என் நெஞ்சில் என்றும் நீயடி 😍😍😘
அத்தியாயம்:2
முதலில் போன் கட் ஆனவுடன் தெரியாமல் கைபட்டு கட் ஆகியிருக்கும் என்று நினைத்துக்கொண்டு மீண்டும் அவனை போனில் அழைத்தாள், ஆனால் அதுவோ சுவிட்ச்ஆஃ என்று அவளுக்கு பதில் கூறியது மனதில் சிறு வலி தோன்ற கட்டிலில் படுத்தாள் மீனா...
அவர்கள் பெண் பார்க்க வருகிறோமென்று கூறிய அந்த ஞாயிற்று கிழமையும் வந்தது.
காலையிலிருந்து எத்தனை தடவை சொல்லிட்டு இருக்கேன் அந்த புடவையை காட்டுனு நீ பாட்டுக்கு நயிட்டி போட்டுட்டு நிக்கிற, இந்த பையனுக்கு மட்டும் உன்னை பிடிக்கலைன்னா, என்னோட சொந்தகார பையனுக்கு உன்ன ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணி குடுத்துருவேன், ஒழுங்கா அந்த பையனுக்கு புடிக்கிற மாதிரி ரெடி ஆயிட்டு வா சிறு கண்டிப்புடன் கூறிவிட்டு சென்றாள் மீனாவின் சித்தி ஸ்ரீதேவி...
இன்னைக்கு மித்ரன் கண்டிப்பா வரமாண்டங்க, ஒரு வேலை வந்தாலும் என்னை புடிக்கலன்னு தான் சொல்லுவாங்க அதுக்கு நா எந்த ட்ரெஸ் போட்டா என்ன போடலன்னா என்ன 😜, வர வர நம்ம வாழ்க்கை எத நோக்கி பயணம் போதுனே தெரிய மாண்டுக்கு, புலம்பிக்கொன்டே புடவை உடுத்த சென்றாள் மீனா.
அவளது அலங்காரம் முடியவும் மித்ரன் குடும்பத்தினர் வரவும் நேரம் சரியாக இருந்தது.
தட்டில் காபீ கோப்பைகளுடன் அழகு பதுமையாக அங்கே வந்தாள் மீனா....
வாவ் அண்ணி நீங்க போட்டோல இருக்கிறத விட நேர்ல சூப்பரா இருக்கீங்க, நித்யா இப்படிக்கூறவும் மீனாவின் கன்னத்தில் செம்மை படர்ந்து அவளை இன்னும் அழகாக காட்டியது☺️, மித்ரன் கொஞ்சம் கிரங்கித்தான் போனான்.
மாப்பிளைக்கு பொண்ண பிடிச்சிருந்தா மத்த விஷயமெல்லாம் பேசிடலாம், ஒரு வழியாக சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டார் கனகராஜ் மீனாவின் அப்பா.
போச்சு என்னை புடிக்கலைனு எல்லார் முன்னாடியும் சொல்ல போறாங்க, என்னோட மானம் போக போகுது, நிச்சயம் என்ன பத்தி கேவலமா தான் சொல்லுவாங்க, அவன் இப்படி தான் கூறுவான் என்று மீனா முடிவே பண்ணிவிட்டாள். ஆனால் அவனோ நா மீனாவிடம் கொஞ்சம் தனியா பேசணும் என்று கூறிவிட்டான்.
முதலில் பெரியவர்கள் யோசித்தாலும் பின்னர், இருவரும் தனிமையில் பேச அனுமதித்தனர். மீனாவும் சிறு தயக்கத்துடனே மித்ரனை தன் அறைக்கு அழைத்து சென்றாள்.
ப்ரதாப்பும் ஹனியும் யாருக்கும் தெரியாமல் கண்ணாலே பேசிக்கொண்டனர், அதை நித்யாவின் கண்களும் கவனிக்கத்தான் செய்தது....
என்ன ஹனி நீயும் ப்ரதாப்பும் சண்டே மீட் பண்ணனும்னு பிளான் பண்ணீங்கல்லா, இப்போ ரெண்டு பேரும் மீட் பண்ணிட்டீங்க, உங்களுக்கு ஹாப்பி தான??? ஒன்னும் தெரியாதது போல் கேட்டாள் நித்யா...
ஏய் நித்து உனக்கு கடற்கரைல மீட் பன்றதும் வீட்டுல மீட் பன்றதும் ஒன்னா?? கடுப்புடன் கேட்டாள் தேன்கிரெனா...
நீங்க ரெண்டு பேரும் நண்பர்கள் தான ஹனி ??
ஆமா என்பது போல் தலையை ஆட்டினாள் தேன் கிரெனா..
அப்ரோம் என்ன நண்பர்கள் எங்க மீட் பண்ணாலும் ஒன்னு தான்😜...
ஆஆஆஆ ஆமா அதுவும் சரி தான், ரொம்ப தேங்க்ஸ் நித்து எங்க ரெண்டு பேரையும் மீட் பண்ண வச்சதுக்கு 🙏🙏கையெடுத்து கும்பிட்டாள் ஹனி....
யுவர் ஆல்வேஸ் வெல்கம் மை டியர் ஹனி😉...
இங்கே அறையில் வந்த இருவரும் ஏதும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே நின்றிருந்தனர்.
மீனாவோ பதட்டத்தின் உச்சத்தில் இருந்தாள்.
மீனா நீ என்கிட்ட போன்ல உன்ன பிடிச்சிருக்கானு கேட்டல்ல, அதுக்கு பதில் சொல்ல தான் தனியா கூப்டேன், அதனால நீ பதட்டப்பட வேண்டாம்....
அவளிடம் அமைதி நிலவியது.....
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அன்ட் ஐ ஐ ஐ லவ் யூ.....
பொய் சொல்லாதீங்க உங்களுக்கு என்னை பிடிச்சிருந்தா நீங்க நா போன்ல கேட்கும்போதே சொல்லிருப்பிங்க, இப்போ சொல்றது என் மேல இரக்கப்பட்டு தான், நா ஏற்கனவே சொல்லிட்டேன் என் மேல இரக்கப்பட்டு வர அன்பு ஏதும் எனக்கு வேண்டாம் பொரிந்து தள்ளினாள் மீனா.....
சின்ன பிள்ளை மாதிரி கோபப்படுற மீனு, அன்னைக்கு என்னோட போன் சுவிட்ச்ஆஃ ஆகுற அளவுக்கு நீயும் என்னோட தங்கச்சியும் என்கிட்ட கதை சொல்லிருக்கீங்க. அப்புறம் உனக்கு போன் பண்ணி சொல்லிருக்கலாம்தான் ஆனால் உன்னை புடிச்சிருக்குனு உன்னோட கண்ண பாத்து சொல்லணும்னு தோணுச்சு.......
என்னால நம்ப முடியல யாராவது போன் சுவிட்ச்ஆஃ ஆகுற அளவுக்கு சார்ஜ் வைச்சிருப்பாங்களா???
மீனாவும் அவனை நேசிக்க ஆரம்பித்துவிட்டாள் என்பது அவள் அவன்மீது காட்டும் கோபத்தின் மூலம் புரிந்து கொண்டான்...
முதல் தடவை என்னோட போன்ல சார்ஜ் இல்லியேனு பீல் பண்னேன் 😒. நா ரெண்டு நாளைக்கு ஒரு தடவை தான் சார்ஜ் போடுவேன் அதுவும் நித்துகுட்டி கூட பேசுரத்துக்குத் தான்....
இல்லை இல்லை நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் அதை ஏற்று கொள்ள என் மனம் மறுக்கிறது, நீங்க என் மேல இரக்கப்பட்டு தான், மீனாவிற்கு கண்ணீரே வந்துவிடும் போல் இருந்தது...
அப்போ இன்னும் உனக்கு என் மேல நம்பிக்கை வரல அப்படித்தான????
ஆமாம் என்று சொல்ல அவள் வாயை திறக்க போனால், கண்மூடி கண் திறப்பதற்குள் அவளது வாய் மித்ரனின் வாய்க்குள் இருந்தது😝...
(சொன்னா நம்பனும் சொல்ல சொல்ல கேட்கலனா இப்படி தான் நிரூபிக்க முடியும்)
சிறிது நேரம் கழித்து அவள் இதழ்களை விட்டவன், இப்போவாது என்னை நம்பிரியா இல்ல.........
(அவன் இழுப்பதை பார்த்தால் அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆய்டான் போல)
இல்ல இல்ல நா நம்பரேன், வேகமாக தன் மறுப்பை தெரிவித்தாள் மீனா....
சரி வா நாம வெளிய போகலாம், ரொம்ப நேரம் உள்ளையே இருந்தா எல்லாரும் தப்பா நினைப்பாங்க, எதுவும் நடக்காதது போல் கூறிவிட்டு கதவை திறக்க போனான் மித்ரன்.
அப்போ நா சமீர காதலிச்சத நெனச்சீ உங்களுக்கு எந்த வருத்தமும் இல்ல தானே. போறவனை தடுத்து நிறுத்தினாள் மீனா...
நீங்க ரெண்டு பேரும் காதலிக்கவே இல்ல, அப்பறோம் எதுக்கு நா அத நினைச்சி வருத்தப்படனும் அவள் இரண்டு தோள்களிலும் தன் இரண்டு கைகளை போட்டபடியே கூறினான்...
நீங்க என்ன சொல்றிங்க எனக்கு புரியல குழப்பமாக கேட்டாள் மீனா...
உங்க ரெண்டு பேருக்கும் உங்களோட நண்பர்கள் கிண்டல் பண்ணதுக்கப்புரம் தான் காதலிக்கனும்னே தோணுச்சு, அதுவும் இல்லாமா உனக்கு அன்பு காட்ட ஒருத்தர் தேவ பட்ருக்காங்க அது தான் உன்னை தப்பான வழியில் செல்ல தூண்டிருக்கு. காதல் கிண்டல் பன்றதுக்காகவோ இல்ல வேற எதுவோ எதிர் பாத்தோ வரக்கூடாது, அது தான வரணும்....
மித்ரன் கூற கூற மீனாவும் தெளிவடைய தொடங்கினாள்....
நீ அவனை உண்மையாகவே காதலிச்சிருந்தா, அவன மறந்துருக்கவும் மாண்ட, நா உனக்கு முத்தம் குடுக்கும் போது எதிர்ப்பு எதுவும் காட்டாமலிருந்திருக்கவும் மாண்ட, நீயும் என்னை காதலிக்காமல் இருந்திருந்தால் நா முத்தத்தை பற்றி பேசும் போது உனக்கு கோபம் வராம இப்படி வெட்கமும் வந்திருக்காது....
மீனா மேலும் வெட்கப்படுவதை பார்த்துவிட்டு சரி சரி இதுக்கப்புறமும் நாம உள்ள இருந்தா அது சரியா வராது வா வெளிய போகலாம்...
மித்ரன் வெளியே வந்த பிறகு, எனக்கு மீனாவ ரொம்ப பிடிச்சிருக்கு வரதட்சனையாக ஒரு ரூபாய்க்கூட தர வேண்டாம், கல்யாண செலவு அனைத்தும் நாங்களே பாத்துகிறோம் என்று கூற, ஸ்ரீதேவிக்கு வாயெல்லாம் பல்லாகி போனது....
வீட்டிற்கு வந்த பிறகு நித்யாவிடம் மட்டும் மீனாவின் காதல் கதையை சொன்னான் மித்ரன்...
அதன் பிறகு மித்ரன் மற்றும் மீனா இருவரும் போனிலே தங்கள் காதலை தொடர்ந்தனர்.
நித்து நாளைக்கு அம்மாவுக்கு பர்த்டே நம்ம பிரண்ட்ஸ் எல்லாரையும் கூப்டுருக்கேன், நீயும் கண்டிப்பா வரணும் காரணம் ஏதும் சொல்லாத ஓகே, கண்டிப்புடன் கூறினான் பாபு...
ஓகே பாஸ் கண்டிப்பா வரேன் ஆனா சாப்பாட்டுக்கு பிரியாணி தான் எனக்கு வேணும் இதுக்கு ஒத்துக்கிட்டா நா கண்டிப்பா வரேன்....
உனக்கு பிரியாணி பிடிக்கும்னு எனக்கு தெரியாதா, நாளைக்கு பிரியாணிதான் அங்க மெயின் டிஷ், நீங்க இருக்ற ஹாஸ்டல்கு நா கார் அனுப்றேன் சீக்கிரம் வந்துருங்க என்றான் பாபு.
ஓகே ஓகே வரேன்.....
அடுத்த நாள் பாபுவின் வீடே ஆட்டமும் பாட்டுமுமாக கலை கட்டியது. பாபுவின் அம்மா அப்பா அவனது அண்ணன் அண்ணி என அனைவருக்கும் நித்யாவை பிடித்து போனது.
பாபுவின் அம்மாவோ எனக்கு நித்யாவ ரொம்ப பிடிச்சிருக்கு நீ எப்போ அவகிட்ட உன்னோட காதல சொல்ல போற, இப்போவே எல்லார் முன்னாடியும் சொல்லிரு நித்யா கண்டிப்பா ஒத்துக்கொள்வாள் என்று கூறிக்கொன்டே இருந்தாள்...
அம்மா நித்துகூட ஒவ்வொரு தடவையும் பேசும் பொழுதும் என்னோட காதல சொல்ல துடிக்கத்தான் செய்கிறேன், ஆனால் அவளுக்கு என் மேல காதலே இல்ல நட்பாக தான் என்னிடம் பேசுறா, பாப்போம் எப்போ சொல்றதுக்கு சந்தர்ப்பம் கிடைக்குதோ அப்போ சொல்ரேன் என்றான் பாபு...
அம்மா அப்பா நீங்க எல்லாரும் கண்டிப்பா என்னோட அண்ணா கல்யாணத்துக்கு வந்துருங்க, அடுத்த மாதம் 27ல தான் கல்யாணம் வந்துருவீங்கல்ல?? நித்யா பாபுவின் குடும்பத்தினரை அழைத்தாள்...
அச்சோ அன்னைக்கு இன்னொரு கல்யாண வீடு இருக்கே, நீ கவலப்படாத, பாபு உன்னோட அண்ணன் கல்யாணத்துக்கு வந்துருவான், நித்யாவிற்கு சமாதானம் கூறினார் பாபுவின் அப்பா...
அனைவரும் எதிர்பார்த்த மித்ரன் மற்றும் மீனாவின் கல்யாண நாளும் வந்தது. அழகாக அலங்கரிக்கப்பட்ட மண்டபம் அங்கு வந்திருந்த அனைவரையும் ரசிக்க வைத்தது என்றால் இங்கு பாபுவை ரசிக்க வைத்தது நித்யாவின் தோற்றம் தான்...
பெண்கள் பொதுவாக பூ வைத்தாலே அழகு தான், அதிலும் சேலை உடுத்தி பூ வைத்தால் அதை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அழகு பொங்கி வழியும், பாபுவிற்கும் வழிய தான் செய்தது...
நித்து என்னடா இப்படி இருக்கா ஆபீஸ்ல அவ இருக்றத விட இப்போ சேலையெல்லாம் கட்டி ஆளே கும்முனு இருக்கா, நண்பர்களுடன் புலம்பிக்கொண்டிருந்தான் பாபு...
ஹனி சொல்லவே இல்ல பாத்தியா நீயும் ப்ரதாப்பும் ஒரே கலர்ல ட்ரெஸ் போடுவிங்கனு, அதுவும் உனக்கு பிடிச்ச மெரூன் கலர்..
அப்டிலாம் ஒன்னும் இல்ல நித்து இது தற்செயலாக நடந்தது முகத்தில் செம்மை படற கூறினாள் தேன்கிரெனா☺️.
ஓகே ஒரே கலர் டிரஸ் போட்ருக்கது தற்செயலாக நடந்ததுனு வச்சிக்கலாம், ஆனால் இப்போ ப்ரதாப் உன்னை சைட் அடிக்கிறது மட்டும் தற்செயல்னு சொல்லிராத ஹனி..
அவளும் நோக்கினாள் அவனும் நோக்கினான்...
போதும் போதும் ரெண்டு பேரும் பாத்துட்டு மட்டும் இருந்தா எப்போ உங்கலோட காதலை சொல்ல போறிங்க...
எனக்கு ப்ரதாப்ப பிடிக்கும் தான் அதுக்குன்னு காதல்லாம் ஒன்னும் இல்ல, ஆனால் அவருக்கு என் மேல காதல் இருந்தா பாக்கலாம்...
ஹனி... இத விட அழகா ப்ரதாப்ப நீ காதலிக்ரனு சொல்ல முடியாது, இப்போவே நா ப்ரதாப்ப கூப்டுறேன் நீ அவன்கிட்டையே உன்னோட காதல சொல்லிரு, ஓய் ப்ரதாப் கூப்பிடவே தொடங்கி விட்டாள் நித்யா.
ஐயோ நித்து சும்மா இரு, இதுக்கு தான் நா உன்கிட்ட இவ்ளோ நாள் இத பத்தி சொல்லவே இல்ல, ஐயோ அவங்க வர மாதிரி இருக்கு நா போறேன் ப்ரதாப் வந்தா நீயே சமாளிச்சுகோ ஓட்டமும் நடையுமாக இடத்தை விட்டு அகன்றால் தேன்கிரெனா..
அவள் போவதை சிரித்துகொண்டே பாத்துட்டு இருந்த நித்யாவின் பின் ஒலித்தது பாபுவின் குரல்..
நித்து உன்கிட்ட ஒன்னு சொல்லணும்...
ஒன்னு என்ன பத்தே சொல்லு பாபு..
கல்யாண மேடையில் தேங்காய் மேல இருக்ற அந்த தாலிய பத்திரமா பாத்துக்கோ நித்துமா, என்றான் பாபு.
என்ன ஆச்சு? எதுக்கு பத்திரமா பாத்துக்கனும் பதறி போனாள் நித்யா...
அது வந்து அந்த தாலிய எடுத்து உனக்கு கட்டிருவேனு பயமா இருக்கு, அதான் பத்திரமா பாத்துக்கோனு சொன்னேன்...
(வாவ் வாட் அ ப்ரொபோஸ் )
பாபு கூறியதை நித்யா புரிந்து கொள்வதர்கே கொஞ்ச நேரம் ஆனது, புரிந்த பின் அவள் முழி இரண்டும் வெளியே வந்துவிடும் அளவுக்கு திரு திருவென முழித்து கொண்டிருந்தாள்😲..
ஐயோ... அப்படி மட்டும் முழிக்காத நித்துமா, நீ இப்படி முழிக்கும் போதெல்லாம் எனக்கு உன்ன அப்படியே கடிச்சி திங்கணும் போல இருக்கு😋😋...
ஒரு வழியாக தன்னை சகஜ நிலைக்கு கொண்டுவந்து பேச தொடங்கினாள் நித்யா. பாபு உனக்கு நா பொருத்தமானவ கிடையாது, அதுவுமில்லாம ஆபீஸ்ல எத்தனை பெண்கள் உன்னை லவ் பன்றாங்கனு தெரியுமா.
ஆபீஸ்ல எத்தனை பேர் என்ன லவ் பன்றாங்கனு தெரிஞ்ச உனக்கு, நா உன்னை லவ் பன்றது மட்டும் தெரியாமலிருந்திருக்கு.
நித்து ஒழுங்கா உனக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையானு மட்டும் சொல்லு, நா உனக்கு பொருத்தமானவ கிடையாது, நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோனு மட்டும் சொல்லிராத ஓகே..
எனக்கும் உன்ன பிடிக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும், ஆனா அது ஜஸ்ட் பிரண்ட்டாதான், நா உன்கூட கடைசி வரைக்கும் ஒரு நல்ல பிரன்ட்டா இருக்கணும்னு ஆசபடுறேன், இப்படி காதல் அது இதுனு சொல்லி நம்மளோட பிரண்ட்ஷிப்ப கெடுத்துக்காத சற்று எரிச்சலாகவே பேசினாள் நித்யா...
உனக்கு என்னை ரொம்ப பிடிக்கும்னு எனக்கும் தெரியும், உனக்கு நா நல்ல தோழனாக, காதலனாக, கணவனாக எல்லாமுமாக இருப்பேன், என்னோட வீட்டுல எல்லார்கிட்டயும் உன்ன பத்தி சொல்லிட்டேன், அவங்களுக்கும் உன்ன ரொம்பவே பிடிச்சிருக்கு உன்ன நல்லாவும் பாத்துப்பாங்க, ப்ளீஸ் என்னோட லவ்வ அக்ஸ்ப்ட் பண்ணு கெஞ்சலில் இறங்கினான் பாபு...
வாட் நீ உன்னோட வீட்டுல எல்லார்கிட்டயும் சொல்லிட்டியா யார கேட்டு இப்படி சொன்ன, அவளுக்கு கோவமே வந்துவிட்டது..
எனக்கு தெரியும் நீ எப்படியும் என்ன லவ் பண்ணுவன்னு, இல்லனாலும் உன்ன எப்படியாவது லவ் பண்ண வச்சிருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு அதான் நா வீட்டுல எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன் கூலாக சொன்னான் அவன்...
நா என்னோட அண்ணா பாக்கிற பையன தான் கல்யாணம் பண்ணிப்பேணு அண்ணாவுக்கு சத்யம் பண்ணிருக்கேன், அதனால தயவு செய்து என்ன டிஸ்டர்ப் பண்ணாத, இப்போது கெஞ்சுவது நித்யாவின் முறையானது...
ஓ உன்னோட இதயமெனும் பூட்டுக்கு சாவி மித்ரன் தான் வச்சிருக்காங்கலா, இப்போவே போய் சாவியை வாங்கிட்டு வந்து பூட்டை தொறக்க போரேன்...
ஐயோ கொஞ்சம் சும்மா இரு பாபு, அண்ணனுக்கு இன்னைக்கு கல்யாணம், நீ அவன டிஸ்டர்ப் பண்ணாத வேணும்னா இன்னொரு நாள் பேசிக்கோ,
சரி நா உன்னோட அண்ணாவிடம் பேசி சம்மதம் வாங்கிய பின்பு நீ என்னை லவ் பண்ணா போதும் அதுவரைக்கும் நாம நண்பர்களாகவே இருப்போம், நீ இப்போ போய் கல்யாண வேலையெல்லாம் பாருடி என் செல்லக்குட்டி நித்துமா, என்று கூறிக்கொண்டே அங்கிருந்து அகன்றான் பாபு...
அவன் போன பின்பு தான் நித்யாவாள் நிம்மதியாக மூச்சே விட முடிந்தது, பாபு அண்ணாவிடம் ஏதாவது சொல்லி அண்ணா என்னை தவறாக நினைத்துக்கொண்டால் நா என்ன பண்ணுவேன், கடவுளே அண்ணனுக்கு என் மேல எந்த கோபமும் வராமல் பாத்துக்கோ, நித்யாவின் சிந்தனைகள் பந்தயக் குதிரை போல் ஓடி கொண்டிருந்தது அதற்கு கடிவாளம் போட்டது கற்பகத்தின் குரல்...
ஏய் நித்து இங்க நின்னு என்ன கனவு கண்டுட்டு இருக்க அங்க கல்யாண வேலை எவ்ளோ இருக்கு வா வந்து உதவி பண்ணு...
அதன் பின்பு கல்யாண வேலைகள் வேக வேகமாக நடந்தது மாப்பிள்ளையையும் பெண்ணையும் மேடையில் உட்கார வைத்தனர், மீனுகுட்டி நீ ரொம்ப அழகா இருக்க கஷ்டப்பட்டு என்னை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா, மித்ரன் இப்படி கூறவும் மீனாவின் முகத்தில் செம்மை படர்ந்து அவளை இன்னும் அழகாக காட்டியது...
இவங்க ரெண்டு பேரோட ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லா இருக்குதுல்லா ஹனி, ரொம்ப தேங்க்ஸ் உன்னால தான் எனக்கு இவ்ளோ அழகான நல்ல அண்ணி கிடைச்சிருக்காங்க மனமுவந்து நன்றி கூறினாள் நித்யா...
எனக்கு தேங்க்ஸ்லாம் வேண்டாம் அதுக்கு பதிலா 500ரூபாய்கு சாக்லேட் வாங்கி தா போதும் என்றாள் தேன்கிரெனா.
சாக்லேட் எதுக்கு ஹனி நா அதுக்கு பதிலா உனக்கு ப்ரதாப்பையே செட் பண்ணி தரேன், இந்த கல்யாண மண்டபத்திலிருந்து நீங்க ரெண்டு பேரும் காதல் ஜோடியா தான் வெளிய போவீங்க அதுக்கு நா உத்ரவாதம்.
நித்யா இப்படி கூறியதும் ஹனிக்கு வெட்கமே வந்துவிட்டது😊.
இப்போமே இவ்ளோ வெட்கம் வேண்டாம் ஹனி, அப்புறமா ப்ரதாப் முன்னாடியும் வெட்க படுறத்துக்கும் கொஞ்ச மிச்சம் வச்சிக்கோ என்றாள் நித்யா...
நித்யா கூறியது போலவே ப்ரதாப்பிடம் ஹனியின் காதலை பற்றி பேசி இருவரையும் காதல் ஜோடிகளாகவே ஆக்கிவிட்டாள்...
மித்ரன் மற்றும் மீனா இருவருக்கும் கல்யாணமும் முடிந்து மற்ற சடங்குகள் அனைத்தும் கேலியும் கிண்டலுமாகா நடந்து முடிந்து இரவு வேலையும் வந்தது.
அளவான அலங்காரத்துடன் இதயம் பட படக்க மித்ரனோட அறைக்கு வந்தாள் மீனா. அவளை அப்படியே பூ போல் கட்டிலில் இருந்த பூ மேல் அமர வைத்து பின்பு பேச தொடங்கினான் மித்ரன்.
மீனுகுட்டி உன்னை இப்போமே எடுத்துக்கணும்னு தான் எனக்கு ஆசை, ஆனால் அதுக்கு முன்னாடி உன்கிட்ட கொஞ்சம் பேசணும், பேசவா???
மித்ரன் கேட்டதற்கு மீனாவிடமிருந்து வந்த பதில் ம்ம்ம் மட்டுமே, வேறன்ன அவளால் பேச முடியும்...
உன்கிட்ட ரெண்டு முக்கியமான விஷயம் பேசணும், ஒன்னு உன்னோட வீடு, இதுக்கப்புரம் நீ உன்னோட வீட்டுக்கு போகக் கூடாது, இது நா ஆணாதிக்கத்துல சொல்லறேனு மட்டும் நினைக்காத, உன்னை முக்கியமா நினைக்காத உன்னை கஷ்டப்படுத்துர இடத்துல நீ இருக்க கூடாது , இத நா உன் மேல வச்சிருக்கிற காதல்ல சொல்ரேன்னு நெனச்சாலும் சரி இல்ல எப்படி வேணாலும் நெனச்சாலும் சரி ஆனா நீ மறுபடியும் அந்த வீட்டுக்கு போக கூடாது என்றான் மித்ரன்.
நா உங்களையே நம்பி வந்துருக்கேன், நீங்க என்னை சாக சொன்னாக்கூட சந்தோசமா செத்து போவேன் அப்படியிருக்க இத பண்ணமான்டெனா வீர வசனம் பேசினாள் மீனா.
இரண்டாவது என்னோட தங்கச்சி தான், அவளுக்கு வாய் கொஞ்சம் அதிகம், அவ உன்மேல ரொம்ப பாசமும் வச்சிருக்கா அதிக அன்பு ஒரு நாள் வெறுப்பை தரும் வெறுப்பு கோபத்தை உண்டாக்கும் என் நித்துகுட்டி மேல யாராச்சும் கோப பட்டா என்னால பொறுத்துக்க முடியாது, நா என்ன சொல்ல வரேன்னு புரியுது தானே, நீ எப்பவுமே நா முக்கியமா நித்யா முக்கியமானு மட்டும் என்னிடம் கேட்டுறாத ப்ளீஸ்...
நித்யாவினால் தான் எனக்கு இந்த வாழ்கையே கிடைச்சிருக்கு, அப்படியிருக்க நா அவ மேல கோபபடுவேணு உங்களுக்கு எப்படி தோணுச்சு, நித்யாவும் எனக்கு தங்கச்சி மாதிரி தான் நா அவளை குழந்தை மாதிரி பாத்துக்குறேன் போதுமா, என்றால் மீனா.
மீனா கூறிய இரண்டையுமே பின்பற்ற போவதில்லை என்று தெரியாமல் அவள் கையை பிடித்து நன்றி கூறிக்கொண்டிருந்தான் மித்ரன்.
சரி அவ்ளோ தான இல்ல இன்னும் எதாவது சொல்லணுமா ஏன் கேட்குரேனா எனக்கு ரொம்ப தூக்கமா வருது சீக்கிரம் தூங்குவோமா என்றாள் அவள்.
மீனா கூறியதில் எந்தவித உள் நோக்கமும் இல்லை, அவளுக்கு நிஜமாகவே தூக்கம் தான் வந்தது, ஆனால் மித்ரனோ அதை வேறு விதமாக புரிந்து கொண்டு அவளை இழுத்து அனைத்து அவள் முகம் முழுதும் முத்த ஊர்வலம் நடத்தினான் பின்பு அவள் சிவந்த உதடுடுகளை மேலும் சிவப்பாக்க ஆவல் கொண்டு அதற்கான வேலையில் இறங்கினான் (முத்தமெனும் கம்பளியை ஏந்தி வந்து உன் இதழை என் இதழும் போர்த்தி விடும்😘) அப்புறம் கட்டிலில் தூவப்பட்ட பூவின் மீது பூ போன்ற அவளை மென்மையாக படுக்க வைத்து, அவளை மென்மையாக ஆட்கொண்டான் மித்ரன், மீனா அடுத்து பேச அவன் வாய்ப்பே கொடுக்க வில்லை அவள் வாயையும் விட வில்லை.அப்புறம் அப்புறம் அப்புறம் என்ன இருவருக்கும் சாந்திமுகூர்த்தமும் முடிந்தது அவர்களுக்கு காலை பொழுதும் அழகாக விடிந்தது....
இங்கே வேலைக்கு வந்த நித்யாவால் எப்பொழுதும் போல் பாபுவுடன் சகஜமாக பேசுவதற்கே ரொம்ப நாள் ஆச்சு, ஹனியிடம் மட்டும் பாபு தன்னை காதலிப்பதை பற்றி கூறினாள்.
ஒரு மாதம் கழித்து ஹனி, ப்ரதாப், கற்பகம், மித்ரன், மீனா மற்றும் நித்யா அனைவரும் சேர்ந்து கன்னியாகுமாரிக்கு சென்றனர், அங்கு தான் மித்ரன் மற்றும் மீனா இருவருக்கும் சண்டைக்கான விதை விதைக்கப்பட்டது...
கோவிலுக்கும் கடைகளுக்கும் சென்று அனைவரும் பொழுதினை கழித்தனர், ப்ரதாப்பும் ஹனியும் யாருக்கும் தெரியாமல் கைகோர்த்து நடந்தனர், கைகோர்த்து நடக்கும் போது மனதில் ஏற்படும் புரியாத உணர்வை இருவரும் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தனர். நித்யாவோ கடல் அலையுடன் பொழுதினை கழித்துக்கொண்டிருந்தாள்.
அண்ணி நீங்களும் என்கூட கடல்ல குளிக்க வாங்க என்று கேட்டுக்கொண்டே ஈர உடையுடன் அங்கே வந்தாள் நித்யா.
நா வேற டிரஸ் எடுத்துட்டு வரல நித்யா என்றாள் மீனா.
மீனுகுட்டி நீயும் நித்துகுட்டியுடன் குளிக்க போ, டிரஸ் ஈரமாய்டுச்சினா வெயில்ல கொஞ்ச நேரம் நடந்தா காஞ்சிடும் என்றான் மித்ரன்.
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம், நீங்க நித்யாவையும் சரி மீனா அண்ணியையும் சரி ரெண்டு பேரையும் குட்டினு சொல்லி தான கூப்டுரிங்க அதுக்கு எதாவது ஸ்பெஷல் ரீசன் இருக்கா என்று கேட்டாள் தேன்கிரெனா.
ரீசன்லாம் ஒன்னும் பெருசா இல்ல அண்ணனுக்கு யார ரொம்ப்ப பிடிக்குதோ அவங்கள குட்டினு சொல்லி தான் கூப்டுவான் என்று முந்தியடித்துக் கொண்டு பதில் சொன்னாள் நித்யா..
ஓ அப்போ மீனா அண்ணி வந்த கொஞ்ச நாள்லியே உன்னோட இடத்தை பிடிச்சிட்டாங்களா விளையாட்டாக கேட்டாள் தேன்கிரெனா.
என்னோட நித்துகுட்டி இடத்த யாராலையும் பிடிக்க முடியாது, நித்துகுட்டிக்கு அடுத்து தான் மீனுகுட்டி என்று மித்ரன் கூறியதற்கு மீனாவாள் பேருக்கு மட்டும் தான் சிரிக்க முடிந்தது.
அவனையே நம்பி வந்த மீனாவுக்கு, நானும் மித்ரனுக்கு முக்கியமாக இருக்கணும் என்று தோன்றாமல் நான் மட்டும் தான் அவனுக்கு முக்கியமாக இருக்கணும் என்ற எண்ணம் முதல் முதலாக தோன்றியது.
அதன் பிறகு மீனாவாள் எப்பொழுதும் போல் எல்லாருடணும் பேச முடியவில்லை, என்னாச்சு மீனுகுட்டி ஏன் ஒரு மாதிரி இருக்க என்று மித்ரன் கேட்டதற்கு தலைவலி என்று கூறி சமாளித்தாள் மீனா.