NYD-75
அந்த ஞாயிறு சிவா அவளை அந்த பெண்கள் விடுதியில், விட்டு விட்டு சென்றான். அவளுக்கு மன பாரம் அழுத்தியது. தான் ஒரு அனாதை என்கிற உணர்வு அவளை மிகவும் தாக்கியது. அவள் அவனுடன் இருந்த நிமிடங்களை எண்ணி பார்த்தாள். ஒவ்வொரு நிலையிலும் அவன் அவளுக்கு காவலாகவே இருந்து வந்தான். இவள் என் மனையாள் என்று கூறித்தானே அழைத்து வந்தான். ஆனால் தன்னை ஏன் வேண்டாம் என்கிறான். வயது வித்தியாசம் அது இதுவென்று ஏதேதோ காரணங்களை சொன்னாலும், பணம் , பதவி படிப்பு இவைதானே மற்றவர்களுக்கு முக்கியம்.அந்த சுவேதா என்ன நிறம்? என்ன உயரம்? (என்ன கன்னம்? என்ன கன்னம்?தங்கம் பூசிய தாமரை.... நோ சாங்.. மேடம் இப்போ ரொம்ப கவலைல இருக்காங்கல்ல!!!)
எல்லாவற்றையும் விட மிக முக்கியம் வெள்ளை தோலும் மயக்கும் வசீகரமும்தானே . அதனால்தானே அவன் தன்னை விட்டு, வேறு ஒரு பெண்ணை மணக்க பார்த்தான். தனக்குத்தான் எதுவும் புரியவில்லை. அழுதாள். கண்கள் வீங்க அழுதாள். இவளை தேற்றுவார் இல்லாமல் அழுதாள். வெளியில் சென்ற தோழி வரும் வரை அழுதாள். அவள் வந்து திட்டி இரவு உணவு உன்ன கொடுத்தாள் . இல்லை என்றால் இன்னும் அழுது கொண்டே இருந்திருப்பாள்.சப்பாத்தியும் குர்மாவும் , வயதை நிரப்பியது. முதல் நாள் காலையில் இருந்தே அவள் சரியாகவே உண்ணவில்லை.
அவளுக்கு இந்த உணவு மிகவும் தேவையாகவே இருந்தது. உணவின் ருசி மட்டும் அல்ல, சமைப்பவரின் நல்ல மனதும் மிக முக்கியம் அல்லவா ? நல்ல எண்ணங்களுடன் சமைக்கும் போது அதன் பலன் உண்பவருக்குத்தானே ? அதனால்தானோ என்னவோ அந்த சமயத்தில் அவளுக்கு கிடைத்த உணவு மிக நல்ல பலனையே தந்தது. மனம் சற்று தெளிவானதுபோல தோன்றிற்று.
நல்லா சாப்பிட்டியா?
ம்ம். ,,
இன்னும் வேணுன்னா வாங்கிக்கலாம். அக்கா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. இங்க சாப்பாடு சூப்பரா இருக்கும். பாரு நா கூட கொஞ்சம் வெயிட் போட்டுருக்கேன்.நீயும் சீக்கிரம் குண்டாயிடுவ. அக்காவுக்கு ரொம்ப நல்ல மனசு . யாருக்கு எவ்ளோ வேண்ணாலும் போடுவாங்க. இன்னும் செய்யணுமேன்னு அலுத்துக்கவே மாட்டாங்க.
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது ஒரு தமிழ்ப் பழமொழியாகும். பசியால் வாடுபவர் பல சிறப்புகளை இழக்க நேரிடும் என்பதை இப்பழமொழி குறிக்கிறது. அதாவது பசியால் சிவந்து அந்த பசியை தீர்க்க உணவு கிடைக்காத மனிதன் தன்னிடமுள்ள மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், முயற்சி, தாளாண்மை, காமம் ஆகியவற்றை இழந்துவிடுவர் என்பது பொருள்.
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.
எங்களுக்கு இதெல்லாம் தெரியாது. பசி வந்தது. சப்பாத்தி சாப்பிட்டோம்,
அடுத்தது?? வேறென்ன? இன்னொரு சப்பாத்தி. .... இவ்வளவுதான் வாழ்க்கை என்ற ரீதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை பார்த்த கங்காவுக்கு மனம் சற்று இளகியது.
அன்றைய இரவு, சிவா போன் செய்தான்.
மீண்டும் ஆழ்ந்த அநத மயக்கும்குரல்,
எப்படி இருக்க கங்கா ?
பதில் வரவில்லை. என்ன இப்படி அனாதையா விட்டுட்டு போய்ட்டிங்களே என்று அவன் சட்டை காலரை பிடித்து உலுக்க வேண்டும் போல தான் இருந்ததது. மனதையும் வார்த்தையையும் அடக்கிக் கொண்டாள் . தந்தையே தன்னை விட்டு போனாலும் அவள் சிவா மீது ரொம்பதான் நம்பிக்கை வைத்திருந்தாள். அவளுக்கு அவன் மீது இருந்தது காதல் அல்ல. அதையும் தாண்டி வேறு ஏதோ. சிவாவுக்கும் அதேபோல் தானா ?
ஹலோ ஹலோ..
ம்ம்ம்.. பரவால்ல.
சாப்டியா ?
ம்ம்ம்..
நான் சாப்பிட்டேனான்னு கேட்க மாட்டியா கங்கா ?
பதில் வரவில்லை...
இட்ஸ் ஓகே...குட் நைட்..
போனை அனைத்தவளுக்கு மீண்டும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
சப்பாத்தியை உண்டவள் எங்கே? எங்கே ???
அதோ கட்டிலில்
தூங்கவில்லை. மேடம் மறுநாள் வகுப்பு தேர்வுக்கு ரிவிசன் பண்ணறாங்கோ.... அட!! நீ இவ்வளவு சின்சியரா????
இவள் அழுவதை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு மனம் தாங்கவில்லை.
இங்க பாரு கங்கா இன்னும் எத்தனை நேரத்துக்கு அழுதுகிட்டே இருப்ப? போ எழுந்து முஞ்சியை கழுவிட்டு வா.
பிலீஸ் என்ன கொஞ்ச நேரம் தனியா விடு.
தனியா மொளகால்லாம் அப்புறம், முதல்ல இப்ப போய் மூஞ்சிய கழுவிட்டு வா....
அவள் சொன்ன விதத்தில் இவளுக்கு கிளுக்கென சிரிப்பு வந்துவிட்டது.
இதோ இந்த பாடம் புரியாம நான் படற கஷ்டத்தை விடவா ஒனக்கு பெரிய கஷ்டம் ?
கங்கா சட்டென முறைத்தாள்.
சரி சரி என்னோடதை விட ஒனக்கு கஷ்டம் கொஞ்சுண்டு பெருசுதான் நான் ஒத்துக்கறேன் என்று துளியூண்டு கையில் காண்பித்தாள். தன்னை சமாதான படுத்தவே அவள் இப்படி செய்கிறாள் என்பதை புரிந்து கொண்டவள், மேலும் அவளை சிரமபடுத்தாமல் எழுந்து முகம் கழுவப் போனாள் .
நாம் துன்பத்தில் இருக்கும்போது நம்மை தேற்றுபவர்கள் எத்தனை முக்கியமோ , நம்மை சிரிக்கவைப்பவர்களும்தான் அத்தனை முக்கியம். நிலாவின் முயற்சி வெற்றி. துப்பட்டாவில் முகத்தை துடைத்துக்கொண்டு வந்தவள் அவள் புத்தகத்தை வாங்கி என்னவென்று கேட்டாள் .
பின்னர் இருவருமே படிப்பில் மூழ்கி விட்டனர். விரைவில் உறங்கியும்விட்டனர். வயதில் இருப்பவர்களுக்கு இது ஒரு சாதகம். அவர்களால் தங்களை மிக எளிதாக வேறு செயல்களில் மாற்றிக் கொள்ள முடியும். இப்போது இங்கு வந்ததில் இருந்து கங்காவுக்கு படிப்பது மிக வசதியாக போனது. எந்த சந்தேகம் என்றாலும் நிலாவே தீர்த்து விடுவாள். பேசிக் கொண்டேஅவரவர் வேலைகளை இருவரும் செய்து விடுவார்கள். அங்கே சத்யா இருந்தாள் தான். ஆனால் அவள் இவளை போல வாயடித்துக் கொண்டே இருக்க மாட்டாள். தான் உண்டு தன் வேலை உண்டு என்றுதான் இருப்பாள். அவளுக்கு எப்போதுமே மருத்துவம் பற்றியே சிந்தனை ஓடிக் கொண்டேதான் இருக்கும்., அன்று வந்த நோயாளிகள், அவர்களின் மருந்துகள், நோயை பற்றியும் நோயாளியின் நிலை பற்றியும் பெரிய மருத்துவர் சொன்னது, அதற்கு தொடர்பான விஷயங்களை இவள் படித்தது, இப்படித்தான் பெரும்பாலும் அவளது சிந்தனைகள் இருக்கும். அதை தாண்டி என்றால் எப்போதாவது முத்துவை பற்றிய சிந்தனை வரும். ஆனால் பெரும்பாலும் அவன் சிந்தனைகளை இப்போதெல்லாம் ஒதுக்கி விடுகிறாள். அவன் ஒரு புரியாத புதிர். எது எப்படியோ அவன்தான் கணவன். இவள் அவனை விரும்புகிறாள். இந்த உடலும் மனமும் அவனுக்கு மட்டுமே. இனி தனது வாழ்வில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த விஷயத்தில் அவள் மிக தெளிவாக இருக்கிறாள். அவனாகவே வந்து எப்போது தன்னை ஏற்றுக் கொள்கிறானோ அப்போது அவள் செல்வதற்கு தயார். பணம் , பெரிய வீடு பகட்டு இது எதுவும் வேண்டாம் அவன்தான் வேண்டும் என்ற முடிவில் அவள் மிகத்தெளிவாகவே இருந்தாள் . என்னதான் அவனாகவே வரட்டும் என்ற முடிவில் இருந்தாலும் ஏனோ அவனை பார்க்கும் போது உள்ளிருந்து ஏதோ ஒரு ஏக்கம் வரத்தான் செய்கிறது. மற்றவர்களுக்கு தெரியும் தன்னுடைய நல்ல குணம் அவனுக்கும் மட்டும் தெரியாமல் போனது ஏன் ? ஆச்சியிடம் கூட சொல்லாமல் திருமணம் செய்தவன் இவன். இருப்பினும் அவர் தன்னை ஏற்றுக் கொள்ளவில்லையா ? கண்ணாடியை பார்க்கும்போதெல்லாம் தான் நன்றாகத்தானே இருக்கிறோம்? அவருக்கு ஏன் என்னை பிடிக்கவில்லை என்று கண் கலங்கும்...... குணம் தெரியலைன்னாலும் பரவால்ல. அழகு கூடவா தெரியாது? என்னோட மனசும் உடம்பும் உனக்காக ஏங்கறது ஒனக்கு ஏன்டா புரியல ? மனம் அவனை கண்டபடி திட்டும். ஆனால் அவனுக்கு போன் கூட செய்து பேச மாட்டாள்.எல்லாவற்றையும் மனதிலேயே வைத்துக் கொள்வாள். அவள்தான் சத்யா. நிலாவோ வேறு விதம். அவளுக்கு எல்லாமே நன்றாக இருக்க வேண்டும். சுத்தம் என்ற பைத்தியம் பிடித்தவள். பெட்ஷீட்டை வாரத்தில் இருமுறையாவது துவைத்து விடுவாள். அந்த சிறிய அறையை சுத்தம் செய்பவரை தவிர இவள் இருமுறையாவது பெருக்கி விடுவாள். அவர் செய்வது பத்தாது என்று இவள் ஒரு முறையாவது துடைத்து விடுவாள். வாரத்திற்கு ஒரு முறை நிச்சயம் துணி அலமாரி புத்தக அலமாரி எல்லாவற்றையும் சுத்தம் செய்துவிடுவாள் . அவளுக்கு வாழ்க்கையில் நிறைய குறிக்கோள்கள், இலட்சியங்கள்.. நன்றாக சாப்பிட வேண்டும் என்பதே முதல் லட்சியம். எப்போதும் சுத்தம் எதிலும் சுத்தம் எங்கும் சுத்தம். எல்லாவற்றிற்கும் மேலாக அவள் கனவு நாயகன் அதர்வா..தினமும் அவனது போட்டோவிற்கு ஐம்பது முத்தங்களையாவது தந்துவிட வேண்டும். எந்த ஆசிரியையிடமும் திட்டு வாங்கவே கூடாது. இவ்வளவுதான், அவள் இலட்சியங்கள்.
உன்னோட வாழ்க்கையின் இலட்சியங்கள் என்ன? அவள் கேள்விக்கு பதில் தெரியாமல் திரு திருவென முழித்தாள் கங்கா . நன்றக படிக்க வேண்டும். சிவாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும்.. இதை தவிர அவள் எதையுமே யோசித்ததே இல்லை. தன்னை பற்றி அவள் என்றுமே சிந்தித்ததே இல்லை. இனிமேலாவது சிந்திப்பாளா ???
---------------------------------------------------------------------------------------------------
இதோ வசந்தியும் வந்து விட்டாள் . அவள் இறங்கி வருவதை ரிஷி பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவளின் குணம் தெரிந்தவன், அவளிடம் தானே பேச தயங்கினான். தவிர்த்தான் . இருப்பினும், வசந்தியை பார்த்த ஆராவுக்குத்தான் எப்படி இருக்கீங்க என்று சும்மா ஒரு வார்த்தையாவது கேட்கலாமே என்று தோன்றியது. அவளும் தயங்கினாள்தான். ஆனால் அதற்குள் வசந்தியும் லக்கேஜ் எடுக்கும் இடத்தில் இவர்களை கண்டுக் கொண்டாள் .
உங்கள எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு. ஆனா ...
நீங்க கௌசிக் அம்மாதானே?
எஸ் எஸ் நீக்க அவனோட பிரண்டா ?
நான் சத்யாவோட கசின்....சார் டெத்துக்கு வந்திருந்தோம்.
ஓஒ !!!
அவள் அடுத்து ஏதேனும் சிடுசித்தால் பெற்றவர்களுக்கு தலை குனிவாகிவிடுமோ என்று,
ஓகே பார்க்கலாம் என்று லக்கேஜை எடுக்க கொண்டு கிளம்பி விட்டான்.
இருப்பினும் அவள் பையை எடுத்து கொடுத்தான்.
தேங்க்ஸ் பா ,
இட்ஸ் ஓகே.. கிளம்பிவிட்டான்.
டேய் என்னடா இது, அவங்கள அவப்படிய தனியா விட்டுட்டு எப்படி போகிறது ?
ம்ம் அங்கேர்ந்து தனியா வந்தவங்களுக்கு இங்க போக தெரியாதா?அவங்க என்ன நம்மள மாதிரி சாதாரணமா ??தி கிரேட் தன்வந்திரி ஹாஸ்பிடலோட ஓனர்... அவங்களுக்கு பல பேர் வருவாங்க. நீங்க வாங்க.
டேய் என்னதான் இருந்தாலும் , பாவண்டா தனியா நிக்கறாங்க. போய் யாராவது வரங்களான்னு மட்டும் கேட்டுடு அருணும் சொன்னார்.
சரி,
ஆன்டி யாராவது உங்கள பிக்கப் பண்ண வாரங்களா ?
கௌசிக் வரேன்னு சொன்னான். என்னனு தெரியல.போன் லைன் போகல.முகத்தில் தவிப்பு தெரிந்தது.
சரி நம்பர் குடுங்க. நான் என்னோட போன்ல பேசவா???
அவன் இங்க பக்கத்துலதான் இருக்கானாம் . இதோ 5 மினிட்ஸ்ல வந்துடுவேன்னு சொன்னான்.
அனைவரும் கௌசிக்கின் வருகைக்காக காத்திருந்தனர். அவனின் கனவு நாயகியோ கார்த்திக்கின் வருகைக்கு காத்திருந்தாள்.....
மீண்டும் வருவாள் தேவதை.....