Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

"வாவ்"😯 இந்த இமோஜி தான் எல்லா பதிவுலையும் போட்டுறப்பேன். கதை அவ்வளவு
சூப்பர் கா😍😍😍😍.

முடிஞ்சுது சொன்ன அப்போ தான் படிக்க தொடங்கினேன். முழுமையா இந்த ஸ்டோரியே படிச்சதும் நல்லா தான் இருந்திச்சு ஒரு சில இடம் ரொம்ப அழுத்தமா இருந்திச்சு🙁.
அடுத்த பதிவு வர காத்திருந்தா ரொம்ப கஷ்டமாயிருக்கும்.

ஆண்டி ஹீரோவே உண்மை தெரியாத வரை வசைபாடாம இருக்க முடிலே🤣🤣 ரொம்ப திட்டு வாங்கிட்டான் எங்கிட்ட ருத் பேபி என்ன பண்ண என்கிட்டயிருந்து திட்டு வாங்கினதும் அவனே, சைட் அடிக்க வெச்சதும் அவனே😉.

கடைசிலே அபூ சொன்ன மாறியே ஆண்டி - ஹீரோ கிடைச்சுட்டான் ஆனா அவன் தான் கடைசி வர ஹீரோவா இருந்திருக்கான்.

அபூ, லியா ஒருத்தவங்க மேல ஒருத்தங்க வெச்சிருக்க பாசம் இருக்கே கண்ணு பட்டுருச்சு😍😍😍😍 இரண்டு பேருக்கும்.

நட்ஸூக்கு இப்படி ஆகிருக்க வேணா😔😔 எல்லாம் விதியும் ரைட்டரோட சதியும் சேர்ந்து இப்படி ஆகிடுச்சே. தூய்மையான அவளோட கள்ளம்கபடமற்ற பாசம் அது உயிர் பிரியுற தருணம் வர இருந்ததுக்கே அந்த பொண்ண ரொம்ப பிடிச்சுடுச்சு😇😇.

ஆதிமா என்ன கட்ஸூ, என்ன பவரு அவங்களே பார்த்த உடனே லியா புரிஞ்சுகிட்டது தான் செம்ம ஷாக்கே🙃🙃, அவங்க முடங்கி இருந்தது பலவீனத்தால இல்லன்னு சொன்னது அவங்க மனோ பலத்த காட்டுது.

கரிகாலன் பண்ணது எப்படி தான் அந்த தாய்கிழவிக்கு சரியா பட்டதோ😡😡😡 நல்லவேளை விதி சரியான தண்டனையே எல்லாருக்கும் போய் கொடுத்திடுச்சு😌😌😌😌😌.

விஷ்வா தான் ஹீரோன்னு நினைச்சுட்டு இருந்த என்னோட பிஞ்சு ஹார்ட்டு பஞ்சா பறந்திடுச்சு அந்த கேடியும் ,ருத் தாடியும் செஞ்ச வேலையே பார்த்து🤣🤣 என்ன பண்ண ருத் சொன்ன மாறி அவனாவது ஆரம்பத்திலே இருந்தே வில்லன் இந்த கேடி ஹீரோ மாறி இருந்தே எல்லா வேலையும் செஞ்சிருக்கு🤭🤭🤭🤭.

வைகை, வந்தனா😜😜 தலமையிலே
கடைசிலே எல்லா பிரச்சனையும் முடிஞ்சுது🤭🤭🤭.

ரொம்ப சூப்பரா இருந்தது கா கதை❤❤❤❤❤💗💗💗💗 இந்த ஹார்ட்டு ருத்-அபூ, லியா-கிருஷ்க்கு🙈🙈🙈 இந்த விஷ்வா எனக்கு எப்போமே கிருஷ் தான்😁😁😁🥰🥰🥰🥰.
 
வாவ் வாவ் ரொம்ப அழகா இருக்கு கமெண்ட்ஸ்😍😍😍😍 பார்த்தேன் உங்க எல்லா வாவ்மே... ரொம்ப நன்றிமா.... ஒவ்வொரு யூடியும் பொறுமையா படிச்சது மட்டுமில்லாமல் அழகானவிமர்சனம் தந்திருக்கீங்க❤️❤️😍😍😍😍😍😘😘😘😘😘😘
 
வணக்கம் தோழமைகளே....

நான் திவ்யஶ்ரீ.....

வண்ணங்கள் போட்டியில் சாம்பல் நிறத்தில் கதை எழுதப்போகிறேன்.. வாய்ப்பளித்த நித்யா கார்த்திகேயன் அக்காவிற்கு என் நன்றிகள். கதை போடுறதுக்கு முன்னாடி ஒரு குட்டி டீசர் உங்களுக்காக....

டீசர்:

"அடடா... என் கண்ணே பட்டிடும் போலயே. பிரக்ஸ் அசத்துற?" என்றவளின் கழுத்தை தன் இருகைகளால் வளைத்து பிடித்துக் கொண்டபடி சிரித்தாள் அவளின் தங்கை அபூர்வா.

அபூர்வா சொன்னதை போல் பச்சை நிற பட்டில் தேவதைப் போல் ஜொலித்திருந்தாள் பிரகல்யா. மூக்கில் இருக்கும் வைரமூக்குத்தி மேலும் அவள் முகத்திற்கு அழகு சேர்க்க, இதழ்பிரித்து வெட்கத்தில் சிரிப்பவளை இமைமூடாமல் பார்த்த அபூர்வாவோ ஏக்கப் பெருமூச்சொன்றை விடுத்தாள்.

"ஏண்டி... பெருமூச்சு எல்லாம் பலமா இருக்கு?"

"அதுவா அக்கா... என் கல்யாணத்தை பத்தி நினைச்சு பார்த்தேன். அதான் எப்போ வரும்னு ரொம்ப ஏக்கமா இருக்கு." என்றவளைக் கண்டு இளநகை புரிந்தவள்,

"அதுக்கு இன்னும் இரண்டு வருசமாவது ஆகும். இன்னும் காலேஜ் முடிக்கலை, அதுகுள்ள கல்யாணத்தை பத்தி பேசுற?"

"ப்ச்... அது இல்லைகா. உனக்கு நார்மல் அரெஞ்சுடு மேரேஜ்கா. ஆனால் எனக்கு அப்படி கிடையாது. சும்மா ஆன்ட்டி ஹீரோ ஸ்டையில்ல மேரெஜ் நடக்கணும்." என்று கண்களை விரித்தவள், தனது முப்பத்திரண்டு பல்லையும் காட்ட, அவளை புரியாத பார்வை பார்த்தாள் அவளின் தமக்கை.

அபூர்வாவை பொறுத்தவரை பத்தாம் வகுப்பில் தொடங்கி, வாரமலர் மாதமலர் என்று எதையும் விடாமல் எதிர்மறை நாயகர்களின் கதைகளை விடாமல் படிப்பவளது மனதிலும் தனக்கும் இப்படி ஒரு திருமணம் நடந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைக் கோட்டைகளை வளர்த்தவளுக்கு கனவில் கூட தன்னை திருமண மேடையிலிருந்து கடத்தி செல்வது போன்ற சொப்பனம் தான் தோன்றும்.

"என்னாச்சு பூர்வா. கதைகள் வேற. நிஜம் வேற" என்றவளின் பார்வையில் தன் தங்கையை பற்றிய கவலை அப்பட்டமாக தெரிந்தது.

"போ அக்கா. நார்மல்லா கல்யாணம் நடக்குறதுல என்ன த்ரில் இருக்கும். கிட்நாப் பண்ணி தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுனாதானே வேற லெவல்ல த்ரில் இருக்கும்." என்று உற்சாகமாக கூறும் தன் தங்கையின் தலையிலேயே செல்லமாக கொட்டினாள்.

"போடி போய் தூங்குற வழியைப் பாரு." என்று அதட்டியவள், பின் நாளை நடக்கவிருக்கும் திருமணத்தை எண்ணிப் பார்த்தாள். நினைக்கும் போதே முகம் சிவந்தது, அது வெட்கத்தாலா? இல்லை தன் கணவனாக வருபவனை நினைக்கும் போதே தோன்றிய கர்வத்தாலா? என்று அவள் அறியவில்லை.

அன்று இரவு அனைவரும் உறங்கும் வேளையில் அவள் கைபேசி சிணுங்க, அதிலிருந்த குறுஞ்செய்தியை கண்டு அதிர்ச்சி பயம் வெட்கம் என்று பல்வேறுப்பட்ட உணர்ச்சிகள் அவள் முகத்தில் ஒரு சேரத்தோன்ற, சத்தமின்றி மண்டபத்தின் பின்புறம் சென்றிருந்தாள் பிரகல்யா.
அவள் கண்களோ அவ்விருட்டில் சுற்றும் முற்றும் ஆர்வத்தோடு, அவனைத் தேடத் தொடங்கியிருக்க,

"என்னதான் தேடுறியா?" என்றவனின் அழைப்பில் உடலில் ஒருவித சிலிர்ப்பு தோன்ற, அவனையே இமைமூடாமல் பார்த்தாள்.

மெல்ல அவளின் அருகே அடியெடுத்து வைத்தவனோ, அழுத்தமான பார்வை பார்த்தான். அவனது இதழ்களிலே முறுவல் பூத்திருந்தது. அந்த முறுவலைக் கண்டு தானும் சிரித்தவள் அறியவில்லை அந்த முறுவலின் பின் ஒளிந்திருக்கும் ரகசியத்தை.

அவளின் அருகே நெருங்கியவன் பெண்ணவளின் கண்களையே ஆழமாக பார்க்க, படபடத்த நெஞ்சினை கட்டுப்படுத்த இயலாமல் தவித்தாள் பிரகல்யா.

"பயப்படுறியா?" என்றவனின் கேள்வியில் "இல்லை" என்று மறுப்பாக தலையாட்ட, பின்னிருந்து அவளது மூக்கை மயக்கமருந்தால் நிரம்பிய கைக்குட்டைக் கொண்டு அடைத்திருந்தது முகமூடி அணிந்த ஒருவனின் கை.

இவை அனைத்தும் அவள் சுதாகரிக்கும் முன் நடந்துவிட குழம்பிப் போனவள், "ஏன்?" என்பது போல் தன் முன் நின்றவனை வலி நிறைந்த பார்வை பார்க்க, தன் கண்களின் அழுத்தத்தைக் கூட்டியவனோ,

"பயப்படுடி..." என்று ஆக்கிரோசமான குரலில் கத்த, மயக்கமருந்து செலுத்திய அந்த முகமூடி அணிந்தவனின் கைகளின் மீதே மயங்கி சரிந்தாள் பிரகல்யா.

மயங்கியவளை காரில் ஏற்றச் சொல்லி தன் பார்வையாலே கட்டளையிட்டவன், அங்கிருந்து தனது அழுத்தமான பார்வையை செலுத்தியபடி நகர்ந்தான் ருத்ரஜித்.

கல்யாண மண்டபத்தின் பெயர்பலகையோ காற்றில் அசைந்தாடிக் கொண்டிருக்க, அதில் ருத்ரஜித் வெட்ஸ் பிரகல்யா என்று பிரகாசமாக மின்னிக் கொண்டிருந்தது மணமக்களது பெயர்கள்.

வேய்ந்தனின் ஆட்டம் விரைவில்........

கருத்துக்களை பதிய,

Adeii nee thana da mapilai.. neeye ponna thukura oru vela aburva pesinatha ketu irupano.. apdi irunthalum aburva va thana kidnap pani irukanum😒😒
 
New Threads

Top Bottom