பெண்ணே 1.1
"அம்மு ஆ வாங்கிக்கோ மா ஸ்கூல் பஸ் வந்துரும்" தன் ஆறு வயது மகள் பின்னே அலைந்தாள் சாந்தினி.
"அம்மா எனக்கு போதும்"
"ஒரு வாய் வாங்கிட்டனா நைட் அம்மா உனக்கு பாஞ்சாலி ஆன்ட்டி கதை சொல்லுவேன்"
"ப்ராமிஸ்" தன் பிஞ்சு கரத்தினை நீட்டி கேட்டது சிட்டு.
"சரி ப்ராமிஸ்"
"அப்போ அம்முக்கு ஆ... ஊட்டு" தன் குருவி வாயை திறந்து உணவு வாங்கி கொண்டாள் அந்த சிட்டு.
உணவு ஊட்டி முடித்து தலை வாரிட்டு அவள் பள்ளி பையை அடுக்கி என அனைத்தையும் செய்து நிமிரும் போது மூச்சு வாங்கியது சாந்தினிக்கு.
"அம்மு எத்தன தடவ சொல்றது. சாமி கும்பிட்டுட்டு தான் வெளியே போகனும்"
"ம்மா எனக்கு அந்த சாமிய பாத்தா பயமா இருக்கு நான் வரமாட்டேன்" என்று மிரண்டு விழித்தாள் அவள்.
"அப்படிலாம் சொல்ல கூடாது அம்மு. இங்க வா எந்த சாமினு அம்மா கிட்ட சொல்லு" மகளுக்கு திருநீறு வைத்தவாறே கேட்டாள் தாய்
"ஆதோ நிறைய கை வச்ச பிளாக் சாமிமா" தன் தளிர் கரம் கொண்டு அங்கு இருந்த காளி படத்தை காட்டினாள் அவள்.
"அவங்க காளி சாமி மா "
"காளினா?"
"சக்தி டா"
"சக்தி யாரு?"
"இதோ இங்க இருக்காங்கள பார்வதி அவங்க தான்" என்று எழில் கொஞ்சும் சாந்த சொரூபினி காமாட்சியின் படத்தை காட்டினாள் பெரியவள்.
இரு படங்களையும் சிறிது நேரம் பார்த்தவள் "மா ஆனா இந்த படத்துல சிரிச்சிட்டு அழகா இருக்காங்க. அதுல மட்டும் ஏன் முறைச்சிட்டு இருக்காங்க?"
"அதுவா அம்மு யாராச்சும் பெரிய தப்பு பண்ணிட்டா பார்வதிக்கு கோபம் வந்து அவங்களுக்கு தண்டன தரதுக்காக காளியா மாறிடுவாங்க அதான் கோவமா பாக்குறாங்க"
"பெரிய தப்புனா?"
"பெரிய தப்புனா வா ? அது நேத்து அம்மா சொல்லி தந்தனே பேட் டச் அதுதான்"
"அப்ப நம்மள காப்பாத்த சாமி நேருல வருமா?" இமை கொட்டினாள் சின்னவள்.
"இல்லடா நம்ம மனசுக்குள்ள வந்து நமக்கு சக்தி தருவாங்க "
"அப்போ தப்பு நடக்கும் போது நானும் காளி சாமியா மாறி தண்டன தருவனா? பத்து கையு பெரிய யயய கண்ணு!!" தன் கைகளை விரித்து கண்களை உருட்டினாள் தக்ஷிணா.
தன் பக்தர்களையும் குழந்தைகளையும் துரதிர்ஷ்டங்களில் இருந்தும் பாதுகாக்கும் தக்ஷிணா காளியின் மறு பிறப்பா இவள்?
"அம்மு ஸ்கூல் பஸ் வந்துட்டு வேகமா வா" மகளை தூக்கி கொண்டாள் சாந்தினி.
மருண்டு விழிக்கும் பார்வை கனலை ஏந்தும் போது சாம்பலாக போவது ஆண்ஆதிக்கமா? அல்ல பெண் என்ற பேதமா ? புழு பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் போது ரசிக்கும் கூட்டம் எங்கள் சிறகை பிய்த்து எறிவதை கலாச்சாரம் என்று அங்கீகரிப்பது ஏன்?
ஆக்குவதும் அவளே அழிப்பதும் அவளே சிவசக்தி.
விடியல் அறிந்து பறவைகள் இரை தேட செல்ல அதன் ஒலியை மறைத்த வாகன ஓசைகள் மனிதர்களுக்கான இன்றைய டாஸ்க்(task) அதிகாலையிலேயே ஆரம்பித்துவிட்டதை சொல்லியது. இயத்திரங்களால் இயந்திர வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டு இருந்தனர் மனித இயந்திரங்கள் .
இந்த அவசர உலகத்தில் அதற்கு எதிராய் மிக பொறுமையாக தன் ஷர்ட்(shirt button) பட்டனை போட்டு கொண்டு இருந்தான் ஆதி அதியன் .
நேவி புளு ஷர்ட்,க்ரே கலர் பான்ட், ரேமன்ட் வெயில் வாட்ச், பில்லட்டு பிளாக் ஸ்சூ என பார்மல் சூட்டில் அட்டகாசமாக இருந்தான் அதியன்.
அவன் போடாமல் விட்ட இரண்டு பெத்தான் அவன் திண்ணிய மார்பை காட்ட புல்ஹான்டில் பிதிங்கி தெரிந்த அர்ம்ஸ் அவனை சிக்ஸ் பேக் ஹான்ட்சம் என்று சொல்லாமல் சொல்லியது. அடங்காத முடியை ஜெல்விட்டு அடக்கிவிட்டு இன்டர்காமில் அவன் தினமும் அருந்தும் ஹெல்த் மிக்ஸ்சை கொண்டு வர சொன்னவன் பைல்களில் ஆழ்ந்தான்.
ஆதி அதியன் வசந்தகுமாரின் மூத்த மகன் இளையவன் புவி வேந்தன். ஒற்றை சகோதரியுடன் சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்தான் வசந்தகுமார். அவரின் தந்தை ஏழுமலை உள்ளூரில் விளையும் தானியங்களை மொத்தமாக வாங்கி டவுனில் இருக்கும் கடைகளில் பிரித்து விற்று கொண்டு இருந்தவர். பெரிய வருமானம் இல்லை என்றாலும் நடுத்தர குடும்பத்திற்கு போதுமானதாக இருந்தது. போராடித்தான் குடிமுறைப் பொறியியல் படித்தார் வசந்தகுமார்.
சில காலம் வேலை செய்து தொழில் கற்றவர். கிராமத்தில் உள்ள வீடு நிலம் அனைத்தையும் விற்று அதுபற்றாமல் வங்கியில் கடன் வாங்கி அதுவும் பற்றாமல் தன் தாய் பவுனுவின் இருபது சரவனையும் அடகு கடையில் வைத்துதான் பவுன் கன்ஸ்ட்ரக்ஷனை தொடங்கினார். இன்று சிட்டியில் லீடிங் கம்பேனிஸ்லில் பவுன் கன்ஸ்ரக்டார்ஸ்சும் ஒன்று. அதற்கு அவர் கொடுத்த விலை அவரது முழு இளமைக்காலம். பிஸ்னசில் கால் ஊன்றி நிற்கவே முப்பதுக்கு மேல் ஆகிவிட்டது. கடன்களை அடைத்து நிமிர்ந்து நின்று நாற்பதுகளில் தான் வெற்றி மேல் வெற்றி அடைந்தார்.
தன் தந்தை உழைப்பில் பங்கு போட விருப்பம் இல்லாதவன் அதியன். வளர்ந்த பிறகு ஏழுமலையின் தொழிலை எடுத்தவன் மூன்றே வருடங்களில் வெளிநாட்டுக்கு தானியே ஏற்றுமதி செய்து எக்ஸ்போர்ட் பிஸ்னஸ் தொடங்கி இருந்தான். தந்தையிடம் கடன் வாங்கி தான் ஆரம்பித்து இருந்தான். அந்த கடனையும் அடைத்து அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் இளம் தொழிலதிபன் ஆதி அதியன்.
"ஹலோ விஷ்ணுராம் இன்னைக்கு ஆபிஸ் முழுக்க ப்ளவர்வாஸ் ல ரோஸ் வைக்க சொல்லுங்க அண்ட் வெரி இம்பார்டன்ட் பிங் வித் வொயிட் கலர் ரோஸ்சஸ்" என சிலவற்றையும் அடுக்கி "நான் எய்ட்கு அங்க வருவேன் அதுக்குள்ள பினிஸ் பண்ணிடுங்க" கட்டளை தான் இட நினைத்தான் அவனையும் மீறி துள்ளல் வந்து விழுந்தது.
"சார் இன்னைக்கு எந்த விஐபிக்கும் நீங்க அப்பாய்ண்ட்மெண்ட் தரலேயே " அப்பாய்ண்ட்மெண்டை சரி பார்தவாறே சொன்னான் அதியனின் பிஏவும் மேனேஜருமான விஷ்ணுராம்.
"டோன்ட் கொஸ்டின் மீ. டூ வாட் ஐ சே "
"ஓகே சார் பட் டுடே நியூ பிராஜக்ட்கு ஜெனரல் மேனேஜர் போஸ்ட் பிளஸ் கிண்டி பிராஞ்ச் மேனேஜர் போஸ்ட் கும் இன்டர்வியூவ் இருக்கு"
"ஐ நோ ட் வெல் ராம்" போனை கட் செய்துவிட்டு கண்களை மூட அவன் காதுக்குள் கேட்டது அவள் குரல் "எனக்கு பிங் வித் வொயிட் ரோஸ்தான் பிடிக்கும்"
"யாருடி நீ" மௌனமாக சிரித்துக் கொண்டான்.
--------------
"இன்றைய முக்கிய செய்திகள் பள்ளி மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாலியல் தொந்தரவு. பிரபல சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர் கைது. அரை நிர்வாணமாக ஆன்லைன் வகுப்பில் வந்ததாக குற்றச்சாட்டு. முன்னாள் மற்றும் இந்நாள் மாணவிகள் தந்த புகாரின் பேரில் நடவடிக்கை. அவர்களுக்கு துணையாக இருந்தாக மேலும் இரண்டு ஆசிரியர்கள் மீதும் புகார். மற்ற பள்ளி ஆசிரியர்கள் மீதும் குவிந்து வரும் புகார். என்ன நடவடிக்கை எடுக்கும் பள்ளி கல்வி துறை?" எல்லா ஊடகங்களும் சுட சுட செய்தியை கக்கி கொண்டிருந்தது.
அதை பார்த்து பச்சை பச்சையாக திட்டி கொண்டே ஹாலில் இருந்த டிவியை அணைத்தவள் "அம்மா நான் கிளம்பிட்டேன் என்னோட போன பாத்தீங்களா" கையில் இருந்த ரெசியுமை சரிபார்த்து கொண்டே கத்தினாள் அவள்.
"ஸ்ஸ் பாப்பா கத்தாத உன் அப்பாவும் அண்ணனும் பாத்தா திட்டுவாங்க இன்டர்வியூ அதுவும் அவங்க கிட்ட பேச்சு வாங்காம போ. இந்தா உன் போன் முத அவங்க மூஞ்சில முழிக்காத எஸ்கேப் ஆகிடு " வாசலிலும் மாடியிலும் கண் வைத்தவாறே மெல்லிய குரலில் பதறினாள் துர்கா
"என்ன மா நான் எதோ தப்பு பண்ண போறமாதிரி விரட்டுற?. நீ பதறாத பஸ்ட். நான் ஏற்கனவே ரெண்டு கம்பெனில செலக்ட் ஆகிட்டேன். இங்க சேலரி அதிகம் அதான் இதையும் ட்ரை பண்றேன் " தாயை சமாதானப் படுத்தினாள் .
"எதுக்கு பாப்பா அலைச்சல் நீ சம்பாதிச்சு தான் நாம சாப்பிட போறோமா? உன் அப்பா அண்ணனே நல்லாதான் சம்பாதிக்கிறாங்க " மகளின் கன்னம் வருடினாள் தாய்.
"மா பொண்ணுங்க எப்பவும் அவங்க கால்ல நிக்க கத்துக்கணும். இந்த வேலைல நான் செலக்ட் ஆகிட்டா உனக்கு பிடிச்சதெல்லாம் நான் வாங்கி தரலாம். சரி மா டைம் ஆச்சு நான் கிளம்பறேன் பஸ் பிடிக்கனும்" தன் ஹென்ட்பேக்கை மாட்டிக்கொண்டு நடையை எட்டி போட்டாள்.
அவளையே பார்த்து இருந்த துர்காவின் கண்கள் கலங்கியது.
வேகமாக நடந்ததால் வியர்த்து வழியவும் தண்ணீர் குடித்து ஆசுவாசம் அடைந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். சிலர் போனிலும் பேச்சிலும் முழுகி இருக்க சில கண்கள் அவளை வெரித்தது.
ஏற்கனவே நடந்து வியர்த்ததில் எரிச்சலில் இருந்தவள் அவர்களின் துகிலுரிக்கும் பார்வையில் மேலும் எரிச்சலடைந்து அவர்களை முறைத்தவள்.
"ச்சை " என ஒற்றை சொல்லோடு சேலை தலைப்பால் இடுப்பை சுற்றி இழுத்து போர்த்தி கொண்டாள்.அவள் வாய் ஓயாமல் இசைத்தது ( திரும்பவும் அதே "பச்சை நிறமே பச்சை நிறமே" பாட்டுதான்.)
பத்து நிமிடம் சென்று வந்த அரசு பஸ் பிதுங்கி வழிந்தது. ஏறினாள் ஏறியது மட்டும் தான் தெரியும் நடத்துனர் ஸ்டாப் பெயரை சொன்னபோதுதான் அடித்து பிடித்துக் கொண்டு இறங்கினாள்.
தலை கலைந்து சேலை நலுங்கி பார்ப்பதற்கு பரிதாபமாக நின்றாள்.
இதற்கு யாரை திட்ட முடியும்.
வேலைக்கும் பள்ளிக்கும் செல்லும் அனைத்து பெண்களும் ஒரு நாளாவது அதை அனுபவித்து தான் ஆக வேண்டும். ஆனால் பல பெண்கள்
"பஸ்ட் அப்படித்தான் இருக்கும்" "அப்புறம்"
"அதுவே பழகிடும்" என்ற மந்திரத்தோடு ஒவ்வொரு நாளையும் பழகி கொள்கின்றனர்.
my experience:
நான் 10த் பொதுத்தேர்வு தமிழ் பரீட்சைக்கு நாலு மணிக்கெல்லாம் எழுந்து படிச்சி தலைக்கு குளிச்சி யூனிபார்மை நல்லா அயன் பண்ணி போட்டு புது ரிஃபான் லாம் வச்சு பின்னிட்டு சாமி கும்பிட்டு விபூதி லாம் பூசி டிப்டாப்பாக கிளம்பி பஸ்ஸில் ஏறினேன். என் ஊர் ஒரு கிராமம். என் பள்ளி மன்னார்குடி டவுனில் உள்ள ஒரு பிரபல கிறிஸ்தவ பெண்கள் பள்ளி. அது சுற்றுவட்டார மற்றும் கிராமத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு எக்ஸாம் சென்டர் அதனால் காலையில் அதிக கூட்டம் எல்லோரும் பத்தாம் வகுப்பு மாணவர்கள். அரை மணி நேர பயணம் பள்ளிவாசலில் எங்களை தள்ளிய பேருந்து நகர்ந்து விட்டது. பள்ளி முன் நான் ஒற்றை சடை அவிழ்ந்து ரிபன் கையோடும் மற்றொன்று பூ பிரிந்து தலை மயிர்கள் பிய்த்து கொண்டு வெள்ளை டாப்ஸ் கசங்கி விபூதியோடு சாந்து பொட்டும் களவாடப்பட்டு சில பல அடிகளும் மிதிகளும் வாங்கி வீங்கி அதைக்கூட பொறுத்து கொண்ட நான் கேலியாக என்னை பார்த்து சிரித்தவனை பல வண்ணங்களில் திட்டிக்கொண்டே தலைவாரி ஓசி கண்ணாடியில் சரி பார்த்து அதை தமிழ் மிஸ் பார்த்து படிக்காமல் மேக்கப்பா என்று கேட்டு பாச பார்வை பார்க்க நொந்து போய்விட்டேன் அன்றொரு நாள் .
பெண்ணே 1.2
எரிச்சலின் உச்சத்தில் இருந்தாள் அவள். யார் காரணம் என்று தெரிந்தால் திட்டலாம். ஆனால் திட்டாமல் விட்டால் அது அவள் இல்லையே. அவள் திட்டுவதற்கும் ஒருத்தர் உள்ளார் அவர்தான் காக்கும் கடவுள் விஷ்ணு. பாவம் அவரை தான் இவளிடம் இருந்து காக்க ஆள் இல்லை .
"கையோடு சேந்து பறக்குறதுக்கு பொண்ணுங்களுக்கு மட்டும் ரக்கை வச்சிருக்கலாம். செல்பிஸ் கடவுளே நீ. எப்போதும் அவுட்டேட்டாவே இருக்க. இங்க மாரி அங்கையும் எலக்சன் வச்சி ஆட்சிய மாத்த சொல்றேன். நீ மட்டும் நினைச்ச செகண்ட்ல சுவைங் சவைங்னு போய்ட்டு வர. நீயும் எங்க கூட பஸ்ல பிதுங்கி வந்து பாரு." இவள் திட்டியதால் அவரே முழி பிதுங்கி தான் நின்றார்.
"இரு அம்மாக்கு தெரியாம உனக்கு வைக்கிற சக்கர பொங்கல ஆட்டைய போடல நான் என் பெயரை மாத்திக்கிறேன். மிஸ்டர் விஷ்ணு பி ரெடி பார் கோவிந்தா கோ..விந்தா." இருந்த எரிச்சலில் வாய்விட்டே திட்டினாள்.
"புதுசா பண்ணபோற மாதிரி சொல்ற டெய்லியும் அதானே நடக்குது "
"ஓ மை கடவுளே!! விஷ்ணு நீயா பேசுற?"
"ஆமாம் பக்தா கொஞ்சம் திரும்பி பார்" திரும்பியவளுக்கு ஆனந்த அதிர்ச்சிதான் .
"ஹே விஷ்ணு சீனியர்... நீங்க எங்க இங்க?"
"அத நான் தான் கேட்கனும். ஆமா என்ன தனியா பேசிட்டு இருக்க? உங்க அப்பாவும் அண்ணனும் பண்ற டார்ச்சர்ல லூசாகிட்டியோனு நினைச்சன்" அவன் சிரித்தாலும் அதில் மறைமுக விசாரணையே இருந்தது.
அதை அறியாதவளா அவள்."ப்ச் இப்போலாம் ரொம்ப இல்ல விஷ்ணு"
"அப்போ டார்ச்சர் பண்றாங்கனு சொல்லு"
"வேற பேசுங்க விஷ்ணு" முகம் வாடிபோய் நின்றாள் அவள்.
"சாரி மைலி நானே பழச நியாபக படித்திட்டேன்."
"மறக்குற விசியமா அது... நீங்கலாம் இல்லனா நான் என்ன ஆகியிருப்பேன்னு தெரியாது" உள்ளே போன குரலில் சொன்னாள். அன்றைய நிகழ்வை எண்ணும் போதே அவமானமாக உணர்ந்தாள்.
"ஆனா இப்ப எல்லாத்தையும் எதிர்த்து நிக்க கத்துகிட்டேன்" வார்த்தைகள் மிக அழுத்தமாக வந்து விழுந்தன ஒரு நிமிர்வு தெரிந்தது.
அன்று இருந்தவள் இவள் இல்லை வாழ்க்கை பயணத்தின் சுவடுகள் கடுமை காட்டும் அவள் முகத்திலும் தீர்க்கமாக பார்க்கும் விழிகளிலும் நன்ங்கு தெரிந்தது.
"நீ ரொம்ப மாறிட்ட மைலி" அவளை ஆழ்ந்து பார்தான். முதிர்ந்த புன்னகையே பதிலாக தந்தாள் அவள்.
அதை பார்த்தவனுக்கு பழைய மைலியின் சிரிப்பு நினைவில் தோன்றியது சலைங்கை கூட்டங்கள் சிதறி விழுந்து எழுப்பும் சங்கீதம் போன்று இனிமையாக மறக்க முடியத ஒன்றல்லவா.
"நான் இங்க ஒரு கம்பெனிக்கு இன்டெர்வியூக்கு வந்தேன் விஷ்ணு"
"அப்படியா? இங்க தான் என் ஆபிஸ்சும் இருக்கு. எந்த கம்பெனி?"
"ஹில்ஸ்"
"ஹே வாவ் எங்க கம்பெனிக்கு தான் இன்டர்வியூக்கு வந்தியா வெல்கம் மைலி நான் அங்க தான் மேனேஜரா இருக்கேன்." அவள் கையை பற்றி குலுக்கி குதுகலித்தான்.
"விஷ்ணு நான் இன்டர்வியூக்கு தான் வந்தேன் "
"உன்ன பத்தி தெரியாதா? யுனிவர்சிட்டி டாப்பர். நான் ரெண்டு நாள் லீவ் சோ அப்ளிகேஷன்லாம்
பாக்கல இல்லனா அப்போவே தெரிஞ்சிருந்துருக்கும்."
அப்போது பென்ஸ் சிஎல்எஸ் ரூபி பிளக் கலர் கார் இவர்களை கடந்துதான் போனது. அதை விஷ்ணு கவனிக்க தவறினான் ஆனால் ஊள்ளிருந்தவன் இவர்களை பார்த்து கொண்டு தான் சென்றான். அந்த கார் நேராக ஹில்ஸ் செவன் என்ற பெயர் பொரிக்க பட்ட கட்டிடத்தில் நுழைந்தது. டிரைவர் கார் கதவை திறந்து விட அலட்சியமாக இறங்கி உள்ளே நடக்க தொடங்கினான் அதியன்.
விஷ்ணுவின் போனுக்கு அழைப்பு வர "சரி வா மைலி உள்ள போலாம்.
எம்.டி வந்துட்டாரு போல" அவளையும் உள்ளே அழைத்து சென்றான்.
உள்ளே சென்றவளுக்கு ஆச்சரியம் எங்கு பார்த்தாலும் வெயிட் அண்ட் பிங் காமினேஷனில் ரோஸ்கள் ப்ளூகலர் ரிப்பன்கலால் அழகாக முடிச்சிட்டு ஆங்காங்கே பிளவர்வாஸ்களில் சிரித்துக்கொண்டு இருந்தன. விழி விரித்து அதை பார்த்தாள் அவள்.
"என்ன மைலி இங்கயே நின்னுட்ட? வா"
"ஹே விஷ்ணு இங்க இருக்க எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சது. யாரோ எனக்காக பாத்து பாத்து செஞ்ச மாதிரி இருக்கு" பரவசமாக அவள் சொல்வதை கனிவாக பார்த்தான் அவன்.
"தெரியல மைலி ஆனா யாரோ இம்பார்ட்டன் பர்சன் இங்க வர போறாங்க போல மார்னிங் சார் கால் பண்ணி இதெல்லாம் பண்ண சொன்னாங்க" பேசிக்கொண்டே நடந்தனர் இருவரும்.
"நல்ல டேஸ்ட் உங்க எம்டிக்கு கண்டிப்பா அவரோட கேள்பிரன்டா தான் இருக்கும்"
"எனக்கும் அதான் தோனிச்சு பிகாஸ் எப்பையும் இல்லாம ரொம்ப ஹாப்பியா பேசினார். சரி நமக்கு எதுக்கு நீ இங்க வெயிட் பண்ணு உள்ள நேம் கூப்பிடுவாங்க நான் வரேன்."
"விஷ்ணு எனக்கு டச் அப் பண்ணனும் டிராவல் பண்ணதுல மோசமா ஆகிட்டேன் வாஷ் ரூம்??"
"ரைட் சைடு போ அங்க வாஷ்ரூம் மிரர்லாம் இருக்கும்"
"சரி விஷ்ணு யு கேரியான்"
"ஓகே பாய்" என்றவன் சென்றுவிட்டான்.
அதியனுக்கு வந்த கோபத்தில் போனை தூக்கி வீச அது சோபாவின்மீது போய் விழுந்தது.
"ச்ச இவள என்னதான் பண்றது? என்னை டென்ஷன் பன்றதே பொழப்பா வச்சிருக்கா யார்கிட்டயாச்சும் இளிச்சிட்டு" பல்லை நரநரவென்று கடித்துக்கொண்டு இருந்தான்.
"மே ஐ கம் இன் சார்?" விஷ்ணு
"கம் இன்"
"இன்டர்வியூக்கு எல்லாம் அரேஜ் பண்ணி முடிச்சாச்சு சார் நீங்க ரெடினா சார்ப்பா 10க்கு ஸ்டார்ட் பண்ணிடலாம் சார்"
"ஐ நோ மேன். நான் மெமரிலாஸ் பேசன்ட் இல்ல திருப்ப திருப்ப எத்தன டைம் சொல்லுவிங்க?" அவனை முறைத்த ஆதிஅதியன் ஒருவாறு வறுத்து தாளித்த பின்னே வெளியே அனுப்பினான்.
வெளியில் வந்ததும் இவ்வளவு நேரம் இழுத்து வைத்திருந்த மூச்சை விட்டு "பைத்தியமா இவன்? நல்லாதானய்யா பேசிட்டு இருந்தான்" மனதில் புலம்பி கொண்டே சென்றான் விஷ்ணுராம்.
புடவையை சரி செய்து தலையை ஒழுங்குபடுத்தி வந்து உட்கார்ந்தாள் அவள்.
அப்போது அங்கு வந்த ஒரு பெண் "சார் உங்களை கூப்பிட்டாங்க கம் வித் மி" முறைத்தவாறே சொன்னவள் "யார்?" என்று கேட்கும் முன்னே நடக்க ஆரம்பித்து இருந்தாள். அவளை அழைத்து சென்று ஒரு கதவை தட்டி உள்ள விட்டுச்சென்றாள்.
"உங்க கேபினா இது?"
க்ரேகலர் பிலேசர் அணிந்து கையில் ஒரு ரோஜா பூங்கொத்தை நீட்டிய ஆதிஅதியன் "டூ யூ லைக் டு பி மை லவ் பவி" என்று தன்முன் இருந்த கண்ணாடியை பார்த்து சொன்னவன் மயக்கும் புன்னகை ஒன்றை உதிர்த்தான். அவன் எதிரில் இருந்த கண்ணாடியில் அவள் உருவம் தோன்றி சிரிக்க திகைத்து நின்றவன் கையில் இருந்த பூங்கொத்து கனநேரத்தில பரிக்கபட்டது திரும்பியவன் பல்லைக் கடித்தான்.
"இன்னும் பெட்ரா ட்ரை பண்ணிருக்கலாம் அண்ணா" பூவை முகர்ந்து கொண்டே சொன்னான் புவி... புவி வேந்தன்.
"நீ இங்க என்ன பண்ற? ஆபீஸ் போகலயா?" அவன் கையில் இருந்த பூங்கொத்தை பரித்தான் அதியன்.
"எல்லாம் உன் ஆளை பாக்கதான். இங்க வந்துட்டாங்களாமே? அதான் ஒரு ஹாய் சொல்ல வந்தேன் பேசி ரொம்ப நாள் ஆச்சு. ம்ம் டெக்ரேஷன்லாம் பிரமாதம்."
"ஹே உனக்கு தான் இன்டர்வியூ பண்ண பிடிக்கும்தானே. இன்னைக்கு நீ இன்டர்வியூ பண்ணு புவி. எனக்கு இப்போ இன்ட்ரஸ்ட் இல்ல. நீ கேட்ட மாடல்ல பைக் வாங்கி தரேன்"
"ஓகே அதி ஆனா இன்னைக்கு எனக்கு ட்ரீட் வேணும்" செல்லிவிட்டு கண்ணடித்தான் புவி.
"டேய் முதல்ல வெளியே போடா நானே அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வரேன் அப்படியே வைக்கிறேன்" புவியை விரட்டினான் அவன்.
"சரி சரி போறேன் எனக்கு புவிங்கற பேர் போதும் கரடி பட்டம் வாங்க விரும்பல ஆல் த பெஸ்ட் பார் யுவர் ட்ரை" சொல்லி கொண்டே சென்றான் .
"டேய் கத்தாம போடா" என்றவனின் முகத்தில் இருந்தது வெட்கமா? பதட்டமா ?சந்தோஷமா? குழப்பமா?
அவன் போன் அடிக்க அவன் தந்தைதான் அட்டன் செய்ய அவர் கூறியதைகேட்டு கோபமாக போனை போட்டு உடைத்தான்.
______
"ஆமா மைலி இந்தா உன் ஃபயில் நானே கையில் எடுத்துட்டு வந்துட்டேன். நானும் இன்டர்வியூ எடுப்பேன் சோ அங்க வந்தா தேவையில்லாத பிரச்சனைவரும் அதான் உன்ன கூப்பிட்டுவிட்டேன்" விஷ்ணு
"ஒகே விஷ்ணு அப்பறம் பாக்கலாம்"
"ஆல் தி பெஸ்ட் மைலி" என மெல்ல சிரித்துவிட்டு சென்றாள்.
"ஹலோ விஷ்ணு இன்னைக்கு இன்டர்வியூ புவி பண்ணுவான் ஐ ஹாவ் சம் அதர் ஒர்க்ஸ்" ஆபிஸ் போனில் அழைத்த அதியன் "ஓகே சார்" என்ற உடனே கட் செய்து விட்டான்.
பாதி பெயர் முடிந்திருக்க இம்முறை இவள் பெயர் வந்தது. உள்ளே விஷ்ணு முதலில் அமர்ந்திருக்க புவி எம்.டி சீட்டில் அமர்ந்திருந்தான் அவன் அருகில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.
"டேக் யுவர் சீட்" கையை நீட்டினான் புவி. தன் பைலை அவனிடம் கொடுத்தாள் அவள்.
"வாட்ஸ் யுவர் நேம்?" அந்த பெண்.
"ஆராதனா ராகவன்" அவள் சொல்லி முடிக்கவும் சரியாக கதவை திறந்து கொண்டு வந்தான் ஆதிஅதியன்.
அனைவரும் எழுந்து நிற்க அவர்களை அமர சொன்னவன் ஒரு இருக்கையில் அமர்ந்து இன்டர்வியூவை கவனிக்கலானான். இன்டர்வியூ முடிந்ததும் அவளை வெளியில் காத்திருக்க சொன்னான் புவி. ஆராதனா வெளியில் சென்றவுடன் ஆதிஅதியனும் எழுந்து நின்றான்.
"வேறவேலை இருக்குனு சொன்ன?" கேள்வியாக பார்தான் புவிவேந்தன். அவனை ஒரு பார்வை மட்டுமே பாத்த அதியன் கண்ணாடி கதவை திறந்து கொண்டு சென்றுவிட்டான். தோளை குலுக்கிய புவி next என்ற ஒற்றை சொல்லோடு வேலையில் ஆழ்ந்தான்.
வெளியே வந்த ஆராதனா டீ குடித்தால் பரவாயில்லை என்று தோன்ற கேண்டீன் நோக்கி செல்ல
"பவி" என்று யாரோ சத்தமாக அழைக்கவும் திரும்பி பார்த்தாள். அவளை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தான் அதியன்.
"இவர்" அவள் பார்த்து கொண்டு இருக்கும் போதே அவள் அருகில் வந்தவன் அவளை தாண்டி சென்று அங்கு நின்ற ஒரு பெண்ணை அணைத்துக் கொண்டான். அவர்களை பார்த்து முகத்தை சுளித்தவள் ஒரு அன்னிய பார்வையுடன் நகர்ந்துவிட்டாள்
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம், வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது. உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
www.sahaptham.com