Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL எழுத்தாளினி நிசப்தா - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
983
Reaction score
588
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

நன்றி அக்கா 😍
 
எழுத்தாளினி நிசப்தா

....டீசர்....

தன் மனதின் பாரத்தை தாங்க முடியாமல்... வழியும் கண்ணீருடன்... அவளுடைய அறைக்கு வந்து... அவளின் டைரியை எடுத்துக் கொண்டு கட்டிலின் மீது பொத்தென்று அமர்ந்தாள் சாரல் எனும் திகழொளி சாரல்... நம் கதையின் நாயகி...

'ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது...' என்று மனதிற்குள் மானசீகமாக கேட்டுக் கொண்டு...

அவள் மனதில் உழன்று கொண்டு இருக்கும் கவலைகளை... பேனாவின் உதவுயுடன் அந்த டைரியில் செதுக்கினாள் சாரல்...

"என் வாழ்க்கை திசை மாறி... என் சந்தோஷத்தையும் சிரிப்பையும் மொத்தமாக இழுந்து இன்னையோடு இரண்டு ஆச்சு..." என்று எழுத தொடங்கி அதில் முழுவதுமாக மூழ்கி போனால் பெண்ணவள்...

அவள் அறையில் ரொம்ப நேராக இருப்பதை பார்த்து விட்டு... அதை பொறுக்க முடியாமல் அழைத்தார்... சாரலின் தாய் உமாதேவி...

"ஏய் சாரல்... எப்ப பார்த்தாலும் அந்த அறையில் அடைந்து கிடந்து... அந்த புஸ்தகத்திலேயே மூழ்கி போய் கிடப்பியா... வீட்டில் வேற வேலையே இல்லையா உனக்கு... எதையும் செய்யாமல் சோம்பேறி ஆக இருந்து என் உயிரை வாங்கு... போ... அங்கே பின்னாடி சமைத்த சாமானை போட்டு இருக்கேன்... போய் அதை கழுவுற வேலையை சீக்கிரம் பாரு... போடி..." என்று உமா கத்தும் குரலை கேட்டு... டைரியை மூடி வைத்து விட்டு... ஒரு விரக்தி புன்னகையை உதிர்த்து விட்டு...

அவரிடம் எந்த பதிலும் சொல்லாமல்... வீட்டின் பின்புறம் இருந்த பேக்கடைக்கு சென்று பாத்திரங்களை கழுவ சென்றாள் திகழொளி...

"அம்மா ஃப்ரண்ட்ஸ் கூட படம் பார்க்க தியேட்டர் போகனும்... அதனால் ஒரு ஐநூறு ரூபாய் குடுமா..." என்று அவள் அண்ணன் தமிழ்நெஞ்சனின் குரல் கேட்டது...

அதற்கு உமாவும்... "டேய் தமிழு ஐநூறு ரூபாய் போதுமா..." என்று கேட்க...

"ஹ்ம்ம் போதும்... நைட்டு வீட்டுக்கு வர லேட் ஆகும்... பாய் ம்மா..." என்று சொல்லி விட்டு... அவன் அங்கிருந்து வெளியே கிளம்பி சென்றான்...

இதை எல்லாம் கேட்டபடி... உணர்ச்சி துடைத்த முகத்துடன்... தன் வேலையை செய்து கொண்டு இருந்தாள் சாரல்...

*************

"சாரல் ஏன் இப்படி இருக்க..." என்று கவலையுடன் கேட்டாள் சாரலின் தோழி கயல்...

"ஒன்னும் இல்லயே கயல்..."

"உன் அம்மா ஏன் டி அப்படி இருக்காங்க..." என்று எப்போதும் கேட்கும் அதை கேள்வியை இப்பொழுதும் கேட்டாள் அவள்... சாரலும் எப்போழுதும் போல... எந்த பதிலும் சொல்லாமல் அவளை பார்த்து புன்னகை செய்தாள்...

"உன் உண்மையான சிரிப்பு காணாமல் போய் இரண்டு வருஷம் ஆச்சு சாரல்... இப்ப நீ சிரிப்பது செயற்கை மட்டும் தான்... அது கூட கண்டுபிடிக்க முடியாத முட்டாள் இல்லை நான்... எதை பற்றி கேட்டாலும் இப்படி சிரித்தே மழுப்பு... அவங்க பண்றது எனக்கே அவ்வளவு கோபம் வருது... அதை அனுபவிக்கும் உனக்கு கொஞ்சம் கூட கோபம் வரலையா டி சாரல்..." என்று கயல் சினத்துடன் கேட்க...

"அவங்களை அப்பாவே எதுவும் கேட்டாத அப்போ... என்னால என்ன பண்ணிட முடியும் கயல்.. அவங்க பண்றது எல்லாம் அவரும் தானே பார்த்துட்டு இருக்கார்... ஆனால் வாயை திறந்து ஒரு வார்த்தை எனக்கு சப்போர்ட்டா பேசுவது இல்லயே... அதுக்கு என்னால என்ன பண்ணிட முடியும்... எனக்கு சப்போர்ட் பண்ணி பேசுங்க ன்னு கெஞ்சவா முடியும்... இல்ல டி என்னால முடியாது... அதான் எல்லாவற்றையும் நானாக பழகிக் கொண்டேன்..." என்று கவலையை வெளியே காட்டாமல் பதில் கொடுத்தாள் திகழொளி சாரல்...

இதற்கு ஒன்றும் சொல்ல முடியாமல்... தன் தோழியையே கவலையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் கயல்...

யார் இந்த திகழொளி சாரல் ??
அவளுக்கு என்ன தான் பிரச்சினை ??
அவளோட அம்மா ஏன் இப்படி எல்லாம் பண்றாங்க ??
அவள் அப்பா ஏன் எதுவும் கேட்கலை ??

பதில் விரைவில்...

எழுத்தாளினி நிசப்தா - Comments
👇👇👇
 
நிசப்தம் - 1

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

எம். எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் குரலில் ஒலித்த இந்த பாடல்... கோவிலின் ஒலிபெருக்கியில் பாடிக் கொண்டு இருக்க... அதன் அர்த்தமுள்ள வரிகளை கேட்டு... தாயார் ரங்கநாயகியுடன் பள்ளிகொண்ட பெருமாள் சேர்ந்து குடிக் கொண்டிருக்கும் கருவறையில் நின்று அவர்களை கண்கள் மூடி சேவித்து கொண்டிருந்த திகழொளி சாரலின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் உடைப்பெடுத்தது...

"ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி... என் அப்பா எந்த ஒரு குறையையும் எனக்கு வைக்கலை தான் பெருமாளே... ஆனால்... இப்ப என் அப்பாவுக்கு நான் பிடிக்காத மகளாக போய்ட்டேனா... இதுக்கு எல்லாம் யார் காரணம் நீயா... ஏன் இப்படி எல்லாம் நடக்குது... நீ தான் அதுக்கு எல்லாம் காரணமா... என் சந்தோஷத்தை மொத்தமாக குழி தோண்டி புதைத்து விட்டீயே பெருமாளே... இது எப்பவும் மாறவே மாறாதா???..." என்று மானசீகமாக அங்கே துயில் கொண்டு இருக்கும் பெருமாளுடன் மனதில் அழுது கரைந்தாள் சாரல்...

கோவில் மணி ஓசையை கேட்டு... அவள் மனம் நடப்பு நிகழ்வுக்கு வந்து... கண்ணீரை துடைத்து கொண்டு... கண்களை திறந்து...‌ அந்த இறைவனை பார்த்தாள்...

பூஜாரி தீபாராதனை தட்டை அவள் முன்னே நீட்டினார்... சாரலும் அதை தொட்டு வணங்கினாள்...

"அம்மாடி சாரல்... அந்த பெருமாளை சேவிச்சிக்கோ மா... உன் குழந்தை மனசுக்கு எல்லாம் நன்மையாக தான் நடக்கும்... அந்த பெருமான் மேல் பாரத்தை போட்டு... உன் வாழ்க்கையை சந்தோஷமாக சீரோடும் சிறப்போடும் நல்ல படியாக வாழு மா..." என்று சொல்லி திருநீற்றையும் குங்குமத்தையும் கொடுத்தார் அவர்.‌..

அவளும் மென்னகையுடன் அதை வாங்கிக் கொண்டு... "கண்டிப்பா தாத்தா..." என்று சொல்லி... அதை நெற்றியில் இட்டுக் கொண்டு... அங்கிருந்து வெளியேறினாள் சாரல்...

கவலையுடன் போகும் சாரலை பார்த்து கொண்டு இருந்த பூஜாரி... "ஹ்ம்ம்... உன் அப்பத்தா இருந்த வரைக்கும் இளவரசி மாதிரி வாழ்ந்த குழந்தை... ஆனால் இப்ப சோகத்தை மனசுக்குள்ளே மறைத்து வாழ்ந்துட்டு இருக்கா... பாவம்..." என்று மனதில் நினைத்து வருத்தப்பட்டார் அவர்...

ஊதா வண்ணத்தில் பாவாடை தாவணி அணிந்து அழகு பதுமையாக இருந்தாள் பதினேழு வயது பருவ மங்கை திகழொளி சாரல்... வெள்ளை சருமத்தில் கிழங்கு மஞ்சளை தேய்த்து பூசியதில்... மஞ்சல் கலந்த வெள்ளையான முகமாக காட்சி அளித்தது... அதில் மாசு மரு ஏதும் இல்லாமல் லட்சணமாக இருந்தாள்... பார்வையில் நாட்டியம் ஆடும் இரு கண்ணின் மணிகள்... மூக்கில் பளிச்சென்ற தங்க மூக்குத்தி... தாமரை போன்ற இளஞ்சிவப்பு அதரங்கள்... கழுத்தில் மெல்லிய சங்கிலி... காதில் குலுங்கி ஆடும் ஜிமிக்கி கம்மல்... கொஞ்சம் சதை பிடிப்பு கொண்டு செதுக்கிய இடை... நடந்தால் சல் சல் என்று ஓசை எழுப்பும் மெல்லிய கால் கொலுசுகள்...

அவன் மாசு மருவற்ற முகம் போல தான் மனமும்... வானில் உள்ள நிலவாக சுற்றி திரியும் வெள்ளை மனம்... எல்லாரிடமும் நன்றாக பேசினாலும்... அந்த பேச்சு ஒரு அளவுக்கு தான் இருக்கும்... மனதில் உள்ள சோகத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டாள்... சோகம் அவள் மனதில் இருந்தாலும்... முகத்தில் செயற்கை புன்னகை எப்போதுமே தவழ்ந்து இருக்கும்... இது தான் சாரல்...

இப்போது அவள் ஊரில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுபெண் தான் திகழொளி...

பிறகு அவள் மனம் கொஞ்சம் அமைதி அடையும் வரை கோவில் பிரகாரத்தை சுற்றி விட்டு... அதன் பின்னர்... சாரல் அவளுடைய இரண்டு தெரு தள்ளி இருக்கும் வீட்டுக்கு நடையை கட்டினாள்...

வேலுார் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா எனும் ஊர் தான் இவளுடைய சொந்த ஊர்... அந்த ஊர் முழுவதும் கண்ணுக்கு குளிர்ச்சியாக பச்சை பசேலென்று இல்லா விட்டாலும்... அங்கங்கே ஓரிரு இடங்களில் பயிர் செய்யும் வயல் வெளிகள் எல்லாம் காணப்பட்டது...

சாரல் வீட்டின் உள்ளே நுழைந்ததும் ரேடியோவை போட்டது போல சட்டென்று கேட்டது ஒரு குரல்...

"வீட்டு கழுதைக்கு போனால் போன இடம்... வந்தால் வந்த இடம்... அந்த கிழவி என்ன பொண்ணு வளர்த்து வச்சி இருக்கு... இப்படி உபயோகம் இல்லாம வளர்த்தி வச்சி... என் உயிரை வாங்க தான் போல... ஹ்ம்ம்... அதுக்கு தான் சொகுசா மண்டையை போட்டுச்சோ... என்னவோ... எல்லாம் என் தலை எழுத்து... நான் வாங்கி வந்த வரம் அப்படி... பொட்ட கழுதையை நல்லா அடிச்சி வளர்த்து இருக்கணும்... ஆனால் இந்த வீட்டில் தண்ணி‌ தெளிச்சு வளர்த்து வச்சி இருக்காங்க...‌ எல்லாம் இந்த வீட்டு பெரிய மனுஷரை சொல்லணும்..." என்று சுப்ரபாதம் போல வசைப்பாதம் பாடினார் அவளுடைய அன்னை உமாதேவி...

"என்ன பத்தி என்ன வேணாலும் சொல்லுங்க... திட்டுங்க அம்மா... நான் அதை தாங்கிக் கொள்வேன்... ஆனால் என் அப்பத்தாவை பற்றி இப்படி தப்பா பேசி‌.. அவங்களை குறை சொல்லாதீங்க அம்மா..." என்று அவரிடம் காட்டமாக சொன்னாள் சாரல்...

"என்ன டி வாய் ரொம்ப நீளுது... எல்லா உன் அப்பா கொடுக்கும் இடம் தான்... அதான் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து மிதப்பா திரியுற..." என்று மேலும் ஏதோ சொல்லி கொண்டு இருக்க... அவள் அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டாள் சாரல்...

தன் மனதின் பாரத்தை தாங்க முடியாமல்... வழியும் கண்ணீருடன்... அவளுடைய அறைக்கு வந்து... அவளின் டைரியை எடுத்துக் கொண்டு கட்டிலின் மீது பொத்தென்று அமர்ந்தாள் திகழொளி சாரல்...

'ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது பெருமாளே...' என்று மனதிற்குள் மானசீகமாக கேட்டுக் கொண்டு...

அவள் மனதில் உழன்று கொண்டு இருக்கும் கவலைகளை... பேனாவின் உதவுயுடன் அந்த டைரியில் செதுக்கினாள் சாரல்...

"என் வாழ்க்கை திசை மாறி... என் சந்தோஷத்தையும் சிரிப்பையும் மொத்தமாக இழுந்து இன்னையோடு இரண்டு வருஷம் முழுசா ஆச்சு... பெத்த அம்மாவே மகளை வாய்க் கூசாமல் கண்ட மேனிக்கு திட்டுவது இந்த வீட்டில் மட்டும் தான் நடக்கும்... என் அப்பத்தா அந்த ஆண்டவன் கிட்ட போனதும்... பதினான்கு வருஷத்துக்கு முந்தி சண்டை போட்டுட்டு வீட்டை விட்டு போன இவங்க இங்க வந்துட்டாங்க... நானும்... எனனோட அப்பத்தா என்னை விட்டு போனாலும்... என் அம்மா என்னை தேடி வந்துட்டாங்க என்று நினைத்து சந்தோஷமாக இருந்தேன்.... ஆனால் அவங்களுக்கு என்னை பார்த்தால் அப்படி என்ன தான் வெறுப்பு ன்னு தெரியலை... கத்தி இல்லாம வார்த்தைகளால் என்னை ஒவ்வொரு நிமிடமும் கொன்னுட்டு இருக்காங்க.... இந்த கொடுமை யாருக்கும் நடக்க கூடாது பெருமாளே..." என்று எழுத தொடங்கி அதில் முழுவதுமாக மூழ்கி போனால் பெண்ணவள்...

(செந்தில்நாதன் மற்றும் உமாதேவி தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள்... மூத்தவன் மகன்... அவனுடைய பெயர் தமிழ் நெஞ்சன்... இளையவள் தான் திகழொளி சாரல்...

சாரலுக்கு ஒரு வயதாக இருக்கும் போதே அவள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் குடும்ப சண்டைகள் நிறைய வந்து... ஓர்நாள் அது முற்றிப் போய்... ஒரு வயது குழந்தையான சாரலை விட்டுட்டு... மூன்று வயதான தமிழை மட்டும் தூக்கிக் கொண்டு... உமா அவருடைய அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்...

அதன் பிறகு... யார் அவர் வீட்டுக்கு சமாதானம் செய்து பேச போனாலும்‌.. உமா திரும்பி மாமியார் வீட்டுக்கு வரவே இல்லை... பின்னர்... குழந்தை சாரலை அவளுடைய அப்பாவின் அம்மா சாந்தலட்சுமியும்... அவளுடைய அப்பாவும் தான் அம்மாவின் குறை தெரியாமல்... எந்த ஒரு குறையும் வைக்காமல்... மகிழ்ச்சியுடன்‌ செல்லமாக அவளை வளர்த்தனர்...

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான்... சாரலின் அப்பத்தா சாந்தா இறந்து போனார்... அந்த சமயத்தில் தான் சாரலுக்கு ஒரு சின்ன ஆக்ஸிடென்ட் ஆகி அவளுக்கு காலில் ஃப்ராக்சர் ஆனது... அந்த சமயத்தில் தான்... இதை விஷயத்தை கேட்டு... சாரலை பார்த்துக் கொள்ள அம்மா உமாவும்‌.. அண்ணன் தமிழுவும் வீட்டுக்கு வந்தனர்...

ஆனால்... பதினான்கு வருடம் கழித்து அவர்கள் ஒன்றாக இருந்ததில் நிறைய விஷயங்களில் யாருக்கும் ஒத்துப் போகவில்லை... அதனால் மூவருக்கும் சண்டை அதிகமாக வந்தது... செந்தில்நாதன் முதலில் எல்லாரையும் கண்டித்தாலும் பிறகு அவர் எதையும் கேட்டுக் கொள்ள வில்லை... அந்த தைரியத்தில் உமாவும் தமிழும் சேர்ந்து சாரலை ஒதுக்கி வைக்க நினைத்தனர்... சாரல் எதை செய்தாலும் உமாவிடம் இருந்து அவளுக்கு கிடைப்பது வெறும் வசைப் பேச்சுகள் மட்டும் தான்...

இந்த இரண்டு வருடங்களில் திகழொளி இதை எல்லாம் சகித்து வாழ பழகிக் கொண்டாள்...)

அவள் அறையில் ரொம்ப நேரமாக இருப்பதை பார்த்து விட்டு... அதை பொறுக்க முடியாமல் அழைத்தார்... சாரலின் தாய் உமாதேவி...

"ஏய் சாரல்... எப்ப பார்த்தாலும் அந்த அறையில் அடைந்து கிடந்து... அந்த புஸ்தகத்திலேயே மூழ்கி போய் கிடப்பியா... வீட்டில் வேற வேலையே இல்லையா உனக்கு... எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறி ஆக இருந்து என் உயிரை வாங்கு... போ... அங்கே வீட்டு பின்னாடி சமைத்த சாமானை போட்டுட்டு வந்து இருக்கேன்... வெரசா போய் அது எல்லாத்தையும் கழுவுற வேலையை பாரு... போடி..." என்று உமா கத்தும் குரலை கேட்டு... டைரியை மூடி வைத்து விட்டு... ஒரு விரக்தி புன்னகையை உதிர்த்து விட்டு...

அவரிடம் எந்த பதிலும் சொல்லாமல்... வீட்டின் பின்புறம் இருந்த பேக்கடைக்கு சென்று பாத்திரங்களை கழுவ சென்றாள் திகழொளி...

"அம்மா ஃப்ரண்ட்ஸ் கூட படம் பார்க்க தியேட்டர் போகனும்... அதனால் ஒரு ஐநூறு ரூபாய் குடுமா..." என்று அவள் அண்ணன் தமிழ் நெஞ்சனின் குரல் கணீரென்று கேட்டது...

அதற்கு உமாவும்... "டேய் தமிழு ஐநூறு ரூபாய் போதுமா..." என்று வாஞ்சையுடன் கேட்க...

"ஹ்ம்ம் போதும்... நைட்டு நான் வீட்டுக்கு வர லேட் ஆகும்... பாய் ம்மா..." என்று சொல்லி விட்டு... அவன் அங்கிருந்து வெளியே கிளம்பி சென்றான்...

இதை எல்லாம் கேட்டபடி... உணர்ச்சி துடைத்த முகத்துடன்... தன் வேலையை செய்து கொண்டு இருந்தாள் சாரல்...

அவள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் முடித்து விட்டு... அங்கே இருந்த வேப்ப மரத்தின் அடியில் சென்று... கண் மூடி அமர்ந்தாள் சாரல்...

உமா வெளியே நின்று அக்கம் பக்கம் பெண்களுடன் இணைந்து... யாருக்கும் உபயோகம் இல்லாத வெட்டியான ஊர் கதை எல்லாம் பேசிக் கொண்டு இருந்தார்கள்...

"ஹலோ ஆன்டி... சாரல் இல்லையா..." என்று நக்கலாக கேட்டாள் அவள்...

"அடி அகம் புடிச்சவளே... மூதேவி முகங்கழுவப் போனாளாம் மூணு கிணறும் பாழுங் கெணறாப்போச்சாம்...‌"

'இப்ப எதுக்கு தேவை இல்லாமல் என்னை கரிச்சு கொட்டுது இந்த கேனை தேவியார்... எதுக்கு இந்த சொலவடையை என் கிட்ட வாயில சுடுது...' என்று மனதில் நினைத்து கொண்டாள் அவள்...

"என்ன ஆச்சு ஆன்டி... புரியாத பாஷை எல்லாம் என்னிடம் பேசிட்டு இருக்கீங்களே..." என்று அங்கலாய்த்து சொன்னாள் அவள்...

"ஆமா இவ சீமையில் இருந்து இப்ப தான் குதிச்சு வந்து இருக்கா... அதனால நான் பேசுற பாஷை மகாராணிக்கு தெரியாவே தெரியாது..." என்று சீறினார் உமா...

"அட நான் ‌மகாராணியா... நீங்க சொல்லி இதை கேட்கிற அப்போ... உள்ளுக்குள் எனக்கு குளு குளு ன்னு குளிர்ச்சியாக இருக்கு ஆன்டி..." என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொன்னாள்...

"இதோ பாரு டி... ஆன்டி... பாட்டி... பூட்டினு... எல்லாம் என்னிடம் சொல்லிட்டு இருந்த... ஆஞ்சி புடுவேன் ஆஞ்சி... உன் அம்மா எனக்கு அக்கா முறை தானே... ஒழுங்கு மரியாதையா என்னை சித்தின்னு கூப்பிடும் வழியை பாரு..." என்று உமா கடுப்புடன் சொல்ல...

"டைம் இல்ல... டைம் இல்ல... ஆமா ஆன்டி... என் சாரல் எங்க இருக்கா... நானும் அவளும் சேர்ந்து படிக்க போறோம்..." என்று சொல்லி விட்டு... அவருடைய பதிலுக்கு காத்திருக்காமல் உள்ளே ஓடி விட்டாள்...

"இதுங்க எல்லாம் எங்க திருந்த போதுங்க... திமிர் பிடித்து திரியுதுங்க ரெண்டும்...." என்று வாயில் முனங்கி விட்டு... மீண்டும் வெட்டிக் கதை வாய் வலிக்காமல் பேச தொடங்கினார் உமாதேவி...

உள்ளே ஓடிய அவள் வீடு முழுக்க சாரலை தேடியவள்... எங்கேயும் இல்லாததால் வீட்டின் பின் பகுதிக்கு சென்றாள்...

அங்கே கண்களை மூடி அமர்ந்திருந்த சாரலை நோக்கியவள்... அவள் பக்கத்தில் சென்று அமர்ந்து... "சாரல் ஏன் டி இப்படி இருக்க..." என்று கவலையுடன் கேட்டாள் சாரலின் தோழி கயல்...

அவளுடைய குரலை கேட்டதும்... கண் திறந்து பார்த்த சாரல்... "ஒன்னும் இல்லயே கயல்..." என்றாள்...

"உன் அம்மா ஏன் டி அப்படி இருக்காங்க..." என்று எப்போதும் கேட்கும் அதை கேள்வியை இப்பொழுதும் கேட்டாள் அவள்... சாரலும் எப்போழுதும் போல... எந்த பதிலும் சொல்லாமல் அவளை பார்த்து புன்னகை செய்தாள்...

"உன் உண்மையான சிரிப்பு காணாமல் போய் இரண்டு வருஷம் ஆச்சு சாரல்... இப்ப நீ சிரிப்பது செயற்கை சிரிப்பு மட்டும் தான்... அது கூட கண்டுபிடிக்க முடியாத முட்டாள் இல்லை நான்... எதை பற்றி கேட்டாலும் இப்படி சிரித்தே மழுப்பு... அவங்க பண்றது எனக்கே அவ்வளவு கோபம் வருது... அதை அனுபவிக்கும் உனக்கு கொஞ்சம் கூட கோபம் வரலையா டி சாரல்..." என்று கயல் சினத்துடன் கேட்க...

"அவங்களை அப்பாவே எதுவும் கேட்காத போது... அவங்களை என்னால என்ன பண்ணிட முடியும் கயல்.. அவங்க பண்றது எல்லாத்தையும் அவரும் தானே பார்த்துட்டு இருக்கார்... ஆனால் வாயை திறந்து ஒரு வார்த்தை எனக்கு சப்போர்ட்டா பேசுவது இல்லயே... அதுக்கு என்னால என்ன பண்ணிட முடியும்... எனக்கு சப்போர்ட் பண்ணி பேசுங்க ன்னு கெஞ்சவா முடியும்... இல்ல டி என்னால முடியாது... அதான் எல்லாவற்றையும் நானாக பழகிக் கொண்டேன்..." என்று கவலையை வெளியே காட்டாமல்... வாயால் பதில் மட்டும் கொடுத்தாள் திகழொளி சாரல்...

இதற்கு ஒன்றும் சொல்ல முடியாமல்... தன் தோழியையே கவலையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் கயல்...

*************

உங்கள் கருத்துக்களை சொல்ல இங்கே சொடுக்கவும்
👇👇👇👇

 
நிசப்தம் - 2

சாரல் வானத்தை பார்த்துக் கொண்டு இருக்க... கயலோ சாரலை பார்த்துக் கொண்டு இருந்தாள்...

"ஏ புள்ள சாரல்... வானத்தில் மழை எப்ப வரும்... அது வரும் போது ஸ்லோவா வருமா..?? ஃபாரஸ்ட்டா வருமா...?? மழை வரும் போது... வானத்தில் இடி இடிக்குமா... இல்ல மின்னல் மின்னுமா... அதுக்கு நீ நேரம் காலம் எல்லாம் குறிச்சி முடிச்சியா இல்லையா டி..." என்று முறைத்துக் கொண்டே கேட்டாள் கயல்...

"என்ன காமெடியா கயல்... எனக்கு சுத்தமாக சிரிப்பே வரலை டி..." என்று சொன்னாள் சாரல்...

"உனக்கு கோபமும் வராது... சிரிப்பும் வராது... நீ ஒரு முற்றும் துறந்த முனிவி (முனிவர்) தான்..." என்று சொல்லி விட்டு அவளை பார்க்க...

"என்ன கயல்... ஏன் இப்படி பேசிட்டு இருக்க..." என்று கேட்டாள் சாரல்...

"இப்போ எதுக்கு டி இப்படி வெறிச்சி வெறிச்சி ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துட்டு இருக்க... இந்த தேவை இல்லாத நினைப்பை எல்லாம் ஒதுக்கி வைச்சிட்டு வா... நாம ரெண்டு பேரும் போய் படிக்கும் வேலையை பார்ப்போம்... இன்னும் இரண்டு மாதங்களில் நமக்கு பப்ளிக் எக்ஸாம் இருக்கு... உன் அம்மா கொடுமையை எல்லாம் கொஞ்சம் நினைக்காமல்... உன் படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்தி நல்லா படி சாரல்..‌. நிறைய மார்க் வாங்கி சென்னையில் இருக்கும் காலேஜில் சேர்ந்து... அப்படியே ஹாஸ்டலில் தங்கி ஜாலியாக படி... அங்க போய் மட்டும் தான் உன்னால் நிம்மதியாக இருக்க முடியும்..." என்று சாரலின் மீது உள்ள அக்கறையில் பொரிந்து தள்ளினாள் கயல்...

"எதுக்கு டி இவ்வளவு பேச்சு... விடு கயல்... நம்ம வாழ்கையில் எல்லாம் என்ன நடக்க வேண்டும் என்று இருக்கோ அது மட்டும் தான் நடக்கும் டி... நம்மால் எதையும் மாற்றி விட முடியாது... சோ... இது போல பேசி பேசி உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணிட்டு இருக்க..." என்று பொறுமையாக சொன்னாள் திகழொளி...

"ஹ்ம்ம்... நான் இது வரை மாமியார் கொடுமையை தான் வகை வகையாக காதால் கேட்டு இருக்கேன்... ஏன் சித்தி கொடுமையை கூட கேட்டு இருக்கேன்... பட் இங்க மட்டும் தான் நான் கண் கூடாக அம்மா கொடுமையை பார்க்கிறேன்..." என்று சலித்து கொண்டே சொன்னாள் கயல்...

"கயல் இப்படி கதை அடிச்சிட்டு இருக்காம... ஒழுங்கா படிக்க வந்த வேலையை மட்டும் பாரு டி... வா வா இயற்பியல் பாடத்தை படிக்கலாம்..." என்று சொல்லி சாரல் கயலை பார்க்க...

அவளோ... "அய்யய்யோ சாரல்... பிச்சிக்கிச்சா (பிசிக்ஸ்).... எனக்கு டங்குவார் ஏற்கனவே கிழிச்சி போய் தான் கிடக்கு... நான் வாயே திறக்க மாட்டேன் டி... பட் பிச்சி பிச்சி போடற அது மட்டும் வேண்டாம்..." என்று பீதியுடன் கூறினாள் கயல்...

அதைக் கண்டு வாய் விட்டு சிரித்த திகழொளி... "அது எல்லாம் முடியாது... இன்னைக்கு அது தான் நாம படிக்க போற சப்ஜெக்ட்..." என்று சொல்லி அவளை உள்ளே இழுத்து‌ கொண்டு சென்றாள் சாரல்... கயலும் வராத கண்ணீரை துடைத்து கொண்டே அவளுடன் போனாள்...

பிறகு... சாரல் தான் கயலுக்கு பிச்சிக்கும் பிசிக்ஸை அவள் மண்டையில் ஃபெவிகால் போட்டு ஓட்டிக் கொண்டு இருந்தாள்...

இரண்டு மணி நேரம் கயலுக்கு பல யுகமாக கழிய...

"சாரலு சாரலு என் செல்லம் தானே நீ... இதுக்கு மேல என் மனசும் மூளையும் தாங்காது டி‌... என்னை ஆளை விடு... நான் வீட்டுக்கு போறேன்..." என்று சொல்லி தொண்டை தண்ணி கிழிய கெஞ்சினாள் கயல்...

"சரி சரி... போனால் போகட்டும் என்று விடுறேன்... சாயங்காலம் வா கயல்... நாம மேக்ஸ் போட்டு பார்க்கலாம்..." என்று சொல்லி விட்டு சிரித்தாள் திகழொளி...

"ஹ்ம்ம்... விட மாட்டீயே... சரி ஈவ்னிங் வரேன்..." என்று சொன்னாள் கயல்...

அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது...

"உன் கேணை தேவி அம்மையார் தான் கதவை உடைச்சிட்டு இருக்காங்க போல... நீ இரண்டு மணி நேரம் நிம்மதியாக இருந்தால் பொறுக்காதே... போ போய் கதவை திறந்து பேச்சு வாங்கு..." என்று சாரலை முறைத்து கொண்டே சொன்னாள் கயல்...

"லூசு சும்மா இரு..." என்று சொல்லி விட்டு கதவை திறந்தாள் சாரல்...

"ரெண்டு மணி நேரமா உள்ள என்ன டி பண்ணிட்டு இருந்தீங்க..." என்று காட்டமாக கேட்டார் உமா...

'ஹ்ம்ம்... ரெண்டு பேரும் சேர்ந்து இப்ப தான்... டூயட் பாட்டுக்கு ரிகர்சல் பார்த்துட்டு இருந்தோம்... கேட்கிற கேள்வியை பாரு...' என்று மனதில் பதில் கொடுத்தாள் கயல்...

"நாங்க உள்ள உட்கார்ந்து படிச்சிட்டு இருந்தோம்..." என்றாள் சாரல்...

"படிச்சிட்டு இருந்தீங்களா... இல்ல என் கிட்ட அப்படின்னு பொய் சொல்லிட்டு இருக்கீங்களா..." என்று உமா சொல்ல...

"ஹ்ம்ம்... அது என்னமோ சொல்ல தெரியலை ஆன்டி... அந்த மேலே இருக்கும் ஆண்டவனுக்கு மட்டும் தான் இது அனைத்தும் வெளிச்சம்... அவர் எல்லா சரி தப்பு விஷயங்களையும் கண் கொண்டு பார்ப்பார்... ஆமா ஆன்டி... நீங்க ரெண்டு மணி நேரமா வெளியே நின்று என்ன பண்ணிட்டு இருந்தீங்க... ஓஓஓ... அங்க பொது அறிவு கலந்துரையாடல் நடந்துட்டு இருந்ததா ஆன்டி... இப்படி ஒரு அறிவு பூர்வமான விஷயம் என்று என்னிடம் சொல்லி இருந்தா நானும் அதில் வந்து கலந்து இருப்பேனே ஆன்டி..." என்று பட்டென்று சொல்லி அவர் மூக்கை உடைத்தாள் கயல்...

'ச்சே இவளை இந்த வீட்டில் அனுமதிக்கவே கூடாது ன்னு நினைக்கிறேன்... ஆனால் எங்க முடிய மாட்டேங்குதே...' என்று மனதில் கருவி...

"கரிச்சான் காவடி எடுதுச்சாம் வேல் மயில் சொல்ல தெரியாம வேலிக்குள் பூந்துச்சாம்... அதுபோல தான் உன் நையாண்டி பேச்சும்... ஏண்டி உங்க தப்பை மறைக்க என்னையே கொறை (குறை) சொல்லிட்டு இருக்கீயா அதுவும் என் வீட்டுக்கே வந்து... போடி உன் வீட்டுக்கு..‌‌." என்று உமாவின் வாயில் இருந்து எரிச்சலாக வார்த்தைகள் வந்து விழுந்தன...

"அடடா... நீங்க போக சொன்னா நான் போயிடனுமா ஆன்டி... அது எல்லாம் போக முடியாது..." என்று வேண்டும் என்றே மறுத்து பேசினாள் கயல்...

"கயல் இப்படி சண்டை போடாத ப்ளீஸ் டி..." என்று அவள் காதில் மெதுவாக சொன்னாள் சாரல்...

"சாரல் சும்மா இரு..." என்று சொல்லி அவளிடம் சொன்னாள் கயல்...

"என்ன டி அங்க ரகசியம் பேசிட்டு இருக்கீங்க..." என்று குரல் உயர்த்தி சொன்னார் உமா...

"ஹ்ம்ம்... அமெரிக்க ஜனாதிபதி எங்க சிநேகிதர் தான்... அவர் எங்க கிட்ட ஒரு பெரிய ரகசியம் சொன்னாரு... அதை தான் இப்படி குசு குசுன்னு பேசிட்டு இருக்கோம் ஆன்டி..." என்று சொல்லி கண் அடித்தாள் கயல்...

"அடி ராங்கி பிடித்தவளே... நான் நல்ல படியாக சொல்றே... ஒழுங்கா மரியாதையா உன் வீட்டுக்கு போயிடு..." என்று கடுப்புடன் சொன்னார் உமா...

"போகலை ன்னா.."

"ம்ம்ம்... விளக்குமாறு பிஞ்சிக்கும்..."

"நீங்க அதை பிக்கும் வரை என் ரெண்டு கையும் தேங்காய் பறிக்குமா என்ன..." என்று அவளும் விடாமல் பேச...

"கயல்... போதும் வாயை மூடு... வா நாம போகலாம்..." என்று அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு போக...

"ஏய் சாரல்... அதே சாக்கில் நீ எங்க டி போற..." என்று கத்தினார் உமாதேவி...

"நான் பறிக்க போற தேங்காயை கேட்ச் பிடிக்க என் கூட வரா..." என்று கயல் கத்த... சாரல் அவளுடைய கையால் கயலின் வாயை மூடிக் கொண்டு... "ம்மா நான் வாசல் வரைக்கும் தான் போக போறேன்... இவளை அனுப்பிட்டு வந்து விடுகிறேன் அம்மா..." என்று மெல்லிய குரலில் சொன்னாள் திகழொளி...

"சீக்கிரமா வந்து சேரு..." என்று சொல்லி விட்டு... சமையல் அறைக்கு போனார் உமா...

அவர் போனதும் கயலை வெளியே அழைத்துச் சென்றாள் சாரல்...

"அவங்க கிட்ட வாயை குடுக்காமல் இரு கயல்..."

"உன்னால தான் அவங்களை எதிர்த்து பேச முடியலை... நான் பேசினால் அதையும் ஏதாவது சொல்லி கெடுத்து விட்டுடு... உன்னை மாதிரி இறங்கி இறங்கி போகிறதால் தான் அவங்க தலை மேல் ஏறி உட்கார்ந்து மேலும் மேலும் ஆட்டம் ஆடிட்டு இருக்காங்க..." என்று கோபத்துடன் சொன்னாள் கயல்...

"கயல் ப்ளீஸ்... இப்படிகோபப் படாதே... எல்லாத்தையும் அந்த கடவுள் பார்த்துட்டு தான் இருக்கார்... எல்லாம் அவர் ‌பார்த்துப்பார்... நீ அமைதியா இரு கயல்..." என்றாள் சாரல்...

"சாரல்... அந்த கடவுள் நமக்கு துணை நிற்பார் தான்... ஆனால்... நமக்காக அவரே இறங்கி வந்து உனக்காக சண்டை போட மாட்டார்... உன் நன்மைக்காக நீ தான் பேசணும் டி... அது ஏன் உன் மர மண்டைக்கு புரிய மாட்டேங்குது..." என்று ஆதங்கத்தில் சொன்னாள் கயல்...

"ப்ச்ச்... நான் பேசினால் மட்டும் என்ன பெருசா மாறி விட போகுது..." என்று வெறுமையாக சொல்ல...

"அதை பேசி பார்த்தால் தான் தெரியும் சாரல்..."

"எனக்கு எதுவும் பிடிக்கலை கயல்... உன் அட்வைஸை உன்னோடு வச்சிக்கோ... அதை என்னிடம் சொல்லாத டி... ஈவ்னிங் முடிந்தால் வா... இல்லன்னா நாளைக்கு ஸ்கூலில் பார்த்துக்கலாம் சரியா..." என்று கயலிடம் திகழொளி சொல்ல...

"கடைசி வரை திருந்தவே மாட்ட... எப்படி வேணாலும் போ..." என்று சொல்லி விட்டு கோபமாக அவள் வீட்டுக்கு சென்று விட்டாள் கயல்...

கயல் கோபித்து கொண்டு போவதை பார்த்தபடி இருந்த சாரலுக்கு அவளை நினைத்து அழுவதா இல்லை சிரிப்பதா என்று தான் தெரியவில்லை...

தற்போது உமாதேவி சாரலை அழைக்கும் குரல் கேட்டு... அவளை எதுவும் நினைக்க முடியாமல் தடுக்க... ஒரு கசந்த புன்னகையை உதிர்த்து விட்டு... உள்ளே சென்றாள் திகழொளி சாரல்....

அவள் அம்மா கூப்பிட்டதுக்கு... "என்ன பண்ணனும்..." என்று மட்டும் தான் அவரிடம் கேட்டாள் சாரல்...

உமாவை அம்மா என்று சொல்ல சாரலுக்கு இயல்பிலேயே அவ்வளவாக வராது... இத்தனை வருடங்கள் உமா அவளுடன் இல்லாமல் போனதால் இருவருக்குள்ளும் அவ்வளவு நெருக்கம் ஒன்றும் கிடையாது... பெரும்பாலும் அவரை வாங்க போங்க என்று தான் சொல்வாள்... அப்படி யாரேனும் நெருங்கியவர்கள் அல்லது சொந்தங்கள் கூட இருந்தால் மட்டுமே அவரை அம்மா என்று அழைப்பாள்... அதுவும் மென்று முழுங்கி கஷ்டப்பட்டு தான் சொல்வாள்...

உமாவும் அவளிடம் ஒரு சராசரி அம்மாவை போல... பெற்ற பிள்ளையின் மேல் அன்போடும் பாசத்தோடும் அரவணைத்து கொண்டு இருந்து இருந்தால்... சாரலும் உமாவுக்கு அம்மா எனும் உரிய பிரியத்தை கொடுத்து இருப்பாலோ என்னவோ..??

"ஹான்... சாரலு... வீட்டில் இன்னைக்கு துணி மட்டும் தான் பாத்ரூமில் இருந்தது... அதை மொத்தம் நான் ஊர வைச்சி இருக்கேன்... அதை எல்லாம் துவைச்சு போட்டுட்டு... மதியத்துக்கு நானே சாம்பார் பொரியல் எல்லாம் பண்ணிட்டேன்... நீ போய் சாப்பாடு மட்டும் வடிச்சி வைச்சிடு... எனக்கு ரொம்ப கால் வலியாக இருக்கு... அதனால் நான் அப்படியே கொஞ்ச நேரம் படுக்கிறேன்... நீ போய் ஒழுங்காக வேலை எல்லாம் முடிச்சிட்டு என்னை வந்து எழுப்பி விடு..." என்று சொல்லி விட்டு உமாதேவி படுத்துக் கொண்டார்...

'அப்பத்தா... உன் கிட்ட ரொம்ப சொகுசாக இருந்து... உன்னிடம் வேலை எதுவும் செய்யாமல்... எதிர்த்து எதிர்த்து பேசி... ரொம்ப சோம்பேறி மாதிரி நான் இருந்தேன்... ஆனால் இப்ப பார்த்தியா அப்பத்தா... உங்க பையனோட மனைவி என்னை எப்படி எல்லாம் வேலை வாங்கிட்டு இருக்காங்க... இதுக்கு ஒரு விடிவு காலமே கிடையாதா அப்பத்தா...' என்று அவள் அப்பத்தா சாந்த லட்சுமியுடன் மனதோடு பேசிக் கொண்டு... அவள் அம்மா சொன்ன வேலையை எல்லாம் செய்து கொண்டு இருந்தாள் திகழொளி சாரல்...

***********

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்... 👇👇👇

எழுத்தாளினி நிசப்தா - Comments
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom