பிறகு பண்ணையார் குடும்பத்தில் கல்யாண வேலையை சிறப்பாகசெய்து முடிக்க வேண்டும் என்று பண்ணையாரும் அவர் பிள்ளைகளும் மற்றும் மருமகளும் கூடி முடிவு செய்தனர்
அதேபோல முத்தையாவின் வீட்டிலும் திருமணத்தை நமது கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் சிறப்பாக நடத்த வேண்டுமென்று முத்தையாவும் அவர் மகன் சங்கரும் மற்றும் ரேகா அவருடைய அம்மா லட்சுமி அம்மாள் கூடி பேசி முடிவு செய்தார்கள் இப்படி பண்ணையார் வீட்டிலும் முத்தையா வீட்டிலும் கல்யாண கலை தெரிய ஆரம்பித்தது..
ஒருநாள் முத்தையா சங்கரை அழைத்து தன் அருகில் அமர வைத்துக் கொண்டு மனம்விட்டு பேசினார்.
இதுவரைக்கும் உன்னை நான் கண்டித்தது மில்லை நீயும் என் மனம் வேதனை படும் அளவிற்கு எந்த காரியமும் செய்யவும் இல்லை எனக்கு நீ ஒரே பிள்ளை நீ பிறந்து சில நாட்களில் உன் அம்மா இறந்து விட்டால அன்று முதல் நான் உன்னை பாசமாக வளர்த்து வருகிறேன் நீயும் இந்த ஊரில் நல்ல மரியாதையுடன் நடந்து கொள்கிறாய் என்பது எனக்கு தெரியும் இருந்தாலும் நான் உன்னிடம ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைக்க போகிறேன் என்று சங்கரிடம் புதிராக சொன்னார் முத்தையா..
எனக்கு எல்லாமே நீங்க தான் பா நீங்க ஒரு வேலை சொன்னா அதை நான் என்றுமே தட்டியது இல்லை இருந்தாலும் நீங்கள் ஏதோ பெரியதாக என்மீது நம்பிக்கையடு கேட்கிறீர்கள் என்ன பொறுப்பு சொல்லுங்கள் அப்பா நான் அதை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று உருக்கமாக சங்கர் முத்தையா விட சொன்னான்..
இது நாள் வரைக்கும் நீ சந்தோஷமாக என்னைப் பார்த்துக் கொண்டாய் அதேபோல உன்னை நம்பி வரும் ரேகாவை கண்கலங்காமல் அவளை சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும் இது மட்டுமல்ல அவளை நீ இராணி போல பார்த்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் அவள் பாவம் சிறுவயதிலே அவள் தந்தை இறந்து விட்டான் அன்று முதல் லட்சுமி ரொம்ப கஷ்டப்பட்டு ரேகாவை வளர்த்து வந்தாள் அவள் கஷ்டப் பட்டதை நான் அன்று முதல் இன்று வரை கவனித்து வருகிறேன் .ரேகாவும் பெரியவள் ஆகிவிட்டாள் .அவள் இவ்வளவு அறிவும் பண்பும் ஒழுக்கமும் நிறைந்த பெண்ணாக இருக்கிறாள் .இப்படிப்பட்ட பெண்ணை வளர்ப்பதற்கு லட்சுமி கடுமையாக உழைத்து தன் காப்பாற்றினாள் மகளை வேலைக்கு எங்கும் அனுப்பாமல் பாசமாக வளர்த்து வருகிறாள் .அதேபோல ரேகா இன்னும் சில நாட்களில் இந்த வீட்டு மருமகளாக வரப் போகிறாள் அவளை நீ ராணி போல பார்த்துக் கொள்ள வேண்டும் இந்த ஊரே ரேகா மீது பொறாமை படவேண்டும் அந்த அளவிற்கு ரேகாவை சந்தோஷமாக நீ பார்த்துக் கொள்ள வேண்டும் .அப்போதுதான் நான் இந்த ஜென்மத்தை வரமாக நினைத்து என் ஆயுளை சந்தோஷமாக முடித்துக் கொள்வேன் இதுதான் என்னுடைய வேண்டுகோளும் எதிர்பார்ப்பும் என்று முத்தையா ஒரு கண்களில் பெரிய எதிர்பார்ப்போடு உணர்ச்சிபூர்வமாக சங்கரிடம் சொன்னார்...
எனக்கு புத்தி தெரிந்த நாள் முதல் எனக்கும் தெரியும் லட்சுமி அக்கா ரேகாவை கஷ்டப்பட்டு வளர்த்த அதை நானும் கவனித்திருக்கிறேன் அப்பா அதுமட்டுமல்ல .ரேகாவை நான் நேசிக்க காரணம் அவள் பட்ட கஷ்டத்தையும் துன்பத்தையும் நான் போக்க வேண்டும் லட்சுமி அக்காவையும் என் அக்காவை போல சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும் இதுதான் என் ஆசையும் அதனால்தான் எனக்கு ரேகா மீது பாசம் ஏற்பட்டது அதுவே நான் விரும்புவதற்கு காரணமாக இருந்தது .ரேகாவை நீங்கள் எதிர்பார்த்ததை விட ஒரு படி மேலே அவளை நான் சந்தோசமாக பார்த்துக் கொள்வேன் அப்பா என்று சங்கர் முத்தையா விற்கு ஆணித்தரமாக கூறினான்....
ஷங்கரின் பேச்சைக் கேட்டதும் முத்தையாவுக்கு பெரும் மகிழ்ச்சி தனது மகனும் தன்னைப் போலவே இரக்க குணம் உள்ளவன் என்று நினைத்து சந்தோஷப்பட்டார் முத்தையா .பிறகு சங்கரை பார்த்து ஐயா. நீ இவ்வளவு நாள் எனக்கு மட்டும்தான் உழைத்தாய் இனி இரண்டு குடும்பத்திற்கும் சேர்த்து உழைக்க வேண்டும் .ஆகையால் நீ மேலும் கடுமையாக உழைக்க வேண்டும் அப்பொழுதுதான் எங்களை சந்தோஷமாக பார்த்துக்கொள்ள முடியும் .அதே போல ரேகாவை நீ வேலைக்கு எங்கும் அனுப்பக்கூடாது அவள் அம்மா வீட்டில் எப்படி இருந்தாரோ அதே போல இங்கும் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் அதனால் இனி விளையாட்டுத் தனத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு .கடுமையாக உழைப்பதற்கான வழியை பாரு என்று முத்தையா சங்கருக்கு கட்டளையிட்டார்..
.
தந்தை சொல்லே மந்திரம் என்று நினைத்து சங்கரும் தந்தை கூறியதை மனதில் வைத்துக் கொண்டு பொறுப்புடன் இனி நாம் விளையாட்டை சற்று நிறுத்திக் கொண்டு பொறுப்புடன் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கண்டு தந்தையிடம் விடைபெற்றுக்கொண்டு வேலைக்குக் கிளம்பினான் பண்ணையார் தோட்டத்திற்கு...
நமது பண்ணையார் குடும்பத்தில் வழக்கம்போல பரந்தாமன் தனது தம்பியின் திருமணத்தை எப்படி நிறுத்துவது என்று ஆழ்ந்த சிந்தனை செய்து கொண்டிருந்தான் .அப்பொழுது அவனுக்கு ஒரு யோசனை வந்தது தம்பியை ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்க வைத்து விட்டாள் இந்த திருமணத்தை நிறுத்தி வடலாம் என்று யோசித்தான் பரந்தாமன். எந்த பிரச்சனையில் சிக்க வைக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில். என்னங்க என்ற குரல் கேட்டது பரந்தாமனுக்கு பார்த்தால் சிரித்த முகத்துடன் அவன் மனைவி வந்தாள்.
கல்யாண வேலையை பத்தி யோசனை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று புன்னகையோடு கேட்டாள்
ஆமாம் தம்பி திருமணமாச்சு இனி என் மூளைக்கு வேலை அதிகமாகவே இருக்கும் என்று அவள் இடுப்பை பற்றிக்கொண்டு சந்தோசமாக நடித்துக் கொண்டே சொன்னான் பரந்தாமன்
திருமணம் உங்கள் தம்பிக்கு உங்களுக்கு அல்ல ஒரே துடிதுடிக்க இருக்கிறீர்கள் கையை எடுங்கள் உங்க தம்பிங்க வரப்போறாங்க என்று கைகளை உதறிவிட்டு பரந்தாமன் மனைவி ஒரு பெரிய லிஸ்டே ஒன்று கொடுத்தாள்..
அதைப் பிரித்துப் பார்த்த பரந்தாமன் வரவு செலவு கணக்கு இருப்பதை புரிந்துகொண்டான் .பிறகு மனைவியை பார்த்து இது என்ன வரவு செலவு கணக்கு என்னிடம் கொடுக்கிற.
வரவு செலவு கணக்குதான் ஆனா வீட்டோட தில்லை .விவசாய கணக்கு நான் போட்டது இல்லை .உங்க அப்பா என்னிடம் சொல்லி போட்ட கணக்கு நான் இந்த வீட்டு மருமகளா வந்ததிலிருந்து உங்க அப்பா என்னிடம்தன் வரவு செலவு கணக்கை சொல்லி எழுதச் சொல்வார் என்னிடம் ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்துல எவ்வளவு வருமானம் கிடைக்கிறது எவ்வளவு செலவு செய்கிறோம் என்று தெரிஞ்சு கருத்துக்காக உங்க அப்பா என்னிடம் வரவு-செலவு கணக்கை சொல்லுவாரு .ஆனால் இந்த மூணு வருஷமா நீங்க விவசாயத்துல பொறுப்பேற்ற நாள் முதல் வரவு செலவு கணக்கு என்கிட்ட சொல்றத கிடையாது ஆனா இப்போ உங்க தம்பிக்கு திருமணம் நடக்கப் போகுது அதுக்கு நிறைய பணம் செலவாகும் அதனால நீங்க விவசாயத்துல வந்த பணத்தை அப்பாவிடமும் இல்ல நீங்களே பொறுப்பா வச்சுக்கிட்டு செலவு செஞ்சு கணக்கு உங்க தம்பி கிட்ட சொல்லுங்க ஏன்னா இவ்வளவு நாளா இந்த வீட்டுக்கு நா மட்டும்தான் மருமகளா இருந்தேன் இன்னும் கொஞ்ச நாளைக்கு பிறகு இன்னொருத்தி மருமகளாக வரப்போறா அவளுக்கு நம்ம வரவு செலவை முறைப்படி தெரிவிக்கணும் அதனாலதான் உங்க அப்பா எழுதி வைத்திருந்த இந்த வரவு செலவுக் கணக்கை உங்ககிட்ட கொடுக்கிறேன் .நீங்களும் இனிமேல் செய்யப் போகும் செலவு .வரப்போற வரவு எல்லாத்தையும் எழுதி வச்சுக்கங்க ஏன்னா இனிமே வரவு செலவு கணக்கை யாரு வேணாலும் கேப்பாங்க .இவ்வளவு நாளா இருந்தது போல இனிமே இருக்காதீங்க மாமாவை போல யாருக்கும் தல குனிஞ்சு நிக்காம கம்பீரமாய் இருப்பதுபோல நீங்களும் யார் கேக்குற கேள்விக்கு பதில் தெரியாமல் நிறகக்கூடாது அதனாலதான் இந்த வரவு செலவு கணக்கை உங்ககிட்ட கொடுக்கிறேன் என்று பொறுப்போடும் சொன்னால் பரந்தாமன் மனைவி.
மாணவி சொன்ன யோசனைகளை கேட்ட பரந்தாமனுக்கு மேலும் மனக் கஷ்டம் ஏற்பட்டது . இவள் சொல்வது போல தம்பியின் மனைவி நிச்சயமாக வரவு செலவு கணக்கை நம்மிடம் கேட்பாள் என்ற எண்ணம் பரந்தாமனுக்கு ஆணித்தரமாக புரிந்தது பிறகு பரந்தாமனுக்கு தம்பியின் திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் இல்லை என்றால் நமக்குத் தான் பிரச்சனை என்று உறுதியாக முடிவெடுத்தான் பரந்தாமன்..இனி நமக்கு நிம்மதியான உறக்கம் கிடையாது தம்பியின் திருமணத்தை நிறுத்தி விட்டால் தான் நிம்மதியாக இருக்க முடியும் .நிச்சயமாக இந்த கெட்ட காரியத்தை செய்வதற்கு நாம் இன்னும் அடிமட்டத்தில் இறங்கி யோசனை செய்து இந்த திருமணத்தை நிறுத்திவிட வேண்டும் .இதற்கு எந்த தடை வந்தாலும் அதை துணிச்சலோடு எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான் பரந்தாமன்....
பண்ணையார் குடும்பத்தில் கல்யாண வேலை மும்முரமாக நடந்தது கல்யாண மாப்பிள்ளை சந்திரன் தனது வருங்கால மனைவியை நினைத்து சொப்பனத்தில் மிதந்தபடி இருந்தார்.
பண்ணையார் ஒரு திட்டமிட்டிருந்தார் இந்த திருமணத்தை எல்லோரும் சந்தோசமாக கொண்டாட வேண்டும் என்று
ஊரில் உள்ள அனைவருக்கும் மூன்று நாள் முன்பாகவே தொடர்ந்து விருந்தளிக்க வேண்டும் என்று யோசனை செய்தார் .அதேபோல திருமணத்திற்கு அனைவருக்கும் பத்திரிக்கை வைத்து புதுத் துணி மணியை கொடுத்து திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்று திட்டம் போட்டார் பண்ணையார் .தனது யோசனையை தனது மருமகளிடம் தெரிவித்தார்.
மருமகளும் நல்ல யோசனை தான் மாமா அப்படியே செய்து விடலாம் இருந்தாலும் இந்தப் பொறுப்பை எல்லாம் உங்கள் சிநேகிதன் இடம் ஒப்படைத்து விட்டால் இன்னும் நன்றாக இருக்கும் மாமா என்றால் மருமகள்.
பண்ணையாருக்கு மேலும் சந்தோஷம் பரவாயில்லையே எனக்கு கூட இந்த யோசனை தோன்றல உனக்கு தோன்றியிருக்க அப்படியே செய்து விடலாமா எனது நண்பன் முன்னிலையில் இந்த ஊர் மக்களுக்கு பத்திரிக்கை வைத்து திருமணத்திற்கு அழைக்கலாம் என்று பண்ணையார் கூறினார்.
இப்படி பண்ணையார் குடும்பத்தில் திருமண வேலை கோலாகலமாக தொடங்க ஆரம்பித்தது
அதேபோல முத்தையா வீட்டில் சங்கர் திருமணம் சிறப்பாக நடத்த வேண்டும் என்று திட்டம் தீட்டினார் .தனது உயிர் நண்பனான பண்ணையாரை அழைத்து அவர் முன்னிலையில் நமது கிராம அம்மன் கோவிலில் சங்கர் ரேகா திருமணத்தை இந்த ஊர் மக்கள் முன்னிலையில் பண்ணையார் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்று முத்தையாவும் திட்டங்கள் தீட்டி இருந்தார் .
தனது யோசனையை மகனிடம் கூறினார் .அதற்கு சங்கரும் சந்தோசமாக அப்படியே செய்யுங்கள் அப்பா என்று சொன்னான் இப்படி இரண்டு வீட்டிலும் திருமண கலை ஓங்கி நின்றது ஒய்யாரமாக.
ஊர் மக்களுக்கும் ஒரே சந்தோஷம் இந்த மாதத்தை திருவிழா போல நாம் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தார்கள் .பண்ணையார் வீட்டு திருமணம் முடிந்ததும் நமது தோழர் முத்தையாவின் வீட்டு திருமணத்தையும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஊர் மக்கள் சந்தோஷமாக பேசத் தொடங்கினார்கள்.
பிறகு சங்கரும் ரேகாவும் நெருங்கி பழக தொடங்கிவிட்டார்கள் அப்பொழுது சங்கர் தனது தந்தை சொன்னதை ரேகாவிடம் சொன்னான் உன்னை எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று எனது அப்பா என்னிடம் கண்டிப்பாகக் கூறிவிட்டார் உன்னை ராணி போல நான் பார்த்துக் கொள்ள வேண்டுமாம் இது தான் என் அப்பாவின் ஆசை என்று ரேகாவிடம் சொன்னான் சங்கர்.
இந்த ஜென்மத்தில் நான் உங்களுக்கு மனைவியாக அமைவதே நான் செய்த பெரிய பாக்கியம் .அது ஒன்று போதும் எனக்கு பெரிய சந்தோசத்தை தரும்
நீங்கள் என்னை ராணி போல ஒன்னும் பார்த்துக் கொள்ளத் தேவையில்லை எனக்கு உங்கள் அன்பும் .தாத்தாவின் அன்பும் இருந்தாலே போதும் இதை விட சந்தோஷம் வேறு எதிலும் எனக்கு கிடைக்காது .அதனால் நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் தாத்தா என் மீது உள்ள பாசத்தில் அப்படி சொல்லி இருப்பார் .இதற்காக நீங்கள் உடம்பை ரொம்ப உடைக்காத என்று கிண்டலாய் சொன்னாள் ரேகா.
என் அப்பா சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உன்னை நான் ராணிபோல தான் பார்த்துக் கொள்ள போறேன் .நீ வேணா பாரேன் .நீயே ஆட்சியரும் படும் அளவிற்கு உன்னை ராணி போல வாழ வைக்கப் போறேன் என்று சங்கர் நெஞ்சை நிமிர்த்தி தில்லாக சொன்னான் ரேகாவிடம்..
நமது சாட்டையடி சாமியாருக்கு வருமானம் அவ்வளவாக சரிவர கிடைக்கவில்லை .மக்களை எப்படி ஏமாற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தார் ஆனால் அவருக்கு எந்த ஒரு யோசனையும் எடுபடவில்லை ஊர் மக்கள் எல்லோரும் பண்ணையார் வீட்டு திருமணத்தையும் .முத்தையா வீட்டின் திருமணத்தையும் பற்றி பேசுவது நேரம் சரியாக இருந்தது
சாட்டையடி சாமியாரை இந்த நேரத்தில் அவ்வளவாக யாரும் கண்டுகொள்ளவில்லை .இதனால் சாட்டையடி சாமியார் விரக்தியில் இருந்தார் எனக்கும் ஒரு நேரம் வரும் அந்த நேரத்தில் உங்களையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றபடி மனதில் நினைத்துக் கொண்டார்
சாட்டையடி சாமியார் எந்த ஒரு சூழ்ச்சிகளும் செய்ய இறங்கவில்லை இப்போ நமக்கு நேரம் நல்லா இல்லை நமக்கு நல்ல நேரம் வரும் பொழுது அவர்க லே நமது வலையில் தானாக வந்து சிக்கிக் கொள்வார்கள் என்று சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யர்களும் பேசிக்கொண்டார்கள்...
இப்படி ஊ ரே சந்தோசமாக இருக்கும் வேளையில் .பரந்தாமன் மட்டும் தனது மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருந்தான்
எப்படி இந்த திருமணத்தை நிறுத்துவது என்று யோசித்துக் கொண்டும் இருந்தான் .தனது தெய்வமாக மதிக்கும் தனது தாயிடமும் வேண்டிக்கொண்டான் .தாயே தம்பியின் திருமணத்தை நிறுத்துவதற்கு எனக்கு ஒரு நல்ல ஒரு யோசனை சொல் இந்த திருமணத்தை நீ எப்படியாவது நிறுத்திவிட்டால் போதும் பிறகு தம்பிக்கு நான் என் கட்டளைக்கு கட்டுப் பட்டவர்களாக பார்த்து தம்பிக்கு திருமணம் செய்து வைக்கிறேன் . தம்பியை நான் பார்த்துக் கொள்கிறேன் .அதனால் இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்துவதற்கு நீதான் எனக்கு உதவியாக இருக்க வேண்டும் தாயே என்று கண்ணை மூடி தனது தாயிடம் வேண்டிக்கொண்டான் பரந்தாமன்.
பிறகு பரந்தாமன் திருமணத்தை நிறுத்துவதற்கு தாயின் ஆதரவு நமக்கு கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் நாம் கவலைப் படக்கூடாது நாமே சொந்த முயற்சியினால் இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் பரந்தாமன்..
ஊர் மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்களா . இல்லை பரந்தாமன் மட்டும் சந்தோஷமாக இருப்பானா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்....
வழக்கம்போல் பரந்தாமனும் அவனது தம்பி சந்திரன் தீனா மூவரும் தோட்டத்திற்கு கிளம்பினார்கள் அப்பொழுது பரந்தாமன் கையில் ஒரு பெரிய பை ஒன்று எடுத்துக்கிட்டு கிளம்பினான் தந்தைக்கும் மனைவிக்கும் தெரியாமல்
பிறகு தோட்டத்திற்கு மூவரும் சென்றனர் வழக்கம்போல மூவரும் மூன்று திசைக்கு சென்றனர் வயல்களை சுற்றிப்பார்க்க .சிறிது நேரத்தில் மூவரும் பண்ணையர் தோட்டத்தில் பம்பு செட்டின் அருகில் ஒன்று கூடினர் .அப்போது பரந்தாமன் சுற்று முற்றும் பார்த்துவிட்டு யாரும் இல்லை என்ற தைரியத்தில் பையில் இருந்த மது பாட்டிலை எடுத்து வெளியே வைத்தான்
இதைப்பார்த்த தீனாவுக்கும் சந்திரனுக்கும் சற்று சந்தோஷமாக இருந்தாலும் புதிராகவே இருந்தது மது அருந்துவதை அண்ணன் விருப்பம் இல்லாமலே உத்தரவு கொடுப்பார் மது அருந்துவதற்கு ஆனால் இப்போது அண்ணனை மது வாங்கிக் கொண்டு வந்து இருக்காரே இது என்ன அதிசயம் என்று பார்த்தார்கள்
பிறகு பரந்தாமன் மது பாட்டில்களை எடுத்து சந்திரனிடம் தீனாவிடமும் ஆளுக்கு ஒன்று கொடுத்தான் அவனும் ஒன்றை எடுத்துக் கொண்டான் .மூவரின் கையில் மது பாட்டில் இருந்தது
பிறகு பரந்தாமன் கூறினான் என்ன ஆச்சரியமாக இருக்கிறதா தம்பி சாப்பிடுங்கள் இன்னும் சிறிது காலத்தில் சந்திரனுக்கு திருமணமாகப் போகிறது திருமணம் முடிந்ததும் சந்திரனால் மது அருந்த முடியாது அப்படி அருந்தினாலும் எப்பவாவது ஒரு முறை மனைவிக்குத் தெரியாமல் என்னை போல அருந்துவான் ஆகையால் தான் இன்று மூவரும் ஜாலியாக மது அருந்தலாம் என்று முடிவு செய்து வரும்போது அப்பாவுக்கும் அண்ணிக்கும் தெரியாமல் மதுவை வாங்கி வந்துவிட்டேன் சாப்பிடுங்கள் என்று மது அருந்துவதற்கு தயாரானான் பரந்தாமன்
வேண்டாம் அண்ணா மனைவி வந்து திருத்துவதை விட அதற்கு முன்பாகவே திருந்தினால் நமக்கு கௌரவமாக இருக்கும் என்றால் சந்திரன்
பரந்தாமனுக்கு தூக்கிவாரிப்போட்டது. என்ன இவன் இப்போது மனைவிக்கு மரியாதை கொடுக்க ஆரம்பித்து விட்டான் இனி நமக்கு தலைவலி தான் .என்று நினைத்துக் கொண்டு. பரவாயில்லை தம்பி இன்று சாப்பிடு நான் வாங்கி வந்துவிட்டேன் இதுவே வீணாக்கக்கூடாது ஆகையால் இன்று ஒரு நாள் சாப்பிடு என்றான் பரந்தாமன்
ஆமாம் அண்ணா அண்ணன் ஆசையாக வாங்கிக் கொண்டு வந்துள்ளார் சாப்பிடலாமே என்று தீனா கூறினான்
வேறு வழியில்லாமல் சந்திரனும் சரி இன்று நாம் மூவரும் ஒன்றாக மது அருந்துவது வேண்டுமென்று கடவுள் கணக்குப்போட்டு வைத்துள்ளான் போல் தெரிகிறது .அதனால் மூவரும் சந்தோசமாக மது அருந்தலாம் என்று மது அருந்துவதற்கு மூவரும் தயாரானார்கள்
அப்போது பரந்தாமன் மட்டும் மது அருந்துவது போல நடித்துக்கொண்டு மதுவை தம்பிகளுக்கு தெரியாமல் கீழே ஊத்திவிட்டான் தம்பிகள் பார்க்கும்போது மட்டும் லேசான மதுவை அருந்தினான்
ஆனால் தீனாவும் சந்திரனும் கொடுத்த மதுவை அனைத்தையும் குடித்து விட்டார்கள் .பிறகு சற்று நேரத்தில் போதை தலைக்கேறியது என்ன செய்வது என்று தெரியாமல் தீனாவும் சந்திரனும் போதையில் மயங்கினார்கள்
உடனே பரந்தாமன் நீங்கள் இருவரும் இங்கேயே இருங்கள் நான் நமது ஊமையன் எங்கே என்று தெரியவில்லை அவனை தேடி பார்த்து விட்டு வருகிறேன் என்று அங்கிருந்து கிளம்பினான் .
பரந்தாமன் யோசித்தான் இவர்கள் மது குடிப்பதற் கே தயங்குகிறான் சந்திரன் இவன் கனகாவை கற்பழிப்பு அதற்கு எப்படி சம்மதிக்க போகிறான் என்று தெரியவில்லையே என்று குழப்பத்தோடு வாய்வேலையில் நடந்துகொண்டே யோசித்துக் கொண்டிருந்தான்
அப்போது ஒரு யோசனை வந்தது....
எப்படியாவது வேலை செய்து கொண்டிருக்கும் கனகாவிடம் பம்புசெட்டு அறையில் ஏதாவது பொருளை எடுத்து வரும்படி கூறினாள் . அவள் பம்பு செட்டுக்கு செல்வாள் அங்கு போதையில் இருக்கும் நமது தம்பிகள் அவள்மீது ஆசைப் படுகிறார்களா இல்லையா என்று மறைந்திருந்து பார்க்கலாம் என்று திட்டம் தீட்டினான் பரந்தாமன்.
என்னம்மா இப்படி வெறும் கையால தண்ணி பாக்குறியே கையில அடிபடாத பம்புசெட்டில் ஒரு மண்வெட்டியை கொண்டுவா அது வரைக்கும் இங்க நான் பாத்துக்குறேன் போமா என்றான் பரந்தாமன்
பரவாயில்லை ஐயா தண்ணி பஞ்சு முடிய போகுது இன்னும் கொஞ்ச நேரம் தான் தண்ணி பாய்ந்து விடும் என்றாள் கனகா
சரி பரவாயில்லை மண்வெட்டியை கொஞ்சம் எடுத்துகிட்டு வா நானும் நிலத்துல வேலை செஞ்சு ரொம்ப நாளாச்சு என்றான் சிரித்தபடி
இதைக்கேட்ட கனகாவுக்கு தனது நிலத்தின் மீது இவ்வளவு பாசமாக இருக்கிறார் பண்ணையார் மகன்கள் என்று நினைத்தபடி .இதோ எடுத்துக்கொண்டு வருகிறேன் ஐயா என்று பாம்பு செட்டுக்கு கிளம்பினால் கனகா
நினைத்தது பலித்தது என்று பெருமூச்சுவிட்டான் பரந்தாமன்
பிறகு ஊமையன் நீ கரும்புத் தோட்டத்திற்கு சென்று அங்கு தண்ணி பாய்வதற்கான ஏற்பாடுகளை செய்து இரு நான் சற்று நேரத்தில் வருகிறேன் என்று அவனையும் அங்கிருந்து தூரத்திற்கு அனுப்பி விட்டான் .
பிறகு கனகாவுக்கு தெரியாமலே அவள் பின்னாடியே வந்தான் பரந்தாமன். கனகாவும் வேகமாக நடந்தபடி வந்து கொண்டிருந்தார் அப்போது பம்பு செட்டின் அருகில் சந்திரனும் தீனாவம் போதையில் நிற்பதை தெரியாமல் பாம்பு சட்டை திறந்து மண்வெட்டியை குனிந்து தேடிப்பார்த்தால்
போதையில் இருக்கும் சந்திரனும் தீனா கனகாவின் கட்டழகை ரசித்தார்கள் போதை மேலும் தலைக்கேறியது கனகாவும் இவர்கள் பார்ப்பதை தெரியாமல் குனிந்த படியும் நிமிர்ந்த படியும் அங்குமிங்குமாக மண்வெட்டியை தேடினாள் .அப்போது அவளுக்குத் தெரியாமல் அவள் ஆடைகள் விளங்கியது அதைப்பர்த்தசந்திரனுக்கும் தீணாவுக்கும் மேலும் போதையின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள்
கனகாவின் பின்னாலேயே வந்த பரந்தாமன் இதையெல்லாம் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த பரந்தாமனுக்கு இவர்களுக்கு மது அருந்திவிட்டு தான் எந்த வேலையும் சாதித்துக் கொள்ள முடியும் என்று நினைத்தான்
பிறகு அவனுக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது தம்பிகளை எப்படியாவது இந்த கனகா உடன் ஒன்றுசேர வைத்துவிடவேண்டும் .அப்படி சேர்ந்து விட்டார்கள் என்றால் பிரச்சன வெடிக்கும் திருமணமும் நின்றுவிடும் என்று திட்டம்தீட்டினான் .
மண்வெட்டி கிடைத்துவிட்டது கனகாவும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவுடன் சந்திரன் தீனாவும்குறுகுறுவென்று பார்ப்பதை கவனித்தாள் கனகா உடனே தனது ஆடைகளை சரிசெய்து கொண்டாள் பிறகு மனதில் ஏதும் வைத்துக்கொள்ளாமல் அங்கிருந்து மண்வெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் சிரித்தபடியே
உடனே பரந்தாமனும் அவளுக்கு முன்பாக வேகமாக நடந்து சென்றான் ஒருவழியாக கனகாவின் கண்ணில் படாமல் இருந்த இடத்திற்கு சென்றுவிட்டான் பரந்தாமன்
ஒன்றும் தெரியாதது போல் கனகாவிடம் மண்வெட்டி வாங்கி அங்கு சிறிது நேரம் அப்படியும் இப்படியுமாக வேலை செய்தான் பரந்தாமன்
பிறகு மண்வெட்டியை கனகாவிடம் கொடுத்துவிட்டு கரும்பு தோட்டத்திற்கு தண்ணீர் பார்ப்பதற்கு உன் கணவன் ஊமையன் சென்று இருக்கான் நீயும் அங்கு சென்று வேலை பார் என்று கூறிவிட்டு பம்புசெட் நோக்கி நடந்தான் பரந்தாமன்
பப்பு செட்டு வந்ததும் தம்பிகள் போதையில் நிற்பதை பார்த்த பரந்தாமன் மெதுவாகப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்
என்ன தம்பி சந்தோசமாக இருக்கீஙகளா என்றான் பரந்தாமன் அதற்கு தம்பிகள் லேசாக சிரித்துக் கொண்டே தலை குனிந்தனர்
நீங்க மட்டும் எப்படி அண்ணா உங்களுக்கு போதையே இல்லை என்று கேட்டான் தீனா .
நான் நிறைய தண்ணீர் கலந்து மது அருந்துவேன் ஆகையால் எனக்கு போதை தாமதமாகதான் ஏறும் என்றான் பரந்தாமன்
பிறகு மெதுவாக பேசத் தொடங்கினான் அடுத்த ஒரே ஒரு ஆசை தான் உங்களுக்கு நான் நிறைவேற்றவில்லை என்றான் பரந்தாமன்
சந்திரனும் தீனாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் என்ன ஆசை எது என்று அவர்களுக்குத் தெரியவில்லை
வேறொன்றுமில்லை நீங்கள் இருவரும் இந்த கனகா மீது கொள்ளைஆசை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கும் தெரியும் இவளை மட்டும் எப்படியாவது சம்மதிக்க வைத்து உங்கள் ஆசையை நிறைவேற்றி விட்டேன் என்றால் எனக்கு அதுவே போதும் தம்பிகளின் அனைத்து ஆசையும் நிறைவேற்றி விட்டேன் என்ற பெருமை எனக்கு சேரும்என்றான் பரந்தாமன்
வெட்கத்தில் தலைகுனிந்த தம்பிகள் என்ன அண்ணன் இவ்வளவு நெருக்கமாக பேசுகிறாரே என்று வெட்கத்தோடு நின்றார்கள் தம்பிகள்
மறுபடியும் பரந்தாமன் என்ன கனகா மீது உங்களுக்கு ஆசை உண்டா இல்லையா என்றான் .
தீனா மட்டும் தலையை ஆட்டினான் சந்திரன் மவுனமாக இருந்தான்
பெரிய தம்பி விருப்பம் இல்லையா என்றான் பரந்தாமன்
விருப்பம் தான் ஆனால் பிரச்சினை ஏதாவது வந்துவிடுமோ என்ற பயம் தான் அண்ணா என்றான் சந்திரன்
நீ ஒன்றும் பயப்படாத தம்பி அவள் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் ஒன்றும் இல்லை சாதாரண கூலி வேலை செய்யும் ஊமை என் மனைவிதான் அவள் என்ன பெரியதாக பிரச்சினை செய்யப்போகிறாள் .நீ பயப்படாதே நான் பார்த்துக்கொள்கிறேன் என்றான் பரந்தாமன்
பிரச்சனை ஒன்றும் இல்லை என்றால் எனக்கும் சம்மதம் என்றான சந்திரன்
பார்ப்பதற்கு கனகா எந்தப் பிரச்சனையும் செய்யாத வால் போல் தான் தெரிகிறாள் அவளுக்கும் கண்டிப்பாக இதில் விருப்பம் இருக்கும் பார்ப்பதற்கு அப்படித்தான் அவள் தெரிகிறாள் .நன்றாக பேசுகிறாள் நன்றாக சிரிக்கிறாள் அவளுக்கு இதில் விருப்பம் போல் தெரிகிறது .அதனால் உங்கள் ஆசையை நான் வெகு சுலபமாக நிறைவேற்றி விடுவேன் என்றான் பரந்தாமன் .
இதைக்கேட்டதும் சந்திரனுக்கும் தீணாவுக்கும் சற்று தைரியமாக இருந்தது ஆமாம் கனகாவை பார்ப்பதற்கும் அப்படி தான் தெரிகிறாள் நாம் எவ்வளவு தான் அவளை உற்றுப் பார்த்தாலும் அவள் கண்டு கொள்வதே இல்லை அப்படிப்பட்ட பெண்ணாகத்தான் இருப்பாள் போல் தெரிகிறது என்று மனதில் நினைத்துக் கொண்டார்கள் சந்திரனும் தீனாவும்
பரந்தாமனுக்கு சிறிது சந்தோசம் ஏற்பட்டது எப்படியோ தம்பிகள் கனகாவிடம் ஒன்று சேர்வதற்கு சம்மதித்து விட்டான்ஆனால் கனகாவை நினைத்து பார்த்தால் தான் சற்று பயமாக இருக்கிறது பிரச்சனை ஏற்பட்டதும் இவள் தற்கொலை செய்துக்கொள்ளாமல் ஏற்கனவே ஓடிப்போன குடும்பம் மாதிரி இவளும் ஓடி விட்டால் நன்றாக இருக்கும் .ஒருவேளை இறந்துவிட்டால் பெரிய பிரச்சனையாக முடிந்துவிடும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்து விடலாம் என்ன செய்வது எப்படியாவது தம்பியின் திருமணத்தை நிறுத்தி விட வேறு எந்த வழியும் இல்லை என்று மனதை தேற்றிக் கொண்டு அருகிலிருக்கும் தண்ணீரால் தனது முகத்தை கழுவினான் .
பிறகு பரந்தாமன் தம்பிகளை பார்த்து சிறிது நேரம் இங்கேயே படுத்து உறங்குங்கள் பிறகு வீட்டுக்கு செல்லலாம் என்று கூறிவிட்டு பரந்தாமன் கிணற்றின் தடுப்பு சுவர் மீது அமர்ந்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இறங்கி விட்டான்
தம்பிகளும் மது போதையில் மயங்கி படுத்துக்கொண்டனர் .பிறகு சிறிது நேரம் கழித்து மூவரும் வீட்டுக்கு கிளம்பிச் சென்றனர்
வீட்டுக்கு சென்றதும் பரந்தாமனின் மனைவி அமர்க்களமாக கிளம்பிக் கொண்டு இரந்தாள் புதுப் புடவை நகைகள் எல்லாம் மாட்டிக் கொண்டு கிளம்பி கொண்டு இருந்தாள்
நம்மிடம் சொல்லாமலே கிளம்புகிறாள் என்று மனதில் நினைத்தபடி பேச்சை கொடுத்தான் பரந்தாமன்
எங்கம்மா இவ்வளவு அமர்க்களமாக கிளம்புற என்றான் பரந்தாமன்
நான் மட்டுமல்ல மாமாவும் கிளம்புகிறார் என்றாள் மனைவி சிரிச்சுக்கிட்டு.
அப்பாவா அவர் எங்கே கிளம்புகிறார் என்று ஆச்சர்யத்தோடு கேட்டான் பரந்தாமன்
வேறு எங்கு கிளம்புவார் அவருடைய நண்பன் வீட்டுக்குத்தான் கிளம்புகிறார்
எதற்கு..
நண்பனின் மகனுக்கு திருமணம் நடக்கப் போகுது அல்லவா அவருக்கு புது துணி மணப்பெண்ணுக்கு புது துணி மற்றும் அவளுக்கு தேவையான நகைகள் எல்லாம் மாமா திருமண அன்பளிப்பாக கொடுப்பதற்காக கிளம்புகிறார் என்றால் மனைவி
பரந்தாமனுக்கு சிறிது கவலை என்னதான் நண்பனாக இருந்தாலும் திருமண அன்பளிப்பு ஏதோ ஒரு மோதிரம் தரலாம் இப்படி அனைத்து நகைகளும் கொடுத்தாள் நமது சொத்து பாதிகாலியாகிவிடும்போல் தெரிகிறது இப்படி ஒவ்வொருவருக்கும் கொடுக்க ஆரம்பித்தால் நமக்கு ஒன்றுமே மிஞ்சாது. என்று மனதில் நினைத்துக்கொண்டான் கொடுக்கட்டும் இன்னும் எத்தனை நாளைக்கு கொடுப்பார் என்று பார்க்கலாம் என்று மனதை தேற்றிக் கொண்டான் பரந்தாமன்.
உடனே என்னப்பா என்ற ஒரு குரல் பின்னால் கேட்டது திரும்பிப்பார்த்தால் பண்ணையார் புது வேட்டி சட்டை எல்லாம் அமர்க்களமாக இருந்தார் .
வாங்கப்பா என்றான் பரந்தாமன்
எங்கே உன் தம்பிகள் என்றார் பண்ணையார்
களைப்பா இருக்குதுன்னு சொன்னான் அதனால தூங்கப் போக சொன்னேன் அப்பா என்றான் பரந்தாமன்
சரி பரவாயில்லை நீ உங்க தம்பி இல்லாமல் எங்கேயும் வரமாட்டே அவனுங்க இருந்தா குடும்பத்தோடு என் நண்பரின் வீட்டுக்கு சென்று திருமண பரிசு கொடுத்து விட்டு ஆசீர்வாதம் செய்து விட்டு வரலாம் என்று நினைத்தேன் பரவாயில்லை நானும் என் மருமகளும் சென்று வருகிறோம் நீங்கள் மூவரும் ஓய்வு எடுங்கள் என்று கூறிவிட்டு மருமகளுடன் கிளம்பினார் பண்ணையார் நண்பன் வீட்டுக்கு
அங்கு ஊரில் அனைத்து தொழிலாளர்களும் முத்தையாவின் வீட்டின் அருகில் கூடியிருந்தனர் சந்தோசமாக .
பண்ணையார் வரப்போகும் செய்தியை கேட்டு சங்கரும் பண்ணையாரின் எதிர்பார்ப்பு க்காக காத்திருந்தனர் .
ரேகாவுக்கு ஒரே சந்தோஷம் நமது திருமணம் இவ்வளவு கோலாகலமாக நடக்கும் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்க வில்லை என்று மனதில் எண்ணிக் கொண்டாள்
எதிர்பார்த்தபடியே பண்ணையாரும் மருமகளும் வந்து சேர்ந்தனர் .உடனே ஊர் மக்கள் பண்ணையாரை கை கூப்பி வணங்கினார்கள் முத்தையாவும் ஆசையாக பண்ணையாரை கட்டியணைத்தபடி வரவேற்றார் .
ஊர் மக்களின் மரியாதை பார்த்த பரந்தாமனின் மனைவிக்கு பெரும் சந்தோஷம் பிறகுபண்ணையாரின் கையிலிருந்த புது துணியை எடுத்து சங்கரிடம் கொடுத்தார் .மருமகளே இந்த உனக்கும் புது துணி சீக்கிரம் கட்டிமுடித்துக் கொண்டு வா என்றார் பண்ணையார் .
இதைக் கேட்டதும் ஊர் மக்களுக்கு ஒரே சந்தோஷம் பண்ணையார் உறவு முறையை வைத்து அழைப்பது பெருமையாக நினைத்தார்கள் ஊர்மக்கள்
முத்தையாவுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது.
தன்னை மருமகள் என்று பண்ணையார் அழைத்தார் என்று நினைத்து சந்தோஷப்பட்டாள் ரேகா
அப்போது பண்ணையார் கூறினார்
முத்தையா ரேகா உனக்கு மருமகள் என்றால் எனக்கும் தான் மருமகள் அவளுக்கு நான் கல்யாணப்பரிசு எடுத்துக்கொண்டு கொண்டு வந்துள்ளேன் இதை நீ வேண்டாம் என்று சொல்லக்கூடாது திருமண அன்பளிப்பு என் விருப்பப்படி செய்கிறேன் என்றார் பண்ணையார்
முத்தையாவும் சரி உன் விருப்பப்படியே செய்டா என்று உரிமையோடு பண்ணையாரிடம் கூறினார் .
பிறகு சங்கரையும் ரேகாவும் புதுத்துணி உடுத்தி வீட்டு வாசல் முன்பு அமரவைத்து பண்ணையார் கொண்டு வந்துள்ள பழங்களை முன்னால் எடுத்து வைத்து ரேகாவுக்கு அனைத்து விதமான தங்க நகைகளை பண்ணையார் எடுத்துவைத்தார்.
பண்ணையார் நமது குடும்பம் மீது இவ்வளவு மரியாதை வைத்திருக்கிறாரே என்று நினைத்து ஆச்சரியப்பட்டு போனார்கள் சங்கரும் ரேகாவும்
பிறகு பண்ணையார் முறைப்படி அவர்களுக்கு சந்தனம் நலங்கை வைத்தார் .சிலபேர் சந்தனம் நலங்கு வைத்தார்கள் ரேகாவுக்கு சங்கருக்கும் ஒரு வழியாக நலங்கு முடிந்தது .
பண்ணையாரும் கொண்டு வந்துள்ள நகைகளை போட்டுக்கசொன்னார்
ரேகாவும் ஒவ்வொன்றாக எடுத்து மாட்டிக்கொண்டு தேவதைபோல் ஜொலித்தாள்.இதை பார்த்த பண்ணையாருக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது இதேபோல என் இரண்டாவது மருமகளும் அழகாகத் தான் இருக்கிறாள் எப்படியோ எங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டோம் ஆனால் எங்கள் கடமை முடிந்துவிட்டது அதுபோலதான் சங்கரின் திருமணமும் எங்கள் வீட்டு திருமணம் போல நினைத்து நான் இங்கு வந்திருக்கிறேன் திருமண தேதி அன்று நான் காலையில் வந்து விடுவேன் அன்று தாலி என் கையால் எடுத்துக் கொடுப்பேன் என்று பெருமையாக சொல்லி விட்டு கிளம்பினார் பண்ணையார்
பண்ணையாரின் பெருந்தன்மையை நினைந்து ஊர் மக்கள் சந்தோஷமாக பண்ணையாரை வழியனுப்பினார்
இதோடு பண்ணையார் சங்கரின் திருமணத்திற்கு வருவார் என்று எதிர்பார்ப்போடு வழி அனுப்பி வைத்தார்கள் ஊர்மக்கள் பண்ணையாரும் அங்கிருந்து சந்தோஷமாக மருமகளுடன் வீட்டுக்கு கிளம்பிச் சென்றார்..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.