மணி பத்து ஆகியிருந்தது.தாரிகா இன்னும் வீட்டிற்கு வரவில்லை....அவள் எப்போதுமே இப்படி தான்.ஆபீஸ் விட்டு வீட்டிற்கு வர மாட்டாள்.வீட்டில் குழந்தை கணவன் இருக்கிறார்கள் என்ற எண்ணமே இல்லாமல் நண்பர்களோடு சேர்ந்து குடித்து விட்டு ஊர் சுற்றிவிட்டு வீட்டிற்கு வரவே பத்து மணிக்கு மேல் ஆகிவிடும்...
சகிதீபன் குழந்தையை மார்போடு அணைத்து தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்...
அவன் தூங்காமல் இன்னைக்கு அம்மாவ நான் பார்த்தே ஆகனும் டாடி...அம்மாவ பாத்து டூ டேஸ் ஆகுது டாடி...
இப்போ நீங்க தூங்குங்க..அம்மாவ காலையில பாக்கலாம்...
நோ டாடி எனக்கு இப்பவே அம்மாவ பாக்கனும் என்று அடம் பிடித்தான்...
அப்பா இப்போ கதை சொல்வேனாம்..ஆதிகுட்டி சமத்தா தூங்குவானாம் ..சரியா?
சரி!
ஒரு ஊருல ஒரு அழகான கிராமம் இருந்துச்சாம்...அந்த கிராமத்துல ஒரு பெரிய வீடு இருந்துச்சாம்...
நம்ம வீட்டோட பெரிசா டாடி?
ஆமா?
அந்த வீட்ல நிறைய ஆடு ,மாடு,கோழி எல்லாம் இருந்துச்சாம்..
நம்ம வீடும் பெரிய வீடு தான! அப்பறம் நம்ம வீட்ல ஏன் டாடி இல்ல!
இப்படி இடையில கேள்வி கேட்டா நான் கதை சொல்ல மாட்டேன் போ!என்று பொய்யாய் கோபம் கொள்ள
நோ டாடி ?நான் பேசமாட்டேன் என்றவன் வாயை மூடிகொண்டு சமத்து பிள்ளையாய் கேட்க ஆரம்பித்தான்..
அந்த வீட்ல ஒரு காரு இருந்துச்சாம்.அந்த கார ஒரு அங்கிள் ஒட்டிட்டு இருந்தாராம்...
நீங்க நம்ம வீட்ல தாத்தாவுக்கு கார் ஓட்டுறீங்களே அது மாதிரியா டாடி..!
ஆமா ஆமா அது மாதிரி தான்...ஆனா இந்த டிரைவருக்கு ஆதி மட்டும் தான் குழந்தை!ஆனா அந்த டிரைவருக்கு மூனு பொண்ணு ஒரு பையன்....
அப்போ அந்த பையன் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தானாம்..லீவுல அப்பாவோட போய் கார் ஒட்ட கத்துகிட்டானாம்...
ஒரு நாள் அந்த பண்ணையார் வீட்டுக்கு ஒரு குட்டி தேவதை வந்தது...
டாடி நீங்க ஏஞ்சல் பாத்துருக்கீங்களா?எப்படி இருந்தது டாடி என்றான் ஆச்சரியமாய்..!
சின்ன பொண்ணு.ஆறு வயசு இருக்கும்.அதோட கண்ணு இரண்டும் படபடக்கும் மீன் போல..கள்ளம் ,கபடம் இல்லாத நேர் பார்வை ,துள்ளல் நடை.அதோட கண்ணம் இரண்டும் ஆப்பிள் போல இருந்துச்சு.காற்றில் பம் மென்று விரியும் பாவாடை,சின்னதாய் மேல் சட்டை போட்டு இருந்தா.பாக்க அப்படியே குட்டி தேவதை மாதிரி... அப்போ அந்த பையன பாத்து அந்த ஏஞ்சல் சிரிச்சதாம்..
அதுக்கு அப்பறம் அந்த ஏஞ்சலும் அந்த பையனும் நல்ல ப்ரண்ட்ஸ் ஆயிட்டாங்க...அந்த ஏஞ்சலுக்கு ஒன்னுனா அந்த பையன் துடிச்சு போயிடுவான்..அதே போல தான் அந்த ஏஞ்சலும்...
ஏஞ்சல் ஊரவிட்டு போற நாளும் வந்துச்சு..அந்த பையன் ரொம்ப அழுதான்.ஏஞ்சலும் ரொம்ப அழுதுகிட்டே ஊருக்கு போச்சு... என்றவன் ஆதியை பார்க்க அவன் நன்கு உறங்கி கொண்டிருந்தான்...அவனை மெதுவாய் படுக்க வைத்து அவனக்கு ஒரு போர்வையை போத்திவிட்டு திரும்பியவன் கதவருகே நின்றிருந்த ராகவனை கண்டு அதிர்ந்து போனான்...
மாமா நீங்க இன்னும் தூங்கலயா?
உன்கிட் ஒரு விசயம் கேக்கலானு வந்தேன்..அதற்கு இப்போ அவசியம் இல்ல..
மாமா நீங்க என்ன சொல்றீங்க..?
ஒன்னுமில்லை நீ தூங்கு நான் என் அறைக்கு போறேன் என்றவர் நின்று தீபா நீ இப்போ ஆதிக்கு சொன்ன கதையில வந்த ஏஞ்சல் தான் அந்த மாயாவா?
சகிதீபன் அமைதியாய் நின்றான்...
சரிப்பா நீ தூங்கு..காலையில நீ உங்க அம்மாவ பாக்க கிராமத்துக்கு போகனுனு சொன்னியே என்று கூறிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டார்..
சகிதீபனுக்கு தான் உறக்கமே வரவில்லை...அவன் நினைத்து கூட பார்க்கவில்லை ..மாயாவை இன்று பார்பான் என்று.இப்பயும் அதே துறு துறுனு தான் இருக்கா..இந்நேரம் என்ன பண்ணிட்டு இருப்பா..சாப்பிட்டு இருப்பாளா..என்று அவளை பற்றியே நினைத்து கொண்டிருக்க ....
அஸ்வந்த் ப்ரியா குட்டி ஸ்கூல் போய்டாலா?
போய்டா?
அம்மா போன் பன்னலயானு கேட்டாளா?அவ எங்க கேக்க போறா ?அவளுக்கு அப்பா நீ இருந்துட்டா போதுமே!!
மாயா ஏன் அப்படி சொல்ற ?ப்ரியாக்கு உன் மேல எப்பவுமே தனி பாசம் தான்..நாங்க இன்னும் ஒன் மந்த்ல இந்தியா வரோம் ??
ஒகே..அச்சு அப்பறம் வந்து... என்று இழுக்க...
என் மாயாக்கு பேச்சு தடுமாறுதா?நம்ப முடியலயே! அப்போ கண்டிப்பா நீ உன் பிளாக்கிய பாத்துருப்ப கரெக்டா?
எப்படி அச்சு என்றாள் ஆச்சர்யமாய்..!
உன்ன பத்தி எனக்கு தெரியாதா!என்றவன் நான் இந்தியா வந்து அவரை பாத்துகிறேன்.இப்போ எனக்கு ஆபீஸ்கு லேட் ஆச்சு நான் கிளம்புறேன்..நீ தூங்கு
சரி பை!!கட் செய்தாள்..
மறுபடியும் மொபைல் ஒலிக்க என்னா அச்சு இப்ப தான கட் பண்ணுன?
ஏய் குட்டிம்மா உன் வீட்டுகாரருகிட்ட பேசிட்டு இருந்தியா!!!!
ஆமா பிளாக்கி....ப்ரியா கிட்ட பேசலானு பாத்தேன் ..அவ ஸ்கூல் போயிட்டாலாம்...
ஓ..என்றவன் உனக்கு எத்தனை குழந்தைங்க....
ஒரே பொண்ணு தான்...அவளுக்கு அவ அப்பா இருந்துட்டா போதும்...நான் எல்லாம் தேவையே இல்லை...
சரிடா..நீ தூங்கு..நான் அப்பறம் பேசுறேன்...
இல்ல பிளாக்கி ..!!நானே உனக்கு கால் பன்ன நெனச்சேன்..நாளைக்கு ஒரு பார்ட்டி அரேன்ஞ் பண்ணிருக்கேன்.கண்டிப்பா நீ வரனும்..
இல்ல குட்டிம்மா நாளைக்கு ஊருக்கு போறேன்...ஊருல திருவிழா அம்மா வர சொல்லிருக்காங்க...அம்மாவ பாத்து ரொம்ப நாளாச்சு.. அதான் போலானு....என்று இழுக்க...
அப்படியா!ஒகே நீ போய்டு வா...நாம இன்னொரு நாள் மீட் பண்ணலாம்...
குட்டிம்மா என் மேல கோவம் இல்லையே?
கோபமா!உன் மேலயா ?இல்லவே இல்ல.நீ போய் தூங்கு....என்று கூறிவிட்டு கட் செய்தாள்...
அன்றைய இரவு இருவருக்குமே ஒரு இனிய இரவாக அமைந்தது....