்பாக ஒரு வார்த்தை பேசவில்லையே என்பது அவளுக்கு ஏக்கமாக இருந்தது. அவன் அவளிடம் வெறுப்பாக நடந்துகொள்ளவில்லை என்றாலும் இலக்கமான நேரங்களில் கூட அவளை காதலிப்பதாகவோ... அல்லது அவளை பிடித்திருக்கிறது என்றோ அல்லது வேறு விதமான காதல் மொழிகளோ பேசவேயில்லை.
'வேலைப்பளுவின் காரணமாகத்தான் இப்படி இருக்கிறான்' என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்ட சாரு அவனிடம் அதைப்பற்றி பேச அன்று இரவு காத்துக் கொண்டிருந்தாள்.
"வேலை நிறைய இருக்கா...?" படுக்கையறையில் ஓரமாக போடப்பட்டிருந்த மேஜையில் காகிதத்தை வைத்து எதையோ எழுதிக்கொண்டிருந்த ஜெயச்சந்திரனை பார்த்து சாரு கேட்டாள்.
அவன் அவளை புருவசுழிப்போடு பார்த்தான். "எப்பவும் போலதான்... ஏன் கேக்குற?"
"இல்ல... ஒரு ரெண்டு மூனு நாள் எங்கேயாவது வெளியூர் போயிட்டு வந்தா கொஞ்சம் மாற்றமா இருக்குமே... அதுதான் கேட்டேன்..." தயக்கத்தை துடைத்தெறிந்துவிட்டு கேட்டுவிட்டாள்.
"ஹனி மூன் போகலன்னு ஃபீல் பண்ணுறியா சாருமதி....?"
அவன் அவளை முழுபேர் சொல்லித்தான் கூப்பிடுவான். அது அவளுக்கு பிடிக்காது. ஆனால் பொறுத்துக் கொண்டாள்.
"அதெல்லாம் இல்லை... ஆனால் ரெண்டுபேரும் கொஞ்சம் கூட பேசிக்க முடியாமல் இப்படி ஓடிக்கிட்டே இருக்கீங்களே...!"
"நீ ஒரு போலீஸ் அதிகாரியோட மனைவி என்பதை நினைவுபடுத்திக்கொள். உனக்கே எல்லாம் புரியும்... இப்போ போய் தூங்கு " என்று அவளை அனுப்பினான்.
அவனை பொறுத்தவரை அவன் மிகவும் திருப்த்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தான். 'அழகான மனைவி, அவன் வேளையில் எந்தவிதத்திலும் தலையிடமாட்டாள். இரவு எத்தனை மணிக்கு வந்தாலும் முகம் சுழிக்காமல் அவனுக்கு தேவையானவற்றை பார்த்துப் பார்த்து செய்வாள். வீட்டை சுத்தமாகவும் அழகாகவும் பராமரிக்கிறாள். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வரும்போது அவனை அமைதியாகவும் நிம்மதியாகவும் உணரவைக்கிறாள்'. வேறு என்ன வேண்டும் அவனுக்கு....
ஆனால் அவளுக்கு....?