Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தகிக்கும் பகைமையில் குளிர் காற்றாய் உன் காதலடி

Sujitha

New member
Messages
7
Reaction score
0
Points
1
வணக்கம் சகோதரிகளே..நான் சுஜி. நான் நமது சகாப்தம் தளத்தில் எனது முதல் கதையான "தகிக்கும் பகைமையில் குளிர் காற்றாய் உன் காதலடி " என்ற கதையயை பதிப்பிட உள்ளேன். உங்கள் ஆதரவை எதிர்நோக்கி😊... இத்தளத்தில் பதிவிட உதவிய நித்யா கார்த்திகன்க்கு எனது நன்றி.
 
சென்னை 2020 :

அந்த படபிடிப்பு தளத்தில் அனைவரும் பரபரப்பாக வேலை பாத்துட்டு இருந்தாங்க .இது ஒரு ஹை பட்ஜெட் படம். அஜய்ஆகாஷ் இவருதான் ஹீரோ .(நம்ப கதைக்கு இல்ல இந்த படத்துக்கு ). இப்போ தென்னிந்திய சினிமாவ ஒரு கலக்கு கலக்குற ஹீரோ இவர் தான் .இப்போ அவங்க எடுத்துட்டு இருக்கறது படத்துடோட முக்கியமான சீன் .நம்ப ஹீரோ ஒரு பெரிய பில்டிங்ல சண்டை போட்டுட்டே கீழ குதிக்கணும் இது தான் சீன்."அஜய் சொன்னா கேளு,இது கொஞ்சம் ரிஸ்க்,டூ்ப் வைச்சு பண்ணிக்கலாம், நீயே தான் இத பண்ணனுமா என்ன"அப்பிடின்னு டைரக்டர் அஜய்கிட்ட சொல்ல, அதுக்கு அஜய் "சார், அதலாம் ஒண்ணும் இல்ல, நான் இத நல்லபடியா முடிச்சு தரேன், வாங்க போலாம் டைம் ஆச்சு "அப்படின்னு எழுந்து போய்யிட்டான். "இருந்தாலும் இவனுக்கு ஓவர் கான்பிடன்ஸ் தான்" அப்பிடின்னு மனசுல நினைச்சுட்டு அவரும் சூட்டிங்க
ஆரம்பிச்சிட்டாரு.
."ரெடி ,ஸ்டார்ட் ,ஆக்சன்ன்.... " டைரக்டர் சொல்ல சீன் ஸ்டார்ட் ஆகுது. டைரக்டர் நினைச்சத விட அஜய் ரொம்ப அருமையா பண்ணான் .அவரே நினைக்கல இந்த சீன இவ்வளவு சூப்பரா அஜய் பண்ணுவாருனு .அந்த சீன் ஓட முடிவுல அஜய் சண்டை போட்டுட்டே கொஞ்ச உயரத்துல இருந்து குத்திக்கணும் . அந்த செட்ல இருக்குற எல்லாரும் அவ்வளவு ஆர்வமா பாத்துட்டு இருந்தாங்க . அஜய் அங்க மேல இருந்து குதிக்கும் பொது எப்டியோ இப்டி அப்பிடினு ஸ்லிப் ஆகி கீழ குதிக்க வேண்டிய இடத்தை தள்ளி அந்த பக்கம் கம்பிலாம் இருந்த இடத்துல விழுந்துட்டாரு . அங்க இருந்த கம்பில அஜய்க்கு அடி பட்டுடுச்சு. அவ்வளவு தான் அந்த இருந்த எல்லாருமே ரொம்ப அதிர்ச்சி ஆகிட்டாங்க . உடனே ஆம்புலன்ஸ் வர வைச்சி அஜய்ய ஹாஸ்பிடல்ல சேத்தாங்க .

RD Hospital and Research Institute, Chennai

"சார் , அஜய் சார்க்கு என்ன ஆச்சு", "அஜய்ஆகாஷ் , இப்போ எப்பிடி இருக்காரு ", " என்ன டிரீட்மென்ட் குடுக்கிறாங்க ", "இந்த ஆக்சிஸிடெண்ட்க்கு என்ன காரணம் " இப்டிலாம் கேள்வி மேல கேள்வியா கேட்டு அந்த மருத்துவமனை முன்னாடி நம்ப ஊடகங்கள் எல்லாம் வந்தாச்சு . டிரீட்மென்ட் நல்ல படிய போகுது இனி சார் கண்ணு முழிக்க நேரம் 3 மணி ஆகும் அதுக்கு அப்பறம் உங்களக்கு நான் சொல்றன் அதுவரை வெயிட் பண்ணுங்க" அப்டினு அஜய் P.A அவங்க எல்லாரட்டியும் சொல்லிட்டு இருந்தாரு .

"டேய் 3 மணி நேரம் இங்க என்னடா பண்ணறது?" அங்கு வந்த ரிப்போர்ட்களில் ஒருவன் தன் நண்பனிடம் கேக்க , "வாடா கான்டீன்க்கு போயி லஞ்ச் சாப்பிட்டு , அப்டியே இந்த ஹாஸ்பிடல்ல சுத்தி பாத்துட்டு வருவோம் , இந்த ஹாஸ்பிடல்க்கு வரதுக்கு எல்லாம் இத விட்டா வேற சான்ஸ் நமக்கு கிடைக்காது " என அந்த நண்பன் கூறினான். "ஆமாடா அதுவேனா உண்மை தான் "என நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டே கான்டீனை நோக்கி சென்றனர் .

ஆமாங்க இவங்க பேசிக்கிட்ட மாதிரி இந்த ஹாஸ்பிடல்க்கு மிடில்கிளாஸ் பேமிலி கூட வர முடியாது .அந்த அளவு பெரிய ஹாஸ்பிடல் .இந்த இருக்க எல்லா டிபார்ட்மெண்ட்ஸ் டாக்டர்ஸும் அவங்க அவங்க பீல்ட்ல ரொம்ப ஸ்பெசிலிஸ்டா இருக்கவங்க தான். ஆனா இவங்க ஒரு சாரிட்டியும் வைச்சு நடத்துறாங்க .அங்க இவங்க ஏழை எளிய மக்களுக்கு இலவசமாவும் , நடுத்தர மக்களுக்கு குறைந்த கட்டணத்துலையும் சிகிச்சை பண்ணறாங்க . இந்த ஹாஸ்பிட்டல் சேர்மன் டாக்டர் முரளிதரன். இந்த ஹாஸ்பிடல்லோட பிரான்ச் தமிழ்நாட்டுல இருக்க முக்காவாசி மாவட்டத்துல இருக்கு .சரி வாங்க கான்டீன் போனவங்க என்ன ஆனாங்கனு பாக்கலாம் .

"டேய் "

"என்ன டா "

"டேய் , என் போன் காணோம் டா "

என்ன டா சொல்ற , இவ்ளோ நேரம் நீ கைல தான வைச்சுட்டு இருந்த .அதுக்குள்ள எங்க டா போச்சு"

"எனக்கும் தெரியல டா , சரி உன் போன் குடு கால் பண்ணி பாக்கிறேன் "

"இந்த மொபைல் " எனவும் வாங்கி வாங்கி கால் பண்ணான் .

"டேய் , ரிங் போகுது டா " அந்த பக்கம் போன் எடுக்கவும் "ஹலோ சார் , இது என் போன் தான் ,நான் மிஸ் பண்ணிட்டேன் ,நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க நா வந்து வாங்கிக்கிரேன் "

"ஹான் ,ஹலோ சார், இந்த போன் இங்க கான்டீன்ல நான் சாப்டுட்டு இருந்த டேபிள்ல இருந்தது , நா இந்த தான் இருக்கேன். நீங்கி வந்து வாங்கிக்கோங்கோ "

"ஓஹ் , அப்படியா சரிங்க அங்க இருங்க நான் வந்து வாங்கிக்கிரேன் "அப்டினு போன் கட் பண்ணிட்டான் .

"போன் சாப்புட்டு டேபிளியே மறந்து வைச்சிட்டேன் போல , நீ முன்னாடி போ , நா வாங்கிட்டு வரேன் "

"சரி டா , சீக்கிரம் வா " அப்டினு சொல்லிட அவன் பிரண்ட் போய்ட்டான் .

"ஹலோ ,நீங்க தான் போன்ல பேசியதா ?"

"ஆமா, நான் தான் , இந்தாங்க உங்க மொபைல் "

"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா , இதுல ரொம்ப முக்கியமான டீடெயில்ஸ்லாம் இருக்கு ,மிஸ் ஆகி இருந்தா ரொம்ப கஷ்டம் "

"இப்போ நீ என்னனு கூப்ட என்ன ?"

"ஏன்,சார்னு தான் கூப்பிட்டேன் "

"இல்ல , நீ அண்ணனு தான கூப்பிட"

"அப்படியா கூப்பிட்டேன் , சரி விடுங்க உங்களை பாத்தா அந்த பீல் வருது . அதனால அப்டி கூப்டு இருப்பேன் . ஏன் அப்டி நா உங்கள கூப்பிட கூடாத "

"இல்ல, இல்ல , நீ என்ன அப்டியே கூப்டு , எனக்கும் உன்ன பாத்த எதோ தோணுது. இதுக்கு முன்னாடி நாம மீட் பண்ணி இருக்கோமா , எங்கியோ பாத்த மாதிரி இருக்கு ."

"இல்ல. நான் உங்கள எங்கேயும் பாத்தது இல்ல. அண்ணா "

"சரி . விடு .ஆமா உன் பேரு என்ன ?

"ஆத்விக்....உங்க பேர் என்ன "

"ஆதித்யா ....ஆதித்தியதேவ் கபூர் "​
 
அத்தியாயம் 2



"ஆத்விக்....உங்க பேர் என்ன "

"ஆதித்யா ....ஆதித்யதேவ் கபூர் "

"என்னது ...ஆதித்யதேவ்வா ..நீங்க தான் கார்டியோலோஜிஸ்ட் ஸ்பெசிலிஸ்ட் ஆதித்யதேவ் டாக்டர்ரா ..."

"ம்ம்ம்..ஆமா "

"ஹுரைய் ...."அவன் சந்தோஷத்துல அங்க இருக்க யாரையும் கண்டுக்காம குதிச்சு கத்த. அங்க கேன்டீன்ல சாப்பிட்டுட்டு இருந்த எல்லாரும் இவங்கள திரும்பி பாக்க ஆரம்பிச்சிடுங்கா ..அத பாத்த ஆதி , ஆத்விய இழுத்துட்டு கொஞ்சம் தூரம் தள்ளி கூட்டிட்டு வந்தான் .

"ஹேய் ..ஆத்வி என்ன ஆச்சு ..ஏன் இப்டி கத்துற ..பாரு அங்க இருக்கவங்களாம் நம்மள தான் பாக்குறாங்க "

"ஐயோ ..சாரி சாரி அண்ணா ..எக்சைட்மென்ட்ல கத்திட்டேன்..நானும் என் பிரண்டும் உங்கள பாக்கணும்னு ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தோமா .இன்னிக்கு கூட உங்கள பாத்துட்டு தான் இந்த ஹாஸ்பிடல விட்டு போகணும்னு இருந்தோம் .அதான் நீங்களே திடிர்னு வரவும் கொஞ்சம் எக்சைட்மென்ட் ஆகிட்டேன். அதும் இல்லாம நீங்க எனக்கு அண்ணனா வேற ஆகிட்டீங்களா அதான் ..அண்ணனு கூப்பிடுலாம்ல "

"ஹ்ம்ம் ..நீ தாராளமா கூப்டு ..நான் தான் முதலே சொன்னனே எனக்கும் உன்ன பாத்தா ஒரு பீல் அப்டி இருக்குனு ..சரி என்ன எதுக்கு நீங்க பாக்கணும் ?"

"அப்போ ..சரி ..இனி நான் உங்கள ஆத்திண்ணா அப்டினு கூப்பிடுறேன் ..அப்றம் ஒரு 5 மினிட்ஸ் வெயிட் பண்றிங்களா ..என் பிரண்ட கூப்பிடுறேன் ..அவனும் உங்கள பாக்கணும்னு சொல்லிட்டு இருந்தான் ..ப்ளிஸ் ப்ளிஸ் அண்ணா "

"ஹ்ம்ம் ..சரி கூப்டு ..இதுக்கு எதுக்கு ப்ளிஸ்லாம் ...அதான் அண்ணன்னு கூப்டுறல .உங்க அண்ணாகிட்ட இப்படித்தான் பெர்மிஸ்ஸின் கேட்டுட்டு இருப்பியா.."

"ஹீஹீஹீ ..சரி இனி கேக்கேல ..இருங்க அவனுக்கு கால் பண்ணறேன் " என சொல்லிட்டு அவன் பிரண்ட்க்கு கால் பண்றான்.

போனில் ....

"டேய் ..எங்க டா இருக்க ..ஒரு போன் வாங்க இவளோ நேரமா ..சீக்கிரம் வா டா ..இங்க வேற ஆதி சார கேட்ட ஒழுங்கவே பதில் சொல்ல மாட்டிக்கிறாங்க .இதுல வேற ஒருத்தன் என்ன ரொம்ப கடுப்பேத்திட்டான் .."

"டேய்..ஹரிஷ் ..சீக்கிரம் இங்க கேன்டீன்க்கு பின்னாடி வா டா ..உனக்கு ஒரு சர்பரைஸ் இருக்கு...நான் போன் வைக்கிறேன் .நீ இங்க வா ..அப்றம் பேசிக்கலாம் எதுவா இருந்தாலும் "

"டேய் ..டேய் ..என்னனு சொல்லுடா ......லூசுபய என்னனு சொல்லாம கட் பண்ணிட்டான் .." அவனை திட்டிட்டே அவன் சொன்ன இடத்துக்கு போறான் ..

ஆத்வி கிட்ட பேசிட்டு இருந்த ஆதி ,ஒரு போன் கால் வந்ததுன்னு கொஞ்சம் தள்ளி நின்னு பேசிட்டு இருந்தான்.பேசி முடிச்சிட்டு அவன் திரும்பி நடக்கவும் ஹரிஷ் வரவும் சரியா இருந்தது .அப்போ போன் பாத்துட்டே வந்த ஹரிஷ் அங்க வந்த ஆதி மேல மோதிடுறான்.அதுனால அவன் மொபைல் கீழ விழுந்து உடைஞ்சுடுது . ஏற்கனவே கடுப்பா இருந்த ஹரிஷ் மொபைல் உடையவும் ,கோவமாகி ஆதியை திட்டுறான் .

"ஐயோ ..சாரி சார் ..தெரியாம நடந்துடுச்சு ..நீங்க வரது தெரியாம திரும்பிட்டேன் .சாரி "ஆதி

"ஹலோ ..என்ன சாரி ..உங்களுக்கு கண்ணு எங்க இருக்கு .ஒழுங்கா பாத்து வர மாட்டிங்களா ..உங்களால இப்போ என் போன் உடைஞ்சு போய்டுச்சு ..நீங்க சாரி சொன்ன சரியா போய்டுமா .." ஹரிஷ்

"ஐயோ ..சாரிங்க..தெரியாம நடந்துடுச்சு ..நான் வேணா புது மொபைல் வாங்கி தந்துடுறேன்..பிரச்சனை எதும் வேண்டாம் " ஆதி

ஆல்ரெடி ஹரிஷ்வரத பாத்துட்டு இருந்த ஆத்வி , இவங்க பக்கத்துல வரதுக்குள்ள .அவங்க மோதி ,போன் உடைஞ்சு ,இவன் ஆதியை திட்டவும் சரியாய் இருந்தது .இவன் ஆதியை திட்டுறத கேட்டுடே வந்தான் .ஆத்வி வரத பாத்த ஹரிஷ் அவன்கிட்ட "டேய் ...மச்சான் ..இங்க பாருடா ..இந்த ஆளு என் மொபைல உடைச்சுட்டான் "

ஆத்வி அவனை முறைச்சிட்டே " ஹரிஷ் ..பர்ஸ்ட் நீ அண்ணா கிட்ட சாரி கேளு "

"வாட் ??? என்ன டா பேசுற நீ ...நான் எதுக்கு இந்த ஆளுகிட்ட சாரி கேக்கணும்..அதுலாம் கேக்க முடியாது ..அதும் இல்லாம இவன் உனக்கு எப்போ அண்ணா ஆனான் ."

"ஆளு ..கீழுனு பேசுனா அவளோ தான் மரியாதையா பேசு ..அப்றம் நீ தான் சாரி கேக்கணும் .ஏன்னா நீதான் போன்ன பாத்துட்டா நடந்து வந்து அண்ணா மேல இடிச்ச..நா பாத்துட்டு தான் இருந்தேன் ..நீ இடிச்சது மட்டும் இல்லாம மரியாதை இல்லாம வேற பேசுற ..அவரு யாருனு தெரியுமா ..நீ முதல சாரி கேளு "

"இவன் யாரா இருந்தா எனக்கு என்ன ..என்னால சாரிலாம் கேக்க முடியாது .முதல நீ அவனை அண்ணானு சொல்றத நிருத்து ..எனக்கு தெரியாம எங்க இருந்த வந்தான் உன் நொண்ணன் " ஹரிஷ் நக்கலா கேட்கவும் ...ஆத்வி கோவ பாட்டு "ஹரிஷ் ...."அப்டினு கத்துறான் .

இவங்க இருந்த பக்கம் யாரும் அவளோ இல்லாதால இவங்க சண்டை போடுறது யாருக்கும் தெரியல . இவளோ நேரம் இவங்கள பாத்திட்டு இருந்த ஆதி " ஹே ..கைஸ் ..கூல் ...என்னால நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்க வேண்டாம் ..கூல் ...நீ சாரிலாம் கேக்க வேண்டாம் .அப்றம் நானே உனக்கு ஒரு புது மொபைல் வாங்கி தரேன் .சரியா ?"

"ஹலோ ..நீங்க நிருத்தங்க ..உங்களால தான் எல்லாமே ..யாருங்க நீங்க ..இதுவரைக்கும் என்ன ஆனாலும் ,நான் என்ன பண்ணாலும் எனக்கு சப்போர்ட் பண்ணவன் ..இப்போ கொஞ்ச நேரத்துல என்ன பண்ணிங்களோ ..உங்களுக்காக என்கிட்டையே சண்டை போடுறான் ..இதுல நீங்க சமாதானம் பண்ணறேன்னு நடுவுலலாம் வர வேண்டாம் ..அமைதியா போய்டுங்க..இதுக்கு மேல இங்க இருந்திங்க நடக்கறதே வேற "ஹரிஷ்

"டேய் ...உன்ன வாய மூடுனு சொன்னேன் ..இன்னொரு வார்த்தை பேசுனா கொன்னுடுவேன் ..." என்று ஹரிஷ பாத்து சொல்லிட்டு ஆதி பக்கம் திரும்பி "அண்ணா .இவன் பேசுனதுலாம் மனசுல வைச்சுக்காதீங்க ...இப்போ பேசுனா சரியா இருக்காது ..இவன் ஏதோ மூட்அவுட்ல இருக்கானு நினைக்கிறேன் .நம்ப இன்னொரு நாள் மீட் பண்ணி பேசலாம் .இப்போ நாங்க கிளம்புறோம் அண்ணா "

"சரி ஆத்வி ...ஓகே .நான் என் பிரண்ட் கூட வெளிய டின்னர் போரேன் ..உங்களையும் கூப்பிடலாம்னு பாத்தேன் ..பட் நீ இன்னிக்கு வர மாதிரி இல்ல ...சரி நீ இன்னொரு நாள் பிரீயா இருக்கும் போது சொல்லு அப்போ மீட் பண்ணுவோம் ..நீங்க கிளம்புங்க இப்போ " ஆதி

"அண்ணா ..இன்னிக்கு நைட்னா ஓகே தான் அண்ணா ..நாங்க வரோம் பிரீ தான் ..ஒன்னும் ப்ரோப்லம் இல்ல .." ஆத்வி

"டேய் ..யார கேட்டு நானும் வருவேன்னு சொல்ற ..இந்த ஆள் இருக்க'இடத்துக்கலாம் என்னால வர முடியாது ..ஹலோ இங்க பாருங்க நானும் வரமாட்டேன் , இவனும் வர மாட்டேன் ..நீங்க உங்க பிரண்ட் கூட மட்டும் போய்ட்டு வாங்க " ஹரிஷ்

" டேய்...நீ அடங்கவே மாட்டியா ...நீ வராட்டி போ ..நான் போவான் ...அதும் இல்லமா அங்க அந்த டின்னர்க்கு வரது ஆதித்யதேவ் டாக்டர் ..சோ நான் கண்டிப்பா போவேன் ...நீ வந்தா வா ..இல்லின்னா போ ..நான் மட்டும் போயிடு வந்துகிறேன்...ஆன என்ன அதுக்கு அப்றம் உனக்கு அவர மீட் பண்ண சான்ஸ் கிடைக்கறது கஷ்டம் ..யோசிச்சுக்கோ.நம்ப இதுக்காக எவ்ளோ கஷ்ட பட்டோம்னு நினைச்சு பாரு " ஆத்வி

ஆதி நடுவில் பேச வந்தத பாத்துட்டு அவன் என்ன பேச போறான்னு தெரிஞ்சு ..கண்ணாலையே அமைதியா இருக்க சொல்லிட்டான்..ஏன்னா இவன் நான் தான் ஆதினு சொல்லிட்டா அவன் வர மாட்டான்னு தெரிஞ்சு தான் ஆத்வி இப்டி சொன்னான் ..அவன் சொன்னத கேட்ட ஹரிஷ்

"பரவால ...நான் அவர அப்புறமா பாத்துக்கிறேன் ..இந்த ஆளு கூட போயி தான் அவர மீட் பண்ணனும்னு இல்ல ..நீ மட்டும் போய்க்கோ ..எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல ..நம்ப இப்போ போலாம் வா " ஹரிஷ்

"ஒஹ்ஹ் ...அப்படியா ..சரி உனக்கு ஒண்ணும் இல்லைனா எனக்கும் ஒண்ணும் இல்ல ..சரி அண்ணா ..இதான் என் நம்பர் **********...நீங்க அட்ரஸ் அண்ட் டைம் எனக்கு மெசேஜ் பண்ணிடுங்க ..நான் வந்துடுறேன் ...இப்போ கிளம்புறேன் அண்ணா ..பை ..நைட் மீட் பண்ணலாம் .." ஆத்வி

" இல்ல ஆத்வி ..ஹரிஷ் ..அப்டினு தயக்கமா ஆதி பாக்க ..அத புரிஞ்சுட்ட ஆத்வி அவனை கண்ணலையே அவனும் வருவான்னு சொல்ற மாதிரி கண்ணா மூடி திறந்தான் .ஆனா ஆதிட "அண்ணா ...அவன் வரலைனா போறான் .விடுங்க .நான் மட்டும் வரேன் ..நீங்க வேற ஆதி சார் ..இன்னும் கொஞ்ச நாள்ல பாரின் போறாங்கன்னு சொல்றிங்க ..சோ நான் கண்டிப்பா பாத்தே ஆகணும் ..நான் வரேன் நீங்க இவனலாம் கண்டுக்காதீங்க " அப்டினு ஆதியை பாத்து கண்ணடிச்சுட்டே சொல்றான் .

அத புரிஞ்சுட்ட ஆதி "ஓகே ..ஆத்வி ..நைட் மீட் பண்ணலாம் ...பை...பை ஹரிஷ் ..நீயும் நைட் கண்டிப்பா வா ..நான் உனக்காக வெயிட் பண்ணுவான் .."ஆதி

"அதுலாம் ...நான் வர மாட்டேன் ..நீங்க எனக்காகலாம் பாக்காதீங்க ....டேய் ..வாடா போலாம் " அப்டினு முறிக்கிகிட்டே போறான்

சரி .அவங்க போகட்டும் அதுக்கு முன்னாடி இன்னும் நம்ப ஹீரோவ அறிமுகபடுத்தலை இல்லியா ..சோ வாங்க நம்ப ஹீரோஸ்ஸ பாத்துடலாம் ஆமாங்க நம்ப கதைக்கு ரெண்டு ஹீரோ ...ஒன்னு நம்ப டாக்டர் ஆதித்யதேவ் கபூர் ..ஆதி 26 வயசு.தினமும் உடற்பயிற்சி செய்யறதின் விளைவா நல்ல கட்டுக்கோப்பான உடல்.எனக்கும் ,புகை ,மதுவுக்கும் சம்பந்தம் இல்லனு சொல்ற மாதிரி சிவந்த அதரங்கள் .ஆனா அந்த உதட்டுல சிரிப்புனு ஒண்ணு இருக்காது .கூர்மையான நாசி .எப்போவும் எதிர்ல இருக்கவங்கள எடை போடுற கண்ணு.இறுக்கமான முகம் .ஆனா தன்னோட பேஷன்ட கவனிக்கும் போது மட்டும் அவனோட முகம் அப்டியே கனிவா இருக்கும்.எவ்வளவு சந்தேகம் கேட்டாலும் கொஞ்சமும் சலிப்பு தட்டமா அவங்களுக்கு விளக்கம் குடுப்பான் .ஆனா இந்த கனிவுலாம் மத்தவங்க கிட்ட இருக்காது.இவன் கிட்ட நல்லா பேசணும்னா பேஷண்டா போன மட்டும் தான் உண்டு .அப்போவும் தேவைக்கு மீறி ஒரு வார்த்தை இருக்காது .எப்போவும் எல்லாரையும் தன்னைவிட்டு தூரத்துலையே நிறுத்தி வைப்பான் .அதும் குறிப்பா பொண்ணுங்கள .இவனுக்கு இவன் தொழிலும் ,குடும்பமும் மட்டும் தான் உலகம் .இவனோட ஒரே லட்சியம் முடிஞ்ச அளவுக்கு எல்லாருக்கும் தரமான மருத்துவத்தை குறைஞ்ச பணத்துல தரது தான் .இலவசமா தந்தா எதுக்கும் மதிப்பு இருக்காதுன்னு நினைக்கிறவன்.மருத்துவத்தை தன்னோட கடமையாவோ இல்ல தொழிலாவோ பாக்காம தன்னோட உயிர்க்கு'சமமா மதிப்பான் .அதுனால தான் என்னமோ இந்த 26 வயசுலையே கார்டிலோஜிஸ்ட் டிபார்ட்மென்ட் சீப் ஹெட் பதவி இவனுக்கு கிடைச்சு இருக்கு.இந்தியாவோட டாப் கார்டிலோஜிஸ்ட்ல இவனும் ஒருத்தன் .இதுவரை இவன் எடுத்த கேஸ் ஒண்ணு கூட தோத்தது இல்ல .எவ்ளோ கஸ்டமான சர்ஜ்ரியா இருந்தாலும் இவனுக்கு அதுலாம் ஒரு தூசி மாதிரி தான்.இவனை விட அனுபவம் இருக்க டாக்டர்ஸ் முடிக்க முடியாதது கூட இவன் ஈஸியா முடிப்பான்.ஆனா அந்த கர்வம் துளி கூட இருக்காது .இவனோட சொந்த ஊர் மும்பை ..ஆன இவன் ஸ்கூல் படிக்கும் போதே சென்னைல செட்டில் ஆகிட்டாங்க. அப்பா ரன்தீர் ராய் கபூர் .பிசினெஸ்மேன்.இந்தியாவோட டாப் கன்ஸ்ட்ரக்ஸன் கம்பெனியானா AD Constuction கம்பெனி இவங்களோடது தான்.தன் மகன் பேரானஆதித்யதேவ் தான் AD Constuction வைச்சு இருக்காரு. ஆதிக்கு அவங்க அப்பா தான் பெஸ்ட் பிரண்ட் .அம்மா மிருதுளா ராணி ..பேருக்கு தகுந்த மாதிரி ராணி மாதிரி கம்பீரமா இருப்பாங்க.அதே முகத்துல கனிவும் ஒரு சாந்தியும் இருக்கும் .முதல தன்னோட குடும்பம் தான் முக்கியம்னு நினைக்கிறவங்க. தன்னோட குடும்பத்தை தான் தான் கவனிக்கணும்னு இருப்பாங்க .அதுனாலவே வீட்டோட இருந்துட்டே இவங்க கம்பெனி பொறுப்பையம் பாத்துக்கிறங்கா .இவங்களுக்கு ஆதினா உயிர்.ஆதியோட தங்கை ஷான்வி. வீட்ல எல்லாருக்கும் ஷானு. இவளுக்கு இவன் அண்ணா தான் எல்லாம் .அப்பா அம்மா இல்லாம கூட இருப்பா ஆனா அண்ணா இல்லாம ஒரு நாளும் இருக்க மாட்ட.எப்போவும் குறும்புத்தனனும் ,துறுதுறுனு இருக்க பொண்ணு . வெளிய எப்போவும் இறுக்கமா இருக்க ஆதி வீட்ல மட்டும் அப்டியே நேர்மாறா இருப்பான். இவனும் இவன் தங்கச்சியும் இருந்தாங்கனா அந்த இடத்துல கலகப்புக்கு பஞ்சமே இருக்காது .(இப்போ நீங்க என்ன நினைக்கிறிங்கனு பிரியுது ..ஆதி எப்படி பட்டவனு தான ..அதான் எனக்கும் தெரியல அவனை இன்னதுனு சொல்லி ஒரு வரையறைல நிறுத்த முடியாது .அவன் ஒரு புரியாத புதிர் )

அடுத்து நம்ப அடுத்த நாயகன் ஆத்விக் .இவனோட அப்பா ,அம்மா ,தங்கச்சி ,அக்கா ,தம்பி ,நண்பன் ,சொந்தம் பந்தம் எல்லாமே அவனோட பிரண்ட் ஹரிஷ் தான் .ஹரிஸ்கும் கும் அப்டித்தான் .(இதுல அண்ணா வரலன்னு நீங்க சொல்றது புரியுது .அவன் இதுவரை யாரையும் அண்ணானு சும்மா பேருக்கு கூட கூப்பிட்டது கிடையாது .காலேஜ் சீனியர்ஸ் கூட சீனியர்னு மட்டும் தான் கூப்டுவான்.அது ஏன்னு நான் அப்புறம் சொல்றேன் )இவங்க ரெண்டு பேரும் வளந்தது எல்லாம் ஆசிரமத்துல தான். ஹரிஷ்க்கு அவனோட அம்மா அப்பா யாருனே தெரியாது .அவன் பொறந்த கொஞ்ச நேரத்துலையே அவனை ஆசிரம வாசல்ல போட்டுட்டு போய்ட்டாங்க .ஆனா ஆத்விக் அப்படி இல்ல ..அவன் தன்னோட 6 வயசு வரைக்கும் குடும்பத்தோட இருந்தவன்.அவனோட குடும்பத்துல இருக்க எல்லாரும் இறந்ததுக்கு அப்றம் அவனோட சொந்தங்கள் யாரும் இவனை கண்டுக்கல.நடுரோடுல அனாதையா யாரும் இல்லாம இருந்தவனை ஒரு டாக்டர் தான் பாத்துட்டு அவனை இந்த ஆசிரத்துல சேத்தாங்க. அங்க சேந்த புதுசுல யாரோடும் பேசாம .எப்போவும் ஒரு இறுக்கத்தோடியும் , பயத்தோடும் யார்கூடவும் ஓட்டமா தனியா ,விடிய விடிய தூங்காம எங்கியோ எப்போவும் வெறிச்சு பாத்துட்டு இருந்தவன, தன்னோட கூட்ல இருந்து வெளிய கொண்டு வந்தது ஹரிஷ் தான் . ஏற்கனேவே இவன் கலகலப்பானவன் தான் ..ஆனா ஆத்விக்காக இன்னும்மாறி அவனையும் மாத்துனான் .இவன் என்ன தான் பேசாம அவனை விட்டு ஒதுங்கியே போனாலும் அவன் பின்னாடியே சுத்தி கொஞ்சம் கொஞ்சமா சகஜநிலைக்கு நிலைக்கு கொண்டு வந்தான் .அப்போல இருந்து அவனுக்கு இவனும் இவனுக்கு அவனும் வளந்தாங்க. ஹரிஷ தத்து எடுக்க ஒரு பணக்கார குடும்பம் வந்த போதும் அவங்களோட போகாம ஆதி தான் முக்கியம்னு வந்துட்டான். அதுக்கு முன்னாடி எதோ எனோ தானோனு பேசிட்டு இருந்த ஆத்விக் இந்த சம்பத்துக்கு அப்றம் தான் அவனோடஉரிமையா பழக ஆரம்பிச்சான். ஸ்கூல்லையும் சரி ,காலேஜ்லையும் சரி இவங்களுக்கு எத்தனை பிரண்ட்ஸ் இருந்தாலும் இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல யாரும் வர விட மாட்டாங்க. ஸ்கூல் படிக்கும் போதிலேஇருந்தே ஆத்வி ஜர்னலிஸ்ட் ஆகணும்னு ஆசை. அவனுக்காக ஹரிஷும் ஜர்னலிசம் படிச்சான் .படிச்சு முடிச்சுட்டு இப்போ ஒரு வருசமா ஒரு சேனல ரெண்டு பேரும் ஒர்க் பண்ணறாங்க .இவங்களோட லட்சியம் மக்கள்நீதி டிவில வேலை பாக்கணும்னு தான்.இது தமிழ்நாட்டுலியே இருக்க டாப் டிவில ஒண்ணு ..இதுவும் ஆத்விக் ஆசை தான்.

இது தாங்க நம்ப ஹீரோஸ் ...

இது என்னோட முதல் கதை.என்னோட முதல் முயற்சி .சோ ,குறைகள் ஏதோனு இருந்தா அத சுட்டி காட்டுங்க. உங்களோட கருத்துக்கள் தான் என்ன இன்னும் எழுத ஊக்குவிக்கும் .அதுனால எதுவா இருந்தாலும் சொல்லுங்க ..both positive and negative comments.​
 
அத்தியாயம் 3

போனில்

"ஹலோ சார் ..சொல்லுங்க .."

" இன்னிக்கு 24c - 8m - அர்ஜென்ட் "

"ஓகே சார்...... "

"டேய் ...நீங்க ரெண்டு பேரு என்கூட வாங்க டா ..ஒரு பார்சல் டெலிவரி பண்ணனும் "

"ஓகே தல ..போலாம் ...தல ஒண்ணு கேட்டா கோவிச்சுக்க மாட்டியே ""

"சொல்லு டா ..என்ன கேக்கணும் "

"எப்போவாவது உனக்கு ஒரு போன் வருது ...2 வார்த்தை மட்டும் தான் பேசுற ..அப்றம் பார்சல் டெலிவரி பண்ண போகணும்னு சொல்ற ..அது முடிச்சா பெரிய அமௌன்டா தர ..அப்டி என்ன தல அந்த பார்சல்ல இருக்குது "

"டேய் ..எனக்கும் அதுல என்ன இருக்குனு தெரியாது டா ..ஆனா அப்போப்போ எதோ ஒரு நாட்டுக்கு பார்சல் அனுப்ப சொல்லி மட்டும் கால் வரும் டா ..அதான் எனக்கும் தெரியும் "

"தல ..நீ சொல்றது நம்புற மாதிரியா இருக்கு ..சும்மா சொல்லு தல யார்கிட்டயும் சொல்ல மாட்டோம் "

"உண்மையா தான் டா சொல்றேன் ...இதுல என்ன இருக்குனு எனக்கு தெரியாது ...ஏன் எனக்கு கால் பண்ணி சொல்லறாரே சார் அவருக்கே தெரியாது ..இது நிறைய இடம் தாண்டி கடைசியா தான் நம்மகிட்ட வருது .இதுல யாரு மெயின்னு வெளிய தெரிய கூடாதுல அதான் "

"அப்டியா சொல்ற .அவ்ளோ முக்கியமான பொருளா அது ...சரி தல நம்ப அந்த பார்சல பிரிச்சு பாத்த என்ன இருக்குனு தெரிஞ்சிட போகுது "

"டேய் ..அது அவ்ளோ ஈசி இல்ல டா ..நமக்கு தான் இத யார் செய்ய சொல்றங்கனு தெரியாது ..ஆனா அவங்களுக்கு நம்ம எல்லாரையும் தெரியும் ..நம்ப பார்சல் அனுப்புற வரைக்கும் நம்மள வாட்ச் பண்ணிட்டு தான் டா இருப்பாங்க "

"தல நீயே சொல்ற இது ரொம்ப இடம் தாண்டி வருதுன்னு ..அவங்க எல்லா இடத்துலையுமா பாத்துட்டு இருப்பாங்க ..அவங்களுக்குவேற வேலை இருக்காதா ..நீ என்ன வேணா சொல்லு ..நம்ப இன்னிக்கு அந்த பார்சல ஓபன் பண்ணி என்ன இருக்குனு பாக்கணும் "

"டேய் ...ஏன் டா ..என்ன நம்ப மாட்டிங்குறல ..இப்போ பாரு ...இன்னும் 5 நிமிசத்துல எனக்கு போன் வரும் ...டேய் நீ இப்போ உன் போன் எடுத்து எதோ கால் வந்த மாதிரி பேசிட்டு உன் வீட்டுக்கு போய்ட்டு ..யார் கேட்டாலும் உன் பொண்டாட்டிக்கு உடம்பு சரி இல்லனு போய்ட்டானு சொல்லணும் ஓகே வா . நீ நாளைக்கு வந்தா போதும் .." அப்டினு கூட வந்த இன்னொரு ஆள் கிட்ட சொல்றான் ..அவனும் அவன் சொன்ன மாதிரியே போறான் ..அவன் போன அடுத்த 5 நிமிசத்துல இவன் சொன்ன மாதிரி இவனுக்கு கால் வருது ..அவன் அந்த கேள்வி கேட்டவன பாத்துட்டே போன் எடுத்து பேசுறான் ..

"ஹலோ சார் ..சொல்லுங்க .."

"உன் கூட இருந்தவன் எதுக்கு போறான் ..என்ன பிரச்சனை "

"பிரச்சனைலாம் ஒண்ணும் இல்ல சார் ...அவன் பொண்டாட்டிக்கு உடம்பு சரி இல்ல ..அதான் போக சொல்லிட்டேன் ..வேற ஒண்ணும் இல்ல "

"சரி ..ஜாக்கிரதை ..பார்சல் பத்திரம் ..அனுப்பிட்டு எப்போவும் போல ரிப்போர்ட் பண்ணிடு "

"ஓகே சார் " போன வைச்சுட்டான்

"பாத்தியா ..இப்போ இவன் இறங்கி 5 நிமிஷம் தான் ஆச்சு ..அதுக்குள்ள அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சு..அதான் சொல்றன் இதுலாம் பெரிய இடம் ..நம்ப நம்மளுக்கு குடுத்த வேலைய பாத்தோமோ காச வாங்குனோமான்னு இருக்கனும் ..தேவை இல்லாம தலை இட கூடாது புரிஞ்சுதா ...இல்லின்னா அடுத்த நிமிஷம் நீ உயிரோட இருக்க மாட்ட "

"என்ன தல இது ..புரிஞ்சுது புரிஞ்சுது ...இனி எதும் கேக்க மாட்டேன் "

********

அதே நேரம் நைட் 7 மணிக்கு சென்னைல இருக்க ஒரு பெரிய ஹோட்டல்ல ...ஆதி அவன் பிரண்ட்டோட வெயிட் பண்ணிட்டு இருக்கான் ..ஆன இன்னும் அவனுங்க வந்து சேந்த பாட காணோம் ..அப்டி என்ன தான் பண்றாங்கன்னு பாப்போம் ..

"மச்சான் ..வா டா கெளம்புலாம் ..டைம் ஆயிடுச்சு .." சொன்னது ஆத்வி இல்ல நம்ப ஹரிஷ் தான் .

"டேய்..நீ எதுக்கு வர ..அதான் பெரிய இவனாட்டம் வர மாட்டேன்னு சொன்ன இல்ல ...இப்போ என்ன பொண்ணு பாக்க போற மாதிரி கெளம்பி ரெடி ஆகி போலாம்னு சொல்ற .."

"அது மச்சான் ..உனக்கு துணையா தான் ..இதுவரைக்கும் நீ தனியா எங்கியும் போனது இல்ல பாரு..அதான் நானும் கூடவரேன் ...இல்லின்னா நான் ஏன் வர போறேன் ..."

"ஒஹ்ஹ் ..அப்டியா ...அப்டி கஷ்ட பட்டு தான் நீ ஒண்ணும் வரணும்னு இல்ல ..நான் போய்க்கிறேன் ..நீ இங்கியே இரு "என்று சொல்லிட்டு நகர போனான்

"அப்படி எல்லாம் சொல்ல படாது மச்சான் ..நான் உன் பாதுகாப்புக்கு வரேன் மச்சான் ..ஏன்னா இப்போலாம் நைட் பசங்களுக்கும் சேப் இல்லையாம் மச்சான் ...நீ இப்டி தனியா போயி உன் கற்புக்கு ஏதோனு ஆச்சுன்னு வை ..அன்னிக்கு நீ என்ன பாத்து நீ என்கூட வந்து இருந்தா இப்படி ஆகி இருக்காதே .உன்னால தான் இப்டி ஆச்சுன்னு நீ என்ன பாத்து கேக்க கூடாதுல ..அதுக்கு தான் இப்போ நான் உன்கூட வரேன் " இப்டி சொன்ன ஹரிஷ ஒரு கேவலமான பார்வை பாத்துட்டு " இதுக்கு நீ மூடிட்டு ஆதி சார தான் பாக்க வரேன்னு சொன்ன உங்க கவுரவம் குறைஞ்சுடுமோ ...."

"அது ஒன் ஆப் தி ரீசன் மச்சான் ..பட் முக்கியமான ரீசன் நான் சொன்னது தான் மச்சான் ...பிலீவ் மீ ..." மூஞ்சிய பாவமா வைச்சுட்டே சொன்னவனை பாத்து காறி துப்பிட்டு " சரி வந்து தொலை ..ஆன இன்னிக்கு காலைல பேசுனா மாதிரி அங்க அண்ணாகிட்ட எதும் பேசக்கூடாது ...அப்டினா சொல்லு கூட்டிட்டு போறேன் ..அப்டி இல்லின்னா நீ இங்கியே இரு " ஆத்வி

"நான் இன்னிக்கு உங்க நொண்ணன் கிட்ட மட்டும் மௌன விரதம் மச்சான் ...போதுமா ...போ போயி கார் எடு ...என்னவோ ஊர்ல ,உலகத்துல இல்லாத அண்ணன் தம்பி மாதிரி தான் சீன் போடுறீங்க " ஹரிஷ்

ஆனா ஹரிஷ் சொன்னது உண்மை தாங்க ..அவன் அங்க போறது ஆதிய அதாவது டாக்டர் ஆதித்ய தேவ பாக்கிறது ஒரு காரணமா இருந்தாலும் , முக்கிய காரணமே ஹரிஷ பாதுகாக்க தான் ..ஆனா எதுல இருந்துனு அப்றம் சொல்றேன்

ரெண்டு பேரும் ஆதி சொன்ன ஹோட்டல்க்கு போயி ஆதிய தேடி கன்டுபிடிச்சு போறாங்க அவங்க கிட்ட ...ஆதி அவன் கூட வந்த பிரண்ட் கிட்ட பேசிட்டு இருந்தான் ..

"ஹாய் ..அண்ணா .. வந்து ரொம்ப நேரம் ஆச்சா ..சாரி அண்ணா கொஞ்சம் டிராபிக் அதான் "ஆத்வி

"ஹே ...வா வா ஆத்வி ..வா ஹரிஷ் ...அதுலாம் இல்ல ஆத்வி ...இப்போ தான் நாங்களும் வந்தோம் ..வா வந்து உக்காருங்க ..."ஆதி

( ஆதி பிரண்ட் அவனை ஆச்சர்யமா பாக்குறான் ...ஏன்னா ஆதி இதுவரை யாரையும் அண்ணானு கூப்பிட விட்டது இல்ல....அவ தங்கச்சிய கூட பேர் சொல்லி தான் கூப்பிட சொல்லுவான் ..ஏன் கேட்ட எனக்கு பிடிக்கல அப்டினு மட்டும் சொல்லுவான் ..ஆனா ஆத்வி அப்டி கூப்பிட விட்டது ஆச்சர்யம்னா ...அத விட ஆச்சர்யம் அவனுக்கு டைமிங் ரொம்ப முக்கியம் ...சொன்ன சொன்ன டைம்க்கு நடக்கணும் ...இல்லின்னா அவ்ளோ கோவம் வரும் ..ஆனா இவன் ஒரு மணி நேரம் கழிச்சு வந்ததுக்கு ஒண்ணும் இல்லனு சொன்னது கேட்டதும் இவனுக்கு மயக்கம் வராதா குறை தான்..ஆனா எதும் சொல்லாம அவங்கள பாக்குறான் )

"சரி ..ஆர்டர் பண்ணலாமா ..ரொம்ப பசிக்குது டா ..." ஆதி பிரண்ட்

"ஹ்ம்ம் ..ஆர்டர் பண்ணலாம் ..ஆத்வி ,ஹரிஷ் உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க " ஆதி

" அப்றம் டேய் ..இது ஆத்வி என் தம்பி ..மார்னிங் சொன்னன்ல ..அண்ட் இது ஹரிஷ் ஆத்வியோட பிரண்ட்...அப்றம் இவன் என் பிரண்ட்......" ஆதி

"அதுலாம் எங்களுக்கு தெரியும் ... " ஆதியை பேச விடாம இவன் பேச

"டேய் ..அது இல்லடா ..." பேச வந்த ஆத்வியையும் பேச விடாம " டேய் ..நீ சும்மா இரு டா ..நீ போயி உங்க அண்ணன்ட மொக்க போடு ...நான் இவர் கிட்ட பேசிட்டு இருக்கேன் ..."

"அட ..அது இல்லடா .நான் சொல்ல வரத கொஞ்சம் கேளு ..." ஆத்வி

"என்னடா சொல்ல போற ...நான் வீட்ல பேச மாட்டேன்னு சொன்னதா ..அது நான் உங்க நொண்ணன் கிட்ட தான் பேச மாட்டேன்னு சொன்னேன் ...இவர்கிட்ட பேச மாட்டேன்னு சொல்லலியே ...சோ நீ உன் வேலைய பாரு "யாரையும் பேச விடாம இவன் பேசிட்டே போக ...கடுப்பான ஆத்வி ..நீ பேசு டா ராசா பேசு ...பேசிட்டு பல்பு வாங்கு அப்டினு அமைதி ஆகிடுறான் ..பேச போன ஆதியையும் பேச வேண்டாம்னு சொல்லிட்டான் .

"ஹலோ டாக்டர் ...நான் ஹரிஷ் ..நாங்க ரெண்டு பேரும் டீவி சேனல்ல தான் ரிப்போர்ட்டரா ஒர்க் பண்ணறோம் "

"ஒஹ்ஹ்....ஆத்வி நீ ரிப்போர்ட்டரா ..சொல்லவே இல்ல " என நம்ப ஆதி நடுவுல பேச கடுப்பான ஹரிஷ் " அதான் இப்போ நான் சொல்லிட்டேன் இல்ல ... கொஞ்ச நேரம் பேசாம இருங்க" அப்டினு ஆதிய பாத்து சொல்லிட்டு ஆத்வி பக்கம் திரும்பி "டேய் உன் பாச மலர சும்மா இருக்க சொல்லு ...இல்லின்னா நடக்குறதே வேற " அப்டினு அவன்ட சொல்லிட்டு அவனை பதில் கூட பேச விடாம திரும்பவும் ஆதி பிரண்ட் பக்கம் திரும்பி அவன்ட பேச ஆரம்பிச்சுட்டான் ஆரம்பிச்சுட்டான் .

" ஹான் ..எங்க விட்டேன் " ஹரிஷ் .

"ரிப்போர்ட்டர் ..." ஆதி ...சொன்ன ஆதிய முறைச்சுட்டே"ஹான் ..நாங்க ரிப்போர்ட்டரா ஒர்க் பண்ணறோம் ..உங்கள பத்தி நிறைய கேள்வி பட்டு இருக்கோம் ..உங்கள பாக்க நிறைய ட்ரை பண்ணோம் ..ஆனா நீங்க பேசண்ட்ட தவிர வேற யாரையும் பாக்க மாட்டிங்கனு ..அல்லோவ் பண்ணவே இல்ல...அதும் இன்டெர்வியூ எடுக்கனு சொன்னா நீங்க இன்டெர்வியூலாம் தர மாட்டன்னு சொல்லி அனுப்பிட சொல்லிட்டீங்களாம் ..நீங்க ஏன் டாக்டர் இன்டெர்வியூ தர மாட்டிக்கிறீங்க ....."ஹரிஷ்

அவன் எப்போவும் போல யாரையும் பேச விடாம அவனே கேள்வி கேட்டு அவனே பதில் சொல்லிக்கிட்டு இருக்கான் ..அவன் பேச பேச ஆதியோட பிரண்ட் ஒண்ணுமே புரியாம திரு திருனு முழிச்சுகிட்டு "நம்ப எப்போ இப்டிலாம் சொன்னோம் ...நாமளே இன்டெர்வியு குடுக்க போன கூட வேண்டாம்னு தான சொல்லுவாங்க ..இவன் என்ன சொல்லிட்டு இருக்கான் "மனசுல நினைச்சிட்டு ஆதி ,ஆத்விய பாக்குறான் ...அவங்க ரெண்டு பேரும் ஏற்கனவே சிரிச்சுட்டு இருந்தவங்க இவன் முழிக்கறத பாத்ததும் சிரிப்பை அடக்க முடியாம கன்ட்ரோல் பண்ணிக்கிட்டுஇருக்காங்க ..அவங்க சிரிக்கறத பாத்த அவன் "இதுங்க சிரிக்கறதே சரி இல்லியே என்னவா இருக்கும்னு யோசிக்கிறான் அப்போ தான் அவனுக்கு நியாபகம் வருது ஆதி தான் எப்போவும் இன்டெர்வியூ குடுக்க மாட்டான்னு ...அட பாவி ஆதினு நினைச்சு தான் நீ என்கிட்ட பேசிட்டு இருக்கியா சரியா போச்சு போனு நினைச்சுகிறான் ..

​
 
அத்தியாயம் 4

ஹரிஷ் தன்னபாக்குல பேச , ஆதி ,ஆத்வி ரெண்டு பேரும் வாய மூடி சிரிக்க , ஆதி பிரண்ட்( ஷக்தி ) இவன் நம்பள வச்சு காமெடி பண்ணறானா அப்டினு யோசிக்க ....இவங்க ஆர்டர் பண்ண சாப்பாடு வந்து சேருது ...ஒரு வழியா சாப்பாடு வந்துடுச்சு சாப்பிடலாம்னு சந்தோசமா சாப்பாட்டுல கைய வைக்க போனவன தடுத்து அவன் விடாம பேச ஷக்தி தன் மைண்ட்வாய்ஸில் இந்த ஆதி தான் எப்போவும் உங்கள சாப்பிட விட மாட்டான் ...கேட்ட நீலாம் ஒரு டாக்டரானு ஆரம்பிச்சு நானே எங்க வீட்ல என்ன பெத்த ஆத்தா வைக்கிற ரசம் மாதிரி இருக்க பருப்பு சாம்பாரையும் ,சுடுதண்ணி மாதிரி இருக்க ரசத்தையும், கல்லு மாதிரி இருக்க இட்லியையும் தான் நல்ல சாப்பாடுனு சொல்ற வரைக்கும் அட்வைஸ் பண்ணுவான் ..பயபுள்ள இன்னிக்கு எதோ நல்ல மூட்ல உங்கள சாப்பிட விட்டு இருக்கான் அதும் அவன் சொந்த காசுல வாங்கி குடுத்து..அது கூட இவனுக்கு பொறுக்கல போல இருக்கு ..இருங்க அவனை ஒரு பக்கம் தள்ளிட்டு வந்து உங்கள என் வயித்துக்குள்ள தள்ளுறேன் அப்டினு அவன் முன்னாடி இருக்க சிக்கன் தந்தூரி ,பிஷ் பிரை இன்னும் சில பல வகையார பாத்து சொல்லிட்டு ஹரிஷ் பக்கம் திரும்பினான் ..

"சொல்லுங்க டாக்டர்.நீங்க ஏன் யாருக்கும் இன்டெர்வியூ குடுக்க மாட்டிக்கிறீங்க ..உங்க பத்தி இன்பர்மேஷன் கூட வெளிய யாருக்கும் தெரியல.."ஹரிஷ்

"அத ஏன் என்கிட்ட கேக்கற ..இதோ இங்க இருக்கான் பாரு அவன்ட கேளு .."ஷக்தி

"நான் ஏன் அவர்கிட்ட கேக்கணும் ..நான் உங்கள தான கேக்குறேன் ."ஹரிஷ்

அவனுக்கு பதில் சொல்லறதுக்குள்ள அந்த பக்கம் வந்த ஒருத்தர் ஆதிய பாத்துட்டு பேச வந்தார்

"ஹலோ ஆதித்யதேவ் சார் ..எப்படி இருக்கீங்க ..என்ன கெட் டூ கெதரா .."புதியவர்

"ஹலோ சார் ..நான் நல்ல இருக்கறது இருக்கட்டும் ..நீங்க நல்ல இருக்க வேண்டாமா ..உங்களுக்கு லாஸ்ட் வீக் அப்பாய்ன்மெண்ட் தான செக்அப்க்கு அப்றம் நீங்க ஏன் வரல " அவன் கொஞ்சம் கடுமையா எண்ணைல போட்ட கடுகு மாதிரி கேக்க ...அவர் தன் மைண்ட் வாய்ஸ்ல் மறந்துட்டு தெரியாம வந்து மாட்டிடேனே ..இப்போ காய்ச்சி எடுப்பானேனு அப்டினு பயந்துட்டு "அது கொஞ்சம் பிஸி டாக்டர் .நான் நெக்ஸ்ட் வீக் கண்டிப்பா வரேன் "மெதுவா சொல்ல .அவர் சொன்னதை கேட்டு இன்னும் அவன் கிட்ட கடுமை ஏற "என்ன அடுத்த வாராம..எனக்கு தெரியாது ..நீங்க நாளைக்கு ஹாஸ்பிடல்ல இருக்கனும் "என்று சொல்ல அவர் சரினு தலைஆட்டுறார் அத பாத்து அவர் பி.ஏ சிரிக்க..அவர் முறைக்கிறார் ..ஆதி அவன் பி .ஏ பாத்து நீங்க நான் சொன்னனு சொல்லி நீங்க ரிஷப்னிஸ்ட்கிட்ட அப்பாய்ன்மெண்ட் பிக்ஸ் பண்ணிக்கோங்க .நாளைக்கு இவர் வரது உங்க பொறுப்பு "அவன் சொல்லி முடிச்சதும் அவர் விட்டா போதும்டா சாமினு ஓடிட்டாரு .அப்றம் இங்க இருந்து இங்க சாப்பிட்டத கண்டுபிடிச்சு இன்னும் திட்டிட்டான என்னனு பயம் தான் .

"பாவம் ..அவர் செக்அப் வராதாத மறந்துட்டு உங்கிட்ட வாங்கி கட்டிட்டு போறாரு .."ஷக்தி ஆதிகிட்ட சொல்லிட்டு திரும்ப ஆத்வி ஹரிஷ் ரெண்டு பேரும் எதோ பேய பாத்த மாதிரி முழிக்கிறங்கா ..காலைல இருந்து பச்ச பிள்ளை மாதிரி மூஞ்ச வைச்சுட்டு இருந்தவன் இவன் தானானனு "டேய் ..உன்ன பாத்துட்டு சின்ன பசங்க பயந்துட்டாங்க..அப்போ தான் ஆதியும் அவங்கள பாக்குறான் ...ஆதிகிட்ட சொல்லிட்டு இவங்க ரெண்டு பேர் பக்கம் திரும்பி "அவன் அப்டி தான் ..அவன் பேஷண்ட் கிட்ட சொல்ற இன்ஸ்ட்ரக்ஷன்லாம் பாலோவ் பண்ணலின்னா இப்டி தான் கத்துவான் ..அதும் இவருக்கு இப்போ தான் ஆபரேஷன் ஆச்சு ..அதும் கிரிட்டிக்கல் ஆபரேஷன் வேற ..அதான் கத்திட்டான்..நீங்க கண்டுக்காதிங்க .."ஷக்தி சொல்லவும் கொஞ்சம் ஆசுவாசமான ஆத்வி சாப்பிட ஆரம்பிக்கிறான் .

ஆனா ஹரிஷ் தான் இவன் தான் ஆதினு தெரிஞ்சதே இவனுக்கு ஷாக்னா ..காலைல அவன் அவளோ திட்டி பேசும் போது கூட முகத்துல சிரிப்போட இருந்தவன் இப்டி திடிர்னு அவன் கடுமையான முகத்தை பாத்தது இன்னும் அவனுக்கு ஷாக் தான் ..எல்லார் சாப்பிட ஆரம்பிச்சதும் கூட இவன் இன்னும் சாப்பிடாம எதோ யோசிச்சிட்டே இருந்தான் ..ஆத்வி அவன் சாப்பிடாம இருக்கறத பாத்துட்டு அவனை பல முறை கூப்பிடும் அவன் பதில் ஏதும் சொல்லாம அப்டியே இருக்கவும் அவன் முதுகுலியே ரெண்டு போடுறான் ..அவன் அடிச்சு கூப்பிடவும் எதோ கனவுல இருந்து முழிக்கிற மாதிரி அவங்கள பாக்குறான் .

"டேய் எத்தனை டைம் கூப்டுறது ..அப்டி என்ன யோசிக்கிற "ஆத்வி

"ஒண்ணும் இல்ல ஆத்வி ..எனக்கு தல வலிக்குது .நான் ரூம் போறேன் ..நீ பேசிட்டு வா .."ஹரிஷ்

ஆத்வி கூப்டுறது கூட கேக்காம அவன் பாட்டுக்கு எழுந்து போக ...ஆதிக்கு எதோ சரி இல்லனு தோணுச்சு ..அவனை கூப்டுற போறனு எழுந்த ஆத்விய வேண்டாம்னு சொல்லிட்டு நான் போயி கூப்டு வரேன்னு சொல்றான்.

"ஆனா ..அண்ணா அவன் உங்கள ஏதோனு சொல்ல போறான்..நானே போறேன் ..அவன் இதுக்கு முன்னாடி இப்டி நடந்துக்கிட்டதே இல்ல ..இன்னிக்கு என்ன ஆச்சுனே தெரியல .இப்டி நடத்துகிறான் "ஆத்வி கவலையா சொல்லவும் "ஒன்னும் இல்ல ஆத்வி நான் போயி பேசி அவனை கூப்டு வரேன் ..நீ சாப்பிடு"அப்டினு சொல்லிட்டு போறான் .

ஆதி வெளிய போகி அவன பாக்கவும் ஹரிஷ் ஆட்டோ கூப்பிடவும் சரியா இருந்தது..ஆதி வேகமா போயி ஆட்டோக்காரன போக சொல்லிட்டு ஹரிஷ்கிட்ட பேசணும்னு சொல்றான்.."உங்க கிட்ட பேச எனக்கு ஏதும் இல்ல சார்..இப்போ எதுக்கு ஆட்டோ போக சொன்னிங்க.நான் போகணும் விடுங்க" அவன் சார்னு மரியாதையா கூப்டுறத அவன் கவனிக்கிறான் ..

"உனக்கு எதும் பேச இல்ல ஆனா எனக்கு இருக்கு ..சோ நீ என்கூட வா.இங்க நின்னு பேசுனா நம்ல தான் எல்லாரும் பாப்பாங்க "அவன் சொன்ன அழுத்தத்துல ஹரிஷ் தானா அவன் பின்னாடி போனான் ..அவங்க ரெண்டு பேரும் அந்த ஹோட்டல் பின்னாடி பார்க் மாதிரி இருக்க இடத்துக்கு போனாங்க .அங்க இருக்க சேர்ல ஹரிஷ்ஷ உக்கார சொல்லிட்டு அவனுக்கு எதிர்ல இவனும் அமர்ந்தான்..கொஞ்ச நேரம் ஏதும் பேசாம அமைதியா இருந்தாங்க ..கடைசியா ஆதி தான் பேச ஆரம்பிச்சான் ..

"சொல்லு ஹரிஷ் ..உனக்கு என்ன பிரச்சனை .."ஆதி

அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு எழுந்து போகும் போது ஆதி "நான் சொன்னதை யோசிச்சு பாரு ஹரிஷ் "ஆதி சொல்லிட்டு அவனை கூப்பிடிட்டு உள்ள போறான் ..ஆத்வி இவங்க வராங்களானு அவங்க போன திசையை பாத்துட்டு இருந்தா இந்த ஷக்தி எதோ பல நாள் அவங்க வீட்ல சோறு போடாதது மாதிரி அது மட்டும் தான் இப்போ அவன் உலகத்துல இருக்க மாதிரி சாப்டுட்டு இருக்கான் ..இப்போவே அங்க இருக்கறதுல பாதி காலி பண்ணிட்டான் .. ஆதி வந்து இன்னும் ஆத்வி சாப்பிடாம இருக்கறத பாத்துட்டு "ஹே ஆத்வி ஏன் சாப்பிடாம இவளோ நேரம் இருக்க ..நான் தான் இவன கூப்டு வரேன்னு சொல்லிட்டு தான போனேன் ..அப்றம் ஏன் இன்னும் சாப்பிடல

"எல்லாம் இவனால தான் ..எப்போவும் இப்டி இருக்க மாட்டான் ..எந்த விசயமா இருந்தாலும் ரொம்ப கூல்லா ஹேண்ட்ல் பண்ணுவான்.ஆனா இன்னிக்கு இப்டி இருக்கவும் அதும் சாப்பிடாம எழுந்து போகவும் கஷ்டமாகிடுச்சு ..அதான் இவன் வர வரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் "ஆத்வி கவலையா சொல்லவும் ஹரிஷ்க்கு கஷ்டமாகிடுச்சு ..ஆத்வி இப்டி சொன்னதும் ஆதி திரும்பி ஹரிஷ் பாத்து சிரிச்சான் ..அவனும் அதுக்கு திரும்ப சங்கடமான சிரிச்சான் ..ஆத்விய சகச்சமாக்க ஹரிஷ் பேச ஆரம்பிச்சான் .

"மச்சான் பொய் சொல்லாத டா ..என்ன இங்க சாப்பாடு ஏதும் சரி இல்லியா ..இல்லியே இதோ அவர் சாப்பிடறத பாத்த அப்டி ஒண்ணும் தெரியலியே ..வேற என்ன மச்சான் பிரச்சனை ..ஒரு வேளை வயிறு ஏதோனு சரி இல்லியா ..அத சொல்ல கஷ்டபட்டுட்டு எனக்காகனு பொய் சொல்றியா ."ஹரிஷ்

இப்டி அப்டினு ரெண்டு பேரும் அவங்கள மாத்தி மாத்தி அசிங்கபடுத்திட்டு சாப்பிட ஆரம்பிக்கிறங்க ..ஒரு வழியா சாப்பிட்டு பேசி முடிச்சுட்டு கிளம்ப போகும் போது நான்கு பேரும் பேசிட்டே நடக்கிறாங்க ..ஷக்தி எதோ தன்கிட்ட சொல்ல நினைக்கிறானு புரிஞ்சிட்ட ஆத்வி ,ஹரிஷ் ஆதிய முன்னாடி விட்டுட்டு ஷக்தி கூட நடக்கிறான் .

"சொல்லுங்க டாக்டர் ..என்ன சொல்லணும் "ஆத்வி கேட்கவும் அவன மெச்சுதலா ஒரு பார்வை பாத்துட்டு "நீ ஆதி கூட ஏன் பழகிறன்னு எனக்கு தெரில ..ஆனா எப்போவும் எல்லாரையும் தன்னை விட்டு தள்ளி வைக்கிற ஆதி உன்ன பாத்த ஒரே நாள்ல அவனுக்கு நெருக்கமானவங்க கூட பேசுற மாதிரி பேசுறான் ..சொல்ல போன அத விட அதிகம் .சோ .." அவன் தயக்கமா நிறுத்த அவன் சொல்ல வரத புரிஞ்சிட்ட ஆத்வி அவனே பேச ஆரம்பிக்கிறான் "சோ ..உன் வேலைகாக அவரை யூஸ் பண்ணாத ..அதான டாக்டர் நீங்க சொல்ல வரது ..நீங்க நினைக்கிற மாதிரி நான் இன்டெர்வியூகாக தான் ஆதி அண்ணாகிட்ட பேசுரனு இல்ல .அவர் தான் ஆதி டாக்டர்னு தெரிஞ்சுக்க முன்னாடியே நான் அவரை அண்ணனு தான் கூப்பிட்டேன்..அது எதோ அவர பாத்த உடனே எனக்கு அப்டி பீல் ஆச்சு ..அப்றம் இத வைச்சு அவரை நான் இன்டெர்வியூ எடுக்க மாட்டேன் ..எப்போ அவருக்கு இன்டேரிவியூ குடுக்கணும்னு தோணுதே அத அவரே சொன்ன அப்றம் தான் எடுப்பேன் ..இப்போ ஓகே வா உங்களுக்கு "

"தேங்க்ஸ் ஆதி ..நான் சொல்ல வரத புரிஞ்சிகிட்டத்துக்கு ..என்ன தப்பா எடுத்துக்காத ..உன் வேலைக்காக அவனை யூஸ் பண்ணறனு தெரிஞ்ச அவன் தாங்க மாட்டான் ..அதான் சொன்னனேன் "

இட்ஸ் ஓகே டாக்டர் ..இதுல ஒண்ணும் இல்ல ...நீங்க சொல்றதும் கரெக்ட் தான் ..நான் அப்டி பண்ண மாட்டேன்"ஆத்வி

ஒருவழியா எல்லாம் பேசி முடிச்சு சமாதானம் ஆகி வீடு போயி சேந்துட்டாங்க.

.மறுநாள் காலை கதிரவன் தன் சக்தியான தன் சூரியகதிர்களை பூமி தாயின் மீது வீச அதை கண்ட நிலாமகள் தன் தோழியின் மீது அக்னி கதிர்களை வீசி அவளை சுட்டெரிக்க செய்யும் தன் காதலன் மீது கோபம் தன் நண்பர்களான மின்மினி கூட்டங்களை அழைத்துகொண்டு அவள் அவ்விடம் விட்டு மறைந்து செல்கிறாள் ..இதை கண்டு ஏக்க பெரு மூச்சு விட்ட கதிரவன் தான் என்ன தவறு செய்தோம் ..இது எனது கடமை தானே ..நான் இல்லாவிட்டால் பூமி தாயின் குழந்தைகள் அனைவரும் இறக்க நேரிடும் அதை கூட புரிந்து கொள்ளாமல் தன் மீது கோபம் கொள்ளும் காதலியைய் சமாதானம் செய்யும் வழி அறியாமல் தன் கடமை ஆற்ற தொடங்கிவிட்டான்.

இது ஏதும் அறியாமல் மக்கள் அனைவரும் தத்தமது வேலை செய்ய தொடங்கி விட்டனர் ..பரப்பாக சென்னை மக்கள் இயங்க ....RD Hospital and Research Institute வளாகத்தில் தன் காரை பார்க் செய்துட்டு ஆதி ,ஷக்தி கூட பேசிட்டு நடந்து வரான்.இவங்க ரெண்டு பேரும் நடந்து வரதுக்கு எதிர்புறமா இவங்கள பாத்துட்டே ஒரு யுவதி நடந்து வர ..இல்ல இல்ல முறிச்சுட்டே ...தான் டாக்டர் தான்னு சொல்ற மாதிரி டாக்டர் கோட் போட்டுட்டு ஸ்டெதாஸ்கோப்ப கழுத்துல மாட்டிட்டு நடந்து வரா ..தன் பார்வையலியே அவங்கள பொசுக்குற அளவுக்கு முறிச்சுட்டே வரா ..ஆனா இவங்க ரெண்டு பேரும் அத பாத்தும் பாக்காத மாதிரியும் போறாங்க .அவ அவங்கள கடந்து போனதுக்கு அப்றம் ஷக்தி "ஹப்ப்பா ..என்ன பார்வை டா இது ..இவளை ஒரு ஒரு பாக்கும் போதும் டாக்டர் கோட் போட்ட காளி மாதிரி இருக்கு ..அப்டி என்னடா பண்ண அவளை "ஆதிய பாத்து சக்தி கேக்க "நான் என்ன பண்ண போறேன் அவளை ..அவன் தான் தேவை இல்லாம ஒரு ஒரு தடவையும் முறைக்கிறா " ஆதி சொன்னதை நம்பாம அவனை சந்தேகமா பாத்துட்டு "இல்லயே ...நீ காலேஜ் பைனல் இயர்ல அவளை கூப்டு ஒரு டைம் தனியா பேசுனா ..அதுவரை உன்ன லவ்பண்ணரன்னு உன் பின்னாடியே சுத்திட்டு இருந்தவ நீ எதோ அவங்க அப்பாவை போட்டு தள்ளிட்டா மாதிரில இப்போலாம் முறிச்சுட்டு போற ..சொல்லு என்ன பண்ண அவளை "

"அதான் சொல்லிடேன் இல்ல ..நான் ஏதும் அவள பண்ணல ..நான் அவளை லவ் பண்ணலன்னு மட்டும் தான் அவகிட்ட சொன்னேன் ..வேற ஏதும் சொல்லல்ல ..நம்பறதும் நம்பாம இருக்கருதும் உன் இஷ்டம் ..நான் போயி என் வேலைய பாக்குறேன் "ஆதி

"நீ எதோ சொல்ற நம்புறேன் ..ஐஸ்கட்டி கரைஞ்ச உருகி தான் ஆகணும் ...உருகுற அப்போ பாத்துக்கிறேன் "ஷக்தி

"என்னடா இது ...நீயும் உன் தத்துவமும்..போ போயி வேலையை பாரு "ஆதி சொல்லிட்டு அவங்க அவங்க வேலையை பாக்க போறாங்க ...அப்டியே நீங்களும் இந்த கதையை பத்தி கொஞ்சம் சொல்லிட்டு போங்க..அப்போ தான தெரியும் நான் எழுதறது எப்படி இருக்குனு.உங்களோட கருத்துக்களை பொருத்து தான் நான் என்னோட குறைகளை திருத்திக்கொள்ள முடியும்.
 

New Threads

Top Bottom