Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வேய்ந்தனனின் வல்லினம் - Comments

வாவ் வாவ் வாவ் அசத்தலான ஆரம்பம் திவிக்கா ❣... மென்மையே உருவாய் அக்கா... அதிரடியே உருவாய் தங்கை... எதிர் எதிரான குணங்களுடன் அக்கா தங்கை... இருவரையும் நாயகனுக்கு பிடித்திருக்கிறது... என்ன நடக்க போகிறதோ...????
ரொம்ப நன்றிடா😘😘😍😍😍 போக போக தெரியும்.... அவனை பற்றி புரியும்😍😍😍😍
 
வேய்ந்தனின் வல்லினம்

நாவலாசிரியர் : திவ்ய ஸ்ரீ

ஹீரோஸ் : ருத்ரஜித், விஷ்வஜித்
ஹீரோயின்ஸ் : அபூர்வா, பிரகல்யா

அழுத்தமான காதல் கதை...

நிழலாய் நிஜமாய் ஓர் சதுரங்க ஆட்டம்!!!

முடிந்து போன தங்கையின் அத்தியாயங்களை புரட்டுகையில் தானுணர்ந்து செய்யாத தவறுக்கு சிறைவாசம் சென்றாள் ஒருத்தி!

தமக்கையின் குழந்தையாய் இருந்தவள் அவன் காதலில் குமரியாய் மாறிப் போக மறைக்கப்பட்ட ரகசியங்கள் கூட புதைந்து தான் போயிற்று ஆட்டத்தில்!

நிஜத்திற்கு நிழலாய் திரை மறைவில் மறைந்திருந்தவன் காதலியை நிரபராதியாக்க தேடிய தேடல் நிஜத்தை தூர விலக்கி விட நிழலாய் தொடர்ந்தான் அவள் பின்னே!

கண்களில் காதலுடன் நீ என்னை பார்க்க நான் மங்கல நாணேற்ற வேண்டும் என நினைத்திருந்தவன் அவள் அகம் நுழைந்து காதலாகி கரம் பிடிக்க, குழந்தையை காப்பாற்ற போராடும் தாயாய் தமக்கை எனும் அண்ணை தன் கழுத்தில் மங்கல நாணை ஏற்ற தோற்றுத் தான் போயிற்று ஒட்டு மொத்த அக்கா தங்கை பாசங்களும்!!!

நிஜம் நிழலாக நிழல் நிஜமாக மறைக்கப்பட்ட இரகசியங்கள் சிதற காதலை கொடுத்தவனே காயமாகிப் போக வாக்குகள் கூட காணாமற் போக விதி நுழைந்தது ஆட்டத்தில்!!!

விலகல் காதலை அதிகரிக்க மீண்டும் கண்ட நொடி வார்த்தைகள் மௌன மொழியாகிப் போக தேடி ஓடியவள் அடைக்கலமானாள் அவனவளாக!

வேய்ந்தனனின் வல்லினமாய் என்றும்!!!

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.
ரிஷி.

21-09-2021.
 
#வேய்ந்தனனின்_வல்லினம்

அப்பப்பா என்னமா twist வைச்சிருக்காங்க இந்த writer ji......
ஆன்டி ஹீரோ கதைனு சொன்னாங்க
ஆனா இதுல யாரு ஆன்டி ஹீரோ🤔🤔🤔 ருத் ஆ🤔 விஷ்வா வா🤔 எனக்கு ரெண்டு பேரையுமே பிடிச்சிருக்கே😍😍😍 அப்புறம் எப்படி அவங்கள ஆன்டி ஹீரோனு சொல்லுவேன்.❤❤❤

ருத் முதல்பார்வையிலேயே தனது சரிபாதியை இனம்கண்டு நேசிக்கிறான்❤ அக்காவுடன் கல்யாண ஏற்பாடுகள் நடக்கிறது ஆனால் இவனோ தங்கையை சைட் அடிக்கிறான் இப்ப இவ என்ன பிளான் பன்னுறான்🤔🤔
ஐயையோ கல்யாண பெண்ணை கடத்திட்டாங்களா😲 யாரு கடத்தினாங்க எதுக்கு கடத்தினாங்க😲 ருத் கல்யாணம் என்ன ஆனது🤔
விஷ்வா அண்ணனும் தம்பியும் எப்பவுமே இரு துருவங்கள் அப்படியா🤔
லியா அபூ சகோதரிகள் பாசம் மெய்சிலிர்க்கிறது😍 அதிலும் இறுதியில் அக்காவுடன் வெளியேறுவது.
அண்ணன் கடத்துறான் தம்பி பாதுகாக்கிறான் ஏனென்றால் அவள் அவனின் மனம்கவர்ந்தவள். யாரவள்🤔
நட்சத்திரா இவள் உண்மையிலே இந்த கதையின் 🌟 நட்சத்திரம். அவள் மேல் பாசத்தை காட்டும் விஷ்வா பாசம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாத ருத்... அவளது கடைசி நிமிடத்தில் பாசம் காட்டும் அண்ணனோ தொலைத்தூரம் பாசத்தை மறைத்த அண்ணன் மடியில் உயிர்போகிறது. அய்யோ நட்ஸ்க்கு என்ன ஆனது அவ ஏன் இறந்தால்🤔
லியா நட்ஸ் நட்பு அழகு😍😍😍 இந்த கதையில் எல்லா கேள்விகளுக்கும் ஆணிவேர்.
கரிகாலன் 😠😠
ஆதிமந்திரை ( wow 😍😍😍😍) இவங்க சுயமரியாதை கணவனிடமும் வேண்டும்னு காட்டுறது வேற லெவல். மன்னிப்பாருனு நினைச்சா கரிகாலனுக்கு கொடுத்த தண்டனை👌👌
மகிமா போன்றவருக்கு நட்புனா என்னானு தெரியாத ஜென்ம்ம்😠😠😠

வைகை ரொம்ப பாவப்பட்ட ஜீவன் நம்மல( வாசகர்கள்) மாதிரி. இந்த அண்ணன் தம்பி என்ன பண்ணுறாங்க ஏன் பண்ணுறாங்க எப்படி இப்படி பண்ணாங்க எதுவுமே தெரியாமா முழிக்கிறதால....

என்னடா இத்தனை கேள்விமட்டும் கேட்டுட்டு பதில் சொல்லலனு பார்க்குறீங்களா அது கதைல தான் தெரியும் என்ன அப்ப தானே எங்க பாவப்பட்ட குழுல உங்களையும் சேர்த்துக்கலாம்😂😂😂😂😂
கேள்விகள் மட்டும் இல்ல அழகான குடும்ப காதல் கலந்த ஆன்டி ஹீரோ கதை😍😍😍
அருமையான கதை
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹💕💕
 

New Threads

Top Bottom