Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


யட்சகன் ராட்சனாக

ராட்சஸன்: 6

காரில் இருந்து இறங்கினார் விக்ன பிரசாத் . இறங்கியவர் அவனுக்கு காரின் கதவை திறந்து விட கோபத்தோடு அதில் ஏறி அமர்ந்தான் வினய்.

சற்று நேரத்தில் கார் வீட்டின் முன் நிற்க இறங்கிச் சென்றான் வினய் . அவனை தொடர்ந்து இறங்கிய பிரசாத் வினய் செல்லும் வரை பார்த்துவிட்டு அதன் பின் போனை கையில் எடுத்தார்.

அபேய் இன்னைக்கு வினய் ஆபிஸ் வர மாட்டான் அதனால நீ என்ன பண்ற அவன் schedule எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டு . இன்னோரு நாள் அந்த புரோகிராம் வச்சிக்கலாம் என்று அவர் சொல்ல எதிர்முனையில் என்ன சொல்லப்பட்டதோ

வினய் இரவு நடக்குற ஆபிஸ் பார்ட்டிக்கு கண்டிப்பா வருவான் . நீ எல்லாத்தையும் ரெடி பண்ணி வை என்று அவனிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றார் பிரசாத்.

***********************

லமி இது ஓகேவானு பார்த்து சொல்லு என்று நிதா ஒரு டிரஸை எடுத்து தன் மேல் வைத்தபடி லமியிடம் காண்பிக்க அவர்

நிதா இது பழைய டிரண்ட் ஆ இருக்கு வேற எதாவது எடு என்று லமி சொல்ல நிதா மற்றொரு டிரஸை வைத்து காண்பிக்க இது நல்லா இருக்கு ஆனா ரிச் லுக் தரலையே என்று லமி சொல்ல

இருவரும் பிரபலமான அந்த துணி கடையையே ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தனர் .

லமி ஒரு உடையை எடுத்துக் கொடுக்க அதை பார்த்த நிதா

“ ஓப்வோ லமி இது 'வெட்டிங் ட்ரெஸ்' அதை அங்கேயே வை

ஏனா நான் பார்ட்டிக்கு தான் போறேன் என் கல்யாணம் ஒண்ணும் அங்க நடக்கல அதனால அத அப்படியே வச்சுட்டு இத பார்த்து சொல்லு என்று நிதா கூற லமி விடுவதாகயில்லை.

நிதா இது உனக்கு அழகா இருக்கும் இத போட்டுக்கடா என்று லமி கூற . முடியாது லமி இது பார்ட்டி டிரஸ் கிடையாது அதனால அத வச்சுறு அப்பா சொன்னாருன்ற ஒரே காரணத்துக்காக தான் நான் உன் கூட டிரஸ் எடுக்க வந்தேன் . இப்டிலாம் செஞ்சா அப்பா கூட அவர் கம்பெனி பார்ட்டிக்கு நான் போக மாட்டேன் என்று நிதா கூற லமி வேண்டா வெறுப்பாக அதை வைத்தார்.

அதன் பின் இருவரும் ஒரு டிரஸ்சை எடுத்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு அகன்றனர்.

************************

வினய் முன் வந்து நின்ற பிரசாத் “ யட்சா ! நீ இன்னும் பார்ட்டிக்கு தயாராகலையா என்று கேட்க அவன் அவரை கண்டுகொள்ளாமல் கோப்பையில் உள்ள திரவத்தை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தான்.

நீ இப்ப என்கூட வரலைனா இது தான் நடக்கும் என்று அவர் ஒரு வீடியோவை போட்டு காண்பிக்க அதை பார்த்த யட்சன் கோபமாக கோப்பையை தரையில் வீட்டெறிந்தான் அது உடைந்து சிதற அதன் உடைந்த பாகத்தில் ஒன்றை எடுத்து பிரசாத்தின் தொண்டை குழியின் அருகில் வைத்தான் யட்சன். அவருக்கு பயத்தில் வேர்த்து கொட்டி தொண்டை குழி ஏறி இறங்கியது..

யட்சகனாக மாறுவான்
 
ராட்சஸன்: 7

இதை உங்க தொண்டையில் இறக்க எனக்கு ஒரு நிமிசம் கூட ஆகாது. ஆனா எனக்கு நீங்க தெரிந்தோ? தெரியாமலோ உதவி செஞ்சுட்டீங்க அதனால உங்கள சும்மா விடுறேன்.

அவர்க்கு ஏதாவது ஆச்சு நான் மனுசனா இருக்க மாட்டேன். என்னை பத்தி உங்களுக்கு நல்லா தெரியும்னு நினைக்கிறேன் என்று கூறியவன் கண்ணாடி துண்டினை விட்டெறிந்துவிட்டு ரூமின் வாசல் வரை சென்றவன் திரும்பி நான் கொஞ்ச நேரம் மட்டும்தான் பார்ட்டியில இருப்பேன் நான் வரது உங்களுக்கு பயந்து இல்லை நான் எதுக்கு வரேன்னு உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன் என்று சொல்லிவிட்டு கதவை அறைந்து சாத்தினான் வினய்.

அவன் சென்றதும் தன் கழுத்தை தேய்த்துவிட்டுக் கொண்டே பேசினார் பிரசாத்.

உன்ன லாக் பண்ண எனக்கு ஒரு சாய்ஸ் கிடைக்காமலா போகும் அப்ப வச்சுக்குறேன்டா உன்னை என்று முணங்கிக் கொண்டே தன் ரூமை நோக்கி சென்றார் அவர்.

************************

தன்னை அலங்கரித்துக் கொண்ட நிதா கண்ணாடியில் தன்னை பார்க்க அவள் வியப்பில் அயர்ந்து நின்றாள்.

"ஓ வாவ் லமி ! நீ சொன்ன மாதிரி இந்த டிரஸ் எனக்கு ரொம்ப நல்லா இருக்கு .ஆனா லமி எனக்கு ஏதோ படபடப்பா இருக்கு நீயும் என் கூட வாயேன், அப்பா கூட நான் மட்டும் எப்படி தனியா பார்ட்டிக்கு போகுறது" என்று அவள் கூற,

"அவன் கூட போறதும் ஆப்ப நானே விலை கொடுத்து வாங்குறதும் ஒண்ணு தான் என்னால் முடியாதுமா வேணா உன் தாத்தாவ கூட்டிட்டு போ அவர் தான் உன் அப்பனுக்கு கரெக்டா செட் ஆவாரு" – லமி

அப்போது அங்கே வந்த வெங்கி, "என்ன விசயம்? எதுக்கு கிழவி என்ன இழுக்குறா?"

"தாத்தா என் கூட பார்ட்டிக்கு வாங்க" – நிதா

"பார்ட்டிக்கு வரத பத்தி ஒண்ணும் இல்லம்மா இவள தனியா விட்டுட்டு வரனுமேனு தான் யோசிக்கிறேன்." - வெங்கி

"ஏன் தாத்தா பாட்டி மேல அவ்வளவு பாசமா. தனியா விட்டுட்டு வர மாட்டிங்களா. அங்க நிறைய பொண்ணுக வருவாங்க அதனால நீங்க சைட் அடிக்கலாம் வாங்க தாத்தா பிளிஸ்?" - நிதா

"யாரு இவரு? சைட் அடிக்கப் போறாரா !. நீ வேற! இவருக்கு என்னை கட்டி காப்பாத்தவே முடியல இதுல இன்னோன்றா! ம்ம்ம்... காமெடி பண்ணாதமா" – லமி

"லமி... தாத்தா நீ தனியா இருப்பேன்னு உனக்காக வீட்டுல இருக்கேன்னு சொல்றாரு அவர போய் நீ கிண்டல் பண்ற" - நிதா

"அட போமா ! இவள தனியா விட்டா வீட்டையே இரண்டா ஆக்கிருவா பிரிஜ் ல ஒரு பொருள் இருக்காது எல்லாத்தையும் திண்ணே காலி பண்ணிடுவா அதனால நான் இவளுக்கு காவல் இருக்கேன்" - வெங்கி

"அதான பார்த்தேன் திடீர்னு பாசம் பொத்துட்டு வந்துருச்சேன்னு, உங்கள பத்தி எனக்கு தெரியாதா? " என்று லமி ஏதோ கூற முயல

அப்போது மேலிருந்து வைத்தி இறங்கி வரவும் அந்த இடமே அமைதியானது . நிதாவை கூட்டிக் கொண்டு பார்ட்டிக்கு விறைந்தார் வைத்தி. நிதா வேண்டா வெறுப்பாக அவருடன் சென்றாள்.

**************************

என்றும் போல் அன்றும் கருப்பு பேண்ட் , சர்ட் மற்றும் கோட்டோடு இறங்கி வந்தான் வினய் . அவன் காரில் ஏறி அமர்ந்ததும் கார் விறைந்தது பார்ட்டி நடக்கும் இடத்திற்கு. அவன் காரில் இருந்து இறங்க அனைவரும் அவனை ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சென்றான் வினய். பிரசாத் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைக்க அவன் முகத்தில் ஒரு அறிமுகச் சிரிப்பு கூட இல்லை.

இங்கு நிதா பார்ட்டி நடக்கும் இடத்தை சுற்றி பார்த்து கொண்டே வர எதிரில் வந்தவனை கவனிக்காமல் அவன் மேல் மோதினாள் . மோதிய வேகத்தில் அவள் விழ முயல தாங்கி பிடித்தான் அவன். அவன் ஹசல் கண்கள் அவள் எதிரே பக்கத்தில் இருக்க அதனை பார்த்தவள் மெய் மறந்து நின்றாள்.

அவள் பார்த்து கொண்டிருக்க ஏதோ சத்தம் கேட்டு நிமிர்ந்தவள் திரும்பிப் பார்க்க அந்த இடம் வெறிச்சோடிக் கிடந்தது. அவள் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தாள் . தான் பார்த்தது கனவா? நனவா ? என்று புரியாமல் குழம்பி நின்றாள் நிதா.

*****************************

மரங்கள் நிறைந்த அந்த இடத்தில் இலக்கற்று ஓடிக் கொண்டிருந்தான் அவன். புலியின் வேகத்தோடு வேட்டையாடத் துடிக்கும் கண்களோடு ஓடிக் கொண்டிருந்தான் அவன். அவன் பார்வையில் விழுந்தது அந்த இடம். அதை கண்டவன் வேகமாக அருகில் செல்ல செல்ல அவன் கண்கள் பளபளத்தது. உள்ளே சென்றவன் சற்று நேரத்தில் அந்த இடத்தில் இருந்து வேகமாக கிளம்பினான்.

அவன் கிளம்பிய சற்று நேரத்தில் அந்த இடமே ரணகளமானது

யட்சகனாக மாறுவான்
 
ராட்சஸன்: 8

வைத்தி தன் நண்பர்களோடு சென்று விட நிதா தனித்து விடப் பட்டாள் . அறிமுகமற்றவர்கள் மத்தியில் என்ன செய்வதென்றே தெரியாமல் நிதா சுற்றிக் கொண்டிருக்க எதிரில் வந்து நின்றான் சாமா. அவனை இங்கு சற்றும் எதிர்பார்க்காத நிதா சந்தோசத்தில் குதித்தாள்

"வாவ் சாமா நீ எப்படி இங்க ! தேங்க் காட் நீயாவது வந்தியே ரொம்ப போர் அடிக்குது சாமா" – நிதா

"இவங்க கம்பெனியில தான் நான் வேலை பார்க்குறேன்" – சாமா

"ஒ!! அப்ப எங்க அப்பாவ உனக்கு தெரிஞ்சுருக்கனுமே. எங்க அப்பாவும் இங்க தான் வேலை பார்க்குறார்"- நிதா

"அப்படியா ! ஆனா VP ன்றது பெரிய கம்பெனி . அவங்க நிறைய products export பண்றாங்க அதனால உன் அப்பா வேற கிளையில் வேலை பார்ப்பாரா இருக்கும் நான் பெர்ப்யூம் manufacturing டிபார்மண்ட் ல இருக்கேன்" என்று அவன் கூற

"ஒ!" - நிதா

"ஆமா உன் வேலை என்னாச்சு?" – சாமா

"அதை ஏன் கேட்குற சாம் அப்பா வேற கம்பெனிக்கு இண்டர்வியூக்கு போகச் சொல்லி சொல்றாரு" – நிதா

"நிதா பேசாம உன் அப்பா மாதிரி வேலைக்கு போனா என்ன?" – சாமா

"அப்ப என் கனவு!!!" – நிதா

"இங்க பாரு நிதா அப்பாக்காக வேலைக்கு போ!!! ஆனா உன் கனவும் நிறைவேறும்..." – சாமா

"நீ என்ன சொல்ற எனக்கு புரியல?" – நிதா

"என் நண்பன் ஒரு டிடெக்டிவ் கம்பெனி வச்சுருக்கான் அவன் கிட்ட உன்ன நான் சேர்த்துவிடுறேன் பார்ட் டைம்மா உன் அப்பாவுக்கு தெரியாம இத நீ செஞ்சுக்கலாம் ஆனா அவன் உன்ன சேர்க்கனும்னா நீ எதாவது ஹாட் டாபிக் எதாவது கண்டுபிடிச்சு உன்னை ட்ரெயினிங் பண்ணிக்கோ . அப்ப தான் அவன் கிட்ட உன்ன நான் ரெக்கமண்ட் பண்ண முடியும்" – சாமா

"சாமா தேங்க்ஸ் நீ சொன்னபடியே செய்றேன் ஒரு கேஸ் அ சால்வ் பண்ணிட்டு வரேன்" – நிதா

இருவரும் இங்கு பேசிக் கொண்டிருக்க,

********************************************************************************

பிரசாத் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அபேயை கண்களால் அழைத்தார்.

"வினய் எங்க காணோம் அவன பார்த்துட்டே இருக்க சொன்னேன்னா இல்லையா!" – பிரசாத்

"சார் ! இங்க தான் இருந்தாரு அதுக்குள்ள எங்க போனாருனு தெரில" என்று அவன் கூற

"யூ இடியட் !" என்று அவனை கத்திவிட்டு பிரசாத் வினய் ஐ தேடத் தொடங்க தூரத்தில் ஒரு மனிதருடன் பேசிக் கொண்டிருந்தான் வினய்

அவர் அவனை தொட்டு ரசித்துப் பேசிக் கொண்டிருக்க அவரிடம் விரைந்தார் பிரசாத்

"வாங்க ! பூங்குன்றன் சார் ! எப்படி இருக்கீங்க ?" என்று பிரசாத் கேட்க

அவரை பார்த்ததும் பயந்தார் அந்த மனிதர் .

வினய் அவர் அருகில் சென்று அவர் கைகளை பிடித்துக்கொண்டான்

பிரசாத் தொடர்ந்தார்.

"இப்படி தனியா நின்னு பேசணும்னு என்ன கட்டாயம் பூங்குன்றன் சார். வாங்க வந்து இங்க உட்கார்ந்து பேசுங்க" என்று அவரை அழைத்துக் கொண்டு வந்து ஒரு இடத்தில் அமர வைத்தவர் பேரரை அழைத்து.

"பேரர் ! இவருக்கு குடிக்க எதாவது கொடுங்க" என்று சொல்லிவிட்டு வினய்யிடம் திரும்பியவர் .

"வினய் ! வாப்பா ! உன்ன என் பிரண்டுக்கு அறிமுகப்படுத்தனும்! பிறகு வந்து சார் கூட பேசிக்கலாம் . என்ன பூங்குன்றன் சார் நான் சொல்வது சரிதான என்று பிரசாத் கூற அவர் தலை பயத்தில் சம்மதமாக ஆடியது வினய் பிரசாத்தை முறைத்துக் கொண்டே அவர் பின் சென்றான்.

ஆட்கள் யாருமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்றவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வினய்யிடம் திரும்பினார்.

"ஆமா ! கொஞ்ச நேரம் நீ இங்கு இல்லையே? எங்க போன? என்ன பண்ணிட்டு வந்தே என்று அவர் கேள்வி கேட்க வினய் அதற்கு பதில் எதும் சொல்லாமல் அவரை ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருக்க

வாயிலில் வந்து நின்றது ஒரு கார். காரில் இருந்து இறங்கினார் தேவ் ஆனந்த் பிரசாத்தின் தொழில் எதிரி.

அவரை பார்த்த பிரசாத் வினய்யை விட்டு அவரிடம் சென்றார்.

"வாங்க தேவ் ! வெல்கம் !" – பிரசாத்

"யெஸ் Mr. பிரசாத் ! உங்கள சந்திக்க காத்துட்டு இருந்தேன் இப்ப தான் நேரம் கிடைச்சது . உங்கள மட்டும் இல்லை உங்க பையன்ன சந்திக்க ஆவலுடன் காத்துட்டு இருக்கேன். Where is he?" – தேவ் சிரித்துக் கொண்டே கேட்க

"நானும் உங்கள சந்திக்க காத்துட்டு இருக்கேன். குறிப்பா என் பையன முழுசா உங்க கிட்ட காண்பிக்க காத்துட்டு இருக்கேன் தேவ்" - பிரசாத்

பிரசாத் அப்படி கூறியதும் தேவ் உரக்க சிரித்தார்.

"ஓ! ஓகே பிரசாத் ! அப்புறம் தொழில் எல்லாம் எப்பிடி போயிட்டு இருக்கு." – தேவ்

"ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு" – பிரசாத்

"இனி அப்படி நல்லா போகாது. தொழிலும் சரி ! வாழ்க்கையும் சரி ! என்று தேவ் கூறிச் சிரிக்க

"அப்படியா தேவ் ! பார்க்கலாம் யார் வாழ்க்கை யும் , தொழிலும் நல்லா போகாதுனு பொறுத்து இருந்து பார்க்கலாம்." என்று பிரசாத் கூற

இருவரும் மற்றவர்கள் பார்வைக்கு சிரித்துக் கொண்டு பேசினாலும் வேட்டையாடத் துடிக்கும் வெறி அவர்கள் கண்களில் தெரிந்தது



யட்சகனாக மாறுவான்
 
ராட்சஸன்: 9
காலையில் கண் விழித்து எழுந்த நிதா வழக்கம் போல் டோலுவிடம் பேசிவிட்டு குளித்து கிளம்பி கீழே வர அவளை எதிர்கொண்டார் வைத்தி.
"நிதா இன்னைக்கு 10 மணிக்கு சார்ப்பா என் ஆபிஸ்க்கு வந்துரு graphic designing க்கு ஆள் எடுத்துட்டு இருக்காங்க நீ அதுல மாஸ்டர் டிகிரி வாங்கியிருக்கே அதனால வந்து இண்டர்வியூ அட்டன் பண்ற" என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.
நிதா சாமா சொல்வதற்கு இணங்க அவர் கம்பெனிக்கு சென்றாள்
இண்டர்வியூவில் இரண்டு , மூன்று ரவுண்ட் சென்றவள் இறுதியாக நேர்முகத் தேர்விற்காக ஒரு ரூமிற்குள் அனுப்பப் பட்டாள். அங்கு அவன் அமர்ந்திருந்தான் நடுவரில் ஒருவராக. அவனை பார்த்ததும் அவள் கண்கள் அவளை அறியாமல் ரசிக்க ஆரம்பித்தது .
வினய் எதிரில் அமர்ந்தவள் அவனை பார்த்துக் கொண்டே இருக்க,
"ப்ளீஸ்... பி சீட்டட்" என்று பிரசாத் கூறியவுடன் தான் அவளுக்கு நிகழ்காலம் உரைத்தது.
'நிதா அந்த கண்ண பார்க்காத! நீ நீயா இருக்க மாட்டே!' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் அதன் பின் வினய் பக்கம் திரும்பவே யில்லை.
அவள் வந்ததில் இருந்து அவளை பார்த்துக் கொண்டிருந்த வினய் அவளை பார்வையால் ஆராய்ந்து கொண்டு இருந்தான்.
இறுதியில் நிதா தேர்ந்தேடுக்கப்பட பிரசாத் அவளிடம் திரும்பினார்
"மிஸ் நிதா!! இப்ப நாங்க புதுசா ஆரம்பிக்க போற boutique க்கு நீங்க டிசைனிங் பண்ணனும்... நீங்க தான் முதன்மை டிசைனர். "
"உங்களுக்கு ஹெட்டா என் மகன் இருப்பான் . பிளிஸ் செக்கவுட் வித் ஹிம் நாளையில் இருந்து உங்க வேலைய ஆரம்பிங்க" என்று கூறியவர் வினய்யிடம் திரும்பினார்
"ப்ளீஸ் கோ அஹேட் வித் ஹெர் வினய் என்று கூறிவிட்டு அவர் வெளியேற இவள் அவன் பக்கம் திரும்பினாள் .
அவள் திரும்பியதும் வினய் அவளை பார்த்தபடியே பேசினான்
"சீயூ டூமாரோ அட் 9 சார்ப்" என்று கூறியவன் வாசல் பக்கம் பார்க்க நிதா கால்கள் வேகமாக வாசல் பக்கம் விறைந்தது
"ச்ச்ச்... அப்ப்பபா.... கண்ணாலயே மிரட்டரானே!!" என்று கூறிய நிதா வேகமாக மூச்சினை வெளியே விட்டாள்.
*************
காலையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த பிரசாத் கண்களில் பட்டது அந்த செய்தி வேகமாக பேப்பரை எடுத்துக் கொண்டு வினய் அறைக்கு சென்றார் பிரசாத். அங்கே அவனும் அதை தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அதை வைத்து ஏதோ சிந்தனையில் இருந்தான். அவன் முன் நின்ற பிரசாத்
"என்ன இதெல்லாம் ? இதுல உன் பங்கு எதாவது இருக்கா ?" – பிரசாத்
"இல்லை ? " ஒன்றை வார்த்தையில் பதில் சொன்னான் அவன்.
"நோ ! நான் நம்ப மாட்டேன். நீ தான் இத பண்ணியிருக்க "– பிரசாத்
"ஓ ! டூ யூ ஹேவ் எனி எவிடன்ஸ்" – வினய்
"எவிடன்ஸ் ? யூ பிள... ... ! என் கிட்ட உன் விளையாட்ட காண்பிக்கிறியா ? அரை மணி நேரம் நீ பார்ட்டிலயே இல்லை .அதனால நீ அந்த நேரந்தான் இத பண்ணி இருக்க . உனக்கு தேவையானது தான் வீட்டுக்கே வருதே அப்புறம் நீ எதுக்கு அங்க போன, இது மட்டும் எதாவது பிரச்சனை ஆச்சு உன்ன கொன்றுவேன்டா" என்று பிரசாத் கூறிவிட்டு சென்று விட
வினய் இங்கு கோபத்தில் நின்று கொண்டிருந்தான்.
**********
இங்கு நிதாவும் அந்த செய்தியை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே டிவியிலும் அந்த செய்தி ஒலிபரப்பானது.
அதில் காட்சிகள் காண்பிக்கப்பட்டது பிரபல பண்ணை ஒன்றில் பல ஆடுகள் கொடூரமான முறையில் செத்துக் கிடந்தன.
பண்ணை வீட்டின் உரிமையாளரை செய்தியாளர்
"என்ன நடந்ததுனு சொல்ல முடியுமா சார் ?" என்று கேட்க அவர் பின்வருமாறு கூறினார்.
"நான் பண்ணை வீட்டில் நல்லா தூங்கிட்டு இருந்தேன் சார் அப்ப . தீடீர்னு சத்தம் கேட்டது வந்து பார்த்தா இப்டி ஆடுகள் செத்துக் கிடந்தது."
"அங்க யாரையாவது பார்த்தீங்களா ?" – செய்தியாளர்
அவர் சற்று நேரம் யோசித்தார் . பின்பு "எதோ ஒரு கருப்பு உருவம் நிழலா தெரிஞ்சது ஆனால் என்னால சரியா பார்க்க முடியல ஒரே இருட்டா இருந்தது" என்று அவர் கூற
அத்துடன் அந்த செய்தி நிறைவு பெற்றது. இதை பார்த்துக் கொண்டிருந்த நிதா தன் மனதில் சொல்லிக் கொண்டாள்.
‘ நிதா அருமையான கேஸ் கிடைச்சுருக்கு விடாத இந்த கேஸ்அ மட்டும் நீ கண்டுபிடிச்சுட்டா பெரிய ரிப்போட்டர் ஆகலாம்' என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்
*************
பிரசாத் தன் ஆட்கள் கொண்டு இதனை செய்தவர் யார் என்று விசாரித்துக் கொண்டிருக்க அவருக்கு ஒரு போன் கால் வந்தது .
அவர் போனை காதுக்கு கொடுக்க எதிர்முனையில் சிரித்தார் தேவ் . அவர் சிரித்து முடித்ததும் ஒரு செய்தியை கூற பிரசாத் அதிர்ச்சி அடைந்தார் .
யட்சகனாக மாறுவான்
 
ராட்சஸன்: 10
போனை வைத்த பிரசாத் டிரைவரை மறுத்துவிட்டு வேகமாக காரில் ஏறி அமர்ந்து. தானே காரை ஓட்டிச் சென்றவர் ஒரு இடத்தில் நிறுத்தினார். அங்கு கல்லறைகள் பல இருக்க அதில் ஒரு கல்லறையின் முன் நின்ற பிரசாத் அருகில் சுற்றிப் பார்க்க ஒரு மண்வெட்டி அவர் கண்களுக்குத் தெரிந்தது. அதை எடுத்து கொண்டு அந்த கல்லறையை தோண்டியவர் கண்களில் விழுந்தது அந்த சவப்பெட்டி.. சவப் பெட்டியை பார்த்தவர் பெட்டியின் மூடியை அருகில் இருந்த கல் கொண்டு அடித்து திறந்தார் .. திறந்தவர் அந்த பெட்டியை கண்டு சிலையாக நின்றார். அந்த பெட்டி வெறுமையாக காட்சி அளித்தது .
அப்போது போன் கால் வர பிரசாத் வேகமாக அதை எடுத்து காதிற்கு கொடுக்க எதிர்முனையில் சிரித்தார் தேவ் .
“என்ன பிரசாத் நீங்க ? நான் சொன்னதை நம்பாம திறந்து வேற பார்க்குறீங்க ?” – தேவ்
“தேவ் ! உன் எதிரி நான் தான எதுக்கு இப்ப அவன இதுக்குள்ள இழுக்குற? உன் ஆட்டத்த இதோட நிறுத்திக்க “
“பிரசாத் ! பிரசாத் ! என்ன பிரசாத் புரிஞ்சு தான் பேசுறீங்களா ? உங்களால எனக்கு தொழிலில் பல கோடி லாஸ் அத நான் சரி செய்ய வேண்டாமா ? இது நான் உங்களுக்கு வட்டியும் முதலுமா திருப்பி தரும் தருணம் . இப்ப தான என் ஆட்டத்தை ஆரம்பிச்சுருக்கேன் அதுக்குள்ள நிறுத்த சொன்னா எப்படி பிரசாத்? உங்க பலவீனம் என் பலம் பிரசாத். அத வச்சி இன்னும் நான் எவ்வளவு சாதிக்கணும் . மனிதனோட உணர்ச்சியில் விளையாடுற ஆட்டம் கூட நல்லாத் தான் இருக்கு பிரசாத்” என்று கூறி உரக்கச் சிரித்தார் தேவ்
“அப்ப அந்த நியூஸ் எல்லாம் உன் வேலை தானா” – பிரசாத்
“பரவாயில்லையே பிரசாத் கரெக்டா கண்டுபிடிச்சுட்ட . இதுமட்டுமில்ல பிரசாத் உனக்கு ஒரு குட் நியூஸ் வச்சிருக்கேன். அந்த செய்தி என்னனா ? ம்ம்ம் வெயிட் வெயிட் அந்த செய்தி சொல்லக் கூடாது கண்ணால காண்பிக்கனும் . அத நீ கண் கொண்டு பார்த்தா தான் எனக்கு கிக்கா இருக்கும். ஆனா ஒரே ஒரு குறை பிரசாத்! நீங்க அந்த வீடியோவை பார்த்ததும் எப்படி உணர்ச்சி வசப்படுறீங்கனு… என்னால நேரில் பார்க்க முடியாம போயிடுச்சு” என்று கூறி போனை வைத்த தேவ் ஒரு வீடியோவை அனுப்ப அதை பார்த்த பிரசாத்தின் கண்கள் கலங்கியது.
அதில் அமாவாசை இருட்டில் ஒரு உருவம் ஃபார்ம் ஹவுஸை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்க அந்த உருவத்தின் கையில் வி.பி என்ற எழுத்துகளை தாங்கிய பிரேஸ்லட் தெரிந்தது. அவன் ஃபார்ம் ஹவுஸில் உள்ளே நுழைந்து அங்கு இருந்த மாடுகளின் அருகில் சென்று ஏதோ செய்ய சற்று நேரத்தில் அவை ஒவ்வொன்றும் இறந்து விழுந்தன.
அதை பார்த்த பிரசாத் கல்லரையில் அருகே மடிந்து அமர்ந்தபடி
“வினய் ! மை சன் !” என்று ஓலமிட்டு கத்தினார் .
*******************************
நிதா இன்றோடு வேலைக்கு சேர்ந்து இரு வாரங்கள் சென்றுவிட்டன. அவன் ரூமிலேயே ஓரமாக அவளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அவள் அமர்ந்து டிசைன் பண்ணுவதும் அதை அவனிடம் காட்டி அப்ரூவல் வாங்கி மேற்கொண்டு அதை வடிவமைப்பதுமாக அவள் வேலை அவளுக்கு பழக்கமாகிவிட்டது .
ஆயினும் வினய்யை தான் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை . அவன் செயல்கள் அனைத்தும் அவளுக்கு வித்தியாசமாகபட்டது. அவன் செயல்கள் அதிவிரைவாகவும், முரண்பாடாகவும் அவளுக்குத் தெரிந்தது. அரைமணி நேரத்திற்கு ஒரு தடவை எதையோ குடிப்பதும் , கையில் ஏதோ ஒன்றை வைத்து அதை பார்த்து வெறிப்பதுமாக , அவன் அவளுக்கு ஒவ்வொரு நாளும் புதுமையாக தோன்றினான்
அன்றும் வழக்கம் போல கரெக்டான டைமில் ஆபிசிற்குள் நுழைந்து தன் கேபினுக்குள் நிதா நுழைய முற்பட சரியாக அதே நேரம் உள்ளே இருந்து வெளியே வந்தான் வினய்.
சரியாக அவன் மேல் மோதி நின்றாள் நிதா . மோதிய வேகத்தில் கீழே விழப் போனவளை பிடித்து நிறுத்திய வினய் அவளை பார்த்து முறைத்துக் கொண்டே
‘’ பார்த்து வர மாட்டியா ? எப்ப பாரு வந்து மோதிக்கிட்டு’’ என்று கத்திவிட்டு அவன் வெளியே சென்று விட நிதா அவன் சென்ற திசையையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் சட்டென்று தன்னை உலுக்கிக் கொண்டு
“நிதா நோ! டைவர்ட் ஆகாத ! அவன் கண்களை பார்க்காத !. பார்த்தா நீ நீயா இருக்க மாட்டே !” என்று தனக்குள் சொல்லிக் கொண்ட நிதா. அவளை அறியாமலேயே ராட்சஸன் என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.
சற்று நேரத்தில் திரும்பி வந்தவன் தன் இருக்கையில் அமர அவன் முன் வந்து நின்றாள் நிதா
அவளை பார்த்ததும் எரிச்சல் அடைந்தவன்
“வாட் ?” என்று கத்த
பயத்தில் பற்கள் தந்தியடித்தபடியே அவனிடம் ஒரு பேப்பரை நீட்டினாள்
அவன் என்ன என்பது போல் பார்க்க
“சார் ! டிசைன்” - நிதா
“வச்சுட்டு போ !” என்று கூறியவன் வேறு பைலை பார்க்க முயல நிதா நின்று கொண்டே இருந்தாள்.
அவள் போகாமல் நிற்பதை கண்டு
“அதான் போக சொல்லிட்டேன்ல ! இப்ப என்ன ?” – வினய்
“சார் ! இந்த டிசைனை உடனை செக் பண்ணனும் இட்ஸ் அர்ஜெண்ட்” - நிதா
“வச்சுட்டு போ !” என்று குரலை உயர்த்தினான் வினய்
“சார் ! அது வந்து ... பிரசாத் சார் ! உடனே டிசைன் ரெடி பண்ணச் சொன்னாரு” - நிதா
பிரசாத் என்ற பெயரை கேட்டதும் அவன் முகம் கோபத்தில் சிவந்து அவன் பச்சை நிற ஹசல் கண்கள் இரத்த நிறமாக மாறத் தொடங்க அந்த கண்ணின் கருவிழிகள் வடிவம் மாறத் தொடங்க , தன் கைகளை மடக்கி தன்னை கட்டுக்குள் கொண்டு வர முயன்றவன் சட்டென்று வெளியேறினான் .
இதை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த நிதாவிற்கு அவள் ரசித்த அவன் ஹசல் கண்கள் இப்போது அவளை பயமுறித்தியது. பயத்தில் முகம் வெளிறி நின்றாள் நிதா.
கல்லரையில் இருந்து நேராக தேவ்வின் இருப்பிடம் நோக்கிச் சென்றார் பிரசாத். தேவ் பிரசாத்தின் வரவை எதிர்நோக்கி காத்திருப்பது போல் வாயில் நின்று வரவேற்றார். தேவ்வை முறைத்துக் கொண்டே உள்ளே வந்த பிரசாத் தேவ்விடம் கத்துவதற்கு வாய் திறப்பதற்குள் தேவ் அவரை
“வாங்க பிரசாத்! உள்ளே போய் பேசலாம்…” என்று கூறியபடியே பிரசாத்தை ஒரு ரூமிற்குள் அழைத்துச் சென்றார் தேவ் .
உள்ளே சென்றது தான் தாமதம் பிரசாத் தேவ்விடம் கத்த ஆரம்பித்துவிட்டார்.
“தேவ் என்ன நினைச்சிட்டு இருக்க நீ ! அவன் இங்கே ?” – பிரசாத்
“என்ன பிரசாத் அவன பத்தி கேட்டா எனக்கு எப்படி தெரியும் ?” – தேவ்
“தேவ் டோன்ட் ஆக்ட் டூ ஸ்மார்ட்!!! ஐ வான்ட் டு டால்க் டு ஹிம் ரைட் நவ்... – பிரசாத்
இதை கேட்ட தேவ் சிரித்துக் கொண்டே
“என்ன பிரசாத் ஆர் யூ ஓகே ? மூலை ஏதும் குழம்பிப் போகலயே ? “– என்று தேவ் சொன்னது தான் தாமதம் தேவ்வின் சட்டையை பிடித்துவிட்டார் பிரசாத்.
“தேவ் நீ ரொம்ப பேசுற ? நான் ஏதும் உன்னை செய்றதுக்குள்ளே அவன் எங்கேனு சொல்லிடு” என்று பிரசாத் கூறிக் கொண்டிருக்க
“அவரை விடுங்க மிஸ்டர்.. விக்னபிரசாத்” என்ற குரல் பக்கவாட்டில் இருந்து கேட்க வேகமாக திரும்பினார் பிரசாத் . அங்கு முகமூடி அணிந்து ஒருவன் நின்று இருந்தான்.

யட்சகனாக மாறுவான்…
 

New Threads

Top Bottom