Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Kaadhalin Litmus paritchai - Story

மதுவின் வீட்டில் ஒரே ஒரு விதிமுறைதான் இருந்தது. படிப்பு முடியும் வரை காதல் என்ற வார்த்தையை இரண்டு பெண் பிள்ளைகளும் உச்சரிக்கக் கூடாது என்பது தான் அது.

மதுவின் பெற்றோரின் திருமணம் காதல் திருமணம்தான். ஆனால் அவர்கள் தங்களது பிள்ளைகளிடம் பள்ளிப்பருவத்தில் வரும் காதலுக்கு தடா விதித்திருந்தனர். அவர்களைப் பொருத்தவரையில் 2000க்குப் பிறகு பிறந்த காதல் எல்லாம் காதலே இல்லை. 2000 வருடத்திற்கு முன்பாக காதலித்த காதலர்களின் காதல்தான் தெய்வீகக் காதல். அவர்கள் காதலித்த யுகத்தில் காதலித்தவர்கள் தான் ஜென் காதலர்கள் (உண்மைக் காதலர்கள்).

ரோமியோ-ஜுலியட், அம்பிகாபதி - அமராபதி, அஜித்-ஷாலினி... போன்ற சென்ற நூற்றாண்டு காதலுக்குத்தான் நூற்றுக்கு நூறு மார்க் போடுவார்கள் மதுவின் பெற்றோர்கள். அந்த வரிசையில் அர்ஜுன்- வித்யா என்று தங்கள் பெயரையும் கடைசியாகச் சேர்த்திருந்தனர்.

இன்றைய காதலுக்கு அவர்கள் காதல் என்றே பெயர் வைக்கவில்லை. ஏன் எதற்கு என்பதன் காரணத்தை மதுவிடமே அவளது தந்தை ஒரு நாள் பகிர்ந்திருந்தார்.



முன்பு ஒரு நாள்...

அந்த நாள்கூட மதுவிற்கு நன்கு நினைவில் இருக்கும். பத்தாம் வகுப்பு விடுமுறை ஆரம்பித்த இரண்டே நாளில் மதுவின் தந்தையும் அவளும் அவர்கள் வீட்டு பால்கனியில் பேசிக் கொண்டிருந்தபோதுதான் மதுவின் தந்தை புதிதாக அவர்களது வீட்டில் கடைபிடிக்கப்போகும் காதல் தடா சட்டத்தைப் பற்றியும் அதன் காரணத்தையும் அவளிடம் கூறினார்.

காதலுக்கு தடை என்ற சட்டத்திட்ட மசோதா அன்றுதான் அவர்கள் வீட்டு பால்கனியில் விவாதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.

“நான் சேது படம் பார்த்துட்டு உன் அம்மாவை லவ் பண்ணவன் மது.” என்று மெல்ல சிரித்த முகமாய் ஆரம்பித்தார் அர்ஜுன்.

“எங்க காலேஜ்ல எல்லோரும் ஸைட் அடிப்போம். லவ் பண்ணுவோம். இந்த காலத்து லவ்விற்கும் எங்க காலத்து லவ்விற்கும் ஒரே ஒரு வித்யாசம் தான். நாங்க யாரை ஸைட் அடிச்சோமோ அவுங்களைதான் லவ் பண்ணோம். யாரை லவ் பண்ணோமோ அவுங்களைதான் கல்யாணம் பண்ணோம். ஆனா... இந்த காலத்துல பசங்க பொண்ணுங்களை ஸைட் அடிக்கிற லிஸ்டு நான்-ஸ்டாப்பா போகுது. அதுல ஒன்றை லவ் பண்ண செலக்ட் பண்றான். ஆனா கல்யாணம்னு வரும்போது லவ் பண்ண பொண்ணையும் விட்டுட்டு ஸைட் அடிச்ச பொண்ணையும் விட்டுட்டு யு.எஸ்ல உட்கார்ந்துகிட்டு எனக்கு இப்ப முப்பதுதான ஆகுது... இன்னும் ஒரு வருஷம் கழிச்சி கல்யாணம் பண்றேன்னு அம்மாக்கு வாட்ஸ் அப் பண்றான்... அதான் இந்த காலத்துல பசங்க காதல்ன்னு சொன்னாவே எனக்கும் உன் அம்மாவுக்கும் அலர்ஜியா இருக்கு.” என்று அவர் தரப்பு வாதங்களை விளக்கங்களைக் கூறினார் அர்ஜுன், மதுவின் தந்தை .

அந்த பால்கனியைவிட்டு வெளியேறியபோது மது தனது தந்தையிடம் சத்தியம் செய்யாத குறையாக இன்னும் ஐந்தாறு வருடத்திற்கு காதல் என்ற வார்த்தையை சொல்லவே மாட்டேன் என்று உறுதியளித்திருந்தாள்.

ஆனால் மது தரப்பில் இருந்து ஒரு பாயின்ட்...

“டாடி... நீங்க முதல் லிப்லாக் பார்த்தபோது உங்க வயசு 18. நான் முதல் லிப் லாக் பார்த்தப்போ என்னோட வயசு 11.”

இதை மது தனது தந்தையிடம் சொல்லவில்லை... ஆனால் மனதின் ஒரு ஓரத்தில் நினைத்தாள்.

* * *

பால்கனி சத்தியம் முடிந்து ஒரு வருடம்கூட ஆகவில்லை... அதற்குள் முதல் சத்தியச் சோதனை வந்துவிட்டது மதுவிற்கு. ஒன்றிற்கு மூன்று லவ் லெட்டர்கள் ரூபத்தில் முதல் சத்தியச் சோதனை வந்துவிட்டது மதுவிற்கு.

“நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு.” என்று கோபமாகக் கத்திவிட்டுச் சென்ற அம்மாவை சரிகட்டுவதற்காக அன்னையின் அறைக்குள் சென்றாள் மது.

“அம்மா.” - மது.

வித்யா கட்டிலில் இருந்து சிறிதும் அசையவில்லை. பிடிவாதமாய் கட்டிலில் படுத்தபடியே கண்களை கஷ்டப்பட்டு மூடிக் கொண்டிருந்தாள்.

“தருண் இஸ் எ ஃப்ளர்ட் யூ நோ... ஆனால் நான் ஃப்ளர்ட் இல்லம்மா. உங்களுக்குத் தெரியும்... நான் பசங்க பின்னாடி சுற்ற மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும்.”

வித்யா மெல்ல கண்களைத் திறந்தாள். தன்னைத் தேற்றி ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். தனது தலையணையின் அருகே அமர்ந்திருந்த மகளை இறுகக் கட்டிக்கொண்டாள். மதுவும் அம்மாவைக் கட்டிக் கொண்டாள். உண்மையை உடைத்துப்பேசும் பிள்ளைகள் என்றுமே பெற்றோருக்கு ஒரு வரம். மதுவின் பேச்சில் இருந்த உண்மை வித்யாவின் கோபத்தைக் கரைத்தது.

அரை மணிநேரம் முன்பு மதுவை அம்மா “மதூ” என்று கோபமாக அழைத்த நொடி முதல் தனது பாடத்தில் கவனம் வைக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த ஜான்வி வீடே அமைதியானதும் வரவேற்பறைக்குச் சென்று வேவு பார்த்தாள். அங்கே ஆள் அரவம் இல்லை. அப்பாவைத் தேடினாள்.

அர்ஜுன் தொலைக்காட்சி பெட்டியை கண்ணால் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார். அன்னையின் அறைக்குள் எட்டிப்பார்த்தாள்.

அறைக்குள் மது-வித்யாவின் கொஞ்சல் சீனை வேடிக்கை பார்த்தவள் நொடிப்பொழுதும் தாமதிக்காமல் அவர்களோடு சென்று ஒட்டிக்கொண்டாள்.

“எங்கடா நீ இன்னும் வரலையேன்னு பார்த்தேன்.” - ஜான்வியிடம் கிண்டலாக வித்யா.

“மது தள்ளிப்படு... எனக்கு இடமே இல்ல...” என்று மதுவை இடித்துக்கொண்டு ஜான்வி சிணுங்கிய அதே நேரத்தில் ஜான்வியின் கையில் இருந்த கைபேசி ஜஸ்டின் பீபரின் “பேபி பேபி ஓ பேபி” பாடலைப் பாடி அந்த அறையின், அம்மா - மகள்களின் ரொமான்ஸ் சீனைக் கலைத்தது.

“என்ன பாட்டு இது எப்பப்பாரு பேபி பேபின்னு... ஒரு பாப் பாட்டிலாவது இந்த பேபி இல்லாமல் இருக்கா?” என்று அந்த பாடலைக் கேட்டதும் கறார் அன்னையாக மாறிவிட்ட வித்யா இரு பெண்களையும் கட்டிக்கொண்டபடியே சலித்துக்கொள்ள...

“கெமிஸ்டிரி, ஃபிசிக்ஸ், மேக்ஸ் இப்படி எல்லா சப்ஜெக்ட்டிலும் X வருது... நாங்க கேட்டோமா? எதுக்கு எல்லாத்துலயும் X வந்து உயிரை எடுக்குதுன்னு நாங்க கேட்டோமா? அது மாதிரி ஜஸ்டின் பீபர், கேட், செலினா எல்லோரும் எதுக்கு பேபி பேபின்னு பாடுறாங்கன்னு கேட்காதீங்க.”- ஜான்வி.

“ஜானு...”- வித்யா சலிப்பாக.

“சரி.. சரி.. பேச்சைக் கொறச்சிக்கிறேன்..”- ஜான்வி.

“ம்மா..”- மது.

“என்ன மது?”- வித்யா மதுவின் தலையை வருடியபடியே கேட்டார்.

“நீங்க படிக்கும்போது இப்படி லவ் லெட்டர்ஸ் வருமா?”

வித்யா அறையின் வாசலை எட்டிப்பார்த்தபோது,

“அப்பா டி.வியில ஃபுட்பால் மேட்ச் பார்க்குறாங்க... இப்போதைக்கு வரமாட்டாங்க. நீங்க சொல்லுங்கமா... மது கேட்குறால? சீக்கிரம், சீக்கிரம் சொல்லுங்க.” என்று ஜான்வி சுவாரசியமாகக் கேட்டாள்.

“வரும்... லவ் லெட்டர்ஸ் வராமல் இருக்குமா? ஆனா ஒரே நாளில் மூனு லவ் லெட்டர்லாம் வராது.”

“
ம்மா... ஐ ஆம் இன்னோசன்ட். அந்த லவ் லெட்டர்ஸை நான் என்கரேஜ் பண்ணவே இல்ல. தருண் இஸ் எ ஃப்ளர்ட். ஆல் த பாய்ஸ் ஆர் ஃப்ளர்ட்ஸ்.” (Tarun is a Flirt. All the boys are flirts...)

வித்யா மூச்சு விடவில்லை. அமைதியாக இருந்தாள்.

“ம்மா... சொல்லுங்க. எனக்குத் தெரியணும், லவ் லெட்டர்ஸ் வருமா வராதா?”- மது.

“ப்ச்...” என்று சலித்துக்கொண்டார் வித்யா.

“ம்மா... I want a honest answer you know...” என்று தந்தையைப் போலவே மது அதிகாரமாய் சொல்லவும் வித்யா சிரித்துக்கொண்டே சொன்னார், “அபவுட் வாட்?”

“
லவ் லெட்டர்ஸ்...”- மது.

“சரி பதில் சொல்றேன்... திரும்பத் திரும்ப இந்த டாப்பிக் பத்தி இனி பேசக்கூடாது. ஃப்ர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் இதுதான். ஓகே? டீல்?”

“
டீல்.”

“
கசம் சே?”- வித்யா. (சத்தியமாக என்று ஹிந்தியில் பொருள்)

வித்யா ஒரு ஹிந்தி பன்டிட். அதனால் பல நேரங்களில் சிறு சிறு ஹிந்தி வார்த்தைகள் சகஜமாகப் பேசுவார். பிள்ளைகள் இருவருக்கும் ஹிந்தி அத்துபடி. ஹிந்தி தெரிந்தபிறகு அலியா பட் படம் பார்க்க இன்னும் வசதியாக இருந்தது இருவருக்கும்.

“கசம் சே மா.”- மது.

“ஓகே தென்... லவ் லெட்டர்ஸ் தானே? லட்டர்ஸ் வரும். வராம இருக்குமா? காலேஜ் படிக்கும்போதுதான் வந்திச்சு. ஸ்கூல்ல வரல. அந்த வயசுல அதாவது இருபது வயசுல எது கிரஷ்... எது உண்மையான புரிதல், எது இரண்டும்கெட்டான் கேஸ்ன்னு எங்களுக்குப் பிரிச்சிப் பார்க்கத் தெரிஞ்சது. அதனால அந்த மாதிரிப் பசங்ககிட்டயிருந்து பத்தடி விலகி இருந்தோம். என்னோட ஃப்ரண்ட் ஒரு பையனை ப்ளஸ் ஒன்ல இருந்து லவ் பண்ணா. இரண்டு பேரும் காலேஜ் முடிக்கிறதுக்கு முன்னேயே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஆனா நாலே வருஷத்துல அவுங்க கல்யாணம் டைவர்ஸ்ல முடிஞ்சிடுச்சு. இரண்டு நாள் முன்னே அவளைப் பார்த்தேன்.. டைவர்ஸ்க்கு என்ன காரணம்னு கேட்டேன், “ஐந்தாறு வருஷம் கழிச்சு நான் என்னவாக ஆகப்போறேன்னு முடிவு பண்ணாம... முப்பது நாற்பது வருஷம் சேர்ந்து வாழப்போற வாழ்க்கையை முடிவு செய்தது எவ்வளவு பெரிய மடத்தனம்னு லேட்டாதான் புரிஞ்சது வித்யா.”ன்னு சொன்னா... அவ சொன்னது எவ்வளவு கரெக்ட் தெரியுமா மது... ப்ளஸ் ஒன் படிக்கும்போது இன்னும் ஐந்தாறு வருஷம் கழிச்சி நாம என்ன ஆகப்போறோம்னு தான் அவ முடிவு எடுத்திருக்கணும். அந்த நேரத்துல முதல் பத்து வருஷத்தைத் தாண்டி ஒரு பெரிய லாங் ஜம்ப் பண்ணி.. முப்பது நாற்பது வருஷம் வாழப்போகும் வாழ்க்கையை பற்றி யோசிக்கிறது எவ்வளவு பெரிய மடத்தனம்? நானும் உங்க அப்பாவும் ஒரு இன்டர் காலேஜ் மீட்டுல தான் முதல் முதலா பார்த்தோம். உங்க அப்பாவோட ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் எனக்குத் தெரிஞ்சவங்கதான். முதல்ல உங்கப்பா நல்லவர்ன்னு நம்பிக்கை வந்திச்சு. அதற்குப்பிறகு மூனு வருஷம் கழிச்சிதான் காதல் வந்திச்சு. என்ன ஆனாலும் வாழ்க்கையில எந்தக் கஷ்டம் வந்தாலும் இந்தப் பையன் சகிச்சிப்பான்னு ஒரு நம்பிக்கை வரணும்... போடி ன்னு அவன் என்றைக்குமே எதற்குமே கோபமா கத்த மாட்டான்னு நம்பிக்கை வரணும். அவன்கூட வாழும்போது போடா டாஷ்ன்னு நீ என்னைக்குமே சொல்லமாட்டேன்னு உனக்கும் நம்பிக்கை வரணும்... அதன்பிறகுதான் தைரியமா லவ் பண்ண ஆரம்பிக்கணும். கண்ணும் கண்ணும் பேசிக்கிட்டா மட்டும் பத்தாது. கொஞ்சம் மூளைகூடயும் பேசணும். 8 கிராம் கண்ணை நம்புற மாதிரி 3000 கிராம் மூளையையும் நம்பணும். கண்ணால ஸைட் அடிச்சா பத்தாது. மூளையாலும் ஸைட் அடிக்கணும்.”

“
சூப்பர்மா, அப்புறம் அந்த இரண்டும் கெட்டான்னா என்ன அர்த்தம் மம்மி?”- ஜான்வி.

“ஏய் லூசு... அம்மா பேசி முடிக்கட்டும்.”- மது.

“பேசுறதுக்கு வேற எந்த லவ் மேட்டரும் என்கிட்ட இல்லப்பா. என்னோட லவ் ஸ்டோரியில அடுத்து என்ன ஆச்சுன்னு கேட்காதீங்க, சொல்லிச் சொல்லி வாயே வலிச்சிப்போச்சு.”

“
சரி... இரண்டும் கெட்டான்னா என்ன அர்த்தம் மா??”- மது.

“ம்மா.. என்னைப் பார்த்துச் சொல்லுங்க, என் முகத்தைப் பார்த்துச் சொல்லுங்க, நான் தான ஃப்ர்ஸ்ட் அதைப் பற்றிக் கேட்டேன்?”- ஜான்வி.

“எந்த முடிவும் சரியா எடுக்கத் தெரியாத ஆளுங்க ஜானு. சரியாகச் சொல்லணும்னா... இந்த மாதிரி ஆளுங்களுக்கு முடிவே செய்யத் தெரியாது. இது சரி, இது தப்புன்னு முடிவே பண்ணத் தெரியாத கேஸ். என்ன பேசறோம்... எதுக்கு பேசுறோம்னு தெரியாமயே வெட்டிப்பேச்சு பேசுவாங்க... நம்ம எல்லோரும் இந்த ஸ்டேஜைக் கடந்துதான் வரணும். ஒரு குறிப்பிட்ட வயசுல அந்தப் பக்குவம் வந்திடும். வெட்டிப்பேச்சு பேசும் ரோமியோக்களை கண்டுபிடிச்சிடலாம்...” என்றார் வித்யா ஜான்வியின் கண்களைப் பார்த்தவாறு.

“புரியிதும்மா. ரெண்டும்கெட்டான்னா என்னன்னு இப்ப தெளிவா புரியிது. நம்ம மது மாதிரின்னு பளிச்சுன்னு சொல்லுங்களேன். நேத்துகூட ஹமாம் சோப் போடவா? டவ் சோப் போடவான்னு உங்ககிட்ட டவுட் கேட்டாளே??”- கட்டிலில் மல்லாக்கப்படுத்தபடி ஜானவி.

“அன்றைக்கு ஒரு நாள், மது உங்ககிட்ட வந்து அவளோட டம்மி கொறஞ்சிடுச்சா இல்லையான்னு கேட்டாளே?? டம்மி பெரிசா இருக்கா, ஆர்ம்ஸ் குண்டா இருக்கான்னு அவளைப்பற்றி அவளுக்கே தெளிவில்லாமல் கேட்டாளே... அதுதான ரெண்டும் கெட்டான் கேஸ்??” - கட்டிலில் மல்லாக்கப்படுத்து மதுவின் டம்மியையும் மதுவின் ஆர்ம்ஸையும் காட்டியபடி ஜானவி.

அதற்குப் பிறகுகூட ஜான்வி நிறைய பேசினாள்.. மதுவை வைத்து இரண்டும்கெட்டான்னுக்கு நிறைய விளக்கங்கள் கொடுத்தாள், உதாரணங்கள் கச்சிதமாகக் கொடுத்தாள். ஆனால் சத்தம் தான் வெளிவரவில்லை. மதுதான் ஜான்வியின் வாய்க்கு தலையணைகொண்டு பேபர்வெயிட் வைத்திருந்தாளே.. அதனால் சத்தமே கேட்கவில்லை.

இருவரின் சண்டையையும் சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்த்த அன்னையின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

ஆனால் மது சீக்கிரமே வெட்டிப்பேச்சு பேச்சத் துடிக்கும் ரோமியோவை சந்திக்க நேர்ந்தது யார் செய்த குற்றம்?

காலம் செய்த குற்றமடி... அது காலம் செய்த குற்றமடி... ( அட போங்கப்பா இந்திய ஜனத்தொகை செய்த குற்றம்... 130 கோடி மக்கள் தொகையில் இளசுகளுக்கு பஞ்சமா என்ன?? அதுவும் இரண்டும் கெட்டான் இளசுகளுக்குப் பஞ்சமா என்ன?)

* * *
 
“டேய், ஆர்யா எப்படி காம்ப்படிஷனுக்கு வர்றான்? பைக்லயே குட்ஷெப்பர்ட் ஸ்கூலுக்கு வந்திடுவானா இல்ல நம்மகூட ஸ்கூல் பஸ்ல வர்றானா?”- விவேக்.

ஆர்யா தான் Y.M.J ஸ்கூல்லின் S.P.L (School people leader)

(ஆர்யா... ஒருவழியா நாயகன் பெயரை சொல்லியாச்சு. )

“லைசென்ஸ் இல்லடா அவன்கிட்ட. எப்படி புல்லட்ல வருவான்? நம்மகூட பஸ்லதான் வருவான்.”- ஷாம்.

இந்த இளவட்டங்கள் எல்லோருமே Y.M.J பள்ளி மாணவர்கள்.

“டேய் எட்டு மணிக்கு ரெஜிஸ்டேரேஷன் கன்ஃபார்ம் பண்ணணும்டா... அந்த ஸ்கூல் வி.பி கத்துவாருடா.- விவேக்

“அதெல்லாம் எட்டு மணிக்கு ஆர்யா டான்னு வந்திடுவான்.” - ஷாம்.

“டேய், நாம எட்டு மணிக்கு குட் ஷெப்பர்ட் ஸ்கூல்ல இருக்கணும்.”- விவேக்.

“அந்த ஸ்கூலுக்கு நான் வரலைன்னா கேட்குறீங்களாடா? எல்லா ப்ரைஸையும் அந்த ஸ்கூல் பொண்ணுங்களே வாங்கிடுவாங்க.. நமக்கு சோப்பு டப்பா மாதிரி ஒரு கப் கொடுப்பானுங்க.” என்று இருவரிடமும் கோபமாக பேசியபடி வந்து நின்றான் சதீஷ்.

“அதுவும் பார்டிசிபேஷனுக்கு.”- ஷாம்.

“ஆமா. பார்டிசிபேஷனுக்கு.” என்று விவேக்கிடம் இருபாலகர்களும் சலித்துக் கொண்டிருந்த போது ஆர்யா அவனது பைக்கை அதிரடியாய் உறுமவிட்டு அவர்கள் முன்னே வந்து நிறுத்தினான்.

தனது பைக் சாவியை உருவி பேன்ட் பாக்கெட்டிற்குள் வைத்தவன் ஸ்கூல் பேக்கை எடுத்து தோளில் போட்டபடி தனது மூக்கோடு ஒட்டிக்கொண்டிருந்த கூலிங் கிளாஸை எடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.

“விவேக் கிளம்பலாமா? மணி எழு இருபது. எட்டு மணி தான ரிப்போர்ட்டிங் டைம்.”

“
ஆமா எட்டு மணி தான் ரிப்போர்ட்டிங் டைம்... வாடா வேமா.. உனக்குதான் வெயிட்டிங். சுப்பிரமணியன் சார் இன்னும் வரல.. அதனால் தப்பிச்ச, வா சீக்கிரம் பஸ்ல ஏறு.” என்றவர்கள் வேகமாக பள்ளி பேருந்திற்குள் புகுந்து கொண்டார்கள். அவர்கள் நால்வரையும் சேர்த்து மொத்தம் இருபத்தைந்து மாணவர்கள் குட்ஷெப்பர்ட் பள்ளிக்கு போட்டிக்குச் செல்கின்றனர். ஆர்யா பேருந்தில் ஏறிய இரண்டே நிமிடத்தில் சுப்பிரமணியமும் வந்துவிட்டார்.

பள்ளியின் நூலக மேலாளர் சுப்பிரமணியன் மட்டுமே பள்ளி ஆசிரியர்கள் சார்பாக போட்டிக்கான கோஆர்டினேட்டராக அவர்களுடன் செல்கிறார். பள்ளிப் பேருந்து கிளம்பியதும் சுப்பிரமணியன் மாணவர்களின் ஐ.டியை சரிபார்த்துவிட்டு எந்தெந்த போட்டிகளில் எந்தெந்த மாணவர்கள் பங்குபெறுகிறார்கள் என்பதையும் சரிபார்த்தபடியே அமர்ந்திருந்தார்.

ஆர்யாவின் வகுப்பு மாணவிகள் இருவர் அழகாக பரதநாட்டிய உடையில் ஜொலித்தார்கள். ஆர்யா ஓரக்கண்ணால் பரதநாட்டியப் போட்டியில் பங்குபெறும் தனது வகுப்பு மாணவி ப்ரியாவைப் பார்த்து ரசித்துக்கொண்டான். அவளது கன்னங்கள் ஒப்பனையால் சிவப்பாக மின்னியன. உதடுகளைப் பார்க்கும் தைரியம் இல்லாமல் தலையைத் திருப்பிக்கொண்டான். மற்ற மாணவர்கள் முன்னே வெளிப்படையாய் ஸைட் அடிப்பது அவனுக்கே ரொம்ப அநாகரிகமாகத் தெரிந்தது.

மயில் போல உடையணிந்த இரண்டு எட்டாம் வகுப்பு மாணவிகள் சிரித்துக்கொண்டே பேருந்தில் வந்தனர்.

“டேய் அந்தப் பொண்ணு டிரஸ்ல இருக்கிற மயில் இறகைப் பிச்சிக்கவா? கை பரபரன்னு இருக்குடா.”- விவேக்.

“அதை வச்சி என்ன பண்ணப்போற?”- ஆர்யா.

“மயில் இறகை புக்குல வச்சா குட்டி போடுமாம்டா..”

“
அந்த டிரஸ்ஸை வாடகைக்கு விட்டவன் அதைத் துவைத்து எத்தனை நாள் ஆச்சோ... கம்முன்னு இரு...” என்று கூறியபோதே அந்த மயில் வேடம் அணிந்திருந்த மாணவி உட்கார சிரமப்பட்டு மயில் இறகை ஒன்றாக குவித்து வைத்தபடி கஷ்டப்பட்டு உட்காருவதைப் பார்த்தான் ஆர்யா.

உடனே விவேக்கிடம், “டேய் நாம முன் சீட்டுக்குப் போயிடுவோம். அந்தப் பொண்ணு உட்காரக் கஷ்டப்படுதுல? நம்ம சீட் கொஞ்சம் பெரிசு...” என்றான்.

“அந்த மயில் பொண்ணா?”- விவேக்.

“ஆமாடா..”

“
சரி வா... நாலு பேருக்கு நல்லது செய்தா தப்பில்ல.. அதுவும் நாலு பொண்ணுங்களுக்கு நல்லது செய்தா தப்பில்ல.” என்று சொன்னபடி ஆர்யாவுடன் இடம் மாறி உட்கார்ந்தான் விவேக்.

“டேய் ... வா பேசாம... சின்னப்பொண்ணுங்கடா...”

“
சின்னப் பொண்ணுங்கனாதான் நம்மை மரியாதையா பார்க்கும் ஆர்யா. நம்ம கிளாஸ் பொண்ணுங்களை எடுத்துக்கோ.. நம்மள கொசு மாதிரியாவது மதிக்குதுங்களா? தெனாவட்டா பார்க்குதுங்க.. அதுகதான் ஐன்ஸ்டீன் பேத்திக மாதிரியும், நாம என்னமோ படிக்காத அரசியல்வாதிங்க பசங்க மாதிரியும் நினைச்சிக்கிட்டு நம்மைப் பார்க்குதுங்க. சின்ன கிளாஸ் பசங்கதான் நம்மள ஜீனியஸ் மாதிரி பார்க்கும். போன எக்ஸாம்ல நான் காம்பஸ் யூஸ் பண்றதை என் பக்கத்துல உட்கார்ந்திருந்த எய்த் ஸ்டான்டர்ட் பொண்ணு எப்படி பார்த்துச்சு தெரியுமா?”- விவேக்.

“எப்படிப் பார்த்துச்சு?”

“
நான் என்னமோ என் கையில டெலஸ்கோப் வச்சி வானத்துல இருக்கிற ஜுபிட்டரைப் பார்த்துப் பார்த்து என்னோட எக்ஸாம் பேப்பர்ல வரையிற மாதிரி பார்த்துச்சுப்பா... அவ்வளவு மரியாதை தெரியுமா?” என்று விவேக் சொன்னபோது, “இடம் மாறி உட்கார்ந்ததுக்கு தாங்க்ஸ் அண்ணா.” என்று குறிப்பாக விவேக்கை அழைத்துச் சொன்னது மயில்.

அந்த சிறுமி அண்ணா என்றதும் அணுகுண்டே அவனது இதயத்தின் மத்தியில் டொம் டொம் எனத் தாருமாறாக வெடித்துக் கொண்டிருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், “இட்ஸ் ஓகே. யு ஆர் வெல்கம்.” என்று சொன்னான் விவேக்.

ஆர்யா முன்சீட்டில் சாய்ந்தபடி முகத்தை மறைத்துக் கொண்டே சிரிக்க,

“என்னடா சிரிப்பு வேண்டிக்கிடக்கு? வெளிய வேடிக்கைப் பார்த்துட்டு வா... என்னையே எதுக்குப் பார்க்குற?” என்று தனது பையால் ஆர்யாவின் தோளில் அடித்தான் விவேக். ஆர்யாவும் அதன்பிறகு விவேக் பக்கம் திரும்பாமல் சிரித்தபடி சன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தபடியே வந்தான்.

பேருந்து போக்குவரத்து நெரிசலால் மெதுவாகத்தான் நகர்ந்து சென்றது. சுமார் அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு Y.M.J பள்ளிப்பேருந்து குட்ஷெப்பர்ட் பள்ளியின் வாசலில் சென்று நின்றது. ஆனால் வாசலின் பிரதான கேட் மூடப்பட்டு இருக்க, ஹார்ன் ஒலி எழுப்பினார் பேருந்து ஓட்டுநர். குட்ஷெப்பர்ட் பள்ளியின் வாயிலில் நின்றிருந்த காவலாளி வேகமாக பேருந்தின் அருகே வந்து நின்றார்.

“எந்த ஸ்கூல்?”- காவலாளி.

“Y.M.J சார். ரிஜிஸ்டர் பண்ணிட்டோம்.”- நூலக மேலாளர் சுப்பிரமணியன்.

“ஆனால் ஃப்ன்ஷன் ஆரம்பிச்சிடுச்சே... கேட் எல்லாம் கிளோஸ் பண்ணச் சொல்லிட்டாங்களே?”

“
இந்தா பாருங்க சார் இன்விடேஷன். கையில இன்விட்டேஷன் இருக்கே சார்... பயங்கர டிராஃபிக் சார், அதான் வர்ற லேட் ஆகிடுச்சு. நீங்க வேற பேசிகிட்டே இன்னும் லேட் பண்றீங்க.”

அழைப்பிதழைப் பார்த்ததும் காவலாளி இரண்டு மனதாக மெயின் கேட்டைத் திறந்து விட்டார். பேருந்து பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது. வாகனம் நிறுத்தும் இடத்திற்குச் செல்லவே ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆனது.

“டேய் விவேக் நீ எந்தெந்த காம்பட்டிஷன்ல இருக்க?”- என்று பேருந்தில் இருந்து இறங்கியபடியே விவேக்கிடம் கேட்டான் ஆர்யா.

“பெயின்டிங் அன்ட் டம் ஷரட்ஸ். நீ எப்பவும் போல எலக்கூஷனா? “- விவேக்.

“ஆமாடா... என்னோட அக்காகிட்ட ஜெயிச்சுடுவேன்னு பெட் வச்சிருக்கேன்.”

“
நீ தான் எப்பவுமே ஜெயிப்பீல? பின்ன என்ன பெட்?”

“
ஃப்ர்ஸ்ட் பிரைஸ் ஜெயிச்சிடுவேன்னு பெட் வச்சிருக்கேன் விவேக்.”

“
ஓ... அப்ப டஃப்பான பெட்தான். குட்ஷெப்பர்ட் ஸ்கூல் பொண்ணுங்க பேச்சுப் போட்டியில தான் எப்பவுமே டாப்பாச்சே. ஜெயிக்கிற பிள்ளைங்களா பொறுக்கி எடுத்து போட்டியில சேர்த்துவிடுறாங்க அவுங்க டீச்சர்ஸ். போன தடவை சாரல் 2லி2லி போனப்ப மதுமிதான்னு ஒரு பொண்ணு, ஸ்டேஜ்ஜையே அலற விட்டுருச்சு ஆர்யா. இந்த ஸ்கூலோட வி.பி பொண்ணாம் அது. நீ அந்தப் பொண்ணு பேசுறதை மிஸ் பண்ணிட்ட, ஜட்ஜ் எழுந்து நின்னு கிளாப் பண்ணாங்கன்னா பார்த்துக்கோ.”

“
பசங்க எல்லோரும் சொன்னாங்கடா. நான் வேற போட்டியில இருந்ததால அந்தப்பொண்ணு பேசினதைக் கேட்க முடியல. இன்னிக்கு வாட்ச் பண்ணணும். அந்தப் பொண்ணாலதான் எனக்கு ஃப்ர்ஸ்ட் பிரைஸ் போச்சு. இந்த தடவை மிஸ் பண்ணக்கூடாது விவேக்.”

“
என்னடா இவ்வளவு ஃபீல் பண்ற?”

“
ஆமாடா... பொண்ணுங்ககிட்ட ஒரு தடவை தோக்கலாம்... ரெண்டு மூனு தடவை தோத்தா நம்ம பிரஸ்டீஜ் என்ன ஆகுறது?”

“
நீ சொல்றதும் சரிதான் ஆர்யா.” என்று பேசிக்கொண்டே வந்தவர்கள் அந்த பிரம்மாண்ட ஆடிட்டோரியம் முன்னே இருந்த வரவேற்கும் மேஜை அருகே சென்றனர். அங்கே பிற பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் பன்னீர் தெளித்து வரவேற்க காத்திருந்த குட்ஷெப்பர்ட் ஆசிரியர்களிடம் தங்களது பெயர் பள்ளி விபரங்களைத் தந்தனர்.

“Y.M.J ஸ்கூல்லா?”- வரவேற்கும் குழு ஆசிரியர்.

“ஆமாம் மேம்.”- ஆர்யா.

“அந்த சின்ன ரூம் தெரியிதுல? அங்க வி.பி இருப்பார். போய் அவரைப் பார்த்திட்டு மெயின் ஸ்டேஜுக்குப் போங்க.. சார் உங்களை பார்க்கணும்னு சொன்னார். சீக்கிரம் போங்க. சார் இன்னும் இரண்டு நிமிஷத்துல மெயின் ஸ்டேஜுக்குப் போகணும்.”- வரவேற்கும் குழுவில் இருந்த குட்ஷெப்பர்ட் பள்ளி ஆசிரியர்.

ஆர்யாவின் பள்ளி கோஆர்டினேடராக வந்திருந்த நூலக மேலாளர் குட்ஷெப்பர்ட் பள்ளியின் பிரின்சிபல் அறை நோக்கி முன்னே செல்ல, அவரது பள்ளி மாணவர்கள் அவர் பின்னே வந்தனர். ஒரு நிமிடத்தில் இருபத்தைந்து மாணவர்களும், Y.M.J பள்ளி நூலக மேலாளரும் குட்ஷெப்பர்ட் பள்ளியின் பிரின்சிபல் அறையில் குழுமியிருந்தனர்.

* * *

அவர்கள் உள்ளே நுழைந்ததும் குட்ஷெப்பர்ட் பள்ளியின் தலைமை ஆசிரியர் சரமாரியாகக் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

“சார், நீங்க காம்ப்டிஷன் கலந்துக்கிறதா எங்களுக்கு மெயில் அனுப்பினீங்களா?”- குட்ஷெப்பர்ட் பள்ளியின் பிரின்சிபல்.

“ஆமா சார். போன வாரம் அனுப்பினேன்.”- ஆர்யாவின் பள்ளி கோஆர்டினேடர் ( நூலக மேலாளர்).

“ஒரு செல் நம்பர் தந்திருந்தோமே... அதுக்கு...”

“
அதுக்கும் பேசினேன் சார்.”

“
நீங்கதான் பேசுனீங்களா?”

“
ஆமா சார். போன புதன் கிழமை பேசினேன் சார்.”

“
ஓ... புதன் கிழமை பகல் ஒரு மணிக்கா?”- பிரின்சிபால்

“ஆமா சார்.”

“
இரண்டு செகன்டு பேசுனீங்கல?”

“
ஆமா சார்.”

“
டேய் லைப்ரரியன் ஏதோ சொதப்பிட்டாரு, மெயில் தப்பா அனுப்பிட்டாரு போல...”- விவேக் ஆர்யாவின் காதினில்.

“ஷ்.ஷ்..ஷ்.. பேசாத.”- ஆர்யா.

“சரி... போய் ஆடிட்டோரியத்துல உட்காருங்க. வெல்கம் ஸ்பீச் ஆரம்பிக்கப்போகுது.” என்றார் தனது நாற்காலியில் இருந்து எழுந்தபடியே பிரின்சிபல். அவர் எழுந்ததும் நூலக மேலாளரும் எழுந்து பிரின்சிபலிடம் நன்றி என்று உரைத்துவிட்டு தனது மாணவர்களுடன் அறையில் இருந்து வெளியேறினார்.

* * *
 
குட்ஷெப்பர்ட் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்யாவின் பள்ளி மாணவர்களை அரங்கத்தில் அமரச் சொன்னார். ஆனால் போட்டியில் பங்கேற்கப்போகும் மாணவர்களின் விபரங்களைக் கேட்கவேயில்லை. எந்த போட்டிகள் எங்கு நடக்கும் போன்ற விபரங்களும், லாட் நம்பர் பெறுவதற்கான விபரங்களும் தரவில்லை. ஆர்யாவின் பள்ளி மாணவர்கள் தங்களை அழைத்து வந்த நூலக மேலாளரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.

“என்ன சார்... இன்னும் நம்மளுக்கு எந்த இன்ஸ்ட்ரக்ஷனும் கொடுக்கல? நம்மள ரிஜெக்ட் பண்றாங்க சார்.” - ஆர்யா.

“நான் மெயில் அனுப்பினேனே? ஏதோ தப்பாயிடுச்சு போல... திரும்ப ஸ்கூலுக்குப் போயிடுவோமா?” என்ற நூலக மேலாளர் மயில் வேடமிட்டு நின்று கொண்டிருந்த மாணவிகளைப் பார்த்து, “பாவம் பசங்க ஏமாந்திடுவாங்க.” என்றார்.

ஆர்யாவிற்கும் அந்த மாணவிகளைப் பார்த்தால் பாவமாக இருந்தது. அறிவியல் கண்காட்சிப் போட்டிக்காக வந்திருந்த மாணவர்கள் பேருந்தில் வரும்போதெல்லாம் விவாதித்துக்கொண்டும் ஒப்பித்துக்கொண்டும் வந்ததை நினைக்கையில் அவனது ஏமாற்றம் கூடியது. அவனது உழைப்பும் அதிகமே. நான்கு நாட்களாக பாடங்களை ஒத்திவைத்துவிட்டு இந்த போட்டிக்காகவே தயாராகிக் கொண்டிருக்கிறான்.

ஏதோ ஒரு வேகம் பிறக்க, “சார் நாம போய் ஆடிட்டோரியத்துல முதல்ல உட்காருவோம் சார். என்ன ஆகுதுன்னு பார்ப்போம்.” என்றான் ஆர்யா. அனைத்து மாணவர்களும் அவ்வாறே சொல்ல கோஆர்டினேட்டர் அந்த பிரம்மாண்ட அரங்கத்திற்குள் மாணவர்களை அழைத்துச் சென்றார்.

அவர்கள் உள்ளே சென்று உட்கார்ந்த இரண்டு நிமிடங்களில் சிறப்பு விருந்தினர் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து குட்ஷெப்பர்ட் பள்ளியின் தலைமை ஆசிரியர் மேடையேறி மைக் முன் நின்றார். சற்று முன்னர் நூலக மேலாளருடன் தனியறையில் பேசியபோது இருந்த கண்டிப்பும், கழுகுப் பார்வையும் இப்போது மைக் முன்னே நிற்கும் அதே குட்ஷெப்பர்ட் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் துளியும் இல்லை. அவரின் முகமெல்லாம் சிரிப்பும் பெருமையும் இருந்தது.

“குட்மார்னிங் ஸ்டூடென்ட்ஸ்.”- குட்ஷெப்பர்ட் பள்ளியின் தலைமை ஆசிரியர்.

இதைச் சொன்னதும்தான் மாணவர்கள் மத்தியில் எத்தனை கைத்தட்டல்?

கைதட்டி ஓய்ந்ததும், “குட்மார்னிங் சார்...” என்றது அந்த மாணவர் பட்டாளம்.

“நான்தான் உங்க சிவப்பிரகாசம்.” என்று தலைமை ஆசிரியர் சொன்னதும் அரங்கம் மீண்டும் கைதட்டல்களால் அதிர்ந்தது.

Y.M.J மாணவர்கள் உறைந்து போய் உட்கார்ந்திருந்தனர். ஏன்னென்றால் இத்தனை மாணவர்களின் நாயகனான சிவப்பிரகாசத்தின் கோபத்திற்குதானே அவர்கள் ஆளாகிவிட்டிருந்தனர். Y.M.J தரப்பில் ஏதோ தவறு நடந்துவிட்டது உறுதி. ஆனால் போட்டியில் பங்குபெறுவார்களா? என்பதுதான் ஆர்யா மற்றும் அவனுடன் இருந்த சக மாணவர்களின் கேள்வியானது. மனம் திக் திக் என்று அடித்துக்கொண்டது.

“டேய் காம்ப்படிஷன்ல கலந்துக்க விடலைன்னா.. O.D (on duty) போறோம், O.D போறோம்ன்னு நாம பண்ண அலப்பறைக்கு நம்ம கிளாஸ் பொண்ணுங்க கொசுவோட குட்டிமாதிரிகூட இனி நம்மள மதிக்காதுங்கடா...”- விவேக்.

“கொசுவோட குட்டியா?” என்று ஆர்யா கோபமாகக் கேட்க,

“சாரி சாரி.. கொசு முட்டைதான போடும்? நம்ம கிளாஸ் பொண்ணுங்க கொசுவோட முட்டை மாதிரிகூட இனி நம்மள மதிக்காதுங்கடா.”- விவேக்.

ஆர்யா பற்களைக் கடித்துக்கொண்டே மேடையில் கண் பதித்தான். சிவப்பிரகாசம் சிரித்துக்கொண்டே மாணவர்களிடம் மைக்கில் நிறைய பேசினார். வேகமாக 20 நிமிடங்கள் முழுமையாய் முடிந்தபோது அவரது உரையும் முடிந்தது. பேசி முடித்தவர் கிளம்பும் முன் ஒரு பன்ச் வைத்தார்.

“இன்னைக்கு போட்டியில கலந்துக்க வந்த அத்தனை ஸ்கூல்லோட கோஆர்டினேட்டரும் எழுந்து நில்லுங்க. ப்ளீஸ்.” - தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம்.

உடனே போட்டியில் பங்குபெற வந்திருந்த அனைத்து பள்ளியின் கோஆர்டினேட்டர்களும் எழுந்து நின்றார்கள்.

“ஓகே... உங்க எல்லோர்கிட்டயும் ஒரு விஷயம் ஷேர் பண்ணணும். எதிர்காலத்துல இந்த மாதிரி நடக்கக்கூடாது என்பது தான் இதன் நோக்கம், அஜென்டா. நீங்க யாரும் தப்பா எடுத்துக்ககூடாது. எங்க பள்ளியின் மெயில்ல நாங்க கிளியரா சொல்லியிருந்தோம்... போட்டியில கலந்துக்க நினைக்கிற பள்ளிகள் 8337689902 என்ற நம்பருக்கு ஒரு கால் பண்ணி ரெஜிஸ்டர் பண்ணணும், மேலும் எங்களது மெயில் ஐ.டிக்கு ஒரு மெயில் அனுப்பணும்னு கிளியர் கட்டா சொல்லியிருந்தோம். போன்ல கான்டாக்ட் பண்ற டைம் காலை 9-11 என்றும் சொல்லியிருந்தேன். எல்லா ஸ்கூலும் அதை கடைப்பிடிச்சிருந்தாங்க.. ஒரு ஸ்கூலைத்தவிர.” என்று சொன்னவர் சில நொடிகள் நிறுத்தினார்.

“போன வாரம் நான் நம்ம ஸ்கூல் ஹாஸ்டலுக்கு கொஞ்சம் காய்கறி பர்சேஸ் பண்ண ஒரு மணிக்கு கோயம்மேடு மார்க்கெட் போயிருந்தேன். அப்ப எனக்கு ஒரு கால் வந்தது. நல்லா கற்பனை பண்ணிப்பாருங்க ஒரு கையில தேங்காய் இன்னொரு கையில வெண்டைக்காயை அள்ளிட்டு இருக்கேன். அப்ப என்னோட செல்ஃபோன் அடிக்கிது...”

மாணவர்கள் சிரித்தனர். ஆர்யா மற்றும் அவனது சக பள்ளி மாணவர்கள் சிரிக்கவில்லை. அவரது சொற்களின் தோட்டாக்கள் தங்களை நோக்கித்தான் பாய்கிறது என்று புரிந்து கொண்டார்கள்.

நூலக மேலாளர் நின்றபடியே தலைகுனிந்து கொண்டார்.

சிவப்பிரகாசம் பிரகாசமாய் தனது உரையைத் தொடர்ந்தார்.

“என்னோட வைஃப்புக்குகூடத் தெரியும் இந்த டைம் நான் காய்கறி மார்க்கெட்டுல இருப்பேன் கூப்பிடக்கூடாதுன்னு...”

மாணவர்கள் கெக்க புக்கவென சிரிக்க.. நூலக மேலாளர் இன்னும் நன்றாக குனிந்துகொண்டார்.

“சரி... ஏதோ முக்கியமான ஃபோன் போலன்னு.. எடுத்தேன். பேசினவங்க எந்த ஸ்கூல் எதுன்னு சொல்லலை மெயில் அனுப்பியிருக்கோம் பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டு ஃபோனை வச்சிட்டாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. சரின்னு காய் வாங்குறதைக் கன்டினியு பண்ணேன். ஃபோன் பண்ணவங்கதான் அரைவேக்காடா இருந்தா நாமும் அரைவேக்காடா இருக்கக்கூடாதுல்ல?”

மாணவர்கள் மீண்டும் சிரித்தனர்.

“மானம் போகுதுடா.. பாவம்டா லைப்ரரியன். அவருக்கு என்ன விபரம் தெரியும்? வேற டீச்சர்ஸ் இந்த வேலையை கரெக்டா செய்திருக்கலாம். பாவம்டா சார்...”- விவேக்.

“ஆமா ஆமா... ரொம்ப தான் மானம் மரியாதை போயிருச்சு. நல்ல வேளை ஸ்கூல் பேர் சொல்லலை.”- ஆர்யா.

“எந்த ஸ்கூல்னு நான் சொல்ல மாட்டேன்.” என்று அடுத்ததாக சிவப்பிரகாசம் சொன்னபோது அனைத்து கோஆர்டினேட்டர்களும் ஆர்யாவின் பள்ளி நூலக மேலாளரைப் பார்த்தனர். அவர்தான் குனிந்த தலை நிமிரவேயில்லையே? அதனால் எளிதில் கண்டு பிடித்துவிட்டார்கள்.

“மே.. மே” என்று இரண்டு தடவை கத்தினால்தான் ஆடு என்று கண்டுபிடிக்க முடியுமா? “மே” என்று ஒரு தடவை கத்தினால்கூடப் போதுமே அது ஆடு என்று கண்டுபிடிக்க.. அதுபோல சிவப்பிரகாசம் குறிப்பிடுவது Y.M.J பள்ளியைத்தான் என்று மற்ற மாணவர்கள் சிரமமே இல்லாமல் கண்டுபிடித்துவிட்டார்கள். அனைத்து மாணவர்கள் கண்களும் தலை குனிந்த நூலக மேலாளரிடம் இருந்தன.

ஆர்யா லைப்ரரியனையும் விவேக்கையும் பார்த்தான்.

“ஸ்கூல் பேரையே அந்த சார் மைக்கில் சொல்லியிருக்கலாம்ல?”- விவேக்

ஆர்யா முறைக்க அமைதியானான் விவேக்.

“சரின்னு ஸ்கூலுக்கு வந்ததும் மெயில் செக் பண்னேன்... அதுல ஸ்கூல் பேரு மட்டும் இருக்கு, எந்தெந்த காம்ப்படிஷன்ல எந்தெந்த மாணவர்கள் கலந்துக்கிறாங்க அவுங்க பெயர் லிஸ்ட் என்ன? அப்படிங்கிற விபரம் எதுவும் இல்ல.”- சிவப்பிரகாசம்.

அரங்கத்தில் பயங்கர அமைதி.

“சரி. விபரம் தரல, ஓகே... எட்டு மணிக்கு ரிப்போர்டிங் டைம். ஒரு 7.30 மணிக்கு வந்திருந்தாங்கன்னா இதையெல்லாம் சால்வ் பண்ணிருக்கலாம். அதுவும் வரல.. அவுங்க வந்த டைம் 8.15.”

இப்போது ஆர்யா தலைகுனிய மற்ற மாணவர்களும் அவனைப் பின்பற்றினர்.

“டேய் அத்தனை பேரும் நம்மளதான்டா பார்க்கிறாங்க...”- விவேக்.

“தெரியும். கம்முன்னு இருடா. இப்ப நீ வாய மூடல, கொன்றுவேன்.”- ஆர்யா

“சரி. இப்ப நான் என்ன செய்யணும்? நீங்களே சொல்லுங்க. போட்டியை குறிச்ச நேரத்துல ஆரம்பிக்காம அவுங்க பிரச்சனையைப் பார்க்கட்டுமா? ஒரு அரை மணி நேரம் வேஸ்ட் ஆகலாம், பரவாயில்லையா? இல்ல டிஸ்குவாலிஃபை செய்து அனுப்பிடலாமா? நான் என்ன பண்ண? நீங்களே பதில் சொல்லுங்க. அவுங்களை போட்டியில கலந்துக்க விடலாமா, வேணாமா? சரின்னா கைதூக்குங்க. மெஜாரட்டி ஓட் வின்ஸ்.”- சிவப்பிரகாசம்.

“ஹும், ஹும். எனக்கு நம்பிக்கை இல்ல. இப்பவே நம்ம பஸ் டிரைவருக்கு கால் பண்ணி வண்டிய ஸ்டார்ட் செய்யச் சொல்லலாம்.”- விவேக்.

“விவேக் ப்ளீஸ், ஷட் அப்.”- ஆர்யா.

“சொல்லுங்க ஸ்டூடன்ட்ஸ், கமான், யாருல்லாம் யெஸ் சொல்றீங்களோ கை தூக்குங்க.” என்று சிவப்பிரகாசம் மீண்டும் சொன்ன நொடியில் மாணவர்கள் அனைவரும் ஒன்றாகக் கைத்தூக்கினர். பள்ளி வேறுபாடு இல்லாமல் வந்திருந்த அனைத்து பள்ளி மாணவர்களும் கைகளை உயர்த்தியிருந்தார்கள்.

“ஓகே தென். இது தான் கடைசி வார்னிங். இதை எல்லா ஸ்கூலும் மனசுல வச்சிக்கோங்க. அவுங்க போட்டியில் கலந்துக்கலாம். நன்றி.”- சிவப் பிரகாசம்.

முன்னூறு மாணவர்களின் அறுநூறு கைகளைப் பார்த்ததும் ஆர்யாவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

மகிழ்ச்சியுடன் சேர்ந்து இன்னும் ஒரு உணர்ச்சியும் அவனது முகத்தில் ஒட்டிக்கொண்டது.

அவனுடன் வந்திருந்த அவனது வ.ங.ஒ பள்ளியின் அத்தனை மாணவர்களின் மனதிலும் அந்த உணர்வு இருந்தது.

அதன் பெயர் என்ன?

* * *

7

ஆர்யாவின் முகத்தில் இருந்த உணர்ச்சியின் பெயர் தீர்மானம். போட்டிகளில் வெல்லவேண்டும் என்ற தீர்மானம்.

“விவேக் நாம எத்தனை பேர்?” - ஆர்யா.

“இருபத்தியஞ்சு.”- விவேக்.

“எத்தனை காம்ப்படிஷன் இருக்கு?”

“
இருபது இருக்கும்டா.”

“
நாம எத்தனையில கலந்திருக்கோம்?”

“
மொத்தம் பதினைந்துல கலந்துக்குறோம்.”

“
மீதி அஞ்சு?”

“
அதுக்கு நாம் ரெடியாகலடா. யாரும் அதுல கலந்துக்கல.”

“
என்னென்ன போட்டி அது?”

“
இந்தா இன்விடேஷன்ல இருக்குல. ஸ்பீக் அவுட், கொலாஜ், சான்ட் டிராயிங், கிளாசிக்கல் சிங்கிங், ஹேர்டூ.”

“
ஓகே.. மிச்சம் இருக்கும் அஞ்சுலயும் சேரணும்.”

“
எதுக்கு? என்ன விளையாடுறியா ஆர்யா?”

“
அப்பதான்டா திர்ட் ரன்னர்-அப் கப்பாவது கிடைக்கும். இருபத்தியஞ்சு ஸ்கூலும் நம்மளை வேடிக்கை பார்த்துச்சுல... முதல் பிரைஸை ஜெயிக்கத்தான் முடியாது, ஆனா நாம ஸ்டேஜ் ஏறி ரன்னர்-அப் டிராபியாவது வாங்கணும் விவேக்.”- ஆர்யா.

“ஆமா... ஆர்யா அண்ணா சொல்றது கரெக்ட். நாம அந்த அஞ்சையும் விடக்கூடாது. ப்ரியா நல்லா பாடுவா. யமுனை ஆற்றிலே சுப்பரா பாடுவா. நான் அவளுக்கு ஹேர்டூ பண்றேன்.. சாரோட ஃபோன்ல கூகிள் பண்ணிப் பார்க்கலாம்.” - மயில் மாணவி.

“ஓகே... கொலாஜ்க்கு மெட்டீரியல்ஸ்?”- விவேக்.

“அவுங்களே கொடுப்பாங்க. சில மேகஸின்ஸ் அவுங்களே கொடுப்பாங்களாம். சிஸ்ஸர் ப்ளேடு மட்டும் பஸ் டிரைவரை வாங்கச் சொல்லலாம்.”- மயிலின் தோழி ப்ரியா.

அடுத்த அரை மணி நேரத்தில் விடுபட்ட ஐந்து போட்டிகளுக்கும் தயாராகினர்.

* * *



போட்டியின் பெயர் : கொலாஜ்

ஆர்யா, விவேக் மற்றும் ஷாம் கொலாஜ்ஜில் பங்குபெற்றார்கள். விதிப்படி நால்வர் ஒரு குழுவில் இருக்கலாம். ஆனால் ஆள் பற்றாக்குறையால் இவர்கள் மூவராய் பங்குபெற்றார்கள்.

“டேய் எதடா வெட்ட?” என்று விவேக் கொடுக்கப்பட்டிருந்த மாத இதழைப் புரட்டியபடியே கேட்டான்.

“அந்தக் கார் நல்லா இருக்கு. எலெக்டிரிக் கார், காற்று மாசு போன்ற ஐடியா வச்சி ஒரு கொலாஜ் செய்யலாம் ஆர்யா.”- ஷாம்.

“குட் ஐடியா.”- ஆர்யா.

“டேய் இந்த மாடல் அழகா இருக்காடா.. இதையும் சேர்த்து அந்த காரோடு ஒட்டிவச்சா... கிளாமரா இருக்கும்ல? எப்படி என் ஐடியா?”- விவேக்.

“சாரி. தாங்க்ஸ்.. .”- ஆர்யா மற்றும் ஷாம்.

“ரொம்பத்தான் பண்ணாதீங்கடா.” என்ற விவேக் இரண்டே நிமிடத்தில்,

“டேய் இந்தக் காரை டயரோட சேர்த்து வெட்டணுமா.. இல்ல டயர் இல்லாம வெட்டணுமா?” என்று மீண்டும் கேள்வியின் நாயகனானான்.

“என்னது காருல டயர் இல்லாம வெட்டப்போறியா? நீ ஆணியே புடுங்க வேண்டாம். சிஸ்ஸரைத் தொட்ட மொத டெட் பாடி நீதான்டி... ஷாம்கிட்டக் கொடு சிஸ்ஸரை. நீ நாங்க வெட்டிக்கொடுக்கிறதை ஒட்ட மட்டும் செய்.”- விவேக்கிடம் பாய்ந்தான் ஆர்யா.

இரண்டு நிமிடங்கள், இரண்டே நிமிடங்கள் அமைதியாக இருந்த விவேக்,

“ஆர்யா அந்த ஸ்கூல் பசங்க என்ன பண்றாங்கன்னு எட்டிப்பார்க்கவா? நமக்கு ஏதாவது ஹெல்ப்பா இருக்கும்ல?” என்றான் ஆர்யாவிடம் மூன்றாவது நிமிடத்தில்.

“எதுக்கு டிஸ்குவாலிஃபை ஆகி அந்த சிவப்பிரகாசம் சார் முன்னே திரும்பப் போய் நிற்கச்சொல்றியா? தலையை நிமிர்த்தின செத்த டா. அந்தப் பக்கம் பார்த்த... கண்ணை நோண்டிடுவேன்.”- ஆர்யா.

“சரி.. சரி...” என்ற விவேக் ஒட்டும் வேலையைத் தொடர.. இருபது நிமிடங்கள் கரைந்து போயின.

“டேய் இன்னும் ஐஞ்சு நிமிஷம் தான்டா இருக்கு..” - விவேக் ஷாமிடம்.

“டேய் இன்னும் மூனு நிமிஷம் தான்டா இருக்கு.. வேமா வேமா வெட்டு ஷாம் எரும.” - விவேக் ஷாமிடம் கோபமாக.

ஷாம் நிமிர்ந்து முறைக்கவும், “சரி சரி டிஸ்டர்ப் பண்ணல... நீ அந்தக் பேட்டரி பிக்சரை நிறுத்தி நிதானமா அழகா வெட்டிக்கொடு செல்லம்.”- விவேக்

ஷாம் மெல்ல நிதானமாக வெட்டவும்.. பொறுமையிழந்த விவேக், அவன் வெட்டிக்கொடுத்ததும் வேகமாக ஒட்டி முடித்தான்.

சில நொடிகளில் டைம் அவுட் என்று ஆசிரியர்கள் சொல்ல அரங்கை விட்டு வெளியேறினார்கள் மூவரும்.

“இதுக்குதான்டா அந்த மயில் பொண்ணைக்கூட வச்சிக்கலாம், ஷாம் வேணாம்னு சொன்னேன்.. அவன் ரொம்ப ரொம்ப ஸ்லோ டா.. அவன் வெட்டுறதுக்குள்ள விடிஞ்சிடும்போல. இப்பப் பாரு ஒழுங்கா முடிக்கிறதுக்குள்ள டைம் அவுட்டாகிடுச்சு.”

“
எதுக்கு? பேப்பரை வெட்டுறதுக்கு பதிலா அவ டிரஸ்ல இருந்த மயில் இறகை நீ வெட்டி வெட்டி விளையாடுறதுக்கா? சரியான டையத்துலதான் முடிச்சிருக்கோம்.” - ஆர்யா.

“சரி சரி எப்படியோ நாம மூனு பிரைஸ்ல ஏதாவது ஒன்னு வாங்குனா சரிதான். மாஞ்சு மாஞ்சு வேலைப் பார்த்ததுக்கு பிரைஸ் கிடைச்சா போதும். என்னம்மா உழைச்சிருக்கோம்...” என்று பெருமையாய் விவேக் சொல்ல,

“மாஞ்சு மாஞ்சு நீ உழைச்ச??” என்று கேள்வி கேட்டான் ஆர்யா.

“சரிரிரி.. நீங்கதான் மூளையக் கசக்கி உழைச்சீங்க. நீங்க படைப்பாளி நான் ஒட்டாளி..” என்று விவேக் பதில் தர,

ஆர்யாவும் ஷாமும் விவேக்கை துட்சமாகப் பார்க்க..

“ஹி.. ஹி.. கை வலிக்க வலிக்க ஒட்டுனேன்லடா.. எவ்வளவு டேலென்டா ஒட்டுனேன்?”என்றான் விவேக்.

அந்தப் பதிலைக் கேட்டதும் ஷாம் படுடென்ஷன் ஆகிவிட்டான்.

“நீ டேலென்டா ஒட்டுன? முதல் நாலு படத்தை ஃபேவிகால்ல முக்கி எடுத்து வெட்டிக்கொடுத்த அந்த பேப்பரே கிழியிற மாதிரி ஆகல? நாலாவது படிக்கிற புள்ளக்கூட நாலு கார்னர்ல கொஞ்சமா ஃபேவிகால் தடவி அழகா அம்சமா சார்ட்ல ஒட்டும். இவன் ஒட்டுனான் பாரு ஆர்யா, ரோட்டுல செவத்துல போஸ்டர் ஒட்டுற மாதிரி ஃபேவிகால்லை அப்பி அப்பி... அவன் ஒட்டுன லெட்சணத்தைப் பார்த்து நீ மட்டும் திட்டல, நம்ம சார்ட்டே (Chart) ஃபேவிகால் நாத்தம் எடுத்திருக்கும். நீ திட்டிய பிறகுதான் ஒழுங்கா ஒட்டுனான்.” - ஷாம்.

“ஷாம், ரொம்படா இது.”- விவேக்

“டேய் வாங்கடா போவோம்... இந்தச் சண்டை இப்பத் தேவையாடா? அடுத்து ஸ்பீக் அவுட் போட்டிக்குப் போகணும்.”- ஆர்யா.

கொலாஜ் முடிந்து வேகமாக அடுத்தப் போட்டிக்கு தயார் ஆனார்கள் விவேக்கும் ஆர்யாவும். அடுத்த போட்டி ஸ்பீக் அவுட். ஒருவர் நடித்துக்காட்ட மற்றொருவர் அந்த ஆங்கில வார்த்தையை குத்துமதிப்பாகக் கண்டுபிடித்தால் கூடப் போதுமானது. அந்த ஆங்கில வார்த்தை பெரிய திரையில் காட்டப்படும். பதிலைக் கண்டுபிடிப்பவரிடம் திரை மறைக்கப்படும். பதிலைக் கண்டுபிடிப்பவர் ஒரு நாற்காலியில் திரைக்கு முதுகு காட்டியபடி அமர வைக்கப்படுவார்.

உதாரணமாக Happy என்று திரையில் தோன்றினால் ஒரு மாணவன் சிரித்த முகமாய் நடித்துக்காட்டியதும் அந்த வார்த்தையை நாற்காலியில் அமர்ந்திருக்கும் மாணவன் சரியாகக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இந்தப் போட்டி மேடையில் நடைபெறுவதால் மாணவர்கள் சரியாக கண்டுபிடிக்கும் போது ஆரவாரம் செய்து வேடிக்கை பார்க்கும் மாணவர்கள் கூட்டம், தவறாகக் கண்டுபிடிக்கும்போது உச்சுக் கொட்டிடும். ஓ... யே... என்று பலதரப்பட்ட சப்தங்களால் அரங்கமே சலசலக்கும்.

விதிகளைப் பற்றி அறிந்ததும் விவேக் இப்போட்டியில் இருந்து ஜகா வாங்கிட நினைத்து,

“ஆர்யா போட்டி ரொம்ப டஃப்பா இருக்குல? அதை டீல்ல விட்டுருவோம் டா.” என்று அமைதியாகச் சொல்லிப் பார்த்தான்.

அவனை நன்றாக முறைத்த ஆர்யா, “நீ நடிக்கிற நான் கண்டுபிடிக்கிறேன்.” என்றான் திட்டவட்டமாய்.

கழுத்துக்கு வந்துவிட்ட கத்தியை எப்படியேனும் தூர எறிந்துவிட வேண்டும் என்ற ஆசையில் பேராசையில்,

“டேய் வேணாம்டா. பெரிய ஸ்டேஜ்ல வச்சி நடக்குதுடா. கையெல்லாம் உதறும். ஆடியன்ஸ்ல நிறைய கர்ல்ஸ் இருக்காங்கடா...” என்றான் குழந்தைபோல அழும்குரலில் விவேக்.

“இன்னிக்கி காலையில மொத்த ஸ்டூடன்ஸ் முன்னே நம்ம எல்லோரோட மானமே போச்சு. இப்ப கை உதறுனா என்ன? கால் உதறுனா என்ன?”- ஆர்யா.

கத்தி கழுத்தைவிட்டு நகரமாட்டேன் என்று சொல்லச் சொல்ல வீரம் சுரக்க ஆர்யாவிடம் கோபமாய், “டேய்... வேணாம்டா. உனக்கு இன்னும் அரை மணி நேரத்துல பேச்சுப் போட்டி ஆரம்பிக்கதுல? அதுக்குப் படியேன். ஏன்டா என்னோட உயிர வாங்குற? இந்தப் போட்டியை டீல்ல விட்டுருறலாம்.” என்றான் விவேக்.

“நீதான இப்ப ஃப்ரீயா இருக்க? மற்றவங்க எல்லாம் ஆளுக்கொரு போட்டியில இருக்காங்க. டம் ஷரட்ஸ்ல கலந்துக்கிட்டீல. அது மாதிரிதான் இதுவும்.” என்று நிதானமாய் எடுத்துச் சொன்னான் ஆர்யா.

“ஆர்யா.. அது அட்வர்டைஸ்மென்ட் கண்டுபிடிக்கணும். இதுல இங்கிலிஷ் வேர்டைக் (word) கண்டுபிடிக்கணும். இரண்டுக்கும் ஹிமாலயாஸ் வித்தியாசம் இருக்குடா. இதெல்லாம் ஹாரிபாட்டர் புக்கை கரைச்சிக் குடிச்சவங்க கலந்துக்கிற கேம்டா. என்னோட இங்கிலிஷ் நாலெஜ் Humpty dumpty sat on a Wall... Humpty Dumpty had a great fall.. வரை தான்டா..” என்று விவேக்கும் ஆர்யாவிற்கு நிதானமாய் எடுத்துச் சொல்ல,

“அதெல்லாம் முடியும்... நீ நடிக்கிற நான் கண்டுபிடிக்கிறேன். அவ்வளவுதான் பேச்சு முடிந்தது.” என்று பேச்சை முடித்துக்கொண்டான் ஆர்யா.

“ஆர்யா... ப்ளீஸ் டா.”

“
நீ நடிக்கிற, நான் கண்டுபிடிக்கிறேன்.”

“
திரும்பவும் முதல்ல இருந்தா? புரோட்டா கோட்டை யாருடா என்கிட்டக் கேட்காம அழிச்சது? அதெல்லாம் என்னால நடிக்க முடியாது. நான் மட்டும் முன்னூறு பேர் முன்னாடி ஆ ஊன்னு கத்திட்டு லூசு மாதிரி நடிக்கணும்.. ஊரே சிரிக்கணும்.. நீ ஜம்முன்னு சேர்ல உட்கார்ந்து கண்டுபிடிப்பியாக்கும்?”

“
அப்ப நீ நடிக்க மாட்ட?”

“
மாட்டேன். நீ நடி நான் சேர்ல உட்கார்ந்து கண்டுபிடிக்கிறேன். தெரியலைன்னா பாஸ் சொல்லப்போறேன்... அவ்வளவுதான? ஹி.. ஹி..”

“
இதுதான்... இதுதான் உன்னை போட்டியில நான் நடிக்கச் சொன்னதுக்குக் காரணம். சேர்ல உட்கார்ந்துகிட்டு பாஸ் பாஸ்னு வெட்கமே இல்லாம சொல்வன்னுதான்... நான் கண்டுபிடிக்கிறேன், நீ நடின்னு சொன்னேன். ஜெயிக்கணும்னு டிரை பண்ணுடா லூசு.”

“
இந்த லூசு, பக்கின்னு நம்ம கிளாஸ் பொண்ணுங்க மாதிரித் திட்டாதடா. பொண்ணுங்கதான் அவுங்களுக்குள்ள இப்படித் திட்டுவாங்க.”

“
சரிடா எரும.”

‘
எருமையா??’ என மனதில் சொல்லிப்பார்த்து ஒரு நிமிடம் எருமையின் கருத்த தேக்தை தனது தேகத்தோடு ஒப்பிட்டுப்பார்த்து, ‘டேய் நான் எருமை கலர்லயா இருக்கேன்? நான் வீட்டிஷ் பிரௌன் டா...’ என்று மனதில் சொல்லியபடியே அதிர்ந்து நின்ற விவேக்கிடம், “இந்த வாரம் தலைவர் படம் ஃப்ர்ஸ்ட் டே ஃப்ர்ஸ்ட் ஷோ கட்.” என்று ஆர்யா சொன்னதும் வேறு வழியேயில்லாமல்,

“சரி... சரி, ஆ ஊன்னு நடிச்சே தொலைக்கிறேன்.” என்று சம்மதித்தான் விவேக்.

“ஒழுங்கா நடிக்கல ஸ்டேஜ்ல வச்சே மிதிப்பேன்...” என்று கூறி ஆர்யா எச்சரிக்கை செய்தபோது வாய்க்குள்ளேயே புலம்பினான் விவேக்.

ஆம்பளப்புள்ளையா பொறந்தா ஒரு சினிமாவுக்காக, பப்புக்காக, ஒரு கோவா டூருக்காக, ஒரு பீட்சா பர்கருக்காக, தப்பில்லாத இங்கிலிஷல் ஒரு மெயில் எழுதுவதற்காக, வேலைக்குச் செல்லும் இடத்தில் ஒரே அறை எடுத்து ஒன்றாகத் தங்கினால் நாலு வாய் சோறு சமைச்சி வீடு பெறுக்க... என்று ஆயிரம் ஆயிரம் தேவைகளுக்காக காலம் முழுவதும் இப்படித்தான் ஃப்ரண்ட்கிட்ட அடிமையாகக் கிடக்கணும்... (இன்னும் நிறைய காரணங்கள் இருங்குங்க, ஆனால் அதெல்லாம் அடல்ட்ஸ் ஒன்லிங்க...)
 
ஸ்பீக் அவுட் போட்டி விவேக்கை அதிகம் படுத்தியெடுக்காமல் இனிதே முடிந்தது.

தான் பங்குபெற்ற அனைத்து போட்டிகளும் முடிந்த பிறகு விவேக் பேச்சுப்போட்டிக்குச் சென்றிருந்த ஆர்யாவைத் தேடினான். ஆர்யா அந்த ஸ்கூல் கேன்டின்னில் லெமன் ஜுஸ் வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தான். விவேக் ஆர்யாவின் அருகே ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தான்.

“என்னடா... எப்படிப்போச்சு உன் பேச்சுப்போட்டி?”- விவேக்.

“ப்ச்... தள்ளி உட்காரு... எதுக்கு உரசுற?”

“
நல்லா பேசுனியா?”

“
ம்.”

“
ப்ர்ஸ்ட் பிரைஸ் தட்டிருவியா?”

“
வரும் வரும். செகன்ட் பிரைஸ் வந்திடும்.”

“
அப்ப உன் அக்காகிட்ட பெட்டுல தோத்துட்டியா??” என்று கூறியபடியே சிரித்துக்கொண்டே தனது இடதுபுறம் திரும்ப, அங்கே மதுமிதாவும் அவளது தோழிகளும் கட்லட் சாப்பிட்டபடி அமர்ந்திருந்தனர். இரண்டு நிமிடங்கள் அந்த திசையில் தனது கண்ணின் லென்சுகளை ஃபோகஸ் செய்தவன் மீண்டும் ஆர்யாவின் பக்கமாகத் திரும்பினான். ஆனால் ஆர்யாவின் கண் லென்சுகள் மதுமிதாவின் மேல் இருந்த ஃபோகஸை எடுக்கவே இல்லை.

‘அடப்பாவி, இதுக்குதான் உரசாம தள்ளி உட்காரச் சொன்னானா?’ என்று மனதில் நினைத்தாலும் உடனே நண்பனை மன்னித்து அவன் செய்த பிழையை மறந்து,

“டேய் ஆர்யா.. அது மதுமிதாதான? போன மாசம்தான்டா லோட்டஸ் காம்ப்டிஷன்ல பார்த்தேன்.. செம டேலென்ட்டா அந்தப் பொண்ணுக்கு.” என்று விசாரித்தான் விவேக்.

“ம். வெரி டாலென்டட் மதுமிதா.”

“
அவகிட்ட தோத்துட்டியா?”

“
ம். கிட்டத்தட்ட, ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு...”

“
எப்படிடா அவகிட்டத் தோத்திட்டு அவளைப் புகழ்ந்து பேசுற? டேய் காலையில என்னமோ சொன்னியே? அது என்ன... ம் ப்ரஸ்டீஜ் போயிடும்னு சொன்ன? அந்த ப்ரஸடீஜ் குக்கர் இப்ப என்ன ஆச்சு டா?”

“
திறமை எங்க இருந்தாலும் தட்டிக் கொடுக்கலாம் டா.”

“
நீயும் தட்டிக்கொடு... குட் ஜாப்ன்னு சொல்லி தட்டிக்கொடு ஆனா எதுக்கு விழுந்து விழுந்து ஸைட் அடிக்கிற?”

“
சும்மாதான் ஸைட் அடிக்கிறேன். ரொம்ப அமைதியா இருக்கால?”

“
இப்ப அது ரொம்ப முக்கியமா? வா மெயின் ஸ்டேஜ் போகலாம். ரிசல்ட் சொல்லப்போறாங்க.”

“
என்னோட காம்ப்படிஷன் எல்லாம் முடிஞ்சிடுச்சு. இப்ப நான் ரெஸ்ட் எடுக்கிறேன். நீ போகணும்னா போ. நான் பத்து நிமிஷம் கழிச்சிதான் வருவேன்.”

“
உன்னோட கண்ணுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தா தேவலை.”

ஆர்யா விவேக்கைப் பார்த்து முறைக்கவும்,

“நைட்லாம் காம்ப்படிஷனுக்கு படிச்சிருப்பில டா. அதான் சொன்னேன்.” என்று பம்மினான்.

“நீ கிளம்பு டா. நான் எனக்கு கட்லட் ஆர்டர் பண்ணப்போறேன். நிதானமா கட்லட் சாப்பிட்டதும் வர்றேன்.”

“
அப்ப நீ வரமாட்ட? ஸ்கூல்விட்டு ஸ்கூல் வந்திருக்கோம்... வேணா, வா போலாம்.”

“
ஏன் குட்ஷெப்பர்ட் பொண்ணுங்களை ஸைட் அடிக்கக்கூடாதுன்னு ஏதும் ரூல்ஸ் இருக்கா?”

“
குட்ஷெப்பர்ட் பொண்ணுங்களை ஸைட் அடிக்கலாம் ஆனா... குட்ஷெப்பர்டோட வி-பி பொண்ணை ஸைட் அடிக்கக்கூடாது.”

“
வி-பி பொண்ணா இருந்தா என்ன? பிரின்சி பொண்ணா இருந்தா என்ன? நான் ஸைட் அடிப்பேன்.” என்றவன் மதுமிதா கண்டுபிடிக்கும்வரை ஸைட் அடிப்பதை நிறுத்தவேயில்லை.



* * *

ஒருவழியாக மதுமிதா கிளம்பும் வரை அவளை ஸைட் அடித்துவிட்டு ஆடிட்டோரியத்திற்கு வந்தான் ஆர்யா. அடுத்த ஒரு மணி நேரத்தில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஆர்யா மற்றும் அவனது பள்ளி மாணவர்கள் எதிர்பார்த்தபடியே நான்காம் இடத்தைப் பிடித்தார்கள். திர்ட் ரன்னர் அப் கப் அவர்கள் பள்ளிக்கு அந்த மாபெரும் மேடையில் வைத்து வழங்கப்பட்டது. அதை தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் கொடுக்கும் போது, “சூப்பர் பாய்ஸ் அன்ட் கர்ல்ஸ். Y.M.J கீப் இட் அப்.” என்று சிரித்தபடியே மாணவர்கள் கையில் கொடுத்தது தான் ஆர்யாவையும் அவனது பள்ளி மாணவர்களையும் பரவசப்படுத்தியது.

மேடையில் இருந்து இறங்கி வந்ததும் Y.M.J மாணவர்கள் ஒருவருக்கொருவர் கைகுழுக்கியபடி கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். ஆர்யா அமைதியாக அந்த பிரமாண்டமான அரங்கத்தில் Y.M.J மாணவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் நடு மயமாக உட்கார்ந்திருக்க, மயில் வேடமிட்டிருந்த சிறுமிகள் “East or West Y.M.J is the best.” என்று கத்திக்கொண்டே இருந்தனர்.

Y.M.J கூட்டம் கும்மாளமிட்டுக்கொண்டிருந்த இடத்திற்கு வெகு அருகிலேயே தான் மதுமிதாவும் ஹரினியும் அமர்ந்திருந்தனர்.

“என்னப்பா... ஓவர்ஆல் ஷீல்ட்டு நமக்குதான கிடைச்சிருக்கு... அந்த Y.M.J ஸ்கூல் பயங்கரமா சீன் போடுறாங்க??” என்று மதுமிதா ஹரினியிடம் கேட்டாள்.

“ஆமா. மது நமக்கு தான் ஓவர்ஆல் ஷீல்டு. அந்த ஸ்கூலுக்கு திர்ட் ரன்னர் அப் கிடைச்சிருக்கு. அதுக்குதான் இந்த அலப்பறை..”- ஹரினி.

“ஏய் போட்டியில இருந்து மொத்தமா பிரின்சிபால் டிஸ்குவாலிஃபை செய்திருப்பாங்க, அதையும் தாண்டி வந்து ரன்னர் அப் வந்தது எவ்வளவு பெரிசு தெரியுமா?” என்று சொன்னாள் மற்றொரு மாணவி சாருலதா.

“East or West Y.M.J is the best.” என்று மீண்டும் மீண்டும் Y.M.J மாணவர்கள் கத்திக்கொண்டே இருந்தனர்.

“இவுங்க ரௌடிசம் தாங்கலயே...” என்று கூட்டத்தை மதுமிதா உற்றுப் பார்த்தபோதுதான் கூட்டத்தின் நடுவே இருந்த ஆர்யாவைப் பார்த்தாள்.

அவளும் மனதுக்குள் தனது தோழி சாருலதாவின் மெச்சுதலை ஆமோதித்தாள். ஆர்யா காட்டிய கெத்தை வேடிக்கை பார்த்தவளுக்கு சிரிக்கவா, கோபப்படவா என்றே தெரியவில்லை. தங்களது ரன்னர்-அப் கப்பை மேஜைமேல் வைத்துக்கொண்டு அதைச் சுற்றி நின்று மயில் வேடமிட்டிருந்த சிறுமிகள் கைதட்டிக் கத்திக்கொண்டிருக்க ஆர்யாவும் விவேக்கும் மந்தகாசமாய் சிரித்தபடி அனைவருக்கும் டிரீட் வைத்துக்கொண்டிருந்தார்கள். கேன்டீனில் இருந்து பப்ஸ், ஐஸ்கிரீம் என்று வாங்கி வந்து அனைத்து மாணவர்களும் பகிர்ந்து உண்டதை மதுமிதா வேடிக்கை பார்த்தாள்.

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மதுவை மது என்று மெல்ல அழைத்தாள் ஹரினி.

“மது.”- ஹரினி.

“ம்??”

“
அந்தப் Y.M.J பையன் ஆர்யா உன்னைப் பார்த்திட்டே இருக்கான்ப்பா..”

“
ம்?? அப்படியா?”

“
ஏய். நீ பார்க்கல? அவன் பார்த்ததை நீ பார்க்கல? மேடம் இவ்வளவு நேரம் குற்றாலத்துல தான இருந்தீங்க. ஆர்யா அருவி கொட்டோ கொட்டுன்னு கொட்டுச்சு.”

“
அட போப்பா, நீ வேற... வேறப் பேச்சு பேசு. பேட்மிட்டன் கிளாஸுக்கு லேட் ஆச்சு. மணி மூனு.. போலாமா? பிரைஸ் கொடுத்துட்டாங்கல, வா போலாம். இந்த ஃப்ர்ஸ்ட் பிரைஸ் டிராஃபியை அப்பாகிட்ட முதல்ல காட்டணும். என்னோட டிராஃபியை எல்லாம் வைக்கிறது ஒரு ஷெல்ஃப் செய்யப்போறார் தெரியுமா?” என்று பேச்சை மாற்றினாள் மதுமிதா.

“அப்ப நிஜமாவே போலாம்கிறியா? ஆர்யா இன்னும் கொஞ்ச நேரம் ஸைட் அடிச்சிட்டுப்போட்டுமே? மத்தவங்க சந்தோஷத்தைக் கெடுக்குறது ரொம்ப ரொம்பத் தப்பு மா.”

“
யேய்...” என்று மது தனது பேக்கால் ஹரினியை மது அடிக்கவும், “சரி சரி அடிக்காத. போலாம்.” என்று அந்த ஹரினி இடத்திலிருந்து எழுந்தபோது அந்த மயில் உடையணிந்த Y.M.J பள்ளி சிறுமிகள் அவர்கள் அருகே நின்று கொண்டிருந்தார்கள்.

“ஹலோ.”- மயில்கள்.

“ஹலோ. திர்ட் ரன்னர் அப் போல? கங்கிராட்ஸ்.”- மது.

“ஆமா அக்கா.. நீங்க ரொம்ப நல்லா பேசுனீங்க.. நீங்க கலந்துகிட்ட பேச்சுப்போட்டியை நாங்க வேடிக்கை பார்க்க வந்தோம். எங்க ஸ்கூல் ஆர்யா அண்ணா பேசுறதைக் கேட்கத்தான் வந்தோம், அப்படியே நீங்க பேசுனதையும் கேட்டோம். ரெண்டு பேரும் சூப்பரா பேசுனீங்க.

“தாங்க்ஸ். ஆர்யாவும் நல்லாதான் பேசினான்.”- மது.

“அக்கா எங்களுக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா?”- மயில்கள்.

“சொல்லுங்கப்பா.”- மது.

“உங்ககிட்ட ஃபோன் இருக்கா? என்னோட பேரன்ட்ஸ்க்கு ஒரு மிஸ்ட் கால் பண்ணணும். அப்பாவை கூப்பிட வரச் சொல்லணும்...”

“
வீடு ரொம்ப தூரமா?”

“
ஆமா. வரும்போது ஸ்கூல் பஸ்ல வந்தோம். போகும்போது அப்பா வர்றேன்னு சொன்னாரு, அதான் ஒரு கால் பண்ணி வருவாரா வரமாட்டாரான்னு கேட்கணும்.”

“
சரி.. யார்கிட்டயும் எங்ககிட்ட ஃபோன் இருக்குன்னு சொல்லாதீங்க.”- மது.

“ம்... தாங்க்ஸ்க்கா.”

இரு மயில்களும் தங்களது பெற்றோருக்கு கால் செய்து பேசி முடித்ததும், “அக்கா அப்படியே எங்க கோஆர்டினேட்டருக்கும் அப்பா வர்றார்ங்கிற விஷயத்தை சொல்லிடுறோம். இந்த பெரிய கிரவுன்டல அவரை எப்படி நாங்க கண்டுபிடிக்கிறது?”

“
ம். நம்பர் சொல்லுங்கப்பா. நான் டயல் பண்ணித் தர்றேன். சீக்கிரம்ப்பா நான் பேட்மிட்டன் கிளாஸ் போகணும்.”- மது.

“ஓகே.. ஓகே இதோ டூ மினிட்ஸ்க்கா. என்னோட டைரியில சார் நம்பர் வச்சிருக்கோம். இதோ எடுத்துட்டேன்..” - மயில்கள்.

* * *

8

மதுவும் ஜானுவும் தங்களது வேன் நிற்கும் இடத்தில் பைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். மதுமிதாவுடன் இன்னும் இருபது மாணவ மாணவிகள் காத்திருந்தனர்.

“வேன் டிராஃபிக்ல மாட்டிக்கிச்சாம். முதல் டிரிப்புக்கு போன வேன் வர இன்னும் அரை மணி நேரம் ஆகுமாம்.” என்றாள் மதுவின் அருகே இருந்த மாணவி.

“மது, நாம அப்பாவுக்கு கால் பண்ணுவோமா?”- ஜானவி.

“இன்னும் அரை மணி நேரம்தான... வெயிட் பண்ணு ஜானு. அப்பாவுக்குதான் வெட்டி அலைச்சல்.”- மது.

மது ஜானவியிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆர்யாவும் விவேக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்த தங்களது பள்ளிப் பேருந்தை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தனர்.

“மது, அந்த அண்ணா செம போல்டுப்பா.”

“
யாரு?”

“
இப்ப நம்ம பஸ் ஸ்டான்டுக்கு பக்கமா நடந்து வந்துட்டு இருக்காரே... அவர்தான்.”

“
ஓ... அப்படியா?”

“
என்ன அப்படியான்னு கேட்டுட்ட? ஸ்பீக் அவுட் போட்டி ஆன் ஸ்டேஜ்ல நடந்தது. அந்த அண்ணா சூப்பரா ஆன்சர் கண்டுபிடிச்சாங்க. நீ இங்கயே வெயிட் பண்ணு. இதோ வந்திடுறேன்.”- ஜான்வி.

“ஒண்ணும் வேணாம். என் பக்கத்தை விட்டு நகர்ந்த... தொலைச்சிடுவேன்.”- மது.

“அடப்போ மது. நான் விஷ் பண்ணிட்டு வந்திடுறேன். உனக்கு என்ன வந்திச்சு?”

“
ஆர்யாவை நான்தான் எலக்கியூஷன்ல ஜெயிச்சேன். நியாயமா பார்த்தா, நீ எனக்குதான் விஷ் பண்ணணும்.”

“
நான் தான் உன் பிரைஸைப் பார்த்து ஸோ சுவீட் மதுன்னு சொல்லிட்டேனே? இப்ப ஆர்யா அண்ணாகிட்ட போய் விஷ் பண்ணிட்டு ஓடி வந்திடுறேன். பை மது..”

“
ஜானு... எதுக்கு இப்படி ரியாக்ட் பண்ற? எத்தனை பேர் பிரைஸ் வாங்கிருக்காங்க? இது ஒரு விஷயமா?”

“
ஒரு போட்டியில சேர்ந்து முதல் பிரைஸ் வாங்குறது பெருசு இல்லப்பா. நாலு போட்டியில சேர்ந்து நாலுளையும் ஏதாவது ஒரு பிரைஸ் தட்டுறதுதான் பெருசு... அவுங்க பஸ்ல ஏறுறாங்க பாரு... உன்கூட பேசிட்டே அவுங்களை மிஸ் பண்ணப்போறேன்... அச்சோ.”- என்ற ஜான்வி வேகமாக ஆர்யாவின் பள்ளிப்பேருந்து நோக்கி ஓட ஆரம்பித்தாள்.

பேருந்தின் முதல் படிக்கட்டில் விவேக்குடன் நின்றிருந்த ஆர்யாவும் விவேக்கும் தங்கள் முன்னே “கங்கிராட்ஸ்ண்ணா.” என்று கைநீட்டிய ஜான்வியைப் பார்த்து புன்னகைத்தபடி கைகுலுக்கினார்கள்.

“எல்லா போட்டியிலயும் சூப்பரா பண்ணீங்க... இன்னும் பிரிபேர் பண்ணிருந்தீங்ன்னா சூப்பரா ஜெயிச்சிருப்பீங்க.”- ஜான்வி.

“ஆமா... ஆமா நிச்சியமா.” என்று பின்னங்கழுத்தை தடவிக்கொண்டே ஸ்டைலாகச் சொன்ன விவேக்கின் பார்வை ஜான்வியிடம் இருந்தாலும் ஆர்யாவின் பார்வை அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த மதுமிதாவிடம் இருந்தது. அதனைப் பார்த்த ஜான்வி, “அது என்னோட சிஸ்டர் தான். உங்ககூட எலக்கூஷன் போட்டியில ஜெயிச்சது என்னோட சிஸ்டர் தான்.” என்றாள் ஆர்யாவிடம்.

“உங்க சிஸ்டரா? நல்லா பிரசன்ட் பண்ணாங்க.” என்றவன் மதுவை நோக்கியபடி சிரித்துக்கொண்டே அந்த பேருந்து படிக்கட்டில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தான்.

* * *
 
“ஹாய்.”- என்று கூறி மதுவின் முன்னே நின்றான் ஆர்யா.

“ஹாய்.” என்றாள் மதுமிதா.

“நல்லா பேசுன மதுமிதா.”- சிரித்த முகமாய் ஆர்யா.

“நீயும் நல்லா பேசுன. முதல் பிரைஸ் வராதோன்னு டவுட்டாவே இருந்திச்சு.”- மது.

“நோ, நோ எனக்கு டவுட்டே இல்ல. நீ தான் வாங்குவன்னு கன்ஃபார்மா நம்பினேன்.”

“
நல்ல நல்ல பாயின்ட்ஸ் பேசுன ஆர்யா.”

“
என்னோட பெயர்கூட தெரிஞ்சிருக்கே? பரவாயில்ல.”

“
நீதான் Y.M.J க்கு பிரான்ட் அம்பாசிடர் ஆச்சே? உன் பேர் தெரியாம இருக்குமா? Y.M.J ஸ்கூல் S.P.L தெரியாம இருக்குமா?”

“
ஹா... ஹா.” என்று ஆர்யா சிரித்தபோது அவனது பள்ளிப் பேருந்து ஹார்ன் ஒலியெழுப்பியது.

“உங்க பஸ்தான்... பஸ் கிளம்பப் போகுது போல... நைஸ் டு மீட் யு.”

“
ஆமா... என் பஸ்தான். பை. அன்ட் நைஸ் டு மீட் யூ டூ.”- ஆர்யா.

* * *

ஹார்ன் ஒலியெழுப்பியதும் ஆர்யாவின் பள்ளி மாணவர்கள் அனைவரும் அதில் ஏறிக்கொண்டார்கள். பேருந்து குட்ஷெப்பர்ட் பள்ளியில் இருந்து புறப்பட்டது. ஆர்யாவுடன் பேருந்தில் ஏறியதும் விவேக் ஆர்யாவைப் பார்த்து கெக்கபுக்கவென சிரித்தான்.

“என்ன? சார் பார்வை, பரதநாட்டியம் ப்ரியாவை விட்டுப் பத்தடி விலகிருச்சு?”

“
ப்ரியாவா யாரு?? நம்ம கிளாஸ் ப்ரியாவையாச் சொல்ற விவேக்?”

“
ஏய்ய்ய்... வேணா ஆர்யா பொய் புழுகாத. காலையில பஸ்ல ஏறினப்போ வச்சக் கண் எடுக்காம சைட் வியுவில பார்த்திட்டு இருந்த... இப்ப மாத்திப் பேசுறியா?”

“
அதச் சொல்றியா??”

“
ஆமா சார். அதைத்தான்... அதையேத்தான் சொல்றேன்.”

“
அது சும்மா டா. ஆனா மதுவோட அதைக் கம்பேர் பண்ண முடியாது. என்னோட ஃப்ர்ஸ்ட் கிரஷ் மதுதான். அவ அந்த ஸ்டேஜ்ல பேச ஆரம்பிச்சப்பவே நான் ஃப்ளாட் ஆகிட்டேன். நல்லவேளை நான் பேசின பிறகு அவ பேசினா, இல்லாட்டி செகன்ட் பிரைஸைக்கூட கோட்டை விட்டிருப்பேன்.”

“
எனக்கு ஒண்ணு புரியல...”

“
எது?”

“
ஏன்டா இந்தப் பசங்க மட்டும் பொண்ணுங்களைப் பார்த்ததும் ஃப்ளாட் ஆகிடுறாங்க? படிச்ச மேக்ஸ் மறந்து போயிடுது, ஃபிசிக்ஸ் மறந்துபோயிடுது, இங்கிலிஷ் கிராமர்ல ஃப்ர்ஸ்ட் பெர்சன் சிங்குளர் (First person singular) , செகன்ட் பெர்சன் சிங்குளர்கூட(Second Person singular) மறந்து போயிடுது. நீ கூட இப்ப சொன்னீயே... மது முதல்ல பேசியிருந்தா கிளீன் பவுள்டு ஆகிருப்பேன்னு சொன்னல? அது ஏன்? பசங்க அவ்வளவு வீக்கா? பொண்ணுங்க பத்து பேரை ஸைட் அடிச்சாலும் அசராம நூத்துக்கு நூறு வாங்குறாங்க. பொண்ணுங்க அவ்வளவு ஸ்டாராங்கா டா?”

“
ஓ... அதுவா... தெரியல விவேக். அவுங்களுக்கும் ஏதாவது ரியாக்ஷன் நடக்கும் மச்சி. வெளியே காமிக்க மாட்டாங்க. நாம ஓப்பன் புக். திறந்த புத்தகம். உள்ளதை உள்ளபடி வெளியே பளிச்சுன்னு காட்டுறோம். ஆனா பொண்ணுங்க அப்படி இல்ல. அதுதான் பொண்ணுங்களுக்கும் பசங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் டா.”

“
சின்ன கரெக்ஷன் ஆர்யா. புத்தகம்னு பொதுவா சொல்லாத, நாம திறந்து வைத்த ஒரு குயர் அன்ரூல்ட் நோட். பொண்ணுங்க தான் பேனா. நம்ம மேல எதுனாலும் எவ்வளவுனாலும் அந்த பேனா எழுதலாம்.”

“
ஹா... ஹா... பேனாவைப் பிடிச்சி எழுதுறவன் யாரு?”

“
விதி ஆர்யா. விதி சார்தான் பேனாவை கையில வச்சிருக்கார்.” என்றான் விவேக் சிறிதும் யோசிக்காமல்.

“ஹா... ஹா...”

“
இதுல ப்யூட்டி என்னன்னா, ஹீரோபேனாவா இருந்தாலும் சரி, பார்பி பேனாவா இருந்தாலும் சரி, என்ன எழுதப்போகுதுன்னு பேனாவுக்குத் தெரிஞ்ச அளவுகூட அந்த அன்ரூல்டு நோட்டுக்குத் தெரியாது.”

“
ஹா... ஹா... எக்ஸாக்ட்லி.”

“
அது மட்டும் இல்ல சில நேரம் மேஜிக் இன்க் கூட அந்தப் பேனாவில் இருக்கும்டா. எழுதி முடிச்ச கையோட இன்க் மாயமா மறைஞ்சி போயிடும்.”

“
டேய்... சும்மாயிரு. போதும் விவேக்.”

“
நிஜமாதான் ஆர்யா. அந்த மேஜிக் இன்க் மாதிரி மூனு ஃபேஸ்புக் பொண்ணுங்க என்கிட்ட மாயமா மறைஞ்சிருக்காங்க. எனக்கு என்ன ஒரு வருத்தம்... முழு புக்கையும் எழுதி முடிச்சிட்டு மறைஞ்சிருக்கலாம்... பாதியில அம்போன்னு விட்டுட்டுப் போனதுதான் வருத்தமா இருக்கு ஆர்யா. அதுல ஒரு பொண்ணு ‘அத்தியாயம் 1’ எழுதியதோடு எஸ்ஸாகிடுச்சு.”

“
ஹா... ஹா... யாரும் ஃப்ரண்டாகக்கூட டிக்ளேர் பண்ணலயா?”- ஆர்யா.

விவேக் மௌனச் சாமியாராக இருந்தான்.

விவேக்கின் மௌனம் யெஸ், ஆம், என்றே பொருள் கொள்ளப்பட வேண்டும். இருபது நிமிடங்கள் நகர்ந்திருந்த பேருந்தில் இருபது தத்துவங்களைச் சொல்லி முடித்து ஆர்யாவும் விவேக்கும் சிரித்து ஓய்ந்தனர்.

* * *

சிரித்து ஓய்ந்தபிறகு பேருந்தில் இருந்தவர்களிடம் தனது தொலைநோக்கு பார்வையை செலுத்தினான் விவேக். அப்போதுதான் ஆர்யாவிடம் தனது அதிமுக்கியக் கேள்வியைக் கேட்டான். அத்தனை நேரம் கவனிக்காமல் விட்டுப்போன தனது கவனக்குறைவை(??) நினைத்தபடியே ஆர்யாவிடம் அக்கேள்வியைக் கேட்டான் விவேக்.

“என்னடா மயில்களைக் காணோம்??”- விவேக்.

விவேக் கேள்வி கேட்டதும் பேருந்தில் இருந்தவர்களை தானும் நோட்டம் விட்டான் ஆர்யா. விவேக்கின் கண்டுபிடிப்பு சரியென்றான பிறகு,

“அதான, அந்த கர்ல்ஸ் எங்க?” என்று விவேக்கிடம் சந்தேகமாய் கேட்ட ஆர்யா நூலக மேலாளரிடமும் அக்கேள்வியைக் கேட்டான்.

“அவுங்க பேரன்ட்ஸ் வந்து கூட்டிட்டுப் போயிட்டாங்க.” என்று நூலக மேலாளர் சுப்பிரமணியன் ஆர்யாவிடம் சொன்னதும்,

“யார் சார் சொன்னா? நல்லா தெரியுமா சார் விட்டுட்டுப் போயிடப்போறோம்.” என்று அநியாயதிற்குப் பதறினான் விவேக்.

“டேய் அசிங்கமா இருக்குடா, ரொம்பத் துள்ளாத... அவர்தான் சொல்றாருல? விடு.”- மெல்லிய குரலில் விவேக்கை அடக்கியபடி ஆர்யா.

“அந்தப் பொண்ணுங்க பேரன்ட்ஸ்கூடப் போறதா எனக்கு கால் பண்ணாங்க. அந்தப் பொண்ணுங்களோட அப்பாவும் என்கூட பேசிட்டார். நம்ம பிரின்சியோட ஃப்ரண்ட் தான அவரு... அதான் அவர், ‘என் பொண்ணுங்களை நானே கூட்டிட்டுப் போகவா’ன்னு கேட்டதும் சரின்னு சொல்லிட்டேன்.”- லைப்ரரியன்.

“பொண்ணுங்க உங்களுக்கு கால் பண்ணாங்களா? அவுங்க எப்படி பேரன்ட்ஸக் கான்டாக்ட் பண்ணாங்க? பொண்ணுங்களுக்கு செல்ஃபோன் அலோ பண்ணீங்களா? சார், இது ரொம்ப ஓவர் சார்.”- விவேக்.

“ச்ச ச்ச அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல, நீ வேற தேவையில்லாம இன்னொரு பிரச்சனை உண்டு பண்ணிடாத. குட் ஷெப்பர்ட் ஸ்கூல் பிள்ளைங்க ஃபோன் கொடுத்தாங்களாம்.”

“
ஓ...”- விவேக்.

“ஓ...”- ஆர்யா.

ஆனால் ஆர்யா “ஓ” என்று சொன்னதும் ஒரு நிமிடம் யோசித்தான். மதுவும் அந்த மயில்களும் பேசிக்கொண்டு நின்றது அவனது நினைவில் வந்தது. உடனே விவேக் காதினில், “டேய் மயில் பொண்ணுங்க மதுகூடதான பேசிட்டு இருந்தாங்க?” என்றான்.

“ஓஓஓஓஓ...” - விவேக்.

* * *



“சார் உங்க ஃபோன் கொடுங்க சார். நானும் என்னோட அப்பாகிட்ட இன்ஃபார்ம் பண்ணணும். என்னோட வீட்டுலயும் தேடுவாங்க சார்.” என்றான் விவேக் நூலக மேலாளரிடம்.

ஆர்யாவினால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. முன்சீட்டில் தூங்குவது போல சாய்ந்துகொண்டு சிரித்துக்கொண்டே இருந்தான்.

“எதுக்கு? நீ தான் பஸ்ல இப்ப நம்ம ஸ்கூலுக்குப் போகப்போறீல?”- நூலக மேலாளர்.

“அதைத் தான் சார் இன்ஃபார்ம் பண்ணணும். அந்தப் பிள்ளைங்க எல்லாம் சொல்லிருக்காங்கல.. அது மாதிரி நானும் என்னோட அம்மாகிட்டச் சொல்லணும். லேட் ஆகிடுச்சுல? அம்மா தேடுவாங்க...”- விவேக்.

ஆர்யா தனது சிரிப்பை உதடுகளுக்குள் புதைத்துக்கொள்ள அரும்பாடுபட்டான்.

“அப்படியா? இரு தர்றேன்.”- லைப்ரரியன்

“நேரமாச்சு சார்.. குடுங்க.. ப்ளீஸ்.”- விவேக்.

“இருப்பா லாக் எடுத்திட்டு தர்றேன்.” என்று தனது கைபேசியில் லாக் எடுத்துவிட்டு விவேக்கிடம் அதனைக் கொடுத்தார்.

விவேக் அதை வாங்கிக்கொண்டு தனது சீட்டில் நன்றாக சாய்ந்தபடி அமர்ந்துகொண்டு தனது அம்மாவின் கைபேசி எண்ணை தட்டச்சு செய்வதுபோல நடித்தான்.

“டேய் வேமா மது நம்பரை என் நம்பருக்கு மெசேஜ் பண்ணுடா... லாக் விழுந்துடப்போகுது.”- மேலாளர் பார்த்துவிடுவாரோ என்ற பதட்டத்தில் ஆர்யா.

“இருடா... லாக் விழுந்தாலும் பாஸ்வேர்டா அவர் பெயரை வச்சிருக்கப்போறார். அவர் பெயரை டைப் பண்ணி லாக் எடுத்துட்டு நம்ம வேலையை பார்க்கப்போறோம். எதுக்குப் பயப்படுற? நான் தான் அவர் எத்தனை கீஸ் அழுத்தினாருன்னு எண்ணி வச்சிருக்கேன்ல... எனக்கு கன்ஃபார்மா தெரியும். அவர் பேர்தான் பாஸ்வேர்ட். யூ டோன்ட் வொரி Yaar.”- விவேக்.

பள்ளியின் பேருந்து பள்ளிக்குள் நுழைந்ததும் தனது பைக்கை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டான் ஆர்யா.

‘தாங்க்ஸ் விவேக், ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் விவேக், உனக்கு டிரீட் தர்றேன், எவ்வளவு அறிவாளித்தனமா மதுமிதா நம்பர் எடுத்துக்கொடுத்திருக்க? நீ கிரேட்டா, நாலு தடவை ஃபோன் லாக் விழுந்த பிறகும் புத்திசாலித்தனமா பாஸ்வேர்ட் கண்டுபிடிச்சி திறந்திட்டியே... நீ நண்பேன்டா, மது என்னோட கேர்ள்ஃப்ரண்ட் ஆகிட்டானா... நீ என்னோட குலதெய்வம்டா விவேக்.’, இப்படியெல்லாம்கூட நீ என்னைப் போற்றிப் புகழ வேண்டாம் டா. - தன்னிடமே புலம்பலாய் விவேக் .

“டேய் வர்றியா என்னோட பைக்லயே வீட்ல விட்டுருறேன், ஷேர் ஆட்டோவில் போகாத. இந்த ஒரு வாக்கியத்தைதான் டா எதிர்பார்த்தேன், ஆனா பஸ்ல இருந்து இறங்குனதும் மாயக்கண்ணனா மறைஞ்ச பாரேன்... அப்போ தான்டா என்னால கன்ட்ரோல் பண்ண முடியல.”- மீண்டும் தன்னிடமே புலம்பலாய் விவேக்.

“மது ஃபோன் ஃஸ்விட்ச் ஆஃப்ன்னு வர...” - இதுவும் விவேக், புலம்பலாய் அல்ல கோபமாய்.

* * *
 

New Threads

Top Bottom