anuchandran
New member
- Messages
- 17
- Reaction score
- 18
- Points
- 3
தாரகை 4
மர்மமுடிச்சுகள்
மர்மமாய் அடையாளப்படுத்தவே
முடியப்பட்டவை…
அவை அவிழ்க்கப்படும்
வேளைதனில்
பல முடிச்சுக்கள்
முடியப்படுகின்றதென்பதே
நிஜம்…
நேரம் இரவு பத்தை நெருங்கியிருக்க அங்கு வந்து சேர்ந்தாள் அந்த மஞ்சளாடை அழகி. அங்கு வந்தவளை பார்த்து நவநீதன் ப்ரவீனை தவிர மற்ற மூவரும் சற்று அதிர்ச்சியுடன் பார்த்திருந்தனர்.
அப்போது பவித்ரா
“அது நிகனிகா தானே?” என்று கேட்க அப்போது ரக்ஷிதா
“ஹே உனக்கும் நிகனிகாவை தெரியுமா?” என்றுவிட்டு ஆகாஷை பார்த்து
“டேய் உனக்கு நியாபகம் இருக்காடா?” என்று கேட்க அவனும்
“ஆமா ரச்சு. இந்த பொண்ணு தானே அன்னைக்கு நமக்கு ஹெல்ப் பண்ணாங்க?” கேட்க
“ஹேய் வெயிட் வெயிட்… பவி உனக்கு எப்படி அவங்களை தெரியும்?” என்று ரக்ஷிதா கேட்க
“இவங்க தான் பவி நான் பர்சை மிஸ் பண்ணிட்டு தேடிட்டு இருக்கும்போது அதை கண்டுபிடித்து கொடுத்தாங்க.” என்று மூவரும் கூறிய காரணங்களை கேட்டிருந்த நவநீதனும் ப்ரவீனும் அதிர்ந்தனர்.
அப்போது அவர்களுக்குள் இருந்த அந்த சந்தேகம் துளிர்விட ஆரம்பித்தது. ஏற்கனவே நவநீதனுக்கும் ப்ரவீனிற்கும் அந்த பெண் தங்களை உளவு பார்த்திருக்கிறாளோ என்ற சந்தேகம் இருந்தது. இப்போது அந்த சந்தேகத்திற்கு வலு சேர்ப்பது போல் மற்ற மூவருக்கும் அவளை தெரியுமென்று கூற அந்த பெண் ஏதோ திட்டத்தோடு தான் தம்மை அணுகியிருக்கிறாளென்று அவர்களுக்கு உறுதியானது. நவநீதனும் ப்ரவீனும் தம் நட்புக்களிடம் இந்த பெண்ணை பற்றி கூறியபோது அந்த வீடியோவை காட்டிடவில்லை. அவ்வாறு காட்டியிருந்தால் அந்த பெண் யாரென்று அவர்களது நட்புக்கள் அடையாளம் காட்டியிருப்பார்கள். அப்படி காண்பித்திருந்தால் நவநீதனும் ப்ரவீனும் தம் நண்பர்களை அழைத்துக்கொண்டு இங்கு வந்திருக்க மாட்டார்கள்.
அதற்குள் அந்த மஞ்சளாடை அழகி அருகில் வந்து அவர்கள் ஐவரையும் பார்த்து சிநேகமான புன்னகைத்தாள்.
அவளை பார்த்து ரக்ஷிதா
“நீங்க நிகனிகா தானே?” என்று கேட்க ஆமென்பதாய் தலையசைத்த நிகனிகா என்றழைக்கப்பட்ட அந்த மஞ்சளாடை பெண் நவநீதனை நோக்கி
“நான் தொடுத்த விடுகதைக்கான விடை கிட்டிவிட்டதென்று நினைக்கிறேன்” என்று கேட்க அப்போது ஆகாஷ்
“ என்னங்க செந்தமிழ்ல பேசுறீங்க?அன்னைக்கு நல்லா தானே பேசுனீங்க?” என்று கேட்க அப்போதும் அதே மாறாப்புன்னகையுடன்
“அன்று நான் என் நாமத்தை தவிர வேறெதும் உரைத்ததாய் நினைவில்லையே…” என்று கூற கடுப்பான ரக்ஷிதா பலமாய் ஆகாஷின்
காலை மிதித்தாள்.
அவள் மிதித்ததும் ஆவென்று கத்த வாய்திறந்த ஆகாஷ் ரக்ஷிதாவின் முறைப்பை பார்த்ததும் வலியை பொறுத்துக்கொண்டே கஷ்டப்பட்டு சிரித்துவைத்தான்.
அப்போது ப்ரவீன் நிகனிகாவிடம்
“உங்களுக்கு என்ன வேணும்? எதனால எங்களை சந்திக்க விரும்புனீங்க?” என்று நேரடியாகவே கேட்டிட அதற்கும் அழகாய் புன்னகைத்தவள்
“என் மீதான ஐயம் நியாயமானது தான். அதுவே மனித இயல்பு. நான் கூறப்போகும் விடயத்தை கேட்டபின் தங்களின் ஐயம் அதிகமாகப்போவதும் உறுதி. ஆனால் என்னை நம்பியவர்களுக்காக நான் இதை செய்து தான் ஆகவேண்டும். அதோடு எந்த சந்தர்ப்பத்திலும் இந்த ஜீவன் இருக்கும் வரை தங்கள் ஐவருக்கும் எந்தவித தீங்கும் நேரவிடமாட்டேனென்று இந்நொடியில் உறுதியளிக்கின்றேன்.”
“தயவு செய்து என்ன விஷயம்னு விளக்கமாக சொல்லுங்க. இதை பத்தி யோசித்தே மண்டை காயுது.”
என்று நவநீதன் கூற மற்றவர்களும் ஆமோதித்தனர்.
“கூறுகிறேன். எனது நாமம் நிகனிகா. நான் இந்த பிரபஞ்சத்தின் நடுப்பகுதியை சேர்ந்தவள்.”
“நடுப்பகுதியா?அப்படியெல்லாம் கூட ஊர் பெயர் இருக்கா?” என்று ஆகாஷ் கேட்க
“அது ஊரல்ல. அது இந்த அகன்று விரிந்த பிரபஞ்சத்தின் இன்னொரு பகுதி.” என்று கூற நவநீதனோ
“பூமியின் நடுப்பகுதியில மனிதன் வாழ்வதற்கு தேவையான எதுவுமே இல்லையே. விஞ்ஞானிகளோட கண்டுபிடிப்பு படி பூமியோட நடுப்பகுதியில் அதிகளவான நிக்கலும் இரும்பும் இருப்பதாகவும் நடுப்பகுதியில் ஈர்ப்பு விசை இல்லாததால் உயிரினங்கள் வாழ்வதற்கான எந்தவித சாத்தியங்களும் இல்லைனு தானே சொல்லியிருக்காங்க.” என்று நவநீதன் கூற அப்போதும் அழகாய் புன்னகைத்தவள்
“கூறியிருப்பார்கள். ஆனால் அதனை அவர்கள் விழிவழியே கண்டதுண்டா?” என்று கேட்க
“பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு கண்டறிந்த ஒரு முடிவை பொய்னு சொல்லுறீங்களா?”
“நான் பொய்யென்று உரைக்கவில்லை. ஆனால் எதற்கும் மாற்றுக்கருத்தும் விதிவிலக்கும் இல்லையென்று தம்மால் மறுக்க முடியுமா?” என்று கேட்க
“மறுக்கமுடியாது தான். ஆனா அந்த விதிவிலக்குக்கும் ஆதாரம் வேண்டும்.” என்று விவாதிக்க தொடங்க இடைபுகுந்த ஆகாஷ்
“டேய் நான் சும்மாவே இந்த ஜாக்ரபி பாடத்துல வீக்கு. அதனால இந்த உலகத்தோட உள்பகுதி வெளிப்பகுதினு க்ளாஸ் எடுக்காமல் அவங்க என்ன சொல்லுறாங்கனு முதல்ல கேட்க விடு.” என்று கூற ப்ரவீனும்
“நவி அவங்க சொல்லி முடிக்கட்டும். அதற்கு பிறகு மற்றதை பத்தி பேசலாம்.” என்று கூற அவனும் அமைதியானான்.
“பிரபஞ்சத்தின் நடுப்பகுதியே எங்கள் உலகமான மத்யுக உலகம். பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் இறை தூதர்களுக்கும் துர்சக்திகொண்ட அனாகத வீரர்களுக்குமிடையில் பாரிய யுத்தமொன்று நடைபெற்றது. அந்த யுத்தத்தில் இரண்டு குழுக்களிலும் மனிதர்கள் இருந்தார்கள். இரண்டு குழுக்களுமே மும்முரமாக போர் புரிந்தது.
இறைவனின் ஆசியினாலும் இறைத்தூதர்களின் நல்லெண்ணத்தாலும் இறைத்தூதர் குழு வெற்றிவாகை சூடிட அனாகத வீரர்கள் குழு தோல்வியை தழுவினார்கள்.தாங்கள் வாழும் இந்த பிரபஞ்சம் இறைத்தூதர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அதன் பிறகு அனாகத வீரர்கள் குழு மத்யுக உலகிற்கு குடியேறவேண்டியேற்பட்டது. ” அப்போது ப்ரவீன்
“இந்த உலகத்துக்கும் உங்க உலகத்துக்கும் என்ன வித்தியாசம்? எல்லாருமே ஒரே உலகத்துல வாழ்ந்திருக்கலாமே?” என்று கேட்க
“ஆரம்பத்தில் அனைவரும் ஒன்றாய் கூடியே வாழ்ந்திருந்தனர். ஆனால் அனாகதர்கள் பிரபஞ்சத்தின் செழுமையையும் நன்மைகளையும் தம் செயல்களால் சீர்கெடச்செய்தனர். அதனால் கோபமடைந்த இயற்கை பிரபஞ்சத்தை அழிக்கும் செயலில் இறங்கிட சில மனித குழுக்கள் இறைவனின் தூதர்களின் மூலமாக இறைவனிடம் மன்னிப்பு வேண்டினர்.
அனாகதயர்களின் செயல்களால் கோபமடைந்திருந்த எம்பெருமான் மனமிரங்க மறுத்துவிட்டார். அதனால் உலகம் முற்றாய் அழியும் நிலைக்கு தள்ளப்பட செய்வதறியாது திகைத்தனர் இறைதூதர் குழுவினர்கள்.
இந்த நேரத்தில் கூட அனாகதயர்கள் தம் சீர்கேடான செயல்களை நிறுத்தாமலிருக்க பிரபஞ்சத்தை இழந்திடும் அபாயத்திலிருந்த இறைதூதர்கள் கோபமடைந்து அனாகதயர்கள் மீது போர் தொடுத்தனர். பிரபஞ்சத்தை காப்பதற்காக தொடுக்கப்பட்ட போரில் இறைதூதர்கள் வென்று தாங்கள் வாழும் இப்பிரபஞ்சத்தை தம் வசப்படுத்திவிட்டு அனாகதயர்களால் இனி எந்தவித அபாயமும் வரக்கூடாதென்றெண்ணி அவர்களை வலுக்கட்டாயமாய் பூமியின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் மத்யுக உலகில் குடியமர்த்தினார்கள்.
அவர்கள் மீண்டும் பிரபஞ்சத்தின் மேற்பகுதிக்கு வரக்கூடாதென்று எண்ணி இறைதூதர்களின் சக்தியின் உதவியோடு மேற்பகுதிக்கும் கீழ் பகுதிக்கும் இடையிலொரு நெருப்பு வளையத்தை உருவாக்கினர். அந்த நெருப்பு வளையத்தின் அனல் நெருங்க முயற்சிப்பவர்களை உருத்தெரியாமல் அழித்திட அதை நெருங்க பயந்து அனாகதயர்களும் அவர்களுக்கு உதவிய மனிதர்களும் மத்யுக உலகத்திலேயே வாழத்தொடங்கினர்.” அப்போது பவித்ரா
“எல்லாம் சரி நிகனிகா. ஆனா இப்போ எதுக்கு நீங்க எங்களை தேடி வந்திருக்கீங்க?” என்று கேட்க
“இத்தனை நாட்களாக மத்யுக உலகத்திலேயே இருந்த அனாகதயர்கள் இப்போது பிரபஞ்சத்தின் மேற்பகுதிக்கு வர முயற்சிக்கின்றனர். அப்படியொரு நிகழ்வு நடந்தேறிவிட்டால் இப்பிரபஞ்சம் முழுதும் உருத்தெரியாமல் அழிந்துவிடும்.” என்று நிகனிகா கூற அப்போது நவநீதன்
“நீங்க சொல்றது எதுவும் நம்பும் படியாக இல்லை. ஆனால் உங்க கண்களிலேயோ பேச்சிலேயே பொய் இருக்க மாதிரியும் தெரியல… நாங்க என்ன பண்ணனும்னு எதிர்பார்க்கிறீங்க?”
“இறைதூதர்கள் உருவாக்கிவிட்டு சென்ற அந்த நெருப்பு வளையத்தை முற்றாக உடைத்திட அனாகதயர்களின் தற்போதைய தலைவரான அதுராதகன் முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அந்த முயற்சி இன்னும் இரண்டு திங்களில் வெற்றியடைந்திட வேண்டும். இல்லையெனின் எப்போதும் அனாகதயர்களால் அந்த நெருப்பு வளையத்தை உடைத்திட முடியாது.” என்று கூற ப்ரவீன்
“அது எப்படிங்க இத்தனை நூற்றாண்டுகளாக உடைக்கமுடியாத அந்த நெருப்பு வளையத்தை இப்போ உடைக்கமுடியும்?” என்று கேட்க
“இத்தனை நூற்றாண்டுகளாக அதற்கான வேலைகள் நடைபெற்ற வண்ணமே இருந்தது. அந்நெருப்பு வளையத்தின் சக்தியை குறைப்பதற்காக மத்யுக உலகத்திலுள்ள மந்திர வேள்வி மெய்யுனர்கள் வருடம் முழுதும் வேள்வி நடத்துகின்றனர். அதன் பலனாக அந்த நெருப்பு வளையத்திலிருந்து தீக்குழம்பு வெளியேறி பிரபஞ்சத்தின் மேற்பகுதியை அடையும். இவ்வாறு தொடர்ந்து நடந்ததால் அந்த நெருப்பு வளையம் தன் முக்கால் பங்கு சக்தியை இழந்துவிட்டது. இப்போது இறுதி வேள்வி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த வேள்வி இரண்டு திங்களில் நிறைவுறுகின்றது. அந்த வேள்வி நிறைவுற்ற மறுநொடியே மீதமுள்ள அந் நெருப்பு வளையமும் தன் சக்தியிழந்து தீக்குழம்பாய் மாறி பிரபஞ்சத்தின் மேல் பகுதியை வந்தடைந்துவிடும். அதன் பின் அனாகதயர்களின் வருகையை யாராலும் தடுக்க முடியாது.” என்று நிகானிகா கூற ரக்ஷிதா
“நீங்க இன்னும் நாங்க என்ன பண்ணனும்னு சொல்லவே இல்லையே…”
“கூறுகிறேன். இந்த பேராபத்தை தடுக்க இரண்டு மார்க்கங்களே உள்ளன. ஒன்று அந்த வேள்விதனை நிறுத்த வேண்டும். அல்லது நெருப்பு வளையத்தின் சக்தியை அதிகப்படுத்த வேண்டும். அந்த வேள்வியை நிறுத்துவதென்பது அத்தனை சுலபமல்ல. அந்த வேள்வி தடைபடாமலிருக்க பல மந்திரகட்டுக்களை அமுல்படுத்தியிருக்கிறார்கள்.
தன்னை அண்டநினைப்பவர்களை கூட உருத்தெரியாமல் அழித்திடும் வல்லமைகொண்டது அந்த மந்திரகட்டுக்கள். அத்தோடு மந்திரக்கட்டை உடைத்திடும் முயற்சியில் சிறு பிழையேற்படினும் கூட அது நம் உயிரையே பறித்துவிடும். ஆதலால் அந்த நெருப்பு வளையத்தின் சக்தியை அதிகரிப்பதற்கான வேலையை செய்திட வேண்டும். அதற்கு தம் ஐவரின் உதவியை நாடியே யான் இங்கு வந்துள்ளேன்.” என்று கூற ஐவரும் ஒருவர் மற்றவர் பார்த்துக்கொண்டனர்.
இந்த பெண்ணை எப்படி நம்புவது என்ற கேள்வியே அனைவர் மனதிலும் இருந்தது. ஐவருக்கும் அவள் கூறியவற்றில் சற்றும் நம்பிக்கையில்லை. நடைமுறையில் உள்ளவற்றை கூறியிருந்தால் கூட அவர்கள் நம்பியிருப்பார்கள். ஆனால் இந்த பெண்ணோ கற்பனை கதைகளை எல்லாம் நிஜமென்று கூறி அதற்கு அவர்களின் உதவியை நாடிட அவங்களுக்கு தயங்குவதை தவிர வேறு வழியிருக்கவில்லை.
அவர்களின் தயக்கத்தை உணர்ந்த நிகனிகாவிற்கு எவ்வாறு அவர்களை சம்மதிக்க வைப்பதென்று தெரியவில்லை.
ஐவரும் தத்தமக்குள் ஏதோ பேசியபடியிருக்க அப்போது ஏதோ சத்தம் கேட்டு நிகனிகாவை திரும்பி பார்த்தனர் ஐவரும்.
அவர்களெதிரே நின்றிருந்த நிகனிகா இப்போது தரையில் விழுந்துகிடந்தாள். அவள் நிலைமையை பார்த்து பதறிய ஐவரும் அவளருகே ஓடிச்சென்று அவளை எழுப்பமுயன்றனர்.
அவளை தன் மடியில் கிடத்திக்கொண்ட நவநீதன் அவள் கன்னம் தட்டி எழுப்பமுயல பவித்ரா நிகனிகாவை பரிசோதனை செய்தாள்.
அவள் நாடித்துடிப்பை பரிசோதித்தவள்
“இவங்க பல்ஸ் ரேட் ரொம்ப லோவாக இருக்குடா. உடனடியாக ஆஸ்பிடல் அழைச்சிட்டு போகலனா அவங்க உயிருக்கே ஆபத்தாகிடும்.” என்று கூற அப்போது நவநீதனின் மடியில் கிடந்தவளின் உதடுகள் மெதுவாக அசைந்தது.
“என்னுயிர் சில விநாடிகளில் இவ்வுடலை விட்டு நீங்கி என் உலகினை அடைந்திட வேண்டும். இல்லையேல் எம் முயற்சிகள் அனைத்தும் மகாராஜாவின் செவிகளை எட்டிவிடும்.” என்றுவிட்டு மீண்டும் எந்தவித அசைவுமின்றி கிடக்க ஐவருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.
அவர்கள் தாமதித்த நொடிதனில் அவளின் உயிர் அவ்வுடலைவிட்டு நீங்கி அவளிருப்பிடம் சென்றுவிட்டது.
அவள் உயிர் அவ்வுடலை விட்டு நீங்கியதும் நவநீதனின் மடியில் கிடந்த அவள் உடலும் சிறுசிறு பட்டாம்பூச்சிகளாய் மாறி அங்கிருந்து பறந்துசென்றது. அதை பார்ந்திருந்த நால்வரும் அதிர்ந்து பின்னே அசைய நவநீதனோ பேயறைந்தது போல் அமர்ந்திருந்தான்.
அப்போது அவ்விடத்தையே அதிரச்செய்யும் வகையில் கேட்ட அந்த சிரிப்புசத்தத்தில் ஐவரும் தன்னிலையடைந்தனர்.
தன்னிலையடைந்ததும் ஐவரும் எழுந்து நின்று அச்சிரிப்பு சத்தம் எங்கிருந்து வருகின்றதென அறிய முற்பட அப்போது அவர்கள் எதிரே தென்பட்டார் கொள்ளித்தாய் கிழவி.
அவளை அங்கு எதிர்பார்க்காத ஐவரும் அவளை ஆச்சர்யத்துடனும் அதிர்ச்சியுடனும் பார்த்தபடியிருக்க கொள்ளித்தாய் கிழவி
“அவ உலகத்துக்கு அவ போயிட்டா. அவ இனி திரும்பி இங்க வர முடியாது.” என்று அவர் கூற அப்போது ப்ரவீன்
“அப்போ உங்களுக்கு அவங்களை தெரியுமா?உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்க அதற்கு நகைத்த அந்த கொள்ளித்தாய் கிழவி
“தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள் குவிந்து கிடக்க என்னோட ஆதிமூலம் அந்தி மூலத்தை தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் எப்போ வந்தது?” என்று ஏளனமாய் கூற ப்ரவீனிற்கு அதற்கு மேல் என்ன கேட்பதென்று தெரியவில்லை.
அப்போது நவநீதனை பார்த்த கொள்ளித்தாய் கிழவி
“உயிரை பயணம் வைத்து கூடுவிட்டு கூடு தாவி இன்னொரு உலகத்துக்கு வருவது சுலபமல்ல. தெய்வசித்தமில்லாமல் அது நிறைவேறுவதும் சாத்தியமில்லை. உன் அறிவை உண்மையை கண்டறிய பயன்படுத்தாத. சிக்கல்கள் நிறைந்த முடிச்சுக்களை அவிழ்க்க உபயோகப்படுத்து. நான் சொன்னது போல தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் சோதனைகள் தான்.” என்று கூற அப்போது பவித்ரா
“இப்போ நாங்க என்ன பண்ணனும்?” என்று கேட்க அவளை மெச்சுதலாய் பார்த்த கொள்ளித்தாய் கிழவி
“நீங்க ஐந்து பேரும் அவளோட உலகத்துக்கு போய் அவளை பாருங்க. அவ உங்களுக்கு உதவி பண்ணுவா. அவ உங்க சந்தேகம் அனைத்துக்கும் விடை கொடுப்பா.” என்று கூறிவிட்டு தன் இடுப்பில் தொங்கிக்கொண்டிருந்த அந்த சுருக்கு பையை எடுத்தாள் கொள்ளித்தாய் கிழவி.
அதை திறந்து அதனுள்ளே இருந்த சாம்பலை கையில் எடுத்தவள் கண் மூடி ஏதோ முணுமுணுத்துவிட்டு அதை காற்றில் வீசினாள்.
அந்த சாம்பல் ஒரு வெள்ளை நிற வளையத்தை உருவாக்கியதோடு அதிலிருந்து வெள்ளையும் மென்சிவப்புநிறமும் கலந்தாட்போல் ஒரு ஒளி வீசியது. அது பார்ப்பவர்களின் கண்களை கூசச்செய்யாதபோதிலும் அந்த இரவு நேரத்தில் அது பிரகாசமாகவே இருந்தது.
அதை பார்த்திருந்த ஐவரும் நடப்பதனைத்தையும் நம்பமுடியாமல் பார்த்தபடியிருக்க அப்போது அந்த கொள்ளித்தாய் கிழவி
“இந்த வழியாக அவ உலகத்துக்கு போங்க. அவ உங்களுக்காக காத்திருப்பா.” என்று கூற ஐவரும் சற்று தயங்கினர்.
ஆனால் இறுதியாக ரக்ஷிதா முன் வந்து
“நாம போகலாம். இவ்வளவு தூரம் வந்திடுச்சு. இனி தயங்குறதுல எந்தவித அர்த்தமும் இல்லை. இதனால எத்தனை பிரச்சினை வந்தாலும் நாம ஐந்து பேரும் சேர்ந்தே சமாளிக்கலாம்.” என்று கூற மற்றவர்களும் அதை ஏற்றுக்கொண்டு அந்த வளையத்தினுள் செல்ல தயாரானார்கள்.
அப்போது அந்த கொள்ளித்தாய் கிழவி
“இது இந்த உலக நன்மைக்காக போராட்டம். இதுல உங்களோட வெற்றி பல அனுமானிக்க முடியாத அழிவைகளை தடுக்கும். உங்களோட முன்னோக்கிய நகர்வு தான் எதிரிகளுக்கு எதிரான ஆயுதம். தயக்கம் கூட ஒருவகை சோதனை தான். கடந்து போங்க. எல்லாம் விதிப்படி சரியாக நடக்கும்” என்று கூறிவிட்டு தன் கையிலிருந்த அந்த சுருக்கு பையை ரக்ஷிதாவிடம் கொடுத்துவிட்டு
“இதுல உள்ள சாம்பல் உங்களுக்கொரு கேடயமாக இருக்கும். தகுந்த நேரம் வரும் போது இது உங்களுக்கு உதவும். ஜெயம் கிட்டட்டும்.” என்று கூறிவிட்டு அவர்களை அந்த வளையத்தினுள் செல்லச்சொன்னார். ஒவ்வொருவராய் உள்ளே நுழைய அவர்களது உருவம் மறைந்து காணாமல் போனது.
ஐவரும் உள்ளே சென்றதும் அந்த வளையம் மறைந்திட அதை பார்த்திருந்த கொள்ளித்தாய் கிழவி நேரே அங்கிருந்து ஆருட மலை நோக்கி சென்றாள்.
மலையின் அடிவாரத்தை அடைந்ததும் மலையின் உச்சியை நோக்கியபடியே கைகூப்பியவள்
“குருதேவரே உங்க சிஷ்யை கொள்ளித்தாய் வந்திருக்கேன். எனக்கு காட்சி கொடுங்க.” என்று மனதினுள் வேண்ட அடுத்த நிமிடம் அவள் முன் ஒரு உருவம் தோன்றியது.
அந்த உருவத்தை பணிந்து வணங்கிய கொள்ளித்தாய் கிழவி
“ குருதேவரே உங்க ஆசியால உலக நன்மைக்கான ஒரு செயலில் பங்பெடுப்பதற்கான பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு. நீங்க எனக்கு கற்றுக்கொடுத்த பஞ்சபட்சி சாஸ்திரத்தோட உதவியால தான் என்னால் இந்த ஐந்து பேரையும் இந்த போராட்டத்துக்கு தெரிவு செய்யமுடிந்தது. பஞ்ச பட்சி சாஸ்திரப்படி அந்த அதுராதகன் காகத்தை தன்னோட பட்சியாக கொண்டவன். அதை தெரிஞ்சிக்கிட்டுதான் அவன் இந்த மேல் பகுதி பிரபஞ்சத்தை தன் வசப்படுத்த நினைக்கிறான்.
ஆனா அது நடக்காம இருக்கனும்னா அவனோட பட்சியாக இருக்கிற ஐந்து பேரை கொண்ட ஒரு குழு மூலம் அவனை முடக்கனும். இந்த ஐந்து பேரும் பஞ்சபட்சி சாஸ்திரப்படி காகத்தை தங்களோட பட்சிகளாக கொண்டவங்க. அதோட இவங்களோட கிரகப்பலன் படி இரண்டு திங்களுக்கு இவங்களோட பலம் ரொம்ப குறைவாக தான் இருக்கும். ஆனா பாதாள உலக விதிப்படி பிரபஞ்சத்தோட அடிப்பகுதியை நோக்கி நகரும் போது மேற்பகுதியில் என்ன கிரகபலன்கள் இருக்கோ அதற்கு நேர்மாறாக இருக்கும். அதை சந்தர்ப்பமாக பயன்படுத்தி தான் அவங்க ஐந்து பேரையும் மத்யுக உலகத்துக்கு அழைச்சிட்டு போக சொன்னேன்.” என்று கொள்ளித்தாய் கிழவி தன் செயலுக்கான விளக்கத்தை தன் குருவிடம் கூற தேஜஸ் மிளிர்ந்த அவர் வதனம் அவளை பார்த்தபடியே ஒரு புன்னகையை சிந்தியது.
பின்
“கொள்ளித்தாய் நீ என் ஆஷ்டான சிஷ்யை. பஞ்சபட்சி சாஸ்திரத்தை இவ்வுலகில் உன்னை விட யாராலும் சரியாய் கணித்திட முடியாது. உன் கணிப்புக்கள் அத்தனையும் சரியே. ஆனாலும் கவனம் தேவை. விதியை வெல்லும் மதியும் உண்டு. சாஸ்திர கணிப்புக்களை உடைக்கும் சதியும் உண்டு. உன் கணிப்புக்களை மேலும் பலப்படுத்த எம்பெருமானின் அனுக்கிரஹம் உன் வசப்படவேண்டும். அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு காரண காரியம் உண்டு. இந்த கணிப்புக்கள் பலனை சற்று தாமதப்படுத்துமே ஒழிய நடப்பவற்றை முற்றாய் நிறுத்திடாது. ஆதலால் எம்பெருமானின் திருவடிகளை சரணடைந்து விடு. அவர் உனக்கு துணையாய் நின்றிடுவார்.”
“குருதேவா உங்க அறிவுரையை நான் ஏத்துக்கிறேன். என்னோட முதுமை இந்த போராட்டத்துக்கு எந்த காலத்துலயும் தடையாக இருக்கக்கூடாது நினைக்கிறேன். இந்த இரண்டு திங்களுக்கு என்னோட முழு ஞானத்தையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். அதனால் என்னோட உயிருக்கு கூட ஆபத்து வரலாம். அப்படி மட்டும் நடந்துட்டா என்னால சில விஷயங்களை சரிப்படுத்த முடியாமல் போயிடும். இந்த யுத்தம் முடியும் வரைக்கும் நான் உயிரோடு இருக்கனும் குருதேவா. அதற்கு எனக்கு உங்க உதவி வேண்டும்.”
“உன் கவலை எனக்கு புரிகிறது கொள்ளித்தாய். ஆனால் பிறப்போ இறப்போ காலசக்கரத்துடன் தொடர்பு பட்டது. அதனை இறைவனால் கூட நிறுத்திடமுடியாது. ஆனால் தள்ளிப்போடமுடியும். வைகாசி திருவிழாவிற்காக எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் காலம் வரை ஊரில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெற முடியாது. இக்காலத்தல் ஊரிற்குள் எமனின் வருகையென்பது சாத்தியப்படாது. அதனால் நீ கவலை கொள்ளத்தேவையில்லை. உனக்கு மரணம் சம்பவித்தாலும் மகோற்சவம் முடியும் வரை உன் ஆன்மா இவ்விடத்தை விட்டு நீங்க முடியாது. ஆதலால் நீ கவலை கொள்ள அவசியமில்லை.”
“நன்றி குருதேவா. என் முயற்சிகள் வெற்றியடைய என்னை ஆசிர்வதிங்க.” என்று கொள்ளித்தாய் கிழவி கைகூப்பி பாதம் பணிய அவரும் அவளை ஆசிர்வதித்துவிட்டு அங்கிருந்து மறைந்து போனார்.
அவர் சென்றதும் கொள்ளித்தாய் கிழவியும் அங்கிருந்து சென்றாள்.

Last edited: