Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed உனக்கென நான் எனக்கென நீ - கதை

Messages
86
Reaction score
0
Points
6
💕01💕​

சுலைமான் நஜிதா தம்பதிகளின் ஒரே அன்பு மகள் ஷாயின். ஒரே பிள்ளை என்று அவர்கள் அதிகம் செல்லம் கொடுத்தும் வளர்க்கவில்லை; மிக்க கண்டிப்புடனும் வளரவில்லை. ஷாயின் 5 அடி உயரம் மாநிறம் என்றாலும் பார்ப்பவர்களை கவரும் அழகு. வயதிற்கேற்ற குறும்பு அவளிடம் உண்டு. நவீனா மதினா ஷாயின் மூன்று பேருமே சிறுவயது தோழிகள்.... மூவரும் உயிர் தோழிகள்.



நம் நாயகியால் பேசாமல் ஒரு நிமிடமும் இருக்க முடியாது. எதையாவது பேசிக்கொண்டு இருப்பதே வேலை. துறுதுறு வென எதையாவது செய்து கொண்டே இருப்பாள். அம்மாவிடம் திட்டு வாங்குவதும் உண்டு அப்படி திட்டினால் அவர்களையே கலாய்த்தும் விடுவாள்.



இவளிடம் மாட்ட போகும் நம் ஹீரோ தான் பாவம். அவன் வேறு யாரும் இல்லை சாதிக் தான். ஹாஃபிஸ் ரிஹானா தம்பதியரின் ஒரே மகன். சாதிக் 6 அடி உயரம் நல்ல நிறம். கொஞ்சம் அமைதி . சித்தார்த அஜ்மல் இவனின் நெருங்கிய நண்பர்கள்.



"தன்னவள் பார்வையில் தன்னை முழுவதுமாய் தொலைத்தவன் அவளின் உண்மையான நேசத்தை உணர்கிறான்" அவன்.



இவன் காதலை உணரும் தருணத்தில் விலகுகிறாள் அவள்....

இருவரும் இணைவார்களா? இல்லை பிரிவார்களா?....

என்பதையும் என்ன நடந்தது என்பதையும் அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்........

❤️❤️❤️❤️❤️❤️



"ஷாயின் நேரம் ஆகிவிட்டது எழுந்திரி " என கத்திக்கொண்டு😠😠 இருந்தார் அம்மா நஜிதா.



" அம்மி டூ மீனிட்ஸ் கழித்து எழுந்திருக்கேன்..."😢😢 என கெஞ்சினாள் ஷாயின்.



" ஏய் எழுந்திரு..." என மறுமுறை குரலில் எழுந்து உட்கார்ந்து கொண்டாள் ஷாயின்.



" ஏன் ம்மி இப்ப தானே மணி ஏழாகுது ஆகுது. எனக்கு காலேஜ் கூட மதியானம் தானே" என்று சிணுங்கினாள்.



"ஏன் மதியானம் காலேஜ் னா காலையிலே எழுந்திருக்க முடியாதோ மகாராணியால்..." என கடிந்து கொண்டார் அம்மா.



"ம்மி காலையிலே தஹஜ்ஜித் ஃபஜர் தொழுதுட்டு தானே தூங்கின. இராத்திரியே காய்கறி கூட வெட்டி கொடுத்துட்ட அப்புறம் என்ன வேண்டும் ? " என்று சிணுங்கிய வாறே எழுந்து கழிப்பறை நோக்கி சென்றாள் ஷாயின்.



ஃபஜர் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சுலைமான் அங்கு நடந்தவைகளை கவனித்து கொண்டு சோபாவில் அமர்ந்து "ஏன் என் மகளை திட்டுற?.." என மனைவியை கடிந்தார் சுலைமான்.



"உங்க பொண்ண எதையும் சொல்லிட கூடாது அப்படியே என்கிட்ட வந்துடுவிங்க?" என கடிந்து கொண்டார் அம்மா



"அப்பா பாருங்க பா இந்த அம்மாவை எப்பபாரு என்னை திட்டிக்கொண்டே இருக்காங்க" என தன் அப்பாவிடம் முறையிட்டாள் ஷாயின்.



"விடு செல்லம் அம்மி அப்படி தான்...." என்றவுடன், "கரேக்ட் ஆக சொன்னிங்க அப்பா " என்று சொன்னவுடன் கிச்சனில் இருந்து "உன் புருஷன் பாவம்டி " என அம்மா சொன்னவுடன்



"அப்பாவே உன் கூட இருக்கும் போது அவன் என்கூட இருக்கமாட்டானா" என்று கூறுவதை அப்பாவும் ஆமாம் போட கிச்சனில் இருந்து கரண்டி இருவரையும் பதம் பார்த்தது.



சுலைமான் அமைதியாகிவிட ஷாயின் குளிக்க சென்றுவிட்டாள்.



ஷாயின் இளங்கலை கணிதம் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கிறாள். படிப்பில் சுமார்தான் என்றாலும் ரொம்ப நல்ல புள்ள.



சரிசரி போதும் வாங்க நாம ஹீரோ😍😍😍 என்ன பண்றாங்க பார்ப்போம்.



சாதிக் ஃபஜர் முடித்துவிட்டு 6 மணிக்கு வீட்டிக்கு வந்தான். அம்மி டீ என்று கேட்டுவிட்டு குளித்து பிரேஷ் ஆகி வந்தவுடன் டீயை அருந்தி விட்டு கல்லூரிக்கு கிளம்பி கீழே வர காலை உணவு அவன் முன் இருந்தது. அதை உன்று விட்டு அம்மி நான் போய்ட்டு வரேன் அஸ்ஸலாமு அலைக்கும் என கூறிவிட்டு செல்ல அம்மா ரிஹானாவும் சரிப்பா வ அலைக்குமுஸ்ஸலாம் என்று பதில் ஸலாம் கூறினார்.



சாதிக் முதுகலை வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கிறான். நன்றாக படிக்கும் மாணவன்.



"டேய் அஜ்மல் எங்கடா சித்து(சித்தார்த்) " என பைக்கை ஸ்டார்ட் செய்தவாறு கேட்டான் சாதிக்.



" இதோ இப்ப வந்துடுவான் டா " என்றவுடன் சித்தார்த்தும் அங்கு வந்து சேர மூவரும் ஒன்றாக கல்லூரிக்கு சென்றனர்.



வகுப்பை அமைதியாக கவனித்து கொண்டு இருந்தான் சாதிக். இனி நடக்க போவதை தெரியாமல்.



ஷாயின் என்று அழைத்து கொண்டே உள்ளே நுழைந்தார்கள் மதினாவும் நவீனாவும். வாங்க மா என்று அம்மா அழைக்க அம்மா இன்னும் ஷாயின் ரெடி ஆகவில்லையா? என நவீனா கேட்க இதோ வந்துட்டேன் டி என்று ஷாயின் வந்தாள்.



அம்மி நான் போய்ட்டு வரேன் அஸ்ஸலாமு அலைக்கும் என்று தன் தோழிகளுடன் விடைபெற்று கொண்டாள். வ அலைக்குமுஸ்ஸலாம் என்று பதில் ஸலாம் கூறி தன் வேலைகளை தொடர்ந்தார். அவருக்கு தன் மகள் சென்றதும் வீடே வெறிச்சோடி இருந்தது .



மூவரும் கல்லூரிக்கு வந்து சேர்ந்தனர். ஏய் real analysis படிச்சியா டி என்று ஷாயின் கேட்க. இல்லைடி என்று நவீனா கூற அந்த குரங்கு வாத்தி கண்டிப்பா டேஸ்ட் வைக்கும் டி அதுவும் பர்ஸ்ட் ஹாரே என்று ஷாயின் கூறி கொண்டே மூவரும் தன் வகுப்பறையில் நுழைந்து தங்களின் இடத்தில் அமர்ந்து கொண்டனர்.



மூவரும் வகுப்பை கவனிக்க முடியாமல் கவனித்து கொண்டு இருந்தனர்.



ஏய் என்னடி இந்த குரங்கு இப்படி தூங்குற மாதிரி கிளாஸை நடத்துது என ஷாயின் கூற ஆமா டி அவ கண்ணை பார்த்தாலை தூக்கம் தூக்கமா வருது என மதினா கூற என்னடி பண்றது இப்ப என மூவரும் யோசித்த வாறு வகுப்பை கவனித்து கொண்டு இருந்தனர்.



தொடரும்​
 
❤️ 02❤️​

சாதிக், அங்கு செமினார் எடுத்துக்கொண்டு இருந்தான். அவனின் கம்பீரமான குரல் அந்த வகுப்பை அதிர வைத்தது. அவன் நடத்துவதை சக மாணவர்கள் ஆர்வமாக கவனித்து கொண்டு இருந்தனர். அவன் வகுப்பு ஆசிரியர் என்றும் போல் இன்றும் ஆச்சிரியமாக பார்த்து கொண்டு இருந்தார்.



அவனின் நேரான பார்வையும் நிமிர்ந்த நன்னடையும் பார்த்து பல பெண்கள் அவனை சைட் அடித்து கொண்டு இருந்தனர். ஆனால் நம்ம ஹீரோ தான் யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கமாட்டரு😔😔😔😔. ரொம்ப நல்ல புள்ளையாம்😊😊😂.



அவன் செமினார் எடுத்து முடித்த பிறகு சக மாணவர்கள் கைதட்டினர். பிறகு அவன் தன் இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டான். ஆசிரியர், மாணவர்களிடம் அனைவரும் சாதிக்கை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். இப்படி ஒரு மாணவனை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. God bless you my child என்று அவனை மனதார வாழ்த்தி வகுப்பை விட்டு வெளியேறினார்(பெல் அடிச்சுடிச்சி அதான் கிளம்பிடாரு😂😂😂).



"டேய்! மச்சி கலக்கிட்ட டா" என்று சித்தார்த் அவனை அணைக்க " நன்றி மச்சி" என்றான் புன்னகை உடன்.



"உனக்கு மட்டும் எப்படி டா?😒" என்று அஜ்மல் கேட்க "எல்லா புகழும் இறைவனுக்கே" என்றான் புன்னகையுடன்.



அடுத்த பாட வகுப்பு ஆசிரியர் சசிதரன் உள்ளே நுழைய அனைவரும் எழுந்து நின்றனர்.



"டேய் இந்த ஆளா நம்மள பாட நடத்தியே சாவடிப்பானே😤😤..." என்று சித்தார்த் கூற



"ஆமாடா இவனை இன்னிக்கி பாட நடத்த விட கூடாது...."என்று அஜ்மல் கூற அதை ஆசிரியர் கவனித்து விட, " டேய் அஜ்மல் ஏந்திரி...😈😈😈..." என்றவுடன் "🤤🤤 அல்லாஹ்! நான் மாட்டிக்கிட்டேனே!🤤🤤..." என்று எழுந்து நின்றான்.



"அங்கே என்னடா பேச்சு😠😠.." என்று திட்டிய ஆசிரியரை பார்த்து "அங்க எங்கே சார் பேசுன இங்க தானே பேசுன..." என்று அஜ்மல் பாவமாக கூற😔😔 வகுப்பே சிரித்தது. அதை பார்த்த ஆசிரியர், சற்று கடுப்பாகி " கோ அவுட் ..." என்றவுடன் சார் இன்னிக்கு கிளாஸ் வேண்டாம் சார் ப்ளீஸ் என்று கெஞ்ச ஆரம்பித்தான் அஜ்மல். பிறகு அனைவரும் கெஞ்ச அவரும் கிளாஸ் எடுக்கவில்லை.



"டேய் சாதிக் வரப்போகும் பொண்ணு பற்றி உனக்கு கனவு ஏதாவது இருக்கா?😍😍😍..." என்று சித்தார்த் கேட்க சாதிக் சிறிது புன்னகை செய்த படி " எனக்கு வர போற பொண்ணு இறைவனுக்கு நன்றி செல்லுறவளா இருக்கனும் என் அம்மா அப்பாவை நல்ல படியா பாத்துக்கனும் அழகு எல்லாம் முக்கிம் இல்லை. வெளிப்படையாக பேச வேண்டும்" என்று சாதிக் கூறி முடிக்க அவர்கள் இருவரும் ஓஹோ என்று கத்த அவன் டேய் அமைதியா இருங்க டா என்றவுடன் டேய் மச்சி சாருக்கு வெக்கத்தை பாருடா என்று அஜ்மல் கலாய்க்க டேய் உன்ன என்று அவனை துரத்திக்கொண்டு இருந்தான் நம்ம நாயகன்.



சரிசரி வாங்க நாம நாயகி என்ன பண்றான்னு பாப்போம்....



"ஹே என்னடி இந்த குரங்கு டெஸ்ட் வைக்கல..." என்று மதினா கூற தப்பிச்சோம் டி என்றாள் நவீனா. ம்ம்ம் ஆமாம் டி என்று ஷாயின் கூற ஹே வாடி விளையாடலாம் என்று நவீனா அழைக்க என்ன விளையாடலாம் 🤔🤔🤔 என்று ஷாயின் யோசித்தாள்.



ஹே truth or dare விளையாடலாமா என்று ஷாயின் கேட்க ஆஹான் ஒகே டி என்று மதினா தன் பேனாவை சுழற்றினாள். அது நவீனா விடம் செல்ல அவள் நவீனாவிடம் ஏய் நீ சொல் உனக்கு எப்படி பட்ட பையன் உனக்கு உத்பி யா வர வேண்டும் என்று அவள் கேட்க நவீனா என் அம்மா அப்பா பார்க்கிற பையன் எனக்கு ஒகே என்றவுடன் இவ்வளவு தானா என்று சலிப்பாக ஷாயின் கேட்க அவள் ஆமாம் என்றாள்.



சரி மதினா நீ சொல்லு என்று ஷாயின் கூற அவள் எனக்கு வர போறவன் அப்படியே பார்த்த உடனே என் மனச பறிச்சிடனும். நல்லவனா இருக்கனும் இறைவனை நன்றி சொல்பவா இருக்கனும்😍😍😍😍😍😍 என்று அவள் கூறி முடித்தவுடன் ஏய் அருமை போ என்று நவீனா கூற ஏய் ஷாயின் எங்ககிட்ட கேட்ட இப்ப நீ சொல் என்று ஷாயினிடம் கேட்க அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்🤤🤤🤤🤤.



ஏய் என்னடி என்று நவீனா கேட்க சரி சொல்றேன் என்று சிறுபுன்னகை உடன் தொடங்கினாள் "இறைவனுக்கு நன்றி செலுத்துபவனா இருக்கனும். எனக்கு மஹர் கொடுத்து நிக்காஹ் முடிக்கிறவனா இருக்கனும். அப்புறம் எனக்கே தெரியாமல் என் மனசுல அவன் இருக்கனும். நான் பண்ற எல்லாமே ரசிக்கனும் தப்பு பண்றப்ப என்னை கண்டிக்கனும். என்னை செல்ல பேர் வச்சி தான் கூப்படனும். முக்கியமா நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தொழுகனும். ஒன்னா குர்ஆன் ஒதனும். நைட் முழுக்க முழுக்க தூங்காம பேசனும்😍😍😍😍😘😘😘😘💖💖💖💖...." என்று அவள் முடிக்க ரெண்டு பேரும் ஓஹோ என்று கத்திய உடன் வகுப்பே திரும்பி அவர்களை பார்த்தனர்.



இவர்கள் இருவரும் ஈஈஈஈஈஈ 😁😁😁😁😁 இழித்து விட்டு தன் வேலைகளில் ஈடுபட்டனர். மறுபடியும் அதே பேச தொடங்கினர். உன் ஆளு என்ன பண்ணிட்டு இருப்பாரு நினைக்கிற ஷாயின் என்று மதினா கேட்க அவள் யாருக்கு தெரியும் இந்த நேரம் என்ன பண்ணிட்டு இருக்கானோ என் ஆளு ( உனக்கு தான் தெரியாது பட் எங்களுக்கு தெரியும்🤣🤣🤣) என்று காதலோடு கன்னத்தில் கைவைத்த வண்ணம் மேலே பார்த்து சொல்லவும் பிரேக் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது. மேடம் போதும் கனவு கண்டது போது பிரேக் போய்ட்டு வரலாம் என்று மூவரும் வெளியே சென்றனர்.



இப்ப ஹீரோ துரத்திட்டு போனாருல அவர் என்ன பண்றாரு பாப்போம் வாங்க....
.
.
.

டேய் நில்லுடா என்று வகுப்பிலே விரட்டி பிடித்து செல்லமாக இரண்டு தட்டுதட்டினான். பிறகு டேய் என் ஆளு இந்த நேரம் என்ன பண்ணிட்டு இருக்காளோ தெரியலையே (ஆனா எங்களுக்கு தெரியுமே!!! 🤣🤣🤣) என்று அவன் கூறவும் பெல்லடிக்கவும் சரியாக இருக்க அனைவரும் கிளம்பினர் அவரவர் வீட்டிற்கு.



தொடரும்💕​
 
💕 03💕​

பிரெக் முடித்துவிட்டு மூவரும் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டனர். நவீ இப்ப என்ன ஹவர் என்று மதி கேட்க matlab என்று ஷாயின் சொன்னவுடன் ஏய் அந்த குள்ளி ரொம்ப பேசுமே டி என்று மதி சொன்னவுடன் ஆமாம் டி. ஏய் தொழுகை டைம் ஆயிடுச்சு வா தொழுதுட்டு வந்துடுவோம் என்று ஷாயின் மதினா இருவரும் கிளாஸ் ரெப்யிடம் சொல்லிவிட்டு தொழுக சென்றனர்.



இருவரும் சென்றவுடன் ஆசிரியர் உள்ளே வந்தார். அவர் பாடம் எடுக்க தொடங்கிவிட்டார். இங்கு இருவரும் தொழுது கொண்டு இருந்தனர். ஷாயின் வாழ்க்கையில் நடக்க போகும் மாற்றங்களை தெரியாமல் தொழுது கொண்டு இருந்தாள். இருவருக்கும் தொழுக வில்லை என்றால் அந்த நாளே பிடிக்காது. ஏழு வயதில் தொடங்கிய தங்கள் கடமையான தொழுகையை எக்காரணத்தை கொண்டும் இருவரும் விடமாட்டார்கள்.



இருவரும் இறைவனிடம் துஆ கேட்டு விட்டு இருவரும் தொழுகை முடித்து ஸலாம் பரிமாறி கொண்டு வகுப்பிற்கு சென்றனர்.



சாதிக் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவன் அருகில் வந்து அமர்ந்தார் அவன் அப்பா ஹாஃபீஸ். என்ன ப்பா அப்படி பார்க்கிறிங்க? என்று சாதிக் கேட்க இல்லை ப்பா என்று அவர் பாவமாக முகத்தை வைத்து கொள்ள அவன் புரிந்து கொண்டு என்னப்பா அம்மா கிட்ட நல்லா பாட்டா என்று நக்கலாக கேட்க அவர் ஆமாம் என்றார்.



என்னப்பா பண்ணிங்க என்று புன்னகை பட கேட்க அவர் உன் அம்மா கிட்ட இன்னிக்கி ராத்திரிக்கு நான் சமைக்கிறன்னு சொன்ன அவ வேணாம் நானே பார்த்துகிறேன் சொன்னா நான் கேட்காமல் சமையலறைக்கு போய் சாப்பாத்திக்கு மாவு பெசஞ்சிட்டு இருந்த அப்ப தண்ணீர் குடிக்க உன் அம்மா வந்தாள் உள்ளே. நான் பண்ண மாவை பாத்துட்டு என்னங்க பண்ணி வச்சு இருக்கிங்க?😈😈😈 கோபமா பார்த்து கேட்டாள் நான் ஏன் கத்துறன்னு கேட்டதுக்கு ம்ம்ம் சப்பாத்தி மாவு பதில் அரிசு மாவை கலந்து இருக்கிங்க கேட்டு என்னை நல்லா வருத்திட்டா என்று பாவமாக😑😔😔 சொல்ல சாதிக் சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டு சிரித்துவிட்டான்😂😂😂😂🤣🤣🤣🤣🤣.



அவனை பார்த்து டேய் உன்னை என்று செல்லமாக அடிக்க கை ஒங்க அவன் அங்கிருந்து ஒட அவரும் டேய் நில்லுடா என்று அவரும் விரட்ட சிறிது நேரத்தில் அவர் மூச்சு வாங்குவதை பார்த்த சாதிக் இந்த வயசான காலத்தில் இது தேவையா என்று அவன் நக்கலடிக்க டேய் யார பார்த்து வயசானவன் சொல்ற என்று அவர் கேட்க ம்ம்ம் உங்களை தான் என்று அம்மா ரிஹானா வந்து அவரை முறைத்தார். எப்பா போதும் உங்க ஆட்டத்திற்கு நான் வரலை என்று சாதிக் தப்பித்து கொள்ள பாவம் அவர் மாட்டி கொண்டார்.



சரிசரி உங்கள் சண்டை அப்றம் வச்சிக்கோங்க எனக்கு ரொம்ப பசிக்குது என்ற சாதிக் குரலில் திரும்பியவர்கள் சரிசரி வாப்பா செல்லம் நான் டீ போட்டு தரேன் என்று கூறி விட்டு டீ போட உள்ளே சென்றார் அம்மா.



இருவரும் சோபாவில் அமர்ந்தார்கள். சரிப்பா படிப்பு முடித்து என்ன பண்ண போற என்று அப்பா கேட்டதும் அதே காலேஜில் பிரபோசராக ஜாயின் பண்ணிடுவேன் ப்பா என்றவுடன் சரிடா செல்லம் என்றார் அப்பா. ம்ம்ம் சரிப்பா. சிறிது நேரத்தில் டீ வந்தது அதை குடித்து விட்டு இருவரும் தொழுகைக்கு சென்றனர்.



சாதிக்-ஹாஃபிஸ் இருவரும் அப்பா பிள்ளை என்பதையும் தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள் என்றே சொல்லலாம். அம்மாவும் அப்படி தான்.



ஷாயின் மதினா நவீனா மூவரின் வீடும் ஒரே தெருவில் பக்கத்து பக்கத்து வீடு.


ஷாயின் மதி வீட்டிற்குள் சென்று அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) என்று ஸலாம் கூற மதினாவின் அம்மா ஃபாத்திமா பதில் ஸலாம் கூறி மலர்ந்த முகத்துடன் வரவேற்றார்.



என்ன குட்டிமா கிளாஸ் எப்படி போச்சு என்று ஃபாத்திமா கேட்க அது ஒரு பக்கமா போச்சு நான் ஒரு பக்கமா போன அம்மா என்று ஷாயின் கூறி அரட்டை அடித்து கொண்டு இருந்தாள்.



ஒரு மணிநேரம் ஆகியும் இவள் வராததால் நஜீதா மதி வீட்டிற்கு வந்தார். அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) கூறி கொண்டே உள்ளே நுழைந்தார் நஜீதா அட வா நஜி என்று ரியாஸ் அழைக்க என்டி வீட்டுக்கு வரதா இல்லையா என்று நஜி மகள் ஷாயினை அதட்ட அவள் இல்லை இல்லை என்று நக்கலாக பதில் கூறினாள்.



உன்னை என்று அவளை அடிக்க விரட்ட இவள் ஃபாத்திமா அம்மா பாருங்க உங்க தங்கச்சியை என்னை அடிக்கிறாங்க என்று ஃபாத்திமா பின் ஒளிந்து கொண்டு குறை சொல்ல சரிசரி வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சு இல்லையா அதான் சரிடா நாம நாளைக்கு காலையில் பேசிக்கலாம் நீ வீட்டுக்கு போ என்றவுடன் இல்லை அத்தை நான் போகலை என்றவளை ஏன் என்று முறைத்து கொண்டு கேட்டார் நஜி.



அங்க உன் மாமியார் கிழவி வந்திருக்கு நான் வரவில்லை என்றவுடன் ஏய் லூசு அறிவில்லை பெரியவங்களை இப்படி தான் மரியாதை இல்லாமல் பேசுவியா என்று நஜீதா கேட்டவுடன்.



அவங்க முதல்ல பெரியவங்க மாதிரி நடந்துக்கிறாங்கலா? என்று புருவம் உயர்த்தி தன் தாயிடம் கேட்க அவர் ஏய் இப்ப நீ வரியா இல்லையா என்று கோபத்தோடு கேட்க என் அம்மா அப்பா வை மதிக்காதவங்க கிட்ட நான் எதுக்கு பேசனும்? நான் ஏன் மரியாதை கொடுக்கனும். அதுலாம் முடியாது.



போய் அந்த கிழவி கிட்டயும் அது கூட வந்து இருக்கு பாரு உன் நாத்தனார் அவங்க குடும்பம் கிட்ட சொல்லு என் பொண்ணு வரமாட்டான்னு என்று கோபத்துடன் பொறிந்து தள்ளிய ஷாயினை பார்த்து இப்ப வான்னா வா அவ்வளவு தான் என்று அவள் கையை பிடித்து இழுத்து சென்றார் தாய் நஜீதா.



ரியாஸ் இதை பார்த்து இன்னும் சின்ன குழந்தை தான் நம்ம ஷாயின் என்றவுடன் ம்ம்ம் ஆமாங்க ஆனா ரோஷக்காரி என்று இரவு உணவை தயார் செய்ய சமையலறைக்கு சென்றார்.



தன் தோழியின் மனநிலை உணர்ந்த மதினா நவீனா வீட்டிற்கு சென்றாள். அட வாம்மா மதி எங்க அந்த வாலு காணோம் என்று ஷாயினை விசாரித்தார் நவீனா அப்பா சரத்.



இப்ப தான்ப்பா அவங்க அம்மா வந்து அழைச்சிட்டு போனாங்க என்று கூற அவள் வந்திருந்ததை அறிந்த சுசீலா நவீனாவின் அம்மா அவளுக்கும் டீயை போட்டு எடுத்துட்டு அவளிடம் நீட்ட அவளும் அதை குடித்து விட்டாள். எங்கம்மா அந்த வாலு இன்னும் இங்க வரலை என்று சுசீலா கேட்க வீட்டில் நடந்ததை கூறினாள் மதினா.



ஆனாலும் உன் தோழிக்கு இவ்வளவு ரோஷம் இருக்க கூடாது என்று கூறினார் சுசீலா. ஏய் என் வாலுவை திட்டுற? அவ பெத்தவங்கள மதிக்காதவங்க கிட்ட பேச கூடாது நினைக்கிறதுல என்ன தப்பை கண்டு பிடிச்சுட்ட? என்று கோபமாக சரத் கேட்க



ம்ம்ம் ஷாயின் திட்டுனா கோபம் வந்துடுமே உங்களுக்கு என்று முறைத்து கொண்டு உள்ளே சென்றார் சுசீலா.



நாளைக்கு வருவாள் தானே நானே பேசுறேன் என்று கூற அங்கு நவீ வர அவள் மனதில் இருப்பதை புரிந்து கொண்டு நாளைக்கு போவோம் இப்ப வேண்டாம் என்று கூற மதி வீட்டில் சொல்லிவிட்டு தன் வீட்டிற்கு சென்றாள்.



ஷாயின் வீட்டில் அவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள். பிறகு அவளை வெளியில் அழைத்து வந்து அமர வைத்தார் அம்மா.



அவள் அருகே வந்தமர்ந்த அத்தை நஸிரா என் ஷாயின் என் வீட்டுக்கு மருமகளா வரியா என்று பட்டுன்னு கேட்க ஷாயின் அத்தையை முறைத்து கொண்டு என் அம்மா அப்பா வை மதிக்காதவங்க கிட்ட பேசவே பிடிக்காது இதுல அவங்க வீட்டுக்கு மருமகளா வேற வரனுமா? என்று ஒரு ஏளன பார்வை வீச நஸிரா விற்கு கோபம் வந்து விட ஏய் யார பத்தி நீ சொல்ற என்று கேட்டவுடன்



உங்களை தான் சொல்றேன் என்று சற்று திமிராக பதிலளித்த ஷாயினை முறைத்த நஸிரா ஏய் என்ன திமிரா என்று கோபப்பட கேட்டார் பாட்டி தாஜீன். ஷாயினை தடுக்க முயன்ற நஜீதாவை கைபிடித்து வேண்டாம் என்றார் சுலைமான். அவரும் அமைதியாகி விட்டார்.



ஆமாம் கோபம் வெறுப்பு ரெண்டுமே. அன்னிக்கி எங்க அம்மா அப்பா வை வீட்டை விட்டு துரத்தினிங்க எங்கம்மா கொடுமை செஞ்சிங்க உங்களை விட என் அப்பா வசதி கம்மின்னு மரியாதை இல்லாமல் நடத்தினிங்க. என் அம்மாவை எவ்வளவு பேசினிங்க இதெல்லாம் மறப்பேன் மட்டும் நினைக்காதிங்க. இப்பன்னு இல்லை எப்பவுமே இதுதான் என் பதில் செத்தாலும் சாவேன் உங்கள் வீட்டுக்கு மருமகளா வரமாட்டேன் என்று பொறிந்து தள்ளிவிட்டு உளு செய்துவிட்டு தொழுக சென்று விட்டாள்.



ஏன்ணா உன் பொண்ணு இவ்வளவு பேசுறா ஏதாவது கேட்டியா என்று நஸிரா கேட்க நான் தான் அப்பவே சொன்னேல அவள் இதுக்கு ஒத்துக்க மாட்டான்னு நீ கேக்கலை அதான் என்று அலட்சியமாக பதில் கூற அப்போது இருவரும் தங்கள் தவறை உணர்ந்து கொண்டு ஏதும் பேசாமல் வெளியேறினர்.



சுலைமானும் நஜீதாவும் ஷாயினை போல் தங்களுக்கு மகளாக கொடுத்த அல்லாஹ் விற்கு நன்றி செலுத்த தொழுக சென்றனர் இருவரும்.



சாதிக் இஷா தொழுகை முடித்து விட்டு இரவு சாப்பாட்டையும் முடித்துவிட்டு தன்னறைக்கு வந்து அமர்ந்தான். அவன் கைபேசியில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏதோ பார்த்த வண்ணம் இருந்தான். அப்போது ஒரு ஐடி அவன் கண்முன் பட அதனுள் சென்றான். அதில் முழுக்க முழுக்க மார்க்க சம்மந்தப்பட்ட விடயங்கள் மட்டுமே பதிவு செய்ய பட்டிருந்தது.



இவன் ஆச்சிரியத்துடன் இவனை தன் நண்பனாக்கி கொள்ள வேண்டும் என்று எண்ணினான். தன் வாழ்வை மாற்ற போவது அந்த ஐடி தான் என்பதை தெரியாமல் அந்த ஐடிக்கு ரெக்குவஸ்ட் குடுத்தான் நம்ம சாதிக்.



💕 தொடரும் 💕​
 
💕 04💕

சாதிக் சுலைமான் என்ற ஐடிக்கு ரிக்வஸ்ட் குடுத்துவிட்டு உளு செய்து விட்டு குர்ஆன் ஒத தொடங்கினான். குர்ஆன் ஒதி முடித்த பிறகு சிறிது நேரம் தன் பாட புத்தகத்தை எடுத்து பார்த்து கொண்டு இருந்தான். பிறகு சாதிக் தூங்க சென்றான்.



ஷாயின் தொழுகை முடித்துவிட்டு அறையில் இருந்து வெளியே வந்து சோபாவில் தன் அப்பா பக்கத்தில் அமர்ந்தாள்.



அப்பா நான் பேசினது உங்களுக்கு கோபமா ப்பா என்று அவள் பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்டாள்😔😔



அவர் அவள் தலையை வருடி விட்டு நீ பேசுனதுல எங்களுக்கு எந்த கோபமோ வருத்தமோ இல்லைடா என்று அவர் கூற தேங்க்ஸ் ப்பா என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.



அம்மா நான் நவீ வீட்டுக்கு போய்ட்டு வரேன் என்றவுடன் அடி செருபு மணி என்னாகுது அவங்க தூங்கி இருப்பாங்க காலையில் போ என்றவுடன் அவள் மணியை பார்த்தாள். மணி 9.30 காட்டியது. சரிசரி அலட்டிக்காத நான் போகல என்று நக்கலாக பதிலளிக்க அடிங்க என்று குரலை உயர்த்தியவுடன் அவள் தன் அறைக்குள் நுழைந்து கொண்டு கதவை மூடி கொண்டாள்.



பிறகு தன் பாடங்களை படித்து விட்டு தன் கைபேசியை எடுத்தாள். அவள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்றாள் அதில் சாதிக் என்ற ஐடி ரிக்வஸ்ட் வந்திருப்பதை பார்த்து யாராது🤔🤔🤔🤔 என்று யோசித்து கொண்டு இருந்தாள்.



சரி அக்சப்ட் குடுப்போ நம்ம என்ன பேசவா போறோம் என்று மனதில் கூறியவாறு அக்சப்ட் செய்து விட்டாள்.



தன் வாழ்வை மாற்ற போவது அந்த ஐடி தான் என்பதை அறியாமலே அக்சப்ட் செய்து விட்டு உறங்கினாள்.



தஹஜ்ஜித் தொழ விழித்தான் சாதிக். தஹஜ்ஜித் வீட்டிலே தொழுது விட்டு சிறிது நேரம் கழித்து பள்ளிவாசல்க்கு செல்வோம் என்று தன் கைபேசியை எடுத்தான்.



அதில் தன் இன்ஸ்டாகிராம் பக்கதிற்கு சென்றான். அதில் அக்சப்ட் என்று வந்தவுடன் மகிழ்ச்சி அடைந்தான். அதிலிருந்து அந்த ஐடிக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) hii bro என்று மெசேஜ் அனுப்பி விட்டு மசூதிக்கு சென்றான்.



ஷாயின் தஹஜ்ஜித் தொழுது விட்டு சிறிது நேரம் குர்ஆன் ஒதிய பிறகு ஃபஜர் தொழுகையும் முடித்துவிட்டு தன் கைபேசியை எடுத்தாள். அப்போது இன்ஸ்டாகிராமிலிருந்து மெசேஜ் வந்திருப்பதை பார்த்தாள்.



அதில் போய் என்ன வந்திருக்கு என்று அவள் சென்று பார்த்தாள். அதில் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) hii bro என்று இருந்தது.



அதை பார்த்த ஷாயின் என்ன bro va என்று 🤤🤤 அவள் அதிர்ச்சி உடன் hello nan bro illa I'm girl என்று மெசேஜ் அனுப்பி விட்டு தன் வேலைகளை முடித்துவிட்டு அம்மி நான் நவீ வீட்டுக்கு போற என்று கூறிவிட்டு சென்றாள். ம்ம்ம் சரி என்றார்.



நவீ என்று அழைத்து கொண்டு உள்ளே சென்றாள். அட வாலு வாவா என்று சரத் அவளை அழைத்து தன் அருகில் அமர வைத்தார்.



எங்க மாமா அத்தை நவீ எல்லாரும் காணோம் என்று கேட்டவுடன் அங்கே சுசீலா வாடி வாயாடி ஏன் நேற்று வரவில்லை என்று கேட்க அங்க மதினாவும் ஆஜர் ஆகிவிட சரி சொல்றேன் என்று நேற்று நடந்ததை எல்லாம் கூறினாள்.



அடிப்பாவி எதுக்கு டி பெரியவங்க கிட்ட இப்படி பேசுன என்று மதி திட்டினாள்.



அவளை முறைத்து விட்டு ம்ம்ம் என் அம்மா அப்பா மரியாதை கொடுக்க மாட்டாங்க கேவலமா பாப்பாங்க இப்ப நாம கொஞ்சம் வசதியா இருக்கோம் தெரிஞ்சிட்டு என்னை அவங்க வீட்டுக்கு மருமகளா வரனுமா அவங்க பண்றது எதுவும் கண்ணுக்கு தெரியாது நான் பண்றது மட்டும் தெரியும் எல்லாருக்கும் தெரியும். நான் தெளிவா சொல்லிட்ட நான் செத்தாலும் சாவேன் உங்கள் வீட்டுக்கு நான் மருமகளா வரவே மாட்டேன் என்று கறாராக சொல்லிட்டேன் என்று தன் மனதில் பட்டத்தை சொல்லிவிட்டு நான் அப்புறம் வரேன் என்று தன் வீட்டிற்கு சென்றாள்.



அவள் என்றும் அப்படி நடந்துகிட்டது கிடையாது. இன்று இப்படி நடந்துகிட்டது எல்லாரும் சிறிது வருத்தம் அடைந்தார்கள்.



ஏய் மதி ஏன்டி அவ எப்படி போறான்னு பாரு நீயே என்று வருந்தினாள் நவீனா. ஏய் சாரி டி அவ என்று சொல்வதற்குள் சரி விடு வா அங்க போய் சமாதானம் செய்வோம் என்று இருவரும் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.



மாடியில் அவள் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள். ஷாயின், எவ்வளவு கஷ்டம் வலி துக்கம் இருந்தாலும் யாரிடமும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டாள். தனக்குள்ளே வைத்து புதைத்து கொள்வாள். எப்போதும் தன் பெற்றோர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் தன்னை சுற்றியுள்ள அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக எதையும் தாங்கிக்கொள்ள கூடியவள்.



எப்போதும் அவள் மனதில் இருப்பது தன் அம்மா அப்பா நன்றாக இருக்க வேண்டும் தன் தோழிகளும் அவர்கள் குடும்பமும் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவள்.



அவளின் உலகம் அவள் அம்மா அப்பா தன் தோழிகளும் அவர்கள் அம்மா அப்பா தான்.



அவள் ஏதோ யோசித்த வண்ணம் மேகத்தை பார்த்து கொண்டு இருந்தாள். ஷாயின் என்ற தன் தோழிகளின் அழைப்பில் தன்னிலை வந்து ஏய் வாங்க டி என்று அவர்களை அழைத்தாள்.



ஏய் சாரி டி என்று மதி இழுக்க போடி நாயே வா அந்த மென்ட்டல் மண்டையா செமினார் கொடுத்து இருக்கான் வா அதை போய் பார்ப்போம் என்று மூவரும் அங்கேயே காலை உணவு முடித்தவிட்டு மாடியில் அமர்ந்து பாடங்களை படித்து கொண்டு இருந்தார்கள்.



நஜீதாவும் ஃபாத்திமாவும் சுசீலா வீட்டுக்கு சென்றனர். அங்கு அட வா நஜி வா ஃபாத்திமா என்று அழைத்தார் சுசீலா. மதி இங்க இல்லை என்று ஃபாத்திமா கேட்க இல்லை அவங்க மூனு பேரும் எங்க வீட்டில் தான் படிச்சுட்டு இருக்காங்க என்று நஜீதா கூற, ம்ம்ம் சரி சரி என்றார் ஃபாத்திமா.



சுசீ எனக்கு ஷாயினை நினைத்தால் தான் பயமா இருக்கு. அவள் இன்னும் சின்ன குழந்தை மாதிரி இருக்கா. எப்ப தான் அவள் பெரியவ மாதிரி நடக்க போறாள் தெரியலை அவள் வாழ்க்கை எப்படி இருக்க போதோ நினைச்சாலே பயமா இருக்குஎன்று வருந்திய நஜீதாவை ஏய் ஷாயின் அழகே அவள் குழந்தை குணம் தான். அப்படி பட்ட மகளை உனக்கு அல்லாஹ் கொடுத்ததற்கு அல்லாஹ்க்கு நீயும் பாய்யும் நன்றி சொல்லனும் என்று ஃபாத்திமா கூற சுசீலா அதை ஆதரித்தார் நஜி சரி என்றவாறு பதில் அளித்தார்.



அவருக்கு தெரியவில்லை அவளின் வாழ்க்கை இன்னும் அழகாக்க சாதிக் இருக்கிறான் என்று.



ஏன் நஜி நாம எல்லாரும் ஒன்னா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சு தானே என்று சுசீலா கேட்க ஆமா சுசீ என்றார்கள் இருவரும்.



அப்ப நாளைக்கு சண்டே எல்லாரும் பீரியா இருப்பாங்க என்று நஜி கூற அப்ப சரி நாளைக்கே ஒகே வா என்று ஃபாத்திமா கேட்க இருவரும் ஒகே என்று தலையசைத்தனர். மூவரும் பேசி கொண்டு இருப்பதை சுலைமான் சரத் ரியாஸ் கேட்டு அப்ப சரி லிஸ்ட் போட்டு கொடுங்க நாங்க தேவையானதை வாங்கிட்டு வந்துடுறோம் என்றவுடன் அவர்கள் லிஸ்ட் போட்டு கொடுக்க மூவரும் கடைக்கு கிளம்பினர்.



இன்று கல்லூரி விடுமுறை என்பதால் மூவரும் படித்து விட்டு சிறிது நேரம் பேசி கொண்டு இனுந்தனர்.



ஏய் நாம எல்லாரும் பேமிலியா ஒன்னா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சு தானே என்று ஷாயின் கூற ம்ம்ம் ஆமாம் டி இதை போய் நாம வீட்டுல சொல்லனும் என்று மூவரும் அதை பற்றி பேச நவீ வீட்டிற்கு சென்றனர்.



மூவரும் அதை சொன்னவுடன் நாங்களும் அதை தான் நினைத்தோம் நாளைக்கு ஒன்னா சாப்பிடலாம் என்று சொல்ல மூவரும் ஏஏஏஏஏ ஜாலி என்று கத்தினர்.



மூவரும் நாளைக்காக காத்திருந்தனர்...

சாதிக் எல்லாம் முடித்துவிட்டு தன்னறைக்கு வந்தமர்ந்து தன் கைபேசியில் வந்த மெசேஜ் பார்த்து சற்று அதிர்ந்தான்.



என்ன பொண்ணா 😱😱 என்று நினைத்தவாறு neega ponna but id la boy name irukae? என்று டைப் செய்து அனுப்பினான்.



தன் கைபேசியில் வந்த மெசேஜை பார்த்து அவள்



Shayin : athu en appa😎 name.

Sathik : appa name a 🤤👏👏

Shayin : thank you

Sathik : enna padikriga?

Shayin : (இவன் என்ன நமக்கிட்ட பேசுறா. மனசுல நினைத்து கொண்டு டைப் பண்றா) B.sc Maths😎😎 final year

Sathik : ennathu maths a 😱😱

Shayin : mmm aama maths😎😎 neega ??

Sathik : nan M.A History final year

Shayin : oh kk

Sathik : unga id nan patha fulla margam sammathama upload panni iruthiga. Nan Sulaiman name iruthatha pathu boy nu ninaicha sorry😔 and your name??

Shayin : mmm aama ennaku en per vaika viruppam illa atha appa name vacha and my name Shayin and ur name Sorry la venam viduga pa

Sathik : my name Sathik. Haan kk pa.

Shayin : oh kk tholugai ku neram aaidichi nan aprm pesura bye

Sathik : mmm kk pa nanum tholuga pallivasal ku ponum bye.

Shayin : mmm kk bye



இவள் எல்லாம் தன் தோழிகளிடம் எல்லாம் கூற யாருடி அது தெரியலை என்றாள். சரி விடு என்று விட்டு மதினா ஷாயின் இருவரும் தொழ சென்றனர்.



சாதிக் தன் மனதில் நான் இந்த மாதிரி எந்த பொண்ணுகிடட்யும் பேசுனது இல்லை இவக்கிட்ட எப்படி நான் பேசுன🤔🤔🤔 என்று நினைத்தவாறு பைக்கை செலுத்தினான்.



இருவரும் தொழுகை முடித்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தார்கள் இருவரும் நவீ வீட்டில் மதிய உணவை முடித்து கொண்டு மதி வீட்டிற்கு சென்றனர்.



அங்கு மூவரின் அம்மாவும் அங்கு இருக்க அங்கு ஷாயின் நாளைக்கு இதெல்லாம் சமைக்கனும் என்று சொல்ல தொடங்கினாள்.



பிறகு நவீனா மதினா இருவரும் சொல்ல நீங்கள் சொல்வதை எல்லாம் செய்ரோம் என்று தாய்மார்கள் ஒகே சொல்ல அவர்கள் ஏஏஏஏஏஏஏ ஜாலி ஜாலி என்று மூவரும் கத்தி கொண்டே கேரம் விளையாட சென்றனர்.​
 
💕
05
💕


மூவரும் மகிழ்ச்சியுடன் கேரம் விளையாடி கொண்டு இருந்தனர். பிறகு மூவரும் பாண்டி விளையாடி கொண்டு இருந்தனர். ஏய் அங்க பாரு கோட தொட்டு விட்ட நீ அவுட் என்று ஷாயின் கூற இல்லை இல்லை நீ பொய் சொல்ற என்று மதி கூற ஏய் போ நீ பொய் சொல்ற என்று ஷாயின் உடன் சேர்ந்து நவீனாவும் வாதிட்டு கொண்டு இருந்தார்கள்.

இதை எல்லாம் கவனித்து கொண்டு ரசித்து கொண்டு இருந்தார்கள் இவர்களின் பெற்றோர்கள். அவர்கள் மூவரும் தங்கள் பிள்ளைகள் நலமாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் துஆ கேட்டார்கள்.

பிறகு மூவரும் விளையாடி முடித்து வந்தவுடன் மூவரையும் உட்கார வைத்து சுற்றி போட்டாள் ஃபாத்திமா.

ஷாயின் அத்தை மல்லாட்டை இருக்கா? என்று கேட்க இருக்கு என்றார் சுசீலா சரி வெல்லம் இருக்கா ம்ம்ம் இருக்கு என்று பதிலளித்தார் ஃபாத்திமா அப்ப ரெண்டுமே கொடுங்க நாங்கள் கடலை மிட்டாய் செய்ரோம் என்று கூறியவுடன்.

சரி என்று அவர்கள் கேட்டதை எடுத்து கொடுத்து அனுப்பினார் சுசீலா . அவர்கள் மூவரும் மதி வீட்டில் தங்கள் வேலையை தொடர்ந்தனர்.

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) என்று கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தான் சாதிக். அவனை இன்முகத்துடன் வரவேற்றார் அஜ்மல்யின் தாய் கதீஜா.

எனப்பா எப்படி இருக்க? என்று அப்பா காதர் நலம் விசாரிக்க ம்ம்ம் அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருக்கேன் ப்பா.

டேய் சித்து நீயும் இங்க தான் இருக்கியா? என்று கேட்டவுடன் ஆமாம் டா நான் வந்து அரைமணி நேரம் ஆகுது என்றான் புன்னகை பட.

டேய் அஜ்மல் சாதிக் சித்து மூன்று பேரும் வாங்க சாப்பிட என்று கூறியவுடன் மூவரும் சாப்பிட அமர்ந்தார்கள்.

சாப்பிட்டு முடித்தவுடன் மூவரும் அறையினுள் நுழைந்து தாழிட்டு அரட்டை அடிக்க துவங்கினார்கள்.

டேய் மச்சி இன்ஸ்டாகிராம்ல ஒரு அக்கவுண்ட் புல்லா நம்ம மார்க்கத்தை பற்றியை இருந்திச்சு. பெயர் சுலைமான் இருந்துச்சு. நானும் பையன் தானே ரிக்வஸ்ட் கொடுத்த அக்சப்ட் பண்ணிடாங்க மெசேஜ் பண்ண அவங்க நான் பொண்ணு அப்படி மெசேஜ் பண்ணாங்க பாரு நான் ரொம்ப ஷாக் ஆயிட்ட என்று நடந்ததை சொன்னான் சாதிக்.

அவனை ஆச்சிரியத்துடன் பார்த்தார்கள் சித்துவும் அஜ்மல்லும். டேய் என்னடா அப்படி பார்க்கிறிங்க? என்று சாதிக் கேட்டான்.

நீயா டா பொண்ணுகிட்ட பேசுன நம்ப முடியலையே என்று நக்கலாக அஜ்மல் கேட்க அவன் நானே தான் என்றான் சாதிக்.

இந்த மார்டன் லைப் ல இப்படி ஒரு பொண்ணா நினைச்சு எனக்கு ஆச்சிரியமாக இருக்குடா! என்று அவளை பற்றி சிறிது நேரம் பேசினான் சாதிக்.

இதை வைத்த அஜ்மல்லும் சித்தார்த்தும் உணர்ந்து கொண்டார்கள். தாமாக பேசி அது தவறாகி விடக்கூடாது என்று இருவரும் அமைதியாக இருந்தனர்.

பின்னர் மூவரும் அரட்டை அடித்து விட்டு சித்தார்த்தும் சாதிக்கும் கிளம்பினார்கள்.

ஷாயின் மதினா நவீனா மூவரும் ஆர்வமாக பொறுமையாகவும் செய்து கொண்டு இருந்தனர். மிக கவனத்துடன் மூவரும் செய்து முடித்தனர் பர்பியை.

அதை ஒரு டப்பாவில் அடுக்கி வைத்து விட்டு இப்போது எல்லாரும் சாப்பிட என்று தனியாக எடுத்து வைத்து கொண்டு நவீனா வீட்டிற்கு சென்றனர்.

அவர்கள் அனைவரும் அதை சாப்பிட்டு விட்டு மூவரையும் பாராட்டி விட்டார்கள். மூவரும் நாளை எப்போது விடியும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

மதி நவீ இன்னிக்கி எங்க வீட்டில் இருந்துக்கோங்க என்றவுடன் சரி டி என்றார்கள் இருவரும்.

இவள் போனை எடுத்து தன் whatsapp status யில் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தி விட்டு மதினா ஷாயின் இருவரும் குர்ஆன் சிறிது நேரம் ஒதினார்கள்.

இருவரும் ஒதிவிட்டு சிறிது நேரம் அரட்டை அடித்தே விட்டு தூங்கினார்கள்.
.
.
.
.
.

சாதிக் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்று அவளிடம் மெசேஜ் வந்திருக்கா? என்று சென்று பார்த்தான். இல்லை என்றதும் அவனே good night என்று அனுப்பி விட்டு குர்ஆன் ஒதிய பிறகு படுத்தான்.
.
.
.
.
.
.

மதினா ஷாயின் இருவரும் தஹஜ்ஜித் தொழ எழுந்தனர். நவீ 5 மணிக்கு எழுப்புவோம் இப்ப நாம தொழுவோம் என்று மதி கூறியவுடன் சரி வா என்று ஷாயின் அழைத்து கொண்டு இருவரும் உளு செய்து விட்டு தொழுதனர்.

பிறகு இருவரும் குர்ஆன் ஒதி விட்டு ஃபஜர் தொழுது விட்டு நவீனா எழுப்பி விட்டனர். அவளும் எழுந்து மூவரும் கிளம்பினார்கள்.

நவீனா வீட்டில் நடப்பதால் விருந்து அங்கே சென்று இவர்களும் தங்கள் பங்கிற்கு உதவி செய்தனர்.

காலை உணவு வகைகளை தயாராக இருந்தது. அனைவரும் ஒன்றாக அமர்ந்து கொண்டு உண்ண தொடங்கினார்.

அன்று மூவருக்கும் நன்றாக அமைந்தது. இரவு மதினாவும் ஷாயின்னும் நவீனா வீட்டில் தங்கி கொண்டனர்.

மூவரும் தங்கள் போனில் அவர்கள் எடுத்த போட்டோவை whatsapp instagram status today sema enjoyment with our family and my two besties ..... என்று ஒரே மாதிரி வைத்தார்கள்.
.
.
.
.
.
சாதிக் அவளின் instagram status ai பார்த்து விட்டு ஒ அதனால தான் இன்னிக்கு மெசேஜ் பண்ணலயா என்று நினைத்து கொண்டு தூங்க சென்றான்.

அடுத்த நாள்.

மூவரும் ரெடியாகி போனை எடுத்து எதாவது பார்க்கலாம் என்று ஆன் செய்தாள்.

Sathik : good nit

Shayin : (இவன் என்ன மெசேஜ் பண்றா என்று மனதில் நினைத்து கொண்டு டைப் செய்கிறாள்). Good morng

தன் தோழிகளிடம் கூற அவர்கள் என்னடி இது இவன் என்று மதி அவளிடம் போனை வாங்கி அவன் ஐடிக்குள் சென்று பார்த்தாள்.

அவள் ஆச்சிரியத்துடன் ஹே அவன் ஐடியில எல்லாமே நம்ம மார்க்க சம்மந்தப்பட்ட போஸ்ட் தான்டி இருக்கு என்றவுடன் ஷாயின் அதை வாங்கி பார்த்து கண்கள் விரிய ஏய் இந்த மார்டன் வேர்ல்ட் இப்படி ஒரு பையனா? என்று கேட்டாள்.

பிறகு, செமல இவரை மாதிரி தான் என் உத்பி இருக்கனும் என்று ஏதோ ஏக்கத்துடன் சொல்ல தோழிகள் புரிந்து கொண்டார்கள் இது தவறாகி விடக்கூடாது என்று அமைதியாக இருந்து விட்டனர்.
.
.
.
.
.
.
சாதிக் எப்போது போல் கிளம்பி தன் கல்லூரிக்கு சென்றான். அவன் தன் இடைவேளை நேரத்தில் போனை எடுத்து பார்த்தான். அதில்

Shayin : Good morng

Sathik : (சிறிது புன்னகை விட்ட படி டைப் பண்றா) good morng

Shayin : saptacha

Sathik : அல்ஹம்துலில்லாஹ் sapta neega

Shayin : (அவன் அல்ஹம்துலில்லாஹ் சொன்னவுடன் பரவாயில்லை சின்ன சின்ன விடயத்துக்கும் அல்லாஹ் வை நினைக்கிறான் என்று புன்னகை உடன் டைப் செய்ற) nanum அல்ஹம்துலில்லாஹ் sapta.

Sathik : clg pogalaya

Shayin : engaluku eveng clg

Sathik : oh half day tana super nalla enjoy pannuga

Shayin : mmm kk

Sathik : enna panriga?

Shayin : frds kooda pesitu iruka ( மதினாவும் நவீனாவும் இவளை கவனித்து கொண்டு இருந்தார்கள்)

Sathik : mm seri nethu sema enjoyment pola status la balama iruthichi ..

Shayin : mm aama romba naal kazhichi ellarum onna family oda saptom.

Sathik : oh kk

Shayin : mmm seri pa bye time aaidichi clg kelambanum aprm pesura bye

Sathik : mm bye

இவன் செய்ததை எல்லாம் கவனித்து கொண்டு அமைதியாக இருந்தனர் அஜ்மல்லும் சித்தார்த்தும்.
.
.
.
.
.
.

பிறகு மூவரும் கிளம்பி கல்லூரிக்கு சென்றனர். அவர்கள் எப்போதும் போல் சுமாராக போனது அவர்கள் வகுப்பு.

நாட்களும் அழகாய் நகர்ந்தது. சாதிக்கும் ஷாயின்னும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். இவர்களின் நட்பு தொடங்கி ஒரு மாதம் முடிந்தது.

சாதிக், தனக்கு மனைவியாக வருபவள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி தான் ஷாயின் இருக்கிறாள். அவளிடம் பேச பேச அவன் மனம் ஏனோ அவனிடம் இல்லை என்பதை உணர்ந்து இது காதல் தான் என்று முடிவு செய்தான்.
.
.
.
.
.
மதி நம்ம ஷாயின் இந்த மாதிரி பசங்கள்ட்ட யார்கிட்டயும் பேசுனதில்லை தானே . இவன்கிட்ட மட்டும் எப்படி பேசுறா என்று நவீனா தன் சந்தேகத்துடன் கேட்க.

அதுவும் உண்மை தான். நீ பார்த்து இருக்கியா அவளை , அவன் கிட்ட பேசும் போது அவன் கண்ணுல இருக்க அந்த சந்தோஷம் அவள் முகத்துல தெரியுற அந்த பரவசம் எல்லாம் புதுசா இருக்கு டி என்று மதி கூற ம்ம்ம் மேடம்க்கு லவ் ஸ்டார்ட் ஆயிடுச்சு என்று நவீ கூற மதி வாயில் இருந்த பிஸ்கட்டை துப்பி ஏய் என்னடி சொல்ற என்று ஆச்சரியத்துடன் கேட்க நீயே யோசி என்று கூறியவுடன் மதினா சிறிது நேரம் ம்ம்ம் ஆமாம் உண்மை தான்டி என்றாள்.

இந்த வச்சி நாம ஏதும் முடிவு பண்ண வேண்டாம் அல்லாஹ் என்ன நினைக்கிறான் என்று நமக்கு தெரியவில்லை எதுவா இருந்தாலும் பார்த்துகலாம். சாதிக் ஒன்னும் கெட்டவன் கிடையாது நம்ம ஷாயின் கெட்டவள் கிடையாது .

அதே மாதிரி அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணாலும் எந்த ஒரு தப்பான முடிவையும் எடுக்க மாட்டங்க மதி அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு என்று நவீ கூற அவளை அணைத்து கொண்டாள் மதினா .

அவள் எச்ஓடி அழைத்தார் தன்னை அழைத்தார் என்று சென்றதால் இவர்கள் இருவரும் இதை மனம்விட்டு பேச முடிந்தது.
.
.
.
.
.
.

டேய் சித்து சாதிக் பார்த்தியா பொண்ணு கிட்ட பேச மாட்டான் எப்படி இந்த பொண்ணு கிட்ட மட்டும் பேசுறான் என்று அஜ்மல் கூறினான்.

ம்ம்ம் ஆமா அஜ்மல் எப்படி அவன் பேசுறப்ப பார்க்கிறியா i think he is love with that girl என்று கூற ம்ம்ம் ஆமாம் டா அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான். பாப்போம் அல்லாஹ் என்ன நாடுறான் யாருக்கும் தெரியாது இன் ஷா அல்லாஹ் பாப்போம் என்று அஜ்மல் கூற அங்கு சாதிக் வந்தமர்ந்தான்.

டேய் உங்கள் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் டா என்றவுடன் ம்ம்ம் சொல்லுடா இருவரும் கூற.

அது அது அது வந்து நான் ஷாயின் லவ் பண்ற டா என்றவுடன் குடித்த தண்ணீரை வெளியே துப்பி சித்தார்த்தை பார்த்தான் அஜ்மல் அவனும் அஜ்மலை பார்க்க இவன் என்னடா அப்படி பார்க்கிறிங்க? என்ற சாதிக் குரல் அவர்களை தன்னிலை வந்தார்கள்.

சரிடா அவளை இது வரை நீ நேர்ல பார்த்தது இல்லை பேசுனதில்லை அப்றம் எப்படி டா? என்று சித்தார்த் கேட்க அவன் ம்ம்ம் எனக்கு அழகு முக்கியமில்லை மனசு தான்டா முக்கியம் அந்த மனசு அவகிட்ட இருக்கு டா என்றான் சாதிக்.

எதை வச்சி அவ நல்லவள் சொல்ற என்று அஜ்மல் கேட்க அவள் அல்லாஹ்வை உண்மையாக நேசிக்கிறாள் அதைவிட அவள் குடும்பத்தை மேலே உயிரை விட மேல் பாசம் வச்சியிருக்கா. நம்ம மனசுல இருக்கிறத தான் நாம செயல்படுவோம். அதோட பிம்பம் தான் அவளோட போஸ்ட். என்கிட்ட எப்ப பேசினாலும் அவள் அம்மா அப்பா அவ தோழி அவங்க குடும்பம் பற்றி தான் பேசுவா இதைவிட ஒரு பொண்ணு நல்லவள் சொல்றதுக்கு என்ன ஆதாரம் வேண்டும் என்று கேட்டவுடன் இருவரும் அவனை வாயை பிளந்து கொண்டு பார்த்தனர்.

என்னடா அப்படி பார்க்கிறிங்க? என்று கேட்க நீ இவ்வளவு பேசுவியா என்று அஜ்மல் கண்கள் விரிய கேட்க ம்ம்ம் பேசுவேன் என்றவுடன் சரி மச்சி நீ அல்லாஹ் கிட்ட துஆ கேள். புரியுதா என்ற அஜ்மலையும் சித்தார்த்தையும் அணைத்து கொண்டான். பிறகு மூவரும் வீட்டுக்கு சென்றனர்.


​
 

New Threads

Top Bottom