Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed ஊஞ்சல்

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 0



கடிகாரத்தின் விண்டர்ஸ்பிரிங் ஓசையை கேட்டு கண் திறந்தான் தாஸ். அவனது கைகள் அனிச்சை செயலாக பக்கத்திலிருந்த அனிதாவை தேடியது. அவளது மென்மையான இடுப்பு கைக்கு அகப்படாமல் ஏமாற்றத்துடன் கண் விழித்தான் தாஸ். கடிகாரம் தன் ஓசையை நிறுத்தி கொண்ட போது அனிதா கையில் ஆவின் பால் பாக்கெட்டுடன் நுழைந்தாள். "பால் வாங்க போயிட்டியா? இங்க வாவேன். ஒரு முக்கியமான விசயம் பேசனும் " என்றான் தாஸ் அவளை கிறக்கமாக பார்த்தபடி.



" நீ நைட் பே சுனதே போதும். போய்பேஸ் வாஷ் பண்ணிட்டு பிரஷ் பண்ணிட்டு வா” என்றாள் அனிதா லைட்டாக வீங்கியிருந்த உதடுகளை தேய்த்தபடி.



"லிப்ஸ்டிக் போட்டு மறைச்சி ரு " என்றபடி அவன் பாத்ரூமிற்குள் நுழைந்தான். அவன் அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த போது ஆவி பறக்க டீ டம்ளருடன் நின்றிருந்தவள் "இன்னைக்கு நீ வேலன் கம்பெனில கதை சொல்ல போகனும்! ஞாபகம் இருக்கா?" என்றாள்.



"இருக்கு! ஆனா இருக்கிற நாலு கதையில எதை சொல்றதுன்னு குழப்பமா இருக்கு.டி ரெண்டிங் வேற அடிக்கடி மாறிட்டே இருக்கு.” என்றபடி டீயை உறிஞ்சினான்.



"உங்கிட்ட இருக்கிற நாலு கதையில ஓன்னு கூடவா அவருக்கு பிடிக்காம போயிரப்போகுது?”



"நானும் அதைத்தான் நினைக்கிறேன். என்னோட டைரக்டர் வேற இரண்டாவது ஷெட் யூ லோட படத்தை நிறுத்திட்டு ஊருக்கு போயிட்டாரு”



" ஏன்? என்னாச்சு ?



" பைனான்ஸ் பிராபளம் தான். தயாரிப்பாளர் கிட்ட இருந்த காசு காலியாயிருச்சு. லேண்ட் ஓன்னை விலை பேசிட்டு இருக்காரு. அதைவித்து பணம் கைக்கு வந்ததும் தான் மூணாவது ஷெட்யூல் ஷூட்டிங் ஆரம்பமாகும்”



"அப்ப இனி உனக்கு வேலையில்லை.?”



" ஏன் இல்லை ? பகல்ல நிறைய கம்பெனில கதை சொல்வேன். நைட் அனிதாங்குற புத்தகத்தை பிரிச்சு படிப்பேன்.”



"இந்த லிவ்விங் டுகெதர் ரிலேசன் ஷூப்பை விட்டுட்டு எப்பத்தான் என்னை கல்யாணம் பண்ணிக்க போற?”



"என்னை நம்பலயா? நீ ?”



"அதுக்கு இது பதில் இல்லை.”



" என்னோட முதல் படத்துக்கு பூஜை போடற அன்னைக்கு நமக்கு கல்யாணம். உன்னை ஏமாத்த மாட்டேன். என்னை நம்பு. மெடிக்கல் ஷாப் புல செலவு அதிகமாகுது” என்றவன் கீழே கிடந்த காண்டம் பாக்கெட்டை மெத்தைக்கு அடியில் சொருகினான்.



"உங்க அக்காவும் மாமாவும் இதுக்கு ஒத்துக்கணுமே?” என்றாள் அனிதா கவலையாக.



“அதை நான் பாத்துக்கிறேன்." என்றான் தாஸ் அவளின் தலையை தட்டி.



"இந்த ரிலேசன்ஷிப்பை பத்தி அக்காவுக்கு தெரியுமா?" என்றாள் அனிதா.



" தெரியாது. தெரிஞ்சா விளக்கு மாத்தை கையில் எடுத்துருவா! இதை ஏத்துக்கிற அளவுக்கு அவளுக்கு பக்குவம் பத்தாது. மாமாவுக்கு லேசு பாசா விசயம் தெரியும் “



"சரி! நான் சமைக்கிறேன். குளிச்சுட்டு சீக்கிரமா கிளம்பு”



தாஸ் கிச்சனில் டம்ளரை கழவி வைத்துவிட்டு துண்டோடு பாத்ரூமில் நுழைந்தான்.



ஒ ன்பது மணிக்கு அனிதாவை அவளுடைய ஆபிசில் விட்டு விட்டு வேலன் ஆபிசை நோக்கி வண்டியை கிளப்பினான்.



அப்போதுதான் சாமி கும்பிட்டு விட்டு பூவை காதில் வைத்திருந்த பட்டை போட்டிருந்த வேலன்" வாங்க தம்பி! உக்காருங்க! எப்படி இருக்கீங்க?” என்றார். "நல்லா இருக்கேன் சார்" என்று நாற்காலியில் சாய்ந்தவனை "டீ, காபி ?" என்ன சாப்பிடறீங்க?" என்றார்.



"அதெல்லாம் வேணாம். இப்பத்தான் சாப்பிட்டேன்" என்றான் தாஸ்.



"உங்கள பத்தி நிறைய கேள்விப்பட்டுக்கேன். ஏவிஎம் ல அசிஸ்டெண்டா நீங்க வேல செய்யறதை நான் பார்த்திருக்கேன்.நல்ல கதையா ஒரு கதைய சொல்லுங்க. வர்ர தையில பூஜைய போட்டு ஆரம்பிச்சிருவோம்”



"நாலு கதை இருக்கு சார். ஒவ்வொன்னும் ஓவ்வொரு ஜேன்ர் “



"வரிசையா சொல்லுங்க! கேப்போம்" என்றார் வேலன்.



"கண்ணை மூடிட்டு தான் கதை கேட்பேன். தூங்கிட்டேன்னு நினைச்சுராதிங்க. உள்ளே விசுவலா ஓடும் “



இரண்டு மணி நேரத்திற்கு பிறகு கைகளை உயர்த்தி நெட்டி முறித்து கொட்டாவி விட்ட வேலன்



"தம்பி! நீங்க சொன்ன நாலு கதையும் நாலு ஜே னர்ல நல்லாத்தான் இருக்கு. ஆனா அதையெல்லாம் இப்ப எடுக்க முடியாது. இப்ப பேய் கதை தான் டிரெண்டிங் ல இருக்கு. நல்லதா ஓரு பேய் கதைய சொல்லுங்க. ஆடியன்ஸ் பயந்து நடுங்கனும். அதுக்கு முன்னால நான் பயப்படனும். அந்த மாதிரி ஒரு கதைய சொல்லுங்க.”



தாஸ் மேசையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்து கொண்டான்.



எப்போதோ உருவாக்கி பாதியில் நிற்கும் ஓரு கதையை யோசித்தவன் இது வாழ்வா சாவா என்ற போராட்டம். கிடைத்த வாய்ப்பை விட்டு விடக் கூடாது என்று நினைத்தவனாக இந்த கதையாவது இந்தாளுக்கு பிடிக்கனுமே என்ற தவிப்போடு "அப்படி ஓரு கதை இருக்கு சார்.! கதையோட பேரு ஊஞ்சல்" என்றான்.



"டைட்டிலே வித்தியாசமா இருக்கேப்பா! கதைய சொல்லு கேட்போம்" என்றார் வேலன்.



தாஸ் கதை சொல்ல துவங்கினான்.

ஊஞ்சல்​
 
அத்தியாயம் 1



மோகன் தூக்கத்திலிருந்து உலுக்கி எழப்பப்பட்டான். அவன் கண் விழித்தபோது எதிரே நின்ற லீலா கையில் டீ டம்ளர் இருந்தது.



"டாக்டர் ஹரிபிரசாத் அதுக்குள்ள பால் வாங்கிட்டு வந்துட்டாரா?" என்றான் மோகன் ஆச்சரியமாக .



" உங்களை எழப்பத்தான் வந்தார். தூங்குறதை பார்த்துட்டு டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு வாக்கிங் போயிட்டு பால் வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு இப்ப ஜாகிங் போயிருக்காரு." என்றாள் லீலா.



"அவரை பேயிங் கெஸ்ட்டா என்னால நினைக்க முடியலை. அவர் வயசுக்கு மீறிய சில வேலைகளை செய்து நம்மை சங்கடப்படுத்தி விடுகிறார். “



"சில நேரம் அவரை நினைச்சா எனக்கு அப்பா மாதிரி பீல் வருது!”



"எனக்கும் தான் " என்றான் மோகன். டீயை குடித்துவிட்டு வெறும் டம்ளரை அவன் கீழே வைத்த போது அவனது தோளில் இரண்டு பிஞ்சு கரங்கள் விழந்தன.



"தேவி”



"நான் தான். குட் மார்னிங் டாடி" என்றாள் நான்கு வயது தேவி தன்முன் பற்களை இழந்த பொக்கை வாயோடு.



"போய் பிரஷ் பண்ணிட்டு வா! அம்மா ஹார்லிங்ஸ் போட்டு வைச்சிருக்கா”



"ஓகே! ஹார்லிங்ஸ் குடிச்சதும் நான் ஊஞ்சலில் கொஞ்ச நேரம் ஆடுவேன். நீ திட்டக் கூடாது”



"இல்லை. திட்ட மாட்டேன். அடுத்த வருசம் ஸ்கூல்ல சேர்க்கும் வரை என்ஜாய் பண்ணிக்க . அப்புறம் ஸ்கூல் போயிட்டா உன்னால ஊஞ்சல்ல ஆட முடியாது.”



"ஸ்கூல்ல டீச்சரெல்லாம் அடிப்பாங்கன்னு சொல்றாங்க”



"பொய். நல்லா படிச்சா கன்னத்துல முத்தம் கொடுத்து மிஸ் சாக்லேட் தருவாங்க. நீ நல்லா படிக்கனும் சரியா ?”



"நான் நல்லா படிப்பேன். டாக்டர் தாத்தா எங்க போனாரு?”



"வாக்கிங் போயிருக்காரு.வந்துருவாரு.”



தேவி தன் பல்லை பிரஷ் செய்து விட்டு ஹார்லிக்ஸை உதட்டின் மீது வெண்மீசை படிய குடித்தாள்.



"மம்மி! நான் ஊஞ்சல்ல விளையாடப் போறேன். அப்பா கிட்ட பர்மிசன் வாங்கிட்டேன்.”



"பாத்து விளையாடு, கீழே விழந்து அடிகிடிபட்றப் போகுது " என்றாள் லீலா அடுப்பின் மீது கவனமாக .



தேவி வீட்டை விட்டு வெளியே வந்தாள். வீட்டிற்கு வெளியே இருந்ததோட்டத்தில் பூத்திருந்த ரோஜா மலர்களை பார்த்து வியந்தாள். "நான் நட்டியது எவ்வளவு பெருசா வளர்ந்திருச்சு" என்று நினைத்தவள் செருப்பை அணிந்து கொண்டு நீண்ட தார் சாலையில் நடந்தாள்.அவள் வீட்டை சுற்றி வேறு வீடுகளே இல்லை. சுற்றிலும் புதர்கள் நிறைந்த ரோட்டில் மெதுவாக நடந்தாள் தேவி. அவளது வீட்டிலிருந்து ஐம்பதடி தொலைவில் மரத்தில் கட்டப்பட்டு காற்றில் மெதுவாக அசைந்து கொண்டிருந்தது அந்த பலகை உள்ள ஊஞ்சல். தரைக்கு சற்று மேலாக இருந்த பலகையில் உட்கார்ந்த தேவி தன் செருப்பு கால்களை உதைத்து மெல்ல காற்றில் ஆட ஆரம்பித்தாள்.



அவள் முகத்தில் மகிழ்ச்சியும் வியப்பும் மெல்லிய சிரிப்பும் படர ஆரம்பித்தது.



மோகன் "இன்னைக்கு என்ன சாப்பாடு ?" என்றபடி ஹாலுக்கு வந்தான்.



"சாப்பிடும் போது தெரியும் " என்றாள் லீலா



"யூ டியூப் பை பாத்து ஏதாவது செஞ்சிருக்கியா?" என்றபடி சன்னலை திறந்து சின்னமுகம் பார்க்கும் கண்ணாடியை அதில் மாட்டி ஷேவிங் செய்ய தேவையான பொருள்களை கடை விரித்தான் மோகன். "தொப்பைய குறைச்சிட்டு அப்புறமா பேசனும் " என்றாள் லீலா கண்களால் முறைத்தபடி.



திறந்திருந்த சன்னல் வழியே வெளியே தேவி ஊஞ்சல் ஆடும் காட்சி மெல்லிய பனிக்கு நடுவே தெரிந்தது. தன் மகளின் சிரிப்பையும், மகிழ்ச்சியையும் ரசித்து கொண்டிருந்த மோகன் அப்போதுதான் அதை கவனித்தான்.நேராக ஆட வேண்டிய ஊஞ்சல் குறுக்காக தன்னைத்தானே சுற்றி கொண்டிருந்தது. மரத்தின் கிளையில் கட்டப்பட்டிருந்த இரண்டு கயிறுகளும் பாம்பாக பிணைந்து ஒன்றோடு ஒன்றாக இணைந்து இறுகி கீழ் நோக்கி இறங்கி கொண்டிருந்தது. இரண்டு கயிறுகள் ஓன்றாக இணையும் இடத்தில் தேவியின் கழுத்தும் முகமும் இருந்தது.





கையிலிருந்த ரேசரை கீழே போட்ட மோகன் "தேவி" என்றபடி வெளியே பாய்ந்து ஊஞ்சலை நோக்கி ஓட ஆரம்பித்தான். அவனின் உடலில் அட்ரீனல் நதி ஓன்று உற்பத்தியாக ஆரம்பித்தது.லீலா பதட்டத்தோடு நிமிர்ந்தாள்.



கயிறுகளின் இணைப்பு சராலேன தேவியின் கழுத்தை நோக்கி இறங்கியது.



தேவி பொக்கை வாயோடு நிகழும் விபரீதம் அறியாமல் சிரித்து கொண்டிருந்தாள்.

ஊஞ்சல்

​
 
அத்தியாயம் 2


மோகன் தொட்டிலில் ஆடிக்கொண்டிருந்த குழந்தை துணி தன்னைத்தானே சுற்றிக் கொண்டதில் கழுத்து இறுகி இறந்ததை செய்திகளில் படித்திருந்தான். அவன் தேவிக்கும் அதே விபரீதம் நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காக விழ்ந்து எழுந்து ஓடி வந்தான்.



ஊஞ்சலின் கயிறு பிணைந்து கொண்டே வந்து தேவியின் கழுத்தருகே வந்த போது தேவி ஊஞ்சலிலிருந்து வெளியே உருவப்பட்டாள். அவளை இரு முதிய கரங்கள் தூக்கி தோளில் சாய்த்து கொண்டன. ஓடி வந்த மோகனைப் பார்த்து “கூல் " என்றார் டாக்டர் ஹரிபிரசாத் புன்னகையுடன் .



"நல்ல வேளை டாக்டர் ! சரியான நேரத்துல வந்து தேவிய காப்பாத்தீட்டிங்க " என்றான் மோகன் கை கூப்பியபடி .அவன் குரல் தழுதழுத்து கொண்டிருந்தது. அவனுக்கு பின்னால் பதட்டமாக ஓடி வந்த லீலா தேவியை டாக்டரிடம் இருந்து வாங்கி கொண்டாள்.



"இட்ஸ் ஓகே!மோகன் கீழே விழுந்தது ல கால்ல லைட்டா அடிபட்ருக்கு. வாங்க பர்ஸ்ட் எய்ட் பண்றேன்.” என்றார் டாக்டர் .



"இனிமே இந்த ஊஞ்சல்ல விளையாட வந்து பாரு! காலை உடைச்சிர்றேன்" என்றாள் லீலா கோபத்துடன் .



"விடும்மா'! அவ கூட விளையாட இங்க யாரு இருக்கா? டிவியும் செல்போன் கேமும் தவிர வேறு என்ன பொழுதுபோக்கு இருக்கு. ஸ்கூல் போனா எல்லாம் சரியாயிரும் " என்றார் டாக்டர் .



"அம்மா எதுக்கு என்னை திட்றாங்க?" என்று தேவி புரியாமல் அழ ஆரம்பித்தாள்.



வீட்டிற்குள் நுழைந்த டாக்டர் "தேவிய சமாதானம் பண்ணும் மா! நான் என்னோட ரூம்ல மெடிசன் எடுத்துட்டு வர்றேன்" என்றபடி மாடியிலிருந்த அவரது அறைக்கு படியேறினார்.



"இன்னைக்கு லீவு போட்டுக்கறீங்களா?" என்றாள் லீலா.



"இன்னைக்கு ஆடிட்டிங் .நான் போயே ஆகணும்" என்றான் மோகன்.



மருந்தோடு வந்த டாக்டர் அதை மோகனுக்கு தடவி விட்டார்.



"போதும் டாக்டர் ! நான் குளிச்சிட்டு கிளம்புறேன்." என்றான் மோகன்.



ஏதோ யோசனையில் இருந்த டாக்டர் "ம்ம்" என்றார்.



" என்ன டாக்டர் யோசனை? " என்றான் மோகன்.



"நான் இந்த வழியா இரண்டு வருசமா வாக்கிங் ஜாக்கிங் வர்ரேன். இன்னைக்கு உன்னோட பொண்ணு ஊஞ்சல்ல ஆடுறதை பார்க்கும் போது எனக்கு வேற ஒரு விசயம் நினைவுக் கு வருது.”



" என்ன டாக்டர் அது?”



"இல்லை. வேணாம். அதை கேட்டா நீ சங்கடப்படக் கூடும்”



"பரவாயில்லை. சொல்லுங்க டாக்டர் .நான் உங்களை அப்பா மாதிரி தான் நினைக்கிறேன்.”



“நானும் உன்னை மூணாவது மனுசனா பாக்கலை மோகன். இங்கிருந்து ஒரு மைல் தொலைவுல தான் என்னோட டிஸ் பென்சரி இருக்கு. நான் தினமும் இந்த பக்கமா வாக்கிங் வருவதை பார்த்து நண்பனாக பழக்கமாகித்தான் நான் பேயிங் கெஸ்ட்டா உன் வீட்டுக்கு வந்தேன். யாருமே இல்லாத எனக்கு உன்னோட குடும்பம் தான் ஒரே ஆதரவு. அதனால தான் சின்ன சின்ன உதவியெல்லாம் நீ கேட்காமலேயே செய்கிறேன்”



“அது தான் தெரியுமே டாக்டர் .நீங்க எதையோ சுத்தி வளைக்கிறீங்க. மறைக்காம உண்மையை சொல்லுங்க" என்றான் மோகன்..



" சொல்றேன். நான் முதன் முதலா இந்த பகுதியில வாக்கிங் வந்தப்போ இதே மாதிரி ஒரு பொண்ணை இதே ஊஞ்சல்ல பார்த்தேன். அவ பேர் மாயா. அவளும் நானும் நல்ல பிரண்ட்ஸ்" என்றார் டாக்டர் .



“அவ யாரோட பொண்ணு?" என்றான் மோகன்.



"ராம்சிங் யாதவ்ங்கிற ஒரு இந்திக்காரனோட ஒரே பொண்ணு.”



"அந்த மாயாவும், ராம்சிங் யாதவும் இப்ப எங்க ?”



"இதே ஊஞ்சல்ல உன் பொண்ணு ஆடியது போலவே ஆடி கழுத்து எலும்பு முறிஞ்சு இறந்துட்டா. அவளோட இழப்பை தாங்க முடியாம ராம்சிங் வீட்டை காலி பண்ணிட்டு போயிட்டான். பூட்டிக்கிடக்குதே ஓரு வீடு .அது அவனுடையது தான்.”



"நீங்க என்ன சொல்ல வர்ரீங்க டாக்டர் “



"அந்த மாயா இந்த ஊஞ்சல்ல திரும்ப வந்துட்டாளோன்னு தோணுது. ஊஞ்சல்ல. ஆடுறதுன்னா மாயாவுக்கு ரொம்ப பிடிக்கும் “



" நீங்க இதையெல்லாம் நம்புறீங்களா?" என்றான் மோகன்.



அவனுக்கு பதில் சொல்லாமல் திறந்திருந்த சன்னலை வைத்த கண் எடுக்காமல் பார்த்த டாக்டர் "அங்கே பார் " என்றார்.



வெளியே ஊஞ்சல் மேலும் கீழமாக ஒரு ஆள் உட்கார்ந்து ஆடுவது போல் சீராக ஆடத் துவங்கியிருந்தது.



மோகனின் உடலில் ஒரு அட்ரினலின் நதி உற்பத்தியானது.

ஊஞ்சல்​
 
அத்தியாயம் 3



சக்ரவர்த்தி கால்டேக்சியிலிருந்து இறங்கி கொண்டு அவன் கேட்ட தொகையை கொடுத்து விட்டு நடந்தார்.சக்ரவர்த்தியின் மாளிகையில் ஜாக்குவார் உட்பட விலை உயர்ந்த பல கார்கள் உண்டு. அவர் கை விரல் காட்டியதிசையில் நறுவிசாக காரை ஓட்ட பல டிரைவர்களும் உண்டு. வாடகை டேக்சியில் தன் அடையாளத்தை மறைத்துக் கொள்ள கூலிங் கிளாசும், தொப்பியும் அணிந்து வெய்யிலில் நடக்க அவன் தான் காரணம். அவருக்குத் தெரியும் அவனிடமிருந்து சாகும் வரை தப்ப முடியாது என்று.



அவனிடமிருந்து அவரை காப்பாற்றும் சக்தி படைத்தவர் ஓரே ஒருவர் தான். அவரை தேடித் தான் மாறுவேடத்தில் வந்திருக்கிறார் சக்ரவர்த்தி .போர்டில் இருந்த ஹரிபிரசாத் MBBS ஐ படித்து விட்டு தனக்குள் புன்னகைத்து கொண்டார் அவர். ஒரு முகமூடியை இன்னொரு முகமூடிக்குத் தானே தெரியும் என்று நினைத்தவராக வெறிச்சோடிக் கிடந்த டிஸ் பென்சரிக்குள் நுழைந்தார். அவர் டாக்டரிடம் ஏற்கனவே போனில் பேசி அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கியிருந்தார். அது இருவருக்குமான எழுதப்படாத நடை முறை .



அவரைப் பார்த்ததும் டோக்கன் கொடுக்கும் நர்ஸ் சித்ரா சிநேகமாக புன்னகைத்து" உள்ளே போங்க! உங்களுக்குத்தான் வெயிட் பண்றாரு " என்றாள். அவர் டாக்டரின் அறைக்குள் நுழைந்தார். எழுதிக் கொண்டிருந்த டாக்டர் தன் பேனாவை மூடி வைத்துவிட்டு நிமிர்ந்தார்.



"உட்காருங்க” என்று காலியான எதிர் நாற்காலியை காட்டினார் டாக்டர் ஹரிபிரசாத்



உட்கார்ந்த சக்ரவர்த்தி சுற்றும் முற்றும் பார்த்தார். "இங்கே யாரும் இல்லை. " என்ற டாக்டர் எழுந்து சென்று அறை கதவை உள்புறமாக தாழிட்டார். நர்ஸ் சித்ராவுக்கு இது வழக்கமாக வாடிக்கையாக நடக்கிற விசயம் என்று தெரியும் என்பதால் அவள் சலனமின்றி தன் வேலையில் ஆழ்ந்தாள். அவளுக்குத் தெரியும் இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு அந்த அறை பக்கம் யாரும் போகக் கூடாது என்று.



கதவை தாழிட்டு விட்டு தன் நாற்காலியில் சாய்ந்தார் டாக்டர் ." சொல்லுங்க" என்றது அவர் பார்வை .



"நேத்து நைட் அவன் வந்தான்" என்றார் சக்ரவர்த்தி .



"எத்தனை மணிக்கு ?" என்றார் டாக்டர் .



"நைட் பத்து மணி இருக்கும். நான் சாப்பிட்டுட்டு தூங்கலாம்னு என்னோட ரூமுக்கு போனேன். பெட்ரூம் லைட்டை ஆப் பண்ணிட்டு படுத்தேன். படுத்தவுடனே லைட் மறுபடியும் எரியுது. எந்திரிச்சு போய் பார்த்தேன். சுவிட்ச் ஆன் ஆயிருக்கு.”



" ஆப் பண்ண மறந்திருப்பீங்க?”



"இல்லை. மூணு தடவையுமா மறந்து போவேன்? மூணு முறைலைட் ஆன் ஆகி ஆப்பாகுது.”



" சம்திங் ராங் “



"எனக்கும் அப்படித்தான் தோணுச்சு. நாலாவது முறை லைட்டை ஆப் பண்ணும் போது இருட்டிலிருந்து அவன் வந்தான். சாகும் போது பார்த்த அதே வெறித்த கண்களோடு “



" உங்களை மட்டும் தான் அவன் பாக்க வர்ரான். இல்லை உங்க கண்ணுக்கு மட்டும் தான் அவன் தெரிகிறான். இல்லையா?”



"ஆமா! வேற யாரும் நான் அவனை பார்த்ததா சொன்னா நம்ப மாட்டேங்கிறாங்க. பைத்தியம் மாதிரி பாக்குறாங்க. அதனால நான் யாருகிட்டயும் எதையும் சொல்வதில்லை. செத்தவன் உயிரோடு வந்து பேசுறான்னு சொன்னா யாராவது நம்புவாங்களா ?”



" அவன் எதாவது பேசினானா?”



"இல்லை. பேசலை. மவுனமா என்னை பார்த்துட்டு போய் விடுகிறான். நீங்க தான் என்னை காப்பாத்தனும்.”



"பேசணும். அவன் வாய் திறந்து பேசணும். பேசுனாத்தான் உண்மை தெரியும். அவன் என்ன பேசினான்னு நீங்க மறைக்காம சொல்லனும்”



சக்ரவர்த்தி டாக்டரின் கண்களை பார்க்காமல் குனிந்து கொண்டார். அவரின் உள்ளத்தின் உள்ளத்தில் இரண்டு ரகசியங்கள் ஒளிந்திருந்தன. மறந்தும் அதை சொல்லி விடக் கூடாது என்று அவர் மனம் நினைத்தது.



"நான் கேட்கும் போதெல்லாம் நீங்க பணம் தரனும்" என்ற மகேந்திரனின் கர்ண கொடுர குரல் காதில் விழுந்தது. அவரின் அதிர்ஷ்டம் பார சிக் அட்டாக்கால் மகேந்திரன் கை கால் முடங்கி வாய் பேசும் சக்தியை இழந்து விட்டான். அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவன் கண்கள் கண்ணீரோடு பேசும். "பாவி! உன்னால் தானே இதெல்லாம்.?



சக்ரவர்த்தி தலையை உலுக்கி கொண்டார்.



"மேலே ஏறி படுங்க" என்றார் டாக்டர் பெட்டை காட்டி.



ஒரு மணி நேரத்திற்கு பிறகு டாக்டர் ஏகத்துக்கும் களைத்துப் போய் பிரிஸ் கிப்சன் எழுதிக் கொண்டிருந்தார்.



"உங்க மனசுல இருப்பதை நீங்க மறைக்கிறீங்க. ரொம்ப ஜாக்கிரதையா முன்னைச் சரிக்கையா இருக்கீங்க. உங்களை சரி பண்ண கொஞ்சம் டைமாகும்.”



"நான் எதையும் மறைக்கலையே டாக்டர் .? அவனை பின் தொடரும் நிழலாவராம பண்ணுங்க. அது போதும்.”



"முயற்சி பண்றேன். இந்த மருந்தை நான் சொன்ன கடையில வாங்குங்க. வேற எங்கேயும் கிடைக்காது.”



"நான் இங்கு வருவதை வெளியே யாருகிட்டயும் சொல்லிடாதீங்க டாக்டர் “



"அதையே நானும் திருப்பி சொல்றேன். நான் இப்படி ரகசியமா டிரீட்மெண்ட் தருவது யாருக்கும் தெரியக் கூடாது”



"நாம ரெண்டு பேரும் ஓரே நிலைமை ல தான் இருக்கோம்.”



"புரிஞ்சா சரி. நான் உண்மையா இருக்கேன். நீங்க ஃ பேக்கா இருக்கீங்க?”



"அதுக்கு நான் காரணமில்லைன்னு உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும் “



சக்ரவர்த்திக்கு டாக்டர் பீஸ் வாங்க மாட்டார் என்று தெரியும். "போயிட்டு வர்ரேன் டாக்டர் " என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.



தலையசைத்த டாக்டர் " நீ என்னைக்கு உண்மையபேசறி யோ அன்னைக்குத் தான் அவனும் உண்மையை பேசுவான்.அதுவரை நாமமூணு பேரும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட வேண்டியது தான் “ என்று முணுமுணுத்தார்.​
 
அத்தியாயம் 4



இரவு ஓன்பது மணி.டிவி சைலண்டாக்கப்பட்டு ஜீ இந்தி சேனல் ஒடிக்கொண்டிருந்தது. டைனிங் டேபிளில் சாப்பிட உட்கார்ந்திருந்தார்கள் டாக்டரும் மோகனும். சமையலறையில் வேலையாக இருந்த லீலாவை "வேலையை முடிச்சுட்டு வாம்மா! ஓன்னா உட்கார்ந்து சாப்பிடலாம்" என்று கூப்பிட்டார் டாக்டர் ஹரிபிரசாத்.



" பத்து நிமிசம். வேலைய முடிச்சுட்டு வந்துடறேன்." என்று புன்னகைத்தாள் லீலா.



"ஓகேம்மா! நாங்க வெயிட் பண்றோம்" என்றார் டாக்டர் .அவரது பார்வை விளையாடி கொண்டிருந்த தேவியின் மீது விழுந்தது.



" காலைல அந்த ஊஞ்சல் பேய் வேகத்துல ஆடுனதை நினைச்சா ப ய மா இருக்கு" என்றான் மோகன்.



" காத்து வேகமா அடிச்சாக் கூட ஊஞ்சல் ஆடும் “



"பேய், பிசாசு இதெல்லாம் உண்மையா டாக்டர்?”



" தெரியாது. ஆனா சில விசயங்களுக்கு கேள்விகளுக்கு விடை தெரியாத போது எதையாவது நம்பனுமே? அப்படி சிலர் இதை நம்புறாங்க. கடவுள் இருந்தா அதற்கு எதிரான ஓரு சக்தியும் இருக்கணுமே?”



"நான் பேய் இருக்கான்னு கேட்டதுக்கு நீங்க கட வுள் இருக்காரான்னு பதில் கேள்வி கேக்கறீங்க?”



"சில நேரத்துல ஒரு கேள்விக்கு பதிலா இன்னொரு கேள்வி இருக்கலாம். இல்லையா?”



"தெளிவா குழப்பறீங்க.”



"முதல்ல சாப்பிடுங்க. அப்புறமா பேசலாம்." என்றாள் லீலா.



"தேவி?" என்றார் டாக்டர் .



"அவ அப்பவே சாப்பிட்டுட்டாள். இவ்வளவு நேரம் பசி தாங்க மாட்டாள் .இருங்க தூங்க வைச்சுட்டு வந்துடறேன்." என்ற லீலா தேவியை பெட்ரூமிற்குள் அழைத்து சென்றாள்.



திரும்ப வந்த லீலாவோடு பேசியபடி இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.



கைகழவி விட்டு சோபாவில் உட்கார்ந்த டாக்டர் "எனக்கு ஓரு டம்ளர் பால் கொடுத்தா குடிச்சுட்டு மாடிக்கு போய் படுப்பேன்" என்றார்.



"பால் எதுக்கு டாக்டர் வாங்கிட்டு தொடங்கியது

எனக்கே சங்கடமா இருக்கு”



"வர் ர வழியில தானே பூத் இருக்கு ? சும்மா தானே வர்ரோம்னு கையோடு வாங்கிட்டு வந்துடறேன். இதுல என்ன இருக்கு”



" வாங்கிட்டு வந்து பிரிட்ஜிலேயே வைத்து விடுகிறார். இவரால பால் எப்பவுமே ஸ்டாக் இருக்கு" என்றாள் லீலா.



மூவரும் பாலை குடித்தனர். டாக்டர் "குட் நைட்" சொல்லிவிட்டு மாடியில் இருந்த ரூமிற்கு சென்றார்.



இரவில் வெள்ளை நிலவு உச்சிக்கு வந்திருந்தது. ஊஞ்சல் காற்றில் வேகமாக ஆட ஆரம்பித்தது. காற்றில் காய்ந்த இழைகளும் தழைகளும் மெலிதாக பறக்க ஆரம்பித்தன. எங்கோ ஓரு ஓற்றை நாய் அபஸ்வரமாக குலைக்க ஆரம்பித்தது.



வீட்டின் ஹாலின் உள்ளே மாட்டப்பட்டிருந்த வால் க்ளாக் விண்டர்ஸ்பிரிங் ஓசையை நிதானமாக 12 முறை சத்தமிட ஆரம்பித்தது.



பெட்ரூமில் படுத்திருந்த தேவி திடிரென கண் விழித்தாள். அவளது கண்கள் நிலைகுத்தி போயிருந்தன.



அவள் எழுந்த வேகத்தில் அருகில் படுத்திருந்த லீலா எழுந்து கொண்டாள். " ஏதாவது கனா கண்டியா மா ?" என்றாள்.



தலை விரிக்கோலமாக இருந்ததேவி" மேரா நாம் மாயா" என்றாள்.



"என்னங்க." என்ற லீலாவின் அலறல் கேட்டு எழுந்த மோகன் திடுக்கிட்டான். "என்னாச்சு ? என்றபடி அறைக்குள் நுழைந்தவன் அதிர்ந்தான்.



தேவி படுக்கையிலிருந்து மெல்ல அந்தரத்தில் மிதக்க ஆரம்பித்தாள்.



"டாக்டர் " என்று அலறினான் மோகன்.
​
 

New Threads

Top Bottom