Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெண்மதியே என் சகியே

Niveta Mohan

Saha Writer
Messages
8
Reaction score
9
Points
1
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...



நிவேதா மோகன்
 
நாராயணா நாராயணா எனக்கு ஏன் இந்த சோதனை என்னவாஇருக்கும் யாரு அவன் என்ன எதுக்கு பார்க்கணும்சொல்லுறான் , இந்த சந்தியாக்கு எங்கே போச்சி அறிவு... லூசு.. இப்பிடியா யாரோ கேட்டா சரின்னு சொல்லிட்டு வருவா ( ஆனால் பாவம் அந்த அப்பாவிக்கு தெரியவில்லை அந்த யாரோவையும் தன் தோழி தான் ஆட்டி வைக்கிறாள் என்று ) என பல எண்ணங்களுடன்.. அவள் கோவில் பிரகாரத்தை சுற்றி..வந்து கொண்டு இருக்கும் பொது " தொப் என்று ஒரு நெடியவன் மீது மோதி கொள்ள " அய்யோ" சாரி , நான் தெரியாம .....முன் பின் தெரியாத யாரோ ஒரு ஆண்மகன்.. மேல் மோதிவிட்ட..பதட்டம்.... அவளுக்கு...

அவள் முடிக்கும் முன் கை மறைத்து, " நீ தான் அந்த வென்மதியா ,? என கேட்ட அந்த நெடியவனை
விச்சிதிரமாய்மற்றும் மிரட்சியாய் பார்த்தாள் வெண்மதி ..

நம்ம பெயரை வேற சரியா சொல்லுறான் யாரா இருக்கும்.

வார்த்தை வராமல் , தந்தி
அடிக்க , " ஆ.. ஆமா யாரு நீங்க ? என வார்த்தை அவளுக்கு தந்தி அடித்தது

அதை ஏதும் கண்டுக்காமல் அவள் முன்னால் அவன் ஒரு கவரை நீட்டி

" நான் யாருங்கிறது
இருக்கட்டும்..... இது நம்ம கல்யாணபத்திரிக்கை நாளை காலைல சரியா 10 மணிக்கு....இதே கோவிலுக்கு வந்துரு.... எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு " என சொல்லிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பிக்க

மதி
அதிர்ந்து போய் நின்றுவிட்டாள் ' பின் சுதாரித்து வேகமாக அவன் பின்னால் ஓடி சென்று அவனை வழி மறைத்து " ஹலோநில்லுங்க யா.... யாரு நீங்க.. என்ன என்னமோ சொல்லுரிங்க எது பேசுறது இருந்தாலும் வீட்டுல மாமா கிட்ட வந்து பேசுங்க..இப்பிடி வந்து பேசுற வேலை எல்லாம் வேண்டாம் '

சூர்யா , அவளை
ஒரு முறை ஏற இறங்க பார்த்துவிட்டு.." பேசிமுடிச்சாச்ச..... நீ யார்கிட்டையும் நான் வந்து பேசுறதா இல்லை..நாளைக்கு வந்துரு, இல்லை விளைவு ரொம்ப மோசமா இருக்கும், ம் அப்புறம் பாய் என அவள் பதில் எதிர்பாராமல் விறு விறுவென... சென்றுவிட்டான்...

ஆனால்
வெண்மதியின் நிலை தான் இங்கே மோசமாய்போய்விட்டது... " யாரு இவன் ? "

[ என்னங்கடா நடக்குது இங்க
அவ கோவிலுக்கு வர , இவன்வந்து விடிஞ்சா கல்யாணம் சொல்லுறான் .. என்ன தான்நடக்குது தானே யோசிக்கிறிங்க அப்பிடி தான் எனக்கும்இருக்கு .. கதைக்குள்ள போகுறதுக்கு முன்னாடி நாயகன் நாயகி அறிமுகம் செய்துட்டு மெல்ல கதைக்குள்ள போவோம்... வாங்கோ ]

வெண்மதி , சுசிலா – வேதாசலம்
தம்பதினர் ஓட செல்ல புதல்வி, பகுதி நேர வேலை பார்த்து... டாக்டர் படிப்பை படித்து முடித்து விட்டு.. தந்தை ஓட நண்பரின் மருத்துவமனையில் வேலை பார்க்கிறாள் ... ஒரு விபத்தில் தன்னோடு தாய் தந்தையேஇழந்து சந்தியாவோடு சந்தியா தான் தங்கி இருக்கிறாள் , தன் தோழியின் கோரிக்கையின் பெயாரால் தன் வாழ்கையே இப்போது பணயம் முன் வந்து விட்டாள் சந்தியாவின் திட்டம் ஏதும் தெரியாமல் அவள் சொன்ன கட்டு கதைக்கு இவள் பலி ஆகா போவது தெரியாமல் உண்மை தெரியும் வரும் பொது வெண்மதியின் நிலை என்ன ஆகுமோ

இதோ சூர்யாவும் திருமண அழைப்பிதழ்
ஓட வந்து விட்டான்.........

___________________________________________________

ஏண்டி சூடாமணி காதல் வழிய பார்த்ததுண்டோடீ
கண்ணில் கண்ணீர் துளி எந்த நாளும் வார்த்ததுன்டோடி
பொண்ணுனா ஆன் உலகம் கவிதை என்கிறது
கவிதைதான் கை வாளா ஆள கொள்ளுறது ...........!!!

சாமியும் வேண்டாம் ஏதும் வேண்டாம் முதல வீட்டுக்கு போவோம்.. என மதி வேகமாய் வீட்டுக்கு திரு ம்பினால்.. அங்கே சந்தியா தோட்டத்தில் தனது காதில் இயர்போன் போன் மாட்டிகொண்டு பாட்டு கேட்ட படி நடந்துகொண்டு இருந்தாள் அந்த நேரத்தில் இவ்வளோ வேகமாக வந்துகிட்டு இருந்தா மதியே பார்த்து " ஹே என்னடி...

அதுக்குள்ள
வந்துட்ட.. நீ கோவில் போன.. அவ்வளோ சீக்கிரம்வீடு திரும்ப மாட்டியே.. இன்னைக்கு என்ன ஆச்சு உனக்கு, ஆமா ஏன் இவ்வளோ பதட்டமா இருக்க

அவள் முன்னாள் மூச்சு இளைக்க வந்தவள் ,
ஐயோ சந்தியா.. இதோ பாரேன் " என தன் கையில் வைத்து இருந்த திருமண அழைப்புதலை சந்தியா விடம் காட்டினாள்

அதை பார்த்த சந்தியா

" என்ன இது .."என கேட்டாள்

நீயே பிரிச்சு பாரு என்ன இதுன்னு. " என மதி பதட்டமாக சொல்ல..

சந்தியா
மதி கொடுத்த கவரை பிரிச்சு பார்த்துவிட்டு. மனதுக்குள் நம்ம போட்ட திட்டம்.. இவ்வளோ சீக்கிரம் வொர்க் அவுட் ஆகும்ன்னு நினைக்கலையே.. ஹ்ம்ம். யோசித்துவிட்டு/// .தன்னோடு.. போனில் இருந்து ஒரு போட்டோ எடுத்து.. மதி இடம் காட்டி உன்ன வந்து பார்த்தது இவனா சொல்லு....

போட்டோ
பார்த்த மதிக்கோ குளிர் ஜுரமே வந்துவிடும் போல் இருந்தது " ஆமா ஆமா இவ இவர் தான்.. . ஆனா இந்த போட்டோஉன் போன்ல எப்பிடி.....

" ஹாஹா... நேத்து
முழுவதும் நாம பேசினோமே... ஒருவர பத்தி."

" ஆமா.. "

" அந்த
அவர் தான் இவரு..."

நேற்று
நடந்தது..

சந்தியா
நல்லா யோசிச்சிக்கோ.. எனக்கு என்னமோ இது சரியாய் வருமா தெரியல்ல. எனக்கு பயமா இருக்கு உன் அவர்இதை எப்பிடி எடுத்துப் பாரோ..

நான் நல்லா யோசிச்சுட்டு
தான் இந்த முடிவுக்கு வந்து இருக்கேன் மதி... நீ சரின்னு மட்டும் சொல்லு.. மத்தத எல்லாம் நான் பார்த்துகிறேன் ,என சந்தியா சொல்ல

மதி, ' , மாமாவுக்கு இது தெரிந்தால் என்ன ஆகும் நினைச்சு பார்த்தியா, நாளைக்கு என்னோட
நிலைமை என்ன ஆகும்னு, என்னன்னு டி சொல்லுறது அவருக்கு அத்தை என்ன நினைப்பாங்க அது மட்டும் இல்லாம என்ன கல்யாணம் பண்ணினா எப்படி அவர் ப்ரோப்லேம் சரி ஆகும் என்னக்கு ஏதோ தப்பா தெரியுது டி நீ இன்னும் ஒருக்கா நல்ல யோசியேன் ?? சந்தியாவிடம் மதி கெஞ்சினாள்

சந்தியா
கோபத்தில்..."சும்மா சாக்கு சொல்லாத மதி.. உனக்கு இஷ்டம் இல்லேன்னா விட்டுரு நான் எப்பிடியோ போய்தொலையுறேன் உனக்கு என்ன வந்தது , நட்பு அது இதுன்னு பேசினது எல்லாம் போய் தானே அன்னைக்கி நீ யாரு இல்லாம தனியா நின்னப்போ என் பிரெண்டுன்னு எங்க அம்மா சொல்லாம உன்ன என் கூட அழைச்சுட்டு வந்தேன் ஆனா நீ எனக்கு ஒரு உதவி சொன்ன உடனே இவ்வளோ கேள்வி கேட்குற பின் வாங்குற அப்படினா என்ன அர்த்தம் உனக்கு நான் பிரெண்ட் இல்லைன்னு தானே என வரத கண்ணீரை துடைத்து படி பேசினாள் சந்தியா

மதி.. " ஏய்
ச்சீ என்ன பேசுற ..."

சந்தியா, " ஆமா
நீ தான் என் உயிர் சொன்னது எல்லாம் வெறும்பொய் தானே.., என்னகாக இது கூட செய்ய மாட்டியா மதி என சந்தியா உருக்கமாக கேட்க "

இங்கே மதி
உள்ளுக்குள் நூறு சுக்காக உடைந்து விட்டால் என்னவார்த்தை சொல்லி விட்டால் இவள் , நான் வைத்து இருந்த என்அன்பு மேலே இவள் சந்தேக படலாமா என் மேல் போய் என்னைபோய் ( " போதும் வார்த்தை தவறி விட்டாய் கண்ணமா பட்டுதான் எனக்கு தோன்றது உன் பேச்சு .. மதி மேடேர்கு வா இப்போ .. ")

பின்ன
நடப்பது நடக்கட்டும்....

சரி சந்தியா நான் உனக்கு
உதவி பண்ணுறேன் , உன் அவர் கிட்ட எல்லாம் சொல்லிடு , நான் வீட்டுக்கு கிளம்புறேன் , நீ பேசிட்டு வா, ஆனா நான் உன் அவர் கிட்ட பேசணும் அதுக்குவழி இருந்தா அதையும் செய்து விடு.

சந்தியா , மனதுக்குள் , கள்ளி, எனக்கு தெரியாதா உன்ன பத்தி , அவன் கிட்ட நீ நான் சொன்னத எடுத்து சொன்ன
என் பிளான்என்ன ஆகுறது அவன் வருவான், ஆனா உன் உடன் கலந்து ஆலோசிக்க இல்ல தன் முடிவை சொல்லவதற்காக ... என்றுதனக்குள் சிரித்து விட்டு

சரி டி மதி, அவர் உன் கிட்ட பேசுவாரு , நீ கிளம்பு ,, என்று அவளை அனுப்பிவிட்டு , அவனுக்கு அழைத்தாள்.

டார்லு , நம்ம பிளான் வொரக் அவுட் ஆகிடுச்சு என சந்தியா சந்தோசமாக அவனிடம் சொல்ல

அவனோ , சூப்பர் சந்து , நீ
சூர்யா கிட்ட பேசி பெருமாள் கோவிலுக்கு வர சொல்லிடு .. அவன் பேசுறதுல மதி இங்க பேச மறந்துடன்னும் ஜாகிரத்தை , அவ அவன் கிட்ட பேசிட்டாகாரியம் எல்லாம் கேட்டு போய்டும் , என அந்த அவனோ எடுத்துகொடுக்க

" நீ கவலை
படாத செல்லம் அவன பத்தி உனக்கு தெரியாதா அவள பேச விட மாட்டான் ... நான் பார்த்துகிறேன் .. " சந்தியா மெஔம் சிறிது நேரம் பேசிவிட்டு சூர்யாவுக்கு போன் பண்ணினாள் .

இதோ
அவன் சொல்லியது போல் இவனும் வந்து விட்டான் திருமண அழைப்பிதழ் ஓடு, .. அவளை பேச விடமால், அவனது இந்த செய்யாள் மதுவின் வாயே கட்டி போட்டு விட்டது .. இவன் இடம் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்று பார்த்தாள் இவனோ ஒரு முடிவோடு வந்து நின்று விட்டான் இனி என்ன எல்லாம் அவன் செய்யல் என்று அந்த பெருமாள் இடம் தன மனபாரத்தை இறைக்கி வைத்து விட்டு வீட்டை நோக்கி நடந்தாள்.. எவ்வாறு வீடு வந்து சேர்ந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை ..ஆனால் வந்து விட்டாள் மனத்துக்குள் ஏக பட்ட குழப்பங்கள்.

பொதுவாக ஒரு விஷயம் நாமளோ இல்லை நமக்கு வேற யாரோ செய்யே போகிறாகள் என்றால் நம்மோடு உளுணர்வு அதை உணர்த்தி கொண்டே இருக்கு அது போல் தான் இங்கே மதுவுக்கு அப்படி தான் தோன்றியது ஆனால் யாரிடம் போய் சொல்லுவாள்

அவளின்
ஒவ்வொரு அசைவும் சந்தியா கவனித்து கொண்டுதான் இருந்தாள்..
இனிமேல்
தான் டி இருக்கு மதி. உன்ன வச்சு அந்த சூர்யா கிட்டநான் எவ்வளோ கறக்க வேண்டி இருக்கு தெரியுமா இனி போக போக பாரு அவன் என்ன பாடு பட போறான்னு .... ( அடி பாவி மக்கா... இருடி நானும் சொல்லுறேன் இனி போக போக யாரு என்ன பாடு பட போறாங்கனு தெரியும்... அவளா அவனாஇல்லை நீயும் உன் அவனுமா... " )

hai friends itho first epi eppiid iruknu sollunga

​
 
Epi-2

அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
"என
கோவிலில் கிருஷ்ணா காணம் பாடிக்கொண்டு இருக்க இங்க மன பெண் அலங்காரத்து உடன் தன் தோழிக்காக இந்தஅக்னி பரிட்சையில் இறங்க முன் வந்து விட்டாள், அந்த கிளி பச்சை நிறத்தில் பட்டுபுடவை உடுத்தி , சிம்பிள் ஆனா மேக் அப்பில் மதிகேன்று அவளது பெற்றோர் சேர்த்து வச்ச நகைகள் மட்டும் தான் போட்டு இருந்தாள் , சூர்யாவிடம் இருந்து வாங்கி வந்த எந்த ஒரு நகையும் அவள் தொட்டு கூட பார்க்கவில்லை அவளுக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை , அதை சந்தியாவிடம் முடிவாக சொல்லிவிட்டாள் இங்க பாரு சந்தியா எனக்கு அவங்க குடுக்குற நகை ஏதும் வேண்டாம், அம்மா குடுத்து போனதே இருக்கு , இதை அவர் கிட்டயே திருப்பி குடுத்துரு சொல்லிவிட்டாள் ஆனால் சந்தியா அதை தன்னிடம் எடுத்து வைத்துகொண்டாள் சந்தியா சொன்னாள் என்பதற்காக கிளம்பி வந்த மதிக்கு மனசு கேட்கவில்லை ஆனால் இதோடு முடிவு அந்த இறைவன் தான் கூற வேண்டும் என்று அந்த கண்ணை மூடி மனம் உருகி வேண்டி கொண்டாள்....ஒரு வேலை அம்மா-அப்பா இருந்து இருந்தா... இப்பிடி எல்லாம் நடந்து இருக்குமா என்னவோ , மனத்துக்குள் அம்மா – அப்பா எனக்கு ஏதோ நான் பெரியே தப்பு பண்ண போற மாதிரியே இருக்கு ஆனா அது என்னன்னு தான் புரியலை நீங்க தான் எனக்கு துணை இருக்கணும் என வேண்டினாள் , அவளால் சத்தம் போட்டு அழ கூட முடியவில்லை .
சூர்யாவோ, இறுகி போனா பாறையாய்
ஹோமம் முன்னாள் அமர்ந்து இருந்தான் அதை கவனித்த இவளின் முதுகு தண்டில் மின்னல் வெட்டியது பயத்தில் அவள் உடம்பு அப்படியே சில்லேனே ஆகிவிட்டது மதி பயத்தில் சந்தியாவின் கையே பற்றிக்கொள்ள ஆனால் அவளை தேற்ற வேண்டியவளோ , மதி கொஞ்சம் சிரிச்ச மாதிரி தான் வாயேண்டி , என்னமோ உன்ன கடத்திட்டு வந்த மாதிரி முகத்த வச்சு இருக்க என சந்தியா குறை பாட ,
அதற்க்கு பயந்தே மதி , சிரிச்ச முகமாய் இருக்க முயற்ச்சித்தாள் , இல்லை நடித்தாள் என சொல்லலாம்.
மெல்ல அடி மேல் அடி எடுத்து வைத்து மதி அவன் அருகில் சென்று அமர , அவனோ பெயர்க்கு கூட நிமிர்ந்து பார்க்கவில்லை , அவனை ஓரகண்ணால் பார்த்த மதிக்கு மேலும் குழப்பம்
ஏன் இப்பிடி
இருக்கான், அப்போ அப்பிடி பேசிவிட்டு இப்போ இப்படி இருந்தா என்ன அர்த்தம் , பின்ன ஏதோ யோசித்தவளாய் இவனுக்கும் கஷ்டமா தானே இருக்கும், நாம நேசிச்ச பொன்னே நம்மளுக்கு வேற பொண்ண கட்டி வச்சா உச்சி குளிர்வா முடியும் என அவளும் அவனை பற்றி தப்பு தப்பாக நினைத்து படி உட்காந்து இருந்தாள் அவன் அருகில் .
மறந்தும் திருமணம் செய்யே போகும் இருவர் முகத்தில் சிரிப்பு ஒன்றே இல்லை கடும் கோபத்தில் அவன் இருக்க, கவலையில் இவள் இருந்தாள் ,
தாலி எடுத்து கட்டுங்கோ ....அதே
முக பாவத்துடன் மாங்கலியம் எடுத்து அந்த மங்கையின் கழுத்தில் கட்டி விட்டான்.
மதி தன் கண்ணீரை மறைத்து படி தலை நிமிரவே இல்லை
சூர்யா அருகில் நின்று இருந்த ஜோர்ஜ் , வாழ்த்துக்கள் பாஸ் '.சொல்ல
அதை கேட்டு மறந்தும் கூட சூர்யா ஏற்றுக்கொள்ளவில்லை என அவன் முகம் காட்டி கொடுத்தது .
இந்த நேரத்தில் அதிக சந்தோஷத்தில் ஒருவர் இருக்கிறாள் என்றால் அது சந்தியா தான் , அதே சந்தோஷத்தில் மதியே அவள் மெல்ல அனைத்து , ஹே
தேங்க்ஸ் டி மதி , சரி நான் வீட்டுக்கு முன்னாடி போறேன் நீ சூர்யா கூட அங்க என்ன வந்துரு அப்பா அம்மாவை சமாதனம் படுத்தனும்ல சமாதனம்ஆகா மாட்டாங்க தான் இருந்தாலும்.." என்னவோ பெரியே தியாகி போல் சந்தியா வார்த்தையே அள்ளி வீச கொண்டு இருந்தாள்
அப்பா அம்மா என்று
சந்தியா சொன்ன உடன் வெண்மதிக்கு குளிர் காய்ச்சலே வந்து விடும் போல் இருந்தது... இதை தானே நானும் சொன்னேன் அப்போ எல்லாம் பார்த்துக்கலாம் சொல்லிவிட்டு இப்போ இவள் இப்படி சொல்லுகிறாளே என பயம் அவளை தோற்றி கொள்ள ( இன்னும் காய்ச்சல் இல்லையா ...ஹி ஹிஹி, உன் நால இப்போ என்னக்கு காய்ச்சல் வந்துவிடும் போல் இருகிறதே அம்மா என்ன செய்வது " ).
சந்தியா சொல்லி முடிபதற்குள் ..சூர்யா முந்தி கொண்டான்
" வேண்டாம் சந்தியா, நான் நேரா என் வீட்டுக்கே கிளம்புறேன் ,யாரும் எங்கையும் வர போறது இல்லை
நீ உன் வீட்டுக்குகிளம்பி போ... உன் அம்மாவை சமாதனம் பண்ணிக்கோ .. வெண்மதி என் கூட தான் வர போறா நீ கிளம்பு
" ஜார்ஜ் , நீ இவள அழைச்சுட்டு போய் அவங்கள விட்டுட்டு வந்துரு நான் கிளம்புறேன்... என்று சந்தியாவின் பதில் எதிர்பாரமல் நகர்ந்து விட மதி அவன் போகிறானே, இப்போ நான் அவன் கூட போறதா இல்லை யோசித்த படி நிற்க கொஞ்சம் தூரம் வரை போனவன் மதிஅவனுடன் வராமல் அதே இடத்தில நிற்பதை திரும்பி பார்த்தவனின் ரத்த அழுத்தம்உச்சிக்கு ஏறியது , வாய் திறந்து ஏதும் சொல்லாமல் மதியே அவன் முறைத்து பார்க்க , அதுலயே மதி நான் வரேன் சந்தியா என சந்தியாவிடம் சொல்லிவிட்டு.. அவன் பின்னால் சென்றால்.. இல்லை இல்லை ஓடினாள்
இங்க
சந்தியா சற்று குழம்பித்தான் போய் விட்டால் , என்ன தான் ஆச்சு இவனுக்கு இவ்வளோ நாள் நல்ல தானே இருந்தான் இந்த ரெண்டு நாள தான் இப்படி இவன் பேசுறான், நாம நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு போய் மதியே வசவு வாங்க வைக்கலாம் என்று பார்த்தால் இவன் அவள வீட்டுக்கே அழச்சுட்டு வர மாட்டான் போல் இருக்கே ஒரு வேலை நம்ம திட்டம் ஏதும் தெரிஞ்சு போய் இருக்குமோ என அவள் யோசித்த படி சிறிது நேரம் நின்றாள் பிறகு வேகமாய் அவன் அருகில் சென்று , என்ன சூர்யா இப்பிடி பேசுறிங்க , மதிக்கு என்ன விட்டா யாரு இருக்கா , நீங்க இப்படி சொல்லுரிங்க
என்ன விட்டா யாரு இருக்கிறா என்கிற வார்த்தையே சூர்யா கவனித்து இருந்தால் பின்னால் வர போகும் பிரச்சனையே தவிர்த்து இருக்கலாம் ஆனால் . ??
ஆமா சந்தியா, இப்போ இது எதுக்கு
வரணும் வந்தா வீண்பிரச்சனை... அதுக்கு நீயே சமாளி அப்பிடியே உன் அம்மா மதி பற்றி கேட்டா வேலை விஷயமா பெங்களூர் வரைக்கும் இவ போய் இருக்கான்னு சொல்லிட்டு " பிறகு மதியே பார்த்து
மதி
சீக்கிரம் வந்து கார்ல ஏறு எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு நான் போகணும் .
அவன் பேச்சு மறு பேச்சு இன்றி
அவள் காரில் ஏறி கொள்ள, ஜார்ஜ் நீ இவங்கள வீட்டுல விட்டுட்டு வந்துரு ஓகே
ஜார்ஜ், " ஓகே பாஸ் , நான் வந்துறேன் நீங்க கிளம்புங்க ...
ஜார்ஜ், சூர்யாவின் நல்ல தோழன்.........!!!
சூர்யா
மதுவை அழைத்து கொண்டு சென்று விட.
ஜார்ஜ்
," சந்தியா இடம் என்ன போலாமா.. சந்தியா , எனக்கும்லேட் ஆகுது, பாஸ் ஆபீஸ் போறதுக்குள்ள நான் அங்கே இருக்கணும் '
" ஹ்ம்ம் போலாம் ஜோர்ஜ் , என அவள் காரில் ஏற , ஜோர்ஜ் காரை கிளப்பின்னான் ,"
காரில் அமர்ந்து இருந்த சந்தியாவுக்கு எண்ணம் எல்லாம் சூர்யாவை சுற்றி தான் இருந்தது, மனதுக்குள் " என்ன
ஆச்சுஇவனுக்கு இப்பிடி பேசிட்டு போறான்.. மதியே வீட்டுக்குஅழைச்சுட்டு போகலாம் பார்த்தா இப்பிடி பண்ணிட்டானேஇந்த சூர்யா... என போகும் வழியில் யோசித்த படி வந்தாள் அவளுக்கு மதியிடம் சில விஷையங்கள் சொல்ல வேண்டி இருந்தது அதை ஏதும் செய்யே விடாமல் சூர்யா தடுத்து விட்டான் என்கிற ஆதங்கம் "
ஜார்ஜ் , சார் ஓட்டிக்கொண்டே அவளை
ஒரு முறை திரும்பிபார்த்து மனதுக்குள் சூரியாவை நினைத்து பெருமை பட்டான் "இப்போ தான் டா சரியா முடிவு எடுத்துக்கிற.. இவளுக்கு இதுமட்டும்..... பத்தாது இன்னும் இன்னும் இருக்கு என நண்பனைபாராட்டினான் , கொஞ்சம் நேரத்தில் அவள் வீடு வந்துவிட அவளை அவள் வீட்டில் விட்டுவிட்டு கிளம்பினான்..
" என்றைக்கும் இல்லாமல் இன்னைக்கு என்று பார்த்து சந்தியாவீட்டில்
அவள் பெற்றோர் இருக்க.. இப்போது என்ன செய்வது என யோசித்த படி.. வீட்டில்.. உள்ளே சென்றாள் ."
அவளது அம்மா...சாந்தி..... " என்னடி.. சந்தியா நீ
மட்டும் வர எங்கே.. வெண்மதி ரெண்டு பெரும் சேர்ந்து தானே கோவில் போனிங்க இப்போ நீ மட்டும் வர எங்கே அவளை "
' அம்மா
அது... வந்து... "சந்தியா எப்படி விஷயத்தை சொல்லாலாம் என்று யோசித்தாள்
" என்ன
வந்து போயின்னு. சொல்லிக்கிட்டு நிக்கறவ எங்க அவ "என அவர் சற்று குரல் உயர்த்தி கேட்க
அதில் சந்தியா கடுப்பு ஆனவள் , அதே தோரணையில் தன் தாய் இடம்
அவ
இனி வர மாட்டா அம்மா, போதுமா சும்மா சும்மா என்ன கேள்வி கேட்டுகிட்டே இருக்காதே என சொல்லிவிட்டு நகர போக
அவளை போகவிடாமல் அவர்,
ஏன் என்ன அச்சு அவளுக்கு [ எங்கே அவள் வராமல் போய் விட்டாள் இங்க இருக்கும் அனைத்து வேலையும் செய்யே வேற ஆட்களை வேலைக்கு வைக்க வேண்டுமே அதற்கும் காசு செலவு ஆகுமே என்கிற கவலை ]
அவ
இனி வர மாட்டா அம்மா, நீ போய் உன் வேலையே பாரு , என சந்தியா பாடின பாட்டையே பாட..
இப்போது
ஏன் என்ன ஆச்சு அவளுக்கு ஏன் வர மாட்டா என அவர் பதற
அவரை ஒரு நிமிடம் பார்த்த சந்தியா சும்மா பதறாத ம்மா நீ எதுக்கு கேட்குற எனக்கு தெரியும் , இப்போ என்ன அவ எங்கே உனக்கு தெரியனும் , அவளுக்கு
கல்யாணம் ஆகிருச்சு போதுமா என கடுப்பில் உண்மையே உளறிவிட
என்னது
கல்யானம என்ன டி சொல்லுற என சாந்தி அலற..
தான்
என்ன சொன்னோம்... என்று அப்போது உரைத்தது , 'ஹான் இல்லை அம்மா.. அது அவ என்ன கல்யானம பண்ணிட்டு போய்டா...வேலை விஷையமா பங்களூர்.. வரைக்கும் தான் ம்மா போயிர்க்கா....
இப்போ
தான் அவளை பஸ் ஏத்தி விட்டுட்டு... வரேன்..
எங்க
கிட்ட கூட சொல்லாம போயிர்கிங்க அவளோ துரத்துக்கு போயாச்ச இது வீடா.. இல்ல சத்திரமா நேரம் காலம் தெரியாமவந்து போறதுக்கு..
சந்தியா
அங்கே சூர்யா மதி என்ன செய்து , கொண்டுஇருப்பார்கள்.., சூர்யாவிடம் மதி ஏதும் சொல்லி இருப்பாளோ , இல்லை சூர்யா தான் மதி இடம் ஏதும் சொல்லி இருந்தால் என்றுநினைக்க அத்தோடு அவள் அம்மாவின் பேச்சு அவளை மேலும் எரிச்சல் அடையே செய்தது
இப்போ
என்ன தான் ம்மா.. உனக்கு.. பிரச்சனைஅவளுக்கு...திடிர்ன்னு.. ... வர சொல்லிடாங்க...அதான்கிளம்பிட்டா.... உன் கிட்ட சொல்லிட்டு தான் போகணும் இருந்தா நான் தான் நேரம் ஆகிடும்ன்னு.. கிளம்பசொல்லிட்டேன்......போதுமா.. சும்மா தொண தொணன்னு கிட்டு, இப்போ எனக்கு.. வழி விடு....நான் உள்ளே போகணும் என அம்மாவிடம்...கத்திவிட்டு.. நகர்ந்து விட்டாள்..
சாந்தி..
என்ன இவ இப்பிடி கத்திவிட்டு போறா இப்போ என்னகேட்டேன்... . சொல்லாம ஏன் போனான்னு கேடத்து.. ஒரு தப்பா... இந்த காலத்து பிள்ளைங்கள.. ஏதும் சொல்லிட கூடாது என்னசொல்ல இப்போ வேலைக்கு வேற ஆள் தேடன்னுமே எனபொலம்பிவிட்டு..அவரும் அவர் வேலை பார்க்க சென்றார்..
இங்கே
சூர்யா மதியே அழைத்து கொண்டு... தனது வீட்டுக்கு வந்து சேர .. அப்போவும் அவன் முகம் இறுகி போய் தான்..இருந்தது...
மதி
வரும் வழியில்... ஒர கண்ணால் அவன் முகத்தில் ஏதும் மாற்றம் தெரியுதா என்று பார்த்து கொண்டே வந்தாள் , அவளுக்கு அவனிடம் பேச கேட்க நிறையா விசையங்கள் இருந்தது , அனால் அவனோ ' ஹ்ஹ்ம்ஹும்...ஒன்றும்...தெரியவில்லை .. மதி தான் கதி . கலங்கி போய்அமர்ந்து இருந்தால் .. விட்டால் காரில் இருந்து குதித்துவிடுபவள் போல் .. அவள் நிலை இருந்தது
ஆள்
ஆவாராம் இல்லாத காட்டில்... கார் போக.. மதி.. " என்னஏரியா இது புதுசா இப்பிடி காடு மாதிரி இருக்கே... .. ஒரு வேலைசினிமா ல வர மாதிரி... என்னமோ தெரிஞ்சு.. என்ன கொலை பண்ண போறனோ ஐயையோ கடவுளே இப்போ எப்பிடிதப்பிக்கிறது தப்பிகிறது எல்லாம் இந்த சந்தியாவால வந்தது...நான் அப்போவே சொன்னேன் இது சரி பட்டு வாராதுன்னுகேட்டாளா என் பேச்சை... கடவுளே.. இன்னை ஓட என் ஆயுசுக்கு ஒரு முடிவு வர போகுது. என சம்பந்தமே இல்லாம மனதுக்குள்புழம்பி கொண்டு வந்தாள் எதையுமே வாய் விட்டு சொல்லும்நிலையில் அவள் இல்லை..
நீண்ட நேரம் பயணத்துக்கு பின் கார்
அந்த பெரியே வீட்டின்முன் நின்றது
சூர்யா வேகமாய்
காரை விட்டு இறங்கி வீட்டுக்குள் சென்றுவிட்டான் , மதி அவன் பின்னால் இறங்கி நிற்க..
இவள்
ஒருத்தி நிற்பத்தை கூட கவனிக்காமல் அவன் போய்விட
இப்போது
மதிக்கு குழப்பம்... உள்ளே போவாதா இல்லைஇப்பிடியே... நிற்பதா , இல்ல இங்கயே நிற்ப்போம் உள்ள போய் அதுக்கும் அவன் கிட்ட யாரு வாங்கி கட்டிக்கிறது என அங்கயேநின்று.. கொண்டு அங்கே இருந்த தோட்டத்தை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்
சூர்யா வீட்டினுள் வந்தவன் நேராக தனது அறைக்கு சென்று உடை மாற்றி கொண்டு வந்து
தனது பாட்டி அறைக்கு..சென்றான்...
அங்கே
மரகதம் அம்மா.. மகாபாரதம் புத்தகம் படித்து கொண்டு இருந்தார்...
அவன்
வந்ததை கவனித்து அவர் படித்து கொண்டு இருந்த..பக்கத்தை.. புக் மார்க்.. செய்துவிட்டு.. அவன் இடம்.." என்ன பாசூர்யா இந்த நேரத்துல... வந்து இருக்க.. ஏதும் மறந்து வச்சத எடுக்க வந்தியா என்ன... .
" ஹ்ம்ம் பாட்டி அது இல்ல [ தன் நெற்றியே தேய்த்து விட்டபடி ]உங்களுக்கு.. ஹான்..
உங்கள் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்...
" என்ன. பா.... "
" அது
நான் கல்யாணம் பண்ணிகிட்டேன் பாட்டி .."
" ஹ்ம்ம் சரி
ப்பா. "
" என்ன சரி. பாட்டிம்மா.. இதுவே வேற யாராவுது இருந்தா...பொண்ணு யாரு.. ஏன் இப்பிடி யாருக்கும் சொல்லாம.. கல்யாணம் பண்ணிகிட்ட என் கிட்ட சண்டை போட்டு இருப்பாங்க நீங்க ஒரு வார்த்தை கூட ..
பொண்ணு யாரு என்ன எதுன்னு கேட்க மாடிங்களா..'
" அப்பிடி
இல்லடா கண்ணா.. என் பேர புள்ள.. எது செய்தலும்அது சரியா தான் இருக்கும் ஆமா எங்க டா என் மருமக.. "
" அப்போது
தான்.. அவளை உள்ள வர சொல்லாமல் விட்டதுநினைவுக்கு வந்தது.....[ ஏன் நான் சொன்னா தான் உள்ளேவருவாளா .. இல்லைனா உள்ள வர மாட்டாளோ மகாராணி..என நினைத்த படி.. தன் பாட்டி.. இடம்... வெளியே நிக்கிறா.. போல பாட்டி..."
நல்ல
பிள்ளை.. டா நீ இப்பிடி தான் வெளியே நிக்க வைப்பியா கையோடு. அழைச்சுட்டு வர கூடாதா வா போய் பாப்போம்... என்று மரகதம் அம்மா மெல்ல சூரியாவின் கையே பிடித்து எழுந்து அவனுடன் மதியே பார்க்க சென்றார்....
வெளியே... மதி..
சூரியாவின்.. வருக்காக.. விரல்களை..எண்ணியே படி.. நின்று கொண்டு இருந்தாள் அவளுக்கு அந்த இடமே பயத்தை கிளப்பியது ,மேலும் அவன் வீட்டில் இருபர்வகள் அவளை என்ன சொல்லுவாங்களோ என்கிற கவலை வேறு அவளை ஆட்டிப் படைத்தைதது
வேலையே வந்த
மரகதம்
பாட்டி... .. இந்த தேவதை தானா டா நம்ம வீடு மருமக என சொல்ல
அவர் குரல்
கேட்டு மதி திடுக்கிட்டு நிமிர்ந்தாள் பார்த்தாள் ​
 
Epi-3

மரகதம் பாட்டி வெளியே வந்தவர் , வெண்மதியே பார்த்து இந்த தேவதை தான். நம்ம வீடு மருமகளா சூர்யா என சந்தோஷத்தில் கேட்க

அவரது குரல் கேட்டு மதி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் ...

அவளின் பதட்டடை .பார்த்த .மரகதம் .பட்டி. .. மெல்ல அவள் அருகில் போய் . எதுக்கும்மா. இவ்வளோ பயம் உன்ன இங்க யாரும் ஏதும் சொல்ல .. மாட்டாங்க.

சூர்யா.. ரெண்டு பெரும் சேர்ந்து நில்லுங்க.. ஆரத்தி எடுக்க

ஆமா இது ஒரு கல்யாணம் இதுக்கு ஆரத்தி ஒன்னும் தான் குறைச்சல் இந்த பாட்டி வேற நேரம் காலம் தெரியாம என் கோபத்தை கிளறி விடுறாங்களே என சூர்யா பட்டுன்று

பாட்டிம்மா.. அது எல்லாம் ஒன்னும் வேண்டாம். எனக்கு ஒரு முக்கியமா மீட்டிங் இருக்கு.. நான் கிளம்பனும்.... என மதியே முறைத்து கொண்டே அவன் சொல்ல..

இப்போ மதியின் நிலைமை.. இன்னும் மோசமாய் போய் கொண்டு இருந்தது... " தோழியின்.. கோரிக்கையின் பெயரால் இவனை திருமணம் செய்ய முன் வந்தது தவறு.. என்று.. முன்பே உறுத்த.. இப்போது அந்த எண்ணம் இவளை மேலும் கொண்டுறது....

சிங்கத்தின்.. குகைக்குள். வந்த பின் அதை எப்பிடி சமாளிக்க.. வேண்டும்.. என்று. சந்தியா மதிக்கு நன்றாக சொல்லி இருந்தால்.. ஆனால்.. இது சரியா வருமா.... என இப்போது மதி.. நினைக்க..... அவளுக்கு கண்கள் இருட்டி கொண்டு வந்தது [ இரவில் இருந்து உணவு உண்ணாது , அதோடு சேர்த்து மன உளைச்சல் சேர்த்து அவளுக்கு இருட்டி கொண்டு வந்தது ஆனால் அதையும் சமாளிச்சு அவள் மெல்ல தலை அசைத்து வைத்தாள் ]

அவனின் பேச்சு பிடிக்காத பட்டி.. " சூர்யா.. நீ ஏதும் சொல்லாத... கல்யாணம் உன் இஷ்ட படி செய்துகிட்ட ஆனா.. மத்த.. சடங்கு எல்லாம் என் இஷ்ட படி தான் நடக்கும் நடந்தே ஆகணும் புரியுதா. அது நாள இப்போ எங்கயும் போகாம உள்ள போ... .என அவர் குரல் உயர்த்தி.. அவனை அடைக்கி விட்டு.. " வாசல் பக்கம் திரும்பி பானு அந்த அரத்தி கரைச்சு எடுத்துகிட்டு வா என குரல் குடுக்க

' எடுத்துகிட்டு வந்துட்டேன் ம்மா.. " என அவர் வேகமாக வெளியே வர

" ஹ்ம்ம்.. ஆரத்தி எடு..."

" சரிங்க ம்மா..."

அந்த பெரியே வீட்டில்.. ரொம்ப காலமாக.. சமையல்.. செய்து கொண்டு இருக்கும். பாணு...... தான் இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பி வைத்தார்...

ஏதும் பேச முடியாமல்.. மதி.. தவித்த படி.. சூர்யா உடன் அந்த வீட்டில் கால் அடி எடுத்து வைத்தாள்

இப்போ இருந்தே விஷ பரீட்சை. ஆரம்பம் என.. ஒரு வித திகில் உடன் சூர்யா பின்னே சென்றால்.. மதி என்கிற வெண்மதி

பாட்டிம்மா. அவளை அழைத்து கொண்டு.. பூஜை அறைக்கு சென்று. விளக்கு எற்ற சொல்ல..

மறுப்பு ஏதும் சொல்லாமல்.. அவர் சொல் படி எல்லாத்தையும் செய்து முடித்தாள். அவள்...

சற்று நேரத்தில் சூர்யா தனது அறையில் இருந்து.. வெளியே.. வந்தவன். பாட்டி இடம்.. நான் கிளம்புறேன் பாட்டி என சொல்லிவிட்டு சென்று விட்டான்

"என்ன சூர்யா , இப்போ தானே சொன்னேன் , நீ இங்க இருக்கணும்ன்னு இப்படி கிளம்பினா என்ன அர்த்தம் ,"

" இல்ல பாட்டி நான் போயே ஆகணும் , இது முக்கியமான மீட்டிங் என கிளம்பி சென்று விட்டான்

மறந்தும் மதியின் பக்கம் திரும்பவில்லை... . என்னமோ இவள் அவனுடையே.. ஜென்ம விரோதி போல்.. நினைத்துவிட்டு.. சென்று விட

மரகதம் தான் அவன் போனதை பார்த்து , எப்போ தான் இந்த பையன் திருந்த போறானோ என பெருமூச்சு விட்டபடி

இப்பிடி வா.மதி.. உன்ன பத்தி சொல்லு என்ன படிச்சு இருக்க . அம்மா அப்பா எல்லாரும் என்ன பண்ணுறாங்க , சூர்யாவை உனக்கு எப்படி தெரியும் , வீட்டுக்கு ஒரே பெண்ணா. அவருக்கு சூர்யாவை பற்றி தெரிந்து இருந்ததால் மதி இடம் உண்மை என்னவென்று தெரிந்துகொள்ள முயன்றார் .

அவர் அவள் பெற்றோரை பற்றி கேட்ட உடன்.. மதியின் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது...
மரகதம் பட்டி. பதத்துடன் ." ஐயையோ.. ஏன் டாம்மா....கண் எல்லாம் கலங்கிருக்கு "

மதி.. இல்லைங்க அ அது..வந்து எனக்கு.."

" பாட்டின்னு சொல்லு கண்ணு... " அவர் எடுத்து குடுக்க

" சரி என தலை அசைத்துவிட்டு.. .,. பாட்டி.. அது எனக்கு அப்பா அம்மா ரெண்டு பேருமே இல்லை பிளஸ் 2 படிக்க போது ஒரு கார் அக்சிடென்ட்ல ரெண்டு பெரும் இறந்து போய்டாங்க என்று அழுத படி தன்னை பற்றி சொல்லி முடித்தாள் "

அவள் அழுவதை பார்த்து அவருக்கு தன் பயம் பிடித்து கொண்டது

" அதுக்கு என்னடா.. இப்போ உனக்கு இனி.. நானும் சூர்யாவும் இருக்கோம்.. என இப்பிடி எல்லாம் இனி நீ கவலை பட கூடாது.. சரியா..'அன்பாக சொல்ல

மதி மனதில்.. குற்ற உணர்வு தலை தூக்கியது.. எப்பிடி பட்டவர்கள்.. இவங்க , அப்போ சந்தியா ஏன் அப்படி சொன்னா அப்போ சூர்யாவும் ஒரு வேலை நல்லவன் தானோ என ஒரு பக்கம் சிந்தனை ஓட.. மற்றொரு.. பக்கம்.. சந்தியா வீட்டில் இருந்த பொது இல்லாத எதோ ஒன்று இங்கே வந்த சில மணி நேரத்தில் தோன்றியது நீண்ட நாள் சொந்தம் போல் இது எப்பிடி சாத்தியம்... என ஒரு மனம் கேட்க...

அவளால் தெளிவாக ஒரு முடிவுக்கு வர முடியவில்லை அதை பற்றி யோசிக்க மதி அமைதி ஆகிவிட

மரகதம்.தான் . அவள் இடம் பேச்சு கொடுத்தார் சூர்யாவும் உன்னை மாதிரி தானம்மா

மதி ஆச்சரியத்துடன் பாட்டியே பார்த்து " என்ன பாட்டி சொல்லுரிங்க.. அவர் எப்பிடி என்ன மாதிரி "

' ஆமா ம்மா.. அவன பெத்தவங்களும்... இப்பிடி தான்.. கோவில் போயிட்டு.. திரும்பும் வழில.. கார் மோதி இறந்துட்டாங்க "

" என்னது....?? " மதியால் மேலும் யோசிக்கவே முடியவில்லை எப்படி எல்லாம் கஷ்ட பட்டானோ அவன் ச்சீ அவர் இனிமேல் மரியத்தையா சொல்லணும் அவளுக்கு தெரியுமே அவளது பெற்றோர் இறந்த பொது அவள் என்னவெல்லாம் துன்பம் அனுபவித்தாள் என்று அவளது மாமா இல்லை என்றால் அவள் இந்நேரம் என்ன ஆகி இருப்பாளோ

" ஆமா . இவனுக்கு அப்போ ஏதோ பிசினஸ் மீட்டிங் இருந்தது நால சூர்யாவும் நானும் போக முடியாமல் போச்சி... அதான் இப்போ உயிரோட.. இருக்கோம்.. என சொல்லிவிட்டு.. அவர் மகன் நினைவில்.. பெருமூச்சை ஒன்றை விட..

" பாட்டி என மெல்ல அவள் அவரை அழைக்க "

" என்ன ம்மா "

" அவ .. அவர் ரொம்ப அழுதாரா பாட்டி " என கேட்டவளின்

குரலில்.. மீண்டும் அழுகைக்கு ஆனா சாயல் தெரியே

மரகதம்... ' அழுதான் அப்புறம் சரி ஆகிட்டான் , ச்சு...அழகூடாது. கண்ணு நல்ல நாள் அதுவுமா சரி.. உனக்கு ரொம்ப களைப்பா இருக்கும்.. அதோ அது தான் உன் புருஷன் ரூம் போய் கொஞ்சம் நேரம் துங்கு.."

என்ன அவன் ரூம்லையா...என அதிர்ந்து .. ' பாட்டி நான் எப்பிடி அங்கே.."

" அவளின் பேச்சு அவருக்கு சிரிப்பை.. தர.. " என்ன பொண்ணு டா நீ.. இனி நீ அவன் கூட தானே இருக்கனும்... போ ம்மா.. போய் ரெஸ்ட் எடு நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வரேன்...
அவர் அப்பிடி சொன்ன உடன் . தான் கேட்ட கேள்வி எவ்வளோ முட்டாள் தனம் என்று தோன்றியது

இங்கே ஆபீசில்..

சூர்யா.. மீட்டிங் முடித்துவிட்டு.. ஜோர்ஜ். உடன் வெளியே வர..

" அப்போது தான் ஜோர்ஜ்...

என்ன சூர்யா.. ரொம்ப சூடா இருக்கிற மாதிரி தெரியுது.... என அவன் சிரிப்பை அடக்கியே படி சொல்ல..

" சூர்யா.. அவனை முறைத்த படி.. " என்ன டா கொழுப்பா உனக்கு.. நானே அடுத்து என்ன பண்ணுறது தெரியாமல் இருக்கேன்.. உனக்கு என்ன பார்த்த.. கிண்டலா . தெரியுது.. "
 
Epi-4



இங்கே ஆபீசில்..

சூர்யா.. மீட்டிங் முடித்துவிட்டு.. ஜோர்ஜ். உடன் வெளியே வர..

" அப்போது தான் ஜோர்ஜ்...

என்ன சூர்யா.. ரொம்ப சூடா இருக்கிற மாதிரி தெரியுது.... என அவன் சிரிப்பை அடக்கியே படி சொல்ல..

" சூர்யா.. அவனை முறைத்த படி.. " என்ன டா கொழுப்பா உனக்கு.. நானே அடுத்து என்ன பண்ணுறது தெரியாமல் இருக்கேன்.. உனக்கு என்ன பார்த்த.. கிண்டலா . தெரியுது.. "

" ஹாஹாஹா.. டேய் கிண்டல் இல்லை மச்சி.. நக்கல்ஸ்... ஹ்ஹஹஆஹா.. ஐயோ.. அம்மா முடியல..என உருண்டு பொரளாத குறையாய்.... சிரிக்க.... "

ஜோர்ஜ் சிரிப்பத்தை பிடிக்காமல்... சூர்யா அவனை எச்சரித்தான்.. "

வேண்டாம் ஜோர்ஜ்... கொன்னுடுவேன் உன்னை.. சிரிக்காத.. சொல்லிட்டேன்.. "

ஜோர்ஜ்.." சூர்யா.. ஒரு ரெண்டு நிமிஷம் சிரிச்சுகிறேன். டா அதுலையும் உன் உன் முகம்.. எப்பா.. சினிமா.. நடிகன் தோற்றான் போ....."

" டேய் உன்ன.. என சூர்யா ஜோர்ஜ் மேல் பாய்ந்து.. சொல்லிட்டு இருக்கேன் சிரிக்காதேன்னு... என விளையாட்டுக்கு. ஜோர்ஜ் கழுத்தை பிடித்து நெரிக்க..

ஜோர்ஜ்..." ஐயோ கொலை.. காப்பாத்துங்க.. . காப்பாத்துங்க.. என்ன... "

டேய்.. சூர்யா... என் பொண்டாட்டியே கொஞ்சம் நினைச்சு பாருடா.. என் தங்கச்சி தங்கச்சின்னு சொல்லுவியே.. அவள விதவை ஆக்கிடதே டா... அவ பாவம்.."

" பரவாயில்லை என் தங்கச்சிக்கு உன்ன விட நல்லவனா பார்த்து கட்டிவைக்கிறேன்.... நீ வேண்டாம் என் தங்கைக்கு..."

அடப்பாவி.. என்ன விட நல்லவனா யாரு இருக்க கிடைக்க மாட்டனுங்க டா.. அதுனால என்ன விட்டுரு...." என ஜார்ஜ் கெஞ்ச

சூர்யாவுக்கு தெரியும்.. . ஜோர்ஜ்.. இடம் விளையாட்டு தனம் இருந்தாலும்.. வேளையில்.. கண்ணு கருத்துமாக இருப்பான்... .

சூர்யாவின் பெற்றோர்கள் இறந்த பொது அவனை.. தாங்கியது.. இவன் அல்லாவா எதிலும்.. சூர்யாவை.. தனித்துவிடாமல்.. அவனை கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டான் இதோ இன்றும்...

சந்தியா.. சூர்யாவை .. காதல் வலையில் வீழ்த்தியே போதும் சரி.. அவனை சரியான பாதையில்.. திருப்பிவிட்டான்...

இதோ.. சந்தியா.. தனோட திட்டத்துக்கு.. மதியே.. பயன் படாத போறது முழுவதும் விவரமாய் திரட்டி.. சூர்யாவின்.. காதல் போதையே தெளியே வைத்தவன்.. இந்த ஜோர்ஜ்...

முன்பே விட.. இப்பொது ஜோர்ஜ் மீது. மேலும் அன்பு பெருகியது.. சூர்யாவுக்கு.. அதான்.. ஏதும் கேட்காமல்.. மதியே. திருமணம்.. செய்து கொண்டான்.. இதுவும் ஜோர்ஜின் யோசனை தான்....

" ச்சீ , போலாச்சு போடா... " என அவனை விட்டு எழுந்தான்.. சூர்யா..

" ஹப்பா என தனது சட்டை டை சரி செய்து கொண்டே.. சூர்யா.. இனி அடிக்கும் போது தலை முடியே கலைச்சு விடாதே டா. களமர் குறையுதுல '

" டேய் வேண்டாம் நானே கடுப்புல இருக்கேன் ,. திரும்ப என்ன கிளப்பி விடாதே.." என சூர்யா சொல்லவும்

' ஓகே ஓகே... ஜோக்ஸ்.அபார்ட்.., என்ன முடிவு பண்ணிற்க.. "

" மதியே படுத்துற பாடுள்ள சந்தியா.. செய்த தப்ப ஒதுக்கணும் டா.."

" உனக்கு மர கழண்டு போச்சா என்ன.."

" என்ன சொல்லுற.."

" நீ மதியே.. கஷ்ட. படுத்தினா... சந்தியா.. அவ தப்ப ஒத்துக்க மாட்டா சூர்யா.....உனக்கு இது புரியுதா இல்லையா "

" எப்பிடி சொல்லுற அவளுக்கு ஜோர்ஜ் "

" மதி. இப்போ பலி ஆடு... அதான் அவள உன்னை பிடிக்க திட்டம் போட்டு இருக்கா "

சூர்யா.." சச்சு... இப்போ என்ன தான் பண்ணுறது..."

" என்ன கேட்டா... நீ மதியே ஓட சேர்ந்து வாழு தான் சொல்லுவேன் "

" என்ன டா சொல்லுற.. நான் எப்பிடி.."

" நான் எப்பிடின்னா அவ உன் வைப்.. யாபகத்துல இருக்கா எப்பிடியும் நீ ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்க தானே போற.. அது ஏன் மதியா இருக்க கூடாதுன்னு.. நினைச்சு. அவள் ஓட வாழ்கையே ஆரம்பி.. சந்தியா மதி கிட்ட உங்கள பற்றி.. தெரிஞ்சுக்க.. நெருங்கனும்.. அதே சமையம்.. நீ மதி கிட்ட எல்லாம் விசையதையும் தெளிவா சொல்லி.. புரிய வை.. இல்ல,.. இப்போ போட்ட கேட்டவன் வேசத்தை வச்சே அவளுக்கு சந்தியா. பற்றி.. புரியே வை.. நாம நினைச்சது சரியா நடக்கும்..

ஏன் ன்ன தமிழ் நாடு. பெண்கள்.. யாரு கிட்டயும் அவங்க புருசன விட்டு கொடுக்க மாட்டாங்க. டா.. நீ மதியே நம்பலாம்... "

" ஜோர்ஜ்.. இது சரியாய் வருமா.."

" எல்லாம் சரியா வரும் டா புது மாப்பிள்ளை.. இப்போ நீ வீட்டுக்கு கிளம்பு.. நானும்.. கிளம்புறேன்.. என் பொண்டாட்டியே.. பார்த்து.. எட்டு மணி நேரம் ஆச்சு.. வரேன் டா. என சொல்லிவிட்டு. ஜோர்ஜ் சென்று விட..'

சூர்யாவும்.. மதி இடம் எப்பிடி புரியே வைப்பது.. என்கிற யோசனை உடன்.. வீட்டுக்கு கிளம்பினான்....

வீட்டில் பட்டி.... தூக்கம் வராமல் உலாத்தி கொண்டு இருந்த மதியே அழைத்து... அவள் கையில் ஒரு நகை பெட்டி மற்றும்.. பட்டு சேலை.. ஒன்றை கொடுத்து.. இதை இப்போ குளிச்சுட்டு கட்டிகோம.. என சொல்ல..

" சரிங்க.. பட்டி.. என அவர் சொன்ன படி.. புடவை கட்டி கொண்டு அவர் கொடுத்த நகை எல்லாம் போட்டு கொண்டு வர

அப்போது தான் வீட்டுக்குள் வந்த சூர்யா.. அவளை பார்த்து அப்பிடியே திகைத்து நின்று விட்டான்....



அப்போது தான் வீட்டுக்குள் வந்த சூர்யா.. அவளை பார்த்து அப்பிடியே திகைத்து நின்று விட்டான்.... இவள் இவ்வளோ . அழகா என நினைக்க.. எல்லாம் சிறுது நேரம் தான் மீண்டும் இவனுக்கு கோபம் தலைக்கு .. ஏறியது , இதுக்கு தானே வந்தா வந்த வேலை சரியா பண்ணிட்டா போல இவள இப்படியே சும்மா விட்டா நான் சூர்யா இல்லை.. வரேன் டி உன்ன.. என தனது

மரகதம் ம்மாவை. .தேடி .. .. " .பாட்டி ......என.. அழைத்த படி மாடி ஏற போனாவளை . " அவளை எதாவுது சொல்லி ஆகணுமே என்று...எண்ணத்தில் ....

சூர்யா.. " ஏய் .. நில்லு. எங்க போற ... என அவன் அதடியத்தில் பயந்து...கையில் வைத்து இருந்த நகை பெட்டி.. தவறி... கிழே போட்டுவிட்டு.. திரும்பி பார்க்க........... அங்கே காலையில் இருந்தது போல்.. அவன் கோப முகத்துடன்... நின்று கொண்டு இருந்தான்......

மதி.. இவன் எப்போது வந்தான்... ஐயோ... என்று இருந்தது மதிக்கு...என்ன சொல்ல போறனோ... என்கிற பயத்தில் நின்று இருந்தாள்

அவன் மெல்ல அவள் அருகில் வந்தான்..வந்தவன்... மதியே நன்றாக... உச்சியில் இருந்து உள்ளங்கால்.. வரை பார்க்க.... அவனின் பார்வை வேகம் தாங்க முடியாமல்....மதி தலையே குனித்து கொண்டால்.... . மனதுக்குள்... " என்ன இது கொஞ்சம் கூட அறிவே இல்லை இப்பிடி பார்குறான்... .. ச்சீ.. இதுக்கு முன்னாடி பெண்களையே பார்த்தது இல்லை போல , கடவுளே இவன் கிட்ட இருந்து என்ன எப்பிடியாவுது காப்பாத்து என வேண்டி கொண்டு நின்றாள் "

ஆனால் அவன் சொன்ன அடுத்து சொன்ன வார்த்தை கேட்டு.. மதி அப்பிடியே உறைந்து போய் நின்று விட்டாள் .

ம் பரவாயில்லை வந்த 6 மணி நேரத்துல... நகை எல்லாம் கை பற்றியாச்சு.. போல இனி இந்த சொத்து... அப்புறம்.. என் கம்பெனி.. மட்டும் தான் பாக்கி இருக்கு... என நக்கலாக சொல்ல...என்ன நடிப்பு டி.. சினிமா நடிகை எல்லாம் தோற்றாங்க போ ..என மேலும் சில வார்த்தைகளால்.. அவளை காயே படுத்த.. மதி அப்படியே கண்கள் கலங்க நின்று விட்டாள் . என்னவெல்லாம் பேசி விட்டான்.. இதை எல்லாம் கேட்க தான்.. இந்த திருமணமா ... நானா கேட்டேன்.. . தன தோழி தன் இடம் சொன்னது என்ன ஆனா இங்கே நடப்பது.. என்ன....இதற்க்கு தான் காலையில் இருந்து இறுகி போன பாறையாய் இருந்தானா..

நாம இவ்வளோ பேசுறோமே வாயே திறக்கிராளா பாரு. என சூர்யா மேலும் கோபம் கொண்டவனாக.. அவளை தர குறைவாக பேச ஆரம்பித்துவிட்டான்.. நல்லவேளை அங்கே மரகதம் பாட்டி.... இல்லை... ..

அவ்வளோ நேரம் பொறுமையாக... கேட்டு கொண்டு இருந்த மதிக்கு .. இவனது அடுத்த அடுத்து பேச்சு.. கோபத்தை கிளறியது அவன் முன்னாடி கையே நீட்டி போதும் போதும் நிருந்துங்க மிஸ்டர் சூர்யா.. .. உங்களுக்கு தான் பேச தெரியுமா நான் ஒன்னும் ஊமை.. கிடையாது... என்ன சொன்னிங்க உங்க.. சொத்துக்கு ஆசை பட்டு வந்தேனா யாருக்கு வேணும் இத எல்லாம்.

" ஒ அப்பிடியா அப்போ எதுக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்ச ."

இதே கேள்வி நானும் உங்கள பார்த்து கேட்கலாம் இல்லையா மிஸ்டர் சூர்யா..., ."



" ஏய்..."

" என்ன ... இப்போ பேசுங்க .. சார் , பேசுங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சது என் தப்புனா அந்த பேச்சை ஆரம்பிச்சது.. முதல நீங்க இப்போ யாரு மேல தப்பு "

" என்ன சொல்லுறா.. இவ.... நானா.. " என வாய் அடைத்து போய்.. அவன் நிற்க.."

" என்ன பேச்சு வரலையா இல்லை , இன்னும் என்ன ஏன் மேல பழி போடலாம்னு யோசிக்கிறிங்களா , நீங்க எல்லாம் யோசிப்பிங்க சார் , ஏன்னா நீங்க பணகாரங்க அப்பிடி தான் யோசிப்பிங்க ஆனா நாங்க அப்படி கிடையாது சார் ".

" ஏய் இதுக்கு மேல பேசின...அப்புறம் நான் மனுசனா இருக்க.. மாட்டேன்.."

" அது சரி இப்போ பெரியே அப்பிடி இருக்கிறதா உங்க நினைப்பாக்கும்.."

என இருவரும்.. வாக்கு வாதம் செய்து கொண்டு இருக்கும் போதே.. மாடியில் ஏதோ கிழே விழும் சத்தம் கேட்டது..

என்ன அது உணரும் முன்னே.. மரகதம் பட்டி...

ஐயோ அம்மா.. என அலற....

" மதி வேகமாய் அவன கண்டுகொள்ளாமல் அவர் இருந்த அறைக்கு ஓடினாள் "

*****************



HAI FRIENDS , NEXT EPI POTUTEN PADICHU UNGA COMMENTS SOLLUNGA
 

New Threads

Top Bottom