அனைவரும் மக்னா நடப்பதற்கான வேலையில் ஈடுபட்டனர். மூன்று பாட்டிகளும் இதை செய் அதை செய் என்று மகன்களையும் மருமகள்களையும் அதட்டி கொண்டு இருந்தனர்.
டேய் நம்ம வீட்டுல நடக்க போகும் முதல் கல்யாணம் நல்ல படியா நடக்கனும் என்று சரோஜா சொல்ல ஆமா சரோஜா நல்ல படியா நடக்கனும் நம்ம பேத்தி நல்லா வாழனும் என்று ஜீபைதா இன்முகத்துடன் கூறினார்.
இவர்களின் நல்லுள்ளம் தாஜீனை கவர்ந்தது. அவர் மகள் நஸிரா குடும்பத்துடன் வந்திருந்தார். அவர் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க அவர்களும் மன்னித்து விட்டனர்.
அவரும் சேர்ந்தே அனைத்து வேலைகளையும் இன்முகத்துடன் செய்தார்.
ஷாயின் மட்டும் வெளியில் சொல்லாமல் மனதிற்குள் அழுது கொண்டு இருந்தாள். அவளால் வெளிப்படையாக அழுகவும் முடியாமல் உள்ளுக்குள் வைத்து கொள்ளவும் முடியாமல் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருந்தாள். தொழுகையில் அல்லாஹ்விடம் முறையிட்டாள்.
அவன் சொன்ன அந்த வார்த்தைகள் அவளை வாட்டி வதைத்து கொண்டு இருந்தது. அவள் மனம் கண்ணாடி துகள்களை போல் உடைந்து விட்டது.
தன் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக தன் வலியை மறைத்து கொண்டாள் ஷாயின். நாளை மக்னா என்பதால் ஷாயினுக்கு தேவையான உடையை எடுத்து கொண்டு இருந்தார்கள் நஜீதாவும் ஃபாத்திமாவும். பிறகு அவளுக்கு நகைகளையும் எடுத்து வைத்தார் சுசீலா.
பாட்டிமார்களுடன் நஸிராவும் சேர்ந்து இதர வேலைகளை செய்து கொண்டு இருந்தார்கள். தந்தை மூவரும் வேறு என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையில் இருந்தனர்.ஷாயினை கலாய்தவாறு இருந்தனர் நவீயும் மதியும்.
.
.
.
.
.
.
தன் வருங்கால மருமகள்க்கு கொலுசும் மோதிரமும் பார்த்து பார்த்து வாங்கினார் ரிஹானா. அவர் வாங்குவதை ரசித்து கொண்டு இருந்தார் ஹாஃபிஸ்.
காலையிலிருந்து நான்கு கடைகள் ஏறி இறங்கி இப்ப இது அஞ்சாவது கடை இங்கவாது நகை செட் ஆகிடனும் என்று மனதில் நினைத்து கொண்டு இருந்தார் ஹாஃபிஸ்.
அவரும் ஒருவழியாக இரண்டையும் வாங்கி முடித்தார். இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
மித்ராவை சந்திக்க செல்லும் போது தான் ஷாயினை பார்த்தார் ரிஹானா. ரிஹானாவிற்கு பார்த்த முதல் மாத்திரமே ஷாயினை மிகவும் பிடித்து விட்டது. பிறகு அந்த காலேஜ்யில் விசாரித்தார் அவர்.
அவர்கள் அனைவரும் சொன்ன ஒரே பதில் ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு. பிறகு அவர்களிடமே அவளின் அட்ரஸை வாங்கி கொண்டார். அதில் நஜீதா சுலைமான் போட்டோ சேர்க்க பட்டு இருந்தது.
அடுத்த நாள்....
ரிஹானா ஹாஃபிஸ் அஜ்மல் மற்றும் சித்தார்த்தின் பெற்றோர்களும் வந்திருந்னர். சிறு சொந்தகளோட ஷாயின் வீட்டிற்கு சென்றனர்.
.
.
.
.
.
.
ஷாயினை அழகு தேவதையாக மாற்றினர். தன் மகளை அணைத்து முத்தமிட்டார் நஜீதா. மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டார் ஆரம்பிச்சிடலாம் என்று பாட்டி கூற ம்ம்ம் சரி என்று தலையசைத்தனர்.
மக்னா நல்ல படியாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். இன் ஷா அல்லாஹ் அடுத்த மாசமே நிக்காஹ் வச்சிக்கலாமா என்று சுலைமான் கேட்க இன் ஷா அல்லாஹ் வச்சிக்கலாம் பாய் என்று ஹாஃபிஸ் சொல்ல அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
இங்க பாருங்க பாய் நிக்காஹ் செலவு எல்லாமே எங்களோட பொறுப்பு. நீங்கள் ஷாயினை மட்டும் எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தா போதும். இந்த வரதட்சணை வாங்குறது நம்ம மார்க்கத்தில் இல்லை. மஹர் கொடுத்து தான் நாங்கள் அழைச்சிட்டு போவோம் ஷாயினை என்று ஹாபிஸ் கூற.
இல்லை பாய் எங்க பொண்ணுக்கு நாங்க பண்ணணும் ஆசையா இருக்கு அதான் எங்களால் முடிஞ்சத போட்டு அனுப்புறோம் என்று சுலைமான் சொல்ல இங்க பாருங்க பாய் நேற்று வரைக்கும் ஷாயின் உங்கள் வீட்டு பெண் இன்னிலருந்து அவள் எங்க வீட்டு பெண். அதனால நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்று கறாராக இருவரும் கூற அவர்கள் சரியென்று சம்மதித்தனர்.
அப்பறம் என் மருமகளை நல்ல படியா பார்த்துக்கோங்க என்று அன்பு கட்டளை இட்டார் ரிஹானா. பிறகு நாங்கள் கிளம்புகிறோம் என்று அவர்கள் விடைபெற்று சென்றனர்.
கல்யாணத்திற்கான வேலைகளை தொடர்ந்தனர். பத்திரிகை அடிக்க ஆர்டர் செய்து விட்டு வந்தனர் . இதில் மாப்பிள்ளை பெயரை கூட கேட்கவில்லை நம்ம ஷாயின். அதே போல் தான் நம் சாதிக்கும்.
தெரியாமல் இருப்பது தான் நல்லது என்று அவர்களின் நண்பர்கள் மனதில் நினைத்து கொண்டனர்.
அவ்வப்போது ரிஹானா ஷாயினை பார்ப்பதற்கு வந்து போவார். அவரின் அன்பை கண்டு எல்லோரும் அகமகிழ்ந்தனர்.
ஷாயினும் ரிஹானாவிடம் போனில் போசுவாள். இருவரும் நல்ல தோழிகள் ஆனார்கள். இனி இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அட்டகாசம் பல.
நாட்கள் கடந்தாலும் ஷாயின் எப்போதும் போல் இயல்பாகவே இருந்தாள் மனதில் வலியுடன். நம்மால் பிறர் வருத்தப்பட கூடாது என்று தன் வலியை மறைத்தாள் ஷாயின்.
ரிஹானா கல்யாண புடவை எடுத்து வந்து காண்பிக்க மாஷா அல்லாஹ் நல்லா இருக்கு என்று அனைவரும் கூறினர். ஷாயினுக்கும் அது பிடித்து விட்டது.
நாட்களும் கடந்தன. வீட்டில் அனைவரும் ஷாயின் தங்களுடன் இன்னும் மூன்று நாட்களே இருப்பாள் என்று நினைத்து வருத்தப்பட்டனர்.
அம்மா ஷாயின் கண்டிப்பா நல்லா இருப்பாள் நீங்கள் அனைவரும் கவலையை விடுங்கள் என்று மதியும் நவீயும் ஆறுதல் கூற நாளைக்கு மண்டபத்திற்கு போகனும் வாங்க தூங்குவோம் என்று அனைவரும் தூங்கினர்.
நஸிராவும் சேர்ந்தே கல்யாணத்திற்கான வேலைகளை செய்தார். இந்த நிகழ்வுகளில் யாரும் அறியவில்லை ஷாயினின் கண்ணீரை. அவள் அறியவும் விடவில்லை.
அடுத்த நாள் அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பினர். அவள் கல்லூரி தோழிகளும் வந்து விட்டனர் மண்டபத்திற்கு.
அப்போது தான் மூவருக்கும் தங்கள் தேர்விற்கான முடிவை அறிந்து கொள்ளவே இல்லை என்று. பிறகு தங்கள் போனை எடுத்து தங்கள் கல்லூரியின் தளத்திற்கு சென்று தங்கள் தேர்வின் முடிவை பார்த்தனர்.
அதில் மூவரும் 90% பெற்று இருந்தனர். வந்திருந்த மாணவிகளில் ஒருத்தி ஏய் overall நம்ம கிளாஸ் தான் டி பர்ஸ்ட். நம்ம பத்மா தான் டி 97% எடுத்து பர்ஸ்ட் அதுக்கப்புறம் 95% எடுத்து நீங்கள் மூனு பேரும் 93% எடுத்து நம்ம கார்த்திகா டி. நீதான் வரலை என்றவுடன் பரவாயில்லை விடு என்றனர் மூவரும்.
பிறகு அவளை கலாய்த்த வாறு இருந்தனர் அனைவரும். மாப்பிளை வீட்டார் வந்து விட்டனர் என்று கூறியவுடன் ஏய் மாப்பிள்ளை வந்தாச்சா டி என்று கூற ஷாயின் முகத்தில் நாணம் ஒட்டி கொண்டது.
இரவில் எல்லாரும் அமைதியாக இருந்தனர். ஷாயின் தற்செயலாக அங்கு வந்து அவர்களை பார்த்தாள். என்ன எல்லாரும் அமைதியா ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்திட்டு என்று கேட்க என்ன பேசுறதுன்னு தெரியலை அதான் என்று அனைவரும் முழித்தனர்.
ஏன்டி கல்யாண பொண்ணுக்கு இங்க என்ன வேலை என்று நஜீதா கேட்க ஏன்மா இன்னும் எவ்வளவு நேரம் அந்த ரூம் உள்ளேயே அடைந்து கிடைப்பது அதான் நான் வெளியே வந்த சரி நான் ஒன்னு கேட்கிறேன் அதற்கு எல்லாரும் பதில் சொல்லனும் சரியா என்று அங்கிருந்த ஒரு சேரை இழுத்து போட்டு உட்கார்ந்து கொண்டு கேட்டாள்.
ம்ம்ம் சரிம்மா என்று குமார் சொல்ல சரி மாமா என்றாள். இப்ப ம்ம்ம் ரியாஸ் ப்பா நீங்கள் சொல்லுங்க உங்கள் நிக்காஹ் அரேஜ் மேரேஜா இல்லை லவ் மேரேஜா என்று கேட்க ம்ம்ம் அரேஜ் மேரேஜ் தான்ப்பா எங்களோடது.
அப்ப ஒகே. இப்ப ரியாஸ் ப்பா ஃபாத்திமா அம்மா கிட்ட பிரபோஸ் பண்ணணும் என்றவுடன் என்னது பிரபோஸா😱🤤🤤 என்று எல்லாரும் வாயை பிளக்க ஆமா பிரபோஸ் தான் இப்ப பண்ணியே ஆகனும் என்று மதியும் நவீயும் சேர்ந்து சொல்ல அவர்களும் சரி அப்ப ஒகே அம்மா வாம்மா இங்க வந்து நில்லு அப்பா நீங்கள் இங்க நில்லுங்க நவ் யூ continue என்று மதி சொல்ல ஃபாத்திமா வெட்கத்தில் நின்று கொண்டு இருந்தார்.
ரியாஸ், என் அன்பு காதலியே என்னை கல்யாணம் செய்து கொள்ள உனக்கு சம்மதமா? 😍😍😍 என்று அங்கிருந்த பூவை ஃபாத்திமாவிடம் நீட்டி கேட்க அவரும் அதை வாங்கி கொண்டு எனக்கு சம்மதம் 😍😘😘😘 என்று சொன்னவுடன் ஹீஹு என்று கத்தினர்.
அப்பா பிண்ணிடிங்க என்று நவீ கூறினாள். அடுத்து குமார் மாமாவும் பூர்ணிமா அத்தையும் என்றவுடன் நாங்களா🤤🤤 ம்ம்ம் நீங்களே தான் என்று ஷாயின் கூற வேண்டாம் மா என்று பூர்ணிமா சொல்ல அதெல்லாம் கிடையாது வாங்க என்று அவரின் கையை பிடித்து முன்னாடி நிற்க வைத்தாள். பிறகு வேறு வழியின்றி குமாரும் வந்து நின்றார்.
குமார் , கையில் ஒரு லெட்டர் எடுத்து பூர்ணிமாவிடம் நீட்ட, என்ன இது? என்று முறைத்து கொண்டு கேட்க படிச்சு தான் பாருங்களேன் என்று குமார் சொல்ல அதை பிரித்து படித்து விட்டு இதை சொல்ல இத்தனை நாட்கள் தேவையா? என்று பூர்ணிமா வெட்கத்தோடு சொல்ல அவர் புரிந்து கொண்டு ஏஏஏ என் லவ் சக்சஸ் என்று கத்தினார். அய்யோ போதும் மானத்தை வாங்காதிங்க என்று அவரின் வாயை முடினார் பூர்ணிமா. அனைவரும் மாமா கலக்கிடிங்க போங்க என்று நவீ கூற அவர்கள் இருவருக்கும் ஏதோ ஒரு உணர்வு அவள் அப்படி கூறியவுடன்.
அடுத்து சரத் அப்பாவும் சுசீலா அம்மாவும் என்றவுடன் சரிசரி வரோம் என்று இருவரும் வந்தறர்.
சரத், எனக்கு உன் அம்மாவை என் மாமியார் ஆக்கனும் ஆசையில்லை உன் அண்ணணை என் மச்சான் ஆக்கனும் நினைக்கலை பட் இதெல்லாம் நடந்து விடுமோ என்று தான் பயமா இருக்கு என்று சுசீலாவிடம் சொல்ல அவர் புரியாமல் புரியலை என்றவுடன் பார்த்தியா கடவுளே! இவளை நான் கல்யாண பண்ணிகிட்டு காலம் முழுக்க எப்படி ? என்று சலித்து கொள்ள உடனே சுசீலா இப்பவே நான் ரெடி தான் கல்யாணத்திற்கு என்று சொல்ல அப்பாடா இதாவது உனக்கு புரிந்ததே என்று சரத் சொல்ல ஓ அப்ப என்ன முட்டாள் சொல்றிங்களா என்று அவரை காதை திறுக சாரிம்மா சாரிம்மா என்று அவர் கெஞ்சினார்.
ஹீஹீ சூப்பர் போங்க என்று மூவரும் கூற அடுத்து காதர் மாமாவும் கதீஜா அத்தையும் என்று ஷாயின் கூற ம்ம்ம் வரோம் என்று அவர்களும் வந்தனர்.
காதர் அங்கு இருந்த பூ எடுத்து என் அழகு தேவதையே எனக்கு எப்போ ஒகே சொல்ல போற என்று கண்ணடித்த படி கேட்க அவர் வெட்கத்தோடு இப்பவே ஒகே தான் என்றார்.
ஏஏஏ சம மாமு கலக்கிடிங்க போங்க என்று மதி கூறியவுடன் அனைவரும் சரித்தனர்.
அடுத்து என் மாமியார் ரிஹானாவும் ஹாபிஸீம் என்றவுடன் ஏன்டி பெரியவங்கலை மரியாதை இல்லாமல் பெயர் சொல்லி கூப்பிடாதே என்று எத்தனை தடவை சொல்லியிருக்கேன் என்று நஜீதா கடிந்து கொள்ள . விடு நஜி என்னை தானே கூப்பிடுறா என்று ரிஹானா சொல்ல நீங்களும் இப்ப இவளுக்கு சப்போர்ட்டா? என்று நஜி சலித்து கொள்ள.
உனக்கு பொறாமை நஜி உன் மாமியாரை உனக்கு சப்போர்ட் பண்ணலன்னு என்றவுடன் ஏய் என் மருமகளுக்கே நான் சப்போர்ட் பண்ணுவேன் டி என்று தாஜீன் கூறி கொண்டே வர.
ஒ தாஜீன் நீ இங்க தான் இருக்கியா என்று கேட்டவளை உன்னை என்று அடிக்க துரத்தினார் நஜி. அங்கிருந்து தப்பி ஓடினாள் ஷாயின் .அனைவரும் சிரித்தனர்.
இதெல்லாம் பார்த்து ரசித்து கொண்டு இருந்தனர் அஜ்மலும் சித்துவும். டேய் அன்னிக்கு மித்ரா சொன்னது சரிதான் டா. சிஸ்டரை சமாளிக்கிறது ரொம்ப கஷாடம் டா. மச்சி பாவம் என்றான் சித்து. ம்ம்ம் ஆமாம் டா. பட் குழந்தை டா சிஸ்டர் என்றான் அஜ்மல். ம்ம்ம் ஆமாம் டா.
ஓடியவள் தற்செயலாக வந்த சாதிக் மீது விழ அவளை விழாமல் பிடித்தான் சாதிக்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ந்தனர். அப்படியே சிறிது நேரம் இருந்தனர். இருவரும் கண்களை பார்த்திருந்தால் புரிந்து இருக்கும். எல்லாம் விதியின் விளையாட்டு.
அங்கு ஜோடி பொருத்தம் சூப்பர் என்று அங்கு ஒருவர் கூற அப்போது தான் இருவருமே அறிந்தனர். பிறகு தன்னிலை திரும்பிய இருவரும் வேகமாக உள்ளே சென்றனர்.
உள்ளே நுழைந்தார்கள் மதியும் நவீயும். உங்கள் ரெண்டு பேருக்கும் தெரியும் தானே டி மாப்பிள்ளை யாருன்னு? என்று கேட்க ம்ம்ம் தெரியும் டி என்றனர்.
அப்பறம் ஏன்டி என்கிட்ட சொல்லல எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்றவுடன் அவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டாள் மதி. போ போய் கல்யாணத்தை நிறுத்து அதோட நம்ம குடும்ப சந்தோஷம் எல்லாமே போய்டும் போ என்று நவீ கூற அவள் எதுவும் சொல்லாமல் உளு செய்து தொழுக சென்றாள்.
இருவரும் அவளை தனியே விட்டு வெளியே வந்தனர்.
டேய் உண்ளை சொல்லுங்க உங்களுக்கு தெரியும் தானே என்று சாதிக் சொல்ல தெரியும் டா என்று அவர்கள் கூறியவுடன் அப்பறம் ஏன் என்கிட்ட சொல்லை. தோனலை என்றான்.
எனக்கு அவள் வேண்டாம் என்று அவன் கூறவும் சித்துவின் கைகள் அவன் கன்னத்தை பதம் பார்க்கவும் சரியாக இருந்தது.
டேய் இந்த கல்யாணம் நின்னுச்சு அவ்வளவு தான். எல்லாருடைய சந்தோஷமும் போய்டும். எல்லாரும் நிம்மதியாக இருக்க கூடாது நினைச்சினா போடா போ போய் இந்த கல்யாணத்தை நிறுத்து என்றவுடன் அவன் அமைதியாகினான்.
அவன் யோசிக்கட்டும் என்று இருவரும் வெளியே வந்தனர்.
இருவரின் முடிவும் என்னவாக இருக்கும் என்பதை நாமும் காத்திருந்து பார்ப்போம்....
இருவரையும் தனியே விட்டு இவர்கள் வெளியே வந்தனர் . இருவரும் அறையில் நடந்தவாறு யோசித்து கொண்டு இருந்தனர்.
சாதிக் தன் பெற்றோர்களுக்காக மட்டுமே சம்மதித்தான். ஷாயின் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டாள் இது அல்லாஹ்வின் முடிவு எங்கள் லவ் உண்மை.. அவளும் சம்மதித்தாள்.
நவீ மதி அருகில் அமர்ந்தார்கள் அஜ்மலும் சித்தும். அவர்கள் என்ன என்று கேட்க சிஸ்டர் என்ன சொன்னாங்க என்று சித்து கேட்க அவள் சரி தான் சொல்லுவா என்று மதி கூற ம்ம்ம் சரி என்றான் சித்து.
நான் அஜ்மல் இவன் சித்தார்த் என்று அஜ்மல் அறிமுகம் செய்து கொள்ள இவள் நவீனா நான் மதினா என்று மதியும் தங்களை அறிமுகம் செய்து கொண்டாள்.
நான்கு பேரும் சிரித்து பேசி கொண்டனர். இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்தார்கள் அஜ்மல் சித்துவின் பெற்றோர்கள்.
ஏன் பூர்ணிமா அவங்க ஜோடி பொருத்தம் நல்லா இருக்கு தானே என்று கதீஜா கேட்க ம்ம்ம் ஆமா கதீ நல்ல பொண்ணுங்க நம்ம பசங்களுக்கு ஏத்த பொண்ணுங்க என்று பூர்ணிமா சொல்ல அவர்கள் இருவரும் பேசாம நாம கேட்டு பார்ப்போமா? என்று தன் கணவன்மார்களிடம் பேசி விட்டு அவர்களும் சம்மதம் சொல்ல சரி நிக்காஹ் முடிஞ்சதும் பேசுவோம் என்று முடிவு செய்தனர்.
நிக்காஹ் பதிவேட்டில் இருவரும் கையெழுத்து இட்டனர். நிக்காஹ் நல்ல படியாக முடிந்தது.
சாதிக் ஷாயின் இருவரையும் உட்கார வைத்து அருகில் இருவரின் குடும்பமும் அமர்ந்தது.
ஷாயினும் சாதிக்கும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள கூட இல்லை. பார்த்தாலும் முறைத்து கொண்டார்கள்.
குமார் முதலில் தொடங்கினார். அஜ்மல்க்கு மதினாவையும் சித்தார்த்துக்கு நவீனாவையும் கட்டி தர சம்மதமா? என்று கேட்டு விட அனைவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் இருந்தனர். சிறிது நேரம் கழித்து ஜீபைதா எங்களுக்கு சம்மதம் தான் என்று மதினா நவீனா இருவரையும் பார்த்தார்கள்.
அவர்கள் எங்களுக்கு சம்மதம் என்று சொல்ல திரும்பி அஜ்மலையும் சித்துவையும் பார்க்க அவர்களும் சம்மதம் தெரிவிக்க அப்புறம் என்ன நிச்சயம் வச்சிக்கலாம் என்று பூர்ணிமா சொல்ல இன்னிகேவா என்று காதர் கேட்க ம்ம்ம் இதுவும் நல்லது தான் என்று சரோஜா சொல்ல இரண்டு ஜோடிகளுக்கும் நிச்சயம் முடித்தினர்.
இந்த வேலைகள் முடித்து விட்டு அடுத்த இரண்டு கல்யாணத்தையும் பார்க்கலாம் என்று காதர் சொல்ல அனைவரும் தலையசைத்தனர்.
ஷாயின் இருவரையும் அணைத்து கொண்டு முத்தமிட்டாள். அஜ்மல் அண்ணா சித்து அண்ணா அவங்க ரெண்டு பேரையும் நல்ல படியா பார்ததுக்க வேண்டிய பொறுப்பு உங்கள் கிட்ட தான் நல்லா பார்த்து கொள்வீர்கள் தானே என்று அவள் கேட்க என்னம்மா இப்படி கேட்ட அதெல்லாம் நல்லா பார்த்துப்போம் என்றார்கள் இருவரும் சேர்ந்து.
மூவரும் அணைத்து கொண்டு அழுதனர். பிறகு தங்களை திடப்படுத்தி கொண்டனர்.
இவள் சாதிக் அருகே சென்று அமர்ந்தாள். நவீனாவின் கைகள் இறுக்கி பிடித்தான் சித்து. அதில் இனி உனக்கு நான் இருக்கேன் என்று உணர்ந்தாள் நவீனா.
மதினாவும் அஜ்மலும் கண்களில் தங்கள் காதலை பரிமாறி கொண்டனர். இதை பார்த்து ரசித்து கொண்டு இருந்தாள் ஷாயின்.
அவள், அவர்களுக்காக துஆ கேட்டாள். சாதிக்கோ அவளை தன் நெருப்பு பார்வையை அவள் மேல் வீசி கொண்டு இருந்தான்.
அவளும் அதை கண்டும் காணாமல் இருந்தாள். பிறகு அனைவரிடமும் பிரியா விடை கொடுத்து பிரிந்தார்கள்.
அனைவரும் ஒரே வேனில் ஏறினர் சாதிக் ஷாயினை தவிர. அவர்கள் இரூவரையும் தனி காரில் ஏற்றி அனுப்பினர்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளவில்லை. அவள் காரின் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டு வந்தாள்.
ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
இருவரையும் உள்ளே அழைத்து செல்ல பட்டனர். அந்த வீடு ஷாயினுக்கு பிடித்து விட்டது.
நுழைந்ததும் சிறிது பெரிய ஹால் அதற்கு வலது புறத்தில் அம்மா அப்பாவின் அறை. அதற்கு சரியாக எதிர்புறம் கெஸ்ட் வந்தால் தங்குவதற்கு இரு அறைகள்.
அதற்கு பக்கத்தில் கிச்சன். அதற்கு பின் பெரிய தோட்டம் அங்கு கழிவரை இருந்தது. ஹாலின் வலது புறத்தில் சிறு சந்து இருந்தது அதற்குள் ஒரு அறை அது தான் நம் சாதிக் அறை .
அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது அந்த வீடு. ஒரு சில சடங்குகள் முடிவதற்கு மாலை ஆகிவிட்டது. பிறகு ரிஹானாவும் ஷாயினும் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.
.
.
.
.
.
.
ஷாயினை அனுப்பி விட்டு அனைவரும் இன்முகத்துடன் வந்தனர். மதி நவீ ரெண்டு பேரும் இங்க வாங்க என்று சுலைமான் அழைக்க அவர்கள் இருவரும் அவர் அருகில் உட்கார்ந்து என்னப்பா என்று கேட்க
இருவரின் தலையை வருடி உங்களுக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் தானே என்று கேட்க சம்மதம் தான் எங்களுக்கு என்று இருவரும் இன்முகத்துடன் கூறியவர்களை அகமகிழ்ந்து இருவரின் நெற்றியிலும் முத்தமிட்டார்.
அல்ஹம்துலில்லாஹ் எல்லாமே நல்ல படியா முடிந்தது என்று அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.
.
.
.
.
.
அஜ்மல் தன்னவளை நினைத்து கொண்டு இருந்தான். ப்ப்ப்பா என்ன கண்ணுடி உன்னோடது. என்னை ஏதோ பண்ணிடுச்சு என்று அவள் போட்டோவை பார்த்து பேசி கொண்டு இருந்தான்.
கதீஜாவும் காதரும் தங்கள் வீட்டுக்கு ஒரு நல்ல பெண் மருமகளாக வரப்போகிறாள் என்று நினைத்து மகிழ்ந்தனர்.
நவீனா நல்ல பொண்ணு நம்ம வீட்டுக்கு ஏத்த மருமகள் என்று சொன்ன பூர்ணிமா உங்க அம்மாவும் இருந்து இருந்தா நல்லா இருந்திருக்கும் அத்தை என்னை அவங்க மகள் மாதிரி பார்த்து கிட்டாங்க. என்னை ஒரு நாளும் வேலை செய்ய விட்டதே இல்லை அவங்க இல்லை அப்படின்ற குறை தான் மத்தபடி எல்லாம் நல்ல படியாக நடந்தது என்று அவர் பூர்ணிமா கூற ம்ம்ம் எங்க அம்மாவும் உடம்பு சரியில்லாத அப்ப அடிக்கடி என் மருமகளையும் பேரனையும் நல்ல படியா பார்த்து கொள் டா குமாரு சொல்லுவாங்க என்றார் கண்ணீர் பட அங்கு வந்த சித்து அச்சோ ரெண்டு பேரும் ஏன் இப்படி கண்கலங்கிற பாட்டியோட ஆசிர்வாதம் எனக்கும் என் நவீனாக்கும் இருக்கும் நீங்கள் பீல் பண்ணாதிங்க இல்லைனா கிழவி நைட் வந்து உங்க ரெண்டு பேரையும் பயமுறுத்தும் என்றவுடன் ஏன்டா என் மாமியார் உனக்கு கிழவியா என்று அவனை அடிக்க அவன் தப்பித்து தன் அறைக்கு சென்றான்.
அறையில் பாரு செல்லம் உன் மாமியார் என்னை அடிக்க வராங்க என்று நவீயின் போட்டோவிடம் முறையிட்டான் சித்து. அவளை நினைத்து கொண்டு எப்போது தூங்கினான் என்பது அவனுக்கே தெரியவில்லை.
.
.
.
.
.
.
மதி முன் அஜ்மலின் கண்கள் மட்டுமே வந்து சென்றது. டேய் உன் நீ மட்டும் தான்டா என் கண்ணுலே இருக்க கண்ணை மூடினாலும் திறந்தாலும் நீதான் தெரியுர என்னை ஏன்டா இப்படி ஒரே நாளே இம்சை பண்ற என்று அவனை செல்லமாக திட்டி கொண்டு இருந்தாள்.
நவீ, அவன் தன் கையை இறுக பற்றி கொண்டதை நினைத்து வெட்கிக் கொண்டு இருந்தாள். டேய் சிது எப்படா உன்னை பார்ப்பேன் என்று அவனையே நினைத்து கொண்டு இருந்தாள்.
ஏய் நவீ தூக்கமே வர மாட்டேன்து டி என்று சிணுங்க எனக்கும் தான்டி அவன் கண்ணு இருக்கு பாரு என்னால் முடியலை என்று மதி சொல்ல . ஏய் என்னடி இவனுங்க ஒரே நாளே நம்மல இப்படி கவுத்துட்டானுங்க என்றாள் நவீ..
இருவரும் எப்போது தூங்கினார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை.
.
.
.
.
.
.
.
இரவு ஷாயினை அலங்கரித்து சாதிக் அறையினுள் விட்டார்கள். அவள் இன்று எப்படியாவது நாம பண்ணதுக்கு சாரி கேட்டே ஆகணும் என்று நினைத்தவாறு கதவை தாழிட்டு சாதிக் அருகே சென்றாள்.
அவன் அவளை எரித்து விடும் படி பார்க்க அவள் பேச முனைவது முன் அவள் கன்னத்தில் அறை விட்டு உன்னை பார்த்தாலே எரிச்சலாக இருக்கு. என்னை ஏமாற்றிவிட்டு போனவள் நீ என்று அவளை திட்டி விட்டு அவன் உறங்கி விட்டான்.
அவளால் அவன் வார்த்தைகளை கேட்க முடியாமல் தவித்தாள். ஏன் அல்லாஹ்! எனக்கு இந்த சோதனை. என்னால் முடியவில்லை என்று வெளிப்படையாக அழுதாள். பிறகு அங்கு கீழே படுத்து கொண்டாள்.
விடிந்தது.....
அல்லாஹீ அக்பர் என்ற பாக்கின் ஓசை கேட்டு கண்விழித்தவள் சற்றும் தாமதிக்காமல் உளு செய்து விட்டு தொழுதாள்.
அவன் தொழுக சென்று இருப்பான் புரிந்து கொண்டு இவள் குளிக்க சென்றாள். குளித்து விட்டு வர அங்கு சாதிக் நின்று கொண்டு இருக்க அவன் அவளை கண்டு கொள்ளாமல் அவன் குளிக்க சென்று விட்டான்.
அவள் ஏதுவும் சொல்லாமல் சிறிது நேரம் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள். சிறிது நேரம் கழித்து ஹாலிற்கு சென்று அங்கு ரிஹானாவிடம் நான் தான் இன்னிக்கு சமையல் செய்வேன் என்றவுடன் அதெல்லாம் வேண்டாம் போய் அமைதியாக உட்கார் என்று அவர் அதட்ட இவள் சரி அப்ப நான் இங்கே உட்கார்ந்து கொள்கிறேன் என்று சமையல் கட்டையில் ஏறி அமர்ந்து தன் மாமியாரிடம் கதை அடித்த படி இருந்தாள்.
அவர் பொறுமையாக எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டு நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டனர்.
டேய் இன்னிக்கும் வேலைக்கு போறியா? என்று ஹாபிஸ் அதட்ட அப்பா போகட்டும் விடுங்கள். ஏதாவது முக்கியமான வேலை இருக்கும் என்று அவனுக்காக பரிந்து பேசினாள்.
அவனுக்கு எரிச்சல் தந்தாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக அவளை முறைத்து கொண்டே சென்றான். அவள் மனதில் வலிகள் அதிகமாகி கொண்டே சென்றது. அதை புரிந்து கொள்வதற்கு தான் யாரும் இல்லை.
.
.
.
.
.
கல்லூரிக்கு சென்றான்...
சாதிக் செயல் அஜ்மலையும் சித்துவையும் வருத்தம் அளித்தது. டேய் சாதிக் உன் மனசுல என்ன தான்டா நினைத்து கொண்டு இருக்க? என்று சித்து கேட்க ஏன்டா என்று அவன் கேட்க நீ எப்ப தான் அந்த பொண்ணை ஏத்துக்க போற? என்று அஜ்மல் கேட்டவுடன்.
அவளை எனக்கு சுத்தமா பிடிக்கலை எவ்வளவு தடவை சொல்றது? என்று எரிச்சலோடு சொல்ல டேய் என்ன ரிசன் என்று அஜ்மல் கேட்க.
என்னை ஏமாற்றி விட்டு போனவள் அவள் என்று கூற ஏமாற்றி போனவங்க தான் ரெண்டு வருஷம் கழிச்சு உன்கிட்ட வந்து என்னை திருமணம் செய்து கொள்ள சொன்னாங்களா என்று அஜ்மல் கேட்க அவளுக்கு அவங்க வீட்டுல பார்த்த மாப்பிள்ளை பிடிச்சு இருக்காது என்று சொன்னவன் கன்னங்களில் பளார் என்று அறையே அதிரும் அளவுக்கு அறைந்தாள் மித்ரா.
நீ எப்ப வந்த ? என்று அஜ்மல் கேட்க நான் எப்போதோ வந்துட்டேன். ஷாயினை புரிஞ்சி கிட்ட அவளோட சேர்ந்து வாழ போறேன் வாழ்த்து சொல்ல தான் வந்தேன் இங்கே ஆனால் எப்ப நீ அவளை இந்தளவுக்கு பேசினியோ அவள் காதலுக்கு துளி கூட தகுதி இல்லாதவன் நீ . அவளை நீ அழ வச்சிட்டல ம்ம்ம் நான் கிளம்பிறேன் என்று எரிச்சலோடு சென்றாள் மித்ரா.
மித்ரா அடித்து விட்டு சென்றது சாதிக்கை மேலும் கோபம் அடையவே செய்தது தவிர யோசிக்க வைக்கவில்லை. அவன் நண்பர்களும் எப்படியோ போ என்று விட்டு சென்றனர்.
.
.
.
.
ரிஹானா என்ன அப்பாவை திட்டி கிட்டு இருக்க? என்று ஷாயின் கேட்க நீயே பாரு செல்லம் நான் சமையல் செய்றேன் பெயர் ல சாம்பார்க்கு பருப்பு பதில் கடலைப்பருப்பு ஊற வைத்து இருக்காரு என்று அவரை முறைத்து கொண்டே கூற ஷாயின் சிரிப்பை அடக்க முடியாமல் வாயீ விட்டே சிரித்து விட்டாள்.
அல்லாஹீ அக்பர் ஏன் ப்பா அதான் உங்களுக்கு வரலை தானே அதை ஏன் டிரை பண்ணணும் என்று கேட்க அதுக்கில்லை டா ஒரு சமூக சேவை தான் என்று பாவமாக பதில் சொல்ல ரொம்ப நடிக்காதிங்க கேவலாமாக இருக்கு என்று ரிஹானா சொல்ல இருவரின் செல்ல சண்டைகளை பார்த்து ரசித்து கொண்டு இருந்தாள் ஷாயின்.
இதில் அவள் தன்னையும் சாதிக்கையும் நினைத்து கொண்டு இருந்தாள்.
ஷாயு மா இன்னும் கொஞ்சம் தானே இருக்கு சாப்பிடு டா என்று அவன் கெஞ்ச சாதிக் போதும் இதுக்கு மேலே வேண்டாம் என்று அவள் சிணுங்க அவன் அவளை அதட்டி சாப்பிட வைத்தான்.
அந்த கனவில் முழ்கி இருந்தவள் ஷாயின் ஷாயின் என்று ரிஹானா அழைப்பது கூட அறியாமல் தன் கனவில் இருந்தவளை ஷாயின் என்ற கடுப்பான குரல் அவளை மீண்டெடுத்தது.
என்னடி அப்படி கனவு காணுற என்று ரிஹானா கேட்க அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள். சரி சரி வா நாம கொஞ்சம் வெளியே கடைக்கு போய்ட்டு வரலாம் என்று கூற அவளும் சிறு மாற்றத்திற்காக சம்மதித்தாள்.
அப்பா நீங்கள் வரலையா என்று கேட்க அவர் நான் வரலை நீங்கள் மட்டும் போய்ட்டு வாங்க என்றவுடன் அதெல்லாம் தெரியாது நீங்களும் வாங்க என்று மூவரும் ஒன்றாக சென்றனர்.
மூவரும் கதை அளந்த படி சென்று கொண்டு இருந்தனர். அங்கு செல்பவர்கள் எல்லாரும் அவர்களை பார்த்து கொண்டே சென்றனர்.
கடைக்கு சென்று அவர் தேவையானதை வாங்கி கொண்டு அம்மு உனக்கு ஏதாவது வேண்டும் என்றால் வாங்கி கொள் என்றவுடன் எனக்கு ஏதுவும் வேண்டாம் அம்மா என்றவுடன் போ மா என்று அவர் அதட்ட சரி உங்கள் ஆசைக்காக வாங்குறேன் என்று என்ன வாங்கலாம் என உள்ளே சென்று பார்த்தாள்.
அவள் குலாப் ஜாமூன் மாவை பார்த்ததும் அதை எடுத்தாள். பெரிய பாக்கெட் வாங்கலாமா சின்ன பாக்கெட் வாங்கலாமா சரி நாம அம்மா கிட்டேயே கேட்டு வாங்கிகலாம் என்று இரண்டு பாக்கெட்டையும் எடுத்து கொண்டு வந்தாள்.
அங்கு மித்ராவுடனும் அவள் அம்மா சுதாவுடனும் பேசி கொண்டு இருந்தார். அவள் மித்ராவை பார்த்து ஏய் மித்ரா எப்படி இருக்கே? என்று மகிழ்ச்சியுடன் கேட்க அவள் உன்னால மட்டும் எப்படி டி சிரிச்சிட்டு இருக்க முடியுது? உன்னை போய் எப்படி டி அவனால அப்படி நினைக்க முடிஞ்சிது ? என்று தன் மனதில் யோசித்தவாறு இருந்தவளை மித்ரா என்ற ஷாயினின் கடுமையான குரல் அவளை தன்னிலை வர செய்தது.
அவள் என்னடி என்று கேட்க மித்ரா ஒன்னுமில்லை டி என்றாள். அம்மா நீங்கள் எப்படி இருக்கிங்க? அப்பா எப்படி இருக்காரு? அப்பாவை கேட்டதா சொல்லுங்கள் என்றவுடன் ஏம்மா ஒவ்வொன்னா கேளு மா என்று சுதா சொல்ல சரி ஆண்டி என்றாள்.
அப்பா நல்லா இருக்காரு நானும் நல்லா இருக்கேன். ஏய் மித்ரா சொல்ல மறந்துட்டேன் டி நவீ மதி ரெண்டு பேருக்கும் மேரேஜ் டி என்றவுடன் சந்தோஷமாக எப்படி என்று அவள் கேட்க இன்னும் டேட் பிக்ஸ் பண்ணலை நேத்து தான் எங்கேஜ்மட்டே நடந்தது என்றவுடன் மாப்பிள்ளை யாரு? என்று அவள் கேட்க வேற யாரு உன் ரெண்டு அண்ணன்கள் தான் என்று ரிஹானா கூற யாரு அஜ்மல் அண்ணாவும் சித்தார்த் அண்ணாவுமா என்று அவள் ஆச்சிரியத்துடன் கேட்க ஆமாம் என்றாள் ஷாயின்.
அடப்பாவி ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லலை இரு இன்னிக்கு அவனை பார்த்துகிறேன் என்று பொய் கோபத்தோடு சொன்னாள்.
சரிம்மா நாங்கள் கிளம்புறோம் என று சுதா சொல்ல சரி மா போய்ட்டு வா என்று வழி அனுப்பி வைத்தார்.
ஆஹான் அம்மா இதுல எந்த பாக்கெட் வாங்குவது என்று கேட்க ரெண்டு எடுத்து கொள் நமக்கு சரியாக இருக்கும் என்றவுடன் சரி ம்மா என்று பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
பிறகு மதிய உணவை மூவரும் சேர்ந்து சாப்பிட்டனர். சிறிது நேரம் பேசி விட்டு சிறிது நேரம் தூக்கம் போட்டாள் ஷாயின்.
அவளுக்கு தூக்கம் வரவில்லை. அவள் மனதில் சாதிக் நிறைந்து இருந்தான். அவன் என்னை புரிந்து கொள்ள சிறிது நேரம் தேவை அதை நாம் அவனுக்கு தருவோம். நிச்சயமாக நம்மை புரிந்து கொள்வான் என்று நினைத்து கொண்டு அஸர் தொழுகை முடித்து விட்டு சிறிது தூக்கம் போட்டாள்.
இன்னிக்கி உன் முகத்தில் எப்பவும் இல்லாத ஒரு சந்தோஷம் தெரியுது ரிஹானா அதற்கு காரணம் ஷாயின் தெரியும் என்றார் ஹாபிஸ். ம்ம்ம் ஆமாங்க வீட்டில் எப்பவும் சாதிக் போய்ட்ட பிறகு நாம ரெண்டு பேரும் இருக்க போர் அடிக்கும் ஆனா இன்னிக்கு அவள் நம்ம கூட இருக்கும் போது நமக்கு இப்படி ஒரு பெண் பிள்ளை இல்லாமல் போனதே ரொம்ப வருத்த படுறேன் ஆனால் அவள் எனக்கு எப்பவும் மகள் தான் என்றவுடன் ம்ம்ம் ஆமா ரிஹானா.
நம்ம ஷாயின் கிட்ட எல்லா குறும்பு இருக்கு எப்படி தான் இவளை சமாளித்தாங்களோ இவங்க அம்மா அப்பா குழந்தை என்று ஹாபிஸ் சொல்ல ம்ம்ம் ஆமாம் ஆனா பொண்ணுங்களை நல்லா வளர்த்து இருக்காங்க அவங்க அம்மா அப்பா.
நான் சொன்னது ஷாயினை மட்டும் இல்லை நவீ மதி தான் சேர்த்து சொல்றேன். அவங்க ரெண்டு பேரும் நம்ம அஜ்மலுக்கும் சித்துவுக்கும் ஏத்த பொண்ணுங்க.
நம்ம பசங்க நல்லா இருந்தா தான் நாம நிம்மதியாக இருக்க முடியும் என்று ரிஹானா சொல்ல சரி மா என்று அவர் தலையை வருடி விட்டார் ஹாபிஸ்.
ரிஹானா அவரை அன்போடு அவரை பார்த்தார். அப்போது சாதிக் வேலை முடித்து விட்டு வந்தான்.
அவனுக்கு டீ போட்டு எடுத்து கொண்டு வந்து கொடுத்தார் ரிஹானா. அவனும் குடித்து விட்டு தன் அறைக்கு சென்றான்.
அங்கு உறங்கி கொண்டிருந்த ஷாயினை தன்னை மீறி அவளை ரசித்து கொண்டு இருந்தான்.
பிறகு அவன் தன்னிலை திரும்பி அவன் பாத்ரூம் சென்று தன் வேலைகளை முடித்து விட்டு வந்தான்.
சிறிது நேரத்தில் அவள் எழுந்தாள். அல்லாஹீ இவ்வளவு நேரமா தூங்கி இருக்கேன். பிறகு தொழுது விட்டு ரிஹானாவிடம் சென்றாள்.
அம்மா இன்னிக்கு நைட் நான் தான் செய்வேன் என்று அவள் அடம்பிடிக்க சரி சரி டா சப்பாத்தி செய் டா என்று விட்டு செல்ல அவளே எல்லாம் செய்து ரெடி ஆகினாள்.
அங்கு தண்ணீர் குடிக்க வந்த சாதிக் அவளை பார்க்க இவள் என்ன சார் வேண்டும் என்று புருவம் உயர்த்தி கேட்க ம்ம்ம் ஒன்னும் இல்லை இதை சாப்பிட்டு நாங்கள் உயிரோட இருப்போமா? யோசிட்டு இருக்கேன் என்றுவிட்டு சென்றான்.
அவள் பேசுவதற்குள் சென்று விட்டதால் அவளால் ஏதுவும் பேச முடியவில்லை.
அவள் சப்பாத்திக்கு சாம்பார் வைத்தாள்.
சரி ம்மா நாங்க தொழுதுட்டு வரோம் என்று அவர்கள் இருவரும் செல்ல பெண்கள் இருவரும் சேர்ந்து வீட்டில் தொழுதனர்.
இருவரும் தொழுகை முடித்து வர நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டனர்.
சாப்பிட்டு விட்டு அவரவர் அறைக்கு சென்றனர். சாதிக் அறைக்கு வந்தான். அவன் பின் ஷாயினும் வந்தாள்.
அவனிடம் எதுவும் பேசாமல் கட்டிலை சரி செய்து விட்டு அவள் சிறிது நேரம் குர்ஆன் ஒதிவிட்டு நவீனா மதியிடம் பேசி கொண்டு இருந்தாள். கிட்டதட்ட இரண்டு மணிநேரம் கழித்து தான் போனை வைத்தாள். அதை பார்த்து கொண்டு இருந்தான் சாதிக்.
அவனுக்குள் இருக்கும் காதல் எட்டி பார்த்தது. ஆனால் அவள் மேல் கோபம் அவன் கண்முன் வந்து அவன் காதலை மறைத்தது. பிறகு ச்சே என்று தூங்கி விட்டான்.
அவளும் பேசிவிட்டு தூங்கி கொண்டிருந்த சாதிக்கை சிறிது நேரம் ரசித்து விட்டு தூங்கினாள்.
.
.
.
.
.
.
ஏய் ரெண்டு பேரும் தூங்காமல் யார்கிட்ட டி பேசிட்டே இருக்கிங்க என்று சுசீலா அதட்ட வேற யாரு நம்ம மாப்பிள்ளை கிட்ட தான் பேசிட்டு இருப்பாங்க என்று சரத் சொல்ல அச்சோ அப்பா நான் உங்கள் வாலு கிட்ட தான் பேசிட்டு இருந்தோம் என்றவுடன் ம்ம்ம் சரி மா நம்பிட்டோம் என்றார் சரத்.
அப்பா நிஜமாகவே நாங்கள் உங்க மாப்பிள்ளை கிட்ட பேசலை என்று மதினா சொல்ல சரி மா நம்பிட்டோம். ச்சே இந்த நேரம் பார்த்து நம்ம ஷாயின் இல்லாமல் போய்ட்டாலே என்று சரத் சொல்ல அப்பா வேண்டாம் இவ்வளவு நேரம் எங்களை கலாய்த்து எடுத்துட்டா ப்பா போதும் இதுக்கு மேலே எங்களால தாங்கிக்க முடியாது என்று இருவரும் கெஞ்ச சரி சரி மா நீங்கள் போய் தூங்குங்க என்று சுசீலா சொல்ல நல்ல ம்மா என்று அவள் கன்னத்தை தட்டி விட்டு இருவரும் தூங்கினர்.
ஏங்க உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா பிள்ளைங்க கிட்ட இப்படி தான் பேசுவிங்களா என்று சொல்ல சரத் இல்லை டா சும்மா என்றவுடன் ஆமா இவரு அப்படியே மனசுல யூத் நினைப்பு என்றவுடன் ஏய் நாங்க எப்பவும் யூத் தான் என்றவுடன் பழைய std பூத் மாதிரி இருந்துட்டு என்றவுடன் அப்ப நீங்கள் மேடம் என்றவுடன் அவர் என்ன சொல்வதென்று தெரியாமல் எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன் என்று தப்பித்து கொண்டார். அவரும் புன்னகை சிந்தி விட்டு தூங்க சென்றார்.
இந்த இரண்டு ஜோடிகளும் தங்கள் தூங்கத்தை தொலைத்தனர். ஒருவரை ஒருவர் நினைத்து கொண்டு இருந்தனர்.
ஒரு வாரம் சென்ற நிலையில், ஷாயின், சாதிக் உங்கிட்ட கொஞ்சம் பேசனும் என்று சொல்ல என்ன பேசனும் என்று எரிச்சலோடு கேட்டான்.
இல்லை இன்னும் சர்டிபிகேட் வாங்கலை காலேஜ் போகனும் அழைச்சிட்டு போறிங்கலா? என்று கேட்டவளை அதெல்லாம் முடியாது எனக்கு டைம் இல்லை நீ போய் வாஙகிக்கோ நான் ஏதுவும் சொல்லலை என்று விட்டு சென்றான்.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக கட்டிலில் அமர்ந்து அழுது விட்டு பிறகு வெளியே வந்து தன் வேலைகளை பார்த்தாள்.
ஷாயின் இங்க வாடா என்று ரிஹானா அவளை அழைத்து தன்னருகில் அமர வைத்து ஷாயின் மா இந்தா இந்த ஆல்பம் பாரு என்று சாதிக்கின் சிறு வயது இப்போது இருக்கும் வரை எஞுத்த போட்டோக்கள் அடங்கிய ஆல்பத்தை அவளிடம் நீட்டினார் ரிஹானா.
அவள் அதை வாங்கி ஒவ்வொன்றாக பார்த்தாள். அதில் சாதிக் எது என்று கேட்டு கொண்டு உற்சாகத்துடன் அதை தன் அறைக்கு எடுத்து வந்து பார்த்தாள்.
அவளின் எண்ணத்தை புரிந்து கொண்ட ரிஹானாவும் ஹாபிஸீம் தங்களுக்குள் சிரித்து கொண்டு அமைதியாக இருந்தனர்.
அதில் இருக்கும் குழந்தை சாதிக்கை ரசித்து கொண்டு இருந்தாள். அல்லாஹீ எவ்வளவு அழகாக இருக்க என் செல்லக்குட்டி என்று அந்த போட்டோக்கு முத்தம் கொடுத்தாள்.
ஒவ்வொரு போட்டோவையும் தன்னை மறந்து ரசித்து ரசித்து பார்த்து கொண்டு இருந்தாள் தன்னவனை.
அந்த ஆல்பத்தில் கல்லூரி சுற்றுலா செல்லும் போது எடுத்த போட்டோவில் அவன் மட்டும் தனியாக இருந்த அவளுக்கு பிடித்த ஒன்றை தன் போனில் போட்டோ பிடித்து கொண்டு தன் மொபைலின் wallpaper ஆக அதை வைத்து கொண்டாள்.
மீண்டும் மீண்டும் அதை பார்த்து பார்த்து ரசித்து கொண்டு இருந்தாள். அவள் மனதில் இன்னும் ஆழமாக பதிந்தான் சாதிக்.
அவள் போட்டோ பார்த்து மாஷா அல்லாஹ் என்ன டா கொல்ற. போ நீ ரொம்ப அழகா இருந்து என்ன கொல்ற என்று தன்னவன் போட்டோக்களை பார்த்து பேசி கொண்டு இருந்தாள் ஷாயின்.
சிறு வயதில் அவன் செய்த குறும்புகளை போட்டோவாக இருந்தது அதை பார்த்து கேடி என்னமா குறும்பு செய்து இருக்கு என்றவுடன் உன்னை விடவா டி என்று சொல்லிய தன் மனசாட்சி பார்த்து உன்னை யாரு இப்ப வர சொன்னா உள்ள போ அமைதியா என்று அதை அடக்கி விட்டு இவள் வேலையை தொடங்கினாள். டேய் நமக்கு உன்னை மாதிரியே ஒரு குழந்தை வேண்டும் டா ! அது ஆணோ பொண்ணோ எதுவாக இருந்தாலும் எனக்கு ஒகே பட் அது உன்னை மாதிரி கியூட்டா இருக்கனும் சாதிக் என்று தன் மனதில் உள்ளதை சொல்லி கொண்டு பார்த்து கொண்டு இருந்தாள் .
அவள் தொழுது விட்டு வெளியே வந்நாள். என்ன அம்மு போட்டோ பார்த்தியா என்று ஹாபிஸ் கேட்க ம்ம்ம் பார்த்த ப்பா என்று உற்சாகமாக தலையசைத்தாள்.
சரிம்மா நீ பிஎஸ்சி முடிச்சிட்ட பிஜி க்கு அப்ளை பண்றியா என்று ஹாபிஸ் கேட்க இல்லை வேண்டாம் என்று விட்டாள். ஆனால் அவள் மனதில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவள் தோழிகள் இல்லாமல் அவளுக்கு விருப்பமில்லை என்று உணர்ந்த ஹாபிஸ் சரிம்மா என்று விட்டார்.
மாலை வீடு வந்து சேர்ந்தான் சாதிக். அவனுக்கு ஷாயின் டீ போட்டு கொண்டு வந்து கொடுக்க அவனும் அதை குடித்து விட்டு அறைக்கு சென்றான். அவளும் சென்று உள்ளே அமர்ந்து ஏதோ ஒரு புக்கை படித்து கொண்டு இருந்தாள்.
பிறகு இரவு சாப்பாட்டை முடித்து தன்னறைக்கு வந்தார்கள். அவன் நாளை எடுக்க போகும் பாடத்தை பார்த்து கொண்டு இருக்க இவள் அவனை பார்த்து கொண்டு இருந்தாள்.
அவன் எதேச்சையாக திரும்ப அவள் தன்னை தான் பார்க்கிறான் என்பதை உணர்ந்து ஓய் என்ன லூக்? என்று கேட்டவனை என்ன சொல்வதென்று தெரியாமல் ஒ..ஒன்..ஒன்னுமில்லை என்று கூறிவிட்டு படுத்து கொண்டாள்.
அவன் ம்ம்ம் என்று பெருமூச்சு விட்டு தூங்க சென்றாள்.
ஷாயின், கொல்றானே! என்னை. நான் பார்த்ததை வேற அவன் பார்த்துட்டா என்ன நினைப்பானு தெரியலையே! ஏற்கனவே என் மேல கொலை வெறில இருக்கான் இப்ப இது வேற ! அல்லாஹ் நீதான் காப்பாதனும் என்று விட்டு அவனை நினைத்து கொண்டு தூக்கத்தை தொலைத்தாள்.
அவள் எழுந்து சாதிக்கை பார்த்தாள். அவன் நன்றாக தூங்கி கொண்டு இருந்தான். அவள் அவன் அருகில் அமர்ந்து அவன் தலையை வருடி விட்டு அவன் நெற்றியில் தன் இதழை பதித்தாள். தன் கண்களில் வந்த கண்ணீரை துடைத்தவள் அவன் மேலே உறங்கி போனாள்.
அவனும் அவளை தூக்கத்தில் அணைத்து கொண்டு தூங்கினான். தொழ எழுந்தவள் அவன் அணைப்பில் இருக்கோம் என்பதை உணர்ந்து அல்லாஹ்வே இவன் மேலேயா இவ்வளவு நேரம் தூங்கி இருக்கோம்😦😦 இதை அவன் பார்த்தா கத்துவானே எப்படி எஸ் ஆகுறது என்று யோசித்தவாறு இருந்தவள் அவன் அணைப்பு சற்று லேசாகுவதை உணர்ந்தவள் அப்படியே அவனிடம் இருந்து தப்பித்தாள்.
பிறகு உளு செய்து விட்டு தஹஜ்ஜித் தொழுதாள். அவள் தொழுது கொண்டு இருந்த நேரம் அவன் விழித்தான். அவனும் பள்ளிவாசல்க்கு சென்றான் தொழுவதற்கு.
இவள் குளித்து விட்டு சாதிக் டிரஸை அயர்ன் செய்து வைத்தாள். சாதிக் குளித்து விட்டு அயர்ன் செய்து வைத்த துணியை உடுத்தி கொள்ள முனையும் போது ஷாயின் அவனை அணைத்து கொண்டாள்
அவள் தன் மேல் சாய்ந்த அதிர்ச்சியில் உறைந்து நின்றான். அதை சுதாரிக்கும் முன் அவனிடம் இருந்து விலகி அவன் காதருகில் சென்று ஐ லவ் யூ சாதிக் என்று சொல்லிவிட்டு எங்கே தன்னை திட்டி விடுவானோ என்று தப்பித்து விட்டாள்.
அவன் எத்தனை நொடிகளோ நிமிடங்களோ அப்படி நின்றான் என்று தெரியவில்லை தன்னிலை திரும்பியவன் என்ன செய்வதென்று தெரியாமல் சாப்பிட்டு விட்டு ஷாயினை முறைத்து விட்டு சென்றான்.
அவள் அதை கண்டுக்காம இருந்து விட்டாள். ரிஹானா ஹாபிஸ் இருவரும் இவர்கள் இருவருக்கும் இடையில் பேச்சு வார்த்தை கூட இல்லை என்பதை அறிந்து கொண்டார்கள். ஏதோ பிரச்சினை இருக்கு என்றும் தெரிந்து கொண்டார்கள்.
ஷாயின் நடந்ததை நினைத்து வெட்கிக் கொண்டு இருந்தாள்.
அஸ்ஸலாமு அலைக்கும்( வரஹ்) என்று உள்ளே நுழைந்தார்கள் சுலைமான் ரியாஸ் சரத். வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்) என்று அவர்களை வரவேற்றனர் ஹாபிஸீம் ரிஹானாவும்.
தன் அப்பாவின் குரல் கேட்டு ஒடி வந்து அணைத்து கொண்டாள். எப்படி இருக்கிங்க ப்பா என்று கேட்டவளை அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருக்கோம் டா என்றார் சரத்.
ம்ம்ம் சரி ப்பா என்றாள். பாய் நாங்க மதி நவீ நிக்காஹ் இன்னும் ரெண்டு வாரத்தில் வருது அதான் ஷாயினை அழைச்சிட்டு போலாம் வந்தோம் என்று ரியாஸ் கூற நாங்களே அனுப்பி வைக்கனும் நினைச்ச நீங்கள் வந்துடிங்க என்றார் ஹாபிஸ்.
சரிம்மா நீ கெளம்பு என்று ரிஹானா கூற அவள் இல்லை அ... அவ..அவர் கிட்ட சொல்லாம எப்படி போறது அவர் கிளாஸ்ல இருப்பாரு போன் எடுக்க மாட்டார் என்று சொல்லியவளை நான் சொல்லிக்கிற நீ கிளம்பு என்று அதட்ட அவள் மனமே இல்லாமல் கிளம்பினாள்.
ரிஹானா ஒழுங்கா சாப்பிடனும் அப்றம் அப்பாவை திட்ட கூடாது. அப்படி திட்டுன அப்றம் பேச மாட்டேன் என்று செல்லமாக தன் மாமியாரை அதட்டி கொண்டு இருந்தாள். அப்பா அதே மாதிரி சமைக்கிறேன் பேருல ஏதாவது செஞ்சி அம்மா கிட்ட பாட்டு வாங்கிகாதிங்க அப்றம் நான் பொறுப்பு ஆக மாட்டேன் என்று அவரையும் செல்லமாக அதட்டி விட்டு சென்றாள்.
ஏன் பாய் ஷாயின் இப்படி நடந்துகிறது வருத்தம் இல்லை தானே என்று தயக்கமாக சுலைமான் கேட்க எங்களுக்கு பெண் குழந்தை இல்லை என்ற குறையை தீர்த்தவள் ஷாயின். அவள் எங்கள் வீட்டு ராணி என்று ரிஹானா கூற மூவரும் அகமகிழ்ந்தனர்.
தன் மாமியார் கூறியதை கேட்ட ஷாயின் கண்கலங்கினாள். அதை வெளியே காட்டாமல் அவர்களிடம் இருந்து விடைப்பெற்றாள்.
.
.
.
.
.
சாதிக் பாடத்தை நடத்த முடியாமல் தவித்து கொண்டு இருந்தான். காலை தன்னிடம் ஷாயின் நடந்தது தான் கண்முன்னே வந்தது.
Dear students i will continue my class tomorrow you can enjoy now I'm leaving என்று சொல்லி விட்டு தன் இடத்திற்கு வந்தமர்ந்தான்.
அவன் கண்முடி நாற்காலியில் சாய்ந்த போதும் அவளே வந்தாள். அவனை அறியாமல் அவன் புன்னகை சிந்தினான்.
அவனால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவளின் நினைப்பு அவனை என்னமோ செய்து கொண்டிருந்தது.
.
.
.
.
.
.
அவள் மனமெல்லாம் சாதிக் தான் இருந்தான். தன் மாமியார் தன்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்த ஷாயின் இப்படியும் இருப்பார்களா என்று ஆச்சரியம் அடைந்தாள்.
அவள் அப்படியே சரத் மடியில் உறங்கி போனாள். ஏன் சுலைமான் எவ்வளவு அழகாக தூங்குறா பாரு என் வாலு என்று ஷாயினை பார்த்து சொல்ல ம்ம்ம் ஆமாம் என்றார் அவள் தலையை வருடிய படி.
நீதான் ஷாயினை சின்ன வயசுலருந்து வளர்த்தவன். அதான் அவளுக்கு உன் மேல் கொஞ்சம் பாசம் அதிகம் என்று ரியாஸ் சொல்ல . ம்ம்ம் ஆமாம் நாங்க வேண்டாம் சொன்னாலும் நீ அவ கேட்டதை வாங்கி கொடுக்காமல் இருக்க மாட்ட என்று சுலைமான் சொல்ல நீ மட்டும் என்ன என் பொண்ணை நீதான வளர்த்த என்று சொல்ல சரிசரி வேண்டாம் என்று ரியாஸ் சொல்ல சரி என்று வேறு பேச்சை தொடங்கினர்.
இவர்களின் நட்பை கண்டு வியக்காமல் யாரும் இருந்ததில்லை. வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். ஷாயினுக்கு பிடித்ததை எல்லாம் செய்து வைத்து இருந்தார்கள் பாட்டிமார்கள்.
.
.
.
.
மாலை விடு வந்து சேர்ந்த சாதிக்கிடம் ஷாயின் ஊருக்கு போய் இருக்காள் இனி நம்ம அஜ்மல் சித்து நிக்காஹ் முடிஞ்சி தான் வருவாள் என்று சொன்னவுடன் அவன் சரி என்று விட்டு சென்றான்.
அவன் தன்னறைக்கு சென்றவன் குளித்து விட்டு நாளை பாடத்தை எடுத்து புரட்டினான்.
.
.
.
.
ஷாயின் சாதிக் இல்லாமல் ஏதோ அறை குறையாய் சாப்பிட்டு விட்டு எழுந்தாள். அவள் மனம் எங்கும் சாதிக் மட்டும் இருந்தான். அவனை பார்க்க வேண்டும் என்று மனம் ஏங்கியது. என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தாள்.
தன்னவனை காண தன் மனம் துடித்தது. அனைவரும் உறங்கி விட்டனர். ஆனால் ஷாயின் தூக்கத்தை தொலைத்தாள்.
அவன் போட்டோவை பார்த்து போடா பக்கி உன் நினைப்பாவே இருக்கு நீ எப்ப வருவே? உன்னை பார்க்கனும் உன் கிட்ட பேசலனாலும் உன்னை பார்த்திட்டே இருந்தாலே போதும் டா ஆனா இன்னிக்கி அது கூட இல்லை என்று பேசி கொண்டே அதை அணைத்தவாறு தூங்கினாள்.
சாதிக் சாதிக் என்ற ரிஹானா குரலை கேட்டவன் என்னம்மா என்று கேட்க நீ ஊருக்கு கிளம்பி ஷாயினுடன் இரு என்று கூற அவன் உடனே சம்மதித்தான். சரிம்மா போய்ட்டு வரேன் என்று விரைவாக கிளம்பினான்.
இரவு 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்தான் சாதிக். மதி நவீ இருவரையும் எழுப்பி வேறு அறையில் தூங்க சொன்னவுடன் அவர்கள் எதுவும் சொல்லாமல் அமைதியாக வேறு அறைக்கு சென்று உறங்கினர்.
பிறகு சாதிக் நீ போய் படுத்துக்கோ பா என்று ரியாஸ் சொல்ல அவன் உள்ளே சென்றான்.
ஷாயின் உறங்கி கொண்டிருந்தாள். அவள் அருகிலே உறங்கி கொண்டான்.
தொழ எழுந்தவள் அவன் அணைப்பில் இருப்பதை உணர்ந்து அல்லாஹ்வே அவன் மேலே நான் எப்ப போய் படுத்த இவன் எப்படி என் பக்கத்தில் என் பக்கத்தில் நவீ மதி தானே படுத்துட்டு இருந்தாங்க இவன் எப்படி என்று நினைத்தவாறு அவனிடம் இருந்து விலகினாள்.
குழப்பத்துடனே அவள் உளு செய்து விட்டு தொழுதாள். அவனும் எழுந்து பள்ளிவாசலுக்கு சென்று விட்டான்.
அவள் குழப்பத்தோடு இருப்பதை உணர்ந்த அனைவரும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர்.
அவன் பள்ளிவாசல் இருந்து வந்தவுடன் குளிப்பதற்கு உள்ளே சென்றான். இவளும் அவன் பின்னே சென்று சாதிக் நீங்கள் எப்போது வந்திங்க? என்று கேட்டவளை நைட் தான் வந்தேன் அம்மா தான் போக சொன்னங்க அதான் வந்த என்று விட்டு குளிக்க சென்றான்.
அவள் எதுவும் சொல்லாமல் குட்டி தூக்கம் போட்டாள். அவன் குளித்து விட்டு வந்தவன் உறங்கி கொண்டிருந்த ஷாயினை தன்னை மறந்து ரசித்து கொண்டு இருந்தான்.
ஷாயின் என்று நஜி அழைத்து கொண்டு வருவதை உணர்ந்த சாதிக் அவளிடம் இருந்து விலகி வெளியே வந்தான்.
அவனிடம் ஷாயின் என்ன பண்றா தம்பி என்று கேட்டவுடன் தூங்குறா மா என்றான் .
ஏய் கழுதை எழுந்துறு டி என்று அவளை உலுக்க என்னமா போம்மா நான் தூங்கனும் என்று அவள் சிணுங்க ஏய் நஜி அதான் அவள் தூங்கனும் சொல்றா விடு என்று சுலைமான் கூற ம்ம்ம் உங்க பொண்ண திட்டுனா எங்கிருந்து தான் வருவிங்க தெரியலை கரெக்டா ஆஜர் ஆகிடுங்க.
கல்யாணம் ஆயிடுச்சு என்ற குரலை கேட்டு எழுந்தவள் ஏன்ம்மா நானாம்மா உன்னை கல்யாணம் பண்ணி வைக்க சொன்ன நீயா தானே பண்ணி வச்ச என்று பதில் கொடுக்க வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று அவர் கூற என்ன தான் மா உனக்கு வேண்டும் என்று கேடட்வளை எழுந்து வேலை பாரு என்றார்.
ப்பா பாருங்கள் என்று சிணுங்க விடுமா அவள் அப்படி தான் நீ போய் சாப்பிடு என்று அவர் சொல்ல ஒகே சுலைமான் என்றவுடன் ஏன்டி என் புருசனை பேர் சொல்லி கூப்பிடுற? என்று கேட்க வேணும்னா நீயும் கூப்பிடு யார் வேண்டாம் சொன்னா என்று கண்ணடித்து கூற அடிங் என்றவுடன் அவள் நான் நவீ வீட்டுக்கு போறேன் என்று கூறிவிட்டு ஒடிவிட்டாள்.
ஏங்க இன்னும் குழந்தையாவே இருந்தாள் எப்படிங்க? கல்யாணம் ஆயிடுச்சு. அவன் புருசன் இங்க உட்கார்ந்து இருக்கான் அவனை கண்டுக்காம அவள் மாட்டுக்கு போற மனசுல என்ன நினைச்சுட்டு இருக்காள்? ஏன் தம்பி நீயாவது இதெல்லாம் கேட்க மாட்டியா என்று சாதிக்கிடம் கேட்க பரவாயில்லை மா விடுங்க என்று கூறி விட்டு சாப்பிட தொடங்கினான்.
அங்கு சென்றவள் காலை நடந்ததை சொன்னாள். வாலு அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்றாங்க கேளு என்றார். ம்ம்ம் சரிப்பா நவீ மதி எங்கே? என்று கேட்க அவங்க ரியஸா வீட்டில் இருக்காங் என்றவுடன் அபப் சரி நான் அங்க போறேன் என்று அங்கே ஒடினாள்.
ஏங்க என்ன பொண்ணு இவள் இன்னும் குழந்தையாவே இருக்காள்? என்று சுசீலா வருத்தப்பட ம்ம்ம் ஆமாம் சுசீ என்ன பண்றது? மாப்பிள்ளை எப்படி சமாளிக்க போறாருன்னு தெரியலை என்று வருத்தப்பட்டார்கள் இருவரும்.
ஏய் கல்யாண பொண்ணுங்களா என்ன உங்க ஆல் கூட பேசலை என்று அவளை கலாய்க்க தொடங்கினாள். ஏய் வாயாடி எப்ப வந்த இப்ப தான் ப்பா வந்த . சாப்பிடிங்களா என்று கேட்டவளை இனிமேல் தான் நீ இல்லை வா அப்பா ஊட்டி விடுறேன் என்று அவளுக்கு ஊட்டி விட்டார்.
தன் தோழிகளிடம் நீண்ட நேரம் கதை அளந்து கொண்டிருக்க . இங்கு சாதிக்கும் மூன்று அம்மாக்களும் நண்பர்களாக மாறி விட்டனர்.
அவனும் எல்லாரிடமும் இயல்பாக பழகினான். அவன் இயல்பாக பழகுவதை பார்த்து உள்ளம் மகிழ்ந்தனர்.
அவன் பாட்டிகளுக்கு செல்ல பிள்ளை ஆகிவிட்டான். இப்படியே நாட்களும் நகர கல்யாண வேலைகளும் சிறப்பாக நடந்தது.
அனைவரும் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டனர். சாதிக் ஷாயின் இருவரிடையே ஏதோ பிரச்சினை இருக்கு என்று .
அஜ்மலும் சித்துவும் தங்கள் திருமண நாளுக்காக காத்திருந்தனர்.இருவரும் தங்கள் கல்லூரியில் இருப்பவர்களுக்கு பத்திரிகை கொடுத்து விட்டு வந்தனர். முதல் நாள் சித்தார்த் நவீனா திருமணமும் அடுத்த நாள் அஜ்மல் மதினா திருமணமும் நடக்க முடிவு எடுத்தார்கள்.
இரவு தூங்குவதற்காக அவள் கட்டிலை சரி செய்து அவனுக்கும் தனக்கும் இடையில் தலையணை வைத்து விட்டு தூங்கினாள்.
காலை எழுந்தவள் சாதிக் அணைப்பில் இருந்தாள். அவள் திடுக்கிட்டு எப்படி நான் நடுவுல தலையணை போட்டு தானே படுத்த அல்லாஹ் என்னை காப்பாத்து. இவன் மேலே தினமும் தூங்கிறது தெரிஞ்சா நாம செத்தோம்☹️☹️ என்ன பண்றது என்று அவனிடம் விலகி தொழுதாள்.
இவளும் நிறையா செய்து பார்த்தாள். ஆனால் விழிக்கும் போது அவன் அணைப்பில் இருப்பது எப்படி என்று தெரியாமல் குழம்பி போனாள்.
திருமணத்திற்கு இன்னும் இரண்டே நாள் இருக்க அணைவரும் பரபரப்பாக செயல் பட்டு கொண்டு இருந்தனர்.
அஜ்மல் வாட்ஸ் ஆப் மூலமாக மதினாவிற்கு மேசேஜ் அனுப்பினான்.
Ajmal : Assalamu alaikum (var). Mathu ma nan onnu solra athirichi adaiyama kelu..
Ajmal: aama da . Sathik shayin ae purijika kooda try panna matran...
Mathina: 😭😭😭 enga kita iruthu ava marachita ajju ellamae...
Ajmal : vidu ma azhatha
Mathina : epdi ajju ava enga kita irunthu itha maraikala
Ajmal: neega kastapada koodathunu ta
Mathina : apa naga moonathu manishagala😡😡
Ajmal : apdi illa ma namaku pidichavaga namalala varuththapada koodathunu ninaikra shayin ithu la thappu ethum illa da
Mathina : po ajju nee avaluku ta support pannra
Ajmal: haha madhu ma shayin ae purijiko ta solra . Konjam yosichi paru shayin idathula vera yara iruthu irutha enna pani irupaganu
Mathina : mm aama kandipa venanu thooki pottu vanthu irupaga
Ajmal : mmm therithu la...
Mathina : mm 😭😭😭😭😭😭😭
Ajmal : hey mathu ma azha koodathu
Mathina : 😭😭😭
இவள் அழவும் அவன் கால் செய்தான். அவள் எடுத்து காதில் வைத்தாள். மதுமா அழதா டா ப்ளீஸ் என்று அவன் கெஞ்ச எப்படி அஜ்ஜீ அவள் எல்லா கஷ்டத்தை தாங்கிட்டு இருக்காள்? நாங்க மூனு பேரும் இதுவரை அழுதது கூட இல்லை தெரியுமா என்றாள் .
சரிடா நாம அவங்க சேர்த்து வைக்க நாம ஒரு வழி பண்ணுவோம் இப்போ போய் நீ தூங்கு நாளைக்கு மண்டபத்தில் பார்க்கலாம் என்றுவிட்டு அழ கூடாது நீ அழுதினா எனக்கு தூக்கம் வராது என்று அவன் கூற சரி அஜ்ஜீ நான் அழுகலை என்று கண்ணை துடைத்து கொண்டு நீ போய் தூங்கு என்று கூறிவிட்டு போனை வைத்தாள்.
அவள் நவீயிடம் எல்லாவற்றையும் கூற அவளும் அழுதாள். அவளால் எப்படி மதி இப்படி இயல்பாக இருக்க முடியுது? தெரியலை நவீ என்று இருவரும் அணைத்து கொண்டு அழுதனர்.
நிக்காஹ் முடியட்டும் டி பார்த்துகலாம் என்று நவீ கூற ம்ம்ம் சரி டி என்றாள். இருவரும் கண்ணை துடைத்து கொண்டு தூங்க சென்றனர் .
ஷாயின், அல்லாஹ் இன்னிக்காது நான் அவன் மேல படுக்காமல் இருக்கனும் என்று நினைத்து கொண்டு நடுவில் தலையணை வைத்து கொண்டு உறங்கினாள்.
.
.
.
.
.
டேய் அஜ்மல் நாம தான் டா சாதிக்கையும் ஷாயினையும் சேர்த்து வைக்க வழி பண்ணணும். அவங்களா சேர போறதில்லை என்று சித்து சொல்ல சித்து நானும் அதைதான் சொல்லனும் நினைச்சேன் நீ சொல்லிட்ட டா.
பாவம் டா ஷாயின் அந்த புள்ளைய அழ வச்சி பார்க்க சாதிக்கு எப்படி தான் மனசு வருதோ தெரியலை என்று இருவரும் வருந்தினார்கள்.
டேய் என்னடா பண்றிங்க என்று பூர்ணிமா அங்கு வந்து கேட்க சும்மா தான் மா பேசிட்டு இருந்தோம். நாளைக்கு மண்டமத்துக்கு போகனும் சிக்கிரம் தூங்குங்க என்று அதட்டி விட்டு சென்றார். அவர்களும் உறங்க சென்றனர்.
.
.
.
.
.
.
காலை எழுந்தவள் வழக்கம் போல் அதிர்ந்தாள் 🤤🤤 அல்லாஹ் இன்னிக்குமா 😢😢 என்று அவனிடம் விலகி தொழுதாள்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.