Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


இரும்பின் இதயம் - 10

அத்தியாயம் - 10

அந்த வாரம் அமைச்சர் பழனி அரங்கசாமி திருச்சியில் உள்ள ஒரு பெரிய கல்லூரிக்கு வருவதாக இருந்தது. அவர் தனிப்பட்ட முறையில் திரு. ஜெயச்சந்திரன் IPS தான் அவருடைய பாதுகாப்பு ஏற்ப்பாடுகளை கவனித்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அவன் அந்த வேலைகளில் இப்போது மும்மரமாக இருந்தான்.



அமைச்சர் பழனி அரங்கசாமி மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உள்ளவர். ஓரளவுக்கு மக்களுக்கு நல்லது செய்பவர் தான். அதாவது அரசு ஏதாவது நலத்திட்டங்கள் கொண்டுவந்தால் அதை அவர் தொகுதி மக்களுக்கு ஓரளவாவது கிடைக்க செய்துவிடுவார். மற்றபடி அவராக எதுவும் சிந்தித்து செயல்படாவிட்டாலும் அரசு செய்ய நினைப்பதை மக்களுக்கு கிடைக்க செய்வார்.



அவர் அமைச்சராவதர்க்கு முன் சென்னையில் 87 மதுபான கடைகளை ஏலம் எடுத்து நடத்திக் கொண்டிருந்தார். மதுபான கடைகளை அரசே ஏற்று நடத்தும் சட்டம் அமல்பட்டவுடன் அவர் தொழிலை மாற்றினார். மதுபான கடைகளின் மூலம் அவர் சம்பாதித்த பணத்தை அப்படியே கல்வி கூடங்களில் முதலீடு செய்தார். இன்று அவருக்கு தமிழ்நாடு முழுவதும் எட்டு கல்லூரிகள் உள்ளன. இன்னும் சில தொழில்களும் உள்ளன.



ஆனால் தனிமனித ஒழுக்கத்தில் சிறந்தவர் அல்ல. சில நடிகைகளோடும் மேலும் சில பெண்களோடும் தொடர்பு உள்ளது. ஆனால் அதை மிக சாமர்த்தியமாக ரகசியமாக வைத்திருந்தார். அவர் பணம் சம்பாதிப்பதில் எவ்வளவு அக்கறையாக இருப்பாரோ அதே அளவு அக்கறையை அவருடைய இமேஜயை காப்பாற்றுவதில் காட்டுவார். ஏனென்றால் அவர் இருக்கும் கட்சி அப்படி... எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் ஏதாவது கட்சி பெயருக்கு இழுக்கு வரும்படி நடந்துகொண்டால் கால் பந்தை உதைப்பது போல் உதைத்து கீழே தள்ளிவிடும் கட்சி தலைமை. அதனால் அவர் மிக கவனமாக இருப்பார்.



அன்று காலை சாருமதிக்கு எழுந்திரிக்க கூட முடியவில்லை. அவள் ஜெயச்சந்திரனுடன் பினங்கிக்கொண்டு ஒருவாரம் ஆகியும் அவனாக அவளிடம் சமாதானத்திற்கு வரவில்லை. எதுவுமே நடக்காதது போல் அவன் வேலைகளை அவன் பார்த்துக் கொண்டு இருந்தான். இவளுடனும் சாதாரணமாக பேசுவான். இவள் மூஞ்சியை 'உம்..' என்று வைத்துக் கொண்டிருந்தாலும் அதை பற்றி கேட்க்க மாட்டான். ஒரு கட்டத்தில் இவள் தான் பிடிவாதத்தை விட்டுவிட்டு அவனுடன் சிரித்து பேச ஆரம்பித்தாள். அவர்கள் உறவும் பழையபடி ஆனது.



இதனிலையில் அன்று அவளுக்கு படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாமல் தலை கனத்தது. அவன் அவளை கவனிக்காமல் எழுந்து அவனுடைய வேலைகளை முடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு தயாராகிவிட்டான்.



எதையோ எடுக்க மேலே வந்தவன் அப்போதுதான் கவனித்தான் சாருமதி எழுந்திரிக்காமல் படுத்திருந்தாள்.



"சாருமதி... சாருமதி...."



"ம்ம்ம்...." அவள் முனகினாள்



"என்ன ஆச்சு... டைம் ஆச்சு எந்திரிக்கலையா...?"



"ம்ம்ம்..." அப்போதும் வாய் திறந்து வார்த்தை வெளியே வரவில்லை.



"என்ன ஆச்சு.... உடம்பு முடியலையா...?" அவன் சாதரணமாகத்தான் கேட்டான்.



இவ்வளவு நேரமாக 'அவன் ஒரு வார்த்தை கேட்க மாட்டானா' என்று ஏங்கிக் கிடந்தவளுக்கு அந்த ஒரு வார்த்தை காதில் தேனாக பாய்ந்தது.



அவன் அருகில் வந்து அமர்ந்து அவளை தொட்டுப் பார்த்தான். காய்ச்சல் எதுவும் இல்லை. அவள் தோள்களை பிடித்து எழுப்பி அவளை அமரவைத்து கேட்டான் "என்ன பண்ணுது சாருமதி..."



அவ்வளவு தான் சிறு குழந்தை கீழே விழுந்து அடிபட்டுவிட்டால் தாயிடம் சலுகை சொல்லி அழுவதுபோல் அவன் நெஞ்சில் சாய்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள். அவனுக்கு இதுவும் புதுவித அனுபவமாக இருந்தது. அவளை திருமணம் செய்ததிலிருந்து ஒவ்வொரு விஷயத்திலும் அவள் அவனுக்கு புதுமையை காட்டிக் கொண்டுதான் இருந்தாள்.



"என்னன்னு சொல்லிட்டு அழு சாருமதி... " அவன் மென்மையாக கேட்டான்.



"ம..மயக் ...கமா வருது... எந் ..திரிக்க முடியல..." அவள் அவள் தேம்பிக்கொண்டே சொன்னாள்.



"ப்ச்... இதுக்கா இந்த அழுகை... சொன்னாள் மட்டும் கோவம் வந்திடும்..." என்றான் லேசாக சிரித்தக் கொண்டே



அவள் அவனை நிமிர்ந்து பார்த்து "என்ன...?" என்று கேட்டாள்.



"ஆள் மட்டும் தான் வளர்ந்திருக்க..." என்று சொல்லிவிட்டு சிரித்தான். கலகலவென வாய்விட்டு சிரிக்கவில்லை என்றாலும் பல்வரிசை தெரிய சிரித்தான்.



அவளுக்கு மயக்கமே தெளிந்துவிட்டது போல் இருந்தது. ஆனாலும் அவனை விட்டால் ஓடிவிடுவானே... அதனால் அவனோடு இன்னும் ஒட்டி அமர்ந்து கொண்டாள். ஆனால் அவனோ இவ்வளவு தான் உனக்கான நேரம் என்பது போல் அவளை விளக்கி அமரவைத்துவிட்டு மருத்துவருக்கு போன் செய்தான்.



"இருங்க... எங்க போன் செய்றீங்க...?"



"டாக்டர்க்கு...."



"இல்லை வேண்டாம்... சாதாரண மயக்கம். இதுக்கு எதுக்கு டாக்டர்..."



"அப்படியா... சரி... உன்னால 'மேனஜ்' பண்ணிக்க முடியும் என்றால் எனக்கு ஒன்னும் இல்லை... டேக் கேர்..." என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.



அவளுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். கட்டாயப் படுத்தி டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகலியே... சரி டைம் இல்லைன்னாலும் 'கண்டிப்பா நீ போய் பார்' என்றும் சொல்லவில்லையே...



அந்த ஏக்கம் தந்த மன சோர்வோ என்னவோ... அவளுக்கு அன்று முழுவதும் உடல்நிலை சரியில்லை...



அன்று இரவு வீட்டிற்கு வந்த ஜெய்ச்சந்திரன் வீட்டிற்குள் நுழைந்ததும் வீடு ஒழுங்காக இல்லாததை கவனித்தான். சோபாவின் மேல் கவர் களைந்து கிடந்தது. தொலைபேசி அதற்க்கான இடத்தில் இல்லாமல் தனியாக கேழே கிடந்தது. செய்தித்தாள் ஆங்காங்கே கிடந்து. இதெல்லாம் அவனுக்கு சுத்தமாக பிடிக்காது. அதது அதனதன் இடத்தில் இருக்க வேண்டும். உள்ளே நுழைந்தவன் ஷூவை கழட்டி அதன் இடத்தில் வைத்துவிட்டு, செய்தித்தாள்களை எடுத்து அடுக்கினான். சோபாவின் கவரை சரி செய்தான். போனை எடுத்து அதன் இடத்தில் வைத்தான். வீட்டில் வேலை செய்யும் ஆளை கூப்பிட்டு எச்சரித்தான்.



இவன் இவ்வளவையும் செய்வதை மேலே அவர்கள் அறையிலிருந்து வெளியே வந்த சாரு பார்த்துக் கொண்டிருந்தாள்.



"ஹும்ம்.. காலையில் வெளியே போனபோது மனைவிக்கு உடம்பு சரியில்லையே... இப்போ எப்படி இருக்கா என்கிற கவலை இருக்கா... அதைவிட சோபாவும் போனும் இவருக்கு முக்கியமா போச்சு.... அதெல்லாம் காசு கொடுத்து வாங்கின பொருள். நான் அப்படியா ஃப்ரீயா கிடைத்தது தானே..." அவள் மனம் ஏன் அப்படி நினைத்தது என்று அவளுக்கே தெரியவில்லை. ஒரு நிமிடம் தான்... உடனே எண்ணத்தை மாற்றிக்கொண்டாள்.



'கண்ணில் பட்ட தவறை சுட்டிக்காட்டினான்.... இதோ அடுத்து என்னை பார்க்க வருவான்... நிச்சயம் வருவான்... காலையில் கொஞ்சம் அக்கறையா பேசினானே...' என்று ஆவலோடு மீண்டும் காலையில் படுத்திருந்த மாதிரியே வேகமாக போய் மீண்டும் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.



அவன் மேலே அவர்கள் அறைக்கு வந்தான். அவள் கண்களை மூடி மனம் முழுக்க எதிர் பார்ப்போடு படுத்திருந்தாள். அவன் அவளை பார்த்தான். அவள் கண்களை மூடி படுத்திருந்தாள். அவளை ஏன் தொல்லை செய்ய வேண்டும் என்று எண்ணி மாற்று உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்றுவிட்டான். குளியலறை கதவு சாத்தப்படும் சத்தம் கேட்டு விழித்த சாருமதிக்கு கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டியது.



அப்போதும் எதுவும் கெட்டுப் போய்விடவில்லை. சாப்பிட போகும் போது அழைப்பான் என்று எதிர்பார்த்த சாருமதியை ஏமாற்றிவிட்டு அவன் மட்டும் கீழே போய் சாப்பிட்டுவிட்டு வந்தான்.



உண்மையில் அவன் நேரம் ஆகிவிட்டது. அவளுக்கு பசித்த போது அவள் சாப்பிட்டிருப்பாள். அவளை ஏன் தொந்தரவு செய்யவேண்டும் என்று நினைத்து அவன் அழைக்காமல் போய்விட்டான். அன்று இரவு சாருமதி சாப்பிடாமலே படுத்துக் கொண்டாள். ஆனால் உறக்கம் தான் வரமறுத்தது.



------------------------------------------------------------------



சென்னையிலிருந்து கைது செய்யப்பட்டு திருச்சி கொண்டுவரப்பட்ட ஆறு பேரும் போலீஸ் விசாரணையில் நடிகை ரூபாவிற்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துவிட்டார்கள். அவர்களை நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதி ரூபாவை கைது செய்ய உத்தரவிட்டார். இதை அறியாத ரூபா முன் ஏற்ப்பாடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டாள்.

----------------------------------------------------------------------

ஒரு வாரத்திற்கு முன்பே அமைச்சர் பழனி அரங்கசாமி திருச்சி வருகிறார் என்று தெரிந்ததுமே சாரு ஜெயச்சந்திரனிடம் சொல்லிவிட்டாள்.



"நான் நிச்சயம் மினிஸ்டர் மீட்டிங்க்கு வருவேன்... அவரோட பேச்சு ரொம்ப நல்லா இருக்கும்... சாதரணமா மத்த அரசியல்வாதிங்க 'ப்ளேடு' போடுறமாதிரி இவர் செய்ய மாட்டார். என்ன நீங்க நிச்சயம் கூட்டிட்டு போகணும்...."



இதை அவள் சொல்லும் போது அவர்கள் இருவருக்குள்ளும் கொஞ்சம் நிலைமை சுமூகமாக இருந்தது.



"நான் அன்னிக்கு ரொம்ப பிஸியா இருப்பேன் சாருமதி... உனக்கு வேற ஏற்ப்பாடு செய்றேன்..."



"நீங்க எப்போ தான் ஃப்ரீயா இருந்துரிகீங்க...?" அவள் அலுத்துக் கொண்டாள். அவன் சிரித்துக் கொண்டான்.



இன்று மினிஸ்டர் வருகிறார் என்று எப்பொழுதும் செல்வதைவிட விரைவாகவே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டான். இரவு அழுதழுது ஓய்ந்த சாரு அன்று லேட்டாக எழுந்தாள். அவள் அவளுடைய வேலைகளை முடித்துக் கொண்டு ஓய்வாக அமர்ந்த நேரம் ஒரு PC வெளி கேட்டை திறந்துகொண்டு உள்ளே வந்தார். வந்தவர் அவளிடம் ஒரு அட்டையை நீட்டினான்.



"மேடம்... சார் குடுக்க சொன்னார். மினிஸ்டர் 12 மணிக்கு தான் வர்றார். உங்களை அந்த நேரத்துக்கு வந்தால் போதும் என்று சொல்ல சொன்னார். இந்த கார்டை செக்யூரிட்டிகிட்ட அல்லது ஆடிட்டோரியம்ல இருக்க போலீஸ் யார்கிட்டையாவது காட்டினால் உங்களுக்கு சுலபமா சீட் arrange பண்ணி கொடுத்திடுவார். " என்று சொல்லிவிட்டு அகன்றார்.



அவன் தனக்காக ஒன்று செய்துவிட்டான் என்பதே அவளுக்கு நல்ல உற்ச்சாகத்தை கொடுக்க சட்டென எழுந்து கிளம்ப ஆரம்பித்துவிட்டாள். ஆனாலும் உடல்நிலை சரியில்லாத நிலையில் தனியாக போவது சரியில்லை என்று நினைத்து அவள் தோழி கவிதாவிர்க்கு அழைத்து அவளோடு சேர்ந்து அந்த கல்லூரிக்கு சென்றாள்.



அந்த PC சொன்னது சரியே... அந்த கார்டு நன்றாகவே வேலை செய்தது. அவ்வளவு கூட்டத்திலும் இவர்கள் இவ்வளவு தாமதமாக வந்த போதிலும் ராஜமரியாதையாக அனைவரையும் ஒதுக்கிவிட்டுவிட்டு முதல் வரிசையில் இரண்டு சீட் ஏற்ப்பாடு செய்து கொடுக்கப்பட்டது. இவள் மட்டும் தான் வருவாள் என்று நினைத்ததால் அவன் ஒரு சீட் தான் முன்பே ஏற்ப்பாடு செய்திருக்க முடியும். இவள் திடீரென்று இன்னொருத்தியையும் அழைத்துக் கொண்டு வந்தும் எந்த சிக்கலும் இல்லாமல் அவர்களுக்கு எல்லாம் சுலபமாக முடிந்ததில் சாருவை விட கவிக்கு மிக்க மகிழ்ச்சி. அவள் தன் தோழியின் கணவனை புகழ்ந்து தள்ளிவிட்டாள்.



சாருவுக்கும் மகிழ்ச்சி தான் என்றாலும் 'ஊரெல்லாம் மதிப்பும் மரியாதையும் கொடுத்து என்ன பயன்.... கொடுக்க வேண்டிய கணவன் காதலை கொடுக்க மறுக்கிறானே....' என்று ஒரு குரல் அவளுக்குல் கூவியது...



நேரம் ஆக ஆக சாருமதிக்கு அந்த இடத்தில் அமர்ந்திருக்க முடியவில்லை. நெளிந்தாள்....



"ஏய்.. என்னடி ஆச்சு... ஒரு மாதிரி இருக்க... முகமே ஒரு மாதிரி மாறிடுச்சு... உடம்பு ஏதும் சரியில்லையா...?" அவள் அக்கறையாக கேட்டாள். அந்த நேரம் மேடையில் நின்று கொண்டிருந்த ஜெய்ச்சந்திரன் அவளை பார்த்தான். பின் அருகில் இருந்த யாரிடமோ எதுவோ பேசினான். அதன் பிறகு அவர்களை நோக்கி வந்தான்.



"ஏய்... உன் முகம் மாறிட்டுன்னு சொன்னேல்ல... அதை பார்த்துட்டு தான் உன் ஆள் வர்றார் பார்..." என்று கவி சொன்னாள்



சாருவுக்கும் ஆசைதான்... ஒருவேளை அவன் என்னை கவனித்துவிட்டுதான் வருகிறானோ... அவன் நெருங்கி வரவர அவளுக்கு நிச்சயம் ஆகிவிட்டது. அவன் அவளிடம்தான் ஏதோ சொல்ல வருகிறான்... ' 'எதுவும் வேண்டுமா..?' என்று கேட்டால்... தண்ணி கேட்க்க வேண்டும்' என்று அவள் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் போதே அவன் அவர்களை தாண்டி அடுத்த வரிசையில் இருந்தவரிடம் ஏதோ கேட்டுவிட்டு மீண்டும் சாருமதியை கடந்து மேடைக்கு சென்றான். அவளுக்கு அவன் செய்தது ஒருபக்கம் வலி என்றால் அவள் தோழி முன் இப்படி ஒரு நிலையில் விட்டுவிட்டானே என்று பெரிய வலியாக இருந்தது.



'குறைந்தபட்சம் அவளை பார்த்துவிட்டாவது போயிருக்கலாம்... கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும்.... ஆனால் இது எப்போதும் நடப்பதுதானே.... என்ன இன்று கவி முன் நடந்துவிட்டது...' அவள் தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்காமல் உடனே கிளம்பிவிட்டாள்.

------------------------------------------------------------------------------

"நேத்து ஏன் மீட்டிங்லேருந்து பாதியிலேயே வந்துட்ட..." அவன் காலை உணவை சுவைத்துக் கொண்டே அவளிடம் கேட்டான்.



"அதை இன்னிக்கு தான் உங்களுக்கு கேட்க தோணுதா...?" அவள் அவனுக்கு பரிமாறிக்கொண்டே எதிர் கேள்வி கேட்டாள்.



எப்பொழுதும் அவள் இப்படி பேசமாட்டாள். எதார்த்தமான ஆள் தான். சிலநாட்களாக அவள் மனதில் உள்ள ஏமாற்றத்தின் வலி அவளை அப்படி பேசவைத்தது. அவனுக்கும் வித்யாசம் தெரிந்தது. ஆனால் அவன் அதை பற்றி கேட்கவில்லை.



"ஏன் இன்னிக்கு கேட்டால் சொல்ல மாட்டியா?" அவன் மீண்டும் கேள்வியை தொடர்ந்தான்.



"அங்க உக்கார பிடிக்கல... வந்துட்டேன்..." அவள் பட்டும் படாமலும் பேசினாள். பேசிக்கொண்டிருக்கும் போதே அவளுக்கு குமட்டியது. ஓடிப்போய் குளியலறையில் வாந்தியெடுத்தாள். அவனுக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. இந்த உணர்வெல்லாம் அவனுக்கு மரத்து போன உணர்வுகள். அதையெல்லாம் சாருமதி உயிர்ப்பித்துக் கொண்டிருந்தாள்.



'ஏன் இப்படி சோர்ந்துவிட்டாள். இப்போதெல்லாம் இவள் முன் போல கலகலப்பாக இருப்பதில்லையே...' அவன் எண்ணமிட்டுக் கொண்டே எழுந்து சென்று அவளை பிடித்தான்.



அவளுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவனுடைய ஸ்பரிசத்துக்கு இவ்வளவு சக்தியா.... ஆம் சக்திதான். அந்த ஸ்பரிசத்தில் அவனுடைய அன்பை மட்டுமே அவள் உணர்ந்தாள்.



அவளை கைத்தாங்கலாக அழைத்துவந்து சோபாவில் அமரவைத்தான். "என்ன பண்ணுது உனக்கு... டாக்டர்கிட்ட போகமாட்டேங்கிற... இப்படி சோர்வாவே தெரியிரியே... ஒரு தடவை போய் பார்த்துவிட்டு வந்துவிடு சாருமதி..." அவன் அவளை கையணைப்பில் வைத்துக் கொண்டே சொன்னான்.



அவளுக்கு அவனுடைய அக்கறை ஆனந்த கண்ணீரை வரவழைத்தது. முன்பொரு முறை செய்தது போலவே அவன் மார்பில் சாய்ந்து கண்ணீர் விட்டாள்.



"என்ன...? என்னை பார் சாருமதி... என்ன பிரச்சனை உனக்கு...?" அவன் மென்மையாக கேட்டான்.



"நீங்களும் என்னோடு டாக்டர்கிட்ட வாங்க... அப்போதான் நான் போவேன்..." அவளுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அது நிச்சயப்பட்டால்

'இவனோடு சேர்ந்து மருத்துவமனைக்கு போயிருக்கலாமே...' என்று ஏங்கத்தோன்றும்... எதற்கு வம்பு... பேசாமல் எதுவாக இருந்தாலும் சேர்ந்து போய் மருத்துவரை பார்த்துவிட்டு வருவதுதான் நல்லது.



"நான் ஆபீஸ் கிளம்பிவிட்டேன் சாருமதி... எனக்கு வேலை இருக்கு... உனக்கு தனியா போய்விட்டுவருவதில் என்ன பயம்..." அவன் சிறு குழந்தைக்கு சொல்வதுபோல் எடுத்து சொன்னான்.



"ஒரே ஒரு மணிநேரம் ஃப்ரீ பண்ணிக்கிட்டு வரக் கூடாதா ப்ளீஸ்... " அவள் அவனிடம் வெளிப்படையாக கெஞ்சினாள். அவனுக்கு அவள் முகத்தை பார்க்க பரிதாபமாக இருந்தது. 'இப்படி கெஞ்சிகிட்டிருக்காளே...' அவன் வேறு வழியில்லாமல் சொன்னான்



"சரி சாருமதி... நீ ஹாஸ்பிட்டல் வந்திடு... நான் நேராக அங்கு வந்துவிடுகிறேன்..."



"நிச்சயமா...?"



"ம்ம்ம்..."



"தேங்க் யு..." அவள் மகிழ்ச்சியாக தலையாட்டினாள். இந்த மகிழ்ச்சியின ஆயுட்காலம் எத்தனையோ...?
 

New Threads

Top Bottom