Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...

கைதி - அத்தியாயம் 6
​
அன்றைய காலை பல்வேறு திருப்பங்களைத் தர விடிந்தது.

ஆண்கள் அனைவரும் ஹாலில் கூடியிருக்க அங்கு வந்த அக்ஷரா,

"சீனியர்ஸ்... இன்னிக்கி என்ன ப்ளேன்.." எனக் கேட்டாள்.

ஆதர்ஷ், "முதல்ல பைகாரா வாட்டர்ஃபால் போலாம்னு இருக்கோம் அக்ஷு... அதுக்கப்புறம் மத்த ப்ளேஸஸ் விசிட் பண்ணிட்டு நைட் ஒன்பது பத்து மணிக்கெல்லாம் இங்க வந்துருவோம்.. நீ போய் கர்ள்ஸ் எல்லாரையும் சீக்கிரம் ரெடி ஆகி கீழ வர சொல்லு.." என்க அக்ஷரா சரி என்று விட்டு சென்றாள்.

அனைவரும் தயாராகி கீழே வர சிதாரா, லாவண்யா, அக்ஷரா மட்டும் இன்னும் வராமல் இருந்தனர்.

அபினவ் ஆதர்ஷிடம், "இதுங்க இன்னும் வராம என்ன பண்ணுதுங்க.. ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சி.. இப்பவே போனா தான் கரக்ட் டைம்ல எல்லாம் பாத்துட்டு வந்துர முடியும்.." என்க ஆர்யான் தான் பார்த்து விட்டு வருவதாக கூறி மேலே சென்றான்.

பிரணவ் மனதில், "ஆமா இவரு போலன்னா அவங்க கீழ வர மாட்டாங்க.. ரொம்பத்தான் பண்றான்.. எப்ப பாரு தாரா கூடவே சுத்திட்டு இருக்கான்.." என ஆர்யானை வருத்தெடுத்துக் கொண்டிருந்தான்.

மேலே அறையில், "ப்ளீஸ் சித்து.. இதுக்காக தான் வந்தியா.. ஓக்கேனு சொல்லேன்.." என அக்ஷரா சிதாராவிடம் கெஞ்சிக் கொண்டிருக்க அங்கு வந்த ஆர்யான்,

"என்னாச்சி கர்ள்ஸ்.. ஏன் இன்னும் கீழ வரல மூணு பேரும்.." எனக் கேட்டான்.

"நீங்களே கேளுங்கண்ணா.. இவ்வளோ கஷ்டப்பட்டு பேரன்ட்ஸ சம்மதிக்க வெச்சி டூர் வந்தா இவ என்னன்னா வர மாட்டாளாம்.. எங்கள மட்டும் போக சொல்றா.." என லாவண்யா கூற சிதாராவை கேள்வியாய் ஏறிட்டான் ஆர்யான்.

சிதாரா, "இல்லடா காலைல எந்திரிச்சத்துல இருந்து மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு... அந்த ஃபீல எப்படி சொல்லன்னு தெரியல... அதான் நான் இன்னெக்கி இங்கயே இருக்கேன்னு இவங்க ரெண்டு பேரையுப் போய்ட்டு வர சொல்லிட்டு இருந்தேன்.." என்க,

"நீ சும்மா எதையாச்சும் போட்டு மனச கொழப்பிக்காதே மினி.. எதுவும் ஆக போறதில்ல.. ஏதாச்சும்னா உனக்கு துணையா நாங்க மூணு பேரும் இருக்கோம்.. உன்னோட அண்ணனுங்க இருக்காங்க.." என ஆர்யான் அவளை சமாதானப்படுத்த,

"அதில்லடா நான்..." என சிதாரா ஏதோ கூற வர அவளைத் தடுத்தவன், "நீ எதுவும் சொல்ல வேணாம்.. ஒரு பேச்சும் இல்ல.. நீ எங்க கூட வர.." என்றதும் சிதாரா அவர்களுக்காக சம்மதித்தாள்.

சற்று நேரத்திலே அனைவரும் கிளம்பி பைகாரா நீர்வீழ்ச்சி சென்றனர்.

நீர்வீழ்ச்சியுடன் சேர்த்து சுற்றியுள்ள பசுமையான இயற்கை அழகை ரசித்தபடி ஓய்வெடுக்க சிறந்த இடம்‌.


அருகிலே போட் ஹவுஸும் ரெஸ்டூரன்ட் ஒன்றும் காணப்படும்‌.


அனைவரும் நீர்வீழ்ச்சியை சுற்றிப் பார்க்க முன்னே செல்ல கடைசியாக லாவண்யா, அக்ஷரா செல்ல அவர்களுக்குப் பின்னே சிதாராவும் ஆர்யானும் வந்தனர்.


ஆர்யான் ஏதோ கூற அதற்கு சிதாரா சிரிக்க சரியாக அவ்விடம் வந்தாள் அவர்களின் தோழிகளில் ஒருவரான மயூரி.


சிதாரா அவளை நோக்கி, "என்னாச்சு மயூ.." என்க அவள் ஏதோ கூற வருவதும் தயங்குவதுமாக இருக்க ஆர்யானும் சிதாராவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.


ஆர்யான் சிதாராவைப் பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தி என்ன என கேட்க அவளும் தோளைக் குலுக்கி சைகையாலே தெரியல என்றாள்.


பின் மயூரி தைரியம் வரப் பெற்றவளாக சிதாராவிடம், "சித்து நான் உன் ஃப்ரன்ட் கூட கொஞ்சம் தனியா பேசனும்.." என்க ஆர்யான் அதிர்ந்தான்.


சித்து ஆர்யானைப் பார்த்து வாயை மூடி சிரிக்க, ஆர்யான் கண்களாலே அவளிடம் வேண்டாம் எனக் கூறினான்.


சிதாராவோ மயூரியிடம், "அதுக்கென்ன மயூ.. நீ தாராளமா அவன் கூட பேசலாம்... நான் முன்னாடி போறேன்.." என்றவள் பின் ஆர்யானிடம் திரும்பி, "நீ பேசிட்டு வா ஜிராஃபி.. நல்லா டைம் எடுத்து பேசு.." என நக்கலாக கூறி விட்டு அங்கிருந்து சென்றாள்.


அவள் சென்றதும் ஆர்யான் எதுவும் செய்ய முடியாமல் மயூரியைப் பார்த்து இளித்து வைத்தான்.


மயூரி, "அது வந்துங்க... நான்.. அது... நீங்க..." என சொல்லாமல் இழுக்க,


ஆர்யான் அவசரமாக, "ஒன்னும் பிரச்சினை இல்லங்க.. நீங்க நிதானமா அப்புறம் சொல்லுங்க.." என அங்கிருந்து செல்லப் பார்க்க,


"இல்ல இல்ல.. நான் சொல்ல வந்த விஷயத்த இப்பதே சொல்லிட்றேன்..." என அவனை நிறுத்தினான் மயூரி‌.


மயூரி, "ஆர்யான்.. அது வந்து.. உங்கள பாத்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சி.. உங்க ஹியுமர்சென்ஸ் என்ட் நீங்க சித்துவுக்காக கேர் பண்ற விதம் எல்லாமே என்ன ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சி.. ஐ திங்க் ஐம் இன் லவ் வித் யூ.." என ஆர்யானுக்கு மினி ஹார்ட் அட்டேக் ஒன்றையே ஏற்படுத்தினாள்.


அதிர்ச்சியில் வாயடைத்து நின்ற ஆர்யான் பின் மயூரியிடம்,


"மயூரி.. எனக்கு உங்க கிட்ட என்ன சொல்லன்னே புரியல... உண்மைய சொன்னா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க... நேத்து நைட் கூட நீங்க என்னயே பாத்துட்டு இருந்தத்த நான் பாத்தேன்... உங்கள கல்யாணம் பண்ணிக்க குடுத்து வெச்சிருக்கனும்... எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு..." என்றான்.


ஆர்யானிடம் பேசக் கூறி விட்டு சற்று முன்னால் வந்த சிதாரா நீர்வீழ்ச்சியின் அழகை ரசித்துக் கொண்டு இருந்தாள். பின் சிறிது நேரத்தில் ஆர்யான் மற்றும் மயூரி இருந்த பக்கம் திரும்பிப் பார்க்க, மயூரி ஏதோ கூற ஆர்யான் வெட்கப்படுவதைக் கண்டவள் புன்னகைத்தாள்.


திடீரென யாரோ அவள் கரம் பற்றி இழுக்க திரும்பிப் பார்த்தவள் பிரணவ்வைக் கண்டதும் அவசரமாக கையை இழுக்க முயற்சித்தாள்.


ஆனால் பிரணவ் அவளின் கையை அழுத்திப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்று யாருமற்ற மறைவான இடமொன்றில் அவளை நிறுத்தினான்.


அவன் விட்டதும் அவன் அழுத்திப் பிடித்த இடம் சிவந்திருக்க வலியில் கையைப் பிடித்துக் கொண்டு சிதாரா, "ஹவ் டேர் யூ... யாரு உங்களுக்கு என் கைய பிடிச்சு இழுத்துட்டு வர இவ்வளோ ரைட்ஸ குடுத்தது..." என ஆவேசமாகக் கேட்டு விட்டு அங்கிருந்து செல்லப் பார்க்க,


மீண்டும் அவள் கையைப் பிடித்து நிறுத்தியவன் விடாமலே, "ஏன் நான் பிடிச்சா மட்டும் உனக்கு வெறுப்பா இருக்கா தாரா... நான் பிடிக்காம உன் கூட வந்தானே ஒருத்தன் எப்பப்பாரு உன்னையே ஒட்டிக்கிட்டு... அவன் பிடிச்சா மட்டும் சுகமா இருக்...." என அவன் முடிக்கும் முன்னே அவன் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது சிதாராவின் கைகள்.


சிதாரா, "அவன பத்தி என்ன தெரியும்னு இவ்வளோ அசிங்கமா பேசுறாய்... அது சரி.. உன் புத்தியே இதானே.. அது எப்படி மாறும்.." என்க,


"ச...சாரி தாரா... அது உன் மேல உள்ள லவ்வுல பேசிட்டேன்... அவன் யாரு என் தாராவ தொட்டு பேசன்னு ஒரு பொசசிவ்னஸ்ல பேசிட்டேன்.. ஐம் சாரி தாரா..." என பிரணவ் அவளிடம் கெஞ்ச,


அவன் கூறியதைக் கேட்டு கத்தி சிரித்தாள் சிதாரா.


பின், "உனக்கு என் மேல லவ்வு... இதுல பொசசிவ்னஸ் வேறயாம்.. ச்சீ.. இப்படி சொல்லவே உனக்கு அசிங்கமா இல்ல... உன்ன பாத்தாவே வெறுப்பா இருக்கு.." என்றாள்.


அவள் தோள்களைப் பற்றிக் கொண்ட பிரணவ், "நீ பொய் சொல்லுற தாரா... எனக்கு தெரியும் நீ எனக்காக தான் இவ்வளவு மாறி‌ இருக்கன்னு... உனக்கு என் மேல இன்னும் லவ் இருக்கு.." என்க,


அவன் கரங்களைத் தட்டி விட்டவள் ஆவேசமாக, "இல்ல.. இல்ல... இல்ல... நான் உன்ன வெறுக்குறேன்... அடியோட வெறுக்குறேன்... உன்ன எந்தளவு காதலிச்சேனோ அத விட பல மடங்கு உன்ன நான் வெறுக்குறேன்... உன் பார்வை என் மேல படுறதயே நான் அசிங்கமா நெனக்கிறேன்..." என கத்தினாள்.


அவ்வளவு நாளும் கட்டுப்படுத்தி வைத்த கண்ணீர் அவளையும் மீறி வெளிப்பட்டது.


அவள் சத்தம் கேட்டு அனைவரும் அவ்விடம் வரப்பார்க்க அவர்களை தாம் பார்த்துக் கொள்வதாகக் கூறி அனுப்பிய அபினவ்வும் ஆதர்ஷும் அங்கு வந்தனர்.


அவர்களைத் தொடர்ந்து லாவண்யா, அக்ஷரா மற்றும் ஆர்யான் வந்தனர்.


ஆர்யான் அங்கு வந்ததுமே அவசரமாக சிதாராவிடம் சென்று, "மினி கூல்.. அமைதியா இரு.. எதா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம்.." என அவளை சமாதானப்படுத்தப் பார்க்க அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளிய பிரணவ்,


"நீ யார்ரா எங்களுக்குள்ள வர... அவ என் தாரா.. அவ என்ன பத்தி என்ன வேணாலும் பேசுவா.. உனக்கென்னடா வந்தது.." என்றான்.


அக்ஷராவும் லாவண்யாவும் சிதாராவின் அழுகையை நிறுத்தப் போராட மேலும் மேலும் அவள் அழுகை அதிகமானது.


அவன் தன்னை தள்ளி விட்டதைக் கூட பொருட்படுத்தாத ஆர்யான், "ப்ளீஸ் பிரணவ்.. நீங்க என் கூட எப்ப வேணாலும் சண்ட போடுங்க... ப்ளீஸ்... இப்ப மினிய எதுவும் கேக்க வேணாம்.." எனக் கெஞ்ச,


"இவ்வளவு சொல்றேன் திரும்ப திரும்ப மினி மினின்னுட்டு வராய்... அவ என் தாரா.. எனக்கும் அவளுக்கும் இடைல ஆயிரம் இருக்கும்.. நீ யார்ரா அத பத்தி பேச.." என பிரணவ் மீண்டும் ஆர்யானை அடிக்கப் பாய,


ஆதர்ஷும் அபினவ்வும் அவனைத் தடுக்க முன் வர அதற்குள் சிதாரா, "நிறுத்துங்க..." எனக் கத்தியதும் பிரணவ் அப்படியே நின்றான்.


பின் பிரணவ்வை நோக்கி சிதாரா வர, ஆர்யான், "மினி.. வேணாம் ப்ளீஸ்டா..." என்க அவன் முன் கை நீட்டி தடுத்தவள் தன் கண்களைத் துடைத்து கொண்டு பிரணவ்விடம் திரும்பி,


"சொல்லு.. நீ யாரு எனக்கு.. வார்த்தைக்கு வார்த்தை என் தாரா என் தாரானு சொல்லுறாய்... எனக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.." என்க,


பிரணவ், "தாரா நீ ஏன் இப்படி எல்லாம் பேசுறாய்.. நான் உன்னோட பிரணவ்.. நானும் நீயும் ரெண்டு வருஷமா காதலிச்சோம்... " என்றான்.


அவன் சொன்னதைக் கேட்டு கை தட்டி சிரித்த சிதாரா, "ஓஹ்... காதலிச்சது உண்மை தான்.. பட் நான் மட்டும் தான் காதலிச்சேன்... நீ..... ச்சீ.. சொல்லவே அசிங்கமா இருக்கு.." என்க,


"ஓக்கே தாரா... எல்லாம் விடு... இந்த நிமிஷம் நான் உன்ன லவ் பண்றேன்... எனக்கு தெரியும் நீயும் என்ன இன்னும் லவ் பண்ணிட்டு தான் இருக்காய்..." என பிரணவ் கூற,


சிதாரா, "நான் எப்படி பிரணவ் நீ சொல்றத்த நம்புவேன்.. எவ்வளவு சீப்பான ரீசன் சொல்லிட்டு விட்டுப் போனாய்..." என அவள் சொல்லி முடிக்கும் முன்னே கண்ணீர் அவள் கன்னத்தைத் தாண்டி ஓடியது.


ஆர்யான், "போதும் மினி.. இதுக்கு மேல எதுவும் சொல்லாதே.. ப்ளீஸ்..." என்றவனைத் தடுத்தவள்,


"இல்லடா.. நான் இன்னெக்கி பேசியே ஆகனும்.. எவ்வளவு நாளெக்கி தான் என் மனசுலயே எல்லாம் வெச்சிட்டு இருப்பேன்... இதுக்கு ஒரு முடிவு வேணாம்.." என்ற சிதாரா அழுதவாறே பேசினாள்.


"உன் கிட்ட அன்னெக்கி எவ்வளவு கெஞ்சினேன்... என்ன விட்டுப் போகாதேன்னு... உன் கால்ல கூட விழுந்தேன்..." என உடைந்த குரலில் கூறியவள் திடீரென பிரணவ்வின் சட்டையைப் பிடித்து,


"ஆனா நீ... என்ன வார்த்தையெல்லாம் சொன்னாய்.. இப்ப கூட அதப் பத்தி நெனச்சா..." என சொல்லும் போதே அவளுக்கு மூச்சு வாங்க அனைவரும் அவர்களின் பின்னே நின்றதால் அவர்களுக்கு அவள் முகம் தெரியவில்லை.


பிரணவ் மாத்திரம் அவள் வேகமாக மூச்சு வாங்குவதைக் கண்டவன், தாரா என ஏதோ சொல்ல வர அவன் சட்டையிலிருந்து கையை எடுத்தவள், "ச்சீ... இனி என்ன அப்படி கூப்பிடாதே... உனக்கு அந்த தகுதி கூட இல்ல... உன் வாய்ல இருந்து என் பேரு வரதே அசிங்கமா நெனக்கிறேன்.. " என்றவள்,


பின் அவன் முன் விரல் நீட்டி, "திரும்ப என் லைஃப்ல என்டர் ஆகனும்னு நெனச்ச... அசிங்கமாகிரும்... திஸ் இஸ் மை லாஸ்ட் வார்னிங்..." என்றாள்.


சிதாராவின் பேச்சிலே பிரணவ் தன் தவறு உணர்ந்திருந்தான்.


எதுவுமே கூறாது அவளைத் தடுக்க வழியற்று கண்களில் சோகத்தைத் தேக்கி கல்லாக சமைந்திருந்தான்.


சிதாரா நேராக ஆர்யானிடம் சென்றவள் அவனை அணைத்துக் கொண்டாள்.


அங்கிருந்த யாரும் எதுவுமே பேசவில்லை.


ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.


தன் நெஞ்சு சூடாவதையும், அணிந்திருந்த டீ ஷர்ட் ஈரமாவதையும் வைத்து‌ சிதாரா அழுகிறாள் என உணர்ந்த ஆர்யான் அவனும் அவளை ஆறுதலாக அணைக்க, "இங்கிருந்து போய்றலாம் ரயன்.. என்னால முடியல..." என்க, சிதாராவின் பேச்சே அவள் எவ்வளவு மன உளைச்சலில் உள்ளாள் எனக் கூறியது.


ஏனென்றால் அவள் அதிக கவலையில் உள்ள போதோ அல்லது மன உளைச்சலில் உள்ள போதோ அல்லது அதிகம் உணர்ச்சி வசப்படும் போதோ மட்டும் தான் அவனை ரயன் என அழைப்பாள்.


மற்ற நேரமெல்லாம் ஜிராஃபி தான். இல்லாவிட்டால் பெயர் சொல்லி அழைப்பாள்.


திடீரென தன் கை பாரமாக குனிந்து சிதாராவைப் பார்த்தவன் அதிர்ந்தான்.


வேகமாக மூச்சு வாங்க ஆரம்பித்தவள் கொஞ்சம் கொஞ்சமாக தலையும் கையும் ஒரு பக்கம் உதர வாயில் நுரை தள்ள அவன் கைகளில் சரிந்து கொண்டிருந்தாள்.


❤️❤️❤️❤️❤️


ஆறாவது அத்தியாயம் பத்தின உங்க கருத்த தெரிவிங்க மக்களே... கீப் சப்போர்ட்டிங்... நன்றி... ☺️


- Nuha Maryam -
 
கைதி - அத்தியாயம் 7
​
S M Hospital - Ooty



ஆதர்ஷ், அபினவ், பிரணவ், ஆர்யான், லாவண்யா, அக்ஷரா என அனைவரும் அங்கு கூடி இருந்தனர்.



தன்னை அணைத்தபடி இருந்தவள் திடீரென வலிப்பு வந்து தன் கரங்களிலே சரிய அதிர்ந்த ஆர்யான் "மினி...." எனக் கத்த,



அவன் கத்தலில் திரும்பியவர்கள் சிதாராவின் நிலையைக் கண்டு அதிர்ந்து அவசரமாக அவளிடம் ஓடினர்.



பிரணவ், "தாரா.." என அவளிடம் செல்லப் பார்க்க அவன் கையை யாரோ பிடித்து வைத்திருப்பதை உணர்ந்தவன் யாரெனப் பார்க்க, ஆதர்ஷ் தான் அவனை செல்ல விடாமல் பிடித்திருந்தான்.



ஆதர்ஷ், "நீ பண்ணது எல்லாம் போதும்... தயவு செஞ்சி இங்கயே இரு.." என கோவமாகக் கூறியவன் சிதாராவிடம் விரைந்தான்.



பிரணவ் எதுவும் செய்ய முடியாமல் அங்கு நின்றே கவலையில் பார்த்துக் கொண்டிருந்தான்.



சிதாரா வலிப்பு வந்து துடிக்க ஆர்யான் அவசரமாக அருகிலிருந்த இரும்புக் கம்பியொன்றை எடுத்து அவள் உள்ளங்கையில் வைத்து மடித்து அழுத்தினான்.



மெதுவாக அவளது வலிப்பு நிற்க சிதாராவை கரங்களில் ஏந்திய ஆர்யான் யாரிடம் எதுவும் கூறாது ஓடிச் சென்று டாக்சி பிடிக்க அக்ஷராவும் லாவண்யாவும் அவனுடன் சென்றனர்.



ஏனையோரிடம் தகவலைக் கூறி அவர்களை ரெட் ஹவுஸ் செல்லக் கூறிய அபினவ் இன்னொரு டாக்சி பிடித்து ஆதர்ஷ், பிரணவ்வுடன் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.



ஹாஸ்பிடலில் அனைவரும் டாக்டர் சிதாராவைப் பரிசோதித்து விட்டு வரும் வரை தவிப்புடன் இருக்க,



பிரணவ் அங்கு ஒரு ஓரமாக கை கட்டி நிற்பதைப் பார்த்த ஆர்யான் பிரணவ்விடம் சென்று அவன் சட்டையைப் பிடித்து,



"எதுக்குடா இன்னும் இங்க நின்னுட்டு இருக்காய்... இன்னும் என்ன வேணும் உனக்கு... அவ்வளவு படிச்சி படிச்சி சொன்னேன் தானே இப்ப எதையும் பேச வேணாம் நிறுத்து நிறுத்துன்னு... கேட்டியாடா... இப்ப பாரு மினி எந்த நிலைல இருக்கான்னு... இதுக்கெல்லாம் நீ மட்டும் தான்டா காரணம்... உன்ன...." என கோபத்தில் கத்தி விட்டு பிரணவ்வை அடிக்கக் கை ஓங்க,



அபினவ் அவனைத் தடுக்க முயற்சிக்க, சிதாராவைப் பரிசோதித்து விட்டு வெளியே வந்த டாக்டர் அவர்களைக் கண்டு,



"நிறுத்துங்க... இங்க என்ன நடக்குது... இது என்ன ரௌடிசம் பண்ணுற இடம்னு நெனச்சீங்களா... பேஷன்ட்ஸ் இருக்குற இடம்... திரும்ப இப்படி எல்லாம் பண்ணிட்டு இருந்திங்கனா நான் போலிஸ கூப்பிட்டுருவேன்... மைன்ட் இட்..." என அவர்களைத் திட்ட,



பிரணவ்வை விட்டு டாக்டரிடம் ஓடி வந்த ஆர்யான், "சாரி.. சாரி டாக்டர்... மினி இப்போ எப்படி இருக்கா... நல்லா இருக்கால்ல... " என பதட்டமாய்க் கேட்டான்.



டாக்டர், "ப்ளீஸ் பீ காம் சார்... அவங்க இப்போ நல்லா தான் இருக்காங்க... டோன்ட் வொரி... அவங்களுக்கு இதுக்கு முன்னாடி ஃபிட்ஸ் வந்து இருக்கா..." என்க,



லாவண்யா இல்லை என சொல்ல வர,



"ஆமா டாக்டர்... இது தேர்ட் டைம்..." என ஆர்யானிடமிருந்து பதில் வர அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.



டாக்டர், "ஆஹ் ஓக்கே... ஏதோ ஒரு விஷயம் அவங்க மனச ரொம்ப பாதிச்சிருக்கு... அத ஞாபகப்படுத்துற விதமா ஏதாச்சும் நடந்தா தான் இப்படி ஃபிட்ஸ் வருது இவங்களுக்கு... ஐ திங்க் இன்னெக்கி ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்து இருக்காங்க... அதனால தான் இன்னும் கான்ஷியஸ் வரல... நாங்க ட்ரீட்மன்ட் பண்ணி இருக்கோம்... சோ ஒரு டூ த்ரீ ஹவர்ஸ்ல கண்ணு முழிச்சிருவாங்க... அவங்கள வார்டுக்கு சேன்ஜ் பண்ணுறோம்... அதுக்கப்புறம் நீங்க போய் பார்க்கலாம்.." என்க,



ஆர்யான், "தேங்க் யூ டாக்டர்.." என்றதும் அவர் சென்றார்.



சிதாராவை வார்டுக்கு மாற்ற ஆர்யான் முதலிலே உள்ளே சென்று அவள் அருகில் அமர்ந்து அவள் கையை தன் கைக்குள் வைத்து பிடித்துக் கொண்டவன் கண்கள் அவனையும் அளியாமல் கண்ணீர் சிந்த யாரும் காணாதிருக்க அவசரமாக துடைத்துக் கொண்டான்.

ஆனால் சிதாராவைக் காண உள்ளே வந்த லாவண்யா அதனைக் கண்டு கொண்டாள்.



பின் அனைவரும் உள்ளே வர லாவண்யா ஆர்யானிடம் சென்று,



"அண்ணா ப்ளீஸ்... உண்மைய சொல்லுங்க.. சித்துக்கு இதுக்கு முன்னால ஃபிட்ஸ் வந்திருக்கா... எப்படி வந்தது... இது வரைக்கும் அவ என் கிட்டயும் அச்சு கிட்டயும் இத பத்தி எதுவுமே சொல்லி இல்லயே... அவளுக்கு என்னாச்சி.. ஏன் இப்படி மாறி இருக்கா.." என்க,



"ஆமாண்ணா.. ப்ளீஸ் எதையும் மறைக்காம சொல்லுங்க... எங்க ஃப்ரெண்டுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருந்திருக்கு... ஆனா இது வரைக்கும் நாம யாரும் அத பத்தி தெரிஞ்சிக்காம இருந்திருக்கோம்..." என கவலையாக கூறினாள் அக்ஷரா.



ஆர்யான், "சொல்றேன்மா... இதுக்கு மேல மறைச்சி என்ன பிரயோஜனம்..." என்றவன் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு,



"மினிக்கு ஃபர்ஸ்ட் டைம் ஃபிட்ஸ் வந்தப்போ தான் எனக்கும் மினிக்கும் இடைல ஃப்ரென்ட்ஷிப் உருவானது..." என்க, அனைவரும் அவன் கூறுவதைக் கேட்க தயாரானார்கள்.



2 வருடங்களுக்கு முன்...



Fordham University - New York

யுனிவர்சிட்டி ஆடிட்டோரியமே அன்று பரபரப்பாக காணப்பட்டது.

ஏனென்றால் அன்று முதலாம் வருடத்திற்கான புதிய மாணவர்களை அனுமதிக்கும் தினமாகும்.

மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்கள் புதிய மாணவர்களை வரவேற்றுக் கொண்டிருக்க நான்காம் ஆண்டு பயிலும் ஆர்யான் அங்கிருந்த பெஞ்ச்சில் தன் நண்பர்களுடன் அமர்ந்து வந்து செல்லும் மாணவர்களை கலாய்த்துக் கொண்டிருந்தான்.

அந்த நேரம் சரியாக யுனிவர்சிட்டியினுள் நுழைந்தாள் சிதாரா.

நீல நிற குர்த்தி அணிந்து கழுத்தை சுற்றி ஷால் போட்டு கண்களில் பெரிய கண்ணாடி, நெற்றியில் சிறிய பொட்டு, தோளில் பையுடன் ஒரு வித படபடப்புடன் நுழைந்தாள்.

சுற்றி எப்போதுமே மார்டன் ட்ரஸ் அணிந்த நவ நாகரீக பெண்களையே பார்த்து இருந்தவனின் கண்களில் முழங்காலையும் தாண்டிய குர்த்தி அணிந்து ஷால் போட்டு பதட்டத்துடன் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டு வந்த சிதாராவைக் கண்டதும் விழிகளில் ரசனையுடன் அவளை ஏறிட்டான்.


இந்தியாவிலே பிறந்து வளர்ந்து படிப்பிற்காக வேண்டி நியுயார்க் வந்த ஆர்யானுக்கு இந்த ஐந்து வருடங்களாக மாடர்ன் ஆடை அணிந்த அல்லது முழங்காலுக்கு மேலேறிய ஆடை அணிந்த பெண்களே கண்ணுக்கு தென்பட இருப்பதால் அவர்களைக் கண்டாலே எரிச்சல் வரும்.


ஆனால் அது அந் நாட்டு பழக்க வழக்கம் என்பதால் உடன் பயிலும் பெண்களுடன் பழகினாலும் ஒரு இடைவெழியைக் கடைபிடிப்பான்.


அப்படிப்பட்டவனுக்கு சிதாராவைக் கண்டதும் ரசனை ஏற்பட்டது ஆச்சர்யம் இல்லை.


அவள் கண்களில் தெரிந்த பதட்டத்தைக் கண்டதும் இவனின் வழக்கமான குறும்புக் குணம் வெளிப்பட்டு விட்டது.


சிதாரா அவர்கள் இருந்த இடத்தை கடந்து செல்லப் பார்க்க ஆர்யான்,


"ஓய் சோடா புட்டி..." என அவளை அழைக்க,


அதே இடத்தில் நின்றவள் அவர்களைப் பார்த்து விட்டு தன்னையா அழைத்தான் என சுற்றிப் பார்க்க,


"உன்ன தான்மா... இங்க வா..." என மீண்டும் அழைத்தான் ஆர்யான்.


சிதாரா பயந்து பயந்து அவர்களை நோக்கி மெதுவாக அடியெடுத்து வர, ஆர்யான் அவள் வரும் வரை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் அவர்களை நெருங்கியதும் பொய்க் கோபத்துடன்,


"கூப்டதும் வர மாட்டியா... என்ன புகுந்த வீட்டுக்கா போற.. இவ்வளோ மெதுவா வர... சீனியர்ஸ்க்கு ஒரு மரியாதை இல்ல..." என்றதும் அவள் பயந்து தலை குனிந்த படியே இட வலமாக தலையசைத்தாள்.


ஆர்யானின் நண்பர்களுக்கு தமிழ் தெரியாததால் அவர்கள் இருவரையும் வேடிக்கை பார்த்தனர்.


சிதாரா பயந்து நடுங்க ஆர்யானுக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.


மெதுவாக வாயை மூடிய படி சிரித்தவன்,


"காசு ஏதாச்சும் விழுந்துடிச்சா சோடா புட்டி.." என்க தலையைத் தூக்கி அவனைப் புரியாமல் நோக்கினாள் சிதாரா.


ஆர்யான், "இல்ல ரொம்ப நேரமா கீழ பார்த்து ஏதோ தேடிட்டு இருந்தியே.. அதான் கேட்டேன்..." என்க அவசரமாக இல்லை என தலை அசைத்தாள் சிதாரா.


"ஆமா என்ன இது ட்ரஸ்... இவ்வளவு நீளமா போட்டு கழுத்துல ஷால்... இதுல ஆள விடப் பெரிய கண்ணாடி வேற... இன்னுமே அந்தக் காலத்துல இருக்க... இங்க வர கிட்ட எப்படி ட்ரஸ் பண்ணிட்டு வரனும்னு யாரும் சொல்லி தரலயா..." என ஆர்யான் விளையாட்டாக கலாய்த்திட,


இதை அறியாத சிதாராவோ அவனின் வார்த்தைகளைக் கேட்டதும் திடீரென தலை பாரமாக தன் சமநிலையை இழப்பது போல் இருக்க அப்படியே வலிப்பு வந்து அவன் காலின் அருகே விழுந்தாள்.


ஆர்யான் அதிர்ச்சியில் இருக்க அவன் நண்பர்கள் அனைவரும் பதட்டமாகி ஒருவன், "ஹேய் வட் ஹெப்பன்ட் மேன்.." என்க,


தன்னிலை பெற்ற ஆர்யான், "டோன்ட் நோ.. ப்ளீஸ் ஹெல்ப் மீ டு டேக் ஹர் டு த மெடிக்கல் ரூம்..." என்றவன் நண்பர்களின் உதவியுடன் அவசரமாக சிதாராவை முதலுதவி அளிக்க எடுத்துச் சென்றான்.


சற்று நேரத்தில் கண் விழித்த சிதாரா தான் எங்கிருக்கிறோம் என கண்களால் அலச,


அவள் கண் விழிக்கும் வரை தனியாக அங்கே காத்திருந்த ஆர்யான் பதட்டமாக, "ஏங்க நீங்க நல்லா இருக்கீங்கல்ல... " என்க ஆம் என தலையசைத்தாள் சிதாரா.


ஆர்யான், "சாரிங்க.. சீரியஸ்லி உங்கள ஹர்ட் பண்ணனும்னு எதுவும் சொல்லல... ஜஸ்ட் ரேக்கிங் பண்ண தான் பாத்தோம்..." என்க,


"இட்ஸ் ஓக்கே.." என்றாள் சிதாரா.


"இதுக்கு முன்னாடி உங்களுக்கு இப்படி ஃபிட்ஸ் வந்திருக்கா.." என்க இல்லை என தலையசைத்தாள்.


ஆர்யான், "என்னங்க நீங்க... நானும் ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கேன்... நீங்க தலையை மட்டும் ஆட்டுரீங்க... ஒரு வேளை நீங்க இன்னும் என்ன மன்னிக்கலயா... அகைன் சாரிங்க..." என்றான்.


சிதாரா அவசரமாக, "இல்ல.. இல்லங்க... நீங்க எதுவும் தப்பு பண்ணலயே... ஜஸ்ட் விளையாட்டுக்கு தானே பண்ணீங்க... அதனால சாரி கேக்காதீங்க..." என்க,


மகிழ்ந்த ஆர்யான், "ஹப்பாடா.. ஒரு வழியா பேசிட்டீங்க... நான் கூட உங்களுக்கு பேச வராதோன்னு சந்தேகப்பட்டேன்.." என்க அவனைப் பொய்யாக முறைத்தாள் சிதாரா.


பின், "அப்படியே உங்க பேரையும் சொன்னா நல்லா இருக்கும்... ரொம்ப நேரமா நானும் வாங்க போங்கன்னு பேசி எனக்கே என்னவோ போல இருக்கு.." என்க புன்னகைத்தவள் சிதாரா என்றாள்.


ஆர்யான், "ஓக்கே தாரா.. ஐம் ஆர்யான்... உனக்கு எப்படி வேணாலும் கூப்பிடலாம்... நான் ஃபைனல் யேர் படிக்கிறேன்... உனக்கு சீனியர்... என்ன ஹெல்ப் வேணாலும் என் கிட்ட கேளு..." என்க சிதாராவிடமிருந்து பதில் வராமல் போக அவளைக் கேள்வியாய் நோக்கினான்.


ஆனால் சிதாராவோ அவ்வளவு நேரம் இருந்த புன்னகை மறைந்து கை இரண்டையும் அழுத்த மூடி ஒரு வித பதட்டத்தில் இருந்தாள்.


ஆர்யான் மீண்டும் 'தாரா' என அவளை அழைக்க,


"வேணாம்.. அப்படி கூப்டாதீங்க... வேணாம்.. எனக்கு பிடிக்கல..." என கண்களில் இருந்து கண்ணீர் சிந்த கூறினாள்.


"ஓக்கே ஓக்கே... கூல்... நான் இனி அப்படி கூப்பிடல..." என்கவும் அமைதியாகினாள் சிதாரா.


ஆர்யான், "சரி நான் இனி உன்ன அப்படி கூப்பிடல... பட் வன் கன்டிஷன்..." என்க அவனை என்ன என்பது போல் பார்த்தாள்.


ஆர்யான் புன்னகையுடன் அவள் முன் ஒரு கரம் நீட்டி, "ஃப்ரென்ட்ஸ்..." என்கவும் சிதாரா சிறிது தயங்க ஆர்யான் முகம் வாடினான்.


பின் சட்டென அவன் கரத்துடன் தன் கரம் சேர்த்தவள் புன்னகையுடன் பதிலுக்கு, "ஃப்ரென்ட்ஸ்..." என்றாள்.


ஆர்யானுக்கு வந்த சந்தோஷத்தில், "தேங்க்ஸ் மினி... தேங்க்ஸ் அ லாட்... நான் கூட நீ என்ன தப்பா நெனச்சி என் ஃப்ரென்ட்ஷிப்ப எக்சப்ட் பண்ணிக்க மாட்டியோன்னு நெனச்சேன்..." என்க,


அவன் மினி என அழைத்ததும் அவள் அவனைப் புரியாமல் பார்க்க அப்போது தான் அவன் மினி என அழைத்தது நினைவில் வந்தது.


"அது ஒன்னுமில்ல... நீ என்ன விட ரொம்ப குட்டையா இருக்கல்ல.. அதான் செல்லமா மினியன்.. அத கொஞ்சம் ஷார்ட் பண்ணி மினி... " என ஆர்யான் விளக்கம் அளிக்க,


சிதாரா பட்டென, "ஓக்கே ஜிராஃபி.." என்க ஆர்யான் சிரிக்க அவனுடன் அவளும் இணைந்தாள்.


❤️❤️❤️❤️❤️


- Nuha Maryam -​
 
கைதி - அத்தியாயம் 8
​
மருத்துவ அறையிலிருந்து சிதாராவை தன் நண்பர்கள் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற ஆர்யான் அனைவருக்கும் அவளை அறிமுகம் செய்து வைத்தான்.


அனைவருடனும் கை குலுக்கி இன்முகத்துடன் பேச அவர்களுக்கும் அவளைப் பிடித்து விட்டது.


சிதாராவை ஆடிட்டோரியத்துக்கு அழைத்துச் சென்று வகுப்பில் சேர தேவையான அனைத்தையும் விளக்கினான்.


அதன் பின் வந்த நாட்களில் நீ.. வா... போ.. என கூறும் அளவுக்கு இருவரும் நல்ல நண்பர்கள் ஆகினர்.


வகுப்பிலுள்ள சக மாணவர்களுடனும் நட்பு பாராட்டிய சிதாராவுக்கு யுனிவர்சிட்டி வாழ்க்கை புது பிறவி எடுத்து வந்தது போல் இருந்தது.


நாட்கள் இவ்வாறு செல்ல ஒரு நாள் யுனிவர்சிட்டிக்கு அருகிலுள்ள பார்க்கில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.


அப்போது சிதாரா, "ஜிராஃபி எனக்கொரு ஹெல்ப் பண்றியா..." என்க,


"சொல்லு மினி... பணம் ஏதாவது தேவையா..." என ஆர்யான் கேட்க,


"இல்ல... அதெல்லாம் அப்பா தாராளமாவே அக்கவுன்ட்ல போட்டு வெச்சி இருக்காரு... ஈவ்னிங் என் கூட கொஞ்சம் ஷாப்பிங் வரியா..." எனக் கேட்டாள்.


ஆர்யான், "புக்ஸ் ஏதாவது வாங்கனுமா மினி... சொல்லு நான் வாங்கிட்டு வரேன்... நீ அலைய வேணாம்..." என்கவும்,


"இல்ல ஜிராஃபி... எனக்கு கொஞ்சம் ட்ரஸ் பர்ச்சேஸ் பண்ணனும்... அப்படியே பார்லருக்கு போய்ட்டு வரணும்... தனியா போக எனக்கு இன்னும் இங்க அவ்வளவா பழகல... அதான் உன்ன கூப்ட்டேன்..." என்றாள் சிதாரா.


ஆர்யான், "ட்ரஸ் வாங்கனும் ஓக்கே... நீ எதுக்கு பார்லர்க்கு போகனும்னு சொல்ற... நீ அங்கெல்லாம் போக மாட்டியே..." என்க அவனை முறைத்த சிதாரா,


"எதுக்கு இவ்வளவு கேள்வி கேக்குற... உனக்கு என் கூட வர முடியுமா முடியாதா... முடியாதுன்னா சொல்லு நான் அந்த ஜோன் கூட போறேன்..." என்க,


"இல்ல இல்ல நானே வரேன்... நீ எங்க போனும்னு சொன்னாலும் ஓக்கே‌... அந்த ஜோனோட மூஞ்சியும் முகரகட்டையும்... என்னமோ இதுக்கு முன்னாடி பொண்ணுங்களயே பார்க்காதது போல உன்ன பாக்குறான் ஒரு பார்வை..." என தன் பாட்டிற்கு ஜோன் என்பவனை வசைபாட சிரித்த சிதாரா அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.


மாலை ஆனதும் எப்போதும் போல நீண்ட குர்த்தி, கழுத்தை சுற்றி ஷால், கண்ணில் கண்ணாடி, நெற்றியில் சின்னதாய் ஒரு பொட்டு என தயாரானவள் ஆர்யான் வந்து ஹார்ன் அடிக்கவும் அவனுடன் பைக்கில் ஏறி கிளம்பினாள்.


ATM சென்று பணம் எடுத்துக் கொண்டவள் ஆர்யானுடன் அங்கிருந்த காம்ப்ளக்ஸிற்கு சென்றாள்.


பல்வேறுபட்ட கடைகளை ஒரே இடத்தில் கொண்டதே காம்ளக்ஸ் ஆகும்‌.


முதலில் ட்ரஸ் செக்ஷனிற்கு இருவரும் சென்றனர்.


ஆர்யான் அங்கு வேலைக்கிருந்த பெண்ணிடம்,


"லைட் கலர் சிம்பள் குர்த்தி டிசைன்ஸ் காட்டுங்க..." என்கவும் சிதாரா,


"இல்ல இல்ல லாங் ஸ்கர்ட் பிளவுஸ் என்ட் டீ ஷர்ட் ஜீன்ஸ் டிசைன் காட்டுங்க.." எனக் கூற அவளை கேள்வியாய் நோக்கினான் ஆர்யான்.


சிதாரா எப்போதும் அதிக வேலைப்பாடற்ற கண்ணுக்கு கூசாத நிறங்களில் குர்த்தி மட்டுமே அணிந்து கண்டுள்ளதால் தான் அவனே அவற்றை எடுத்துக் காட்ட சொன்னான்.


பணிப்பெண் காட்டியவற்றில் தனக்குப் பிடித்தவற்றை வாங்கியவள் அடுத்து பார்லருக்கு சென்றாள்.


ஆர்யான் எதுவும் கூறாமல் அவள் செய்பவற்றை அமைதியாக பார்வையிட்டான்.


பார்லரினுள் நுழைந்தவள் பார்லர் பெண்ணிடம், "ஹேர் ஷார்ட் பண்ணனும்... அப்படியே கொஞ்சமா கேர்ள் பண்ணிடுங்க.." என்கவும் ஆர்யான் அதிர்ந்தான்.


"என்னாச்சி மினி... எதுக்காக இதெல்லாம் பண்ணிட்டு இருக்க... இவ்வளவு நல்ல முடிய யாராச்சும் கட் பண்ணுவாங்களா..." என கோவமாக ஆர்யான் வினவ,


சிதாரா, "ப்ளீஸ்டா... நான் உன் கிட்ட அப்புறமா சொல்றேன்... இப்போ என்ன தடுக்காதே..." என்க கோவமாக வெளியே சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான் ஆர்யான்.


சில மணி நேரம் கழித்து சிதாரா வெளியே வர ஆர்யான் விழி விரித்து நின்றான்.

​

சற்று முன் வாங்கிய லாங் ஸ்கர்ட் பிளவுஸ் அணிந்து முடியை கேர்ள் செய்து எப்போதும் அணிந்திருக்கும் கண்ணாடி இல்லாமல் வந்தாள் சிதாரா.


ஒரு நிமிடம் தான் விழி விரித்து நின்றான் ஆர்யான்.


பின் ஏற்கனவே இருந்த கோபத்துடன்,


"இன்னும் எங்கயாச்சும் போகனுமா மேடம்..." என்க,


"ஐ கேர் சென்டர் போகனும்.." என்றாள் சிதாரா.


அவளை கோவமாக ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லாது முன்னே நடக்க அவனைப் பின் தொடர்ந்தாள் சிதாரா.


அங்கிருந்து ஐ கேர் சென்டர் சென்றவள் தன் கண்களுக்கு பொருத்தமான கான்டேக்ட் லென்சை ஆர்டர் செய்து விட்டு நேராக சிதாரா தங்கியிருந்த ப்ளாட்டை அடைந்தனர்.


சிதாராவைத் தாண்டிக் கொண்டு உள்ளே நுழைந்தவன் அவள் வாங்கியவற்றை வைத்து விட்டு கோவமாக அமர்ந்தான்.


சிதாரா உள் நுழைந்தவள் மனதில், "ஆத்தீ... ஜிராஃபி ரொம்ப கோவமா இருக்கான் போல... நாமளே முதல்ல ஆரம்பிச்சிரலாம்.." என நினைத்தவள் ஆர்யானைப் பார்த்து,


"நான் எப்படி இருக்கேன் ஜிராஃபி... அழகா இருக்கேனா..." என தன்னை சுற்றிக் காட்ட,


"ஏன் ஏதாச்சும் எக்சிபிஷன்க்கு ஷோ கேஸ் பொம்மையா வரேன்னு சைன் பண்ணி குடுத்திருக்கியா.." என கோவமாக ஆர்யான் வினவ தலை குனிந்தாள் சிதாரா.


ஆர்யான் எழுந்து அவளை நோக்கி வந்தவன்,


"மினி.. நீ எதுக்காக இதெல்லாம் பண்ணிட்டு இருக்கன்னு நிஜமாலுமே எனக்கு புரியல... நீ ஃபர்ஸ்ட் டே இங்க வந்தப்போ நான் உன்னோட ட்ரஸிங் ஸ்டைல வெச்சி உன்ன கலாய்ச்சேன்... அது ஜஸ்ட் ரேக்கிங் பண்ண தான்... பட் நீ உள்ள வரும் போதே நான் உன்ன ரசிச்சி பாத்துட்டு இருந்தேன் தெரியுமா... ஏன்னா நீ அழகா இருக்கன்னு இல்ல... சுத்தி எப்பவுமே மாடர்ன் ட்ரஸ் உடுத்த பொண்ணுங்களையே பாத்து பாத்து பழகின எனக்கு ஃபர்ஸ்ட் டைம் ட்ரெடிஷனல் ட்ரஸ்ல உன்ன பாத்ததும் ஒரு டிஃபரன்ட் ஆன ஃபீல்... அப்புறம் ரேக்கிங் பண்ணலாம்னு தான் அப்படி எல்லாம் பொய் சொன்னேன்... உண்மைய சொன்னா நீ ட்ரெடிஷனல் ட்ரஸ்ல தேவதை மாறி இருப்ப... ஒரு வேளை அதுக்காக தான் நீ இப்படி எல்லாம் பண்றியா..." என்றான்.


அது வரை அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவள் விழிகளில் அவளையும் அறியாது கண்ணீர்.


ஆர்யானைப் பார்த்து புன்னகைத்தவள், "ஃபர்ஸ்ட் டைம் ஒருத்தங்க இப்படி சொல்லி கேக்குறேன்..." என்கவும்,


அவள் கண்ணீரைப் பார்த்து பதறிய ஆர்யான் அவசரமாக அவள் கண்ணீரைத் துடைத்து விட்டவன்,


"ஹேய் மினி... நீ எப்படி இருந்தாலும் அழகா தான் இருப்ப... அழாதே... சாரி... நீ எதுவும் சொல்ல வேணா... நான் இனிமே உன் மேல கோவப்பட மாட்டேன்..." என்றான்.


சிதாரா, "ஜிராஃபி...நான் உன் கிட்ட என்ன பத்தி சில விஷயம் சொல்லனும்... " என்க,


"நீ உன்ன பத்தி சொல்லி தான் நான் தெரிஞ்சிக்கனும்னு இல்ல மினி... உன்னோட பாஸ்ட் என்னவா இருந்தாலும் நான் உன் கூட இருப்பேன் எப்பவுமே..." எனக் கூறி புன்னகைத்தான் ஆர்யான்.


"இல்ல ஜிராஃபி... ரொம்ப நாளா இதெல்லாம் என் மனச போட்டு அறுக்குது... இத யாருக்கிட்டயாச்சும் சொல்லனும்னு தோணுது..." என்றவள் அவனிடம் தன் கடந்த காலத்தை கூற ஆரம்பித்தாள்.


ஆர்யான் பால்கனியில் சென்று நின்றவன் அவள் கூறுவதைக் கேட்க கேட்க பால்கனி கம்பி மீதிருந்த அவன் கையின் பிடி இறுகிக்கொண்டே சென்றது.


சிதாரா பிரணவ்வுடனான தன் கடந்த காலத்தை ஆர்யானிடம் கூறி முடிக்க அவன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.


சட்டென ஏதோ விழுந்து உடையும் சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்தவன் அதிர்ந்தான்.


வாயில் நுரை தள்ள கை கால்கள் வெட்ட கீழே விழுந்து கிடந்தாள் சிதாரா.


அவள் பக்கத்தில் அங்கு மேசையில் அழகுக்கு வைத்திருந்த பூச்சாடி உடைந்து கிடைந்தது.


அவளிடம் ஓடியவன் தன்னிடமிருந்த பைக் சாவியை அவள் கைகளில் வைத்து அழுத்த அவள் அமைதியாகினாள்.


அவசரமாக டாக்டருக்கு அழைத்து வர சொன்னவன் அவளை அறைக்குள் தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தி அவள் முகத்தில் தண்ணீர் தெளிக்கவும் மெதுவாகக் கண் விழித்தாள் சிதாரா.


"ஆர் யூ ஓக்கே மினி... இந்த தண்ணிய குடி..." என்க ஆம் எனத் தலையசைத்தவள் நீரை வாங்கிப் பருகினாள்.


சரியாக அந் நேரம் டாக்டர் வர அவளைப் பரிசோதித்து விட்டு, "இப்போதக்கி இந்த டேப்லட்ட போட்டுட்டு நீ கொஞ்சம் ரெஸ்ட் எடும்மா.." என்று விட்டு அறையிலிருந்து வெளியேறினார்.


சிதாராவுக்கு மருந்தையும் நீரையும் கொடுத்து குடிக்க வைத்த ஆர்யான் டாக்டரைப் பின் தொடர்ந்தான்.


ஆர்யான் வந்ததும் டாக்டர், "என்னாச்சி சடன்னா.. இதுக்கு முன்னாடி இப்படி நடந்திருக்கா.." என்க,


ஆர்யான் அன்று யுனிவர்சிட்டியில் நடந்ததையும் இப்போது நடந்தவற்றையும் கூறினான்.


"அப்டின்னா அந்த விஷயம் அவங்கள மனசளவுல ரொம்ப பாதிச்சிருக்கு... அதை பத்தி அவங்க நிறைய நேரம் திங்க் பண்ணி இருக்காங்க... அதனால தான் அவங்க ரொம்ப எமோஷனல் ஆகுறப்போ எல்லாம் அவங்களுக்கு ஃபிட்ஸ் வருது.." என டாக்டர் கூற,


ஆர்யான், "இதை கியுர் பண்ண முடியாதா டாக்டர்.." எனக் கேட்க,


"கியுர் பண்ணலாம்.. ஃபிட்ஸ் வர நிறைய ரீசன்ஸ் இருக்கு.. இது அவங்க மனசு சம்பந்தப்பட்டது...மருந்தினால அவங்கள கியுர் பண்ண முடியாது... அதனால அவங்க மனச பாதிக்கிற அந்த விஷயத்த அவங்க தலைல இருந்து எடுக்கனும்... அத பத்தியே அவங்க மறக்கனும்...இல்லன்னா அது சாதாரண விஷயம்னு அவங்க அத கடந்து போற மனநிலைக்கு வரனும்... இத விட்டா வேற வழி இல்ல.." என்க, நன்றி கூறி அவரை அனுப்பி வைத்தான்.


அறைக்குள் நுழைந்த ஆர்யான் சிதாரா எடுத்த ஆடைகளை கட்டிலில் விரித்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன் அவளைப் பார்த்து முறைக்க, அவளோ புரியாது விளித்தாள்‌.


ஆர்யான், "எவனோ ஒருத்தன் உன்ன பத்தி புரிஞ்சிக்காம உன்ன தப்பா பேசினான்னு நீ எதுக்கு உன்ன மாத்திக்கனும்..." என்க,


இப்போது முறைப்பது அவளானது.


"டேய் வளந்து கெட்டவனே.. எவனோ சொன்னங்குறதுக்காக நான் மாறனும்னா அப்போவே மாறி இருப்பேனே... க்ளாஸ்ல நான் மட்டும் தனியா தெரியக் கிட்ட எல்லாரும் என்னையே பாக்குற போல ஒரு‌ ஃபீல்... என்ட் நான் ஒன்னும் அரை குறையா ட்ரஸ் போடல்லயே... இப்போ க்ளாஸ்ல மத்த பசங்க கூட பழகும் போது எனக்கு அன்கம்ஃபிடபிளா இருக்காது... ஏன்னா நானும் இப்போ அவங்கள போல தானே இருக்கேன்... போதாத்துக்கு அந்த ஜோன் வேற ஒரு மார்க்கமா பாக்குறான்னு சொன்னியே.. இனி அவனும் அப்படி பாக்க மாட்டான்..." என்க,


"ஏதோ நீ சொல்ற... நானும் நம்புறேன்..." என்றவன் அதன் பின் இருவரும் வேறு கதைகள் பேசினர்.


❤️❤️❤️❤️❤️


- Nuha Maryam -
 
கைதி - அத்தியாயம் 9​

ஆர்யான் கூறி முடிக்க அனைவரின் கண்களும் கலங்கி இருந்தன.


அந் நேரம் அங்கு வந்த நர்ஸ் ஆர்யானிடம், "டாக்டர் உங்கள வர சொன்னாங்க.." என்று விட்டு செல்ல ஆர்யான் அவருடன் செல்ல ஆதர்ஷும் அவர்களைப் பின் தொடர்ந்தான்.


டாக்டரிடம் சென்றவர்கள், "டாக்டர் வர சொல்லி இருந்தீங்க..." என்க,


டாக்டர், "யா.. ப்ளீஸ் டேக் யுவர் சீட்..." என்க,


ஆர்யான், "டாக்டர்.. மினிக்கு ஒரு பிரச்சினையும் இல்லல்ல.." என பதட்டமாக கேட்க,


ஆதர்ஷ் அவன் கையைப் பிடித்து அமைதியாக்கினான்.


டாக்டர், "அதை பத்தி பேச தான் வர சொன்னேன் சார்..." என்றவர் சற்று இடைவெளி விட்டு,


"இது அவங்களுக்கு தேர்ட் டைம்னு சொன்னீங்க இல்லயா... நானும் அவங்கள டெஸ்ட் பண்ணேன்... அவங்க சாதாரணமா இருக்குற போல வெளிய உங்களுக்கு தெரியலாம்... பட் அது உண்மை இல்ல அவங்க எதை பத்தியோ ரொம்ப டீப்பா திங்க் பண்ணிட்டு இருப்பாங்க... இது தான் மிஸ்.சிதாராவுக்கு ஃபிட்ஸ் வர ஸ்டார்ட் ஆக காரணமா இருந்திருக்கு...


பொதுவா ஃபிட்ஸ் வர பல ரீசன்ஸ் இருந்தாலும் அது நேரடியா அவங்களோட ப்ரைன தான் தாக்கும்... இது மிஸ்.சிதாராவுக்கு தேர்ட் டைம் வேற... இது தொடர்ந்தா அவங்க ப்ரைன் டேமேஜ் ஆகி உயிருக்கு ஆபத்தாகலாம்... கோமா ஸ்டேஜ்க்கு போக கூட வாய்ப்பு இருக்கு..." என்று நிறுத்த ஆர்யான், ஆதர்ஷ் இருவரும் அதிர்ந்தனர்.


ஆர்யான் பதறி, "என்ன சொல்றீங்க டாக்டர்... ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க டாக்டர்..‌. என்னோட மினிய எப்படியாச்சும் கியூர் பண்ணி குடுங்க..." என அழ ஆதர்ஷுக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை.


உடன் பிறக்காவிட்டாலும் அவனின் செல்லத் தங்கை அவள்.


சொல்லப் போனால் லாவண்யா, சிதாரா இருவரில் யார் முக்கியம் என்று கேட்டால் ஒரு நொடி கூட யோசிக்காமல் சிதாரா என்று கூறுவான்.


அவ்வாறிருக்க டாக்டர் கூறியதைக் கேட்டவனால் தாங்க முடியவில்லை.


ஆதர்ஷ், "இதை கியுர் பண்ண ஏதாவது வழி இருக்கும் தானே டாக்டர்.." என்க,


டாக்டர், "மெடிசின்ஸால இதை பர்மனன்ட்டா கியூர் பண்ண முடியாது சார்... மெடிசின்ஸால ஃபிட்ஸ் வராம ஸ்டாப் பண்ணி வைக்க முடியும்... மெடிசின்ஸ் ஸ்டாப் பண்ணா அகைன் ஃபிட்ஸ் வரும்... என்ட் கன்ட்னியுஸா மெடிசின் எடுத்துக்குறது அவங்களோட கிட்னிய டேமேஜ் பண்ணும்... அதனால ஏதாவது பண்ணி அவங்க மனசுல இருந்து அவங்கள ரொம்ப பாதிச்ச அந்த விஷயத்த எடுத்துப் போட ட்ரை பண்ணுங்க... நான் இப்போதெக்கி அவங்களுக்கு ஃபிட்ஸ் வராம இருக்க மெடிசின்ஸ் எழுதி தரேன்... பட் இது நிரந்தர தீர்வு இல்ல..." என்றார்.


அவரிடம் நன்றி கூறி விட்டு இருவரும் சிதாரா இருந்த வார்டுக்கு வந்தனர்.


அக்ஷரா, "டாக்டர் என்ன சொன்னாங்க அண்ணா..." என ஆர்யானிடம் கேட்க அவன் ஏதோ யோசனையில் இருக்க,


ஆதர்ஷ் டாக்டர் கூறிய அனைத்தையும் அவர்களிடம் கூறியவன் வந்த ஆத்திரத்தில் பிரணவ்விடம் சென்று அவன் கன்னங்களில் மாறி மாறி அடித்தான்.


பிரணவ்வோ குற்றவுணர்ச்சியில் இருந்ததால் ஆதர்ஷ் அடித்தது எதுவும் உறைக்கவில்லை.


ஆதர்ஷ், "மனுஷனாடா நீ... ச்சீ... உன்ன எல்லாம் ஃப்ரன்ட்டுன்னு சொல்லவே அசிங்கமா இருக்குடா..." என்றவன் மீண்டும் அவனை அடிக்க லாவண்யா வந்து தடுத்தாள்.


பின் பிரணவ்வை பார்த்து லாவண்யா, "உங்களுக்கும் சித்துக்கும் இடைல ஏதோ மிஸ் அன்டர்ஸ்டேன்டிங்... அதனால தான் பிரிஞ்சிட்டீங்கன்னு நெனச்சேன் அண்ணா... பட் எங்க சித்துவ நீங்க இப்படியெல்லாம் பேசி இருப்பீங்கன்னு சத்தியமா எதிர்ப்பார்க்கல அண்ணா... அந்த பைத்தியக்காரி உங்கள எவ்வளவு காதலிச்சிருக்கான்னா எங்க கிட்ட ஒரு வார்த்தை உங்கள பத்தி தப்பா சொல்லல அவ... " என்கவும் பிரணவ்விற்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.


நர்ஸ் வந்து, "இவ்வளவு பேர் இருந்தா பேஷன்ட்டுக்கு டிஸ்டர்ப்பா இருக்கும்... யாராவது ஒருத்தர் மட்டும் கூட இருங்க..." என்க,


ஆர்யான் சிதாராவுடன் இருக்க மற்ற அனைவரும் வெளியேறினர்.


சிதாரா கண் விழிக்கும் வரை அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆர்யான்.


சற்று நேரத்தில் அவள் மெதுவாக கண்விழித்தவள் எழுந்து அமர முயற்சிக்க அவளுக்கு உதவி செய்த ஆர்யான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.


சிதாரா அவனைப் பார்த்து புன்னகைக்க அவனோ அமைதியே உருவமாக இருந்தான்.


சிதாரா, "சாரி ஜிராஃபி... உன்ன நான் ரொம்ப டென்ஷன் படுத்துறேன்ல... " என்க,


"ஃபிட்ஸ் வந்த பொண்ணு... உடம்புல தெம்பு இருக்காதுன்னு பாக்குறேன்... இல்ல நீ இப்படி சொல்றத கேட்டு கன்னத்துல போட்டிருப்பேன்..." என ஆர்யான் கூற, சிதாரா கப் சிப்பென வாயை மூடிக் கொண்டாள்.


அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டவன்,


"நான் அவ்வளவு சொல்லியும் நீ புரிஞ்சிக்க மாட்டேங்குறல்ல மினி... போதும்... உன்ன ரொம்ப நாள் விட்டு வெச்சாச்சி... இன்னெக்கே எனக்கொரு பதில் வேணும்..." என்றான்.


சிதாரா, "ஹஹா... நீ என்ன லூசா ஜிராஃபி... எப்போ ஜோக் பண்ணனும்னு கூட ஒரு விவஸ்தை இல்லையா..." என்க,


அவளை முறைத்த ஆர்யான், "போதும் சமாளிச்சது... நீ இந்த தடவ எப்படி தப்பிக்கிறன்னு நானும் பாக்குறேன்.." என்க,


அவனை எதிர்த்து சிதாரா ஏதோ கூற வர, அதற்குள் பிரணவ்வையும் அபினவ்வையும் தவிர மற்றவர்கள் அறைக்குள் நுழைந்தனர்.


ஆதர்ஷ் தான் அவனை உள்ளே வர வேண்டாம் எனக் கூறியிருந்தான்.


பிரணவ் ஏற்கனவே குற்றவுணர்வில் தவித்துக் கொண்டிருப்பதால் அவனுடன் அபினவ்வும் நின்றான்.


லாவண்யாவும் அக்ஷராவும் சிதாராவை இரு பக்கமும் இருந்து அணைத்துக் கொள்ள புன்னகைத்த சிதாரா,


"ஏன்டி... நான் செத்துடுவேன்னு பயந்துடீங்களா.." என்க அக்ஷரா பட்டென அவள் கன்னத்தில் ஒன்று போட்டாள்.


ஆர்யான், "இன்னும் ரெண்டு சேத்து போடும்மா... அப்ப தான் புத்தி வரும்..." என்க,


சிதாரா அவசரமாக இரு கன்னத்தையும் கைகளால் மறைத்துக்கொண்டு பாவமாக உதட்டைப் பிதுக்கினாள்.


அவள் முகம் சுருங்குவதைத் தாங்காத ஆதர்ஷ்,


"எல்லாரும் சும்மா இருங்க என் தங்கச்ச எதுவும் பண்ணாம.." என்றவன் சிதாராவிடம் சென்று அவள் தலையை வருடினான்.


லாவண்யா, "பாசமலரே... அப்படியே உங்க தொங்கச்சிக்கு ஒழுங்கா பேசவும் சொல்லி கொடுங்க.." என கேலியாக கூற ஆதர்ஷ் அவளை முறைத்தான்.


லாவண்யாவோ உதட்டை வளைத்துக் காட்டியவள் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.


வெளியே அபினவ் பிரணவ்விடம், "நீ பண்ணது தப்பு தான் மச்சான்... இல்லன்னு சொல்லல... அதுக்காக நான் இங்க நின்னுட்டு இருக்குறதுக்கு அர்த்தம் நீ பண்ண தப்புக்கு சப்போர்ட்டா இருக்குறேன்னு இல்ல... என்னோட ஃப்ரென்ட் தான் பண்ண தப்ப உணர்ந்திருப்பான்னு ஒரு நம்பிக்கை... இந்த நேரத்துல உன்ன தனியா விட எனக்கு மனசு வரலடா..." என்க,


"தேங்க்ஸ் டா.." என அவனை அணைத்துக் கொண்ட பிரணவ்,


"நீயும் உள்ள போடா... உனக்கும் அவ மேல நிறைய அக்கறை இருக்குன்னு எனக்கு தெரியும்... எப்படியும் உள்ள இருக்குற யாரும் தாராவ பத்தி என் கிட்ட சொல்ல மாட்டாங்க... நீ போய் பாத்துட்டு வந்து அவள் எப்படி இருக்கான்னு சொல்லு..." என்றான்.


அபினவ், "நீயும் உள்ள வா மச்சான்... " என்க,


"வேணாம்டா... தாரா என்ன பாத்தா இப்ப ரொம்ப டென்ஷன் ஆகுவா... என்னாலயும் அவ முகத்த நேரா பாக்க சக்தி இல்ல..." என பிரணவ் கூற,


வேறு எதுவும் கூறாமல் சிதாரா இருந்த அறைக்குள் நுழைந்தான் அபினவ்.


பின் சிதாராவை டிஸ்சார்ஜ் செய்து அவர்கள் தங்கியிருந்த ரெட் ஹவுஸ் அழைத்துச் சென்றனர்.


அடுத்த இரண்டு நாளில் டூர் முடிய அனைவரும் ஊருக்கு கிளம்பினர்.


அந்த இரண்டு நாளுமே ஆர்யான், லாவண்யா, அக்ஷரா மூவரும் சிதாராவை விட்டு எங்கும் அசையவில்லை.


எப்போதும் அவளுடன் ஏதாவது பேசிக்கொண்டு அவள் யோசனை வேறு எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டனர்.


பூஞ்சோலை கிராமத்தை அடையும் போது இரவாகி இருந்தது.


எனவே அனைவரும் அன்று அங்கே தங்கி விட்டு அடுத்த நாள் வீடுகளுக்கு செல்ல முடிவெடுத்தனர்.


மறுநாள் காலையில் அனைவரும் கிளம்பிய பின் ஆதர்ஷ், பிரணவ், அபினவ் மூவரும் கிளம்பத் தயாராகினர்.


( பூஞ்சோலைக் கிராமத்திற்கு பக்கத்து ஊரான வேந்தன்யபுறம் தான் ஆதர்ஷ் மற்றும் அபினவ்வின் ஊராகும்.


ஆனால் இருவருமே வேலைக்காக சென்னையில் இருக்கின்றனர்.


பிரணவ் மற்றும் ஆர்யானின் வசிப்பிடம் சென்னை.


சிதாரா, லாவண்யா இருவரும் ஆரம்பத்திலிருந்தே பூஞ்சோலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.


அக்ஷராவின் பள்ளிப் பருவத்தில் அவள் குடும்பத்தோடு பூஞ்சோலைக் கிராமத்திற்கு குடிபெயர்ந்தனர்.


சிதாராவின் பெற்றோர் தற்போது கோயம்புத்தூரில் இருக்கின்றனர்.


சிதாராவின் தந்தை சங்கர் ஒரு பேங்க் மேனேஜர் என்பதால் அவருக்கு ட்ரான்சர் கிடைத்து இப்போது அங்குள்ளனர்.


லாவண்யாவின் குடும்பம் பரம்பரை பணக்காரர் என்பதால் அவள் தந்தை ராஜேந்திரனே அங்கிருந்த நாட்டாமை.


அக்ஷராவின் தந்தை கருணாகரன் ஒரு ஆசிரியர்.


மூவரின் தாய்மாருமே இல்லத்தரசிகள். )


ஆர்யான் தோழிகள் மூவருடன் ஹாலில் இருக்க மற்ற மூன்று‌ ஆண்களும் மேலே அறையில் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர்.


பிரணவ், "டேய் ஆதர்ஷ்... ப்ளீஸ்டா... ஒரே ஒரு தடவ நான் தாரா கூட பேசனும்டா... திரும்ப அவள ஹர்ட் பண்ற மாதிரி எதுவும் பேச மாட்டேன்... ப்ராமிஸ்டா... " என்க,


ஆதர்ஷோ அபினவ்வைப் பார்த்து, "இவனுக்கு பேசாம இருக்க சொல்லு அபிணவ்... இது வரைக்கும் இவன் செஞ்சி வெச்சிருக்குறதையே சரி பண்ண முடியாம இருக்கோம்... ஒழுங்கா ஊருக்கு கிளம்புற வேலைய பார்க்க சொல்லு.." என்க,


பிரணவ், "மச்சான் ப்ளீஸ்டா... ஊருக்கு போக முன்னாடி கடைசியா ஒரே ஒரு தடவ தாரா கூட பேசிட்டு வரேன்டா.." என்றான்.


அதற்கும் ஆதர்ஷ் அபினவ்வைப் பார்த்து ஏதோ சொல்ல வர,


இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு முழித்த அபினவ்,


"அடச்சீ நிறுத்துங்க... ஆதர்ஷ்... உனக்கு தான் அவன் மேல இருந்த கோவம் கொறஞ்சிடுச்சுல்ல.. பின்ன நேரா பார்த்து பேசிக்கிட்டா என்னவாம்... நடுவுல என்ன வெச்சி காமெடி பண்றீங்களா... டேய்.. அதான் பிரணவ் அவன் பண்ண தப்ப உணர்ந்துட்டானே... கடைசியா ஒரு தடவ சித்து கூட பேசுறேன்னு சொல்றான்.. சரின்னு சொல்லேன்டா..." என ஆதர்ஷைப் பார்த்து கூறியவன்,


பின் பிரணவ்விடம், "இங்க பாருடா... திரும்ப ஏதாவது ஏடாகூடமா பேசினன்னு வையேன்... அப்புறம் நானே உன்ன சும்மா விட மாட்டேன்..." என்றான்.


சற்று சமாதானமான ஆதர்ஷ், "சரி... பட் அவன் எங்க எல்லாரு முன்னாடியும் தான் சித்து கூட பேசனும்.." என்கவும் பிரணவ் சற்று யோசித்து விட்டு சரி என்றான்.


தமது பையுடன் மூவரும் கிளம்பி ஹாலுக்கு வர ஆர்யான் ஏதோ சீரியசாக கூறிக் கொண்டிருக்க மூவரும் அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.


பிரணவ் மெதுவாக அவர்களிடம் சென்று தொண்டையை செறும நால்வரும் அவனை ஏறிட்டனர்.


பிரணவ் தயங்கியபடி சிதாராவைப் பார்த்து தாரா எனக்கூற வர சிதாராவின் பார்வையில் அவசரமாக,


"சிதாரா.. நான் உன் கூட கொஞ்சம் பேசனும்.." என்க,


ஆர்யான் கோவமாக எழுந்து ஏதோ கூற வர அவனைத் தடுத்த சிதாரா,


"சொல்லுங்க பிரணவ்.." என சிறிதும் மாற்றமின்றி தெளிவான குரலில் கூறினாள்.


அவளின் தெளிவான பேச்சில் அங்கிருந்த அனைவருமே வியக்க ஆர்யான் மட்டும் மகிழ்ந்தான்.


பிரணவ், "உன் கிட்ட மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதி இருக்கான்னு தெரியல... எதுவும் தெரியாம பண்ணேன்னு பொய் சொல்ல மாட்டேன்... தெரிஞ்சி தான் எல்லாம் பண்ணேன்... பட் ப்ளீஸ் முடிஞ்சா என்ன மன்னிச்சிடு.." என்க,


சிதாரா ஒரு நொடி கூட யோசிக்காது, "சரி மன்னிச்சிட்டேன்... வேற ஏதாவது சொல்லனுமா.." என்றாள்.


சிதாராவின் தெளிவான பேச்சை பிரணவ் கூட எதிர்ப்பார்க்கவில்லை.


அதை அவன் முகமே காட்டிக் கொடுத்தது.


ஆர்யானுக்கு அப்போது பிரணவ்வைக் காணும் போது ஏனோ சிரிப்பு வந்தது.


வாயை மூடி சிரித்தான்.


"எனக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் தர மாட்டியா தாரா..." என சட்டென பிரணவ் ஏக்கமாக வினவ,


ஆதர்ஷ் கோவத்தில் பிரணவ்வை ஏதோ சொல்ல முன்னேற அவன் கைப் பிடித்து தடுத்தான் அபினவ்.


அனைவரும் சிதாராவின் பதிலை எதிர்ப்பார்க்க சிதாராவோ திரும்பி ஆர்யானைப் பார்த்து புன்னகைத்தாள்.


ஆர்யான் கூட சிதாராவின் முகத்தை தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.


சிதாரா, "சாரி பிரணவ்... என்னால நீங்க கேட்டத தர முடியாது... நான் உங்கள மன்னிச்சிட்டேன் தான்.. ஆனா நீங்க பண்ண எதையுமே மறக்கல... அத என்னால மறக்க முடியுமான்னு கூட தெரியல... அதை மனசுல வெச்சிக்கிட்டு திரும்ப உங்க கூட என்னால இருக்க முடியாது... சோ நீங்க ஆசைப்படுற மாதிரி உங்களுக்கு ஏத்த ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க... சாரி..." என்க,


பிரணவ், "நான் நிஜமாவே திருந்திட்டேன் தாரா... என் தப்ப உணர்ந்துட்டேன்... என்னால இனி உன்ன தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது... நம்ம பிரேக்கப் அப்போ நீ கூட சொன்னாய் தானே என்ன தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு... நாமளே கல்யாணம் பண்ணிக்கலாமே..." என்கவும் சிரித்தாள் சிதாரா.


பின், "அந்த டைம்ல காதல் கண்ண மறச்சிடுச்சி பிரணவ்... ஏதோ உங்க மேல அப்போ இருந்த அளவுக்கதிகமான காதல்ல அப்படி சொன்னேன்... இப்போ தான் வெளியுலகத்த பாத்து கொஞ்சம் மெச்சூர்ட் ஆகி இருக்கேன்... அதனால தான் நான் எவ்வளவு பைத்தியக்காரியா இருந்திருக்கேன்னு புரிஞ்சிக்கிட்டேன்..." என சிரித்தபடி கூறிய சிதாரா பின் பிரணவ்வின் கண்களைப் பார்த்து அழுத்தமாக தெளிவாக,


"ஆனா இப்போ தெளிவா சொல்றேன் கேட்டுக்கோங்க... நான் நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பேன்... ஆனா அது என்ன பத்தி முழுசா தெரிஞ்சி என்ன புரிஞ்சிக்கிட்டு என்ன நானாவே ஏத்துக்குற ஒருத்தனா இருப்பான்... நிச்சயம் அது நீங்க இல்ல.." எனக் கூறினாள்.


அவள் இன்னொருவனைத் திருமணம் செய்வேன் எனக் கூறியதைக் கேட்ட பிரணவ்விற்கு கோவமாக வந்தது.


பிரணவ், "உன்னால நிச்சயமா என்ன தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது தாரா.. எப்போ இருந்தாலும் நீ என்ன தான் கல்யாணம் பண்ணிப்பாய்.." என சிதாராவைப் பார்த்து கூறியவன் தனது பையுடன் அவசரமாக அங்கிருந்து கிளம்பினான்.


அவன் செல்வதை புன்னகையுடன் பார்த்தக் கொண்டிருந்தாள் சிதாரா.


ஆதர்ஷ், *சாரிம்மா.. அவன் சொன்னது எதையும் நீ கண்டுக்காதே... அவன் சும்மா பைத்தியம் போல ஒலரிட்டு போறான்... நாங்களும் கிளம்புறோம்மா.." என சிதாராவிடம் கூறினான்.


பின் அபினவ், ஆதர்ஷ் இருவரும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப அனைவரும் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.


அவர்கள் சென்றதும் ஆர்யானுக்கு அழைப்பு வர பேசி விட்டு துண்டித்தவன் சிதாராவிடம்,


"மினி..‌ கேப் புக் பண்ணி இருக்கேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துரும்... ரெண்டு பேரும் முதல்ல எங்க வீட்டுக்கு போய்ட்டு அப்புறம் நான் உன்ன உங்க வீட்டுல ட்ராப் பண்றேன்.." என்கவும் அவனைப் பார்த்து சரி என தலையசைத்தாள் சிதாரா.


❤️❤️❤️❤️❤️


- Nuha Maryam -
 
கைதி - அத்தியாயம் 10​

ஆர்யானும் சிதாராவும் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர்.


லாவன்யாவின் தாய், தந்தை, பாட்டி என‌ அனைவரும் சிதாராவுக்கு பல அறிவுரைகள் வழங்கினர்.


பாட்டி, "இங்க பாரு சீதா கண்ணு... நீ இன்னும் அம்மா அப்பாவ பாக்கலன்னு தான் உன்ன போக விடுறேன்... இல்லன்னா என் கூடவே வெச்சிப்பேன்... திரும்ப வெளிநாட்டுக்கு போக முன்னாடி இந்த கிழவிய வந்து பாத்துட்டு தான் போகனும்..." என்க,


"சரி லட்சு..." என அவரை அணைத்துக் கொண்டாள் சிதாரா.


சிதாராவை பாட்டியிடமிருந்து விலக்கிய ஆர்யான் அவர் தோளில் கை போட்டு,


"என்ன டார்லிங் நீ.... உன்ன போய் கிழவின்னு சொல்ற... நீ இன்னுமே ஸ்வீட் சிக்ஸ்டீன் டார்லிங்... உன்ன கல்யாணம் பண்ணிக்க ஐடியால இங்க நான் இருக்கேன்... நீ என்னன்னா..." என்றவன் பட்டென அவர் கன்னத்தில் முத்தமிட்டான்.


அனைவரும் சிரிக்க, "போடா பொடிப் பயலே..." எனக் கூறி வெட்கப்பட்டார்.


பின் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு இருவரும் கிளம்பினர்.


கேப்பில் இருவரும் பின் சீட்டில் அமர்ந்திருக்க ஆர்யான் மொபைல் நோண்டிக் கொண்டிருந்தான்.


சிதாராவோ அவனையே பார்த்துக் கொண்டிருக்க ‌ஆர்யான்,


"நான் ரொம்ப ஹேன்ட்சமான பையன்னு எனக்கு தெரியும் மினி... அதுக்காக இப்படி வெச்ச கண் வாங்காம பார்த்துட்டு இருக்காதே..
கண்ணு பட்டுரும்... அப்புறம் யாரு என்ன கல்யாணம் பண்ணிப்பாங்க..." எனக் கூற கையில் இருந்த ஹேன்ட் பேக்கால் அவனை அடித்த சிதாரா,


"ஜிராஃபி... நானும் ரெண்டு நாளா உன்ன பார்த்துட்டு தான் இருக்கேன்... நீ ஏதோ ப்ளான் பண்ணி இருக்க... மவனே ஏதாவது கேடி வேலை பண்ணன்னு தெரிஞ்சது அப்புறம் உனக்கு கடைசி வரை கல்யாணமே நடக்காம பண்ணிருவேன்...." என்றாள்.


ஆர்யான் அவள் கூறியதைக் கேட்டு அதிர்வது போல் நடித்தவன்,


"வேணாம் மினி... வாழ வேண்டிய வயசு... அதுவும் எங்க வீட்டுக்கு நான் ஒரே புள்ள.." என்க அவனை முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள்.


ஆர்யான் மனதில், "இந்த தடவ நான் நெனச்சத கண்டிப்பா நடத்தி காட்டுவேன் மினி.." எனக் கூறிக் கொண்டான்.


சற்று நேரத்தில் அவர்கள் ஆர்யானின் வீட்டை அடைந்தனர்.


வீடு என்று அதனைக் கூற முடியாது.


மாளிகை என்று கூட சொல்லலாம்.


ஒவ்வொரு இடமும் அவர்களின் செல்வச் செழிப்பை எடுத்துக் காட்டியது.


ஆர்யானின் தந்தை ரஞ்சித் தான் அந்த மாவட்டத்திலே நம்பர் வன் கம்பனி எனப் பெயரெடுத்த AR GROUP OF COMPANIES இன் ஸ்தாபகர்.


அவரின் கடின உழைப்பின் பலனே அந்த கம்பனி.


கேட்டிலிருந்து வீடு வரையுமே சற்று தூரம் செல்ல வேண்டி இருந்தது.


சிதாராவுக்கு உள்ளே செல்லவே தயக்கமாக இருந்தது.


சிதாராவின் குடும்பமும் வசதியில் குறைந்தவர்கள் இல்லை.


தேவைக்கு அதிகமாகவே அவர்களிடம் பணம் இருக்கும்.


ஆனால் ஏதோ ஒரு தயக்கம் அவளை ஆட்கொள்ள மெதுவாக அடியெடுத்து நடக்க,


ஆர்யான் அவள் கையைப் பற்றி உள்ளே அழைத்துச் செல்லப் பார்க்க உள்ளிருந்து,


"அங்கயே நில்லுங்க..." என கம்பீரமான பெண் குரலொன்று ஒலிக்க சிதாரா அடுத்த அடி எடுத்து வைக்காது நின்றாள்.


அந்த குரலுக்கு சொந்தக்காரரான ஆர்யானின் தாய் அகிலா அமைதியே திருவுருவமாக மாடிப் படியில் இறங்கி வந்தார்.


நேராக இருவரையும் நோக்கி வந்தவர் சிதாராவின் முகத்தையே உற்று நோக்கினார்.


பின் இருவரின் கோர்த்திருந்த கையையும் பார்க்க அவசரமாக ஆர்யானின் கரத்திலிருந்து தன் கையை விலக்கினாள் சிதாரா.


"ராணி... அத எடுத்துட்டு வாங்க.." என அகிலா உள்ளே நோக்கி குரல் கொடுக்க சிதாரா என்னவோ ஏதோவென பயந்தாள்.


ஆர்யானோ அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.


அவர்கள் வீட்டில் வேலை செய்யும் ராணி ஆரத்தி தட்டுடன்‌ வர அவரிடமிருந்து அதை வாங்கிக் கொண்டவர் இருவருக்கும் ஆரத்தி எடுக்க,


சிதாரா தான் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


ஆரத்தி எடுத்து முடித்தவர் தட்டை ராணியிடம் கொடுத்து, "இத வெளிய கொட்டிடு..." என்று விட்டு சிதாராவின் பக்கம் திரும்பி,


"முதன் முதலா எங்க வீட்டுக்கு வர... அதான் ஆரத்தி எடுத்து வரவேற்றேன்... " என்றவர் ஆர்யானிடம்,


"ஃபோட்டோவ விட நேர்ல மகாலக்ஷ்மி மாதிரி இருக்காடா.." என சொல்லி அவள் முகத்தை புன்னகையுடன் வருட,


அப்போது தான் சிதாராவுக்கு மூச்சே வந்தது.


ஆர்யானோ அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டு,


"மாம்... அஞ்சி‌ ரூபாக்கு நடிக்க சொன்னா ஐநூறு ரூபாக்கு நடிக்கிறியே மாம்... பாவம்... புள்ள வேற பயந்துட்டா..." என நக்கலடிக்க சிதாரா அவனை முறைத்தாள்.


அகிலா சிரித்தவர், "அட... இன்னும் வெளியவே நின்னுட்டு இருக்காய்... வாம்மா உள்ள... இது உன் வீடுன்னு நெனச்சிக்கோ..." என்க சிதாரா புன்னகையுடன் உள் நுழைந்தாள்.


சிதாரா முன் செல்ல ஆர்யான் தாயின் காதில், "பெரிய ஆள் தான் மாம் நீ..." என்க,


"அமைதியா இருடா... அவளுக்கு கேட்டுற போகுது..." என அவன் வாயை அடைத்தார் அகிலா.


"சரிம்மா நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க... நான் உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்..." என அகிலா சொல்ல,


சிதாரா, "சரிங்க ஆன்ட்டி..." என்கவும்,


அகிலா, "இன்னும் என்னமா ஆன்ட்டி அது இதுன்னுட்டு... அழகா அத்தன்னு கூப்பிடு..." என்க,


சிதாரா அவரைப் புரியாமல் நோக்கினாள்.


ஆர்யான், "மாம்..." என அழைத்து கண்களால் எச்சரிக்க அகிலா அவசரமாக,


"அது ஒன்னுமில்லமா.. ஆன்ட்டிக்கு தமிழ்ல அத்தன்னு தானே சொல்லுவாங்க... அதான் நம்ம பாஷைலே அப்படி கூப்பிட சொன்னேன்..." என சமாளிக்க,


"ஓஹ்... சரி அத்த..." எனப் புன்னகைத்தாள் சிதாரா.


அவள் அத்தை என்றதும் அகிலாவின் மனம் குளிர,


ஆர்யானோ வானில் பறக்காத குறை.


பின் அகிலா செல்ல இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.


அப்போது, "ஹேய்... மை பாய்... ஒரு வழியா வந்து சேர்ந்துட்ட... நான் கூட அப்படியே யூ.எஸ் போய்ருவியோன்னு நெனச்சேன்..." எனக் கூறிக்கொண்டு ஆர்யானின் தந்தை ரஞ்சித் கோட் சூட்டில் இறங் வர,


அவரைக் கண்டு சிதாரா அவசரமாக எழுந்து நின்றாள்.


"டாட்.... சும்மா கலாய்க்க வேணாம்..." எனக் கூறி அவரை அணைத்துக் கொண்டான் ஆர்யான்.


ரஞ்சித் சிதாராவைப் பார்த்து,


"நீ என்னமா நின்னுட்டு இருக்காய்... உக்காரு... நீ பயப்படுற அளவுக்கு நான் ஒன்னும் டெரர் பீஸ் இல்லமா... இவன் அப்படியா என்ன பத்தி சொல்லி வெச்சிருக்கான்..." என்க அமர்ந்தவள்,


"அச்சோ... அப்படி எதுவும் இல்ல அங்கிள்..." என்க சரியாக கையில் ட்ரேயுடன் அங்கு வந்தார் அகிலா.


ஒவ்வொருவருக்கும் காபி, திண் பண்டங்கள் என கொடுத்தவர் சிதாராவிடம்,


"என்ன அத்தன்னும் அவர அங்கிள்னும் சொல்றாய்... கேக்கவே என்னவோ போல இருக்கு... அவரையும் மாமான்னே கூப்புடுமா..." என்கவும்,


மனதுக்குள்ளே அவருக்கு சபாஷ் கூறினான் ஆர்யான்.


சிதாராவோ ஏன் இவர் வித்தியாசமாக நடக்கிறார் எனப் புரியாமலே சரி எனத் தலையசைத்தாள்.


அதன் பின் ரஞ்சித் ஆஃபீஸ் செல்ல அகிலா ஆர்யானிடம், "ட்ராவல் பண்ணி டயர்டா இருப்பா... நீ அவள கெஸ்ட் ரூமுக்கு கூட்டிட்டு போ..." என்கவும் ஆர்யான் சிதாராவை விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்றான்.


சிதாரா அறையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க ஆர்யான்,


"மினி... நான் உன் கூட கொஞ்சம் பேசணும்.." என்க,


"என்னடா ஜிராஃபி... புதுசா பேசுறத்துக்கு பர்மிஷன் எல்லாம் கேக்குறாய்... என்ன விஷயம்..." என சிதாரா கேட்க அவளின் கைப்பிடித்து கட்டிலில் அமர வைத்தவன் அவள் காலின் கீழ் அமர்ந்து கொண்டு அவள் கையைப் பிடித்துக் கொண்டவன்,


"நான் ஒன்னு சொன்னா கேப்பியா மினி..." என்றான்.


சிதாரா, "ஹ்ம்ம்" என்க,


"மினி.... எனக்காக உன் மனசுல இருக்குற கஷ்டம் எல்லாம் வெளிய கொட்டிரு... உன் பாஸ்ட்ட திரும்ப சொல்லு... பரவாயில்லை... நான் கேக்குறேன்.. பட் அதை உன் மனசுல இருந்து தூக்கி போடுறேன்னு நெனச்சிட்டு பேசு... நீ சொல்ற விஷயம் நீ சொல்லி முடியும் போது உன் மனச விட்டு மொத்தமா வெளிய போயினும்... என் கைய கெட்டியா பிடிச்சுக்கோ... நீ சொல்லும் போது உன்ன அந்த விஷயம் ரொம்ப பாதிச்சுதுன்னா என் கைய அழுத்தி பிடி... உன் கூட நான் இருக்கேன்னு அப்போ உனக்கு ஒரு நம்பிக்கை வரும்... உனக்கு அழ வேணும்னா தாராளமா எவ்ளோ வேணாலும் அழு... உனக்கு தோள் சாய நான் இருக்கேன்... பட் ஒரே விஷயத்துக்கு திரும்ப அழ மாடேன்னு முடிவு பண்ணிட்டு அழு... உன் மனசுல இருக்குற பாரம் எல்லாம் இத்தோட காணாம போகனும்... செய்வியா..." எனக் கேட்டான் ஆர்யான்.


சிதாரா அமைதியாக அவனையே வெறித்துக் கொண்டிருந்தவள் மெதுவாக ஆர்யானின் கரம் மேல் தன் கரத்தை வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.


அதன் பின் தன மனதிலுள்ள பாரத்தை மொத்தமாக அவனிடம் இறக்கி வைத்தாள்.


ஃபிளாஷ்பேக்


சிதாரா, அக்ஷரா, லாவண்யா மூவரும் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த சமயம் அது.


மூவரின் குடும்பமும் அந்த நேரம் அங்கு தான் இருந்தனர்.


பூஞ்சோலைக் கிராமத்திலிருந்த பள்ளியிலேயே மூலரும் படித்தனர்.


இவர்கள் மூவரின் நட்பால் இவர்களின் குடும்பமும் ஒற்றுமையாக இருந்தனர்.


லாவண்யாவின் அத்தை மகன் தான் ஆதர்ஷ்.


அவளை விட நான்கு வருடம் மூத்தவன்.


ஆதர்ஷின் தாய் சிவகாமி லாவண்யாவின் தந்தை ராஜேந்திரனின் ஒரே தங்கை.


வேந்தன்யபுறத்திலிருந்த வசதியான குடும்பமொன்றில் அவரை திருமணம் செய்து கொடுத்தார் ராஜேந்திரன்.


சிவகாமிக்கு தன் அண்ணன் மகளே தனக்கு மருமகளாக வேண்டும் என ஆசை.


அவரின் கணவன் ஜெயராமும் அதற்கு மறுப்பு கூறவில்லை.


அவர்கள் ஆசையை ராஜேந்திரனிடம் தெரிவிக்க அவருக்கும் அவர் பத்தினி ஆண்டாளுக்குமே அதில் உடன்பாடு.


ஆனால் தம் ஆசையை பிள்ளைகள் மீது அவர்கள் திணிக்கவில்லை.


ஆதர்ஷுக்கு சிறு வயதிலிருந்தே லாவண்யாவைப் பிடிக்கும்.


எப்போதும் அவளுடன் வம்பு வளர்த்துக் கொண்டே இருப்பான்.


லாவண்யாவின் நட்பால் சிதாரா அக்ஷரா இருவருக்கும் ஆதர்ஷ் நல்ல பழக்கம்.


லாவண்யாவுடன் வம்பு பண்ணினாலும் அவளுக்கு ஒன்றென்றால் முதல் ஆளாக வந்து நிற்பான்.


சிதாரா மற்றும் அக்ஷராவுக்கு நல்ல சகோதரனாக இருந்தான்.


அதிலும் எப்போதும் துறுதுறுவென இருக்கும் சிதாரா என்றால் அவனுக்கு தனிப் பிரியம்.


தனக்கு தங்கை இல்லாத குறையை அவள் மூலம் தீர்த்துக் கொண்டாள்‌.


ஆதர்ஷ், அபினவ் இருவரும் சகோதரர்கள்.


ஆனால் சகோதரத்துவத்தைத் தாண்டி ஒரே வயதினர் என்பதால் இருவருக்கிடையிலும் நல்ல நட்பு இருந்தது.


ஆதர்ஷின் தந்தை ஜெயராமின் சகோதரர் ஜெயக்குமார்.


ஜெயக்குமார் மற்றும் பத்மா தம்பதியின் மகனே அபினவ்.


ஆதர்ஷ் பெற்றோரையும் லாவண்யாவையும் விட்டு பிரிய மனமில்லாமல் ஊரிலேயே படித்தான்.


அபினவ் மாத்திரம் சென்னையில் தங்கி படித்தான்.


சென்னையில் அபினவ்வுக்கு பிரணவ்வின் நட்பு கிடைத்தது.


ஆரம்பத்தில் ஹாஸ்டலில் தங்கிப் படித்த அபினவ் பின் பிரணவ்வின் வற்புறுத்தலால் அவர்கள் வீட்டில் தங்கினான்.


அபினவ்வை காணச் செல்வதால் ஆதர்ஷுக்குக்கும் பிரணவ்விற்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டு பின் நட்பாக மாறியது.


பூஞ்சோலை கிராமமும் வேந்தன்யபுறமும் இணைந்தே எப்போதும் ஊர்த் திருவிழா நடத்துவர்.


இம்முறை ஊர்த் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்க அதனைக் காண ஆசைப்பட்டு அபினவ்வுடன் பிரணவ்வும் கிளம்பி வந்திருந்தான்.


வருடா வருடம் வைகாசியில் இந்தத் திருவிழா நடக்கும்.


வைகாசி மாதம் பள்ளி, கல்லூரிகளில் பரீட்சை விடுமுறை என்பதால் சிறுவர், சிறுமியர் கூட்டத்திற்குப் பஞ்சமே இருக்காது.


பெரியவர்கள், வயதானவர்களும் வெளியூரில் இருந்தாலும் திருவிழாவை முன்னிட்டு எப்பாடுபட்டாவது ஊருக்கு வந்து விடுவர்.


திருவிழாவிற்கே உரித்தான விளையாட்டுப் பொருட்கள், பலூன், காத்தாடி, கண்ணாடி, ஊதுவான் என கடைகள் கட்டி விற்பார்கள்.


இரவில் பாட்டுக் கச்சேரி, நாடகம் என்று ஊரே களை கட்டும்.


சிதாரா, லாவண்யா, அக்ஷரா மூவரும் கிராமத்திலே வளர்ந்து வந்ததால் பாவாடை தாவணி தான் அணிவர்.


மூவரும் ஒன்றாக திருவிழா பார்க்க செல்ல அபினவ்வுடன் வந்த பிரணவ்வின் பார்வையில் பட்டாள் சிதாரா.

​

பிரணவ்வின் உதடுகள் தானாக, "இன்ட்ரஸ்ட்டிங்..." என அசைந்தது.

​

சிறுவர்களுக்கு போட்டியாக மூவரும் அங்கிருந்த கடைகளில் பலூன், காத்தாடி என வாங்கி விளையாடிக் கொண்டிருக்க,


பிரணவ்வின் கண்கள் சிதாராவையே மொய்த்தன.


அவன் பார்வையின் அர்த்தம் அவன் மட்டுமே அறிவான்.


இரவில் மேடை நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க தோழிகள் மூவரும் நாடகம் பார்க்க நாடகம் நடக்கும் மேடைக்கு கீழே அமர்ந்தனர்.


நாடகம் ஆரம்பித்து சற்று நேரத்தில் லாவண்யாவின் தோளில் சிறு கல் ஒன்று படவும் வீசியது யார் என திரும்பிப் பார்க்க அந்த மங்கிய ஒளியில் யாரும் தென்படவில்லை.


தொடர்ந்து இவ்வாறே நடக்கவும் லாவண்யா கல் வந்த திசையைப் பார்க்க அங்கு ஆதர்ஷ் நாடகமே கதியெனப் பார்த்துக் கொண்டிருந்தான்.


லாவண்யா மனதில், "கல்ல வீசி அடிச்சிட்டு நாடகம் பாக்குறது போல நடிக்கிறியா... நாடகம் முடியட்டும் மவனே இருக்கு‌ உனக்கு..." என ஆதர்ஷை வசை பாடியவள் மீண்டும் திரும்பி நாடகத்தில் கண் பதித்தாள்.


அதன் பின் எந்த கல்லும் வரவில்லை.


சில மணி நேரத்தில் நாடகம்‌ முடிய அனைவரும் எழுந்து செல்ல வேகமாக சென்று ஆதர்ஷைப் பிடித்துக் கொண்டாள் லாவண்யா.


ஆதர்ஷுக்கு பின்னால் வந்த அபினவ்வும் பிரணவ்வும் அங்கு என்ன நடக்கிறது எனப் பார்க்க,


லாவண்யா திடீரென ஓட அவளுடன் பின்னே ஓடி வந்த அக்ஷராவும் சிதாராவும் லாவண்யாவின் செயலைப் புரியாமல் பார்த்தனர்.


லாவண்யா தன்னைத் தடுத்து நிறுத்தவும் அவளைப் பார்த்த ஆதர்ஷ்,


"என்ன செல்லம்... மாமன் மேல இருக்குற காதல்ல இப்படி பொது இடத்துல எல்லாம் ரொமான்ஸ் பண்ணுவியா‌.." என கேலியாகக் கேட்க அவனை முறைத்த லாவண்யா,


"சாருக்கு ரொமான்ஸ் கேக்குதா ரொமான்ஸ்... சின்ன பசங்க போல கல் எறிஞ்சி விளையாடுறியா..." எனக் கேட்கவும் அவளைப் புரியாமல் பார்த்தான்.


பிரணவ் சிதாராவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அவன் பார்வை சிதாராவை ஏதோ செய்ய அவள் அவசரமாக தலை குனிந்து கொண்டாள்.


ஆனால் அவளுடன் நின்ற அக்ஷராவோ ஆதர்ஷுக்கு பின்னே நின்றே அபினவ்வைப் பார்த்து வாயை மூடி சிரித்தாள்.


அபிணவ் அவளைப் பார்த்து இளித்து வைக்க அதற்குள் லாவண்யாவின் சத்தம் அவர்கள் கவனத்தை அவள் பக்கம் எடுத்தது.


லாவண்யா ஆதர்ஷைப் பார்த்து,


"திரும்ப ஏதாவது பண்ணன்னு வை... மவனே நீ செத்தடா..." என்றவள் சிதாராவையும் அக்ஷராவையும் இழுத்துக்கொண்டு சென்றாள்.


ஆதர்ஷ் அவள் கூறி விட்டு சென்றது புரியாமல் விளித்தவன் அபினவ்விடம்,


"என்னடா இவ... ஏதேதோ ஒளரிட்டு போறா... பேய் பிசாசு ஏதாவது பிடிச்சிடுச்சோ..." என்க,


அபினவ், "உன் கூட பேசனும்னு சும்மா ஏதாவது பண்ணிருப்பாடா... வா நாமளும் கிளம்பலாம்..." என்றான்.


பின் அவர்களும் அங்கிருந்து சென்றனர்.


ஆனால் உண்மையில் நடந்ததே வேறு.


ஆதர்ஷுக்கு பின்னே நேராக அபினவ்வும் பிரணவ்வும் அமர்ந்திருந்தனர்.


அபினவ் தான் அக்ஷராவை நோக்கி கல் எறிந்தான்.


ஆனால் ஒவ்வொரு முறையும் அவனின் குறி தவறி கல் லாவண்யாவின் மீது பட அப்பாவி ஆதர்ஷ் மாட்டிக் கொண்டான்.


இறுதியாக அடித்த கல் குறி தவறாது அக்ஷராவின் தோளில் பட திரும்பி அவனைப் பார்த்தவள் புன்னகைத்தாள்.


அக்ஷரா தன்னைப் பார்த்து புன்னகைக்கவும் அபினவ்வோ றெக்கை கட்டிப் பறந்தான்.


டென்த் வரை அபினவ்வும் இதே ஊரில் தான் படித்தான்.


அதன் பின் மேற்படிப்புக்காக சென்னை சென்றான்.


பள்ளிக் காலத்திலிருந்தே அவனுக்கு அக்ஷரா மீது காதல்.


அவள் செல்லுமிடமெல்லாம் இவன் இருப்பான்.


ஆனால் அவன் அறியாதது தான் அவன் மீது அக்ஷராவுக்கு ஏற்கனவே இருந்த க்ரஷ்.


யாரிடமும் அவள் அதைப் பற்றி வெளிப்படுத்தியதில்லை.


அடுத்து வந்த நாட்களும் திருவிழா களை கட்ட பிரணவ்வோ சிதாராவையே எப்போதும் பின் தொடர்ந்தான்.


இதனை அபினவ் அவதானித்து பிரணவ்விடம் கேட்க அவனோ,


"எனக்கு அவள பிடிச்சிருக்குடா மச்சி..." என்கவும் பிரணவ் சிதாராவை காதலிக்கிறான் என நினைத்துக் கொண்டான் அபினவ்.


அபினவ் பிரணவ் கூறியதை ஆதர்ஷிடம் கூற,


"இங்க பாருடா... அவன் எனக்கு ஃப்ரென்ட் ஆக முன்னாடியே சித்து என்னோட தங்கச்சி... இவனோட காதலால அவளுக்கு எந்த பிரச்சினையும் வராம பார்த்துக்கோ..." என்றான்.


லாவண்யாவும் அக்ஷராவும் ஒரு ஐஸ் க்ரீமிற்காக சண்டை பிடித்துக் கொண்டிருக்க சிதாரா அவர்களை விட்டு சற்று தள்ளி வர அவளிடம் வந்த பிரணவ்,


"தாரா.. நான் உன் கூட கொஞ்சம் தனியா பேசணும்..." என்று கூற,


அவனது தனிப்பட்ட தாரா என்ற அழைப்பில் அவனையே விழி விரித்து நோக்கினாள் சிதாரா.


❤️❤️❤️❤️❤️


- Nuha Maryam -
 

New Threads

Top Bottom